Archive for the ‘இஸ்லாமும் இந்தியாவும்’ category

தி கேரளா ஸ்டோரி – திரைப் படத்திற்கு எதிர்ப்பு-தடை, உச்சநீதி மன்றத்தில் வழக்கு, மாநிலங்களின் பதில், 100 கோடிகளைத் தாண்டிய வசூல்! (4)

மே 17, 2023

தி கேரளா ஸ்டோரி‘ – திரைப்படத்திற்கு எதிர்ப்புதடை, உச்சநீதிமன்றத்தில் வழக்கு, மாநிலங்களின் பதில், 100 கோடிகளைத் தாண்டிய வசூல்! (4)

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு-தடை: விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘தி கேரளா ஸ்டோரி’. கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது[1]. இந்த எண்ணிக்கை உயர்வு படுத்தி காட்டப் பட்டுள்ளது என்று எதிர்த்ததால், மாற்றப் பட்டது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி திரையுலகில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியது[2], என்கிறது ஊடகங்கள்.  உண்மையில், முஸ்லிம் அமைப்பினர் எதிர்த்து போராட்டம் நடத்தினர். இப்படம் குறித்து வாதம் விவாதங்கள் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் நடந்து வந்தன. அதில் எவ்வாறு இந்திய பெண்கள் ஏமாற்றப் பட்டு, மதம் மாற்றப் பட்டு, ஐசிஸ் தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதனை காட்டுவதால், முஸ்லிம் அமைப்பினர் கடுமையாக எதிர்த்தனர்.

மேற்கு வங்காளம் தடைஉச்சநீதிமன்றத்தில் வழக்கு: முஸ்லிம் ஓட்டுகளை நம்பி அரசியல் செய்யும் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு இருந்தது. பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கருத்தை தெரியப்படுத்தி வந்தனர். இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் வன்முறை ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரையிடலை உடனடியாக நிறுத்த முதல்வா் மம்தா பானா்ஜி கடந்த மே 8-ஆம் தேதி உத்தரவிட்டார். இதனால், தமக்கு பாதிப்பு ஏற்படும் என்று உணர்ந்த, இத்திரைப்பட தயாரிப்பாளா்கள் வழக்குத் தொடர்ந்தனர். மேற்கு வங்கத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரையிடலுக்கு அரசு தடை விதித்த நிலையில், தமிழகத்தில் அதிகாரபூா்வமற்ற தடை உள்ளதாக குற்றம்சாட்டி, இத்திரைப்பட தயாரிப்பாளா்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றம் இரு மாநில அரசும் விளக்கம் அளிக்குமாறு கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியது.

பத்து நாட்களில் 100 கோடிகளைத் தாண்டிய வசூல்: எதிர்ப்புகள் எதுவும் படத்தின் வசூலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் படம் வெளியான நாளிலிருந்து இன்று வரை வசூல் ஏறுமுகமாக தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த பத்து நாட்களில் கேரளா ஸ்டோரி வசூலித்த மொத்த கலெக்சன் பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அதாவது 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது வரை 112 கோடிகளை வசூலித்திருக்கிறது. அப்படி பார்த்தால் இது பட்ஜெட்டை தாண்டிய பல மடங்கு வசூல் தான். மேலும் பாலிவுட் திரையுலகில் இந்த வருடம் அதிகபட்சமாக வசூல் பெற்ற படங்களில் இப்படமும் இணைந்து இருக்கிறது. அதாவது 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது வரை 112 கோடிகளை வசூலித்திருக்கிறது. அப்படி பார்த்தால் இது பட்ஜெட்டை தாண்டிய பல மடங்கு வசூல் தான். மேலும் பாலிவுட் திரையுலகில் இந்த வருடம் அதிகபட்சமாக வசூல் பெற்ற படங்களில் இப்படமும் இணைந்து இருக்கிறது[3].

குறைந்த பட்ஜெட்டில் எதிர்த்தாலும் அதிக வசூல் செய்துள்ல படமாக இருக்கிறது: மேலும் அடுத்தடுத்து பல திரைப்படங்களின் தோல்வி ஹிந்தி திரையுலகை கொஞ்சம் அசைத்து தான் பார்த்தது. அதை தூக்கி நிறுத்தும் படியாக இருந்தது ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த பதான் திரைப்படம். அந்த வகையில் தி கேரளா ஸ்டோரி நெகட்டிவ் விமர்சனங்களை அடித்து நொறுக்கி வசூலில் மாஸ் காட்டி இருக்கிறது[4]. வெளியான 9 நாட்களில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது[5]. 13-05-2023 அன்று ஒரே நாளில் மட்டும் இப்படம் ரூ.19 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது[6].  வடமாநிலங்களில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு 37க்கும் மேற்பட்ட நாடுகளில் மே 12ஆம் தேதி இப்படம் வெளியானது. இந்த வசூலுக்கு முதல் காரணமே படத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்புத்தான் என்கிறார்கள்[7]. படத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்க ஆர்வம் ஏற்பட்டு பலரும் பார்த்ததே வசூலுக்கு வழி வகுத்தது[8]. இல்லாவிட்டால் படம் வந்ததே தெரியாமல் போயிருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இப்படியும் சில ஊடகங்களின் வெளிப்பாடு இருக்கிறது.

தமிழகத்தின் பதில்: தமிழ்நாட்டிலும் முதல் நாள் 05-05-2023 வெளியிட்டு மறுநாள் தியேட்டகளில் படம் ஓடவில்லை. ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள நேரடி, மறைமுக தடையை எதிர்த்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, தடை விதித்தது குறித்து மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டார். இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது[9]. அதில், இந்த படத்திற்கு தடை விதிக்கவில்லை என்றும் திரையரங்கிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது[10]. படத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது சென்னை மற்றும் கோவையில் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது[11]. ஆனால், திரைப்படம் எதிர்கொண்ட விமர்சனம் அறிமுகமில்லாதவர்களின் நடிப்பு போதுமான வரவேற்பின்மை ஆகியவற்றால் திரையரங்க உரிமையாளர்களே கடந்த மே 7-ஆம் தேதி முதல் திரையிடுவதை நிறுத்திக் கொண்டதாக தோன்றுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது[12]. பார்வையாளர்கள் குறைவாக இருந்ததால் படத்தை திரையிடுவதை திரையரங்க உரிமையாளர்களே நிறுத்திவிட்டனர்[13]. பிறகு, மற்ற இடங்களில் ஓடி எப்படி ரூ.100 கோடி வசூல் கிடைத்தது என்பது கவனிக்கத் தக்கது. திரையரங்குகளுக்கு பாதுகாப்பு மட்டுமே தர முடியுமே தவிர, பார்வையாளர்களை அதிகரிக்க அரசால் எதுவும் செய்ய முடியாது[14]. அதாவது பார்வையாளர்களைக் கூட்டி வரமுடியாது என்றெல்லாம் விளக்கம் கொடுத்துள்ளதும் விசித்திரமாக உள்ளது. கலாட்டா செய்வார்கள், அடிப்பார்கள், கலவரங்கள் நடக்கும், குண்டுகள் கூட வெடிக்கும் போன்ற அச்சம் தாம் பொது மக்களை தியேட்டர்களுக்குச் செல்ல விடமால் தடுத்தது எனலாம்.

19 திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு 25 டிஎஸ்பிக்கள் தலைமையில் 965 காவலர்கள் பாதுகாப்பு: 19 திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு 25 டிஎஸ்பிக்கள் தலைமையில் 965 காவலர்கள் பாதுகாப்பு அளித்துள்ளனர்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது[15]. அந்த அளவுக்கு பெரிய போலீஸ் அதிகாரிகள் கொடுக்கும் அளவுக்கு முஸ்லிம்கள் மிரட்டிக் கொண்டிருந்தனர் போலும். மேலும், விளம்பரம் தேடும் நோக்கில் மனுதாரர் மனுதாக்கல் செய்துள்ளதால் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது[16]. அப்படியென்றால், இத்தகைய விளம்பரத்திற்கு கூட்டம் வர வேண்டியிருக்குமே, ஆனால், வரவில்லை. இதிலிருந்து, தியேட்டர் முதலாளிகள், தங்களது தியேட்டர்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று நிறுத்தியுள்ளனர் என்று தெரிகிறது. அத்தகைய போலீஸ் பாதுகாப்பு, விளம்பரம், ரூ 100 கோடி வசூல் என்றால், மறுபடியும் தாராளமாக திரையிட ஆரம்பிக்கலாமே?

© வேதபிரகாஷ்

17-05-2023


[1] மாலைமலர், ‘தி கேரளா ஸ்டோரிதிரைப்படத்துக்கு வரவேற்பு இல்லை.. உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில், By Nagalekshmi 16 மே 2023 12:21 PM.

[2] https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-the-kerala-story-case-update-609713?infinitescroll=1

[3] சினிமா.பேட்டை, 10 நாளில் தி கேரளா ஸ்டோரி செய்த சாதனை.. நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் மிரட்டிய வசூல் ரிப்போர்ட்,  By Anamika, Published on May 14, 2023

[4] https://www.cinemapettai.com/the-collection-record-of-the-kerala-story-in-10-days

[5] தமிழ்.இந்து, ரூ.100 கோடி வசூலைக் கடந்ததுதி கேரளா ஸ்டோரி’ – நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.19 கோடி, செய்திப்பிரிவு, Published : 14 May 2023 03:33 PM, Last Updated : 14 May 2023 03:33 PM.

[6] https://www.hindutamil.in/news/cinema/bollywood/989990-the-kerala-story-enters-rs-100-crore-club.html

[7] மாலைமலர், ரூ.100 கோடி வசூல் செய்ததி கேரளா ஸ்டோரிதிரைப்படம்,By Maalaimalar, 15 மே 2023 2:30 PM

[8] https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-the-kerala-story-collected-rs100-crores-609380

[9] தமிழ்.வெப்.துனியா, நாங்க தடை பண்ணல.. படத்தை யாரும் பாக்கவே இல்ல! – The Kerala Story வழக்கில் தமிழக அரசு பதில்!, Written By Prasanth Karthick, Last Modified, செவ்வாய், 16 மே 2023 (12:15 IST).

[10] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/tamilnadu-govt-said-they-not-ban-kerala-story-in-tamilnadu-123051600041_1.html

[11] தினமலர், தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரவேற்பு இல்லை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில், மாற்றம் செய்த நாள்: மே 16,2023 12:23

[12] தமிழ்.ஒன்.இந்தியா, படம் பார்க்க நாங்களா ஆட்களை கூட்டி வர முடியும்.. தி கேரளா ஸ்டோரி வழக்கில் தமிழக அரசு பதில், By Vigneshkumar Updated: Tuesday, May 16, 2023, 17:38 [IST]

[13] https://tamil.oneindia.com/news/delhi/what-tamilnadu-govt-says-about-the-kerala-story-not-being-screened-in-tamilnadu-512056.html

[14]  https://m.dinamalar.com/detail.php?id=3322142

[15] தினமணி, தி கேரளா ஸ்டோரி திரையிடல் நிறுத்தப்பட்டது ஏன்? தமிழக அரசு பதில், By DIN  |   Published On : 16th May 2023 02:50 PM  |   Last Updated : 16th May 2023 02:50 PM

[16] https://www.dinamani.com/india/2023/may/16/why-the-screening-of-the-kerala-story-has-been-stopped-4006736.html

கேரளாவில் ஓடும் ரயிலுக்கு தீவைத்த ஷாருக் செய்பி – கோத்ரா போன்ற சம்பவம் தவிர்ப்பு- தீவிரவாத தொடர்பு உறுதி – தொடரும் விசாரணை!

ஏப்ரல் 18, 2023

கேரளாவில் ஓடும் ரயிலுக்கு தீ வைத்த  ஷாருக் செய்பி – கோத்ரா போன்ற சம்பவம் தவிர்ப்பு- தீவிரவாத தொடர்பு உறுதி – தொடரும் விசாரணை!

02-04-2023 – கேரள ரயிலுக்கு தீ வைத்தது: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ரயில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஷாருக் செய்பி மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கடந்த 2ம் தேதி 02-04-2023 கண்ணூருக்கு எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது[1]. அப்போது பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது[2]. எலத்தூர் அருகே சென்ற போது மர்மநபர் ஒருவர் டி 1 / D1  பெட்டியில் இருந்த பயணிகள் மீது திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.   இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. தீ பற்றிக் கொண்டதால், பயணியர் அலறி அடித்துக் கொண்டு தப்பிக்க முயன்றனர். இந்த சமயத்தில் உயிருக்கு பயந்து ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்ததில் 2 வயது பெண் குழந்தை உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் ரஹ்மத் (42). அவளது இரண்டு வயது குழந்தை ஜஹ்ரா மற்றும் கே.பி. நௌபிக் (39) என்று தெரிய வந்தது. ஆக மொத்தம், இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். ஒரு குழந்தை மற்றும் பெண் உள்பட 3 பேர் பலியானார்கள். இதற்குள் பிரயாணிகள் அடுத்த பெட்டிகளுக்கு ஓடினர். செயின் இழுக்கப் பட்டு, ரெயிலும் நிறுத்தப் பட்டது. அனால், அதற்குள் தீ வைத்தவன் தப்பித்து ஓடிவிட்டான்.

தீ வைத்தவனின் பேக் கிடைத்தது: இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீசாரும் கேரள அதிரடி படையினரும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் தீயில் எரிந்து பலியானவர்கள் பற்றிய விபரம் தெரிந்தது. மேலும் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றிய நபர், ரெயிலில் இருந்து தப்பி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் ரெயில் பெட்டியில் கிடந்த மர்மநபரின் உடமைகளை போலீசார் கைப்பற்றினர். அதில் ஒரு செல்போன், ஒரு டைரி மற்றும் பெட்ரோலுடன் கூடிய பாட்டில் ஆகியவை கிடைத்தது. அந்த டைரியில் கேரளாவின் முக்கிய நகரங்களான திருவனந்தபுரம், கழக்கூட்டம் மற்றும் குமரி மாவட்டத்தின் குளச்சல், கன்னியாகுமரி ஆகிய ஊர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. போலீசார் கைப்பற்றிய செல்போனில் சிம் கார்டு எதுவும் இல்லை. ஒருவேளை உஷாராக அந்த நபர் எடுத்திருக்கக் கூடும். மேலும் அந்த செல்போனின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை வைத்து அதில் இருந்து யார்-யாருடன் பேசப்பட்டது என்ற தகவலை போலீசார் கண்டுபிடித்தனர்.

