Archive for the ‘இமாம் கவுன்சில்’ category
ஏப்ரல் 10, 2016
“இறைதூதர் கருணாநிதி” என்ற திராவிட மேடை பேச்சும், ஷரீயத் மரண தண்டனைகளும், பகுத்தறிவுகள் மாட்டிக் கொண்ட விதமும்!

கருணாநிதி நாகராஜனை தெரியாது என்று ஏன் சொல்ல வேண்டும்?: கருணாநிதி, “தலைமை கழகப் பேச்சாளராக நாகை நாகராஜன் என்றொருவர் இருப்பதாக எனக்கு தெரியவில்லை”, என்றது[1] வேடிக்கையாக இருக்கிறது. ராஜ் தொலைக்காட்சி அகடவிகடம் பேச்சரங்க நிகழ்ச்சியின் நடுவர் கலைமாமணி கவிஞர் நாகை நாகராஜன் அவர்கள், ரூ.25 ஆயிரத்தை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கினார் (நாகை, 18.11.2013) என்று “விடுதலையில்” காணப்படுகிறது[2]. தி.மு.க., தலைமை பேச்சாளர் நாகை நாகராஜன், என்று தினமலரிலும் குறிப்பு காணப்படுகிறது[3]. எனவே கலைஞர், மூதறிஞர், முத்தமிழ் வித்தகர், எல்லாம் தெரிந்தவர் பிரச்சினையில் சிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் இவ்வாறு கழட்டி விட பார்க்கிறார் என்று தெரிகிறது.

சகிப்புத் தன்மை, பேச்சுரிமை… பற்றி யாரும் குரல் எழுப்பவில்லையே?: இப்பொழுது சகிப்புத் தன்மை, பேச்சுரிமை… என்றெல்லாம் ஏன் பேச மறுக்கிறார்கள்? இணைதளங்களில் முஸ்லிம்கள் இந்து மதம், இந்துக்கள், இந்துமத நூல்கள், பழக்க-வழக்கங்கள் என்று எல்லாவற்றைப் பற்றியும் கேலி, கிண்டல், ஏன் தூஷித்தும் வருகின்றனர். அவற்றை முஸ்லிம் கட்சிகள் இவ்வாறு எதிர்ப்பதில்லையே, கண்டிக்கவில்லையே, தட்டிக் கேட்கவில்லையே? பிறகு அதே மாதிரி திக-திமுக கட்சிக்காரர் இப்படி கூறிவிட்டார் என்று ஏன் கொதிக்க வேண்டும்? பிறகு அத்தகைக் கட்சிகளுடன் ஏன் கூட்டு வைத்துக் கொள்ள வேண்டும். காபிர்களுடன் எந்தவிதமான நெருக்கமும், நட்பும், கூட்டும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று இஸ்லாம் நூல்கள் தாராளமாகவே கூறுகின்றனவே? ஆனால், அவற்றை எதிர்த்து எப்படி உண்மையான முஸ்லிம்கள் கூட்டு வைத்துக் கொள்ளலாம்?
திமுக கூட்டணியிலிருந்து எஸ்.டி.பி.ஐ.கட்சி விலகியது ஏன்? (08-04-2016): சென்னை (08-04-16): திமுக கூட்டணியிலிருந்து எஸ்.டி.பி.ஐ.கட்சி விலகுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் தெஹல்கான் பாகவி செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, திமுகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடத்தவில்லை. 12 தொகுதிகளுக்கான பட்டியலை திமுகவிடம் அளித்திருந்தோம், எங்களுக்கான முக்கியத்துவத்தை திமுக தரப்பில் தராததால் திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறோம்.” என்றார். மேலும் “இன்று (08-04-2016, வெள்ளிக்கிழமை) செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அக் கூட்டத்தில் யாருடன் கூட்டணி என்று கலந்து ஆலோசிக்கப்படும். அதற்குப் பிறகு எங்களின் நிலைப்பட்டை அறிவிப்போம்” என்றார்[4] . இக்கட்சி இருக்கும் முஸ்லிம் கட்சிகளில் தீவிரவாதமான கட்சி என்றுள்ள நிலையில், உண்மையில் எதற்காக விலகியது என்று தெரியவில்லை. தமிழக மக்கட்தொகை சுமார் 7.3 கோடி அல்லது 730 லட்சங்கள், அதில் முஸ்லிம்கள் சுமார் 43 லட்சங்கள் இருக்கிறாற்கள். அப்படிப் பார்த்தால், அவர்களுக்கு 6% என்ற கணக்கில் ஒன்ரூ அல்லது இரண்டு இடங்கள் தான் கொடுக்கப்பட வேண்டும் ஆனால் 12 முதல் 15% சீட்டுகள் கொடுக்கப்படுகிறன. இது தவிர மற்ற கட்சிகளில் உள்ள முஸ்லிம் வேட்பாளர்கள் முஸ்லிம்களாகத்தான் செயல்பட்டு வருகிறார்களே தவிர இந்துக்களைப் போல நாத்திகர்கள், செக்யூலரிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் என்றெல்லாம் செயல்படுவதில்லை. ஆகவே, சீட்டு எண்ணிக்கையினால் எஸ்.டி.பி.ஐ.கட்சி விலகியது என்று சொல்வதில் அர்த்தமில்லை. “இறைதூதர் கருணாநிதி” உருத்தியிருக்குமோ என்னமோ, அல்லாவுக்குத்தான் தெரியும்.
