Archive for the ‘எதிர்ப்பு’ category

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகிய நிலை (1)

ஒக்ரோபர் 29, 2022

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகிய நிலை (1)

22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட் கிழமை) வரை நடந்துள்ளவை என்ன?: 24-10-2022 அன்று தீபாவளி என்பதால், துணிமணி, பட்டாசு, ஸ்வீட் வாங்க வேண்டும், எல்லோருமே ஊருக்குச் செல்ல வேண்டும், வாங்கியதை குடும்பத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டும், சந்தோஷமாக கொண்டாட வேண்டும், என்று லட்சக்கணக்கில் மக்கள் வாகனங்களில், பேருந்துகளில், ரெயில்களில் சென்று கொண்டிருந்தனர். அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்ப, பட்ஜெட்டில் தீபாவளி கொண்டாட திட்டத்துடன் இருப்பர், சென்று கொண்டிருந்தனர். ஆனால், அப்பொழுது, கோயம்புத்தூரில் சிலர் வேறு விதமாக திட்டம் போட்டிருந்தனர் போலும். வெகுஜன மக்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளியை நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, ஊடகங்களில் வழக்கம் போல, தீபாவளி எதிர்ப்பு, பட்டாசு மறுப்பு, நாத்திக-நராகாசுரன் ஆதரவு செய்திகள் வந்து கொண்டிருந்தன[1]. பட்டாசு வெடிக்க வேண்டாம், குறிப்பிட்ட நேரங்களில் தான் வெடிக்க வேண்டும், மீறினால், வழக்கு, புகார், தண்டனை என்றெல்லாம் பெரிய போலீஸ் அதிகாரிகள் மிரட்டியதாக செய்திகள்[2]. அதே நேரத்தில் பட்டாசு விற்பனை பெருக்க வேண்டும் போன்ற பிரச்சாரமும் இருக்கிறது. இன்னொரு பக்கமோ, கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது போன்ற செய்திகள்.

இந்நிலையில் தான் கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்செய்திகள் வர ஆரம்பித்தன: 22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட் கிழமை) வரை நடந்துள்ள நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்தால், இந்த கோவை கார் குண்டு வெடிப்பு திட்டமிட்டு நடந்துள்ள-நடத்தப்பட்ட செயல் என்று அறிந்து கொள்ளலாம். பிறகு, மற்ற செய்திகள் எல்லாம் வெளிவர ஆரமித்துள்ளன. ஊடகங்களின் பாரபட்சமிக்க, செய்தி வெளியீட்டுப் போக்கும், “ஆபத்திலிருந்து” மெதுவாக, “குண்டு வெடிப்பு” என்று முடிந்துள்ளது. இருப்பினும் இந்த தீவிரவாதிகள், பயங்கரவாதிள் எல்லோருமே மரியாதையுடன் தான் குறிப்பிடப் படுகிறார்கள். மத்திய உளவுத்துறை காவல்துறையினர் ஜமிஷா தொடர்பான பல்வேறு தகவல்களுடன் அவரை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசுக்கு 2018ம் ஆண்டு முதன் முதலில் தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது[3]. தமிழக காவல்துறையினர் இதனை பெரிதாக கருதவில்லை என்று கூறப்படுகிறது[4].

22-10-2022 (சனிக்கிழமை இரவு): சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு ஜமேஷா முபின் வீட்டில் இருந்து அவர் உட்பட 5 பேர் மர்மபொருளை தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், முபின் தன்னுடைய வீட்டை காலி செய்ய வேண்டும் என்று கூறியதாகவும், அந்தப் பெட்டியில் ஸ்கிரேப் பொருள்கள் இருந்ததாக முபின் விளக்கம் அளித்ததாக கூறியுள்ளனர். அந்த சிசிடிவி காட்சிகளில் உள்ள மற்ற நபர்கள் 4 பேர் யார் என்பது குறித்து பிறகு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர், என்றெல்லாம் செய்திகள் பிறகு வெளி வந்தன. அப்படியென்றால், இவர்களும் முன்னமே இக்காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். சுற்றியுள்ளவர்கள், இவர்களது நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு, எச்சரித்திருக்கலாம், புகார் கொடுத்திருக்கலாம். ஆனால், முஸ்லிம்கள் எனும் போது, அமைதியாக இருந்து விட்டனர் போலும். ஒரு ஊடகத்தால், அங்கு செய்தி-விவரங்கள் சேர்க்கச் சென்றபோது, ஜன்னல் கதவுகளை அடைத்துக் கொண்டனர், யாரும் பேச முன்வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. 

23-10-2022 (ஞாயிற்றுக் கிழமை):  அதிகாலை சுமார் 4:45 மணி அளவில், கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு பெரும் வெடிச் சத்தம் கேட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் அங்கு வந்து பார்த்துள்ளனர். முதலில், ஏதோ பட்டாசு சத்தம் என்று கூட நினைத்திருக்கலாம். அந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதிகாலை 4 மணி அளவில் சாலையில் கார் செல்வது, கார் நிற்பது பின்பு வெடித்து சிதறும் காட்சிகள் வெளியாகி உள்ளது. விடியற்காலை காரில் உள்ள காஸ் சிலிண்டர் வெடித்து ஒரு ஆள் இறந்தான். செல்போன் உதவியுடன் இறந்தவன் அடையாளம் காணப் பட்டான். வெடித்து சிதறிய காரில் இன்னொரு வெடிக்காத சிலிண்டர் மற்றும் சுற்றிலும் ஆணிகள், பால்ரஸ் போன்றவையும் சிதறிக் கிடந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தடயவியல் துறையினர் காரிலிருந்து  2 முதல் 3 கிலோ 1.5 இன்ச் ஆணிகள் மற்றும் பால்ரஸ் குண்டுகளைக் கண்டறிந்துள்ளனர். ஆணி, பால்ரஸ் வேறு பணிக்காக கொண்டு செல்லப்பட்டதா அல்லது வெடி விபத்தை நிகழ்த்தும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டவையா என்பதை நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஆக, நிச்சயமாக கோவை போலீஸார் சென்னை உயர் அதிகாரிகளுக்கு தெரியப் படுத்தி, விசயம் முதலமைச்சருக்குச் சென்றிருக்கும்.

பிற்பகல் – 23-10-2022 (ஞாயிற்றுக் கிழமை):  தொடக்கத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்தை கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி தாமரைக் கண்ணன் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இந்தச் சம்பவத்தின் நிலைமை அறிந்து சென்னையிலிருந்து டி.ஜி.பி சைலேந்திர பாபு விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கோவைக்கு வந்தார். வெடி விபத்து நிகழ்ந்த பகுதியை ஆய்வு செய்தார். அதாவது, விசயம் சாதாரணமானது அல்ல என்பது தெரிந்து விட்டது. பிரசித்தி பெற்ற உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு மட்டுமின்றி, தீபாவளியையொட்டி, இப்பகுதியில் துணி எடுப்பதற்காக அதிக அளவில் மக்கள் கூடும் நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது கோவை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மசூதிகள் முன்பு போலீஸார் பாதுகாப்புப்பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

கார் குண்டு வெடித்தலில் இறந்தவன் ஜமேசா முபின்: போலீஸார் செல்போன், கார் எண் முதலியவற்றை வைத்துக் கொண்டு விவரங்களை சேகரித்தனர். ஜமேசா முபின் என்பவன் தான் இறந்திருக்கிறான் எனூ முடிவானது. அவன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர். அப்பா இல்லை. அம்மா மட்டும் தான். அவர் மனைவிக்கு செவி மற்றும் பேச்சுத்திறன் இல்லை. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஜமேசாவுக்கும் இதயம், கண் ஆகியவற்றில் சில பிரச்னைகள் உள்ளன. முன்பு பழைய புத்தகக் கடை நடத்தி வந்தவர், பிறகு துணி வியாபாரம் செய்து வந்திருக்கிறார். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர். அதனால்தான் கடந்த 2019ம் ஆண்டு இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு பிறகு ஜமேசா முபினிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்த கார் வெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு போலீஸ் அவர் வீட்டில் நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு கடிதத்தில் சுற்றிப் பார்க்கவுள்ள சுற்றுலா தலங்கள் என எழுதி ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம், ஆணையர் அலுவலகம், ரேஸ்கோர்ஸ், விக்டோரியா ஹால் (மாநகராட்சி அலுவலகம்) ஆகிய பகுதிகளை குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம், இந்தப் பகுதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இப்படி செய்திகள்……

வாட்ஸ்ஆப் பதிவு, இறப்பு உண்மை என்றால், அது தற்கொலை குண்டு வெடிப்பு ஆகிறது: விபத்து நடந்தக் காரை ரூ.10,000க்கு தல்காவிடம் இருந்து வாங்கியுளளார். இப்படி கைது செய்யப்பட்ட  அனைவரும், இந்த சதித் திட்டத்தில் ஒவ்வொரு பணியைச் செய்துள்ளனர். ஜமேசா அவ்வபோது கேரளா சென்று, அங்கு ஏற்கெனவே என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்டுள்ள அசாருதீன் என்பவரைச் சந்தித்து வந்துள்ளார். ஆங்காங்கே சிறுக சிறுக சேகரித்து 75 கிலோ வெடி மருந்துக்கான வேதிப் பொருள்களை வாங்கியுள்ளனர். வெடி பொருள் தயாரிப்பது எப்படி என்பதை யூ-ட்யூபில் தேடிப் பார்த்திருக்கிறார். கைது செய்யப்பட்டவர்கள் இல்லாமல், இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கிறது.” என்றனர். …….’வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில், என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரியும் போது எனது தவறை மன்னித்து விடுங்கள், குற்றங்களை மறந்துவிடுங்கள் எனது இறுதி சடங்கில் பங்கேறுங்கள். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்,” என்று பதிவிட்டு உள்ளார். இதற்கான புகைப்படத்தை அவர் பதிவேற்றி இருக்கிறார். இதை பற்றி விசாரிக்க வேண்டும். இது ஐஎஸ்எஸ் தொடர்புடைய வாசகம். அவர்கள்தான் தற்கொலை தாக்குதல்களுக்கு முன்பாக இப்படி எல்லாம் போஸ்ட் செய்வார்கள்…..இப்படியும் செய்திகள்! வாட்ஸ்-ஆப் பதிவு, இறப்பு உண்மை என்றால், அது தற்கொலை குண்டு வெடிப்பு ஆகிறது, “சூஸைட் பாம்பர்” என்றாகிறது!

© வேதபிரகாஷ்

29-10-2022


[1]  திக-திமுகவினர் தொடர்ந்து தங்களது ஊடகங்களில் இத்தகைய பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், உலகம் முழுவதும் கொண்டாடப் பட்டு, உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

[2]  சுவாசிக்கும் காற்று மாசு படுகிறது என்ற கோணத்தில் உச்சநீதி மன்றமே வரையறை கொடுத்திருப்பதால், அதன் மீது, மாநில அரசுகள் மற்றும் இதர நிறுவனங்கள், இயக்கங்கள் இதை பெரிது படுத்தி, பிரச்சாரம் செய்கின்றன.

[3] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், உளவுத்துறைஅன்றேகொடுத்த சிக்னல்!.. கிடப்பில் போடப்பட்டதா ? கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம், Raghupati R, First Published Oct 28, 2022, 7:56 PM IST; Last Updated Oct 28, 2022, 8:34 PM IST.

