அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு மற்றும் குழந்தைகளின் பிணங்கள் கிடந்தன: கள்ளக்காதலர்கள் மோதல் காரணமா – தொடரும் மர்மங்கள் (2)
பெண் கொலை வழக்கு குற்றவாளிகள் மலேசியாவுக்கு தப்பி ஓட்டம்[1]: ராமநாதபுரத்தில் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான தனிப்படை விசாரணையில், ஆதிலாபானுவை கொலை செய்ததற்கான நோக்கம் குறித்து உறுதிபடுத்த முடியாத நிலையில், வழக்கில் “சந்தேகமான முக்கிய நபர்கள்” மலேசியாவிற்கு தப்பி ஓடிவிட்டது தெரியவந்துள்ளது. [அப்படி அவர்கள் சென்றிருந்தால், நிச்சயமாக அவர்கள் யார் என்பதனை அறியலாமே]. மேலும் ஆதிலாபானுவின் தாயாரிடம் நடத்திய விசாரணையில், கிடைத்த தகவல்களை உறுதி செய்வதற்கான சாட்சிகளோ, ஆதாரங்களோ இல்லாததால், குற்றவாளிகளின் கொலை நோக்கத்தை உறுதிபடுத்த முடியாமல் போலீசார் திணறுகின்றனர். இந்நிலையில், மலேசியாவிற்கு தப்பி சென்ற நபர்களை வரவழைப்பதற்கான முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். “கொலை குற்றவாளிகளை ஓரிரு தினங்களில் பிடித்து, உண்மையான காரணங்களை கண்டுபிடித்துவிடுவோம்’ என, தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் யார்[2]? விசாரணையில், “ஆதிலா பானு, டூரிஸ்ட் விசாவில் அடிக்கடி மலேசியா சென்று வந்ததும், அவருக்கு பலரிடம் இருந்து மொபைல் போனில் அதிக அழைப்புகள் வந்துள்ளதும், அதை தொடர்ந்து மதுரை போன்ற வெளியூர்களுக்கும் செல்வதுமாக இருந்துள்ளார். ஆக இது ஹம்சத்நிஷாவிற்கு தெரிந்துதான் உள்ளது. இதுபோல் திருச்சி, மதுரையிலிருந்து இரண்டு நபர்கள் அடிக்கடி போனில் பேசியுள்ளதும்’ தெரிய வந்துள்ளது. மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டவர்கள் பட்டியலை, போலீசார் தயாரித்துள்ளனர். அதில், ராமநாதபுரத்தில் உள்ள “பல முக்கிய நபர்களின்” எண்களும் உள்ளன. ஆதிலா பானுவுக்கு, வணிக வளாகத்துடன் கூடிய வீடு உள்ளிட்ட சொத்துகள் இருப்பதால், சொத்துக்காக கொலை நடந்ததா, கள்ளத் தொடர்பால் நடந்ததா என போலீசார் விசாரிக்கின்றனர். அடையாளங்கள் இல்லாத வகையில் கொலை நடந்துள்ளதால், கூலிப் படையினர் மூலம் நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவர் எனவும் தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.
விசாரணை, கைது; சம்பவ தினத்தன்று (08-10-2010) மத்தியான பொழுதில் பக்கத்து வீட்டுக்காரரான சுந்தரி என்பவருடன் சமையல் சாமான்களும் சமையல் எரிவாயு உருளையும் வாங்குவதற்கு கடைக்கு போயிருக்கிறார்கள்[3]. ஆனால் வீட்டுக்கு திரும்பவில்லை. அவர்களின் நிலை என்ன ஆனது என்பதும் தெரியவில்லை. யார் அந்த சுந்தரி, சுந்தரி திரும்பி வந்ததளா, போன்ற விஷயங்களைப் பற்றியும் “கப்சிப்” தான். இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு நான்கு பேரிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். இறந்தவரின் குடும்ப நண்பரான ஜெயக்குமாரிடம் விசாரணை நடந்து வருகிறது. இரு விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்[4]. ஆனால், அவர்கள் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. இப்படி பலவிதமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. “செல்போனில் ராமநாதபுரத்தில் உள்ள “பல முக்கிய நபர்களின்” எண்களும் உள்ளன” எனும்போது, அவர்களை ஏன் விசாரிக்கவில்லை என்று தெரியவில்லை[5].