கௌரவகொலை, திலகவதி ஐ.பி.எஸ் விமர்சனம், முஸ்லிம்களின் ஆர்பாட்டம் (ஜூன். 2009)[5]: சென்னை புளியந்தோப்பில் சலீம் என்ற ஆட்டோ டிரைவர் தனது மகள் காதலனோடு ஓடிப்போனதால் ஆத்திரமடைந்து மகளையோ கொலை செய்தபோது, நக்கீரன் வார இதழுக்கு பேட்டியளித்த திலகவதி ஐ.பி.எஸ் அவர்கள் கௌரவக் கொலைகள் அதிகமாக அரபு நாடுகளில் அரங்கேறிக் கொண்டிருப்பதாகவும் சலீம் ஒரு இஸ்லாமியர் என்பதால் அந்த மத்திற்கு இந்தச் சம்பவம் புதிதல்ல என்று பேட்டியளித்தார். அரபு நாடுகளில் கௌரவக் கொலைகள் அளவுக்கதிகமாக நடைபெற்று வருவதாகவும் சலீம் ஒரு இஸ்லாமியன் என்பதால் அந்த மதத்திற்கு இந்தச் செய்தி புதிதானதல்ல என்று கூறினார். திலகவதியின் இந்தப் பேட்டி, அரபு நாடுகளில் கவுரவக் கொலைகள் அங்கீகரிக்க ப்பட்டுள்ளதாகவும், அது இஸ்லாமிய மதத்திற்கு ஏற்புடையது போலவும் சலீம் இஸ்லாமியர் என்பதால் இந்தச் சம்பவம் அதாவது இஸ்லாமிய மதம் இத்தகைய காட்டுமிராண்டித்தனச் செயலை அங்கீகரிப்பது போலவும், இஸ்லாமிய மக்கள் இந்த செயல்களை ஏற்றுக் கொள்வதாகவும், மேலும் இஸ்லாமியர்கள் இவைகளை பின்பற்றுகிறார்கள் என்ற கருத்தை உண்டாக்கியுள்ளது. திலகவதியின் இந்த பேட்டி பிறசமய மக்கள் மத்தியில் இஸ்லாமிய மார்க்கத்தை பற்றி தவறான கருத்தை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது. இந்த கருத்து ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போன்ற முஸ்லிம் அமைப்புகள் திலவதியின் இந்த பேட்டியை கண்டித்தும் இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வழியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தை 2009ல் நடத்தின.
நித்தியானந்தா விசயத்தில் கூட நக்கீரன் கோபால் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது (மார்ச்.2010)[6]: 2010ல் முஸ்லிம்கள் நக்கீரன் கோபாலை மிகக்கேவலமாக, மோசமாக வசைப்பாடின மூஸ்லிம் அமைப்புகள்[7]. இஸ்லாமிய சகோதரர்களுக்கு…..போலிச்சாமியார் நித்யானந்தாவின் உண்மை முகத்தை உலகறியச்செய்வதற்காக தொடர்ந்து புலனாய்வு செய்திகளை வெளியிட்டு வருகிறது நக்கீரன். அந்த வகையில், நபிகள் நாயகம் உள்ளிட்ட பெருந்தகைகளின் பெயரை களங்கப் படுத்திய நித்யானந்தாவின் போலித் தனத்தை வெளிப்படுத்தவே… நித்யானந்தா தன் ஆசிரமவாசிகளிடம் கூறிய சில கருத்துக்களை வெளியிட்டிருந்தோம். மற்றபடி, இஸ்லாமிய சகோதரர்களின் மனதை புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. குறிப்பிட்ட செய்தியின் மூலம் யாரேனும் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். –ஆசிரியர்[8].

ரிசானா மரண தண்டனை சர்ச்சையும், கருணநிதியும் (2013): ரிசானா நபீக் என்ற இளம்பெண் ஶ்ரீலங்காவிலிருந்து சவுதிக்கு வேலை செய்ய 2005ல் சென்றாள். ஆனால், வேலை செய்யும் இடத்தில் ஒரு குழந்தையைக் கொன்றாள் என்று 2007ல் மரண தண்டனை ஷரீயத் சட்டத்தின் படி விதிக்கப்பட்டது, 09-01-2013 அன்று தண்டனை நிறைவேறியது. அப்பொழுது கருணாநிதி முரசொலியில் மரண தண்டனை கூடாது என்று எழுதினார். “மரண தண்டனை என்ற ஒரு கொடுமை ஒழிக்கப்பட்டிருந்தால் ரிசானா குரூரமாகக் கொல்லப்பட்டிருக்க மாட்டாள் அல்லவா? இதற்கு எப்போது விடியல்? உலக நாடுகள் எல்லாம் ஒன்று கூடி இதுபோன்ற கொடுமைகள் இனியும் நேராமல் இருக்க, மானுடம் காத்திடும் மனித நேய உணர்வோடு, மனித நாகரிக மாண்பினை வெளிப்படுத்தும் வகையில், முடிவெடுத்து அதனை நடைமுறைக்குக் கொண்டு வர மாட்டார்களா?,” என்று தனது கருத்தைத் தெரிவித்தார். அப்பொழுதும், கருணாநிதி இஸ்லாமிய சட்டத்தை எதிர்க்கிறார், அதற்கு அவருக்கு எந்தவித உரிமையும் இல்லை என்று எச்சரித்து கண்டம் தெரிவித்தன. பிறகு, கருணநிதி மழுப்பலாக பதில் அளித்ததால் விசயம் மறக்கப்பட்டது. சரீயத்தின் படி “மரண தண்டனை” புண்ணியமானது, ஆனால், இந்திய சட்டதிட்டங்களின் படி அது கொடுமையானது, மனிதத்தன்மையற்றது என்றெல்லாம் வாதிப்பது முரண்பாடாக அவர்கள் கருதுவதில்லை. ராஜிவ் காந்தி கொலைவழக்கில் எப்படி கொலையாளிகள் விடுவிக்கப்பட்டனரோ அதேபோல, இஸ்லாம்ய தீவிரவாதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வெளிப்படையாகக் கேட்டு வருவதும் விசித்திரமானதே[9].