[4] https://tamil.asianetnews.com/tamilnadu/coimbatore-car-bomb-blast-tn-police-ignored-central-intelligence-agency-warning-rkgw4i

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் ஆர்பாட்டம், அரங்கேற்றப் பட்ட நாடகமா, ஆதரவு, செயல்படும் சக்தி மற்றும் பின்னணி எது-யார்? [1]

பிப்ரவரி 21, 2020

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் ஆர்பாட்டம், அரங்கேற்றப் பட்ட நாடகமா, ஆதரவு, செயல்படும் சக்தி மற்றும் பின்னணி எது-யார்? [1]

Washermenpet Muslim poster Feb 2020- BBC Tamil

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் பிரச்சினையா, அரசியலா?: சென்னை வண்ணாரப்பேட்டை பிரச்சினை ஆழமாக அலசிப் பார்த்தால், அது வண்ணாரப்பேட்டை, சென்னை, தமிழ்நாடு அல்லது இந்தியாவிற்கான பிரச்சினை அல்ல என்று தெரிகிறது. எல்லை மாநிலங்கள் போலான ஊடுருவல்கள், அயலாட்டவர் இங்கு இருக்கிறார்கள் என்ற பட்சத்தில் அவர்களது நிலைப்பாடு உள்ளது என்றால், அது திகைப்படையச் செய்கிறது. ஏற்கெனவே ஐசிஸ் தொடர்புள்ள தீவீரவாதிகள், அவர்களுக்கு உதவியவர்கள் இப்பகுதிகள் மற்றும் சென்னையின் மற்ற பகுதிகளிலிருந்து கைது செய்யப் பட்டுள்ளனர். அப்படியென்றால், இவர்களுக்கு ஏதோ விசயம் தெரியும் போலிருக்கிறது. அமைதியாக “போராட்டம்” நடத்துகிறோம் என்றால், இத்தகைய சூழ்நிலை உருவாகி இருக்காது. குறிப்பிட்ட தெருக்களில் உள்ளவர்கள் நிச்சயமாக “ஹவுஸ் அரெஸ்ட்” நிலையில் இருந்திருக்கிறார்கள். அல்லது அவர்கள் தயாராக இருந்தார்கள் என்றாக வேண்டும். ஆனால், இஸ்லாமியர் திட்டமிட்டு, அதனை உருவாக்கியுள்ளனர் என்றும் தெரிகிறது. எனவே, இது எப்படியாவது ஏதோ ஒரு விதத்தில், அமைதியைக் குலைக்க வேண்டும் அல்லது ஊடக கவனம் பெற வேண்டும் போன்ற யுக்தியுடன் ஆரம்பித்ததாக தெரிந்தது. உடனடியாக அரசியல் நுழைந்தது, வேறுவிதமாக உள்ளது.

Washermenpet Muslim poster Feb 2020

போலீஸாரை ஒருதலைப் பட்சம்மாக குறை கூறும் ஊடகங்கள்: சொல்லி வைத்தால் போல, எதிர்கட்சிகள் எல்லாமே, ஒரே மாதிரி போலீஸார் நடவடிக்கையை எதிர்த்து அறிக்கை விடுப்பது, ஆளும் அரசை குறை சொல்வது போன்ற விதங்களில் அதிரடி பிரச்சார வேலைகளை முடுக்கியுள்ளார்கள். மின் மற்றும் அச்சு ஊடகங்கள் அவர்கள் மற்றும் அத்தகைய சித்தாந்தக்காரர்களிடம் இருப்பதால், ஆங்கில ஊடகங்களும் பாரபட்சமாகத்தான் இருக்கின்றன. தி இந்து மற்றும்பிரென்ட் லைன் படித்தால் விளங்கும். போலீஸார் பெண்களை, சிறுவர்களை அடித்தார்கள் என்று, பெண்கள் சொன்னதாக, நிருபர்கள் செய்தியை, அப்பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன[1]. பிறகு, போலீஸார் சொல்வதையும் வெளியிட வேண்டுமே, ஆனால், அதை செய்யவில்லை.  பிரென்ட்லை விடும் கதை கொஞ்சம் ஓவராகவே உள்ளது, ஏனெனில், அதற்கு ஆதாரம் இல்லை. ஜீப்பில் வைத்து அடித்தார்கள் என்றால் யார் பார்த்தார்கள் என்று சொல்லவில்லை. ஆனால், இவற்றையெல்லாம் செய்தி என்று பக்கம்-பக்கமாக போட்டிருக்கிறது[2].

caa demo politicized viduthalai 16-02-2020

தினத்தந்தி டிவி தொலைக் காட்சியில், எஸ்டிபிஐ உறுப்பினர் போலீஸாருக்கு எதிராக பயங்கரமான புகார் சொன்னது: 15-02-2020 அன்று தினத்தந்தி டிவி தொலைக் காட்சியில், எஸ்டிபிஐ சார்பாக பேசியவர், போலீஸார், பெண்களின் மர்ம உறுப்புகளில் லத்தியை நுழைத்து….. என்றெல்லாம் பேசியது திகைப்பாக இருந்தது. இதை தந்தி-ஒருங்கிணைப்பாளர் தடுக்கவில்லை. ஒரு பத்திரிக்கையாளர் எடுத்துக் காட்டிய பிறகும், அவர் பிடிவாதமாக, மனித உரிமை ஆணையத்திற்கு புகார் கொடுப்போம் என்றெல்லாம் வாதித்தார். போலீஸாரை எதிர்த்து அப்படி பேசுகிறார்களே என்ற உணர்வே அவர்களுக்கு இல்லை என்ற போக்கு தான் காணப் பட்டது. பார்ப்பவர்களுக்கே, அது எரிச்சலை ஊட்டுவதாக இருந்தது. அனுமதி எல்லாமல், பொது மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில் சாலைகளை மறித்து, ஆக்கிரமித்து, சட்டங்களை மீறி, “அமைதியான போராட்டம்” என்று பெண்கள்-சிறார்களை முன்னே வைத்து கலாட்டாவில் ஈடுபட்டதே, முஸ்லிம்களின் விசமத் தனத்தைக் காட்டுகிறது. ஒருதலைப் பட்சமாக இப்படி ஊடகங்கள் போலீஸாரை குறைகூறுவதும் விசமத் தனமாக உள்ளது. “டெக்கான் குரோனில்” ஒரு பெண் ஜாயின்ட் கமிஷனர், இரண்டு பெண் போலீஸார் மற்றும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் போராட்டக் காரர்கள் கற்களை வீசியதில் காயமடைந்தனர் என்று போலீஸார் சொன்னதாக, செய்தி வெளியிட்டுள்ளது[3]. மற்ற படி, பிடிஐ என்று செய்தியை அப்படியே வெளியிட்டுள்ளது[4]. ஏன் நிருபர்கள் ஆஸ்பத்திரிக்குச் சென்று உண்மை அறிந்து செய்தி போடவில்லை என்று தெரியவில்லை.

Tiruma visiting hospital-16-02-2020

திருமாவளவன் உளறுவது [14-02-2020]: அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தி ஒரு உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்[5]. சிஏஏவுக்கு எதிராக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தி ஒரு உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்[6]. அந்த அறிக்கையில், “குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மக்கள் அறவழியில் கூடி போராட்டம் நடத்தியுள்ளனர். பெண்களின் போராட்டம் வெற்றிகரமாக நடப்பதை சகித்துக்கொள்ளமுடியாமல் அவர்கள் மீது காவல்துறை வன்முறையை ஏவி இருக்கிறது. அங்கு இருந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதை பார்த்த ஆண்கள் அவர்களுக்கு பாதுகாப்பாக அங்கே வந்துள்ளனர். அவர்களைத் கடுமையாக காவல்துறையினர் தாக்கியுள்ளனர். அந்த நெரிசலில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்களைக் காவல் துறை கைது செய்துள்ளது. இந்தச் செய்தியை அறிந்ததும் நேற்றிரவு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பிறகு சென்னை போலீஸ் கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்தவர்களை விடுவித்துள்ளார். இதனால் சாலை மறியல் போராட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன….” இந்த அளவுக்கு முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கியுள்ளது திகைப்பாக உள்ளது.

Muslims propagating false-police-16-02-2010

உண்மை மறைத்து விமர்சிக்கு போக்கு: திருமா வளவன் அறிக்கைக் கூறுவது, “பெற்றோரின் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகிய விவரங்களைச் சேகரிக்கச் சொல்லும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என்று பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகியவை தெரிவித்துள்ள நிலையில் அதனால் எந்த பாதிப்பும் இல்லை, அதை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம் என்று இங்கே உள்ள அதிமுக அரசு கூறி வருகிறது. குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்து அதை சட்டமாக நிறைவேற்றி இன்று இந்தியா முழுவதும் அமைதியற்ற சூழல் நிலவுவதற்கு வழிவகுத்த அதிமுக, தமிழ்நாட்டை உத்தரப்பிரதேசத்தைப் போல வன்முறை பூமியாக மாற்றுவதற்கு திட்டமிட்டு செயல்பட்டுவருகிறது. அமைதியான அறவழிப் போராட்டங்களைக் காவல்துறையை வைத்து ஒடுக்குவதற்கு முயல்கிறது. அதன் ஒரு வெளிப்பாடுதான் நேற்று நடந்த சம்பவம். இதை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அனுமதிக்க முடியாது”.

© வேதபிரகாஷ்

21-02-2020

Muslim demo-politicized0Viduthalai 16-02-2020

[1] The protesters claimed that the police entered the area in large numbers and started beating the youths who had been organising protests against the CAA in the city. In the melee women and children were beaten. Jannathul Pradesh, one of the women injured in the police violence said: “I told them [the police] not to beat us and the children. We were very peaceful and disciplined. But they were inhuman and resorted to indiscriminate beatings. Many women suffered injuries. We got treated in local hospitals here.”

Frontline, Women, children injured in police lathi-charge against anti-CAA protesters in north Chennai, ILANGOVAN RAJASEKARAN, Published : February 15, 2020 18:37 IST
https://frontline.thehindu.com/dispatches/article30829834.ece

[2] A number of women Frontline spoke to on Saturday said that men outnumbered women in the police force that arrived there. “It was to terrorise the people, especially women, to discourage them from joining such protests in future. We were manhandled and beaten. The State wants to serve a warning to us—not to come out of our houses to defend our rights,” said Jannathul. Many women alleged that they were beaten inside the police vans by policemen and wanted the government to take action against the erring police personnel who unleashed violence against them.

[3] Police claimed that four of their personnel—a woman joint commissioner, two women constables and a sub-inspector—were injured in stonepelting by the protesters.

[4] Deccan Chronicle, Washermanpet violence triggers protests in Tamil Nadu, DECCAN CHRONICLE / PTI, Published: Feb 15, 2020, 6:21 pm IST; UpdatedFeb 15, 2020, 6:33 pm IST

https://www.deccanchronicle.com/nation/politics/150220/friday-night-anti-caa-clash-triggers-protests-in-tamil-nadu.html

[5] ஏசியா.நெட்.நியூஸ், இஸ்லாமியரை சாகடித்தவர்கள் மீது கொலை வழக்குப்போடுங்ககொந்தளிக்கும் திருமாவளவன்..!, By Thiraviaraj RM, Tamil Nadu, First Published 15, Feb 2020, 3:35 PM IST; Last Updated 3:35 PM IST.

[6] https://tamil.asianetnews.com/politics/murder-of-the-muslims-who-killed-the-file-case-says-thirumavalavan-q5qmow

முஸ்லிம் நாத்திகனாக இருக்க முடியாது, நியாயவானான முஸ்லிம் நாத்திக-பகுத்தறிவு-கம்யூனிஸ கடவுள் மறுப்பு கட்சிகளில், இயக்கங்களில் இருக்க முடியாது – இருந்து விமர்சித்தால் கொலை தான் (3)!

மார்ச் 19, 2017

முஸ்லிம் நாத்திகனாக இருக்க முடியாது, நியாயவானான முஸ்லிம் நாத்திகபகுத்தறிவுகம்யூனிஸ கடவுள் மறுப்பு கட்சிகளில், இயக்கங்களில் இருக்க முடியாதுஇருந்து விமர்சித்தால் கொலை தான் (3)!