இறந்த பெண்ணின் மொபைலில் நிரம்பி வழிந்த எஸ்.எம்.எஸ்.,கள் : “க்ளூ’ கிடைப்பதில் பின்னடைவு[6]: இதற்கிடையில், இறந்த பெண்ணின் மொபைல் போனை சோதனை செய்தபோது, அவருக்கு பலர் எஸ்.எம்.எஸ்., அனுப்பியது தெரியவந்தது. குறிப்பிட்ட நபர் ஒருவர் மட்டும் சில நாட்களில் 100 எஸ்.எம்.எஸ்.,களுக்கு மேல் அனுப்பி உள்ளார். இதனால், அந்த மொபைலின் “இன் பாக்ஸ்’ நிரம்பிவழிந்தது. போலீசார் பெரிதும் எதிர்பார்த்த மொபைல் போனில், உரிய “க்ளூ’ கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர். இருந்த போதும், ஆதிலாபானுவுக்கு வந்த மொபைல் அழைப்புகள் குறித்த விசாரணையில் நம்பிக்கை கிடைத்திருப்பதாக தெரிகிறது. “செல்போனில் ராமநாதபுரத்தில் உள்ள “பல முக்கிய நபர்களின்” எண்களும் உள்ளன” என்றுவேறு உள்ளது. இவர்களுக்குள் உள்ள தொடர்பு என்ன?
ஆதிலா பானு பணக்காரி, நாகரிக பெண்மணி என்று தெரிகிறது; “மலேசிய நாட்டில் வேலை பார்த்து வந்த முத்துச்சாமி திருமணத்திற்கு பிறகு மனைவி மற்றும் குழந்தைகளையும் மலேசியாவுக்கு அழைத்து சென்றார்”, அப்படியென்றால், முத்துசாமி சாதாரண இந்தியன் போல, தனது குடும்பத்தை, மலேசியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளான்[7]. ஆனால், ஆதிலா பானு மலேசிய பெண்ணாக இருப்பதினால், அவள்தான், முத்துசாமியை அங்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும். “அங்கு காஜிரா பானு மலேசிய நாட்டின் குடியுரிமையும் பெற்றார்”, அதாவது 5 வயது மகளுக்கு மட்டுமா குடியுரிமை வாங்கினார்கள்? மலேசிய பெண்மணிக்கு வணிக வளாகத்துடன் கூடிய வீடு உள்ளிட்ட சொத்துகள் உள்ளன, அவள் வட்டிக்காக கடன் கொடுத்திருக்கிறாள் போன்ற செய்திகளும் வித்தியாசமாக இருக்கின்றன. இஸ்லாத்தில் வட்டிக்காக கடன் கொடுக்கக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள்.
மலேசியாவிற்கு சென்ற பிறகு கருத்து வேறுபாடு ஏன் ஏற்படவேண்டும்? “இந்த நிலையில் திடீரென கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது”, இது புரியவில்லை – அதாவது என்ன காரணம் என்பது தெரியவில்லை. முத்துசாமிக்கு அங்கு வேலை கிடைத்திருப்பதனல், அவன் தன் மனைவியுடன், வரும் வருமானத்தை வைத்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கலாம், மற்ற வேலைகள் – குறிப்பாக வட்டிக்கு பணம் கொடுப்பது[8] போன்ற காரியங்கள் – எல்லாம் வேண்டாம் என்று சொல்லியிருப்பான். “இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆதிலாபானு தனது 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு மலேசியாவில் இருந்து சொந்த ஊரான ராமநாதபுரத்திற்கு வந்தார்”, அதாவது கணவனைவிட்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்துள்ளார். அதே நேரத்தில் “ஆதிலா பானு, டூரிஸ்ட் விசாவில் அடிக்கடி மலேசியா சென்று வந்ததும், அவருக்கு பலரிடம் இருந்து மொபைல் போனில் அதிக அழைப்புகள் வந்துள்ளதும், அதை தொடர்ந்து மதுரை போன்ற வெளியூர்களுக்கும் செல்வதுமாக இருந்துள்ளார்”, என்று வந்துள்ள செய்திகளும் முரண்படாக உள்ளன.
