Archive for the ‘இமயம்’ category

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பு, அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்குஅழைப்பு விடுத்தது (1)

செப்ரெம்பர் 24, 2022

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல்உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பாக அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்தது (1)

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல்: முன்னர் ஶ்ரீசுதர்ஷன்ஜி என்பவர் சங்கசாலக் / தலைவராக இருந்த போது, ஆர்எஸ்எஸ் கேரள கிருத்துவர்களுடன் உரையாடல் வைத்துக் கொண்டது[1]. அப்பொழுது கேரளாவில் கிருத்துவர்களுக்கும், ஸ்வயம் சேவகர்களுக்கும் மோதல்கள் இருந்து வந்தன. பிறகு நிலைமை சுமுகமானது. இப்பொழுது, கேரளாவில் கிருத்துவர்களுக்கும், ஸ்வயம் சேவகர்களுக்கும் உறவுகள் இன்னும் மேன்பட்டுள்ளது. மோடியை கிருத்துவ மதத் தலைவர்கள் வரவேற்கிறார்கள். வாரணாசியின் ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம், முஹம்மது நபி பற்றிய நுபுர் ஷர்மாவின் கருத்து, அதன் தொடர்பாக ஒரு இந்து கொலை செய்யப் பட்டது மற்றும் கர்நாடகாவில் ஹிஜாப் பற்றிய சர்ச்சை என இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தில் அமைதியின்மை நிலவிவந்த நிலையில், அனைத்து இந்திய இமாம் அமைப்பின் தலைவரான இமாம் உமர் அகமது இல்யாசியை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் டெல்லியில் உள்ள மசூதி ஒன்றில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சில வாரங்கள் முன்பு தான் “ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தைத் தேடிச் செல்ல வேண்டாம்,” என்று மோகன் பாகவத் பேசியிருந்தார். இதன் தொடர்ச்சியாக சந்திப்பு நடத்தியிருப்பது முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.

உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பாக அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்துள்ளது: அகில இந்திய இமாம் அமைப்பு, இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுக்கான அமைப்பாக செயல்பட்டு வருகிறது[2]. உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பாக அகில இந்திய இமாம் அமைப்பு கருதப்படுகிறது[3]. இந்த அமைப்பின் தலைவரான உமர் அகமது இலியாசி. இவர், ஒரு மசூதிக்குள் வசிக்கிறார்[4]. அவரது வீடும் மசூதியும் ஒன்றுதான். அதில் ஒரு மதரஸாவையும் நடத்தி வருகிறார்[5]. இதை பார்வையிட, இமாம் இல்யாசி மோகன் பாகவத்தை அழைப்பு விடுத்திருந்தார். பின்னர் இந்தச் சந்திப்பு குறித்து தெரிவித்த உமர் அகமது இலியாசி, “எங்களது அழைப்பை ஏற்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், அகில இந்திய இமாம் அமைப்பின் அலுவலகத்திற்கு வருகை தந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் நமது நாட்டின் தந்தை. நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தாஜ்வீதுல் குரான் மதரசாவை அவர் பார்வையிட்டார். அங்கு கல்வி பயிலும் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது, நமது மரபணு ஒன்றுதான் என்றும், கடவுளை வழிபடும் முறைதான் வேறானது என்றும் மோகன் பாகவத் கூறினார்,” எனத் தெரிவித்தார். இந்த மகிழ்ச்சியான வெளிப்பாடு, நல்ல சகுனமாக இருக்கிறது எனலாம்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மசூதி மற்றும் மதரஸாவுக்கு விஜயம் செய்தது: இருப்பினும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் டெல்லியில் உள்ள மசூதி, மதரசாவுக்கு 22-09-2022 அன்று திடீரென சென்றார்[6], என்று தினகரன் போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மதரசாவில் உள்ள முஸ்லிம் மாணவர்களுடன் கலந்துரையாடினார்[7]. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், டெல்லி கஸ்துாரிபாய் காந்தி மார்க்கில் உள்ள மசூதி மற்றும் ஆசாத்பூரில் உள்ள ஒரு மதரசாவுக்கு நேற்று சென்றார்[8]. மதரசா மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். பகவத் உள்ளே சென்றதும் மாணவர்கள் வந்தே மாதரம், ஜெய் ஹிந்த் என கோஷமிட்டு வரவேற்றனர்[9]. மோகன் பகவத் மதரசா செல்வது இதுவே முதல் தடவை என்று ஆர்எஸ்எஸ் பிரமுகர் தெரிவித்தார். இதெல்லாம்,ஈந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கான சிறந்த முயற்சியாகவே தென்படுகிறது. இன்றைய உலக சூழ்நிலைகளிலும், மக்களிடையே நட்புறவு மிக அத்தியாவசமாக தேவைப் படுகிறது. குறிப்பாக, பொருட்களை பகிர்ந்து நுகரும் நிலையில் உலக மக்கள் உள்ளார்கள். உக்ரைன்–ரஷ்யா போர் அதனை வெளிப்படையாக எடுத்துக் காட்டியுள்ளது. அதில் மதம், மொழி, முதலியவை பார்க்க முடியாது.

