மார்ச் 10, 2013
தர்காவில்-மசூதியில் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் இருக்கலாமா – இஸ்லாம் சொல்வதும், செய்வதும்!

09-03-2013 அன்று பாகிஸ்தான் பிரதமர் வந்ததை புறக்கணித்த இஸ்லாமிய மதத்தலைவர்.
உர்ஸ், சந்தனக்கூடு, மதகுருமார்களின் இறந்த நாள் விழாக்கள்: நாகூர் மற்றும் இதர முஸ்லீம் குருக்களின் சமாதிகளில் உர்ஸ் என்று நடைபெறும் வருடாந்திர விழாக் கொண்டாட்டங்களில், வண்ணவிளக்குகள், அலங்கரிக்கப்பட்ட ரத ஓட்டங்கள், மேளதாளங்கள், பாட்டுகள், நடனங்கள், கடைகள் என்று நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகின்றன. ஆஜ்மீரில் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஸ்டி மற்றும் கரீப் நவாஜ் எனப்படுகின்ற சூபி துறவி உர்ஸ் விழாவில் ஆயிரக்கணக்கான முஸ்லீம் பக்தர்கள் குழுமி விழா கொண்டாடுகிறார்கள். மற்ற சூப்பிக்கள் அல்லது சூப்பிக்களாக மாற்றப்பட்டவர்களின் நினைவாகவும் உர்ஸ் விழா கொண்டாடப்படுகின்றது. இதைக்காண அயல்நாட்டவர்களும் வருகிறார்கள். முஸ்லீம் காலண்டரின் படி, ஏழாவது மாதத்தில் வரும், அந்த சூபியின் இறந்த தினத்தை ஆறு நாட்கள் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். அந்நேரத்தில் நடக்கும் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் முதலியவற்றைப் பலர் புகைப்படம் எடுத்துள்ளனர். அவற்றை இணைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளன.

ஆஜ்மீர் தர்காவில் கவ்வாலி பாடும் முஸ்லீம்கள்.
தர்கா-மசூதி ஏற்படும் விதம் மற்றும் அமையும் தன்மை: இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் ஆண்டவன் இறுதி தீர்ப்பு நாளில் பிறந்த அதே உடலில் உயிர்த்தெழச் செய்வான். அதாவது, தான் செய்த காரியங்களுக்கேற்ப தண்டனை அல்லது பரிசு பெற தயாராக இருப்பான். அதனால் தான் உடல் எரிக்கப்படாமல், புதைக்கப் படுகிறது. புதைத்தாலும், மக்கி விடுமே, என்றாலும், உய்ரித்தெழும் போது, வேறொரு உடலைத் தருவதாக நம்புகிறார்கள். இவ்வகையில் அவுலியாக்கள் மேம்பட்டவர்கள் என்பதனால், அவர்கள் புதைக்கப்பட்டாலும், ஜீவசமாதியில் இருப்பது போல, உயிரோடு இருந்து கொண்டு, மக்களின் குறைகளை தீர்த்து வைப்பதாக முஸ்லீம்கள் நம்புகின்றனர். அதனால்தான், சமாதியிலிருந்து, கை எழுந்து ஆசீர்வாதித்தது, குரல் எழும்பி பதில் சொன்னது, மூச்சு சுவாசம் பட்டு வியாதி மகுணமாகியது, ஒளிவட்டம் தோன்றியது என்றெல்லாம் சொல்லி வருகின்றனர். ஈரந்த பிறகும் மறுபிறப்பு உண்டு என்பது, ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவியிருந்த வேதமதத்தின் நம்பிக்கையாகும். இது எல்லாமத ஞானிகளும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதன்படியே, அவரவர் புனித நூல்களில் அங்கங்கே அத்தகைய விவரங்கள் உள்ளன என்று அறிஞர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.

