Archive for the ‘இப்ராஹிம்’ category

யாகூப் மேமன் தூக்கும், 257 பேர் பலியும், 150 பேர் காயமும், ரத்தமும், சதைகளும், பிண்டங்களும், மனித உரிமைகளும், மனித உயிர்களும்! (1)

ஓகஸ்ட் 2, 2015

யாகூப் மேமன் தூக்கும், 257 பேர் பலியும், 150 பேர் காயமும், ரத்தமும், சதைகளும், பிண்டங்களும், மனித உரிமைகளும், மனித உயிர்களும்! (1)

1993 Mumbai blast- who pay for the victims.1

1993 Mumbai blast- who pay for the victims.1

மார்ச். 2013 – சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு: மும்பையில் கடந்த 1993–ம் ஆண்டு, மார்ச் 12–ந்தேதி அன்று தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. 12 இடங்களில் தொடர்ச்சியாக சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததில், 257 பேர் உயிரிழந்தனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர்.  இது தொடர்பான வழக்கை விசாரித்த தடா கோர்ட்டு கடந்த 2006–ம் ஆண்டில் தீர்ப்பு கூறியது. மொத்தம் 100 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதில் தண்டனை பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். இதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டது. மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை தீர்ப்பில் யாகுப் மேமனின் மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. யாகுப் மேமன், குண்டு வெடிப்பில் முக்கிய சதிகாரனான தேடப்படும் குற்றவாளி டைகர் மேமனின் சகோதரர். மேலும், இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் மரண தண்டனை பெற்ற 10 பேர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக சுப்ரீம் கோர்ட் குறைத்துள்ளது.

1993 Mumbai blast- who pay for the victims.2

1993 Mumbai blast- who pay for the victims.2

பாகிஸ்தானில் பயிற்சி கொடுக்கப் பட்டுள்ளது – சுப்ரீம் கோர்ட் ஆதாரங்கள் மூலம் அறிவித்தது (மார்ச்.2013): மேலும், குண்டு வெடிப்பை நடத்தியவர்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. குண்டு தயாரிக்கவும் மிகவும் சக்தி வாய்ந்த வெடி பொருட்களை கையாளுவதற்கும் அவர்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ.க்கும் குண்டு வெடிப்பில் தொடர்பு உள்ளது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. மேலும், இந்த குண்டு வெடிப்பில் தூக்கு தண்டனை பெற்றுள்ள யாகுப் மேமன் மற்றும் தேடப்படும் குற்றவாளிகளான தாவூத் இப்ராகிம், டைகர் மேமன், அயூப் மேமன் ஆகியோர் தாக்குதல் நடத்துவதற்கு அம்பு எய்தவர்களாக இருந்துள்ளனர். மற்றவர்கள் அம்புகளாக இருந்துள்ளனர் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

1993 Mumbai blast- who pay for the victims.3

1993 Mumbai blast- who pay for the victims.3

போலீஸ், சுங்க வரிதுறை, கடலோர பாதுகாப்பு துறையினர் ஆகியோர் கண்டனத்திற்குரியவர்கள் (மார்ச்.2013): போலீஸ், சுங்க வரிதுறை, கடலோர பாதுகாப்பு துறையினர் ஆகியோர் கண்டனத்திற்குரியவர்கள் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது[1]. குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தானில் வைத்து தாவூத் இப்ராகிம் மற்றும் பலரால் சதிதிட்டம் தீட்டப்பட்டுள்ளது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. ஏ.கே.56 ரக துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஆயுத சட்டத்தின் கீழ் இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் கடுமையான தடா சட்டத்தின் கீழ் இடம்பெற்றிருந்த கிரிமினல் சதி குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். சஞ்சய் தத்தும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தார்.  தற்போது கோர்ட் சஞ்சய் தத்தின் 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையை 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக குறைத்துள்ளது. இவற்றையெல்லாம் மனத்தில் வைத்துக் கொண்டுதான், இப்பொழுதைய தீர்ப்பைப் படித்தறிய வேண்டும், விவாதிக்க வேண்டும். ஆனால், செக்யூலரிஸ போர்வையில், காங்கிரஸ்காரர்கள் தங்களது வாய்களைத் திறந்து உளாறியிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

