Archive for the ‘இஸ்லாமிய பிரச்சினை’ category

ஜமேஷாமுபின் – ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது– தெரிய வரும் பின்னணி (3)

நவம்பர் 5, 2022

ஜமேஷா முபின்ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது – தெரிய வரும் பின்னணி (3)

சமய இலக்கியங்கள் அனைத்தும் தமிழில் உள்ளன: விசாரணையின் போது மீட்கப்பட்ட ஆதாரங்களைப் பற்றி அறிந்த ஒரு உயர்மட்ட அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், கோவை, உக்கடத்தில் உள்ள ஜமேஷா முபீனின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் வாசகங்கள் உள்ளிட்ட குறிப்பேடுகளில் ஒரு பகுதி டைரிகள் எனக் கூறினர்[1]. “ஜமேஷா முபீனின் நாட்குறிப்பு பதிவுகள் பெரும்பாலும் மற்ற மதங்கள், குறிப்பாக இந்து மதம் மற்றும் கிறித்துவம் பற்றிய அவரது பார்வையை வெளிப்படுத்துகின்றன. அவர் அந்த மதங்களின் கடவுள்களின் பெயர்களை மேற்கோள் காட்டியுள்ளார். மேலும், ஒருவரையொருவர் இணைக்கும் அம்புகளுடன் கையால் எழுதப்பட்ட சார்ட் விளக்கப்படத்தில் அவற்றை சித்தரித்துள்ளார். சி.. ஹிஜாப் சர்ச்சை, உணவு மீதான கட்டுப்பாடுகள், மாட்டிறைச்சி காரணமாக நடந்த கொலைகள் போன்ற சம்பவங்கள் இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் இரண்டாம் தர குடிமக்களாக மாறி வருகின்றனர். இந்தச் பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது என்றும் அவர் திகைத்தார்,” என்று வட்டாரங்கள் தெரிவித்தன[2]. மேலும் சமய இலக்கியங்கள் அனைத்தும் தமிழில் உள்ளன என்று தெரிவித்தனர்.

அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம்: மனிதர்களை காபிர், மோமின் எனப் பிரித்து, ஜிஹாதி [புனித போரில்] புரிந்து காபிர்கள் கொல்லப் பட வேண்டும் என்று எழுதியிருப்பது,இப்படி குண்டுவெடிப்புகள்  நடத்திக் கொண்டிருந்தால், மனித இனம் என்னாவது என்று யோசிக்காமல், மதவெறியுடன் இருந்தது, முதலியவற்றை கவனிக்கும் பொழுது, எங்கிருந்து  மனித நேயம்,  மனிதத்துவம், அமைதி எல்லாம் வரும் என்பது ஆராய வேண்டியுள்ளது. இந்நிலையில், கோவையில் கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள் சந்தித்து உரையாடினர்[3]. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்[4]. பிறகு, எப்படி, முஸ்லிம் இளைஞர்கள் அவ்வாறு சேர்ந்து திட்டமிடுவார்கள், என்றெல்லாம் தெரியவில்லை. பெற்றோர், உறவினர், மற்றோர் முதலியோர்களுக்குத் தெரியாமல் தான், ஒவ்வொரு தடவையும் இவ்வாறு நடைபெறுகிறது. அதேபோல சொல்லப் படுகிறது. ஆனால், மறுபடியும் ஏதோ ஒன்று வெடிக்கத்தான் செய்கிறது.  தவிர இந்த செய்தி வந்த பிறகு தான், பென்டிரைவ், அதில் எஐஎஸ் வீடியோக்கள் போன்ற செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. தமிழ்.இந்துவில் இன்று தான் (04-11-2022) அச்செய்தியே வருகின்றது

ஜமாத்துகளின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்: கோவை உக்கடம் பகுதியில் சம்பவ நிகழ்விடத்தின் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு ஜமாத் நிர்வாகிகள் இன்று சென்று பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது: “3 ஜமாத்களின் சார்பாக கோட்டை சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை சந்தித்து உரையாடினோம். கடந்த வாரம் இந்த பகுதியில் நடந்த சம்பவம் பல்வேறு சமூகங்களுக்கு இடையே ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இஸ்லாமியர்களான நாங்கள் 7 தலைமுறைகளாக இந்த கோட்டைமேட்டில் வாழ்ந்து வருகிறோம். இந்தப் பகுதியில் நாங்கள் ஒற்றுமையுடன், அண்ணன் தம்பிகளாக கடந்த 200 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். இந்த சூழலில் இங்கு நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை கோட்டைமேட்டில் உள்ள ஜமாத்துகளின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இஸ்லாம் ஒருபோதும் வன்முறையைத் தூண்டும் மார்க்கம் அல்ல. நாங்கள் அமைதியை போதிக்கிறோம். அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம். எந்தவிதமான மத பூசல்களுக்கும், அரசியலுக்கும் நாங்கள் ஆட்பட்டு விடக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

100-க்கும் மேற்பட்ட வீடியோக்கள்: முன்னதாக, கோவை மாநகர தனிப்படை போலீசார் கைதான 6 பேர் வீட்டில் சோதனை நடத்தினர்.  கிடைத்த பொருட்களில், ஒரு பென் டிரைவ் இருந்தது. சோதனை செய்த போது அதிர்ச்சி அடைந்தனர், ஏனெனில், அந்த பென் டிரைவ்வில் 100-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். அமைப்பின் சித்தாந்தங்கள் அடங்கிய வீடியோக்கள் இருந்துள்ளது. இதில், 6 பேரில் ஒருவரது வீட்டில் பென் டிரைவ் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது[5]. அதனை போலீசார் ஆய்வு செய்த போது அதிர்ச்சி ஏற்பட்டது. அதில், ஐஎஸ் தீவிரவாதத்துக்கு ஆதரவான ஏராளமான வீடியோக்கள் இருந்தன[6]. தீவிரவாதிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது போன்ற வீடியோக்கள் மற்றும் கழுத்தை அறுத்து கொலை செய்வது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோக்கள் இருந்தன[7]. இதுதவிர இலங்கை குண்டு வெடிப்பை நிகழ்த்திய நபரின் பேச்சு அடங்கிய வீடியோவும் இருந்துள்ளது[8]. இதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வளவு தெளிவாக இருந்தாலும், இப்பிரச்சினை ஏதோ மழைகாலத்தில் இதுவும் ஒரு செய்தி என்பது போல கருதுவது போலத் தோன்றுகிறது.

கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வாயிலாக, கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க முக்கிய தகவல்கள் கிடைத்தன: ‘கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வாயிலாக, கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க முக்கிய தகவல்கள் கிடைத்தன’ என, போலீசார் தெரிவித்தனர்.கோவையில், அக்., 23ல் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் நடந்த கார் குண்டு வெடிப்பில், பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார். இந்த குண்டு வெடிப்பை விசாரித்த போலீசார் சந்தித்த சிரமங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தன்று அதிகாலை, 4:00 மணிக்கு வந்த கார், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் ஒன்றரை நிமிடம் நிற்பதை கண்காணிப்பு கேமரா காட்சிகளில் காண முடிந்தது. அதன் பிறகே கார் வெடித்துள்ளது. கார் காத்திருந்த ஒன்றரை நிமிடத்தில், ஜமேஷா முபின் தான் கொண்டு வந்திருந்த வெடிபொருட்களை வெடிக்கச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். கார் வெடித்தவுடன், அந்த அதிர்ச்சியில், பூட்டப்பட்டிருந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் கதவு தானாக திறந்தது.

கண்காணிப்பு கேமரா காட்சிகளை கேட்டுச் சென்றபோது, பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகி கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்தது: கோவிலுக்குள் வசிக்கும் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், போலீசார் ஓடி வந்துள்ளனர்.குண்டு வெடிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியில், கோவில் கண்காணிப்பு கேமராவில் அடுத்த இரண்டரை நிமிடங்களுக்கு காட்சிகள் எதுவும் இல்லை. அதன் பிறகே காட்சி பதிவாகியுள்ளது.’கோவிலில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகள் தான் வழக்கில் துப்பு துலக்க பேருதவியாக இருந்தன’ என்கின்றனர் போலீசார்.’சம்பவத்தை சற்று தொலைவில் இருந்து பார்த்த போலீஸ் அதிகாரி, கோவில் அருகே இருக்கும் டிரான்ஸ்பார்மர் வெடித்து விட்டதாக கருதி, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தபடி ஓடி வந்துள்ளார். ‘அருகே வந்த பின் தான், கார் வெடித்தது அவருக்கும் தெரியவந்தது’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த கோவிலுக்கும், ஜமேஷா முபின் வசித்த வீட்டுக்கும் வெகு துாரம் இல்லை. அதிகபட்சம், 300 மீட்டர் தான் இருக்கும். ஆனால், இறந்தவர் யார் என்றும், கார் யாருடையது என்றும், அப்பகுதி பொதுமக்கள் யாரும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை.எந்த ஒரு தகவலும் தெரியாமல், கோட்டைமேடில் போலீசார் வீதி வீதியாக அலைந்தும் விபரம் கிடைக்காமல் தடுமாறினர். கார் வந்த வழித்தடம் கண்டறிவதற்காக, கண்காணிப்பு கேமரா காட்சிகளை கேட்டுச் சென்றபோது, பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகி கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததும் நடந்துள்ளது[9]. தற்போது வழக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் இது பற்றி விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்[10].

வேதபிரகாஷ்

05-11-2022


[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் பலியான ஜமேஷா முபீன்; இலக்கை நோக்கி பயணித்த சுயமான தீவிரவாதி! , Written by WebDesk, Updated: October 30, 2022 3:34:14 pm

[2] https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-blast-jamesha-mubeen-killed-he-was-self-radicalised-on-way-to-target-533273/

[3] தமிழ்.இந்து, அனைவருடனும் நல்லிணக்கத்தோடு வாழ விரும்புகிறோம்: கோவையில் ஜமாத் நிர்வாகிகள் பேட்டி, செய்திப்பிரிவு, Last Updated : 03 Nov, 2022 02:51 PM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/891704-we-want-to-live-in-harmony-coimbatore-jamaath-officials.html

[5] தினகரன், கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டம்? பென்டிரைவில் சிக்கிய வீடியோ ஆதாரம்; பரபரப்பு தகவல்கள், 2022-11-05@ 00:31:23

[6] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=811657

[7] தினத்தந்தி, .எஸ். வீடியோக்கள் அடங்கியபென் டிரைவ்பறிமுதல், நவம்பர் 5, 12:15 am (Updated: நவம்பர் 5, 12:15 am)

[8] https://www.dailythanthi.com/News/State/is-pen-drive-containing-videos-seized-829642

[9] தினமலர், கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க உதவியது கோவில் கேமரா,  Updated : நவ 05, 2022  01:32 |  Added : நவ 05, 2022  01:30

[10] https://www.dinamalar.com/news_detail.asp?id=3162429

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (3)

ஒக்ரோபர் 29, 2022

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (3)

26-10-2022 (புதன் கிழமை): தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. எல்லைக் கடந்த தீவிரவாத இணைப்புகளால், தமிழக முதல்வர் வழக்கை என்.ஐ.ஏக்கு மாற்ற பரிந்துரைத்தார்.

என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வின்சென்ட் சாலையில் உள்ள அப்சல்கான் வீட்டுக்கு சென்றனர். லாப்டாப்பைக் கைப்பற்றினர்.

 இந்த நிலையில், கார் வெடிப்பு சம்பவத்தில் 6-வது நபராக அப்சர்கான் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கார் வெடித்த போது உயிரிழந்த ஜமேஷா முபினின் உறவினர் அப்சர்கான் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 5 பேரிடமும் 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

27-10-2022 (வியாழன் கிழமை):  தமிழகம் இந்த வழக்கை, என்.ஐ.ஏவிடம் (NIA) ஒப்படைத்தது. வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் விக்னேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்[1]. என்.ஐ.ஏ எப்.ஐ.ஆர் (FIR) போட்டது. என்.ஐ.ஏ பதிவு செய்து விசாரித்து வரும் இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது[2]. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. அதில் அபாயகரமான 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

28-10-2022 (வெள்ளிக் கிழமை):  கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவன் – பெரோஸ் இஸ்மாயில் தான், ஈஸ்டர் குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்டு கைதாகி, கேரளா சிறையில் இருக்கும் மொஹம்மது ஹஸாருத்தீன் மற்றும் ரஷீத் அலி இருவரையும் சந்தித்தாக ஒப்புக் கொண்டான். இவர்களுக்கு ஐசிஸுடனும் [Islamic State of Iraq and Syrai (ISIS),] தொடர்பு உள்ளது[3].

