Archive for the ‘இந்திய யுனீயன் முஸ்லீம் லீக்’ category
ஏப்ரல் 2, 2020
இரு நகரங்கள், இரு மதங்களின் கூடுதல், விளைவு கொரோனா பாதிப்பு, பரப்பு மற்றும் குற்றச்சாட்டு, அபாயகரமான விளைவு! [1]

தென்கொரியாவில் ஒரு கிருத்துவ சர்ச் மூலம் கொரோனா பரப்பப் பட்ட நிகழ்ச்சி [மார்ச்.2020]: தென்கொரிய டேகு நகரத்தில் [the southern city of Daegu] உறுதி செய்யப் பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு ஷின்சியோஞ்சி சர்ச் [mysterious Shincheonji Church of Jesus] உடன் சம்பந்தப் படுகிறது[1]. 75% தில்லி நிஜாமுத்தீன் தப்லிக் மசூதி போல, தென் கொரியாவில், ஷின்சியோஞ்சி சர்ச் [mysterious Shincheonji Church of Jesus] கொரோனா வைரஸ் பரப்புவதில் சிக்கியுள்ளது. சுமார் 7,400 பேர் தாக்குதலில் உறுதி செய்யப் பட்ட நிலையில், அவர்களுடைய தொற்றுக்கு மூலம, அந்த சர்ச் என்று அறியப் பட்டுள்ளது. பாதிக்கப் பட்ட நோயாளி எண்.31 [Patient No. 31] என்றழைக்கப் படும் பெண்மணி தான், முதன்முதலில் அந் த வைரஸைப் பெற்று, மற்றவர்களுக்குப் பரப்பியதாக தெரிகிறது. அதன் படி, பரிசோதனை செய்ததில், 63.5% கொரோனா வைரஸ் பரப்பு மூலம் அந்த சர்ச் தான் என்று காட்டியது. வைரஸ் பாதிப்பில் சைனாவுக்கு அடுத்தபடியாக, தென்கொரியா உள்ளது. ரகசியமாக கூடுதல், மாஸ்க் அணியாமல் இருத்தல், நெருக்கமாக இருந்து வேண்டுதல், முதலிய காரணங்களினால் கோவிட்-19 பரவியது, இதனால், கொரிய அரசு உடனடியாக, கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

சர்ச் தலைவர் மன்னிப்பு கேட்டது [31-03-2020]: ஆனால், சர்ச் எல்லா குற்றச்சாட்டுகளையும் மறுத்தது. இந்த சர்ச்சின் எதிரிகள் மற்றும் பிடிக்காத கணவன் – மனைவிமார் தான் புகார் கூறியுள்ளனர் என்கிறது. மேலும், அச்சர்ச்சை சேர்ந்தவர்களை பலர் வேலையிலிருந்தும் நீக்கியுள்ளனர். 27% ஒவ்வாத, கிருத்துவர்கள் இருக்கும் தென்கொரியாவில் புரொடெஸ்டென்ட் சர்ச்சுகள் அதிகம். இதனை கிருத்துவ-எதிர் சர்ச்சாகக் கருதுகின்றனர். ஆக தென்கொரியாவிலும், கிருத்துவர்களா, கிருத்துவர்கள் அல்லாதவர்களா என்ற பிரச்சினையை விட தொற்று நோயை எதிப்பில் தான் நிற்கிறது. அந்த பெண்ணின் விவரங்கள், சென்று வந்த இடங்கள், சந்தித்த நபர்கள் என்று ஆய்ந்து வருகிறது, தொடர்பில் பல தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில் அந்த சர்ச்சின் தலைவர் லீ மேன் ஹீ [Lee Man-hee] மன்னிப்புக் கேட்டார்[2]. இருப்பினும், சென்ற உயிர்கள் திரும்ப வராது. அதனால், கிளம்பியுள்ள பீதியும் அடங்கவில்லை. தனிமைப் படுத்துதல், வீட்டில் அடைப்பட்டு கிடத்தல், உணவு அத்தியாவச பொருட்களுக்காக கவலைப் படுதல் முதலிய கஷ்டங்கள் தொடர்ந்து இருக்கின்றன.

உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கக் கூடிய கரானோவை விட கொடி யது பார்ப்பனீயமே என்று திராவித்துவவாதிகள் கூறுவது [30-03-2020, விடுதலை]: தில்லியில் தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய தமிழக துலுக்கர்களில் பலர், இந்த கொரோனா தொற்றுக்கு உட்பட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே மதுரையில் 25-03-2020 அன்று ஒருவர் இறந்தாகி விட்டது. இந்நிலையில், திராவிட சித்தாந்திகள், இதையெல்லாம் கண்டு கொள்ளாமல், “பார்ப்பனியம், கொரோனா வைரஸை விட கொடியது,” என்று செய்தி வெளியிட்டுள்ளார்கள்[3]. கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமை தாங்கி நடத்தி வைத்து பேசிய உரையில், “மக்களை, உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக் கக்கூடிய கரானோவை விட கொடி யது பார்ப்பனீயமே. பார்ப்பனீயத்தையே பதற வைக்கக்கூடிய திராவிடர் கழகம் துணிச்சலோடு எதையும் எதிர்கொள்ளும். எங்கள் தலைவர் ஆசிரியர் ‘கரோனா‘ பற்றிய விழிப்பு ணர்வை மக்கள் மத்தியில் விதைத்து உள்ளார். எங்கள் பெரியார் மருத்துவக் குழுமம் விழிப்புணர்வை – பாதுகாப்பான வாழ்வை உறுதிப்படுத்தி வருகிறது”. அதாவது உலகத்தில் என்ன நடந்தாலும், அவற்றை எல்லாம் மறைத்து, பிராமணர்களை எதிர்த்து துவேசமாக பேசுவது, காழ்ப்புடன் சித்தரிப்பது, பொது இடங்களில் கிண்டல் செய்வது, பூணூல் அறுப்பது, அடிப்பது, ஏன் கத்தியால் வெட்டுவது என்ற நிலைக்கு வந்துள்ளது. அந்நிலையில், இவர்கள் இன்றும் இத்தகைய காழ்ப்பு, வெறுப்பு, துவேசம் முதலிவற்றை வைத்துக்கொண்டு பரப்புகிறார்கள் என்றால், வன்மம், வன்முறை, அவதூறு போன்றவை அவர்களிடம் தான் நோய் போன்று பின்னிப் பிணைந்துள்ளது. ஆகவே, இத்தகைய காழ்ப்பு, வெறுப்பு, துவேசம் எங்கிருந்து வந்தது என்று பார்க்க வேண்டியுள்ளது.