Farooq murder - malaimalar - Vellore connection-1

பகுத்தறிவுமுஸ்லிம்கள், பெரியார் நாத்திகம்இஸ்லாம் போன்ற கூட்டுகள் போலித்தனமானது: பெரியாரை அவரது வாழ்நாள் காலத்திலேயே அடக்கி வைத்து, பிறகு அடிமை போல ஆக்கிக் கொண்டனர் முஸ்லிம்கள். பெரியார் முஸ்லிம்கள் பின்னால் அலைந்து-அலைந்து திரிந்தாரே தவிர, எந்த முஸ்லிமும் அவரைக் கண்டு கொள்ளவில்லை. ஜின்னா கழட்டி விட்டது பற்றி மேலே குறிப்பிடப் பட்டது. அண்ணா-கருணாநிதிகளும் அதே மாதிரி அடிவருடிகளாக முஸ்லிம்களை பாராட்டி பேசி தான் ஆதரவு பெற்றார்கள், பதிலுக்கு எம்.பி, எம்.எல்.ஏ பதவிகளை அள்ளிக் கொடுத்தார்கள். சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸரீன் முதலியோர்களின் நிலையை கவனித்துப் பார்க்கலாம். மதுரை ஆதீனம் முன்னர் கருத்து சொன்னதற்கு முஸ்லிம்கள் அவரை மிரட்டி பின் வாங்க வைத்தனர். இஸ்லாத்தைப் பொறுத்த வரையில், மோமினாக இருப்பவன், காபிருடன் எந்த பேச்சையும், சம்பந்தத்தையும், உறவையும், வைத்துக் கொள்ள முடியாது. ஏனெனில், அது குரானுக்கு எதிரானது. மொஹம்மது நபி “அல்-காபிரும்” என்ற அயத்தில் சொன்னதிற்கும் விரோதமானது. ஆகவே, இக்கூட்டு “ஷிர்க்” தான். தாங்கள் ஆண்டால், காபிர்களை, “திம்மிகளாக” அடிமைகளாக, ஜெஸியா வரி கட்ட வைத்து ஆளாலாமே தவிர, காபிர்கள் கூட சேர்ந்து ஆளமுடியாது, சல்லாபிக்க முடியாது. அதெல்லாமே, இஸ்லாத்திற்கு எதிரானது தான்.

Farooq murder vellore connection - Malaimalar-32316400_2

பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர்சமூகவளைதளங்களில் முஸ்லிம்கள், கிருத்துவர்கள் கண்டபடி விமர்சிப்பது: சமூகவளைத்தளங்களில் முஸ்லிம், கிருத்துவர்கள் தங்களது உண்மை பெயர், புனைப்பெயர் ஏன் இந்து பெயர்களை வைத்துக் கொண்டு, கேவலமாக, மோசமாக, ஆபாசமாக, அருவருப்பாக, கொச்சையாக…..பலவிதங்களில் இந்துமதம், கடவுள், சித்தாந்தம் முதலியவற்றை தாக்கி வருகின்றனர். பகுத்தறிவு, நுண்ணறிவு, நாத்திகம், செக்யூலரிஸம், கருத்துரிமை, கருத்து சுதந்திரம் என்ற பலபோர்வைகளில் அத்தகைய தாக்குதல்கள் நடந்து வருகின்றன. அவற்றைத் தட்டிக் கேட்பது ஒரு சிலரே. மேலும், அந்த ஒருசிலருக்கும், மற்ற இந்துக்கள் உதவுவது இல்லை. அதாவது, முட்டாள் இந்துக்களுக்கு ஒற்றுமை இல்லை. இதைத்தான், இவர்கள் தமக்கு சாதகமாக எடுத்துக் கொள்கிறார்கள். “இந்துத்துவம்” என்று ஆர்பாட்டம் செய்து கொண்டு, குறுகிய வட்டத்திற்குள் கிடக்கின்றனர். இந்துமதத்திற்கு எதிராக, எத்தனை ஆட்கள், கூட்டங்கள், இயக்கங்கள் எப்படி வேலை செய்து வருகின்றன என்பது கூட அவர்களுக்குத் தெரியாமல் இருக்கிறார்கள். தங்களுக்குள் பாராட்டிக் கொண்டு காலம் கழிப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். பரந்த அளவில் சிந்திப்பது, சமூக விளைவுகளைக் கவனிப்பது, செயல்பாடுகளின் நோக்கத்தை கண்டறிவது, அந்நோக்கம் ஆபத்தாக இருந்தால் தடுப்பது-குறைப்பது-ஒழிப்பது போன்ற முறைகளைப் பற்றியும் சிந்திப்பதில்லை.

Fake SIM obtained for Farooq murder -

சட்டமீறல்களுடன் குறங்களை செய்து, சட்டரீதியில் குழப்பங்களை உண்டாக்குவது: இதற்குள் அன்சர்ந்த் பயத்தினால் சரண் அடைந்துள்ளார் என்றும், இக்கொலைக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவரது வழக்கறிஞர் அறிவிப்பது நோக்கத் தக்கது. யாரோ, அவரது சிம்மை உபயோகித்து, பேசியதால் தான், அவர் மீது சந்தேகம் கொண்டது போலீஸ், அதனால் தேடி வந்தது அறிந்து தான் சரணடைந்தார் என்கிறார் அவர். அப்படியென்றால், அவர் தன்னுடைய சிம்மை அந்த அளவுக்கு ஜாக்கிரதையாக வைத்திருக்கிறார் என்று தெரிகிறது[1]. போலீஸார் விசாரிக்கும் போது உண்மை தெரிய வரும். தேசிய முஸ்லிம் லீக் சார்பில்[2], “இதை மதரீதியில் சமூக வளைதளங்களில் விமர்சிப்பதை நாங்கள் கண்டிக்கிறோம். வியாபாரரீதியில் கூட விரோதம் இருந்திருக்கலாம்”, என்று வெளியிட்டுள்ளதும் கவனிக்கத் தக்கது. விசயத்தை திசைத் திருப்ப அல்லது விளம்பரம் அடையாமல் இவ்வாறு செய்கிறார்கள் போன்றுள்ளது.

muslim rationalist killed in Kovai - 17-03-2017 DC

ஆங்கில ஊடகங்கள் நிலைமையை ஓரளவிற்கு எடுத்துக் காட்டியுள்ளது: “இந்தியா டுடே” இதனை அப்பட்டமாக எடுத்துக் காட்டியுள்ளது வியப்பாகவே உள்ளது[3]. “நாத்திகன் கொலை செய்யப்பட்டான்” என்று தலைப்பிட்டு, என்ன நடந்தது என்று வரிசையாக தெரிவித்துள்ளது[4].

HERE’S WHAT YOU NEED TO KNOW

  1. Farooq was murdered after he had left his Bilal Estate house in South Ukkadam at around 11 pm after receiving a phone call.
  2. He was on his scooter and was nearing Ukkadam Bypass Road when four people on motorcycles intercepted him. He tried to flee but couldn’t escape.
  3. Hearing the commotion, residents of the area rushed out of their homes after which the assailants fled.
  4. Locals found Farooq’s body lying on the road. His body bore multiple stabs and cuts inflicted by the assailants.
  5. Coimbatore Deputy Commissioner of Police S Sravanan reached the spot with police and began investigations.
  6. According to DCP Saravanan, Farooq was the admin of a WhatsApp group of people with rationalistic views who regularly debunk religion and religious claims.
  7. That vocal opposition to religion might be a possible motive for murder, DCP was quoted as saying.
  8. Atheist Farooq had posted rationalistic messages on his Facebook page which attracted criticism by members of the Muslim community, who called him an apostate.
  9. Police collected grabs from CCTV cameras installed at various commercial outlets on the stretch to identify Farooq’s killers.
  10. The last call on his mobile was traced to a SIM that was obtained on fake Vellore address.
  11. A large number of DVK cadre gathered at the hospital and demanded a high-level inquiry.
  12. Ansath’s surrender has been linked to the pressure put on the police by DVK.
  13. A police official told a newspaper that the religious offence could be just one motive. “We are looking into multiple angles and it is yet to be known if he was executed by communal groups, business rivalry or for personal reasons. One of his controversial religious posts shared in FB attracted criticisms.”

இதைவிட, சுருக்கமாக ஆனால் அதே நேர்த்தில் முழுமையாக மற்றவர்கள் வெளியிடவில்லை என்றே தெரிகிறது.

Farooq released from jail and received by Kolattur Mani.

கோவையில் தி.வி. பிரமுகர் படுகொலை: சிபிஎம் கண்டனம் (19-03-2017)[5]: கோயம்புத்தூர், மார்ச் 18, 2017- திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாவட்ட நிர்வாகியான பாரூக், மத அடிப்படைவாதிகளால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் வி. இராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “கோவை உக்கடம், பிலால் எஸ்டேட் பகுதியைச்  சேர்ந்தவர் பாரூக். திராவிடர் விடுதலைக் கழகம் அமைப்பில் செயல்பட்டு வந்த பாரூக், பகுத்தறிவு கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதன் காரணமாக மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார் என்பது சிறுபான்மை மதவெறியின் கோரமுகத்தை காட்டுகிறது. சமீபகாலமாக பகுத்தறிவுக் கருத்துகளை முழங்கிய நரேந்திர தபோல்கர், கல்புர்க்கி, கோவிந்த பன்சாரே போன்றோரை படுகொலை செய்த பெரும்பான்மை மதவெறிசக்திகளின் செயலையும், கோவை பாரூக் படுகொலையில் ஈடுபட்டுள்ள சிறுபான்மை மதவெறி சக்திகளின் செயலையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது, இது, கருத்தை கருத்தால் விவாதிக்க முடியதாவர்களின்ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களின்மதவெறியர்களின் கோழைத்தனமான செயலாகும்.இந்திய நாட்டில் தன் கருத்துக்களை பேசுவதற்கும், எழுதுவதற்கும், பிரச்சாரம் செய்வதற்கும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையின் மீதான தாக்குதலாக இச்சம்பவத்தைப் பார்க்க வேண்டியுள்ளது.  பாரூக் படு கொலையை அனைத்துத் தரப்பு ஜனநாயக சக்திகளும், மதநல்லிணக்கத்தை விரும்பு கிறவர்களும், சமூக நல்லிணக்கத்தில் அக்கறை உள்ளவர்களும் கண்டிக்க முன்வரவேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். மேலும் கோவை மாநகர காவல்துறை மெத்தனம் காட்டாமல் விரைந்து செயல்பட்டுஇந்த கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நட வடிக்கை எடுக்கவும், இச்சம்பவத்திற்கு பின்னணியில் உள்ள சக்திகளை கண்ட றிந்து  நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

19-03-2017

Farooq released and received by Kolattur Mani

[1] செல்போன், உதிரிகள் முதலிய வியாபாரங்களிலும் முஸ்லிம்கள் ஈடுபட்டிருப்பதால், இவற்றை மாற்ற, குளறுபடி செய்ய அவர்களால் முடியும் என்று தெரிகிறது.

[2] https://www.youtube.com/watch?v=9wUyZ35k2X4

[3] IndiaToday.in , Coimbatore: Vocal atheist hacked to death, realtor surrenders, Posted by Sonalee Borgohain; New Delhi, March 18, 2017 | UPDATED 12:17 IST

[4] http://indiatoday.intoday.in/story/coimbatore-vocal-atheist-hacked-to-death-realtor-surrenders/1/906973.html

[5] தீக்கதிர், கோவை பதிப்பு, பக்கம். 6, 19-03-2017; http://epaper.theekkathir.org/

கணவன் அக்பரை மனைவி பாத்திமுத்து கொலை செய்தது – கள்ளக்காதல் சீர்கேடா, பெண்ணியப் பிரச்சினையா, சமூக சீர்கேடா, இஸ்லாம் தாம்பத்திய மதப்பிரச்சினையா?

ஓகஸ்ட் 17, 2016

கணவன் அக்பரை மனைவி பாத்திமுத்து கொலை செய்தது – கள்ளக்காதல் சீர்கேடா, பெண்ணியப் பிரச்சினையா, சமூக சீர்கேடா, இஸ்லாம் தாம்பத்திய மதப்பிரச்சினையா?

அக்பர் கொலை 16-08-2016

மைத்துனர் சையது தானாகவே வந்தாரா, பாத்திமுத்து தகவல் கொடுத்து வந்தாரா?: 16-08-2016 காலை அதே பகுதியில் வசிக்கும் அக்பரின் மைத்துனர் சையது, அக்பரின் வீட்டுக்கு வந்தார். பாத்திமுத்து தகவல் சொல்ல வந்தார் என்றும் உல்ளது. அவர் கதவு தட்டும் சத்தம் கேட்டு, பாத்திமுத்து எழுந்து சென்று கதவை திறந்தார். அவரிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே, அக்பர் தூங்கிக் கொண்டிருந்த அறைக்கு சையது சென்றார். அங்கு வாயில் துணி திணிக்கப்பட்டு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அக்பர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து சையது சத்தம் போட்டார்[1]. பாத்திமுத்து மற்றும் பிள்ளைகளும் ஓடி வந்தனர். அக்பரின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.காலையில் எழுந்த உடன் கணவனை யாரோ கொலை செய்து விட்டார்கள் என நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது[2].

