Archive for the ‘உளவாளி’ category

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகிய நிலை (1)

ஒக்ரோபர் 29, 2022

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகிய நிலை (1)

22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட் கிழமை) வரை நடந்துள்ளவை என்ன?: 24-10-2022 அன்று தீபாவளி என்பதால், துணிமணி, பட்டாசு, ஸ்வீட் வாங்க வேண்டும், எல்லோருமே ஊருக்குச் செல்ல வேண்டும், வாங்கியதை குடும்பத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டும், சந்தோஷமாக கொண்டாட வேண்டும், என்று லட்சக்கணக்கில் மக்கள் வாகனங்களில், பேருந்துகளில், ரெயில்களில் சென்று கொண்டிருந்தனர். அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்ப, பட்ஜெட்டில் தீபாவளி கொண்டாட திட்டத்துடன் இருப்பர், சென்று கொண்டிருந்தனர். ஆனால், அப்பொழுது, கோயம்புத்தூரில் சிலர் வேறு விதமாக திட்டம் போட்டிருந்தனர் போலும். வெகுஜன மக்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளியை நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, ஊடகங்களில் வழக்கம் போல, தீபாவளி எதிர்ப்பு, பட்டாசு மறுப்பு, நாத்திக-நராகாசுரன் ஆதரவு செய்திகள் வந்து கொண்டிருந்தன[1]. பட்டாசு வெடிக்க வேண்டாம், குறிப்பிட்ட நேரங்களில் தான் வெடிக்க வேண்டும், மீறினால், வழக்கு, புகார், தண்டனை என்றெல்லாம் பெரிய போலீஸ் அதிகாரிகள் மிரட்டியதாக செய்திகள்[2]. அதே நேரத்தில் பட்டாசு விற்பனை பெருக்க வேண்டும் போன்ற பிரச்சாரமும் இருக்கிறது. இன்னொரு பக்கமோ, கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது போன்ற செய்திகள்.

இந்நிலையில் தான் கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்செய்திகள் வர ஆரம்பித்தன: 22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட் கிழமை) வரை நடந்துள்ள நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்தால், இந்த கோவை கார் குண்டு வெடிப்பு திட்டமிட்டு நடந்துள்ள-நடத்தப்பட்ட செயல் என்று அறிந்து கொள்ளலாம். பிறகு, மற்ற செய்திகள் எல்லாம் வெளிவர ஆரமித்துள்ளன. ஊடகங்களின் பாரபட்சமிக்க, செய்தி வெளியீட்டுப் போக்கும், “ஆபத்திலிருந்து” மெதுவாக, “குண்டு வெடிப்பு” என்று முடிந்துள்ளது. இருப்பினும் இந்த தீவிரவாதிகள், பயங்கரவாதிள் எல்லோருமே மரியாதையுடன் தான் குறிப்பிடப் படுகிறார்கள். மத்திய உளவுத்துறை காவல்துறையினர் ஜமிஷா தொடர்பான பல்வேறு தகவல்களுடன் அவரை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசுக்கு 2018ம் ஆண்டு முதன் முதலில் தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது[3]. தமிழக காவல்துறையினர் இதனை பெரிதாக கருதவில்லை என்று கூறப்படுகிறது[4].

22-10-2022 (சனிக்கிழமை இரவு): சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு ஜமேஷா முபின் வீட்டில் இருந்து அவர் உட்பட 5 பேர் மர்மபொருளை தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், முபின் தன்னுடைய வீட்டை காலி செய்ய வேண்டும் என்று கூறியதாகவும், அந்தப் பெட்டியில் ஸ்கிரேப் பொருள்கள் இருந்ததாக முபின் விளக்கம் அளித்ததாக கூறியுள்ளனர். அந்த சிசிடிவி காட்சிகளில் உள்ள மற்ற நபர்கள் 4 பேர் யார் என்பது குறித்து பிறகு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர், என்றெல்லாம் செய்திகள் பிறகு வெளி வந்தன. அப்படியென்றால், இவர்களும் முன்னமே இக்காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். சுற்றியுள்ளவர்கள், இவர்களது நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு, எச்சரித்திருக்கலாம், புகார் கொடுத்திருக்கலாம். ஆனால், முஸ்லிம்கள் எனும் போது, அமைதியாக இருந்து விட்டனர் போலும். ஒரு ஊடகத்தால், அங்கு செய்தி-விவரங்கள் சேர்க்கச் சென்றபோது, ஜன்னல் கதவுகளை அடைத்துக் கொண்டனர், யாரும் பேச முன்வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. 

23-10-2022 (ஞாயிற்றுக் கிழமை):  அதிகாலை சுமார் 4:45 மணி அளவில், கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு பெரும் வெடிச் சத்தம் கேட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் அங்கு வந்து பார்த்துள்ளனர். முதலில், ஏதோ பட்டாசு சத்தம் என்று கூட நினைத்திருக்கலாம். அந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதிகாலை 4 மணி அளவில் சாலையில் கார் செல்வது, கார் நிற்பது பின்பு வெடித்து சிதறும் காட்சிகள் வெளியாகி உள்ளது. விடியற்காலை காரில் உள்ள காஸ் சிலிண்டர் வெடித்து ஒரு ஆள் இறந்தான். செல்போன் உதவியுடன் இறந்தவன் அடையாளம் காணப் பட்டான். வெடித்து சிதறிய காரில் இன்னொரு வெடிக்காத சிலிண்டர் மற்றும் சுற்றிலும் ஆணிகள், பால்ரஸ் போன்றவையும் சிதறிக் கிடந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தடயவியல் துறையினர் காரிலிருந்து  2 முதல் 3 கிலோ 1.5 இன்ச் ஆணிகள் மற்றும் பால்ரஸ் குண்டுகளைக் கண்டறிந்துள்ளனர். ஆணி, பால்ரஸ் வேறு பணிக்காக கொண்டு செல்லப்பட்டதா அல்லது வெடி விபத்தை நிகழ்த்தும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டவையா என்பதை நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஆக, நிச்சயமாக கோவை போலீஸார் சென்னை உயர் அதிகாரிகளுக்கு தெரியப் படுத்தி, விசயம் முதலமைச்சருக்குச் சென்றிருக்கும்.

பிற்பகல் – 23-10-2022 (ஞாயிற்றுக் கிழமை):  தொடக்கத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்தை கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி தாமரைக் கண்ணன் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இந்தச் சம்பவத்தின் நிலைமை அறிந்து சென்னையிலிருந்து டி.ஜி.பி சைலேந்திர பாபு விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கோவைக்கு வந்தார். வெடி விபத்து நிகழ்ந்த பகுதியை ஆய்வு செய்தார். அதாவது, விசயம் சாதாரணமானது அல்ல என்பது தெரிந்து விட்டது. பிரசித்தி பெற்ற உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு மட்டுமின்றி, தீபாவளியையொட்டி, இப்பகுதியில் துணி எடுப்பதற்காக அதிக அளவில் மக்கள் கூடும் நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது கோவை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மசூதிகள் முன்பு போலீஸார் பாதுகாப்புப்பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

கார் குண்டு வெடித்தலில் இறந்தவன் ஜமேசா முபின்: போலீஸார் செல்போன், கார் எண் முதலியவற்றை வைத்துக் கொண்டு விவரங்களை சேகரித்தனர். ஜமேசா முபின் என்பவன் தான் இறந்திருக்கிறான் எனூ முடிவானது. அவன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர். அப்பா இல்லை. அம்மா மட்டும் தான். அவர் மனைவிக்கு செவி மற்றும் பேச்சுத்திறன் இல்லை. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஜமேசாவுக்கும் இதயம், கண் ஆகியவற்றில் சில பிரச்னைகள் உள்ளன. முன்பு பழைய புத்தகக் கடை நடத்தி வந்தவர், பிறகு துணி வியாபாரம் செய்து வந்திருக்கிறார். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர். அதனால்தான் கடந்த 2019ம் ஆண்டு இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு பிறகு ஜமேசா முபினிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்த கார் வெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு போலீஸ் அவர் வீட்டில் நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு கடிதத்தில் சுற்றிப் பார்க்கவுள்ள சுற்றுலா தலங்கள் என எழுதி ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம், ஆணையர் அலுவலகம், ரேஸ்கோர்ஸ், விக்டோரியா ஹால் (மாநகராட்சி அலுவலகம்) ஆகிய பகுதிகளை குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம், இந்தப் பகுதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இப்படி செய்திகள்……

வாட்ஸ்ஆப் பதிவு, இறப்பு உண்மை என்றால், அது தற்கொலை குண்டு வெடிப்பு ஆகிறது: விபத்து நடந்தக் காரை ரூ.10,000க்கு தல்காவிடம் இருந்து வாங்கியுளளார். இப்படி கைது செய்யப்பட்ட  அனைவரும், இந்த சதித் திட்டத்தில் ஒவ்வொரு பணியைச் செய்துள்ளனர். ஜமேசா அவ்வபோது கேரளா சென்று, அங்கு ஏற்கெனவே என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்டுள்ள அசாருதீன் என்பவரைச் சந்தித்து வந்துள்ளார். ஆங்காங்கே சிறுக சிறுக சேகரித்து 75 கிலோ வெடி மருந்துக்கான வேதிப் பொருள்களை வாங்கியுள்ளனர். வெடி பொருள் தயாரிப்பது எப்படி என்பதை யூ-ட்யூபில் தேடிப் பார்த்திருக்கிறார். கைது செய்யப்பட்டவர்கள் இல்லாமல், இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கிறது.” என்றனர். …….’வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில், என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரியும் போது எனது தவறை மன்னித்து விடுங்கள், குற்றங்களை மறந்துவிடுங்கள் எனது இறுதி சடங்கில் பங்கேறுங்கள். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்,” என்று பதிவிட்டு உள்ளார். இதற்கான புகைப்படத்தை அவர் பதிவேற்றி இருக்கிறார். இதை பற்றி விசாரிக்க வேண்டும். இது ஐஎஸ்எஸ் தொடர்புடைய வாசகம். அவர்கள்தான் தற்கொலை தாக்குதல்களுக்கு முன்பாக இப்படி எல்லாம் போஸ்ட் செய்வார்கள்…..இப்படியும் செய்திகள்! வாட்ஸ்-ஆப் பதிவு, இறப்பு உண்மை என்றால், அது தற்கொலை குண்டு வெடிப்பு ஆகிறது, “சூஸைட் பாம்பர்” என்றாகிறது!

© வேதபிரகாஷ்

29-10-2022


[1]  திக-திமுகவினர் தொடர்ந்து தங்களது ஊடகங்களில் இத்தகைய பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், உலகம் முழுவதும் கொண்டாடப் பட்டு, உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

[2]  சுவாசிக்கும் காற்று மாசு படுகிறது என்ற கோணத்தில் உச்சநீதி மன்றமே வரையறை கொடுத்திருப்பதால், அதன் மீது, மாநில அரசுகள் மற்றும் இதர நிறுவனங்கள், இயக்கங்கள் இதை பெரிது படுத்தி, பிரச்சாரம் செய்கின்றன.

[3] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், உளவுத்துறைஅன்றேகொடுத்த சிக்னல்!.. கிடப்பில் போடப்பட்டதா ? கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம், Raghupati R, First Published Oct 28, 2022, 7:56 PM IST; Last Updated Oct 28, 2022, 8:34 PM IST.

