சாப்ட்வேர் இன்ஜினியர் – சொந்தமாக, ஐ.டி., நிறுவனம் – பிறகு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு – அல் குவைதா அமைப்பில் இணைய இருந்தது – மொஹம்மது ஆரிபின் கதை!
துருக்கி–சிரியாநாடுகளில்பூகம்பம்ஏற்பட்டாலும்சிரியாவுக்குச்செல்லஆசைப்படும்பெங்களூருசாப்ட்வேர்ஆரிப்: துருக்கி-சிரியா நாடுகளில் பூகம்பம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் மாண்டு விட்டனர், இடிபாடுகளில் இன்னும் மக்கள் சிக்கியுள்ளர், லட்சக்கணக்கில் மக்கள் அவதிபடுகின்றனர் என்று செய்திகள் வந்து கொண்டிருந்தாலும், ஐசிஸ், அல்-குவைதா போன்ற இஸ்லாமிக் தீவிரவாதிகள் தங்களது நாசகார வேலைகளை நிறுத்துவதாகத் தெரியவில்லை. குறிப்பாக, இந்திய முஸ்லிம்கள் அவ்வாறான இயக்கங்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, வேலைக்கு ஆள் சேர்த்து, துருக்கி வழியாக சிரியாவுக்குச் செல்வது என்பது சகஜமாகி விட்டது. சாப்ட்வேர், மெகானிகல் இஞ்சினியரிங் போன்றவர்களுக்கு அங்கு கிராக்கி அதிகமாக இருக்கிறது. இஸ்லாமிக் தீவிரவாத அமைப்புகள் தீவிரவாத போரில் பங்கேற்க மாத சம்பளம் கொடுக்கிறார்கள். இதனால், நிறைய இளைஞர்கள் அதற்கு தயாராகி செல்கின்றனர். செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன.
சாப்ட்வேர்இன்ஜினியர் – சொந்தமாக, ஐ.டி., நிறுவனம் – பிறகு சர்வதேசபயங்கரவாதஅமைப்புகளுடன்தொடர்பு: உத்தர பிரதேசத்தின் அலிகாரைச் சேர்ந்தவர் முகமது ஆரிப், 36. சாப்ட்வேர் இன்ஜினியரான இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக 2021-2023 பெங்களூரு சம்பிகேஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட, தனிசந்திரா மஞ்சுநாத் நகரில், மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்[1]. இங்கு, ஐ.டி., நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த இவர், கடந்த ஆண்டு 2022ல் பணியில் இருந்து விலகினார்[2]. பின், சொந்தமாக, ஐ.டி., நிறுவனம் ஒன்றை துவக்கி, வீட்டில் இருந்து வேலை செய்து வந்தார். அதாவது அந்த அளவுக்கு அறிவை வளர்த்துள்ளார். சாப்ட்வேர் இன்ஜினியர் என்ற பெயரில் வலம் வந்த இவர், சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தி மறைமுகமாக செயல்பட்டு வந்தார். இதுதான் புதிராக உள்ளது. நன்றாக படித்து, புத்திக்கூர்மையுடன் சம்பாதித்து வரும் பொழுது, ஒழுங்காக மனைவி-மக்கள் என்று சந்தோசத்துடன் வாழ்க்கை வாழ்வதை விட்டு, ஏன் தீவிரவாத சம்பந்தங்கள் ஐத்துக் கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை.
பெங்களூருவில்தாக்குதல்நடத்தபயங்கரவாதிகள்திட்டம்: கடந்த இரண்டு ஆண்டுகளாக, அல் குவைதா, ஐ.எஸ்., அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகளிடம், ‘டெலிகிராம், டார்க்வெப்’ போன்ற சமூக வலைதள குழுக்களில் இணைந்து, அவற்றின் வாயிலாக பேசி வந்தார். இவரது நடவடிக்கைகள் பற்றி, தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூருவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாக மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் அடிக்கடி எச்சரித்து வருகிறார்கள்[3]. இந்திய பொருளாதாரத்தை சீர்ழிக்க வேண்டும் என்றால், பலர் இவ்வாறு இறங்கி வேலை செய்வதை கவனிக்க வேண்டும். பெங்களூருவுக்கு பயங்கரவாதிகளால் மிரட்டல்களும் வருகின்றன. அதன்படி, பெங்களூருவில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் அவ்வப்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் பெங்களூருவில் எப்போதும் போலீசார் உஷார் நிலையில் இருந்து வருகின்றனர்.
என்.ஐ.ஏ., அதிகாரிகள்கண்காணிப்பு: கடந்த சில மாதங்களாக முகமது ஆரிபின் நடவடிக்கைகளை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்[4]. நிச்சயமாக, இப்படி ஆயிரக்கணக்கில் இந்தியர்கள், லட்சக்கணக்கில் சித்தாந்த தாக்குதல்களை ஊடகங்கள், சித்தாந்திகள், செக்யூலரிஸம், சமதர்மம், சமத்துவம், திராவிட மாடல், கம்யூனிஸம் என்றெல்லாம் பலவித கொள்கைகளில் வெளிப்படையாக இந்தியாவை, இந்தியநாட்டிற்கு பாதகமாக விமர்சனம் செய்து, செய்திகளை வெளியிட்டு பிரச்சாரம் செய்து வரும் நிலையில், இத்தகைய தாக்குதல்கள் நடந்து வரும் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியமும் உள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் மேற்காசிய நாடான சிரியா சென்று, அங்கு அல்- குவைதா பயங்கரவாத அமைப்பில் இணைய திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்[5]. இது பற்றிய தகவல் அறிந்ததும், 11-02-2023 அன்று அதிகாலை 4:00 மணியளவில் அவரது வீட்டில், உள்நாட்டு பாதுகாப்பு துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர்[6].
அல்குவைதாஅமைப்பில்இணையஇருந்தது: அவர் சர்வதேச பயங்கரவாத அமைப்பினருடன் பேசி, அல் குவைதா அமைப்பில் இணைய இருந்தது, அவரது வீட்டில் கிடைத்த ஆதாரங்களில் இருந்து உறுதியானது[7]. அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்[8]. அதாவது கர்நாடக உள்நாட்டு பாதுகாப்பு போலீசாரும், தேசிய புலனாய்வு அதிகாரிகளும் (என்.ஐ.ஏ.) இணைந்து அவரை கைது செய்திருந்தார்கள்[9]. வீட்டில் இருந்து லேப்டாப், இரண்டு ‘ஹார்டு டிஸ்க்’குகள் பறிமுதல் செய்யப்பட்டன[10]. தற்போது முகமது ஆரிப் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். அதே நேரத்தில் அடுத்த மாதம் (மார்ச்) பெங்களூருவில் இருந்து ஈரானுக்கு சென்று, அங்கிருந்து சிரியாவுக்கு செல்லவும் ஆரிப் திட்டமிட்டு இருந்தார்[11]. இதற்கான விமான டிக்கெட்டுகளையும் அவர் முன்பதிவு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[12]. இதற்கு முன்பு ஒரு முறையும் ஈரானில் இருந்து சிரியாவுக்கு செல்ல ஆரிப் முயற்சி செய்திருந்தார்[13]. அந்த சந்தர்ப்பத்தில் அவரால் சிரியாவுக்கு செல்ல முடியாமல் போனதும் விசாரணையில் தெரியவந்துள்ளது[14].
பெங்களூரில் தான் தங்கியிருந்த வீட்டை காலி செய்வது பற்றி கூறியது: அவர் சிரியா செல்ல இருந்ததால், மனைவி, குழந்தைகளை உத்தர பிரதேசத்தில் விட்டு செல்லவும், பெங்களூரில் தான் தங்கியிருந்த வீட்டை காலி செய்வது பற்றி உரிமையாளரிடம் பேசியதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன[15]. அதே நேரத்தில் ஆரிப்பின் மனைவியிடமும் 12-02-2023 அன்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்[16]. அதாவது ஆரிப் எங்கெல்லாம் சென்று வந்தார்?. அவரை சந்திக்க யாரெல்லாம் வருவார்கள்? பயங்கரவாத அமைப்புடன் இருந்த தொடர்பு? உள்ளிட்டவை குறித்து ஆரிப்பின் மனைவியிடமும் போலீசார் விசாரித்து சில தகவல்களை பெற்றுக் கொண்டனர். மேலும் தற்போது அவர் வசித்து வந்த வீட்டை காலி செய்யவும் முடிவு செய்திருந்ததாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளனர். மனைவி, பெற்றோர், உற்ரோர் முதலியோரும், இவருக்கு அறிவுரைக் கூறியதாகத் தெரியவில்லை. பெங்களூரில் நல்லவேலை, சம்பளம் இருக்கும் பொழுது, ஏன் இவன் வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டும், அதிலும் சிரியாவுக்குச் செல்ல வேண்டும் என்று கேட்கவில்லை.
பெங்களூரில் தான் தங்கியிருந்த வீட்டை காலி செய்வது பற்றி கூறியது
முகமதுஆரிப்கைதுபற்றிகர்நாடகாஉள்துறைஅமைச்சர்அரகஞானேந்திராகூறியதாவது: “உத்தரபிரதேசத்தைச்சேர்ந்தஒருஇளைஞர், பெங்களூரில்தங்கிசர்வதேசபயங்கரவாதஅமைப்புகளுடன்தொடர்புவைத்திருந்தார். புலனாய்வுஅமைப்புகளுக்குகிடைத்தரகசியதகவலின்அடிப்படையில்அவர்கைதுசெய்யப்பட்டுவிசாரிக்கப்பட்டுவருகிறார். நம்நாட்டில்மதஉணர்வுகளைதுாண்டிவிட்டு, அமைதியைசீர்குலைக்கதிட்டமிடும்சர்வதேசபயங்கரவாதகுழுக்களுடன்தொடர்புவைத்திருக்கும்எந்தநபரும்ஒடுக்கப்படுவர்,” இவ்வாறு அவர் கூறினார். உடனே, இவர் பிஜேபிகாரர், இப்படித்தான் பேசுவார், “இஸ்லாமிக்போபியா,” என்றெல்லாம் கூட விளக்கம் கொடுப்பார்கள். அத்தகைய வாத-விவாதங்களும் ஊடகங்களில் நடந்து கொன்டுதான் இருக்கின்றன. ஆனால், தீவிரவாத செயல்களில் ஈடுபடும் மக்களில் ஏன் முஸ்லிம்கள் இருக்க வேண்டும் என்று யாரும் பதில் சொல்வதாக இல்லை.
[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், Al Qaeda: பெங்களூரில்சாப்ட்வேர்எஞ்சினியர்கைது – அல்–கொய்தாவுடன்தொடர்பு?, SG Balan, First Published Feb 11, 2023, 10:58 AM IST, Last Updated Feb 11, 2023, 12:19 PM IST.
[7] தினமணி, பெங்களூருவில்அல்–கொய்தாபயங்கரவாதிகைது: என்ஐஏஅதிரடி!, By DIN | Published On : 11th February 2023 04:20 PM | Last Updated : 11th February 2023 06:10 PM
23-09-2022 அன்று கோவையில் கார் குண்டு வெடித்தது, சென்னையில் விசாரணை தொடர்ந்து நடந்து வருவது, 07-02-2023 அன்று வெடிப்பொருட்கள் செயலிழக்கச் செய்தது!
