Archive for the ‘ஒட்டக பால்’ category

பாகிஸ்தான் முஸ்லீம்கள் கோரிக்கை: பக்ரீத் அன்று மிருகவதை செய்யாதீர்கள்; இந்திய முஸ்லீம்கள் என்ன சொல்வார்கள்!

நவம்பர் 4, 2011

பாகிஸ்தான் முஸ்லீம்கள் கோரிக்கை: பக்ரீத் அன்று மிருகவதை செய்யாதீர்கள்; இந்திய முஸ்லீம்கள் என்ன சொல்வார்கள்!

பாகிஸ்தானில் பக்ரீத் மிருகவதை எதிர்த்துப் பிரச்சாரம்: பக்ரீத் பண்டிகை நெருங்குவதை ஒட்டி, பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் சிலர் மிருக வதையை எதிர்த்து தங்கள் பிரசாரத்தை துவக்கியுள்ளனர்[1]. பக்ரீத் பண்டிகையின் போது, ஒட்டகம், ஆடு, மாடு போன்ற மிருகங்களை அறுக்கும், “குர்பானி’ என்ற சடங்கு நிறைவேற்றப்படுவது வழக்கம். பாகிஸ்தானில் இது அதிக எண்ணிக்கையில் நடக்கும். கடந்தாண்டு, மிருக வதை தடுப்பு அமைப்பு ஒன்று, பாகிஸ்தானில் மிருக வதையைத் தடுக்க ஒரு பிரசாரத்தை மேற்கொண்டது.

மிதவாதி முஸ்லீம்களின் கோரிக்கை: முஸ்லீம்களில் தாராள மனப்பாங்குடன், திறந்த மனத்துடன், மிதவாதிகளாக் இருக்கும் முஸ்லீம்கள்  அத்தகைய கோரிக்கையை வைத்துள்ளனர். இந்நிலையில், அந்நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் சிலர், மிருகங்களை அறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் கருத்துக்களை பிரசாரம் செய்து வருகின்றனர். பினா அகமது மற்றும் பரா கான்[2] இருவரும் இதுகுறித்து தங்கள் வலைப்பூவில்[3] எழுதியிருப்பதாவது: குர்பானியின் தத்துவம் நாம் அறிந்தது தான். நமது மதச் சடங்குகளை பண்பாடு, மத ரீதியில் அறிவியலோடு சேர்த்து நடத்த வேண்டும்.

கடவுளின் படைப்புகளான மிருகங்கள் கொல்லப்படுவதில் கொடூரம் இருக்கிறது, சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுகிறது: கடவுளின் படைப்புகளான இந்த மிருகங்கள் கொல்லப்படுவதில் கொடூரம் இருப்பதையும், சுற்றுச்சூழலுக்கு இதனால் எவ்வளவு கேடு ஏற்படுகிறது என்பதையும், மனித உடலுக்கு அசைவ உணவு எவ்வளவு கேடுகளைத் தருகிறது என்பதையும், அசைவ உணவு குறித்து இஸ்லாம் என்ன சொல்லியிருக்கிறது என்பதையும் நாம் யோசிக்க வேண்டும்; பரிசீலிக்க வேண்டும்[4].

வெள்ளம் போது செய்யப்பட்ட பிரச்சாரம் (2010): இந்தாண்டு 2010 ஒரு ஆடு வாங்குங்கள். அதை, “குர்பானி’ கொடுப்பதற்குப் பதிலாக, வெள்ளத்தில் தங்கள் கால்நடைகளை இழந்த கிராமத்தவருக்கு அதை தானமாகக் கொடுங்கள்.இவ்வாறு அவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்[5].

மாமிச உணவு கிடைக்கும் விதம், அதனால் வரும் உபாதைகள்: மாமிசத்தைத் தின்பதமனால் யயிற்றுகப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்பட்டு, ஈத் நாட்களில், மருத்துவ மனைகளில் முஸ்லீம்கள் அனுமதிக்கப் படுவதும் அதிகமாகிறது[6] அதுமட்டுமல்லாமல், பொதுவாக “ஹலால்” மாமிசம் முறையாக மிருக்லங்களைக் கொன்று எடுத்தாலும், பலமுறை, அம்மிருகங்கள் எப்படி கிடைக்கின்றன, எவ்வாறு உள்ளன என்று முஸ்லீம்களுக்குத் தெரிவதில்லை[7]. அதிகமாக மாமிசம் சாப்பிடுவதும் ஆரோக்யத்திற்கு நல்லதில்லை. அதனால் இருதயநோய்கள் வருவதற்கு அதிகமான சாத்தியக் கூறுகள் உள்ளன[8].