திராவிடத்துவவாதிகள் இந்துவிரோதிகளாகத் தான் இருந்து வந்துள்ளனர்: திமுக, முஸ்லிம்லீக்குடன் எப்பொழுதுமே கூட்டு வைத்துக் கொண்டிருந்தது. அதே போல திகவும் இஸ்லாத்தை விமர்சித்தது கிடையாது. ஈவேரா முதல் இப்பொழுது வரை அந்த பாரம்பரியம் தொடர்கிறது. புத்தகக் கண்காட்சிகளில், அடுத்த-அடுத்த ஸ்டால்களில் திகவும், முஸ்லிம் புத்தக விற்பனை நடந்தது சகஜமாக இருந்தது. கடவுள் நம்பிக்கை இல்லாத, நாத்திகக் கூட்டம் என்றால், முஸ்லிம்களால் அவ்வாறு இருக்க முடியாது. ஆனால், இவர்கள் எல்லொருக்கும் தெரியும், அவர்கள் இந்து மதம், இந்து கடவுள், இந்து மத நூல்கள் முதலியவற்றைத் தான் எதிர்க்கிறார்கள், மற்ற மதங்களை அல்ல என்பது. 01-04-2020 அன்று முகநூலில், கீழ்கண்ட விசயங்களை, குறிப்பாகச் சுட்டிக் காட்டினேன்:
- தமிழ், தமிழ் என்று சொல்லி, போராட்டங்கள் நடத்தி, கடைசியில் தமிழ்நாட்டிற்கு இழுக்கைத் தேடி தந்துள்ளனர்!
- நிஜாமுத்தீன் மர்கஸ்-லிருந்து, பெரியார் மண் ஈரோடு வரை, என்னத்தான் நடந்தது, தம்பி, சொல்வாயா, அண்ணன் கேட்கிறான்?
- கொரோனாவா, வெங்காயமா, பெரியார் பிஞ்சா, தடியா? வாங்க பெரியார் திடலில் பட்டி மன்றம் நடத்தலாம்! இனமான தலைமையில்!
- கழகக் கண்மணிகளே, உடன் பிறப்புகளே, ரத்தத்தின் ரத்தமே, கடைசியில் கொரோனா வைரஸ் நிலைக்கு போய் விட்டதே, எல்லாமே அந்த ஆரிய சதிதான்!
- திராவிடனும், துலுக்கனும் ஒன்றாக சேர்வான் – இனம் இனத்தோடு சேரும் என்றான் அண்ணன், ஈரோட்டில், மதுரையில் சேர்ந்து விட்டனரே!
- கொரோனா என்றால் குரானா ஞாபகம் வருகிறது, ஆட்சி கலைக்க அன்று திட்டமிட்டவர்களுள் ஒருவர், இன்றோ, இது எல்லாவற்றையும் ஆட்டுகிறது!
- தப்லிக் என்றால் என்ன, மர்கஸ் என்றால் என்ன, மார்பகத்தில் மச்சம் உள்ளதா, நாடாவை கழட்ட பார், தமிழில் பாட்டு பாடு!
- ஹேய்..அட்டக் பட்டக்…அப்சகல்லு மாலியா, லாலாக்கு டோல் டப்பிம்மா, கூட தப்லிக், மர்சஸ் எல்லாம் சேர்த்திருப்பேனே, என் கொரோனா!
- வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது என்றாயே, இப்பொழுது பார் தம்பி, தில்லியிலிருந்து உனக்கு கொரோனா வருகிறது!
- அன்று அடியே மீனாக்ஷி மூக்குத்தியை கழட்டடி என்றேன், இன்று தப்லீக்கைக் காட்டடி மர்கஸை மறைக்காதே என்பேன் [10]
இன்றைக்கும், ஸ்டாலின் அத்தகைய வன்ம-வார்த்தை பிரயோகங்களை செய்து வருகிறார்.

திராவிடத்துவம், கம்யூனிஸம், ஜிஹாதித்துவம் எல்லாம் ஒன்றாகி செயல்படுவதால் அவற்றை சித்தாந்த ரீதியில் எதிகொள்ள வேண்டியுள்ளது: இதனால், சில நண்பர்கள், எதிர்த்து, சரி இல்லை என்று பதிவு செய்தனர். அதனால், அதன் பின்னணியை கீழ்கண்டவாறு, சுருக்கமாக விளக்கினேன்:
- அண்ணாதுரையின் “ஆரிய மாயை” படித்தால், என்னுடைய பதிவுகளுக்கான ஆதாரமும், பின்னணியும் புரியும்.
- அண்ணாதுரை தான் ஜின்னாவை சந்தித்தப் பிறகு, “இனம் இனத்தோடு சேரும்,” என்ற தத்துவத்தை பாகிஸ்தான் – திராவிடஸ்தான் பிரிவினைவாதத்திற்கு வைத்தார். ஈவேரா ஜின்னாவுடன் கூட்டு வைத்துக் கொண்டார். ஆனால், ஜின்னா திராவிடர்களைத் தூக்கியெறிந்தார், ஈவேராவையும் சாடினார்[4].
- ஈவேரா, அண்ணா, கருணாநிதி என்றவர்களுக்கு, என்றுமே இந்துவிரோதத் தனம் சகஜமாக இருந்தது. அவர்களது பேச்சுகள், எழுத்துகள் முதலியவற்றில் தான் என்றுமே வன்மம், வார்த்தை குரூரம் என்றெல்லாம் இருந்தது.
- திராவிட-கம்யூனிஸ-இந்துவிரோத சித்தாந்திகளை, நிச்சயமாக, எதிர்க்க வேண்டியது ஒவ்வொரு இந்துவின் கடமை ஆகிறது. ஏனெனில், செக்யூலரிஸ-பகுத்தறிவு போர்வையில், அவர்கள் இந்து விரோதிகளாக இருக்கின்றனர்.
- இப்பொழுது கூட “கரோனா வைரசை விட கொடியது” என்று 30-03-2020 அன்று திக-வீரமணி-விடுதலை செய்தி வெளியிட்டது.
- அதிலும் திருமண ஒப்பந்தம் போது, அத்தகைய வார்த்தை தீவிரவாதம், சொல்-பயங்ரவாதம், வெறுப்பு-காழ்ப்புகளுடம் பீரிட்டது.
- கல்யாணத்திற்கும், பார்ப்பன எதிர்ப்புக்கும் சம்மந்தம் இருக்கிறது என்றால், அது என்ன என்று பகுத்தறிவுவாதிகள் விளக்கவேண்டும்.
- நிஜாமுத்தீன் மர்கஸ் மாநாட்டிற்கும் துலுக்கர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை, என் கருத்தை எதிர்ப்பவர்கள் தான் மெய்ப்பிக்க வேண்டும்.
- எனக்கு அரசியல் ஆதரவு எதுவும் இல்லை, தவறு இருந்தால், எல்லா கட்சிகளையும் விமர்சித்து வருகிறேன். இந்துத்துவம், தவறு என்றாலும் சுட்டிக் காட்டுகிறேன்.
- ஆமாம், நகைச்சுவை, கிண்டல், நக்கல் முதலியவற்றுடன் தான் அவர்கள் உபயோகப் படுத்திய சொற்கள், சொற்றோடர்களை உபயோகப் படுத்தியுள்ளேன்
© வேதபிரகாஷ்
01-04-2020

