மறுபடியும் பாகிஸ்தானில் இன்னொரு ஷியா வழிபாட்டு ஸ்தலத்தின் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் – 52 பேர் சாவு, 150 படுகாயம், ஐசிஸ் பொறுப்பேற்றுள்ளது!
பல்லாண்டுகளாக ஷியாக்களின் மீது சுன்னிகள் நடத்தி வரும் தாக்குதல்கள்: பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்களின் மீதான தாக்குதல் பல்லாண்டுகளாக நடந்து வருகின்றன. ஷியாக்களின் மக்கட்தொகை 10-25% சதவீதங்களில் உள்ளது என்று பாகிஸ்தான் கூறுக் கொள்கிறது. 2015 மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி சுமார் 40 மில்லியன் / நான்கு கோடி ஷியாக்கள் உள்ளதாக சொல்லிக் கொள்கிறது. ஆனால், அவர்கள் இரண்டாந்தர குடிமக்களைப் போலத்தான் நடத்தப் படுகிறார்கள். சுன்னி முஸ்லிம்கள் அவர்களை காபிர்கள் என்றே பிரகடனப் படுத்தி ஜிஹாத் என்ற “புனித போரை” அவர்கள் மீது தொடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும். ஷியாக்களின் புனித வழிபாட்டு தினங்களில் அவர்களின் வழிபாட்டு ஸ்தலங்களில் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். முதியவர், பெண்கள், குழந்தைகள் என்று கூடியிருந்தாலும், இரக்கமில்லாமல், குண்டுவெடிப்புகள் மூலம் கொன்று வருகின்றனர்.
உலகம் முழுவதிலும் ஷியாக்களின் தாக்குதல் அதிகமாகி வருகின்றது: தலிபான்கள், முஜாஹித்தீன்கள், ஐசிஸ் தீவிரவாதிகள் என்று பல குழுக்கள் வளர்ந்து விட்ட நிலையில், அவர்கள் எல்லோருமே சுன்னிகளாக இருக்கும் பட்சத்தில், ஷியாக்களின் மீதான தாக்குதல்கள் மிகவும் கோரமாக, குரூரமாக, மிருகத்தன்மையுடன் நடத்தப் பட்டு வருகின்றன. இஸ்லாத்தில் இந்த சுன்னி-ஷியா பிளவு சண்டைகள் மொஹம்மது காலத்திலேயே ஆரம்பித்து, தொடர்ந்து நடந்து வருகிறது. முந்தைய இரான்–இராக் சண்டையும் அதனால் தான் நடந்தது. இரானுக்கும், சவுதி அரேபியாவுக்கும் மெக்கா-மெதினா நிர்வகிப்பு விவகாரங்களிலும், இப்பிரச்சினை தலைத் தூக்குவதுண்டு. அதனால், சவுதி அரேபியா இரானைக் கட்டுப் படுத்தி வைக்க எல்லா முறைகளையும் கையாண்டு வருகின்றது.
சனிக்கிழமை 12-11-2016 அன்று மாலை நடத்தப் பட்ட குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை என்றாலே மசுதிகளில் அல்லது மற்ற இலக்குகளின் மீது குண்டுவெடிக்கும் தாக்குதல் நடக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. பலோசிஸ்தான் குஜ்தார் மாகாணத்தில் லாஸ்பெல்லாவில் பிரபல தர்கா ஷா நூரனி சூபி வழிபாட்டுத் தலம் உள்ளது[1]. கராச்சியிலிருந்து 150 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு ஷியாக்கள் அதிகமாக வாழ்கின்றனர் என்பது தெரிந்த விசயமே. பிரதி வெள்ளிக்கிழமை தமால் என்ற சூபி சடங்கை பார்ப்பதற்கு இங்கு ஷியாக்கள் அதிகக் கணக்கில் கூடுவதுண்டு[2]. தமால் என்பது சூபி-நடனமாகும். சூபி பக்தர்கள் சுழன்று கொண்டே ஆடிப் பாடுவர். ஏ. ஆர். ரஹ்மான் சூபி மெட்டுகள் பலவற்றை சினிமா பாடல்களில் உபயோகப்படுத்தியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், ஷியாக்கள் தாக்குவதை அவர் கண்டிப்பதாகத் தெரியவில்லை. இங்கு சனிக்கிழமை 12-11-2016 அன்று மாலை சுமார் 500 பேர் தரிசனம் செய்வதற்காக திரண்டிருந்தனர்[3]. அப்போது கோவில் வளாகத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது[4]. இதில், ஏராளமான பக்தர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
இரவின் இருள், மருத்துவமனை அருகில் இல்லாதது இறப்புகள் அதிகமாக காரணமாகின்றன: சம்பவ இடத்திற்கு போலீசாரும், மீட்புக்குழுவினரும் ஆம்புலன்சுகளுடன் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர். பலர் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் உயிருக்குப் போராடினர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்[5]. அருகில் மருத்துவமனைகள் இல்லாத காரணத்தால் காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஷியாக்கள் மாகாணம் என்பதால், பாகிஸ்தான் அரசு பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறதா என்ற சந்தேகமும் எழுகின்றது. இருள் சூழ்ந்த காரணத்தால் மீட்புப் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது[6]. இந்த குண்டு வெடிப்பிற்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது[7]. ஐ.எஸ் உலகம் முழுவது உள்ள ஷியாக்களை ஒழிப்பதற்கு தயாராக உள்ளது[8]. சிரியாவில் ஷியாக்களைக் கொன்று குவித்து வருகின்றது[9].