முஸ்லிம்கள் விசயங்களை ஏன் மதவாதமாக்கி வருகிறார்கள்?: திக-திமுகவில் சிலர் சில நேரங்களில் செக்யூலரிஸத்துடன் செயல்பட நினைக்கும் போது, செயல்படும் போது இவ்வாறு தடுக்கப்படுகின்றனர் என்றும் தெரிகிறது. அதாவது கருணாநிதி போன்றோரே முஸ்லிம்களைக் கண்டு பயப்படுகின்றனர் அல்லது அவ்வாறு பயமுருத்தி வைத்துள்ளன என்று தெரிகிறது. இதனால், ஆனானப்பட்ட கருணாநிதியின் பகுத்தறிவே அடிப்படைவாத முஸ்லிம்களிடம் மண்டியிட வேண்டியதாகிறது. ஆனால், தமிழக மக்கள் கவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிறுவர்களுக்கு என்று ஒரு கார்ட்டூன் போட்ட போது, “தி ஹிந்து” மாட்டிக் கொண்டு மன்னிப்புக் கேட்டுக் கொண்டது. நக்கீரன், திலகவதி ஐ.பி.எஸ், கருணாநிதி போன்றோர் தங்களது கருத்துகளை வெளியிட்டதற்கு மிரட்டப்பட்டனர், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்தனர், மிரட்டினர். “விஸ்வரூபம்” பிரச்சினைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே, தமிழகத்து முஸ்லிம் அமைப்புகள் அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் முதலியவற்றை ஆதரிப்பதாகவே தங்ளைக் காட்டிக் கொண்டு வருகின்றன.
© வேதபிரகாஷ்
10-04-2016
[1] பிபிசி.தமிழ்.நியூஸ், தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய நாகை நாகராஜன் யார் என்று எனக்கு தெரியாது-கருணாநிதி, பதிவு செய்த நாள்: 07 Apr 2016 11:05 am
By : Sam Kumar.
[2] http://www.viduthalai.in/page1/70908.html
[3] http://www.dinamalar.com/twitter_detail.asp?id=1478105&Print=1
[4] http://www.inneram.com/news/tamilnadu/8499-sdpi-party-dmk.html
[5] http://www.tntj.net/2760.html
[6] நக்கீரன், இஸ்லாமிய சகோதரர்களுக்கு….., பதிவு செய்த நாள் : 24, மார்ச் 2010 (21:48 IST); மாற்றம் செய்த நாள் :24, மார்ச் 2010 (21:48 IST)
[7] http://thaquatntjtvr.blogspot.in/2010/10/blog-post_03.html
[8] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=29297
[9] காபிர்கள் மோமின்களுக்கு தண்டனைக் கொடுக்க முடியாது, இஸ்லாம்-அற்ற சட்டங்கள் எங்களுக்குப் பொருந்தாது என்று வெளிப்படையாக இவ்வாறு கூறிவருவதை மற்றவர்கள் கவனிக்க வேண்டும்.
பிரிவுகள்: அடிப்படைவாதம், அரேபியா, அல் - உம்மா, அல்-உம்மா, அவதூறு, இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இமாம் கவுன்சில், இறை தூதர், இறைதூதர், இறைத்தூதர், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐமுமுக, நபீக், ரிசானா, ரிசானா நபீக்
Tags: அவமதிக்கும் இஸ்லாம், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாம், எஸ்.டி.பி.ஐ, கோபால், சவுதி, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜிஹாத், திலகவதி, நக்கீரன், நபீக், நாகை நாகராஜன், புனிதப்போர், மரண தண்டனை, முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லீம்கள், ரிசானா, ரிசானா நபீக், ஷரீயத்
Comments: Be the first to comment
மார்ச் 22, 2013
மதங்களுக்குள் உரையாடல் – வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதத்தைக் கண்டித்து நடந்த மாநாடு
லக்னௌவில் மதங்களுக்குள் உரையாடல் என்ற ரீதியில் “வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதத்தைக் கண்டித்து” ஒரு மாநாடு மார்ச் 20ல் நடந்தது. ஆனால், தமிழ் இணைதளங்களில் இதைப் பற்றி பேச்சு-மூச்சு காணோம்.
வாஹாபி தீவிரவாத-பயங்கரவாதம் சவுதி அரேபியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும், அது முஸ்லீம் சமூகத்தையே பாதித்து வருவதாகவும், முஸ்லீம்களை தவறான பாதையில் எடுத்துச் செல்வதாகவும், இதனால் முஸ்லீம்களின் மதிப்புக் குறைந்து வருவதாகவும், குறிப்பாக முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று மற்றவர்கள் நினைக்கும்படி, பார்க்கும்படியான நிலை வந்திவிட்டது என்றும் விவாதிக்கப்பட்டது.