1993 Mumbai blast- who pay for the victims.4

1993 Mumbai blast- who pay for the victims.4

காங்கிரஸ் தலைவர்கள் யாகுப்பின் தூக்கிற்கு வருத்தப் பட்டது (ஜூலை.2015): யாகுப் மேனன் 30-07-2015 அன்று காலை தூக்கிலிடப்பட்டதும், காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங், “அரசு இதே போல, மற்ற எல்லா தீவிரவாத வழக்குகளிலும் ஜாதி, மதம் வேறுபாடு இல்லாமல் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்”, என்று டுவிட்டரில், தனது கருத்தை வெளியிட்டார்[2]. பல நேரங்களில் விசித்திரமாக பேசி வரும் இவர், இதே வேகத்தை மற்ற வழக்குகளிலும் காட்ட வேண்டும் என்று கமென்ட் அடித்தார்[3]. சசி தரூர், “அரசு ஒரு மனிதனை தூக்கிலிட்டது குறித்து வருத்தமடைகிறேன். அரசு மூலம் நடக்கும் கொலைகள் நம்மையும் கொலைகாரர்களாக்கி விடும். கொடும் செயல் மீண்டும் நடைபெறாமல் தடுப்பதற்காக அதற்குக் காரணமானவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால், இந்த தண்டனை காரணமாக அத்தகைய செயல் தடுக்கப்பட்டதற்கான ஆதாரம் இல்லை. மாறாக, மேலும் அத்தகைய சம்பவங்கள் அதிகரிக்கவே அது வகை செய்கிறது. தீவிரவாதத்தை படைகளைக் கொண்டுதான் ஒடுக்க வேண்டும். மரண தண்டனை மூலம் அல்ல”, என்றெல்லாம் கமென்ட் அடித்தார்[4]. ஒருவேளை தனது மனைவி மர்ம மரணத்தில் / கொலை என்று சந்தேகிக்கப்படும் வழக்கில் தான் சம்பந்தப் பட்டிருப்பதால், அவ்வாறு பேசினாரா என்பது அவருக்குத் தான் தெரியும்.

1993 Mumbai blast- Dwaood, Tiger Memon, Dossa, Javed Patel

1993 Mumbai blast- Dwaood, Tiger Memon, Dossa, Javed Patel

ஜூலை 30.2015 காலை தூக்கிலிடப்பட்ட நாள்: உச்ச நீதிமன்ற அமர்வு அந்த நேரத்தில் கூடி, மரண தண்டனையை நிறுத்தக் கோரும் குற்றவாளியின் மனுவை ஆய்வு செய்தது. ஆனால் “மிகுதியான அளவு காலஅவகாசம் அளிக்கப்பட்டு விட்டது. கடந்த ஆண்டே மேமனின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு விட்டது” எனக் கூறிய நீதிபதிகள், மனுவை நிராகரித்தனர். இதனால் காலை 6.35 மணிக்கு அவர் தூக்கிலிடப்பட்டார். யாகூபின் அண்ணன் சுலைமான் உடலைப் பெற்றுக்கொண்டு விமானம் மூலம் மும்பைக்கு எடுத்துச் சென்றார். மாஹிமில் உள்ள வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிகையாக, மும்பை முழுவதும் சுமார் 450 பேர் கைது செய்யப்பட்டனர். மத்திய மும்பை பகுதியான மாஹிம் முழுவதும் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். நேற்று மாலை இஸ்லாமிய முறைப்பட்டி யாகூபின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மும்பையில் இவர்களது குண்டுவெடிப்பில் பலியான 257 ஆத்மாக்களும் சாந்தியடைந்தன என்று அவர்களது உறவினர்கள் கூறிக்கொண்டார்கள். இதை ஊடகங்கள் எடுத்துக் காட்டவில்லை, மனித உருமைகள் பேசுபவர்களையும் கண்டுகொள்ளவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத்[5] கூறும்போது, “யாகூப் மேமன் மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுதான் சரண் அடைந்தார் என உளவுத் துறை (ரா) முன்னாள் அதிகாரி பி.ராமன் தான் எழுதிய ஒரு கட்டுரையில் கூறியிருந்தார். மேலும் முக்கியக் குற்றவாளி அல்லாத மேமனுக்கு மரண தண்டனை விதிப்பது சரியல்ல என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் அவரை தூக்கிலிட்டிருப்பது சரியல்ல” என்றார். [இதை ஏற்கெனவே அதிகாரிகள் மறுத்துள்ளனர், ஏனெனில் அதிகாரிகளுக்கு அத்தகைய பேரம் பேசவும், எந்தவித தண்டனை குறைப்பு உத்திரவாதம் கொடுக்கவும் சட்டப்படி உரியையும், அதிகாரமும் இல்லை. எனவே, வழக்கம் போல கம்யூனிஸ்டுகள், இறந்தவரின் கருத்தைக் குறிப்பிட்டு குழப்ப முயற்சி செய்கின்றனர்]

 