அக்பர் கொலை 16-08-2016.நியூஸ்7டிவி

அக்பருக்கு பாத்திமா என்ற பெண்ணுடன் தொடர்பு, கள்ளக்காதல், உல்லாசம்: வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் பாத்திமா (35). கணவனை விட்டுப் பிரிந்தவர். இவரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது கடையில் கணக்கு வழக்குகளை கவனித்துக்கொள்வதற்காக அக்பர் வேலைக்கு வைத்துக் கொண்டார். ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது[3]. பிறகு மண்ணடியிலேயே வாடகை வீடு எடுத்து பாத்திமாவை அக்பர் தங்கவைத்துள்ளார். பிறகு இருவரும் அவ்வப்போது நெருக்கமாக இருந்துள்ளனர். வெளி இடங்களிலும் சுற்றித் திரிந்துள்ளனர். நாளடைவில் இந்த கள்ளத்தொடர்பு பாத்திமுத்துவுக்கு தெரிய வர அக்பரை கண்டித்துள்ளார். ஆனால் அக்பரோ அப்படி ஏதும் இல்லையென்று மறைத்துள்ளார். ஆனாலும் சந்தேகம் தீராத பாத்திமுத்து தனது கணவரை பின் தொடர்ந்து வேவு பார்த்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாத்திமாவின் வீட்டில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

Akbar murder, Mannady 16-08-2016, Dinakaran

Akbar murder, Mannady 16-08-2016, Dinakaran

பாத்திமுத்து கையும் களவுமாக கணவன் கள்ளக்காதலியைப் பிடித்தது: தனது உறவினர்களுடன் அங்கே சென்று கையும் களவுமாகப் பிடித்த பாத்திமுத்து, பாத்திமாவை அடித்து உதைத்துள்ளார். பிறகு அங்கிருந்த பாட்டிலால் அக்பரின் தலையில் அடித்துள்ளார். இதில் அக்பருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாத்திமுத்துவுடன் கோபித்துக்கொண்டு அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அக்பருக்கு பாத்திமாதான் உதவியாக இருந்துள்ளார். பிறகு உறவினர்கள் சமாதானப்படுத்தியதை அடுத்து பாத்திமுத்துவுடன் வீட்டுக்கு வந்துள்ளார். பாத்திமாவையும் வேலையை விட்டு நிறுத்தி விட்டார். ஆனால், சில நாட்களிலேயே மீண்டும் இருவரும் பழகத் தொடங்கியுள்ளனர். இதை பாத்திமுத்து கண்டிக்க, ‘நான் பாத்திமாவை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். உன்னால் என்ன செய்ய முடியும். பாத்திமாவும் நானும் திருமணம் செய்துகொண்டு இந்த ஊரை விட்டே செல்லப் போகிறோம். பிறகு நீயும் உனது குழந்தைகளும் பிச்சைதான் எடுக்க வேண்டும். நான் உனக்காக நிறைய செலவு செய்தேன். ஆனால் நீ எனது சந்தோஷத்தை கெடுக்கிறாய்’ என்று கூறியுள்ளார். இதுதான், அவளை கொலைச் செய்யத் தூண்டியது.

Akbar murder, Mannady 16-08-2016, The Hindu

Akbar murder, Mannady 16-08-2016, The Hindu

போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்ட பாத்திமுத்து: தகவலறிந்த போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்[4]. இந்நிலையில் அக்பர் வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா இயங்கவில்லை என தெரிகிறது[5]. இந்த கொலை தொடர்பாக அக்பர் குடும்பத்தினர் உள்ளிட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[6]. அக்பர் கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பாத்திமுத்து முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். இதனால் அவரிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டனர். அப்போது கணவரை கொலை செய்ததை பாத்திமுத்து ஒப்புக்கொண்டார். கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபரை அவருடைய மனைவியே கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். இதையடுத்து பாத்திமுத்து மீது போலீசார் வழக்குப்பதிந்து அவர் கைது செய்யப்பட்டார்[7]. கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவனை, மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அக்பரின் மகள் பூஜா(12) சற்றே மனநலம் பாதித்தவர். அவர் நள்ளிரவில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அக்பரை பார்த்துவிட்டு பாத்திமுத்துவிடம் கேட்டுள்ளார். ஒன்றுமில்லை. அப்பா தூங்குகிறார். காலையில் எழுந்துவிடுவார் என்று அவரை பாத்திமுத்து தூங்க வைத்துள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Akbar murder, Mannady 16-08-2016, TOI

Akbar murder, Mannady 16-08-2016, TOI

எல்லோருக்கும் தெரிந்த கள்ளக்க்காதல்-தொடர்புகளை உறவினர்கள்-நண்பர்கள் ஏன் கண்டிக்கவில்லை, எதிர்க்கவில்லை?: பாத்திமுத்து உறவினருக்கு அக்பரின் கள்ளக்காதல் தொடர்புகள் தெரிந்திருக்கின்றன. அதேபோல, அவர்கள் அக்பரை கையும் களவுமாகப் பிடித்து அடித்த போதும், மற்றவர்களுக்கு, குறிப்பாக சுற்றிலும் உள்ளவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அக்பருன் உறவினர்களுக்கும் தெரிந்திருக்கக் கூடும். ஆனால், யாரும் அக்பரைக் கண்டிக்கவில்லை அல்லது அத்தகைய கள்ளக்காதல், உறவு தப்பு, தவறு, குற்றம் என்றெல்லாம் எடுத்துக் காட்டவில்லை என்பது வியப்பாக உள்ளது. மனைவி பாத்திமுத்து மட்டும் எதிர்க்க வேண்டும், கண்டிக்க வேண்டும் என்பது ஆச்சரியமாக உள்ளது. அதாவது, முஸ்லிம்கள் ஒன்றிற்கும் மேலான பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கலாம் மற்றும் திருமணம் செய்து கொண்டு மனைவியரை வைத்துக் கொள்ளலாம், இதெல்லாம் சகஜம் தான் என்று அமைதியாக இருந்தார்கள் போலும். இருப்பினும், மனைவி எதிர்த்திருக்கிறாள். ஆக, இதை பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்லது இஸ்லாமிய பெண்ணின் பிரச்சினை என்றே ஒதுக்கப்பட்டு விட்டதா என்று தெரியவில்லை.

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது-குழப்பம்

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது-குழப்பம்

கொலை செய்யத் தூண்டியது என்ன?: பாத்திமுத்து கண்டித்தபோது, “நான் பாத்திமாவை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். உன்னால் என்ன செய்ய முடியும். பாத்திமாவும் நானும் திருமணம் செய்துகொண்டு இந்த ஊரை விட்டே செல்லப் போகிறோம். பிறகு நீயும் உனது குழந்தைகளும் பிச்சைதான் எடுக்க வேண்டும். நான் உனக்காக நிறைய செலவு செய்தேன். ஆனால் நீ எனது சந்தோஷத்தை கெடுக்கிறாய்”, என்று கூறியுள்ளது நோக்கத்தக்கது. இங்கு ஒருவேளை தனது இஸ்லாமிய உரிமையை எடுத்துக் காட்டியுள்ளது தெரிகிறது. “நான் உனக்காக நிறைய செலவு செய்தேன்”, என்பது, அந்த மனைவிக்கு செய்த கடமையை குறிப்பதாக உள்ளது. “ஆனால் நீ எனது சந்தோஷத்தை கெடுக்கிறாய்”, அதாவது, இன்னொரு திருமணத்தை செய்து கொள்ள ஆட்சேபிக்கிறாய் என்கிறார் போலும். “பிறகு நீயும் உனது குழந்தைகளும் பிச்சைதான் எடுக்க வேண்டும்”, என்றது, விவாக ரத்து செய்துவிடுவேன் என்பதைக் குறிக்கிறது. பணம் நிறைய இருப்பதால், “மஹர்” கொடுத்து “தலாக்” செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், பாத்திமுத்து தனது முழந்தைகளை வைத்துக் கொண்டு வாழ்வது எப்படி? “அக்பரின் மகள் பூஜா (12) சற்றே மனநலம் பாதித்தவர்”, என்றும் உள்ளது. அதாவது, அவளுக்கு மருத்துவ செலவு, வளர்த்து பெரியவள் ஆக்குவது, திருமணம் செய்து வைப்பது போன்ற கடமைகளிலிருந்தும் அக்பர் தப்பிப்பது தெரிகிறது. இதனால், ஒரு பெண் எல்லாவிதங்களிலும் நெருக்கித் தள்ளப்பட்டபோது, அத்தகைய கொடுமையான முடிவுக்கு வந்து, தனது கணவனையே கழுத்தறுத்துக் கொன்றிருக்கிறாள்.

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது

பெண்கள் பிரச்சினைகள் உணரப்பட வேண்டும்: பொதுவாக, இப்பிரச்சினையை பெண்கள் பிரச்சினை என்றெ எடுத்துக் கொள்ளலாம். கணவன் ஒரு மனைவியை / பெண்ணை விவாகரத்து செய்தால், மனைவி-மக்கள் / குழந்தைகள் வாழ, ஜீவனாம்சம் கொடுக்கப்படவேண்டும். ஆனால், ஆண் ஏதோ பணத்தைக் கொடுத்து கழட்டி விடுவது, மற்றும் பெற்ற குழந்தைகளைப் பற்றி கவலைப் படாமல் இருப்பது, கடமைகளைத் தட்டிக் கழிப்பது மற்றும் சட்டப்படி மனைவிக்கு தொல்லைக் கொடுப்பது போன்ற நிலைகளில் ஈடுபட்டால், மனைவி-குழந்தைகள் கதி அதோகதிதான். தனியாக ஒரு பெண் குழந்தைகளுடன் வாழ்வது என்பது பெரிய சோதனை ஆகும். ஆனால், இஸ்லாம் என்று பார்த்தால் பிரச்சினை வருகிறது. அதனால் தான் இதனை விமர்சிக்காமல் ஒதுங்கி விடுகிறார்கள் என்று தெரிகிறது. பொது சிவில் சட்டம் என்று பேசுபவர்களும், பேச பயப்படுபவர்களும், செக்யூலரிஸப் பழங்களும் கூட மௌனிகளாகி விடுகின்றனர். ஆனால், பெண்கள் படும்பாட்டை மற்றவர்கள் உணர, அறிய, புரிய வேண்டும். இப்பிச்சினை பொதுப்பிரச்சினையாக கருதப்படவேண்ட்ம். அப்பொழுதுதான், இந்திய சமூகம் சிறப்பாக இருக்கும்.

© வேதபிரகாஷ்

17-08-2016

[1] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=239296

[2] தினகரன், கள்ளக்காதலியுடன் ஓட முயன்ற கணவனை அரிவாளால் வெட்டிக் கொன்றார் மனைவி, Date: 2016-08-17@ 00:38:58

[3] http://news.lankasri.com/india/03/107579

[4] நியூஸ்.7.டிவி, இரும்பு வியாபாரி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்!, August 16, 2016

[5] http://ns7.tv/ta/death-husband-and-police-arrested-wife.html

[6] http://ns7.tv/ta/while-iron-dealer-kaluttarukkappatta-mysterious-death.html

[7] http://www.dailythanthi.com/News/State/2016/08/17010831/Wife-killed-their-throats-cut.vpf

ஒரு பெண்ணை உள்ளூர் பையன்கள் கலாட்டா செய்துள்ளனர் – ஆனால், ராணுவ வீரன் பாலியல் தொந்தரவு செய்தான் என்று வதந்தி உண்டாக்கி, கலவரத்தை ஏற்படுத்தியுள்ள பிரிவினைவாதிகள்!

ஏப்ரல் 19, 2016

ஒரு பெண்ணை உள்ளூர் பையன்கள் கலாட்டா செய்துள்ளனர் – ஆனால், ராணுவ வீரன் பாலியல் தொந்தரவு செய்தான் என்று வதந்தி உண்டாக்கி, கலவரத்தை ஏற்படுத்தியுள்ள பிரிவினைவாதிகள்!