[4] https://tamil.asianetnews.com/tamilnadu/coimbatore-car-bomb-blast-tn-police-ignored-central-intelligence-agency-warning-rkgw4i

ஶ்ரீலங்கை குண்டுவெடிப்பு – ஐஎஸ் தொடர்புகளில் கேரளா, கர்நாடகா, தமிழகம் – ஜிஹாதித்துவத்தின் வலை பெரிதாவது [2]

மே 31, 2019

ஶ்ரீலங்கை குண்டுவெடிப்புஐஎஸ் தொடர்புகளில் கேரளா, கர்நாடகா, தமிழகம்ஜிஹாதித்துவத்தின் வலை பெரிதாவது [2]

Terror threat remains in Lamka 01-05-2019

எச்சரித்தும் இலங்கை தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை: இலங்கையில் குண்டு வெடிப்பு நடைபெற வாய்ப்பு இருப்பதாக இந்திய உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்தும் அதனை இலங்கை அரசு கண்டு கொள்ளாமல் விட்டதே குண்டு வெடிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இலங்கையை போன்று இந்தியாவிலும் பயங்கரவாதிகள் நாசவேலைக்கு சதி திட்டம் தீட்ட திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு கோவையில் பிடிபட்ட ஐ.எஸ். ஆதரவாளர்கள் சிலரிடம் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைப்பினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இலங்கையில் குண்டு வைப்பதற்கு சில பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர். இந்த எச்சரிக்கையையும் உளவுப்பிரிவு அதிகாரிகள் இலங்கையிடம் தெரிவித்து இருந்தனர். அதன்பின்னர் தமிழகத்திலும் உஷாராக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இலங்கை குண்டு வெடிப்புக்கு பின்னர் தமிழகம் முழுவதும் போலீசாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டு தற்கொலைபடை தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாத தலைவன் ஜக்ரன் ஹசீம் என்பவனின் உறவினர்கள், நண்பர்கள் யார்-யார் என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நாடு முழுவதும் விசாரணையை முடுக்கி விட்டனர்.

29-04-2019 Lankan blast link with Kerala.3

30-04-2019 Kerala Lanka terror link

ஐ.எஸ், கேரள தொடர்புகள்: அப்போது பயங்கரவாதி ஜக்ரன் ஹசீமின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை பிடிக்க கடந்த 10 நாட்களாக அதிரடி வேட்டை நடத்தப்பட்டது. கேரளா மாநிலம் பாலக்காட்டில் ஜக்ரன் ஹசீமின் நெருங்கிய ஆதரவாளரான ரியாஸ் என்பவர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டார். இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதியான ஜக்ரன் ஹசீமின் பேச்சால் கவரப்பட்ட ரியாஸ் பயங்கரவாத செயல்பாடுகள் தொடர்பான நடவடிக்கையிலும் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னையிலும் ஜக்ரன் ஹசீமின் ஆதரவாளர்கள் பதுங்கி இருப்பது அம்பலமானது. இது தொடர்பாக நேற்று இரவு 30-04-2019 சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். மண்ணடியில் சந்தேகத்துக்கு இடமாக ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் அளித்த தகவலின்படி பூந்தமல்லியில் பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள கோல்டன் அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கையை சேர்ந்த சிலர் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

Terror suspects sarched in TN following Lankan blast 02-05-2019

Lankan bombers in Bangalore, alert, 05-05-2019

பூந்தமல்லியில் பதுங்கியிருந்தவர்கள்- என்.ஐ.ஏ சோதனை: இதைத் தொடர்ந்து அங்கு போலீஸ் அதிகாரிகள் மற்றும் என்.ஐ.ஏ. படையினர் முகாமிட்டனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 800 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இதனால் போலீசாரால் அங்கு தங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்தவர்கள் யார்? என்பது உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நிர்வாகிகளிடம் ரகசியமாக விசாரணை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள் இலங்கையை சேர்ந்தவர்கள் தங்கியிருந்த வீட்டை கண்டுபிடித்தனர். இதன்பின்னர் அந்த வீட்டை சுற்றி வளைத்த போலீஸ் படையினர் அங்கு தங்கியிருந்த தாலுகா ரோசன் என்ற வாலிபரை மடக்கி பிடித்தனர். அவரது கூட்டாளிகளான முகமது ரப்பூதீன், லபேர் முகமது ஆகியோரும் பிடிபட்டனர். நேற்று மாலையில் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற போலீஸ் அதிகாரிகள் நள்ளிரவிலேயே மூன்று பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்[1]. பின்னர் பலத்த பாதுகாப்புடன் அவர்களை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்[2]. இவர்களில் தாலுகா ரோசன் இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதியான ஜக்ரன் ஹசீமின் நெருங்கிய நண்பர் என்பது தெரிய வந்தது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே இவர் சென்னைக்கு வந்தது தெரியவந்தது. இலங்கையில் இருந்த போது ஜக்ரன் ஹசீமின் செயல்பாடுகளால் ரோசன் ஈர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
IS inked searched in and seizedTN by NIA 21-05-2019

Lankan bombers tained in Kashmir, 05-05-2019

ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த ரோஷன் கைது: தாலுகா ரோசன் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு அவர் பூந்தமல்லி முகவரியில் போலியான சில அடையாள அட்டைகளை வாங்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லை. இதையடுத்து போலீசார் தாலுகா ரோசனை கைது செய்தனர். உரிய ஆவணங்கள் இன்றி வெளிநாட்டில் இருந்து தப்பி வந்து அனுமதியின்றி தங்கியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று போலீசார் தாலுகா ரோசனை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். இலங்கை வாலிபர் தாலுகா ரோசன் சென்னையில் தங்கியிருந்து இலங்கை குண்டு வெடிப்புக்கு சதி திட்டம் தீட்டினாரா? குண்டு வெடிப்பு பயங்கரவாதிகளுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

29-04-2019 LLankan blast link wit Kerala

Sri Lankan terrorists instigated by the TN counterparts- Buddhist priest accused

இலங்கையிலிருந்து வந்து பூந்தமல்லியில் ஏன் தங்க வேண்டும்?: என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் தாலுகா ரோசன் பிடிபட்டதும் ‘கியூ’ பிரிவு போலீசாரும் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதே நேரத்தில் முகமது ரப்பூதீன், லபேர் முகமது ஆகியோரிடம் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தன. இதனைத் தொடர்ந்து இருவரையும் முறைப்படி அந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப இலங்கை தூதரக அதிகாரிகள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இலங்கை சென்றதும் அந்நாட்டு போலீசார் இரண்டு பேரிடமும் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு பீதி அடங்கும் முன்னர் அதில் தொடர்புடைய பயங்கரவாதிகளிடம் நெருக்கமாக இருந்ததாக கருதப்படும் இலங்கை வாலிபர்கள் சென்னையில் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து சந்தேகத்துக்கு இடமாக இலங்கையை சேர்ந்த வேறு யாரும் தங்கியிருக்கிறார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் கடலோர பாதுகாப்பு படையினரும் போலீசாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

IS inked arrested fromTN by NIA 22-05-2019

NIA arrests Faizal from Kerala 09-05-2019

31-05-2019 அன்றைய செய்தி: இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக, இந்தியாவின் தேசிய விசாரணை முகமையான, என்.ஐ.ஏ அமைப்பின் அதிகாரிகள் குழு இலங்கை சென்றடைந்தனர்[3]. ஆலோக் மிதாலின் தலைமையிலான இந்த குழுவினர், இலங்கையில் தாக்குதல் நடத்திய, பயங்கரவாதிகள் இந்தியாவுடன் கொண்டிருந்த தொடர்பு குறித்து விசாரணை செய்வதற்காக, இந்த குழுவினர் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக தெரியவந்துள்ளது[4]. தமிழக, கேரள, இலங்கை தீவிரவாத குழுக்கள், வேண்டுமென்றே, இந்திவாவின் மீது கெட்ட பெயர் களங்கத்தை ஏற்படுத்த, இவ்வாறு செயல்பட்டு வருகின்றனர். காஷ்மீர கூட்டங்களும் இதற்கு பாகிஸ்தான் மூலம் உதவி வருகின்றன. கேரள-பெங்களூர் தொடர்புகள் ஐ.எஸ்.க்கு ஆட்களை அனுப்பி வைப்பதில் தீவிரமாக உள்ளன. இப்பொழுது எல்.டி.டி.ஈ இல்லாததால், முஸ்லிம் தீவிரவத கும்பல் அவர்களின் இடத்தைப் பிடித்து செயல்பட ஆரம்பித்துள்ளது. இதனால், மாலத்தீவு, மொரிஸியஸ் தொடர்புகளும் சேர்கின்றன. இவ்வளவையும் எதிர்த்து, இந்தியா லாவகமாக ச்யல்பட வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

31-05-2019

IS claim that they opened a branch in India 15-05-2019

[1] மாலைமலர், இலங்கை குண்டுவெடிப்புசென்னையில் பதுங்கிய இலங்கை வாலிபர் கைது, பதிவு: மே 01, 2019 13:26

[2] https://www.maalaimalar.com/News/District/2019/05/01132614/1239547/Srilankan-youth-arrest-at-chennai.vpf

[3]  தினத்தந்தி, தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் : இலங்கை சென்ற இந்தியாவின் தேசிய விசாரணை முகமை அதிகாரிகள், பதிவு : மே 31, 2019, 07:26 AM

[4] https://www.thanthitv.com/News/World/2019/05/31072621/1037269/Srilanka-Easter-Bombing-Indian-NIA-Visit-Srilanka.vpf

ஜூமா மஸ்ஜித் தெரு, “காஸா ரோடு” ஆகியதா, “விஸ்டெம் அகடெமி” தீவிரவாதத்தை போதிக்கிறதா – காசர்கோடில் நடப்பதென்ன? (1)

ஜூன் 25, 2017

ஜூமா மஸ்ஜித் தெரு, “காஸா ரோடுஆகியதா, விஸ்டெம் அகடெமிதீவிரவாதத்தை போதிக்கிறதாகாசர்கோடில் நடப்பதென்ன? (1)

Gaza Road, thuruthi, Kerala - TOI

பாலஸ்தீன பயங்கரவாதம் பின்பற்றப் படுகிறதா?: பாலஸ்தீன நகரின் காஸா / காஜா [Gaza Road] என்ற பெயரை கேரளாவின் காசர்கோடு நகராட்சியில், உள்ள ஒரு தெருவுக்கு காஸா என்று பெயர் வைத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது[1]. ‘காஸா’ ஊடகங்களில் அடிக்கடி குறிப்பிடப்படும் நகரம். இஸ்ரேல் – எகிப்து நாடுகளுக்கு இடையே பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நகரம்தான் காஸா[2]. அங்கு கடைப்பிடிக்கப் படும் தீவிரவாத முறைகள் – பெட்ரோல் குண்டு, தற்கொலை மனித குண்டு, கல்லெறிதல் போன்றவை காஷ்மீரத்தில் பின்பற்றப்படுவதை காணலாம். அதனால், இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு இடையே நடக்கும் சண்டைகளின்போது காஸா நகரம் ஊடகங்களில் இடம்பெறுவது வழக்கம்[3]. இந்நிலையில், கேரளா மாநிலத்தின் காசர்கோடு நகராட்சியில் உள்ள துருத்தி வார்டில் உள்ள ஜூமா மஸ்ஜித் தெரு [Thuruthi Jama Masjid] அண்மையில் பெயர் மாற்றப்பட்டு ‘காஸா தெரு’ என்று எழுதப்பட்ட பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது[4]. இது கேரளாவில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது, அதாவது, வேறுவிதமாக, இது பிரச்சினையை ஏற்படுத்துகிறது. பெயர்மாற்றத்தை முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை. “டைம்ஸ் நௌ” டிவி-தொலைகாட்சியில் தினமும் இதைப் பற்றிய விவாதம் ஒரு வாரமாக நடந்து கொண்டிருக்கிறது.

