Archive for the ‘இந்துக்களைக் கொல்வது’ category

தி கேரளா ஸ்டோரி – திரைப் படத்திற்கு எதிர்ப்பு-தடை, உச்சநீதி மன்றத்தில் வழக்கு, மாநிலங்களின் பதில், 100 கோடிகளைத் தாண்டிய வசூல்! (4)

மே 17, 2023

தி கேரளா ஸ்டோரி‘ – திரைப்படத்திற்கு எதிர்ப்புதடை, உச்சநீதிமன்றத்தில் வழக்கு, மாநிலங்களின் பதில், 100 கோடிகளைத் தாண்டிய வசூல்! (4)

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு-தடை: விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘தி கேரளா ஸ்டோரி’. கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது[1]. இந்த எண்ணிக்கை உயர்வு படுத்தி காட்டப் பட்டுள்ளது என்று எதிர்த்ததால், மாற்றப் பட்டது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி திரையுலகில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியது[2], என்கிறது ஊடகங்கள்.  உண்மையில், முஸ்லிம் அமைப்பினர் எதிர்த்து போராட்டம் நடத்தினர். இப்படம் குறித்து வாதம் விவாதங்கள் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் நடந்து வந்தன. அதில் எவ்வாறு இந்திய பெண்கள் ஏமாற்றப் பட்டு, மதம் மாற்றப் பட்டு, ஐசிஸ் தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதனை காட்டுவதால், முஸ்லிம் அமைப்பினர் கடுமையாக எதிர்த்தனர்.

மேற்கு வங்காளம் தடைஉச்சநீதிமன்றத்தில் வழக்கு: முஸ்லிம் ஓட்டுகளை நம்பி அரசியல் செய்யும் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு இருந்தது. பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கருத்தை தெரியப்படுத்தி வந்தனர். இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் வன்முறை ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரையிடலை உடனடியாக நிறுத்த முதல்வா் மம்தா பானா்ஜி கடந்த மே 8-ஆம் தேதி உத்தரவிட்டார். இதனால், தமக்கு பாதிப்பு ஏற்படும் என்று உணர்ந்த, இத்திரைப்பட தயாரிப்பாளா்கள் வழக்குத் தொடர்ந்தனர். மேற்கு வங்கத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரையிடலுக்கு அரசு தடை விதித்த நிலையில், தமிழகத்தில் அதிகாரபூா்வமற்ற தடை உள்ளதாக குற்றம்சாட்டி, இத்திரைப்பட தயாரிப்பாளா்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றம் இரு மாநில அரசும் விளக்கம் அளிக்குமாறு கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியது.

பத்து நாட்களில் 100 கோடிகளைத் தாண்டிய வசூல்: எதிர்ப்புகள் எதுவும் படத்தின் வசூலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் படம் வெளியான நாளிலிருந்து இன்று வரை வசூல் ஏறுமுகமாக தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த பத்து நாட்களில் கேரளா ஸ்டோரி வசூலித்த மொத்த கலெக்சன் பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அதாவது 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது வரை 112 கோடிகளை வசூலித்திருக்கிறது. அப்படி பார்த்தால் இது பட்ஜெட்டை தாண்டிய பல மடங்கு வசூல் தான். மேலும் பாலிவுட் திரையுலகில் இந்த வருடம் அதிகபட்சமாக வசூல் பெற்ற படங்களில் இப்படமும் இணைந்து இருக்கிறது. அதாவது 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது வரை 112 கோடிகளை வசூலித்திருக்கிறது. அப்படி பார்த்தால் இது பட்ஜெட்டை தாண்டிய பல மடங்கு வசூல் தான். மேலும் பாலிவுட் திரையுலகில் இந்த வருடம் அதிகபட்சமாக வசூல் பெற்ற படங்களில் இப்படமும் இணைந்து இருக்கிறது[3].

குறைந்த பட்ஜெட்டில் எதிர்த்தாலும் அதிக வசூல் செய்துள்ல படமாக இருக்கிறது: மேலும் அடுத்தடுத்து பல திரைப்படங்களின் தோல்வி ஹிந்தி திரையுலகை கொஞ்சம் அசைத்து தான் பார்த்தது. அதை தூக்கி நிறுத்தும் படியாக இருந்தது ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த பதான் திரைப்படம். அந்த வகையில் தி கேரளா ஸ்டோரி நெகட்டிவ் விமர்சனங்களை அடித்து நொறுக்கி வசூலில் மாஸ் காட்டி இருக்கிறது[4]. வெளியான 9 நாட்களில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது[5]. 13-05-2023 அன்று ஒரே நாளில் மட்டும் இப்படம் ரூ.19 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது[6].  வடமாநிலங்களில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு 37க்கும் மேற்பட்ட நாடுகளில் மே 12ஆம் தேதி இப்படம் வெளியானது. இந்த வசூலுக்கு முதல் காரணமே படத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்புத்தான் என்கிறார்கள்[7]. படத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்க ஆர்வம் ஏற்பட்டு பலரும் பார்த்ததே வசூலுக்கு வழி வகுத்தது[8]. இல்லாவிட்டால் படம் வந்ததே தெரியாமல் போயிருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இப்படியும் சில ஊடகங்களின் வெளிப்பாடு இருக்கிறது.

தமிழகத்தின் பதில்: தமிழ்நாட்டிலும் முதல் நாள் 05-05-2023 வெளியிட்டு மறுநாள் தியேட்டகளில் படம் ஓடவில்லை. ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள நேரடி, மறைமுக தடையை எதிர்த்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, தடை விதித்தது குறித்து மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டார். இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது[9]. அதில், இந்த படத்திற்கு தடை விதிக்கவில்லை என்றும் திரையரங்கிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது[10]. படத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது சென்னை மற்றும் கோவையில் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது[11]. ஆனால், திரைப்படம் எதிர்கொண்ட விமர்சனம் அறிமுகமில்லாதவர்களின் நடிப்பு போதுமான வரவேற்பின்மை ஆகியவற்றால் திரையரங்க உரிமையாளர்களே கடந்த மே 7-ஆம் தேதி முதல் திரையிடுவதை நிறுத்திக் கொண்டதாக தோன்றுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது[12]. பார்வையாளர்கள் குறைவாக இருந்ததால் படத்தை திரையிடுவதை திரையரங்க உரிமையாளர்களே நிறுத்திவிட்டனர்[13]. பிறகு, மற்ற இடங்களில் ஓடி எப்படி ரூ.100 கோடி வசூல் கிடைத்தது என்பது கவனிக்கத் தக்கது. திரையரங்குகளுக்கு பாதுகாப்பு மட்டுமே தர முடியுமே தவிர, பார்வையாளர்களை அதிகரிக்க அரசால் எதுவும் செய்ய முடியாது[14]. அதாவது பார்வையாளர்களைக் கூட்டி வரமுடியாது என்றெல்லாம் விளக்கம் கொடுத்துள்ளதும் விசித்திரமாக உள்ளது. கலாட்டா செய்வார்கள், அடிப்பார்கள், கலவரங்கள் நடக்கும், குண்டுகள் கூட வெடிக்கும் போன்ற அச்சம் தாம் பொது மக்களை தியேட்டர்களுக்குச் செல்ல விடமால் தடுத்தது எனலாம்.

19 திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு 25 டிஎஸ்பிக்கள் தலைமையில் 965 காவலர்கள் பாதுகாப்பு: 19 திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு 25 டிஎஸ்பிக்கள் தலைமையில் 965 காவலர்கள் பாதுகாப்பு அளித்துள்ளனர்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது[15]. அந்த அளவுக்கு பெரிய போலீஸ் அதிகாரிகள் கொடுக்கும் அளவுக்கு முஸ்லிம்கள் மிரட்டிக் கொண்டிருந்தனர் போலும். மேலும், விளம்பரம் தேடும் நோக்கில் மனுதாரர் மனுதாக்கல் செய்துள்ளதால் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது[16]. அப்படியென்றால், இத்தகைய விளம்பரத்திற்கு கூட்டம் வர வேண்டியிருக்குமே, ஆனால், வரவில்லை. இதிலிருந்து, தியேட்டர் முதலாளிகள், தங்களது தியேட்டர்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று நிறுத்தியுள்ளனர் என்று தெரிகிறது. அத்தகைய போலீஸ் பாதுகாப்பு, விளம்பரம், ரூ 100 கோடி வசூல் என்றால், மறுபடியும் தாராளமாக திரையிட ஆரம்பிக்கலாமே?

© வேதபிரகாஷ்

17-05-2023


[1] மாலைமலர், ‘தி கேரளா ஸ்டோரிதிரைப்படத்துக்கு வரவேற்பு இல்லை.. உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில், By Nagalekshmi 16 மே 2023 12:21 PM.

[2] https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-the-kerala-story-case-update-609713?infinitescroll=1

[3] சினிமா.பேட்டை, 10 நாளில் தி கேரளா ஸ்டோரி செய்த சாதனை.. நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் மிரட்டிய வசூல் ரிப்போர்ட்,  By Anamika, Published on May 14, 2023

[4] https://www.cinemapettai.com/the-collection-record-of-the-kerala-story-in-10-days

[5] தமிழ்.இந்து, ரூ.100 கோடி வசூலைக் கடந்ததுதி கேரளா ஸ்டோரி’ – நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.19 கோடி, செய்திப்பிரிவு, Published : 14 May 2023 03:33 PM, Last Updated : 14 May 2023 03:33 PM.

[6] https://www.hindutamil.in/news/cinema/bollywood/989990-the-kerala-story-enters-rs-100-crore-club.html

[7] மாலைமலர், ரூ.100 கோடி வசூல் செய்ததி கேரளா ஸ்டோரிதிரைப்படம்,By Maalaimalar, 15 மே 2023 2:30 PM

[8] https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-the-kerala-story-collected-rs100-crores-609380

[9] தமிழ்.வெப்.துனியா, நாங்க தடை பண்ணல.. படத்தை யாரும் பாக்கவே இல்ல! – The Kerala Story வழக்கில் தமிழக அரசு பதில்!, Written By Prasanth Karthick, Last Modified, செவ்வாய், 16 மே 2023 (12:15 IST).

[10] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/tamilnadu-govt-said-they-not-ban-kerala-story-in-tamilnadu-123051600041_1.html

[11] தினமலர், தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரவேற்பு இல்லை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில், மாற்றம் செய்த நாள்: மே 16,2023 12:23

[12] தமிழ்.ஒன்.இந்தியா, படம் பார்க்க நாங்களா ஆட்களை கூட்டி வர முடியும்.. தி கேரளா ஸ்டோரி வழக்கில் தமிழக அரசு பதில், By Vigneshkumar Updated: Tuesday, May 16, 2023, 17:38 [IST]

[13] https://tamil.oneindia.com/news/delhi/what-tamilnadu-govt-says-about-the-kerala-story-not-being-screened-in-tamilnadu-512056.html

[14]  https://m.dinamalar.com/detail.php?id=3322142

[15] தினமணி, தி கேரளா ஸ்டோரி திரையிடல் நிறுத்தப்பட்டது ஏன்? தமிழக அரசு பதில், By DIN  |   Published On : 16th May 2023 02:50 PM  |   Last Updated : 16th May 2023 02:50 PM

[16] https://www.dinamani.com/india/2023/may/16/why-the-screening-of-the-kerala-story-has-been-stopped-4006736.html

தி கேரளா ஸ்டோரி – நீதிமன்ற அனுமதியுடன், போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு நாட்கள் ஓடியது, மூன்றாம் நாள் தடை விதிக்கப் பட்டது! (3)

மே 7, 2023

தி கேரளா ஸ்டோரிநீதிமன்ற அனுமதியுடன், போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு நாட்கள் ஓடியது, மூன்றாம் நாள் தடை விதிக்கப் பட்டது! (3)

கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் எதிர்ப்பு: இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி, கேரளாவில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அரசியல் கூட்டணி இதிலும் வேலை செய்கிறது போலும். இந்நிலையில், இந்த படம் தமிழக திரையரங்குகளில் கடந்த மே5-ந்தேதி வெளியானது. இயக்குநர் சுதீப்தோ சென் இயக்கத்தில், விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் தி கேரளா ஸ்டோரி என்ற பெயரில் உருவான திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்தது. நடிகைகள் அதா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பலானி உள்ளிட்டோர் முக்கிய வேடமேற்று நடித்து உள்ள இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றிருந்தன என்று ஊடகங்களே கூறுவது முன்னரே தீர்மானிக்கப் பட்ட விசயம் போல தோன்றுகிறது. கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்றும் அதன்பின் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் தங்களை இணைத்து கொண்டனர் என்றும் காட்டப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

05-05-2023 – தமிழக நீதிமன்றத்தில் வழக்கு, தள்ளுபடி, திரைப்படம் வெளியீடு, ஆர்பாட்டம்:  தமிழகத்தில் இந்த படம் திரையிட அனுமதிக்க கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது[1]. ஆனால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னையில் அண்ணாநகர், அமைந்தகரை, ராயப்பேட்டை, வேளச்சேரி, வடபழனி ஆகிய இடங்களில் உள்ள வணிக வளாகங்களில் இயங்கும் திரையரங்குகளிலும், மதுரவாயலில் உள்ள ஒரு பிரபல திரையரங்கிலும் என 7 இடங்களில் இந்த படம் வெளியானது[2].  இதில், மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் மட்டும் திரையிடப்பட்டன[3].  ஏற்கனவே இந்த படத்தின் டீசருக்கு இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின[4]. இதனால், இந்த படத்துக்கு தமிழகத்தில் தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று மாநில உளவுத்துறை அரசுக்கு பரிந்துரை வழங்கி இருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடியானதால் இந்த திரைப்படம் திட்டமிட்டப்படி திரைக்கு வந்தது.