Kupwaraa, Handwara JK map

வீடியோ மூலம் வதந்தி, கலவரம் ஆரம்பித்து வைக்கும் போக்கு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், 12-04-2016 செவ்வாய் கிழமை அன்று, இளம் பெண் ஒருவரிடம் ராணுவத்தினர் பாலியல் வன்முறையில் ஈடுபட முயற்சி செய்ததாக யாரோ சிலர் வேண்டும் என்றே வதந்தியை கிளப்பிவிட்டனர்[1]. ஹந்த்வாரா நகரில் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மாணவிக்கு/ சிறுமிக்கு ஒருவர் ராணுவ வீரரால் பாலியல் சில்மிஷம் செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இதற்குள் ஒரு இளம்பெண் கற்பழிக்க பட்டாள் என்பது போன்ற வதந்திகள் வாட்ஸ்-அப், பேஸ்புக் முதலியவற்றில் மொபைபோன்கள் மூலம் பரப்பி விடப்பட்டன. நம்பிய இளைஞர்கள் இதனை கண்டித்து பாதுகாப்பு படை வீரர்கள் மீது கல்வீச்சீல் ஈடுபட்டனர். “கல்லடி கலாட்டா” என்பது கலவரத்திற்கு ஆரம்பம் என்பது அறிந்ததே. சிறுவர்கள்-பெண்களை முன் வைத்து, பிரிவினைவாதிகள் பின்னிருந்து செய்யும் கலவரம் ஆகும். பிறகு கண்டித்து பல்வேறு நகரங்களில் தொடர் போராட்டம் நடைபெற்றது[2].

Scene after massive stone-pelting in Handwara on Tuesday 1204-2016- Firdous Hassan-GK

வழக்கம் போல பிண ஊர்வலத்தை வைத்து கலவரத்தைப் பெரிதாக்கியது: ஆனால், இதற்கு பிரிவினைவாதிகளின் சதிதிட்டம் இருப்பது ராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குள் கலவரம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அன்றே துப்பாக்கி சூட்டில் ராஜா பேகம் என்ற பெண் காயமடைந்தாள். 13-04-2016 புதன் கிழமை அன்று, மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டாலும், பலனின்று இறந்ததும், அவளது பிணம் லங்கேட் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டதும், கலவரம் ஆரம்பித்தது. இவ்வாறு யாதாவது ஒரு அப்பாவி இறப்பது, அப்பிண ஊர்வலத்தை சாக்காக வைத்துக் கொண்டு, மறுபடியும் இன்னொரு கலவரத்தை ஏற்படுத்துவது, மனித உரிமைகள் மீறல் என்ற வாதங்களை வைப்பது, உடனே அவற்றை ஊடகங்கள் பெரிதாக்கி, செய்திகளை போடுவது, பரப்புவது என்பனவெல்லாம் வாடிக்கையாகி விட்டன.

18_Monday_2016_Police acts against the members of Tehreek-e-Hurriyat who were taking out a protest march against the killing of four persons in Handwaraபிரிவினைவாத கோஷங்கள் எழுப்புவது, போலீஸார்ராணுவ வீரர்களைத் தாக்குவது முதலியன: ஹந்த்வாராவுக்கு அருகே உள்ள டிரக்மல்லா பகுதியில் 13-04-2016 அன்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில், சுதந்திரத்துக்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பப்பட்டன, என்று ஊடகங்கள் செய்திகளைப் போட்டாலும், பிரிவினைவாத-தேசவிரோத கோஷங்கள் என்று குறிப்பிடுவதை மறைக்கும் போக்கை கவனிக்க வேண்டும். இதைத்தொடர்ந்து மாநில போலீசாரும், பாதுகாப்பு படையினரும் சேர்ந்து போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். இதில் பலன் எதுவும் ஏற்படாததால், கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. இப்படி வழக்கமாக நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை, நல்லெண்ணம் படைத்த காஷ்மீர் அறிவிஜீவுகள் யாரும் கண்டிப்பதாகவோ, தடுப்பதாகவோ தெரியவில்லை. கலவரம் ஏற்பட வேண்டும், அதில் யாராவது சாக வேண்டும், அதை வைத்து மேலும் கலவரத்தை பெரிதாக்க வேண்டும் என்ற போக்கு சகஜமாகவே கடந்த 35 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இதில் ஒரு குண்டு ஜெகாங்கிர் அகமது என்ற வாலிபரின் தலையில் பாய்ந்தது. இதில் காயமடைந்த அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே ராணுவத்தை கண்டித்த ஹந்த்வாரா, குப்வாரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்தது. இதனால் பதற்றத்தை தணிக்க பொதுமக்கள் பிரதிநிதிகளுடன் ராணுவம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. தொடர்ந்து அங்கு பதட்டமான நிலையே நீடித்து வருகிறது[3].

Activists from the Muslim Khawateen Markaz -MKM-take part in a protest in Srinagar over the killing of youth in Handwara-AFP Photoமொபைல் இன்டர்நெட் சேவை ரத்து: இப்பொழுதெல்லாம், இப்பிரிவினைவாத-தேசவிரோத செயல்களுக்கு பலரை வேலைக்கு அமர்த்தி இன்டெர்நெட் மூலமும் பிரச்சாரம் நடந்து வருகிறது. அங்கங்கு எடுத்த புகைப்படங்கள், விடியோக்கள் முதலியவற்றை கலந்து, தூண்டிவிடும் பேச்சுகள் முதலியவற்றைச் சேர்ந்து பரப்பி விடுகின்றனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் சமூக விரோத சக்திகளால் வதந்திகள் பரப்பி விடப்படுவதை தடுக்க மொபைல் இன்டர்நெட் சேவை தடை செய்யப்பட்டு உள்ளது. மொபைல் இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக சேவை நிறுவனங்கள் எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆனால் சமூக விரோத சக்திகளால் வதந்திகள் பரப்பி விடப்படுவதை தடுக்க சேவை நிறுத்தப்பட்டு உள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குப்வாரா, பாராமுல்லா, பாந்திபோரா, கந்தர்பால் ஆகிய மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை தடை செய்யப்பட்டு உள்ளது[4]. ஸ்ரீநகர் மற்றும் தெற்கு காஷ்மீர் மக்களும் இன்டர்நெட் சேவையை அணுக முடியவில்லை என்று தெரிவித்து உள்ளனர். அங்கு நிலை சீரடைந்த பின்னர் சேவை வழங்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Army attacked by the JK youth 12-04-2016கலவரம் பெரிதாகி, துப்பாக்கி சூட்டில் ஐந்து பேர் இறத்தல்: அங்கு கலவரம் வெடிக்க, இன்று ஸ்ரீநகரில் முழு அடைப்புக்கு பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்தனர்[5]. இது வெறும் வதந்தி தான் உண்மை அல்ல என்பதை உணராத கந்தர்பால் மாவட்ட மக்கள் மற்றும் போராட்டகாரர்கள் சிலர் ராணுவத்தினரை தாக்க முயன்றனர்[6]. அப்போது ராணுவத்தினருக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த வன்முறையில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர்  சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை கண்டித்து காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். சில இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். இதனால் காஷ்மீர் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது, கூடவே முழு அடைப்புப் போராட்டமும் நடைபெற்று வருகிறது.

Handwara, Kupwara, JK girl stated no molestation 12-04-2016.முதலமைச்சர், துணைமுதலமைச்சர், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து ஆறுதல் கூறியது: துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அம்மாநில முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி மற்றும் துணை முதல்வர் நிர்மல் குமார் சிங் சந்தித்து பேசினர். ராணுவத்தினர் எந்த காரணத்திற்காக இத்தகைய காரியங்களில் ஈடுபடுவதை ஒப்புக்கொள்ள முடியாது என்பதனைதான் ராணுவ அமைச்சரிடம் கூறியுள்ளதாக தெரிவித்தார்[7]. வன்முறையை ஒருபோதும் ஏற்றுகொள்ளமுடியாது என்று அப்போது அவர் கூறினார்[8]. மேலும் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் மாகம், லங்காடே, ஹண்ட்வாரா, குப்வாரா உள்ளிட்ட இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கலவரம் காரணமாக ஸ்ரீ நகரில் கூடுதல் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்[9]. ராணுவ வீரரின் தவறு நிரூபிக்கப்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[10].

Handwara, Kupwara, JK girl viedo turned riot 12-04-2016.பாத்ரூம் சென்ற பெண்ணை கலாட்டா செய்து பொய் செய்தியை பரப்பிய விதம்: அதன் பிறகு சம்பந்தபட்ட பெண் கூறுகையில், தன்னை யாரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தவில்லை என விளக்கம் கொடுத்தார்[11]. உண்மையில் அவள் தன் தோழியுடன் பொதுக்கழிப்பறை / பாத்ரூம் சென்று வரும் போது, சில இளைஞர்கள் அவளிடம் கலாட்டா செய்துள்ளனர். பள்ளி சீறுடை அணிந்த ஒருவன் அவளது பையினைப் பிடுங்கிக் கொண்டு, “ராணுவ வீரருடன் உனக்கென்ன பேச்சு, காஷ்மீரில் என்ன பையன்களா இல்லை”, [அதாவது எங்களை விடுத்து ஏன் மற்றவர்களிடம் போலீஸார்-ராணுவத்திடம் செல்கிறாய்] என்று நக்கலாக பேசி, கன்னத்தில் அறைந்துள்ளனர். ஹிலால் என்ற பையன் “நீ அங்கு என்ன செய்து கொண்டிருந்தாய்?…………………..” [தான் யாருடனோ உறவு கொண்டிருப்பதைப் போன்ற தொணியில்] பேசினான்[12]. அவர் என்ன சொல்ல வருகிறார் என நான் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தேன். இந்நிலையில் பல மாணவர்கள் அங்கு கூடினர். அப்போது அருகில் போலீஸ் காவலர் ஒருவர் நின்றிருந்தார். அவரை சுட்டிக்காட்டி புத்தகப் பையை தராவிடில் அவருடன் நான் காவல் நிலையம் செல்வேன் என்றேன். உடனே அந்த மாணவர் எனது பையை தராமல் என்னை கெட்ட வார்த்தைகளால் பேசினார். இதையடுத்து பிற மாணவர்களும் பிரச்சினை செய்யத் தொடங்கினர். அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு சதிச் செயலில் ஈடுபட்டதாக கருதுகிறேன்” என்றார்[13]. உண்மையில் அங்கு ராணுவத்தினர் யாரும் இல்லை என்று விளக்கினாள்[14]. ஆனால், ஒருவேளை, இதனை வேறு கோணத்தில் வீடியோ எடுத்து, அதற்கு வசனத்தையும் சேர்த்து வாட்ஸ்-அப்பில் பரப்பியிருக்கலாம்.

© வேதபிரகாஷ்

19-04-2016

[1] வெப்துனியா, ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மோதல் வெடித்தது, திங்கள், 18 ஏப்ரல் 2016 (04:51 IST)

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=210714

[3] http://www.dailythanthi.com/News/India/2016/04/14112558/Mobile-internet-services-suspended-in-Kashmir.vpf

[4] தினத்தந்தி, காஷ்மீரில் மொபைல் இன்டர்நெட் சேவை தடை செய்யப்பட்டது, மாற்றம் செய்த நாள்: வியாழன், ஏப்ரல் 14,2016, 11:25 AM IST; பதிவு செய்த நாள்: வியாழன் , ஏப்ரல் 14,2016, 11:25 AM IST

[5] http://www.4tamilmedia.com/newses/india/36206-2016-04-13-06-18-32

[6] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/jammu-kashmir-girl-denies-molestation-by-army-soldier-116041800005_1.html

[7] http://www.thehindu.com/todays-paper/more-troops-sent-to-kashmir-valley/article8484421.ece

[8] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=210593

[9] தினகரன், காஷ்மீரில் நீடிக்கிறது வன்முறை: பதட்டம் நீடிப்பதால் ராணுவம் குவிப்பு, ஏப்ரல்.17, 2016.09.09.51.

[10] தமிழ்மீடியா, காஷ்மீரில் ராணுவத்துக்கு எதிராக பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு, WEDNESDAY, 13 APRIL 2016 08:18.

