தர்காவுள், சமாதிக்குள் பெண்கள் ஏன் நுழையக் கூடாது, ஒரே பெஞ்சில் உட்காரக் கூடாது – இஸ்லாத்தில் ஆண்களும், பெண்களும் சமமா, இல்லையா?
தர்காவுள், சமாதிக்குள் பெண்கள் ஏன் நுழையக் கூடாது?: தர்காவுக்குள் நுழைய பெண்கள் அனுமதி கோருவது இஸ்லாத்திற்கு எதிரானது என்று மத குரு உமர் அகமது இலியாசி தெரிவித்துள்ளார்[1]. பெண்கள் வீட்டில் தொழுகலாம். ஆனால் சமாதி மற்றும் தர்காவுக்கு வர அவர்களுக்கு இஸ்லாம் அனுமதி அளிக்கவில்லை என்றார்[2]. ஆனால், டாக்டர் ஜீனத் சவுகத் அலி கூறுவதாவது,[3] “இஸ்லாமிய மதநூல்களில் எங்குமே பெண்கள் சமாதிகளுக்குச் செல்லக் கூடாது என்றில்லை.மொஹம்மது நபியே சமாதிகளுக்கு செறுள்ளது மட்டுமல்லாது, மற்றவர்களையும் ஆண்-பெண் வித்தியாசம் பாராட்டாமல் செல்லுமாறு பணித்தார். இஸ்லாத்தில் ஆண்கள்-பெண்கள் இருவருக்கும் சமமான உரிமைகள் இருக்கின்றன……நபி சொல்லும் இரண்டு காரணங்கள் – இறைப்பை நினைப்பூட்டுகிறது மற்றும் இறந்தவர்களுக்காக தொழுகின்றோம். நபியின் மனைவியான ஹஜரத் ஆயிஸா சித்திக், தனது சகோதரரான அப்த் அர்-ரஹ்மானின் சமாதிக்கும், நபியின் மகளான ஹஜரத் பாத்திமா ஜெஹ்ரா தனது மாமாவான ஹஜரத் ஹம்ஜாவின் சமாதிக்கும் செல்லும் வகத்தைக் கொண்டிருந்தனர்”. இவர் உரையாடல், சமரசம் மற்றும் பாலியில் நீதி முதலியவற்றிற்கான உலக இஸ்லாமிய படிப்பு நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார்[4].
சபரிமலை தீர்ப்பை பொறுத்து, தர்கா வழக்கில் முடிவெடுப்பதாக தெரிவித்தது ஏன்?: மும்பையில் உள்ள, ஹாஜி அலி தர்காவில், பெண்களை அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், மும்பை ஐகோர்ட், சபரிமலை வழக்கில், சுப்ரீம் கோர்ட் வழங்கும் தீர்ப்பை பொறுத்து செயல்பட முடிவு செய்து உள்ளது[5]. இந்திய நீதிமன்ரங்களில், பென்களைப் பொறுத்த வழக்குகள் இவ்வாறு சேர்த்து விசாரிக்கும், நீதி வழங்கும் போக்கில் இருந்ததில்லை. குறிப்பாக ஷாபானு வழக்கு, அதன் தீவிரத்தன்மை, ராஜிவ்காந்தி அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி முதலியவை எல்லாம் ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் எப்பொழுதுமே, தங்களுக்கு தங்களது ஷரீயத் சட்டம் தான் செல்லுமே தவிர மற்ற சட்டங்கள் செல்லாது என்று அடிப்படைவாததுடன் இருந்து வருகின்றனர். இதனால் தான் ஷாபானு என்ற அந்த வயது முதிர்ந்த பெண்மணியே கஷ்டப்பட நேர்ந்தது. ஆகையால், சபரிமலைக் கோவிலுக்குள் நுழைவதும், தர்காவுக்குள் நுழைவதும் ஒரே பிரச்சினையாகக் கருதுவது, செக்யூலரிஸ முரண்பாடே ஆகும். என்னத்தான் பேசினாலும், இந்தியாவில் சட்டதிட்டங்கள், நீதிமுறைகள், நீதிமன்ற நியதிகள் முதலியவை செக்யூலரிஸ மயமாக்கப்படவில்லை. ஏனெனில், அதற்கு முஸ்லிம்கள் என்றுமே ஒத்துப் போனதில்லை. எனவே, நீதிபதி தப்பித்துக் கொள்ளவே அவ்வாறு சொல்லியிருக்கிறார் என்று தெரிகிறது.