சுமுகமான பரஸ்பர பேச்சு: மோகன் பகவத் மாணவர்களிடையே பேசிய பகவத், ‘ஒவ்வொரு மதத்தினரின் வழிபாட்டு முறைகள் வேறு விதமானதாக இருந்தாலும், அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும்,’ என்பதை வலியுறுத்தினார். இது பற்றி அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எம்பி அசாதுதீன் ஒவைசி கூறுகையில், ‘ஆர்எஸ்எஸ்சின் கொள்கைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். முஸ்லிம் உயர் குடிமக்கள் சிலரை அவர் சந்தித்துள்ளார். அடிமட்டத்தில் உள்ளவர்களை பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியாது,’ என்றார்[10]. ஒருவேளை, இவ்வாறு இந்து-முஸ்லிம் தலைவர்கள் நெருங்கி வருவது அவருக்குக் காட்டமாக இருக்கிறது போலும். ஒருவேளை அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு விசயங்கள் புரியாமல், தெரியாமல் இருந்தால், அவர்களையும் உரையாடலுக்கு அழைக்கலாம். ஏனெனில், பெரும்பாலான மக்கள் சாதாரண மக்களே, அவர்கள் தினம்ம்-தினம் தங்களின் வேலை, தொழில், கடமைளை செய்ய  வெளியே வந்து கொண்டிருப்பார்கள், சந்திப்பார்கள், பழகுவார்கள். தேசத் தந்தை பகவத்: இந்திய இமாம்கள் அமைப்பின் தலைவர் உமர் அகமது பேசுகையில், ‘மோகன் பகவத் இந்த நாட்டின் தேச தந்தை’ என்று புகழ்ந்தார். ஆனால். உடனே குறுக்கிட்ட மோகன் பகவத், ‘நாட்டுக்கு ஒருவர்தான் தேச தந்தை. நாம் அனைவரும் தேசத்தின் குழந்தைகள்,’ என்றார்[11]. அதாவது, மஹாத்மா காந்தி தான், தேசப் பிதா என்று வற்புருத்தியுள்ளதைக் கவனிக்கலாம்.

மதரஸாவுக்கு வருமாறு அழைத்த இமாம் இல்யாசி: “நீங்கள் மதரஸாவிற்குச் சென்று பாருங்கள். இப்போதெல்லாம் மதரஸாக்கள் பற்றி அதிகம் பேசப்படுகிறது. நீங்களே பாருங்கள் உங்களுக்குப் பிடிக்கும்,” என்று இமாம் இல்யாசி அழைப்பு விடுதத்தன் பேரில், கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பே சந்திப்பு திட்டமிடப்பட்டது என்று ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். பொதுவாக நேரில் சந்தித்து பேசும் பொழுது, பெரும்பாலான சந்தேகங்கள், தவறான புரிதல்கள் மற்றும் கருத்துகள் முதலியவற்றை உண்மை நிலை அறிந்து மாற்றிக் கொள்ளலாம். மேலும், இந்த சந்திப்பு நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையுடன் தொடர்பில்லாதது என்றும் ஆர்எஸ்எஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லி, உத்திரபிரதேசம், ஆந்திரா, தெலிங்கானா, தமிழகம் என்று பல மாநிலங்களில் மதரஸா செயல்பாடுகள், வக்பு சொத்துகள் பற்றிய சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. உபியில் மதரஸாக்களை பார்த்து, அளவிடும் வேலைகள் ஆரம்பித்துள்ளன. பெரும்பாலான, முஸ்லிம் அமைப்புகள், இதற்கு ஒப்புக் கொண்டுள்ளன.

© வேதபிரகாஷ்

24-09-2022


[1]  Inter-religious dialogue – மதங்களுக்குள் இடையிலான உரையாடல் என்ற முறையை கிருத்துவர்கள் கடைபிடித்து வருகிறார்கள். முஸ்லிம்கள் அதில் ஈடுபடாமல் இருந்தாலும், சூபித்துவம் போன்ற நிலைகளில் நெருங்கி வந்த / வரும் நிலைகள் உள்ளன.

[2] தமிழ்.இந்து, ஒரு வருடத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டது’ – மோகன் பாகவத் முஸ்லிம் தலைவரை சந்தித்த பின்னணியும் பேசியவையும், செய்திப்பிரிவு, Published : 23 Sep 2022 03:26 AM; Last Updated : 23 Sep 2022 03:26 AM.

