Archive for the ‘இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல்’ category

கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்ந்து என்.ஐ.ஏ தமிழகத்தில் பல இடங்களில் விசாரணை, சோதனைகள் ஆரம்பம், ஆவணங்கள் பறிமுதல்! (2)

நவம்பர் 17, 2022

கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்ந்து என்.. தமிழகத்தில்  பல இடங்களில் விசாரணை, சோதனைகள் ஆரம்பம், ஆவணங்கள் பறிமுதல்! (2)

10-11-2022 வியாக்கிழமைஆவணங்கள் பறிமுதல்: ஓட்டேரியில் தாசமக்கான் பகுதி அருகே சலாவுதீன் என்பவா் வீட்டில் வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையா் பவன் குமார் ரெட்டி தலைமையில் போலீஸார் சோதனை செய்தனா். எம்கேபி நகரைச் சோ்ந்த ஜகுபா் சாதிக் என்ற ஜாபா் சாதிக் வீட்டிலும் போலீஸார் சோதனை செய்தனா். மேலும், திருவொற்றியூா், மண்ணடி ஆகிய இடங்களிலும் போலீஸார் சோதனை செய்தனா். சோதனை நடைபெற்ற இடங்களில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனா். வியாழக்கிழமை மாலைக்குள் அனைத்து இடங்களிலும் சோதனை நிறைவு பெற்றது. சோதனையில் முடிவில் பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க், மெமரி கார்டு உள்ளிட்ட மின்னணு கருவிகள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக என்ஐஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட .எஸ்..எஸ் இயக்க ஆதரவாளர்கள் லிஸ்ட்: மண்ணடி சைவ முத்தையா தெரு, சேவியர் தெரு, ஏழு கிணறு, கொடுங்கையூர், வடக்கு கடற்கரை, முத்தியால்பேட்டை உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்[1]. கொடுங்கையூர் பகுதியில் புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர்[2]. மண்ணடி பகுதியில் துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் சோதனை நடைபெற்றது. தடைசெய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்க ஆதரவாளர்கள் என சந்தேகம், ஏற்கனவே என்.ஐ.ஏ-வால் விசாரணை செய்யப்பட்டவர்கள் என 109 பெயர்கள் அடங்கிய பட்டியலை மத்திய உளவுத்துறை கொடுத்ததன் அடிப்படையில் தற்போது இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது[3]. இதேபோல் கடந்த வாரமும் பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர்[4]. அதில், ரூ. 56 லட்சம் பணம், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னையில் 15-11-2022 அன்று பல இடங்களில் 20க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சோதனை நடைபெற்றது.

15-11-2022 – நான்கு நபர்களிடம் விசாரணைசோதனை: பட்டியலில் உள்ளவர்களில் பலர், ஏர்கெனவே ஈடுபட்டுள்ள குற்றங்களை வைத்து, தொடர்ந்து விசாரிக்கும்பொழுது, அவர்கள் இன்றும் அத்தகைய லிங்குகளுடன் தொடர்ந்து வேலை செய்து வருவது புலனாகிறது.

  1. முகமது தப்ரஸ் – குறிப்பாக சென்னை கொடுங்கையூர் வள்ளுவர்தெருவில் உள்ள முகமது தப்ரஸ் என்பவர் வீட்டில் சோதனை நடந்தது. இவர் மீது தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு பணபரிவர்த்தனை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.
  2. தவ்பிக் அகமது – அதேபோல் ஏழுகிணறு சேவியர் தெருவை சேர்ந்த தவ்பிக் அகமது என்பவர் சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் உள்ள பயங்கரவாதிகளுக்கு பணபரிவர்த்தனை செய்ததாக ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
  3. ஹாரூன் ரஷித் – மேலும் மண்ணடி சைவ முத்தையா முதலி தெருவை சேர்ந்த ஹாரூன் ரஷித் மீது தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு சிம்கார்டுகள் விற்பனை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஹாரூண் ரஷீத் வீட்டில் இருந்து ரொக்கம் ரூ.4 லட்சத்து 90 ஆயிரம், ரூ.1,600 மதிப்புள்ள சீன கரன்சி, ரூ.4,820 தாய்லாந்து கரன்சி, ரூ.50 ஆயிரம் மியான்மா் கரன்சி, ரூ.7 மதிப்புள்ள சிங்கப்பூா் கரன்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மண்ணடி முத்தையா தெருவில் உள்ள அவரது வா்த்தக நிறுவனத்திலிருந்து மடிக்கணினி, கிரெடிட் அட்டை, டெபிட் அட்டை, மின்னணு கருவிகள், ரூ.10 லட்சத்து 30 ஆயிரத்து 500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
  4. முகமது முஸ்தபா – வடக்கு கடற்கரை அங்கப்பன் நாயக்கர் தெருவை சேர்ந்த முகமது முஸ்தபா மீது தடை செய்யப்பட்ட இயக்கத்தினருக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த வழக்கு உள்ளது.

இந்த அதிரடி சோதனையில் தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்புடைய இந்த 4 நபர்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும், அவர்கள் யார் யாருடன் தொடர்பில் உள்ளனர் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 10-11-2022 அன்று சோதனைக்குப் பிறகு, 15-11-2022 சோதன வருகிறது.

15-11-2022 அன்று ஊடகங்களின் செய்திவிசாரணைக்குப் பிறகு விவரங்கள் வெளியிடப் படவில்லை: தமிழக ஊடகங்கள் ஏதோ ஜாக்கிரதையாக செய்தி வெளியிடுவதைப் போல உள்ளது[5]. “அதேபோல் மண்ணடியில் உள்ள ஒரு வீட்டில் துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது,” கூறப்படுகிறது என்றெல்லாம் தான் செய்திகள் சொல்கின்றன[6]. இதே சிவசங்கர் பாபா என்றெல்லாம், நேரே பார்த்தது போல எழுதுவார்கள். இருப்பினும் சென்னையில் மொத்தம் எத்தனை பேரின் வீடுகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது பற்றிய விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை[7]. சோதனை முடிந்த பிறகு அதுபற்றிய விபரங்களையும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் யாருக்கும் தொடர்பு இருந்தால் அதுபற்றிய விபரங்களையும் போலீசார் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது[8]. கோவை சம்பவம் போன்று வேறு எங்காவது நடந்துவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே இதுபோன்ற சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது[9]. தீவிரவாத செயல்களுக்கு துணை புரிவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை பாயும் எனவும் போலீஸ் தரப்பில் எச்சரிக்கப்படுகிறது[10]. தமிழ்.இந்து[11], “ ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தினருடன் தொடர்பில் இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், சென்னையில் 5 இடங்களில் மாநகர போலீஸாருடன் இணைந்து என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்,…………………. சென்னையில் சிலர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்து மாநில உளவுப் பிரிவு போலீஸாருக்கு மத்திய உளவுத்துறை சமீபத்தில் ஒரு பட்டியல் அனுப்பியது. அதன் அடிப்படையிலேயே தற்போது சோதனை நடத்தப்பட்டுள்ளது..” என்கிறது[12].

15-11-2022 மாலை பீரிட்டு எழுந்து 16-11-2022 காலையும் அடங்கி விட்ட சோதனை செய்திகள்: 15-11-2022 மாலை மற்றும் 16-11-2022 காலை நாளிதழ்களில் செய்திகள் வெளியிட்டதுடன் அடங்கி விட்டன. மற்ற விசயங்களில், விவகாரங்களில் ஆராய்ச்சி செய்வது, “கிரைம்-நடந்தது என்ன?,” என்று வீடியோ போடுவது, புலன் விசாரணை மேற்கொள்வது, செர்லாக்-சாம்பு, நக்கீரன் போன்ற வேலைகளில் எந்த நிபுணத்துவ நிருபரும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. மாலை டிவிக்களில் வாத-விவாதங்களும் இல்லை. ஆக அப்படியே அடங்கி விட்டது ஆச்சரியமாக இருக்கிறது. தமிழகத்து ஊடகங்களைப் பற்றி கூட ஆராய்ச்சி செய்து, பிச்.டி வாங்கலாம் போலிருக்கிறது.

© வேதபிரகாஷ்

16-11-2022.


[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், .எஸ்..எஸ் இயக்கத்துடன் தொடர்பு? – சென்னையில் பல இடங்களில் சோதனை, Written by WebDesk, November 15, 2022 9:18:27 am.

[2] https://tamil.indianexpress.com/tamilnadu/suspect-links-to-isis-police-search-on-several-places-in-chennai-541926/

[3] குமுதம், கோவை கார் வெடிப்பு சம்பவம்: சென்னையில் மீண்டும் 4 இடங்களில் சோதனை, kumudam| TAMILNADU| Updated: Nov 15, 2022.

[4] https://www.kumudam.com/news/tamilnadu/48942

[5]  நக்கீரன், .எஸ். அமைப்புக்கு ஆதரவா? – சென்னையில் பல இடங்களில் போலீசார் சோதனை, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 15/11/2022 (07:50) | Edited on 15/11/2022 (08:10).

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/support-police-raided-many-places-chennai

[7] தமிழ்.ஒன்.இந்தியா, ஐஎஸ் பயங்கரவாதம்: காலையிலேயே பரபரக்கும் தலைநகர்.. சென்னையில் பல இடங்களில் போலீஸ் அதிரடி சோதனை.., By Nantha Kumar R Updated: Tuesday, November 15, 2022, 9:11 [IST].

[8] https://tamil.oneindia.com/news/chennai/chennai-police-raided-of-the-houses-of-suspect-of-isis-supportets/articlecontent-pf805599-485296.html

[9] மாலைமலர், .எஸ்.தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புசென்னையில் 5 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை , By Maalaimalar, 15  நவம்பர் 2022 11:31 AM.

[10] https://www.maalaimalar.com/news/district/tamil-news-coimbatore-car-blast-police-search-5-places-in-chennai-536697

[11] தமிழ்.இந்து, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பா? – சென்னையில் 5 இடங்களில் என்ஐஏ, போலீஸார் தீவிர சோதனை, செய்திப்பிரிவு Published : 16 Nov 2022 04:31 AM; Last Updated : 16 Nov 2022 04:31 AM.

[12] https://www.hindutamil.in/news/tamilnadu/897842-nia-police-intensive-search-at-5-places-in-chennai.html

கோவையில் திடீரென்று  ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு கொண்ட 100 இளைஞர்களை கண்டு பிடித்து விட முடியுமா? தொடர்ந்து ஏன் கண்காணிக்கப் படவில்லை? (2)

நவம்பர் 7, 2022

கோவையில் திடீரென்று  ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு கொண்ட 100 இளைஞர்களை கண்டு பிடித்து விட முடியுமா? தொடர்ந்து ஏன் கண்காணிக்கப் படவில்லை? (2)

ஐஎஸ் ஆதரவு இளைஞர்களுக்கு உளவியல் ஆலோசனை: இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மாநகரில் கார் வெடிப்பு தினத்தில் இருந்து தீவிர பாதுகாப்பு மற்றும் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். உக்கடம் சங்கமேஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் தற்போது வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உயர் அதிகாரிகளின் உத்தரவு படி, உளவுத்துறை போலீசார் தீவிரமாக பலரை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், கோவை மாநகரில் .எஸ். அமைப்பின் மீது ஈடுபாடு கொண்ட 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர்[1]. அவர்களது பட்டியலை தயார் செய்து வைத்துள்ளோம்[2]. அவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க முயற்சி செய்து வருகிறோம். மேலும் மருத்துவ குழு சார்பில், அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கவும் திட்டமிட்டு வருகிறோம். அவர்களை நல்வழிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்………[3] மேலும் உலாமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் அவர்களுக்கு தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது, .எஸ். இயக்கத்தின் மோசனமான செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூறி, நல்ல கருத்துகளை போதித்து அவர்களை நல்ல குடிமகனாக மாற்றும் திட்டம் செயல்படுத்த உள்ளோம். இதற்காக அனுபவம் வாய்ந்த உளவியல் நிபுணர்களை தயாராக உள்ளோம்[4]…………..…………..…,’’ என்றார்.

தீவிரவாதம் வளர்ந்து இந்நிலை அடைந்தது எப்படி?: கீழ்கண்ட நிகழ்வுகளிலிருந்து, அத்தகைய நிலை, நிச்சயமாக ஒரே நாளில் உருவாகி விட முடியாது:

  1. போலீஸார் கோவை மாநகரில் ஐ.எஸ். அமைப்பின் மீது ஈடுபாடு கொண்ட 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர்.
  2. அவர்களது பட்டியலை தயார் செய்து வைத்துள்ளனர்.
  3. அவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க முயற்சி செய்து வருகின்றனர்.
  4. மேலும் மருத்துவ குழு சார்பில், அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கவும் திட்டமிட்டு வருகிறது.
  5. அவர்களை நல்வழிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்………
  6. மேலும் உலாமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் அவர்களுக்கு தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது, ஐ.எஸ். இயக்கத்தின் மோசனமான செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூறி, நல்ல கருத்துகளை போதித்து அவர்களை நல்ல குடிமகனாக மாற்றும் திட்டம் ……….செயல்படுத்த முடிவு.
  7. இதற்காக அனுபவம் வாய்ந்த உளவியல் நிபுணர்களை தயாராக்க உள்ளோம்…..

அதனால், பல நாட்களாக, ஆண்டுகளாக நடந்து வரும் நிகழ்வுகளை எப்படி, ஏன், எவ்வாறு கவனிக்கப் படாமல் இருக்கிறது, என்பதும் நோக்கத்தக்கது.

உளவியல் ஆலோசனை எப்படி, யாரால், எவ்வாறு எங்கே நடக்கும்?: இதுவரை வெளிவந்துள்ள செய்திகளை கூர்மையாகப் படித்து, திரட்டி, அதில் உள்ள அம்சங்களை கீழ் கண்டவாறு கொடுக்கப் படுகிறது:

  1. கவுன்சலிங் கொடுக்க முயற்சி செய்தல்
  2. உலாமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் அவர்களுக்கு தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது
  3. ஐ.எஸ். இயக்கத்தின் மோசனமான செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூறி,
  4.  நல்ல கருத்துகளை போதித்து அவர்களை நல்ல குடிமகனாக மாற்றும் பிரத்யேகமான திட்டம்
  5. அத்திட்டத்தை செயல்படுத்துதல்

பொதுவாக தமிழக ஊடகங்கள், பிரச்சினைகளை அலசுவதில்லை, பல்லாண்டுகளாக இத்தகைய தீவிரமான சிக்கல்கள் மற்றும் தொடரும் கேள்விக்குரிய விஷயங்கள் இருந்தாலும், ஏதோ காரணங்களுக்காக செய்திகளாக வெளியிட்டு அமைதியாகி விடுகின்றனர்.