ஆஜ்மீர் தர்காவில் பக்திப் பரவசத்துடன் ஆடும் முஸ்லீம் பக்தர்கள்.
தர்கா வேறு, மசூதி வேறு: உருவ வழிபாடு கூடாது என்ற நோக்கத்தினால், ஆசாரமான முஸ்லீம்கள், இந்த தர்கா வழிபாட்டை தடுக்க, மாற்ற அறவே ஒழிக்க முனைந்துள்ளார்கள். தர்காவை இணைத்து மசூதிகள், மதரஸாக்கள், மற்றவை கட்டப்பட்டன. பிறகு, தர்கா வேறு, மசூதி வேறு என்று காட்ட, இடையில் சுவர்களும் எழுப்பப்பட்டன. இப்படி ஆசாரமான முஸ்லீம்கள் பலவித முயற்ச்கள் மேற்கொண்டாலும், தர்கா வழிபாட்டை ஒழிக்க முடியவில்லை. இன்னும் அதிகமாகித்தான் வருகின்றது. இந்தியாவில், இடைக்காலத்தில், பிணங்களைப் புதைத்து இடங்களை ஆக்கிரமித்தது தான் முகலாயர்களின் / முகமதியர்களின் வேலையாக இருந்தது. கோவில்கள், மடங்கள், நதிக்கரை புனித இடங்கள் (கட் / காட்டு) முதலியவை அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன. தர்கா வழிபாடே ஹராம் / இஸ்லாமிற்குப் புரம்பானது என்று அத்தகைய ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. பிறகு எப்படி இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன? மற்ற விஷயங்களுக்கு ஆர்பாட்டம் செய்யும் தமிழக முஸ்லீம்கள் மௌனிகளக இருக்கின்றார்கள். உண்மையில் அவர்கள் ஆஜ்மீருக்குச் சென்று போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமே, ஆனால் செய்யவில்லையே?

மேளத்தாளத்துடன் சூபி நடனம் ஆடும் பெண்மணி.
பெண்கள் இப்படி தர்கா – மசூதி முன்னர் ஆடலாமா?: ஆஜ்மீரில் நடந்த விழாவின் போது எடுக்கப்பட்டப் புகைப்படங்களைப் பார்க்கும் போது, பெண்கள் ஆடுவது, மேளதாளங்கள் ஒலிப்பது, அவர்களை சூழ்ந்து கொண்டு முஸ்லீம்கள் இருப்பது முதலிய காட்சிகள் தெரிகின்றன. வெளிப்புறம் என்றில்லாமல், உள்புறத்திலும், கவ்வாலி, நடனம் என்ற நிகழ்சிகள் நடப்பது புகைப்படங்கள் ஊர்ஜிதம் செய்கின்றன. இவற்றை முஸ்லீம்கள் எதிர்ப்பதாகத் தெரியவில்லை. இல்லையென்றால், அமைதியாக அவை காலங்காலமாக நடந்து கொண்டிருக்க முடியாது. மேலும், பாகிஸ்தானிய அரசியல்வாதிகள், பெரிய செல்வந்தர்கள், புள்ளிகள், சினிமாக்காரர்கள், நடிகைகள் என அனைவரும் இங்கு வந்த் போகின்றனர். அதனை, அந்த தர்கா இணைத்தளமே பெருமையாக புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றன.

பரவசத்துடன் ஆடிய இந்து சூபி நடன புகைப்படம் பல நாளிதழ்களில் வெளிவந்தன (மே 2012).
தர்கா வேறு மசூதி வேறு என்றால், தர்காவில் தொழுகை ஏன்?: இறைவனைத் தவிர வேறு ஒருவனையும் வணங்கக் கூடாது என்றால், இஸ்லாத்தில் தர்கா வழிபாடு இருக்கக் கூடாது. எப்படி உருவ வழிபாடு கூடாது என்றாலும், அது நிஜவாழ்க்கையில் முடியாதோ, அதாவது, வெளிப்புறத்தில் உருவத்தினால் தான் எல்லாமே அடையாளம் காணப்படுகிறது. உருவம், சின்னம், அடையாளம், குறியீடு, என எதுவும் இல்லை என்றால், இவ்வுலகத்தில் எதுவுமே நடக்காது. அதனால் தான் குரான் புத்தகம், கத்தி, பிறை, நட்சத்திரம், குதிரை, கை, கையெழுத்து, பச்சை நிறம் முதலியன இஸ்லாத்தில் சின்னங்களாக உபயோகப்படுத்தப் பட்டு வருகின்றன. அதனால்தான், முஸ்லீம் அரசியல்வாதிகள் இந்து கடவுளர்கள் இல்லை என்று வாதிட்டாலும், தேர்தல் மற்ரும் மற்ற நேரங்களில் கோவில்களை, மடாதிபதிகளைச் சுற்றி வருவார்கள்.