தனிப்பட்ட முறையில் பெண் மீது தாக்குதல் நடத்தி கொலை முயற்சியா இல்லை ரயிலில் விபத்து ஏற்படுத்த சதி திட்டமா?: சம்பவ இடத்திற்கு கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர், ADGP கோழிக்கோடு மேயர் உட்பட அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்[3]. தனிப்பட்ட முறையில் பெண் மீது தாக்குதல் நடத்தி கொலை முயற்சியா இல்லை ரயிலில் விபத்து ஏற்படுத்த சதி திட்டமா என பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்[4]. அதாவது, முதலில் அவர்கள் எல்லோரும் முஸ்லிம்கள் என்பதால், இவ்வாறு யூகங்கள் வெளியிடப் பட்டன. தீவிரவாத கோணம் தவிர்க்கப் பட்டது. ஆனால், அவனது பையில் கிடைத்த ஆதாரங்கள் மற்றும் செல்போன் தொடர்புகள் அவ்வகையில் தான் இருந்தன. இது இன்னொரு “கோத்ரா” சம்பவம் போன்று ஆகாமல் தடுக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது. அப்பெட்டியில் முஸ்லிம்கள் இருந்தது ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. ஏனெனில், ரயிலில் கணிசமாக முஸ்லிம்கள் பயணித்து வருவது ஒன்றும் ஆச்சரியமான விசயமும் இல்லை.

உத்தரபிரதேசம் நொய்டாவை சேர்ந்த ஷாருக் செய்பி தான் தீ வைத்த நபர்: இதில் உத்தரபிரதேசம் நொய்டாவை சேர்ந்த ஷாருக் செய்பி என்ற வாலிபர் பற்றிய தகவல் தெரியவந்தது. கேரள முதலமைச்சர் மத்திய ரெயில்வே அமைச்சரை தொடர்பு கொண்டு பேசினார். அவர் எல்லா உதவிகளையும் கொடுக்க உறுதி அளித்தார். இவரது உருவத்தை ரெயிலில் இருந்த பயணிகள் உதவியுடன் போலீசார் புகைப்படமாக வரைந்தனர். அந்த படம் மூலம் ரெயிலில் 3 பேரை எரித்து கொன்ற நபரை பிடிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இதில் அந்த நபர், கோழிக்கோட்டில் இருந்து உத்தரபிரதேசத்தின் நொய்டாவுக்கு தப்பி சென்றது தெரியவந்தது. உடனே கேரள போலீசார், உத்தரபிரதேச போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் காசியாபாத் அதிரடி படையினரின் உதவியுடன் அந்த நபரை பிடிக்க சென்றனர். அவர் ஒரு தச்சு தொழிலாளி என தெரியவந்தது. அவரது பெயரும் ஷாருக் செய்பி என கூறப்பட்டது. இதையடுத்து காசியாபூர் அதிரடி படையினர் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கடந்த 2 மாதங்களாக ஊரை விட்டு எங்கும் சென்றதில்லை என தெரியவந்தது. மேலும் அவரது தந்தை தனது மகன் ஊரை விட்டு எங்குமே சென்றதில்லை எனவும் கூறினார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை விடுவித்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரியில் வைத்து டெல்லியை சேர்ந்த ஷாருக் செய்பி (27) என்பவர் கைது: இந்த சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரியில் வைத்து டெல்லியை சேர்ந்த ஷாருக் செய்பி (27) என்பவர் கைது செய்யப்பட்டார்[5]. ஷாருக் செய்பி கேரள போலீசின் காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்ற போதிலும், மத்திய ஏஜென்சிகளும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன[6]. இதனிடையே சந்தேகப்படும் நபரை கைது செய்ய உதவிய மகாராஷ்டிரா அரசுக்கும், போலீஸாருக்கும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நன்றி தெரிவித்துள்ளார்[7]. தீ வைப்பு சம்பவத்திற்கு தீவிரவாத இயக்கத்திற்கு தொடர்பு இருக்கலாம்? என்ற சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து தான் மத்திய ஏஜென்சிகள் விசாரணையை தொடங்கின[8]. இதில், சிறையில் அடைக்கப்பட்ட ஷாருக் சைஃபியை போலீஸ் காவலில் எடுத்துள்ள போலீசார், கோவை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும், கேரள ரயிலில் தீ வைத்த சம்பவத்திற்கும் தொடர்புள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்[9]. தொடர்ந்து கேரள ரயில் விபத்து சம்பவத்தின் போது ஷாருக் சைஃபியின் நடவடிக்கைகளை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[10]. இந்தநிலையில் ஷாருக் செய்பி மீது கேரள போலீசார் தீவிரவாத செயல்பாடுகள் தடுப்பு சட்டமான உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கு விரைவில் என்ஐஏவுக்கு மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.

தீ வைக்கும் திட்டத்துடன் தான் கேரளா வந்தார்: கேரள சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அஜித்குமார் கூறியதாவது: “செய்பியிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு முக்கிய விவரங்கள் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில் தான் அவர் மீது உபா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தீ வைத்தது தான் தான் என்று வாக்குமூலம் கொடுக்கும் பொழுது ஷாருக் செய்பி ஒப்புக்கொண்டுள்ளார்[11]. அதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளது. பயணியரை தீ வைத்து எரிக்க பயன்படுத்திய பெட்ரோலை, சம்பவத்தன்று அதிகாலை ஷொர்ணுார் ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் இருந்து ஷாரூக் சைபி வாங்கி உள்ளார்[12]. இதற்கு அவருக்கு யாரோ உதவி செய்துள்ளனர். அவர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகிறோம்[13]. இவர் தீவிரவாத எண்ணம் கொண்டவர். ஜாகீர் நாயக், இஸ்ரா அகமது போன்றோரின் வீடியோக்களை அடிக்கடி பார்த்து வந்துள்ளார். ரயிலில் தீ வைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் தான் இவர் கேரள வந்துள்ளார். இவருக்கு வேறு யாருடைய அல்லது அமைப்புகளின் உதவி கிடைத்துள்ளதா என்று விசாரணை நடந்து வருகிறது. இவர் தற்போது தான் முதன் முறையாக கேரளா வந்துள்ளார்…..,”.இவ்வாறு அவர் கூறினார்.

© வேதபிரகாஷ்

18-04-2023


[1] தினகரன், கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகளை கொளுத்திய ஷாருக் செய்பி மீது உபா சட்டம் பாய்ந்தது: என்ஐஏவுக்கு வழக்கு மாற்றப்படுகிறது?, April 18, 2023, 12:36 am.

[2] https://www.dinakaran.com/kerala-running-train-passenger-shahrukh-seybi-fire-upa-act-flown-nia-case-being-transferred/

[3] தமிழ்.நியூஸ்.18, ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைப்பு.. 3 பேர் பலிகேரளாவில் பயங்கரம், NEWS18 TAMIL, First published: April 03, 2023, 08:18 IST, LAST UPDATED : APRIL 03, 2023, 08:20 IST.

[4] https://tamil.news18.com/national/man-sets-co-passenger-on-fire-in-kerala-train-3-dead-8-injured-925276.html

[5] மாலைமலர், கேரளாவில் ஓடும் ரெயிலில் 3 பயணிகள் எரித்து கொலைமுக்கிய குற்றவாளி மராட்டியத்தில் சிக்கினார், By மாலை மலர், 5 ஏப்ரல் 2023 6:18 PM

[6] https://www.maalaimalar.com/news/national/tamil-news-maharashtra-man-arrested-for-passengers-murder-case-in-kerala-592844

[7] தமிழ்.இந்து, கேரள ரயிலில் தீவைத்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது, செய்திப்பிரிவு, Published : 06 Apr 2023 06:54 AM, Last Updated : 06 Apr 2023 06:54 AM

[8] https://www.hindutamil.in/news/india/971699-main-culprit-arrested-in-kerala-train-arson-case.html

[9] தந்திடிவி, ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த சம்பவம்கோவை குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்பா?, By தந்தி டிவி 14 ஏப்ரல் 2023 3:16 PM.

[10] https://www.thanthitv.com/latest-news/incident-of-setting-fire-to-passengers-in-a-moving-train-is-it-related-to-the-coimbatore-blast-179963

[11] தந்திடிவி/தினத்தந்தி, நாட்டையே உலுக்கிய கேரள ரயில்தீ‘ – பின்னணியில் யார்..? கைதான ஷாருக் பரபரப்பு வாக்குமூலம், By தந்தி டிவி 17 ஏப்ரல் 2023 9:08 PM

https://www.thanthitv.com/latest-news/kerala-train-fire-that-rocked-the-country-who-is-behind-it-shahrukh-khans-sensational-confession-180645

[12] தினமலர், ஓடும் ரயிலில் தீ விசாரணையில் திடுக் தகவல், பதிவு செய்த நாள்: ஏப் 09,2023 01:07…

[13] https://m.dinamalar.com/detail.php?id=3288915

ஜமேஷாமுபின் – ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது– தெரிய வரும் பின்னணி (3)

நவம்பர் 5, 2022

ஜமேஷா முபின்ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது – தெரிய வரும் பின்னணி (3)

சமய இலக்கியங்கள் அனைத்தும் தமிழில் உள்ளன: விசாரணையின் போது மீட்கப்பட்ட ஆதாரங்களைப் பற்றி அறிந்த ஒரு உயர்மட்ட அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், கோவை, உக்கடத்தில் உள்ள ஜமேஷா முபீனின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் வாசகங்கள் உள்ளிட்ட குறிப்பேடுகளில் ஒரு பகுதி டைரிகள் எனக் கூறினர்[1]. “ஜமேஷா முபீனின் நாட்குறிப்பு பதிவுகள் பெரும்பாலும் மற்ற மதங்கள், குறிப்பாக இந்து மதம் மற்றும் கிறித்துவம் பற்றிய அவரது பார்வையை வெளிப்படுத்துகின்றன. அவர் அந்த மதங்களின் கடவுள்களின் பெயர்களை மேற்கோள் காட்டியுள்ளார். மேலும், ஒருவரையொருவர் இணைக்கும் அம்புகளுடன் கையால் எழுதப்பட்ட சார்ட் விளக்கப்படத்தில் அவற்றை சித்தரித்துள்ளார். சி.. ஹிஜாப் சர்ச்சை, உணவு மீதான கட்டுப்பாடுகள், மாட்டிறைச்சி காரணமாக நடந்த கொலைகள் போன்ற சம்பவங்கள் இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் இரண்டாம் தர குடிமக்களாக மாறி வருகின்றனர். இந்தச் பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது என்றும் அவர் திகைத்தார்,” என்று வட்டாரங்கள் தெரிவித்தன[2]. மேலும் சமய இலக்கியங்கள் அனைத்தும் தமிழில் உள்ளன என்று தெரிவித்தனர்.

அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம்: மனிதர்களை காபிர், மோமின் எனப் பிரித்து, ஜிஹாதி [புனித போரில்] புரிந்து காபிர்கள் கொல்லப் பட வேண்டும் என்று எழுதியிருப்பது,இப்படி குண்டுவெடிப்புகள்  நடத்திக் கொண்டிருந்தால், மனித இனம் என்னாவது என்று யோசிக்காமல், மதவெறியுடன் இருந்தது, முதலியவற்றை கவனிக்கும் பொழுது, எங்கிருந்து  மனித நேயம்,  மனிதத்துவம், அமைதி எல்லாம் வரும் என்பது ஆராய வேண்டியுள்ளது. இந்நிலையில், கோவையில் கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள் சந்தித்து உரையாடினர்[3]. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்[4]. பிறகு, எப்படி, முஸ்லிம் இளைஞர்கள் அவ்வாறு சேர்ந்து திட்டமிடுவார்கள், என்றெல்லாம் தெரியவில்லை. பெற்றோர், உறவினர், மற்றோர் முதலியோர்களுக்குத் தெரியாமல் தான், ஒவ்வொரு தடவையும் இவ்வாறு நடைபெறுகிறது. அதேபோல சொல்லப் படுகிறது. ஆனால், மறுபடியும் ஏதோ ஒன்று வெடிக்கத்தான் செய்கிறது.  தவிர இந்த செய்தி வந்த பிறகு தான், பென்டிரைவ், அதில் எஐஎஸ் வீடியோக்கள் போன்ற செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. தமிழ்.இந்துவில் இன்று தான் (04-11-2022) அச்செய்தியே வருகின்றது

ஜமாத்துகளின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்: கோவை உக்கடம் பகுதியில் சம்பவ நிகழ்விடத்தின் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு ஜமாத் நிர்வாகிகள் இன்று சென்று பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது: “3 ஜமாத்களின் சார்பாக கோட்டை சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை சந்தித்து உரையாடினோம். கடந்த வாரம் இந்த பகுதியில் நடந்த சம்பவம் பல்வேறு சமூகங்களுக்கு இடையே ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இஸ்லாமியர்களான நாங்கள் 7 தலைமுறைகளாக இந்த கோட்டைமேட்டில் வாழ்ந்து வருகிறோம். இந்தப் பகுதியில் நாங்கள் ஒற்றுமையுடன், அண்ணன் தம்பிகளாக கடந்த 200 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். இந்த சூழலில் இங்கு நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை கோட்டைமேட்டில் உள்ள ஜமாத்துகளின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இஸ்லாம் ஒருபோதும் வன்முறையைத் தூண்டும் மார்க்கம் அல்ல. நாங்கள் அமைதியை போதிக்கிறோம். அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம். எந்தவிதமான மத பூசல்களுக்கும், அரசியலுக்கும் நாங்கள் ஆட்பட்டு விடக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

100-க்கும் மேற்பட்ட வீடியோக்கள்: முன்னதாக, கோவை மாநகர தனிப்படை போலீசார் கைதான 6 பேர் வீட்டில் சோதனை நடத்தினர்.  கிடைத்த பொருட்களில், ஒரு பென் டிரைவ் இருந்தது. சோதனை செய்த போது அதிர்ச்சி அடைந்தனர், ஏனெனில், அந்த பென் டிரைவ்வில் 100-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். அமைப்பின் சித்தாந்தங்கள் அடங்கிய வீடியோக்கள் இருந்துள்ளது. இதில், 6 பேரில் ஒருவரது வீட்டில் பென் டிரைவ் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது[5]. அதனை போலீசார் ஆய்வு செய்த போது அதிர்ச்சி ஏற்பட்டது. அதில், ஐஎஸ் தீவிரவாதத்துக்கு ஆதரவான ஏராளமான வீடியோக்கள் இருந்தன[6]. தீவிரவாதிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது போன்ற வீடியோக்கள் மற்றும் கழுத்தை அறுத்து கொலை செய்வது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோக்கள் இருந்தன[7]. இதுதவிர இலங்கை குண்டு வெடிப்பை நிகழ்த்திய நபரின் பேச்சு அடங்கிய வீடியோவும் இருந்துள்ளது[8]. இதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வளவு தெளிவாக இருந்தாலும், இப்பிரச்சினை ஏதோ மழைகாலத்தில் இதுவும் ஒரு செய்தி என்பது போல கருதுவது போலத் தோன்றுகிறது.

கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வாயிலாக, கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க முக்கிய தகவல்கள் கிடைத்தன: ‘கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வாயிலாக, கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க முக்கிய தகவல்கள் கிடைத்தன’ என, போலீசார் தெரிவித்தனர்.கோவையில், அக்., 23ல் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் நடந்த கார் குண்டு வெடிப்பில், பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார். இந்த குண்டு வெடிப்பை விசாரித்த போலீசார் சந்தித்த சிரமங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தன்று அதிகாலை, 4:00 மணிக்கு வந்த கார், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் ஒன்றரை நிமிடம் நிற்பதை கண்காணிப்பு கேமரா காட்சிகளில் காண முடிந்தது. அதன் பிறகே கார் வெடித்துள்ளது. கார் காத்திருந்த ஒன்றரை நிமிடத்தில், ஜமேஷா முபின் தான் கொண்டு வந்திருந்த வெடிபொருட்களை வெடிக்கச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். கார் வெடித்தவுடன், அந்த அதிர்ச்சியில், பூட்டப்பட்டிருந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் கதவு தானாக திறந்தது.

கண்காணிப்பு கேமரா காட்சிகளை கேட்டுச் சென்றபோது, பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகி கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்தது: கோவிலுக்குள் வசிக்கும் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், போலீசார் ஓடி வந்துள்ளனர்.குண்டு வெடிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியில், கோவில் கண்காணிப்பு கேமராவில் அடுத்த இரண்டரை நிமிடங்களுக்கு காட்சிகள் எதுவும் இல்லை. அதன் பிறகே காட்சி பதிவாகியுள்ளது.’கோவிலில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகள் தான் வழக்கில் துப்பு துலக்க பேருதவியாக இருந்தன’ என்கின்றனர் போலீசார்.’சம்பவத்தை சற்று தொலைவில் இருந்து பார்த்த போலீஸ் அதிகாரி, கோவில் அருகே இருக்கும் டிரான்ஸ்பார்மர் வெடித்து விட்டதாக கருதி, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தபடி ஓடி வந்துள்ளார். ‘அருகே வந்த பின் தான், கார் வெடித்தது அவருக்கும் தெரியவந்தது’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த கோவிலுக்கும், ஜமேஷா முபின் வசித்த வீட்டுக்கும் வெகு துாரம் இல்லை. அதிகபட்சம், 300 மீட்டர் தான் இருக்கும். ஆனால், இறந்தவர் யார் என்றும், கார் யாருடையது என்றும், அப்பகுதி பொதுமக்கள் யாரும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை.எந்த ஒரு தகவலும் தெரியாமல், கோட்டைமேடில் போலீசார் வீதி வீதியாக அலைந்தும் விபரம் கிடைக்காமல் தடுமாறினர். கார் வந்த வழித்தடம் கண்டறிவதற்காக, கண்காணிப்பு கேமரா காட்சிகளை கேட்டுச் சென்றபோது, பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகி கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததும் நடந்துள்ளது[9]. தற்போது வழக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் இது பற்றி விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்[10].

வேதபிரகாஷ்

05-11-2022


[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் பலியான ஜமேஷா முபீன்; இலக்கை நோக்கி பயணித்த சுயமான தீவிரவாதி! , Written by WebDesk, Updated: October 30, 2022 3:34:14 pm

[2] https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-blast-jamesha-mubeen-killed-he-was-self-radicalised-on-way-to-target-533273/

[3] தமிழ்.இந்து, அனைவருடனும் நல்லிணக்கத்தோடு வாழ விரும்புகிறோம்: கோவையில் ஜமாத் நிர்வாகிகள் பேட்டி, செய்திப்பிரிவு, Last Updated : 03 Nov, 2022 02:51 PM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/891704-we-want-to-live-in-harmony-coimbatore-jamaath-officials.html

[5] தினகரன், கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டம்? பென்டிரைவில் சிக்கிய வீடியோ ஆதாரம்; பரபரப்பு தகவல்கள், 2022-11-05@ 00:31:23

[6] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=811657

[7] தினத்தந்தி, .எஸ். வீடியோக்கள் அடங்கியபென் டிரைவ்பறிமுதல், நவம்பர் 5, 12:15 am (Updated: நவம்பர் 5, 12:15 am)

[8] https://www.dailythanthi.com/News/State/is-pen-drive-containing-videos-seized-829642

[9] தினமலர், கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க உதவியது கோவில் கேமரா,  Updated : நவ 05, 2022  01:32 |  Added : நவ 05, 2022  01:30

[10] https://www.dinamalar.com/news_detail.asp?id=3162429

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகிய நிலை (1)

ஒக்ரோபர் 29, 2022

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகிய நிலை (1)

22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட் கிழமை) வரை நடந்துள்ளவை என்ன?: 24-10-2022 அன்று தீபாவளி என்பதால், துணிமணி, பட்டாசு, ஸ்வீட் வாங்க வேண்டும், எல்லோருமே ஊருக்குச் செல்ல வேண்டும், வாங்கியதை குடும்பத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டும், சந்தோஷமாக கொண்டாட வேண்டும், என்று லட்சக்கணக்கில் மக்கள் வாகனங்களில், பேருந்துகளில், ரெயில்களில் சென்று கொண்டிருந்தனர். அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்ப, பட்ஜெட்டில் தீபாவளி கொண்டாட திட்டத்துடன் இருப்பர், சென்று கொண்டிருந்தனர். ஆனால், அப்பொழுது, கோயம்புத்தூரில் சிலர் வேறு விதமாக திட்டம் போட்டிருந்தனர் போலும். வெகுஜன மக்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளியை நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, ஊடகங்களில் வழக்கம் போல, தீபாவளி எதிர்ப்பு, பட்டாசு மறுப்பு, நாத்திக-நராகாசுரன் ஆதரவு செய்திகள் வந்து கொண்டிருந்தன[1]. பட்டாசு வெடிக்க வேண்டாம், குறிப்பிட்ட நேரங்களில் தான் வெடிக்க வேண்டும், மீறினால், வழக்கு, புகார், தண்டனை என்றெல்லாம் பெரிய போலீஸ் அதிகாரிகள் மிரட்டியதாக செய்திகள்[2]. அதே நேரத்தில் பட்டாசு விற்பனை பெருக்க வேண்டும் போன்ற பிரச்சாரமும் இருக்கிறது. இன்னொரு பக்கமோ, கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது போன்ற செய்திகள்.

இந்நிலையில் தான் கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்செய்திகள் வர ஆரம்பித்தன: 22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட் கிழமை) வரை நடந்துள்ள நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்தால், இந்த கோவை கார் குண்டு வெடிப்பு திட்டமிட்டு நடந்துள்ள-நடத்தப்பட்ட செயல் என்று அறிந்து கொள்ளலாம். பிறகு, மற்ற செய்திகள் எல்லாம் வெளிவர ஆரமித்துள்ளன. ஊடகங்களின் பாரபட்சமிக்க, செய்தி வெளியீட்டுப் போக்கும், “ஆபத்திலிருந்து” மெதுவாக, “குண்டு வெடிப்பு” என்று முடிந்துள்ளது. இருப்பினும் இந்த தீவிரவாதிகள், பயங்கரவாதிள் எல்லோருமே மரியாதையுடன் தான் குறிப்பிடப் படுகிறார்கள். மத்திய உளவுத்துறை காவல்துறையினர் ஜமிஷா தொடர்பான பல்வேறு தகவல்களுடன் அவரை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசுக்கு 2018ம் ஆண்டு முதன் முதலில் தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது[3]. தமிழக காவல்துறையினர் இதனை பெரிதாக கருதவில்லை என்று கூறப்படுகிறது[4].

22-10-2022 (சனிக்கிழமை இரவு): சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு ஜமேஷா முபின் வீட்டில் இருந்து அவர் உட்பட 5 பேர் மர்மபொருளை தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், முபின் தன்னுடைய வீட்டை காலி செய்ய வேண்டும் என்று கூறியதாகவும், அந்தப் பெட்டியில் ஸ்கிரேப் பொருள்கள் இருந்ததாக முபின் விளக்கம் அளித்ததாக கூறியுள்ளனர். அந்த சிசிடிவி காட்சிகளில் உள்ள மற்ற நபர்கள் 4 பேர் யார் என்பது குறித்து பிறகு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர், என்றெல்லாம் செய்திகள் பிறகு வெளி வந்தன. அப்படியென்றால், இவர்களும் முன்னமே இக்காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். சுற்றியுள்ளவர்கள், இவர்களது நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு, எச்சரித்திருக்கலாம், புகார் கொடுத்திருக்கலாம். ஆனால், முஸ்லிம்கள் எனும் போது, அமைதியாக இருந்து விட்டனர் போலும். ஒரு ஊடகத்தால், அங்கு செய்தி-விவரங்கள் சேர்க்கச் சென்றபோது, ஜன்னல் கதவுகளை அடைத்துக் கொண்டனர், யாரும் பேச முன்வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. 

23-10-2022 (ஞாயிற்றுக் கிழமை):  அதிகாலை சுமார் 4:45 மணி அளவில், கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு பெரும் வெடிச் சத்தம் கேட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் அங்கு வந்து பார்த்துள்ளனர். முதலில், ஏதோ பட்டாசு சத்தம் என்று கூட நினைத்திருக்கலாம். அந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதிகாலை 4 மணி அளவில் சாலையில் கார் செல்வது, கார் நிற்பது பின்பு வெடித்து சிதறும் காட்சிகள் வெளியாகி உள்ளது. விடியற்காலை காரில் உள்ள காஸ் சிலிண்டர் வெடித்து ஒரு ஆள் இறந்தான். செல்போன் உதவியுடன் இறந்தவன் அடையாளம் காணப் பட்டான். வெடித்து சிதறிய காரில் இன்னொரு வெடிக்காத சிலிண்டர் மற்றும் சுற்றிலும் ஆணிகள், பால்ரஸ் போன்றவையும் சிதறிக் கிடந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தடயவியல் துறையினர் காரிலிருந்து  2 முதல் 3 கிலோ 1.5 இன்ச் ஆணிகள் மற்றும் பால்ரஸ் குண்டுகளைக் கண்டறிந்துள்ளனர். ஆணி, பால்ரஸ் வேறு பணிக்காக கொண்டு செல்லப்பட்டதா அல்லது வெடி விபத்தை நிகழ்த்தும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டவையா என்பதை நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஆக, நிச்சயமாக கோவை போலீஸார் சென்னை உயர் அதிகாரிகளுக்கு தெரியப் படுத்தி, விசயம் முதலமைச்சருக்குச் சென்றிருக்கும்.

பிற்பகல் – 23-10-2022 (ஞாயிற்றுக் கிழமை):  தொடக்கத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்தை கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி தாமரைக் கண்ணன் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இந்தச் சம்பவத்தின் நிலைமை அறிந்து சென்னையிலிருந்து டி.ஜி.பி சைலேந்திர பாபு விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கோவைக்கு வந்தார். வெடி விபத்து நிகழ்ந்த பகுதியை ஆய்வு செய்தார். அதாவது, விசயம் சாதாரணமானது அல்ல என்பது தெரிந்து விட்டது. பிரசித்தி பெற்ற உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு மட்டுமின்றி, தீபாவளியையொட்டி, இப்பகுதியில் துணி எடுப்பதற்காக அதிக அளவில் மக்கள் கூடும் நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது கோவை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மசூதிகள் முன்பு போலீஸார் பாதுகாப்புப்பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

கார் குண்டு வெடித்தலில் இறந்தவன் ஜமேசா முபின்: போலீஸார் செல்போன், கார் எண் முதலியவற்றை வைத்துக் கொண்டு விவரங்களை சேகரித்தனர். ஜமேசா முபின் என்பவன் தான் இறந்திருக்கிறான் எனூ முடிவானது. அவன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர். அப்பா இல்லை. அம்மா மட்டும் தான். அவர் மனைவிக்கு செவி மற்றும் பேச்சுத்திறன் இல்லை. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஜமேசாவுக்கும் இதயம், கண் ஆகியவற்றில் சில பிரச்னைகள் உள்ளன. முன்பு பழைய புத்தகக் கடை நடத்தி வந்தவர், பிறகு துணி வியாபாரம் செய்து வந்திருக்கிறார். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர். அதனால்தான் கடந்த 2019ம் ஆண்டு இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு பிறகு ஜமேசா முபினிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்த கார் வெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு போலீஸ் அவர் வீட்டில் நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு கடிதத்தில் சுற்றிப் பார்க்கவுள்ள சுற்றுலா தலங்கள் என எழுதி ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம், ஆணையர் அலுவலகம், ரேஸ்கோர்ஸ், விக்டோரியா ஹால் (மாநகராட்சி அலுவலகம்) ஆகிய பகுதிகளை குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம், இந்தப் பகுதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இப்படி செய்திகள்……

வாட்ஸ்ஆப் பதிவு, இறப்பு உண்மை என்றால், அது தற்கொலை குண்டு வெடிப்பு ஆகிறது: விபத்து நடந்தக் காரை ரூ.10,000க்கு தல்காவிடம் இருந்து வாங்கியுளளார். இப்படி கைது செய்யப்பட்ட  அனைவரும், இந்த சதித் திட்டத்தில் ஒவ்வொரு பணியைச் செய்துள்ளனர். ஜமேசா அவ்வபோது கேரளா சென்று, அங்கு ஏற்கெனவே என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்டுள்ள அசாருதீன் என்பவரைச் சந்தித்து வந்துள்ளார். ஆங்காங்கே சிறுக சிறுக சேகரித்து 75 கிலோ வெடி மருந்துக்கான வேதிப் பொருள்களை வாங்கியுள்ளனர். வெடி பொருள் தயாரிப்பது எப்படி என்பதை யூ-ட்யூபில் தேடிப் பார்த்திருக்கிறார். கைது செய்யப்பட்டவர்கள் இல்லாமல், இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கிறது.” என்றனர். …….’வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில், என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரியும் போது எனது தவறை மன்னித்து விடுங்கள், குற்றங்களை மறந்துவிடுங்கள் எனது இறுதி சடங்கில் பங்கேறுங்கள். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்,” என்று பதிவிட்டு உள்ளார். இதற்கான புகைப்படத்தை அவர் பதிவேற்றி இருக்கிறார். இதை பற்றி விசாரிக்க வேண்டும். இது ஐஎஸ்எஸ் தொடர்புடைய வாசகம். அவர்கள்தான் தற்கொலை தாக்குதல்களுக்கு முன்பாக இப்படி எல்லாம் போஸ்ட் செய்வார்கள்…..இப்படியும் செய்திகள்! வாட்ஸ்-ஆப் பதிவு, இறப்பு உண்மை என்றால், அது தற்கொலை குண்டு வெடிப்பு ஆகிறது, “சூஸைட் பாம்பர்” என்றாகிறது!