மலேசியன் தூதரகத்திற்கே ஒத்துழைக்காத ஆதிலா பானுவின் குடும்பம்[9]: சென்னையிலுள்ள மலேசியன் தூதரகத்து அன்வர் கஸ்மன், கவுன்சிலர்-ஜெனரல் (Consul-General Anuar Kasman) என்பவர், தான் மலேசிய அதிகாரிகளை மதுரைக்கு அனுப்பி இந்த கொலைகளைப் பற்றி மேலும் விவரங்களை சேகரித்து வரும்படி அனுப்புயுள்ளாராம். அவர்கள் ஆதிலா பானுவின் குடும்பத்தினரை சந்தித்து உரையாடி விவரங்களைக் கேட்டபோது, அவர்கள் ஒத்துழைப்புதருவதாக இல்லை என்று குறிப்பிட்டனர். “இது வழக்கு மிகவும் சிக்கலான வழக்காக இருப்பதினாலும், நமது வரம்புகளுக்கு வெளியே செல்வதினாலும், அதை போலீஸாருக்கே விட்டு விடுகிறோம்”, என்றார்கள்.
இந்த கேள்விகளுக்கு என்ன பதில்?
* மலேசியாவிற்கு தப்பி ஓடிய “சந்தேகமான முக்கிய நபர்கள்” யார்?
* அடிக்கடி போனில் பேசியுள்ள திருச்சி, மதுரையிலிருந்து இரண்டு நபர்கள் யார்?
* போலீசார் தயாரித்துள்ள மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டவர்கள் பட்டியலில் உல்லவர்கள் யார்?
* ராமநாதபுரத்தில் உள்ள “பல முக்கிய நபர்களின்” எண்கள், என்ரால், யார் அவர்கள்?
* அவருக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பிய பலர் யார்?
* சில நாட்களில் 100 எஸ்.எம்.எஸ்.,களுக்கு மேல் அனுப்பிய குறிப்பிட்ட நபர் யார்?
* வணிக வளாகத்துடன் கூடிய வீடு உள்ளிட்ட சொத்துகள் யார் பெயரில் உள்ளன?
* அவற்றை யார் வாடகைக்கு எடுத்துள்ளனர்?
* அவள் வட்டிக்காக கடன் கொடுத்திருக்கிறாள் என்றால், யார்-யார் கடன் வாங்கியுள்ளனர்?
* விசாரணையில், தனது மகளுடன் தொடர்புள்ள சிலர் மீது சந்தேகிப்பதாக தெரிவித்திருந்தார் – அந்த “தொடர்புள்ள சிலர்” யார்?
* எதிர்ப்பு தெரிவித்தனர் சாத்தான்குளத்தினர் யார்?
* இப்பொழுது ஏன் அவர்கள் மௌனமாக இருக்கிறார்ள்?
* மேற்குறிப்பிடப்பட்ட – ராமநாதபுரத்தில் உள்ள “பல முக்கிய நபர்கள்”, “சிலர்” “பலர்”,…………………………..அவர்களில் இவர்களும் இருக்கிறார்களா?
வேதபிரகாஷ்
© 15-11-2010
[5] ராமநாதபுரத்தின் “பல முக்கிய நபர்கள்” என்பதனால் அவர்களை கண்ட்கொள்ளாமல் இருக்கபோகிறாற்களா? இது முந்தைய கற்பழிப்பு, நிர்வாண வீடியோ வழக்குப் போலத்தான் உள்ளது.
அண்மைய பின்னூட்டங்கள்