06-11-2022 அன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை அவரது அலுவலகத்தில் ஜவஹிருல்லா சந்தித்தார். பின்னர், அவர் கூறியபோது[5], “கடந்த, 1998ல் நடந்த குண்டு வெடிப்பால், கோவை மக்கள் பாதிக்கப்பட்டு, மீண்டும் சகஜநிலை திரும்ப பல ஆண்டுகளானது. கார் வெடிப்பு போல், வேறு சம்பவங்கள் நடக்க கூடாது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஒற்றை நபரை இயக்கியது யார், இவ்வளவு பெரிய சம்பவத்தை நடத்துவதன் பின்னணி என்ன, என்பது குறித்து உண்மை வெளிக்கொண்டு வரவேண்டும். .எஸ்..எஸ்., அமைப்பே இஸ்லாமிய சமூகத்தை சீர்குலைக்க கூடிய நோக்கில் செயல்படக்கூடியது[6]. அதன் ஆதரவாளர்களாக இருப்பவர்கள், அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் செயல்படுகின்றனர்[7]. இதுபோன்ற மன நிலையில் உள்ளவர்களுக்கு உளவியல் ரீதியான கவுன்சிலிங் கொடுக்க போலீஸ் தயாராக உள்ளது[8]. போலீசார் சிறப்பாக செயல்படுகின்றனர்[9]. கார் வெடிப்பு சம்பவத்தை என்..., எப்படி விசாரிக்கப் போகிறது என்பது கேள்விக்குறிதான். தமிழக போலீசாரே விசாரிக்க வேண்டும்,” இவ்வாறு அவர் கூறினார்[10].

பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் அழிப்புவாதம் என்றால் என்ன?: பயங்கரவாதம் எனும்பொழுதே சில மனிதர்கள் குறிப்பிட்ட அடிப்படைவாத சித்தாந்தம், கொள்கைகள் மற்றும் ஏற்றுக்கொள்ளப் பட்ட திட்டம், ஆணை மற்றும் உந்துதல், அவற்றின் மூலம் குறிப்பிட்ட மனிதர்கள், மனித குழுமங்கள் மற்றும் நாடுகளைத் தாக்குதல், குண்டுவெடிப்புகள் நடத்துதல், பீதியை உண்டாக்குதல் என்றாகிறது. இவையெல்லாம் ஒரே நாளில் வந்து விடாது. சிறு வயதிலிருந்தே சில அறிவுரைகள், போதனைகள், சித்தாந்தங்கள் முதலியவை படிப்படியாக கற்பிக்கப் படவேண்டும். உலகிலுள்ள மக்களை “ஏற்றுக் கொள்ளப் பட்டவர்கள்” மற்றும் “ஏற்றுக் கொள்ளப் படாதவர்கள்” என்று பிரித்து, அவ்வாறே அந்த பேதம், வித்தியாசம் மற்றும் வேறுபாடுகளை அறிய-புரிய வைத்து வெருப்பை மனங்களில் வளர்ப்பது முதல் பணியாக அமைகிறது. பிறகு, “நாம் உயர்ந்தவர்கள்” ஆனால், அவர்கள் “தாழ்ந்தவர்கள்” எனவே, அவர்கள், “நம்முடன் வாழத் தகுதியற்றவர்கள்” என்று பிரித்து அடையாளம் காண வைப்பது. இல்லை, தங்களை குறிப்பிட்ட சின்னங்களுடன் இணைத்து, பிரித்து அடையாளம் காண வைப்பது என்பதிலும் முடியலாம்.

வேதபிரகாஷ்

07-11-2022


[1] தினகரன், கோவை மாநகரில் .எஸ். தீவிரவாத ஈடுபாடு வாலிபர்கள் கண்டுபிடிப்பு: உளவியல் ஆலோசனை வழங்க திட்டம், 2022-11-05@ 14:48:42.

[2] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=811771

[3] தினத்தந்தி, .எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட 100 பேர் கண்டுபிடிப்பு, நவம்பர் 6, 12:15 am (Updated: நவம்பர் 6, 12:15 am).

[4] https://www.dailythanthi.com/News/State/is-discover-100-people-inspired-by-movement-830407

[5] தினமலர், ஒற்றை நபரை இயக்கியது யார்: கோவையில் ஜவஹிருல்லா கேள்வி, Updated : நவ 07, 2022  07:06 |  Added : நவ 07, 2022  07:04

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=3164210

[7] மின்னம்பலம், இஸ்லாமிய சமூகத்தை சீர்குலைக்கும் .எஸ்..எஸ்: ஜவாஹிருல்லா, நவம்பர் 6, 2022. 21:41 PM IST.

[8] https://minnambalam.com/political-news/isis-will-disrupt-the-islamic-community-jawahirullah/

[9] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், இஸ்லாமிய சமூகத்தை சீர்குலைக்கும் ஐஎஸ்ஐஎஸ்..! ஜமீஷா முபீனை இயக்கியது யார்..? ஜவாஹிருல்லா கேள்வி  , Ajmal Khan, First Published Nov 7, 2022, 8:36 AM IST; Last Updated Nov 7, 2022, 8:36 AM IST

[10] https://tamil.asianetnews.com/politics/jawahirullah-urged-to-find-out-who-is-behind-the-coimbatore-car-blast-rkyjbb

ஜமேஷாமுபின் – ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது– தெரிய வரும் பின்னணி (3)

நவம்பர் 5, 2022

ஜமேஷா முபின்ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது – தெரிய வரும் பின்னணி (3)

சமய இலக்கியங்கள் அனைத்தும் தமிழில் உள்ளன: விசாரணையின் போது மீட்கப்பட்ட ஆதாரங்களைப் பற்றி அறிந்த ஒரு உயர்மட்ட அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், கோவை, உக்கடத்தில் உள்ள ஜமேஷா முபீனின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் வாசகங்கள் உள்ளிட்ட குறிப்பேடுகளில் ஒரு பகுதி டைரிகள் எனக் கூறினர்[1]. “ஜமேஷா முபீனின் நாட்குறிப்பு பதிவுகள் பெரும்பாலும் மற்ற மதங்கள், குறிப்பாக இந்து மதம் மற்றும் கிறித்துவம் பற்றிய அவரது பார்வையை வெளிப்படுத்துகின்றன. அவர் அந்த மதங்களின் கடவுள்களின் பெயர்களை மேற்கோள் காட்டியுள்ளார். மேலும், ஒருவரையொருவர் இணைக்கும் அம்புகளுடன் கையால் எழுதப்பட்ட சார்ட் விளக்கப்படத்தில் அவற்றை சித்தரித்துள்ளார். சி.. ஹிஜாப் சர்ச்சை, உணவு மீதான கட்டுப்பாடுகள், மாட்டிறைச்சி காரணமாக நடந்த கொலைகள் போன்ற சம்பவங்கள் இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் இரண்டாம் தர குடிமக்களாக மாறி வருகின்றனர். இந்தச் பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது என்றும் அவர் திகைத்தார்,” என்று வட்டாரங்கள் தெரிவித்தன[2]. மேலும் சமய இலக்கியங்கள் அனைத்தும் தமிழில் உள்ளன என்று தெரிவித்தனர்.

அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம்: மனிதர்களை காபிர், மோமின் எனப் பிரித்து, ஜிஹாதி [புனித போரில்] புரிந்து காபிர்கள் கொல்லப் பட வேண்டும் என்று எழுதியிருப்பது,இப்படி குண்டுவெடிப்புகள்  நடத்திக் கொண்டிருந்தால், மனித இனம் என்னாவது என்று யோசிக்காமல், மதவெறியுடன் இருந்தது, முதலியவற்றை கவனிக்கும் பொழுது, எங்கிருந்து  மனித நேயம்,  மனிதத்துவம், அமைதி எல்லாம் வரும் என்பது ஆராய வேண்டியுள்ளது. இந்நிலையில், கோவையில் கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள் சந்தித்து உரையாடினர்[3]. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்[4]. பிறகு, எப்படி, முஸ்லிம் இளைஞர்கள் அவ்வாறு சேர்ந்து திட்டமிடுவார்கள், என்றெல்லாம் தெரியவில்லை. பெற்றோர், உறவினர், மற்றோர் முதலியோர்களுக்குத் தெரியாமல் தான், ஒவ்வொரு தடவையும் இவ்வாறு நடைபெறுகிறது. அதேபோல சொல்லப் படுகிறது. ஆனால், மறுபடியும் ஏதோ ஒன்று வெடிக்கத்தான் செய்கிறது.  தவிர இந்த செய்தி வந்த பிறகு தான், பென்டிரைவ், அதில் எஐஎஸ் வீடியோக்கள் போன்ற செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. தமிழ்.இந்துவில் இன்று தான் (04-11-2022) அச்செய்தியே வருகின்றது

ஜமாத்துகளின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்: கோவை உக்கடம் பகுதியில் சம்பவ நிகழ்விடத்தின் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு ஜமாத் நிர்வாகிகள் இன்று சென்று பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது: “3 ஜமாத்களின் சார்பாக கோட்டை சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை சந்தித்து உரையாடினோம். கடந்த வாரம் இந்த பகுதியில் நடந்த சம்பவம் பல்வேறு சமூகங்களுக்கு இடையே ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இஸ்லாமியர்களான நாங்கள் 7 தலைமுறைகளாக இந்த கோட்டைமேட்டில் வாழ்ந்து வருகிறோம். இந்தப் பகுதியில் நாங்கள் ஒற்றுமையுடன், அண்ணன் தம்பிகளாக கடந்த 200 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். இந்த சூழலில் இங்கு நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை கோட்டைமேட்டில் உள்ள ஜமாத்துகளின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இஸ்லாம் ஒருபோதும் வன்முறையைத் தூண்டும் மார்க்கம் அல்ல. நாங்கள் அமைதியை போதிக்கிறோம். அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம். எந்தவிதமான மத பூசல்களுக்கும், அரசியலுக்கும் நாங்கள் ஆட்பட்டு விடக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

100-க்கும் மேற்பட்ட வீடியோக்கள்: முன்னதாக, கோவை மாநகர தனிப்படை போலீசார் கைதான 6 பேர் வீட்டில் சோதனை நடத்தினர்.  கிடைத்த பொருட்களில், ஒரு பென் டிரைவ் இருந்தது. சோதனை செய்த போது அதிர்ச்சி அடைந்தனர், ஏனெனில், அந்த பென் டிரைவ்வில் 100-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். அமைப்பின் சித்தாந்தங்கள் அடங்கிய வீடியோக்கள் இருந்துள்ளது. இதில், 6 பேரில் ஒருவரது வீட்டில் பென் டிரைவ் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது[5]. அதனை போலீசார் ஆய்வு செய்த போது அதிர்ச்சி ஏற்பட்டது. அதில், ஐஎஸ் தீவிரவாதத்துக்கு ஆதரவான ஏராளமான வீடியோக்கள் இருந்தன[6]. தீவிரவாதிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது போன்ற வீடியோக்கள் மற்றும் கழுத்தை அறுத்து கொலை செய்வது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோக்கள் இருந்தன[7]. இதுதவிர இலங்கை குண்டு வெடிப்பை நிகழ்த்திய நபரின் பேச்சு அடங்கிய வீடியோவும் இருந்துள்ளது[8]. இதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வளவு தெளிவாக இருந்தாலும், இப்பிரச்சினை ஏதோ மழைகாலத்தில் இதுவும் ஒரு செய்தி என்பது போல கருதுவது போலத் தோன்றுகிறது.

கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வாயிலாக, கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க முக்கிய தகவல்கள் கிடைத்தன: ‘கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வாயிலாக, கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க முக்கிய தகவல்கள் கிடைத்தன’ என, போலீசார் தெரிவித்தனர்.கோவையில், அக்., 23ல் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் நடந்த கார் குண்டு வெடிப்பில், பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார். இந்த குண்டு வெடிப்பை விசாரித்த போலீசார் சந்தித்த சிரமங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தன்று அதிகாலை, 4:00 மணிக்கு வந்த கார், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் ஒன்றரை நிமிடம் நிற்பதை கண்காணிப்பு கேமரா காட்சிகளில் காண முடிந்தது. அதன் பிறகே கார் வெடித்துள்ளது. கார் காத்திருந்த ஒன்றரை நிமிடத்தில், ஜமேஷா முபின் தான் கொண்டு வந்திருந்த வெடிபொருட்களை வெடிக்கச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். கார் வெடித்தவுடன், அந்த அதிர்ச்சியில், பூட்டப்பட்டிருந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் கதவு தானாக திறந்தது.

கண்காணிப்பு கேமரா காட்சிகளை கேட்டுச் சென்றபோது, பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகி கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்தது: கோவிலுக்குள் வசிக்கும் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், போலீசார் ஓடி வந்துள்ளனர்.குண்டு வெடிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியில், கோவில் கண்காணிப்பு கேமராவில் அடுத்த இரண்டரை நிமிடங்களுக்கு காட்சிகள் எதுவும் இல்லை. அதன் பிறகே காட்சி பதிவாகியுள்ளது.’கோவிலில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகள் தான் வழக்கில் துப்பு துலக்க பேருதவியாக இருந்தன’ என்கின்றனர் போலீசார்.’சம்பவத்தை சற்று தொலைவில் இருந்து பார்த்த போலீஸ் அதிகாரி, கோவில் அருகே இருக்கும் டிரான்ஸ்பார்மர் வெடித்து விட்டதாக கருதி, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தபடி ஓடி வந்துள்ளார். ‘அருகே வந்த பின் தான், கார் வெடித்தது அவருக்கும் தெரியவந்தது’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த கோவிலுக்கும், ஜமேஷா முபின் வசித்த வீட்டுக்கும் வெகு துாரம் இல்லை. அதிகபட்சம், 300 மீட்டர் தான் இருக்கும். ஆனால், இறந்தவர் யார் என்றும், கார் யாருடையது என்றும், அப்பகுதி பொதுமக்கள் யாரும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை.எந்த ஒரு தகவலும் தெரியாமல், கோட்டைமேடில் போலீசார் வீதி வீதியாக அலைந்தும் விபரம் கிடைக்காமல் தடுமாறினர். கார் வந்த வழித்தடம் கண்டறிவதற்காக, கண்காணிப்பு கேமரா காட்சிகளை கேட்டுச் சென்றபோது, பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகி கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததும் நடந்துள்ளது[9]. தற்போது வழக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் இது பற்றி விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்[10].