© வேதபிரகாஷ்

29-10-2022


[1]  திக-திமுகவினர் தொடர்ந்து தங்களது ஊடகங்களில் இத்தகைய பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், உலகம் முழுவதும் கொண்டாடப் பட்டு, உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

[2]  சுவாசிக்கும் காற்று மாசு படுகிறது என்ற கோணத்தில் உச்சநீதி மன்றமே வரையறை கொடுத்திருப்பதால், அதன் மீது, மாநில அரசுகள் மற்றும் இதர நிறுவனங்கள், இயக்கங்கள் இதை பெரிது படுத்தி, பிரச்சாரம் செய்கின்றன.

[3] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், உளவுத்துறைஅன்றேகொடுத்த சிக்னல்!.. கிடப்பில் போடப்பட்டதா ? கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம், Raghupati R, First Published Oct 28, 2022, 7:56 PM IST; Last Updated Oct 28, 2022, 8:34 PM IST.

[4] https://tamil.asianetnews.com/tamilnadu/coimbatore-car-bomb-blast-tn-police-ignored-central-intelligence-agency-warning-rkgw4i

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பு, அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்குஅழைப்பு விடுத்தது (1)

செப்ரெம்பர் 24, 2022

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல்உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பாக அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்தது (1)

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல்: முன்னர் ஶ்ரீசுதர்ஷன்ஜி என்பவர் சங்கசாலக் / தலைவராக இருந்த போது, ஆர்எஸ்எஸ் கேரள கிருத்துவர்களுடன் உரையாடல் வைத்துக் கொண்டது[1]. அப்பொழுது கேரளாவில் கிருத்துவர்களுக்கும், ஸ்வயம் சேவகர்களுக்கும் மோதல்கள் இருந்து வந்தன. பிறகு நிலைமை சுமுகமானது. இப்பொழுது, கேரளாவில் கிருத்துவர்களுக்கும், ஸ்வயம் சேவகர்களுக்கும் உறவுகள் இன்னும் மேன்பட்டுள்ளது. மோடியை கிருத்துவ மதத் தலைவர்கள் வரவேற்கிறார்கள். வாரணாசியின் ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம், முஹம்மது நபி பற்றிய நுபுர் ஷர்மாவின் கருத்து, அதன் தொடர்பாக ஒரு இந்து கொலை செய்யப் பட்டது மற்றும் கர்நாடகாவில் ஹிஜாப் பற்றிய சர்ச்சை என இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தில் அமைதியின்மை நிலவிவந்த நிலையில், அனைத்து இந்திய இமாம் அமைப்பின் தலைவரான இமாம் உமர் அகமது இல்யாசியை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் டெல்லியில் உள்ள மசூதி ஒன்றில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சில வாரங்கள் முன்பு தான் “ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தைத் தேடிச் செல்ல வேண்டாம்,” என்று மோகன் பாகவத் பேசியிருந்தார். இதன் தொடர்ச்சியாக சந்திப்பு நடத்தியிருப்பது முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.

உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பாக அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்துள்ளது: அகில இந்திய இமாம் அமைப்பு, இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுக்கான அமைப்பாக செயல்பட்டு வருகிறது[2]. உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பாக அகில இந்திய இமாம் அமைப்பு கருதப்படுகிறது[3]. இந்த அமைப்பின் தலைவரான உமர் அகமது இலியாசி. இவர், ஒரு மசூதிக்குள் வசிக்கிறார்[4]. அவரது வீடும் மசூதியும் ஒன்றுதான். அதில் ஒரு மதரஸாவையும் நடத்தி வருகிறார்[5]. இதை பார்வையிட, இமாம் இல்யாசி மோகன் பாகவத்தை அழைப்பு விடுத்திருந்தார். பின்னர் இந்தச் சந்திப்பு குறித்து தெரிவித்த உமர் அகமது இலியாசி, “எங்களது அழைப்பை ஏற்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், அகில இந்திய இமாம் அமைப்பின் அலுவலகத்திற்கு வருகை தந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் நமது நாட்டின் தந்தை. நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தாஜ்வீதுல் குரான் மதரசாவை அவர் பார்வையிட்டார். அங்கு கல்வி பயிலும் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது, நமது மரபணு ஒன்றுதான் என்றும், கடவுளை வழிபடும் முறைதான் வேறானது என்றும் மோகன் பாகவத் கூறினார்,” எனத் தெரிவித்தார். இந்த மகிழ்ச்சியான வெளிப்பாடு, நல்ல சகுனமாக இருக்கிறது எனலாம்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மசூதி மற்றும் மதரஸாவுக்கு விஜயம் செய்தது: இருப்பினும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் டெல்லியில் உள்ள மசூதி, மதரசாவுக்கு 22-09-2022 அன்று திடீரென சென்றார்[6], என்று தினகரன் போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மதரசாவில் உள்ள முஸ்லிம் மாணவர்களுடன் கலந்துரையாடினார்[7]. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், டெல்லி கஸ்துாரிபாய் காந்தி மார்க்கில் உள்ள மசூதி மற்றும் ஆசாத்பூரில் உள்ள ஒரு மதரசாவுக்கு நேற்று சென்றார்[8]. மதரசா மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். பகவத் உள்ளே சென்றதும் மாணவர்கள் வந்தே மாதரம், ஜெய் ஹிந்த் என கோஷமிட்டு வரவேற்றனர்[9]. மோகன் பகவத் மதரசா செல்வது இதுவே முதல் தடவை என்று ஆர்எஸ்எஸ் பிரமுகர் தெரிவித்தார். இதெல்லாம்,ஈந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கான சிறந்த முயற்சியாகவே தென்படுகிறது. இன்றைய உலக சூழ்நிலைகளிலும், மக்களிடையே நட்புறவு மிக அத்தியாவசமாக தேவைப் படுகிறது. குறிப்பாக, பொருட்களை பகிர்ந்து நுகரும் நிலையில் உலக மக்கள் உள்ளார்கள். உக்ரைன்–ரஷ்யா போர் அதனை வெளிப்படையாக எடுத்துக் காட்டியுள்ளது. அதில் மதம், மொழி, முதலியவை பார்க்க முடியாது.

சுமுகமான பரஸ்பர பேச்சு: மோகன் பகவத் மாணவர்களிடையே பேசிய பகவத், ‘ஒவ்வொரு மதத்தினரின் வழிபாட்டு முறைகள் வேறு விதமானதாக இருந்தாலும், அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும்,’ என்பதை வலியுறுத்தினார். இது பற்றி அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எம்பி அசாதுதீன் ஒவைசி கூறுகையில், ‘ஆர்எஸ்எஸ்சின் கொள்கைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். முஸ்லிம் உயர் குடிமக்கள் சிலரை அவர் சந்தித்துள்ளார். அடிமட்டத்தில் உள்ளவர்களை பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியாது,’ என்றார்[10]. ஒருவேளை, இவ்வாறு இந்து-முஸ்லிம் தலைவர்கள் நெருங்கி வருவது அவருக்குக் காட்டமாக இருக்கிறது போலும். ஒருவேளை அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு விசயங்கள் புரியாமல், தெரியாமல் இருந்தால், அவர்களையும் உரையாடலுக்கு அழைக்கலாம். ஏனெனில், பெரும்பாலான மக்கள் சாதாரண மக்களே, அவர்கள் தினம்ம்-தினம் தங்களின் வேலை, தொழில், கடமைளை செய்ய  வெளியே வந்து கொண்டிருப்பார்கள், சந்திப்பார்கள், பழகுவார்கள். தேசத் தந்தை பகவத்: இந்திய இமாம்கள் அமைப்பின் தலைவர் உமர் அகமது பேசுகையில், ‘மோகன் பகவத் இந்த நாட்டின் தேச தந்தை’ என்று புகழ்ந்தார். ஆனால். உடனே குறுக்கிட்ட மோகன் பகவத், ‘நாட்டுக்கு ஒருவர்தான் தேச தந்தை. நாம் அனைவரும் தேசத்தின் குழந்தைகள்,’ என்றார்[11]. அதாவது, மஹாத்மா காந்தி தான், தேசப் பிதா என்று வற்புருத்தியுள்ளதைக் கவனிக்கலாம்.

மதரஸாவுக்கு வருமாறு அழைத்த இமாம் இல்யாசி: “நீங்கள் மதரஸாவிற்குச் சென்று பாருங்கள். இப்போதெல்லாம் மதரஸாக்கள் பற்றி அதிகம் பேசப்படுகிறது. நீங்களே பாருங்கள் உங்களுக்குப் பிடிக்கும்,” என்று இமாம் இல்யாசி அழைப்பு விடுதத்தன் பேரில், கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பே சந்திப்பு திட்டமிடப்பட்டது என்று ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். பொதுவாக நேரில் சந்தித்து பேசும் பொழுது, பெரும்பாலான சந்தேகங்கள், தவறான புரிதல்கள் மற்றும் கருத்துகள் முதலியவற்றை உண்மை நிலை அறிந்து மாற்றிக் கொள்ளலாம். மேலும், இந்த சந்திப்பு நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையுடன் தொடர்பில்லாதது என்றும் ஆர்எஸ்எஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லி, உத்திரபிரதேசம், ஆந்திரா, தெலிங்கானா, தமிழகம் என்று பல மாநிலங்களில் மதரஸா செயல்பாடுகள், வக்பு சொத்துகள் பற்றிய சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. உபியில் மதரஸாக்களை பார்த்து, அளவிடும் வேலைகள் ஆரம்பித்துள்ளன. பெரும்பாலான, முஸ்லிம் அமைப்புகள், இதற்கு ஒப்புக் கொண்டுள்ளன.

© வேதபிரகாஷ்

24-09-2022


[1]  Inter-religious dialogue – மதங்களுக்குள் இடையிலான உரையாடல் என்ற முறையை கிருத்துவர்கள் கடைபிடித்து வருகிறார்கள். முஸ்லிம்கள் அதில் ஈடுபடாமல் இருந்தாலும், சூபித்துவம் போன்ற நிலைகளில் நெருங்கி வந்த / வரும் நிலைகள் உள்ளன.

[2] தமிழ்.இந்து, ஒரு வருடத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டது’ – மோகன் பாகவத் முஸ்லிம் தலைவரை சந்தித்த பின்னணியும் பேசியவையும், செய்திப்பிரிவு, Published : 23 Sep 2022 03:26 AM; Last Updated : 23 Sep 2022 03:26 AM.

[3] https://www.hindutamil.in/news/india/871799-background-of-mohan-bhagwat-meeting-with-the-muslim-leader.html

[4] விகடன், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் `தேசப்பிதா‘ ” – தலைமை இமாம், VM மன்சூர் கைரி, Published:Yesterday at 11 AMUpdated:Yesterday at 11 AM

[5] https://www.vikatan.com/government-and-politics/politics/mohan-bhagwat-is-rashtra-pita-says-top-muslim-cleric-after-rss-chief-visits-mosque

[6] தினகரன், மசூதியில் இமாம்களுடன் மோகன் பகவத் சந்திப்பு: மாணவர்கள் வந்தே மாதரம் கோஷம், 2022-09-23@ 00:19:20

[7] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=801407

[8] தமிழ்.ஒன்.இந்தியா, நம்ம ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தான் தேசத்தின் தந்தை.. இஸ்லாமிய தலைவர் உமர் அகமது இலியாசி, By Vigneshkumar, Updated: Thu, Sep 22, 2022, 21:20 [IST].

[9] https://tamil.oneindia.com/amphtml/news/delhi/top-muslim-cleric-says-rss-chief-mohan-bhagwat-is-rashtra-pita-477061.html

[10] g7tamil, மசூதியில் இமாம்களுடன் மோகன் பகவத் சந்திப்பு: மாணவர்கள் வந்தே மாதரம் கோஷம், By G7tamil, September 23, 2022.

[11]https://g7tamil.in/%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B/

மயிலாடுதுறையில் நடப்பது என்ன, என்.ஐ.ஏ சோதனை ஏன், முஸ்லிம்கள் கைது செய்யப் படுவது ஏன், இந்தியாவை துண்டாடும் இந்திய கிலாபா கட்சி, இந்திய கிலாபா முன்னணி தேவையா? (2)

மே 11, 2022

மயிலாடுதுறையில் நடப்பது என்ன, என்.. சோதனை ஏன், முஸ்லிம்கள் கைது செய்யப் படுவது ஏன், இந்தியாவை துண்டாடும் இந்திய கிலாபா கட்சி, இந்திய கிலாபா முன்னணி  தேவையா? (2)

அக்டோபர் 2021ல் அப்துல்லா மீது குற்றப் பத்திரிக்கைத் தாக்கல்: இஸ்லாமிய தேசம் ஒன்றை இந்தியாவில் தனியாக உருவாக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் மதுரையை சேர்ந்த அப்துல்லா (என்ற) சரவணகுமார் (31), என்பவர் ஆதரவு திரட்டியதாகக் கூறப்படுகிறது[1].  இவர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக மதுரை போலீசாரால் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு சிறப்பு போலீசாருக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. இந்த வழக்கு பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சரவணகுமார் மீது என்ஐஏ அதிகாரிகள், 5 வது செஷன்ஸ் நீதிபதி முன்பு நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்[2]. அப்துல்லா, அப்துல்லாவாகத்தான் செயல்படுகிறான், சரவணன் என்பதால், இந்தியாவை ஆதரிக்கவில்லை. மற்ற இந்துபெயர்கள் கொண்டவர்களும், தமிழகத்தில், இந்தியவிரோதிகளாகத் தான், பேசியும், எழுதியும் வருகின்றனர். பிறகு, இவ்விரு கூட்டங்களுக்கு எந்த வித்தியாசமும் இல்லை.