109 பொருட்கள் பறிமுதல்அவற்றின் எடை 60, 70 கிலோவா, 100 கிலோவா?: முதலில் எச்சரிக்கையாக அமுக்கி வாசித்த ஊடகங்கள், பிறகு, பெரிய “துப்பறியும் சாம்பு”  ரேஞ்சில் செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டன[4]. 109 ஐட்டங்களை பட்டியல் போடவில்லை என்றாலும், எடை போட ஆரம்பித்த விட்டன. ஹராசு சரியில்லையா, நிருபர்களுக்கு எடை பார்க்கத் தெரியவில்லையா என்று தெரியவில்லை. 60, 70, 100 என்று குறிப்பிடுகின்றன[5]. பலியான ஜமேஷா முபின் மற்றும் முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 7 பேர் மீதும் 120 பி, 153 ஏ., உபா சட்டப்பிரிவு 16 மற்றும் 17 ஆகிய 4 பிரிவுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது[6]. இதில், வெடி விபத்தை ஏற்படுத்த ஜமேஷா முபின் திட்டமிட்டதாகவும், அவரின் வீட்டில் இருந்து 76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட், பிளாக் பவுடர், ஆக்ஸிஜன் சிலிண்டர், அலுமினியம் பவுடர், சிவப்பு பாஸ்பரஸ், 2 மீட்டர் நீளம் உள்ள திரி, கண்ணாடி துகள்கள், சல்பர் பவுடர், பேட்டரிகள், வயர், பேக்கிங் டேப், கையுறை, நோட்டு புத்தகம், ஜிஹாத் தொடர்பான குறிப்பு அடங்கிய டைரி, கியாஸ் சிலிண்டர் உள்பட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது[7]. மொத்த வெடிப்பொருட்களின் எடையை 65, 75, 100 கிலோ என்று பலவிதமாக ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன[8]. 76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட் என்றால், மீதி 33.5 கிலோ மற்றப் பொருட்கள் இருக்க வேண்டும், ஆக மொத்தம் 100 கிலோ என்று கணக்குப் போட்டிருக்க வேண்டும்[9].

கார்கள் பறிமுதல்: கோவையில் வெடி விபத்து ஏற்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் கடந்த ஒரு வாரமாக நின்றிருந்ததாக கூறப்படும் 12 கார்களை போலீசார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்[10]. வின்சென்ட் சாலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த 7 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  சதி வேலைகளுக்காக காரை பயன்படுத்தியது போல இரு சக்கர வாகனங்களையும் பயன்படுத்தலாம் என்ற கோணத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது[11].  இதில், 7 கார்களின் உரிமையாளர்கள் நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததையடுத்து அந்த கார்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள 5 கார்களின் உரிமையாளர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் கரும்புக்கடை, சுந்தராபுரம் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் புதிதாக 3 காவல் நிலையங்கள் உருவாக்கப்பட முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோவையில் குண்டு வெடிப்பு, கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, திருச்சியில் கேட்பாரற்று சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து 10 கார்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்[12]. விழிப்புணர்வு அதிகமாகவே இருக்கிறது போலும்[13]. எல்லா நகரங்களிலும், எல்லா இடங்களிலும், இவ்வாறு வாகனங்கள் நிறுத்தப் பட்டுள்ளன. ஆனால், கார் வெடித்தால் இவ்வாறான, அதிரடி நடவடிக்கை வேற்கொள்வார்களா என்று தெரியவில்லை. போலீஸார், திடீரென்று, இவ்வளவு எச்சரிக்கையாக இப்பொழுது செயல்படுவது தான் ஆச்சரியமாக இருக்கிறது. இருப்பினும், அவர்களது முயற்சிகளை பாராட்டலாம். நம்மை போன்று அவர்களும் கடமையுடன் செயல்படுகிறார்கள்.

கோவை கார் காஸ் சிலிண்டர் வெடிப்பு முதல் கார் குண்டு வெடிப்பு வரை: “கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விபத்து…….”  என்று ஆரம்பித்து, ஊடகங்கள், “கோவை காரில் காஸ் சிலிண்டர் வெடிப்பு விபத்து..”,  மற்றும், “கோவை காரில் இரண்டு காஸ் சிலிண்டர்களில் ஒன்று  வெடித்து விபத்து………”, .“கோவை மாருதி காரில் காஸ் சிலிண்டர் வெடித்த விபத்து………”, “கோவை மாருதி காரில் காஸ் சிலிண்டர் வெடித்த வழக்கு” என்றெல்லாம் குறிப்பிடப் பட்டு, “கோவை கார் குண்டு வெடிப்பு வழக்காக” மாறியுள்ளது. போலீஸாருக்கு விருது, பாராட்டு………………ஊடகங்களுக்கு, மெத்தப் படித்து, தமிழகத்தில் ஊறிப்போன நிருபர்களுக்கு, இதெல்லாம் தெரியாதது போல தலைப்பிட்டு செய்திகளை போடுவதிலிருந்து, ஒன்று அவர்களும் விசயங்களை மறைக்கிறார்கள் அல்லது யாருக்கோக் கட்டுப் பட்டு, அவ்வாறான செய்திகளை வெளியிடுகிறார்கள் என்றாகிறது. பிறகு, அவர்களது நடுநிலைத் தன்மை, ஊடக தருமம், பத்திரிக்கா தொழில் நியாயம், செக்யூலரிஸ சித்தாந்தம் முதலியவை பற்றி சந்தேகங்கள் எழத்தான் செய்யும்.

© வேதபிரகாஷ்

29-10-2022


[1] மாலைமலர், கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்என்... விசாரணை அதிகாரி நியமனம்,  Byமாலை மலர்28 அக்டோபர் 2022 4:53 PM

[2] https://www.maalaimalar.com/news/state/coimbatore-car-blast-incident-nia-appointment-of-investigating-officer-529573?infinitescroll=1

[3] Police sources, on Friday, October , said that one of the six accused in the Coimbatore blast case, confessed during interrogation that he met two men in a Kerala prison who had links with terror group Islamic State of Iraq and Syrai (ISIS), who were involved in the Easter bombings in Sri Lanka.  Feroz Ismail confessed that he had met Mohammed Azharuddin and Rashid Ali, lodged in a prison in the neighbouring state and further questioning is on to ascertain the motive behind the meeting, they said. Azharuddin and Ali are in jail in connection with a case against them in Kerala.

[4] தமிழ்.இந்து, கோவை | ஜமேஷா முபின் வீட்டில் 60 கிலோ வெடிமருந்து பறிமுதல்? – போலீஸ் கண்காணிப்பால் மிகப்பெரிய நாசவேலை தவிர்ப்பு, செய்திப்பிரிவு, Published : 26 Oct 2022 06:50 AM; Last Updated : 26 Oct 2022 06:50 AM

[5] https://www.hindutamil.in/news/tamilnadu/887653-60-kg-of-ammunition-seized.html

[6] தினத்தந்தி, கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் வீட்டில் இருந்து 109 பொருட்கள் பறிமுதல், அக்டோபர் 29, 4:47 am

[7] https://www.dailythanthi.com/News/State/109-items-seized-from-car-blast-victim-jamesha-mubins-house-824772

[8] மாலை மலர், ஜமேஷா முபின் வீட்டில் இருந்து 100 கிலோ வெடிப்பொருட்கள் பறிமுதல், By மாலை மலர்,27 அக்டோபர் 2022 9:40 AM

[9] https://www.maalaimalar.com/news/state/tamil-news-100-kg-explosives-seized-from-jamesha-mubins-house-528818?infinitescroll=1

[10] இ.டிவி.ப்சாரத்,கார் வெடிப்புச்சம்பவம் எதிரொலி: கேட்பாரற்று நிற்கும் வாகனங்கள் பறிமுதல்,

[11] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/coimbatore/after-car-blast-incident-in-coimbatore-police-seized-unattended-two-wheeler-and-cars-parked-on-the-roads/tamil-nadu20221028160747877877082

[12] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோவை சம்பவம் எதிரொலி: திருச்சியில் அனாதையாக நின்ற10 கார்கள் பறிமுதல், Written by WebDesk, Updated: October 28, 2022 3:10:41 pm

[13] https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-incident-reverberates-10-orphaned-cars-seized-in-trichy-532243/

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகிய நிலை (1)

ஒக்ரோபர் 29, 2022

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகிய நிலை (1)

22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட் கிழமை) வரை நடந்துள்ளவை என்ன?: 24-10-2022 அன்று தீபாவளி என்பதால், துணிமணி, பட்டாசு, ஸ்வீட் வாங்க வேண்டும், எல்லோருமே ஊருக்குச் செல்ல வேண்டும், வாங்கியதை குடும்பத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டும், சந்தோஷமாக கொண்டாட வேண்டும், என்று லட்சக்கணக்கில் மக்கள் வாகனங்களில், பேருந்துகளில், ரெயில்களில் சென்று கொண்டிருந்தனர். அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்ப, பட்ஜெட்டில் தீபாவளி கொண்டாட திட்டத்துடன் இருப்பர், சென்று கொண்டிருந்தனர். ஆனால், அப்பொழுது, கோயம்புத்தூரில் சிலர் வேறு விதமாக திட்டம் போட்டிருந்தனர் போலும். வெகுஜன மக்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளியை நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, ஊடகங்களில் வழக்கம் போல, தீபாவளி எதிர்ப்பு, பட்டாசு மறுப்பு, நாத்திக-நராகாசுரன் ஆதரவு செய்திகள் வந்து கொண்டிருந்தன[1]. பட்டாசு வெடிக்க வேண்டாம், குறிப்பிட்ட நேரங்களில் தான் வெடிக்க வேண்டும், மீறினால், வழக்கு, புகார், தண்டனை என்றெல்லாம் பெரிய போலீஸ் அதிகாரிகள் மிரட்டியதாக செய்திகள்[2]. அதே நேரத்தில் பட்டாசு விற்பனை பெருக்க வேண்டும் போன்ற பிரச்சாரமும் இருக்கிறது. இன்னொரு பக்கமோ, கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது போன்ற செய்திகள்.

இந்நிலையில் தான் கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்செய்திகள் வர ஆரம்பித்தன: 22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட் கிழமை) வரை நடந்துள்ள நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்தால், இந்த கோவை கார் குண்டு வெடிப்பு திட்டமிட்டு நடந்துள்ள-நடத்தப்பட்ட செயல் என்று அறிந்து கொள்ளலாம். பிறகு, மற்ற செய்திகள் எல்லாம் வெளிவர ஆரமித்துள்ளன. ஊடகங்களின் பாரபட்சமிக்க, செய்தி வெளியீட்டுப் போக்கும், “ஆபத்திலிருந்து” மெதுவாக, “குண்டு வெடிப்பு” என்று முடிந்துள்ளது. இருப்பினும் இந்த தீவிரவாதிகள், பயங்கரவாதிள் எல்லோருமே மரியாதையுடன் தான் குறிப்பிடப் படுகிறார்கள். மத்திய உளவுத்துறை காவல்துறையினர் ஜமிஷா தொடர்பான பல்வேறு தகவல்களுடன் அவரை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசுக்கு 2018ம் ஆண்டு முதன் முதலில் தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது[3]. தமிழக காவல்துறையினர் இதனை பெரிதாக கருதவில்லை என்று கூறப்படுகிறது[4].

22-10-2022 (சனிக்கிழமை இரவு): சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு ஜமேஷா முபின் வீட்டில் இருந்து அவர் உட்பட 5 பேர் மர்மபொருளை தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், முபின் தன்னுடைய வீட்டை காலி செய்ய வேண்டும் என்று கூறியதாகவும், அந்தப் பெட்டியில் ஸ்கிரேப் பொருள்கள் இருந்ததாக முபின் விளக்கம் அளித்ததாக கூறியுள்ளனர். அந்த சிசிடிவி காட்சிகளில் உள்ள மற்ற நபர்கள் 4 பேர் யார் என்பது குறித்து பிறகு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர், என்றெல்லாம் செய்திகள் பிறகு வெளி வந்தன. அப்படியென்றால், இவர்களும் முன்னமே இக்காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். சுற்றியுள்ளவர்கள், இவர்களது நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு, எச்சரித்திருக்கலாம், புகார் கொடுத்திருக்கலாம். ஆனால், முஸ்லிம்கள் எனும் போது, அமைதியாக இருந்து விட்டனர் போலும். ஒரு ஊடகத்தால், அங்கு செய்தி-விவரங்கள் சேர்க்கச் சென்றபோது, ஜன்னல் கதவுகளை அடைத்துக் கொண்டனர், யாரும் பேச முன்வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. 