Gaza- palestine, woen jihadis

ஜூமா மஸ்ஜித் தெரு பெயர்காஸா ரோடுஎன்று பெயர் மாற்றம்: உள்ளூர் தீவிரவாதம் என்று பேசப்படும் நிலையில், கேரளாவில் தொடர்ந்து இத்தகைய நிகழ்வுகள் அறியப்படுகின்றன[5]. இது தொடர்பாக இந்திய உளவுத்துறை, தேசிய பாதுகாப்பு முகமையும் கேரளாவின் காசர்கோடு நகராட்சியின் “ஜூமா மஸ்ஜித் தெரு” பெயர் காஸா என்று பெயர் மாற்றத்தில் ஐ.எஸ். தீவிரவாதப் பின்னணி உள்ளதாக சந்தேகிக்கிறது[6]. இந்த சந்தேகத்துக்கு காரணம் கடந்த 2016ஆம் ஆண்டு கேரளாவின் தற்போதைய காஸா தெரு பகுதியிலிருந்துதான் 21 இளைஞர்கள் காணாமல் போனார்கள்[7]. காணாமல் போன இளைஞர்கள் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்திருக்கலாம் என்று தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகளும் உளவுத்துறை அதிகாரிகளும் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதம், காசர்கோடு பஞ்சாயத்து தலைவர் ஏ.ஜி.சி.பஷீர் [district panchayat president AGC Basheer] துருத்தி ஜூமா மஸ்ஜித் தெருவை காஸா என்று பெயர் மாற்றி திறந்துவைத்தார் என்று கூறப்படுகிறது[8]. இது குறித்து அவர் ஜூன் 19ஆம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளிடம் கூறுகையில், காசர்கோடு நகராட்சி எல்லையில் வரும் அந்த தெருவை திறந்துவைத்தது நான் இல்லை. ஆனால், நான் அண்மையில்தான் அந்த பகுதிக்கு போயிருந்தேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால், காணாமல் போன இளைஞர்களைப் பற்றி ஒன்றும் கூறவில்லை.

ISIS-K kERALA NEXUS- WOMEN TOO

பெயர் மாற்றம் எதைக் குறிக்கிறது?: காஸா என்று பெயர் மாற்றப்பட்ட அந்த தெருவுக்கு நகராட்சி நிதியில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இது போன்ற பெயரில் ஏதேனும் தெரு நகராட்சி எல்லைக்குள் இருந்தால் எங்களின் கவனத்துக்கு வந்திருக்கும் என்று காசர்கோடு நகராட்சி தலைவி பீபாத்திமா இப்ராஹிம் தெரிவித்துள்ளார்[9]. ஆனால், அப்பகுதியில் உள்ள பாஜக தலைவர் ரமேஷ் கூறுகையில், காசர்கோடு நகராட்சி பகுதியிலுள்ள தெருக்களின் பெயர்களை மாற்ற தீவிரமான முயற்சி நடக்கிறது. இந்த விஷயம் நகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு வந்து விவாதிக்கப்பட்டது. ஆனால், இந்த பெயர் மாற்றத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், இது போன்ற பல பெயர்கள் நகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்[10]. இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத உளவுத்துறை அதிகாரி கூறுகையில் மத வகுப்பு பிரிவுடைய காசர்கோடு மாவட்டத்தில் ஐ.எஸ். போன்ற அமைப்பினர் ஊடுருவியிருக்கின்றனர்[11]. இருப்பினும், மத்திய உளவுத்துறையின் பார்வையில் நீங்கள் குறிப்பிடுகிற காஸா தெரு பெயர் மாற்றம் சம்பவம் எங்களின் கவனத்துக்கு வரவில்லை. என்று தெரிவித்துள்ளார்[12].

Kerala Isis nexus

காஸா ரோடில் இருக்கும் விஸ்டம் அகடமி மதம் மாற்றத்தில் ஈடுபட்டுள்ளதா?: கேரள மாநிலம் காசர்கோடில் இயங்கும் ‘விஸ்டம் அகாடமி’ எனும் டுடோரியல் கோச்சிங் மையத்தில் படிப்பதற்காக சேரும் இந்து இளம்பெண்களை அங்கிருக்கும் சில ஏஜண்டுகள் கலிபாக்கள் எனும் இஸ்லாம் மதகுருக்கள் மூலமாக இஸ்லாம் மதத்துக்கு மாறிவிடும் அளவுக்கு மூளைச் சலவைச் செய்து வருகிறார்கள்[13]. இந்தியாவைச் சேர்ந்த இந்துப் பெண்களை முஸ்லிம்களாக மாற்றி அவர்களை சிரியாவுக்கு அழைத்துச் செல்லவும், சிரியன் மொழியைக் கற்றுக் கொள்ள வைக்கவும் இங்கேயே ஏஜண்டுகள் வாயிலாக ரகசியமாக சதி வேலைகள் நடந்து வருகின்றன. காஸா எனப்படும் காசர்கோடு டுடோரியல் பள்ளியில் பயிலும் போது இப்படி மூளைச் சலவை செய்து மனம் மாற்றம் செய்யப் பட்ட, பாதிக்கப் பட்ட இளம்பெண் ஒருவரின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் மாலை ‘Times now’ ல் பிரேக்கிங் நியூஸ் ஓடிக் கொண்டிருந்தது.

ISIS-K kERALA NEXUS

தமிழ் ஊடகங்கள் அமைதியாக இருப்பது: “பி.டி.ஐ” செய்தி என்பதால், ஆங்கில ஊடகங்கள், செய்திதாள்கள் அனைத்திலும், இச்செய்தி வெளி வந்துள்ளது. ஆனால், தமிழில் வரவில்லை. தமிழ் சேனல்களில் இது தொடர்பான செய்திகள் எதுவும் உண்டா? என்று தேடியதில் பாக்கியின்றி எல்லாவற்றிலும் நமது அரசியல் அண்ணாத்தைகளும், விமர்சகப் புலிகளும் இணைந்து ஆழ்ந்த விவாத நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஒரு நிமிடம் யாருமே ‘Times Now’ பார்த்திருக்கவில்லையா? அல்லது இது ஃபேக் நியூஸா? என்று சந்தேகமாகி விட்டது. இன்று இந்நேரத்தில் இணையத்தில் தேடுகிறேன். அப்போதும் Times Now ல் மட்டுமே அந்தச் செய்தி காணக் கிடைக்கிறது. என்ன தான் நடக்கிறது எனத் தெரியவில்லை. இதோ கூப்பிடு தூரத்தில் இருக்கும் கேரளாவின் காஸர் கோடில் தேசப் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் விளைவிக்கும் வண்ணம் ஒரு விசயம் நடந்திருக்கிறது என்றால் நமது ஊடகங்களில் ஏன் அதைப் பற்றிய செய்திகள் இல்லை?  “வாட்ஸ்-அப்” விவகாரத்தை செய்தியாக்கி விட்ட்து என்று “டைம்ஸ்-நௌ” செனலை விமர்சனம் செய்யப்படும் போக்கும் காணப்படுகிறது[14].

Uzma Ahmed - retuned to India

உஸ்மா அகமதுவின் கதை: கடந்த மாதத்தில் இந்தியாவைப் பரபரப்புக்குள்ளாக்கிய செய்திகளில் ஒன்றை இப்போது குறிப்பிட்டாக வேண்டும்; டெல்லியைச் சேர்ந்த 22 வயதுப் பெண்ணான உஸ்மா அஹமது, மலேசியாவில் பணிபுரியும் போது தனது நண்பரான தாஹிர் அலி எனும் இஸ்லாமியருடன் இணைந்து பாகிஸ்தானுக்கு சுற்றுலா சென்றார். சுற்றுலாவுக்கென அழைத்துச் சென்ற தாஹிர் அங்கே துப்பாக்கி முனையில் தன்னை மிரட்டி திருமணம் செய்து கொண்டு அறைக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்தான். “பாகிஸ்தானில் நான் இருந்த பகுதியில் என்னைப் போலவே மலேசியாவைச் சேர்ந்த இளம்பெண்கள் பலர் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர். அதிருஷ்டவசமாக நான் அங்கிருந்து தப்பி இஸ்லாமாபாத்தில் இருக்கும் இந்திய தூதரகத்துக்கு வந்து சேர்ந்து அங்கேயே 20 நாட்கள் தங்கியிருந்து இந்திய வெளியுறவுத் துறையின் உதவி மூலமாக மறுபிறவி எடுத்ததைப் போல இந்தியா வந்து சேர்ந்தேன். பாகிஸ்தான் ஒரு மரணக் கிணறு அங்கே என்னைப் போல சென்று மாட்டிக் கொண்டு பெண்கள் மீள்வது நினைத்துப் பார்க்க முடியாத விசயம். அங்கே ஒவ்வொரு வீட்டிலும் 2 அல்லது 3 மனைவிகள் இருக்கிறார்கள். என்னால் தப்ப முடிந்திரா விட்டால் இப்போது என்னை யாருக்காவது விற்றிருப்பார்கள் அல்லது வேறு ஏதாவது தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்தி இருப்பார்கள்”, எனக் கண்ணீருடன் பேட்டியளித்த உஸ்மாவை நாம் அதற்குள் மறந்து விடக் கூடாது. உஸ்மா ஏன் பாக்கில் அடைத்து வைக்கப் பட்டார் என்ற விசயத்தை ஆராய்ந்தால் “பிரேக்கிங் நியூஸ்” விவகாரத்தையும் நம்மால் புரிந்து கொள்ள இயலும்.

© வேதபிரகாஷ்

25-06-2017


Kerala youth - women too

[1] Deccan Herald, Road in Kerala renamed after Gaza Strip, PTI, Published Jun 19, 2017, 7:49 pm IST, Updated Jun 19, 2017, 7:49 pm IS.

[2] http://www.deccanchronicle.com/nation/current-affairs/190617/road-in-kerala-renamed-after-gaza-strip.html

[3] மின்னம்பலம், கேரளாவின்காஸாதெருவை கண்காணிக்கும் உளவுத்துறை!, திங்கள், ஜூன்.19 2017.

[4] https://minnambalam.com/k/2017/06/19/1497877556

[5] Indian Express, A Kerala road ‘renamed’ Gaza Street: Report,, By: Express Web Desk | New Delhi | Published:June 19, 2017 3:49 pm

[6] http://indianexpress.com/article/india/kerala-road-renamed-gaza-street-4711571/

[7] India Today, Gaza street in Kerala’s Kasargod district throws intelligence agencies into tizzy, Rohini Swamy, Edited by Dev Goswami, Kasargod, June 19, 2017,  UPDATED 13:51 IST

[8] http://indiatoday.intoday.in/story/kerala-street-renamed-to-gaza/1/982100.html

[9] Times of India, Kerala’s ‘Gaza Street’ on the radar of IB, NIA, K P Sai Kiran| TNN | Updated: Jun 19, 2017, 12.28 PM IST

[10] http://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/keralas-gaza-street-on-the-radar-of-ib-nia/articleshow/59210094.cms

[11] Hindustan Times, Kerala road ‘renamed’ Gaza Street, intelligence agencies not amused, Thiruvananthapuram, HT Correspondent, Updated: Jun 19, 2017 22:43 IST

[12] http://www.hindustantimes.com/india-news/kerala-road-renamed-gaza-street-intelligence-agencies-not-amused/story-N6DKwBjANNMqI70JOqEUKI.html

[13] கார்த்திகா வாசுதேவன், இந்தியப் பெண்களை மத மாற்றம் செய்து நாடு கடத்த ISIS  நிர்ணயித்திருக்கும் அதிர்ச்சி தரும் ரேட் கார்டு விவகாரம்!, By தினமணி, Published on : 24th June 2017 05:56 PM.