[1] Of the confirmed cases, about 75% are from the southern city of Daegu and 73% of those have been linked to the Shincheonji Church. https://www.bbc.com/news/world-asia-51701039
[2] BBC News, Coronavirus: South Korea church leader apologises for virus spread, 2 March 2020
[3] விடுதலை, கரோனா வைரசை விட கொடியது பார்ப்பனீயம்– பிரபாகரன்–சந்திரலேகா மணவிழாவில் கழகப் பொதுச் செயலாளர் முழக்கம், மார்ச்.30, 2020, பக்கம்.3. http://www.viduthalai.in/page1/197844.html
[4] K. V. Ramakrishna Rao, The Historic Meeting of Ambedkar, Jinnah and Periyar, in “Proceeding volume of the Twenty first Annual session”, of South Indian History Congress-2001, School of Historical Studies, Madurai Kamaraj University, Madurai, January 2002, pp.128-136.
https://velivada.com/2019/05/09/the-historic-meeting-of-ambedkar-jinnah-and-periyar/
https://archive.org/stream/TheHistoricMeetingOfAmbedkarJinnahAndPeriyar/The Historic Meeting of Ambedkar%2C Jinnah and Periyar_djvu.txt
பிரிவுகள்: அச்சம், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், இந்து-முஸ்லிம், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமிஸ்ட், ஈ. வே. ரா, கருத்து, கருத்துச் சுதந்திரம், கலவரம், காஃபிர், கொடிய நோய், கொரோனா வைரஸ், தென் கொரியா, வைரஸ் கொரோனா, Uncategorized
Tags: இஸ்லாம், கரோனா தொற்று, கொடிய நோய், கொரோனா, கொரோனா வைரஸ், தொற்று, நோய், பரவுதல், பார்ப்பனர், பார்ப்பனீயம், பார்ப்பன், பிராமணர், வைரஸ், வைரஸ் கொரோனா, ஷின்சியோஞ்சி சர்ச்
Comments: Be the first to comment
ஜூலை 17, 2016
முஸ்லிம்கள், இந்தியர்களின் நலன்களுக்கு அல்லது தீவிரவாதிகளின் செயல்களுக்கு ஆதரவு கொடுப்பதை பற்றிய தங்களது நிலையை தெளிவாக்க வேண்டும்!

ஜாகிர் நாயக் பிரிட்டனுக்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை(ஜூன் 19, 2010): இந்திய பிரபல மதபிரச்சாரகர் ஸாகிர் நாயக்கிற்கு பிரிட்டனுக்குள் நுழைவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்துள்ளதாக பி.பி.சி. இணைய சேவை செய்தி வெளியிட்டுள்ளது. எமது நாட்டின் பொது நலனுக்கு பொருத்தமற்றவர்கள் நாட்டுக்குள் நுழைய தாம் அனுமதிக்க மாட்டோம் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். மேலும், ஏற்க முடியாத நடத்தை என்று தாம் கருதும் நடத்தை உடையவர் ஸாகிர் நாயக். அதன் காரணமாகவே இவருக்கான விசா நிராகரித்துள்ளதாக பிரிட்டிஷ் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஸாகிர் நாயக் லண்டனிலும், வடக்கு இங்கிலாந்திலும் பல உரைகளை நிகழ்த்தவிருந்தார். இதேவேளை, ஸாகிர் நாயக் அண்மையில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இவரது உரையை கேட்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் கூடியமை குறிப்பிடத்தக்கது. ஸாகிர் நாயக் இஸ்லாம் குறித்து ஆளுமை கொண்டவர் என அங்கீகரிக்கப்பட்டவர். எனினும், ஏனைய மதங்களை நிந்திக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிடுபவர் என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு முஸ்லீமும் தீவிரவாதியாக வேண்டும் என்று பேசிவரும் ஜாகிர் நாயக்: இப்படியும் ஆங்கிலப் பத்திரிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஒஸோமா பின் லேடனைப் புகழும், தீரவாதக் கொள்கையையுடைய ஜாகிர் நாயக்கை தடைசெய்யப்பட்டார், என்றும் கூறுகிறது. அந்நாட்டு உள்துறை செயலர், “டிவி மதப்பிரச்சாரகர் தூண்டிவிடும் வகையில் பேசுவதாலும் அவருடைய ஏற்றுக்கொள்ளமுடியாத நடத்தையினாலும் தடைசெய்யப்படுவதாகக் குறிப்பிடுகிறார்”. இப்பொழுதும் அந்த கருத்தை மறுக்கவில்லை. ஆனால், திடீரென்று முஸ்லிம்கள் எப்படி நாரக்கிற்கு ஆதரவு தெர்விக்கிறார்கள் என்று பார்த்தால், அது முஸ்லிம் ஆதரவு, ஷியா எதிர்ப்பு, முதலியவற்றை விட, மோடி-எதிர்ப்பு என்ற வகையில் வந்து முடிந்துள்ளது. ஜாகிர் நாயக்கை முடக்கத்தான் பாஜக அரசு முயல்கிறது என்பது போன்ற சித்தரிப்பு மற்றும் பிரச்சாரம் ஆரம்பித்து விட்டது. இது கிட்டத்தட்ட “சகிப்புத் தன்மை” பிரச்சாரம் போல ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திக்விஜய சிங், எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டு விட்டதால், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, ஏகப்பட்ட அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார்.

வெள்ளிக்கிழமை 15-07-2016 பாட்னாவில் நடந்த ஆர்பாட்டம்: ஜாகிர் நாயக் மற்றும் அசாஸுத்தீன் ஒவைசி இவர்களை ஆதரித்து, பாட்னா விஞ்ஞான கல்லூரியிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் போட்டுக் கொண்டு ஆர்பாட்டம் செய்தவர்களை போலீஸார் கைது செய்தனர்[1]. அது மட்டுமல்லாது, அதன் பின்னணியுள்ளவர்களைப் பற்றி விசாரிக்கவும் உத்தரவு இடப்பட்டுள்ளது[2]. அமெரிக்காவே, காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை என்று சொல்ல பாகிஸ்தான் அமுக்கி வாசித்துக் கொண்டிருக்கிறது. அவ்வாறிருக்கும் போது, இந்தியாவில், பீஹாரில் இருக்கும் முஸ்லிம்கள் இவ்வாறு பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் எப்படி போட முடியும்? அத்தகைய மனோபாங்குதான் என்ன? ஆக, காஷ்மீர பிரச்சினையையும், இந்த ஜாகிர் நாயக்-ஒவைசி பிரச்சினையுடன் முடிச்சுப் போட பார்க்கிறார்கள் போலிருக்கிறது.

தமிழக முஸ்லிம்கள் தீவிரவாதத்தை முதலில் எதிர்க்க வேண்டும்: தமிழக முஸ்லிம்கள் முதலில் இஸ்லாம் தீவிரவாததத்திற்கு உபயோகப்படுத்துவதை எதிர்க்க வேண்டும். ஐசிஸ்-ஐசில் முதலிய இயக்கங்கள் உலகளவில் அப்பாவி மக்களைக் கொன்று வருவதை யாரும் மறுக்க முடியாது. இன்று வரை இந்தியாவில் காஷ்மீ, உத்திரபிரதேசம், கேரளா, ஹைதரபாத் முதலிய இடங்களில் காகிர் நாயக்கை வைத்து நடைபெற்று வரும் விவகாரக்களைக் கவனிக்க வேண்டும். இந்தி முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களுடம் சேர்வதை அவர்கள் தடுக்கவில்லை. கேரள முஸ்லிம் பெற்றோர்களே கலங்கியுள்ள நிலையில், அதைத் தடுக்க என்ன செய்வது என்று விடை கொடுப்பதில்லை. சவுதி அரேபிய இஸ்லாம், இந்திய இஸ்லாத்திடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இஸ்லாமிய தீவிரவாத்த்தைப் பற்றி எளிதாக புரிந்து கொள்ல முடியும். சவுதி வகாபிசத்துவ தீவிரவாதத்தை ஆதரித்ததால் தான், ஜாகிர்நாயக்கின் வகாபிச சேவையைப் பாராட்டி இஸ்லாத்திற்கு சேவை செய்தவராக அறிவித்து 2015 ஆம் ஆண்டுக்கான மன்னர் பைசல் சர்வதேச விருதாக சவுதி வகாபிச அரசு 24 காரட் 200 கிராம் தங்கப் பதக்கத்தோடு இந்திய பண மதிப்பாக ரூபாய் 1,35,00,000/- (2 லட்சம் யுஎஸ் டாலர்கள்) அன்பளிப்புத் தொகையாகவும் வழங்கியது. மார்க்கண்டேய கட்ஜு ஸாகிர்நாயக் பிரச்சாரம் குறித்தும் சமயத்திற்கும் அறிவியலுக்கும் இடையிலான முரண்குறித்தும், வகாபிசம் சூபிகள் பேசிய இஸ்லாமிய அறவியல் கருத்துக்களிலிருந்து மாறுபட்டிருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார்.