[3] https://www.hindutamil.in/news/india/871799-background-of-mohan-bhagwat-meeting-with-the-muslim-leader.html

[4] விகடன், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் `தேசப்பிதா‘ ” – தலைமை இமாம், VM மன்சூர் கைரி, Published:Yesterday at 11 AMUpdated:Yesterday at 11 AM

[5] https://www.vikatan.com/government-and-politics/politics/mohan-bhagwat-is-rashtra-pita-says-top-muslim-cleric-after-rss-chief-visits-mosque

[6] தினகரன், மசூதியில் இமாம்களுடன் மோகன் பகவத் சந்திப்பு: மாணவர்கள் வந்தே மாதரம் கோஷம், 2022-09-23@ 00:19:20

[7] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=801407

[8] தமிழ்.ஒன்.இந்தியா, நம்ம ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தான் தேசத்தின் தந்தை.. இஸ்லாமிய தலைவர் உமர் அகமது இலியாசி, By Vigneshkumar, Updated: Thu, Sep 22, 2022, 21:20 [IST].

[9] https://tamil.oneindia.com/amphtml/news/delhi/top-muslim-cleric-says-rss-chief-mohan-bhagwat-is-rashtra-pita-477061.html

[10] g7tamil, மசூதியில் இமாம்களுடன் மோகன் பகவத் சந்திப்பு: மாணவர்கள் வந்தே மாதரம் கோஷம், By G7tamil, September 23, 2022.

[11]https://g7tamil.in/%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B/

நங்க பர்வதத்தின் மேல் ஏறத்தயாரான 10 பேரை இஸ்லாமிய தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்!

ஜூன் 25, 2013

நங்க பர்வதத்தின் மேல் ஏறத்தயாரான 10 பேரை இஸ்லாமிய தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்!

 

பாகிஸ்தானில் உள்ள நங்க பர்வதம் (26,660 feet, is the world’s ninth-highest mountain) இரண்டாவது உயந்த சிகரத்தைக் கொண்டுள்ளது, உலகத்தின் 9வது உயர்ந்த மலையாகும். இதன்மேல் ஏற வெளிநாட்டு பிரயாணிகள் சென்றனர். அப்பொழுது கில்கிட்-பலிஸ்தான் என்ற இடத்தில் ராணுவ உடையில் வந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் அவர்களை நோக்கி சுட ஆரம்பித்தார்கள். அதில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

 

தலிபானின் தொடர்பாளி இஷானுல்லா இஷன் (Taliban spokesman, Ehsanullah Ehsan) என்பவன் அந்த துப்பாக்கி வீரர்கள் ஜுன்டால் அப்சா (a Taliban affiliate named Jundul Hafsa) என்ற தலிபான் பிரிவை சேர்ந்தது மற்றும் மே 29 அன்று ஒரு அமெரிக்க விமான தாக்குதலில் வலி உர் –ரஹ்மான் என்ற தலிபான் தலைவர் கொல்லப்பட்டதற்குத்தான் இந்த பழி வாங்கும் நடவடிக்கை (an American drone attack that killed the Taliban deputy leader, Wali ur-Rehman, on May 29) என்று தொலைபேசியில் ஒப்புக்கொண்டுள்ளான்[1].

 

இந்த ஜுன்டால் அப்சா, லஸ்கர் -இ- ஜாங்வி (Lashkar-e-Jhangvi) என்ற கூட்டத்தின் புதியதாக முளைத்துள்ள இஸ்லாமிய ஜிஹாதிக் கூட்டம் என்று அறியப்படுகிறது. முன்பு ஷியைத் என்ற முஸ்லிம்கள் சென்று கொண்டிருந்த பேருந்தை தாக்கியது இந்த கும்பல்தான் என்று கூறப்படுகிறது. என்னத்தான் பெயரை மாற்றிக் கொண்டாலும், குணமோ, தீவிரவாதமோ மாறாமல், தீவிரம் அடைந்து கொண்டுதான் வருகிறது.

 

இந்நிலையில், எங்கு தமது பிழைப்பு போய்விடுமோ என்று, அயல்நாட்டு பிரயாணிகள், சுற்றுலா பிரயாணிகள் மீது நடத்தப்பட்டுள்ள தீவிரவாதத் தாக்குதலை உள்ளூர்வாசிகள் கண்டித்துள்ளனராம். ஆமாம், பிரான்ஸ் போன்ற நாடுகளே கண்டிக்கும் போது[2], உள்ளூர்வாசிகளுக்கு என்ன? இஸ்லாமாபாதிலும் கண்டன ஆர்பாட்டம் நடந்துள்ளதாம்[3]. ஆமாம், “நாங்கள் கொன்று கொண்டே இருப்போம், நீங்கள் வந்து கொண்டே இருங்கள்”, என்றால் என்ன அர்த்தம்?

 

இந்தியா வழியாக இமயமலையின் மீது ஏற்பவர்கள் கொல்லப்படுவதில்லை, அதஅவது, அந்த பேச்சிற்கே  இடமில்லை.  ஆனால், பாகிஸ்தான் வழியாக மலையேற முயன்றால், இப்படியான தீவிரவாதத் தாக்குதலும் இருக்கிறது என்பதனை அயல்நாட்டவர் புரிந்து கொள்வார்கள்.