[14] https://www.newslaundry.com/2017/06/24/times-now-kerala-isis-whatsapp-report

தில்லி பாகிஸ்தான் தூதரகம், ஶ்ரீநகர் ஹுரியத் தீவிரவாதிகள் மற்றும் ராவல்பிண்டி ஐ.எஸ்.ஐ தொடர்புகளும், ஒற்றர்களும், பணபரிமாற்றமும் (2)

மே 8, 2017

தில்லி பாகிஸ்தான் தூதரகம், ஶ்ரீநகர் ஹுரியத் தீவிரவாதிகள் மற்றும் ராவல்பிண்டி .எஸ். தொடர்புகளும், ஒற்றர்களும்பணபரிமாற்றமும் (2)

Kashmir separatist leaders aiding and abeting terror-Burhan Wani supetr jihadi

புர்ஹான் வனி கொல்லப்பட்டதிலிருந்து, கல்லெறி ஜிஹாதிகளுக்கு மாத சம்பளம்: ஜூலை 2016ல் தீவிரவாதி புர்ஹான் வனி கொல்லப்பட்டதிலிருந்து, காஷ்மீரில் தீவிரவாதம், கல்லெறி ஜிஹாதி மற்ற வன்முறைகள் அதிகமாகி விட்டன. தீவிரவாதிகளை கண்டுபிடித்து, மடக்கிப் பிடிக்கும் போது, அவர்கள் தாக்கும் போது, வீரர்கள் பதிலுக்கு தாக்கி ஒழுங்கிற்கு எடுத்து வர முயலும் போதும், இந்த கல்லெறி ஜிஹாதிகள் வெளிப்படையாகவே, தீவிரவாதிகளுக்கு ஆதரவாக, அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது, மனித கேடயம் போல முன்னின்று கல்லேறிவது, அதன் மூலம், தீவிரவாதிகள் தப்பித்துச் செல்வது என்ற காரியங்கள் சகஜமாகி விட்டன. இதெல்லாம் சாதாரணமாக, இயல்பாக செய்யும் செயல்களாக இல்லாமல், திட்டமிட்டு, ராணுவத்தினரைத் தூண்டிவிடும் செயலாகவே தெரிந்தது. மேலும், பெற்றோர், உற்றோர், மற்றோர் இவற்றை எதிர்க்காமல் ஆதரித்து வருகின்றனர். பாலஸ்தீனம் போல, இவர்களை செயல்பட வைத்து, ஒருபக்கம் பலிகடாக்களாக்கி, இன்னொர்யு பக்கம், ராணுவம் மனித உரிமைகளை மீறியது என்று பிரச்சாரம் செய்யவே, இவ்வாறு செய்கிறது என்று புலப்படுகிறது. இப்பொழுது அத்தகைய பேச்சுகள் பரூக் அப்துல்லா போன்றோர் மூலம் வெளி வந்ததை கவனிக்கலாம். மேலும் அவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி விட்டது. அப்படியென்றால், இந்த கல்லெறி ஜிஹாதி, அவர்களால் வேலை மாதிரி செய்து வருகிறார்கள், பணம் கொடுக்கிறார்கள் என்று தெரிகிறது.

Kashmir separatist leaders aiding and abeting terror-Burhan Wani supari jihadi

கல்லெறி ஜிஹாதித்துவமும், கல்லூரி விடுமுறையும், வேலையில்லாத நிலையும் நீதிமன்றத்தில் விவாதிக்கப்படுவது[1]: தி.இந்து ஏப்ரலில் வெளியிட்ட செய்தியே, சித்தாந்த ரீதியில், ஊடகங்கள் எவ்வாறு பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக உள்ளன என்பதனை தெரிந்து கொள்ளலாம். செய்தி இவ்வாறுள்ளது – “காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டுமெனில் மாணவர்கள் பாதுகாப்பு படையினர் மீது கல்லெறித் தாக்குதல் நடத்துவதை விடுத்து கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் திரும்பி கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.  தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான நீதிபதிகள் அமர்வு, காஷ்மீ தெருக்களில் பெல்லட் பிரயோகமும் கல்லெறித் தாக்குதலும் நிற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அமர்வில் உள்ள மற்றொரு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கூறும்போது, கல்விதான் அங்கு நிலவி வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் தெருக்களில் பொங்கும் கோபத்திற்கு தீர்வளிக்க முடியும் என்றார்.  ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற பார் அசோசியேஷன் எதிர்வாதம் செய்த போது, பாதுகாப்புப் படையினர் பள்ளிகளிலும் கல்லூரி வளாகங்களிலும் புகுந்து மாணவர்களை அடிக்கின்றனர் என்றனர், “மாணவர்களை அடித்தால் அவர்கள் தெருவில் இறங்கி போராடவே செய்வார்கள். கல்லெறி தாக்குதல் என்பது ஒரு எதிர்வினை. காஷ்மீர் மக்களிடம் மத்திய அரசு பேசத் தவறிவிட்டது. தடையற்ற, நிபந்தனையற்ற உரையாடலை காஷ்மீர் மக்கள் எதிர்நோக்குகின்றனர்” என்றது. இதற்கு பதில் அளித்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கின் மனுதாரர் பார் அசோசியேஷன் முதலில் சம்பந்தப்பட்டவர்கள் வன்முறையக் கைவிடுவதாக கோர்ட்டில் உறுதியளிக்க வேண்டும் என்றது. மே 9-ம் தேதி வாக்கில் இந்த உறுதி மொழிகள் பதிவு செய்யப்பட்டால், பாதுகாப்புப் படையினரை 15 நாட்களுக்காவது விலக்கிக் கொள்ளுமாறு மத்திய அரசிடம் நீதிமன்றம் அறிவுறுத்த முடியும், இருதரப்பினருமே முக்கிய பிரச்சினைகளை பேச வேண்டும்[2].

Kashmir separatist leaders aiding and abeting terror

அரசியலுக்காக, விளம்பரத்திற்காக தொடுத்த வழக்கு போன்றுள்ளது: “இரு கைகளையும் தட்டினால்தான் ஓசை, என்று நீதிபதி கவுல் தெரிவித்தார்.  “தொடர்ந்து கல்லெறி தாக்குதல் செய்வது, பள்ளிகளை மூடுவது என்றால் பேச்சு வார்த்தை எப்படி சாத்தியம்? முதலில் பேசுங்கள். பேச்சுவார்த்தைகள் அரசியல் சாசன சட்டக்கத்திற்குள் இருக்க வேண்டும்” என்று தலைமை நீதிபதி கேஹர் தெரிவித்தார். அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி வாதிடும் போது, “பிரிவினைவாதத் தலைவர்களுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்த முடியாது என்று கூறி மனுதாரர்கள் சமர்ப்பித்த வாக்குமூலத்தை வாசித்தார், அதில் காஷ்மீர் பிரச்சினையை இந்தியாபாகிஸ்தான் பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி, “எங்கள் இதயம் காஷ்மீர் மக்களுக்காகவே துடிக்கிறது. ஒட்டு மொத்த மாநிலமும் அரச பயங்கரவாதத்தில் சிக்கியுள்ளது என்று அவர்கள் கூறுவதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன். சமீபத்தில் நடந்த தேர்தல் முறைகேடானது என்று அவர்களால் கூற முடியுமா? பிரதமரையும், முதல்வரையும் சந்திப்பதிலிருந்து இவர்களை யார் தடை செய்தது? பேச்சுவார்த்தைகளை அரசியல் தலைவர்கள்தான் முன்னெடுக்க வேண்டும். இந்த நீதிமன்றத்தில் அல்ல” என்றார் ரோத்கி. வாதப்பிரதிவாதங்களின் ஒரு கட்டத்தில் மனுதாரர்களான பார் அசோசியேஷன், தங்களுக்கு பிரிவினைவாத தலைவர்களிடம் செல்வாக்கில்லை, எனவே கோர்ட்டின் பார்வைகளை தங்களால் அவர்களிடம் கொண்டு செல்ல முடியாது என்று கூறிய போது, நீதிபதி சந்திராசூட், பார் அசோசியேஷன் உரையாடலில் பங்கு கொள்பவராக இங்கு வந்த பிறகு இதிலிருந்து பின் வாங்க முடியாது என்று சுட்டிக்காட்டினார்.”

Two ISI agents arrested in April 2017

பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், இவர்களால் கொல்லப்படுகின்றவர்கள், பாதிக்கப்படுகின்றவர்கள், முதலியவர்களைப் பற்றி கவலைப் படக்கூடாது: இங்கு எங்குமே, கல்லெறி கலாட்டா மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகள், தீவிரவாதிகள் நுழைவு, தினமும் நடக்கும் துப்பாக்கிகி சண்டைகள், இறப்புகள், அதனால், இந்திய-பாகிஸ்தான் உறவுகள் மோசமடைதல் முதலியவை விவாதிக்கப்படவில்லை. ஏதோ சாதாரணமாக, மாண்வர்கள் கல்லெறிவதில் ஈடுபட்டுள்ளது போன்று விவாதம் நடந்துள்ளதாக செய்தி விளக்குகிறது. இவ்வாறு ஒருதலைப்பட்சமாக செய்தி வெளியிடுவதே மிகவும் தவறானது என்று எல்லாம் அறிந்த, தி.இந்து-காரர்களுக்கு தெரியாதா என்ன? மனித உரிமைகள் என்று வந்தால், அவை பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், இவர்களால் கொல்லப்படுகின்றவர்கள், பாதிக்கப்படுகின்றவர்கள், முதலியவர்களைப் பற்றி கவலைப் படக்கூடாது என்றுள்ளது போலும். அத்தகைய சித்தாந்தம் என்னவோ?

Sharad Yadav in front of Hurriat - Sep.2016

ராவல்பிண்டி, ஶ்ரீநகர் தொடர்புகள்: பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் சில கிடைத்தபோது, அவற்றை சோதித்ததில், இரண்டு முறை பணம் கொடுத்தது-வாங்கியது என்பது ராவல்பிண்டி மற்றும் ஶ்ரீநகர் என்று காட்டுகிறது. அதாவது, ராவல்பிண்டியில் ஐ.எஸ்.ஐ தலைமையகம் உள்ளது, ஶ்ரீநகரில் ஹுரியத் உள்ளது. இங்கிருந்து பணம் அனந்ட்தநாக், புல்வாமா, குப்வாரா போன்ற இடங்களுக்கு செல்கிறது. ராவல்பிண்டியில், ஐ.எஸ்.ஐ ஆள், அஹமது / மெஹ்பூப் சாகர் ஹுரியத் தலைவர்களுடன் தொடர்ந்த உறவுகளை வைத்துக் கொண்டிருக்கிறான். இவன் பாகிஸ்தானின்  இந்திய தூதர் அப்துல் பசிந்திற்கு நெருக்கமானவன். இப்பணியை செய்ய இவனுக்கு மாத சம்பளம் கொடுக்கப்பட்டது. இதுதவிர, “இன்டெல்”, மூலம் பெற்ற ஆவணங்களில் உள்ள தகவல்களின் படி, யார்-யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டன போன்ற விவரங்களும் பட்டியல்களில் காணப்படுகின்றன[3]. இதன்மூலம், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, தூதரகம், பிரிவினை, பயங்கரவாத, தீவிரவாத இயக்கங்கள் முதலியவற்றிற்கிடையேயுள்ள தொடர்புகள் மெய்ப்பிக்கப் பட்டுள்ளன[4]. ஆகவே, நிச்சயமாக, இந்தியாவின் பெருந்தன்மையினை, மனிதாபிமான நடவடிக்கைகளை, கோடிகள் கொட்டி, அம்மக்களின் பாதுகாப்பை காப்பாற்றியும் ஏமாற்றி, துரோகம் செய்து வருவதை நன்றாக தெரிந்து கொள்ளலாம். ஆகவே, இனி வரிப்பணத்தை இந்த பிரிவினை, பயங்கரவாத, தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு கொடுத்து விரயம் செய்வதை விட்டுவிட வேண்டும்.

Yachuri, H Raja - in front of Hurriat - Sep.2016

பிடிபட்ட பாகிஸ்தான் ஒற்றர்கள் மூலம் தெரிய வந்துள்ள விவரங்கள் ஊர்ஜிதப் படுத்துகின்றன: சென்ற மாதம் ஏப்ரலில் மும்ப்ராவில், நஜீம் அஹமது [Nazim Ahmed] என்பவன் தீவிரவாத கும்பலின் தலைவன் என்று கைது செய்யப்ப்பட்டான்[5]. அவனுடைய கூட்டாளிகளும் உத்திரபிரதேசத்தில் பல இடங்களில் பிடிபட்டனர்[6]. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யை சேர்ந்தவருக்கு நிதியுதவி வழங்கியதாக மும்பையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ரா மற்றும் உத்திர பிரதேச மாநிலங்களை சேர்ந்த தீவிரவாத ஒழிப்பு படையினர் மும்பையின் தெற்கு பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் அல்தாஃப் குரேஷி [Altaf Bhai Qureshi] என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்[7]. லக்னோவில் தங்கியிருந்த அஃப்தாப் அலி [Aftaab Ali ] என்பவரின் வங்கி கணக்கில் குரேஷி பணம் செலுத்தியுள்ளார். குரேஷியிடம் இருந்து தீவிரவாத ஒழிப்பு படையினர் ரூ.71.57 லட்சம் ரூபாய் மற்றும் செல்போனினை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் குறித்த விசாரணையை போலீசார் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்[8]. இருவருமே ஐ.எஸ்.ஐக்கு உளவு பார்த்துள்ளனர்[9]. அலி பாகிஸ்தானுக்கு சென்று வந்ததோடல்லாமல், தில்லியில் பாகிஸ்தான் தூதரக அதிகாரியுடனும் போனில் பேசியுள்ளான்.  விசாரணையின் போது, இவ்விவரங்கள் வெளிவந்தன[10].

