Archive for the ‘இல்லாதது என்ற நிலை’ category

உலக அமைத்திற்காகப் பிரார்த்தனை செய்து கொண்டேன் – சொன்னது / எழுதியது தலைவெட்டிராஜா!

மார்ச் 10, 2013

உலக அமைத்திற்காகப் பிரார்த்தனை செய்து கொண்டேன்  –  சொன்னது  /  எழுதியது தலைவெட்டிராஜா!

Raja Parvez Ashraf  inside the dargah of Khwaja Moinuddin Chishti

முஸ்லீம் பிரதம மந்திரியின் தர்கா வழிபாடு: பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரஃப் சனிக்கிழமை (09-03-2013) அன்று ஆஜ்மீரில் உள்ள தர்காவில் வழிபாடு நடத்தினார். அவரைப் புறக்கணிக்கப் போவதாக ஆஜ்மீர் ஷெரீஃப் தர்கா மதகுரு ஜைனுல் அபெதின் அலி கான் அறிவித்தாலும், வந்தவருக்கு எல்லாம் மரியாதைகளும் செய்யப்பட்டன. மேளாதாளத்துடன் வரவேற்கப்பட்டார்[1] [ Ashraf was welcomed in the dargah with the beating of drums and the representatives of Dargah Committee and Anjum Khuddam Syedzadgan received him at the entrance gate]. தர்கா வாசலில் இப்படி மேளதாளம் அடிக்கலாமா என்று தெரியவில்லை[2]. தலையில் தலைப்பாகை வைப்பது,தௌடை அளித்தது, இத்யாதிகள் எல்லாமே நடந்தன.

Raja Parvez Ashraf with his family at the shrine of Khwaja Moinuddin Chisht

உலகத்திற்குஅமைதிவேண்டும், பாகிஸ்தானிற்குவளம்வேண்டும்: எல்லாவற்றையும் விட வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அந்த தலைவெட்டியான் தான் , “உலக அமைத்திற்காக பிரார்த்தனை செய்து கொண்டேன்” – சொன்னது / எழுதியதுதான்! இப்படித்தான் பாகிஸ்தான் நாளிதழ் வெளியிட்டது[3]. ஆனால், அந்த தலைவெட்டி ராஜா முழுக்க எழுதியுள்ளது – “....I wish for peace in the world and for peace and prosperity in Pakistan”! “பாகிஸ்தானிற்கு வளம் வேண்டும்” என்று சேர்த்துதான் எழுதியுள்ளான்[4]. அதாவது, உலகத்தில் அமைதி வேண்டும் என்றால், உலகத்திற்கு இஸ்லாம் வேண்டும் என்ற பொருளும் உண்டு. அதனால், உலகத்திற்கு அமைதியும், பாகிஸ்தானிற்கு வளமும் வேண்டும் என்று இந்தியாவிற்கே வந்து எழுதியுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! வழக்கம் போல, நமது ஹிந்துவோ, ““I and my family members are fortunate to get an opportunity to visit the dargah. I express gratitude to Gharib Nawaz for this,” he wrote in Urdu.” என்று குறிப்பிட்டுள்ளது! அதாவது, இந்த தர்காவிற்கு நானும் எனது குடும்பத்தாரும் வந்ததற்காக பாக்கியத்தை செய்துள்ளோம். இதற்கான நன்றியை நான் கரீப் நவாஜிற்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று உருதுவில் எழுதியுள்ளார்[5].

Raja Parvez Ashraf shook hands with Khushid

பீரே வா என்றால், சோனியா வராதே என்றா சொல்வார்?: காதிம் வழித் தோன்றல்கள் எனக் கூறிக் கொள்ளும் சையத் பிலால் சிஷ்டி கூறுகையில், “எனது அழைப்பின் பேரில்தான் அஷ்ரஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் வருகின்றனர். அவர்களின் புனித யாத்திரைக்குத் தேவையான உதவிகளை நான் செய்வேன்‘ என்றார். அதனால் தான், பேனாவில் ரத்தத்தை நிரப்புவேன் என்று மிரட்டிய, குர்ஷித் அனுப்பப்பட்டார், நன்றாக ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்தளிக்கப்பட்டது, டாடா காண்பித்துவிட்டு சென்றுவிட்டார் தலைவெட்டி ராஜா!