23-10-2022 (ஞாயிற்றுக் கிழமை):  அதிகாலை சுமார் 4:45 மணி அளவில், கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு பெரும் வெடிச் சத்தம் கேட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் அங்கு வந்து பார்த்துள்ளனர். முதலில், ஏதோ பட்டாசு சத்தம் என்று கூட நினைத்திருக்கலாம். அந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதிகாலை 4 மணி அளவில் சாலையில் கார் செல்வது, கார் நிற்பது பின்பு வெடித்து சிதறும் காட்சிகள் வெளியாகி உள்ளது. விடியற்காலை காரில் உள்ள காஸ் சிலிண்டர் வெடித்து ஒரு ஆள் இறந்தான். செல்போன் உதவியுடன் இறந்தவன் அடையாளம் காணப் பட்டான். வெடித்து சிதறிய காரில் இன்னொரு வெடிக்காத சிலிண்டர் மற்றும் சுற்றிலும் ஆணிகள், பால்ரஸ் போன்றவையும் சிதறிக் கிடந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தடயவியல் துறையினர் காரிலிருந்து  2 முதல் 3 கிலோ 1.5 இன்ச் ஆணிகள் மற்றும் பால்ரஸ் குண்டுகளைக் கண்டறிந்துள்ளனர். ஆணி, பால்ரஸ் வேறு பணிக்காக கொண்டு செல்லப்பட்டதா அல்லது வெடி விபத்தை நிகழ்த்தும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டவையா என்பதை நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஆக, நிச்சயமாக கோவை போலீஸார் சென்னை உயர் அதிகாரிகளுக்கு தெரியப் படுத்தி, விசயம் முதலமைச்சருக்குச் சென்றிருக்கும்.

பிற்பகல் – 23-10-2022 (ஞாயிற்றுக் கிழமை):  தொடக்கத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்தை கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி தாமரைக் கண்ணன் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இந்தச் சம்பவத்தின் நிலைமை அறிந்து சென்னையிலிருந்து டி.ஜி.பி சைலேந்திர பாபு விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கோவைக்கு வந்தார். வெடி விபத்து நிகழ்ந்த பகுதியை ஆய்வு செய்தார். அதாவது, விசயம் சாதாரணமானது அல்ல என்பது தெரிந்து விட்டது. பிரசித்தி பெற்ற உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு மட்டுமின்றி, தீபாவளியையொட்டி, இப்பகுதியில் துணி எடுப்பதற்காக அதிக அளவில் மக்கள் கூடும் நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது கோவை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மசூதிகள் முன்பு போலீஸார் பாதுகாப்புப்பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

கார் குண்டு வெடித்தலில் இறந்தவன் ஜமேசா முபின்: போலீஸார் செல்போன், கார் எண் முதலியவற்றை வைத்துக் கொண்டு விவரங்களை சேகரித்தனர். ஜமேசா முபின் என்பவன் தான் இறந்திருக்கிறான் எனூ முடிவானது. அவன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர். அப்பா இல்லை. அம்மா மட்டும் தான். அவர் மனைவிக்கு செவி மற்றும் பேச்சுத்திறன் இல்லை. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஜமேசாவுக்கும் இதயம், கண் ஆகியவற்றில் சில பிரச்னைகள் உள்ளன. முன்பு பழைய புத்தகக் கடை நடத்தி வந்தவர், பிறகு துணி வியாபாரம் செய்து வந்திருக்கிறார். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர். அதனால்தான் கடந்த 2019ம் ஆண்டு இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு பிறகு ஜமேசா முபினிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்த கார் வெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு போலீஸ் அவர் வீட்டில் நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு கடிதத்தில் சுற்றிப் பார்க்கவுள்ள சுற்றுலா தலங்கள் என எழுதி ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம், ஆணையர் அலுவலகம், ரேஸ்கோர்ஸ், விக்டோரியா ஹால் (மாநகராட்சி அலுவலகம்) ஆகிய பகுதிகளை குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம், இந்தப் பகுதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இப்படி செய்திகள்……

வாட்ஸ்ஆப் பதிவு, இறப்பு உண்மை என்றால், அது தற்கொலை குண்டு வெடிப்பு ஆகிறது: விபத்து நடந்தக் காரை ரூ.10,000க்கு தல்காவிடம் இருந்து வாங்கியுளளார். இப்படி கைது செய்யப்பட்ட  அனைவரும், இந்த சதித் திட்டத்தில் ஒவ்வொரு பணியைச் செய்துள்ளனர். ஜமேசா அவ்வபோது கேரளா சென்று, அங்கு ஏற்கெனவே என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்டுள்ள அசாருதீன் என்பவரைச் சந்தித்து வந்துள்ளார். ஆங்காங்கே சிறுக சிறுக சேகரித்து 75 கிலோ வெடி மருந்துக்கான வேதிப் பொருள்களை வாங்கியுள்ளனர். வெடி பொருள் தயாரிப்பது எப்படி என்பதை யூ-ட்யூபில் தேடிப் பார்த்திருக்கிறார். கைது செய்யப்பட்டவர்கள் இல்லாமல், இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கிறது.” என்றனர். …….’வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில், என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரியும் போது எனது தவறை மன்னித்து விடுங்கள், குற்றங்களை மறந்துவிடுங்கள் எனது இறுதி சடங்கில் பங்கேறுங்கள். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்,” என்று பதிவிட்டு உள்ளார். இதற்கான புகைப்படத்தை அவர் பதிவேற்றி இருக்கிறார். இதை பற்றி விசாரிக்க வேண்டும். இது ஐஎஸ்எஸ் தொடர்புடைய வாசகம். அவர்கள்தான் தற்கொலை தாக்குதல்களுக்கு முன்பாக இப்படி எல்லாம் போஸ்ட் செய்வார்கள்…..இப்படியும் செய்திகள்! வாட்ஸ்-ஆப் பதிவு, இறப்பு உண்மை என்றால், அது தற்கொலை குண்டு வெடிப்பு ஆகிறது, “சூஸைட் பாம்பர்” என்றாகிறது!

© வேதபிரகாஷ்

29-10-2022


[1]  திக-திமுகவினர் தொடர்ந்து தங்களது ஊடகங்களில் இத்தகைய பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், உலகம் முழுவதும் கொண்டாடப் பட்டு, உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

[2]  சுவாசிக்கும் காற்று மாசு படுகிறது என்ற கோணத்தில் உச்சநீதி மன்றமே வரையறை கொடுத்திருப்பதால், அதன் மீது, மாநில அரசுகள் மற்றும் இதர நிறுவனங்கள், இயக்கங்கள் இதை பெரிது படுத்தி, பிரச்சாரம் செய்கின்றன.

[3] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், உளவுத்துறைஅன்றேகொடுத்த சிக்னல்!.. கிடப்பில் போடப்பட்டதா ? கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம், Raghupati R, First Published Oct 28, 2022, 7:56 PM IST; Last Updated Oct 28, 2022, 8:34 PM IST.

[4] https://tamil.asianetnews.com/tamilnadu/coimbatore-car-bomb-blast-tn-police-ignored-central-intelligence-agency-warning-rkgw4i

2001 தீவிபத்து, 2019  கற்ப்பழிப்பு,  ஏர்வாடியில் நடப்பதுஎன்ன? போதிய பாதுகாப்பு இல்லையா?

நவம்பர் 9, 2019

2001 தீவிபத்து, 2019  கற்ப்பழிப்பு,  ஏர்வாடியில் நடப்பது என்ன? போதிய பாதுகாப்பு இல்லையா?

Erwadi 2001 fire accident

தீ விபத்திற்குப் பிறகு, கூட்டு கற்பழிப்பு: உலகம் முழுவதும் நடைபெறும் குற்றச்சம்பவங்களுக்குப் பின் போதை முக்கியகாரணமாக இருக்கிறது[1]. சிறுவயதிலேயே போதைக்கு அடிமையானதன் விளைவாக ஏர்வாடியில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றுள்ளது[2]. 2001ம் ஆண்டில் தர்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்ட 28 பேர் உயிரிழந்து நாட்டையே உலுக்கியது. அது தான் ஏர்வாடியைப் பொறுத்தமட்டில் பெரிய விஷயமாக இருந்தது. அதன் பிறகு இந்த விவகாரம். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியிலுள்ளது சுல்தான் சையது இப்ராஹிம் சையது ஒலியுல்லா தர்கா. இந்த தர்காவிற்கு வந்தால் மனநோய் குணமாகும் என்ற நம்பிக்கையால், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மனநோயாளிகள் இங்கு வருவதுண்டு. அதிலும், இங்கு வந்து தங்கினாலேயே நோய் குணமாகும் என்ற நம்பிக்கையால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் புகலிடமாகமே மாறிவிட்டது ஏர்வாடி தர்கா. இந்த தர்ஹாவிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது காட்டுப் பள்ளிவாசல்.

Erwadi mental asylum - chained patients.4

2001ல் நடந்த தீ விபத்தில் பலர் மாண்டது: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் ஏராளமான மன நலக் காப்பகங்கள் உள்ளன. இங்கு மன நலம்பாதிக்கப்பட்ட நோயாளிகள் கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 2001-ம் ஆண்டு இந்தக் காப்பகத்தில், பெரும் தீவிபத்து ஏற்பட்டது. 06-08-2001 அன்று, தீ குபுகுபுவென காப்பகம் முழுவதும் பரவியது. சிறிய இல்லமாக அந்தக் காப்பகம் இருந்ததால் தப்பி வரவும் வழியில்லை. மேலும், மன நோயாளிகளுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை என்பதால் 25-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் கருகி இறந்தனர். தீ விபத்து குறித்து அறிந்த தீயணைப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்தனர். நீண்ட நேரப்போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. உள்ளே சிக்கி இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. சில பிணங்கள் அடையாளமே காண முடியாத அளவுக்கு கருகின. இறந்தவர்களில் 11 பேர் பெண்கள். மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

Erwadi mental asylum-786

2001ல் நடந்த தீ விபத்திற்கு, 2007ல் தண்டனை அளிக்கப் பட்டது: இங்கு செயல்பட்டுவந்த மனநலக் காப்பகங்களை அனைத்தும் 2001 ஆகத்து 13 அன்று மூடப்பட்டு, அங்கு இருந்த 500 மன நோயாளிகள் அரசாங்க பராமரிப்பில் கொண்டுவரப்பட்டனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி, என். ராமதாஸ் தலைமையிலான ஒரு ஆணையம் இந்த மரணங்களை விசாரிக்க அமைக்கப்பட்டது. ஆணையமானது மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் கவனிப்பானது மேம்படுத்தப்பட வேண்டும், மனநலக் காப்பகத்தை அமைக்க விரும்புபவர்கள் அனைத்து கைதிகளும் கொண்டதாக காப்பகத்தை அமைக்க வேண்டும், அதற்கு உரிய உரிமத்தைக் கட்டாயம் பெறவேண்டும் என்று பரிந்துரைத்தது. 2007 ஆம் ஆண்டு, தீவிபத்து நேர்ந்த மொகைதீன் பாதுசா மனநலக் காப்பக உரிமையாளர், அவரது மனைவி மற்றும் இரண்டு உறவினர்களுக்கு குற்றவியல் நீதிமன்றத்தால் ஏழு ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

Erwadi mental asylum - NAKKEERAN

19 வயது பெண் ஏழு பேரால் கற்பழிக்கப் பட்டது: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் தர்காவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவையெல்லாம் முகமதிய மதத்தின் படி, நம்பிக்கையின் ஆதாரமாக நடைப் பெற்று வருகிறது. இருப்பினும், இங்கு வருகிறவர்களுக்கு மனநலம் சரியாகுவதால், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பலர் சிகிச்சைக்கு வருகின்றனர். அவ்வாறு வருகின்றவர்கள் தர்காவின் அருகிலேயே வீடு எடுத்து தங்குவது வழக்கம். இருப்பினும் போதிய வசதிகள் இல்லாமல் இருக்கின்றன. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக 7 சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்[3]. கேரளாவைச் சேர்ந்த 19 வயது மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண், ஏர்வாடி தர்காவையொட்டியுள்ள காட்டுப்பள்ளி என்ற இடத்தில் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்[4].  இங்கு பல மனகாப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன என்று மேலே எடுத்துக் காட்டப் பட்டது. கடந்த சிலநாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர்கள், தர்காவின் அருகிலேயே வீடு எடுத்து தங்கியுள்ளனர்.