23-09-2022 அன்று கோவையில் கார் குண்டு வெடித்தது, சென்னையில் விசாரணை தொடர்ந்து நடந்து வருவது: கோவை கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த ஆண்டு அக்டோபா் 23ஆம் தேதி 23-09-2022 அன்று கார் குண்டு வெடித்தது. இதில் அந்த காரை ஓட்டி வந்த ஜமேஷா முபீன் அங்கேயே உயிரிழந்தார். இதுதொடா்பாக என்ஐஏ குழுவினா் நடத்தி வரும் விசாரணையில் இதுவரை 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில் இந்த வழக்கில் கைதாகி உள்ள முகமது அசாருதீன், அஃப்சா்கான், ஃபெரோஸ்கான், முகமது தெளபீக், ஷேக் இதயத்துல்லா, சனோஃபா் அலி, முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 7 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். அதாவது, சென்னையில் தான் இந்த நீதிமன்ற வழக்கு விசாரணைகள் எல்லாம் நடந்து வருகின்றன. ஆனால், ஊடகங்கள் இவற்றைப் பற்ரியெல்லாம் கண்டு கொள்ளாமல், வேறு விவகாரங்களை ஐத்துக் கொண்டு வாத-விவாதங்கள், பட்டி மன்றங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றன.
சட்டப்படிநடந்துவரும்நீதிமன்றவிசாரணைகளில்காலதாமதம்ஏற்படுவது: இவ்வாறு சட்டப் படி வழக்குகளை விசாரிப்பது, கைது செய்யப் பட்டவர்களை விசாரிப்பது, வாக்குமூலம் வாங்குவது, அதை வைத்து, மறுபடியும் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று சோதனை செய்வது, விசாரிப்பது போன்றவை தொடர்ந்து நடந்து வருகின்றன. இவற்றில் இடையே காலதாமதம் ஏற்படுகிறது. செப்டம்பர் 2022ல் நடந்த குண்டுவெடிப்பிற்குப் பிறகு, நிச்சயமாக சம்பந்தப் பட்டவர்கள் உஷாராகியிருப்பர். இருக்கும் ஆதாரங்களை அழித்திருப்பர். ஆகவே, இவற்றையெல்லாம் மீறி, விசாரணை நடத்தி உண்மையை நிலை நாட்ட என்ஐஏ போன்றோர் மிக கடினமாக வேலை செய்ய வேண்டியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் முஸ்லிம்கள் என்ஐஏவையே எதிர்த்து ஆர்பாட்டம் செய்கின்றனர். சோதனைக்கு வந்தால், கலாட்டா செய்கின்றனர். இதனால், தமிழக போலீஸாரும் கூட வர வேண்டியுள்ளது. இதெல்லாம் இப்பொழுது வழக்கமாகி விட்டது. இதையெல்லாம் யாரும் கண்ட்ப்பதும் இல்லை. மிக சாதாரணமாக எடுத்துக் கொ/ல்கின்றனர் அல்லது கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இப்பொழுது கூட, இந்த விவகாரங்களை சில ஊடகங்கள் தான் வெளியிட்டுள்ளன.
பட்டாசுவாங்கியகடையில்என்ஐஏஅதிகாரிகள்செவ்வாய்க்கிழமை 07-02-2023 அன்றுசோதனை: கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடா்புடைய அசாருதீன் பட்டாசு வாங்கிய கடையில் என்ஐஏ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை 07-02-2023 அன்று சோதனை நடத்தினா். மனுவை விசாரித்த நீதிபதி அந்த 7 பேரையும் 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். அதன்படி அவா்கள் 7 பேரையும் கோவைக்கு வியாழக்கிழமை 02-02-2023 அன்று அழைத்து வந்தனா். கோவையில் அவா்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது கார் வெடிப்பு சம்பவம் தொடா்பான திட்டம் குறித்தும், ஜமேஷா முபீன் குறித்தும், இதில் வேறு எவருக்கேனும் தொடா்பு உள்ளதா என்பது குறித்தும் அவா்களிடம் விசாரணை நடத்தியதோடு, அவா்கள் தெரிவித்த தகவல்களை விடியோவாகவும் பதிவு செய்து கொண்டனா்.
23-09-2022 அன்று குண்டு வெடித்தது என்றால், 07-02-2023 அன்று செல்லும் பொழுது நிலை: அவா்கள் 7 பேரில் அசாருதீன் என்பவா் கோவையிலுள்ள ஒரு பட்டாசுக் கடையில் பட்டாசுகளை வாங்கி அவற்றிலிருந்து திரிகளை மட்டும் எடுத்துவிட்டு அந்த பட்டாசு மருந்துடன் வேறு ரசாயனங்களைச் சோ்த்து புதிதாக வெடிபொருள் தயாரித்திருந்தது விசாரணையில் தெரியவந்தது[1]. இதையடுத்து அசாருதீன் பட்டாசு வாங்கிய கடைக்கு அவரை செவ்வாய்க்கிழமை 07-02-2023 அன்று நேரில் அழைத்துச் சென்று என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்[2]. 23-09-2022 அன்று குண்டு வெடித்தது என்றால், 07-02-2023 அன்று செல்லும் பொழுது நிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கலாம். இதையெல்லாம், என்ஐஏவுக்கு கடினமாக இருந்தாலும், மற்றவர்களுக்கு சாதமாக இருக்கும். இத்தகைய அடைமுறை விவகாரங்களை சட்ட ஓட்டைகளாக்கி தப்பித்துக் கொள்ள முயல்வர்.
வெடிகுண்டுதயாரிக்கபயன்படுத்தப்பட்டுள்ளரசாயனங்கள்முதலியனபறிமுதல், சோதனைக்குஉட்படுத்தப்பட்டன: கார் வெடிப்பு நடந்த பின்னர் ஜமேஷா முபின் வீட்டில் நடந்த சோதனையில் 120 கிலோ எடையிலான வெடி பொருட்கள் இருந்தன. 109 வகையான அந்த பொருட்களை தேசிய புலனாய்வு முகமையினர் பறிமுதல் செய்தனர். இதில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் ரசாயன பொருட்களும் அடங்கும்[3]. இந்த ரசாயன மூலப் பொருட்களில் பொட்டாசியம் நைட்ரேட், நைட்ரோ கிளிசரின், ரெட் பாஸ்பரஸ், பிஇடிஎன் பவுடர் (பென்டேரித்ரிட்டால் டெட்ராநைட்ரேட் பவுடர்), அலுமினியம் பவுடர் ஆகியவை இருந்தன. தவிர, வயர்கள், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஆதரவு பொருட்கள் உள்ளிட்டவையும் இருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டது.வெடி பொருட்கள் ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது[4]. அவையெல்லாம் வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப் படும் பொருட்கள், ரசாயனங்கள் என்று நிரூபிக்கப் பட்டன. இருப்பினும், அவையெல்லாம் எப்படி தீவிரவாதிகள் வசம் செல்கின்றன என்பது புதிராக இருக்கிறது. உதாரனத்திற்கு நைரோ செல்லுலோஸ் வெடிகுண்டுகள் மலை, மலைபாறை, குவாரிக்களில் உபயோகிக்க, சாலைப் பணி முதலியவற்றிற்கும் விற்கப் படுகின்றன. ஆனால், அத்தகைய பொருள் முன்னர் சந்திர பாபு நாயுடு செல்லும் போது உபயோகப் படுத்தப் பட்டன.
ரசாயனங்கள்செயலிழக்கப்பட்டன: பறிமுதல் செய்த வெடி பொருட்கள் அவினாசி ரோட்டில் உள்ள என்ஐஏ தற்காலிக முகாம் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது[5]. நேற்று என்ஐஏ எஸ்பி ஸ்ரீஜித், வெடிகுண்டு அழிக்கும் நிபுணர் பாண்டே தலைமையிலான அதிகாரிகள் வெடி பொருட்கள் எடுத்து செல்லும் சிறப்பு வாகனத்தில் பறிமுதலான வெடிபொருட்களை கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவில் உள்ள சுல்தான்பேட்டையை அடுத்த கந்தம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் வெடி மருந்து குடோனிற்கு கொண்டு சென்றனர்[6]. அங்கு வெடி பொருட்கள் அழிக்கப்பட்டன[7]. வெடி பொருட்கள் அழித்தது தொடர்பான ஆதாரங்களை போலீசார் பதிவு செய்தனர். குறிப்பிட்ட சில வகையான வெடி பொருட்கள் தீ வைத்தும், சில பொருட்கள் மண்ணில் மூடியும் அழிக்கப்பட்டதாக தெரிகிறது[8]. வெடி பொருட்கள் அழிக்கப்பட்டபோது அந்த வளாகத்தில் தொழிலாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை[9]. வெளியே தெரியாமல் மிகவும் ரகசியமாக வெடி மருந்துகளை கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த வெடிமருந்து தொழிற்சாலையின் மேலாளர் கூறுகையில், “கோவையில்கைப்பற்றப்பட்டவெடிபொருட்கள்எங்கள்தொழிற்சாலையில்வைத்துசெயல்இழக்கச்செய்யப்பட்டன. காவல்துறையின்முக்கியஅதிகாரிகள்உட்பட 18 பேர்வந்திருந்தனர்,” என்றார்[10]. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி வெடிபொருட்களை செயலிழக்க செய்துள்ளனர்.
[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கோவைவெடிவிபத்தில்கைப்பற்றப்பட்டவெடிமருந்துகள்அழிப்பு; என்ஐஏநடவடிக்கை, Velmurugan s, First Published Feb 7, 2023, 11:41 AM IST, Last Updated Feb 7, 2023, 11:41 AM IST.
10-11-2022 –வியாக்கிழமை – ஆவணங்கள்பறிமுதல்: ஓட்டேரியில் தாசமக்கான் பகுதி அருகே சலாவுதீன் என்பவா் வீட்டில் வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையா் பவன் குமார் ரெட்டி தலைமையில் போலீஸார் சோதனை செய்தனா். எம்கேபி நகரைச் சோ்ந்த ஜகுபா் சாதிக் என்ற ஜாபா் சாதிக் வீட்டிலும் போலீஸார் சோதனை செய்தனா். மேலும், திருவொற்றியூா், மண்ணடி ஆகிய இடங்களிலும் போலீஸார் சோதனை செய்தனா். சோதனை நடைபெற்ற இடங்களில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனா். வியாழக்கிழமை மாலைக்குள் அனைத்து இடங்களிலும் சோதனை நிறைவு பெற்றது. சோதனையில் முடிவில் பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க், மெமரி கார்டு உள்ளிட்ட மின்னணு கருவிகள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக என்ஐஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்டஐ.எஸ்.ஐ.எஸ்இயக்கஆதரவாளர்கள்லிஸ்ட்: மண்ணடி சைவ முத்தையா தெரு, சேவியர் தெரு, ஏழு கிணறு, கொடுங்கையூர், வடக்கு கடற்கரை, முத்தியால்பேட்டை உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்[1]. கொடுங்கையூர் பகுதியில் புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர்[2]. மண்ணடி பகுதியில் துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் சோதனை நடைபெற்றது. தடைசெய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்க ஆதரவாளர்கள் என சந்தேகம், ஏற்கனவே என்.ஐ.ஏ-வால் விசாரணை செய்யப்பட்டவர்கள் என 109 பெயர்கள் அடங்கிய பட்டியலை மத்திய உளவுத்துறை கொடுத்ததன் அடிப்படையில் தற்போது இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது[3]. இதேபோல் கடந்த வாரமும் பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர்[4]. அதில், ரூ. 56 லட்சம் பணம், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னையில் 15-11-2022 அன்று பல இடங்களில் 20க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சோதனை நடைபெற்றது.
15-11-2022 – நான்குநபர்களிடம்விசாரணை–சோதனை: பட்டியலில் உள்ளவர்களில் பலர், ஏர்கெனவே ஈடுபட்டுள்ள குற்றங்களை வைத்து, தொடர்ந்து விசாரிக்கும்பொழுது, அவர்கள் இன்றும் அத்தகைய லிங்குகளுடன் தொடர்ந்து வேலை செய்து வருவது புலனாகிறது.
முகமது தப்ரஸ் – குறிப்பாக சென்னை கொடுங்கையூர் வள்ளுவர்தெருவில் உள்ள முகமது தப்ரஸ் என்பவர் வீட்டில் சோதனை நடந்தது. இவர் மீது தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு பணபரிவர்த்தனை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.