திருப்பதி முதல் வாரணாசி வரை உள்ள தெய்வங்களுக்கு மறைமுகமாக காணிக்கைகள் செல்லுத்தி வருவர். இதைப் பயன்படுத்திதான், கடவுளே இல்லை என்று பிதற்றும் திராவிடவாதிகளுக் தர்காக்குகளுக்குச் சென்று, கும்பிட்டு / மரியாதை செய்து விட்டு வருகிறார்கள். தர்கா கூத்துகளை எதிர்க்கும் இஸ்லாம், தமிழகத்தில் திராவிட கூத்துகளை ஒத்துக்கொள்கிறது[1].

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் விழா – ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் தான்!
பாகிஸ்தானிலும், இதே கதைதான்: பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு, அந்நாட்டில் நாகரிகமாக இருக்கும் பெண்கள் இந்தியப் பெண்களைப் போன்றுதான் அலங்கரித்துக் கொண்டு இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாஹூர் போன்ற நகரங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். பண்டிகைகள் என்றால், இந்தியர்களைப் போலத்தான் கொண்டாடி வருகிறார்கள். மந்திரீகம், வசியம், தாயத்து முதலியவற்றில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஜோசியம், நல்லநேரம் பார்க்கிறார்கள். இஸ்லாம் சொல்வதும், செய்வதும் இப்படித்தான் இருக்கும் போலும்!

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் கொண்டாட்டம் – இன்னொரு புகைப்படம்!
இதைத்தவிர மற்ற நடனங்களும் உண்டு.

ஆஜ்மீரில் நடந்த குஷி நடனம்.

ஆஜ்மீர் உர்ஸ் விழாவின் போது தெருக்களிலும் நடக்கும் நடனம்!