Erwadi mental asylum - chained patients.dinakaran

வழக்கம் போல ஊடகங்கள் மாறுபட்ட செய்திகளை வெளியிடுவது: இதனிடையே சம்பவத்தன்று இயற்கை உபாதை கழிப்பதற்காக நள்ளிரவில் வீட்டின் வெளியே பானு வந்திருக்கிறார்[5].  அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் ஏழுபேர், பானுவை அருகே இருக்கும் காட்டுப்பகுதிக்கு தூக்கிச்சென்றுள்ளனர்[6]. அங்கு வைத்து 7 பேரும் பானுவை மாறிமாறி பாலியல் வன்கொடுமை செய்தனர்[7]. இதில் வலியால் துடித்து பானு அலறியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு திரண்டு வந்தனர்[8]. ஆட்கள் வரும் சத்தம் கேட்டதும், சிறுவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். நக்கீரன்[9], “அதிகாலை வேளையில் மகளின் இயற்கை உபாதைக்காக அங்கிருக்கும் கழிவறைக்கு அழைத்து சென்றபோது, பின் தொடர்ந்து வந்த 16 வயதிற்குட்பட்ட 7 சிறுவர்கள் ஒன்று சேர்ந்து தந்தை பேகத்தை தாக்கி தள்ளிவிட்டு, அவரின் கண் எதிரிலேயே வாயை பொத்தி தூக்கிச் சென்று அருகில் இருந்த கருவேலங்காட்டுக்குள் வைத்து ஒன்றுமறியாத ஷானிதாவினை கூட்டு பலாத்காரம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்,” என்கிறது[10].

Erwadi mental asylum - chained patients

இதைப் பற்றி இன்னொரு செய்தி: இந்த நிலையில் அங்கிருந்து கடந்த 4 ஆம் தேதி இரவு மாயமான இளம்பெண், தர்காவுக்கு அருகில் மயங்கிய நிலையில் அதிகாலை அவ்வழியே சென்றவர்களால் மீட்கப்பட்டார். இதையடுத்து அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது[11]. இதையடுத்து அந்த பெண்ணின் தந்தை போலிஸில் அளித்த புகாரின் அடிப்படையில் போலிஸார் விசாரணை நடத்தினர்[12]. இதை தொடர்ந்து இளம்பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகியுள்ளதாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் ஏர்வாடி போலீசார் விசாரணை நடத்தினர்[13]. விசாரணையில் அந்த பகுதியைச் சேர்ந்த 14 முதல் 18 வயதிற்குட்பட்ட 7 சிறுவர்கள், கஞ்சா போதையில் இளம்பெண்ணை காப்பகத்தில் இருந்து இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது[14]. இந்த நிலையில் அந்த சிறுவர்களை பிடித்து, கீழக்கரை டி.எஸ்.பி. முருகேசன் தலைமையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ML plea about the issue

தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் அறிக்கை: ‘ஏர்வாடியில், மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணிடம், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட, ஏழு பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணை, மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும்’ என, தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் முஸ்தபா கூறியுள்ளார்[15]. அவரது அறிக்கை: “ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்காவில் தங்கி, மனநல பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வந்த பெண்ணை, 17 வயதிற்கு உட்பட்ட, ஏழு சிறுவர்கள், பாலியல் பலாத்காரம் செய்ததாக, அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த பெண்ணிற்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்யாமல், மீண்டும் இரும்பு சங்கிலியால், மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.தர்காவில், 2001ல் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து, யாரையும் இரும்பு சங்கிலி போட்டு கட்டக்கூடாது என, அரசு அறிவித்தது. அரசு உத்தரவு, காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.ஏர்வாடி தர்காவில், மீண்டும் தலைதுாக்கியுள்ள இந்த செயலை, உடனடியாக, அரசு தடுத்து நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். அந்த பெண்ணை மன நல காப்பகத்தில் சேர்க்க வேண்டும்,”  இவ்வாறு, அவர் கூறியுள்ளார்[16].

Erwadi டdargah-mental asylum-786

உண்மை நிலை என்ன?: விகடன் எடுத்துக் காட்டுவது, “மனநலம் பாதித்த பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கைது செய்யப்பட்டவர்கள், தொடர்ந்து இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் போலீஸார் இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முன்வருவதில்லை எனவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் புகார் கூறுகின்றனர்[17]. மேலும், ஏர்வாடி தர்ஹாவில் உள்ள மனநல மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மது, கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன[18]. இதைத் தடுப்பதிலும் போலீஸார் கவனம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது”. தமிழ் திரைப்படங்கள், டெலி சீரியல்கள், இத்தகைய தர்கா / மசூதி பேயோட்டுக் காட்சிகளை “பாசிடிவாகக்” காட்டி வருகின்றனர். வெறும் நீர், மயில்தோகை வைத்து, பேயோட்டுவது போன்ற காட்சிகளைக் காட்டுகிறார்கள். அடக்க முடியாத, மனநோயாளிகள் கட்டிப் போட்டு வைப்பது தெரிகிறது. அனுமதி பெறாத மனகாப்பகங்கள் செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது[19].

© வேதபிரகாஷ்

08-11-2019

Erwadi டdargah-mental asylum-666

[1] தமிழ்.சமயம், ஏர்வாடி: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வன்புணர்வு செய்த சிறுவர்கள்!, Samayam Tamil | Updated:Nov 6, 2019, 04:03PM IST

[2] https://tamil.samayam.com/latest-news/crime/mentally-challenged-girl-raped-by-7-boys-in-ervadi-ramanathapuram-district/articleshow/71938227.cms

[3] பாலிமர் செய்தி, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ததாக 7 சிறுவர்களிடம் விசாரணை, Nov 06, 2019.

[4] https://www.polimernews.com/amp/news-article.php?id=87682&cid=10

[5] நியூஸ்.7.டிவி, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: ஏர்வாடியில் 7 சிறுவர்கள் கைது…!, November 08, 20191 viewPosted By : Nandhakumar

[6] https://ns7.tv/ta/bst3fy

[7] தமிழ்.ஏசியா.நியூஸ், காட்டுப்பகுதியில் நடந்த பயங்கர சம்பவம்..! மனநலம் பாதித்த பெண்ணை கூட்டாக கற்பழித்த காமவெறி சிறுவர்கள்…, By Manikandan S R SRamanathapuram, First Published 8, Nov 2019, 12:09 PM IST…

[8] https://tamil.asianetnews.com/crime/women-was-raped-by-7-boys-q0n15b

[9] நக்கீரன், அவளுக்கு ஒன்னும் தெரியாதுடா… விட்டுடுடா..! அப்பாவின் கண்முன்னே சிதைக்கப்பட்ட மன நோயாளி பெண்..!!!, Published on 06/11/2019 (17:08) | Edited on 06/11/2019 (17:39)

[10] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/she-knows-nothing-deformed-mentally-ill-woman

[11] தமிழ்.வெப்.துனியா, ஏர்வாடி மனநலக் காப்பகத்தில் இருந்து மாயமான பெண் – பலாத்கார வழக்கில் 7 பேர் கைது !, Last Modified வியாழன், 7 நவம்பர் 2019 (10:14 IST)

[12] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/mentally-disabled-woman-raped-by-7-youths-119110700017_1.html

[13] News18 Tamil,  மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 7 சிறுவர்கள் கைது!, November 7, 2019, 12:55 PM IST

[14] https://tamil.news18.com/photogallery/tamil-nadu/police-arrested-7-boys-for-sexually-abused-mentally-ill-woman-vin-223575.html

[15] தினமலர், ஏர்வாடி விவகாரம் முஸ்லிம் லீக் கோரிக்கை, Added : நவ 07, 2019 23:19

[16] https://www.dinamalar.com/news_detail.asp?id=2406395

[17] விகடன், `மகளை குணமாக்க வந்தவருக்கு இப்படியொரு துயரம்!’-அத்துமீறியவர்களை விரட்டிப்பிடித்த ஏர்வாடி மக்கள், இரா.மோகன், உ.பாண்டி, Published:06 Nov 2019 5 PM; Updated:06 Nov 2019 5 PM

[18] https://www.vikatan.com/news/crime/7-booked-for-sexual-harassment-complaint-in-ervadi

[19] Ranganathan, Shubha. Does Community Mental Health Really Engage the Community?.” Power to Label: The Social Construction of Madness (2015): 17.

மறுபடியும் பாகிஸ்தானில் இன்னொரு ஷியா வழிபாட்டு ஸ்தலத்தின் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் – 52 பேர் சாவு, 150 படுகாயம், ஐசிஸ் பொறுப்பேற்றுள்ளது!

நவம்பர் 13, 2016

மறுபடியும் பாகிஸ்தானில் இன்னொரு ஷியா வழிபாட்டு ஸ்தலத்தின் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் – 52 பேர் சாவு, 150 படுகாயம், ஐசிஸ் பொறுப்பேற்றுள்ளது!

explosion-pakistan-718147பல்லாண்டுகளாக ஷியாக்களின் மீது சுன்னிகள் நடத்தி வரும் தாக்குதல்கள்: பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்களின் மீதான தாக்குதல் பல்லாண்டுகளாக நடந்து வருகின்றன. ஷியாக்களின் மக்கட்தொகை 10-25% சதவீதங்களில் உள்ளது என்று பாகிஸ்தான் கூறுக் கொள்கிறது. 2015 மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி சுமார் 40 மில்லியன் / நான்கு கோடி ஷியாக்கள் உள்ளதாக சொல்லிக் கொள்கிறது. ஆனால், அவர்கள் இரண்டாந்தர குடிமக்களைப் போலத்தான் நடத்தப் படுகிறார்கள். சுன்னி முஸ்லிம்கள் அவர்களை காபிர்கள் என்றே பிரகடனப் படுத்தி ஜிஹாத் என்ற “புனித போரை” அவர்கள் மீது தொடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும். ஷியாக்களின் புனித வழிபாட்டு தினங்களில் அவர்களின் வழிபாட்டு ஸ்தலங்களில் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். முதியவர், பெண்கள், குழந்தைகள் என்று கூடியிருந்தாலும், இரக்கமில்லாமல், குண்டுவெடிப்புகள் மூலம் கொன்று வருகின்றனர்.

pakistan-shrine-731590உலகம் முழுவதிலும் ஷியாக்களின் தாக்குதல் அதிகமாகி வருகின்றது: தலிபான்கள், முஜாஹித்தீன்கள், ஐசிஸ் தீவிரவாதிகள் என்று பல குழுக்கள் வளர்ந்து விட்ட நிலையில், அவர்கள் எல்லோருமே சுன்னிகளாக இருக்கும் பட்சத்தில், ஷியாக்களின் மீதான தாக்குதல்கள் மிகவும் கோரமாக, குரூரமாக, மிருகத்தன்மையுடன் நடத்தப் பட்டு வருகின்றன. இஸ்லாத்தில் இந்த சுன்னி-ஷியா பிளவு சண்டைகள் மொஹம்மது காலத்திலேயே ஆரம்பித்து, தொடர்ந்து நடந்து வருகிறது. முந்தைய இரான்–இராக் சண்டையும் அதனால் தான் நடந்தது. இரானுக்கும், சவுதி அரேபியாவுக்கும் மெக்கா-மெதினா நிர்வகிப்பு விவகாரங்களிலும், இப்பிரச்சினை தலைத் தூக்குவதுண்டு. அதனால், சவுதி அரேபியா இரானைக் கட்டுப் படுத்தி வைக்க எல்லா முறைகளையும் கையாண்டு வருகின்றது.

sufi-shrine-bombed-dawn-1

சனிக்கிழமை 12-11-2016 அன்று மாலை நடத்தப் பட்ட குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை என்றாலே மசுதிகளில் அல்லது மற்ற இலக்குகளின் மீது குண்டுவெடிக்கும் தாக்குதல் நடக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. பலோசிஸ்தான் குஜ்தார் மாகாணத்தில் லாஸ்பெல்லாவில் பிரபல தர்கா ஷா நூரனி சூபி வழிபாட்டுத் தலம் உள்ளது[1]. கராச்சியிலிருந்து 150 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு ஷியாக்கள் அதிகமாக வாழ்கின்றனர் என்பது தெரிந்த விசயமே. பிரதி வெள்ளிக்கிழமை தமால் என்ற சூபி சடங்கை பார்ப்பதற்கு இங்கு ஷியாக்கள் அதிகக் கணக்கில் கூடுவதுண்டு[2]. தமால் என்பது சூபி-நடனமாகும். சூபி பக்தர்கள் சுழன்று கொண்டே ஆடிப் பாடுவர். ஏ. ஆர். ரஹ்மான் சூபி மெட்டுகள் பலவற்றை சினிமா பாடல்களில் உபயோகப்படுத்தியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், ஷியாக்கள் தாக்குவதை அவர் கண்டிப்பதாகத் தெரியவில்லை. இங்கு சனிக்கிழமை 12-11-2016 அன்று மாலை சுமார் 500 பேர் தரிசனம் செய்வதற்காக திரண்டிருந்தனர்[3]. அப்போது கோவில் வளாகத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது[4]. இதில், ஏராளமான பக்தர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

sufi-shrine-bombed-dawn-2

இரவின் இருள், மருத்துவமனை அருகில் இல்லாதது இறப்புகள் அதிகமாக காரணமாகின்றன: சம்பவ இடத்திற்கு போலீசாரும், மீட்புக்குழுவினரும் ஆம்புலன்சுகளுடன் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர். பலர் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் உயிருக்குப் போராடினர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்[5]. அருகில் மருத்துவமனைகள் இல்லாத காரணத்தால் காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஷியாக்கள் மாகாணம் என்பதால், பாகிஸ்தான் அரசு பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறதா என்ற சந்தேகமும் எழுகின்றது. இருள் சூழ்ந்த காரணத்தால் மீட்புப் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது[6]. இந்த குண்டு வெடிப்பிற்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது[7]. ஐ.எஸ் உலகம் முழுவது உள்ள ஷியாக்களை ஒழிப்பதற்கு தயாராக உள்ளது[8]. சிரியாவில் ஷியாக்களைக் கொன்று குவித்து வருகின்றது[9].