தவ்பிக் அகமது – அதேபோல் ஏழுகிணறு சேவியர் தெருவை சேர்ந்த தவ்பிக் அகமது என்பவர் சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் உள்ள பயங்கரவாதிகளுக்கு பணபரிவர்த்தனை செய்ததாக ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
ஹாரூன் ரஷித் – மேலும் மண்ணடி சைவ முத்தையா முதலி தெருவை சேர்ந்த ஹாரூன் ரஷித் மீது தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு சிம்கார்டுகள் விற்பனை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஹாரூண் ரஷீத் வீட்டில் இருந்து ரொக்கம் ரூ.4 லட்சத்து 90 ஆயிரம், ரூ.1,600 மதிப்புள்ள சீன கரன்சி, ரூ.4,820 தாய்லாந்து கரன்சி, ரூ.50 ஆயிரம் மியான்மா் கரன்சி, ரூ.7 மதிப்புள்ள சிங்கப்பூா் கரன்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மண்ணடி முத்தையா தெருவில் உள்ள அவரது வா்த்தக நிறுவனத்திலிருந்து மடிக்கணினி, கிரெடிட் அட்டை, டெபிட் அட்டை, மின்னணு கருவிகள், ரூ.10 லட்சத்து 30 ஆயிரத்து 500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முகமது முஸ்தபா – வடக்கு கடற்கரை அங்கப்பன் நாயக்கர் தெருவை சேர்ந்த முகமது முஸ்தபா மீது தடை செய்யப்பட்ட இயக்கத்தினருக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த வழக்கு உள்ளது.
இந்த அதிரடி சோதனையில் தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்புடைய இந்த 4 நபர்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும், அவர்கள் யார் யாருடன் தொடர்பில் உள்ளனர் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 10-11-2022 அன்று சோதனைக்குப் பிறகு, 15-11-2022 சோதன வருகிறது.
15-11-2022 அன்றுஊடகங்களின்செய்தி – விசாரணைக்குப்பிறகுவிவரங்கள்வெளியிடப்படவில்லை: தமிழக ஊடகங்கள் ஏதோ ஜாக்கிரதையாக செய்தி வெளியிடுவதைப் போல உள்ளது[5]. “அதேபோல்மண்ணடியில்உள்ளஒருவீட்டில்துணைஆணையர்ஆல்பர்ட்ஜான்தலைமையில்சோதனைநடைபெற்றுவருகிறது,” கூறப்படுகிறது என்றெல்லாம் தான் செய்திகள் சொல்கின்றன[6]. இதே சிவசங்கர் பாபா என்றெல்லாம், நேரே பார்த்தது போல எழுதுவார்கள். இருப்பினும் சென்னையில் மொத்தம் எத்தனை பேரின் வீடுகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது பற்றிய விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை[7]. சோதனை முடிந்த பிறகு அதுபற்றிய விபரங்களையும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் யாருக்கும் தொடர்பு இருந்தால் அதுபற்றிய விபரங்களையும் போலீசார் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது[8]. கோவை சம்பவம் போன்று வேறு எங்காவது நடந்துவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே இதுபோன்ற சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது[9]. தீவிரவாத செயல்களுக்கு துணை புரிவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை பாயும் எனவும் போலீஸ் தரப்பில் எச்சரிக்கப்படுகிறது[10]. தமிழ்.இந்து[11], “ஐஎஸ்ஐஎஸ்பயங்கரவாதஇயக்கத்தினருடன்தொடர்பில்இருப்பதாகஎழுந்தசந்தேகத்தின்அடிப்படையில், சென்னையில் 5 இடங்களில்மாநகரபோலீஸாருடன்இணைந்துஎன்ஐஏஅதிகாரிகள்திடீர்சோதனையில்ஈடுபட்டனர்,………………….சென்னையில்சிலர்ஐஎஸ்ஐஎஸ்பயங்கரவாதிகளின்தொடர்பில்இருப்பதாகசந்தேகித்துமாநிலஉளவுப்பிரிவுபோலீஸாருக்குமத்தியஉளவுத்துறைசமீபத்தில்ஒருபட்டியல்அனுப்பியது. அதன்அடிப்படையிலேயேதற்போதுசோதனைநடத்தப்பட்டுள்ளது..” என்கிறது[12].
15-11-2022 மாலை பீரிட்டு எழுந்து 16-11-2022 காலையும் அடங்கி விட்ட சோதனை செய்திகள்: 15-11-2022 மாலை மற்றும் 16-11-2022 காலை நாளிதழ்களில் செய்திகள் வெளியிட்டதுடன் அடங்கி விட்டன. மற்ற விசயங்களில், விவகாரங்களில் ஆராய்ச்சி செய்வது, “கிரைம்-நடந்தது என்ன?,” என்று வீடியோ போடுவது, புலன் விசாரணை மேற்கொள்வது, செர்லாக்-சாம்பு, நக்கீரன் போன்ற வேலைகளில் எந்த நிபுணத்துவ நிருபரும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. மாலை டிவிக்களில் வாத-விவாதங்களும் இல்லை. ஆக அப்படியே அடங்கி விட்டது ஆச்சரியமாக இருக்கிறது. தமிழகத்து ஊடகங்களைப் பற்றி கூட ஆராய்ச்சி செய்து, பிச்.டி வாங்கலாம் போலிருக்கிறது.
[11] தமிழ்.இந்து, ஐஎஸ்ஐஎஸ்பயங்கரவாதஇயக்கத்துடன்தொடர்பா? – சென்னையில் 5 இடங்களில்என்ஐஏ, போலீஸார்தீவிரசோதனை, செய்திப்பிரிவு Published : 16 Nov 2022 04:31 AM; Last Updated : 16 Nov 2022 04:31 AM.
கோவையில் திடீரென்று ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு கொண்ட 100 இளைஞர்களை கண்டு பிடித்து விட முடியுமா? தொடர்ந்து ஏன் கண்காணிக்கப் படவில்லை? (2)
ஐஎஸ்ஆதரவுஇளைஞர்களுக்குஉளவியல்ஆலோசனை: இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவைமாநகரில்கார்வெடிப்புதினத்தில்இருந்துதீவிரபாதுகாப்புமற்றும்வாகனதணிக்கையில்போலீசார்ஈடுபட்டுவருகின்றனர். உக்கடம்சங்கமேஸ்வரர்கோயில், கோனியம்மன்கோயில்உள்ளிட்டகோயில்களில்தற்போதுவரைபோலீசார்பாதுகாப்புபணியில்ஈடுபட்டுள்ளனர். உயர்அதிகாரிகளின்உத்தரவுபடி, உளவுத்துறைபோலீசார்தீவிரமாகபலரைகண்காணித்துவருகின்றனர். இந்நிலையில், கோவைமாநகரில்ஐ.எஸ். அமைப்பின்மீதுஈடுபாடுகொண்ட 60க்கும்மேற்பட்டஇளைஞர்கள்கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்[1]. அவர்களதுபட்டியலைதயார்செய்துவைத்துள்ளோம்[2]. அவர்களுக்குகவுன்சலிங்கொடுக்கமுயற்சிசெய்துவருகிறோம். மேலும்மருத்துவகுழுசார்பில், அவர்களுக்குஉளவியல்ஆலோசனைவழங்கவும்திட்டமிட்டுவருகிறோம். அவர்களைநல்வழிப்படுத்தஅனைத்துநடவடிக்கைகளும்மேற்கொள்ளப்படும்………[3]மேலும்உலாமாக்கள், உளவியல்நிபுணர்கள்மூலம்அவர்களுக்குதவறானசெயல்களில்ஈடுபடக்கூடாது, ஐ.எஸ். இயக்கத்தின்மோசனமானசெயல்பாடுகள்உள்ளிட்டவைகுறித்துஎடுத்துகூறி, நல்லகருத்துகளைபோதித்துஅவர்களைநல்லகுடிமகனாகமாற்றும்திட்டம்செயல்படுத்தஉள்ளோம். இதற்காகஅனுபவம்வாய்ந்தஉளவியல்நிபுணர்களைதயாராகஉள்ளோம்[4]…………..…………..…,’’ என்றார்.
தீவிரவாதம்வளர்ந்துஇந்நிலைஅடைந்ததுஎப்படி?: கீழ்கண்ட நிகழ்வுகளிலிருந்து, அத்தகைய நிலை, நிச்சயமாக ஒரே நாளில் உருவாகி விட முடியாது:
போலீஸார் கோவை மாநகரில் ஐ.எஸ். அமைப்பின் மீது ஈடுபாடு கொண்ட 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர்.
அவர்களது பட்டியலை தயார் செய்து வைத்துள்ளனர்.
அவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க முயற்சி செய்து வருகின்றனர்.
மேலும் மருத்துவ குழு சார்பில், அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கவும் திட்டமிட்டு வருகிறது.
அவர்களை நல்வழிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்………
மேலும் உலாமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் அவர்களுக்கு தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது, ஐ.எஸ். இயக்கத்தின் மோசனமான செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூறி, நல்ல கருத்துகளை போதித்து அவர்களை நல்ல குடிமகனாக மாற்றும் திட்டம் ……….செயல்படுத்த முடிவு.
இதற்காக அனுபவம் வாய்ந்த உளவியல் நிபுணர்களை தயாராக்க உள்ளோம்…..
அதனால், பல நாட்களாக, ஆண்டுகளாக நடந்து வரும் நிகழ்வுகளை எப்படி, ஏன், எவ்வாறு கவனிக்கப் படாமல் இருக்கிறது, என்பதும் நோக்கத்தக்கது.
உளவியல்ஆலோசனைஎப்படி, யாரால், எவ்வாறுஎங்கேநடக்கும்?: இதுவரை வெளிவந்துள்ள செய்திகளை கூர்மையாகப் படித்து, திரட்டி, அதில் உள்ள அம்சங்களை கீழ் கண்டவாறு கொடுக்கப் படுகிறது:
கவுன்சலிங் கொடுக்க முயற்சி செய்தல்
உலாமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் அவர்களுக்கு தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது
ஐ.எஸ். இயக்கத்தின் மோசனமான செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூறி,
நல்ல கருத்துகளை போதித்து அவர்களை நல்ல குடிமகனாக மாற்றும் பிரத்யேகமான திட்டம்
அத்திட்டத்தை செயல்படுத்துதல்
பொதுவாக தமிழக ஊடகங்கள், பிரச்சினைகளை அலசுவதில்லை, பல்லாண்டுகளாக இத்தகைய தீவிரமான சிக்கல்கள் மற்றும் தொடரும் கேள்விக்குரிய விஷயங்கள் இருந்தாலும், ஏதோ காரணங்களுக்காக செய்திகளாக வெளியிட்டு அமைதியாகி விடுகின்றனர்.
06-11-2022 அன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை அவரது அலுவலகத்தில் ஜவஹிருல்லா சந்தித்தார். பின்னர், அவர் கூறியபோது[5], “…கடந்த, 1998ல்நடந்தகுண்டுவெடிப்பால், கோவைமக்கள்பாதிக்கப்பட்டு, மீண்டும்சகஜநிலைதிரும்பபலஆண்டுகளானது. கார்வெடிப்புபோல், வேறுசம்பவங்கள்நடக்ககூடாது. இச்சம்பவத்தில்ஈடுபட்டஒற்றைநபரைஇயக்கியதுயார், இவ்வளவுபெரியசம்பவத்தைநடத்துவதன்பின்னணிஎன்ன, என்பதுகுறித்துஉண்மைவெளிக்கொண்டுவரவேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பேஇஸ்லாமியசமூகத்தைசீர்குலைக்ககூடியநோக்கில்செயல்படக்கூடியது[6]. அதன்ஆதரவாளர்களாகஇருப்பவர்கள், அமைதியைசீர்குலைக்கும்நோக்கில்செயல்படுகின்றனர்[7]. இதுபோன்றமனநிலையில்உள்ளவர்களுக்குஉளவியல்ரீதியானகவுன்சிலிங்கொடுக்கபோலீஸ்தயாராகஉள்ளது[8]. போலீசார்சிறப்பாகசெயல்படுகின்றனர்[9]. கார்வெடிப்புசம்பவத்தைஎன்.ஐ.ஏ., எப்படிவிசாரிக்கப்போகிறதுஎன்பதுகேள்விக்குறிதான். தமிழகபோலீசாரேவிசாரிக்கவேண்டும்,” இவ்வாறு அவர் கூறினார்[10].