வேதபிரகாஷ்

05-11-2022


[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் பலியான ஜமேஷா முபீன்; இலக்கை நோக்கி பயணித்த சுயமான தீவிரவாதி! , Written by WebDesk, Updated: October 30, 2022 3:34:14 pm

[2] https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-blast-jamesha-mubeen-killed-he-was-self-radicalised-on-way-to-target-533273/

[3] தமிழ்.இந்து, அனைவருடனும் நல்லிணக்கத்தோடு வாழ விரும்புகிறோம்: கோவையில் ஜமாத் நிர்வாகிகள் பேட்டி, செய்திப்பிரிவு, Last Updated : 03 Nov, 2022 02:51 PM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/891704-we-want-to-live-in-harmony-coimbatore-jamaath-officials.html

[5] தினகரன், கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டம்? பென்டிரைவில் சிக்கிய வீடியோ ஆதாரம்; பரபரப்பு தகவல்கள், 2022-11-05@ 00:31:23

[6] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=811657

[7] தினத்தந்தி, .எஸ். வீடியோக்கள் அடங்கியபென் டிரைவ்பறிமுதல், நவம்பர் 5, 12:15 am (Updated: நவம்பர் 5, 12:15 am)

[8] https://www.dailythanthi.com/News/State/is-pen-drive-containing-videos-seized-829642

[9] தினமலர், கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க உதவியது கோவில் கேமரா,  Updated : நவ 05, 2022  01:32 |  Added : நவ 05, 2022  01:30

[10] https://www.dinamalar.com/news_detail.asp?id=3162429

ஜமேஷாமுபின் – ஜிஹாதியானது, ஒத்திகைப் பார்த்தது, தற்கொலை வெடிகுண்டாக மாறியது (1)

நவம்பர் 5, 2022

ஜமேஷா முபின்ஜிஹாதியானது, ஒத்திகைப் பார்த்தது, தற்கொலை வெடிகுண்டாக மாறியது (1)

கோவை ஆர் காஸ் சிலிண்டர் வெடிகுண்டு சோதனை: என்.ஐ.ஏ மற்றும் தமிழக போலீஸார் கோவை குண்டு வெடிப்பு பற்றி ஆய்ந்து வருகின்றனர், விசாரணை நடத்துகின்றனர் மற்றும் வீடுகளில் சோதனைகள் நடக்கின்றன. கைதானவர்களிடமிருந்து வாக்குமூலங்களும் பெறப் படுகின்றன. செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆங்கில ஊடகங்களில் அதிகமாக வரும் பொழுது, தமிழக ஊடகங்கள் அமுக்கி வாசிக்கின்றன. ஜமேஷா முபின் ஏதோ சுயமாக இந்த தீவிரவாதச் செயலில் ஈடுபட்டான் என்றும் தலைப்பிட்டு செய்திகள் வருகின்றன. திராவிடத்துவ வாதிகள், தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போய்விட்டது, என்று பெருமூச்சு விட்டு அமைதியாகின்றனர்.  ஆனால், அரசியல் செய்பவர்கள், செய்து கொண்டு தான் இருக்கின்றனர். திமுகவினர், “தேசத் துரோகி” என்றெல்லாம் ராணுவ அதிகாரியை டிவி செனலில், கோடிக்கணக்கில் பொது மக்கள் கவனிக்கும் நிலையில் பலமுறை விளிப்பதும் திகைப்பாக இருக்கிறது. அந்த செனல் நிகழ்ச்சி அமைப்பாளர், அத்தகைய பேச்சுகளை “மூட்” கூட செய்யாமல் இருந்ததை கவனிக்க முடிந்தது.

ஜமேஷா முபின் வீட்டில் கைப்பற்றப்பட்ட 109 பொருட்கள்[1]: ஜமேசா முபினின் வீட்டில் நடந்த சோதனையில் 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ஜிகாத் மற்றும் இஸ்லாமிய சித்தாங்கம் தொடர்பான புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி பலவிதமான செய்திகள் கடந்த ஒரு வாரமாக நாளிதழ்கள் வெளியிட்டு வருகின்றன. ஆனால், எந்த  எய்தி தாளோ, ஊடகமோ ஐந்தாறு-ஏழெட்டு பொருட்களைத் தவிர, மற்றதை சொல்ல காணோம். ஆகவே, தமிழ், ஆங்கிலம் மற்றும் இதர ஊடகங்களில் உள்ள எல்லாவற்றையும் தொகுத்து ஒரு லிஸ்ட் தயாரிக்கப் படுகிறது. – அதில்

  1. பொட்டாசியம் நைட்ரேட் [Potassium Nitrate],
  2. நைட்ரோ கிளசரின் [Nitro Glycerin],
  3. சிவப்பு பாஸ்பரஸ் [Red Phosphrous],
  4. அலுமினியம் பவுடர் [Aluminium powder],
  5. பிஇடிஎன் பவுடர் (பென்டா எரித்திரிடால் டிரை நைட்ரேட், Penta Erythrital tri-nitrate), 
  6. சல்பர் பவுடர் [Suplphur powder],
  7. ஆணிகள் [Balrus, nails],
  8. கருப்பு பவுடர் [Black powder],
  9. 2 மீட்டர் நீளமுள்ள திரி [Gelatin wires],
  10. இண்டன் கியாஸ் [Indane gas cylinder]
  11. பொட்டாசியம் நைட்ரேட் சிலிண்டர் [Potassium Nitrate cylinder],
  12. ஆக்சிஜன் சிலிண்டர் [Oxygen cylinder]
  13. கையுறை [hand glouses],
  14. ஓஎக்ஸ்ஒய் 99 [YXY99],
  15. அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பிளேடு [Surgical blades],
  16. கண்ணாடிகள் [Glass pieces],
  17. 9 வாட்ஸ் பேக்டரி [9 watts battery],
  18. 9 வாட்ஸ் பேட்டரி கிளிப் [9 watts Battery clips],
  19. வயர் [wires],
  20. சுவிட்ச் [switches],
  21. சிலிண்டர் [cylinders],
  22. ரெகுலெட்டர் [regulators],
  23. டேப் [tapes]
  24. இஸ்லாமிய மதம் கொள்கைகள் தொடர்புடைய புத்தகங்கள் [Islamic literature including Jihadi category],–

உள்ளிட்ட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரமாக இச்செய்திகள் வந்துகொண்டிருந்தாலும், முழு விவரங்கள் வெளியிடாமல் இருப்பதும் திகைப்பாக இருக்கிறது.

ஜமேஷ் முபீனின் குடும்பம், பின்னணி: கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்த முபின் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். படித்து முடித்ததும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அப்போது வீட்டில் அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்த போது, ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணையே நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார். அதன்படி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோவை அல் அமீன் காலனியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணான நஸ்ரத்தை (23) முபின் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கோட்டைமேடு பகுதியில் மனைவியுடன் வசித்து வந்த அவர் அங்குள்ள புத்தக கடையில் வேலைக்கு சேர்ந்தார். இவருக்கு 2 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு முபின் தனது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாரிடமும் பேசுவதில்லை. இந்த நிலையில் திடீரென தான் வேலை பார்த்து வந்த புத்தக கடை வேலையை முபின் விட்டு விட்டார். இதுகுறித்து நஸ்ரத் கணவரிடம் கேட்டதற்கு, தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகவும் தன்னால் வேலை பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்து வீட்டில் இருந்தார்.

கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வீடு பார்த்து குடி பெயர்ந்தது: கோட்டைமேடு பகுதியிலிருந்து, திடீரென்று கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் வீடு பார்த்து இடம் பெயர்ந்தார். வேலைக்கு செல்லாமல் இருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக முபின் வீட்டில் இருக்காமல் வெளியில் சென்றதால் ஏதாவது வேலை பார்க்கிறீர்களா என விசாரித்துள்ளார். அப்போது தான் தேன் மற்றும் நறுமண பொருட்கள் விற்பனை செய்வதாகவும், நாட்டு மருந்து கடையில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். கார் வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு முபின் தனது மனைவியிடம் நாம் வேறு வீட்டிற்கு செல்லலாம் என கூறியுள்ளார். அதன்படி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வீடு பார்த்து மனைவி, குழந்தைகளுடன் குடியேறி உள்ளார். அப்போது முபின் வீட்டிற்குள் 4 பெட்டிகளை எடுத்து வந்தார். இதனால் நஸ்ரத்துக்கு சந்தேகம் ஏற்படவே எதற்காக இந்த 4 பெட்டிகள். அதில் என்ன உள்ளது என கேட்டுள்ளார். அதற்கு முபின், இந்த பெட்டிகளில் பழைய துணிகள் தான் உள்ளது என கூறியுள்ளார். ஆனால் கார் வெடிப்பு சம்பவம் நடந்த பிறகே அந்த பெட்டிகளில் வெடி மருந்து இருந்த தகவல் நஸ்ரத்துக்கு தெரிய வந்துள்ளது.

20-10-2022 அன்று மனைவி குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விடுதல்: கடந்த மாதம் 20-ந்தேதி, முபினின் மனைவி நஸ்ரத்துக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். முபின் எப்போதும் யாரிடமும் பேசாமல் தனியாகவே இருப்பார். மேலும் எந்நேரமும் செல்போனில் ஏதாவது பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால் சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு நஸ்ரத்தின் வீட்டிற்கு சென்ற முபின் வழக்கத்திற்கு மாறாக அனைவரிடமும் சகஜமாக பேசியுள்ளார். மேலும் குடும்பத்தினர் அனைவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டும் உள்ளார். அன்று மாலையே தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியில் சென்று உள்ளார். அப்போது குழந்தைகளுக்கு பிடித்த ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றையும் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் மனைவியை அவரது தாய் வீட்டில் விட்டு, முபின் மட்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவம் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு தண்ணீரை சேமிப்பதற்கு டிரம் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார்.

22-10-2022 அன்று மனைவியுடன் பேசியது: அப்போது 3 நாட்களுக்கு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். 22-ந் தேதி இரவு நஸ்ரத் கணவருக்கு எப்போது வீட்டிற்கு வருவாய் என மெசேஜ் அனுப்பினார். அதற்கு நாளை வருவதாக கூறியுள்ளார். அப்போது நஸ்ரத் குழந்தைகள் உன்னை தேடுகின்றனர். வீடியோ காலிலாவது பேசு என மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் அதன்பின்னர் முபின் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தும் முபினை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிகிறது. இதுவே முபின் அவரது மனைவியிடம் கடைசியாக பேசியது. ஆனால் தற்போது வரை முபினுக்கு என்ன நடந்தது என்று அவரது குழந்தைகளுக்கு தெரியவில்லை.

வேதபிரகாஷ்

05-11-2022


[1]  ஒவ்வொரு நாளிதழும், செய்தியும் விதவிதமாகக் குறிப்பிடுகின்றன (ஐந்து-ஆறு என்று….), அவற்றைத் தொகுத்து, இங்கு பட்டியலிடப் பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பான அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்தது (2)

செப்ரெம்பர் 24, 2022

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பான அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்தது (2)

இமயமலை முதல் குமரி வரை இந்தியா ஒன்றுதான். அதில் உள்ள அனைவரின் பாதைகளும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும்: சந்திப்பில் மதரஸாவில் பயிலும் குழந்தைகளிடம் பேசிய மோகன் பாகவத், நாட்டின் மீதான அன்பையும் மனித வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். குழந்தைகளுக்கு மதரஸாவில் குரான் கற்பிக்கப்படுவது போல், இந்து மத வேதமான பகவத் கீதையையும் ஏன் கற்பிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், “இமயமலை முதல் குமரி வரை இந்தியா ஒன்றுதான். அதில் உள்ள அனைவரின் பாதைகளும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும்,” என்று பேசினார். தொடர்ந்து மதரஸா நிர்வாகிகளிடம், “மதரஸாக்களில் கல்வி கற்கும் முஸ்லிம் சிறார்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இந்தி தெரியாததால், விமான நிலையம், ரயில் நிலையம் போன்றவற்றில் படிவத்தை அவர்களால் நிரப்ப முடியவில்லை. மதரஸாக்களில் நவீன அறிவைக் கற்பிக்க வேண்டும். ஒருமித்த கருத்து இல்லாத பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக வாழ விரும்புகிறோம் என்பதே அனைவராலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது,” என்று பாகவத் பேசினார்.

மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் நடைபெற்றசந்திப்பு: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் சந்திப்பு நடைபெற்றது[1]. பசுவதை, இழிவாக பேசுதல் உள்பட இரு சமூக முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது[2]. தொடர்ந்து இது போன்ற சந்திப்புகள் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அரை மணி நேரம் திட்டமிடப்பட்ட சந்திப்பு 75 நிமிடங்கள் நீடித்தது. ஆர்எஸ்எஸ்யின் தற்காலிக டெல்லி அலுவலகமான உதாசீன் ஆசிரமத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பகவத், சங்கத்தின் சா சர்கார்யவா கிருஷ்ண கோபால், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ். ஒய் குரைஷி, முன்னாள் டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் AMU துணைவேந்தர் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஜமீர் உதீன் ஷா, ஆர்எல்டி தலைவர் ஷாகித் சித்திக், தொழிலதிபர் சயீத் ஷெர்வானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பசுவதை மற்றும் காஃபிர் (முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குறிக்க பயன்படும் சொல்) போன்ற பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது: குரைஷி மற்றும் சித்திக் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், “பேச்சுவார்த்தை சுமூகமான சூழலில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு, முஸ்லிம் சமூகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க நான்கு மூத்த தலைவர்களை பகவத் நியமித்தார். எங்கள் பக்கத்தில், ஆர்எஸ்எஸ் உடனான பேச்சுவார்த்தையை தொடர முஸ்லீம் மூத்த தலைவர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை நாங்கள் நியமிக்க உள்ளோம்.” பசுவதை மற்றும் காஃபிர் (முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குறிக்க பயன்படும் சொல்) போன்ற பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது[3]. பசுவதை மற்றும் காஃபிர் குறித்து மக்கள் மகிழ்ச்சியடையவில்லை என்று பகவத் கூறினார்[4]. அதற்கு பதிலளித்த நாங்கள், “அதன் மீது எங்களுக்கும் அக்கறை உள்ளது. பசு வதையில் ஈடுபட்டால், சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினோம். காஃபிர் என்பது அராபிய மொழியில் நம்பிக்கையற்றவர்களை குறிக்க பயன்படுத்துவது. இது தீர்க்கப்பட முடியாத பிரச்சினை அல்ல என்று அவரிடம் கூறினோம். அதேபோல் இந்திய முஸ்லீம்களை பாகிஸ்தானியர் அல்லது ஜெகாதி என்று கூறும்போது நாங்கள் வருத்தமடைகிறோம்,” என்று கூறினோம்.