sufi-shrine-bombed-dawn-6

52 பேர் சாவு, 150ற்கும் மேற்பட்டவர் படுகாயம்: 12-11-2016 சனிக்கிழமை அன்று 14 வயது சிறுவன், மசூதியில் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் குழந்தைகள் உட்பட சுமார் 43 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. நூறுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். நேரமாக-நேரமாக இந்த எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது. தாக்குதல் நடந்தபோது சுமார் 600 பக்தர்கள் அங்கே இருந்தார்களாம். பாகிஸ்தான் பலுசிஸ்தான் பகுதியில் குண்டு வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது[10]. வழக்கம் போல பாக்., அதிபர் நவாஸ் ஷெரிஃப், இம்ரான் கான் போன்றோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்[11].  ஆனால், இதனால், ஷியாக்கள் மீதான தாக்குதல்கள் குறையப் போவதில்லை.

sufi-shrine-bombed-dawn-8

இந்தியாவின் மீது, தமிழகத்தின் மீதான தாக்கம், விளைவு: இந்தியாவில் ஷியாக்கள், சுன்னிகளால் அடக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்றே தெரிகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில், “ஷிர்க்” என்ற போர்வையில், சுன்னிகள், ஷியாக்களை மிரட்டி வைத்துள்ளனர் எனலாம். ஷியாக்கள் என்று தங்களை அடையாளப் படுத்திக் கொண்டு, யாரும் தங்களது உரிமைகளைக் கேட்பதில்லை. ஆஜ்மீர், நாகூர் போன்ற தர்காக்களில் மொட்டைப் போட்டுக் கொண்டு சென்றலும், அவர்களும், இத்தீவிரவாத-ஜிஹாதி வகையறாக்களைக் கண்டிப்பதில்லை. ஏ. ஆர். ரஹ்மான் போன்றோரும், சுப்பித்துவம், சூபி இசை என்றெல்லாம் பேசி, தனது வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டாலும், ஷியாக்கள் தாக்கப்படும் போது, கொல்லப்படும் போது, கண்டு கொள்வதில்லை. கிலாபத் இயக்கத்தை [1919-1922] ஆதரித்ததின் மூலம் காந்தி இந்திய முஸ்லிம்களைப் பிரித்தார். இன்றும் கிலாபத்தை மறுபடியும் நிறுவியதாக கூறிக்கொள்ளும் ஐசிஸ் ஷியாக்களை வேட்டையாடி வருகின்றது. கிலாபத்தை காந்தியும், ஐசிஸும் ஆதரித்தது-ஆதரிப்பது வினோதமே, ஆனால், உண்மை.

 

© வேதபிரகாஷ்

13-11-2016

shia-rights-watch_shia-death-in-july-2015

[1] தினத்தந்தி, பாகிஸ்தானில் பயங்கரம்:பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டு வெடிப்பு 30 பேர் பலி, பதிவு செய்த நாள்: சனி, நவம்பர் 12,2016, 7:57 PM IST; மாற்றம் செய்த நாள்: சனி, நவம்பர் 12,2016, 7:57 PM IST.

[2] The Dawn, Tragic scenes at Shah Noorani shrine after bombing, 13th November 2016 | DAWN.COM

http://www.dawn.com/news/1295998/tragic-scenes-at-shah-noorani-shrine-after-bombing

[3] http://www.dailythanthi.com/News/World/2016/11/12195714/Several-feared-dead-in-a-blast-near-Shah-Nooranis.vpf

[4] மாலைமலர், பாகிஸ்தான் வழிபாட்டு தலத்தில் குண்டுவெடிப்பு: 30 பேர் பலி, பதிவு: நவம்பர் 12, 2016 19:58.

[5] http://www.maalaimalar.com/News/World/2016/11/12195838/1050492/At-least-30-killed-in-huge-blast-in-Lasbellas-Shah.vpf

[6] தினமலர், பலுசிஸ்தானில் குண்டுவெடிப்பு: 43 பேர் பலி; பலர் படுகாயம், பதிவு செய்த நாள்: நவம்பர்.12, 2016. 20.00; மாற்றம் செய்த நாள். நவம்பர்.12, 2016.00.34.

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1647324

[8] Express (UK), ISIS bomb at Muslim shrine kills at least 25 people in huge explosion in Pakistan, By KATIE MANSFIELD, 14:17, Sat, Nov 12, 2016 | UPDATED: 20:12, Sat, Nov 12, 2016

[9] http://www.express.co.uk/news/world/731590/explosion-pakistan-shah-noorani-shrine-death-toll-injured

[10] விகடன், பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு – 43 பேர் பலி, Posted Date : 23:16 (12/11/2016); Last updated : 23:15 (12/11/2016).

[11] http://www.vikatan.com/news/world/72258-huge-bomb-blast-in-dargah-shah-noorani-shrine-at-pakistan—43-feared-dead.art

முஸ்லிம்கள், இந்தியர்களின் நலன்களுக்கு அல்லது தீவிரவாதிகளின் செயல்களுக்கு ஆதரவு கொடுப்பதை பற்றிய தங்களது நிலையை தெளிவாக்க வேண்டும்!

ஜூலை 17, 2016

முஸ்லிம்கள், இந்தியர்களின் நலன்களுக்கு அல்லது தீவிரவாதிகளின் செயல்களுக்கு ஆதரவு கொடுப்பதை பற்றிய தங்களது நிலையை தெளிவாக்க வேண்டும்!

Pro-zakir ralley in patna raising pro-paki slogans 16-07-2016

ஜாகிர் நாயக் பிரிட்டனுக்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை(ஜூன் 19, 2010): இந்திய பிரபல மதபிரச்சாரகர் ஸாகிர் நாயக்கிற்கு பிரிட்டனுக்குள் நுழைவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்துள்ளதாக பி.பி.சி. இணைய சேவை செய்தி வெளியிட்டுள்ளது. எமது நாட்டின் பொது நலனுக்கு பொருத்தமற்றவர்கள் நாட்டுக்குள் நுழைய தாம் அனுமதிக்க மாட்டோம் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். மேலும், ஏற்க முடியாத நடத்தை என்று தாம் கருதும் நடத்தை உடையவர் ஸாகிர் நாயக். அதன் காரணமாகவே இவருக்கான விசா நிராகரித்துள்ளதாக பிரிட்டிஷ் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஸாகிர் நாயக் லண்டனிலும், வடக்கு இங்கிலாந்திலும் பல உரைகளை நிகழ்த்தவிருந்தார். இதேவேளை, ஸாகிர் நாயக் அண்மையில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இவரது உரையை கேட்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் கூடியமை குறிப்பிடத்தக்கது. ஸாகிர் நாயக் இஸ்லாம் குறித்து ஆளுமை கொண்டவர் என அங்கீகரிக்கப்பட்டவர். எனினும், ஏனைய மதங்களை நிந்திக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிடுபவர் என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

Zakir Naik inspired terrorists 01-07-2016

ஒவ்வொரு முஸ்லீமும் தீவிரவாதியாக வேண்டும் என்று பேசிவரும் ஜாகிர் நாயக்: இப்படியும் ஆங்கிலப் பத்திரிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஒஸோமா பின் லேடனைப் புகழும், தீரவாதக் கொள்கையையுடைய ஜாகிர் நாயக்கை தடைசெய்யப்பட்டார், என்றும் கூறுகிறது. அந்நாட்டு உள்துறை செயலர், “டிவி மதப்பிரச்சாரகர் தூண்டிவிடும் வகையில் பேசுவதாலும் அவருடைய ஏற்றுக்கொள்ளமுடியாத நடத்தையினாலும் தடைசெய்யப்படுவதாகக் குறிப்பிடுகிறார்”. இப்பொழுதும் அந்த கருத்தை மறுக்கவில்லை. ஆனால், திடீரென்று முஸ்லிம்கள் எப்படி நாரக்கிற்கு ஆதரவு தெர்விக்கிறார்கள் என்று பார்த்தால், அது முஸ்லிம் ஆதரவு, ஷியா எதிர்ப்பு, முதலியவற்றை விட, மோடி-எதிர்ப்பு என்ற வகையில் வந்து முடிந்துள்ளது. ஜாகிர் நாயக்கை முடக்கத்தான் பாஜக அரசு முயல்கிறது என்பது போன்ற சித்தரிப்பு மற்றும் பிரச்சாரம் ஆரம்பித்து விட்டது. இது கிட்டத்தட்ட “சகிப்புத் தன்மை” பிரச்சாரம் போல ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திக்விஜய சிங், எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டு விட்டதால், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, ஏகப்பட்ட அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார்.

அதிரை - எஸ்.டி.பி.ஐ போராட்டம்

வெள்ளிக்கிழமை 15-07-2016 பாட்னாவில் நடந்த ஆர்பாட்டம்: ஜாகிர் நாயக் மற்றும் அசாஸுத்தீன் ஒவைசி இவர்களை ஆதரித்து, பாட்னா விஞ்ஞான கல்லூரியிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் போட்டுக் கொண்டு ஆர்பாட்டம் செய்தவர்களை போலீஸார் கைது செய்தனர்[1]. அது மட்டுமல்லாது, அதன் பின்னணியுள்ளவர்களைப் பற்றி விசாரிக்கவும் உத்தரவு இடப்பட்டுள்ளது[2]. அமெரிக்காவே, காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை என்று சொல்ல பாகிஸ்தான் அமுக்கி வாசித்துக் கொண்டிருக்கிறது. அவ்வாறிருக்கும் போது, இந்தியாவில், பீஹாரில் இருக்கும் முஸ்லிம்கள் இவ்வாறு பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் எப்படி போட முடியும்? அத்தகைய மனோபாங்குதான் என்ன?  ஆக, காஷ்மீர பிரச்சினையையும், இந்த ஜாகிர் நாயக்-ஒவைசி பிரச்சினையுடன் முடிச்சுப் போட பார்க்கிறார்கள் போலிருக்கிறது.

 zakir naik protest chennai 2

தமிழக முஸ்லிம்கள் தீவிரவாதத்தை முதலில் எதிர்க்க வேண்டும்: தமிழக முஸ்லிம்கள் முதலில் இஸ்லாம் தீவிரவாததத்திற்கு உபயோகப்படுத்துவதை எதிர்க்க வேண்டும். ஐசிஸ்-ஐசில் முதலிய இயக்கங்கள் உலகளவில் அப்பாவி மக்களைக் கொன்று வருவதை யாரும் மறுக்க முடியாது. இன்று வரை இந்தியாவில் காஷ்மீ, உத்திரபிரதேசம், கேரளா, ஹைதரபாத் முதலிய இடங்களில் காகிர் நாயக்கை வைத்து நடைபெற்று வரும் விவகாரக்களைக் கவனிக்க வேண்டும். இந்தி முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களுடம் சேர்வதை அவர்கள் தடுக்கவில்லை. கேரள முஸ்லிம் பெற்றோர்களே கலங்கியுள்ள நிலையில், அதைத் தடுக்க என்ன செய்வது என்று விடை கொடுப்பதில்லை. சவுதி அரேபிய இஸ்லாம், இந்திய இஸ்லாத்திடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இஸ்லாமிய தீவிரவாத்த்தைப் பற்றி எளிதாக புரிந்து கொள்ல முடியும். சவுதி வகாபிசத்துவ தீவிரவாதத்தை ஆதரித்ததால் தான், ஜாகிர்நாயக்கின் வகாபிச சேவையைப் பாராட்டி இஸ்லாத்திற்கு சேவை செய்தவராக அறிவித்து 2015 ஆம் ஆண்டுக்கான மன்னர் பைசல் சர்வதேச விருதாக சவுதி வகாபிச அரசு 24 காரட் 200 கிராம் தங்கப் பதக்கத்தோடு இந்திய பண மதிப்பாக ரூபாய் 1,35,00,000/- (2 லட்சம் யுஎஸ் டாலர்கள்) அன்பளிப்புத் தொகையாகவும் வழங்கியது. மார்க்கண்டேய கட்ஜு ஸாகிர்நாயக் பிரச்சாரம் குறித்தும் சமயத்திற்கும் அறிவியலுக்கும் இடையிலான முரண்குறித்தும், வகாபிசம் சூபிகள் பேசிய இஸ்லாமிய அறவியல் கருத்துக்களிலிருந்து மாறுபட்டிருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார்.

