“தலித்–முஸ்லிம்” மோதல்களிலிருந்து [24-04-2018 மற்றும் 05-05-2018] செக்யூலரிஸ ரீதியில் அறியப்படுவது, புரிவது என்ன?
தேனி சுற்றியுள்ள பகுதிகளில் “இருதரப்பு” மோதல்கள் என்பது, அவ்வப்போது, செய்திகளில் வந்து கொண்டிருக்கின்றன: ஜனவரி 2016ல் பொங்கல் சமயத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது[1]. காணும் பொங்கலையொட்டி நடந்த கலைநிகழ்ச்ச்சியில் தகராறு ஏற்பட்டதால், மோதல் ஏற்பட்டது. காவலர்களும் தாக்கப்பட்டனர்[2]. டிசம்பர் 2017ல் தேனியில் அருகில் இருக்கும் ஊர்களுக்கு பேருந்து வசதி இல்லாத காரணத்தால், ஷேர் ஆட்டோக்கள் மூலம் தான் அதிக அளவில் போக்குவரத்து நடைபெறுகிறது. இதனால் அங்கு, நிறைய ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. அந்த ஷேர் ஆட்டோக்களில் ஒவ்வொரு முறையும் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றுவதில் இருதரப்பு ஆட்டோ ஓட்டுநர்களிடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் மோதம் முற்றியதில் அதில் ஒரு தரப்பினர், பெட்ரோல் குண்டுகளை வீசினர்[3]. இதனால் அங்கு இருந்த கார்களின் கண்ணாடிகள் உடைந்து பாதிக்கப்பட்டன. தெருவிளக்குகள் உடைந்தன.. இந்த மோதலைத் தடுக்க வந்த போலீசாரையும் அவர்கள் தாக்கினர். இதனால் அந்த பகுதியே கலவர பூமிபோல் காணப்பட்டது. இதையடுத்து, போலீசார் 30 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்[4].ஜனவரி 16-01-2018 அன்று தேவாரம் அருகே இருசக்கர வாகனங்கள் ஓட்டிச்சென்றதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. தம்மிநாயக்கன்பட்டியில் இருபிரிவினரும் கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது[5]. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இருசக்கரவாகனத்தை ஓட்டிச்சென்றவர் உட்பட 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்[6]. போலீஸாரைத் தாக்குதல், பெட்ரோல் குண்டுகள் வெடிப்பது, பொங்கலை அடுத்து கலவரங்கள் ஏற்படுத்தல் என்பன, ஒரு திட்டமிட்ட போக்கை எடுத்துக் காட்டுகிறது. நிச்சயமாக அதில் எஸ்.சிக்களுக்கு பங்கில்லை.
ஏப்ரலில் [24—004-2018] பிணம் எடுத்துச் சென்றபோது கலவரம்: தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டியில் பள்ளிவாசல் தெருவில் வசிப்பவர்களுக்கும், காலனி தெருவை சேர்ந்தவர்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது[7]. ஏப்ரலில் “காலனி தெரு”வை சேர்ந்த வேலு மனைவி வன்னியம்மாள் (62) இறந்து விட்டார். இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய மயானம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது, மயானம் செல்லும் வழியில் திருமண விழாவிற்கான பந்தல் போடப்பட்டிருந்ததால், வேறு ஒரு சமூகத்தினர் வசிக்கும் பாதை வழியாக உடல் கொண்டு செல்லப்பட்டது. இதெல்லாம் கிராமங்களில் அனுசரித்து நடந்து கொள்ளும் பழக்க-வழக்கங்கள் ஆகும். இவரது உடலை மயானத்திற்கு “முஸ்லிம் தெரு” வழியாக எடுத்து செல்லும்போது, முஸ்லிம்கள் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு, சமரசம் செய்தலால், இறுதி சடங்கு நடத்தி முடிக்கப் பட்டது[8]. முதலில் தெருவுக்கு “ஜாதி” பெயர் இருக்கக் கூடாது என்ற நிலை இருக்கும் போது, “முஸ்லிம் தெரு” என்று பெயர் உள்ளதே வகுப்புவாதத்தை வளர்க்கும் கோஷ்டிகள் அங்கிருப்பது தெருகிறது. அதே போல “காலனி தெரு” என்று குறிப்பிட வேண்டிய அவசியமும் இல்லை. சடங்கு நடந்த பிறகு, இரு பிரிவினரிடையே கலவரம் வெடித்தது[9]. இறப்பு முதல்லிய சடங்குகளில் முகமதியர் அந்த அளவுக்கு கடுமையாக இருந்திருக்கக் கூடாது. அமைதியாக இருந்திருந்தால், சாதாரண பிரச்சினை, இவ்வாறான மோதல்-கலவரத்தில் முடிந்திருக்காது. இதில் சில கடைகள், வீடுகள் சேதமானது. 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக ஜெயமங்கலம் போலீசார் 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதன்காரணமாக இரு சமூகத்தினருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டு, 10 நாட்களாக அடங்காமல் இன்று விஸ்வரூபமெடுத்து கலவரமாக வெடித்தது[10].