வேதபிரகாஷ்
10-03-2013
பிரிவுகள்: 786, ஃபத்வா, அடிப்படைவாதம், அடிமை, அடையாளம், அமர்நாத் யாத்திரை, அலி, அல்லா, அல்லா என்ற வார்த்தை உபயோகம், அல்லா பெயர், அல்லா பெயர் உபயோகம், அழகிய இளம் பெண்கள், அழுகிய நிலையில், அழுக்கு, அவதூறு, அவமதிக்கும் இஸ்லாம், ஆண்டவனின் எச்சரிக்கை, ஆப்கானிஸ்தான், ஆமென், ஆலிஃப்-லம்-மிம், ஆவி, இச்சை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இமாம், இமாம்கள், இருக்கின்ற நிலை, இருக்கும் தெய்வங்கள், இலக்கியம், இல்லாத தெய்வங்கள், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உயித்தெழுதல், உயிர் பலி, உருது மொழி, உருவ வழிபாடு, உலமாக்கள், உல்லாசம், ஏர்வாடி, ஓட்டு, ஓட்டுவங்கி, கத்தி, கர்பலா, கர்பலா உயிர்த் தியாகம், கலவரம், கலிமா, கல்வத், கல்வெட்டு, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காங்கிரஸ், காந்தஹார், காந்தாரம், காபத்துல்லாஹ், காபா, காரைக்கால், குரான், குர்பானி, குஷித் ஆலம் கான், கௌதாரி, சன்னி, சரீயத், சல், சின்னம், சியாசத், சிற்பம், சிலை வழிபாடு, சுத்தம், சுன்னத், சுன்னி, சுன்னி-ஷியா, சூஃபி, சூபி, சூபித்துவம், செக்யூலரிஸ ஜீவி, ஜிஹாதித்துவம், ஜிஹாத், தர்கா, தர்மம், தலிபான், தலிபான் அமைப்பினர் தண்டனைகள், தலைவெட்டி, தொழுகை, நரகம், நாகூர் தர்கா, பள்ளி வாசல், பள்ளிவாசல், புதைத்தல், புத்தகம், புனிதப் போர், பேசுவது, பைபிள், பொய்மை, மக்கா, மங்கள வாத்தியங்கள், மசூதி, மசூதி தொழுகை, மசூதி வளாகத்தில் நினைவிடம், மந்திரத் தொழிலில், முப்தி, முஸ்லீம் சட்டம், மெக்கா, மௌலானா புகாரி, யாத்திரிகர்கள், யாத்திரை, யுனானி, ரத்தத்தினால் ஹோலி, ரத்தம், ரத்தம் குடித்தல், ரப், ரப்பானி, லாஹூர், வாணியம்பாடி, வாரணசி குண்டுவெடிப்பு, ஷியா, ஷியா சட்ட போர்ட், ஷியா சட்டம், ஷியா முஸ்லீம் சட்டம், ஷியா-சுன்னி, ஸல், ஹஜரத் இமாம் அலி, ஹஜ், ஹதீஸ், ஹுஸைன்
Tags: ஃபத்வா, அலி, அவமதிக்கும் இஸ்லாம், அவுலியா, ஆவி, இந்துக்கள், ஒளிவட்டம், கல்லறை, காஷ்மீரம், குரான், குர்பானி, குறை, கோவில் சிலை உடைப்பு, சமாதி, சல், சிறுபான்மையினர், சூஃபி, சூஃபித்துவம், சூபி, சூபித்துவம், ஜீவசமாதி, ஜீவமுக்தி, தாலிபான், தாளம், நடனம், நாட்டியம், நோன்பு, பக்தி, பரவசம், பாகிஸ்தான், பாட்டு, பிசாசு, புனிதப்போர், பேசுவது, பேய், மசூதி, மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மிதிக்கும் இஸ்லாம், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லிம்கள் சிலை உடைப்பு, முஸ்லீம்கள், மூச்சு விடுவது, மேளம், ரப், ரப்பானி, ரவுல், வரம், வேண்டுதல்
Comments: 2 பின்னூட்டங்கள்
ஜனவரி 26, 2012
இந்தியாவின் அரசியல் அவதூறு: முஸ்லீம் ஓட்டு வங்கி, சல்மான் ருஷ்டி தடை, காங்கிரஸின் வெட்கங்கெட்டச் செயல்
முழுவதுமாக தடை செய்யப் பட்ட ருஷ்டி: ருஷ்டி இந்தியாவிற்கு வராதலால், வீடியோ கான்பரன்ஸ் மூலம், அவர் பேச ஏற்பாடு செய்தார்கள். பிறகு, அவர் பேசிய
புத்தகத்திற்கு, எழுத்திற்கு தடை விதித்த பிறகு, எழுத்தாளனுக்கும் தடை என்றால், முந்தைய ஆண்டுகளில், அதே எழுத்தாளன் எப்படி வந்து சென்றான்? அப்பொழுது, முஸ்லீம்களுக்கு ஏன் எதிர்ர்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை? |