 zakir naik protest chennai 3

முஸ்லிம்கள் ஏன் இந்திய குடிமகன்கள் என்பதை மறக்கும் விதமாக நடந்து கொள்கிறார்கள்?: இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள், எதிர்ப்புகள் முதலியவற்றில் முஸ்லிம்கள் கலந்து கொள்வதை கவனிக்க வேண்டும். அவர்களை ஏன் தீவிரவாத இயக்கத்தில் சேராமல் தடுக்காமல் இருக்கிறார்கள் என்பதை மற்றவர்கள் கேட்கத்தான் செய்கிறார்கள். வெறும் வார்த்தைகள் ஒன்றும் செய்து விடமுடியாது. ஆயிரம் அப்பாவி மக்களைக் கொன்று விட்டு, அதனை நான் கண்டிக்கிறேன் என்றால் என்ன பிரயோஜனம்? ஒசாமா பின் லேடனை ஆதரிக்கிறேன் என்ற ஜாகிர் நாயக்கை ஆதரித்து ஆர்பாட்டம் நடத்துவதால் பொது மக்கள் என்ன நினைப்பார்கள்? என்ன இது, தீவிரவாதிகளை எதிர்த்து தானே கூட்டம் போடுகிறார்கள் என்று நினைப்பார்கள். முஸ்லிம்கள் இந்திய குடிமகன்கள் என்பதை மறந்து, அடிக்கடி எல்லைகளைக் கடந்த ஆதரவுகளை தெரிவித்த்துக் கொள்வது, தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் முதலியோருக்கு சாதகமாக பேசுவது, அறிக்கைக்கள் விடுவது, ஆர்பாட்டங்கள் செய்வது முதலியனன, அவர்களை மேலும் இந்திய சமூகத்திலிருந்து பிரிக்கத்தான் செய்யும்.

ZAkir on sex

இசுலாமியத் தீவிரவாதம்  என்றால் என்ன?: இசுலாமியத் தீவிரவாதம் (Islamic Terrorism) என்பது அரசியல் நோக்கங்களை அடைவதற்காக மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்கள் ஆகும். இத்தீவிரவாதச் செயல்களுக்கான கருத்தியல் ஆதாரமாக குரானின் வசனங்களைக் கொள்ளுவதால் இவை இஸ்லாமியத் தீவிரவாதம் என அழைக்கப்படுகிறது. இஸ்லாமியக் குழுக்கள் அவர்கள் நிகழ்த்தும் வன்முறையையும் கொலைகளையும் குரான் வசனங்கள் மற்றும் ஹதீஸ் மூலம் நியாயப்படுத்துகின்றனர். சமீப காலங்களில் உலகெங்கும் தீவிரப் போக்குடைய இஸ்லாமியக் குழுக்கள் பிற இஸ்லாமியப் பிரிவைச் சார்ந்தவர்களையும் இறை நம்பிக்கையற்றவர்களையும் மற்றும் பிற மதத்தவர்களையும் கலீபா ஆட்சிமுறையின் படி தலையை வெட்டிக் கொல்லப் பரிந்துரைப்பது மற்றும் அடிமைப்படுத்துவது ஆகியவற்றைச் செய்கின்றனர். இவ்வாறான செயல்கள் மிதவாத இஸ்லாமியர்களுக்கும் தீவிரவாதப் போக்குடைய இஸ்லாமியர்களுக்கும் கருத்தியல் வேறுபாடுகளை உருவாக்குகின்றன. இத்தீவிரவாதச் செயல்களானது இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா, சோமாலியா, சூடான், ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, சீனா, காக்கேசியா, வட-அமெரிக்கா, மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் பசிபிக் பிராந்திய நாடுகள் உட்பட உலகம் முழுவதும் நடைபெறுகிறது. இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்கள் குண்டுவெடிப்புகள், கடத்தல், தற்கொலைப் படையினர் போன்றவற்றிற்காக பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் இணையம் வழி புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதாகவும் அறியப்படுகிறது. இப்படி விகிபீடியா கூறுவதை[3] முஸ்லிம்கள் மறுக்கவில்லையே?

 

© வேதபிரகாஷ்

17-07-2016

Zakir girls need not study

[1] India Today, Pro-Pakistan slogans raised in Patna, one arrested after police orders probe, Rohit Kumar Singh, Posted by Bijaya Kumar Das, Patna, July 16, 2016 | UPDATED 15:11 IST

[2] http://indiatoday.intoday.in/story/pro-pakistan-slogans-raised-in-patna-one-arrested-after-police-orders-probe/1/716225.html

[3] https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

2016ல் ஜாகிர் நாயக்கை ஆதரித்து சென்னையில் தமிழக முஸ்லிம்கள் ஆர்பாட்டம் நடத்துவது ஏன் – 2009ல் எதிர்த்தது ஏன்?

ஜூலை 17, 2016

2016ல் ஜாகிர் நாயக்கை ஆதரித்து சென்னையில்  தமிழக முஸ்லிம்கள் ஆர்பாட்டம் நடத்துவது ஏன் – 2009ல் எதிர்த்தது ஏன்?

நாயக் ஆதரவு - அனைத்து இஸ்லாமிய கட்சிகள் கூட்டமைப்பு - மோடி விரோதம்

23 இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்: கூட்டத்தில் கீழ்கண்டவர் கலந்து கொண்டு பேசினர்.  23 இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்[1].

  1. மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா,
  2. எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாக்கவி,
  3. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஜெ.எஸ்.ரிபாயி,
  4. மக்கள் சிவில் உரிமை கழக தேசிய குழு உறுப்பினர் டி.எஸ்.எஸ்.மணி,
  5. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.முகம்மது இஸ்மாயில்,
  6. ஐ.என்.டி.ஜெ. தலைவர் எஸ்.எம்.பாக்கர்,
  7. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் அ.ச.உமர் பாரூக்,
  8. இந்திய தேசிய லீக் தலைவர் பசீர் அகமது,
  9. ஜம்மியத் உலமாயே ஹிந்து தலைவர் மன்சூர் காஸிபி,
  10. வெல்பேர் பார்ட்டி தலைவர் எஸ்.என்.சிக்கந்தர்,
  11. ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் ஷப்பீர் அகமது,
  12. முஸ்லிம் லீக் தலைவர் பாத்திமா முஸப்பர்,
  13. இஸ்லாமிய விழிப்புணர்வு கழக தலைவர் முகம்மது கான் பாக்கவி

இப்படி, முஸ்லிம் அல்லாத இயக்கங்கள், பொட்டு வைத்த பெண்கள் முதலியோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளது வியப்பாக உள்ளது. உண்மையிலேயே அவர்கள் விசயம் அறிந்து கலந்து கொண்டுள்ளனரா அல்லது தமிழகத்திற்கே உரிய “கூட்டம் சேர்க்கும்” முறையில் கலந்து கொண்டார்களா என்று அவர்கள் தாம் சொல்ல வேண்டும்.

img_2005-1

அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு 25ன் கீழுள்ள உரிமைகள்: தாங்கள் ஜாகிர் நாயக்கைப் பற்றி புலன் விசாரணை மேற்கொள்வதில் தலையிடுவதில்லை என்றாலும், தீவிரவாதத்திற்கும், அவருக்கும் தொடர்பிருப்பது போன்று சித்தரிப்பதை எதிர்ப்பதாக கூறினர்[2]. அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு 25ன் கீழ், எல்லோருக்கும், தமது மதத்தைப் பின்பற்றவும், போற்றவும், பிரச்சாரம் செய்ய உரிமை இருக்கிறது என்றும், அதனை அரசு தடுக்கக் கூடாது என்றும் ஆர்பாட்டம் செய்தனர்[3]. மத்திய மற்றும் மஹாராஷ்ட்ரா அரசுகளை எதிர்த்து பலவித கோஷங்களை எழுப்பினர்[4]. பிரிவு 25ன் கீழ், எல்லோருக்கும், தமது மதத்தைப் பின்பற்றவும், போற்றவும், பிரச்சாரம் செய்ய உரிமை இருக்கிறது என்றாலும், அவை மற்றவர்களின் உரிமைகளை மீறக்கூடாது,  பொது அமைதியை பாதிக்கக்கூடாது என்றெல்லாம் கூட உள்ளன. அவற்றை மறந்து, மறைத்து, மறுத்து ஆர்பாட்டம் செய்வது வேடிக்கைதான்.

ஜாகிர் ஆதரவு போராட்டம் - 16-07-2016 - த.த.ஜா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் ஆர்பாட்டத்தை அறிவித்து, பிறகு நிறுத்துக் கொண்டது: முன்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் பட்டுக்கோட்டையில், “ஜாகிர் நாயக் அவர்களின் இஸ்லாமிய பிரச்சாரத்தை முடக்க சதி செய்யும் மத்திய பாஜக அரசை கண்டித்து”ம் மற்றும் ஜாகிர் நாயக்கிற்கு ஆதரவாக போராட்டம் என்று அறிவித்தது[5]. பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஜாகிர் நாயக்-கிற்கு ஆதரவாக நடைபெற இருந்த அனைத்து மாவட்ட ஆர்ப்பாட்டங்களும் ரத்து என்று அறிவித்தது. ஜாகிர் நாயக்கை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என மும்பை காவல்துறை தெரிவித்ததை தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்த அனைத்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் ரத்து செய்யப்பபடுகிறது என்றது[6]. அதாவது ஒதுங்கவில்லை, ஜாகிர் நாயக்கே அடுத்த ஆண்டுதான் இந்தியாவுக்கு வரப்போகிறார் எனும்போது, இப்பொழுது என்ன ஆர்பாட்டம் வேண்டியிருக்கிறது, “வேஸ்ட்” தான் என்று தீர்மானித்திருக்கும். ஆனால், மற்ற கூட்டத்தினர் அவ்வாறில்லை, அவர்களுக்கு “மோடியை” எதிர்க்க வேண்டும் என்ற திட்டம் இருக்கிறது. கேரளா, காஷ்மீர், பங்களாதேசம், பாரீஸ், துருக்கி…..என்று எங்கு என்ன நடந்தாலும் அவர்களுக்குக் கவலை இல்லை, எப்படியாவது “மோடியை” தாக்க வேண்டும்.

muslims-against-zakirnaik

2009ல் ஜாகிர் நாயக்கை எதிர்த்தவர்கள் இப்பொழுது – 2016ல் ஆதரிப்பதேன்? (ப்ழைய கட்டுரையிலிருந்து): பீஸ் அமைப்பைச் சேர்ந்த ஜாகிர் நாயக் என்பவர், வன்முறையை தூண்டும் வகையில் பிரசாரம் செய்து வருவதாகக் கூறி ஐஸ் அவுஸ் காவல் நிலையம் எதிரே சுன்னத் ஜமாத் பேரவையினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அதே நேரத்தில் சிலர் ஆதரித்து, நாயக்கின் கூட்டங்களை எடெற்பாடு செய்தனர். இணைதளத்தில் தேடியபோது, கீழ்கண்ட விவரம் கண்ணில் பட்டது[7]:

சென்னையில் டாக்டர் ஜாகிர் நாயக்

ஜனவரி 10, 2009, 3:37 பிற்பகல்
கோப்பு வகை: டாக்டர் ஜாகிர் நாயக்

இஸ்லாம் அல்லாத மக்களுக்காக உலகம் முழுதும் சென்று, இஸ்லாத்தின் செய்தியை எத்தி வைத்து வரும் சகோதரர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள், இன்ஷா அல்லாஹ், வரும் ஜனவரி பதினேழாம் தேதி,சனிக்கிழமை,பதினெட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் (JANUARY 17TH AND 18TH 2009) சென்னையில் உரையாற்ற இருக்கிறார்கள்.
சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில், ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள இஸ்லாமிக் இண்டெர்நேஷனல் பள்ளி வளாகத்தில், மாலை ஆறு மணி அளவில் நடைபெற உள்ளது. (ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வீ ஜி பி கோல்டன் பீச் அமைந்துள்ளது.
எல்லா மத மக்களும் வரவேற்கப்படுகிறார்கள், அனுமதி இலவசம். பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விவரம் வேண்டுவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்புகொள்ளவும்.
IRF CHENNAI,TEL: 42148804/05, EMAIL: IRFCHENNAI@GMAIL.COM
சகோதரர்களே,
உங்கள் மாற்று மத நண்பர்களையும் அழைத்து செல்லுங்கள்!
தூய மார்க்கத்தை எடுத்து சொல்லுங்கள்!!
அல்லாஹ்விடம் நற்கூலி வெல்லுங்கள்!