06-05-2023 – பாதுகாப்பு காரணங்களுக்காக தென் தமிழகத்தில் இந்த படம் திரையிடப்படவில்லை. இந்த திரைப்படங்கள் வெளியாகும் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உள்பட முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்றறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்த திரைப்படம் வெளியான திரையரங்குகள் முன்பு போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.  ரசிகர்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த திரைப்படத்திற்கு தடை கோரி சென்னையில் பல இடங்களில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று திரையரங்குகள் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

07-05-2023 சென்னையில் சீமான் ஆர்பாட்டம்: சென்னை அமைந்தகரையில் நடைபெறும் போராட்டத்தில் சீமான் பங்கேற்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வரும் என்ற நிலையில், அனுமதி எப்படி கொடுக்கப் பட்டது என்று தெரியவில்லை. சென்னையில் படம் தடை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் 4 திரையரங்குகள் அருகிலும், த.மு.மு.க. சார்பில் 2 திரையரங்குகள் அருகிலும், இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் ஒரு திரையரங்கு அருகேயும் என 7 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  படத்துக்கு எதிராக இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள் போராட்ட அறிவிப்பால் சில தியேட்டர்களில் இந்த திரைப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.  கோவையின் முக்கிய சாலையில் உள்ள வணிக வளாகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானபோது, இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டரை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர்[5]. அதாவது, முஸ்லிம்களும் சேர்ந்து கொண்டனர் என்பது தெரிகிறது. எனவே, இவர்களின் செக்யூலரிஸ வாதம், வேடம் முதலியவை பெரிய மோசடி என்றாகிறது. இருப்பினும் தமிழக மக்கள் பேச்சுக்களால், வசன-பேச்சுகளால் ஏமாந்து விடுகின்றனர்.

சீமான் எதிர்ப்புபோலீஸார் கைது: இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசும்போது, மதம் இருந்தால் போதும் என்று பா.ஜ.க. நினைக்கிறது[6]. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான மனநிலையை அவர்கள் உருவாக்குகிறார்கள் என குற்றச்சாட்டாக கூறினார்[7]. தொடர்ந்து அவர், ஒவ்வொரு தேர்தலின்போதும் சர்ச்சைகள் நிறைந்த படங்கள் திரையிடப்படுகின்றன[8]. கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தி கேரளா ஸ்டோரி படம் வெளிவந்து உள்ளது. 2024 மக்களவை தேர்தலுக்காக திப்பு என்ற படம் தயாராகி கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்[9]. அவரது கட்சியினர் திரையரங்கிற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்[10]. அவர்களை போலீசார் பிடித்து சென்றனர். படம் தடை செய்யப்பட வேண்டும் என கோரி, கொடி பிடித்தபடியும், கோஷம் எழுப்பியபடியும் இருந்தனர்[11]. திரையரங்கு உரிமையாளர்களிடமும் படம் வெளியிட வேண்டாம் என கேட்டு கொண்ட சீமான், மக்களையும் படம் பார்க்க செல்ல வேண்டாம் என கேட்டு கொண்டார்[12].  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படம் வெளியிடப்படாமல், அந்தந்த அரசுகள் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோளாக கேட்டு கொண்டார். சீமானை சூழ்ந்து முஸ்லிம் பெண்கள் நின்று கொண்டு தலையாட்டிக் கொண்டிருப்பதை, செய்தி-செனல்களில் பார்க்கலாம்.

தமிழக அரசு தடை: தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தமிழகம் முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பால், தமிழக திரையரங்குகளில் இன்று முதல் அந்த படம் திரையிடப்படாது என முடிவு செய்யப்பட்டு உள்ளதுலதாவது, இத்தகைய நிலைமையை எதிர்பார்த்துக் கொன்டிருந்தது போலும். சீமான் ஆர்பாட்டம் செய்தவுடன், அந்நிலைமை ஏற்பட்டவுடன், தமிழக அரசு அப்படத்தை தடை செய்ய துணிந்து விட்டது போலும். பிறகு, நீதிமன்ற தீர்ப்பு, போலீஸ் அதிகாரி அறிவுரை, பாதுகாப்பு முதலியவவை ஒரே நாளில் என்னவாகும், என்னவாயிற்று என்று தெரியவில்லை. எனினும், பயங்கரவாத சதி திட்டங்களை பற்றிய விசயங்களை வெளிக்கொண்டு வந்ததற்காக, பிரதமர் மோடி இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்த அதேவேளையில், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இந்த படத்திற்கு மாநிலத்தில் வரி விலக்கும் அளித்து உள்ளார்.

© வேதபிரகாஷ்

07-05-2023


[1] தமிழ்.ஏபிபி.லைவ், The Kerala Story: தொடர் எதிர்ப்புகள்தமிழ்நாடு முழுவதும்தி கேரளா ஸ்டோரிபடத்தின் காட்சிகள் ரத்து..!, By: ராகேஷ் தாரா | Updated at : 07 May 2023 04:20 PM (IST); Published at : 07 May 2023 04:20 PM (IST)

[2] https://tamil.abplive.com/entertainment/the-kerala-story-movie-shows-cancelled-in-tamilnadu-due-to-several-oppositions-115793

[3] சமயம்.காம், தமிழ்நாட்டில்தி கேரளா ஸ்டோரிபடம் திரையிடப்படாதுபோராட்டம் வலுத்ததால் நடவடிக்கை!, Samayam Tamil | Updated: 7 May 2023, 5:48 pm

[4] https://tamil.samayam.com/latest-news/state-news/live-updates-and-latest-headlines-news-in-tamil-today-7-may-2023/liveblog/100045367.cms

[5] லங்காஶ்ரீ.காம், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தமிழகத்திலுள்ள திரையரங்குகளில் இன்று முதல் தடை, By Sibi, Tamil nadu, May 07, 2023, 5.20 PM.

[6] https://news.lankasri.com/article/the-kerala-story-ban-tamil-nadu-theatre-from-today-1683458088

ஐபிசி.தமிழ், இன்று முதல் தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படாது ,  By Irumporai, May 7, 2023

https://ibctamilnadu.com/article/kerala-story-will-not-be-screened-from-today-1683427611

[7] தினத்தந்தி, தி கேரளா ஸ்டோரி படம்; தமிழக திரையரங்குகளில் இன்று முதல் தடை, தினத்தந்தி மே 7, 2:57 pm (Updated: மே 7, 3:42 pm).

[8] https://www.dailythanthi.com/News/State/the-kerala-story-movie-ban-in-tamil-nadu-theaters-from-today-959137

[9] தமிழ்.எக்ஸாம், தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரிதிரைப்படத்திற்கு தடைகாட்சிகளை ரத்து செய்த மல்டிப்பிளக்ஸ் திரையரங்குகள்!, By Deepika -May 7, 2023

[10] https://tamil.examsdaily.in/the-kerala-story-movie-banned-in-tamil-nadu-update-on-may-7-2023/

[11] ஐபிசி.தமிழ், இன்று முதல் தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படாது ,  By Irumporai, May 7, 2023

[12] https://ibctamilnadu.com/article/kerala-story-will-not-be-screened-from-today-1683427611

தி கேரளா ஸ்டோரி – லவ்-ஜிஹாத் பற்றிய திரைப்படம் – வெளியீடு, எதிர்ப்பு-ஆதரவு ஏன்? (1)

மே 7, 2023

தி கேரளா ஸ்டோரிலவ்-ஜிஹாத் பற்றிய திரைப்படம்வெளியீடு, எதிர்ப்புஆதரவு ஏன்? (1)

கேரளாவில் லவ் ஜிஹாத் தெரிந்த விசயம் தான்: “லவ் ஜிஹாத்” பற்றி கேரளாவில் அரசாங்கம், போலீஸ் துறை, என்.ஐ.ஏ மற்றும் உளவுத்துறை என்று எல்லோருக்கும் தெரிந்த பிரச்சினை ஆகும். கிருத்துவ பெண்களும் பாதிக்கப் பட்டதால், பாதிரியார்களும் இதை எதிர்த்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். சிலர், ஐசிஸ் கொடுமைகளிலிருந்து தப்பியும் திரும்ப வந்துள்ளனர். ஆகவே, அதை மையமாக வைத்து வெளிவரும் திரைப்படத்தை எதிர்ப்பதில் என்ன பலன் வந்து விடப் போகிறது என்று தெரியவில்லை. இப்பொழுதெல்லாம், படம் நன்றாக ஓடவேண்டும், விளம்பரம் பெற வேண்டும் என்றால் இவ்வாறு எல்லாம் செய்வது வழக்கமாக உள்ளது. ஒருவேளை, இப்படம் ஓடி பலரின் கவனத்தைக் கவர்ந்தால், யாருக்கு லாபம் என்றும் யோசிக்கத்தக்கது. ஏனெனில், இக்காலத்தில் மறைமுகமாக, எதிர்மறை விளம்பரத்தையும் பெற சிலர் முயல்கின்றனர். அல்லது, அதன் மூலம், எங்களை எதிர்த்தால் இந்த நிலை தான் ஏற்படும் என்று எச்சரிக்கும் தொணியிலும் எதிர்த்து, அமைதியாகும் போக்கையும் கவனிக்கலாம்.

டிரைலருக்குப் பிறகு அமைதியானவர்கள், மறுபதியும் எதிர்ப்பில் ஈடுபட்டது: பலகட்ட எதிர்ப்புகள், சர்ச்சைகளைத் தொடர்ந்து ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மே.05, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நடிகைகள் அதா ஷர்மா, சோனியா பாலானி, யோகிதா பிஹானி, சித்தி இத்னானி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சுதிப்தோ சென் இந்தப் படத்தை  இயக்கியுள்ளார். விரீஷ் ஸ்ரீவல்சா – பிஷாக் ஜோதி இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர். உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கேரளாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் கட்டாய இஸ்லாமிய மதத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்படுவது போன்ற காட்சிகளுடன் இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி வெளியாகி கடும் விமர்சனங்களைப் பெறத் தொடங்கியது. இந்தப் படத்தை வெளியிட தடை கோரி கடும் எதிர்ப்புகள் வெளியாகின[1]. கேரள அரசு சார்பில் இந்தப் படத்துக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது[2].

மெத்தப் படித்தவர், கடவுளின் தேசத்தில் வாழ்பவர்கள் எதிர்க்கும் படமாக மாறியது: மெத்தப் படித்த கேரளாவில் இவ்வாறு நடப்பது விசித்திரமாக உள்ளது. ஆனால் இந்தப் படத்துக்கு தடை கோரிய வழக்கை விசாரிக்க ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை நாடுமாறும் தெரிவித்திருந்தது[3]. கடந்த 10 ஆண்டுகளில் 30 ஆயிரம் பெண்கள் இதுபோல் மதமாற்றம் செய்யப்பட்டு காணாமல் போனதாக ட்ரெய்லரில் முன்னதாக குறிப்பிடப்பட்டிருந்தது[4]. ஆனால் படத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி சரமாரியாக கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், எண்ணிக்கையை 3 என மாற்றினர்[5]. இருப்பினும் உண்மை எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். மார்க்சிஸம், கம்யூனிஸம், செக்யூலரிஸம் என்றெல்லாம் பேசும் சித்தாந்திகளிடமிருந்து தான், இத்தகைய எதிர்ப்புகள் கிளம்புவதை கவனிக்கலாம். ஒருபக்கம், கேரளாவில் இஅதைப் பற்றிய வழக்குகளே நிலுவையில் இருக்கும் பொழுது, அரசு எதிர்ப்பதன் காரணம் அறியப் பட வேண்டியதாக உள்ளது. அரசு தரப்பில் அத்தகைய நிலை கேரளாவில் இல்லை என்று உறுதியாக சொல்வதற்குப் பதிலாக, படத்தை எதிர்க்கும் போக்கு எதனைக் காட்டுகிறது என்பதனையும் கவனிக்க வேண்டும்.

தமிழகத்தில் எச்சரிக்கை, திரையரங்களுக்கு பாதுகாப்பு: மேலும், தமிழ்நாட்டில் இந்தப் படத்தை வெளியிட்டால் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சமூகத்திடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பும் என தமிழக உளவுத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது[6]. தமிழகத்தில் ஏகபட்ட குற்றங்கள் சமூகத்தை பாதித்து வரும் நிலையில், இது எப்படி அந்த அளவுக்குப் பெரிய முக்கியமான பிரச்சினையாகி,  தமிழக உளவுத்துறை ஆராய்ச்சி செய்யும் அளவுக்குச் சென்றுள்ளது என்று தெரியவில்லை. போலீஸாரும் அதற்கேற்றபடி செயல்பட தயாராக இருக்க டிஜிபி ஆணையிட்டுள்ளார்[7]. இந்நிலையில், திரைத்துறையினர் தொடங்கி பலரது எதிர்ப்புகள், கண்டனங்கள் தாண்டி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது[8]. சென்னையில் எதிர்பார்த்தப் படி, பிரச்சினை எதுவும் எழவில்லை. திரையரங்களிலும் நிலைமை சாதாரணமாகவே இருந்தது.   திரையரங்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க, போலீசார் நியமிக்கப் பட்டுள்ளனர்[9]. தமிழ்நாடு டிஜிபி அனைத்து காவல்துறை ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை.அனுப்பியுள்ளார்[10]. அதில் கேரளா ஸ்டோரி படம் திரையாக உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கவும், பதற்றமான இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்[11]. மேலும்  சமூக வலைதளங்களில் சட்டம்  ஒழுங்கை பாதிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டால் அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஆகியவை ஒட்டப்பட்டால் உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டுள்ளார்[12].