பயங்கரவாதம், தீவிரவாதம்மற்றும்அழிப்புவாதம்என்றால்என்ன?: பயங்கரவாதம் எனும்பொழுதே சில மனிதர்கள் குறிப்பிட்ட அடிப்படைவாத சித்தாந்தம், கொள்கைகள் மற்றும் ஏற்றுக்கொள்ளப் பட்ட திட்டம், ஆணை மற்றும் உந்துதல், அவற்றின் மூலம் குறிப்பிட்ட மனிதர்கள், மனித குழுமங்கள் மற்றும் நாடுகளைத் தாக்குதல், குண்டுவெடிப்புகள் நடத்துதல், பீதியை உண்டாக்குதல் என்றாகிறது. இவையெல்லாம் ஒரே நாளில் வந்து விடாது. சிறு வயதிலிருந்தே சில அறிவுரைகள், போதனைகள், சித்தாந்தங்கள் முதலியவை படிப்படியாக கற்பிக்கப் படவேண்டும். உலகிலுள்ள மக்களை “ஏற்றுக் கொள்ளப் பட்டவர்கள்” மற்றும் “ஏற்றுக் கொள்ளப் படாதவர்கள்” என்று பிரித்து, அவ்வாறே அந்த பேதம், வித்தியாசம் மற்றும் வேறுபாடுகளை அறிய-புரிய வைத்து வெருப்பை மனங்களில் வளர்ப்பது முதல் பணியாக அமைகிறது. பிறகு, “நாம் உயர்ந்தவர்கள்” ஆனால், அவர்கள் “தாழ்ந்தவர்கள்” எனவே, அவர்கள், “நம்முடன் வாழத் தகுதியற்றவர்கள்” என்று பிரித்து அடையாளம் காண வைப்பது. இல்லை, தங்களை குறிப்பிட்ட சின்னங்களுடன் இணைத்து, பிரித்து அடையாளம் காண வைப்பது என்பதிலும் முடியலாம்.
[9] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், இஸ்லாமியசமூகத்தைசீர்குலைக்கும்ஐஎஸ்ஐஎஸ்..! ஜமீஷாமுபீனைஇயக்கியதுயார்..? ஜவாஹிருல்லாகேள்வி , Ajmal Khan, First Published Nov 7, 2022, 8:36 AM IST; Last Updated Nov 7, 2022, 8:36 AM IST
ஜமேஷாமுபின் – ஜிஹாதியானது, ஐஎஸ்பாணியில் தற்கொலைவெடிகுண்டாகமாறியது, கொலையுண்டது– தெரிய வரும் பின்னணி (3)
சமயஇலக்கியங்கள்அனைத்தும்தமிழில்உள்ளன: விசாரணையின் போது மீட்கப்பட்ட ஆதாரங்களைப் பற்றி அறிந்த ஒரு உயர்மட்ட அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், கோவை, உக்கடத்தில் உள்ள ஜமேஷா முபீனின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் வாசகங்கள் உள்ளிட்ட குறிப்பேடுகளில் ஒரு பகுதி டைரிகள் எனக் கூறினர்[1]. “ஜமேஷாமுபீனின்நாட்குறிப்புபதிவுகள்பெரும்பாலும்மற்றமதங்கள், குறிப்பாகஇந்துமதம்மற்றும்கிறித்துவம்பற்றியஅவரதுபார்வையைவெளிப்படுத்துகின்றன. அவர்அந்தமதங்களின்கடவுள்களின்பெயர்களைமேற்கோள்காட்டியுள்ளார். மேலும், ஒருவரையொருவர்இணைக்கும்அம்புகளுடன்கையால்எழுதப்பட்டசார்ட்விளக்கப்படத்தில்அவற்றைசித்தரித்துள்ளார். சி.ஏ.ஏஹிஜாப்சர்ச்சை, உணவுமீதானகட்டுப்பாடுகள், மாட்டிறைச்சிகாரணமாகநடந்தகொலைகள்போன்றசம்பவங்கள்இந்தியமுஸ்லிம்கள்எதிர்கொள்ளும்பிரச்சனைகளாககுறிப்பிடப்பட்டுள்ளன. முஸ்லிம்கள்இரண்டாம்தரகுடிமக்களாகமாறிவருகின்றனர். இந்தச்பிரச்னைகளைஎப்படிச்சமாளிப்பதுஎன்றும்அவர்திகைத்தார்,” என்று வட்டாரங்கள் தெரிவித்தன[2]. மேலும் சமய இலக்கியங்கள் அனைத்தும் தமிழில் உள்ளன என்று தெரிவித்தனர்.
அனைத்துதரப்புமக்களுடனும்ஒருநல்லிணக்கத்தோடுவாழ்வதையேநாங்கள்விரும்புகிறோம்: மனிதர்களை காபிர், மோமின் எனப் பிரித்து, ஜிஹாதி [புனித போரில்] புரிந்து காபிர்கள் கொல்லப் பட வேண்டும் என்று எழுதியிருப்பது,இப்படி குண்டுவெடிப்புகள் நடத்திக் கொண்டிருந்தால், மனித இனம் என்னாவது என்று யோசிக்காமல், மதவெறியுடன் இருந்தது, முதலியவற்றை கவனிக்கும் பொழுது, எங்கிருந்து மனித நேயம், மனிதத்துவம், அமைதி எல்லாம் வரும் என்பது ஆராய வேண்டியுள்ளது. இந்நிலையில், கோவையில் கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள் சந்தித்து உரையாடினர்[3]. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்[4]. பிறகு, எப்படி, முஸ்லிம் இளைஞர்கள் அவ்வாறு சேர்ந்து திட்டமிடுவார்கள், என்றெல்லாம் தெரியவில்லை. பெற்றோர், உறவினர், மற்றோர் முதலியோர்களுக்குத் தெரியாமல் தான், ஒவ்வொரு தடவையும் இவ்வாறு நடைபெறுகிறது. அதேபோல சொல்லப் படுகிறது. ஆனால், மறுபடியும் ஏதோ ஒன்று வெடிக்கத்தான் செய்கிறது. தவிர இந்த செய்தி வந்த பிறகு தான், பென்டிரைவ், அதில் எஐஎஸ் வீடியோக்கள் போன்ற செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. தமிழ்.இந்துவில் இன்று தான் (04-11-2022) அச்செய்தியே வருகின்றது
ஜமாத்துகளின்சார்பில்வன்மையாககண்டிக்கிறோம்: கோவை உக்கடம் பகுதியில் சம்பவ நிகழ்விடத்தின் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு ஜமாத் நிர்வாகிகள் இன்று சென்று பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது: “3 ஜமாத்களின் சார்பாக கோட்டை சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை சந்தித்து உரையாடினோம். கடந்த வாரம் இந்த பகுதியில் நடந்த சம்பவம் பல்வேறு சமூகங்களுக்கு இடையே ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இஸ்லாமியர்களான நாங்கள் 7 தலைமுறைகளாக இந்த கோட்டைமேட்டில் வாழ்ந்து வருகிறோம். இந்தப் பகுதியில் நாங்கள் ஒற்றுமையுடன், அண்ணன் தம்பிகளாக கடந்த 200 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். இந்த சூழலில் இங்கு நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை கோட்டைமேட்டில் உள்ள ஜமாத்துகளின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இஸ்லாம் ஒருபோதும் வன்முறையைத் தூண்டும் மார்க்கம் அல்ல. நாங்கள் அமைதியை போதிக்கிறோம். அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம். எந்தவிதமான மத பூசல்களுக்கும், அரசியலுக்கும் நாங்கள் ஆட்பட்டு விடக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.
100-க்கும்மேற்பட்டவீடியோக்கள்: முன்னதாக, கோவை மாநகர தனிப்படை போலீசார் கைதான 6 பேர் வீட்டில் சோதனை நடத்தினர். கிடைத்த பொருட்களில், ஒரு பென் டிரைவ் இருந்தது. சோதனை செய்த போது அதிர்ச்சி அடைந்தனர், ஏனெனில், அந்த பென் டிரைவ்வில் 100-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். அமைப்பின் சித்தாந்தங்கள் அடங்கிய வீடியோக்கள் இருந்துள்ளது. இதில், 6 பேரில் ஒருவரது வீட்டில் பென் டிரைவ் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது[5]. அதனை போலீசார் ஆய்வு செய்த போது அதிர்ச்சி ஏற்பட்டது. அதில், ஐஎஸ் தீவிரவாதத்துக்கு ஆதரவான ஏராளமான வீடியோக்கள் இருந்தன[6]. தீவிரவாதிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது போன்ற வீடியோக்கள் மற்றும் கழுத்தை அறுத்து கொலை செய்வது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோக்கள் இருந்தன[7]. இதுதவிர இலங்கை குண்டு வெடிப்பை நிகழ்த்திய நபரின் பேச்சு அடங்கிய வீடியோவும் இருந்துள்ளது[8]. இதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வளவு தெளிவாக இருந்தாலும், இப்பிரச்சினை ஏதோ மழைகாலத்தில் இதுவும் ஒரு செய்தி என்பது போல கருதுவது போலத் தோன்றுகிறது.
‘கோட்டைஈஸ்வரன்கோவிலில்இருந்தகண்காணிப்புகேமராவில்பதிவானகாட்சிகள்வாயிலாக, கார்குண்டுவெடிப்புவழக்கில்துப்புதுலக்கமுக்கியதகவல்கள்கிடைத்தன‘: ‘கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வாயிலாக, கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க முக்கிய தகவல்கள் கிடைத்தன’ என, போலீசார் தெரிவித்தனர்.கோவையில், அக்., 23ல் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் நடந்த கார் குண்டு வெடிப்பில், பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார். இந்த குண்டு வெடிப்பை விசாரித்த போலீசார் சந்தித்த சிரமங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தன்று அதிகாலை, 4:00 மணிக்கு வந்த கார், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் ஒன்றரை நிமிடம் நிற்பதை கண்காணிப்பு கேமரா காட்சிகளில் காண முடிந்தது. அதன் பிறகே கார் வெடித்துள்ளது. கார் காத்திருந்த ஒன்றரை நிமிடத்தில், ஜமேஷா முபின் தான் கொண்டு வந்திருந்த வெடிபொருட்களை வெடிக்கச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். கார் வெடித்தவுடன், அந்த அதிர்ச்சியில், பூட்டப்பட்டிருந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் கதவு தானாக திறந்தது.
கண்காணிப்புகேமராகாட்சிகளைகேட்டுச்சென்றபோது, பள்ளிவாசல்ஒன்றின்நிர்வாகிகடும்எதிர்ப்புதெரிவித்து, போலீசாரிடம்வாக்குவாதம்செய்தது: கோவிலுக்குள் வசிக்கும் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், போலீசார் ஓடி வந்துள்ளனர்.குண்டு வெடிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியில், கோவில் கண்காணிப்பு கேமராவில் அடுத்த இரண்டரை நிமிடங்களுக்கு காட்சிகள் எதுவும் இல்லை. அதன் பிறகே காட்சி பதிவாகியுள்ளது.’கோவிலில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகள் தான் வழக்கில் துப்பு துலக்க பேருதவியாக இருந்தன’ என்கின்றனர் போலீசார்.’சம்பவத்தை சற்று தொலைவில் இருந்து பார்த்த போலீஸ் அதிகாரி, கோவில் அருகே இருக்கும் டிரான்ஸ்பார்மர் வெடித்து விட்டதாக கருதி, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தபடி ஓடி வந்துள்ளார். ‘அருகே வந்த பின் தான், கார் வெடித்தது அவருக்கும் தெரியவந்தது’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த கோவிலுக்கும், ஜமேஷா முபின் வசித்த வீட்டுக்கும் வெகு துாரம் இல்லை. அதிகபட்சம், 300 மீட்டர் தான் இருக்கும். ஆனால், இறந்தவர் யார் என்றும், கார் யாருடையது என்றும், அப்பகுதி பொதுமக்கள் யாரும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை.எந்த ஒரு தகவலும் தெரியாமல், கோட்டைமேடில் போலீசார் வீதி வீதியாக அலைந்தும் விபரம் கிடைக்காமல் தடுமாறினர். கார் வந்த வழித்தடம் கண்டறிவதற்காக, கண்காணிப்பு கேமரா காட்சிகளை கேட்டுச் சென்றபோது, பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகி கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததும் நடந்துள்ளது[9]. தற்போது வழக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் இது பற்றி விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்[10].