ஜாகிர்நாயக்கின் பெயர் சொல்லி முஸ்லிம்கள் ஒருபக்கம் அதிரடி பிரசாரம் செய்கின்றனர்! மறுபுறம் “சுன்னத் ஜாமாத்” என்று இவ்வாறு எதிர்க்கின்றனர்!
ஒன்றும் புரியவில்லையே?

© வேதபிரகாஷ்

17-07-2016

IRF - Islamic research Centre, Mumbai - The Hindu

[1] http://ns7.tv/ta/muslims-protest-against-central-government-chennai.html

[2] http://www.thenewsminute.com/article/islamic-groups-protest-chennai-demand-govt-cease-portraying-zakir-naik-terrorist-46610

[3] The Business Standard, Muslim outfits rally behind Zakir Naik, hold protest, Press Trust of India, Chennai July 16, 2016 Last Updated at 16:32 IST

[4] http://www.business-standard.com/article/current-affairs/muslim-outfits-rally-behind-zakir-naik-hold-protest-116071600502_1.html

[5] http://adiraipirai.in/?p=26723

[6] http://adiraipirai.in/?p=26767

[7]https://markaspost.wordpress.com/2009/01/10/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0/

முஸ்லிம்களின் பலதார திருமணங்களும், பெண்கள் படும் பாடும் – காரணம் இஸ்லாமா, பெண்களா, திருமணமுறையா?

மார்ச் 13, 2014

முஸ்லிம்களின் பலதார திருமணங்களும், பெண்கள் படும் பாடும் – காரணம் இஸ்லாமா, பெண்களா, திருமணமுறையா?

 

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது-குழப்பம்

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது-குழப்பம்

 

மூதா  போன்ற  நிக்காஹ்க்கள்  இஸ்லாத்தில்  தீங்கை  ஏற்படுத்துகின்றனவா?: முதல் மனைவியின் ஒப்புதலுடன் இரண்டாவது, இரண்டாவது மனைவியின் ஒப்புதலுடன் மூன்றாவது, மூன்றாவது மனைவியின் ஒப்புதலுடன் நான்காவது என்று செல்லலாம், பிறகு ஐந்தாவது-ஆறாவது என்று வேண்டுமானால், நான்கில் ஒன்றை கழட்டி விடவேண்டும் என்றாகிறது. தனித்தனியாக கல்யாணம் செய்துகொண்ட மனைவிகளை குடித்தனம் வைத்துவிட்டு, இஸ்லாமிய முறைப்படி வாழக்கை நடத்தலாம். இல்லது, வெளியூருக்குச் செல்கிறேன், வியாபாரம் நிமித்தம் செல்கிறேன் என்று சொல்லிக் கொண்டு, நேரத்தைப் பிரித்து, அப்பெண்களுடன் வாழ்க்கை நடத்தலாம். இதனால் தான், நான்கு பெண்களிடம் 14 குழந்தைகளைப் பெற்றார் போலும். இத்தகைய உண்மை நிகழ்ச்சிகள் இந்தியாவில் மற்றவர்களின் விமர்சனத்திற்கும் உள்ளாகிறது. மனைவிக்கு முன்பாக, வேலைக்காரியுடன் பழகுவது முதலியன, மனைகளை தாம்பத்திய ரீதியில் துன்புறுத்தவே என்று தெரிகிறது. இல்லை “மூதா” என்ற இஸ்லாமிய திருமணமுறையைக் கடைப் பிடிக்கிறார்களா என்ற சந்தேகமும் எழுகின்றது[1]. செக்யூலரிஸ நாடான இந்தியாவைப் பொறுத்த வரையில், இது விபச்சாரத்தைப் போன்றதே எனலாம். ஏனெனில், ஒருமணிக்கு ஒரு மனைவி, பிறகு தலாக் செய்து விடலாம் என்றால், அப்பெண்ணின் கதி என்ன என்பதை ஆராய வேண்டியுள்ளது.

முஸ்லிம் விவாகரத்தில் உண்டாகும் பிரச்சினைகள்

முஸ்லிம் விவாகரத்தில் உண்டாகும் பிரச்சினைகள்

தலாக், தலாக், தலாக்: முஸ்லீம் வழக்கப்படி, கணவன் தனக்கு தன் மனைவியைப் பிடிக்கவில்லை என்றால், “தலாக், தலாக், தலாக்” என்று மூன்றுமுறைக் கூறி, விவாக ரத்து செய்து விடலாம். இதைப்பற்றி பலதரமான கருத்துகள் நிலவி வருகின்றன[2]. முஸ்லீம்கள் பெரும்பாலும் இதை துஷ்பிரயோகம் செய்கின்றனர் என்பது பரவலான கருத்து. குறிப்பாக படிக்காத பெண்களை ஏமாற்ற இம்முறைக் கையாளப்படுவதாக, பலமுறை புகார்கள் வந்துள்ளன[3]. அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியமும், இதைப் பற்றி பலமுறை விவாதித்துள்ளது. இருப்பினும், அடிப்படைவாத முஸ்லீம்கள், இம்முறையைத் தொடர்ந்து கையாண்டு வருகின்றனர்.

 

Sha bano divorced in 1978

Sha bano divorced in 1978

தலாக், தலாக், தலாக்: முஸ்லீம் வழக்கப்படி, கணவன் தனக்கு தன் மனைவியைப் பிடிக்கவில்லை என்றால், “தலாக், தலாக், தலாக்” என்று மூன்றுமுறைக் கூறி, விவாக ரத்து செய்து விடலாம். இதைப்பற்றி பலதரமான கருத்துகள் நிலவி வருகின்றன[2]. முஸ்லீம்கள் பெரும்பாலும் இதை துஷ்பிரயோகம் செய்கின்றனர் என்பது பரவலான கருத்து. குறிப்பாக படிக்காத பெண்களை ஏமாற்ற இம்முறைக் கையாளப்படுவதாக, பலமுறை புகார்கள் வந்துள்ளன[3]. அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியமும், இதைப் பற்றி பலமுறை விவாதித்துள்ளது. இருப்பினும், அடிப்படைவாத முஸ்லீம்கள், இம்முறையைத் தொடர்ந்து கையாண்டு வருகின்றனர்.  

 

முஸ்லிமாக மாறி அதிகப் பெண்களை மணம் செய்து கொள்வது

முஸ்லிமாக மாறி அதிகப் பெண்களை மணம் செய்து கொள்வது

ஒருதலைப்  பட்சமாகத்  தீர்ப்பு  வழங்கிய மௌலானாவை பெண்கள்  தாக்கி  அடித்தனர்: தலாக் விசயத்தில் சரியாக தீர்ப்புக் கொடுக்கப்படவில்லை என்று ஒரு மத்ரஸாவைச் சேந்த ஒரு மௌலானாவும், ஊழியர்களும் பெண்களால் அடித்து நொறுக்கப்பட்டார்களாம்[4]. லக்னௌவில் சுல்தான்-அன்னுவல் மத்ராஸி என்ற முஸ்லீம் மடம் இருக்கிறது. மௌலானா அஸ்கர் அலி என்பவர் அங்கு இஸ்லாமிய முறைப்படி தீர்ப்பு வழங்கி வந்தார். கடந்த புதகிழமையன்று (23-06-2010), மும்தாஜ் ஃபாத்திமா என்கின்ற ஹீனா மற்றும்  அலி இம்ரான் என்பவர்களுக்கிடையேயுள்ள ஒரு விவாக ரத்து வழக்கில் / தலாக்கில் தீர்ப்பு வழங்கி தலாக்-நாமா என்ற விடுதலைப் பத்திரத்தையும் வழங்கி விட்டார்.  பாதிக்கப்பட்ட மும்தாஜ் ஃபாத்திமா என்கின்ற ஹீனா மற்ற பெண்களிடம் சொன்னதாகத் தெரிகிறது. உடனே, ஒருதலைப் பட்சமாகத் தீர்ப்பு வழங்கிவிட்டார் என்பதனால், கோபம் கொண்ட பெண்கள் – ஹீனா, நிஷாத் ஃபாதிமா, அர்ஷி முதலியோர், மத்ரஸாவிற்குச் சென்று, அந்த மௌலானாவை- இவ்வாறு அதிரடியாகத் தாக்கி அடித்தனர். போலீஸ் இதனை அறிவித்துள்ளனர். அடிவாங்கிய மௌலானா வாஸிர் கஞ்ச் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்[5]. பதிலுக்கு பெண்களும், சரியாக விசாரிக்காமல் உண்மைக்குப் புரம்பாக மற்றும் இருதரப்பினரது ஒப்புதலை வாங்காமல் தீர்ப்பு வழங்கியுள்ளர் என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்[6]. ஏற்கெனவே, அந்த பெண்கள் இஸ்லாமிய அமைப்பிற்கு செட்ட பெயரை ஏற்படுத்தி விட்டார்கள் என்று, உள்ளூரில் பேச ஆரம்பித்து விட்டார்கள். பெண்களோ, தாங்கள் மதத்தை மதிப்பதாகவும், ஆனால், ஆண்கள் இம்முறையால் தங்களது வாழ்க்கையினைக் கெடுத்து விடுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டுகின்றனர். இப்படி பாதிக்கப் பட்ட முஸ்லிம் பெண்கள் வீரிட்டெழுந்து போராடிய நிகழ்ச்சிகள் முற்றிலும் பதிவாகி உள்ளதா என்று தெரியவில்லை.

 

Mutah marriage

Mutah marriage

மூத்தா திருமணம் என்றால் என்ன?[7]: இதனால், இஸ்லாத்தில் உள்ள திருமணமுறை மற்றும் விவாகரத்து போன்ற பிரச்சினைகளும் அலப்படவேண்டும். நிக்காஹ் அல்-மூத்ஹா என்பது குறுகிய கால திருமணம் ஆகும். இவ்வார்த்தைக்கு “இன்பம், சந்தோஷம், முழுமையாக திருப்தியடைவது, பூர்த்தி செய்வது” என்று பொருள். “ஹஜ்” காலத்தில் மகிழ்சியாக, நிம்மதியாக இருப்பது என்ற நிலையைக் குறிக்கும். ஷியாக்கள் மட்டுமல்லாது சன்னி / சுன்னி முஸ்லிம்களும் இம்முறையைக் கடைப் பிடித்து வருகிறார்கள்[8]. இது மகிழ்சிற்காக, சந்தோஷத்திற்காக, இன்பத்திற்காக, ஜாலியாக இருப்பதற்கு செய்யப்படுவதாகும்[9]. ஆணும், பெண்ணும் முன்னமே குறிப்பிட்ட காலத்தைக் குறிப்பிட்டு, அதற்கான பிரதிபலன் என்ன என்பதையும் அறிவித்து செய்து கொள்வதாகும். இது வாய்-ஒப்பந்தமாகவும் இருக்கலாம், ஆனால், நிக்காஹாவாக இருந்தால் அறிவிக்கப்படவேண்டும். குறைந்த பட்சம் மூன்று நாட்களுக்கு இத்திருமண ஒப்பந்தத்தை செய்து கொண்டு முறித்துவிடலாம். இருப்பினும் அத்தகைய குறுகிய மற்றும் நெடிய சேர்ந்து வாழும் காலம் என்னவென்று குறிப்பிடவில்லை. இத்தகைய திருமணத்தை ஒரு முஸ்லிம் ஆண், முஸ்லிம் அல்லது முஸ்லிம் அல்லாத பெண்ணுடன் செய்து கொள்ளலாம். ஆனால், பெண் முன்னர் திருமணம் செய்து கொடிருக்கக் கூடாது, கற்புடன் இருக்க வேண்டும், தந்தையில்லாத கன்னியாக இருக்கக் கூடாது போன்ற சரத்துகளும் இதில் உள்ளன[10]. இதெல்லாம் பார்த்தால், பெண்கள் செக்ஸுக்கு மட்டும் தான் என்ற முறையில் நடத்தப் படுவதற்கு சமாக உள்ளது போலவுள்ளது. மேலும், இது விபச்சாரத்தை ஊக்குவிப்பது போலவும் உள்ளது.