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், “மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. யாகூப் மேமனை தூக்கிலிடுவதில் காட்டப்பட்ட அவசரம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். தூக்கு தண்டனையை ஒழிக்கக் கோரிய கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் நாளில் ஒருவரை தூக்கிலிடுவது அவருக்கு செலுத்தப்பட்ட கொடிய அஞ்சலி யாகும். இந்தியாவில் தூக்கு தண்டனையை ஒழிப்பதுதான் காந்தியடிகளுக்கும், கலாமுக்கும் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். [இவரது கருத்தும் அர்த்தமில்லாதது, பல ஆண்டுகளாக நடந்து வரும் இவ்வழக்கு, முறைப்படி கருணை மனு, அது மறுக்கப்பட்டது, அதை எதிர்த்து தொடரப்பட்ட மனு என்று எல்லாவற்றையும் விசாரித்து தான் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் டுவிட்டரில் தெரிவிக்கப்படும் கருத்துகளை வைத்து எந்த தீர்மானமும் எடுக்க முடியாது].

© வேதபிரகாஷ்

02-08-2015

[1] இதனை செக்யூலரிஸவாதிகள், யாகுப்-ஆதாரவாளர்கள் கண்டு கொள்வவதில்லை.

[2] Congress general secretary Digvijaya Singh fired the first salvo, saying that the BJP- led government should show “similar commitment” in all cases of terror as it showed in the case of Yakub Memon. “I hope similar commitment of the government and the judiciary would be shown in all cases of terror, irrespective of their caste, creed and religion,” he said in a tweet following Memon’s execution in the Nagpur central jail on Thursday morning (30-07-2015).

[3] http://indianexpress.com/article/india/india-others/show-same-urgency-in-other-terror-cases-digvijaya-singh-on-yakub-memons-hanging/

[4] Party colleague and former union minister Shashi Tharoor said he was “saddened” by Memon’s execution.”Saddened by news that our government has hanged a human being. State-sponsored killing diminishes us all by reducing us to murderers too,” Tharoor tweeted. “There is no evidence that death penalty serves as a deterrent, to the contrary in fact. All it does is exact retribution, unworthy of a government,” the Thiruvananthapuram parliamentarian said.

[5] http://tamil.thehindu.com/india/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88/article7484832.ece

பிள்ளைக்கறி சாப்பிடவைத்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் – அத்தகைய எண்ணத்தை எப்படி வளர்த்துக் கொண்டார்கள் – ஒரு இறையியல் விளக்கம்!

மார்ச் 6, 2015

பிள்ளைக்கறி சாப்பிடவைத்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் – அத்தகைய எண்ணத்தை எப்படி வளர்த்துக் கொண்டார்கள் –  ஒரு இறையியல் விளக்கம்!

ISIS

ISIS

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் குரூர செயல்கள்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் செய்து வரும் குரூர காரியங்கள் உலகம் முழுவதும் பெருத்த வெறுப்பையும், அருவருப்பு மிக்க கோபத்தையும், திடுக்கிடும் திகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஷியா மற்றும் கிருத்துவப் பெண்களைக் கடத்திக் கொண்டுச் சென்று கற்பழிப்பது என்பது தினசரி செய்தியாகி விட்டது. இந்நிலையில் வாலிபர் ஒருவரை கடத்தி கொலை செய்து அவரின் உடலை வெட்டி சமைத்து அதை அவரின் தாய்க்கே உணவாக கொடுத்துள்ள கொடுமை நடந்துள்ளது[1] என்ற செய்தி அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. அதாவது, பெற்ற தாயுக்கே பிள்ளைக்கறி அமைத்துக் கொடுத்து புனிதமான காரியத்தைச் செய்துள்ளனர்[2].

A child being offered as a sacrifice to a Molech idol.

A child being offered as a sacrifice to a Molech idol.