நூபுர் ஷர்மா விவகாரம் மற்றும் தொடர்ந்த வன்முறை: ஆர்எல்டி தேசிய துணைத் தலைவர் சித்திக் கூறுகையில், “நூபுர் ஷர்மா விவகாரம் நடந்தபோது ஆர்எஸ்எஸ் உடன் சந்திப்பை நாடினோம். பல இடங்களில் வன்முறை நடந்தது. முஸ்லீம் சமூகத்துக்குள்ளும் அசாதாரண சூழல் உருவாகியிருந்தது. மோகன் பகவத் சந்திப்பதற்கான தேதியை பெற்ற நேரத்தில், நூபுர் ஷர்மா சம்பவம் நடந்து ஒரு மாதமாகிவிட்டது. அது சற்று ஓய்ந்திருந்தது. எனவே இரு சமூகத்தினருக்கும் இடையிலான வகுப்புவாத நல்லிணக்க விவகாரங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம் என்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார். இத்தகைய சந்திப்புகள், உரையாடல்கள், தொடரவேண்டும், அமைதி நிலவ வேண்டும், மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், உள் உறவுகளை மேம்படுத்தவும் முஸ்லீம் மதகுருகளை தலைவர்களை சந்தித்து வருகிறார்: பகவத்தின் திடீர் விசிட் குறித்து ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் பிரமுக் சுனில் அம்பேகர் வெளியிட்ட அறிக்கையில், “சர்சங்கசாலக் அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்கிறார். இது ‘சம்வத்’ செயல்முறையின் ஒரு பகுதியாகும்” என்று கூறினார்[5]. ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் கடந்த சில நாட்களாக மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், உள் உறவுகளை மேம்படுத்தவும் முஸ்லீம் மதகுருகளை தலைவர்களை சந்தித்து வருகிறார்[6]..  மாற்று மதம் மற்றும் நம்பிக்கை கொண்டவர்களுடன் தொடர்பு ஏற்படுத்துவது என்ற நோக்கில் இந்த சந்திப்பு நடந்தது[7]. அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது[8].  மேலும் இது தொடர்ச்சியான இயல்பான சம்வத் செயல்முறையின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் தெரிவித்தார்[9]. ஆனால் கடந்த மாதமும் ஐந்து முஸ்லிம் தலைவர்களை பகவத் சந்தித்தார். அப்போது நாட்டில் நல்லிணக்க சூழல் நிலவுவது குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, பகவத் சமீபத்தில் டெல்லியின் முன்னாள்  லெப்டினன்ட் கவர்னர் நஜீப் ஜங், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரைஷி, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜமீர் உதின் ஷா, முன்னாள் எம்.பி. ஷாகித் சித்திக் மற்றும் தொழிலதிபர் சயீத் ஆகியோரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது[10].

தீவிரவாத தொடர்புகள் நீங்க வேண்டும்: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என கேரளா கோழிக்கோடு, டில்லி, மும்பை, அசாம், தெலுங்கானா, பெங்களூரூ, லக்னோ, சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட 13 மாநிலங்களில் தேசிய புலனாய்வு படையினர் நாடு முழுவதும் அதிரடி சோதனை மேற்கோண்டனர். அதனுடன் தொடர்பு கொண்டுள்ளவர்கள், குறிப்பாக சட்டவிரோதமான தொடர்புகள், நிதியுதவி பெறுபவர்கள், தீவிரவாத சம்பந்தம் உள்ளவர்கள் தண்டிக்கப் பட வேண்டும், மற்றவர்கள் அவர்களிடமிருந்து விலக வேண்டும். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை, சேர்ந்த 106 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கேரளா, தமிழகம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் வன்முறைச் செயல்களும் ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், அமைதி காக்க, இத்தகைய உரையாடல்கள் அந்தந்த மாநிலங்களிலும் ஆரம்பிக்க வேண்டும். மக்களுக்கு ஏற்றமுறையில் நெருங்கி வர உரையாடல்கள் அமைய வேண்டும். அப்பொழுது தான், பதட்டம் நீங்கி, நட்பு, உறவுகள் மேன்படும். இந்திய முஸ்லிம்கள் இந்தியாவின் பொருளாதார, மற்ற முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும்.

© வேதபிரகாஷ்

24-09-2022


[1] காமதேனு, அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு!, Updated on : 22 Sep, 2022, 3:29 pm; 2 min read

[2] https://kamadenu.hindutamil.in/politics/rss-chief-mohan-bhagwat-visits-mosque-in-outreach-to-muslims

[3] தமிழ். இந்தியன்.எக்ஸ்பிரஸ், மோகன் பகவத்முஸ்லிம் தலைவர்கள் சந்திப்பு: பசுவதை உட்பட முக்கிய பிரச்னைகள் பற்றி பேச்சு, Written by WebDesk, Updated: September 22, 2022 6:53:34 pm.

[4] https://tamil.indianexpress.com/india/rss-muslim-intellectuals-to-hold-periodic-talks-address-issues-of-concern-to-the-two-sides-514530/

[5] இடிவி.பாரத், மசூதிக்கு விசிட் அடித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்விஷயம் என்ன தெரியுமா?, Published on : 22, Sep 2022, 9.09 PM IST.

[6] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/bharat/rss-chief-mohan-bhagwat-visits-mosque/tamil-nadu20220922210942766766339

[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், முஸ்லிம் தலைவர் இமாம் உமர் அகமது இல்யாசியுடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்புகாரணம் இதுதான்!!, Narendran S, First Published Sep 22, 2022, 9:20 PM IST; Last Updated Sep 22, 2022, 9:20 PM IST.

[8] https://tamil.asianetnews.com/india/rss-chief-mohan-bhagwat-met-muslim-leader-imam-umar-ahmed-ilyasi-rimc0w

[9] தினத்தந்தி, இமாம் அமைப்பு தலைவருடன் மோகன் பகவத் சந்திப்பு, Sep 22, 2:32 pm

[10] https://www.dailythanthi.com/News/India/rss-chief-mohan-bhagwat-visits-mosque-in-outreach-to-muslims-798250

மேலூர் மாணவி பிரேத பரிசோதனை நடத்தப் பட்டு, இறுதி சடங்குகள் மயானத்தில் நடத்தப் பட்டன – நாகூர் ஹனீபா எலிமருந்து கொடுத்து கொலைசெய்த வழக்கு (3)

மார்ச் 8, 2022

மேலூர் மாணவி பிரேத பரிசோதனை நடத்தப் பட்டு, இறுதி சடங்குகள் மயானத்தில் நடத்தப் பட்டனநாகூர் ஹனீபா எலிமருந்து கொடுத்து கொலைசெய்த வழக்கு (3)

பிரேத பரிசோதனை 06-03-2022 சிறுமி இறந்தவுடன் நடத்தப் பட்டதா இல்லையா?: சிறுமி எலிமருந்து சாப்பிட்டு தற்கொலை, தூண்டப்பட்ட தற்கொலை, கொலை என்றெல்லாம் விவாதத்திற்கு உட்பபடும் நிலையில், போக்சோவில் ஹனிபா கைது செய்யப் பட்டிருக்கிறான். முன்னர், மருத்துவர்களின் அறிக்கையில் சிறுமி வேறு எந்த விதமான கூட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகவில்லை என்றும் சிறுமியின் உடலில் காயங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர் என்று செய்தி வெளியிடப் பட்டது. ஆனால், 07-03-2022 அன்று சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்படுவதாக கூறப்படும் நிலையில், அந்த கிராமத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன[1]. அப்படியென்றால், பிரேத பரிசோதனை முன்னர் நடக்கவில்லையா என்ற கேள்வியும் எழுகின்றது[2]. 15-02-2022 அன்று போலீஸில் புகார் கொடுத்து, 05-03-2022 அன்று ஹனீபா கைது செய்யப் பட்டவுடன், நிச்சயமாக, போலீஸார் மற்றும் மருத்துவர்கள், சிறுமியின் உடலை பரிசோதனைக்கு (post mortem) அனுப்பியிருக்க வேண்டும், பரிசோதனை நடந்திருக்க வேண்டும். போக்சோ சட்டத்தில் பதிவான வழக்கை, அவ்வாறு சாதாரணமாக முடித்து விட முடியாது.

கைதான 8 பேர், தேடப் படும் இரண்டு பேர்: இந்த சம்பவம் தொடர்பாக கொலை மற்றும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகூர்ஹனிபா,

  1. பிரகாஷ், அவரது நண்பர்
  2.  பெருமாள் கிருஷ்ணன், அவரது நண்பர்
  3. சாகுல்ஹமீது மற்றும்
  4. மதினா, நாகூர்ஹனிபாவின் தாயார்
  5. சுல்தான் நாகூர்ஹனிபாவின் தந்தை
  6. அலாவுதீன்,
  7. ராஜாமுகமது, நாகூர்ஹனிபாவின் சகோதரர்
  8. ரம்ஜான்பேகம் ஆகிய 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

வழக்கு பதிவுகள் மாற்றப் படுதல்: ஆரம்பத்தில், ஒரு ‘சிறுமி காணவில்லை’ வழக்கு பதிவு செய்யப்பட்டது, பின்னர் அது 143, 366 (A), 307 IPC, 5 (L), 6 போக்சோ (POCSO) வழக்காக மாற்றப்பட்டது[3]. இருப்பினும், இந்த வழக்கு மீண்டும் 302 IPC ஆக மாற்றப்பட்டது, அவளுடைய மரணத்தைத் தொடர்ந்து 307 IPC தவிர மற்ற அனைத்து பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[4]. சிறுமி நிச்சயமாக கல்யாணம் செய்து கொள்ளாமல், கற்பழிக்கப் பட்டிருக்கிறாள். தவிர, “கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக,” குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இது 20 நாட்களில் பலமுறை நடந்திருக்கலாம், அதில் ஹனீபா மட்டும் ஈடுபட்டிருப்பதே குற்றம் தான். இவ்வாறு வழக்குப்பதிவுகள் மாற்றம் செய்ய முடியுமா, சட்டப் படி செய்ய முடியுமா என்பதெல்லாம், சாதாரண மக்களுக்கு, செய்தி பட்ப்பவர்களுக்கு தெரியாது, புரியாது. இத்தகைய நிலை ஏன் ஏற்பட்டது, இதன் தாக்கம், முடிவு என்ன? இதனால், என்ன பாதிப்பு ஏற்படும், சிறுமியின் பெற்றோர்களுக்கு என்ன நீதி, நியாயம், பலன்கிடைக்கும் என்று தெரியவில்லை. சட்ட வல்லுனர்கள் தான், இதைப் பற்றி ஆய்ந்து  சொல்ல வேண்டும்.

பாதிக்கப் பட்ட மாணவியின் தாயார் மாவட்ட ஆட்சியாளருக்கு 05-03-2022 அன்று எழுதிய கடிதம்: பழனியப்பன் -சபரி தம்பதியினரின் 17 வயது மகள் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்[5].  சுல்தான் என்பவரின் மகன் நாகூர் ஹனிபா அச்சிறுமியை ஏமாற்றி பல இடங்களுக்குக் கூட்டிச் சென்று உடலுறவு கொண்டுள்ளான்[6]. பிறகு, அவன் தூண்டுதலில் எலிவிசம் சாப்பிட்டதால் இறந்து விட்டாள். சிறுமி தாயார், மாவட்ட ஆட்சியாளர்க்கு 05-03-2022 அன்று எழுதியதாக, ஒரு கடித புகைப்படத்தை வெளியிட்டு, பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா முகநூலில் பதிவு செய்துள்ளார்[7]. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், “மேலூர் சிறுமியின் தாயார் தன் மைனர் மகள் காணவில்லை என மேலூர் காவல் நிலைய ஆய்வாளர் சார்லசிடம் 15/2/22ல்  புகார் செய்தும் காவல்துறையின் மெத்தனத்தால் இன்று அச்சிறுமி இறந்துள்ளார். இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. செயல்படாத காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் .  இந்த மோசமான செயலை கண்டித்தும், அச்சிறுமிக்கு நியாயம் கேட்டும் போராடும் மக்களுக்கு எதிராக தடியடி நடத்தும் காவல் துறையின் அத்துமீறிய ஒருதலை பட்சமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன்,” என எச்.ராஜா தெரிவித்துள்ளார்[8].

06-03-2022ல் தும்பைப்பட்டியில் சாலை மறியல்: இந்நிலையில் 15 நாட்களுக்கு முன்பு புகார் கொடுத்தும் மாணவியை மீட்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை, கூட்டு பாலியல் தொந்தரவில் தங்கள் மகள் இறந்ததாகப் பெற்றோர், உறவினர்கள் புகார் தெரிவித்து உடலை வாங்க மறுத்தனர்[9]. இச்சம்பவத்தில் உண்மையான விசாரணை நடத்த வலியுறுத்தி பாஜக, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், தென்னிந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட அமைப்பினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை 06-03-2022 அன்று தும்பைப்பட்டியில் சாலை மறியல் செய்தனர்[10]. இந்நிலையில் மாணவியின் உறவினர்கள், பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் மதுரை அரசுமருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறை முன்பு 0703-2022 அன்று காலை திரண்டனர். சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிரேதப் பரிசோதனைக்கு பெற்றோர், உறவினர்கள் ஒப்புக் கொண்டனர்.

07-03-2022 அன்று பிரேத பரிசோதனை நடந்தது: மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், மேலூர் ஆர்டிஓ பிர்தெளஸ் பாத்திமா முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடந்தது. இது வீடியோ பதிவும் செய்யப்பட்டது. மாலை 4 மணி அளவில் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேசுவரா சுப்ரமணியன், பாஜக புறநகர் மாவட்டத் தலைவர் சுசீந்திரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். ஆம்புலன்ஸில் ஏற்றிய மாணவியின் உடலை கோரிப்பாளையம் தேவர் சிலை வழியாகக் கொண்டு செல்ல உறவினர்கள், பாஜகவினர் திட்டமிட்டனர். ஆனால் தேவர் சிலை முன்பு திடீர் சாலை மறியல் செய்யலாம் எனக் கருதி போலீஸார் மறுத்தனர். வைகை ஆறு வடகரை சாலை, ஆவின் சந்திப்பு வழியாக தும்பைப்பட்டிக்கு கொண்டு செல்ல அனுமதித்தனர். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பனகல் சாலையில் மறியல் செய்தனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது[11]. இருப்பினும், சிறிது நேரத்துக்குப் பின்பு போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலமாக வைகை வடகரை சாலை வழியாக மாணவியின் உடல் தும்பைப்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டது, அடக்கம் செய்யப்பட்டது[12]

©  வேதபிரகாஷ்

08-03-2022


[1] தமிழ்.ஏபிபி.லைவ், உடற்கூராய்வு செய்யப்படும் மேலூர் சிறுமியின் உடல்சொந்த கிராமத்தில் அனைத்து கடைகளும் அடைப்பு, By: அருண் சின்னதுரை | Updated : 07 Mar 2022 04:10 PM (IST)

[2] https://tamil.abplive.com/news/madurai/madurai-the-body-of-a-melur-girl-who-will-be-autopsied-all-shops-in-her-own-village-will-be-closed-42922

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், மதுரை சிறுமி மரணம்; 8 பேர் கைது: நடந்தது என்ன? போலீஸ் விளக்கம், Written by WebDesk, March 7, 2022 6:55:13 pm.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/police-explanation-on-madurai-minor-girl-death-case-421647/

[5] தமிழ்.ஏசியா.நெட், போலீஸ் மெத்தன போக்கால் பறிபோன உயிர்.. மேலூர் சிறுமி தாயாரின் பரபரப்பு புகார் கடிதத்தை வெளியிட்ட எச்.ராஜா.!, vinoth kumar, Tamil Nadu,

[6] First Published Mar 7, 2022, 6:53 AM IST.

https://tamil.asianetnews.com/politics/h-raja-who-published-the-sensational-complaint-letter-of-the-melur-girl-mother-r8cp6n

[7] மேலூர் மாணவி தாயாரின் புகார் கடிதம் வெளியிட்டு போலீசை சாடும் எச்.ராஜா,  By KATHIRAVAN T R Sun, 6 Mar 20226:13:40 PM.