திரைப் படத்தைப் பற்றிய விமர்சனங்கள்: தி கேரளா ஸ்டோரி படத்துக்கு ட்விட்டர்வாசிகள் வைக்கும் விமர்சனங்களைக் கீழே பார்க்கலாம். “மன அமைதியைக் கெடுக்கும், வெறுப்புணர்வு மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் படம் இது . நாட்டில் வன்முறையை பரப்பும் நோக்கத்துடன் ஆத்திரமூட்டும் காட்சிகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. ஜீரோ ஸ்டார் தருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். “இந்தப் படம் முழுக்க முழுக்க பொய்களும் சூழ்ச்சியும் நிறைந்தது. படத்தில் சொல்லப்பட்ட எந்த ஒரு விஷயமும் உண்மைக்கு நெருக்கமாக இல்லை. இது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் எடுக்கப்பட்ட ஒரு பிரச்சாரப் படம். ஒவ்வொரு நடிகரும் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்காக வெட்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். ”சூப்பர். இந்தப் படத்தைப் பாருங்கள் இந்தப் படம் உங்கள் வழக்கமான லாலா லேண்ட் படம் அல்ல. இது சொல்லும் உண்மை வெறுப்பு இல்லை, சிலரது மனநிலையை அம்பலப்படுத்துகிறது. படத்துக்காக இயக்குனர் அற்புதமான ஆய்வு செய்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார். முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் திரைப்படம், யதார்த்தை முகத்தில் அறைந்து சங்கடப்படுத்துகிறது. விபுல் அம்ருத்லால் ஷா & சுதிப்டோசென் இந்தப் படத்தைத் தயாரித்ததற்காக பாராட்டுக்குத் தகுதியானவர்கள். அதா ஷர்மா வாழ்நாள் நடிப்பை வழங்கியுள்ளார்[13]. ”நீங்கள் உணர்ச்சிரீதியாக முட்டாளாக இருந்தால், இந்த பிரச்சாரத் திரைப்படம் சில நாட்களுக்கு உங்கள் கவனத்தை உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும்” எனத் தெரிவித்துள்ளார்[14].

© வேதபிரகாஷ்

05-05-2023


[1] தமிழ்.இந்துஸ்தான்.டைம்ஸ், The Kerala Story Review: எப்படி இருக்குதி கேரளா ஸ்டோரிதிரைப்படம்? ட்விட்டர் விமர்சனம் இதோ!,  HT Tamil Desk, 05 May 2023, 12:07 IST.

[2] https://tamil.hindustantimes.com/entertainment/the-kerala-story-movie-twitter-review-starring-adah-sharma-yogita-bihani-sonia-balani-siddhi-idnani-131683265840879.html

[3] ஈடிவிபாரத்.காம், கேரளாவில் பல்வேறு போராட்டங்கள் மத்தியில் சிறப்புக் காட்சிகளுடன் வெளியானதி கேரளா ஸ்டோரி”!,  Published: 5 May, 2023, 7:21 pm.

[4] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/bharat/the-kerala-story-released-with-special-shows-amid-various-protests-in-kerala/tamil-nadu20230505192312275275056

[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிட்ட வணிக வளாகம் முற்றுகைபோலீஸார்எஸ்டிபிஐ கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு!!, Narendran S, First Published May 5, 2023, 8:30 PM IST; Last Updated May 5, 2023, 8:31 PM IST..

[6] https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/sdpi-members-arrested-who-tried-to-blockade-the-theater-where-the-kerala-story-was-screened-ru6xp5

[7] விகடன், தி கேரளா ஸ்டோரிதிரைப்படத்துக்கு எதிர்ப்பு ஏன்? – முழுப் பின்னணி என்ன?!,  ஆ.பழனியப்பன், Published:02 May 2023 1 PMUpdated:02 May 2023 1 PM.

[8] https://www.vikatan.com/government-and-politics/politics/why-is-the-kerala-story-movie-opposed

[9] குமுதம், தமிழ்நாடு: ‘தி கேரளா ஸ்டோரிபடம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்புடி.ஜி.பி உத்தரவு, Thiraviaraj Murugan, Kumudam Team, |   Published On : 05th May 2023.

[10] https://www.kumudam.com/news/cinema/security-for-theaters-where-the-kerala-story-is-released-dgp-orders

[11] நியூஸ்.7.தமிழ், தி கேரளா ஸ்டோரி படம்திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க தமிழ்நாடு டிஜிபி உத்தரவு,by Web EditorMay 4, 2023.

[12] https://news7tamil.live/the-kerala-story-movie-tamil-nadu-dgp-orders-security-for-theatres.html

[13] தமிழ்.ஏபிபி.லைவ்,   The Kerala Story Twitter Review: வெறுப்பு பிரச்சாரமா? உண்மை சம்பவமா? தி கேரளா ஸ்டோரி படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ! ,  By: பீட்டர் பார்க்கர் | Updated at : 05 May 2023 01:17 PM (IST)  , Published at : 05 May 2023 01:08 PM (IST)

[14] https://tamil.abplive.com/entertainment/movie-review/the-kerala-story-twitter-review-adah-sharma-siddhi-idnani-yogitha-bihani-sudipto-sen-115403

பங்களாதேசத்தவர் / வங்கதேசத்தவர் தொடர்ந்து தமிழகத்திற்குள் லட்சக்கணக்கில் வருவது, வேலை செய்வது, தங்கி விடுவது எப்படி? (1)

ஏப்ரல் 8, 2023

பங்களாதேசத்தவர் / வங்கதேசத்தவர் தொடர்ந்து தமிழகத்திற்குள் லட்சக்கணக்கில் வருவது வேலை செய்வது, தங்கி விடுவது எப்படி? (1)

பங்களாதேசத்தவர் / வங்கதேசத்தவர் தொடர்ந்து தமிழகத்திற்கு லட்சக்கணக்கில் வருவது; தமிழகத்தில் கட்டிடத் தொழில் பெருகப் பெருக “வட மாநிலத்தவர்” என்ற போர்வையில் லட்சக்கணக்கில் வேலையாட்கள் வந்து குவிகின்றனர். சென்னையைச் சுற்றி ஆயிரக்கணக்கில் அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டுவது, கோடிக்கணக்கில் வியாபாரம் செய்வது என்பது பலநிலைகளில் நடந்து வருகிறது. அதில் அரசியல் அதிகமாகவே செயல் பட்டு வருகின்றது. இருப்பினும், தொடர்ந்து, “வட மாநிலத்தவர்” போர்வையில் பங்களாதேசத்தவர் / வங்கதேசத்தவர் தொடர்ந்து தமிழகத்திற்கு லட்சக்கணக்கில் வருவது வேலை செய்வது, தங்கி விடுவது, நிச்சயமாக எல்லாவிதங்களிலும் பிரச்சினை, சட்டமீறல் மற்றும் பெருங்குற்றமாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் இவர்கள் முஸ்லிம்கள் என்பதாலேயே அடக்கி வாசிக்கிறார்கள். ஊடகங்களும் அதனை அமுக்கி விடுகின்றனர் எனலாம். பாலியல் பிரச்சினையில் காட்டும் அளவு கடந்த பாரபட்சம் இதில், இன்னும் பலமடங்குக் காட்டப் படுகிறது. ஆனால், எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், குற்றங்கள் அதிகரித்து, கைதாவது அதிகமாகி, அரசாங்க ரீதியில் பதிவாகி வருகின்ற நிலையில் உண்மைகளை மறைக்க முடியாத நிலைக்கும் வந்தாகி விட்டது. ஒரு நிலையில் அவர்கள் இல்லை என்றால் வேலைகளே ஸ்தபித்து விடும் என்ற நிதர்சனத்தையும் முதலாளிகள் உணர்ந்து, அந்த உண்மையினை வெளிப்படையாகச் சொல்லவும் செய்து விட்டனர்.

தமிழகத்தவர் ஏன் வேலை செய்வதில்லை?: இருப்பினும், தமிழகத்தில் உள்ளோர் அந்த வேலைகளை ஏன் செய்வதில்லை, செய்ய விரும்பவில்லையா, அத்தகைய மனப்பாங்கு ஏன் உள்ளது போன்ற கேள்விகளும் எழுகின்றன. குறைந்து கூலிக்கு நிறைய வேலை செய்கின்றனர் என்பதை விட அவர்கள் அவ்வாறு செய்யும் பொழுது, இங்குள்ளவர் ஏன் செய்ய முடியாது என்பது தான் முக்கியமான கேள்வியாகிறது. பள்ளி-கல்லூரிகளில் ஒழுங்காக படிக்காமல் இருப்பது, சினிமா-பொழுது போக்கு போன்றவற்றில் அதிகமாக ஈடுபடுவது, பொழுது போக்குவது, பெற்றோர், பெரியவர், ஆசிரியர்கள் முதலியவர்களை மதிக்காமல் இருப்பது போன்றவை தான் தினம்-தினம் நிகழ்ச்சிகளாகி, அவை ஊடகங்களிலும் தாராளமாகவே, விவரமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. பிறகு, இளைஞர்கள் அவற்றிற்கு வ்ருத்தப் பட வேண்டாமோ, தங்களை மாற்றிக் கொள்ள உடனடியாக திருந்தும் வழிகளை நாட வேண்டாமோ? ஆனால், அத்தகைய குற்றங்கள் அதிகமாகி வருகின்றன. போதை மருந்து, குடி, செக்ஸ், சினிமா, பொழுதுபோக்கு என்றவற்றில் தான் அவர்கள் உழன்று, தங்களை சீரழித்து, மற்றவர்களை கெடுத்து வருகின்றனர்.

டிசம்பர் 2006ல் எண்ணூரில் வங்கதேசத்தவர் கைது: சென்னை அருகே உள்ள எண்ணூர் படகில் வந்தவர் மீது சந்தேகம் எழ, அவர்களை நிறுத்தினர். அந்தப் படகுகளை வளைத்துப் பிடித்த பாதுகாப்புப் படையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்[1]. அப்போது அவர்கள் அனைவரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது[2]. இவர்கள் பிடிபட்டது குறித்து போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாரும், மத்தியபுலனாய்வுப் படையினரும் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 16 பேரும் மாலத் தீவுக்குச் சென்றதாகவும், அங்கு கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு படகுகள் திசைமாறி இங்கு வந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இருப்பினும் இவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாமோ என்றசந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது. இதையடுத்து 16 பேரிடமும் போலீஸாரும், மத்திய புலனாய்வுப் படையினரும் துருவித் துருவி விசாரணைநடத்தி வருகின்றனர். இவர்களிடம் இருந்த பாஸ்போர்ட்டுகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

பிப்ரவரி 2020ல் 40 வங்கதேசத்தவர் திருப்பி வைக்கப் பட்டனர்: முறையான ஆவணங்கள் இன்றி தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்ததாக வங்கதேசத்தைச் சேர்ந்த சுமார் 40 பேர் அவர்களது நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்[3]. இதுதவிர போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயன்ற 2 வங்க தேசத்தினர் பிடிபட்டுள்ளனர்[4]. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி, வேலை, மருத்துவம் உட்பட பல்வேறு தேவைகளுக்காக தமிழகம் வருகின்றனர். சிலர் இங்கேயே தங்கி விடுகின்றனர். இதேபோல் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களில் சிலரும் முறையான ஆவணங்கள் இன்றி தமிழகத்தில் சட்ட விரோதமாக தங்கிவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இங்கோ பங்களாதேசத்தவர் பலமுறைகளைக் கையாள்கின்றனர் என்று தெரிகிறது. பொதுவாக, பங்களாதேசத்திலிருந்து, மேற்கு வங்காளத்தில் நுழைவது, அங்கிருந்து, அஸ்ஸாம் மூலம் பல மாநிலங்களுக்குப் பரவி செல்வது போன்ற திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். இதற்கு ஏஜென்டுகளும் இருக்கிறார்கள்.

வங்கதேசத்தவர் தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கி பணி செய்ததுதொடர் விசாரணை: இதுகுறித்து மத்திய உளவு பிரிவு, தமிழக கியூ பிரிவு உள்ளிட்ட புலனாய்வு பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், வங்க தேசத்தைச் சேர்ந்த சுமார் 40 பேர் தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கி பணி செய்து வந்தது தெரியவந்ததாகவும் அவர்கள் அடையாளம் காணப்பட்டு மீண்டும் அவர்களது நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் மேலும் கூறும்போது, கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் வங்கதேசத்தில் இருந்துகொல்கத்தாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்தவர்கள் அங்குள்ளவர்கள் போல போலி ஆவணம் தயார் செய்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்குள் நுழைந்ததாகவும் அவர்களை சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பும் பணி நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் போலி பாஸ்போர்ட்டுடன் இருவர் பிடிபடுதல்: இதற்கிடையே சென்னை விமான நிலையத்தில் இருந்து கொழும்புவுக்கு நேற்று முன்தினம் விமானம் ஒன்று புறப்பட்டது. முன்னதாக அதில் செல்ல வந்த பயணிகளை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப் போது புத்தமத துறவிகள் உடை யில் இந்திய பாஸ்போர்ட்டில் டூடுல், மின்டொ ஆகிய 2 பேர் இலங்கை செல்வதற்காக வந்திருந்தனர். அவர்களிடம் இருந்த பாஸ்போர்ட்டை சோதனை செய்தபோது அவை போலி எனத் தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து அவர்களின் விமான பயணத்தை ரத்துசெய்த அதிகாரிகள், மேல் விசாரணைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

செயல்படும் விதம், திட்டம் மற்றும் முடிவுகள்: பங்களாதேசத்திலிருந்து “வொர்க் மர்மிட்” வாங்கிக் கொண்டு மேற்கு வங்காளத்திற்குள் வேலைக்கு வருகின்றனர்.