 © வேதபிரகாஷ்

08-05-2017

Yachuri waving hand as if .... - in front of Hurriat - Sep.2016

[1] ”தி.இந்து, அமைதி திரும்ப வேண்டுமெனில் காஷ்மீர் மாணவர்கள் கல்லெறிவதை நிறுத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம், கிருஷ்ணதாஸ் ராஜகோபால், Published: April 28, 2017 16:04 ISTUpdated: April 28, 2017 16:11 IST

[2]http://tamil.thehindu.com/india/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article9670246.ece

[3] TIMES NOW,  TIMES NOW EXCLUSIVE: Secret intel papers show how ISI funds Hurriyat, by Srinjoy Chowdhury, May 07, 2017 | 10:55 IST.

[4] One of the annexures of top secret intel document has proof that cash was chan nelled to multiple individuals in the Hurriyat office in Srinagar. This is direct proof of a link between funds sent by Pakistan’s ISI and Hurriyat. “Register of treachery”,  lists out names of Hurriyat men and money they took under various heads (see table). The payments made are only for one month, essentially meaning that there is a fixed salary paid to many and that there is a monthly contribution made for Hurriyat’s day-to-day expenses.

http://www.timesnow.tv/india/article/times-now-exclusive-secret-intel-papers-show-how-isi-funds-hurriyat/60605

[5] The Hindu, UP ATS arrests suspect from Pydhonie in espionage case, 04 MAY 2017 00:59 IST, Updated: 04 MAY 2017 00:59 IST

[6] http://www.thehindu.com/news/cities/mumbai/up-ats-arrests-suspect-from-pydhonie-in-espionage-case/article18380025.ece/amp/

[7] மாலைமலர், பாகிஸ்தான் உளவு அதிகாரிக்கு உதவியதாக ஹவாலா ஆப்பரேட்டர் மும்பையில் கைது, பதிவு: மே 05, 2017 00:31.

[8] http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/05003134/1083576/Hawala-operator-held-in-Mumbai-for-funding-suspected.vpf

[9] Hindustan Times, Suspected ISI agent held in UP, another picked up from Mumbai, Rohit K Singh,   Lucknow, Updated: May 03, 2017 22:52 IST

[10] http://www.hindustantimes.com/india-news/suspected-isi-agent-held-in-up-another-picked-up-from-mumbai/story-yTvIhUUyegnLevgpZLHwLM.html

தில்லி பாகிஸ்தான் தூதரகம், ஶ்ரீநகர் ஹுரியத் தீவிரவாதிகள் மற்றும் ராவல்பிண்டி ஐ.எஸ்.ஐ தொடர்புகளும், ஒற்றர்களும், பணபரிமாற்றமும் (1)

மே 8, 2017

தில்லி பாகிஸ்தான் தூதரகம், ஶ்ரீநகர் ஹுரியத் தீவிரவாதிகள் மற்றும் ராவல்பிண்டி .எஸ். தொடர்புகளும், ஒற்றர்களும்பணபரிமாற்றமும் (1)

Shabir sha meeting Abdul Basit - August .2014

அப்துல் பசித், பாகிஸ்தான் தூதர் தீவிரவாதிகளுக்கு பணம் கொடுத்தாரா?: ரூ.70 லட்சம் பாகிஸ்தான் உளவு துறை ஐ.எஸ்.ஐ மூலம், ஹுரியத் தலைவர் ஷபிர் ஷா [Hurriyat leader Shabir Shah] வழியாக, கல்லெறி ஜிஹாதிகளுக்கு கொடுக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது[1]. சமீபத்தில் கைதான இரண்டு ஐ.எஸ்.ஐ உளவாளிகள், இதை ஒப்புக்கொண்டு விவரங்களைக் கொடுத்துள்ளனர்[2]. பாகிஸ்தானின்  இந்திய தூதர் அப்துல் பசித் [Abdul Basit, Pakistan’s envoy to India] மூலம் பணம் பரிமாறப்பட்டுள்ளது[3]. அதாவது தூதரகம் மூலமாகவே இத்தகைய தீவிரவாதிகளுக்கு பணவிநியோகம் நடந்துள்ளது[4].  “ஹைகமிஷனராக” இருந்து கொண்டு செய்திருக்கிறாரா என்று கேள்வி கேட்டுள்ளன ஊடகங்கள்[5]. ஊடகங்கள் இவற்றை எடுத்துக் காட்டினாலும், அரசு முறையாக இதைப்பற்றி ஒன்றும் கருத்துத் தெரிவிக்கவில்லை. அப்துல் பசித்தை கூப்பிட்டு விளக்கம் கேட்கவில்லை. சென்ற ஆண்டு-2016, இவர் காஷ்மீரில் இருக்கும் ஊடகக்காரர்களை வரவழைத்து, இந்தியாவிற்கு எதிரான விசயங்களை அதிகப்படுத்தி, செய்திகளாக போடவும், அதன் மூலம், அங்குள்ள மக்களைத் தூண்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தெரிந்ததும், இங்கு குறிப்பிடத் தக்கது[6]. தூதுவர், தூதரகம், இருநாட்டு உறவுகள் போன்ற விசயங்களில் இந்தியா மென்மையாக, மெதுவாக, சோம்பேறித்தனமாக செயல்படுவதும் வியப்பாக இருக்கிறது.

SYurriat meeting Abdul Basit - August .2014

1997ம் ஆண்டு முதல் நடந்த விவகாரங்களை 2017ல் கிளறுவது ஏன்?: 1997ல் அலி ஷா கிலானி சவுதி அரேபியாவிலிருந்து பணம் பெற்றது கண்டுபிடிக்கப் பட்டது, அதனால் வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றதில் உள்ள சட்டமீறல்கள் முதலிய பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. நவம்பர் 29, 2010 அன்றும் இவர்மீது, தேசத்துரோக வழக்குப் போடப்பட்டது[7]. 2001ல் நேரிடையாக பண விநியோகம் நடந்த 173 ஹவாலா பரிவர்த்தனைகளும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன[8]. இந்த விவரங்களை முதலமைச்சர் மெஹ்பூபா முப்டியே கொடுத்துள்ளார்[9].  பாகிஸ்தான் மட்டுமல்லாது, சவுதி அரேபியா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்தும் பணம் வந்துள்ளது. சவுதியிலிருந்து தான் அதிகமாக பணம் வந்துள்ளது. அதாவது, ஹக்கானி ஆவணங்கள் முதலியன சவுதி அரேபியா உலகம் முழுவதும், வஹாபி அடிப்படைவாதத்தை பரப்பும் மூலமாக, தீவிரவாதத்தை வளர்க்கிறது என்று எடுத்துக் காட்டியுள்ளதால், அதில் எந்தவித ரகசியமும் இல்லை எனலாம்.

How hawala money is routed from Rawalpindi to Srinagar-three arrested

ஹவாலா பணம் ஹீவிரவாதிகளுக்கு செல்வது: 2011ல் அமுலாக்கப்பிரிவினர் கட்டுப்பாட்டு 1997ல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்றபோதே, அதிலிருந்தே விவரங்களைத் தெரிந்து கொள்லலாமே. எப்படி இருப்பினும், “டைம்ஸ்-நௌ” வெளியிட்ட விவரங்களை மற்ற ஊடகங்களையும், தங்களது சரக்கைச் சேர்ந்து, செய்திகளை வெளியிட்டுள்ளன என்று தெரிகிறது. 20 வருடங்களாக “புலனாய்வு ஜார்னலிஸம்” என்று தம்பட்டம் அதித்துக் கொண்டிருந்தவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை. எல்லையில் நான்கு வியாபாரிகளை பிடித்தபோது, லஸ்கர்-இ-தொய்பா மூலம் அனுப்பப்படும் பணத்தை தீவிரவாதிகளுக்குக் கொடுக்க ஹவாலா மூலம் செயல்பட்டது தெரிய வந்தது. வங்கி மூலம் பணமாற்றத்தை செய்வதை விட, இம்மாதிரி ஹவாலா மூலம் பணபரிமாற்றம் செய்வது, அவர்களுக்கு நல்லது மற்றும் கொடுத்தவர்-வாங்கியவர்கள் விவரங்கள் தெரியாது, கண்டுபிடிக்க முடியாது என்ற கோணத்தில் தீவிரவாதிகள் கையாண்டு வருகிறார்கள். இதனால், அந்த ஹவாலாகாரர்களும் கணிசமான தொகை கமிஷனாகக் கிடைக்கிறது.

How hawala money is routed from Rawalpindi to Srinagar

நிலைமை தொடர்கிறது: 2014ம் ஆண்டில், 48 ஏஜென்டுகள், பொருள் பரிமாற்றம் மூலம் பணத்தை தீவிரவாதிகளுக்கு அனுப்பியுள்ளனர். என்.ஐ.ஏ மற்றும் அமுலாக்கத்துறை, 20 வழக்குகளில் ரூ. 75,00,000/- பரிமாற்றம் செய்ததை கண்டுபிடித்துள்ளனர். 2009 மற்றும் 2011 கள்ளப்பணம் மூலம் ரூ.1,20,00,000/- பரிவர்த்தனை நடந்துள்ளது. 2011ல் 74,000 சவுதி ரியால் பணம் வந்துள்ளது. அதாவது, இம்முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றது என்று தெரிகிறது. இவற்றில் முஸ்லிம்களே சம்பந்தப்பட்டுள்ள போது, அவர்கள் ஆட்டிக் கொடுக்காமல், இருந்து வருகின்றனர். ஹுரியத் கான்பரென்ஸ், ஜம்மு-காஷ்மீர் லிபரேஷன் பிரென்ட், இஸ்லாமிய மாணவர்கள் முன்னணி, ஹிஜ்புல் முஜாஹித்தீன், ஜைஸ்—இ-மொஹம்மது, ஜமாத்-உல்-முஜாஹித்தீன் போன்ற பிரிவினை, பயங்கரவாத, தீவிரவாத இயக்கங்களுக்கு அப்பணம் சென்றுள்ளது[10]. 1997ல் சவுதி முதலிய அந்நிய நாடுகளிலிருந்து பணம் பெற்றதற்கு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதே போல, ஷாஜியா என்ற பெண் மூலம் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் பெற்றதும் தெரிய வந்தது[11]. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. இந்திய ஊடகங்கள் சில இவையெல்லாம் ரகசிய ஆவணங்கள் மூலம் தெரிய வருகின்றன என்று தெரிவிக்கின்றன[12].

© வேதபிரகாஷ்

08-05-2017

Two ISI agents arrested in April 2017- Abdul Basit nexus

[1] Times of India, How ISI funds stone-pelters via Hurriyat in Kashmir: Times Now, TIMESOFINDIA.COM | Updated: May 6, 2017, 06.30 PM IST

[2] http://timesofindia.indiatimes.com/india/how-isi-funds-stone-pelters-via-hurriyat-in-kashmir-times-now/articleshow/58546402.cms

[3] Zeenews, Pak embassy helps distribute ISI funds to stone-pelters in Kashmir: Report, By Zee Media Bureau | Last Updated: Sunday, May 7, 2017 – 00:36

[4] http://zeenews.india.com/india/pak-embassy-helps-distribute-isi-funds-to-stone-pelters-in-kashmir-report-2002780.html

[5] Times.now, Is Pak high commissioner Abdul Basit paying separatists to create unrest in Kashmir? , May 06, 2017, 13.33 IST.