மே 2018 [05-05-20118] மாதத்தில் நடந்த கலவரம்: இந்நிலையில் 05-05-2018 அன்று காலை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஒருவர் காலனி தெரு வழியாக தனது தோட்டத்திற்கு சென்றார். “அன்று பிணம் என்றும் பார்க்க்காமல், ஈவு-இரக்க்ம் இல்லாமல், தடுத்தாயே, நீ எப்படி இன்று இந்த வழியாக செல்கிறாய், வேறு வழியாகச் செல்ல வேண்டியது தானே?,” என்ற கேள்வி நிச்சயமாக எழுந்திருக்கும். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு, இருதரப்பினரிடையே மீண்டும் கலவரமாக மாறியது[11]. இருதரப்பினரும் கற்கள், கம்பி, அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர். இதில் கலைச்செல்வன், வேலுத்தாய், ஆரிப்ராஜா, அக்கீம் உட்பட 50 பேர் காயமடைந்தனர். இவர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருதரப்பிலும் 50 வீடுகள் சேதமடைந்தன. ஒரு கார், டூவீலர், ஆட்டோ, ஸ்டூடியோ, கம்ப்யூட்டர் பழுது பார்க்கும் கடைக்கு தீ வைக்கப்பட்டது. தகவலறிந்ததும் திண்டுக்கல் சரக டிஐஜி ஜோசி நிர்மல் குமார், மாவட்ட எஸ்பி பாஸ்கரன் மற்றும் போலீசார் வந்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பொம்மிநாயக்கன்பட்டியை போலீசார் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இதனிடையே, கலவரத்தில் ஈடுபட்டதாக 100 பேரை ஜெயமங்கலம் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இவற்றை இவ்வீடியோவில் காணலாம்[12].
சமதர்மம், சமத்துவம் பேசினால் மட்டும் போறாது, கடைப் பிடிக்க வேண்டும்: சமரசப் பேச்சிற்குப் பிறகும், எச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது[13]. மேலும் இப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ள போலீஸார் 24 மணி நேரம் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்[14]. போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து, பலர் ஓடிவிட்டதாகவும் தெரிகிறது. ஏப்ரலில் தொல்.திருமாவளவனின் படம் தாக்கப்பட்டதிலிருந்து, இருதரப்பினருக்கும் விரோதம் இருப்பதாக, உள்ளூரில் சொன்னதாக, “தி இந்து” குறிப்பிடுகிறது[15]. “மனித நேயம்” என்றெல்லாம் பெயரை வைத்துக் கொள்வது, மேடைகளில் பேசுவது, பிரச்சாரம் செய்வது என்றெல்லாம் இருந்து, நடப்பு வாழ்க்கையில், இவ்வாறு பிணம் விசயத்தில் கூட, கொடூரமாக நடந்து கொண்டது, திகைப்பாக இருக்கிறது. செக்யூலரிஸ நாட்டில், இந்தியர், எங்கு வேண்டுமானாலும், வீடு வாங்கலாம், வாழலாம், என்றெல்லாம் சட்டங்கள் இருக்கும் போது, இவ்வாறு, “எங்கள் தெருவுக்கு வராதே……” என்ற நிலை இருப்பது, சமதர்மம் ஆகாது. “தலித்-முஸ்லிம் மோதல்”, தேனி அருகில் – தி இந்து – அடித்தது, ஒரே கல்லில் இரண்டு மாங்காய், செக்யூலரிஸப் பழமாக அழுகிய செய்தியைக் கொடுத்துள்ளது! ஏனெனில், “தலித்” என்ற பிரயோகம் சட்டப்படி கூடாது என்றாலும், உபயோகித்தது மற்றும் இதுவரை “இரு பிரிவினர் மோதல்” என்று தலைப்பிட்டு, யார்-யார் மோதிக்கொண்டார்கள் என்று மறைக்கும் நிலையில், அவ்வாறு குறிப்பிட்டு, தலைப்பிட்டு போட்டுள்ளது திகைப்பாக இருக்கிறது. ஏனெனில், “தி இந்து” அவ்வாறு செய்யாது, ஆனால், இப்பொழுது செய்துள்ளது. எனவே இதன் பின்னணி என்ன என்பதும் ஆராய வேண்டும்.