பிரிவுகள்: அடிப்படைவாதம், அப்சல் குரு, அரேபியா, அலி, அலி சகோதரர்கள், அல் - உம்மா, அல் - காய்தா, அல் ஹதீஸ், அல்லா, அல்லா என்ற வார்த்தை உபயோகம், அல்லா பெயர், அஹமதியா, அஹமது ஷா புகாரி, அஹ்மதியாக்கள், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதி ஜிலானி, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இமாம், இமாம் அலி, இமாம் கவுன்சில், இமாம் செக்ஸ், இஸ்லாமிய சாதி, இஸ்லாமிய ஜாதி, இஸ்லாமிய நாடு, இஸ்லாமிய வங்கி, இஸ்லாமியத் தமிழன், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உயித்தெழுதல், உயிர் பலி, உருது மொழி, உருவ வழிபாடு, உரூஸ், உறவினர், கல்லடி ஜிஹாத், கல்வத், கல்வீச்சு, காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, கிலாபத், கிலாபத் இயக்கம், குரான், சன்னி, சன்னி ஜமைதுல் உல்மா, சமரசப்பேச்சு, சமஸ்கிருதம், சவுதி, சவுதி அரேபியா, சின்னம், சியாசத், சிறுபான்மையினர், சிறுபான்மையினர் நலத்துறை, சூஃபி, சூஃபி நம்பிக்கையாளர், சூஃபித்துவம், சூபித்துவம், செக்யூலார் அரசாங்கம், ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், தமிழகத்து ஜிஹாதி, தமிழகத்து தீவிரவாதி, தமிழ் முஸ்லீம், தமிழ்நாடு தௌஹீத் ஜமாத், தற்கொலை குண்டு வெடிப்பு, தலாக், தலாக்-தலாக்-தலாக், தலித் முஸ்லீம்கள், தலிபான், வாஹாபி, வாஹாபி இயக்கம்
Tags: அடிப்படைவாத சித்தாந்தம், அடிப்படைவாத தீவிரவாதம், அரேபியா, ஏற்றுமதி, சவுதி, சவுதி ந்ரேபியா, சித்தாந்த தீவிரவாதம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாதி பயங்கரவாதம், தீவிரவாத பயங்கரவாதம், பயங்கரவாத-தீவிரவாதம், பயங்கரவாதம், வாஹாபி, வாஹாபி தீவிரவாதம், வாஹாபி பயங்கரவாதம்
Comments: 2 பின்னூட்டங்கள்
மார்ச் 17, 2013
குல்லா போட்டு கஞ்சி குடித்த காபிர்களை கழட்டி விடுவதேன்?

காபிர்களுடன் உறவு-கூட்டு ஏன், எதற்கு, எப்படி: காபிர்களுடன் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது, இருப்பினும் காபிரை வைத்து காபிரை அழிக்கலாம் என்றால் அவ்வாறான நிலையில் ஓரளவிற்கு நட்பு வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு, முஸ்லீம்கள் இருக்கும் போது, விஷயம் அறிந்தும் அறியாதது போல, இந்திய துரோகிகள், அரசியல் ஆதாயத்திற்காக, ஓட்டுவங்கி அரசியலுக்காக பேரம் பேசி தேர்தலை சந்தித்து வருகின்றனர். அரசாங்கத்தில் இப்தர் பார்ட்டி நடத்துவதிலிருந்து, அரசியல்வாதிகள் தனியாக மற்றும் இஸ்லாம் அமைப்புகளே நடத்தும் நோன்பு விழாக்கள் பல நடந்து வருகின்றன. அத்தகைய காபிர்-மோமின் கூடுதல்களில் நாத்திக, இந்துவிரோத, ஏன் கம்யூனிஸ்ட் போன்றோரும் கலந்து கொள்கின்றனர். அப்பொழுது, குல்லா போட்டுக் கொண்டு கஞ்சி குடிப்பது என்பது ஒரு கலாச்சாரமாகி விட்டது.

முஸ்லீம்களை நம்பும் உபி அரசியல்வாதிகள்: உபியைப் பொறுத்த வரைக்கும் “முல்லா”யம் சிங் யாதவ், முஸ்லீம்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக உள்ளார். காங்கிரஸ்காரர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம், சுன்னத் செய்து கொள்லக் கூட தயாராக உள்ளார்கள். ராஹுல் உபிக்கு போக வேண்டும் என்றால், ஒரு மாதம் முன்னரே ஷேவ் செய்யாமல் இருப்பார். தாடி இல்லாமல் அவரை உபியில் பார்க்க முடியாது. இப்பொழுது கூட, கொலை செய்யப்பட்ட ஜியா உல் ஹக்கின் மனைவி பர்வீன் ஆஜாதைச் சென்று பார்த்துள்ளார்[1]. ஆனால், காஷ்மீரில் கொல்லப்படும் எந்த வீரரின் குடும்பதையோ, மனைவியையோ பார்த்ததாக தெரியவில்லை. அதாவது முஸ்லீம் என்றால், அதிலும் தேர்தல் வருகிறது என்றால் இத்தகைய நாடகங்கள், ஆனால், இந்தியர்களை ஏமாற்றும், துரோகம் இழைக்கும் வேலைகள் என்பதனை மற்றவர்கள் உணர்ந்து கொள்வதில்லை.

புகாரி-முல்லா நிக்கா தலாக்கில் முடிந்துள்ளது: இப்பொழுது தில்லி இமாம் மௌலானா சையது அஹ்மது புகாரி, “முல்லா”யம் சிங் யாதவுடனான தம்முடைய உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். இவரது மறுமகன் உமர் அலி கான் (Umar Ali Khan) மற்றும் வாசிம் அஹமது (Waseem Ahmad) தம்முடைய ராஜினாமா கடிதங்களை சனிக்கிழமை அனுப்பியுள்ளனராம். முஸ்லீம்களை கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர், அவர்களைக் கவனித்துக் கொள்வதில்லை என்று குற்றஞ்சாட்டியுளார். இருப்பினும், உறுதியான வாக்கு அளித்தால், தமது நிலையை மறுபரிசீலினை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.[2] எட்டாவா என்ற இடத்தில் ஏப்ரல் 21ம் தேதி, ஒரு முஸ்லீம் கூட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்[3].

Rajiv Gandhi-with-Muslim-cap-1990
முஸ்லீம் ஊழல் செய்ய மாட்டாரா?: உபி மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட வாசிம் அஹமது, ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளால், பதவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்[4]. ஆனால், புகாரி அதனை எதிர்க்கிறார். முஸ்லீம் என்பதினால் தான், ஊழல் குற்றச்சாட்டு ஏற்படுகிறது என்று வாதிடுகிறார். அரசியலில் ஊழல் இல்லாவர் என்பது கிடையாது என்ற நிலையில் இத்தகைய வாதமே போலித்தனமாகும்.