[6] Sources say that last year the Pakistan high commission had invited Kashmiri journalists to a meeting where they were asked to file reports project Indian security forces in bad light so they can generate hatred towards India and create a mass movement.

http://www.timesnow.tv/india/video/is-pak-high-commissioner-abdul-basit-paying-separatists-to-create-unrest-in-kashmir/60563

[7] On November 29, 2010 Geelani, along with writer  Arundhati Roy, Maoist Varavara Rao and three others, was charged under “sections 124A (sedition), 153A (promoting enmity between classes), 153B (imputations, assertions prejudicial to national integration), 504 (insult intended to provoke breach of peace) and 505 (false statement, rumour circulated with intent to cause mutiny or offence against public peace… to be read with Section 13 of the Unlawful Activities Prevention Act of 1967″. The charges, which carried a maximum sentence of life imprisonment, were the result of a self-titled seminar they gave in New Delhi, Azadi-the Only Way” on October 21, at which Geelani was heckled

[8] One.India, How Pakistan funded the Kashmir unrest 173 times, Written by: Vicky Nanjappa, Updated: Sunday, May 7, 2017, 8:14 [IST]

[9] http://www.oneindia.com/india/how-pakistan-funded-the-kashmir-unrest-173-times-2428208.html

[10] Investigations reveal that between the years 2009 and 2011 an amount of Rs 12 million had been recovered. Fake and foreign currency was recovered from agents who were funding terrorists. In 2011, some agents had also brought in 74,000 Saudi Arabian Riyals into the valley. NIA sources say that the funding has gone both to terrorist groups and separatists. Money has been pumped into the Hurriyat Conference, Jammu-Kashmir Liberation Front, Islamic Students Front, Hizbul Mujahideen, Jaish-e-Mohammad and Jamiat ul-Mujahideen.

[11] An 1997 FIR against separatist Syed Ali Shah Geelani an FIR alleges that he had got funding to the tune of Rs 190 million from Saudi Arabia and also another donation of Rs 100 million from the Kashmir American Council. Investigations had revealed that all these funds were routed through a Delhi-based Hawala operative. It was also found that Yasin Malik, another separatist, had received funding of USD 1 lakh and the money was being carried by a woman called Shazia. We are looking at each case since 1995, and this will help us get a better picture of the entire racket,” an NIA officer adds. Intelligence Bureau officials tell OneIndia that the money is being used for various purposes.

[12] Outlook, Secret Intel Docs Show Pakistan’s ISI Funds Hurriyat To Create Trouble In Kashmir, Says Channel Report, May 7, 2017. 6.48 pm

http://www.outlookindia.com/website/story/secret-intel-docs-show-pakistans-isi-funds-hurriyat-to-create-trouble-in-kashmir/298784

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (4)

ஒக்ரோபர் 25, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (4)

மம்தா- ஹஸினா - அரசியல்-ஜிஹாத்

மம்தா- ஹஸினா – அரசியல்-ஜிஹாத்

வடபழனிக்கும், பர்த்வானுக்கும் என்ன தொடர்பு?: இப்படி கேட்டால், ஏன்னது, “அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்”, போல கேள்விக் கேட்கப் படுகிறதே என்று நினைக்க வேண்டாம். பர்த்வான் வெடிகுண்டு தொழிற்சாலை சொந்தக்காரர்கள், வடபழனியில் உள்ள மூன்று “பாய்கள் / முஸ்லிம் சகோதரர்களுடன்”, அவர்கள் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். இவர்கள் தாங்கள் தீவிரவாதிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிந்திருக்க அல்லது தெரியாமல் இருந்திருக்க வேண்டும். தெரிந்திருக்கக் கூடும் என்றால், அவர்களுக்கு ஏன் துணை போகவேண்டும், அப்பா-அம்மா, இப்படி குண்டு தயாரிப்பது, தொழிற்சாலை வைப்பது, மற்றவர்களுக்கு விநியோகிப்பது எல்லாம் தப்பு என்று அறிவுரை சொல்லியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், அந்த இரண்டு பேர் இறந்திருக்க மாட்டார்கள், இரண்டு பெண்களும் விதவையாகி இருக்கமாட்டார்கள். முஸ்லிம்களாக இருந்து கொண்டே ஜிஹாதி தொடர்புகள் தெரியாமல் இருந்திருக்க வேண்டும் என்றால், “ஸ்லீப்பர் செல்” முறையில் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடுமையான விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இருப்பினும் நன்மையாகவோ, மென்மையாகவோ, வன்மையாகவோ கண்டிக்கப்படவில்லை, எச்சரிக்கப்படவில்லை.

Vadapalani -burdwan link

Vadapalani -burdwan link

ஜிஹாத் என்றால் உண்மையினை அறிய வேண்டும்: “ஜிஹாத்” என்பதற்கு கொடுக்கப்படும் விளக்கத்தை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று அடிக்கடி சில முஸ்லிம் இயக்கங்கங்கள் பறைச்சாற்றிக் கொண்டாலும், குண்டுகள் வெடிக்கும் போது அமைதியாகி விடுகிறார்கள்.  தினத்தந்திக்கு[1] (05-10-2014) எச்சரிக்கைக் கொடுத்து (08-10-2014), ஜிஹாதி-மறுத்த நாட்களில் தான் வடபழனி முஸ்லிம்கள், பர்த்வான் முஸ்லிம்களான ஷகீல் மற்றும் ரஜிரா பீபீ என்ற வெடிகுண்டு தொழிற்சாலைக்காரர்களுடன் (02-10-2014 தேதிக்கு முன்னர்) பேசிக்கொண்டிருந்தார்கள். அதாவது, ஏற்கெனவே, இவர்கள் ஒருவரையொருவர் அறிந்திருந்தனர். சென்னயில் உள்ள முஸ்லிம்களுக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்கிறதா என்று அவர்கள் தாம் சொல்ல வேண்டும். அவர்கள் ஏன் அப்படி தொடர்பு கொள்ள வேண்டும், பேச வேண்டும் என்று எந்த முஸ்லிம் அமைப்பும் கேட்டதாகத் தெரியவில்லை. அதைப் பற்றியும் ஊடகங்கள் தாராளமாகவே செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றையும் இவர்கள் எதிர்க்கவில்லை!

பர்த்வான் வடபழனி - தொடர்பு

பர்த்வான் வடபழனி – தொடர்பு

வடபழனி முஸ்லிம்களுடன் பேசிய ரூமி பீபி மற்றும் அமீனா பீபி வெளியிடும் திடுக்கிடும் ரகசியங்கள்: JMB தலைவர்களான சொஹைல் மெஹ்பூஸ் [Sohail Mehfooz] மற்றும் மொஹப்பது பிலால் [Mohammed Bilal] அடிக்கடி இந்தியாவில் உள்ள மதரஸாக்களுக்கு வந்து சென்றுள்ளனர். பிறகு, வங்காளதேசத்தில் நவாப் கஞ் என்ற இடத்தில் உள்ள தாருல்-உலும்-மஜ்ஹருல் [the Darul-Ulum-Majharul madrasa in Nawabganj, Bangladesh] என்ற மதரஸாவில், ஆகஸ்ட் 2014ல் கூடிய கூட்டத்தில் தான், இந்தியாவில் எப்படி நிதிதிரட்டுவது, ஆட்களை வேலைக்கு அமர்த்துவது போன்ற விவரங்கள் பேசப்பட்டு தீர்மானம் செய்யப் பட்டன. இவர்களுடன் இன்னொரு JMB தலைவர் மொஹம்மது ஹபிபுர் ரஹ்மான் [Mohammed Habibur Rehman] என்பவரும் நிதிதிரட்டும் சேவைக்கு சேர்ந்து வந்துள்ளார். மூர்ஷிதாபாத், மால்டா, நாடியா மாவட்டங்களில் அவர்களது ஆட்கள் வேலைசெய்து வருகிறார்கள். இவ்வாறு உள்ளூர் நிதிவசூல் மட்டுமல்லாது, பங்களாதேசத்தில் சைலெட் என்ற இடத்தில் (Syhlet, Bangladesh) உள்ள JMB ஆட்கள் கொரியர் மூலம் ரூபாய் நோட்டுகளை அசாமில் உள்ள ஒரு டாக்டருக்கு அனுப்பி வைக்கிறார்கள். அந்த டாக்டர் கௌஸருக்கு அறிவிக்க, பணத்தை எடுத்துவர மூன்றுய் ஆட்கள் அசாமிற்கு அனுப்பப்படுகிறார்கள். கொரியர்கள் / பணத்தை எடுத்துச் செல்லும் நம்பிக்கையானவர்கள் மூலம் பல வழிகளில் சென்று, கடைசியில் முர்ஷிதாபாதில் பேராம்பூர் நகருக்கு சுமார் ரூ.10 லட்சம் என்ற விதத்தில் வந்து சேரும். பர்த்வானில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள அந்த வீட்டைப் பிடித்தனர். ஒரு பக்கம் பர்கா பேகடரி மற்பக்கம் பாம்ப் பேக்டரி என்று வேலைகளை ஆரம்பித்தனர். நூற்றுக் கணக்கான ஆட்கள் இவ்வேலையில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். ஆனால், மிகவும் விசுவாசமான சுமார் 40 பேர் தாம் குண்டு தொழிற்சாலை வேலைக்கு அமர்த்தப் பட்டனர். ரூமி பீபி மற்றும் அமீனா பீபி சாதாரணமாக கொல்கொத்தாவில் உள்ள புர்ரா அஜாருக்குச் சென்று (Burrabazar in Kolkata), குண்டுகள் தயாரிக்க வேண்டிய மூலப் பொருட்களை வாங்கி வருவார்கள். அந்த குண்டு தொழிற்சாலை மூன்று மாதங்களாக, அதாவது, ஆகஸ்ட் 2014லிருந்து, வேலை செய்து வருகின்றது. அக்டோபர் 2 குண்டுவெடிப்பிற்கு முன்னர் சுமார் 50 குண்டுகள் டாக்கா, அசாம் போன்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.  என்.டி.ஏ அரசாங்கம் பதவி ஏற்றவுடன், இது ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இந்தோ-பங்காளதேச உறவுகளை சீர்குலைக்க இக்காரியங்கள் நடக்கின்றன, எனும்போது, இதன் பின்னணியில் மற்ற விவகாரங்களும் இருக்க வேண்டும்.

தீவிரவாதிகளாக மாறும் பெண்கள் - தினத்தந்தி

தீவிரவாதிகளாக மாறும் பெண்கள் – தினத்தந்தி

ஜிஹாதிகளாக பெண்கள் உபயோகப் படுத்தப் படுவது ஏன்?: பர்த்வான் குண்டு தொழிற்சாலை உருவானதில் இரண்டு பெண்களின் பங்கு அதிகமாக அறியப்படுகிறது. கைக்குழந்தைகளுடன் இப்பெண்கள் எவ்வாறு அத்தகைய வேலைகளில் ஈடுபட்டார்கள் என்றால், அவர்கள் ஜிஹதித்துவத்தில் நன்றாக ஊறவைக்கப் பட்டிருக்கிறார்கள். அவ்வாறான காரியங்கள் புண்ணியமானவை, அல்லாவுக்குப் பிடித்தனமானவை, அதனால் சொர்க்கம் கிடைக்கும் என்று அறிவுருத்தப் பட்டுள்ளனர். பிறகு அவர்களுக்கு வேண்டியவை எல்லாம் கொடுக்கப் படும் என்றும் சொல்லப்பட்டது. இதனால், மிகவும் விசுவாசமாக அவர்கள் வேலை செய்து வந்தனர். நிதி வசூல், விநியோகம் போன்ற விசயங்களிலிருந்து, குண்டு தயாரிக்க மூலப்பொருட்கள் வாங்குவது, குண்டுகளை விநியோகிப்பது என்ரும் ஈடுபட்டிருக்கிறார்கள். பணம் விசயத்திலும் மிகவும் ஜாக்கிரதையாக இருந்துள்ளார்கள். அதாவது பணம் இப்படித்தான் பட்டுவாடா செய்யப் படுகிறது என்ற அறியப்படாமல் போகும் என்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளார்கள். மேலும் பங்களாதேசத்திலிருந்து, பாகிஸ்தானிலிருந்து வரும் கள்ளநோட்டுகள், இந்தியாவில் புழக்கத்தில் விடும் கோஷொடியினரும், தமிழகத்தில் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள் என்பது கவனிக்கத் தக்கது. இப்பெண்கள் கைக்குழந்தைகள் சகிதமாக சென்றுவரும் போது, யாரும் சந்தேகப்படமாட்டார்கள் என்பது நிதர்சனமே, ஆனால், அதவே திட்டமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு பெண்களை ஜிஹாதிக்கு உபயோகப் படுத்தும் முறையும் நோக்கத்தக்கது.