[11] http://www.indiatvnews.com/news/india-no-molestation-girl-clarifies-after-2-protesters-killed-seeking-arrest-of-army-jawan-323730

[12] தமிழ்.தி.இந்து, உள்ளூர் இளைஞர்கள்தான் தொந்தரவு செய்தனர்: ராணுவ வீரர் பாலியல் தொல்லை தரவில்லைகாஷ்மீர் பள்ளி மாணவி விளக்கம், Published: April 14, 2016 10:07 ISTUpdated: April 14, 2016 10:08 IST.

[13]http://tamil.thehindu.com/india/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article8475117.ece

[14] “I went to the (public) washroom and handed my bag to a friend. When I came back, a Kashmiri student heckled me and snatched my bag. The boy in school uniform slapped me and asked ‘if there were no boys in the valley’ (angrily insinuating that the girl was in a relationship with a soldier). I was shocked and confused about what he had said. Suddenly, several boys gathered. The boy asked me to go to the police station with him. There was a police uncle nearby. I told the boy to return my bag so that I could go to police station with the cop. He said he would not return my bag and started abusing me.” There was no soldier there (near or in the washroom). I saw Hilal (an acquaintance). He slapped me and asked me what I was doing there. I asked him how he too could accuse me of any such thing (allegation of an illicit relationship) knowing me and our family. He too started abusing. It seemed that they had conspired in advance. The boy instigated all other boys too to create trouble,” the girls says in the video.

http://timesofindia.indiatimes.com/india/JK-firing-Handwara-girl-says-no-soldier-molested-her-accuses-local-youth-of-harassment/articleshow/51808725.cms

ஆர்.எஸ்.எஸ் 4,000 கிருத்துவர் மற்றும் 1,000 முஸ்லிம் குடும்பங்களை இந்துமதத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது!

திசெம்பர் 11, 2014

ஆர்.எஸ்.எஸ் 4,000 கிருத்துவர் மற்றும் 1,000 முஸ்லிம் குடும்பங்களை இந்துமதத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது!

ஆக்ரா முஸ்லிம்கள் மதமாற்றம் உண்மையா, பொய்யா?

ஆக்ரா முஸ்லிம்கள் மதமாற்றம் உண்மையா, பொய்யா?

ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகரே சொன்ன விவரங்கள்[1]: தர்ம ஜாக்ரண் மஞ்ச் என்ற பஜ்ரங் தள் அமைப்பின் பிரிவு, “கர் வாபஸி” (வீட்டுக்குத் திரும்ப வருதல்) என்ற நிகழ்சி மூலம், சுமார் 60 முஸ்லிம் குடும்பங்களை இந்துமதத்திற்கு மாற்றியுள்ளதாக செய்திகள் புகைப்படங்கள், வீடியோக்களுடன் வெளிவந்தன. அவர்களுக்கு ரேஷன் கார்டுகள், பணம் எல்லாம் கொடுக்கப் பட்டது என்றும் கூறப்படுகின்றது[2]. எகனாமிக்ஸ் டைம்ஸ், “ஆர்.எஸ்.எஸ் 4,000 கிருத்துவர் மற்றும் 1,000 முஸ்லிம் குடும்பங்களை இந்துமதத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது”, என்று வெளிப்படையாக செய்தியை வெளியிட்டுள்ளது[3]. “அலிகர் இதற்காகப் பிரத்யேகமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. ஏனெனில், இப்பொழுது இந்துக்களுக்கு அந்நகரத்தை முஸ்லிம்களிடமிருந்து மீட்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ராஜபுத் வீரர்களால் கட்டப்பட்டது அந்நகரம், அங்கிருந்த கோவில்கள் இடிக்கப்பட்டு கட்டப் பட்டுள்ள முஸ்லிம்களின் நிறுவனங்கள் தாம் இப்பொழுதுள்ளன. கிருஸ்துமஸ் தினம் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது, ஏனெனில், அது பரீட்சை செய்து / சோதித்து பார்க்கும் தினமாக அமையும். அலிகர், பூலத்சர், ஹத்ராஸ் போன்ற சேரிக்களில் வாழும் முஸ்லிகள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். 4,000 கிருத்துவர்களும் வால்மீகி சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். 1,000 முஸ்லிம் குடும்பங்கள் தாகூர் மற்றும் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்”, என்றெல்லாம் ராஜேஸ்வர் சிங் என்ற [RSS regional pracharak Rajeshwar Singh ] ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகரே அவ்வாறு சொல்லியுள்ளதாக வெளியிட்டுள்ளது. வெளிந்சாட்டு ஊடகங்களும் இதை வெளியிட்டுள்ளன[4]. ரீயூட்ட்ர்ஸ் இந்தியா [Reuters India], இலவச உணவு கொடுக்கப் படும் என்றுகூட வாக்குறுதி கொடுத்துள்ளார்கள் என்று சேர்த்துள்ளது. அதாவது, முன்பெல்லாம் பால் பவுடர், ரொட்டி போன்ற உணவு கொடுத்து கிருத்துவர்கள் இந்துக்களை மதமாற்றினார்கள் என்று சொல்வதுண்டு, அதனால், அப்படி நக்கலாக அதையும் சேர்த்துள்ளது போலும்! சத்தீஸ்கரில் இந்துத்வா கிருத்துவர்களை மாற்ற முயற்சிக்கிறது என்றும் செய்திகள் வந்துள்ளன[5].

ஆர்.எஸ்.எஸ் 4,000 கிருத்துவர் மற்றும் 1,000 முஸ்லிம் குடும்பங்களை இந்துமதத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது!

ஆர்.எஸ்.எஸ் 4,000 கிருத்துவர் மற்றும் 1,000 முஸ்லிம் குடும்பங்களை இந்துமதத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது!

வெளிப்படையாக சொல்லி செய்யும் முட்டாள்களா ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர்கள்?:  இதெல்லாம் முந்தைய “தெஹல்கா”வின் குத்தும் ஆபரேஷன் செய்திகள் (Sting operation news) போன்றுள்ளது. குஜராத் கலவரங்கள் விவகாரங்கள் விசயத்தில் தெஹல்கா மற்றும் என்டிடிவி தொடர்ந்து சில காட்சிகளை பிரச்சாரரீதியில் நாள் முழுவதும் காட்டிக் கொண்டிருந்தது, பிறகு, அவையெல்லாமே வெட்டி-ஒட்டி செய்யப் பட்ட டேப்புகள் என்று தெரியவந்தது. ஆகவே, அந்த ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் அப்படிபட்ட முட்டாளாஹைவ்வாறு டமாரம் அடித்து சொல்வதற்கு, என்று தெரியவில்லை. பொதுவாக, சில இந்துத்துவவாதிகள் விசயமே இல்லாமல் இருந்தாலும், தாங்கள் எதையோ சாதித்து விடுவோம், இல்லை சாதித்து விட்டோல் என்பது போல பேசித் தம்பட்டம் அடித்துக் கொள்வர். அம்மாதிரியாக இவர் பேசினாரா அல்லது உண்மையிலேயே அத்தகைய திட்டம் உள்ளதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இல்லை அந்த நாளிதழின் பேட்டியாளர் சொன்னதைத் திரித்து செய்தியாக வெளியிட்டுளாரா? நாளைக்கு ராஜேஸ்வர் சிங் தான் அவ்வாறு சொல்லவில்லை என்றுதான் கூறப்போகிறார்.

Members from Bajrang Dal and VHP hold a trident during a protest in New Delhi

Members from Bajrang Dal and VHP hold a trident during a protest in New Delhi – ரியூட்டர் இப்படத்தை இந்த செய்திக்குப் போட்டுள்ளது!

லோக்சபாராஜ்ய சபாக்களில் எதிர்கட்சிகள் அமளி: ஆக்ராவில் உள்ள முஸ்லிம்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன[6]. உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள 57 இஸ்லாமிய குடும்பங்கள் இந்து மதத்திற்கு மாறியதாக கடந்த திங்கட்கிழமையன்று ஆர்.எஸ்.எஸ். தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தங்களுக்கு வறுமை கோட்டிற்கு கீழ் வாழுபவர்களுக்கான பிபிஎல் (BPL) ( ஏழை) அட்டை தருவதாக கூறி பஜ்ரங் தளத்தை சேர்ந்தவர்கள் அழைத்துச் சென்றதாகவும், கட்டாயப்படுத்தப்பட்டு தாங்கள் மதமாற்றம் செய்யப்பட்டதாகவும் 57 இஸ்லாமிய குடும்பங்களை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்[7]. மாநிலங்களவையில் நேற்று இப்பிரச்னையை எழுப்பி பேசிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ஆக்ராவில் உள்ள ஏழை முஸ்லிம் மக்களை வலுக்கட்டாயமாக இந்து மதத்துக்கு மாற்றும் நடவடிக்கைகளை அங்குள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கிளை அமைப்பான பஜ்ரங் தளம் மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டினார். அக்குடும்பத்தினர் கொடுத்துள்ளத் தகவல்களின் படி, கடந்த நான்கைந்து மாதங்களாக, அவ்வியக்கத்தினர் தங்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்றும், தாங்கள் மிகவும் ஏழைகளாக இருப்பதால், நிதியுதவி கிடைக்கும் என்ற காரணங்களுக்காக மதமாற ஒப்புக் கொண்டதாகவும் கூறியதாக சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன[8].

An Indian Hindu sadhu holds a trident during a protest in New Delhi

An Indian Hindu sadhu holds a trident during a protest in New Delhi –   ரியூட்டர் இப்படத்தை இச்செதிக்குப் போட்டுள்ளது!

மாயாவதி நேரிடையாக ஆர்.எஸ்.எஸ்.ஐக் குற்றஞ்சாட்டியது: மாயாவதி, ‘‘ஆக்ராவில் உள்ள ஏழை முஸ்லிம்கள் 100 பேரிடம் ஆசைவார்த்தை கூறியும், கட்டாயப்படுத்தியும் இந்துவாக மாற்றும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அமைப்பான பஜ்ரங்தள் ஈடுபட்டுள்ளது. இது மிகவும் முக்கிய பிரச்னை. அரசியலமைப்பு சட்டத்தில் மதச் சுதந்திரத்துக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.  அனைத்து மதத்தையும் காக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு. ஆக்ரா சம்பவத்துக்கு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்[9].  மாயாவதி தொடர்ந்தார், “மதமாற்றம் செய்துகொள்ள ஏழை மக்கள் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர். இதேபோல அலிகாரிலும் கிறிஸ்தவர்களை இந்து மதத்துக்கு வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகைய நடவடிக்கைகளால் நாட்டில் மிகப் பெரிய மத மோதல்களும் கலவரங்கள் ஏற்படும். இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ளது. இதற்குத் தக்க பதிலை பிரதமர் அளிக்க வேண்டும்” என்று மேலும் கூறினார்.

Members of the Muslim community stage a protest against alleged forced conversion of 300 people, in Agra on Wednesday Raju Tomar- HT Photo

Members of the Muslim community stage a protest against alleged forced conversion of 300 people, in Agra on Wednesday Raju Tomar- HT Photo

இது ஆர்.எஸ்.எஸ், பிஜேபியின் இந்துத்துவ திட்டம் தான்கம்யூனிஸ்டுகள் உறுதி: இந்நிலையில் மாயாவதியின் கருத்தை காங்கிரஸ், திரிணமூல், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளும் ஆதரித்து, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவையில் எழுந்து நின்று கோஷமிட்டனர். இது தொடர்பாக காங்கிரûஸச் சேர்ந்த ஆனந்த் சர்மா கூறுகையில், “சர்ச்சைக்குரிய இந்த விவகாரத்தை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்’ என்றார்[10]. இதற்கு பதில் அளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, ‘‘இச்சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேச அரசு எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. இது சட்டம், ஒழுங்கு பிரச்னை என்பதால், இதற்கு மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இதில் எதுவும் செய்ய முடியாது. இச்சம்பவத்தில் அரசியல் காரணங்களுக்காக ஆர்.எஸ்.எஸ் பெயர் இழுக்கப்படுகிறது. இதை அவை குறிப்பில் இருந்து, அவைத் தலைவர் நீக்க வேண்டும்’’ என்றார்[11]. இதே பிரச்னை குறித்து விவாதிக்க மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சுல்தான் அகமது ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தார். இதை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நிராகரித்தார்[12]. இருப்பினும் கம்யூனிஸ்ட் கட்சி எம்பிக்களான டி.ராஜா, யச்சூரி முதலியோர், இது ஆர்.எஸ்.எஸ், பிஜேபியின் இந்துத்துவ திட்டம் தான். கிருஸ்துமஸுக்கு முன்னால், ஓட்டுவங்கி அரசியலுக்காக இப்பிரச்சினையைக் கிளப்புகிறது, என்றெல்லாம் பேசினர்[13].