முஸ்லிம்கள் ஏன் இந்திய குடிமகன்கள் என்பதை மறக்கும் விதமாக நடந்து கொள்கிறார்கள்?: இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள், எதிர்ப்புகள் முதலியவற்றில் முஸ்லிம்கள் கலந்து கொள்வதை கவனிக்க வேண்டும். அவர்களை ஏன் தீவிரவாத இயக்கத்தில் சேராமல் தடுக்காமல் இருக்கிறார்கள் என்பதை மற்றவர்கள் கேட்கத்தான் செய்கிறார்கள். வெறும் வார்த்தைகள் ஒன்றும் செய்து விடமுடியாது. ஆயிரம் அப்பாவி மக்களைக் கொன்று விட்டு, அதனை நான் கண்டிக்கிறேன் என்றால் என்ன பிரயோஜனம்? ஒசாமா பின் லேடனை ஆதரிக்கிறேன் என்ற ஜாகிர் நாயக்கை ஆதரித்து ஆர்பாட்டம் நடத்துவதால் பொது மக்கள் என்ன நினைப்பார்கள்? என்ன இது, தீவிரவாதிகளை எதிர்த்து தானே கூட்டம் போடுகிறார்கள் என்று நினைப்பார்கள். முஸ்லிம்கள் இந்திய குடிமகன்கள் என்பதை மறந்து, அடிக்கடி எல்லைகளைக் கடந்த ஆதரவுகளை தெரிவித்த்துக் கொள்வது, தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் முதலியோருக்கு சாதகமாக பேசுவது, அறிக்கைக்கள் விடுவது, ஆர்பாட்டங்கள் செய்வது முதலியனன, அவர்களை மேலும் இந்திய சமூகத்திலிருந்து பிரிக்கத்தான் செய்யும்.

இசுலாமியத் தீவிரவாதம் என்றால் என்ன?: இசுலாமியத் தீவிரவாதம் (Islamic Terrorism) என்பது அரசியல் நோக்கங்களை அடைவதற்காக மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்கள் ஆகும். இத்தீவிரவாதச் செயல்களுக்கான கருத்தியல் ஆதாரமாக குரானின் வசனங்களைக் கொள்ளுவதால் இவை இஸ்லாமியத் தீவிரவாதம் என அழைக்கப்படுகிறது. இஸ்லாமியக் குழுக்கள் அவர்கள் நிகழ்த்தும் வன்முறையையும் கொலைகளையும் குரான் வசனங்கள் மற்றும் ஹதீஸ் மூலம் நியாயப்படுத்துகின்றனர். சமீப காலங்களில் உலகெங்கும் தீவிரப் போக்குடைய இஸ்லாமியக் குழுக்கள் பிற இஸ்லாமியப் பிரிவைச் சார்ந்தவர்களையும் இறை நம்பிக்கையற்றவர்களையும் மற்றும் பிற மதத்தவர்களையும் கலீபா ஆட்சிமுறையின் படி தலையை வெட்டிக் கொல்லப் பரிந்துரைப்பது மற்றும் அடிமைப்படுத்துவது ஆகியவற்றைச் செய்கின்றனர். இவ்வாறான செயல்கள் மிதவாத இஸ்லாமியர்களுக்கும் தீவிரவாதப் போக்குடைய இஸ்லாமியர்களுக்கும் கருத்தியல் வேறுபாடுகளை உருவாக்குகின்றன. இத்தீவிரவாதச் செயல்களானது இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா, சோமாலியா, சூடான், ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, சீனா, காக்கேசியா, வட-அமெரிக்கா, மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் பசிபிக் பிராந்திய நாடுகள் உட்பட உலகம் முழுவதும் நடைபெறுகிறது. இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்கள் குண்டுவெடிப்புகள், கடத்தல், தற்கொலைப் படையினர் போன்றவற்றிற்காக பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் இணையம் வழி புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதாகவும் அறியப்படுகிறது. இப்படி விகிபீடியா கூறுவதை[3] முஸ்லிம்கள் மறுக்கவில்லையே?
© வேதபிரகாஷ்
17-07-2016

[1] India Today, Pro-Pakistan slogans raised in Patna, one arrested after police orders probe, Rohit Kumar Singh, Posted by Bijaya Kumar Das, Patna, July 16, 2016 | UPDATED 15:11 IST
[2] http://indiatoday.intoday.in/story/pro-pakistan-slogans-raised-in-patna-one-arrested-after-police-orders-probe/1/716225.html
[3] https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
பிரிவுகள்: ஃபத்வா, ஃபிதாயீன், ஃபேஸ்புக், அடிப்படைவாதம், அடையாளம், அமைதி, அமைதி டிவி, அரேபியா, அல் - உம்மா, அல் - கொய்தா, அல்லா, அல்லா பெயர், இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹித்தீன், இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய நாடு, இஸ்லாமிய பிரச்சினை, இஸ்லாமியத் தமிழன், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐதராபாத், ஐமுமுக, ஐஸில், ஒசாமா பின் லேடன், ஒசாமா பின்லேடன், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காஷ்மீர், கிலாபத், கிலாபத் இயக்கம், குரான், சவுதி, சவுதி அரேபியா, சிமி, சிரியா, சுன்னத், சுன்னத் ஜமாஅத், சுன்னத் ஜமாத், சுன்னி, சூபி, சூபித்துவம், ஜமா அத், ஜமாஅத், ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜமைத்-உல்-முஜாஹித்தீன், ஜம்மு-காஷ்மீர், ஜவாஹிருல்லா, ஜாகிர் நாயக், ஜிஹாதி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், பீஸ் டிவி, Uncategorized
Tags: அமைதி டிவி, இந்திய முஜாஹித்தீன், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கலவரம், காபிர், காஷ்மீரம், காஷ்மீர், குண்டு, குரான், கொலை, சுன்னி, செக்யூலரிஸம், ஜாகிர் நாயக், ஜிஹாத், தாலிபான், பரவும் தீவிரவாதம், பீஸ் டிவி, மிதிக்கும் இஸ்லாம், முஸ்லிம்கள், முஸ்லீம்கள், லவ் ஜிஹாத், ஷியா
Comments: Be the first to comment
ஜூலை 17, 2016
2016ல் ஜாகிர் நாயக்கை ஆதரித்து சென்னையில் தமிழக முஸ்லிம்கள் ஆர்பாட்டம் நடத்துவது ஏன் – 2009ல் எதிர்த்தது ஏன்?