இஸ்லாமிய அடிப்படைவாதம் தூண்டும் துண்டு பிரசுரங்கள்:  சாதிக் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததற்கான சில ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாக, என்.ஐ.ஏ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மயிலாடுதுறை, திருச்சி, கோவை என, பல இடங்களில் ரகசிய கூட்டங்கள் நடத்தி, துண்டு பிரசுரங்களை வழங்கி உள்ளனர். இவர்களிடம் எப்போதும் துப்பாக்கி இருக்கும். அதேபோல, ஒரு கைவிலங்கு, அதற்குரிய இரண்டு சாவிகளும் வைத்திருப்பர். காரில் மடிக்கணினி, ‘பவர் பாங்க், வீடியோ பேனா’ உள்ளிட்ட பொருட்களையும் வைத்திருப்பர். இவர்கள், பயங்கரவாத அமைப்புக்கு, சமூக வலைதளம் வாயிலாக, ஆட்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு நிதியுதவி செய்து வந்த நபர்கள் யார், அவர்கள் பின்னணி என்ன, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு நேரடி தொடர்பு உள்ளதா என்பதற்கான ஆதாரங்களை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் திரட்டி வருகின்றனர். இத்தனையும் தமிழக போலீஸாருக்குத் தெரியாமல் நடக்கின்றனவா அல்லது முஸ்லிம்கள் என்றதால், கண்டுகொள்ளாமல் இருக்கப் படுகிறதா?  

கிலாபத் இயக்கம் நடத்தும் அடிப்படைவாத முஸ்லிம்கள்: ஐ.எஸ் இயக்கத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், தஞ்சாவூரில் மூன்று பேரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் 12-02-2022 அன்று சோதனை நடத்தினர்[3]. கிலாபத் இயக்கத்தைச் சேர்ந்த மதுரை அப்துல்காதர் என்பவருக்கு ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும், இந்துக்கள் குறித்து சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளைப் பரப்பியதாகவும் ஓராண்டுக்கு முன்புதேசிய புலனாய்வு அமைப்பினரால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்[4]. இதேபோல, மன்னார்குடியைச் சேர்ந்த பாபா பக்ருதீன் என்பவரும் நான்கு மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கிலாபத் இயக்கத்தில் உள்ள –

  1. தஞ்சாவூர் மகர்நோன்புசாவடி கீழவாசல் தைக்கால் தெருவைச் சேர்ந்த மெக்கானிக் அப்துல்காதர் (49),
  2. அதே பகுதியை சேர்ந்த  முகமதுயா சின் (30),
  3. காவேரி நகரைச் சேர்ந்த அகமது (37)

இதனை தொடர்ந்து, தஞ்சை மகர்நோன்புசாவடியில் உள்ள அப்துல்காதர், முகமதுயாசின் மற்றும் காவேரி நகர் முகமது ஆகியோர் வீட்டுக்குள் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவாக பிரிந்து சென்றனர். ஆகியோரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். வீட்டில் இருந்து யாரும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. வீட்டை பூட்டி சோதனை நடத்தினர்.

என்.ஐ.ஏ சோதனை எதிர்த்து ஆர்பாட்டம் செய்த முஸ்லிம்கள்: இந்த சோதனை அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கி காலை 10 மணி வரை நடைபெற்றது. அப்போது, மூன்று பேரின் செல்போன்கள், ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், பிப்.16-ல் சென்னையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் மூன்று பேரையும் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் கொடுத்துவிட்டு, புறப்பட்டுச் சென்றனர். இதற்கிடையே மகர்நோன்புசாவடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்[5]. ஆதாரம் இன்றி சோதனை நடந்து வருவதாகவும், அவர்கள் மூன்று பேருக்கும் தொடர்பு இல்லை என்றும் கோ‌ஷமிட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்[6]. அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் சோதனையும், பொதுமக்கள் ஆர்ப்பாட்டமும் நடப்பதால் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் தஞ்சையில் பதட்டமான சூழல் நிலவுகிறது.

போலீஸாரை மிரட்டும் அளவுக்கு முஸ்லிம்களுக்கு தைரியம் கொடுப்பது எது, யார்?: இந்த அளவுக்கு முஸ்லிம்களுக்கு தைரியம் கொடுப்பது யார்? என்,ஐ,ஏ.வையே எதிர்த்து ஆர்பாட்டம் செய்வது, கேள்விகள் கேட்பது எல்லாம் எந்த அளவுக்கு மோசமானது, ஏன் ஆபத்தானது என்பதனை அறிந்து கொள்ளலாம். முஸ்லிம்கள் ஓட்டு கிடைக்கும், மறைமுகமாக வேறு பலன்கள் கிடைக்கும் என்றெல்லாம் அரசியல் கட்சிகள் செயல் படலாம். ஆனால், அவையெல்லாம் தேசவிரோதமாகத்தான் முடியும். இவ்வாறு, முஸ்லிம்களுக்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதே, ஊக்கம் கொடுப்பதற்கு சமம் ஆகும். மேலும் “தொப்புள் கொடி உறவுகள்” என்றெல்லாம் பேசும் போது, எங்களை ஒன்றும் செய முடியாது, அரசே ஆதரவாக உள்ளது என்ற தொரணையும் வரும். அதுதான், மயிலாடுதுறை போலீஸாரைப் பார்த்து அந்த முஸ்லிம்கள் திமிருடன் கேட்டது.

போலீஸார் உதவியுடன் என்.ஐ.ஏ சோதனை: முன்னதாக, அப்துல்காதர் மற்றும் முகமது யாசின் வீடுகளில் என்ஐஏ சோதனை நடத்துவதை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட முஸ்லிம்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. தஞ்சாவூர் ஏடிஎஸ்பி பிருந்தா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சோதனை முடிந்து வெளியில் வந்த என்ஐஏ அதிகாரிகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சூழ்ந்துகொண்டு, முழக்கம் எழுப்பினர். அவர்களை போலீஸார் கலைந்து போகச் செய்தனர். இதேபோல, காரைக்கால் நகராட்சி சந்தைத் திடலுக்கு எதிரே உள்ள ராவணன் நகர் பகுதியில் வசிக்கும் உணவக உரிமையாளரான அப்துல்அமீன் என்பவரின் வீட்டிலும் என்ஐஏஅதிகாரிகள் 12-02-2022 அன்று அதிகாலை 5மணி முதல் பகல் 1 மணி வரை சோதனை நடத்தினர். 

14-03-2022 அன்று, கீழ்கண்டவர்கள் மீது வழக்குத்தொடரப் பட்டது[7].

  1. பாவா பஹ்ருத்தீன் என்கின்ற மன்னார் பாவா, சம்சுதீன் மகன், வயது 41, மன்னார்குடி, தஞ்சாவூர் ( Bava Bahrudeen @ Mannai Bava s/o Samsudeen,aged 41 yrs, r/o Mannargudi, Tiruvarur District, Tamil Nad) மற்றும்
  2. ஜியாவுத்தீன் ஜாகுபார் மகன், வயது 40, கும்பகோணம், தஞ்சாவூர் ( Ziyavudeen Baqavi, s/o Jagubar, aged 40 yrs, r/o Kumbakonam, Thanjavur Dt),

இசமா சாதிக் எனப்படுகின்ற சாதிக் பாட்சா இத்தகைய தேசவிரோத நடவடிக்கைகளுடன், மனித நீதி பாசறை என்ற அமைப்பின் உறுப்பினருமாகவும் உள்ளார். அது இப்பொழுது போப்புலர் பிரென்ட் ஆப் இன்டியரேன்றழைக்கப் படுகிறது. எப்.ஐ.ஆர்,ன் படி இந்த ஐந்து நபர்களும், இஐசிஸ் சித்தாந்தத்தைப் பரப்பி, தேசவிரோதத்தை வளர்த்து வருகின்றனர். இந்தியாப் பகுதிகளைத் துண்டாடி அவற்றை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும் அல்லது “பிரச்சினை உள்ள பகுதி” என்று அறிவிக்கப் படும் வகையில் தீவிரவாதத்தை உண்டாக்கவேண்டும் என்று,  “இந்திய கிலாபா கட்சி (Khilafah Party of India),” “இந்திய கிலாபா முன்னணி (Khilafa Front of India),” “இந்திய அறிவிஜீவி மாணவர் (Intellectual Students of India),” “இந்திய மாணவர் கட்சி (Student Party of India),” என்றெல்லாம் உருவாக்கி, செயல்பட திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

© வேதபிரகாஷ்

11-05-2022


[1] தினகரன், ஐஎஸ்ஐஎஸ் ஆதவாளர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை, 2021-10-07@ 01:03:24.

[2] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=710564

[3] தமிழ்.இந்து, 3 பேருக்கு .எஸ் உடன் தொடர்பு? – தஞ்சையில் என்ஐஏ சோதனை: முஸ்லிம்கள் போராட்டத்தால் பரபரப்பு, செய்திப்பிரிவு, Published : 13 Feb 2022 11:22 AM; Last Updated : 13 Feb 2022 11:22 AM

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/767041-nia-raid-in-tanjore-1.html

[5] மாலைமலர், தஞ்சையில் 3 பேரின் வீடுகளில் என்... அதிகாரிகள் திடீர் சோதனை, பதிவு: பிப்ரவரி 12, 2022 13:02 IST..

[6] https://www.maalaimalar.com/news/district/2022/02/12130227/3480787/Tamil-News-NIA-raid-three-houses-in-Tanjore.vpf

[7] NIA Files Charge Sheet against Two Operatives of Hizb-ut-Tahrir in Madurai Iqbal HuT case (RC-08/2021/NIA/DLI) dated 14-03-2022.

2016ல் ஜாகிர் நாயக்கை ஆதரித்து சென்னையில் தமிழக முஸ்லிம்கள் ஆர்பாட்டம் நடத்துவது ஏன் – 2009ல் எதிர்த்தது ஏன்?

ஜூலை 17, 2016

2016ல் ஜாகிர் நாயக்கை ஆதரித்து சென்னையில்  தமிழக முஸ்லிம்கள் ஆர்பாட்டம் நடத்துவது ஏன் – 2009ல் எதிர்த்தது ஏன்?

நாயக் ஆதரவு - அனைத்து இஸ்லாமிய கட்சிகள் கூட்டமைப்பு - மோடி விரோதம்

23 இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்: கூட்டத்தில் கீழ்கண்டவர் கலந்து கொண்டு பேசினர்.  23 இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்[1].

  1. மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா,
  2. எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாக்கவி,
  3. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஜெ.எஸ்.ரிபாயி,
  4. மக்கள் சிவில் உரிமை கழக தேசிய குழு உறுப்பினர் டி.எஸ்.எஸ்.மணி,
  5. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.முகம்மது இஸ்மாயில்,
  6. ஐ.என்.டி.ஜெ. தலைவர் எஸ்.எம்.பாக்கர்,
  7. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் அ.ச.உமர் பாரூக்,
  8. இந்திய தேசிய லீக் தலைவர் பசீர் அகமது,
  9. ஜம்மியத் உலமாயே ஹிந்து தலைவர் மன்சூர் காஸிபி,
  10. வெல்பேர் பார்ட்டி தலைவர் எஸ்.என்.சிக்கந்தர்,
  11. ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் ஷப்பீர் அகமது,
  12. முஸ்லிம் லீக் தலைவர் பாத்திமா முஸப்பர்,
  13. இஸ்லாமிய விழிப்புணர்வு கழக தலைவர் முகம்மது கான் பாக்கவி

இப்படி, முஸ்லிம் அல்லாத இயக்கங்கள், பொட்டு வைத்த பெண்கள் முதலியோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளது வியப்பாக உள்ளது. உண்மையிலேயே அவர்கள் விசயம் அறிந்து கலந்து கொண்டுள்ளனரா அல்லது தமிழகத்திற்கே உரிய “கூட்டம் சேர்க்கும்” முறையில் கலந்து கொண்டார்களா என்று அவர்கள் தாம் சொல்ல வேண்டும்.

img_2005-1

அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு 25ன் கீழுள்ள உரிமைகள்: தாங்கள் ஜாகிர் நாயக்கைப் பற்றி புலன் விசாரணை மேற்கொள்வதில் தலையிடுவதில்லை என்றாலும், தீவிரவாதத்திற்கும், அவருக்கும் தொடர்பிருப்பது போன்று சித்தரிப்பதை எதிர்ப்பதாக கூறினர்[2]. அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு 25ன் கீழ், எல்லோருக்கும், தமது மதத்தைப் பின்பற்றவும், போற்றவும், பிரச்சாரம் செய்ய உரிமை இருக்கிறது என்றும், அதனை அரசு தடுக்கக் கூடாது என்றும் ஆர்பாட்டம் செய்தனர்[3]. மத்திய மற்றும் மஹாராஷ்ட்ரா அரசுகளை எதிர்த்து பலவித கோஷங்களை எழுப்பினர்[4]. பிரிவு 25ன் கீழ், எல்லோருக்கும், தமது மதத்தைப் பின்பற்றவும், போற்றவும், பிரச்சாரம் செய்ய உரிமை இருக்கிறது என்றாலும், அவை மற்றவர்களின் உரிமைகளை மீறக்கூடாது,  பொது அமைதியை பாதிக்கக்கூடாது என்றெல்லாம் கூட உள்ளன. அவற்றை மறந்து, மறைத்து, மறுத்து ஆர்பாட்டம் செய்வது வேடிக்கைதான்.