பேச்சையாவது போட்டுக் காண்பிக்கலாம் என்று தீர்மானித்தபோது, அதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. ஆங்கில நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி பேசிய வீடியோ காட்சிகள், முஸ்லிம்களின் போராட்டத்தின் காரணமாக இலக்கிய விழாவில் நேற்று திரையிடப்படவில்லை[1]. இதனால், பெரும் சலசலப்பும், சர்ச்சையும் எழுந்தது. இந்தியாவில் பிறந்து பிரிட்டனின் குடியுரிமை பெற்றவர் சல்மான் ருஷ்டி. பல ஆங்கில நாவல்களை எழுதிய எழுத்தாளர். இதற்காக, இவர் புக்கர் விருதை பெற்றார். 1988ல், “சாத்தானின் கவிதைகள்’ என்ற புத்தகத்தை எழுதினார். முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் இந்த நூல் அமைந்ததால், ஈரான் தலைவர் அயதுல்லா கோமெனி, ருஷ்டிக்கு பத்வா மூலம் மரண தண்டனை அறிவித்தார். இதற்கு பிறகு, ருஷ்டி பல ஆண்டு காலம் பிரிட்டனில் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். சர்ச்சைக்குரிய இந்த புத்தகம் இந்தியாவிலும் தடை செய்யப்பட்டது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய திருவிழாவுக்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
புரளி கிளப்பி விட்டு, ருஷ்டியைத் தடுத்து, பிறகு முழுவதுமாக தடுத்த ராஜஸ்தான் காங்கிரஸ்காரர்கள்: “தாருல் உலூம் தியோபந்த்’ உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம் அமைப்புகளும், முஸ்லிம் மத தலைவர்களும் ருஷ்டியின் இந்திய வருகையை
ராஜஸ்தானில், பெண்களின் கற்பு காக்கப் படவில்லை. ஒரு காங்கிரஸ் மந்திரி, ஒரு மணமான நர்ஸை வைப்பாட்டியாக வைத்துக் கொண்டதுடன், அவளை கொலையும் செய்துள்ளார். கொலை செய்த கொலையாளி சஹாப்புதீன் என்பவன். இந்நிலையில், உண்மைகளை மூடி மறைத்து, வெள்ளையடிக்க, காங்கிரஸ், இதை எதுத்துக் கொண்டு விளையாடியுள்ளது. |
எதிர்த்தனர். “ருஷ்டி இந்தியா வந்தால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும். மும்பையை சேர்ந்த நிழல் உலக தாதாக்கள் அவரை கொல்ல திட்டமிட்டுள்ளனர்’ என, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் போலீசார்எச்சரித்தனர். இதையடுத்து, ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொள்வதை ருஷ்டி தவிர்த்தார். “என்னை இந்த விழாவில் கலந்து கொள்வதை தடுக்கவே, ராஜஸ்தான் போலீசார் இதுபோன்ற கதையை புனைந்துள்ளனர்’ என, ருஷ்டி தன் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார். இதில் ராஜஸ்தான் முதல்வர் கெலாட் சாமர்த்தியமாக செயல்பட்டிருப்பதாக இலக்கிய விழாவில் பங்கேற்ற பலர் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையே, ஜெய்ப்பூரில் இலக்கிய திருவிழா நேற்று நிறைவு பெற்றது. இந்த விழாவில், ருஷ்டியின் உரையை வீடியோவில் ஒளிபரப்ப விழா ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.
வீடியோ கான்பரன்ஸ் / காட்சிக்கு தடை: நேற்று மதியம் 3.45 மணியளவில் “மிட் நைட்ஸ் சைல்ட்’ என்ற நாவலை பற்றி ருஷ்டியின் அனுபவ உரை ஒளிபரப்ப
காங்கிரஸ் அரசே நிறுத்தி வைத்த வீடியோ கான்பரன்ஸ். வீடியோ காபரன்ஸ் வசதியையே உபயோகப்படுத்த முடியாமல் துண்டித்து விட்டதாம். தீவிரவாதிகள், பலவழிகளில், உள்ள வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டு, மக்களை குண்டு வைத்து கொன்று வரும்போது, அப்பொழுது காட்டாத, வேகம் இப்பொழுது காட்டுவது கேவலமாக உள்ளது. |
ஏற்படாகியிருந்தது. இதை தெரிந்து கொண்ட முஸ்லிம் அமைப்பினர் இலக்கிய விழா நடக்கும் பகுதியில் நுழைந்து, “ருஷ்டியின் வீடியோ காட்சியை ஒளிபரப்பக் கூடாது’ என, போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு பதட்டம் ஏற்பட்டது. சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் உள்ளதால், ருஷ்டியின் வீடியோகாட்சியை ரத்து செய்யும்படி போலீசார் அறிவுறுத்தினர்[2]. வேறு வழியில்லாத நிலையில், விழா ஏற்பாட்டாளர்கள் இந்த வீடியோ காட்சியை ரத்து செய்தனர். அதுமட்டுமல்லாது ருஷ்டியின் வீடியோ காட்சி இணைப்பும் அரசால் துண்டிக்கப்பட்டது.
இலக்கிய விழாவை அரசியலாக்கி அசிங்கப்படுத்திய காங்கிரஸ்; இலக்கிய விழா நடக்கும் இடத்தை அளித்த ராம்பிரதாப் சிங் குறிப்பிடுகையில், “”என் இடத்தை சுற்றிலும் போராட்டக்காரர்கள் சூழ்ந்துள்ளனர். என்னுடைய சொத்து அமைந்த பகுதியில் வன்முறை ஏற்படுவதை விரும்பவில்லை; என்னுடைய குடும்பத்தினரும், குழந்தைகளும் இந்த இடத்தில் தான் உள்ளனர். எனவே, வீடியோ காட்சியை