23 இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்: கூட்டத்தில் கீழ்கண்டவர் கலந்து கொண்டு பேசினர். 23 இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்[1].
- மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா,
- எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாக்கவி,
- தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஜெ.எஸ்.ரிபாயி,
- மக்கள் சிவில் உரிமை கழக தேசிய குழு உறுப்பினர் டி.எஸ்.எஸ்.மணி,
- பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.முகம்மது இஸ்மாயில்,
- ஐ.என்.டி.ஜெ. தலைவர் எஸ்.எம்.பாக்கர்,
- மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் அ.ச.உமர் பாரூக்,
- இந்திய தேசிய லீக் தலைவர் பசீர் அகமது,
- ஜம்மியத் உலமாயே ஹிந்து தலைவர் மன்சூர் காஸிபி,
- வெல்பேர் பார்ட்டி தலைவர் எஸ்.என்.சிக்கந்தர்,
- ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் ஷப்பீர் அகமது,
- முஸ்லிம் லீக் தலைவர் பாத்திமா முஸப்பர்,
- இஸ்லாமிய விழிப்புணர்வு கழக தலைவர் முகம்மது கான் பாக்கவி
இப்படி, முஸ்லிம் அல்லாத இயக்கங்கள், பொட்டு வைத்த பெண்கள் முதலியோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளது வியப்பாக உள்ளது. உண்மையிலேயே அவர்கள் விசயம் அறிந்து கலந்து கொண்டுள்ளனரா அல்லது தமிழகத்திற்கே உரிய “கூட்டம் சேர்க்கும்” முறையில் கலந்து கொண்டார்களா என்று அவர்கள் தாம் சொல்ல வேண்டும்.

அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு 25ன் கீழுள்ள உரிமைகள்: தாங்கள் ஜாகிர் நாயக்கைப் பற்றி புலன் விசாரணை மேற்கொள்வதில் தலையிடுவதில்லை என்றாலும், தீவிரவாதத்திற்கும், அவருக்கும் தொடர்பிருப்பது போன்று சித்தரிப்பதை எதிர்ப்பதாக கூறினர்[2]. அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு 25ன் கீழ், எல்லோருக்கும், தமது மதத்தைப் பின்பற்றவும், போற்றவும், பிரச்சாரம் செய்ய உரிமை இருக்கிறது என்றும், அதனை அரசு தடுக்கக் கூடாது என்றும் ஆர்பாட்டம் செய்தனர்[3]. மத்திய மற்றும் மஹாராஷ்ட்ரா அரசுகளை எதிர்த்து பலவித கோஷங்களை எழுப்பினர்[4]. பிரிவு 25ன் கீழ், எல்லோருக்கும், தமது மதத்தைப் பின்பற்றவும், போற்றவும், பிரச்சாரம் செய்ய உரிமை இருக்கிறது என்றாலும், அவை மற்றவர்களின் உரிமைகளை மீறக்கூடாது, பொது அமைதியை பாதிக்கக்கூடாது என்றெல்லாம் கூட உள்ளன. அவற்றை மறந்து, மறைத்து, மறுத்து ஆர்பாட்டம் செய்வது வேடிக்கைதான்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் ஆர்பாட்டத்தை அறிவித்து, பிறகு நிறுத்துக் கொண்டது: முன்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் பட்டுக்கோட்டையில், “ஜாகிர் நாயக் அவர்களின் இஸ்லாமிய பிரச்சாரத்தை முடக்க சதி செய்யும் மத்திய பாஜக அரசை கண்டித்து”ம் மற்றும் ஜாகிர் நாயக்கிற்கு ஆதரவாக போராட்டம் என்று அறிவித்தது[5]. பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஜாகிர் நாயக்-கிற்கு ஆதரவாக நடைபெற இருந்த அனைத்து மாவட்ட ஆர்ப்பாட்டங்களும் ரத்து என்று அறிவித்தது. ஜாகிர் நாயக்கை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என மும்பை காவல்துறை தெரிவித்ததை தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்த அனைத்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் ரத்து செய்யப்பபடுகிறது என்றது[6]. அதாவது ஒதுங்கவில்லை, ஜாகிர் நாயக்கே அடுத்த ஆண்டுதான் இந்தியாவுக்கு வரப்போகிறார் எனும்போது, இப்பொழுது என்ன ஆர்பாட்டம் வேண்டியிருக்கிறது, “வேஸ்ட்” தான் என்று தீர்மானித்திருக்கும். ஆனால், மற்ற கூட்டத்தினர் அவ்வாறில்லை, அவர்களுக்கு “மோடியை” எதிர்க்க வேண்டும் என்ற திட்டம் இருக்கிறது. கேரளா, காஷ்மீர், பங்களாதேசம், பாரீஸ், துருக்கி…..என்று எங்கு என்ன நடந்தாலும் அவர்களுக்குக் கவலை இல்லை, எப்படியாவது “மோடியை” தாக்க வேண்டும்.

2009ல் ஜாகிர் நாயக்கை எதிர்த்தவர்கள் இப்பொழுது – 2016ல் ஆதரிப்பதேன்? (ப்ழைய கட்டுரையிலிருந்து): பீஸ் அமைப்பைச் சேர்ந்த ஜாகிர் நாயக் என்பவர், வன்முறையை தூண்டும் வகையில் பிரசாரம் செய்து வருவதாகக் கூறி ஐஸ் அவுஸ் காவல் நிலையம் எதிரே சுன்னத் ஜமாத் பேரவையினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அதே நேரத்தில் சிலர் ஆதரித்து, நாயக்கின் கூட்டங்களை எடெற்பாடு செய்தனர். இணைதளத்தில் தேடியபோது, கீழ்கண்ட விவரம் கண்ணில் பட்டது[7]:
சென்னையில் டாக்டர் ஜாகிர் நாயக்
ஜனவரி 10, 2009, 3:37 பிற்பகல்
கோப்பு வகை: டாக்டர் ஜாகிர் நாயக்
இஸ்லாம் அல்லாத மக்களுக்காக உலகம் முழுதும் சென்று, இஸ்லாத்தின் செய்தியை எத்தி வைத்து வரும் சகோதரர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள், இன்ஷா அல்லாஹ், வரும் ஜனவரி பதினேழாம் தேதி,சனிக்கிழமை,பதினெட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் (JANUARY 17TH AND 18TH 2009) சென்னையில் உரையாற்ற இருக்கிறார்கள்.
சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில், ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள இஸ்லாமிக் இண்டெர்நேஷனல் பள்ளி வளாகத்தில், மாலை ஆறு மணி அளவில் நடைபெற உள்ளது. (ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வீ ஜி பி கோல்டன் பீச் அமைந்துள்ளது.
எல்லா மத மக்களும் வரவேற்கப்படுகிறார்கள், அனுமதி இலவசம். பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விவரம் வேண்டுவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்புகொள்ளவும்.
IRF CHENNAI,TEL: 42148804/05, EMAIL: IRFCHENNAI@GMAIL.COM
சகோதரர்களே,
உங்கள் மாற்று மத நண்பர்களையும் அழைத்து செல்லுங்கள்!
தூய மார்க்கத்தை எடுத்து சொல்லுங்கள்!!
அல்லாஹ்விடம் நற்கூலி வெல்லுங்கள்! |
ஜாகிர்நாயக்கின் பெயர் சொல்லி முஸ்லிம்கள் ஒருபக்கம் அதிரடி பிரசாரம் செய்கின்றனர்! மறுபுறம் “சுன்னத் ஜாமாத்” என்று இவ்வாறு எதிர்க்கின்றனர்!
ஒன்றும் புரியவில்லையே?
© வேதபிரகாஷ்
17-07-2016