தர்கா வேறு மசூதி வேறு என்றால், தர்காவில் தொழுகை ஏன்?: தர்கா வேறு, மசூதி வேறு என்று ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. ஆனால், பிணங்களைப் புதைத்து இடங்களை ஆக்கிரமித்தது தான் முகலாயர்களின் / முகமதியர்களின் வேலையாக இருந்தது. கோவில்கள், மடங்கள், நதிக்கரை புனித இடங்கள் (கட் / காட்டு) முதலியவை அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன. தர்கா வழிபாடே ஹராம் / இஸ்லாமிற்குப் புரம்பானது என்று அத்தகைய ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. பிறகு எப்படி இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன? மற்ற விஷயங்களுக்கு ஆர்பாட்டம் செய்யும் தமிழக முஸ்லீம்கள் மௌனிகளக இருக்கின்றார்கள். உண்மையில் அவர்கள் ஆஜ்மீருக்குச் சென்று போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமே, ஆனால் செய்யவில்லையே?

வேதபிரகாஷ்

10-03-2013


[2] மசூதி முன்னால் மேளதாளம் அடிக்கக் கூடாது என்று அலரும் முஸ்லீம்கள் இதை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள்? தர்காவிற்கு பக்கத்தில் மசூதி கட்டி, சுவரை வேறு கட்டி வைக்கிறார்கள்.

[4] “…I wish for peace in the world and for peace and prosperity in Pakistan,” Ashraf wrote in Urdu in the visitors book after spending 30 minutes at the shrine.  http://zeenews.india.com/news/nation/pakistan-pm-raja-pervez-ashraf-prays-at-ajmer-sharif_834170.html

நாத்திகர்களும், முகமதியர்களும் சித்தாந்த ரீதியில் விவாதத்தில் இறங்குவார்களா?

ஏப்ரல் 25, 2010

நாத்திகர்களும், முகமதியர்களும் சித்தாந்த ரீதியில் விவாதத்தில் இறங்குவார்களா?

ஈ. வே. ரா வே பல நேரங்களில் முகமதியர்களுடன் தேவையில்லாமல், தனது சுயமரியாதையை இழந்து முகமதியர்களில் அடிபணிந்து சென்றுள்ளார்.

அந்நிலையில், அம்பேத்கர் உயர்ந்து நிற்கின்றார்.

முகமதியர்கள் ஈ.வே.ராவை என்றுமே லட்சயம் செய்ததில்லை. ஜின்னாவே சுடச்சுட கடிதம் அனுப்பியும், வேண்டுமென்றே முகமதியர்கள் கால்களில் விழுந்தது, அவர்களுக்கே வியப்பாக இருந்திருக்கிறது.

இன்று பெரியார்தாசன் அப்துல்லாவாக மாறியதை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்வது போல எழிதி வருகிறர்கள்.

நாத்திகர்கள், திராவிட நாத்திகர்கள் என்றுமே உண்மையான நாத்திகர்களாக இருந்ததில்லை.

எந்த உண்மையான முஸ்லீமும் காஃபிருடன், அதிலும் நாத்திக காஃபிருடன் எந்த விதமான தொடர்பையும் வைத்துக் கொண்டிருக்க முடியாது.

அவ்வாரு இருக்கின்றனர் என்பதிலிருந்தே நாத்திகர்கள் மற்றும் முஸ்லீம்களின் போலித்தனம் தெரிகிறது.

உண்மையில் நாத்திகர்கள், அதிலும் திராவிட நாத்திகர்கள், முகமதியர்கள் போடும் வேடம்தான், அதிகமாகத் தெரிகிறதேத் தவிர, இரண்டும் சித்தாந்த ரீதியில் தைரியமாக விவாதித்ததாகத் தெரியவில்லை.

நக்கீரன், முத்தாரம், தினமலர், தி ஹிந்து……………………?

மார்ச் 29, 2010

நக்கீரன், முத்தாரம், தினமலர், தி ஹிந்து……………………?

இவற்றிற்குள்ள தொடர்பு என்ன?

ஆமாம்,

தெரிந்தோ அல்லது தெரியாமலோ, அத்தகைய ஒன்றை

பார்த்தோ அல்லது பார்க்காமலோ, அத்தகைய ஒன்றை

யாரோ வரைந்து விட்டாராம்!

சித்தரித்து விட்டாராம்!

மற்றொருவருக்கும், தெரிந்தோ அல்லது தெரியாமலோ, பார்த்தோ அல்லது பார்க்காமலோ, இருக்கும்-இருந்த-ஒன்றை, அவர் – அந்நிலையிலேயே அச்சிட கொடுத்து விட்டாராம்!