[8] https://www.toptamilnews.com/thamizhagam/H-Raja-slams-police-for-releasing-letter-of-complaint-from/cid6673172.htm

[9] தமிழ்.இந்து, கடத்தி செல்லப்பட்டு இறந்த மேலூர் மாணவி உடல் பிரேத பரிசோதனை: இறுதி ஊர்வலம் தொடர்பாக பாஜகவினர் சாலை மறியல், செய்திப்பிரிவு, Published : 08 Mar 2022 07:54 AM; Last Updated : 08 Mar 2022 07:54 AM.

[10] https://www.hindutamil.in/news/tamilnadu/775067-melur-student.html

[11] தினதந்தி, மேலூர் சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு, பதிவு: மார்ச் 08,  2022 02:47 AM.

[12] https://www.dailythanthi.com/News/Districts/2022/03/08024752/Road-block.vpf

2003ல் ஜாகிர் நாயக்குடன் ஏற்பட்ட அனுபவம் – கைதேர்ந்த, மிக்க பயிற்சி பெற்ற, மிக-சரளமாக பேசும் வல்லமையுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதி என்பது தெரிந்தது!

ஜூலை 9, 2016

2003ல் ஜாகிர் நாயக்குடன் ஏற்பட்ட அனுபவம் – கைதேர்ந்த, மிக்க பயிற்சி பெற்ற, மிக-சரளமாக பேசும் வல்லமையுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதி என்பது தெரிந்தது!

ZAkir on sex

ஜாகிர் நாயக்குடன் என்னுடைய அனுபவம் (2003): “அமைதி விழா” என்ற போர்வையில், இவரது “பேசும் விழாக்கள்ளேற்பாடு செய்யப்பட்டன. 2003ல் சென்னையில், கிருஷ்ணா கார்டன் என்ற இடத்தில் (திருமங்கலம் செல்லும் சாலையில், பாலத்தைத் தாண்டியவுடன் இடது பக்கத்தில் இருந்த மைதானம்) நடந்த ஜாகிர் நாயக்கின் கூட்டத்தில் சில முஸ்லிம் நண்பர்கள் அழைப்பிற்கு இணங்க கலந்து கொண்டேன். அது ஒரு “ஏற்பாடு” செய்யப்பட்டக் கூட்டம் என்று அறிந்து கொண்டேன். தெரிந்தவர்கள் மூலம், அறிமுகப்படுத்தினால் மட்டுமே கலந்து கொள்ள முடியும். “யாஹோ குழு”வில் இதைப் பற்றி பதிவு செய்திருந்தேன்[1].

Zakir girls need not study

Thie following is appearing in Posting No. 15391.

But I could not get the 2003 postings in IC /HC[2].

But, I remember of giving details from History journals.

VEDAPRAKASH.

Dear friends,

After attending Chennai meeting,as per the request of
some Muslim friends, I sent e-mail to Zakir Naik
asking clarification for some crucial questions, but
he did not answer.

Immediately (in 2003), I posted in IC/HC warning about
his tactics. In fact, I urged, some Hindus should be
trained like Zakir to recie Qurarn so that he could be
effectively countered.

Cominmg to Mohammed’s references in Hindu scriptures
and all, it was a great forgery-graud committed during
Akbar’s period, in whic some Sanskrit Pundits were
also involved.

Thus, the group started interpolated some Hindu
scriptures like Bhavisya Purana etc. In deed, they
created one “Allah-Upanishad” also, which was proven
forgery by the scholars.

In fact, they also manufactured books depicting
Mohammedan prophets and leaders on the basis of
“Dasavatara” concept startiing with Mohammed. There
had been frged works of astrological and astronomical
works showing that Hindus copied everything from the
Greks and Arabs. Recently, in February 2007, a UP
schpolar brought such work to “Cosmology conference”
conducted at Tirupati.

Therefore, Hindus have to analyse carefully and remove
chaff from the grains, as otherwise, all the chaff may
apear as rice.

VEDAPRAKASH>

Zakir opposing Darwin

பெரிய கூடாரம், விளக்குகள், உள்ளேயே பார்க்க வசதியாக டிவிக்கள், ஆண்கள்-பெண்கள் தனித்தனியாக உட்கார்ந்து கொள்ள இருக்கைகள் என்று சகல வசதிகளோடு இருந்தது. பத்து-பதினைந்து கன்டைனர்களில் அவை அடங்கி விடும். எல்லா நாடுகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன. இத்தகைய கூட்டங்கள் ஏற்பாடு செய்யப் பட்டன. ஜாகிர் நாயக் ஆங்கிலத்தில் தான் பேசினார். வேதங்கள், உபநிஷத்துகள் முதலியவற்றில் குறிப்பிட்ட சுலோகங்களை நன்றாக மனப்பாடம் செய்து கொண்டு ஒப்பித்தார், அதற்கு விளக்கமும் அளித்தார். அவர் பேசும் விதத்திலேயே அது தெரிந்தது. பல ஆண்டுகளாக பயிற்சி செய்து, நன்றாக உழைத்து அத்தகைய திறமையைப் பெற்றிருந்தார். ஆங்கிலத்தில் மிகவும் சரளாமாக, எப்படி வேண்டுமானாலும், மாற்றி-மாற்றி பேசும் வல்லமை பெற்றிருந்தார். இந்துக்களில் இவ்வாறு திறமையாக பேசுபர் என்றால், அருண்ஷோரியை சொல்லலாம். இப்பொழுது அவர் கூட்டங்களில் பேசுவதை நிறுத்துவிட்டார் போலும்.

Zakir says he cannot take responsibility- angry

சங்கடமான கேள்விகள் கேட்டால் அழைப்பிதழ் / அனுமதி கிடைக்காது: கேள்வி-பதில் என்றபோது, நான் கேள்வி கேட்க யத்தனித்தபோது, அருகில் உட்காரவைத்தார்கள். ஆனால், ஒரு பேப்பரில் கேள்வியை எழுதி கொடுக்க சொன்னார்கள். கொடுத்தேன், ஆனால், அதற்கு பதில் சொல்லவில்லை. கேட்டதற்கு நேரம் இல்லை என்றார்கள். ஜாகிர் நாயக் அருகில் சென்று கேட்டபோது, இ-மெயிலில், கேள்வியை அனுப்புங்கள், பதிலைக் கொடுக்கிறேன் என்றார், ஆனால், பதில் வரவில்லை. பல “ரெமைன்டர்கள்” அனுப்பினேன், ஒன்றும் பிரயோஜனம் இல்லை. ஆகவே, அதுதான், அவரது பதில் சொல்லும் லட்சணம் என்று தீர்மானித்துக் கொண்டேன். அதறகுப் பிறகும், காமராஜர் அரங்கம், ஓ.எம்.ஆர் சாலை என்று கூட்டங்கள் நடந்தன. ஆனால், அழைப்பில்லை. அதற்குள் எவ்வளாவோ நடந்து விட்டன.

Zakir says he cannot take responsibility

ஜாகிர் நாயக்கின் மற்ற கருத்துகள், மனோபாவம் முதலியன[3]: மற்ற கருத்துகளைக் கவனிக்கும் போது, இவர் ஒரு கடைந்தெடுத்த இஸ்லாமியவாதி என்பதனை அறிந்து கொள்ளல்லாம். பேசும் திறனை வளர்த்துக் கொண்டு, ஆங்கிலத்தில் உரையாடி வருவதால், அமெரிக்கா-ஐரோப்பா போன்ற நாடுகளில் உள்ள இளைஞர்களை ஈர்த்து வந்துள்ளது தெரிகிறது. ஆனால், இந்தியாவில் எடுபடவில்லை எனலாம்.

  • இந்தியா ஷரியா சட்டத்தின் படி ஆட்சி நடத்த வேண்டும் என்கிறது ஜாகிர் நாயக்கின் கருத்தையும் மேலும் மதக் கொள்கைகளை மீறுவதால் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்ற ஜாகிர் நாயக்கின் கருத்தைவால் ஸ்டிரீட் ஜர்ணல் பத்திரிகையில் எழுத்தாளர் சதானந்த் துமே (Sadanand Dhume) விமர்சிக்கிறார்.
  • மேலும் முஸ்லீம் அல்லாதவர்கள் வழிபாட்டுத் தலங்கள் கட்டக் கூடாது என்றும்ஆப்கானிஸ்தானில்பாமியன் புத்தர் சிலைகள் வெடிவைத்துத் தாக்கப்பட்டதையும் சாகீர் நாயக் நியாயப்படுத்துகிறார்.
  • சாகீர் நாயக்கைஇங்கிலாந்து மற்றும்கனடா நாடுகள் தடை செய்துள்ளன. இவரது பேச்சுகள் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக அமைந்துள்ளதால் இங்கிலாந்து அரசு இவரைத் தடை செய்தது.
  • தாருல் உலூம்எனும் இஸ்லாமிய அமைப்பு சாகிர் நாயக்கிற்கு ஃபத்வா விதித்துள்ளது.
  • ஜாகிர் நாயக் ஒரு சர்ச்சைக்குரிய பேச்சாளர் என பேராசிரியர்டோர்கெல் ப்ரெக்கெல் (Torkel Brekke) குறிப்பிடுகிறார். மேலும் இந்திய உலமாக்களில் பலர் இவரை வெறுக்கின்றனர் எனக் குறிப்பிடுகிறார்.
  • ஜாகிர் நாயக் முஸ்லீம்களை தவறாக வழிநடத்துகிறார், மேலும் உண்மையை இஸ்லாமிய ஞானிகளிடமிருந்து உணரவிடாமல் செய்கிறார் எனஇந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் சுன்னி  பிரிவைச் சேர்ந்த முல்லாக்கள் கூறுகின்றனர்.
  • அல் காயிதாஅமைப்பை ஜாகிர் நாயக் ஆதரிக்கிறார் என பாகிஸ்தானிய அரசியல் விமர்சகர் காலித் அஹமது (Khaled Ahmed) குற்றஞ்சாட்டுகிறார்.
  • 2008 ஆம் ஆண்டுலக்னோவைச் சேர்ந்த இஸ்லாமியக் கல்வியாளர் ஷாகர் க்வாஸி அப்துல் இர்ஃபான் ஃபிராங்கி மகாலி  (shahar qazi Mufti Abul Irfan Mian Firangi Mahali) ஜாகிர் நாயக் ஒசாமா பின் லாடனை ஆதரிக்கிறார் என்றும் மேலும் இவருடைய பேச்சுகள் இஸ்லாம் அல்ல என்றும் இவர் மீது ஃபத்வா விதித்தார்.
  • லஷ்கர்-ஏ-தொய்பாஅமைப்பிடமிருந்து ஜாகிர் நாயக் பண உதவி பெற்றிருக்கிறார் என பத்திரிகையாளர் ‘ப்ரவீண் சாமி கூறுகிறார். மேலும் இவரது செய்திகள் இஸ்லாமியர்களை மூளைச்சலவை செய்து அவர்களை தீவிரவாதிகளாக்குகிறது என்றும் இந்திய ஜிகாதிகளை உருவாக்கும் உள்நோக்கம் கொண்டது என்றும் சொல்கிறார்.

© வேதபிரகாஷ்

09-07-2016

Indian Muslims against Wahabism

[1] https://groups.yahoo.com/neo/groups/hinducivilization/conversations/messages/19690

[2] “இந்தியன் சிவிலைசேஷன்” என்று நடத்தப்பட்ட குழு, ஸ்டீப் ஃபார்மர் போன்றவர்களால், இரண்டாக பிரிந்து, “ஹிந்து சிவிலைசேஷன்” மற்றும் “இன்டோ-யூரேஷியா” என்று செயல்பட்டு வருகிறது.

[3] விகிபீடியா கொடுக்கும் விவரங்கள் – எடுத்தாளப்பட்டுள்ளன.