பிள்ளைக்கறி சாப்பிடவைத்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஈராக்கைச் சேர்ந்த குர்து இன வாலிபர் ஒருவரை கடத்தி தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மொசுல் நகருக்கு கொண்டு சென்றனர். மொசுல் நகரில் வைத்து அந்த வாலிபரை தீவிரவாதிகள் அழக்கம் போல கொன்றுவிட்டனர்[3]. இந்நிலையில் அவரின் வயதான தாய் மொசுல் நகருக்கு வந்துள்ளார். அவர் தீவிரவாதிகள் இருக்கும் இடத்திற்கு சென்று தனது மகனை விடுவிக்குமாறு கெஞ்சியுள்ளார்[4]. அதற்கு தீவிரவாதிகள், நீங்கள் வெகுதூரத்தில் இருந்து வந்துள்ளதால் களைப்பாகவும், பசியாகவும் இருக்கும். முதலில் சாப்பிடுங்கள் பிறகு பேசலாம் என்று தெரிவித்துள்ளனர்[5]. அதோடு நின்றுவிடாமல் அந்த தாய்க்கு சாதம், சூப், மாமிசம், டீ கொடுத்துள்ளனர். அந்த அப்பாவி தாயும் தனக்கு அளிக்கப்பட்ட உணவை சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டு முடித்த உடன் அவர் தீவிரவாதிகளை பார்த்து தனது மகனை விடுவிக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு தீவிரவாதிகளோ, உங்களை மகனை தான் தற்போது சாப்பிட்டீர்கள். அவரை கொன்று, உடலை வெட்டி, கறி சமைத்து உங்களுக்கு கொடுத்தோம் என்று கூறி சிரித்துள்ளனர்[6]. தாய் திடுக்கிட்டு மயக்கமடைந்து விட்டார். அத்தகைய இரக்கமில்லத அரக்கர்களாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மாறியிருப்பது காலத்தைய குரூரத்திலும் குரூரமான நிகழ்ச்சி எனலாம். மனித உணர்வு கொண்ட முஸ்லிம்கள் யாரும் கண்டிக்காதது நோக்கத்தக்கது.

Abraham sacrifice depicted on San Vitale in Ravenna

Abraham sacrifice depicted on San Vitale in Ravenna

பிள்ளைக்கறி தயாரிக்க ஏற்பட்ட மனப்பாங்கு எவ்வாறு ஏற்பட்டது?: இஸ்லாத்தில் எப்படி இத்தகைய குரூர எண்ணங்கள் வருகின்றன என்பதும் ஆராயத்தக்கது. சுன்னி முஸ்லிம்கள், தொடர்ந்து ஷியா முஸ்லிம்களைக் கொன்றுவருவது, துன்புறுத்துவது, கொடுமைப்படுத்துவது முதலியன எல்லா இஸ்லாமிய நாடுகளிலும் (இரானைத் தவிர) நடந்து வருகின்றன. அடிப்படைவாத சித்தாந்தம் எப்படி மக்களை கொடுமைப்படுத்த உபயோகப்படுத்தப் படுகிறது என்பதும்  ஆராயத்தக்கது. பொதுவாக, மத்தியத் தரைக்கடல் நாகரிகங்கள் உழவு, உணவு உற்பத்தி, அறுவடை போன்றவற்றிடன் சம்பந்தப்பட்டுள்ளன[7]. விளைச்சல் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, தலைப்பிள்ளையை பலிக்கொடுப்பது பழக்கமாக இருந்து வந்தது. அதன் மாமிசத்தையும், ரத்தத்தையும் தானிய மாவுடன் பிசைந்து தின்னும் பழக்கமும் இருந்து வந்துள்ளது. யூதர்களின் பழக்கம் பிறகு மற்றவர்களுக்கும் பரவியது[8]. ஹாலிவுட் படங்களில் இதனை உருவகமாக காட்டுவதுண்டு. கிருத்துவத்தில் யுகேரிஸ்ட் என்ற சடங்கே, மனித உடல் புசிகும் கிரியையை உள்ளாடக்கியதாகும்[9]. அதனால்தான், அதனை பலி, திருப்பலி என்றே கிருத்துவர்கள் கூறிவருகிறார்கள். சடங்கில் அளிக்கப்படும் ரொட்டி மற்றும் மது, ஏசுவின் சதை மற்றும் ரத்தமாக மாறுவதாக நம்பவேண்டும். இல்லையென்றால், அவன் கிருத்துவனாகவே கருதப்பட மாட்டேன். ஆனால், எந்த கிருத்துவனும் தான் அத்தகைய நம்பிக்கையினைக் கொண்டிருக்கிறேன் என்று வெளிப்படையாக தெரிவித்துக் கொள்ளமாட்டார்கள்.