52 பேர் சாவு, 150ற்கும் மேற்பட்டவர் படுகாயம்: 12-11-2016 சனிக்கிழமை அன்று 14 வயது சிறுவன், மசூதியில் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் குழந்தைகள் உட்பட சுமார் 43 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. நூறுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். நேரமாக-நேரமாக இந்த எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது. தாக்குதல் நடந்தபோது சுமார் 600 பக்தர்கள் அங்கே இருந்தார்களாம். பாகிஸ்தான் பலுசிஸ்தான் பகுதியில் குண்டு வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது[10]. வழக்கம் போல பாக்., அதிபர் நவாஸ் ஷெரிஃப், இம்ரான் கான் போன்றோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்[11]. ஆனால், இதனால், ஷியாக்கள் மீதான தாக்குதல்கள் குறையப் போவதில்லை.
இந்தியாவின் மீது, தமிழகத்தின் மீதான தாக்கம், விளைவு: இந்தியாவில் ஷியாக்கள், சுன்னிகளால் அடக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்றே தெரிகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில், “ஷிர்க்” என்ற போர்வையில், சுன்னிகள், ஷியாக்களை மிரட்டி வைத்துள்ளனர் எனலாம். ஷியாக்கள் என்று தங்களை அடையாளப் படுத்திக் கொண்டு, யாரும் தங்களது உரிமைகளைக் கேட்பதில்லை. ஆஜ்மீர், நாகூர் போன்ற தர்காக்களில் மொட்டைப் போட்டுக் கொண்டு சென்றலும், அவர்களும், இத்தீவிரவாத-ஜிஹாதி வகையறாக்களைக் கண்டிப்பதில்லை. ஏ. ஆர். ரஹ்மான் போன்றோரும், சுப்பித்துவம், சூபி இசை என்றெல்லாம் பேசி, தனது வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டாலும், ஷியாக்கள் தாக்கப்படும் போது, கொல்லப்படும் போது, கண்டு கொள்வதில்லை. கிலாபத் இயக்கத்தை [1919-1922] ஆதரித்ததின் மூலம் காந்தி இந்திய முஸ்லிம்களைப் பிரித்தார். இன்றும் கிலாபத்தை மறுபடியும் நிறுவியதாக கூறிக்கொள்ளும் ஐசிஸ் ஷியாக்களை வேட்டையாடி வருகின்றது. கிலாபத்தை காந்தியும், ஐசிஸும் ஆதரித்தது-ஆதரிப்பது வினோதமே, ஆனால், உண்மை.
© வேதபிரகாஷ்
13-11-2016
[1] தினத்தந்தி, பாகிஸ்தானில் பயங்கரம்:பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டு வெடிப்பு 30 பேர் பலி, பதிவு செய்த நாள்: சனி, நவம்பர் 12,2016, 7:57 PM IST; மாற்றம் செய்த நாள்: சனி, நவம்பர் 12,2016, 7:57 PM IST.
[2] The Dawn, Tragic scenes at Shah Noorani shrine after bombing, 13th November 2016 | DAWN.COM
http://www.dawn.com/news/1295998/tragic-scenes-at-shah-noorani-shrine-after-bombing
[3] http://www.dailythanthi.com/News/World/2016/11/12195714/Several-feared-dead-in-a-blast-near-Shah-Nooranis.vpf
[4] மாலைமலர், பாகிஸ்தான் வழிபாட்டு தலத்தில் குண்டுவெடிப்பு: 30 பேர் பலி, பதிவு: நவம்பர் 12, 2016 19:58.
[5] http://www.maalaimalar.com/News/World/2016/11/12195838/1050492/At-least-30-killed-in-huge-blast-in-Lasbellas-Shah.vpf
[6] தினமலர், பலுசிஸ்தானில் குண்டுவெடிப்பு: 43 பேர் பலி; பலர் படுகாயம், பதிவு செய்த நாள்: நவம்பர்.12, 2016. 20.00; மாற்றம் செய்த நாள். நவம்பர்.12, 2016.00.34.
[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1647324
[8] Express (UK), ISIS bomb at Muslim shrine kills at least 25 people in huge explosion in Pakistan, By KATIE MANSFIELD, 14:17, Sat, Nov 12, 2016 | UPDATED: 20:12, Sat, Nov 12, 2016
[9] http://www.express.co.uk/news/world/731590/explosion-pakistan-shah-noorani-shrine-death-toll-injured
[10] விகடன், பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு – 43 பேர் பலி, Posted Date : 23:16 (12/11/2016); Last updated : 23:15 (12/11/2016).
[11] http://www.vikatan.com/news/world/72258-huge-bomb-blast-in-dargah-shah-noorani-shrine-at-pakistan—43-feared-dead.art
அண்மைய பின்னூட்டங்கள்