லல்லு-பாஷ்வான்-குல்லா
ஆஸம் கானும் ஜெயபிரதாவும்: முலாயம் கட்சியில் ஏற்கெனவே ஆஸம் கான் என்ற முஸ்லீம் அமைச்சர் அடாவடித் தனமாக செயல் பட்டு வருகின்றார் என்பது தெரிந்த விஷயமே. கடந்த தேர்தலின் போது, ஜெயபிரதாவின் மீது அவதூறு ஏற்பட, அசிங்கமான சிடியை வெளியிட்டார் என்று அந்த நடிகையே குற்றஞ்சாட்டியுள்ளார்[5]. அப்பொழுதைய சமஜ்வாதி கட்சியின் பொதுசெயளாலராக இருந்த அமர்சிங் தேர்தல் கமிஷனரிடம் “ஜெயபிரதாவின் நிர்வாண படங்கள் மற்றும் ஆபாசப் படங்கள் அடங்கிய சிடியை ஆஸம் கான் ஆட்கள் விநியோகித்து வருகிறார்கள்”, என்று புகார் கொடுத்தார்[6]. வெளிப்படையாக, அந்நடிகை இந்து என்பதனால் சீட் கொடுக்கக் கூடாது, அதிலும் முஸ்லீம் வேட்பாளருக்கு எதிராக நிறுத்தக் கூடாது என்றெல்லாம் வெளிப்படையாக முலாமிற்கு கண்டிஷன் போட்டார்.

புகாரி- ஆஸம் கான் லடாய்: புகாரியின் மறுமகன் நியமிக்கப்பட்டதற்கு, ஆஜம் கான் எதிர்ப்பு தெரிவித்தார். அதுமட்டுமல்லது “புகாரியை முஸ்லீம்கள் தலைவர்” என்று ஏற்றுக் கொள்ளமுடியாது என்றெல்லாம் பேசியுள்ளார்[7]. ஏனெனில் முஸ்லீம் அமைச்சர் பதவியை தனது மறுமகனுக்குக் கொடுக்குமாறு, புகாரி கேட்டுக் கொண்டார்[8]. இதனால்தான், ஆஸம் கான் – புகாரி இவர்களிடம் பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது, அதில் முல்லாயம் சிக்கியுள்ளார்[9].

Omar Abdullah – Rahul-Mullah-Topi
எந்த முஸ்லீம் கூட்டு அதிக ஓட்டு கிடைக்கும்?: போதாகுறைக்கு, இப்பொழுது பிரைலியைச் சேர்ந்த மௌலானா தௌக்கீர் ராஸா என்பவருடன் கூட்டு வைத்துக் கொள்ளலாம் (Maulana Tauqeer Raza of Bareilly, for support in the Lok Sabha elections) என்று பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்[10]. எந்த முஸ்லீம் கூட்டத்துடன் கூட்டு வைத்துக் கொண்டால், அதிக ஓட்டு கிடைக்கும் என்று பார்க்கிறார் போலும்[11]. கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப் பெற்றுள்ளதால், இம்முறை இந்த முஸ்லீம் கூட்டினால் வென்று விடலாம் என்றும் கணக்குப் போடுகிறார்[12].
வேதபிரகாஷ்
17-03-2013
பிரிவுகள்: அகிலேஷ், அடிப்படைவாதம், அடையாளம், அமர் சிங், அலஹாபாத் தீர்ப்பு, அல்லா, அஹமது ஷா புகாரி, ஆஸம் கான், இந்திய முஜாஹத்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இமாம், இமாம் கவுன்சில், இஸ்லாமிய நாடு, இஸ்லாமியத் தீவிரவாதி, உருது மொழி, உலமா வாரியம், ஓட்டு, ஓட்டுவங்கி, கலவரங்கள், கலவரம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காங்கிரசுக்கு எச்சரிக்கை, காங்கிரஸ், குரான், குஷித் ஆலம் கான், கூட்டணி, கூட்டணி சித்தாந்தம், சட்டசபை, சரீயத், சரீயத் சட்டம், சிறுபான்மையினர், சிறுபான்மையினர் நலத்துறை, சுன்னத், சுன்னி, ஜமாத், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, ஜெயபிரதா, பழமைவாதம், புகாரி, புத்தகம், புனிதப் போர், மனநிலை, மனித நேயம், மிதிக்கும் இஸ்லாம், முலாயம், முஸ்லீம், முஸ்லீம் அல்லாத பெண்கள், முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம் சட்டம், முஸ்லீம் தன்மை, முஸ்லீம் லீக், முஸ்லீம்களிடம் ஊடல், முஸ்லீம்களிடம் கொஞ்சல், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களை தாஜா செய்வது, முஸ்லீம்கள், முஸ்லீம்கள் என்றால் தாஜா செய்வது, முஸ்லீம்தனம், முஹம்மது, யாதவ், ரஹ்மான், ஷியா, ஷியா சட்டம், ஷியா முஸ்லீம் சட்டம், ஷியா வாரியம், ஷியா-சுன்னி, ஷேக், ஹஜ், ஹஜ் கமிட்டி, ஹஜ் பயணம், ஹதீஸ்
Tags: ஃபத்வா, அகிலேஷ், அமர் சிங், அலஹாபாத், அவமதிக்கும் இஸ்லாம், இந்தியரா, இந்துக்கள், இமாம், கஞ்சி, கஞ்சி குல்லா, குரான், குல்லா, குல்லா கஞ்சி, கொலை, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், சோனியா, ஜியா உல் ஹக், ஜெயபிரதா, தாடி, தில்லி, தில்லி இமாம், தேர்தல், நக்வி, பர்வீன் ஆஜாத், பிஜேபி, புகாரி, போலீஸ், முலாயம், முஸ்லீம், முஸ்லீம்கள், யாதவ், ராம்பூர், ராஹுல், ரேபெரிலி, ரைபெரிலி, ஷாஹி இமாம்
Comments: 9 பின்னூட்டங்கள்
நவம்பர் 12, 2011
மும்பை வெடிக்குண்டு ஜிஹாதி கொலைக்காரன் தாவூத் இப்ராஹிம் தன்னுடைய சமாதிக்கு மும்பையில் இடம் தேடச் சொல்லியுள்ளானாம்!