ஜாகிர் ஆதரவு போராட்டம் - 16-07-2016 - த.த.ஜா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் ஆர்பாட்டத்தை அறிவித்து, பிறகு நிறுத்துக் கொண்டது: முன்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் பட்டுக்கோட்டையில், “ஜாகிர் நாயக் அவர்களின் இஸ்லாமிய பிரச்சாரத்தை முடக்க சதி செய்யும் மத்திய பாஜக அரசை கண்டித்து”ம் மற்றும் ஜாகிர் நாயக்கிற்கு ஆதரவாக போராட்டம் என்று அறிவித்தது[5]. பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஜாகிர் நாயக்-கிற்கு ஆதரவாக நடைபெற இருந்த அனைத்து மாவட்ட ஆர்ப்பாட்டங்களும் ரத்து என்று அறிவித்தது. ஜாகிர் நாயக்கை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என மும்பை காவல்துறை தெரிவித்ததை தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்த அனைத்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் ரத்து செய்யப்பபடுகிறது என்றது[6]. அதாவது ஒதுங்கவில்லை, ஜாகிர் நாயக்கே அடுத்த ஆண்டுதான் இந்தியாவுக்கு வரப்போகிறார் எனும்போது, இப்பொழுது என்ன ஆர்பாட்டம் வேண்டியிருக்கிறது, “வேஸ்ட்” தான் என்று தீர்மானித்திருக்கும். ஆனால், மற்ற கூட்டத்தினர் அவ்வாறில்லை, அவர்களுக்கு “மோடியை” எதிர்க்க வேண்டும் என்ற திட்டம் இருக்கிறது. கேரளா, காஷ்மீர், பங்களாதேசம், பாரீஸ், துருக்கி…..என்று எங்கு என்ன நடந்தாலும் அவர்களுக்குக் கவலை இல்லை, எப்படியாவது “மோடியை” தாக்க வேண்டும்.

muslims-against-zakirnaik

2009ல் ஜாகிர் நாயக்கை எதிர்த்தவர்கள் இப்பொழுது – 2016ல் ஆதரிப்பதேன்? (ப்ழைய கட்டுரையிலிருந்து): பீஸ் அமைப்பைச் சேர்ந்த ஜாகிர் நாயக் என்பவர், வன்முறையை தூண்டும் வகையில் பிரசாரம் செய்து வருவதாகக் கூறி ஐஸ் அவுஸ் காவல் நிலையம் எதிரே சுன்னத் ஜமாத் பேரவையினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அதே நேரத்தில் சிலர் ஆதரித்து, நாயக்கின் கூட்டங்களை எடெற்பாடு செய்தனர். இணைதளத்தில் தேடியபோது, கீழ்கண்ட விவரம் கண்ணில் பட்டது[7]:

சென்னையில் டாக்டர் ஜாகிர் நாயக்

ஜனவரி 10, 2009, 3:37 பிற்பகல்
கோப்பு வகை: டாக்டர் ஜாகிர் நாயக்

இஸ்லாம் அல்லாத மக்களுக்காக உலகம் முழுதும் சென்று, இஸ்லாத்தின் செய்தியை எத்தி வைத்து வரும் சகோதரர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள், இன்ஷா அல்லாஹ், வரும் ஜனவரி பதினேழாம் தேதி,சனிக்கிழமை,பதினெட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் (JANUARY 17TH AND 18TH 2009) சென்னையில் உரையாற்ற இருக்கிறார்கள்.
சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில், ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள இஸ்லாமிக் இண்டெர்நேஷனல் பள்ளி வளாகத்தில், மாலை ஆறு மணி அளவில் நடைபெற உள்ளது. (ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வீ ஜி பி கோல்டன் பீச் அமைந்துள்ளது.
எல்லா மத மக்களும் வரவேற்கப்படுகிறார்கள், அனுமதி இலவசம். பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விவரம் வேண்டுவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்புகொள்ளவும்.
IRF CHENNAI,TEL: 42148804/05, EMAIL: IRFCHENNAI@GMAIL.COM
சகோதரர்களே,
உங்கள் மாற்று மத நண்பர்களையும் அழைத்து செல்லுங்கள்!
தூய மார்க்கத்தை எடுத்து சொல்லுங்கள்!!
அல்லாஹ்விடம் நற்கூலி வெல்லுங்கள்!

ஜாகிர்நாயக்கின் பெயர் சொல்லி முஸ்லிம்கள் ஒருபக்கம் அதிரடி பிரசாரம் செய்கின்றனர்! மறுபுறம் “சுன்னத் ஜாமாத்” என்று இவ்வாறு எதிர்க்கின்றனர்!
ஒன்றும் புரியவில்லையே?

© வேதபிரகாஷ்

17-07-2016

IRF - Islamic research Centre, Mumbai - The Hindu

[1] http://ns7.tv/ta/muslims-protest-against-central-government-chennai.html

[2] http://www.thenewsminute.com/article/islamic-groups-protest-chennai-demand-govt-cease-portraying-zakir-naik-terrorist-46610

[3] The Business Standard, Muslim outfits rally behind Zakir Naik, hold protest, Press Trust of India, Chennai July 16, 2016 Last Updated at 16:32 IST

[4] http://www.business-standard.com/article/current-affairs/muslim-outfits-rally-behind-zakir-naik-hold-protest-116071600502_1.html

[5] http://adiraipirai.in/?p=26723

[6] http://adiraipirai.in/?p=26767

[7]https://markaspost.wordpress.com/2009/01/10/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0/

ஜாகிர் நாயக்கின் விசயத்தில் இந்திய-தமிழக மூஸ்லிம்களின் ஆதரிப்பது-எதிர்ப்பது என்ற முரண்பாடு ஏன்?

ஜூலை 17, 2016

ஜாகிர் நாயக்கின் விசயத்தில் இந்திய-தமிழக மூஸ்லிம்களின் ஆதரிப்பது-எதிர்ப்பது என்ற முரண்பாடு ஏன்?

ஜாகிர் ஆதரவு போராட்டம் - 16-07-2016 - த.த.ஜா. போராட்டம்

தமிழகத்தில் ஜாகிர் நாயக் எதிர்ப்புஆதரவு: ஜாகிர் நாயக்கை பொதுவாக இந்திய முஸ்லிம்கள் எதிர்த்தனர். ஒசமா பின் லேடனை ஆதரித்தது, எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகளாக இருக்க வேண்டும் என்றது போன்ற விவகாரங்களூக்காக நாயக் தனிமைப் படுத்தப் பட்டாலும், உள்ளூர எல்லா முஸ்லிம்களும் ஆதரித்துதான் வந்தனர். இந்தியாவில் நடத்தப் பட்ட கூட்டங்களுக்கு, இஸ்லாமிய அமைப்புகள், வியாபார நிறுவனங்கள் ஆதரவு கொடுத்தன. சென்னையில், கிருஷ்ணா கார்டன்ஸ் (திருமங்கலம்), காமராஜர் அரங்கம், இஸ்லாமிக் இண்டெர்நேஷனல் பள்ளி வளாகம் (ஈஞ்சம்பாக்கம்) என்று கூட்டங்கள் நடத்தப்பட்டன. முஸ்லிம்கள், குறிப்பாக படித்த இந்துக்களுக்கு குறி வைத்து, அவர்களை வேண்டி, நட்புரீதியில் “வற்புறுத்தி” கலந்து கொள்ள செய்தனர். அந்த கூட்டங்கள் முஸ்லிம்களுக்குட்தான் பிரமிப்பாக இருந்தது. தமிழக முஸ்லிம் இயக்கத்தினரின் தலைவர்களுக்கு புளியைக் கரைத்தது. பொறாமையாகக் கூட இருந்தது, நல்ல வேளை, தமிழில் பேசவில்லை என்று ஆஸ்வாசப்படுத்திக் கொண்டனர். இருப்பினும், தமிழில் அவரது ஆதரவாளர்கள் நாயக்கின் புத்தகங்கள் வெளியிட்டனர்.

Bangladesh-bans-televangelist-Zakir-Naik-s-Peace-TV

பீஸ் டிவி வங்கதேசத்தில் தடை செய்யப்பட்டது (09-07-2016): நாயக்கின் பிரசுரங்கள் தீவிரவாதிகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இருப்பதாகவும், கடந்த ஜூலை 1-ம் தேதி டாக்கா உணவக தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள், நாயக்கின் பிரசங்கங்களால் ஈர்க்கப்பட்டவர்கள் என்றும் கூறப்பட்டதை அடுத்து, வங்கதேசத்தில் நாயக்கின் பிரச்சாரங்கள் தடை செய்யப் பட்டன.  வங்காளதேசத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரம் தொடர்பாக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் ’பீஸ் டிவி’ க்கு தடை விதிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது[1]. சர்ச்சைக்குரிய வகையில் பேசிவரும் ஜாகிர் நாயக்கிற்கு இங்கிலாந்து, கனடாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மலேசியாவில் தடை விதிக்கப்பட்ட 16 இஸ்லாமிய அறிஞர்களில் நாயக்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது[2]. நாயக்கின், ‘பீஸ் டிவி’யை தொலைக்காட்சி மற்றும் இணையதளம் மூலமாக ஒளிபரப்பவும் வங்கதேச அரசு தடை விதித்துள்ளது[3]. இதைத்தொடர்ந்து, ‘பீஸ் மொபைல் போன்’களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை!

பீஸ் மொபைல்

பீஸ் டிவியை அடுத்து, பீஸ் மொபைல் போன்களுக்குக்கும் தடை (14-07-2016): முஸ்லிம் மத போதகர் ஜாகிர் நாயக்கின், ‘பீஸ் மொபைல் போன்’களுக்கு வங்கதேச அரசு தடை விதித்திருக்கிறது.  ‘ஜாகிர் நாயக்கின் எந்தவிதமான பிரசுரங்களையும் வெளியிடக் கூடாது என அரசு தெளிவான உத்தரவை பிறப்பித்திருப்பதால், அவரின் பிரசுரங்கள் அடங்கிய ‘பீஸ் மொபைல் போன்’களை இனி அனுமதிக்க முடியாது’ என, வங்கதேச தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஷாஜஹான் மஹமூத் தெரிவித்துள்ளார். ‘முதல் இஸ்லாமிய ஸ்மார்ட்போன்’ என்ற விளம்பரத்துடன் சந்தைக்கு வந்த இந்த கைபேசியில், ‘குரான்’ ஓதுவதற்கான வசதிகள், தொழுகை நேர நினைவூட்டல், இஸ்லாமிய வால்பேப்பர்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் உள்ளன.  ஜாகிர் நாயக்கின் ‘பீஸ் டிவி’ பிரசங்கங்களை, ஆங்கிலம், இந்தி, உருது போன்ற மொழிகளில் கேட்கவும், பார்க்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இந்த கைபேசிகளை, ‘பெக்சிக்கோ’ குழுமம் இறக்குமதி செய்து விற்பனை செய்தது[4]. ஆனால், தமிழகத்தில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை! ஆனால், ஜாகிர் நாயக்கைப் பற்றி விசாரணை ஆரம்பிக்கப்பட்டதும், தமிழகத்தில் ஆர்பாட்டம் ஆரம்பித்து விட்டது. இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் மீது மகாராஷ்டிர அரசும், மத்திய பாஜக அரசும் கடுமையான அவதூறு பரப்பி வருவதாகவும்[5], இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்புகளை ஒன்றிணைத்து நாளை (ஜூலை 16) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் அப்துல் ரஹ்மான் மிஸ்பாகி தெரிவித்துள்ளார்[6].

Muslim youth become ISIS supporters, warriors

உலகத்தில், இந்தியாவின் மற்ற பகுதிகளில் இஸ்லாமிய பயங்கரவாத, ஜிஹாத் தீவிரவாத செயல்கள் என்ன நடந்தாலும் போராட்டம்ஆர்பாட்டம் இல்லை: 15-07-2016 வெள்ளிக்கிழமை அன்று மொஹம்மது லுஹ்வாஸ் ஃபூலெல் (31) என்ற முஸ்லிம் பாரிசில் லாரியை வெறித்தனமாக மக்கள் கூட்டத்தினுள் ஓட்டிச் சென்று ஒரு முஸ்லிம் குழந்தைக்களையும் சேர்த்து 84 பேரைக் கொன்றுள்ளான். குழந்தைகள் கொல்லப்பட்ட காட்சிகள் பரிதாபமாக இருந்தது. ஐரோப்பாவின் ஒரே இஸ்லாமிய நாடான, துருக்கியில் நடந்துள்ள ராணுவப் புரட்சியில் 100க்கும் மேலானவர்கள் பலியாகியுள்ளனர். இரண்டு தீவிரவாத தாக்குதல்களிலும் காயமடைந்தோர் பலர் மருத்துமனைக்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், தமிழக முஸ்லிம்கள் அமைதியாகத்தான் இருந்தார்கள். கேரளாவில் இளம் வயது முச்லிம் ஆண்கள்-பெண்கள் ஐஎஸ்சில் சேர்ந்து விட்டனர் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. உம், அவர்கள் அசையவில்லை.

நியூஸ் 7 செனல் 17-07-2016

ஜாகிர் நாயக்கை ஆதரித்து நடத்திய போராட்டம் (16-07-2016): இவற்றையெல்லாம் கண்டிக்காமல், சென்னையில், “ஜாகிர் நாயக்கை தீவிரவாதி போன்று சித்திரப்பதை” கண்டித்து 500 பேர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்[7]. இப்பொழுதுள்ள நிலையில், தமிழக அரசு எப்படி அனுமதி கொடுத்தது என்பது கூட ஆச்சரியமாகத்தான் உள்ளது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் [Indian Union Muslim League (IUML)], தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் [the Tamil Nadu Muslim Munnetra Kazhagam (TMMK)] மற்றும் சோஷியல் டெமாக்ரடிக் கட்சி [the Social Democratic Party of India] முதலியன இந்த எதிர்ப்பு-போராட்டத்தில் பக்குக் கொண்டுள்ளன. முஸ்லிம் மதபோதகர் ஜாகீர் நாயக் மீது வீண் பழி சுமத்தி, அவரது பணிகளை முடக்க நினைப்பதாக கூறி மராட்டியம் மற்றும் மத்திய அரசை கண்டித்து, சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது[8].

Zakir supporting Osama bin laden

ஜாகீர் நாயக் வன்முறையையோ, பயங்கரவாதத்தையோ ஆதரித்தது இல்லை: தமிழ்நாடு முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.முகம்மது ஹனீபா தலைமை தாங்கினார். பின்னர் அவர் கூறியதாவது[9]: “உலகம் முழுவதும் முஸ்லிம் மதம் குறித்து பரப்புரை செய்து வருபவர் ஜாகீர் நாயக். இவர் வன்முறையையோ, பயங்கரவாதத்தையோ ஆதரித்தது இல்லை. அவருடைய பேச்சாலும், எழுத்தாலும் பயங்கரவாதத்தையும், பயங்கரவாதப் பழியை முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு சுமத்தும் பாசிச சக்திகளையும் எதிர்த்து வருகிறார். எனவே அவர் மீது மத்திய அரசும், மராட்டிய அரசும் காழ்ப்புணர்வு கொண்டு அவரை ஒடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது கண்டனத்துக்குரியது. மத்திய அரசு தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் போராட்டங்கள் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது”, இவ்வாறு அவர் பேசினார். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஜாகீர் நாயக்குக்கு எதிராக பேசியதாக கூறி, உத்தரபிரதேச மாநில பா.ஜ.க. எம்.பி. சாத்வி பிராட்சியின் உருவபொம்மையை எரித்தனர். இதனால் ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது[10]. ஆனால், போலீஸார் என்ன நடவடிக்கை எடுத்தனர் என்று குறிப்பிடவில்லை.

© வேதபிரகாஷ்

17-07-2016

[1] தினத்தந்தி, ஜாகிர் நாயக்கின் போதனைகளை ஒளிபரப்பும்பீஸ் டிவியை வங்கதேசம் தடை செய்தது, பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 10,2016, 3:55 PM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 10, 2016, 3:55 PM IST.