எகானாமிக்ஸ் டைம்ஸ் படம்

எகானாமிக்ஸ் டைம்ஸ் படம்

தர்ம கஜாக்ரண் மஞ்ச்என்ற இயக்கத்தின் மீது முதல் தகவல் அறிக்கை போடப்பட்டு வழக்குப் பதிவு[14]: “தர்ம கஜாக்ரண் மஞ்ச்” [ Dharma Jagran Manch] என்ற இயக்கம் மற்றும் அதன் உபியின் தலைவர் கிஷோ மீது சதர் பஜார் போலீஸார் மக்கள் பிரிவுகளுக்குள் விரோதத்தை உண்டாக்குவது, மோசடி செய்வது போன்ற, இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகளில் [Police registered cases under Section 153 (A) (promoting enmity between different groups) and Section 415 (using fraudulent means) of the IPC.] எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது[15]. இந்தியாவில் மதமாற்றம் குற்றமாகுமா என்ற சர்ச்சையும் உள்ளது, ஏனெனில், கிருத்துவ இயக்கங்கள் ஆரம்பத்திலிருந்தே, மதமாற்றம் தங்களது உரிமை என்றும் அதற்கு அரசியல் நிர்ணயச் சட்டத்திலும் இடமுள்ளது என்று வாதிட்டு வருகின்றது. மேலும்ம் இங்கு இந்துபெயரில் உள்ள இயக்கங்கள் எல்லாமே, ஆர்.எஸ்.எஸ் என்று முத்திரைக் குத்தப் படுகிறது, சங்கப்பரிவார் என்று பேசப்படுகிறது. ஆனால், பிறகு ஆர்.எஸ்.எஸ் சம்பந்தமில்லை என்று மறுக்கிறது. பிறகு எதற்காக கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து அத்தகைய பிரச்சாரத்தைச் செய்து வருகிறார்கள்?

Noor Mohammad,  who alleged that the two RSSoffshoots had lured them into a programme to collect BPL and ration cards HT photo

Noor Mohammad, who alleged that the two RSSoffshoots had lured them into a programme to collect BPL and ration cards HT photo

முஸ்லிம்களை மதமாற்றம் செய்ய முடியுமா?: பொதுவாக முஸ்லிம் மதமாற முடியாது, அப்படி மாறினால், உடனடியாக அவன் மதத்துரோகி, விரோதி (apostate) என்று முத்திரைக் குத்தப் பட்டு கொல்லப்படுவான். ஆகவே விசயம் தெரிந்த எந்த முஸ்லிமும் வெளிப்படையாக மதமாற மாட்டான், மாறினாலும், சொல்லிக் கொள்ளா மாட்டான். இப்பொழுதே, நாங்கள் ஒன்றும் மதமாற்றப் படவில்லை என்று ஆக்ரா முஸ்லிம்கள் சொல்லியதாக செய்திகள் வந்துள்ளன[16]. உடனே இந்துத்துவவாதிகள் அவர்கள் பயந்து அவ்வாறு பேசுகிறார்கள் என்றும் கூறுகின்றனர்[17]. எனவே, இதெல்லாம் பிரச்சாரத்திற்காக செய்யப் பட்டதா அல்லது ஏதோ பிரச்சினையைத் திசைத் திருப்ப செய்யப்பட்டதா என்று தெரியவில்லை. இந்துக்கள் மதமாற்றம் செய்யப்படும் போது, அமைதியாக இருக்கும் அரசியல்வாதிகள், ஊடகங்கள் இப்பொழுது ஏன் குதிக்கின்றன என்று வினய் கத்தியார் கேட்டிருப்பதாகவும் செய்தியுள்ளது[18].

© வேதபிரகாஷ்

11-12-2014

[1] http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/rss-plans-to-convert-4000-christian-1000-muslim-families-to-hinduism/articleshow/45442684.cms

[2] Around 60 Muslim families participated in a “ghar wapsi” ceremony organised by Bajrang Dal’s Dharm Jagran Manch on Monday. ‘Ghar Wapsi’ literally means ‘return home’ and according to the organisers it is meant for people who had left the Hindu fold and are now returning to it. A day later, these families are alleging that they had been promised ration cards and money in exchange for participating in the religious conversion ceremony.

http://www.abplive.in/india/2014/12/09/article451711.ece/Ration-card-money-promised-for-converting-to-Hinduism-families-accuse-Bajrang-Dal#.VIjad_mSynU

[3] Vasudha Venugopal, RSS plans to convert 4,000 Christian & 1,000 Muslim families to Hinduism , ET Bureau | 10 Dec, 2014, 04.40AM IST, Read more at:
http://economictimes.indiatimes.com/articleshow/45442684.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst

[4] http://in.reuters.com/article/2014/12/10/india-religion-conversions-idINKBN0JO1CN20141210

[5] Firstpost, Hindutva targeting of Christians in Chhattisgarh over conversions really about land?, by Parivesh Mishra  Dec 10, 2014 18:54 IST.

[6] இந்நேரம்.காம், முஸ்லிம்கள் கட்டாய மதமாற்றம், வியாழக்கிழமை, 11 டிசம்பர் 2014 02:58, பதிவர்: ஜாஃபர்

[7] http://www.inneram.com/i-news/india/3311-muslims-convert-to-hidu-in-agra.html

[8] According to the details given by the families, volunteers from the Dharm Parivartan Mach had been in touch with them for the past four-five months. Since they were mostly poor and in dire financial straits, the families claim that they consented to change their religion for monetary compensation.

http://www.abplive.in/india/2014/12/09/article451711.ece/Ration-card-money-promised-for-converting-to-Hinduism-families-accuse-Bajrang-Dal#.VIjad_mSynU

[9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=122001

[10]http://www.dinamani.com/india/2014/12/11/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A/article2565153.ece

[11] http://timesofindia.indiatimes.com/india/Agra-conversions-rocks-Parliament/articleshow/45464405.cms

[12] தினகரன், ஆக்ராவில் மதமாற்றம் மாயாவதி எதிர்ப்பு, சென்னை, 00.04.11, 12-11-2014.

[13] CPI-M leader and Rajya Sabha MP Sitaram Yechury said the re-conversions were a ploy to vitiate the environ¬ment before Christmas.“This is clearly a ploy, a scheme, being worked out before Christmas. This is the dirtiest of vote-bank politics being played by RSS and the BJP.

http://kashmirreader.com/forced-conversion-oppn-accuses-centre-of-hindutva-agenda-28105

[14] http://www.abplive.in/india/2014/12/10/article452586.ece/FIR-against-forced-religious-conversion#.VIjqx_mSynU

[15] http://www.deccanchronicle.com/141210/nation-current-affairs/article/fir-against-forced-religious-conversion-agra

[16] Hemendra Chaturvedi, Agra: Muslim families deny changing faith, slam Hindu groups, Hindustan Times  Agra, December 09, 2014; First Published: 20:12 IST(9/12/2014) | Last Updated: 10:10 IST(10/12/2014)

[17] http://www.hindustantimes.com/india-news/day-after-homecoming-muslim-families-deny-embracing-hinduism/article1-1294852.aspx

[18] http://www.ndtv.com/article/india/protests-in-parliament-against-mass-conversions-united-opposition-scores-debate-632030

தனக்கு முன்னே, தன் மனைவியை 12 முஸ்லிம்கள் கற்பழித்தனர் என்றால், ஒரு முஸ்லிம் எப்படி சும்மாயிருக்க முடியும், போலீசில் கூட பாதிக்கப் பட்ட மனைவிதான் புகார் கொடுத்தார் என்றால், கணவன் என்ன செய்து கொண்டிருந்தார்?

மே 1, 2014

தனக்கு முன்னே, தன் மனைவியை 12 முஸ்லிம்கள் கற்பழித்தனர் என்றால்,  ஒரு முஸ்லிம் எப்படி சும்மாயிருக்க முடியும், போலீசில் கூட பாதிக்கப்பட்ட மனைவி தான் புகார் கொடுத்தார் என்றால்,  கணவன் என்ன செய்து கொண்டிருந்தார்?

Sonia Imam secularism 2014

Sonia Imam secularism 2014

பிஜேபி சிறுபான்மை பிரிவினரைச் சேர்ந்த முஸ்லிம் மனைவி: ஜார்க்கண்ட் மாநிலத்தில்,  மஸ்மனோ கிராமத்தில்  [Masmano village under Chanho police station]  பாரதிய ஜனதாக கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட சோனிதப்பாசும் [Soni Tabbasum] முஸ்லீம் பெண்ணை  12  பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது[1] என்று செய்தி வெளிவந்தாலும்,  உடனே இதனை அமுக்கத்தான் ஊடகக்காரர்கள் மற்றவர்கள் முயல்கிறார்கள் என்று தெரிகிறது.  ஜார்க்கண்ட் மாநிலத்தில் 30 வயதான முஸ்லீம் பெண் ஒருவர் பா.ஜ.க.வின் சிறுபான்மை / முஸ்லிம் பிரிவில் முக்கிய பொறுப்பில், துணைத் தலைவராக உள்ளார்[2]. இவர் பிஜேபியை ஆதரித்துப் பேசிவந்து,  அக்கட்சிக்காக ஓட்டுசேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்[3].  இப்பொழுதைய தேர்தல் பிரச்சாரத்தில் முஸ்லிம்கள் பொதுவாக பிஜேபியை,  குறிப்பாக மோடியை எதிர்த்து வருகின்றனர். சோனியா முஸ்லிம் தலைவர்களை சந்தித்தப் பிறகு, தில்லி இமாம் போன்றவர்கள் காங்கிரசுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க கோரிக்கை விடுத்துள்ளார்[4].  இருப்பினும்,  பிஜேப்பிக்கும் சில முஸ்லிம்கள் ஓட்டளிக்க உள்ளதாகத் தெரிகிறது.

 

ராஞ்சி கற்பழிப்பு முஸ்லிம் பெண்

ராஞ்சி கற்பழிப்பு முஸ்லிம் பெண்

முஸ்லிம் கணவனக்கு முன்னே, முஸ்லிம் மனைவியை 12 முஸ்லிம்கள் கற்பழித்தனனர் என்ற குற்றச்சாட்டு: இந்நிலையில் தான் இத்தகைய கொடுமையான நிகழ்ச்சி 27-28 ஏப்ரல் நடுஇரவில் நடந்தேறியுள்ளது.  சம்பவத்தன்று தனது மகள் மற்றும் கணவர் ஆகியோருடன் தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது திடீரென்று உள்ளே புகுந்த 12 க்கும் மேற்பட்ட நபர்களை கொண்ட கும்பல் அவரது கணவரை அடித்து கட்டிப்போட்டதுடன், 13 வயதான மகளையும் கடுமையாக தாக்கியுள்ளனர், அதாவது பலாத்காரம் செய்ய முனைந்துள்ளனர்.  பின்னர் அந்த கும்பலைச் சேர்ந்த 12க்கும் மேற்பட்டோர் அந்த பெண்ணை கூட்டாக பலாத்காரம் செய்துள்ளனர்[5]. இச்சம்பவம் குறித்து அப்பெண் சான்ஹோ போலீஸ் ஷ்டேசனில் (ராஞ்சியிலிருந்து 45 கிமீ தொலைவில் உள்ளது) புகார் அளித்துள்ளார்[6]. அதுமட்டுமல்லாது ரூ. 30,000/- ரொக்கம் மற்றும் ரூ. இரண்டு லட்சம் மதிப்புள்ள நகைகளையும் எடுத்துச் சென்றுள்ளனர் என்று புகாரில் தெரிவிக்கப் பட்டுள்ளது[7].  அந்த 12 பேரும் முஸ்லிம்கள் தாம்! ஆனால், ஜார்கென்டிலிருந்து வெளிவரும் நாளிதழ், 20-22 ஆட்கள்ஆயுதங்களுடன்வீட்டினுள்நுழைந்து, அட்டகாசம்செய்தனர். என்று மேலும் விவரங்களைக் கொடுக்கிறது[8]. அங்கு நிறுத்தப்பட்டிருந்த புதிய காரையும் கொளுத்தியுள்ளனர்[9].  இன்னொரு நாளிதழ் 20 பேர்  என்கிறது[10].