வேதபிரகாஷ்
05-11-2022
[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோவைகார்சிலிண்டர்வெடிப்பில்பலியானஜமேஷாமுபீன்; இலக்கைநோக்கிபயணித்தசுயமானதீவிரவாதி! , Written by WebDesk, Updated: October 30, 2022 3:34:14 pm
[5] தினகரன், கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டம்? பென்டிரைவில் சிக்கிய வீடியோ ஆதாரம்; பரபரப்பு தகவல்கள், 2022-11-05@ 00:31:23
கோவைஆர்காஸ்சிலிண்டர்வெடிகுண்டுசோதனை: என்.ஐ.ஏ மற்றும் தமிழக போலீஸார் கோவை குண்டு வெடிப்பு பற்றி ஆய்ந்து வருகின்றனர், விசாரணை நடத்துகின்றனர் மற்றும் வீடுகளில் சோதனைகள் நடக்கின்றன. கைதானவர்களிடமிருந்து வாக்குமூலங்களும் பெறப் படுகின்றன. செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆங்கில ஊடகங்களில் அதிகமாக வரும் பொழுது, தமிழக ஊடகங்கள் அமுக்கி வாசிக்கின்றன. ஜமேஷா முபின் ஏதோ சுயமாக இந்த தீவிரவாதச் செயலில் ஈடுபட்டான் என்றும் தலைப்பிட்டு செய்திகள் வருகின்றன. திராவிடத்துவ வாதிகள், தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போய்விட்டது, என்று பெருமூச்சு விட்டு அமைதியாகின்றனர். ஆனால், அரசியல் செய்பவர்கள், செய்து கொண்டு தான் இருக்கின்றனர். திமுகவினர், “தேசத் துரோகி” என்றெல்லாம் ராணுவ அதிகாரியை டிவி செனலில், கோடிக்கணக்கில் பொது மக்கள் கவனிக்கும் நிலையில் பலமுறை விளிப்பதும் திகைப்பாக இருக்கிறது. அந்த செனல் நிகழ்ச்சி அமைப்பாளர், அத்தகைய பேச்சுகளை “மூட்” கூட செய்யாமல் இருந்ததை கவனிக்க முடிந்தது.
ஜமேஷாமுபின்வீட்டில்கைப்பற்றப்பட்ட 109 பொருட்கள்[1]: ஜமேசா முபினின் வீட்டில் நடந்த சோதனையில் 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ஜிகாத் மற்றும் இஸ்லாமிய சித்தாங்கம் தொடர்பான புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி பலவிதமான செய்திகள் கடந்த ஒரு வாரமாக நாளிதழ்கள் வெளியிட்டு வருகின்றன. ஆனால், எந்த எய்தி தாளோ, ஊடகமோ ஐந்தாறு-ஏழெட்டு பொருட்களைத் தவிர, மற்றதை சொல்ல காணோம். ஆகவே, தமிழ், ஆங்கிலம் மற்றும் இதர ஊடகங்களில் உள்ள எல்லாவற்றையும் தொகுத்து ஒரு லிஸ்ட் தயாரிக்கப் படுகிறது. – அதில்
அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பிளேடு [Surgical blades],
கண்ணாடிகள் [Glass pieces],
9 வாட்ஸ் பேக்டரி [9 watts battery],
9 வாட்ஸ் பேட்டரி கிளிப் [9 watts Battery clips],
வயர் [wires],
சுவிட்ச் [switches],
சிலிண்டர் [cylinders],
ரெகுலெட்டர் [regulators],
டேப் [tapes]
இஸ்லாமிய மதம் கொள்கைகள் தொடர்புடைய புத்தகங்கள் [Islamic literature including Jihadi category],–
உள்ளிட்ட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரமாக இச்செய்திகள் வந்துகொண்டிருந்தாலும், முழு விவரங்கள் வெளியிடாமல் இருப்பதும் திகைப்பாக இருக்கிறது.
ஜமேஷ்முபீனின்குடும்பம், பின்னணி: கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்த முபின் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். படித்து முடித்ததும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அப்போது வீட்டில் அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்த போது, ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணையே நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார். அதன்படி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோவை அல் அமீன் காலனியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணான நஸ்ரத்தை (23) முபின் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கோட்டைமேடு பகுதியில் மனைவியுடன் வசித்து வந்த அவர் அங்குள்ள புத்தக கடையில் வேலைக்கு சேர்ந்தார். இவருக்கு 2 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு முபின் தனது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாரிடமும் பேசுவதில்லை. இந்த நிலையில் திடீரென தான் வேலை பார்த்து வந்த புத்தக கடை வேலையை முபின் விட்டு விட்டார். இதுகுறித்து நஸ்ரத் கணவரிடம் கேட்டதற்கு, தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகவும் தன்னால் வேலை பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்து வீட்டில் இருந்தார்.
கோட்டைஈஸ்வரன்கோவில்அருகேவீடுபார்த்துகுடிபெயர்ந்தது: கோட்டைமேடு பகுதியிலிருந்து, திடீரென்று கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் வீடு பார்த்து இடம் பெயர்ந்தார். வேலைக்கு செல்லாமல் இருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக முபின் வீட்டில் இருக்காமல் வெளியில் சென்றதால் ஏதாவது வேலை பார்க்கிறீர்களா என விசாரித்துள்ளார். அப்போது தான் தேன் மற்றும் நறுமண பொருட்கள் விற்பனை செய்வதாகவும், நாட்டு மருந்து கடையில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். கார் வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு முபின் தனது மனைவியிடம் நாம் வேறு வீட்டிற்கு செல்லலாம் என கூறியுள்ளார். அதன்படி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வீடு பார்த்து மனைவி, குழந்தைகளுடன் குடியேறி உள்ளார். அப்போது முபின் வீட்டிற்குள் 4 பெட்டிகளை எடுத்து வந்தார். இதனால் நஸ்ரத்துக்கு சந்தேகம் ஏற்படவே எதற்காக இந்த 4 பெட்டிகள். அதில் என்ன உள்ளது என கேட்டுள்ளார். அதற்கு முபின், இந்த பெட்டிகளில் பழைய துணிகள் தான் உள்ளது என கூறியுள்ளார். ஆனால் கார் வெடிப்பு சம்பவம் நடந்த பிறகே அந்த பெட்டிகளில் வெடி மருந்து இருந்த தகவல் நஸ்ரத்துக்கு தெரிய வந்துள்ளது.
20-10-2022 அன்றுமனைவிகுழந்தைகளுடன்தாய்வீட்டிற்குசென்றுவிடுதல்: கடந்த மாதம் 20-ந்தேதி, முபினின் மனைவி நஸ்ரத்துக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். முபின் எப்போதும் யாரிடமும் பேசாமல் தனியாகவே இருப்பார். மேலும் எந்நேரமும் செல்போனில் ஏதாவது பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால் சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு நஸ்ரத்தின் வீட்டிற்கு சென்ற முபின் வழக்கத்திற்கு மாறாக அனைவரிடமும் சகஜமாக பேசியுள்ளார். மேலும் குடும்பத்தினர் அனைவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டும் உள்ளார். அன்று மாலையே தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியில் சென்று உள்ளார். அப்போது குழந்தைகளுக்கு பிடித்த ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றையும் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் மனைவியை அவரது தாய் வீட்டில் விட்டு, முபின் மட்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவம் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு தண்ணீரை சேமிப்பதற்கு டிரம் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார்.
22-10-2022 அன்றுமனைவியுடன்பேசியது: அப்போது 3 நாட்களுக்கு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். 22-ந் தேதி இரவு நஸ்ரத் கணவருக்கு எப்போது வீட்டிற்கு வருவாய் என மெசேஜ் அனுப்பினார். அதற்கு நாளை வருவதாக கூறியுள்ளார். அப்போது நஸ்ரத் குழந்தைகள் உன்னை தேடுகின்றனர். வீடியோ காலிலாவது பேசு என மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் அதன்பின்னர் முபின் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தும் முபினை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிகிறது. இதுவே முபின் அவரது மனைவியிடம் கடைசியாக பேசியது. ஆனால் தற்போது வரை முபினுக்கு என்ன நடந்தது என்று அவரது குழந்தைகளுக்கு தெரியவில்லை.
வேதபிரகாஷ்
05-11-2022
[1] ஒவ்வொரு நாளிதழும், செய்தியும் விதவிதமாகக் குறிப்பிடுகின்றன (ஐந்து-ஆறு என்று….), அவற்றைத் தொகுத்து, இங்கு பட்டியலிடப் பட்டுள்ளது.
2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (3)
26-10-2022 (புதன்கிழமை): தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. எல்லைக் கடந்த தீவிரவாத இணைப்புகளால், தமிழக முதல்வர் வழக்கை என்.ஐ.ஏக்கு மாற்ற பரிந்துரைத்தார்.
என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வின்சென்ட் சாலையில் உள்ள அப்சல்கான் வீட்டுக்கு சென்றனர். லாப்டாப்பைக் கைப்பற்றினர்.
இந்த நிலையில், கார் வெடிப்பு சம்பவத்தில் 6-வது நபராக அப்சர்கான் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கார் வெடித்த போது உயிரிழந்த ஜமேஷா முபினின் உறவினர் அப்சர்கான் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 5 பேரிடமும் 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
27-10-2022 (வியாழன்கிழமை): தமிழகம் இந்த வழக்கை, என்.ஐ.ஏவிடம் (NIA) ஒப்படைத்தது. வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் விக்னேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்[1]. என்.ஐ.ஏ எப்.ஐ.ஆர் (FIR) போட்டது. என்.ஐ.ஏ பதிவு செய்து விசாரித்து வரும் இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது[2]. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. அதில் அபாயகரமான 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
28-10-2022 (வெள்ளிக்கிழமை): கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவன் – பெரோஸ் இஸ்மாயில் தான், ஈஸ்டர் குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்டு கைதாகி, கேரளா சிறையில் இருக்கும் மொஹம்மது ஹஸாருத்தீன் மற்றும் ரஷீத் அலி இருவரையும் சந்தித்தாக ஒப்புக் கொண்டான். இவர்களுக்கு ஐசிஸுடனும் [Islamic State of Iraq and Syrai (ISIS),] தொடர்பு உள்ளது[3].