ஆயிஷா அன்ட்ரப் – காஷ்மீர பெண் ஜிஹாதி, ஆயுத போராளி, மலாலாவை வெல்லத் துடிக்கும் வீராங்கனை, ஐசிஸ் ஏஜென்டா? (2)

திசெம்பர் 31, 2015

ஆயிஷா அன்ட்ரப் காஷ்மீர பெண் ஜிஹாதி, ஆயுத போராளி, மலாலாவை வெல்லத் துடிக்கும் வீராங்கனை, ஐசிஸ் ஏஜென்டா?  (2)

காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பதுதான் ஒரே வழி எனும் ஆயிஷா அன்ட்ரபி

தாலிபானையும் மிஞ்சும் உம்மாவின் பெண்கள்: கணவனே ஹிஜ்புல் முஜாஹித்தீன் தலைவன் என்றபோது, இவளிடத்தில் எதையும் எதிர்பார்க்க முடியாது. இப்பெண்கள் போராடுவது எதற்கு என்றால் –

  1. இஸ்லாமியப் பெண்கள் முதலில் அடிபணிந்து நடக்கக் கற்றுக் கொள்ளவேண்டும் [ஆண்களுக்கு என்று சொல்லவில்லை என்றால் யாருக்கு என்றும் சொல்லவில்லை].
  2. பெண்கள் பர்தா / பர்கா / முகத்திரை முதலியவற்றைப் பின்பற்ற வேண்டும். அப்பொழுதுதான் பணிவு வரும் [பெண்ணிய வீரங்கனைகள் இதைப்பற்றி ஒன்றும் சொல்லாதது ஆச்சரியமே].
  3. பெண்கள் படிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆகையால் அவர்கள் பள்ளிகளுக்குச் செல்லக்கூடாது [பாமம், மலாலா, நோபெல் பரிசைத் திருப்பிக் கொடுத்து விடுவாளா?].
  4. அலங்காரப் பொருள்களை அவர்கள் உபயோகிக்கக் கூடாது, தங்களை அலங்காரம் செய்யக் கூடாது [பிறகு எதற்கு அதற்காக தொழிற்சாலைகள், உற்பத்தி முதலியன, எல்லாவற்றையும் மூடிவிடலாமே?].
  5. அல்லாவின்படி பெண்கள் ஜிஹாதில் ஈடுபட்டு ஷஹீத் ஆகவும் தயார் படுத்திக் கொள்ளாவேண்டும்[1] [நன்றாகத்தான் ஜிஹாதியை செய்து வருகிறார்கள். பெண்களும் ஜிஹாதிகளால் கற்பழிக்கப்படுகிறாற்கள்].
  6. இஸ்லாத்தில் பெண்களுக்கு பல உரிமைகள் உள்ளன. ஆண்களுக்கு நிகராக அவட்களும் ஜிஹாதில் ஈடுபடலாம். ஏனெனில், இஸ்லாத்தில் தான் அத்தகைய உரிமை கொடுக்கப்பட்டுள்ளது [அடேங்கப்பா, அப்படியென்றால், பெண்களும் ஆண்களைக் கற்பழிக்கலாம் போல!].
  7. போராட்டங்கள் என்று வரும்போது, வியபாரம்[2], குழந்தைகள் பாதிக்கப்படத்தான் செய்வார்கள். அதனால், மோமின்கள் தியாகம் செய்வதற்கு தயாராக இருக்கவேண்டும்[3] [இருப்பினும் இதை காஷ்மீர வியாபாரிகள் ஒப்புக்கொள்ளவில்லை, பதிலுக்கு கல்லெறிந்து தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்].
  8. காஷ்மீரத்திற்கு ஒரே வழி ஜிஹாத் தான், அதன் மூலம் தான் விடுதலை கிடைக்கும்[4] [ஆக, இந்திய காபிர்களே, உஷாராக இருங்கள்].
  9. விடுதலை கிடைத்ததும், பாகிஸ்தானுடன் இணைய வேண்டும். அப்பொழுதுதான், இஸ்லாமிய கனவு பூர்த்தியாகும் [அடப்பாவமே, பிறகு பங்களாதேசம், ஆப்கானிஸ்தான் முதலியன என்னாவது?].
  10. இதற்காக பெண்கள் தங்களை அர்பணிக்க தயாராக இர்க்க வேண்டும்.

ஆயிஸா அன்ட்ரபி கத்தியுடன் உலா வரும் ஜிஹாதி

ஆஷியா அன்ட்ரபியின் காதல், ஊடல், கூடல், மோதல், சினிமா முதலியன[5]:  1980களில் இந்த “உம்மாவின் பெண்கள்” இயக்கத்தை ஆரம்பித்தாள் என்று முன்னமே குறிப்பிடப்பட்டது. இருப்பினும், அவளது வெறி ஆயுத போராட்டத்தையே நாடியது. இவளுடைய சகோதரன் இனாயத் உல்லா அன்ட்ரபி என்பவனும் பிரிவினைவாதத் தலைவன் தான், காஷ்மீர் கல்கலைக்கழகத்தில் பேராசிரியாரக இருந்து, விலகி பிரிவினைவாத செயல்களில் ஈடுபட்டான்[6]. என்ன படித்தும் ஒன்றும் பிரயோஜனம் இல்லை என்றாகிறது, அதாவது, இஸ்லாம் அடிப்படைவாதம், அந்த அளவுக்கு, அவர்களை மனநிலையை மாற்றி விடுகிறது என்று தெரிகிறது. தனது ஜிஹாத் போராட்டத்தின் போது, முஹம்மது காஸிம் அல்லது ஆஷிக் ஹுஸைன் ஃபக்தூ என்ற ஜமை-உல்-முஜாஹித்தீன் என்ற தீவிரவாத இயக்கதின் தளபதியைக் கண்டபோது காதல் கொண்டாளாம். நல்லவேளை, “ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன்” என்றா ரீதியில் தான் காதல் வரும் என்பதும் வியக்கத்தக்கதே! இஸ்லாத்தில் வேறுவிதமாக சொல்லப்படவில்லை போலும்! ஆனால், ஒருநேரத்தில் ஆண் எப்படி நான்கு மனைவி வரை வைத்துக் கொள்ளலாம் என்ற முறையில், அந்த நான்கு பெண்களையும் காதலிப்பானா என்று தெரியவில்லை. அவன்தான் தன்னுடைய ஜோடி என்றறிந்து அவனுடன் சேர்ந்தாள். இருப்பினும், அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ முடியவில்லை.

ஆயிஸா அன்ட்ரபி கைது

ஆயுதம் ஏந்தி போராடிய இந்திய பெண்ஜிஹாதி: 1990ல் ஆயுதம் ஏந்தி போராட துணிந்து விட்டாள்[7]. அதாவது, பெண்களுக்கும் காஷ்மீரில் ஆயுதப்பயிற்சி கொடுக்கப்படுவது உறிதியானது. முஹம்மது பின் காஸிம் என்ற குழந்தை பிறந்துவுடன், அவன் தடாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். எச்.என் வாஞ்சூ (H.N. Wanchoo) என்பரைக் கொன்ற குற்றம் வேறு. இவளும் பல தீவிராவாதச் செயல்களால், பலதடவை கைது செய்யப்பட்டுள்ளாள். குழந்தையோடு ஒருவருடம் சிறையில் இருந்தாள்[8]. அமர்நாத் கோவிலுக்கு நிலம் கொடுக்கக் கூடாது, என்ற போராட்டத்தில் பி.எஸ்.ஏவின் கீழ் கைது செய்யப்பட்டாள். காபிர்களின் மீது அத்தகைய வெறுப்பு-காழ்ப்பு போலும்! பிறகு, 2009ல் சோஃபியா கொலை வழக்கு மற்றும் கற்பழிப்பு போராட்டத்தின் போதும் கைது செய்யப்பட்டாள். இவ்வாறு, ஒரு பெண் தீவிரவாதியாக வளர்ந்து, புகழ் பரவும் நேரத்தில், பாலிவுட்டில், இவளின் வாழ்க்கையினை வைத்து படம் எடுக்கவும் முயன்றபோது, சட்டப்படி வழக்குப் போட்டு நிறுத்தினாளாம்! அதுவும் இஸ்லாத்தில் ஹராம் போலும்!

மூன்று ஹைதரபாத் இளைஞர்கள் நாக்பூரில் கைது

மலாலாவும், ஆயிஷா அன்ட்ரபியும்: மலாலாவை “ஓஹோ” என்று புகழ்ந்து, நோபெல் பரிசு கொடுத்து ஆர்பாட்டம் செய்யும், மேனாட்டு ஊடகங்கள், மற்ற சிறுமிகளைக் கண்டுகொள்வதில்லை. அதேபோல, மற்ற ஜிஹாதிகளை விமர்சிக்கும் அவை ஆயிஷா அன்ட்ரபை கண்டுகொள்ளவில்லை. இவளும் தாலிபன் பெண்களைக் கொடுமைப் படுத்தியதைக் கண்டுகொள்ளவில்லை, கண்டிக்கவில்லை. தலிபான்கள் பள்ளிக்கூடங்களைத் தகர்த்தனர் என்றால், இவள் பள்ளிக்கூடங்களையே ஜிஹாத் போதிக்கும் கூடங்களாக மாற்றி விட்டாள். ஐசிஸ் இளம்பெண்களைக் கற்பழித்தது, அடிமைகளாக விற்றது, கொன்று புதைத்தது பற்றியும் கவலைப்படவில்லை. பிறகு, இந்த பெண்ணியப் போராளியை எதில் சேர்ப்பது என்றே புரியவில்லை. ஒருவேளை பெண்-ஜிஹாதிகளை உருவாக்கி, மனித-வெடிகுண்டுகளாக மாற்ற முயல்கிறாளா என்று தெரியவில்லை. பிறகு மனித உரிமகள் பெயரில், இவள் ஆர்பாட்டம் செய்வது ஏன் என்று புரியவில்லை. இப்பொழுது, இவளை ஐசிஸுடன் இணைத்துப் பேசப்படுவதில், விவகாரம் உள்ளது என்று தெரிகிறது.

ஆயிஸா அன்ட்ரபி சிறுமிகளுடன்

© வேதபிரகாஷ்

31-12-2015

[1]ஏற்கெனவே இஸ்லாமிய பெண்கள் தீவிரவாதத்தில், பயங்காவாதத்தில் ஈடுப்பட்டுள்ளது பற்றி விவரங்கள், இன்னொரு பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. அத்தகைய தீவிரவாதம், கேரளாவுடன் சம்பந்தப்பட்டிருப்பதும் நோக்கத்தக்கது. அதாவது “லவ்-ஜிஹாத்” என்ற முறையில், இளம் பெண்கள் காதலில், காமத்தில் ஈடுபடுத்தப்பட்டு, பிறகு மூளைசலவை செய்யப்பட்டு, ஜீஹாத் வேலைக்கு அனுப்பப்படுகிறார்கள். சூஃபியா மதானியின் ஆக்ரோஷச் செயல்களையும் இங்கு நோக்கத்தக்கது.

[2] ஒரு நிலையில், வியாபாரிகள், இதைப் பொறுக்கமுடியாமல், அவர்களே, இந்த கல்லடி கும்பல் மீது கல்லடிக்க ஆரம்பித்தனர்.

[3] Andrabi had been asking Kashmiris to observe shutdowns, close down businesses and schools and participate in protest demonstrations.

http://timesofindia.indiatimes.com/india/Hardline-woman-separatist-leader-Asiya-Andrabi-arrested-in-Srinagar/articleshow/6451416.cms

[4] http://www.telegraphindia.com/1100829/jsp/nation/story_12869172.jsp

[5] ARIF SHAFI WANI,  Aasiya Andrabi, aide arrested, Shifted To Unknown Destination, SRINAGAR, SUNDAY, 18 RAMADHAN 1431 AH ; 29 AUGUST 2010 CE.

http://www.greaterkashmir.com/news/2010/Aug/29/aasiya-andrabi-aide-arrested-26.asp

[6] Her elder brother Inayat Ullah Anndrabi, also a separatist leader, was a professor in Kashmir University. He gave up his job to join the separatist movement.

[7] Asiya shot into prominence in the late 1980s when she launched the DeM essentially against social vices. However, she jumped into the separatist campaign, which began with the armed insurgency in 1990. The Hindu dated  29-08-2010.

 http://www.thehindu.com/news/states/other-states/article600629.ece

[8] The Hindu dated  29-08-2010.

தாய்மார்கள் தங்கள் மகன்களை என்கவுன்டரில் கொலை செய்ய்யப் படுவார்களோ என்று அச்சப்படுகின்றனரே – அப்படியென்றால் அவர்களால் கொலை செய்யப் பட்டவர்களின் தாய்மார்கள், மனைவிமார்கள், சகோதரிகள் என்ன பாட்டு பாட்டிருப்பர், இன்றும் தவித்துக் கொண்டிருப்பர்?

செப்ரெம்பர் 28, 2015

தாய்மார்கள் தங்கள் மகன்களை என்கவுன்டரில் கொலை செய்ய்யப் படுவார்களோ என்று அச்சப்படுகின்றனரே – அப்படியென்றால் அவர்களால் கொலை செய்யப் பட்டவர்களின் தாய்மார்கள், மனைவிமார்கள், சகோதரிகள் என்ன பாட்டு பாட்டிருப்பர், இன்றும் தவித்துக் கொண்டிருப்பர்?

puzhal_ஜெயிலர், வார்டன், போலீஸ் தாக்கப்படல்

puzhal_ஜெயிலர், வார்டன், போலீஸ் தாக்கப்படல்

புழல் சிறை மோதல் எதற்காக, என்கவுன்டருக்கான ஒத்திகையா…?- பிலால் மாலிக் சகோதரர் சந்தேகம்[1]: பிலால் மாலிக் உள்ளிட்டவர்களை என்கவுன்டர் செய்யவே, புழல் சிறையில் போலீசார் மோதல் நாடகம் நடத்தி இருக்கலாம் என பிலால் மாலிக்கின் சகோதரர் கஜினி முகம்மதுசந்தேகம் எழுப்பியுள்ளார்[2]. “போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், பண்ணா இஸ்மாயில் உள்ளிட்டோர் இவர்கள் உயர் பாதுகாப்பு சிறையில் தனியாக அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் 25-09-2015 அன்று ஜெயிலர் இளவரசனை இவர்கள் தாக்கியதாகவும், அவரை காப்பாற்ற சென்ற வார்டன்கள் முத்துமணி, ரவிமோகன், செல்வின் தேவராஜ் ஆகியோர் அவர்களை திருப்பி தாக்கியதாகவும், பதிலுக்கு வார்டன்களை தீவிரவாதிகள் தாக்கியதாகவும் சிறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் காயம் அடைந்த சிறை அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறைத்துறை ஏடிஜிபி திரிபாதி, இரவு சிறைக்கு சென்று கைதிகளிடம் சமாதானம் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், டி.வியில் காயம்பட்ட சிறை அதிகாரிகளைத்தான் காட்டுகிறார்களே தவிர, போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், இஸ்மாயில் இவர்களை காட்டவில்லை”.  இவையெல்லாம் யாரோ சொல்லிக் கொடுத்து பேசப்பட்டவை என்று நன்றகவே தெரிகிறது[3].

போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், ஒஇலால் மாலிக், அபுபக்கர் சித்திக் - அல்-உம்மா,

போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், ஒஇலால் மாலிக், அபுபக்கர் சித்திக் – அல்-உம்மா,

ஆயுதங்களுடன் இருக்கும் சிறை அதிகாரிகளை தாக்கும் அளவுக்கு நமது காவல்துறை பலவீனமானதா?: இப்படி கேள்வி கேட்டு தொடர்கிறார் கஜினி முகமது, “சிறைக்குள் வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள இவர்கள் எப்படி ஒன்றாக சேர முடியும். அப்படியே சேர்ந்தாலும் ஆயுதங்களுடன் இருக்கும் சிறை அதிகாரிகளை இவர்களால் தாக்க முடியுமா? அவ்வளவு பலவீனமானதா நமது காவல்துறை?’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்[4]. புழல் சிறை அதிகாரி இளவரசன் மிகவும் மோசமாக நடந்து கொள்வதாக குற்றம்சாட்டியுள்ள கஜினி முகம்மது[5], இந்த வழக்கை மெதுவாக நடத்தி வருவதாகவும், இருக்கிற கொலை வழக்கு அனைத்தையும் இவர்கள் மீது போட்டுள்ளதாகவும் போலீசார் மீதும் குற்றம் சாட்டியுள்ளார்[6]. இப்போது சிறையில் நடந்திருப்பதாக சொல்லப்படும் தாக்குதலில் போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், இஸ்மாயில் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கலாம் என கஜினி சந்தேகம் எழுப்பியுள்ளார். மேலும், இவர்களை சிறைக்கு மாற்றுவதாக அறிவித்திருப்பது வழக்கை நடத்த முடியாமல் என்கவுன்டர் செய்ய திட்டமிட்டிருப்பதுபோல் தெரிகிறது. தமிழக அரசு, கைதிகளை ஒரே மாதிரியாக அணுகி அவர்களை காப்பாற்ற வேண்டும் என்றும் கஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்[7]. மாதம் ஒருமுறை இவர் சென்று வருவதினால், இவருக்கு மேலும் விசயங்கள் தெரியும் போலிருக்கிறது. பன்னா இஸ்மாயில் நேற்று மதியம், மதுரை சிறைக்கு கொண்டு வரப்பட்டார். அவர் ரிமாண்ட் கைதிகள் உள்ள 2 வது ‘செல்’லில் அடைக்கப்பட்டார். அவரை சிறை காவலர்கள் மூலம் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது[8].

பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் - அல்-உம்மா, கோவை குண்டு வழக்கு

பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் – அல்-உம்மா, கோவை குண்டு வழக்கு

பக்ருதீனின் தாய் சையது மீரான், பிலால் மாலிக்கின் தாய் மும்தாஜ் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி: சிறை நிலவரம் குறித்து மதுரை நெல்பேட்டையை சேர்ந்த போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதற்கிடையில் பக்ருதீனின் தாய் சையது மீரான், பிலால் மாலிக்கின் தாய் மும்தாஜ் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது[9]: “சிறையில் போலீசார் தாக்கப்பட்டது குறித்து டி.வி.யில் பார்த்து தெரிந்து கொண்டேன். பாதுகாப்பு மிகுந்த சிறையில் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிறைக்காவலர்களை எப்படி தாக்க முடியும். காயம்பட்ட அவர்களை மட்டும் காண்பிக்கிறார்கள். கடந்த முறை நாங்கள் அவர்களை சந்திக்க முயன்ற போது, ஜெயிலர் எங்களை மோசமாக நடத்துகிறார். நோன்பு கஞ்சியை கூட சரியாக தருவதில்லை. மேலும் எங்களிடம் வேண்டுமென்றே வம்பு செய்கிறார் என்று கூறினார்கள். நாங்கள் இது குறித்து உயர் அதிகாரியிடம் தெரிவித்தோம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. மேலும் அங்கு கலவரம் ஏற்படுத்தி, அவர்களை என்கவுண்ட்டர் செய்ய தான் திட்டம் தீட்டி உள்ளனர். முதியவர்களாகிய நாங்கள் வெகு தூரத்திற்கு சென்று அவர்களை சந்திக்க முடியவில்லை. எனவே அரசு அவர்களை நாங்கள் எளிதில் சந்திக்கும் வண்ணம் மதுரை அல்லது திருச்சி சிறைக்கு மாற்ற வேண்டும். நாங்கள் அடிக்கடி சந்திப்பதால் அவர்கள் திருந்த அதிக வாய்ப்பு உள்ளது. அதை விட்டு, விட்டு அவர்களை தனித்தனியாக பிரித்து என்கவுண்ட்டர் செய்ய சதி நடப்பதாக எங்களுக்கு தகவல் வருகிறது. திருந்தி வாழ நினைக்கும் அவர்களின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்பட கூடாது. அவர்களை அருகில் உள்ள சிறைக்கு மாற்ற வேண்டும்”, இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்[10]. பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள உயர் பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், ஜாகிர் உசேனை அடித்து கலாட்டா செய்து, கலவரம் உண்டாக்கி ஜெயிலர், வார்டன் மற்றும் போலீஸாரைத் தாக்கியதால், அவர்கள் வெவ்வேறு சிறைகளுக்கு அனுப்பப்பட்டனர்.

 Auditor Ramesh murder - moaned by wife etc

திருந்தி வாழ நினைக்கும் அவர்களின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்பட கூடாது”: குண்டுவெடிப்பு, கொலைகள், அப்பாவி மக்களின் உயிர்பலி, குடும்பங்கள் அதோகதி, தந்தையர்களை இழந்த மகன்கள் – மகள்கள், கணவர்களை இழந்த மனைவிகள், மகன்களை இழந்த தாயார்கள், சகோதர்களை இழந்த சகோதரிகள், இவர்களைப் பற்றி இந்த தாய்மார்கள் யோசித்துப் பார்த்திருப்பார்களா? பிறகு மகன்களை தீவிரவாத செயல்களில் ஈடுபட எப்படி சம்மதம் கொடுத்தனர், ஒப்புக் கொண்டனர்? அவர்களது நடவடிக்கைகளில் சந்தேகப்பட்டு, அவஎகளை அப்பொழுதே திருத்தி இருக்கலாமே? ஏன் அவ்வாறு செய்யவில்லை? “திருந்தி வாழ நினைக்கும் அவர்களின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்பட கூடாது”, என்று வேறு குறிப்பிட்டிருக்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாமானது? இவர்கள் திருந்தியிருந்தால், புழல் ஜெயிலில் இத்தகைய கலவரம், தாக்குதல், முதலியன நடந்திருக்காதே? சித்தூரில் குடும்பம் முழுவதும் சேர்ந்து கொண்டு தானே இதே தீவிரவாதிகளுக்கு உதவி செய்தனர்? குழந்தைகளை முன் வைத்து, தப்பிச் செல்லப்பார்த்தனரே? அவர்களுக்கு உண்மைகள் எல்லாமே தெரிந்து தானே இருந்திருக்க வேண்டும். இல்லாமலா அவர்கள் போலீஸாரையும் எதிர்த்து வேலை செய்திருக்கிறார்கள்?

© வேதபிரகாஷ்

28-09-2015

[1] தினமலர், பிலால் மாலிக், பக்ருதீன் உயிருக்கு ஆபத்து போலீஸ் மீது சகோதரர் குற்றச்சாட்டு, செப்டம்பர்.26, 2015: 22.29.

[2] ஒன்.இந்தியா, புழல் சிறை மோதல் எதற்காக, என்கவுன்டருக்கான ஒத்திகையா…?- பிலால் மாலிக் சகோதரர் சந்தேகம், Posted by: Jayachitra, Published: Sunday, September 27, 2015, 12:21 [IST].

[3] முன்பு பெங்களூரு குண்டுவெடிப்பில் கைதானவர்களை, எங்களுக்கு முன்பாக கொண்டு வந்து காட்ட வேண்டும் என்று கைதானவர்களின் மனைவிகள் வழக்கு போட்டார்கள், பேட்டி கொடுத்தார்கள், ஆனால், குற்றவாளிகள் தாம் என்றவுடன் அமைதியாகி விட்டன. விளம்பரம் கொடுத்த ஊடகங்களும் அடங்கிவிட்டன.

[4]  விகடன்.காம், புழல் சிறை மோதல் என்கவுன்டருக்கான நாடகமா? சந்தேகம் எழுப்பும் பிலால் மாலிக் சகோதரர், Posted Date : 16:05 (26/09/2015)

Last updated : 16:05 (26/09/2015).

[5] புழல் சிறைக்கு இவர்கள் மாற்றப்பட்டதில் இருந்து சிறை அதிகாரி இளவரசன் ரொம்பவும் மோசமாக நடந்து கொள்கிறார். நான் மாதம் ஒரு தடவை பார்க்க செல்வேன். என்னையே கடுமையாக திட்டுவார். http://www.vikatan.com/news/article.php?aid=52934

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/bilal-malik-s-brother-questions-puzhal-prison-clash-incident-236563.html

[7] http://www.vikatan.com/news/article.php?aid=52934

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1350856&Print=1

[9] மாலைமலர், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக்கை என்கவுண்டர் செய்ய சதி: உறவினர்கள் பேட்டி, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 27, 6:23 PM IST.

[10] http://www.maalaimalar.com/2015/09/27182331/Police-Fakhruddin-Bilal-Malik.html

ஐசிஸ், அல்-குவைதா, இந்திய முஜாஹித்தீன் – இந்தியாவின் மீதான ஜிஹாதி தாக்குதல் அச்சுறுத்தல் – 712லிருந்து நடந்து வரும் ஜிஹாதிதான் – இந்துக்கள் எதிர்க்கொண்டே ஆகவேண்டிய நிலையாகிறது!

செப்ரெம்பர் 9, 2014

ஐசிஸ், அல்-குவைதா, இந்திய முஜாஹித்தீன் – இந்தியாவின் மீதான ஜிஹாதி தாக்குதல் அச்சுறுத்தல் – 712லிருந்து நடந்து வரும் ஜிஹாதிதான் – இந்துக்கள் எதிர்க்கொண்டே ஆகவேண்டிய நிலையாகிறது!

Propaganda for Jihad in India works differently

Propaganda for Jihad in India works differently

இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த வீடியோ ஆதாரம் வெளியானது: அய்மன் அல்- ஜவாஹரி [Ayman Al-Zawahari] என்ற அல்-குவைதாவின் படைத்தலைவனின் வீடியோ வெளியானப் பிறகு, இந்தியாவைத் தாக்க ஜிஹாதிகள் ஈடுபட்டுள்ள திட்டங்களைப் பற்றிய விவரங்கள் கிடைத்துள்ளன. ஊடகங்கள் இவற்றை ஏதோ புதியது போல வெளியிட்டு வந்தாலும், இவ்விவரங்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கு தெரிந்த விசயமே. இந்தியாவை முஸ்லிம் நாடுகளுடன் இணைக்க வேண்டும் என்ற நப்பாசை முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் உருவானதிலிருந்தே இருந்து வருகிறது. கஜ்வா-இ-ஹிந்த் [Ghazwa-e-Hind] என்ற பெயரில் இந்தியாவின் மீதான கடைசியான போர் என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளனர். இந்த தீவிரவாத ஜிஹாதி சித்தாந்தம் மூலம் பல முஸ்லிம்களை மதரீதியில் கவர வைத்து, இந்தியாவின் மீதான தாக்குதலை மேற்கொண்டு, அதை காபிர்களின் பிடியிலிருந்து விடுபட வைத்து மறுபடியும், இஸ்லாமிய ஆட்சியை நிறுவ வேண்டும் என்று சொல்லிக் கொண்டு செயல் பட்டு வருகிறது. இந்திய துணைக்கண்டத்தில் ஜிஹாதி அஸ்திவாரம் அமைத்து அதன் மூலம் புனித போரைத் தொடர வேண்டும் [Jamaat Qaidat al-jihad fi’shibhi al-qarrat al-Hindiya or the Organisation of The Base of Jihad in the Indian Sub-Continent] என்று இவ்வியக்கம் தோற்றுவிக்கப் பட்டதாக ஜிஹாதிகள் கூறியிருக்கிறார்கள்[1]. இடைக்காலத்திலிருந்தே முகமதியர் இம்முறையைக் கையாண்டு வந்ததை நினைவுகூர வேண்டும்.

HT news cutting about Jihadi expansion in India

HT news cutting about Jihadi expansion in India

சுன்னிஷியா போராட்டமா, உலகத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலா?: அல்–கொய்தா தலைவன் பின்லேடன் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரில் 2011ம் ஆண்டு மே 2–ந் தேதி அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டான், ஆனால், அவ்வியக்கம் தொடர்ந்து தீவிரவாதத்தை வளர்த்துக் கொண்டுதான் வந்துள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்பட பல்வேறு மத்திய கிழக்கு பகுதியில் செயல்பட்டு வரும் அல்-கொய்தா தீவிரவாத அமைப்பால்தான் ஐ.எஸ்.ஐ.எஸ். / ஐசிஸ் என்ற தீவிரவாத-பயங்கரவாத இயக்கம் தொடங்கப்பட்டது. அந்த தீவிரவாத இயக்கம் உலக நாடுகளுக்கே பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். (இஸ்லாமிக் ஸ்டேட் இன் ஈராக் அண்டு சிரியா) என்ற தீவிரவாத இயக்கம் ஈராக் மற்றும் சிரியாவில் நுழைந்து அரசு படைகளை துவம்சம் செய்துவருகிறது. சுன்னி-சன்னி முஸ்லிம்களாக இருக்கும் இவர்கள், ஷியா முஸ்லிம்களைக் கொன்று வருகின்றனர். பாகிஸ்தானிலும் ஷியாக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருவதை கவனிக்கலாம். இதற்கு பாகிஸ்தானின் ஆதரவும் இருந்து வருகின்றது. முன்பு இராக்-இரான் சணையிட்ட போது, அது உலக யுத்தமாக மாறுமா என்ற யேஷ்யம் இருந்தது. இப்பொழுது, மறுபடியும் இஸ்லாம் தீவிரவாதம் ஐசிஸ் போர்வையில் எல்லைகளைக் கடந்து செயல்பட்டு வருவதாலும், ஷியாக்களைக் கொன்று வருவதாலும், இரான் பதிலுக்கு தாக்குதலை ஆரம்பிக்குமோ என்ற பயம் இருந்து வருகிறது.

Al-Quida plan in India for Jihad

Al-Quida plan in India for Jihad

ஐசிஸ் உலக யுத்தத்திற்கு வழி வகுக்கிறதா?: தற்போது அல்–கொய்தாவை விட மிகவும் கொடிய தீவிரவாத இயக்கமாக கருதப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தால் ஈராக் தேசமே நிலைகுலைந்து உச்சக்கட்ட குழப்ப நிலையில் தவிக்கிறது. ஐ.எஸ்.ஐ.எஸ்.சின் அபரிமிதமான வளர்ச்சி சவூதி அரேபியா, ஈராக், துருக்கி போன்ற அண்டை நாடுகளின் ஆட்சியாளர்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், அந்நாடுகளிலிருந்து தான் அதற்கு பணவுதவி கிடைத்து வருகிறது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். ஹக்கானி என்ற குழுமம் அதிக அளவில் பணவுதவி செய்து வருகிறது என்பது குறிப்பிடட்ய்ஹ் தக்கது[2]. ஒருவேளை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக்கை கைப்பற்றி விட்டால் தங்கள் நாட்டின் மீதும் கை வைக்கலாம் என்று கருதி அங்குள்ள ஆட்சியாளர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை ஒடுக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறார்கள். அதற்கு எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும். அமெரிக்கா உள்பட உலக நாடுகளும் இந்த புதிய திவீரவாத-ஜிஹாதி தாக்குதல்களை எதிர்க்க களத்தில் இறங்கியுள்ளது.  ஐ.எஸ்.ஐ.எஸ்.சின் வளர்ச்சி மத்திய கிழக்கு பகுதிக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று உணரப்பட்டு விட்டது. முஸ்லிம்களும் அதனை உணர்ந்து விட்டார்கள். இந்நிலையில் இந்தியாவில் அல்-கொய்தாவின் கிளை தொடங்கப்படும் என்று அந்த அமைப்பின் தலைவன் அய்மான்-அல்-ஜவாஹிரி மிரட்டல் விடுத்துள்ளான்[3].