பெண்களின் உரிமைகள் எவ்வாறு விவாதிக்கப்பட போகின்றன?: மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான, பா.ஜ., – சிவசேனா கூட்டணி அரசு உள்ளது. இம்மாநில தலைநகர் மும்பையில், புகழ் பெற்ற, ஹாஜி அலி தர்கா உள்ளது; இங்கு, ‘பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, அவர்களும் தர்காவைக் காண அனுமதிக்க வேண்டும்’ என, மும்பை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுவை விசாரித்த, மும்பை ஐகோர்ட், இதேபோல, சபரிமலை கோவிலில் அனைத்து பெண்களையும் அனுமதிக்கக் கோரிய வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு உள்ளதால், அதன் தீர்ப்பை பொறுத்து, தர்கா வழக்கில் முடிவெடுப்பதாக தெரிவித்து, விசாரணையை, பிப்., 3ம் தேதிக்கு தள்ளிவைத்தது[6]. 03-02-2016 அன்று, மாநில அரசின் பதிலை தாக்கல் செய்யும்படி, அட்டர்னி ஜெனரலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். சபரி மலையில், பெண்களை அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட், பிப்., 8ல், தீர்ப்பு வழங்க உள்ளது. மும்பையை சேர்ந்த வழக்கறிஞரும் மத்திய வக்பு கவுன்சில் உறுப்பினருமான எஜாஸ் அப்பாஸ் நக்வி தடை குறித்து கூறும் போது,” நாடு முழுவதும் பெண்களுக்கு பாரபட்சம் காட்டப்படவில்லையெனில் வரவேற்கப்படும் ஒன்றாக அது இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், பெண்கள் ஏன் அறங்காவலராக நியமிக்கப்படகூடாது? ஏன் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை? மேற்கத்திய நாடுகளில் இது போன்று இல்லை” என தெரிவித்தார்[7].
“ஆணும்–பெண்ணும் சமம்”, “எல்லா உரிமைக்ளும் இருக்கின்றன”, “இஸ்லாம் பெண்களுக்கு எல்லா உரிமகளும் கொடுக்கப்பட்டுள்ளன” ஆனால், ஒரே பெஞ்சில் ஆண்களுடன் உட்காரக்கூடாது: முஸ்லிம்கள் தங்களது மதத்தில் நடக்கும் பாலியல் மீறல்கள், தொந்தரவுகள் மற்றும் வக்கிரங்களைப் பற்றி, பொதுவாக வெளியில் சொல்வதில்லை. ஏதாவது, அங்கும்-இங்கும் செய்திகள் வந்தாலும், அவை அத்துடன் முடிந்து விடுகின்றன. அதற்கு மேல் என்ன நடந்தது என்பதெல்லாம் சொல்வதில்லை. பொதுவாக விளம்பரம் இல்லாமல், நீதிமன்றங்களுக்கு செல்லாத முறையில், அவர்களுக்குள் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்கிறார்கள். ஆனால், சமீபத்தில், கேரளாவில், முஸ்லிம்களைப்பற்றிய விவாதங்கள் பல வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக, பரூக்கிக் கல்லூரியில், மாணவ-மாணவிகள், ஒரே பெஞ்சில் சேர்ந்து உட்காரக்கூடாது, தனித்தனியாகத்தான் உட்கார்ந்து கொள்ள வேண்டும் என்று கேரள கல்வி அமைச்சர் அப்டு ரப் [Kerala education minister Abdu Rabb] சொன்னது பிரச்சினையாகியது[8]. அப்படி உட்கார்ந்து கொண்டால், என்ன ஒட்டிக் கொள்ளும் அல்லது தீட்டு ஏற்படும் என்றேல்லாம், எந்த முற்போக்குவாதியோ, நாத்திகவாதியோ. கம்யூனிஸவாதியோ கேட்கவில்லை. சமூகவளைதளங்களில் சில கமென்டுகள் வந்தன[9], அதோடு சரி! “ஆணும்-பெண்ணும் சமம்”, “எல்லா உரிமைக்ளும் இருக்கின்றன”, “இஸ்லாம் பெண்களுக்கு எல்லா உரிமகளும் கொடுக்கப்பட்டுள்ளன” என்றெல்லாம் பெருமையாக அடித்துப் பேசுவர். ஆனால், நடக்கும் விசயங்கள் வேறு மாதிரியாகத்தான் இருந்து வருகின்றன. இருப்பினும் எதிர்பார்த்தபடி, அந்த “பால்-நீதி” (Gender Justice), “சமத்துவ நீதி” பிரச்சினை (Equity, equality of justice), அமுங்கி விட்டது. ஆனால், அதன் பின்னணில்யில், அதிகமான பிரச்சினைகள் இருக்கும் என்று தெரிகிறது.