109 பொருட்கள்பறிமுதல் – அவற்றின்எடை 60, 70 கிலோவா, 100 கிலோவா?: முதலில் எச்சரிக்கையாக அமுக்கி வாசித்த ஊடகங்கள், பிறகு, பெரிய “துப்பறியும் சாம்பு” ரேஞ்சில் செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டன[4]. 109 ஐட்டங்களை பட்டியல் போடவில்லை என்றாலும், எடை போட ஆரம்பித்த விட்டன. ஹராசு சரியில்லையா, நிருபர்களுக்கு எடை பார்க்கத் தெரியவில்லையா என்று தெரியவில்லை. 60, 70, 100 என்று குறிப்பிடுகின்றன[5]. பலியான ஜமேஷா முபின் மற்றும் முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 7 பேர் மீதும் 120 பி, 153 ஏ., உபா சட்டப்பிரிவு 16 மற்றும் 17 ஆகிய 4 பிரிவுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது[6]. இதில், வெடி விபத்தை ஏற்படுத்த ஜமேஷா முபின் திட்டமிட்டதாகவும், அவரின் வீட்டில் இருந்து 76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட், பிளாக் பவுடர், ஆக்ஸிஜன் சிலிண்டர், அலுமினியம் பவுடர், சிவப்பு பாஸ்பரஸ், 2 மீட்டர் நீளம் உள்ள திரி, கண்ணாடி துகள்கள், சல்பர் பவுடர், பேட்டரிகள், வயர், பேக்கிங் டேப், கையுறை, நோட்டு புத்தகம், ஜிஹாத் தொடர்பான குறிப்பு அடங்கிய டைரி, கியாஸ் சிலிண்டர் உள்பட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது[7]. மொத்த வெடிப்பொருட்களின் எடையை 65, 75, 100 கிலோ என்று பலவிதமாக ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன[8]. 76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட் என்றால், மீதி 33.5 கிலோ மற்றப் பொருட்கள் இருக்க வேண்டும், ஆக மொத்தம் 100 கிலோ என்று கணக்குப் போட்டிருக்க வேண்டும்[9].
கார்கள்பறிமுதல்: கோவையில் வெடி விபத்து ஏற்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் கடந்த ஒரு வாரமாக நின்றிருந்ததாக கூறப்படும் 12 கார்களை போலீசார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்[10]. வின்சென்ட் சாலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த 7 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சதி வேலைகளுக்காக காரை பயன்படுத்தியது போல இரு சக்கர வாகனங்களையும் பயன்படுத்தலாம் என்ற கோணத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது[11]. இதில், 7 கார்களின் உரிமையாளர்கள் நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததையடுத்து அந்த கார்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள 5 கார்களின் உரிமையாளர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் கரும்புக்கடை, சுந்தராபுரம் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் புதிதாக 3 காவல் நிலையங்கள் உருவாக்கப்பட முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோவையில் குண்டு வெடிப்பு, கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, திருச்சியில் கேட்பாரற்று சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து 10 கார்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்[12]. விழிப்புணர்வு அதிகமாகவே இருக்கிறது போலும்[13]. எல்லா நகரங்களிலும், எல்லா இடங்களிலும், இவ்வாறு வாகனங்கள் நிறுத்தப் பட்டுள்ளன. ஆனால், கார் வெடித்தால் இவ்வாறான, அதிரடி நடவடிக்கை வேற்கொள்வார்களா என்று தெரியவில்லை. போலீஸார், திடீரென்று, இவ்வளவு எச்சரிக்கையாக இப்பொழுது செயல்படுவது தான் ஆச்சரியமாக இருக்கிறது. இருப்பினும், அவர்களது முயற்சிகளை பாராட்டலாம். நம்மை போன்று அவர்களும் கடமையுடன் செயல்படுகிறார்கள்.
கோவைகார்காஸ்சிலிண்டர்வெடிப்புமுதல்கார்குண்டுவெடிப்புவரை: “கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விபத்து…….” என்று ஆரம்பித்து, ஊடகங்கள், “கோவை காரில் காஸ் சிலிண்டர் வெடிப்பு விபத்து..”, மற்றும், “கோவை காரில் இரண்டு காஸ் சிலிண்டர்களில் ஒன்று வெடித்து விபத்து………”, .“கோவை மாருதி காரில் காஸ் சிலிண்டர் வெடித்த விபத்து………”, “கோவை மாருதி காரில் காஸ் சிலிண்டர் வெடித்த வழக்கு” என்றெல்லாம் குறிப்பிடப் பட்டு, “கோவை கார் குண்டு வெடிப்பு வழக்காக” மாறியுள்ளது. போலீஸாருக்கு விருது, பாராட்டு………………ஊடகங்களுக்கு, மெத்தப் படித்து, தமிழகத்தில் ஊறிப்போன நிருபர்களுக்கு, இதெல்லாம் தெரியாதது போல தலைப்பிட்டு செய்திகளை போடுவதிலிருந்து, ஒன்று அவர்களும் விசயங்களை மறைக்கிறார்கள் அல்லது யாருக்கோக் கட்டுப் பட்டு, அவ்வாறான செய்திகளை வெளியிடுகிறார்கள் என்றாகிறது. பிறகு, அவர்களது நடுநிலைத் தன்மை, ஊடக தருமம், பத்திரிக்கா தொழில் நியாயம், செக்யூலரிஸ சித்தாந்தம் முதலியவை பற்றி சந்தேகங்கள் எழத்தான் செய்யும்.
[3] Police sources, on Friday, October , said that one of the six accused in the Coimbatore blast case, confessed during interrogation that he met two men in a Kerala prison who had links with terror group Islamic State of Iraq and Syrai (ISIS), who were involved in the Easter bombings in Sri Lanka. Feroz Ismail confessed that he had met Mohammed Azharuddin and Rashid Ali, lodged in a prison in the neighbouring state and further questioning is on to ascertain the motive behind the meeting, they said. Azharuddin and Ali are in jail in connection with a case against them in Kerala.
[4] தமிழ்.இந்து, கோவை | ஜமேஷாமுபின்வீட்டில் 60 கிலோவெடிமருந்துபறிமுதல்? – போலீஸ்கண்காணிப்பால்மிகப்பெரியநாசவேலைதவிர்ப்பு, செய்திப்பிரிவு, Published : 26 Oct 2022 06:50 AM; Last Updated : 26 Oct 2022 06:50 AM
[12] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோவைசம்பவம்எதிரொலி: திருச்சியில்அனாதையாகநின்ற10 கார்கள்பறிமுதல், Written by WebDesk, Updated: October 28, 2022 3:10:41 pm
2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகிய நிலை (1)
22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட்கிழமை) வரைநடந்துள்ளவைஎன்ன?: 24-10-2022 அன்று தீபாவளி என்பதால், துணிமணி, பட்டாசு, ஸ்வீட் வாங்க வேண்டும், எல்லோருமே ஊருக்குச் செல்ல வேண்டும், வாங்கியதை குடும்பத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டும், சந்தோஷமாக கொண்டாட வேண்டும், என்று லட்சக்கணக்கில் மக்கள் வாகனங்களில், பேருந்துகளில், ரெயில்களில் சென்று கொண்டிருந்தனர். அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்ப, பட்ஜெட்டில் தீபாவளி கொண்டாட திட்டத்துடன் இருப்பர், சென்று கொண்டிருந்தனர். ஆனால், அப்பொழுது, கோயம்புத்தூரில் சிலர் வேறு விதமாக திட்டம் போட்டிருந்தனர் போலும். வெகுஜன மக்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளியை நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, ஊடகங்களில் வழக்கம் போல, தீபாவளி எதிர்ப்பு, பட்டாசு மறுப்பு, நாத்திக-நராகாசுரன் ஆதரவு செய்திகள் வந்து கொண்டிருந்தன[1]. பட்டாசு வெடிக்க வேண்டாம், குறிப்பிட்ட நேரங்களில் தான் வெடிக்க வேண்டும், மீறினால், வழக்கு, புகார், தண்டனை என்றெல்லாம் பெரிய போலீஸ் அதிகாரிகள் மிரட்டியதாக செய்திகள்[2]. அதே நேரத்தில் பட்டாசு விற்பனை பெருக்க வேண்டும் போன்ற பிரச்சாரமும் இருக்கிறது. இன்னொரு பக்கமோ, கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது போன்ற செய்திகள்.
இந்நிலையில்தான்கோவைகார்குண்டுவெடிப்புசம்பவம்–செய்திகள்வரஆரம்பித்தன: 22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட் கிழமை) வரை நடந்துள்ள நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்தால், இந்த கோவை கார் குண்டு வெடிப்பு திட்டமிட்டு நடந்துள்ள-நடத்தப்பட்ட செயல் என்று அறிந்து கொள்ளலாம். பிறகு, மற்ற செய்திகள் எல்லாம் வெளிவர ஆரமித்துள்ளன. ஊடகங்களின் பாரபட்சமிக்க, செய்தி வெளியீட்டுப் போக்கும், “ஆபத்திலிருந்து” மெதுவாக, “குண்டு வெடிப்பு” என்று முடிந்துள்ளது. இருப்பினும் இந்த தீவிரவாதிகள், பயங்கரவாதிள் எல்லோருமே மரியாதையுடன் தான் குறிப்பிடப் படுகிறார்கள். மத்திய உளவுத்துறை காவல்துறையினர் ஜமிஷா தொடர்பான பல்வேறு தகவல்களுடன் அவரை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசுக்கு 2018ம் ஆண்டு முதன் முதலில் தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது[3]. தமிழக காவல்துறையினர் இதனை பெரிதாக கருதவில்லை என்று கூறப்படுகிறது[4].
22-10-2022 (சனிக்கிழமைஇரவு): சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு ஜமேஷா முபின் வீட்டில் இருந்து அவர் உட்பட 5 பேர் மர்மபொருளை தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், முபின் தன்னுடைய வீட்டை காலி செய்ய வேண்டும் என்று கூறியதாகவும், அந்தப் பெட்டியில் ஸ்கிரேப் பொருள்கள் இருந்ததாக முபின் விளக்கம் அளித்ததாக கூறியுள்ளனர். அந்த சிசிடிவி காட்சிகளில் உள்ள மற்ற நபர்கள் 4 பேர் யார் என்பது குறித்து பிறகு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர், என்றெல்லாம் செய்திகள் பிறகு வெளி வந்தன. அப்படியென்றால், இவர்களும் முன்னமே இக்காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். சுற்றியுள்ளவர்கள், இவர்களது நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு, எச்சரித்திருக்கலாம், புகார் கொடுத்திருக்கலாம். ஆனால், முஸ்லிம்கள் எனும் போது, அமைதியாக இருந்து விட்டனர் போலும். ஒரு ஊடகத்தால், அங்கு செய்தி-விவரங்கள் சேர்க்கச் சென்றபோது, ஜன்னல் கதவுகளை அடைத்துக் கொண்டனர், யாரும் பேச முன்வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
23-10-2022 (ஞாயிற்றுக்கிழமை): அதிகாலை சுமார் 4:45 மணி அளவில், கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு பெரும் வெடிச் சத்தம் கேட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் அங்கு வந்து பார்த்துள்ளனர். முதலில், ஏதோ பட்டாசு சத்தம் என்று கூட நினைத்திருக்கலாம். அந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதிகாலை 4 மணி அளவில் சாலையில் கார் செல்வது, கார் நிற்பது பின்பு வெடித்து சிதறும் காட்சிகள் வெளியாகி உள்ளது. விடியற்காலை காரில் உள்ள காஸ் சிலிண்டர் வெடித்து ஒரு ஆள் இறந்தான். செல்போன் உதவியுடன் இறந்தவன் அடையாளம் காணப் பட்டான். வெடித்து சிதறிய காரில் இன்னொரு வெடிக்காத சிலிண்டர் மற்றும் சுற்றிலும் ஆணிகள், பால்ரஸ் போன்றவையும் சிதறிக் கிடந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தடயவியல் துறையினர் காரிலிருந்து 2 முதல் 3 கிலோ 1.5 இன்ச் ஆணிகள் மற்றும் பால்ரஸ் குண்டுகளைக் கண்டறிந்துள்ளனர். ஆணி, பால்ரஸ் வேறு பணிக்காக கொண்டு செல்லப்பட்டதா அல்லது வெடி விபத்தை நிகழ்த்தும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டவையா என்பதை நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஆக, நிச்சயமாக கோவை போலீஸார் சென்னை உயர் அதிகாரிகளுக்கு தெரியப் படுத்தி, விசயம் முதலமைச்சருக்குச் சென்றிருக்கும்.