காலை வேலைக்கு வந்து மாலையில் திரும்பி சென்று விடவேண்டும்.

ஆனால், தினம்-தினம் ஆயிரம் பேர் வந்தால் 100-200 பேர் தங்கி விடுகின்றனர், மறைந்து விடுகின்றனர்>…..

மேற்கு வங்காளத்திற்குள் தங்கியவர்கள் முதலில் ஆதார், ரேஷன், பேன் என்று கார்டுகளை வாங்கி, ஓட்டர் ஐடியையும் வாங்கி விடுகின்றனர்

மேற்கு வங்காளத்திலிருந்து பிறகு மற்ற மாநிலங்களுக்குச் செல்கின்றனர்.

இவர்களிடம் இரண்டு நாடுகள் அடையாள அட்டைகளும் இருக்கின்றன. இதனால், சகஜமாக செயல்பட்டு வருகிறனர்.

இவர்களில் உண்மையில் பிழைப்பிற்கு வேலை செய்பவர் யார், கடத்தல்கார்ர்கள் யார், தீவிரவாதிகள் யார் என்றெல்லாம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சென்று / செயல்பட்டு வருகின்றனர்.

© வேதபிரகாஷ்

08-04-2023


[1] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னையில் ஊடுறுவல்: 16 வங்கதேசத்தவர் கைது, By Staff Published: Saturday, December 16, 2006, 5:30 [IST]

[2] https://tamil.oneindia.com/news/2006/12/10/arrest.html?story=2

[3] தமிழ்.இந்து, சட்டவிரோதமாக தமிழகத்தில் தங்கியதாக 40 வங்கதேசத்தவரை திருப்பி அனுப்பிய போலீஸார்: போலி பாஸ்போர்ட்டுடன் சென்னையில் 2 பேர் சிக்கினர், செய்திப்பிரிவு, Last Updated : 12 Feb, 2020 10:10 AM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/539183-police.html

கோவையில் திடீரென்று  ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு கொண்ட 100 இளைஞர்களை கண்டு பிடித்து விட முடியுமா? தொடர்ந்து ஏன் கண்காணிக்கப் படவில்லை? (2)

நவம்பர் 7, 2022

கோவையில் திடீரென்று  ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு கொண்ட 100 இளைஞர்களை கண்டு பிடித்து விட முடியுமா? தொடர்ந்து ஏன் கண்காணிக்கப் படவில்லை? (2)

ஐஎஸ் ஆதரவு இளைஞர்களுக்கு உளவியல் ஆலோசனை: இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மாநகரில் கார் வெடிப்பு தினத்தில் இருந்து தீவிர பாதுகாப்பு மற்றும் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். உக்கடம் சங்கமேஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் தற்போது வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உயர் அதிகாரிகளின் உத்தரவு படி, உளவுத்துறை போலீசார் தீவிரமாக பலரை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், கோவை மாநகரில் .எஸ். அமைப்பின் மீது ஈடுபாடு கொண்ட 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர்[1]. அவர்களது பட்டியலை தயார் செய்து வைத்துள்ளோம்[2]. அவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க முயற்சி செய்து வருகிறோம். மேலும் மருத்துவ குழு சார்பில், அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கவும் திட்டமிட்டு வருகிறோம். அவர்களை நல்வழிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்………[3] மேலும் உலாமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் அவர்களுக்கு தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது, .எஸ். இயக்கத்தின் மோசனமான செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூறி, நல்ல கருத்துகளை போதித்து அவர்களை நல்ல குடிமகனாக மாற்றும் திட்டம் செயல்படுத்த உள்ளோம். இதற்காக அனுபவம் வாய்ந்த உளவியல் நிபுணர்களை தயாராக உள்ளோம்[4]…………..…………..…,’’ என்றார்.

தீவிரவாதம் வளர்ந்து இந்நிலை அடைந்தது எப்படி?: கீழ்கண்ட நிகழ்வுகளிலிருந்து, அத்தகைய நிலை, நிச்சயமாக ஒரே நாளில் உருவாகி விட முடியாது:

  1. போலீஸார் கோவை மாநகரில் ஐ.எஸ். அமைப்பின் மீது ஈடுபாடு கொண்ட 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர்.
  2. அவர்களது பட்டியலை தயார் செய்து வைத்துள்ளனர்.
  3. அவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க முயற்சி செய்து வருகின்றனர்.
  4. மேலும் மருத்துவ குழு சார்பில், அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கவும் திட்டமிட்டு வருகிறது.
  5. அவர்களை நல்வழிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்………
  6. மேலும் உலாமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் அவர்களுக்கு தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது, ஐ.எஸ். இயக்கத்தின் மோசனமான செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூறி, நல்ல கருத்துகளை போதித்து அவர்களை நல்ல குடிமகனாக மாற்றும் திட்டம் ……….செயல்படுத்த முடிவு.
  7. இதற்காக அனுபவம் வாய்ந்த உளவியல் நிபுணர்களை தயாராக்க உள்ளோம்…..

அதனால், பல நாட்களாக, ஆண்டுகளாக நடந்து வரும் நிகழ்வுகளை எப்படி, ஏன், எவ்வாறு கவனிக்கப் படாமல் இருக்கிறது, என்பதும் நோக்கத்தக்கது.

உளவியல் ஆலோசனை எப்படி, யாரால், எவ்வாறு எங்கே நடக்கும்?: இதுவரை வெளிவந்துள்ள செய்திகளை கூர்மையாகப் படித்து, திரட்டி, அதில் உள்ள அம்சங்களை கீழ் கண்டவாறு கொடுக்கப் படுகிறது:

  1. கவுன்சலிங் கொடுக்க முயற்சி செய்தல்
  2. உலாமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் அவர்களுக்கு தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது
  3. ஐ.எஸ். இயக்கத்தின் மோசனமான செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூறி,
  4.  நல்ல கருத்துகளை போதித்து அவர்களை நல்ல குடிமகனாக மாற்றும் பிரத்யேகமான திட்டம்
  5. அத்திட்டத்தை செயல்படுத்துதல்

பொதுவாக தமிழக ஊடகங்கள், பிரச்சினைகளை அலசுவதில்லை, பல்லாண்டுகளாக இத்தகைய தீவிரமான சிக்கல்கள் மற்றும் தொடரும் கேள்விக்குரிய விஷயங்கள் இருந்தாலும், ஏதோ காரணங்களுக்காக செய்திகளாக வெளியிட்டு அமைதியாகி விடுகின்றனர்.

06-11-2022 அன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை அவரது அலுவலகத்தில் ஜவஹிருல்லா சந்தித்தார். பின்னர், அவர் கூறியபோது[5], “கடந்த, 1998ல் நடந்த குண்டு வெடிப்பால், கோவை மக்கள் பாதிக்கப்பட்டு, மீண்டும் சகஜநிலை திரும்ப பல ஆண்டுகளானது. கார் வெடிப்பு போல், வேறு சம்பவங்கள் நடக்க கூடாது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஒற்றை நபரை இயக்கியது யார், இவ்வளவு பெரிய சம்பவத்தை நடத்துவதன் பின்னணி என்ன, என்பது குறித்து உண்மை வெளிக்கொண்டு வரவேண்டும். .எஸ்..எஸ்., அமைப்பே இஸ்லாமிய சமூகத்தை சீர்குலைக்க கூடிய நோக்கில் செயல்படக்கூடியது[6]. அதன் ஆதரவாளர்களாக இருப்பவர்கள், அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் செயல்படுகின்றனர்[7]. இதுபோன்ற மன நிலையில் உள்ளவர்களுக்கு உளவியல் ரீதியான கவுன்சிலிங் கொடுக்க போலீஸ் தயாராக உள்ளது[8]. போலீசார் சிறப்பாக செயல்படுகின்றனர்[9]. கார் வெடிப்பு சம்பவத்தை என்..., எப்படி விசாரிக்கப் போகிறது என்பது கேள்விக்குறிதான். தமிழக போலீசாரே விசாரிக்க வேண்டும்,” இவ்வாறு அவர் கூறினார்[10].

பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் அழிப்புவாதம் என்றால் என்ன?: பயங்கரவாதம் எனும்பொழுதே சில மனிதர்கள் குறிப்பிட்ட அடிப்படைவாத சித்தாந்தம், கொள்கைகள் மற்றும் ஏற்றுக்கொள்ளப் பட்ட திட்டம், ஆணை மற்றும் உந்துதல், அவற்றின் மூலம் குறிப்பிட்ட மனிதர்கள், மனித குழுமங்கள் மற்றும் நாடுகளைத் தாக்குதல், குண்டுவெடிப்புகள் நடத்துதல், பீதியை உண்டாக்குதல் என்றாகிறது. இவையெல்லாம் ஒரே நாளில் வந்து விடாது. சிறு வயதிலிருந்தே சில அறிவுரைகள், போதனைகள், சித்தாந்தங்கள் முதலியவை படிப்படியாக கற்பிக்கப் படவேண்டும். உலகிலுள்ள மக்களை “ஏற்றுக் கொள்ளப் பட்டவர்கள்” மற்றும் “ஏற்றுக் கொள்ளப் படாதவர்கள்” என்று பிரித்து, அவ்வாறே அந்த பேதம், வித்தியாசம் மற்றும் வேறுபாடுகளை அறிய-புரிய வைத்து வெருப்பை மனங்களில் வளர்ப்பது முதல் பணியாக அமைகிறது. பிறகு, “நாம் உயர்ந்தவர்கள்” ஆனால், அவர்கள் “தாழ்ந்தவர்கள்” எனவே, அவர்கள், “நம்முடன் வாழத் தகுதியற்றவர்கள்” என்று பிரித்து அடையாளம் காண வைப்பது. இல்லை, தங்களை குறிப்பிட்ட சின்னங்களுடன் இணைத்து, பிரித்து அடையாளம் காண வைப்பது என்பதிலும் முடியலாம்.

வேதபிரகாஷ்

07-11-2022


[1] தினகரன், கோவை மாநகரில் .எஸ். தீவிரவாத ஈடுபாடு வாலிபர்கள் கண்டுபிடிப்பு: உளவியல் ஆலோசனை வழங்க திட்டம், 2022-11-05@ 14:48:42.

[2] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=811771

[3] தினத்தந்தி, .எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட 100 பேர் கண்டுபிடிப்பு, நவம்பர் 6, 12:15 am (Updated: நவம்பர் 6, 12:15 am).

[4] https://www.dailythanthi.com/News/State/is-discover-100-people-inspired-by-movement-830407

[5] தினமலர், ஒற்றை நபரை இயக்கியது யார்: கோவையில் ஜவஹிருல்லா கேள்வி, Updated : நவ 07, 2022  07:06 |  Added : நவ 07, 2022  07:04

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=3164210

[7] மின்னம்பலம், இஸ்லாமிய சமூகத்தை சீர்குலைக்கும் .எஸ்..எஸ்: ஜவாஹிருல்லா, நவம்பர் 6, 2022. 21:41 PM IST.

[8] https://minnambalam.com/political-news/isis-will-disrupt-the-islamic-community-jawahirullah/

[9] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், இஸ்லாமிய சமூகத்தை சீர்குலைக்கும் ஐஎஸ்ஐஎஸ்..! ஜமீஷா முபீனை இயக்கியது யார்..? ஜவாஹிருல்லா கேள்வி  , Ajmal Khan, First Published Nov 7, 2022, 8:36 AM IST; Last Updated Nov 7, 2022, 8:36 AM IST

[10] https://tamil.asianetnews.com/politics/jawahirullah-urged-to-find-out-who-is-behind-the-coimbatore-car-blast-rkyjbb

ஜமேஷாமுபின் – ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது– தெரிய வரும் பின்னணி (3)

நவம்பர் 5, 2022

ஜமேஷா முபின்ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது – தெரிய வரும் பின்னணி (3)

சமய இலக்கியங்கள் அனைத்தும் தமிழில் உள்ளன: விசாரணையின் போது மீட்கப்பட்ட ஆதாரங்களைப் பற்றி அறிந்த ஒரு உயர்மட்ட அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், கோவை, உக்கடத்தில் உள்ள ஜமேஷா முபீனின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் வாசகங்கள் உள்ளிட்ட குறிப்பேடுகளில் ஒரு பகுதி டைரிகள் எனக் கூறினர்[1]. “ஜமேஷா முபீனின் நாட்குறிப்பு பதிவுகள் பெரும்பாலும் மற்ற மதங்கள், குறிப்பாக இந்து மதம் மற்றும் கிறித்துவம் பற்றிய அவரது பார்வையை வெளிப்படுத்துகின்றன. அவர் அந்த மதங்களின் கடவுள்களின் பெயர்களை மேற்கோள் காட்டியுள்ளார். மேலும், ஒருவரையொருவர் இணைக்கும் அம்புகளுடன் கையால் எழுதப்பட்ட சார்ட் விளக்கப்படத்தில் அவற்றை சித்தரித்துள்ளார். சி.. ஹிஜாப் சர்ச்சை, உணவு மீதான கட்டுப்பாடுகள், மாட்டிறைச்சி காரணமாக நடந்த கொலைகள் போன்ற சம்பவங்கள் இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் இரண்டாம் தர குடிமக்களாக மாறி வருகின்றனர். இந்தச் பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது என்றும் அவர் திகைத்தார்,” என்று வட்டாரங்கள் தெரிவித்தன[2]. மேலும் சமய இலக்கியங்கள் அனைத்தும் தமிழில் உள்ளன என்று தெரிவித்தனர்.

அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம்: மனிதர்களை காபிர், மோமின் எனப் பிரித்து, ஜிஹாதி [புனித போரில்] புரிந்து காபிர்கள் கொல்லப் பட வேண்டும் என்று எழுதியிருப்பது,இப்படி குண்டுவெடிப்புகள்  நடத்திக் கொண்டிருந்தால், மனித இனம் என்னாவது என்று யோசிக்காமல், மதவெறியுடன் இருந்தது, முதலியவற்றை கவனிக்கும் பொழுது, எங்கிருந்து  மனித நேயம்,  மனிதத்துவம், அமைதி எல்லாம் வரும் என்பது ஆராய வேண்டியுள்ளது. இந்நிலையில், கோவையில் கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள் சந்தித்து உரையாடினர்[3]. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்[4]. பிறகு, எப்படி, முஸ்லிம் இளைஞர்கள் அவ்வாறு சேர்ந்து திட்டமிடுவார்கள், என்றெல்லாம் தெரியவில்லை. பெற்றோர், உறவினர், மற்றோர் முதலியோர்களுக்குத் தெரியாமல் தான், ஒவ்வொரு தடவையும் இவ்வாறு நடைபெறுகிறது. அதேபோல சொல்லப் படுகிறது. ஆனால், மறுபடியும் ஏதோ ஒன்று வெடிக்கத்தான் செய்கிறது.  தவிர இந்த செய்தி வந்த பிறகு தான், பென்டிரைவ், அதில் எஐஎஸ் வீடியோக்கள் போன்ற செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. தமிழ்.இந்துவில் இன்று தான் (04-11-2022) அச்செய்தியே வருகின்றது

ஜமாத்துகளின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்: கோவை உக்கடம் பகுதியில் சம்பவ நிகழ்விடத்தின் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு ஜமாத் நிர்வாகிகள் இன்று சென்று பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது: “3 ஜமாத்களின் சார்பாக கோட்டை சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை சந்தித்து உரையாடினோம். கடந்த வாரம் இந்த பகுதியில் நடந்த சம்பவம் பல்வேறு சமூகங்களுக்கு இடையே ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இஸ்லாமியர்களான நாங்கள் 7 தலைமுறைகளாக இந்த கோட்டைமேட்டில் வாழ்ந்து வருகிறோம். இந்தப் பகுதியில் நாங்கள் ஒற்றுமையுடன், அண்ணன் தம்பிகளாக கடந்த 200 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். இந்த சூழலில் இங்கு நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை கோட்டைமேட்டில் உள்ள ஜமாத்துகளின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இஸ்லாம் ஒருபோதும் வன்முறையைத் தூண்டும் மார்க்கம் அல்ல. நாங்கள் அமைதியை போதிக்கிறோம். அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம். எந்தவிதமான மத பூசல்களுக்கும், அரசியலுக்கும் நாங்கள் ஆட்பட்டு விடக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

100-க்கும் மேற்பட்ட வீடியோக்கள்: முன்னதாக, கோவை மாநகர தனிப்படை போலீசார் கைதான 6 பேர் வீட்டில் சோதனை நடத்தினர்.  கிடைத்த பொருட்களில், ஒரு பென் டிரைவ் இருந்தது. சோதனை செய்த போது அதிர்ச்சி அடைந்தனர், ஏனெனில், அந்த பென் டிரைவ்வில் 100-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். அமைப்பின் சித்தாந்தங்கள் அடங்கிய வீடியோக்கள் இருந்துள்ளது. இதில், 6 பேரில் ஒருவரது வீட்டில் பென் டிரைவ் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது[5]. அதனை போலீசார் ஆய்வு செய்த போது அதிர்ச்சி ஏற்பட்டது. அதில், ஐஎஸ் தீவிரவாதத்துக்கு ஆதரவான ஏராளமான வீடியோக்கள் இருந்தன[6]. தீவிரவாதிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது போன்ற வீடியோக்கள் மற்றும் கழுத்தை அறுத்து கொலை செய்வது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோக்கள் இருந்தன[7]. இதுதவிர இலங்கை குண்டு வெடிப்பை நிகழ்த்திய நபரின் பேச்சு அடங்கிய வீடியோவும் இருந்துள்ளது[8]. இதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வளவு தெளிவாக இருந்தாலும், இப்பிரச்சினை ஏதோ மழைகாலத்தில் இதுவும் ஒரு செய்தி என்பது போல கருதுவது போலத் தோன்றுகிறது.

கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வாயிலாக, கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க முக்கிய தகவல்கள் கிடைத்தன: ‘கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வாயிலாக, கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க முக்கிய தகவல்கள் கிடைத்தன’ என, போலீசார் தெரிவித்தனர்.கோவையில், அக்., 23ல் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் நடந்த கார் குண்டு வெடிப்பில், பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார். இந்த குண்டு வெடிப்பை விசாரித்த போலீசார் சந்தித்த சிரமங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தன்று அதிகாலை, 4:00 மணிக்கு வந்த கார், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் ஒன்றரை நிமிடம் நிற்பதை கண்காணிப்பு கேமரா காட்சிகளில் காண முடிந்தது. அதன் பிறகே கார் வெடித்துள்ளது. கார் காத்திருந்த ஒன்றரை நிமிடத்தில், ஜமேஷா முபின் தான் கொண்டு வந்திருந்த வெடிபொருட்களை வெடிக்கச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். கார் வெடித்தவுடன், அந்த அதிர்ச்சியில், பூட்டப்பட்டிருந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் கதவு தானாக திறந்தது.

கண்காணிப்பு கேமரா காட்சிகளை கேட்டுச் சென்றபோது, பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகி கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்தது: கோவிலுக்குள் வசிக்கும் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், போலீசார் ஓடி வந்துள்ளனர்.குண்டு வெடிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியில், கோவில் கண்காணிப்பு கேமராவில் அடுத்த இரண்டரை நிமிடங்களுக்கு காட்சிகள் எதுவும் இல்லை. அதன் பிறகே காட்சி பதிவாகியுள்ளது.’கோவிலில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகள் தான் வழக்கில் துப்பு துலக்க பேருதவியாக இருந்தன’ என்கின்றனர் போலீசார்.’சம்பவத்தை சற்று தொலைவில் இருந்து பார்த்த போலீஸ் அதிகாரி, கோவில் அருகே இருக்கும் டிரான்ஸ்பார்மர் வெடித்து விட்டதாக கருதி, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தபடி ஓடி வந்துள்ளார். ‘அருகே வந்த பின் தான், கார் வெடித்தது அவருக்கும் தெரியவந்தது’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த கோவிலுக்கும், ஜமேஷா முபின் வசித்த வீட்டுக்கும் வெகு துாரம் இல்லை. அதிகபட்சம், 300 மீட்டர் தான் இருக்கும். ஆனால், இறந்தவர் யார் என்றும், கார் யாருடையது என்றும், அப்பகுதி பொதுமக்கள் யாரும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை.எந்த ஒரு தகவலும் தெரியாமல், கோட்டைமேடில் போலீசார் வீதி வீதியாக அலைந்தும் விபரம் கிடைக்காமல் தடுமாறினர். கார் வந்த வழித்தடம் கண்டறிவதற்காக, கண்காணிப்பு கேமரா காட்சிகளை கேட்டுச் சென்றபோது, பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகி கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததும் நடந்துள்ளது[9]. தற்போது வழக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் இது பற்றி விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்[10].

வேதபிரகாஷ்

05-11-2022


[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் பலியான ஜமேஷா முபீன்; இலக்கை நோக்கி பயணித்த சுயமான தீவிரவாதி! , Written by WebDesk, Updated: October 30, 2022 3:34:14 pm

[2] https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-blast-jamesha-mubeen-killed-he-was-self-radicalised-on-way-to-target-533273/

[3] தமிழ்.இந்து, அனைவருடனும் நல்லிணக்கத்தோடு வாழ விரும்புகிறோம்: கோவையில் ஜமாத் நிர்வாகிகள் பேட்டி, செய்திப்பிரிவு, Last Updated : 03 Nov, 2022 02:51 PM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/891704-we-want-to-live-in-harmony-coimbatore-jamaath-officials.html

[5] தினகரன், கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டம்? பென்டிரைவில் சிக்கிய வீடியோ ஆதாரம்; பரபரப்பு தகவல்கள், 2022-11-05@ 00:31:23

[6] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=811657

[7] தினத்தந்தி, .எஸ். வீடியோக்கள் அடங்கியபென் டிரைவ்பறிமுதல், நவம்பர் 5, 12:15 am (Updated: நவம்பர் 5, 12:15 am)

[8] https://www.dailythanthi.com/News/State/is-pen-drive-containing-videos-seized-829642

[9] தினமலர், கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க உதவியது கோவில் கேமரா,  Updated : நவ 05, 2022  01:32 |  Added : நவ 05, 2022  01:30

[10] https://www.dinamalar.com/news_detail.asp?id=3162429

ஜமேஷாமுபின் – ஜிஹாதியானது, ஒத்திகைப் பார்த்தது, தற்கொலை வெடிகுண்டாக மாறியது (1)

நவம்பர் 5, 2022

ஜமேஷா முபின்ஜிஹாதியானது, ஒத்திகைப் பார்த்தது, தற்கொலை வெடிகுண்டாக மாறியது (1)

கோவை ஆர் காஸ் சிலிண்டர் வெடிகுண்டு சோதனை: என்.ஐ.ஏ மற்றும் தமிழக போலீஸார் கோவை குண்டு வெடிப்பு பற்றி ஆய்ந்து வருகின்றனர், விசாரணை நடத்துகின்றனர் மற்றும் வீடுகளில் சோதனைகள் நடக்கின்றன. கைதானவர்களிடமிருந்து வாக்குமூலங்களும் பெறப் படுகின்றன. செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆங்கில ஊடகங்களில் அதிகமாக வரும் பொழுது, தமிழக ஊடகங்கள் அமுக்கி வாசிக்கின்றன. ஜமேஷா முபின் ஏதோ சுயமாக இந்த தீவிரவாதச் செயலில் ஈடுபட்டான் என்றும் தலைப்பிட்டு செய்திகள் வருகின்றன. திராவிடத்துவ வாதிகள், தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போய்விட்டது, என்று பெருமூச்சு விட்டு அமைதியாகின்றனர்.  ஆனால், அரசியல் செய்பவர்கள், செய்து கொண்டு தான் இருக்கின்றனர். திமுகவினர், “தேசத் துரோகி” என்றெல்லாம் ராணுவ அதிகாரியை டிவி செனலில், கோடிக்கணக்கில் பொது மக்கள் கவனிக்கும் நிலையில் பலமுறை விளிப்பதும் திகைப்பாக இருக்கிறது. அந்த செனல் நிகழ்ச்சி அமைப்பாளர், அத்தகைய பேச்சுகளை “மூட்” கூட செய்யாமல் இருந்ததை கவனிக்க முடிந்தது.

ஜமேஷா முபின் வீட்டில் கைப்பற்றப்பட்ட 109 பொருட்கள்[1]: ஜமேசா முபினின் வீட்டில் நடந்த சோதனையில் 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ஜிகாத் மற்றும் இஸ்லாமிய சித்தாங்கம் தொடர்பான புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி பலவிதமான செய்திகள் கடந்த ஒரு வாரமாக நாளிதழ்கள் வெளியிட்டு வருகின்றன. ஆனால், எந்த  எய்தி தாளோ, ஊடகமோ ஐந்தாறு-ஏழெட்டு பொருட்களைத் தவிர, மற்றதை சொல்ல காணோம். ஆகவே, தமிழ், ஆங்கிலம் மற்றும் இதர ஊடகங்களில் உள்ள எல்லாவற்றையும் தொகுத்து ஒரு லிஸ்ட் தயாரிக்கப் படுகிறது. – அதில்

  1. பொட்டாசியம் நைட்ரேட் [Potassium Nitrate],
  2. நைட்ரோ கிளசரின் [Nitro Glycerin],
  3. சிவப்பு பாஸ்பரஸ் [Red Phosphrous],
  4. அலுமினியம் பவுடர் [Aluminium powder],
  5. பிஇடிஎன் பவுடர் (பென்டா எரித்திரிடால் டிரை நைட்ரேட், Penta Erythrital tri-nitrate), 
  6. சல்பர் பவுடர் [Suplphur powder],
  7. ஆணிகள் [Balrus, nails],
  8. கருப்பு பவுடர் [Black powder],
  9. 2 மீட்டர் நீளமுள்ள திரி [Gelatin wires],
  10. இண்டன் கியாஸ் [Indane gas cylinder]
  11. பொட்டாசியம் நைட்ரேட் சிலிண்டர் [Potassium Nitrate cylinder],
  12. ஆக்சிஜன் சிலிண்டர் [Oxygen cylinder]
  13. கையுறை [hand glouses],
  14. ஓஎக்ஸ்ஒய் 99 [YXY99],
  15. அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பிளேடு [Surgical blades],
  16. கண்ணாடிகள் [Glass pieces],
  17. 9 வாட்ஸ் பேக்டரி [9 watts battery],
  18. 9 வாட்ஸ் பேட்டரி கிளிப் [9 watts Battery clips],
  19. வயர் [wires],
  20. சுவிட்ச் [switches],
  21. சிலிண்டர் [cylinders],
  22. ரெகுலெட்டர் [regulators],
  23. டேப் [tapes]
  24. இஸ்லாமிய மதம் கொள்கைகள் தொடர்புடைய புத்தகங்கள் [Islamic literature including Jihadi category],–

உள்ளிட்ட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரமாக இச்செய்திகள் வந்துகொண்டிருந்தாலும், முழு விவரங்கள் வெளியிடாமல் இருப்பதும் திகைப்பாக இருக்கிறது.