[2] http://www.dailythanthi.com/News/World/2016/07/10155526/Bangladesh-bans-televangelist-Zakir-Naik-s-Peace-TV.vpf

[3] தி.இந்து, மத போதகர் ஜாகிர் நாயக்கின்பீஸ் மொபைல் போன்களுக்கு தடை விதித்தது வங்கதேச அரசு, Published: July 14, 2016 21:21 ISTUpdated: July 15, 2016 10:22 IST

[4] http://tamil.thehindu.com/world/%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/article8850254.ece

[5] தமிழ்.ஒன்.இந்தியா, ஜாகிர் நாயக் மீது அவதூறுதமிழக இஸ்லாமிய அமைப்புகள் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்வீடியோ, By: Jayachitra, Published: Friday, July 15, 2016, 15:05 [IST].

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/muslim-organisations-protest-258114.html

[7] The News minute, Islamic groups protest in Chennai, demand govt cease portraying Zakir Naik as terrorist, TNM Staff| Saturday, July 16, 2016 – 13:57

[8] தினத்தந்தி, ஜாகீர் நாயக் மீது வீண் பழி: முஸ்லிம் அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம், பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 17,2016, 12:28 AM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 17,2016, 12:28 AM IST

[9] http://www.dailythanthi.com/News/India/2016/07/17002835/Islamic-groups-protest-in-Chennai-demand-govt-cease.vpf

[10] நியூஸ்.7.செனல், மத்திய அரசை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் சென்னையில் ஆர்பாட்டம், July 16, 2016.

காஷ்மீரத்தில் ஹிஜ்புல் முஜாஹித்தீன்-தளபதி தோன்றிய விதம் – பேற்றோரே உருவாக்கிய ஜிஹாத்-தியாகி!

ஜூலை 10, 2016

காஷ்மீரத்தில் ஹிஜ்புல் முஜாஹித்தீன்-தளபதி தோன்றிய விதம் – பேற்றோரே உருவாக்கிய ஜிஹாத்-தியாகி!

burhan father proud of his son

பெற்றோரே மகனை தீவிரவாதியாக்க ஊக்குவித்தனர்: பள்ளித் தலைமையாசிரியரின் மகனான புர்கான், படிப்பில் கெட்டிக்காரராக இருந்தான். ஒருகட்டத்தில் படிப்பில் நாட்டமில்லாமல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 10 நாட்கள் முன்னதாக காணாமல் போனான். இதுவே முரண்பாடாக இருக்கிறது. பரீட்சைக்கு முன்னால் பையனை காணோ என்றால், பெற்றோரறெப்படி அமைதியாக இருந்தனர்? படிப்பில் கெட்டிக்காரனாக இருப்பவன் எப்படி படிப்பில் நாட்டமில்லாமல் போவான் என்று தெரியவில்லை. பின்னர் ஹிஸ்புல் இயக்கத்தில் சேர்ந்திருப்பது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. வயது 15 லேயே தீவிரவாடியாகி விட்டான் எனும்போது, அபோழுதாவது தவறு என்று சுட்டிக் காட்டி, மகனை மீட்டிருக்க வேண்டும், ஆனால், தந்தை என்ற முறையிலோ, ஒரு பள்ளியின் தலைமையாசிரியர் என்ற வகையிலோ ஒன்றும் செய்யவில்லை என்றே தெரிகிறது. வானியின் தந்தை, அதை “அல்லாவின் சேவையில் ஷஹீதானான்”, என்று தனது மகனை போற்றினார்[1] எனும்போது, எல்லா உண்மைகளையும் அறிந்து, மகனின் தீவிரவாத்தை ஆதரித்தார் என்று தான் தெரிகிறது. ஏற்கெனவே, ஒரு மகனை இழந்ததும் அவருக்கு பொருட்டாகத் தேரியவில்லை போலும். பெற்ற மகன்களை ஜிஹாதிகளாக்கி, ஷஹீதுகள் என்று போற்றி, மேன்மேலும், கொலைகள், குரூர பலிகள், முதலியவற்றைப் பெருக்கவே, அவர்கள் மனங்கள் விரும்புகின்றன போலும்.

J-K - New type of young terrorists- techie, computer savvyவழக்கம் போல பிணத்தை வைத்துக் கொண்டு நடத்திய கலவரங்கள்: 144-ஊரடங்கு உத்தரவை மீறி ஊர்வலத்தை நடத்தியுள்ளனர். தேசவிரோத, ஜிஹாதி கோஷங்களை முழங்கியுள்ளனர். உடலடக்கம் பின்பும், கல்லேறிந்து கலாட்டா செய்துள்ளனர்;  ராணுவம், போலீஸார் இருந்தாலும், அவர்கள் இந்த வெறிபிடித்த கூட்டத்தின் செயல்களுக்கு எல்லாம் பொறுத்தே இருந்தனர். எனினும், பிரிவினைவாதிகளின் திட்டப்படி பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது[2]. போராட்டக்காரர்கள் தெருக்களில் இறங்கி ஆக்ரோஷமாக கற்களைவீசி தாக்குதல் நடத்தியதால் பொதுமக்கள் யாரும் வெளியில் தலைகாட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இந்துக்களின் வீடுகள், அரசு கட்டிடங்கள், வாகனங்கள் என்று குறி வைத்து தாக்கினர். மறைந்திருந்த-அடையாளம் கண்டுபிடிக்க முடியாத தீவிரவாதிகள் சுடவும் செய்தனர். இவ்வாறாக தூண்டிவிடும் போக்கும் அறிந்த விசயமே. இதனால், கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் முயன்றது. அந்நிலையில் குல்காம், அனந்த்நாக் மாவட்டங்களில் நடந்த வன்முறை மோதல்களில் 11 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்[3].

J-K - New type of young terrorists.stone jihadதாக்குதல், பதில்தாக்குதல்கலவரம், துப்பாக்கி சூடு, சாவு, ஊர்வலம், கலவரம் என்று நடப்பது: இந்த செய்தி பரவியதும், ஹால் புல்வாமா என்ற இடத்தில் இருந்த இந்து-பண்டிடுகள் தற்காலிக கேம்ப் / தங்குமிடம் கற்களால் தாக்கப்பட்டது. குல்காம் என்ற இடத்தில் பாஜக அலுவலமும் தாக்கப்பட்டது[4]. இதனை தமிழ் ஊடகங்கள் எடுத்துக் காட்டவில்லை. தெற்கு காஷ்மீரில் 5 காவல் நிலையங்கள் மற்றும் சோதனைச்சாவடிகள் தீக்கிரையாக்கப்பட்டன[5]. “இந்திய நிர்வாகத்துக்கு” உட்பட்ட காஷ்மீரில் கடந்த சில ஆண்டுகளாக திடீரென வன்முறைகள் அதிகரித்துள்ளன என்று “பிபிசி” கூறுகிறது[6]. ஆயுதம் ஏந்திப் போராடும் தீவிரவாதிகளுக்கு பொதுமக்கள் ஆதரவு அதிகரித்து வருவது, பாதுகாப்புப் படையினருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. எழுபது லட்சம் பேர் உள்ள காஷ்மீர் பள்ளத்தக்கில், சுமார் 143 தீவிரவாதிகள் முழுவேகத்துடன் இயங்குவதாக போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. அந்த 143 பேரில், 89 பேர், பெரும்பாலும் தென் காஷ்மீர் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் என போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். காஷ்மீர் முழுவதும் மூன்று நாள் துக்கம் அனுஷ்டிக்குமாறு பிரிவினைவாதத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்[7].

Burhan Wani - praised by PAK media Dwan etcதமிழ் ஊடகங்களின் தேசவிரோத போக்கு செய்திகள்: “இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில்”, என்கிறது பிபிசி. தமிழ் தெரிந்த ஒருவர் இவ்வாறு எழுதியிருந்தாலும், இந்திய உணர்வு அதில் இல்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அதே நேரத்தில் லெட்டினென்ட் ஜெனரல் சைது அடா ஹஸ்னைன் என்பவரின், “ஒரு துரோகியின் இறப்பு: புர்ஹான் வானியின் கொலையும், அதற்கு பிறகு நடந்தவையும்”, என்ற விவரமான கட்டுரை அவசியம் படிக்க வேண்டும்[8]. ஒரு முஸ்லிமாக இருந்தாலும், காஷ்மீரத்தின் இப்பிரச்சினை பற்றி நேற்று வரை நடந்தவற்றை விவரத்துடன் கொடுத்துள்ளார். அவர் வானியை “துரோகி” என்றே ராணுவ பாஷையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்திய நிருபர், அதைவிட மோசமாக செய்தியை வெளியிட்டது கவனிக்கலாம். இவர் அனைத்துலக விவேகானந்த நிறுவனம் மற்றும் தில்லி கருத்துவாக்கம் குழு முதலியவற்றுடன் சம்பந்தப்பட்டுள்ளார். தமிழக ஊடகத்துறையில் உள்ளவர்கள் பெரும்பாலான நேரங்களில் தங்களது சித்தாந்த நோக்கிலேயே செயல்படுகின்றனர் என்று தெரிகிறது.

qasim funeral huge crowd

Srinagar, India-October 29-2015: Kashmiri villagers carry the body of top Lashkar-e-Taiba commander Abu Qasim during his funeral procession in Bugam district Kulgam some 75 km from Srinagar, Kashmir, India. Police on Thursday claimed that the most wanted LeT Commander Abu Qasim was killed during an encounter in Khandaypora area of Kulgam district, south Kashmir. (Photo by Waseem Andrabi/ Hindustan Times) – this is only for illustrative purpose.

இந்தியாவில் மறுபடி இஸ்லாம் ஆட்சி நிறுவப்பட வேண்டும்: ஐசிஸ், தலிபான், அல்-குவைதா, இஜ்புல் முஜாஹித்தீன் போன்ற ஜிஹாதி-தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவைத் தாக்க வேண்டும், பிடிக்க வேண்டும் என்ற திட்டத்தில் செயல்பட்டு வருகின்றன. இருபக்கமும் இஸ்லாமிய நாடுகள் பாகிஸ்தான், பங்களாதேசம், ஊடுருவி செல்ல “கம்யூனிஸ” நேபாளம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் இருப்பதால், அவர்களது போக்குவரத்து இப்பகுதிகளில் சுலபமாக இருக்கின்றன. எல்லை மாநிலங்களான பீஹார், மேற்கு வங்காளம் இவர்களின் போக்குவரத்திற்கு உபயோகமாக இருக்கின்றன. நிதிஷ்குமார் மற்றும் மம்தா ஆட்சிகளில் “முஸ்லிம்களின் ஆதரவு, முஸ்லிம்களை டாஜா செய்தல்” என்று கொள்கை கடைப்பிடிப்பதால், எந்த வழக்கில் முஸ்லிம் சம்பந்தப்பட்டிருந்தாலும், மென்மையாகவே அரசு அதிகாரிகள், போலீஸார் முதலியோர் நடந்து கொள்கின்றனர். மேலும், முஸ்லிம்களே அப்பகுதிகளில் அரசியலில் ஆதிக்கம் செல்லுத்தி வருவதால், எம்.எல்.ஏ, எம்.பி, மந்திரி என்றுள்ளோரும் ஆதரவு-பாதுகாப்பு கொடுக்கின்றனர். இதனால், பரஸ்பர ஆதாயம், பலன்கள் முதலியவற்றால், தீவிரவாதிகள் தாராளாமாகவே செயல்பட்டு வருகின்றனர்.

Support-for-Burhan-Wani-Breathtaking-Literallyஇணைதள ஜிஹாதில் ஆட்களை சேர்த்தல்: இந்நிலையில் தான், இணைதளம் மூலம் படித்த இளைஞர்களை ஐசிஸ்/ஐசில் போன்றவை வேலைக்கு வைத்துக் கொள்ள ஆரம்பித்தன. இஞ்ஜினியரிங், தொழிற்நுட்பம், மருத்துவம் போன்ற படிப்புகள் படித்தவர்களை “தகுந்த வேலை” என்று அமர்த்தி, நன்றாக சம்பளம் கொடுத்து, பிறகு, படிப்படியாக, அவர்களது நாடித்துடிப்பை அறிந்து, மதவெறி ஏற்றி, ஜிஹாதித்துவத்தை போதித்து, இந்தியாவில் உங்களுக்கு வேலை கிடைக்கவில்லை, நீங்கள் இவ்வாறிருக்கிறீர்கள் என்றால், அதற்கு காபிர்களின் ஆட்சி தான் காரணம், அவர்கள் ஆட்சி ஒழிய வேண்டும், 300 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த இஸ்லாமிய அரசை இந்தியாவில் நிறுவ வேண்டும், அப்பொழுது, இந்தியாவிலேயே, உங்களுக்கு இதே போன்ற வேலை கிடைக்கும். அதற்கு தான் நாங்கள் பாடுபட்கிறோம், நீங்கள் ஒத்துழையுங்கள் என்று ஆரம்பித்து, தீவிரவாதிகளாக்குகின்றனர். அவர்களுக்கு எல்லாம் கொடுத்து அடிமையாக்குகின்றனர். தினம்-தினம் செக்ஸுக்கு இளம்பெண்கள், குடி, போதை மருந்து, நல்ல சாப்பாடு…….என்று கொடுத்து வளைத்து போடுகின்றனர். பிறகு, என்ன சொன்னாலும் கேட்பர் என்ற நிலை உண்டாக்கியவுடன், ஜிஹாதியாக, பிதாயுனாக மாற்றுகின்றனர். பிதாயீன் என்று சொல்லிக் கொண்டு யார் வேண்டுமானாலும் இருக்கலாம் போலிருக்கிறது. அட்னன் ரஷீத், முந்தைய பாகிஸ்தானிய விமானப்படையினர் கூட அவ்வாறு உள்ளனர்[9]. இவன் முஸாரப்பை கொல்லும் முயற்சியில் கைது செய்யப்பட்டான். பட்கல் என்பவனும் அவ்வாறேயுள்ளான்[10]. ஜிஹாதிகளும் அவ்வாறே இருக்கிறார்கள். இஸ்லாத்திற்காக உயிரை விடுவதில் இருகூட்டத்தாரும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள், உயிரை விடுகிறார்கள். பெயர்கள், இடங்கள் மாறினாலும், அவர்களது செயல்கள் ஒரே மாதிரியாக இருக்கின்றன. அதனால், ஊக்குவிக்கும் மூலம் ஒன்றுதான் என்று வெளிப்படுகிறது.