Madrasha Dinia Madania at Khakhragarh, Burdwan.

Madrasha Dinia Madania at Khakhragarh, Burdwan.

பர்த்வான் மதரஸாக்களில் நடப்பவை என்ன?: மதரஸாக்கள் அதிகமாக முளைத்து வருவதும் சந்தேகத்திற்கு இடமளிக்கின்றன. முஸ்லிம்கள் தாங்கள் மதக்கல்விதான் அளிக்கிறோம் என்றாலும், நடப்பது வேறுவிதமாக இருக்கிறது. ஏனெனில், பர்த்வான் மாவட்டத்தில் மட்டும் உள்ள 700க்கும் மேலான மதரஸாக்காளில் 37 மட்டும் தான் பதிவு செய்யப் பட்டுள்ளன. அதாவது, பதிவு செய்யப் படாத மதரஸாக்களில் நடப்பதை யாரும் அறிந்து கொள்ல முடியாது. குறிப்பாக, ஒரு மதரஸாவில் 30-40 இளம்பெண்கள் படிக்கிறார்கள். ஆனால், அவர்கள் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். வெளியே இருந்து கொண்டு வரப்பட்டுள்ளவர்கள். மேலும் அவர்கள் மற்றவர்களுடன் பேசுவது கிடையாது. அவர்கள் தங்களது கணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சேர்ந்து அங்கே வசித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால், திருமணம் ஆகாத பெண்கள் பாதிக்கப் படுகிறார்களா என்று தெரியவில்லை. அவர்களுக்கு வேண்டிய வசதிகள் எங்குள்ளனவா, பாலியல் ரீதியில் தொல்லைகள் எதுவும் கொடுக்கப் படுகின்றனவா என்ற விசயங்களைப் பற்றி யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. மதரஸாக்களில் உள்ள மற்ற முஸ்லிம் பெண்களைப் பொறுத்த வரையில், அவர்கள் தங்களது உறவுகளை மறந்து ஜிஹாதி வேலைகளை செய்ய தயாராக வந்துள்ளனர்[2].

மதரஸாக்களின் கீழே சுரங்க பாதைகள், உள்ளே வெடிகுண்டுகள், வெளியே நிற்கவைக்கப் பட்ட காரில் ஜிஹாதி புத்தகங்கள்: சில மதரஸ்ஸாக்களின் கீழே சரங்கப் பாதைகளை தோண்டி வைத்துள்ளனர். அவை அருகிலுள்ள குளக்கரைகளில் சென்று முடிகின்றன[3]. பர்த்வானில் ஒரு மதரஸாவுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த மஞ்சள் நிற காரில் சோதனையிட்ட போது, அதில் ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் 12 டிரங்க் பெட்டிகள் இருந்துள்ளன[4]. அக்காரின் மீது “இந்திய ராணுவம்” என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது, ஆனால், எண்ணோ, ஒரு பைக்கினுடையாத இருந்தது. புத்தகங்கள் மற்றவை ஜிஹாதி இலக்கியங்களாக இருந்தன. அவை அரேபிக், உருது மற்றும் வங்காள மொழிகளில் இருந்தன. இவ்வாறு மதரஸாக்கள் ஜிஹாதி காரியங்களுக்கு உபயோகப் படுத்த எப்படி முஸ்லிம்கள் ஒப்புக் கொள்கிறார்கள், அனுமதிக்கிறார்கள்?

© வேதபிரகாஷ்

25-10-2014

பர்கா பேக்டரி - கடை

பர்கா பேக்டரி – கடை

[1] தினத்தந்தி, தீவிவாதிகளாக மாறும் பெண்கள், 05-10-2014

[2] The team has also recovered a phone book, believed to belong to Yousuf Sheikh, the terror module’s mentor. It has the contact numbers of women who took training in the Simulia madrassa, say sources. As per reports, the module was busy recruiting women through systematic brain wash. These women were trained in such a way that they were trained in such a way that they were ready to sacrifice their families when it came to jihad.

http://news.oneindia.in/india/burdwan-blast-nia-secret-tunnel-madrassa-tmc-jamaat-link-1541340.html

[3] In yet another shocking revelation, NIA discovered secret tunnels under mud huts which were previously Madarsas (Islamic Schools) in Burdwan. To everyone’s surprise, the secret passages ended up in nearby ponds.

[4]http://www.nagalandpost.com/ChannelNews/National/NationalNews.aspx?news=TkVXUzEwMDA2ODc0Mg%3D%3D

அப்துல் கரீம் துண்டா என்கின்ற அப்துல் குட்டூஸ் மற்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தளபதி கைது – வெளிவரும் விவகாரங்கள்!

ஓகஸ்ட் 18, 2013

அப்துல் கரீம் துண்டா என்கின்ற அப்துல் குட்டூஸ் மற்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தளபதி கைது – வெளிவரும் விவகாரங்கள்!

Abdul Karim Tunda - hand amputated

கடினமானஉழைப்பிற்குப்பிறகுதுண்டாவைப்பிடித்தது: இந்திய புலன்விசாரணைக் குழுக்கள் மிகவும் கஷ்டப்பட்டுத்தான், இவனைப் பிடித்திருக்கிறார்கள்[1]. இன்டர்போலில் விவரங்களைக் கொடுத்து, தொடர்ந்து எல்லை போக்குவரத்து, நேபாளத்தில் செயல்படும் தீவிரவாதக் குழுக்களைக் கண்காணிப்பது, ஆப்கானிய தீவிரவாதிகளின் ஊடுருவல் முதலியவற்றை பின்பற்றித்தான் இவனைப் பிடிக்க முடிந்தது. பாபரி மஸ்ஜித் பிரச்சினையை வைத்துக் கொண்டு ஜிஹாதி தீவிரவாதத்தை, இந்தியாவிற்கு எதிராக, ஒரு மாற்றுப் போராக உருவாக்கியது, இந்த துண்டா, தாவூத் இப்ராஹிம் மற்ற பயங்கரவாதிகள் தாம். லஸ்கர்-இ-தொய்பாவின் சித்தாந்தியாக செயல்பட்டவன் பிடிபட்டதில் பல உண்மைகள் தெரியவருகின்றன[2]. இந்தியாவின் மீது இப்படி எல்லா வழிகளிலும் ஜிஹாதி செயல்பட்டு வரும் போது, செக்யூலரிஸ அரசியல்வாதிகள் தமக்கேற்ற வழிகளில் செயல்படுவதால், எந்த சாதகமான முடிவுகளையும், இந்தியாவின் நலன், பாதுகாப்பு, அமைதி முதலியவற்றிற்காக வேண்டிய நன்மைகளும் கிடைக்காமல் போய்விடும். அத்தகைய நிலையைத்தான் சோனியா காங்கிரஸ், முல்லாயம் சிங் யாதவ், கம்யூனிஸ கட்சிகள் செய்து வருகின்றன.

Tunda brother - he should be punished

அப்துல்கரீம்துண்டாவின்குடும்பத்தாரின்நிலை: அப்துல் மாலிக் என்ற அவனுடைய சகோதரர், அவன் பிடிபட்டது பற்றி கூறும் போது, “அவன் மரவேலை செய்து கொண்டிருந்தான் என்றுதான் எனக்குத் தெரியும். 1991க்குப் பிறகு அவனைப் பார்க்கவில்லை. அவனை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. ஒருவேளை பார்த்தால், செய்துள்ள இக்காரியங்களால்நீ செய்த சாதித்தாய்?”, என்று கேட்பேன்[3]. அவனுடைய மைத்துனி தஹிரா கூறும் போது, “அவனுக்குரிய தண்டனை கிடைக்கவேண்டும். அவனால்தான் எங்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டன. எப்பொழுதெல்லாம் குண்டு வெடித்ததோ அப்பொழுதெல்லாம் போலீஸார் எங்களிடம் வந்து விசாரிப்பார்கள்”,  என்றார்[4]. தொடர்ந்து, “துண்டாவின் இரு மனைவிகள்ஜரினா மற்றும் மும்தாஜ் மற்றும் ஆறு குழந்தைகள் 1993ல் ஒரு இரவில் எங்கோ சென்றுவிட்டனர். துண்டா மறைந்த பிறகு அதற்குப் பிறகு அவர்கள் எங்குசென்றனர் என்று தெரியவில்லை”, என்றும் சொன்னார்[5]. போலீஸார், துண்டாவிடம் அவனுடைய குடும்பத்தைப் பற்றி கேட்டபோது, தானும் தன்னுடைய குடும்பத்தை சந்திக்க விரும்பவில்லை என்றான்[6]. ஒருவன் தீவிரவாதியாக மாறும் போது, குடும்பம் எப்படி கஷ்டப்படுகிறது என்றும் தெரிகிறது.

Dawood-with-Chota-shakeel

தாவூத்இப்ராஹிமைப்பற்றிபத்துநாட்களில்செய்திகள்வந்துக்கொண்டிருக்கின்றன: பத்து நாட்களுக்கு முன்னால் தான், ஷார்யார் கான் என்ற பாகிஸ்தானின் சிறப்பு தூதர் “தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இருந்தான். ஆனால், அவன் பாகிஸ்தானிலிருந்து விரட்டப்பட்டான். அப்படி அவன் இருந்தால், பிடிக்கப்பட்டு கைது செய்யப்படவேண்ட்டும். அவன் அமீரகத்தில் [United Arab Emirates] இருக்கக்கூடும்”, என்றார்[7]. வளைகுடா நாடுகள் ஜிஹாதிகளுக்கு சொர்க்க பூமி போல உள்ளதும் தெரிய வருகிறது. துபாயில் எப்படி யார் வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம் என்றால், சவுதியில், வேண்டிய உதவி, பயிற்சி முதலியவற்றைப் பெறலாம் என்றுள்ளது. ஹாவிஸ் சையது இங்கு வந்து படித்துச் சென்றதை கவனிக்க வேண்டும். துண்டாவின் நெருங்கிய நண்பர்தான் ஹாவிஸ் சையது. அதற்கு முன்னால் 14-08-2013 அன்று லண்டனில் தாவூதின் வலதுகை போன்றிருந்து வேலை செய்து வந்த இக்பால் மிர்சி (63) என்பவன் ஹார்ட்ட் அட்டாக்கினால் இறந்து போனான் என்ற செய்தி வந்தது[8]. 1994ல் இந்தியா இன்டர்போல் மூலம் சிவப்பு அறிக்கை கொடுத்திருந்தது. ஸ்காட்லான்ட் யார்ட் போலீஸாரால் 1995ல் பிடிக்கப்பட்டாலும், இந்தியாவிற்கு அனுப்ப உள்ளூர் மாஜிஸ்ட்ரேட் மறுத்து விட்டார்[9]. அதுமட்டுமல்லது இங்கிலாந்தில் தங்கிக் கொள்ள அனுமதியும் கொடுக்கப்பட்டது. இப்பொழுது ஹாவிஸ் சையதிடம் தாவூத் இப்ராஹிமை தான்தான் அறிமுகப்படுத்தினேன் என்று துண்டா ஒப்புக் கொண்டுள்ளான்[10]. அதுமட்டுமல்லாது ஐ.எஸ்.ஐ, சீக்கிய தீவிரவாத இயக்கமான பப்பர் கல்ஸாவிற்கும் உதவி செய்து கொண்டிருந்தது என்பதையும் உறுதி செய்தான்[11] என்ற விவரங்கள் வருகின்றன. மொத்தமாக, பாகிஸ்தான் எப்படி இந்திய விரோதத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது என்று தெரிகிறது.