 

ரேப்பிற்கு தூக்கு என்பதை எதிர்ப்பவர்கள்

ரேப்பிற்கு தூக்கு என்பதை எதிர்ப்பவர்கள்

தனக்கு முன்னே, தன் மனைவியை 12 முஸ்லிம்கள் கற்பழித்தனனர் என்றால்,  ஒரு முஸ்லிம் எப்படி சும்மாயிருக்க முடியும்?: 12 முஸ்லிம்கள், ஒரு முஸ்லிம் பெண்ணை இவ்வாறு கற்பழித்துள்ள போதிலும், எந்த முஸ்லிம் தலைவரும் இதனைக் கண்டிக்காதது வேடிக்கையாக உள்ளது.  அதை விட விசித்திரம் என்னவென்றால், அந்த பெண்ணின் கணவன் தனக்கு முன்னாலேயே, தனது கைகளைக் கட்டிப்போட்டு 12 முஸ்லிம்கள் கற்பழித்துள்ளனர் எனும்போது, அவருக்கு ஏன் கோபமே வரவில்லை,  எதிர்க்கவில்லை, அல்லது கொதித்தெழ வில்லை, போலீசாரில் புகார் கொடுக்கவில்லை. மேலும், தனது மகளையும் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.  அவர்களைக் கண்டு பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்றேல்லாம் நினைக்கும் போது புதிராக, மர்மமாக இருக்கின்றன.

 

உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் அப்பெண்ணிற்கு எதிராக செயல்பட்டது: “ஐந்து வருடங்களுக்கு முன்பு முந்தைய காங்கிரஸ் எம்பி ராமேஸ்வர் ஓரான் மற்றும் மந்தர் எம்.எல்.ஏ பந்து திர்கி என்னை காங்கிரஸ் கட்சியில் சேரச் சொன்னார்கள். ஆனால், நான் அவ்வாறு சேராதலால் அவர்கள் எப்பொழுதுமே எனக்கு எதிராக இருந்து வருகிறர்கள். இருவர்க்கும் இப்பகுதியில் அதிகமான செல்வாக்கு உள்ளது. ஆனால், நான் பிஜேபியில் இருந்து கொண்டு, அவர்கள் செய்யும் தவறுகளை எதிர்த்து வருகிறேன். நான் இந்த சான்ஹோ பகுதியில், பெருமளவு முஸ்லிம்களை பிஜேபிக்கு ஓட்டளிக்குமாறு ஊக்குவித்து வருகிறேன்.  குறிப்பாக நரேந்திர மோடிக்கு ஓட்டளிக்குமாறு ஆதரித்து பேசி வருகிறேன். ஒருவேளை, இதுவும் காரணமாக இருக்கலாம்”, என்று பாதிக்கப்பட்ட அப்பெண் கூறுகிறார்[11].

 

பிஜேபி தலைவர்கள் வந்து ஆறுதல் கூறியது: உள்ளூர் பிஜேபி தலைவரும், அப்பெண் முஸ்லிமாக இருந்த போதிலும் மற்ற முஸ்லிம்களை பிஜேபிக்கு ஓட்டளிக்குமாறு ஊக்குவித்து குறிப்பாக நரேந்திர மோடிக்கு ஓட்டளிக்குமாறு ஆதரித்துள்ளர். அங்குள்ள பெண்களும் பிஜேபிக்கு ஓட்டளித்ததாக கூறிகின்றனர். இருப்பினும் அவர்கள் செய்யும் தவறுகளை எதிர்த்து வருவதும் காரணமாக இருக்கலாம் என்று அப்பெண் கூறுகின்றார். பிரதீப் சின்ஹா என்ற பிஜேபி தொடர்பாளர், “இப்பெண் சிறந்த பேச்சாளி.  அவர் எப்பொழுதுமே அவர்கள் செய்யும் தவறுகளை வெளிப்படுத்திக் காட்டி வருகிறார்”.  சம்பவம் நடந்த இடத்திற்கு முந்தைய முதல்வர் அர்ஜுன் முண்டா மற்றும் இதர பிஜேபி தலைவர்கள் வந்து ஆறுதல் கூறியுள்ளனர். 24  மணி நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளர்.  போலீசார் காங்கிரசுக்கு சாதகமாக செயல்படுகிறது என்றும் குற்றஞ்சாட்டினார்[12]. 

 

மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது:  இக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத் தக்கது.  இது குறித்து விசாரித்து வரும் போலீஸார் இதற்கு பின்னணியில் உள்ளவர் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.  அரசியல் உள்நோக்கம் காரணமாக என்ற கேள்விக்கு,  இப்போது உடனடியாக எதுவும் கூற முடியாது என்று அனுராக் குப்தா போன்ற போலீஸ் உயர் அதிகாரிகள் பதில் தெரிவித்துள்ளனர்[13]. ஆனால், போலீஸ் இன்ஸ்பெக்டர் டி.என். சிங்,  “கிராமத்தவர்கள் மசூதியில் உள்ள ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையெடுத்து அவர்கள் ஓடிவிட்டனர்”.  கற்பழிப்புக்குட்பட்ட பெண்ணின் வீடு, போலீஸ் ஷ்டேசனுக்கு அருகில் உள்ளது[14]. டிசம்பர்  2012ல் நடந்த நிர்பயா கற்பழிப்புக்குப் பிறகு,  இத்தகைய குற்றங்கள் கடுமையாக உணரப்பட்டு வருகின்றன.

 

மெத்தனமாக இருக்கும் உள்ளூர் போலீசார்:  ராஞ்சியிலுள்ள ஒரு மருத்துவமனையில் அப்பெண் சிகிச்சைப் பெற்று வருகிறார். மேலும் 12 பேர்களையும் போலீசார் விசாரித்துள்ளனர். ஆனால்,  அவர்கள் நாங்கள் அப்பாவிகள் என்று சொல்லியதால், போலீசார் விடுவித்துள்ளனர்[15]. போலீசார் தகுந்த ஆதாரம் இல்லாமல்,  யாரையும் கைது செய்ய முடியாது என்கின்றனர். இருப்பினும் அந்த 12  நபர்களும் எங்கும் செல்லக் கூடாது என்று போலீசார் உத்தரவிட்டுள்ளனர்[16]. இதெல்லாம் முரண்பாடாக உள்ளதால்,  ஒருவேளை சம்பந்தப்பட்ட முஸ்லிம்கள் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால், மெத்தனமாக இருக்கிறார்கள் போலும்!

  

 

Arjun Munda visits Chanho

Arjun Munda visits Chanho

“கிராமத்தவர்கள் மசூதியில் உள்ள ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  இதையெடுத்து அவர்கள் ஓடிவிட்டனர்”:  இதுதான் ஒருவேளை மதசம்பந்தம் அதிகமாக உள்ளது என்பதைக் காட்டுவது போலவுள்ளது. 12 முஸ்லிம்கள், ஒரு முஸ்லிம் பெண்ணை இவ்வாறு கற்பழித்துள்ள போதிலும்,  எந்த முஸ்லிம் தலைவரும் இதனைக் கண்டிக்காதது வேடிக்கையாக உள்ளது.  அந்த முஸ்லிம் கணவனும் அமைதியாக இருப்பது போல தெரிகிறது, ஏனெனில், செய்திகளில் கூட அவரது நிலையென்ன என்று தெரியவில்லை.  ஜாகென்டில்  இத்தகைய விசயங்கள் எல்லாம் சகஜம் என்று எடுத்துக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை. எப்படியாகிலும் அரசியல் கலந்துவிட்டபடியால், இந்நிகழ்ச்சி வேறுவிதமாகத் திரித்துக் கூறவும் முடியும். போதாகுறைக்கு தேர்தல் வேறு சேர்ந்து விட்டது.

 

© வேதபிரகாஷ்

30-04-2014

[1]http://www.dinamani.com/latest_news/2014/04/29/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-/article2196209.ece

[2] http://www.jharkhandstatenews.com/arjun-munda-visits-chanho/#.U2H74_QW1AI

[3] http://daily.bhaskar.com/article/ELEC-NEW-jharkhand-woman-gang-raped-for-working-with-bjp-4597175-NOR.html

[4] http://indiatoday.intoday.in/story/sonia-gandhi-meets-shahi-imam-bukhari-says-secular-votes-should-not-split/1/352562.html

[5] http://www.ndtv.com/elections/article/election-2014/jharkhand-woman-claims-she-was-gang-raped-for-working-with-bjp-515684

[6] http://timesofindia.indiatimes.com/Home/Lok-Sabha-Elections-2014/News/I-was-gang-raped-for-opposing-rivals-wrongdoings-Jharkhand-Muslim-BJP-leader-claims/articleshow/34383733.cms

[7]The victim in Monday’s assault also alleged the attackers fled with 30,000 rupees (R5,265.84) in cash and jewellery worth over 200,000 rupees.

http://www.timeslive.co.za/world/2014/04/29/muslim-claims-she-was-gang-raped-for-supporting-hindu-nationalists

[8] http://www.avenuemail.in/miscellaneous/dacoits-rob-property-worth-lakhs-bjp-leaders-house/40963/

[9]ources said the husband of Soni Tabassum opened the window on hearing knocking on the door. One of the culprits pulled a rifle on him and forced the family members to open the main door. Soon the culprits entered the house and ran riot for hours. They vandalized many household goods and also assaulted the family members. They also beat up Tabassum on being shown resistance.

http://www.avenuemail.in/miscellaneous/dacoits-rob-property-worth-lakhs-bjp-leaders-house/40963/

[10] http://www.in.com/news/current-affairs/ranchi-local-leader-of-bjps-minority-cell-gangraped-by-at-least-20-men-52704743-in-1.html

[11] “Five years ago, I was offered by Congress former MP Rameshwar Oraon to join the party and Mandar MLA Bandhu Tirkey also offered me to join. Because I did not join the Congress or Tirkey’s party they are always against me. The two hold influence in the area. But I continued to work for the BJP and oppose the wrongdoings of local leaders. I have motivated a large number of Muslims in Chanho to vote for the BJP and BJP prime ministerial candidate Narendra Modi. I think the incident might be linked to it,” the victim claimed.

http://timesofindia.indiatimes.com/Home/Lok-Sabha-Elections-2014/News/I-was-gang-raped-for-opposing-rivals-wrongdoings-Jharkhand-Muslim-BJP-leader-claims/articleshow/34383733.cms

[12] BJP spokesman Sinha said that the administration and police are supportive of the Congress which is running the government in Jharkhand.

http://timesofindia.indiatimes.com/Home/Lok-Sabha-Elections-2014/News/I-was-gang-raped-for-opposing-rivals-wrongdoings-Jharkhand-Muslim-BJP-leader-claims/articleshow/34383733.cms

[13]தினமணி, பாஜகவிற்குஆதரவாகபிரசாரம்மேற்கொண்டமுஸ்லீம்பெண்ணைபலாத்காரம்செய்தகொடூரகும்பல், By Web Dinamani, ராஞ்சி, First Published : 29 April 2014 04:45 PM IST

[14] An investigation from all angles is on and it is very difficult at present to say the exact reason behind the incident,” Mr Gupta told news agency AFP. Police inspector TN Singh in the police station closest to woman’s home said villagers had used the loudspeaker of the mosque to alert others to the assault, after which the attackers fled.

[15] he police had interrogated all accused who appeared at the police station on Monday and let them go as they all pleaded innocence. There is no fresh lead available with the police in connection with the case.

http://www.dailypioneer.com/nation/bjp-firm-on-action-in-ranchi-gang-rape-case.html

[16] We cannot arrest anyone unless concrete evidence is available,” said SP (Rural) SK Jha. Notably, 12 named accused, who appeared before the police on Monday had been released with some restrictions. The investigation circles around various angles, sources said. The victim had also accused assailants of beating her husband and misbehaving with her 13-year-old daughter besides setting a vehicle on fire and fleeing with cash and jewellery.

http://www.dailypioneer.com/nation/bjp-firm-on-action-in-ranchi-gang-rape-case.html