© வேதபிரகாஷ்
05-05-2018
[1] புதியதலைமுறை, தேனி அருகே இரு பிரிவினரிடையே திடீர் மோதல்: கலை நிகழ்ச்சியின் போது வன்முறை, Web Team, Published : 18 Jan, 2016 01:21 pm
[2] http://www.puthiyathalaimurai.com/news/districts/463-clash-between-two-groups-in-theni.html
[3] தமிழ்.ஒன்.இந்தியா, தேனி.. ஆட்டோவில் பயணிகளை ஏற்றுவதில் மோதல்… பெட்ரோல் குண்டு வீச்சு! – வீடியோ, Posted By: Suganthi Published: Wednesday, April 12, 2017, 10:47 [IST]
[4] https://tamil.oneindia.com/news/tamilnadu/auto-drivers-throw-petrol-bomb-theni-279543.html
[5] தினகரன், தேனி அருகே இருதரப்பினரிடையே மோதல்: 2 பேர் கைது, 2018-01-17@ 08:35:34
[6] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=367818
[7] தினகரன், தேனி தேவதானப்பட்டி அருகே இருதரப்பு மோதல்: 50 வீடுகள் சேதம் : வாகனங்கள், கடைகளுக்கு தீவைப்பு, 2018-05-06@ 02:24:15.
[8] According to the police, when Vanniammal, an aged Dalit woman, died on April 24, her relatives and friends decided to take out the funeral procession through Muslim Street in Bomminaickanpatti village near Periyakulam. They chose the new route as there was another death ritual going on in their regular route. When the procession entered the Muslim Street, some residents protested and a minor clash followed. The police pacified both sides and the Dalits managed to complete the funeral that day. Later, the village witnessed minor skirmishes between the two groups.
http://www.thehindu.com/news/national/tamil-nadu/dalit-muslim-clash-near-theni/article23791161.ece
[9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=399384
[10] தமிழ்.ஒன்.இந்தியா, பெரியகுளம் அருகே இரு சமூகத்தினர் மோதல்: வாகனங்கள் தீக்கிரை.. போலீசார் குவிப்பு, Posted By: Hemavandhana Published: Sunday, May 6, 2018, 10:47 [IST]
[11] https://tamil.oneindia.com/news/tamilnadu/car-vehicles-were-set-on-fire-riots-near-periyakulam-318931.html
[12] தேனி மாவட்டத்தில் இரு பிரிவினருக்கிடையே மோதல்: போலீசார் ,Published on May 5, 2018; https://www.youtube.com/watch?v=RX_wlPP3bO8
[13] தினமணி, பெரியகுளம் அருகே இருதரப்பினர் மோதல்: வீடுகள், வாகனங்களுக்கு தீவைப்பு: 20 பேர் கைது, By DIN | Published on : 06th May 2018 09:16 AM
[14] http://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2018/may/06/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-20-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2914420.html
[15] The locals said the two groups had been harbouring enmity against each other ever since a portrait of VCK leader Thol. Thirumavalavan was damaged last month.
அண்மைய பின்னூட்டங்கள்