Kaskar-group-Dawood

டெல்லிகாமன்வெல்த்போட்டியில்குண்டுவைக்கதிட்டமிட்டான்: துண்டாவிடம்நடந்தவிசாரணையில்தகவல்:[12] டெல்லியில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் வைத்து அப்துல் கரீம் துண்டாவிடம் சிறப்புப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று நடந்த முதல் நாள் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. லஷ்கர்–இ– தொய்பாவின் முக்கிய தலைவர்கள் எங்கெங்கு இருக்கிறார்கள்? இந்தியாவில் எங்கெங்கு ரகசிய ஆதரவாளர்கள் உள்ளனர்? எங்கெல்லாம் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது? அவை எப்படி நடத்தப்பட்டன என்பன போன்று பல கேள்விகள் அவனிடம் கேட்கப்பட்டன. அதற்கு பதில் அளித்த அப்துல் கரீம் துண்டா 2010-ம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியின்போது தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி மிகப்பெரும் நாசவேலைக்கு திட்டமிட்டதாக கூறினான். ஆனால் குண்டு வெடிப்பை நடத்த இருந்த 2 பேர் போலீசாரிடம் பிடிபட்டுவிட்டதால் தனது தாக்குதல் திட்டம் தோல்வி அடைந்துவிட்டதாக கூறினான். 1993–ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் தான் முக்கிய பங்கு வகித்ததாக தெரிவித்தான். 1980ம் ஆண்டுகளில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மூலம் வெடிகுண்டுகள் தயாரிப்பது குறித்து இவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. இதன்பின்னர் வங்க தேசம் சென்ற இவர் லஷ்கர் இயக்கத்தின்  தலைவர் ஷகிவுர் லக்வியின்  நேரடி மேற்பார்வையில் செயல்பட்டு வந்ததாக தெரியவந்துள்ளது[13]. இதைத்தொடர்ந்து இந்தியாவில் தீவிரவாதிகள் அடுத்து எத்தகைய தாக்குதல் திட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று போலீசார் துண்டாவிடம் விசாரித்து வருகிறார்கள்.

Indian flag burned

பாகிஸ்தானின்ஜிஹாதிப்போரைஇந்தியாஎதிர்கொள்ளவேண்டும்: இந்தியாவில் பிறந்தும், முஸ்லிம் அடிப்படைவாதம், மதவாதம் என்ற சித்தாந்திங்களால், முஸ்லிம்கள் எளிதில் ஜிஹாதி வெறியினால், தீவிரவாதத்தில் இறங்குகிறார்கள் என்று தெரிகிறது. பாகிஸ்தானின் ஊக்குவிக்கும் போக்கையும் கவனிக்க வேண்டியுள்ளது. பாகிஸ்தானிய ஆட்சியாளர்கள், ஒரு பக்கம் நட்பு, பேச்சு வார்த்தை என்றெல்லாம் பேசிக் கொண்டு, மறுபக்கத்தில் தொடர்ந்து, தீவிரவாததை இந்தியாவின் மீது ஜிஹாதாக – புனிதப் போராக நடத்தி வருகிறது. அதாவது, மதரீதியில் போரை நிகழ்த்தி வருகிறது. 1965, 1972, 2003 ஆண்டுகளுக்குப் பிறகு, நேரிடையான போர்களைத் தவிர்த்து, இத்தகைய தீவிரவாதிகளின் தாக்குதல்களை போராக நடத்தி வருகின்றது. அதே நேரத்தில், எல்லைகளிலும், “தனது நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை – நாடற்ற மக்களின் வேலை” என்று சாக்கு சொல்லிக் கொண்டு, எல்லைமீறல் தீவிரவாதத்திலும் ஈடுபட்டுள்ளது. எப்பொழுதெல்லாம், பேச்சு வார்த்தைகள் நடக்கின்றனவோ அல்லது நடக்கப் போகின்றதோ, அந்நேரத்தில் இப்படி, அழுத்தத்தை ஏற்பட எல்லைகளில் சுடுதல், ஊடுருவல், எல்லைகளில் வாழும் மக்களைத் தாகுதல், பீதி கிளப்புதல் முதலிய வேலைகளில் ஈடுபடுவதையும் காணலாம். ஆனால், இந்திய ஆட்சியாளர்கள் தொடைநடுங்கிப் பேர்வழிகளாக இருப்பதனால், பாகிஸ்தான் அத்தகைய செக்யூலரிஸ நிலையை சாதகாமாக ஆக்கிக் கொள்கிறது.

Susanna-geelaani-2010

Susanna-geelaani-2010

மனிதஉரிமைஆட்கள்இந்தஉண்மையினைஅறிந்துசெயல்படவேண்டும்: அருந்ததி ராய், தாரிக் அலி, ஷப்னம் ஹஸ்மி, போன்றோர் மனித உரிமைகள் என்ற சாக்கை வைத்துக் கொண்டு, பிரிவினைவாதிகளுடன் ஜோடி சேர்ந்து கொண்டு உபன்யாசம் செய்து வந்துள்ளனர். ஆனால், இத்தகைய நேரத்தில் அவர்கள் எல்லோரும் காணாமல் போய்விடுவர். நட்சத்திர ஹோட்டல்கள், பாதுகாப்பாக உள்ள ஏசி அரங்குகள் முதலியவற்றில் தான் இவர்களது சொற்பொழிவுகள் இருக்கும். பொது நிகழ்சிகளில் அவ்வாறு பேச மாட்டார்கள். இருப்பினும் “தி ஹிந்து” போன்ற பிரபல நாளிதழ் முதல் “பாம்பேட் கம்யூனலிஸம்” போன்ற வடித்தெடுத்த மதவெறி பிரச்சார ஏடுகள் வரை இவற்றைப் பற்றி விவரங்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கும். ஆனால், இவ்வாறான தீவிரவாதிகள் பிடிபடும் போது, குண்டுகள் வெடிக்கும் போது காணாமல் போய்விடுவர். செய்திகள் வாசிக்கப்படும் அல்லது அச்சடிக்கப் படும், தலையங்கத்தில், நடுபக்கத்தில் அவர்களை எதிர்த்து எதுவும் எழுதப்பட மாட்டாது. மனித உரிமை ஆட்கள் தங்களது போலித்தனத்தை மாற்றிக் கொண்டு, உருப்படியான பேச்சுகளை பேச வேண்டும்.

Arundhati-Roy-SAR.Jilani-2010

Arundhati-Roy-SAR.Jilani-2010

செக்யூலரிஸசித்தாந்தத்தைவைத்துக்கொண்டுபாகிஸ்தானைஎதிர்கொள்ளமுடியாது: இந்தியாவின் மீது இப்படி எல்லா வழிகளிலும் ஜிஹாதிகள் செயல்பட்டு வரும் போது, செக்யூலரிஸ அரசியல்வாதிகள் தமக்கேற்ற தாஜா செய்யும் வழிகளில் செயல்படுவதால், எந்த சாதகமான முடிவுகளையும், இந்தியாவின் நலன், பாதுகாப்பு, அமைதி முதலியவற்றிற்காக வேண்டிய நன்மைகளும் கிடைக்காமல் போகின்றன. அத்தகைய நிலையைத்தான் சோனியா காங்கிரஸ், முல்லாயம் சிங் யாதவ், கம்யூனிஸ கட்சிகள் செய்து வருகின்றன. இங்கு இந்திய அரசியல்வாதிகள், செக்யூலரிஸ போர்வையில் இந்த தீவிவாதிகளுக்கு, தங்களது கொள்கைகளினால், மெத்தனமான போக்குகளால்,  மறைமுக ஆதரவினால் உதவி வருகிறார்கள். இதனால் தான். “உள்ளூர் தீவிரவாதம்” என்பதனை கண்டு கொள்ளாமல், முஸ்லிம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர், ஓட்டு கிடைக்காமல் போகுமே என்று கணக்கு போடுகின்றனர்.

இந்தியத்தனமா-இஸ்லாமியத்தனமா-ஜிஹாதித்தனமா

இந்தியத்தனமா-இஸ்லாமியத்தனமா-ஜிஹாதித்தனமா

இந்தியமுஸ்லிம்கள்தீவிரவாதத்தைக்கண்டறிந்துஅதனைஇஸ்லாத்திலிருந்துபிரித்துப்பார்க்கவேண்டும்: இந்திய முஸ்லிம்கள் இப்பொழுதுவது, இத்தகைய இந்திய விரோத செயல்களை அவ்வாறு அறிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம், முஸ்லிம்கள் என்ற குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. பாகிஸ்தானிலேயே, இஸ்லாம் பெயரில் முஸ்லிம்கள் அடித்துக் கொள்கின்றனர், குண்டுவெடிப்பு நடத்துகின்றனர், மசூதிகளில் கூட முஸ்லிம்களை கொலை செய்கின்றனர் என்பதனையெல்லாம் அறிந்து புரிந்து கொள்ளும். இஸ்லாம் தான் தீர்வு என்ற மூடநம்பிக்கையைக் கொண்டு இருக்கக் கூடாது.

© வேதபிரகாஷ்

18-08-2013


[3] On the possibility of him now meeting Tunda after his arrest, Mr. Malik said: “The fact that he is in police custody rules out a meeting anytime soon and I myself am not very keen on meeting him. But if we ever meet, I will ask him what he achieved by doing all this. His family is not with him and we don’t want to have any relations with him.”

http://www.thehindu.com/news/national/i-never-knew-what-he-was-up-to/article5033051.ece?ref=relatedNews

[7] For the first time, Pakistan has admitted to the presence of one of India’s most wanted terrorists Dawood Ibrahim but said he has been “chased out” and could be in the United Arab Emirates. “Dawood [Ibrahim] was in Pakistan but I believe he was chased out of Pakistan. If he is in Pakistan, he should be hounded and arrested. We cannot allow such gangsters to operate from the country,” said Shahryar Khan, Pakistan Prime Minister Nawaz Sharif’s special envoy for improving relations with India.

http://www.thehindu.com/news/national/dawood-chased-out-of-pakistan-shahryar-khan/article5008042.ece?ref=relatedNews

[9] Underworld don Dawood Ibrahim’s close aide Iqbal Mirchi, an accused in the 1993 Mumbai serial blasts case, died of a heart attack in London on Wednesday night. Mirchi, 63, the right-hand man of India’s topmost terrorist, was also facing drug smuggling charges in India. He had been living in a large six-bedroom home in an exclusive part of Hornchurch, a town in Essex, north-east of London. Ranked among the world’s top 50 drug barons, Muhammed Iqbal Memon or Iqbal Mirchi had been issued an Interpol Red Corner Notice in 1994 on Central Bureau of Investigation’s request. In April 1995, officers from Scotland Yard had raided Mirchi’s home and arrested him on drugs and terrorism charges in connection with the blasts in Mumbai. However, an extradition request by India was turned down by magistrates here. Scotland Yard’s investigation of Mirchi, which ended in 1999, found no evidence of criminal activity and in 2001 the UK Home Office granted him indefinite leave to remain in the U.K. India’s most-wanted criminal Dawood Ibrahim is on FBI’s list of top terrorists in the world.

[10] Abdul Karim Tunda alias Abdul Quddooss has confirmed that he was in touch with the Pakistani terror links and also said that he was the one who introduced Dawood Ibrahim to the Lashkar founder Hafiz Saeed.

http://news.oneindia.in/2013/08/18/syed-karim-tunda-confessed-that-he-introduced-dawood-to-hafiz-1285870.html

[11] He also revealed that LeT (Lashkar-e-Taiba) and the Pakistan’s premeire intelligence service ISI aided Khalistani militant organization “Babbar Khalsa” also known as Babbar Khalsa International (BKI). Read more at: http://news.oneindia.in/2013/08/18/syed-karim-tunda-confessed-that-he-introduced-dawood-to-hafiz-1285870.html