 

India-Mutah Marriage

India-Mutah Marriage

இஸ்லாமிய  திருமணங்கள், விவாகரத்துகள்  சமரசம்  செய்துகொள்ளப்  படுகின்றனவா?: ஒரு பெண்ணுக்கு, எப்பொழுது தன் கணவன் இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொண்டிருக்கிறான் எனும்போதே, மனம் உடைந்து விடுகிறாள், பிறகு இரண்டாவது பெண்டாட்டி, மூன்றாவது பெண்டாட்டி, நான்காவது பெண்டாட்டி, ஐந்தாவது பெண்டாட்டி, அதுதவிர மற்றப் பெண்களுடன் தொடர்பு எனும் போது, அவளுக்குப் பைத்தியமே பிடிக்கலாம். இதெல்லாம், ஆண்கள் செய்து வரும் கொடுமையான சித்திரவதைகள் ஆகும். இது உடல்ரீதியாக அடிப்பது, உதைப்பது போன்ற குரூரங்களையும் விட குரூரமானது. அப்பொழுது, அவற்றை மதரீதியில் நியாயப்படுத்தும் போது, எந்த பெண்ணூம் ஒப்புக் கொள்ள மாட்டாள். ஆனால், இஸ்லாத்தில் ஜமாத் என்ற முறை வைத்து, இத்தகைய பெண்கள் மீதான நடத்தப் படும் குற்றங்கள் மறைக்கப் படுகின்றன. இப்படி, எப்பொழுதுவாது தைரியமாக அல்லது தாங்க முடியாமல் வெளியே வந்து புகார் கொடுக்கும் போது, வழக்குகள் பதிவு செய்யப் படுகின்றான, வழக்குகள் பதிவு செய்யப் பட்டால் செய்திகளில் வருகின்றன. அவ்வாறு நிக்காஹ் செய்த முஸ்லிம் ஆண் சில நேரங்களில் கைது செய்யப்படுகிறான்[11]. சிலர் பலதார திருமணமுறையை நியாயப் படுத்த, தான் “கடவுள்” அதனால், பல மனைகளை வைத்துக் கொள்வேன் என்று நியாயப் படுத்தும் முஸ்லிகளும் உள்ளனர்[12]. “பேஸ்புக்கை” உபயோகித்தும் முஸ்லிம்கள் பல பெண்களை மணந்து, அனுபவித்து ஏமாற்றியுள்ளனர்[13]. பிறகு அவை போலீஸ் ஷ்டேசனுக்கு அல்லது நீதிமன்றங்களுக்கு வெளியில் “சமரசம்” செய்துக் கொள்ளப்படுவதால், சில காலத்தில் மறக்கப்பட்டு விடுகின்றன.

 

Mutah prohibited in Islam - book

Mutah prohibited in Islam – book

இஸ்லாமிய  நாடுகளில்  இருமணம்  தடை  அல்லது  கட்டுப்பாட்டில்  இருக்கும்போது,   இந்தியாவில்  ஏன்  அது  சுதந்திரமாக  விட்டுவைக்கப்  பட்டுள்ளது?:  இஸ்லாமிய நாடுகளான சிரியா, டுனிசியா, மொரோக்கோ, பாகிஸ்தான், இரான், சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து இஸ்லாம் நாடுகளாக பிரகடனப் படுத்தியுள்ள குடியரசுகள் முதலியவற்றில் இருதார மணம் (Bigamy) ஒன்று தடை செய்யப் பட்டுள்ளது அல்லது முழுவதுமாகக் குறைக்க சட்டமுறைகளில் (banned or restricted) ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. ஆனால், இந்தியா செக்யூலரிஸ நாடாக இருந்தாலும், அவ்வாறான முறைகளைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை. இஸ்லாமிய நாடுகளை விட இந்தியாவில் அவ்வாறு முஸ்லிம்கள் பெண்களின் உரிமைகளை மதிக்கத் தெரியாத அளவிற்கு சட்டமீறல்களில் ஈடுபட்டு தப்பிக்க ஏன் அரசியல்வாதிகள் மெத்தனமாக இருக்க வேண்டும், அதனை அடிப்படைவாத முஸ்லிம்களும் ஆதரித்து வரவேண்டும்? சஹாப்புத்தீன் ஏதோ தான் இன்னொரு ஜின்னா போலத்தான் நடந்து கொண்டார். காங்கிரஸ்காரர்கள் அவரை அளவுக்கு அதிகமாகவே செல்லம் கொடுத்து வந்தனர்.

 

SC urges for Uniform Civil Code 2003

SC urges for Uniform Civil Code 2003

தமிழ்  திருமணமுறையா, இஸ்லாமிய  நிக்காஹ்  முறையா?: தமிழுக்காக ஏதோ போராடுவது போலவும், தமிழுக்காக பாடுப்பட்டது போலவும், தமிழ் வளர்ச்சிக்கு தியாகம் செய்தது போலவும் பேசுவர், எழுதுவர், பிரச்சாரம் செய்வர். ஆனால், “ஒருவனுக்கு ஒருத்தி” என்பதில் மட்டும் மாறுபடுபர், திருக்குறள் பெரிதல்ல, எங்களுக்கு திருக்குறான் தான் பெரிது என்றெல்லாம் கூறுவர். “ஒருவனுக்கு ஒருத்தி இல்லை” என்றும் தைரியமாகக் கூறமாட்டார்கள். “ஒருவனுக்கு பல பெண்கள்”, “ஒரே நேரத்தில் ஒரு ஆண் நான்கு பெண்டாடிகளை வைத்துக் கொள்ளலாம்” என்று இஸ்லாமிய சட்டத்தின்படி பேசுவர், நடத்தியும் காட்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால், பிறகு பெண்களின் உரிமைகளனென்று பேசும் போது, எப்படி அந்த ஒருவனின் நான்கு பெண்கள் / மனைவிகள் இவ்வாறு கஷ்டப்படவேண்டும், துன்புறுத்தபடவேண்டும், பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் செய்யவேண்டும், முதலியவற்றைப் பற்றி இவர்கள் விளக்க மாட்டார்கள். இப்படி பிறக்கும் 14, 16 குழந்தைகள் யாரை தந்தை / தாயார் என்று சொல்லிக் கொள்ளும், அவர்கள் பெரியவர்கள் ஆனால், அவர்கள் எப்படி தங்களது அப்பா-அம்மாக்களை அடையாளம் கண்டு கொள்வர், முதலிய கேள்விகளுக்கும் பதில் இல்லை.

 

Mutah marriage Quran position

Mutah marriage Quran position

நான்கு  மனைவிகள், ஏராளமான  குழந்தைகள்  என்பது  என்ன?: குடும்பக் கட்டுப்பாடு எங்களுக்கு தேவையில்லை என்பதையும் அவர்கள் செய்து காட்டுவதையும் இதில் கவனிக்கலாம். ஒவ்வொரு மனைவி மூலமும் 3 / 4 குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள் என்றும் தெரிகிறது. மனைவிகளைத் துன்புறுத்துவது ஆனால் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது என்று நடப்பதால், இதன் பின்னணி என்ன என்றும் ஆராய வேண்டியதுள்ளது. இஸ்லாம் படி நாங்கு பெண்டாட்டிகளை வைத்துக் கொள்வேன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் யாரும் கேட்க முடியாது, ஏராளமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்வேன் என்றாலும், முஸ்லிம்களைக் கேட்க முடியாது. பொதுவான குடும்பமுறை, குடும்பம், பெற்றோர் மகன்-மகள் உறவுகள் இவற்றை குழப்பும் இந்த நிக்காஹ்-பந்தங்கள் செக்யூலரிஸ இந்தியாவில் எந்த முடிவுகளைக் கொண்டு வரும் என்றும் புரியவில்லை. பெண்ணியம் பேசும் வீராங்கனைகள், பெண்ணுரிமை செக்யூலரிஸ சிங்கங்கள், மாதர் திலக விடுதலைப் புலிகள், குடும்பச் சட்டத்தைக் குடித்த சிறுத்தைகள், முதலியன கண்டுகொள்ள மாட்டார்கள் போலும். ஆகவே, தமிழ் திருமணமுறையா, இஸ்லாமிய நிக்காஹ் முறையா எது வேண்டும் என்று கேட்டால், தமிழ் திருமணமுறை வேண்டும் என்று எந்த முஸ்லிமும் சொல்லமாட்டான்.

 

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது

இது  பெண்கள்  பிரச்சினையா, இஸ்லாம்  பிரச்சினையா?: எனவே இது இஸ்லாமியப் பிரச்சினை என்று எடுத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. மேலும், இதில் இந்து பெண்கள் சம்பந்தப் படும் போது, ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன, உறவுமுறைகள் பாதிக்கின்றன, குடும்பங்கள் சிதறுகின்றன, பெரும்பாலும் பாதிக்கப் படுவது, இந்துக்குடும்பங்களும்,. உறவுமுறைகளும் தான். ஏதோ ஆரம்பித்தில் முஸ்லிம்கள் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுவது போல நடித்தாலும், நாளடைவில் முழுவதுமாக முஸ்லிம் மயமாக்கும் முயற்சி தான் நடக்கும், அப்பொழுது பெற்றோர்-உற்றோர் அந்நியர் ஆவர். மோமின்-காபிர், தாருல்-ஹராம் – தாருல்-இஸ்லாம் என்றெல்லாம் பேசப்படும், பெண்ணின் கடந்த காலம் நிந்திக்கப்படும், கேவலப் படுத்தப்ப்படும், தூஷிக்கப்படும், ஆனால், பெண் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு போகவேண்டும். ஒருதடவை “நீயா-நானா” நிகழ்ச்சியிலேயே, முஸ்லிம் பையனைக் காதலித்து மணந்து கொண்ட இந்து பெண் எப்படி நெகிழ்ச்சியுடன் பேசினாள், கண்கள் கலங்கினாள் என்பதனை பார்க்க முடிந்தது, உணர முடிந்தது. இது இந்தியா முழுவதும் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றது.

 

© வேதபிரகாஷ்

13-03-2014


[1] பைசூல்-பர்வீன் விவகாரத்தில் “மூதா” திருமணம் பற்றி விளக்கப்பட்டுள்ளது.

https://islamindia.wordpress.com/2013/12/03/now-complaint-on-faizul-includes-ketamine-smuggling-also/

[7] Nikā al-Mutʿah (Arabic: نكاح المتعة‎, “pleasure marriage”) is a fixed-term or short-term marriage in Shia Islam, where the duration and compensation are both agreed upon in advance. It is a private and verbal marriage contract between a man and an unmarried woman and there must be declaration and acceptance as in the case of nikah. The length of the contract and the amount of consideration must be specified. There is no minimum or maximum duration for the contract. The Oxford Dictionary of Islam states that, “the minimum duration of the contract should be at least three days”. The wife must be unmarried, either Muslim or one of the ahl-e-kitab, she should be chaste and should not be addicted to fornication or a virgin without father, and due inquiries should be made into these regards. At the end of the contract period (i.e. dissolution of Mut’ah), the wife must undergo iddah.

[8]  Both Shias and Sunnis agree that Mut’ah was legal in the beginning. Ibn Kathir writes: “There’s no doubt that in the outset of Islam, Mut’ah was allowed under the Shari’ah”.

Esposito, John L. (2003). The Oxford dictionary of Islam. Oxford University Press. p. 221. Retrieved April 4, 2013. Tafsir al-Qur’an al-Azim, Volume 1 p. 74.

[9] Mut’ah is an Arabic word meaning literary “joy, pleasure, compliance, fulfillment or enjoyment.’ Its meaning has to be taken in context of how it is used. So for example in an oath the word mutah means compliance or fulfillment; in terms of marriage it means happiness or joy while in terms of Hajj it means relaxing. As it has a number of meanings the Quran has nanstead the word ISTIMTAH is used which for Shias means mutah. Mutah in pre Islamic Arabia was used to mean pleasure marriage. Hence, the Shias says that when in the Quran the verse 4:24 says: “Forbidden to you are married women except your slave girls….” they say that as the same verse uses the word ISTIMTAH, therefore, this means that you cannot have temporary marriage with a married woman except if she makes her your slave girl. In Al Mizan by Ayatullah Tabatabaei the claim is made that often the Companions of the Prophet would withhold their slave girls from their husbands for two months to ensure they were not pregnant and have sex through mutah with them. Then after that they would withhold the girls again for two more months before returning them to their husbands. The Ayatuallah quotes this to prove his point that the Companions used the word Istimtah to mean mutah which was used in the context the pre Islamic Arabs did.