[2] http://www.thenewsminute.com/article/islamic-groups-protest-chennai-demand-govt-cease-portraying-zakir-naik-terrorist-46610
[3] The Business Standard, Muslim outfits rally behind Zakir Naik, hold protest, Press Trust of India, Chennai July 16, 2016 Last Updated at 16:32 IST
[4] http://www.business-standard.com/article/current-affairs/muslim-outfits-rally-behind-zakir-naik-hold-protest-116071600502_1.html
[5] http://adiraipirai.in/?p=26723
[6] http://adiraipirai.in/?p=26767
[7]https://markaspost.wordpress.com/2009/01/10/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0/
பிரிவுகள்: ஃபத்வா, ஃபிதாயீன், ஃபேஸ்புக், அல் - உம்மா, அல் - காய்தா, அல்லா, இந்திய முஜாஹித்தீன், இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இராக், இரான், இறைதூதர், இஸ்லாமிக் ஸ்டேட், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய நாடு, இஸ்லாமிய பிரச்சினை, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமும் இந்தியாவும், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், எஸ்.டி.பி.ஐ, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐக்கிய ஜிஹாத் கவுன்சில், ஐசில், ஐசிஸ், ஐதராபாத், ஐமுமுக, ஐஸில், ஒசாமா பின் லேடன், ஒசாமா பின்லேடன், கிலாபத், கிலாபத் இயக்கம், சவுதி, சவுதி அரேபியா, சூபித்துவம், ஜமாத், ஜமாத்-உத்-தாவா, ஜமாயத்-உல்-உலமா, ஜாகிர் நாயக், Uncategorized
Tags: ஆதரவு, இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், எதிர்ப்பு, எஸ்.டி.பி.ஐ, காபிர், காஷ்மீரம், குரான், சிறுபான்மையினர், செக்யூலரிஸம், சென்னை, சேப்பாக்கம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், முஜாஹித்தீன், முரண்பாடு, முஸ்லிம், முஸ்லீம்கள், லவ் ஜிஹாத், ஷியா
Comments: Be the first to comment
ஜூலை 17, 2016
ஜாகிர் நாயக்கின் விசயத்தில் இந்திய-தமிழக மூஸ்லிம்களின் ஆதரிப்பது-எதிர்ப்பது என்ற முரண்பாடு ஏன்?

தமிழகத்தில் ஜாகிர் நாயக் எதிர்ப்பு–ஆதரவு: ஜாகிர் நாயக்கை பொதுவாக இந்திய முஸ்லிம்கள் எதிர்த்தனர். ஒசமா பின் லேடனை ஆதரித்தது, எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகளாக இருக்க வேண்டும் என்றது போன்ற விவகாரங்களூக்காக நாயக் தனிமைப் படுத்தப் பட்டாலும், உள்ளூர எல்லா முஸ்லிம்களும் ஆதரித்துதான் வந்தனர். இந்தியாவில் நடத்தப் பட்ட கூட்டங்களுக்கு, இஸ்லாமிய அமைப்புகள், வியாபார நிறுவனங்கள் ஆதரவு கொடுத்தன. சென்னையில், கிருஷ்ணா கார்டன்ஸ் (திருமங்கலம்), காமராஜர் அரங்கம், இஸ்லாமிக் இண்டெர்நேஷனல் பள்ளி வளாகம் (ஈஞ்சம்பாக்கம்) என்று கூட்டங்கள் நடத்தப்பட்டன. முஸ்லிம்கள், குறிப்பாக படித்த இந்துக்களுக்கு குறி வைத்து, அவர்களை வேண்டி, நட்புரீதியில் “வற்புறுத்தி” கலந்து கொள்ள செய்தனர். அந்த கூட்டங்கள் முஸ்லிம்களுக்குட்தான் பிரமிப்பாக இருந்தது. தமிழக முஸ்லிம் இயக்கத்தினரின் தலைவர்களுக்கு புளியைக் கரைத்தது. பொறாமையாகக் கூட இருந்தது, நல்ல வேளை, தமிழில் பேசவில்லை என்று ஆஸ்வாசப்படுத்திக் கொண்டனர். இருப்பினும், தமிழில் அவரது ஆதரவாளர்கள் நாயக்கின் புத்தகங்கள் வெளியிட்டனர்.

பீஸ் டிவி வங்கதேசத்தில் தடை செய்யப்பட்டது (09-07-2016): நாயக்கின் பிரசுரங்கள் தீவிரவாதிகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இருப்பதாகவும், கடந்த ஜூலை 1-ம் தேதி டாக்கா உணவக தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள், நாயக்கின் பிரசங்கங்களால் ஈர்க்கப்பட்டவர்கள் என்றும் கூறப்பட்டதை அடுத்து, வங்கதேசத்தில் நாயக்கின் பிரச்சாரங்கள் தடை செய்யப் பட்டன. வங்காளதேசத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரம் தொடர்பாக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் ’பீஸ் டிவி’ க்கு தடை விதிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது[1]. சர்ச்சைக்குரிய வகையில் பேசிவரும் ஜாகிர் நாயக்கிற்கு இங்கிலாந்து, கனடாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மலேசியாவில் தடை விதிக்கப்பட்ட 16 இஸ்லாமிய அறிஞர்களில் நாயக்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது[2]. நாயக்கின், ‘பீஸ் டிவி’யை தொலைக்காட்சி மற்றும் இணையதளம் மூலமாக ஒளிபரப்பவும் வங்கதேச அரசு தடை விதித்துள்ளது[3]. இதைத்தொடர்ந்து, ‘பீஸ் மொபைல் போன்’களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை!