Cannibalism

Cannibalism

பிள்ளையை பலியிடும் நம்பிக்கை: மதரீதியில், இந்நம்பிக்கை அவர்களது மனங்களில் ஆழ்ந்து படிந்து கிடந்தாலும், நவீன காலத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மகனுக்குப் பதிலாக விலங்கை பலியிடும் பழக்கம் இப்ராஹிம் கதையில் காணப்படுகிறது. பக்ரீதில் அதனால்தான், தலைப்பிள்ளைக்கு, மகனுக்கு, மனிதனுக்குப் பதிலாக ஆடு, மாடு, ஒட்டகம் என்று விலங்கு பலிக்கொடுக்கப்பட்டது. அம்முறை இப்பொழுதும் பின்பற்றப்பட்டுவருகிறது. ஆகவே, சுன்னிகள், மிகவும் குரூர எண்ணத்துடன் தான், ஷியா மக்களை அவ்வாறான கொடுமைகளுக்கு உட்படுத்தப் பட்டு வருகிறார்கள். மேலும் இஸ்லாத்தில் மதவெறி பிடித்தவர்கள், பெரும்பாலும் தாமே மொஹம்மது போல நினைத்துக் கொண்டு, அவர் செய்வது போல செய்வதில் குறியாக இருப்பார்கள். மொஹம்மது என்ற பெயரையும் கொண்டிருப்பார்கள். அப்ரஹாம் பிள்ளையை பலி கொடுத்தது போல, தமும் பலிகொடுத்தால், அல்லா சொர்க்கத்துக்கு நேராக செல்ல அனுமதி கொடுத்து விடுவார் என்ற நம்பிக்கையும் அதனுடன் சேர்ந்திருப்பதால், ஜிஹாதிகள் இம்மாதிரியான காரியங்களை செய்வதில் எந்த இரக்கத்தையும் கொள்வதில்லை.

Molech and child sacrifice

Molech and child sacrifice

உலகம் ஏன் அமைதியாக இருக்கிறது?: இங்கிலாந்தில் உள்ள மேற்கு யார்க்ஷயரைச் சேர்ந்த பாதுகாவலரான யாசிர் அப்துல்லா என்பவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர ஈராக் சென்றுள்ளார்[10]. அவர் தான் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.  இஸ்லாத்தையே அவர்கள் கடத்தி விட்டார்கள். ஐஎஸ்ஐஎஸ் செய்வது தவறு, அவர்கள் மக்களின் தலைகளை வெட்டுகிறார்கள், உயிரோடு எரிக்கிறார்கள், தங்களுக்கு தானே சமாதியை வெட்டச் சொல்கிறார்கள். யாரும் அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுப்பதில்லை. என்று யாசிர் அப்துல்லா கூறியிருப்பதும் நோக்கத்தக்கது[11]. தீவிரவாதத்தின் உச்சத்தில் இருப்பதனால், மற்ற நாடுகள் அவர்களிடம் ஏன் மோத வேண்டும் என்று நினைத்து அமைதியாக இருக்கலாம். ஏனெனில், அமெரிக்கா போன்ற நாடுகளே இன்னொரு 26/11 போன்ற தீவிரவாத செயல்களை விரும்பவில்லை. இப்பொழுதுள்ள மோதல்கள் இஸ்லாதிற்குள் என்பதனால், அடக்கி வாசிக்கிறார்கள் என்றும் கொள்ளாலாம்.

Eucharist lamb sacrifice

Eucharist lamb sacrifice

[1] http://tamil.oneindia.com/news/international/inhuman-isis-men-fed-murdered-kidnap-victim-his-own-mother-222132.html

[2] http://www.deccanherald.com/content/463382/inhuman-isis-militants-trick-mother.html

[3] http://metro.co.uk/2015/03/02/isis-tells-mother-on-rescue-mission-youve-just-eaten-your-son-5084957/

[4] http://www.express.co.uk/news/world/561385/Islamic-State-Mother-Feed-Corpse-Body-Cooked-Son-ISIS-Kurdish-Fighter

[5] http://www.thesun.co.uk/sol/homepage/news/6351852/Sick-Islamic-State-jihadis-fed-mother-her-son-says-Brit-taking-fight-to-fanatics.html

[6] தமிழ்.ஒன்.இந்தியா.காம், வாலிபரை கடத்திக் கொன்று சமைத்து அவரின் தாய்க்கே உணவாக அளித்த ஐஎஸ் மிருகங்கள், Posted by: Siva
Published: Wednesday, March 4, 2015, 15:41 [IST]

[7] Van Seters, John. “From child sacrifice to paschal lamb: a remarkable transformation in Israelite religion.” Old Testament Essays 16.2 (2003): p-453.

[8] Paulien, Jon. “The Role of the Hebrew Cultus, Sanctuary, and Temple in the Plot and Structure of the Book of Revelation.” Andrews University Seminary Studies 33 (1995): 245-264.

[9] Douglas, Mary. “The Eucharist: Its Continuity with the Bread Sacrifice of Leviticus.” Modern Theology 15.2 (1999): 209-224.

[10] http://www.dailymail.co.uk/news/article-2975200/Isis-fed-murdered-kidnap-victim-mother-travelled-headquarters-demanded-him.html

[11] http://www.mirror.co.uk/news/world-news/isis-desperate-mum-told-youve-5257013