ஜமேஷ் முபீனின் குடும்பம், பின்னணி: கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்த முபின் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். படித்து முடித்ததும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அப்போது வீட்டில் அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்த போது, ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணையே நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார். அதன்படி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோவை அல் அமீன் காலனியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணான நஸ்ரத்தை (23) முபின் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கோட்டைமேடு பகுதியில் மனைவியுடன் வசித்து வந்த அவர் அங்குள்ள புத்தக கடையில் வேலைக்கு சேர்ந்தார். இவருக்கு 2 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு முபின் தனது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாரிடமும் பேசுவதில்லை. இந்த நிலையில் திடீரென தான் வேலை பார்த்து வந்த புத்தக கடை வேலையை முபின் விட்டு விட்டார். இதுகுறித்து நஸ்ரத் கணவரிடம் கேட்டதற்கு, தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகவும் தன்னால் வேலை பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்து வீட்டில் இருந்தார்.

கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வீடு பார்த்து குடி பெயர்ந்தது: கோட்டைமேடு பகுதியிலிருந்து, திடீரென்று கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் வீடு பார்த்து இடம் பெயர்ந்தார். வேலைக்கு செல்லாமல் இருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக முபின் வீட்டில் இருக்காமல் வெளியில் சென்றதால் ஏதாவது வேலை பார்க்கிறீர்களா என விசாரித்துள்ளார். அப்போது தான் தேன் மற்றும் நறுமண பொருட்கள் விற்பனை செய்வதாகவும், நாட்டு மருந்து கடையில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். கார் வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு முபின் தனது மனைவியிடம் நாம் வேறு வீட்டிற்கு செல்லலாம் என கூறியுள்ளார். அதன்படி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வீடு பார்த்து மனைவி, குழந்தைகளுடன் குடியேறி உள்ளார். அப்போது முபின் வீட்டிற்குள் 4 பெட்டிகளை எடுத்து வந்தார். இதனால் நஸ்ரத்துக்கு சந்தேகம் ஏற்படவே எதற்காக இந்த 4 பெட்டிகள். அதில் என்ன உள்ளது என கேட்டுள்ளார். அதற்கு முபின், இந்த பெட்டிகளில் பழைய துணிகள் தான் உள்ளது என கூறியுள்ளார். ஆனால் கார் வெடிப்பு சம்பவம் நடந்த பிறகே அந்த பெட்டிகளில் வெடி மருந்து இருந்த தகவல் நஸ்ரத்துக்கு தெரிய வந்துள்ளது.

20-10-2022 அன்று மனைவி குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விடுதல்: கடந்த மாதம் 20-ந்தேதி, முபினின் மனைவி நஸ்ரத்துக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். முபின் எப்போதும் யாரிடமும் பேசாமல் தனியாகவே இருப்பார். மேலும் எந்நேரமும் செல்போனில் ஏதாவது பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால் சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு நஸ்ரத்தின் வீட்டிற்கு சென்ற முபின் வழக்கத்திற்கு மாறாக அனைவரிடமும் சகஜமாக பேசியுள்ளார். மேலும் குடும்பத்தினர் அனைவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டும் உள்ளார். அன்று மாலையே தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியில் சென்று உள்ளார். அப்போது குழந்தைகளுக்கு பிடித்த ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றையும் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் மனைவியை அவரது தாய் வீட்டில் விட்டு, முபின் மட்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவம் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு தண்ணீரை சேமிப்பதற்கு டிரம் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார்.

22-10-2022 அன்று மனைவியுடன் பேசியது: அப்போது 3 நாட்களுக்கு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். 22-ந் தேதி இரவு நஸ்ரத் கணவருக்கு எப்போது வீட்டிற்கு வருவாய் என மெசேஜ் அனுப்பினார். அதற்கு நாளை வருவதாக கூறியுள்ளார். அப்போது நஸ்ரத் குழந்தைகள் உன்னை தேடுகின்றனர். வீடியோ காலிலாவது பேசு என மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் அதன்பின்னர் முபின் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தும் முபினை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிகிறது. இதுவே முபின் அவரது மனைவியிடம் கடைசியாக பேசியது. ஆனால் தற்போது வரை முபினுக்கு என்ன நடந்தது என்று அவரது குழந்தைகளுக்கு தெரியவில்லை.

வேதபிரகாஷ்

05-11-2022


[1]  ஒவ்வொரு நாளிதழும், செய்தியும் விதவிதமாகக் குறிப்பிடுகின்றன (ஐந்து-ஆறு என்று….), அவற்றைத் தொகுத்து, இங்கு பட்டியலிடப் பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பான அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்தது (2)

செப்ரெம்பர் 24, 2022

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பான அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்தது (2)

இமயமலை முதல் குமரி வரை இந்தியா ஒன்றுதான். அதில் உள்ள அனைவரின் பாதைகளும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும்: சந்திப்பில் மதரஸாவில் பயிலும் குழந்தைகளிடம் பேசிய மோகன் பாகவத், நாட்டின் மீதான அன்பையும் மனித வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். குழந்தைகளுக்கு மதரஸாவில் குரான் கற்பிக்கப்படுவது போல், இந்து மத வேதமான பகவத் கீதையையும் ஏன் கற்பிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், “இமயமலை முதல் குமரி வரை இந்தியா ஒன்றுதான். அதில் உள்ள அனைவரின் பாதைகளும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும்,” என்று பேசினார். தொடர்ந்து மதரஸா நிர்வாகிகளிடம், “மதரஸாக்களில் கல்வி கற்கும் முஸ்லிம் சிறார்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இந்தி தெரியாததால், விமான நிலையம், ரயில் நிலையம் போன்றவற்றில் படிவத்தை அவர்களால் நிரப்ப முடியவில்லை. மதரஸாக்களில் நவீன அறிவைக் கற்பிக்க வேண்டும். ஒருமித்த கருத்து இல்லாத பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக வாழ விரும்புகிறோம் என்பதே அனைவராலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது,” என்று பாகவத் பேசினார்.

மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் நடைபெற்றசந்திப்பு: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் சந்திப்பு நடைபெற்றது[1]. பசுவதை, இழிவாக பேசுதல் உள்பட இரு சமூக முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது[2]. தொடர்ந்து இது போன்ற சந்திப்புகள் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அரை மணி நேரம் திட்டமிடப்பட்ட சந்திப்பு 75 நிமிடங்கள் நீடித்தது. ஆர்எஸ்எஸ்யின் தற்காலிக டெல்லி அலுவலகமான உதாசீன் ஆசிரமத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பகவத், சங்கத்தின் சா சர்கார்யவா கிருஷ்ண கோபால், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ். ஒய் குரைஷி, முன்னாள் டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் AMU துணைவேந்தர் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஜமீர் உதீன் ஷா, ஆர்எல்டி தலைவர் ஷாகித் சித்திக், தொழிலதிபர் சயீத் ஷெர்வானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பசுவதை மற்றும் காஃபிர் (முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குறிக்க பயன்படும் சொல்) போன்ற பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது: குரைஷி மற்றும் சித்திக் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், “பேச்சுவார்த்தை சுமூகமான சூழலில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு, முஸ்லிம் சமூகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க நான்கு மூத்த தலைவர்களை பகவத் நியமித்தார். எங்கள் பக்கத்தில், ஆர்எஸ்எஸ் உடனான பேச்சுவார்த்தையை தொடர முஸ்லீம் மூத்த தலைவர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை நாங்கள் நியமிக்க உள்ளோம்.” பசுவதை மற்றும் காஃபிர் (முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குறிக்க பயன்படும் சொல்) போன்ற பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது[3]. பசுவதை மற்றும் காஃபிர் குறித்து மக்கள் மகிழ்ச்சியடையவில்லை என்று பகவத் கூறினார்[4]. அதற்கு பதிலளித்த நாங்கள், “அதன் மீது எங்களுக்கும் அக்கறை உள்ளது. பசு வதையில் ஈடுபட்டால், சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினோம். காஃபிர் என்பது அராபிய மொழியில் நம்பிக்கையற்றவர்களை குறிக்க பயன்படுத்துவது. இது தீர்க்கப்பட முடியாத பிரச்சினை அல்ல என்று அவரிடம் கூறினோம். அதேபோல் இந்திய முஸ்லீம்களை பாகிஸ்தானியர் அல்லது ஜெகாதி என்று கூறும்போது நாங்கள் வருத்தமடைகிறோம்,” என்று கூறினோம்.

நூபுர் ஷர்மா விவகாரம் மற்றும் தொடர்ந்த வன்முறை: ஆர்எல்டி தேசிய துணைத் தலைவர் சித்திக் கூறுகையில், “நூபுர் ஷர்மா விவகாரம் நடந்தபோது ஆர்எஸ்எஸ் உடன் சந்திப்பை நாடினோம். பல இடங்களில் வன்முறை நடந்தது. முஸ்லீம் சமூகத்துக்குள்ளும் அசாதாரண சூழல் உருவாகியிருந்தது. மோகன் பகவத் சந்திப்பதற்கான தேதியை பெற்ற நேரத்தில், நூபுர் ஷர்மா சம்பவம் நடந்து ஒரு மாதமாகிவிட்டது. அது சற்று ஓய்ந்திருந்தது. எனவே இரு சமூகத்தினருக்கும் இடையிலான வகுப்புவாத நல்லிணக்க விவகாரங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம் என்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார். இத்தகைய சந்திப்புகள், உரையாடல்கள், தொடரவேண்டும், அமைதி நிலவ வேண்டும், மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், உள் உறவுகளை மேம்படுத்தவும் முஸ்லீம் மதகுருகளை தலைவர்களை சந்தித்து வருகிறார்: பகவத்தின் திடீர் விசிட் குறித்து ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் பிரமுக் சுனில் அம்பேகர் வெளியிட்ட அறிக்கையில், “சர்சங்கசாலக் அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்கிறார். இது ‘சம்வத்’ செயல்முறையின் ஒரு பகுதியாகும்” என்று கூறினார்[5]. ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் கடந்த சில நாட்களாக மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், உள் உறவுகளை மேம்படுத்தவும் முஸ்லீம் மதகுருகளை தலைவர்களை சந்தித்து வருகிறார்[6]..  மாற்று மதம் மற்றும் நம்பிக்கை கொண்டவர்களுடன் தொடர்பு ஏற்படுத்துவது என்ற நோக்கில் இந்த சந்திப்பு நடந்தது[7]. அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது[8].  மேலும் இது தொடர்ச்சியான இயல்பான சம்வத் செயல்முறையின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் தெரிவித்தார்[9]. ஆனால் கடந்த மாதமும் ஐந்து முஸ்லிம் தலைவர்களை பகவத் சந்தித்தார். அப்போது நாட்டில் நல்லிணக்க சூழல் நிலவுவது குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, பகவத் சமீபத்தில் டெல்லியின் முன்னாள்  லெப்டினன்ட் கவர்னர் நஜீப் ஜங், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரைஷி, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜமீர் உதின் ஷா, முன்னாள் எம்.பி. ஷாகித் சித்திக் மற்றும் தொழிலதிபர் சயீத் ஆகியோரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது[10].

தீவிரவாத தொடர்புகள் நீங்க வேண்டும்: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என கேரளா கோழிக்கோடு, டில்லி, மும்பை, அசாம், தெலுங்கானா, பெங்களூரூ, லக்னோ, சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட 13 மாநிலங்களில் தேசிய புலனாய்வு படையினர் நாடு முழுவதும் அதிரடி சோதனை மேற்கோண்டனர். அதனுடன் தொடர்பு கொண்டுள்ளவர்கள், குறிப்பாக சட்டவிரோதமான தொடர்புகள், நிதியுதவி பெறுபவர்கள், தீவிரவாத சம்பந்தம் உள்ளவர்கள் தண்டிக்கப் பட வேண்டும், மற்றவர்கள் அவர்களிடமிருந்து விலக வேண்டும். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை, சேர்ந்த 106 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கேரளா, தமிழகம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் வன்முறைச் செயல்களும் ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், அமைதி காக்க, இத்தகைய உரையாடல்கள் அந்தந்த மாநிலங்களிலும் ஆரம்பிக்க வேண்டும். மக்களுக்கு ஏற்றமுறையில் நெருங்கி வர உரையாடல்கள் அமைய வேண்டும். அப்பொழுது தான், பதட்டம் நீங்கி, நட்பு, உறவுகள் மேன்படும். இந்திய முஸ்லிம்கள் இந்தியாவின் பொருளாதார, மற்ற முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும்.

© வேதபிரகாஷ்

24-09-2022


[1] காமதேனு, அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு!, Updated on : 22 Sep, 2022, 3:29 pm; 2 min read

[2] https://kamadenu.hindutamil.in/politics/rss-chief-mohan-bhagwat-visits-mosque-in-outreach-to-muslims

[3] தமிழ். இந்தியன்.எக்ஸ்பிரஸ், மோகன் பகவத்முஸ்லிம் தலைவர்கள் சந்திப்பு: பசுவதை உட்பட முக்கிய பிரச்னைகள் பற்றி பேச்சு, Written by WebDesk, Updated: September 22, 2022 6:53:34 pm.

[4] https://tamil.indianexpress.com/india/rss-muslim-intellectuals-to-hold-periodic-talks-address-issues-of-concern-to-the-two-sides-514530/

[5] இடிவி.பாரத், மசூதிக்கு விசிட் அடித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்விஷயம் என்ன தெரியுமா?, Published on : 22, Sep 2022, 9.09 PM IST.

[6] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/bharat/rss-chief-mohan-bhagwat-visits-mosque/tamil-nadu20220922210942766766339

[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், முஸ்லிம் தலைவர் இமாம் உமர் அகமது இல்யாசியுடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்புகாரணம் இதுதான்!!, Narendran S, First Published Sep 22, 2022, 9:20 PM IST; Last Updated Sep 22, 2022, 9:20 PM IST.