பீஸ் டிவியை அடுத்து, பீஸ் மொபைல் போன்களுக்குக்கும் தடை (14-07-2016): முஸ்லிம் மத போதகர் ஜாகிர் நாயக்கின், ‘பீஸ் மொபைல் போன்’களுக்கு வங்கதேச அரசு தடை விதித்திருக்கிறது. ‘ஜாகிர் நாயக்கின் எந்தவிதமான பிரசுரங்களையும் வெளியிடக் கூடாது என அரசு தெளிவான உத்தரவை பிறப்பித்திருப்பதால், அவரின் பிரசுரங்கள் அடங்கிய ‘பீஸ் மொபைல் போன்’களை இனி அனுமதிக்க முடியாது’ என, வங்கதேச தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஷாஜஹான் மஹமூத் தெரிவித்துள்ளார். ‘முதல் இஸ்லாமிய ஸ்மார்ட்போன்’ என்ற விளம்பரத்துடன் சந்தைக்கு வந்த இந்த கைபேசியில், ‘குரான்’ ஓதுவதற்கான வசதிகள், தொழுகை நேர நினைவூட்டல், இஸ்லாமிய வால்பேப்பர்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் உள்ளன. ஜாகிர் நாயக்கின் ‘பீஸ் டிவி’ பிரசங்கங்களை, ஆங்கிலம், இந்தி, உருது போன்ற மொழிகளில் கேட்கவும், பார்க்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இந்த கைபேசிகளை, ‘பெக்சிக்கோ’ குழுமம் இறக்குமதி செய்து விற்பனை செய்தது[4]. ஆனால், தமிழகத்தில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை! ஆனால், ஜாகிர் நாயக்கைப் பற்றி விசாரணை ஆரம்பிக்கப்பட்டதும், தமிழகத்தில் ஆர்பாட்டம் ஆரம்பித்து விட்டது. இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் மீது மகாராஷ்டிர அரசும், மத்திய பாஜக அரசும் கடுமையான அவதூறு பரப்பி வருவதாகவும்[5], இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்புகளை ஒன்றிணைத்து நாளை (ஜூலை 16) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் அப்துல் ரஹ்மான் மிஸ்பாகி தெரிவித்துள்ளார்[6].

உலகத்தில், இந்தியாவின் மற்ற பகுதிகளில் இஸ்லாமிய பயங்கரவாத, ஜிஹாத் தீவிரவாத செயல்கள் என்ன நடந்தாலும் போராட்டம்–ஆர்பாட்டம் இல்லை: 15-07-2016 வெள்ளிக்கிழமை அன்று மொஹம்மது லுஹ்வாஸ் ஃபூலெல் (31) என்ற முஸ்லிம் பாரிசில் லாரியை வெறித்தனமாக மக்கள் கூட்டத்தினுள் ஓட்டிச் சென்று ஒரு முஸ்லிம் குழந்தைக்களையும் சேர்த்து 84 பேரைக் கொன்றுள்ளான். குழந்தைகள் கொல்லப்பட்ட காட்சிகள் பரிதாபமாக இருந்தது. ஐரோப்பாவின் ஒரே இஸ்லாமிய நாடான, துருக்கியில் நடந்துள்ள ராணுவப் புரட்சியில் 100க்கும் மேலானவர்கள் பலியாகியுள்ளனர். இரண்டு தீவிரவாத தாக்குதல்களிலும் காயமடைந்தோர் பலர் மருத்துமனைக்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், தமிழக முஸ்லிம்கள் அமைதியாகத்தான் இருந்தார்கள். கேரளாவில் இளம் வயது முச்லிம் ஆண்கள்-பெண்கள் ஐஎஸ்சில் சேர்ந்து விட்டனர் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. உம், அவர்கள் அசையவில்லை.

ஜாகிர் நாயக்கை ஆதரித்து நடத்திய போராட்டம் (16-07-2016): இவற்றையெல்லாம் கண்டிக்காமல், சென்னையில், “ஜாகிர் நாயக்கை தீவிரவாதி போன்று சித்திரப்பதை” கண்டித்து 500 பேர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்[7]. இப்பொழுதுள்ள நிலையில், தமிழக அரசு எப்படி அனுமதி கொடுத்தது என்பது கூட ஆச்சரியமாகத்தான் உள்ளது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் [Indian Union Muslim League (IUML)], தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் [the Tamil Nadu Muslim Munnetra Kazhagam (TMMK)] மற்றும் சோஷியல் டெமாக்ரடிக் கட்சி [the Social Democratic Party of India] முதலியன இந்த எதிர்ப்பு-போராட்டத்தில் பக்குக் கொண்டுள்ளன. முஸ்லிம் மதபோதகர் ஜாகீர் நாயக் மீது வீண் பழி சுமத்தி, அவரது பணிகளை முடக்க நினைப்பதாக கூறி மராட்டியம் மற்றும் மத்திய அரசை கண்டித்து, சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது[8].

ஜாகீர் நாயக் வன்முறையையோ, பயங்கரவாதத்தையோ ஆதரித்தது இல்லை: தமிழ்நாடு முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.முகம்மது ஹனீபா தலைமை தாங்கினார். பின்னர் அவர் கூறியதாவது[9]: “உலகம் முழுவதும் முஸ்லிம் மதம் குறித்து பரப்புரை செய்து வருபவர் ஜாகீர் நாயக். இவர் வன்முறையையோ, பயங்கரவாதத்தையோ ஆதரித்தது இல்லை. அவருடைய பேச்சாலும், எழுத்தாலும் பயங்கரவாதத்தையும், பயங்கரவாதப் பழியை முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு சுமத்தும் பாசிச சக்திகளையும் எதிர்த்து வருகிறார். எனவே அவர் மீது மத்திய அரசும், மராட்டிய அரசும் காழ்ப்புணர்வு கொண்டு அவரை ஒடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது கண்டனத்துக்குரியது. மத்திய அரசு தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் போராட்டங்கள் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது”, இவ்வாறு அவர் பேசினார். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஜாகீர் நாயக்குக்கு எதிராக பேசியதாக கூறி, உத்தரபிரதேச மாநில பா.ஜ.க. எம்.பி. சாத்வி பிராட்சியின் உருவபொம்மையை எரித்தனர். இதனால் ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது[10]. ஆனால், போலீஸார் என்ன நடவடிக்கை எடுத்தனர் என்று குறிப்பிடவில்லை.
© வேதபிரகாஷ்
17-07-2016
[1] தினத்தந்தி, ஜாகிர் நாயக்கின் போதனைகளை ஒளிபரப்பும் ’பீஸ் டிவி’யை வங்கதேசம் தடை செய்தது, பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 10,2016, 3:55 PM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 10, 2016, 3:55 PM IST.
[2] http://www.dailythanthi.com/News/World/2016/07/10155526/Bangladesh-bans-televangelist-Zakir-Naik-s-Peace-TV.vpf
[3] தி.இந்து, மத போதகர் ஜாகிர் நாயக்கின் ‘பீஸ் மொபைல் போன்’களுக்கு தடை விதித்தது வங்கதேச அரசு, Published: July 14, 2016 21:21 ISTUpdated: July 15, 2016 10:22 IST
[4] http://tamil.thehindu.com/world/%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/article8850254.ece
[5] தமிழ்.ஒன்.இந்தியா, ஜாகிர் நாயக் மீது அவதூறு… தமிழக இஸ்லாமிய அமைப்புகள் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்– வீடியோ, By: Jayachitra, Published: Friday, July 15, 2016, 15:05 [IST].
[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/muslim-organisations-protest-258114.html
[7] The News minute, Islamic groups protest in Chennai, demand govt cease portraying Zakir Naik as terrorist, TNM Staff| Saturday, July 16, 2016 – 13:57
[8] தினத்தந்தி, ஜாகீர் நாயக் மீது வீண் பழி: முஸ்லிம் அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம், பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 17,2016, 12:28 AM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 17,2016, 12:28 AM IST
[9] http://www.dailythanthi.com/News/India/2016/07/17002835/Islamic-groups-protest-in-Chennai-demand-govt-cease.vpf
[10] நியூஸ்.7.செனல், மத்திய அரசை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் சென்னையில் ஆர்பாட்டம், July 16, 2016.
பிரிவுகள்: ஃபத்வா, ஃபிதாயீன், அமைதி டிவி, அரேபியா, அல் - உம்மா, அல் - கொய்தா, அல் ஹதீஸ், அல்லா, அல்லா பெயர், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், இந்திய விரோதி ஜிலானி, இறை தூதர், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசில், ஐசிஸ், ஐதராபாத், ஐஸில், காஃபிர், காஃபிர்கள், சவுதி, சவுதி அரேபியா, ஜமா அத், ஜமாஅத், ஜமாத், ஜவாஹிருல்லா, ஜாகிர் நாயக், ஜிஹாதித்தனம், ஜிஹாத், டாக்கா, டாக்கா தாக்குதல், தமிழ் முஸ்லிம், பீஸ் டிவி, முஸ்லிம், வங்காள தேசம், வங்காளதேசம், வங்காளம், விளம்பரம், வெடிகுண்டு, ஷியா-சுன்னி, ஷிர்க், Uncategorized
Tags: அமைதி டிவி, இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காபிர், காஷ்மீரம், காஷ்மீர், குண்டு, குரான், சிறுபான்மையினர், செக்யூலரிஸம், சேப்பாக்கம், ஜாகிர் நாயக், ஜிஹாத், தமிழ் முஸ்லிம், தமிழ்நாடு, தாலிபான், பீஸ் டிவி, முஸ்லிம்கள், முஸ்லீம்கள், லவ் ஜிஹாத், வங்கதேசம், ஷியா
Comments: Be the first to comment
ஜூலை 16, 2016
கேரள ஐஎஸ் தொடர்புகள், லவ்-ஜிஹாத், வேலைவாய்ப்பு போர்வையில் ஆட்சேர்ப்பு – யுத்தபூமியை நோக்கி பயணம்!