பிற்பகல் – 23-10-2022 (ஞாயிற்றுக்கிழமை): தொடக்கத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்தை கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி தாமரைக் கண்ணன் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இந்தச் சம்பவத்தின் நிலைமை அறிந்து சென்னையிலிருந்து டி.ஜி.பி சைலேந்திர பாபு விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கோவைக்கு வந்தார். வெடி விபத்து நிகழ்ந்த பகுதியை ஆய்வு செய்தார். அதாவது, விசயம் சாதாரணமானது அல்ல என்பது தெரிந்து விட்டது. பிரசித்தி பெற்ற உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு மட்டுமின்றி, தீபாவளியையொட்டி, இப்பகுதியில் துணி எடுப்பதற்காக அதிக அளவில் மக்கள் கூடும் நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது கோவை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மசூதிகள் முன்பு போலீஸார் பாதுகாப்புப்பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
கார்குண்டுவெடித்தலில்இறந்தவன்ஜமேசாமுபின்: போலீஸார் செல்போன், கார் எண் முதலியவற்றை வைத்துக் கொண்டு விவரங்களை சேகரித்தனர். ஜமேசா முபின் என்பவன் தான் இறந்திருக்கிறான் எனூ முடிவானது. அவன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர். அப்பா இல்லை. அம்மா மட்டும் தான். அவர் மனைவிக்கு செவி மற்றும் பேச்சுத்திறன் இல்லை. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஜமேசாவுக்கும் இதயம், கண் ஆகியவற்றில் சில பிரச்னைகள் உள்ளன. முன்பு பழைய புத்தகக் கடை நடத்தி வந்தவர், பிறகு துணி வியாபாரம் செய்து வந்திருக்கிறார். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர். அதனால்தான் கடந்த 2019ம் ஆண்டு இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு பிறகு ஜமேசா முபினிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்த கார் வெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு போலீஸ் அவர் வீட்டில் நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு கடிதத்தில் சுற்றிப் பார்க்கவுள்ள சுற்றுலா தலங்கள் என எழுதி ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம், ஆணையர் அலுவலகம், ரேஸ்கோர்ஸ், விக்டோரியா ஹால் (மாநகராட்சி அலுவலகம்) ஆகிய பகுதிகளை குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம், இந்தப் பகுதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இப்படி செய்திகள்……
வாட்ஸ்–ஆப்பதிவு, இறப்புஉண்மைஎன்றால், அதுதற்கொலைகுண்டுவெடிப்புஆகிறது: விபத்து நடந்தக் காரை ரூ.10,000க்கு தல்காவிடம் இருந்து வாங்கியுளளார். இப்படி கைது செய்யப்பட்ட அனைவரும், இந்த சதித் திட்டத்தில் ஒவ்வொரு பணியைச் செய்துள்ளனர். ஜமேசா அவ்வபோது கேரளா சென்று, அங்கு ஏற்கெனவே என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்டுள்ள அசாருதீன் என்பவரைச் சந்தித்து வந்துள்ளார். ஆங்காங்கே சிறுக சிறுக சேகரித்து 75 கிலோ வெடி மருந்துக்கான வேதிப் பொருள்களை வாங்கியுள்ளனர். வெடி பொருள் தயாரிப்பது எப்படி என்பதை யூ-ட்யூபில் தேடிப் பார்த்திருக்கிறார். கைது செய்யப்பட்டவர்கள் இல்லாமல், இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கிறது.” என்றனர். …….’வாட்ஸ்ஆப்ஸ்டேட்டஸில், என்னுடையஇறப்புசெய்திஉங்களுக்குதெரியும்போதுஎனதுதவறைமன்னித்துவிடுங்கள், குற்றங்களைமறந்துவிடுங்கள்எனதுஇறுதிசடங்கில்பங்கேறுங்கள். எனக்காகபிரார்த்தனைசெய்யுங்கள்,” என்று பதிவிட்டு உள்ளார். இதற்கான புகைப்படத்தை அவர் பதிவேற்றி இருக்கிறார். இதை பற்றி விசாரிக்க வேண்டும். இது ஐஎஸ்எஸ் தொடர்புடைய வாசகம். அவர்கள்தான் தற்கொலை தாக்குதல்களுக்கு முன்பாக இப்படி எல்லாம் போஸ்ட் செய்வார்கள்…..இப்படியும் செய்திகள்! வாட்ஸ்-ஆப் பதிவு, இறப்பு உண்மை என்றால், அது தற்கொலை குண்டு வெடிப்பு ஆகிறது, “சூஸைட் பாம்பர்” என்றாகிறது!
[1] திக-திமுகவினர் தொடர்ந்து தங்களது ஊடகங்களில் இத்தகைய பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், உலகம் முழுவதும் கொண்டாடப் பட்டு, உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.
[2] சுவாசிக்கும் காற்று மாசு படுகிறது என்ற கோணத்தில் உச்சநீதி மன்றமே வரையறை கொடுத்திருப்பதால், அதன் மீது, மாநில அரசுகள் மற்றும் இதர நிறுவனங்கள், இயக்கங்கள் இதை பெரிது படுத்தி, பிரச்சாரம் செய்கின்றன.
[3] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், உளவுத்துறை ‘அன்றே’ கொடுத்தசிக்னல்!.. கிடப்பில்போடப்பட்டதா ? கோவைகார்குண்டுவெடிப்புசம்பவம், Raghupati R, First Published Oct 28, 2022, 7:56 PM IST; Last Updated Oct 28, 2022, 8:34 PM IST.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பான அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்தது (2)
இமயமலை முதல் குமரி வரை இந்தியா ஒன்றுதான். அதில் உள்ள அனைவரின் பாதைகளும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும்: சந்திப்பில் மதரஸாவில் பயிலும் குழந்தைகளிடம் பேசிய மோகன் பாகவத், நாட்டின் மீதான அன்பையும் மனித வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். குழந்தைகளுக்கு மதரஸாவில் குரான் கற்பிக்கப்படுவது போல், இந்து மத வேதமான பகவத் கீதையையும் ஏன் கற்பிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், “இமயமலை முதல் குமரி வரை இந்தியா ஒன்றுதான். அதில் உள்ள அனைவரின் பாதைகளும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும்,” என்று பேசினார். தொடர்ந்து மதரஸா நிர்வாகிகளிடம், “மதரஸாக்களில் கல்வி கற்கும் முஸ்லிம் சிறார்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இந்தி தெரியாததால், விமான நிலையம், ரயில் நிலையம் போன்றவற்றில் படிவத்தை அவர்களால் நிரப்ப முடியவில்லை. மதரஸாக்களில் நவீன அறிவைக் கற்பிக்க வேண்டும். ஒருமித்த கருத்து இல்லாத பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக வாழ விரும்புகிறோம் என்பதே அனைவராலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது,” என்று பாகவத் பேசினார்.
மோகன்பகவத்மற்றும்ஐந்துமுஸ்லீம்சமூகதலைவர்களிடையேஅண்மையில்நடைபெற்றசந்திப்பு: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் சந்திப்பு நடைபெற்றது[1]. பசுவதை, இழிவாக பேசுதல் உள்பட இரு சமூக முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது[2]. தொடர்ந்து இது போன்ற சந்திப்புகள் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அரை மணி நேரம் திட்டமிடப்பட்ட சந்திப்பு 75 நிமிடங்கள் நீடித்தது. ஆர்எஸ்எஸ்யின் தற்காலிக டெல்லி அலுவலகமான உதாசீன் ஆசிரமத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பகவத், சங்கத்தின் சா சர்கார்யவா கிருஷ்ண கோபால், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ். ஒய் குரைஷி, முன்னாள் டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் AMU துணைவேந்தர் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஜமீர் உதீன் ஷா, ஆர்எல்டி தலைவர் ஷாகித் சித்திக், தொழிலதிபர் சயீத் ஷெர்வானி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பசுவதைமற்றும்காஃபிர் (முஸ்லீம்அல்லாதவர்களுக்குகுறிக்கபயன்படும்சொல்) போன்றபிரச்சனைகள்குறித்துபேசப்பட்டது: குரைஷி மற்றும் சித்திக் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், “பேச்சுவார்த்தைசுமூகமானசூழலில்நடைபெற்றது. கூட்டத்திற்குப்பிறகு, முஸ்லிம்சமூகத்துடன்தொடர்ந்துதொடர்பில்இருக்கநான்குமூத்ததலைவர்களைபகவத்நியமித்தார். எங்கள்பக்கத்தில், ஆர்எஸ்எஸ்உடனானபேச்சுவார்த்தையைதொடரமுஸ்லீம்மூத்ததலைவர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள்மற்றும்தொழில்வல்லுநர்களைநாங்கள்நியமிக்கஉள்ளோம்.” பசுவதை மற்றும் காஃபிர் (முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குறிக்க பயன்படும் சொல்) போன்ற பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது[3]. பசுவதை மற்றும் காஃபிர் குறித்து மக்கள் மகிழ்ச்சியடையவில்லை என்று பகவத் கூறினார்[4]. அதற்கு பதிலளித்த நாங்கள், “அதன்மீதுஎங்களுக்கும்அக்கறைஉள்ளது. பசுவதையில்ஈடுபட்டால், சட்டத்தின்கீழ்தண்டிக்கப்படவேண்டும்என்றுகூறினோம். காஃபிர்என்பதுஅராபியமொழியில்நம்பிக்கையற்றவர்களைகுறிக்கபயன்படுத்துவது. இதுதீர்க்கப்படமுடியாதபிரச்சினைஅல்லஎன்றுஅவரிடம்கூறினோம். அதேபோல்இந்தியமுஸ்லீம்களைபாகிஸ்தானியர்அல்லதுஜெகாதிஎன்றுகூறும்போதுநாங்கள்வருத்தமடைகிறோம்,” என்று கூறினோம்.
நூபுர் ஷர்மா விவகாரம் மற்றும் தொடர்ந்த வன்முறை: ஆர்எல்டி தேசிய துணைத் தலைவர் சித்திக் கூறுகையில், “நூபுர் ஷர்மா விவகாரம் நடந்தபோது ஆர்எஸ்எஸ் உடன் சந்திப்பை நாடினோம். பல இடங்களில் வன்முறை நடந்தது. முஸ்லீம் சமூகத்துக்குள்ளும் அசாதாரண சூழல் உருவாகியிருந்தது. மோகன் பகவத் சந்திப்பதற்கான தேதியை பெற்ற நேரத்தில், நூபுர் ஷர்மா சம்பவம் நடந்து ஒரு மாதமாகிவிட்டது. அது சற்று ஓய்ந்திருந்தது. எனவே இரு சமூகத்தினருக்கும் இடையிலான வகுப்புவாத நல்லிணக்க விவகாரங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம் என்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார். இத்தகைய சந்திப்புகள், உரையாடல்கள், தொடரவேண்டும், அமைதி நிலவ வேண்டும், மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
நல்லிணக்கத்தைவலுப்படுத்தவும், உள்உறவுகளைமேம்படுத்தவும்முஸ்லீம்மதகுருகளைதலைவர்களைசந்தித்துவருகிறார்: பகவத்தின் திடீர் விசிட் குறித்து ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் பிரமுக் சுனில் அம்பேகர் வெளியிட்ட அறிக்கையில், “சர்சங்கசாலக் அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்கிறார். இது ‘சம்வத்’ செயல்முறையின் ஒரு பகுதியாகும்” என்று கூறினார்[5]. ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் கடந்த சில நாட்களாக மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், உள் உறவுகளை மேம்படுத்தவும் முஸ்லீம் மதகுருகளை தலைவர்களை சந்தித்து வருகிறார்[6].. மாற்று மதம் மற்றும் நம்பிக்கை கொண்டவர்களுடன் தொடர்பு ஏற்படுத்துவது என்ற நோக்கில் இந்த சந்திப்பு நடந்தது[7]. அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது[8]. மேலும் இது தொடர்ச்சியான இயல்பான சம்வத் செயல்முறையின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் தெரிவித்தார்[9]. ஆனால் கடந்த மாதமும் ஐந்து முஸ்லிம் தலைவர்களை பகவத் சந்தித்தார். அப்போது நாட்டில் நல்லிணக்க சூழல் நிலவுவது குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, பகவத் சமீபத்தில் டெல்லியின் முன்னாள் லெப்டினன்ட் கவர்னர் நஜீப் ஜங், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரைஷி, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜமீர் உதின் ஷா, முன்னாள் எம்.பி. ஷாகித் சித்திக் மற்றும் தொழிலதிபர் சயீத் ஆகியோரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது[10].