[8] https://tamil.asianetnews.com/india/rss-chief-mohan-bhagwat-met-muslim-leader-imam-umar-ahmed-ilyasi-rimc0w

[9] தினத்தந்தி, இமாம் அமைப்பு தலைவருடன் மோகன் பகவத் சந்திப்பு, Sep 22, 2:32 pm

[10] https://www.dailythanthi.com/News/India/rss-chief-mohan-bhagwat-visits-mosque-in-outreach-to-muslims-798250

இரு நகரங்கள், இரு மதங்களின் கூடுதல், விளைவு கொரோனா பாதிப்பு, பரப்பு மற்றும் குற்றச்சாட்டு, அபாயகரமான விளைவு! [1]

ஏப்ரல் 2, 2020

இரு நகரங்கள், இரு மதங்களின் கூடுதல், விளைவு கொரோனா பாதிப்பு, பரப்பு மற்றும் குற்றச்சாட்டு, அபாயகரமான விளைவு! [1]

mysterious Shincheonji Church of Jesus, South Korea

தென்கொரியாவில் ஒரு கிருத்துவ சர்ச் மூலம் கொரோனா பரப்பப் பட்ட நிகழ்ச்சி [மார்ச்.2020]: தென்கொரிய டேகு நகரத்தில் [the southern city of Daegu] உறுதி செய்யப் பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு ஷின்சியோஞ்சி சர்ச் [mysterious Shincheonji Church of Jesus]  உடன் சம்பந்தப் படுகிறது[1]. 75% தில்லி நிஜாமுத்தீன் தப்லிக் மசூதி போல, தென் கொரியாவில், ஷின்சியோஞ்சி சர்ச் [mysterious Shincheonji Church of Jesus] கொரோனா வைரஸ் பரப்புவதில் சிக்கியுள்ளது. சுமார் 7,400 பேர் தாக்குதலில் உறுதி செய்யப் பட்ட நிலையில், அவர்களுடைய தொற்றுக்கு மூலம, அந்த சர்ச் என்று அறியப் பட்டுள்ளது. பாதிக்கப் பட்ட நோயாளி எண்.31 [Patient No. 31] என்றழைக்கப் படும் பெண்மணி தான், முதன்முதலில் அந் த வைரஸைப் பெற்று, மற்றவர்களுக்குப் பரப்பியதாக தெரிகிறது. அதன் படி, பரிசோதனை செய்ததில், 63.5% கொரோனா வைரஸ் பரப்பு மூலம் அந்த சர்ச் தான் என்று காட்டியது. வைரஸ் பாதிப்பில் சைனாவுக்கு அடுத்தபடியாக, தென்கொரியா உள்ளது. ரகசியமாக கூடுதல், மாஸ்க் அணியாமல் இருத்தல், நெருக்கமாக இருந்து வேண்டுதல், முதலிய காரணங்களினால் கோவிட்-19 பரவியது, இதனால், கொரிய அரசு உடனடியாக, கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

mysterious Shincheonji Church of Jesus, South Korea, apologized

சர்ச் தலைவர் மன்னிப்பு கேட்டது [31-03-2020]: ஆனால், சர்ச் எல்லா குற்றச்சாட்டுகளையும் மறுத்தது. இந்த சர்ச்சின் எதிரிகள் மற்றும் பிடிக்காத கணவன் – மனைவிமார் தான் புகார் கூறியுள்ளனர் என்கிறது. மேலும், அச்சர்ச்சை சேர்ந்தவர்களை பலர் வேலையிலிருந்தும் நீக்கியுள்ளனர். 27% ஒவ்வாத, கிருத்துவர்கள் இருக்கும் தென்கொரியாவில் புரொடெஸ்டென்ட் சர்ச்சுகள் அதிகம். இதனை கிருத்துவ-எதிர் சர்ச்சாகக் கருதுகின்றனர். ஆக தென்கொரியாவிலும், கிருத்துவர்களா, கிருத்துவர்கள் அல்லாதவர்களா என்ற பிரச்சினையை விட தொற்று நோயை எதிப்பில் தான் நிற்கிறது. அந்த பெண்ணின் விவரங்கள், சென்று வந்த இடங்கள், சந்தித்த நபர்கள் என்று ஆய்ந்து வருகிறது, தொடர்பில் பல தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில் அந்த சர்ச்சின் தலைவர் லீ மேன் ஹீ [Lee Man-hee] மன்னிப்புக் கேட்டார்[2]. இருப்பினும், சென்ற உயிர்கள் திரும்ப வராது. அதனால், கிளம்பியுள்ள பீதியும் அடங்கவில்லை. தனிமைப் படுத்துதல், வீட்டில் அடைப்பட்டு கிடத்தல், உணவு அத்தியாவச பொருட்களுக்காக கவலைப் படுதல் முதலிய கஷ்டங்கள் தொடர்ந்து இருக்கின்றன.

Parppaniyam, corona Viduthalat, 30-03-2020

உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கக் கூடிய கரானோவை விட கொடி யது பார்ப்பனீயமே என்று திராவித்துவவாதிகள் கூறுவது [30-03-2020, விடுதலை]: தில்லியில் தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய தமிழக துலுக்கர்களில் பலர், இந்த கொரோனா தொற்றுக்கு உட்பட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே மதுரையில் 25-03-2020 அன்று ஒருவர் இறந்தாகி விட்டது. இந்நிலையில், திராவிட சித்தாந்திகள், இதையெல்லாம் கண்டு கொள்ளாமல், “பார்ப்பனியம், கொரோனா வைரஸை விட கொடியது,” என்று செய்தி வெளியிட்டுள்ளார்கள்[3]. கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமை தாங்கி நடத்தி வைத்து பேசிய உரையில், “மக்களை, உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக் கக்கூடிய கரானோவை விட கொடி யது பார்ப்பனீயமே. பார்ப்பனீயத்தையே பதற வைக்கக்கூடிய திராவிடர் கழகம் துணிச்சலோடு எதையும் எதிர்கொள்ளும். எங்கள் தலைவர் ஆசிரியர்கரோனாபற்றிய விழிப்பு ணர்வை மக்கள் மத்தியில் விதைத்து உள்ளார். எங்கள் பெரியார் மருத்துவக் குழுமம் விழிப்புணர்வைபாதுகாப்பான வாழ்வை உறுதிப்படுத்தி வருகிறது. அதாவது உலகத்தில் என்ன நடந்தாலும், அவற்றை எல்லாம் மறைத்து, பிராமணர்களை எதிர்த்து துவேசமாக பேசுவது, காழ்ப்புடன் சித்தரிப்பது, பொது இடங்களில் கிண்டல் செய்வது, பூணூல் அறுப்பது, அடிப்பது, ஏன் கத்தியால் வெட்டுவது என்ற நிலைக்கு வந்துள்ளது. அந்நிலையில், இவர்கள் இன்றும் இத்தகைய காழ்ப்பு, வெறுப்பு, துவேசம் முதலிவற்றை வைத்துக்கொண்டு பரப்புகிறார்கள் என்றால், வன்மம், வன்முறை, அவதூறு போன்றவை அவர்களிடம் தான் நோய் போன்று பின்னிப் பிணைந்துள்ளது. ஆகவே, இத்தகைய காழ்ப்பு, வெறுப்பு, துவேசம் எங்கிருந்து வந்தது என்று பார்க்க வேண்டியுள்ளது.

DK veeramani questions the conduct of yagna 01-04-2020

திராவிடத்துவவாதிகள் இந்துவிரோதிகளாகத் தான் இருந்து வந்துள்ளனர்: திமுக, முஸ்லிம்லீக்குடன் எப்பொழுதுமே கூட்டு வைத்துக் கொண்டிருந்தது. அதே போல திகவும் இஸ்லாத்தை விமர்சித்தது கிடையாது. ஈவேரா முதல் இப்பொழுது வரை அந்த பாரம்பரியம் தொடர்கிறது. புத்தகக் கண்காட்சிகளில், அடுத்த-அடுத்த ஸ்டால்களில் திகவும், முஸ்லிம் புத்தக விற்பனை நடந்தது சகஜமாக இருந்தது. கடவுள் நம்பிக்கை இல்லாத, நாத்திகக் கூட்டம் என்றால், முஸ்லிம்களால் அவ்வாறு இருக்க முடியாது. ஆனால், இவர்கள் எல்லொருக்கும் தெரியும், அவர்கள் இந்து மதம், இந்து கடவுள், இந்து மத நூல்கள் முதலியவற்றைத் தான் எதிர்க்கிறார்கள், மற்ற மதங்களை அல்ல என்பது. 01-04-2020 அன்று முகநூலில், கீழ்கண்ட விசயங்களை, குறிப்பாகச் சுட்டிக் காட்டினேன்:

  1. தமிழ், தமிழ் என்று சொல்லி, போராட்டங்கள் நடத்தி, கடைசியில் தமிழ்நாட்டிற்கு இழுக்கைத் தேடி தந்துள்ளனர்!
  2. நிஜாமுத்தீன் மர்கஸ்-லிருந்து, பெரியார் மண் ஈரோடு வரை, என்னத்தான் நடந்தது, தம்பி, சொல்வாயா, அண்ணன் கேட்கிறான்?
  3. கொரோனாவா, வெங்காயமா, பெரியார் பிஞ்சா, தடியா? வாங்க பெரியார் திடலில் பட்டி மன்றம் நடத்தலாம்! இனமான தலைமையில்!
  4. கழகக் கண்மணிகளே, உடன் பிறப்புகளே, ரத்தத்தின் ரத்தமே, கடைசியில் கொரோனா வைரஸ் நிலைக்கு போய் விட்டதே, எல்லாமே அந்த ஆரிய சதிதான்!
  5. திராவிடனும், துலுக்கனும் ஒன்றாக சேர்வான் – இனம் இனத்தோடு சேரும் என்றான் அண்ணன், ஈரோட்டில், மதுரையில் சேர்ந்து விட்டனரே!
  6. கொரோனா என்றால் குரானா ஞாபகம் வருகிறது, ஆட்சி கலைக்க அன்று திட்டமிட்டவர்களுள் ஒருவர், இன்றோ, இது எல்லாவற்றையும் ஆட்டுகிறது!
  7. தப்லிக் என்றால் என்ன, மர்கஸ் என்றால் என்ன, மார்பகத்தில் மச்சம் உள்ளதா, நாடாவை கழட்ட பார், தமிழில் பாட்டு பாடு!
  8. ஹேய்..அட்டக் பட்டக்…அப்சகல்லு மாலியா, லாலாக்கு டோல் டப்பிம்மா, கூட தப்லிக், மர்சஸ் எல்லாம் சேர்த்திருப்பேனே, என் கொரோனா!
  9. வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது என்றாயே, இப்பொழுது பார் தம்பி, தில்லியிலிருந்து உனக்கு கொரோனா வருகிறது!
  10. அன்று அடியே மீனாக்ஷி மூக்குத்தியை கழட்டடி என்றேன், இன்று தப்லீக்கைக் காட்டடி மர்கஸை மறைக்காதே என்பேன் [10]

இன்றைக்கும், ஸ்டாலின் அத்தகைய வன்ம-வார்த்தை பிரயோகங்களை செய்து வருகிறார்.

Tabliq attendees portent to spread Covid-19, quarantined, Tamil Hindu, 01-04-2020

திராவிடத்துவம், கம்யூனிஸம், ஜிஹாதித்துவம் எல்லாம் ஒன்றாகி செயல்படுவதால் அவற்றை சித்தாந்த ரீதியில் எதிகொள்ள வேண்டியுள்ளது: இதனால், சில நண்பர்கள், எதிர்த்து, சரி இல்லை என்று பதிவு செய்தனர். அதனால், அதன் பின்னணியை கீழ்கண்டவாறு, சுருக்கமாக விளக்கினேன்:

  1. அண்ணாதுரையின் “ஆரிய மாயை” படித்தால், என்னுடைய பதிவுகளுக்கான ஆதாரமும், பின்னணியும் புரியும்.
  2. அண்ணாதுரை தான் ஜின்னாவை சந்தித்தப் பிறகு, “இனம் இனத்தோடு சேரும்,” என்ற தத்துவத்தை பாகிஸ்தான் – திராவிடஸ்தான் பிரிவினைவாதத்திற்கு வைத்தார். ஈவேரா ஜின்னாவுடன் கூட்டு வைத்துக் கொண்டார். ஆனால், ஜின்னா திராவிடர்களைத் தூக்கியெறிந்தார், ஈவேராவையும் சாடினார்[4].
  3. ஈவேரா, அண்ணா, கருணாநிதி என்றவர்களுக்கு, என்றுமே இந்துவிரோதத் தனம் சகஜமாக இருந்தது. அவர்களது பேச்சுகள், எழுத்துகள் முதலியவற்றில் தான் என்றுமே வன்மம், வார்த்தை குரூரம் என்றெல்லாம் இருந்தது.
  4. திராவிட-கம்யூனிஸ-இந்துவிரோத சித்தாந்திகளை, நிச்சயமாக, எதிர்க்க வேண்டியது ஒவ்வொரு இந்துவின் கடமை ஆகிறது. ஏனெனில், செக்யூலரிஸ-பகுத்தறிவு போர்வையில், அவர்கள் இந்து விரோதிகளாக இருக்கின்றனர்.
  5. இப்பொழுது கூட “கரோனா வைரசை விட கொடியது” என்று 30-03-2020 அன்று திக-வீரமணி-விடுதலை செய்தி வெளியிட்டது.
  6. அதிலும் திருமண ஒப்பந்தம் போது, அத்தகைய வார்த்தை தீவிரவாதம், சொல்-பயங்ரவாதம், வெறுப்பு-காழ்ப்புகளுடம் பீரிட்டது.
  7. கல்யாணத்திற்கும், பார்ப்பன எதிர்ப்புக்கும் சம்மந்தம் இருக்கிறது என்றால், அது என்ன என்று பகுத்தறிவுவாதிகள் விளக்கவேண்டும்.
  8. நிஜாமுத்தீன் மர்கஸ் மாநாட்டிற்கும் துலுக்கர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை, என் கருத்தை எதிர்ப்பவர்கள் தான் மெய்ப்பிக்க வேண்டும்.
  9. எனக்கு அரசியல் ஆதரவு எதுவும் இல்லை, தவறு இருந்தால், எல்லா கட்சிகளையும் விமர்சித்து வருகிறேன். இந்துத்துவம், தவறு என்றாலும் சுட்டிக் காட்டுகிறேன்.
  10. ஆமாம், நகைச்சுவை, கிண்டல், நக்கல் முதலியவற்றுடன் தான் அவர்கள் உபயோகப் படுத்திய சொற்கள், சொற்றோடர்களை உபயோகப் படுத்தியுள்ளேன்