இந்திய முஸ்லீம்கள் மௌனம் சாதிப்பது ஏன்? பாகிஸ்தான் முஸ்லீம்கள் இப்படி பிரச்சாரம் முன்றாண்டுகளாக செய்து வருகின்ற நிலையில், இந்திய முஸ்லீம்கள் அமைதியாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. வலைப்பூக்களில் / இணைத்தளங்களில் தமது சக்தியைத் திரட்டி, இரவு-பகலாக மற்ற விஷயங்களுக்கு பிரச்சாரம் செய்து வரும் முஸ்லீம்கள் இதைப் பற்றி மூச்சுக்கூட விடவில்லை!

வேதபிரகாஷ்

04-11-2011


[1]தினமலர், மிருகவதையைஎதிர்த்துபாகிஸ்தானில்பிரசாரம்,  அக்டோபர் 31,2011,02:59 IST, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=340779

[2] அவர்களது முழு கட்டுரையை ஆங்கிலத்தில் இங்கே படிக்கலாம்: http://goatmilkblog.com/2010/11/15/muslims-please-spare-the-animals-this-eid/

[3] www.goatmilkblog.com;  அதுமட்டுமல்லாது ஆதரித்து-எதிர்த்து கொடுக்கப்படுள்ள கருத்துகளையும் படித்தறியலாம்.

[4] “Muslims have a duty both religiously and culturally to evolve with scientific and moral progress. The meaning behind Eid-ul-Azha will always stand, but in today’s world, we must look at things practically,” wrote Bina Ahmed and Farah Khan on goatmilkblog.com, a virtual hangout for Asian Muslims settled in the West.

http://zeenews.india.com/news/south-asia/pak-liberals-oppose-sacrifice-of-animals-on-eid_738929.html

[5] Last year, an animal activist organisation, which is now almost defunct, had run a campaign asking people to “save” an animal instead of “sacrificing it” after the devastating floods that left over a million animals dead in Pakistan. “Buy a goat – and this year, instead of sacrificing it, send it back to a village to replace what was lost and help people back onto their feet. Goats can provide an ongoing income for families through the sale of milk, ghee, meat and kids, as well as supplement their own diet and agriculture,” was the appeal from the Karachi-based organisation.  www.pakistaniat.com

[6] In many parts of the world, the festivities of Eid-ul-Azha bring along with it an increase in illness.  For example, according to the Daily Star newspaper in Bangladesh, the number of individuals being admitted to hospitals increases by about 10 percent during this time of year brought on by a gluttonous consumption of meat.  http://newshopper.sulekha.com/meat-intake-during-eid-makes-dhaka-medicos-see-red_news_1127916.htm

[7] While it is true that some halal slaughterhouses try their best to ensure that the animals they slaughter are raised according to Islamic teachings, many are unaware of the origins of the animals that they sell to consumers, focusing instead only on the manner in which the animal is killed.  

(http://www.islamonline.net/servlet/Satellite?c=Article_C&pagename=Zone-English-News/NWELayout&cid=1178724246679)

[8] Eating too much eat is not good for your health either.  Studies upon studies have revealed to us that eating red meat in excess increases our risks of developing cardiovascular diseases and developing cancer. We are only about five percent of the world’s population yet we grow and kill an astonishing 10 billion animals a year – more than 15 percent of the world’s total. http://www.nytimes.com/2008/01/27/weekinreview/27bittman.html.

ஒட்டக பால், கவுதாரி, வேப்ப மரம் – தினம் ஒரு ஆடு பலி : ராணுவத்திடம் தப்ப சர்தாரியின் நம்பிக்கை!

ஜனவரி 31, 2010
ஒட்டக பால், கவுதாரி, வேப்ப மரம் – தினம் ஒரு ஆடு பலி : ராணுவத்திடம் தப்ப சர்தாரியின் நம்பிக்கை
ஜனவரி 31,2010,00:00  IST

http://www.dinamalar.com/world_detail.asp?news_id=4722

Top global news update

இஸ்லாமாபாத் :ஒட்டகப் பால் தான் குடிக்கிறார்; கறுப்பு கவுதாரி வளர்க்கிறார்; வீட் டைச் சுற்றிலும் வேப்பமரம் வளர்க்கிறார்; யார்  இப் படியெல்லாம் செய் றாங்க…? நீங்கள் கேட்பது புரிகிறது.ராணுவத்தின் பிடியிலிருந்து தப்பவும் கெட்ட சக்திகள் அணுகாமல் இருக்கவும் பாகிஸ்தான் அதிபர் சர்தாரிதான் இது மட்டுமல்ல, தினம் ஒரு ஆடு பலி கொடுத்தும் வருகிறார்.