நேருவின் இறுதி ஆசையும், தாவூதின் இறுதி ஆசையும்!: பள்ளியில் படிக்கும் போது, நேருவின் இறுதி ஆசை என்று ஏதோ படித்ததாக ஞாபகம். அதில் நேரு தான் இறந்தால், தனது உடல் இந்தியாவிற்கு எடுத்து வரவேண்டும், உடல் எரிக்கப் படவேண்டும், அஸ்தி கங்கையில் கரைக்கப்பட வேண்டும், இந்தியா முழுவதும் தூவப்படவேண்டும் என்றேல்லாம் குறிப்பிட்டதாக ஞாபகம். விபரீதமான ஆசைதான். அப்பொழுது இப்படி இறந்த மனிதனின் சாம்பல் தூவப்பட்டால் சுற்றுநிலை மாசு ஏற்படுமா என்றேல்லாம் யாரும் யோசிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. நேருவைப் பின்பற்றும் அல்லது செக்யூலரிஸ போர்வைப் போர்த்திக் கொண்டு உலாவரும் அறிவுஜீவிகளும் பிறகு அறிந்து வெட்கப்படவில்லை. அதுபோல இந்த தாவூத் இப்ராஹிம் என்ன பெரிய சுதந்திரத் தியாகியா, இந்திய அரசியல்வாதியா, பிரதம மந்திரியா, முக்கியமான ஆளா? பிறகு, இவனுக்கு ஏன் இந்த ஆசை? உண்மையில் தேடப்படும் குற்றவாளியான அவன், இந்திய அரசாங்கம், பாகிஸ்தான் கேட்டுள்ள 22 தீவிரவாதிகளில் அவனும் ஒருவன். கசாப்பைப் போல அவனுக்கும் தூக்குத்தண்டனைதான் கொடுக்கப்படும். ஆனால், இறப்பின் மூலம் தப்பித்துக் கொள்ள முயல்கிறான் போலும். இறந்த பிறகு பட்டங்களைக் கொடுத்து கௌரவிப்பது போல, இவன் இறந்தாலும், அவனுக்குக் கொடிய தண்டனைக் கொடுக்கப் பட வேண்டும். அப்பொழுதுதான், தீவிரவாத-பயங்கரவாத அரக்கர்களுக்கு பயம் வரும். செத்தப் பிறகு நரகத்திற்குச் செல்லக் கூடிய இந்த கொடியவர்களுக்கு, இந்தியா இடந்தரலாகாது.
கொலைக்காரன், தீவிரவாதி, பயங்கரவாதி: செத்தபிறகும் பிரச்சினை கிளப்ப தீர்மானமாகவே உள்ளான் போலும் வெடிகுண்டு கொலைக்காரன், ஜிஹாதி தாவூத் இப்ராஹிம். உண்மையிலேயே நம்பிக்கையுள்ள மனிதனாக இருந்திருந்தால் பாவத்தைக் கழுவ வருந்தியிருக்க வேண்டும். ஆனால், சாவிற்குப் பிறகு தீவிரவாத-பயங்கரவாத சின்னமாக இருக்க முடிவு செய்திருப்பது, இந்திய மக்களுக்கு, குறிப்பாக மும்பை மக்களுக்கு பெரிய அபாயமான விஷயமாகும். தனது மரணத்திற்கு பின்னர் தனது உடல் மும்பையில் புதைக்கப்பட வேண்டும் என்று பிரபல நிழலுக தாதா தாவூத் இப்ராகிம் விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன[1]. .அந்த அளவிற்கு பிறந்த மண்ணுடன் ஐக்கியம் ஆகவேண்டும் என்று நினைப்பவன், எப்படி அந்த மண்ணிற்கு தொரோகம் விளைவித்திருப்பான்? அப்பாவி மக்களைக் கொன்றிருப்பான்? கடந்த 1993 ஆம் ஆண்டு நிகழ்ந்த மும்பை குண்டுவெடிப்புகளை நடத்தி 250க்கும் மேற்பட்ட அப்பாவிகள் பலியாவதற்கு காரணமாக இருந்து[2], அச்சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான தாவூத், அத்தாக்குதலுக்கு பின்னர் மும்பையிலிருந்து தப்பி சென்று பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்துவருகிறான்[3]. அவனை பாகிஸ்தான் அரசும், அதன் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யும் பாதுகாத்து வருகிறது[4].
இந்திய பொருளாதாரத்தைச் சீர்குலைத்தவன், சீர்குலைத்து வருபவன்: ஏதோ இந்த தாவூத் இப்ராஹிம் பெரிய மனிதனைப் போல ஊடகங்கள் சித்தரித்து வருகின்றன. எதிர்மறை விளம்பரத்தின் மூலம், மக்கள் மனத்தில் பதிய வைக்கிறது. சமயத்தில் முஸ்லீம்கள் அவனை தியாகி என்றும் நினைப்பர், நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவன் நினைவாக திரைப்படம் எடுக்கவும் ஆரம்பித்துவிட்டனர்[5]. கொலை[6], கள்ளக்கடத்தல், கிரிக்கெட் சூதாட்டம், போதை மருந்து வியாபாரம்[7], மும்பை திரைப்படத் தொழிலை, ஏன் இந்தியத் திரைப்படத்தொழிலையே[8] ஆட்டிப் படைப்பவன், பல நடிகைகளின் வாழ்க்கையை நாசமாக்கிவன், விபச்சாரம் பெருகக் காரணமானவன், மொத்த ஹவாலா போக்குவரத்திற்கும் கணிசமான அளவிற்குக் காரணமானவன், இதையெல்லாம் தவிர பத்திற்கும் மேற்பட்ட தீவிரவாத-பயங்கரவாதக் கூட்டங்களுக்கு பலவகைகளில் உதவி வருபவன்[9]. பிறகு அவனுக்கு என்ன இந்தியாவின் மீது, தான் பிறந்த மண்ணின் மீது ஆசை?
