ஒபாமாவை ஆடவைத்த முதல் “ஜிஹாத்” கேள்வியும், “அமெரிக்கா ஏன் இன்னும் பாகிஸ்தானை தீவிரவாத நாடு என்று அறிவிக்கவில்லை?”, என்ற கடைசி கேள்வியும்!
“ஜிஹாதைப் பற்றி தங்களது கருத்து என்ன?” என்று அந்த மாணவி கேட்டதும் ஆடியே போய் விட்டார் ஒபாமா!
ஜிஹாத்தைப் பற்றிய ஒபாமா விளக்கம்[1]: “ஜிஹாத் என்ற வார்த்தை இஸ்லாத்தில் பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது மற்றும் அதற்கு பதரப்பட்ட விள்ளக்கங்களும் அளிக்கப்படுகின்றன. நான் என்ன நினைக்கிறேன் என்றால், நாம் எல்லோரும் அந்த பெரிய மதமானது சில தீவிரவாதிகளின் கைகளில் சிக்குண்டு வன்முறையை அப்பாவி மக்களுக்கு எதிராக நியாயப்படுத்தி வருகின்றது என்பதை அறிகிறோம், ஆனால், அதை அப்படி நியாயப்படுத்த முடியாது. புனிதப் போர் என்ற திரிபு விளக்கங்களை அளிப்பவரை நாம் தனிமைப் படுத்த வேண்டிய சவாலைத்தான் நாம் எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்று நான் நினைக்கிறேன்”[2].
“உங்களது மதம் என்னவாகயிருந்தாலும், உலகத்திற்கேற்ப பொது சித்தாந்தம் மூலம் ஒருவரையொருவர் மதித்து நடக்கலாம். உங்களைப் போன்ற இளைஞர்கள் மற்றவர்களை கீழே தள்ளாமல், உங்களது மதநம்பிக்கைக்களை தாராளமாகவே பின்பற்றலாம். நான் சொல்வதைவிட நீங்கள் எப்படி ஒருவரையுஒருவர் பரஸ்பரமாக நடந்து கொள்வர் என்பதுதான் முக்கியம். இன்றைய உலகில் மக்கள் பலதரப்பட்ட பிண்ணனியில், பல இனங்கள், மனிதகுழுமங்கள் ஒன்றக சேர்ந்து பேசி, உரையாடி வேலை செய்ய வேண்டியுள்ளதால், உலகம் சுருங்கியுள்ளது”[3]
ஒபாமாவின் “ஜிஹாத்” விளக்கத்தை விமர்சனிக்கும் அமெரிக்கர்[4]: ஒபாமாவின் இந்த விளக்கம் “நிர்வாக” ரீஇதியிலானது என்றும், ஏனெனில் ஷாஃபி இறையியல் விளக்கத்தின்படி, ஜிஹாத் என்றால் காஃபிர்களுக்கு எதிரான மதரீதியிலான தொடுக்கப் படும் போர்தான். அந்த விஷயத்தில் ஷாஃபி இறையியலிலேயோ அதனை சட்டப்புத்தகமாகக் கொண்டுள்ள சுன்னி ஆசாரப் பிரிவினருக்கோ எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஜிஹாதை தீவிரவாதத்துடன் பிரித்துப் பார்த்து விளக்கம் கொடுப்பதை உண்மையில் நடக்கும் நிகழ்ச்சிகளைக் கொண்டு அமெரிக்கர்கள் ஒப்புக்க் கொள்வதில்லை. இருப்பினும், பொருளாதார ரீதியில் அமெரிக்க நெரிக்கடியில் உள்ளதால், இத்தகைய மென்மையான போக்கைக் கடைபிடித்து இரண்டு நாடுகளையும் தாஜா பிடித்து காரியங்களை சாதித்துக் கொள்ளவே ஒபாமா விரும்புகிறார் என்று தெரிகிறது.
வேதபிரகாஷ்
© 08-11-2010
[1] The New York Times, Obama Pointedly Questioned by Students in India, http://www.nytimes.com/2010/11/08/world/asia/08prexy.html?src=me
[4] His critics have been charging the president with using national security issues for scoring political points. It may be recalled that one of the President’s counter terrorism advisers, John Brennan , had went to the extent of describing jihad as a “legitimate tenet of Islam”. While speaking in a seminar at the Center for Strategic and International Studies , Brennan had described those who practice jihad as “victims of political, economic and social forces”. But the Obama administration’s critics say that such “outreach” is “dangerous”. According to them there has been no ambigity in the interpretation of the term by the Shafi’i school —which prepares the manual of law for the Sunni orthodoxy or the Hanafi school as both emphasise that jihad is a religious war against non-believers. The energised Tea Party activists have been attacking the president for holding national security issues a hostage to his “political correctness”.
அண்மைய பின்னூட்டங்கள்