தீவிரவாததொடர்புகள்நீங்கவேண்டும்: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என கேரளா கோழிக்கோடு, டில்லி, மும்பை, அசாம், தெலுங்கானா, பெங்களூரூ, லக்னோ, சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட 13 மாநிலங்களில் தேசிய புலனாய்வு படையினர் நாடு முழுவதும் அதிரடி சோதனை மேற்கோண்டனர். அதனுடன் தொடர்பு கொண்டுள்ளவர்கள், குறிப்பாக சட்டவிரோதமான தொடர்புகள், நிதியுதவி பெறுபவர்கள், தீவிரவாத சம்பந்தம் உள்ளவர்கள் தண்டிக்கப் பட வேண்டும், மற்றவர்கள் அவர்களிடமிருந்து விலக வேண்டும். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை, சேர்ந்த 106 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கேரளா, தமிழகம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் வன்முறைச் செயல்களும் ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், அமைதி காக்க, இத்தகைய உரையாடல்கள் அந்தந்த மாநிலங்களிலும் ஆரம்பிக்க வேண்டும். மக்களுக்கு ஏற்றமுறையில் நெருங்கி வர உரையாடல்கள் அமைய வேண்டும். அப்பொழுது தான், பதட்டம் நீங்கி, நட்பு, உறவுகள் மேன்படும். இந்திய முஸ்லிம்கள் இந்தியாவின் பொருளாதார, மற்ற முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும்.
[3] தமிழ். இந்தியன்.எக்ஸ்பிரஸ், மோகன்பகவத்– முஸ்லிம்தலைவர்கள்சந்திப்பு: பசுவதைஉட்படமுக்கியபிரச்னைகள்பற்றிபேச்சு, Written by WebDesk, Updated: September 22, 2022 6:53:34 pm.
ஆர்எஸ்எஸ்அமைப்பின்முஸ்லிம்களுடனானஉரையாடல்: முன்னர் ஶ்ரீசுதர்ஷன்ஜி என்பவர் சங்கசாலக் / தலைவராக இருந்த போது, ஆர்எஸ்எஸ் கேரள கிருத்துவர்களுடன் உரையாடல் வைத்துக் கொண்டது[1]. அப்பொழுது கேரளாவில் கிருத்துவர்களுக்கும், ஸ்வயம் சேவகர்களுக்கும் மோதல்கள் இருந்து வந்தன. பிறகு நிலைமை சுமுகமானது. இப்பொழுது, கேரளாவில் கிருத்துவர்களுக்கும், ஸ்வயம் சேவகர்களுக்கும் உறவுகள் இன்னும் மேன்பட்டுள்ளது. மோடியை கிருத்துவ மதத் தலைவர்கள் வரவேற்கிறார்கள். வாரணாசியின் ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம், முஹம்மது நபி பற்றிய நுபுர் ஷர்மாவின் கருத்து, அதன் தொடர்பாக ஒரு இந்து கொலை செய்யப் பட்டது மற்றும் கர்நாடகாவில் ஹிஜாப் பற்றிய சர்ச்சை என இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தில் அமைதியின்மை நிலவிவந்த நிலையில், அனைத்து இந்திய இமாம் அமைப்பின் தலைவரான இமாம் உமர் அகமது இல்யாசியை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் டெல்லியில் உள்ள மசூதி ஒன்றில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சில வாரங்கள் முன்பு தான் “ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தைத் தேடிச் செல்ல வேண்டாம்,” என்று மோகன் பாகவத் பேசியிருந்தார். இதன் தொடர்ச்சியாக சந்திப்பு நடத்தியிருப்பது முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.
உலகின்மிகப்பெரியஇமாம்களுக்கானஅமைப்பாகஅகிலஇந்தியஇமாம்அமைப்புஆர்எஸ்எஸ்தலைவருக்குஅழைப்புவிடுத்துள்ளது: அகில இந்திய இமாம் அமைப்பு, இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுக்கான அமைப்பாக செயல்பட்டு வருகிறது[2]. உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பாக அகில இந்திய இமாம் அமைப்பு கருதப்படுகிறது[3]. இந்த அமைப்பின் தலைவரான உமர் அகமது இலியாசி. இவர், ஒரு மசூதிக்குள் வசிக்கிறார்[4]. அவரது வீடும் மசூதியும் ஒன்றுதான். அதில் ஒரு மதரஸாவையும் நடத்தி வருகிறார்[5]. இதை பார்வையிட, இமாம் இல்யாசி மோகன் பாகவத்தை அழைப்பு விடுத்திருந்தார். பின்னர் இந்தச் சந்திப்பு குறித்து தெரிவித்த உமர் அகமது இலியாசி, “எங்களதுஅழைப்பைஏற்றுஆர்எஸ்எஸ்தலைவர்மோகன்பாகவத், அகிலஇந்தியஇமாம்அமைப்பின்அலுவலகத்திற்குவருகைதந்ததுமிகுந்தமகிழ்ச்சிஅளிக்கிறது. அவர்நமதுநாட்டின்தந்தை. நான்கேட்டுக்கொண்டதற்குஇணங்க, தாஜ்வீதுல்குரான்மதரசாவைஅவர்பார்வையிட்டார். அங்குகல்விபயிலும்மாணவர்களுடன்அவர்கலந்துரையாடினார். அப்போது, நமதுமரபணுஒன்றுதான்என்றும், கடவுளைவழிபடும்முறைதான்வேறானதுஎன்றும்மோகன்பாகவத்கூறினார்,” எனத் தெரிவித்தார். இந்த மகிழ்ச்சியான வெளிப்பாடு, நல்ல சகுனமாக இருக்கிறது எனலாம்.
ஆர்எஸ்எஸ்தலைவர்மோகன்பகவத்மசூதிமற்றும்மதரஸாவுக்குவிஜயம்செய்தது: இருப்பினும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் டெல்லியில் உள்ள மசூதி, மதரசாவுக்கு 22-09-2022 அன்று திடீரென சென்றார்[6], என்று தினகரன் போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மதரசாவில் உள்ள முஸ்லிம் மாணவர்களுடன் கலந்துரையாடினார்[7]. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், டெல்லி கஸ்துாரிபாய் காந்தி மார்க்கில் உள்ள மசூதி மற்றும் ஆசாத்பூரில் உள்ள ஒரு மதரசாவுக்கு நேற்று சென்றார்[8]. மதரசா மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். பகவத் உள்ளே சென்றதும் மாணவர்கள் வந்தே மாதரம், ஜெய் ஹிந்த் என கோஷமிட்டு வரவேற்றனர்[9]. மோகன் பகவத் மதரசா செல்வது இதுவே முதல் தடவை என்று ஆர்எஸ்எஸ் பிரமுகர் தெரிவித்தார். இதெல்லாம்,ஈந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கான சிறந்த முயற்சியாகவே தென்படுகிறது. இன்றைய உலக சூழ்நிலைகளிலும், மக்களிடையே நட்புறவு மிக அத்தியாவசமாக தேவைப் படுகிறது. குறிப்பாக, பொருட்களை பகிர்ந்து நுகரும் நிலையில் உலக மக்கள் உள்ளார்கள். உக்ரைன்–ரஷ்யா போர் அதனை வெளிப்படையாக எடுத்துக் காட்டியுள்ளது. அதில் மதம், மொழி, முதலியவை பார்க்க முடியாது.
சுமுகமானபரஸ்பரபேச்சு: மோகன் பகவத் மாணவர்களிடையே பேசிய பகவத், ‘ஒவ்வொரு மதத்தினரின் வழிபாட்டு முறைகள் வேறு விதமானதாக இருந்தாலும், அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும்,’ என்பதை வலியுறுத்தினார். இது பற்றி அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எம்பி அசாதுதீன் ஒவைசி கூறுகையில், ‘ஆர்எஸ்எஸ்சின் கொள்கைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். முஸ்லிம் உயர் குடிமக்கள் சிலரை அவர் சந்தித்துள்ளார். அடிமட்டத்தில் உள்ளவர்களை பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியாது,’ என்றார்[10]. ஒருவேளை, இவ்வாறு இந்து-முஸ்லிம் தலைவர்கள் நெருங்கி வருவது அவருக்குக் காட்டமாக இருக்கிறது போலும். ஒருவேளை அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு விசயங்கள் புரியாமல், தெரியாமல் இருந்தால், அவர்களையும் உரையாடலுக்கு அழைக்கலாம். ஏனெனில், பெரும்பாலான மக்கள் சாதாரண மக்களே, அவர்கள் தினம்ம்-தினம் தங்களின் வேலை, தொழில், கடமைளை செய்ய வெளியே வந்து கொண்டிருப்பார்கள், சந்திப்பார்கள், பழகுவார்கள். தேசத் தந்தை பகவத்: இந்திய இமாம்கள் அமைப்பின் தலைவர் உமர் அகமது பேசுகையில், ‘மோகன் பகவத் இந்த நாட்டின் தேச தந்தை’ என்று புகழ்ந்தார். ஆனால். உடனே குறுக்கிட்ட மோகன் பகவத், ‘நாட்டுக்கு ஒருவர்தான் தேச தந்தை. நாம் அனைவரும் தேசத்தின் குழந்தைகள்,’ என்றார்[11]. அதாவது, மஹாத்மா காந்தி தான், தேசப் பிதா என்று வற்புருத்தியுள்ளதைக் கவனிக்கலாம்.
மதரஸாவுக்கு வருமாறு அழைத்த இமாம் இல்யாசி: “நீங்கள் மதரஸாவிற்குச் சென்று பாருங்கள். இப்போதெல்லாம் மதரஸாக்கள் பற்றி அதிகம் பேசப்படுகிறது. நீங்களே பாருங்கள் உங்களுக்குப் பிடிக்கும்,” என்று இமாம் இல்யாசி அழைப்பு விடுதத்தன் பேரில், கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பே சந்திப்பு திட்டமிடப்பட்டது என்று ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். பொதுவாக நேரில் சந்தித்து பேசும் பொழுது, பெரும்பாலான சந்தேகங்கள், தவறான புரிதல்கள் மற்றும் கருத்துகள் முதலியவற்றை உண்மை நிலை அறிந்து மாற்றிக் கொள்ளலாம். மேலும், இந்த சந்திப்பு நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையுடன் தொடர்பில்லாதது என்றும் ஆர்எஸ்எஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லி, உத்திரபிரதேசம், ஆந்திரா, தெலிங்கானா, தமிழகம் என்று பல மாநிலங்களில் மதரஸா செயல்பாடுகள், வக்பு சொத்துகள் பற்றிய சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. உபியில் மதரஸாக்களை பார்த்து, அளவிடும் வேலைகள் ஆரம்பித்துள்ளன. பெரும்பாலான, முஸ்லிம் அமைப்புகள், இதற்கு ஒப்புக் கொண்டுள்ளன.
[1] Inter-religious dialogue – மதங்களுக்குள் இடையிலான உரையாடல் என்ற முறையை கிருத்துவர்கள் கடைபிடித்து வருகிறார்கள். முஸ்லிம்கள் அதில் ஈடுபடாமல் இருந்தாலும், சூபித்துவம் போன்ற நிலைகளில் நெருங்கி வந்த / வரும் நிலைகள் உள்ளன.
அண்மைய பின்னூட்டங்கள்