ஒன்றுமேத் தெரியாத அச்சடிக்கும் தொழிலாளியும் [இப்பொழுது மிஷின்-தான்] தெரிந்தோ அல்லது தெரியாமலோ, பார்த்தோ அல்லது பார்க்காமலோ, இருக்கும்-இருந்த-ஒன்றை அச்சடித்து விட்டாராம் [தொழிலாளிக்கும் மரியாதை].

பிறகெப்படி,தெரிந்தோ அல்லது தெரியாமலோ, பார்த்தோ அல்லது பார்க்காமலோ, இருக்கும்-இருந்த-ஒன்றை மற்றவர்கள் அடையாளம் காணுகிறார்கள், கண்டுகொள்கிறார்கள்?

இஸ்லாத்தில் உருவ வழிபாடு இல்லையா?

மார்ச் 18, 2010

இஸ்லாத்தில் உருவ வழிபாடு இல்லையா?

இஸ்லாத்தில் உருவ வழிபாடு (Idol worship) இல்லை என்று சொல்லப்படுகிறது. உருவ வழிபாடு பாவம் – Idolworship is sin என்றும் அவ்வாறு செய்பவர்களைப் பாவிகள் (sinners) என்றும் கிருத்துவர்களும் கூறுவர். இதனால் அவர்கள் உருவ வழிபாட்டுக்காரர்களை ஏதோ மிகவும் மோசமானவர்கள், நம்பிக்கையில்காதவர்கள் (infidels, idolators, kafirs), செய்யக்கூடாததை செய்துவிட்டவர்கள் என்பதுபோலக் குறைகுஊறுவர். அதுமட்டுமல்லாது அத்தகைய நிலை வெறியாகும்போது அத்தகைய மக்களைக் கொன்றுக் குவிக்கவும் செய்துள்ளனர். அவர்களது உருவங்களை உடைத்தெரிந்துள்ளனர். வழிபாட்டுத் தளங்களை அழித்துள்ளனர். ஆனால் உண்மை என்ன?

ஆண்டவனையேப் பார்க்க முடியாது என்ற நிலையில் இருந்தாலும், பார்க்கலாம் என்ற சிரத்தையான, நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.

இஸ்லாத்தில் உருவம் இல்லை என்றால் எல்லோருமே குருடர்களாகத்தான் இருக்கவேண்டும். அதாவது என்றுமே பார்க்க முடியாததை, கேட்க முடியாததை, உணர முடியாததை, சுவைக்க முடியாததை…………….அவ்வாறேதான் அதே நிலையில் வைத்திருக்க வேண்டும். அப்பொழுது இல்லாததை இருக்கிறது  என்று பொய் சொல்லும் நிலைக்கூட வரலாம்!

“இல்லை” அல்லது “இருக்கிறது” என்ற இரு நிலைகளில் தான் இத்தகைய சித்தாந்தங்கள் இயங்குகின்றன.

“கடவுள் இல்லை” அல்லது “கடவுள் இருக்கிறார்”

தெரிந்ததலிருக்கும் நிலையிலிருந்து தெரியாததை அறியும் நிலை: இங்கேயே கடவுள், ஆண்டவன், தெய்வம், இறைவன்………….என்றெல்லாம் சொல்லி வாதிட்டாலும், அதற்கானப் பொருளை எந்த மொழியில் அறிந்து கொள்ள வேண்டுமானாலும் தெரிந்ததிலிருந்துதான் தெரியாததற்குச் செல்ல முடியும்.

கண்ணால் காணாததை அறிவது: அதாவது காண்பதை / பார்ப்பதை அறியாமல் தெரியாமல், புரியாமல் இருக்கும் போது, காணானதை / பார்க்காததை அறிந்து-தெரிந்து-புரிந்து கொள்ள முடியாது.

சுவைத்தால் சுவைத் தெரியும் என்ற உணர்ச்சி: இனிப்பு என்றால் சுவைத்தால்தான் அறியும்-தெரியும்-புரியும். வெறும் வாயினால் சொல்லிக் கொண்டிருந்தால் இனிப்பு இனிப்பாகாது.

“ஒன்று” இருக்கிறது என்று சொல்லிவிட்டு, அதைத் தவிர “மற்றது” இல்லை எனும்போது, “மற்றது” இருக்கும் நிலையைத் தான் காட்டுகிறது.

“இருக்கிறது” மற்றும் “இல்லை” என்ற இரு நிலைகள்: அதாவது எப்படி “இருக்கிறது” என்ற நிலை (the state of existence) இருக்கும்போது “இல்லை” என்ற நிலையும் (the state of non-existence) அறிய-தெரிய-புரியப்படுகிறதோ அது போல!