காங்கிரஸ் இந்த அளவிற்கு அசிங்கப்படுத்தியுள்ளதால், இது ஒரு அரசியல் அவதூறு என்றே, நியூயார்க டைம்ஸ் விமர்சித்துள்ளது[3]. கருத்துரிமை, பேச்சுரிமை சுதந்திரம் என்று தீவிவாதிகள், இந்திய-விரோதிகள், துரோகிகள் முதலியோர்களுக்கு வசதி செய்து தரும் போது, ஏற்கெனவே வந்து போன ஆளைத் தடுக்க, இத்தனை ஆர்பாட்டம் நடத்துவது அசிங்கம் தான். |
அனுமதிக்க முடியாது,” என்றார். முன்னதாக திட்டமிட்டபடி வீடியோ காட்சி ஒளிபரப்பப்படும் என, விழா நிர்வாகி சஞ்சய் ராய் கூறியிருந்தார்.
வீடியோ காட்சி ரத்தானது குறித்து சஞ்சய் ராய் குறிப்பிடுகையில், “”சல்மான் ருஷ்டியின் முகத்தை திரையில் காட்டுவதை கூட நாங்கள் பொறுத்து கொள்ள மாட்டோம்” என, போராட்டக்காரர்கள் எங்களிடம் கூறினர். இது துரதிருஷ்டவசமானது முட்டாள் தனமான சூழலால் மீண்டும் நாங்கள் பேச்சுரிமை சுதந்திரத்துக்கு எதிரான போராட்டத்தில் பின் தங்கியுள்ளோம். விழா திடலில் கூடியுள்ளவர்களை பாதுகாக்க, நாங்கள் போராட்டக்காரர்களின் நிபந்தனைகளுக்கு பணிய வேண்டியதாக விட்டது. எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போராட்டக்காரர்கள், விழா நடக்கும் இடத்திலேயே தொழுகை நடத்தினர். ருஷ்டியின் வீடியோ ஒளிபரப்பினால் அதிகப்படியானபாதுகாப்பு அளிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என, துணை கமிஷனர் வீரேந்திர ஜாலா கூறினார். இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. எங்கள் மனம் மிகவும் புண்பட்டுள்ளது’ என்றார்.
ஓட்டு வங்கி அரசியல் நடத்தி நாட்டைக் கெடுக்கும் காங்கிரஸ்: ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மைனாரிட்டி மக்கள் சிலர் உயிரிழந்தனர். இதையெல்லாம் மூடி மறைக்கவும், உத்தர பிரதேச தேர்தலில் முஸ்லிம்களின்
அரசே ஊக்குவித்து இப்படி முஸ்லீம்களை நடத்தி வரும் போது, முஸ்லீம்கள் மற்ற நேரங்களில், அளவிற்கு அதிகமாகவே, சட்டத்தை கையில் எடுத்துக் கொள்கிறார்கள். முஸ்லீம்கள் என்ற ஒரே காரணத்திற்காகவும், தேர்தல் என்பதற்காகவும், இவ்வாறு, கேவலப்படுத்துவதை எப்படி சரிகட்ட போகிறார்கள் என்று தெரியவில்லை.. |
ஓட்டுகளை பெறவும், இலக்கிய திருவிழாவில் ருஷ்டியின் வீடியோ காட்சியை அரசு துண்டித்துள்ளது. இதன் மூலம் இன்டர்நெட் தணிக்கை முறையை திணிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இலக்கிய விழாவுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருப்பதாக தெரிவித்த மாநில அரசு, போராட்டக்காரர்களை விழா பந்தலுக்குள் நுழைய விட்டது எப்படி? இது முன்கூட்டியே திட்டமிட்ட செயல். ஓட்டு வங்கிக்காக காங்கிரஸ் அரசு, தரம் தாழ்ந்து செயல்படுகிறது. – பிரகாஷ் ஜவேத்கார், பா.ஜ., தகவல் தொடர்பாளர். இந்தியாவில் பேச்சு சுதந்திரம் பறிபோய்விட்டது என்றும் சகிப்புத் தன்மையும் அருகி வருகிறது என்று எழுத்தாளர் சல்மான் ருஷ்டி குற்றம் சாட்டியுள்ளார்[4].
பிரிவுகள்: ஃபத்வா, அச்சம், இந்திய விரோதத் தன்மை, இந்தியா, இமாம், இலக்கியம், இஸ்லாமிய வங்கி, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உலமா வாரியம், உலமாக்கள், உள்ளே நுழைவது, கருத்துச் சுதந்திரம், கலவரம், கலை, சஹாபுத்தீன், சிறுபான்மையினர், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் தன்மை, ஜெய்பூர், ஜெய்ப்பூர், தடை, திறனாய்வு, புத்தகம், முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, ராஜஸ்தான், ருஷ்டி
Tags: ஃபத்வா, அரசியல் அவதூறு, இமாம், இலக்கிய விழா, இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாம், சல்மான் ருஷ்டி, செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், பரவும் தீவிரவாதம், புனிதப்போர், முஸ்லீம்கள், ருஷ்டி
Comments: 2 பின்னூட்டங்கள்
அண்மைய பின்னூட்டங்கள்