© வேதபிரகாஷ்

10-07-2016

[1] At the funeral in Tral Eidgah, eyewitnesses said three to four armed Hizbul Mujahideen militants fired a gun salute. Wani’s father Muzaffar called his son a “martyr in the service of Allah”.

http://timesofindia.indiatimes.com/india/11-killed-200-hurt-as-Valley-erupts-over-Wanis-death/articleshow/53135735.cms

[2] மாலைமலர், ஜம்மு காஷ்மீரில் தொடரும் வன்முறைக்கு 2 பேர் பலி: 50 பேர் காயம், பதிவு: ஜூலை 09, 2016 17:21, மாற்றம்: ஜூலை 09, 2016 17:22

[3] The Times of India, 11 killed, 200 hurt as Valley erupts over Wani’s death, M Saleem Pandit| TNN | Jul 10, 2016, 04.16 AM IST

[4] As news of Wani’s killing spread, mobs pelted stones on Kashmiri Pandit transit camps in Haal Pulwama and attacked a BJP office in Kulgam. Authorities also suspended train services within the Valley.

http://timesofindia.indiatimes.com/india/11-killed-200-hurt-as-Valley-erupts-over-Wanis-death/articleshow/53135735.cms

[5] http://www.maalaimalar.com/News/TopNews/2016/07/09172201/1024590/Violence-erupts-in-Kashmir-two-protesters-killed.vpf

[6] பிபிசி.தமிழ், காஷ்மீரில் வன்முறை வெடித்தது: 8 பேர் சாவு, 09-07-2016: 11.30 pm

[7] http://www.bbc.com/tamil/global/2016/07/160709_kashmir_8_dead

[8] Lt Gen Syed Ata Hasnain, The death of a renegade : Burhan Wani’s killing and its aftermath, Posted on 10/07/2016 by Dailyexcelsior.

(The writer is an ex GOC of the Srinagar based 15 Corps, now associated with the Vivekanand International Foundation and the  Delhi Policy Group), feedbackexcelsior@gmail.com

[9]A special fidayeen unit headed by Adnan Rasheed, a former Pakistan Air Force personnel has been formed by the Pakistani Taliban and the Islamic Movement of Uzbekistan to attack jails and free imprisoned militants. Rasheed was convicted for an attempt to assassinate former President Pervez Musharraf.

 http://www.indiatvnews.com/news/world/former-paf-man-heads-fidayeen-unit-to-free-jailed-militants–10548.html

[10] பிதாயீன் மாதிரி தாக்குதல்களை நடத்த வேண்டும் என்று தான் பட்கல் வெறியுடன் உள்ளான். அதே மாதிரி குண்டுவெடி-கொலைகளையும் செய்துள்ளான்.

http://kashmirmonitor.org/03032013-ND-bhatkal-wanted-to-carry-fidayeen-strike-in-train-with-foreign-passengers-in-2011-43016.aspx

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதில் இருவர் சாவு கலவர நிலையில் அலுவலகம், ஆவணங்கள், வண்டிகள் தீக்கிரை!

ஏப்ரல் 25, 2016

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதில் இருவர் சாவு கலவர நிலையில் அலுவலகம், ஆவணங்கள், வண்டிகள் தீக்கிரை!

Aligarh கில்லிங் 2

அலிகர் பல்கலைக்கழகத்தின் சித்தாந்த நிலைப்பாடும், மாணவர்கள் பிளவுப்பட்டிருக்கும் நிலையும்: உபியின் அலிகர் நகரில் அமைந்துள்ள அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகம், முஸ்லிம்கள் கல்வி நிறுவனம் ஆகும். சமீபத்தில் இது “சிறுபான்மையினர்” பல்கலைக்கழமாகக் கருத முடியாது போன்ற செய்திகள் வெளி வந்தன. பொதுவாக இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஆதரிக்கும் சிந்தனைகள் கொண்ட கல்வி நிறுவனமாக உள்ளது. இர்பான் ஹபீப் (Hirfan Habib) போன்ற இடதுசாரி, “மார்க்சீய சரித்திவியல் சிந்த்தாந்தம்” (Marxist ideology) கொண்ட சரித்திராசிரியர்களின் கூடாரமாகவும் இருந்து வருகிறது. “இந்தியன் ஹிஸ்டரி காங்கிரஸ்” (Indian History Congress) நடக்கும் பொழுது, “அலிகர் ஹிஸ்டாரியன்ஸ் போரம்” (Aligarh Historians Forum) என்ற பெயரில் அம்மாநாடு நடந்து கொண்டிருக்கும் போதே, இணையாக கருத்தரங்களம் நடத்தி தங்களது “மார்க்சீய” சரித்திர-வரைவியல் முறையை (Marxist historiography) திணித்து வருகின்றனர். இவ்வாறு, இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் மார்க்சீயம் இரண்டும் சேர்வதால், படிக்கும் மாணவர்களில் சித்தாந்த ரீதியில் பிளவு ஏற்பட்டு வருகிறது. மாணவர்கள் அடிக்கடி காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக பேசுவது, ஆர்பாட்டம் நடத்துவது, முஸ்லிம்களின் உரிமைகள் என்று கூட்டங்கள் போடுவது முதலியவை நடந்து வருகின்றன. மத்திய பல்கலைக்கழகமான இங்கு சுமார் 37,000 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

amu-story-vehicles burnt முஸ்லிம் மாணவர்களுக்கு இடையே கோஷ்டி பூசல், சண்டை, தகராறு: உத்தர பிரதேச மாநிலம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில், மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், வன்முறை வெடித்தது[1]. இதில், முன்னாள் மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்[2]. உத்தர பிரதேச மாநிலம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக, மாணவர் விடுதியில், முன்னாள் மாணவர்கள் பலர் விதிமுறைகளை மீறி தங்கியுள்ளனர்[3]. இதுதவிர, இரு மாணவர் கோஷ்டிகளுக்கு இடையில் பல்வேறு காரணங்களால் விரோதம் நிலவி வந்தது[4].  அவர்களுக்கு ஆதரவாக சில மாணவர்கள் செயல்பட்டு வரும் நிலையில், மற்றொரு பிரிவு மாணவர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்[5]. இது தவிர இந்நிலையில் சனிக்கிழமை  இரவு (22-04-2016), இரு பிரிவு மாணவர்களும் பயங்கரமாக மோதினர்[6]. அப்போது, வளாகத்துக்குள் உள்ள”மும்தாஜ்’ என்ற பெயரிலான மாணவர் விடுதியில்  மோசீன் இக்பால் என்ற மாணவர் ஒருவரின் அறையை (எண்.12), மற்றொரு பிரிவினர் தீ வைத்து எரித்தனர்;  தாளாளர் அறை மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் மீது மாணவர்கள் தீ வைத்து எரித்தனர்[7]. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களும் எரிக்கப்பட்டன[8]. தாளாளர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள இடத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 28,000 மாணவர்களின் ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின. கம்ப்யூட்டரில் சேகரித்து வைத்திருக்கும் விவரங்களிலிருந்து, அவற்றை மீட்டு விடலாம் என்று நம்புகின்றனர்[9]. இதையடுத்து, இங்கிருந்து உயிர் தப்பிய பல்கலைக்கழகத்தில் ஒழுங்கை நிலைநாட்டும் அதிகாரியிடம் மோசீன் 9.30 அளவில் புகார் அளிக்கச் சென்றார். அப்பொழுது பைக்குகளில் சுமார் 30-40 மாணவர்கள் ஆயுதங்களுடன் வந்து சேர்ந்தனர்[10]. அப்போது, அந்தச் செய்தி வெளியே பரவியது. இதையடுத்து, ஆஸம்கர் நகரைச் சேர்ந்த மாணவர்களும், சம்பல் நகரைச் சேர்ந்த மற்றொரு மாணவர்களும் மோதலில் ஈடுபட்டனர். காஜிப்பூர் மாணவர்களும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்[11]. 30 முறை துப்பாக்கிகள் சுடப்பட்டன என்று குறிப்பிடப்படுகிறது[12].

amuviolence தீவைப்பு

A burnt building of Proctor office after the violence in two students group, at Aligarh Muslim University in Aligarh on April 24th 2016.Express photo by Ravi Kanojia.

துப்பாக்கி சுடும் வேலையை மாணவர்கள் எப்படி செய்தார்கள்?: இப்படித்தான் – அதாவது, மேலே குறிப்பிட்டப்படி, ஊடகங்கள் பொதுவாக செய்திகளில் சொல்லி வருகின்றன. மற்ற விசயங்களுக்கு “புலன்-விசாரணை ஜார்னலிஸம்” என்று எல்லா விசயங்களும் எங்களுக்குதான் தெரியும் என்பது போல புட்டு-புட்டு வைக்கும் ஊடகங்கள் இவ்வாறு செய்திகளை வெளியிடுவது தமாஷாகத்தான் இருக்கிறது. துப்பாக்கிகளை வைத்து சுட்டுக் கொண்டனர் என்றால், படிக்கும் மாணவர்களிடம் எப்படி துப்பாக்கிகள் வந்தன? போலீஸார் அதைப் பற்றி ஏன் விவரங்களைக் கொடுக்காமல் இருக்கின்றனர்? ஹைதராபாத் மத்திய பல்கலை, ஜே.என்.யூ, புனே பிளிம் இன்ஸ்டிடுயூட் என்றேல்லாம் வரும் போது, நேரிடையாக சென்று, மாணவர்கள், ஆசிரியர்கள் எல்லோரையும் பேட்டிக் கண்டு விவரங்களை அள்ளி வீசினவே? இப்பொழுது அவ்வாறு ஏன் செய்யவில்லை? யார் தடுக்குகிறார்கள்? மோட்டார் சைக்கிள்களில் வந்தார்கள் என்றால், எண்களை வைத்து யார் என்று கண்டுபிடிக்கலாமே? உள்ளே நுழையும் போது, செக்யூரிடியில் அவ்விவரங்கள் பதிவாகி இருக்குமே? சரி, உள்ளே நடக்கும் நிகழ்சிகளை கண்காணிக்க வைத்துள்ள கேமராக்கள் என்ன விவரங்களைக் கொடுக்கின்றன?

rk24amuviolence1

Policemen stand next to the blood stains at Proctor office after the violence in two students group, at Aligarh Muslim University in Aligarh on April 24th 2016.Express photo by Ravi Kanojia.

துப்பாக்கிப் பிரயோகம் மாணவர்களல் நடத்தப் பட்டது: இந்நிலையில் சில மாணவர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் துப்பாக்கியால், ஒருவருக்கு ஒருவர் சுட்டதில், முன்னாள் மாணவர் ஒருவர் பலியானார்; மேலும் இருவர் காயம் அடைந்தனர். தமிழ்.இந்து, “அப்போது அங்கும் வந்த அந்த மாணவர் கோஷ்டி புகார் செய்ய வந்தவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் குண்டுபட்டு படுகாயம் அடைந்தனர்.” என்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸும் இதனை “கேம்பஸ் கன்பைட்”, அதாவது வளகத்தில் நடந்த துப்பாக்கிச்சண்டை என்றெ குறிப்பிட்டுள்ளது[13]. ஆனால், தினத்தந்தி, “அலிகார் பல்கலைக்கழகத்தில் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.” செய்தி வெளியிட்டுள்ளது[14]. தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவர்களின் வன்முறையை கட்டுப்படுத்த முதலில் கண்ணீர் புகை வீசினர். மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்தால் துப்பாக்கிச்சூடு நடத்தினர்[15]. இதில் மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 2 மாணவர்கள் காயம் அடைந்தனர். இந்த கலவர சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. பலியானவர் பெயர் மெஹ்தாப் / மக்தாப்[16]. இவர், பல்கலைக்கழகத்தில் இருந்து, ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்ட மாணவர். இதையடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

© வேதபிரகாஷ்

25-04-2016

[1] மாலைமலர், உத்தரப்பிரதேசத்தில் அலிகார் பல்கலைக்கழகத்தில் கலவரம்துப்பாக்கி சூட்டில் மாணவர் பலி, பதிவு: ஏப்ரல் 24, 2016 11:19

[2] http://www.maalaimalar.com/News/TopNews/2016/04/24111926/1008139/Clash-between-two-student-groups-in-AMU-one-killed.vpf

[3] தமிழ்.ஒன்.இந்தியா, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்.. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி, By: Jayachitra, Updated: Sunday, April 24, 2016, 10:43 [IST]

[4] தமிழ்.இந்து, அலிகர் பல்கலை. மாணவர் கோஷ்டி மோதலில் இருவர் பலி; பதற்றம்: மத்திய பாதுகாப்பு படை குவிப்பு, ஆர்.ஷபிமுன்னா, Published: April 24, 2016 14:16 ISTUpdated: April 24, 2016 18:13 IST.

[5] http://tamil.oneindia.com/news/india/amu-clash-one-student-killed-proctor-office-vehicles-torched-252013.html

[6] தினமலர், அலிகார் பல்கலையில் வன்முறை:முன்னாள் மாணவர் படுகொலை, ஏப்ரல்.24. 2016.20.02.

[7] நியூஸ்7.தமிழ், பல்கலைகழக மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் பலி, Updated on April 24, 2016; http://ns7.tv/ta/fight-among-students-university-and-student-died.html

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1508546

[9] http://indiatoday.intoday.in/story/violence-in-amu-campus-2-students-killed-in-gun-battle-28000-student-records-gutted-in-fire/1/650495.html

[10] http://indianexpress.com/article/india/india-news-india/amu-clash-one-student-killed-proctor-office-vehicles-torched-2767734/

[11] Sources in the university told The Hindu at the clash was between students from Ghazipur, Sambhal and Azamgarh. “The tension between students and former students belonging to Sambhal, Azamgarh and Ghazipur has been simmering for quite some time now. And the violence which we saw on Saturday was result of an ongoing war of ego between these warring groups of regional students,” said a university official.

http://www.thehindu.com/news/national/other-states/exstudent-killed-in-amu-campus-clash/article8515953.ece

[12] At about 9.30 pm Saturday, Mohsin along with others reached the proctor’s office to lodge a complaint. “Meantime, a group of students belonging to a rival gang arrived on motorcycles. They were around 30 to 40 in number and were carrying weapons. After heated arguments, firing started from both the sides and went on for 15 minutes. At least 30 rounds were fired…we were helpless as the students were armed,” a member of the security staff, who was present at the spot, said.

[13] Indian express, Two killed in AMU campus gunfight, vehicles torched, Updated: April 25, 2016 1:53 am

[14] தினத்தந்தி, அலிகார் பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே மோதல்:போலீஸ் துப்பாக்கி சூட்டில் மாணவர் பலி , மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, ஏப்ரல் 24,2016, 12:38 PM IST; பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஏப்ரல் 24,2016, 12:38 PM IST

[15] http://www.dailythanthi.com/News/India/2016/04/24123829/1-killed-in-clashes-at-Aligarh-Muslim-University-proctors.vpf

[16] தினமணி, அலிகர் பல்கலை.யில் துப்பாக்கிச் சண்டை: 2 இளைஞர்கள் பலி, By அலிகர், First Published : 25 April 2016 12:31 AM IST