நம்பிக்கையாளனான ஜிஹாதி ஏன் சாவைக்கண்டு பயப்பட வேண்டும்? இந்நிலையில், கடந்த மே மாதம் 2010 பாகிஸ்தானில் பதுங்கியிருந்த அல் காய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஒஸாமா பின்லேடனை, அமெரிக்க படையினர் அதிரடியாக சுட்டுக் கொன்றதையடுத்து, தாமும் அவ்வாறு வேட்டையாடப்படலாமோ என்ற அச்சத்தில், தாவூத் கராச்சியிலிருந்து வேறு ஒரு நாட்டிற்கு சென்றுவிட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது. நம்பிக்கையாளனான ஜிஹாதி சாகத்தான் விரும்புவானேத் தவிர, சாவைக்க் அண்டு பயப்பட மாட்டானே? ஆக சாவிலும் இந்தியாவை பாதிக்க விரும்புகிறான். ஆனால் அவன் தொடர்ந்து கராச்சியிலேயே ஐஎஸ்ஐ-யின் உயர் பாதுகாப்பு வளையத்தில் இருந்துவருவதாக கூறப்படுகிறது. அப்படியென்றால், கராச்சியிலேயே அவனை புதைத்து விடலாமே? இந்நிலையில் தற்போது 56 வயதாகும் தாவூத்திற்கு இரண்டாவது முறையாக மாரடைப்பு வந்ததை தொடர்ந்து அவன், தனக்கு விரைவில் மரணம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தனது இரண்டாவது மகள் திருமணத்தை, திட்டமிட்டதற்கு ஓராண்டுக்கு முன்னரே கடந்த ஆண்டு 2010 நடத்தி வைத்தான். தாவூத், தனது மூத்த மகளை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாந்தத் மகனுக்கு திருமணம் செய்துகொடுத்துள்ளான். மகனுக்கு, பிரிட்டனை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரது மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளான். இந்நிலையில் சமீப நாட்களாக தாவூத்தின் உடல் நிலை மிக மோசமடைந்துள்ளதாகவும், அவன் 24 மணி நேரமும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவிற்கு தாவூத் வேண்டுமா? பொதுவாக தேடப்படும் தீவிரவாதி, பயங்கரவாதி, மறைந்து வாழும் குற்றவாளியை உயிருடனோ, பிணமாகவோ பிடித்துக் கொடுத்தால் பரிசு என்றேல்லாம் அறிவிப்பர்கள். இந்நிலையில், தனது இறுதி நாட்கள் நெருங்குவதை உணர்ந்துள்ள தாவூத், தனது மரணத்திற்கு பின்னர் தனது உடலை தாம் தாதாவாக கோலோச்சிய மும்பையிலோ அல்லது தமது பிறந்த ஊரான மும்பையை அடுத்துள்ள ராய்காட் மாவட்டத்தின் கேத் நகரிலோ புதைக்க வேண்டும் என தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது[10]. இது குறித்து மும்பை காவல் துறையின் குற்றப்பிரிவு தலைவர் ஹிமான்ஷு ராஜிடம் இது குறித்து கேட்டபோது, தங்களுக்கும் இது குறித்த நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்[11]. தாவூத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா, நீண்ட காலமாக பாகிஸ்தான் அரசிடம் கோரி வருகிறபோதிலும், அவன் தங்கள் நாட்டில் இல்லை என்று அந்நாடு மறுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது. பிறகு பிணத்தை இந்தியாவிற்குக் கொடுப்போம் என்றால் என்ன அர்த்தம்?
வேதபிரகாஷ்
11-11-2011
[6] ஆகஸ்ட் 17, 1997ல் டி-சீரிஸ் குல்ஸன் குமார் சுட்டுக் கொள்ளப்பட்டது, திரைப்படத்துறையினரை கப்பங்கட்டச் சொல்லி பயமுறுத்திய செயல்தான்!
In a breakthrough in the Gulshan Kumar murder case, the city police claimed that Abdul Rauf Dawood Merchant, an aide of the underworld don, Dawood Ibrahim, today “confessed” to having killed the music mughal three years ago.
http://hindu.com/2001/01/10/stories/0210000a.htm
[8] அவனுடையக் கூட்டாளிகள் இன்றும் தமிழ் திரைப்படத்துறையில் தமிழ் நடிகர்களாக, தமிழச்சி நடிகைகளாக மறைந்து வாழ்கின்றனர். பங்கை சேகரித்து அவனுக்குத் தப்பாமல் அனுப்பி வைக்கின்றனர். இதைப் பற்றி எந்த பச்சைத் தமிழனுக்கும் அக்கரையில்லை, கேட்கத் துப்பில்லை.
[9] Dawood is among the 50 terrorists India wants Pakistan to hand over. Apart from his hawala network in India, his involvement is also suspected in providing logistics to the 10 terrorists who attacked Mumbai in 2008.