©  வேதபிரகாஷ்

01-04-2020

Tabliq flouted tourist visas, The Pioneer, 01-04-2020

[1] Of the confirmed cases, about 75% are from the southern city of Daegu and 73% of those have been linked to the Shincheonji Church. https://www.bbc.com/news/world-asia-51701039

[2] BBC News, Coronavirus: South Korea church leader apologises for virus spread, 2 March 2020

[3] விடுதலை, கரோனா வைரசை விட கொடியது பார்ப்பனீயம்பிரபாகரன்சந்திரலேகா மணவிழாவில் கழகப் பொதுச் செயலாளர் முழக்கம், மார்ச்.30, 2020, பக்கம்.3.   http://www.viduthalai.in/page1/197844.html

[4] K. V. Ramakrishna Rao, The Historic Meeting of Ambedkar, Jinnah and Periyar, in “Proceeding volume of the Twenty first Annual session”, of South Indian History Congress-2001, School of Historical Studies, Madurai Kamaraj University, Madurai, January 2002,  pp.128-136.

https://velivada.com/2019/05/09/the-historic-meeting-of-ambedkar-jinnah-and-periyar/

https://archive.org/stream/TheHistoricMeetingOfAmbedkarJinnahAndPeriyar/The Historic Meeting of Ambedkar%2C Jinnah and Periyar_djvu.txt

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் ஆர்பாட்டம், அரங்கேற்றப் பட்ட நாடகமா, ஆதரவு, செயல்படும் சக்தி மற்றும் பின்னணி எது-யார்? [1]

பிப்ரவரி 21, 2020

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் ஆர்பாட்டம், அரங்கேற்றப் பட்ட நாடகமா, ஆதரவு, செயல்படும் சக்தி மற்றும் பின்னணி எது-யார்? [1]

Washermenpet Muslim poster Feb 2020- BBC Tamil

வண்ணாரப் பேட்டை முஸ்லிம் பிரச்சினையா, அரசியலா?: சென்னை வண்ணாரப்பேட்டை பிரச்சினை ஆழமாக அலசிப் பார்த்தால், அது வண்ணாரப்பேட்டை, சென்னை, தமிழ்நாடு அல்லது இந்தியாவிற்கான பிரச்சினை அல்ல என்று தெரிகிறது. எல்லை மாநிலங்கள் போலான ஊடுருவல்கள், அயலாட்டவர் இங்கு இருக்கிறார்கள் என்ற பட்சத்தில் அவர்களது நிலைப்பாடு உள்ளது என்றால், அது திகைப்படையச் செய்கிறது. ஏற்கெனவே ஐசிஸ் தொடர்புள்ள தீவீரவாதிகள், அவர்களுக்கு உதவியவர்கள் இப்பகுதிகள் மற்றும் சென்னையின் மற்ற பகுதிகளிலிருந்து கைது செய்யப் பட்டுள்ளனர். அப்படியென்றால், இவர்களுக்கு ஏதோ விசயம் தெரியும் போலிருக்கிறது. அமைதியாக “போராட்டம்” நடத்துகிறோம் என்றால், இத்தகைய சூழ்நிலை உருவாகி இருக்காது. குறிப்பிட்ட தெருக்களில் உள்ளவர்கள் நிச்சயமாக “ஹவுஸ் அரெஸ்ட்” நிலையில் இருந்திருக்கிறார்கள். அல்லது அவர்கள் தயாராக இருந்தார்கள் என்றாக வேண்டும். ஆனால், இஸ்லாமியர் திட்டமிட்டு, அதனை உருவாக்கியுள்ளனர் என்றும் தெரிகிறது. எனவே, இது எப்படியாவது ஏதோ ஒரு விதத்தில், அமைதியைக் குலைக்க வேண்டும் அல்லது ஊடக கவனம் பெற வேண்டும் போன்ற யுக்தியுடன் ஆரம்பித்ததாக தெரிந்தது. உடனடியாக அரசியல் நுழைந்தது, வேறுவிதமாக உள்ளது.

Washermenpet Muslim poster Feb 2020

போலீஸாரை ஒருதலைப் பட்சம்மாக குறை கூறும் ஊடகங்கள்: சொல்லி வைத்தால் போல, எதிர்கட்சிகள் எல்லாமே, ஒரே மாதிரி போலீஸார் நடவடிக்கையை எதிர்த்து அறிக்கை விடுப்பது, ஆளும் அரசை குறை சொல்வது போன்ற விதங்களில் அதிரடி பிரச்சார வேலைகளை முடுக்கியுள்ளார்கள். மின் மற்றும் அச்சு ஊடகங்கள் அவர்கள் மற்றும் அத்தகைய சித்தாந்தக்காரர்களிடம் இருப்பதால், ஆங்கில ஊடகங்களும் பாரபட்சமாகத்தான் இருக்கின்றன. தி இந்து மற்றும்பிரென்ட் லைன் படித்தால் விளங்கும். போலீஸார் பெண்களை, சிறுவர்களை அடித்தார்கள் என்று, பெண்கள் சொன்னதாக, நிருபர்கள் செய்தியை, அப்பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன[1]. பிறகு, போலீஸார் சொல்வதையும் வெளியிட வேண்டுமே, ஆனால், அதை செய்யவில்லை.  பிரென்ட்லை விடும் கதை கொஞ்சம் ஓவராகவே உள்ளது, ஏனெனில், அதற்கு ஆதாரம் இல்லை. ஜீப்பில் வைத்து அடித்தார்கள் என்றால் யார் பார்த்தார்கள் என்று சொல்லவில்லை. ஆனால், இவற்றையெல்லாம் செய்தி என்று பக்கம்-பக்கமாக போட்டிருக்கிறது[2].

caa demo politicized viduthalai 16-02-2020

தினத்தந்தி டிவி தொலைக் காட்சியில், எஸ்டிபிஐ உறுப்பினர் போலீஸாருக்கு எதிராக பயங்கரமான புகார் சொன்னது: 15-02-2020 அன்று தினத்தந்தி டிவி தொலைக் காட்சியில், எஸ்டிபிஐ சார்பாக பேசியவர், போலீஸார், பெண்களின் மர்ம உறுப்புகளில் லத்தியை நுழைத்து….. என்றெல்லாம் பேசியது திகைப்பாக இருந்தது. இதை தந்தி-ஒருங்கிணைப்பாளர் தடுக்கவில்லை. ஒரு பத்திரிக்கையாளர் எடுத்துக் காட்டிய பிறகும், அவர் பிடிவாதமாக, மனித உரிமை ஆணையத்திற்கு புகார் கொடுப்போம் என்றெல்லாம் வாதித்தார். போலீஸாரை எதிர்த்து அப்படி பேசுகிறார்களே என்ற உணர்வே அவர்களுக்கு இல்லை என்ற போக்கு தான் காணப் பட்டது. பார்ப்பவர்களுக்கே, அது எரிச்சலை ஊட்டுவதாக இருந்தது. அனுமதி எல்லாமல், பொது மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில் சாலைகளை மறித்து, ஆக்கிரமித்து, சட்டங்களை மீறி, “அமைதியான போராட்டம்” என்று பெண்கள்-சிறார்களை முன்னே வைத்து கலாட்டாவில் ஈடுபட்டதே, முஸ்லிம்களின் விசமத் தனத்தைக் காட்டுகிறது. ஒருதலைப் பட்சமாக இப்படி ஊடகங்கள் போலீஸாரை குறைகூறுவதும் விசமத் தனமாக உள்ளது. “டெக்கான் குரோனில்” ஒரு பெண் ஜாயின்ட் கமிஷனர், இரண்டு பெண் போலீஸார் மற்றும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் போராட்டக் காரர்கள் கற்களை வீசியதில் காயமடைந்தனர் என்று போலீஸார் சொன்னதாக, செய்தி வெளியிட்டுள்ளது[3]. மற்ற படி, பிடிஐ என்று செய்தியை அப்படியே வெளியிட்டுள்ளது[4]. ஏன் நிருபர்கள் ஆஸ்பத்திரிக்குச் சென்று உண்மை அறிந்து செய்தி போடவில்லை என்று தெரியவில்லை.

Tiruma visiting hospital-16-02-2020

திருமாவளவன் உளறுவது [14-02-2020]: அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தி ஒரு உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்[5]. சிஏஏவுக்கு எதிராக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தி ஒரு உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்[6]. அந்த அறிக்கையில், “குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மக்கள் அறவழியில் கூடி போராட்டம் நடத்தியுள்ளனர். பெண்களின் போராட்டம் வெற்றிகரமாக நடப்பதை சகித்துக்கொள்ளமுடியாமல் அவர்கள் மீது காவல்துறை வன்முறையை ஏவி இருக்கிறது. அங்கு இருந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதை பார்த்த ஆண்கள் அவர்களுக்கு பாதுகாப்பாக அங்கே வந்துள்ளனர். அவர்களைத் கடுமையாக காவல்துறையினர் தாக்கியுள்ளனர். அந்த நெரிசலில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்களைக் காவல் துறை கைது செய்துள்ளது. இந்தச் செய்தியை அறிந்ததும் நேற்றிரவு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பிறகு சென்னை போலீஸ் கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்தவர்களை விடுவித்துள்ளார். இதனால் சாலை மறியல் போராட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன….” இந்த அளவுக்கு முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கியுள்ளது திகைப்பாக உள்ளது.

Muslims propagating false-police-16-02-2010

உண்மை மறைத்து விமர்சிக்கு போக்கு: திருமா வளவன் அறிக்கைக் கூறுவது, “பெற்றோரின் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகிய விவரங்களைச் சேகரிக்கச் சொல்லும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என்று பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகியவை தெரிவித்துள்ள நிலையில் அதனால் எந்த பாதிப்பும் இல்லை, அதை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம் என்று இங்கே உள்ள அதிமுக அரசு கூறி வருகிறது. குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்து அதை சட்டமாக நிறைவேற்றி இன்று இந்தியா முழுவதும் அமைதியற்ற சூழல் நிலவுவதற்கு வழிவகுத்த அதிமுக, தமிழ்நாட்டை உத்தரப்பிரதேசத்தைப் போல வன்முறை பூமியாக மாற்றுவதற்கு திட்டமிட்டு செயல்பட்டுவருகிறது. அமைதியான அறவழிப் போராட்டங்களைக் காவல்துறையை வைத்து ஒடுக்குவதற்கு முயல்கிறது. அதன் ஒரு வெளிப்பாடுதான் நேற்று நடந்த சம்பவம். இதை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அனுமதிக்க முடியாது”.

© வேதபிரகாஷ்

21-02-2020

Muslim demo-politicized0Viduthalai 16-02-2020

[1] The protesters claimed that the police entered the area in large numbers and started beating the youths who had been organising protests against the CAA in the city. In the melee women and children were beaten. Jannathul Pradesh, one of the women injured in the police violence said: “I told them [the police] not to beat us and the children. We were very peaceful and disciplined. But they were inhuman and resorted to indiscriminate beatings. Many women suffered injuries. We got treated in local hospitals here.”

Frontline, Women, children injured in police lathi-charge against anti-CAA protesters in north Chennai, ILANGOVAN RAJASEKARAN, Published : February 15, 2020 18:37 IST
https://frontline.thehindu.com/dispatches/article30829834.ece

[2] A number of women Frontline spoke to on Saturday said that men outnumbered women in the police force that arrived there. “It was to terrorise the people, especially women, to discourage them from joining such protests in future. We were manhandled and beaten. The State wants to serve a warning to us—not to come out of our houses to defend our rights,” said Jannathul. Many women alleged that they were beaten inside the police vans by policemen and wanted the government to take action against the erring police personnel who unleashed violence against them.

[3] Police claimed that four of their personnel—a woman joint commissioner, two women constables and a sub-inspector—were injured in stonepelting by the protesters.

[4] Deccan Chronicle, Washermanpet violence triggers protests in Tamil Nadu, DECCAN CHRONICLE / PTI, Published: Feb 15, 2020, 6:21 pm IST; UpdatedFeb 15, 2020, 6:33 pm IST

https://www.deccanchronicle.com/nation/politics/150220/friday-night-anti-caa-clash-triggers-protests-in-tamil-nadu.html

[5] ஏசியா.நெட்.நியூஸ், இஸ்லாமியரை சாகடித்தவர்கள் மீது கொலை வழக்குப்போடுங்ககொந்தளிக்கும் திருமாவளவன்..!, By Thiraviaraj RM, Tamil Nadu, First Published 15, Feb 2020, 3:35 PM IST; Last Updated 3:35 PM IST.

[6] https://tamil.asianetnews.com/politics/murder-of-the-muslims-who-killed-the-file-case-says-thirumavalavan-q5qmow