பர்வேஸ் முஷாரப்புக்கும் சர்தாரிக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தால், சர்தாரி மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. பாகிஸ்தான் சுப்ரீம்கோர்ட் பொது மன்னிப்பு அளித்து விட்டது. இருந்தாலும், எந்தநேரத்திலும்  ராணுவத்தால் தனக்கு ஆபத்து இருப்பதை சர்தாரி உணர்ந்திருக்கிறார்.இதனால், “கெட்ட சக்திகள் தன்னைப் பலி கொண்டுவிடாமல் இருக்க சில விசித்திரமான காரியங்களைச் செய்து வருகிறார்’ என்று பாகிஸ்தானிலிருந்து வரும் “டான்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு சர்தாரி தரப்பிலிருந்து இதுவரை மறுப்பு எதுவும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன்படி, சர்தாரி தான் பதவியேற்ற 2008லிருந்து தினமும் ஒரு கறுப்பு ஆட்டைப் பலியிட்டு வருகிறார். ஒட்டகம் மற்றும் ஆட்டுப் பால்தான் அருந்துகிறார். மறந்தும் மாட்டுப் பால் பக்கம்  தலைவைத்துப் படுப்பதில்லை. ஒரு ஒட்டகம், ஒரு பசுமாடு, சில ஆடுகள் இவை அதிபர் மாளிகையில் ராஜ உபசாரத்தில் வாழ்கின்றன. இவைதான் சர்தாரிக்குப் பால் கொடுப்பவை.கறுப்பு கவுதாரி ஒன்றை வளர்த்து வருகிறார். அது இருக்கும் இடத்தில் நல்ல காரியங்கள் நடக்கும் என்ற நம்பிக்கையால் அதை வளர்க்கிறார்.  தனது மாளிகையில் கிருமிநாசினியான வேப்பமரத்தை வளர்க்கிறார்.

அதிபர் மாளிகைச் செய்தித் தொடர்பாளர் பர்கத்துல்லா பாபர் இது குறித்துக் கூறுகையில், “சர்தாரி இதுபோன்ற காரியங்களை ஆரம்ப காலத்திலிருந்தே செய்து வருகிறார்’ என்றார்.

Goats sacrificed ‘to ward off evil eyes’
By Syed Irfan Raza
Wednesday, 27 Jan, 2010

http://www.dawn.com/wps/wcm/connect/dawn-content-library/dawn/the-newspaper/front-page/12-black-goats-sacrificed-to-ward-off-evil-eyes-710–bi-11

It has been an old practice of Mr Zardari to offer Sadqa (animal sacrifice). He has been doing this for a long time: Farhatullah Babar.—File photo

It has been an old practice of Mr Zardari to offer Sadqa (animal sacrifice). He has been doing this for a long time: Farhatullah Babar.—File photo

ISLAMABAD: A black goat is slaughtered almost daily to ward off ‘evil eyes’ and protect President Asif Ali Zardari from ‘black magic’. Does this, and the use of camel and goat milk, make the beleaguered president appear to be a superstitious man?

Well, not to his spokesman. “It has been an old practice of Mr Zardari to offer Sadqa (animal sacrifice). He has been doing this for a long time,” spokesman Farhatullah Babar told Dawn on Tuesday.

But his detractors, who want to see him out of the Presidency, would see in his new-found religiosity a sign of nervousness in the wake of the scrapping of the NRO.

One thing is certain: Hundreds of black goats have been sacrificed since Mr Zardari moved into the President’s House in September 2008. His trusted personal servant Bai Khan buys goats from Saidpur village. The animal is touched by Mr Zardari before it is sent to his private house in F-8/2 to be sacrificed.

Insiders say that when Mr Zardari moved into the President’s House, a flock of black partridges were introduced there for their supposedly magical effects.

Unfortunately, the whole flock was electrocuted when a live wire fell on their cage.

A camel, a cow and a few goats kept on the grounds of the presidency, however, survive and provide milk for its worthy resident.

That tradition from celebrities like Mahatma Gandhi may be followed for health reasons — as may be the Neem tree that President Zardari introduced there for its anti-septic qualities.
Tags: zardari,black magic,goat,evil eye