IM Al-Quida nexus India

IM Al-Quida nexus India

காலிபைட்டும், இந்தியாவை அதில் சேர்க்க கையாளும் மானசீக முறைகளும்: மியன்மார், அசாம், குஜராத், காஷ்மீரம் முதலிய இடங்களில் முஸ்லிம்களுக்கு இழைக்கப் படும் துன்பங்களுக்கு எதிராக இது செயல்படும் என்று அறிவித்துள்ளார்கள். இது முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டி விடும் வேலையாக இருக்கிறது. பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பொய்யான புகைப்படங்களை வெளியிட்டு இந்தியாவில் கலவரம் மற்றும் தீவிரவாதத்தையும் வளர்த்து வருகின்றது. அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அய்மான் அல் ஜவாஹிரி பேச்சு அடங்கிய 55 நிமிடம் ஓடுகிற வீடியோ யு-டியுப் உள்ளிட்ட இணையதளங்களில் வெளியாகி உள்ளது[4]. அல் கொய்தா இயக்கத்தின் புதிய கிளை தொடங்கப்பட்டுள்ளது. இது இந்திய துணைக்கண்டத்தில் காயிதத் அல் – ஜிஹாத் என்று அழைக்கப்படும். இது அங்கு புனித போர்க்கொடியை தூக்கிப் பிடிக்கும். இஸ்லாமிய ஆட்சியை திரும்ப கொண்டு வரும். ஷரியத் சட்டத்துக்கு அதிகாரம் வழங்கும். இந்திய துணைக் கண்டத்திற்கு இஸ்லாம் திரும்ப வேண்டும்.

India Today cutting on ISIS-Jihad plot

India Today cutting on ISIS-Jihad plot

ஆசியாவை இஸ்லாம் மயமாக்கும் முயற்சி: ஆக்கிரமிப்புக்கு முன்பு இந்தியா, இஸ்லாமிய உலகின் ஒரு அங்கமாகத்தான் இருந்தது. இந்திய துணைக்கண்டத்தில், பர்மாவில், வங்காளதேசத்தில், அசாமில், குஜராத்தில், ஆமதாபாத்தில், காஷ்மீரில் தீங்குகளிலிருந்து (இஸ்லாமியர்களை) காக்கும். காயிதத் அல் – ஜிஹாத்தில் உள்ள உங்கள் சகோதரர்கள் உங்களை மறக்கவில்லை. அவர்கள் உங்களை அநீதி, ஆக்கிரமிப்பு, துன்புறுத்தல், பாடுகளில் இருந்து விடுவிப்பார்கள். இந்த இயக்கம் இன்றைக்கு தோன்றி விடவில்லை. இது 2 ஆண்டுகளுக்கு மேலாக புனிதப் போராளிகளை திரட்டுவதற்கு எடுத்த முயற்சியின் பலனாக விளைந்திருக்கிறது. இது வெற்றி பெறும். முல்லா உமர் நம்பிக்கையாளர்களின் உத்தரவு இது. ஒசாமா பின்லேடனின் அழைப்பை புதுப்பித்து பிரகடனப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு இது. எதிரிகளுக்கு எதிராக புனிதப்போர் தொடுக்க வேண்டும். தனது சொந்த பூமியை மீட்டெடுக்க வேண்டும். தனது இறையாண்மையை மீட்க வேண்டும். என்று வீடியோவில் கூறப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அல் கொய்தா இயக்கம் புதிய கிளையை தொடங்கியுள்ளது. என்று அமெரிக்க மீடியா மற்றும் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

Osama and Ayman Al-Zawahari

Osama and Ayman Al-Zawahari

இந்தியாவில் தற்கொலைப் படை உருவாக்கும் முயற்சிகள்: அல்-குவைதா, இந்தியாவில் உள்ள இந்திய முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி இவற்றின் உதவி கொண்டு ஃபிதாயீன் என்ற தற்கொலைப் படை அமைத்து இந்திய முக்கிய நகரங்களைத் தாக்கும் திட்டம் தெரிய வந்துள்ளது[5]. செயிக் என்ற இந்திய முஜாஹித்தீனின் தொழிற்நுட்ப ஆள் சஹரன்பூர் ரெயில் நிலைத்தில் வெள்ளிக்கிழமை (05-09-2014) அன்று பிடிபட்டான். தில்லி அதில் முக்கிய இடமாக உள்ளது, என்று அவனிடம் விசாரித்ததில் தெரிய வந்துள்ளது[6]. யாசின் பட்கல் பிடிபட்டபோது, இவன் நேபாளத்திற்கு ஓடிச் சென்று விட்டான். 2010ல் ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பில் உபயோகப்படுத்திய வெடிப்பொருட்களை தான் பெற்றுக்கொண்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளான். ஜம்மு-காஷ்மீர், கேரளா, அசாம், குஜராத், தமிழ்நாடு முதலிய மாநிலங்களில் அவர்களுக்கு உதவி கிடைத்து வர் உவதாகவும் தெரிகிறது. இதனால் அம்மாநிலங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேரளா-காஷ்மீர் ஜிஹாதி இணைப்பு ஏற்கெனவே பல உண்மைகளை வெளிக்காட்டியுள்ளது. அதில் தமிழகத்தின் பங்கும் இருப்பது கவனிக்கத் தக்கது.

Isis targets India

Isis targets India

தேடப்பட்டு வரும் உலக குற்றவாளிகளை தெய்வீக மயமாக்கும் இஸ்லாமிய இறையியல்: அமெரிக்காவால் தேடப்படும் தீவிரவாதிகளின் பட்டியலில் இருக்கும் முதல் நபர் அல்–கொய்தா இயக்கத்தின் தலைவன் அய்மான் அல்–ஜவாஹிரி. இரண்டாவது இடத்தில் இருப்பவன் வேறு யாரும் அல்ல, ஈராக், சிரியா அரசுகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கும் அபுபக்கர் அல்–பாக்தாதி தான். சன்னி பிரிவைச் சேர்ந்த இவன், அடுத்த ஒசாமா பின்லேடன் என்று அழைக்கப்படுகிறான். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு தலைமை தாங்கும் 43 வயதான அல்–பாக்தாதி, பெரும்பாலும் தனது முகத்தை வெளிக்காட்டுவது இல்லை. தனது இயக்க தளபதிகள் மத்தியில் பேசும் போது கூட முகத்தை மூடிக் கொண்டிருப்பான். இதனால் இவரை மாயாவி ஷேக் (‘இன்விசிபிள் ஷேக்’) என்றும் கூறுகிறார்கள்[7]. இவ்வாறுதான் தீவிரவாத இறையியலை பயங்கரவாதிகள் வளர்த்து வருகிறார்கள். இது இஸ்லாமை சித்தாந்தமாகக் கொண்டு வளர்ந்து வரும் இளைஞர்களை எளிதில் ஜிஹாதில் ஈடுபட்டு, ஷஹீதுகளாக மாற வைக்கிறது.

Pan-Islamic jihadi and state assumed

Pan-Islamic jihadi and state assumed

இந்துக்களைக் கொல்ல தயாக இருக்கும் குரூர ஜிஹாதிகள்: ஜிஹாதிகள் இவ்வாறு வெளிப்படையாக இந்தியாவைத் தாக்க வேண்டும், இந்துக்களைக் கொல்ல வேண்டும் என்றெல்லாம் வெளிப்படையாக மிரட்டிக் கொண்டிருந்தாலும், முஸ்லிம் அமைப்புகள் ஏதோ தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்பது போல ஒரு புறம் ஜிஹாதிகளைக் கண்டிப்பது, மற்றும் இன்னொருப் பக்கம், ஆஹா இதெல்லாம் பிஜேபிக்குத்தான் சாதகமாக அமையும் என்றும் பேசுவதும்[8] படுவேடிக்கையாக இருப்பதுடன், அவர்களது போலியான மனப்பாங்கையும், இரட்டை வேடங்களையும் வெளிப்படுத்திக் காட்டுகிறது. இந்தியாவைப் பொறுத்த வரையில், பெரும்பாலான முஸ்லிம்களின் எண்ணங்களில் ஒரு பக்கம் சந்தோஷமும், அதே நேரத்தில் சுன்னி-ஷியா போராட்டங்கள், அதிகமான ஷியாக்கள் கொல்லப் படுவது, இரானை உசுப்பிடுமோ என்றும் பயந்து கொண்டிருக்கிறார்கள். ஷியாக்கள் பெரும்பான்மையாகக் கொண்ட இரான், இது வரையிலும் அமைதியாக இருப்பது கவனிக்கத் தக்கது.

முஸ்லிம்கள் கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

முஸ்லிம்கள் கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

குரூர ஜிஹாதித்துவத்தை மறைக்க இந்துத்வத்தின் போடும் பழிகள்: இந்துத்வவாதி மோடியின் கீழுள்ள பிஜேபி ஆட்சி இருப்பதினால், “இந்து ராஷ்ட்ரா” என்ற அவர்களது திட்டத்திற்குத்தான் இது உதவும் என்றும் திரித்து முஸ்லிம் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன[9]. சையீத் நக்வி என்றவரும் “ஏற்கெனவே மதரீதியில் பிளவு பட்டுள்ள இந்து-முச்லிம்களிடையே இது மேலும் தீயை வளர்க்கும்”, என்று இதே தோரணையில் எழுதியுள்ளார்[10]. ஆனால், இந்தியாவின் மீது எப்படி முகமதியர்கள் 712லிருந்து தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள் என்ற சரித்திரத்தைப் படித்துப் பார்த்தால், முஸ்லிம்களின் குரூரக்கொலை திட்டம், இந்துக்களை தாக்கியது, கொடுமைப்படுத்தியது, கோவில்களை இடித்தது என்ற பல உண்மைகள் வெளி வரும். ஆகவே, முகமதியர்கள் / முஸ்லிம்கள் ஏதோ சாத்துவிக சித்தர்கள், அஹிம்சை புத்தர்கள் என்ற ரீதியில் இவர்கள் வக்காலத்து வாங்கிக் கொண்டு வருவது மிகக்கேவலமான பிரச்சாரம் ஆகும். முதலில் இத்தகைய ஜிஹாதிகளை ஒழிக்க வேண்டும் என்று அவர்கள் குரல் கொடுக்க வேண்டுமே தவிர மறைமுகமாக அவர்களது குரூரச் செயல்களை நியாயப்படுத்துவது அவர்களுடன் சேர்ந்து செயல்படுவது போலத்தான் ஆகும்.

 Yasin Bhatkal arrested

712லிருந்து நடந்து வரும் ஜிஹாதிதான்இந்துக்கள் எதிர்க்கொண்டே ஆகவேண்டிய நிலையாகிறது!: இடைக்காலத்தில் இந்தியர்களின் / இந்துக்களின் ஆட்சியாதிக்கம் மத்தியத் தரைக் கடல் பகுதிகளில் இருந்து வந்துள்ளது. இஸ்லாம் வளர்ந்து கிழக்குப் பக்கம் பரவ ஆரம்பித்த போது, அது இந்தியர்களின் ஆதிக்கத்தைக் குறைக்க ஆரம்பித்தது. திடீரென்று தாக்கி கொள்ளை-கொலைகளில் ஈடுபட்டு வந்த முகமதிய படைகள் என்றுமே வஞ்சக முறைகளைத் தான் கையாண்டு வந்துள்ளன. 700 ஆண்டுகள் ஆட்சி, ஐரோப்பியர்கள் / இங்கிலாந்துவாசிகளிடம் சென்று, விடுதலைப் பெற்றப் பிறகு, இந்தியாவை காலிபைட்டில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் முஸ்லிம்களுக்கு இருந்து வந்துள்ளது. இதற்கு “கிலாபத் இயக்கத்திற்கு” காந்தி ஆதரவு தெரிவித்ததும் தீயில் எண்ணையை வார்த்தது போலாகியது. இப்பொழுதைய காலக் கட்டத்தில் ஐசிஸ் கிலாபத்தை மறுபடியும் நிலைநிறுத்த பாடுபடுவதும், காந்திய ஆதரவையும் கூர்மையாக ஆராய வேண்டியுள்ளது. செக்யூலரிஸவாதிகள் மேற்குறிப்பிட்டபடி, இந்துத்வத்தை குறைகூறி, இந்த குரூர-பயங்கரவாதத்தை ஆதரிக்க இப்பொழுதே ஆரம்பித்து விட்டன. இனி இந்திய ஊடகங்களில் அத்தகைய பிரச்சாரங்கள் அதிகமாகும். வழக்கம் போல கம்யூனிஸ்டுகளும் தங்களது வலையை வீச ஆரம்பிப்பார்கள். இஸ்லாமிய நிதியுதவி, வழ்க்ஷக்கம் போல கிடைக்கும். எனவே இந்துக்கள் தங்களது மீதான தாக்குதலை, புதிய யுத்தமுறையை நன்றாகப் புரிந்து கொண்டு, இத்தகைய விஷமப்பிரச்சாரவாதிகளை வெளிக்காட்ட வேன்டும், தனிமைப் படுத்த வேண்டும்.

வேதபிரகாஷ்

08-09-2014

[1] http://www.firstpost.com/india/al-qaeda-threat-not-just-kashmir-kerala-could-be-a-terror-hot-spot-too-1700487.html

[2] Gretchen Peters, Haqqani Network Financing: The Evolution of an Industry, Harmony Program, Combating Terrorism Centre, USA, 2012.

[3] http://www.dailythanthi.com/News/World/2014/09/04084404/Al-Qaeda-Announces-India-Wing—Ayman-al-Zawahri.vpf

[4] http://www.dailythanthi.com/News/India/2014/09/05144641/We-are-prepared-to-face-al-Qaeda-threat-IAF-chief.vpf

[5] http://www.deccanchronicle.com/140908/nation-crime/article/al-qaeda-plans-raise-suicide-squads-india-help-im-and-banned-simi

[6] http://www.deccanchronicle.com/140908/nation-crime/article/indian-mujahideen-operative-reveals-delhi-was-next-hit

[7] http://www.dailythanthi.com/News/World/2014/09/04084404/Al-Qaeda-Announces-India-Wing—Ayman-al-Zawahri.vpf

[8] http://gulfnews.com/opinions/columnists/al-zawahiri-s-call-will-only-make-things-easier-for-bjp-1.1381940

[9] Saeed Naqvi, Al Zawahiri’s call will only make things easier for BJP, Published: 20:00 September 7, 2014, http://gulfnews.com/opinions/columnists/al-zawahiri-s-call-will-only-make-things-easier-for-bjp-1.1381940

[10] http://www.risingkashmir.com/can-zawahiri-add-to-communal-cauldron-already-full/