பெண்கள், ஆண்களுக்கு சமம் என்று சொல்வது இஸ்லாத்திற்கு எதிரானது”: இந்நிலையில், அபூபக்கர் முசலியார் என்ற சுன்னி முஸ்லிம் தலைவர் [Aboobacker Musliyar], கேரளாவில் காந்தபுரம் என்ற இடத்தில் உள்ளவர், அரசியல் செல்வாக்கு உள்ளவர், பல மதரஸாக்கள், கல்வி நிறுவனங்களை நடத்தி வந்தவர், “பால்-சமத்துவம் என்பது நிஜமல்ல, பெண்கள், ஆண்களுக்கு சமம் என்று சொல்வது இஸ்லாத்திற்கு எதிரானது. பெண்கள் என்றுமே ஆண்களுக்கு நிகராக மாட்டார்கள். ஆபத்து நேரங்களில் அவர்களால் தாங்கிக் கொள்ளமுடியாது. பெண் மருத்துவர்கள் பொது மருத்துவம் அல்லது குழந்தை மருத்துவத்தில் சிறக்கலாமே தவிர, பெரிய அறுவை சிகிச்சை வல்லுனராக முடியாது[10]. அதற்கு அவர்களுக்கு தைரியம் இல்லை”, என்ற கருத்தை வெளியிட்டார்[11]. இதனால், பெருத்த சர்ச்சை ஏற்பட்டது. இருப்பினும், ஊடகங்கள், ஒருதடவை, செய்தியாக அறிவித்து, பிரசுரித்து அமைதியாகி விட்டன. ஆனால், அது வேறு வகையில், கிளர்ந்தெழுந்தது. “அபூபக்கர் முசலியார் பெண்களுக்காக பல கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தியிருக்கிறார், பெந்கல்வியை ஆதரிக்கிறார், அவற்றையெல்லாம் நானே சென்று பார்த்திருக்கிறேன், ஆனால், அவர், ஏன் அப்படி சொன்னார் என்பது எனக்கு திகைப்பாக இருக்கிறது”, திரும்ப-திரும்ப “நியூஸ்-எக்ஸில்” சொல்லிக் கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது. ஆனால், அவர் ஏன் அப்படி சொன்னார், என்ற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லவில்லை!
வேதபிரகாஷ்
03-02-12016
[1] http://www.athirvu.com/newsdetail/6787.html
[2] http://tamil.oneindia.com/news/india/muslim-women-now-seek-entry-into-haji-ali-dargah-245575.html
[3] The graves, she said quoting Prophet Muhammad, should be frequented by men and women for two reasons: one, it reminds them of death and two, they can pray for the people buried there. Citing instances, she said, “Prophet Muhammad’s wife Hazrat Ayesha Siddiqua used to visit the grave of her brother Abd ar-Rahman. Also, Hazrat Fatima Zehra, the Prophet’s daughter, used to visit the grave of her uncle Hazrat Hamza regularly.
http://www.firstpost.com/living/men-can-visit-graveyards-why-not-us-ask-muslim-women-2606368.html
[4] She is also the founder-director general of The World Institute of Islamic Studies for Dialogue, Organisation of Mediation and Gender Justice.
[5] தினமலர், ஹாஜி அலி தர்காவில் பெண்களுக்கு அனுமதி?, ஜனவரி.18, 2016.22:11.
[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1436166
[7] http://www.dailythanthi.com/News/India/2016/01/29104437/Muslim-women-stage-protest-demand-entry-into-Mumbais.vpf
[8] http://www.hindustantimes.com/india/boys-girls-shouldn-t-sit-on-same-benches-in-class-kerala-minister/story-eqVy6zH7h0QEN5m5snr79L.html
[9] http://www.dnaindia.com/india/report-social-media-reacts-strongly-to-kerala-education-minister-s-comments-2146737
[10] http://tribune.com.pk/story/1000565/women-only-fit-to-deliver-children-indian-muslim-leader/
[11] http://tribune.com.pk/story/1000565/women-only-fit-to-deliver-children-indian-muslim-leader/
அண்மைய பின்னூட்டங்கள்