[10] Zee News reported According to Zee News, the 56-year-old “Karachi-based don”, who has had two massive heart attacks in the past two years, is being monitored round-the-clock by a team of doctors and his family members. However, according to the report, Dawood is already busy planning his end. He has instructed his men to find a suitable place for his burial in Mumbai or in his native town Khed in Ratnagiri district.
http://www.pakistantoday.com.pk/2011/11/dawood-ibrahim%E2%80%99s-%E2%80%98days-numbered%E2%80%99/
பிரிவுகள்: அபு சலீம், அபு ஜிண்டால், அரேபிய ஷேக்கு, அரேபியா, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்லா, ஆப்கானிஸ்தான், இணைதள ஜிஹாத், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, இமாம், இமாம் கவுன்சில், இரட்டை வேடம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உறவினர், கலவரங்கள், கலவரம், கல்லடி ஜிஹாத், காஃபிர்கள், காந்தஹார், காஷ்மீர், குடும்ப திவிரவாதம், குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, குரூரம், குல்லா, குல்ஷன்குமார், கொலை, கொலை வழக்கு, சவூதி அரேபியா, சுன்னி, சுன்னி சட்ட போர்ட், சுன்னி-ஷியா, சொந்தமண்ணின் ஜிஹாதி, ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், டெட்டனேட்டர், டெட்டனேட்டர்கள், தாவூதின் காதலி, தாவூத் இப்ராஹிம், தியாகப் பலி, தியாகம், துபாய், துப்பாக்கி, நக்மா, பலுச்சிஸ்தான், பாகிஸ்தான், போதை, போதை மருந்து, மதகலவரம், மும்தாஜ், முஸ்லீம், ஷியா, ஷியா சட்ட போர்ட், ஷியா சட்டம், ஷியா முஸ்லீம் சட்டம், ஷியா வாரியம், ஷியா-சுன்னி
Tags: அபாயம், இப்ராஹிம், கல்லறை, சமாதி, சாவு, தாவூத், தாவூத் இப்ராஹிம், பாதுகாப்பு, மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மும்பை
Comments: 3 பின்னூட்டங்கள்
ஜூலை 28, 2010
தாலிபன் மாதிரி நீதிமன்றங்கள் கேரளாவில் செயல்படுவது எப்படி?
முஸ்லீம் பிரச்சினைகளுக்கு தனியாக நீதிமன்றங்கள் கேரளாவில் உள்ளனவா? ஜோஸப் தாக்கப்பட்டதற்குப் பிறகு, இத்தகைய வி னா எழுகிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்யடன் முஹமது, தாலிபன் மாதிரி நீதிமன்றங்களை முஸ்லீம் அமைக்கள் நடத்தி வருவதாக விக்ஷேனம் என்ற நாளிதழில் முதலில் செய்தி வெளி வந்தது[1]. அதற்குப் பிறகு, மாத்ருபூமியில் தொடர்ந்து விவரங்கள் வெளியிடப்பட்டன, என்று குறிப்பிட்டு அரசாங்கத்தின் இதைப் பற்றிய செயல்பாட்டினை கேட்டார்[2]..
தார் உல் கடா நீதிமன்றங்களும், தண்டனைகளும்: தார் உல் கடா என்ற தாலிபன் மாதிரி நீதிமன்றங்களை பாப்புலர் பிரென்ட் கேரளாவில் இணையாக நடத்திவந்தன மற்றும் அவையே முஸ்லீம்கள் சம்பந்தப்பட்டுள்ள வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கி வருகின்றன[3] என்ற குற்றச்சாட்டில், அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்று கொடியேரி பாலகிருஷ்ணன் என்ற அமைச்சர் கூறியுள்ளார்[4]. அத்தகைய கமிட்டிகள் சில பகுதிகளில் இருந்தாலும்[5], இதுவரை அரசிற்கு அத்தகைய தகவல் எதுவும் வரவில்லை என்கிறார்[6]. இமாம் கவுன்சில் என்ற பெயரிலும் சில செயல்கள் நடந்து வருகின்றன[7]. நிச்சயமாக அரசாங்கம் அத்தகைய நீதிமுறையை அனுமதிக்காது[8]. மலபார் பகுதிகளில் ஆறு அமைப்புகள் அவ்வாறு செயல்படுகின்றன. ஆனால், அவை அடிக்கடி தமது பெயர்களை மாற்றிக் கொள்கின்றன – கருணா ஃபௌண்டேஷன், சம்ஸ்கார வேதி என பல பல பெயர்களில் உலாவருகின்றன்[9]..
[1] http://economictimes.indiatimes.com/news/politics/nation/Kerala-looking-into-reports-of-Taliban-style-courts/articleshow/6223380.cms
[2] Congress legislator Aryadan Mohammed. Mohammed said the first such report of a Taliban style court appeared in Veekshenam daily this month and was followed by a series of reports in Mathrubhoomi daily.
[3]
[4] http://www.thehindu.com/news/states/kerala/article536784.ece
[5] http://www.hindustantimes.com/Kerala-to-probe-Taliban-courts/Article1-578643.aspx
[6] Popular Front of India that were reported to have organised parallel courts called ‘Dar ul Khada’ in different parts of the State.
[7] he Popular Front of India had claimed that such courts were under the Imam council, which was under the AIMPLB.
[8] http://www.centralchronicle.com/viewnews.asp?articleID=42866
[9] They regularly change names to evade monitoring. Some have benevolent-sounding names such as Karuna Foundation (meaning Compassion Foundation) or Samskara Vedi (an organisation that imparts morals and values).The police said they had found several incriminating documents from the office of Karuna Foundation recently.
பிரிவுகள்: இமாம் கவுன்சில், கருணா ஃபௌண்டேஷன், சம்ஸ்கார வேதி, தாலிபன் நீதிமன்றங்கள், மலபார்
Tags: ஆர்யடன் முஹமது, இமாம் கவுன்சில், கருணா ஃபௌண்டேஷன், கொடியேரி பாலகிருஷ்ணன், சம்ஸ்கார வேதி, தார் உல் கடா, தாலிபன், தாலிபன் நீதிமன்றங்கள், தாலிபன் மாதிரி, மலபார், மாத்ருபூமி, விக்ஷேனம்
Comments: 6 பின்னூட்டங்கள்
அண்மைய பின்னூட்டங்கள்