முதலமைச்சர் ஒப்புக் கொண்டார்: சட்டசபையில் பேசிய முதல்வர் பினராயி விஜயன்[1], “காசர்கோடில் இருந்து 17 பேரும், பாலக்காட்டில் இருந்து 4 பேரும் மாயமாகி இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாயமானவர்களில் காசர்கோட்டில் இருந்து 4 பெண்கள், 3 குழந்தைகளும், பாலக்காட்டில் இருந்து 2 பெண்களும் அடங்குவர். பல்வேறு காரணங்களுக்காக இவர்கள் தங்களது வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவித்தார். ஊடகங்களில் வெளியான தகவலின்படி இவர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு சென்றுள்ளனர். மும்பை விமான நிலையத்தில் காத்திருந்த காசர்கோடு பகுதியை சேர்ந்த பிரோஸ் என்பவர் அண்மையில் கைதாகியுள்ளார். 10-07-2016 அன்று மும்பையில் பெரோஸ் கான் என்பவன் கைது செய்யப்பட்டதிலிருந்து, கேரள இளைஞர்கள் சிரியாவுக்குச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது[2].
ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் சந்தேக கண்ணோடு பார்க்கும் நிலையும் உருவாகி வருகிறது: கேரள இளைஞர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைவது தொடர்பான விவகாரத்தை அரசு மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது[3]. மத்திய அரசின் ஆதரவுடன் இதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எந்தவொரு தீவிரவாத நடவடிக்கையையும் அரசு பொறுத்துக் கொள்ளாது. நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதே சமயம் அரசியல் ஆதாயத்துக்காக இந்த விவகாரத்தை பெரிது படுத்தவும் அனுமதிக்க மாட்டோம். இப்பிரச்சினையால் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான மனோபாவம் வளர்ந்து வருகிறது. ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் சந்தேக கண்ணோடு பார்க்கும் நிலையும் உருவாகி வருகிறது. ஒரு சிலர் வேண்டுமென்றே மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். கேரளாவில் உள்ள பெரும்பான்மையான மக்கள் எந்தவொரு தீவிரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் ஏற்க மாட்டார்கள். வெறும் அரசால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் ஒன்றாக கைகோர்த்தால் மட்டுமே தீய சக்திகளை தனிமைப்படுத்தி களையெடுக்க முடியும்”, என்று சட்டசபையில் பேசியுள்ளார்[4]. கம்யூனிஸ்டுகளைப் பொறுத்த வரையில், இது அவர்களே வளர்த்து விட்ட விவகாரம் ஆகும். அரசியல் மற்றும் இதர சம்பந்தங்களை தாராளமாக வைத்துக் கொண்டு அனுபவித்து வருகின்றனர்.
ஜிஹாதிகள் பெற்றோர்களையும், ஏன் குடும்பத்தையே தீவிரவாதிகளாக்க முயற்சிப்பது: கேரள மாநிலம் காசர்கோடு மற்றும் பாலக்காட்டை சேர்ந்த 16 பேர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் திடீரென மாயமானார்கள். இவர்களில் 4 பெண்களும் 2 குழந்தைகளும் உண்டு. இவர்கள் இலங்கை மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள புனித தலங்களுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றனர். இதன்பிறகு கடந்த ஒரு மாதமாகியும் இவர்களை பற்றிய எந்த தகவலும் வரவில்லை. இந்நிலையில் காணாமல் போன ஹபீசுதீன் என்பவரின் மனைவி செல்போனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்தது. அந்த செய்தியில், “நாங்கள் சொர்க்க ராஜ்ஜியத்திற்கு வந்து விட்டோம். இனி எங்களை தேட வேண்டாம். நாங்கள் இஸ்லாமிய நாட்டிற்கு வந்து விட்டோம். இங்கு நிரபராதிகளை அமெரிக்கா கொன்று குவிக்கிறது. எனவே அவர்களை பழிவாங்குவதற்காக ஐஎஸ் அமைப்புக்காக நாங்கள் எங்களை அர்ப்பணித்து விட்டோம். இதுகுறித்து பெற்றோரிடம் கூறி புரிய வைக்க வேண்டும். அவர்களையும் ஐஎஸ் அமைப்பிற்கு அழைத்து கொண்டு வரவேண்டும்”, என்று குறிப்பிடப்பட்டிருந்தது[5]. அதாவது, குடும்பத்தையே தீவிரவாதிகளாக்க திட்டம் இருப்பது வெளிப்படுகிறது. மேலும், இது கேரளாவிலிருந்து தீவிரவாதிகளாக்க ஏற்றுமதி நடக்கிறது எனலாம். முன்பு கன்னியாஸ்த்ரிக்கள், நர்ஸுகள் மாதிரி, இப்பொழுது இவர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறார்கள்.
தீவிரவாதியின் தகவல் படித்து திகைத்துப் போன மனைவி: இதை பார்த்து ஹபீசுதீனின் மனைவி அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து கணவரின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவரது பெற்றோர் காசர்கோடு எம்பி கருணாகரன், எம்எல்ஏ ராஜகோபாலன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராய் விஜயனிடமும் அவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக விசாரணை நடத்த கேரள டிஜிபி லோக்நாத் பெக்ராவுக்கு முதல்வர் உத்தரவிட்டார். உளவுத்துறை போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. காசர்கோடு மாவட்டம் திருக்கரிப்பூரை சேர்ந்த டாக்டர் இஜாஸ் என்பவர் தலைமையில் 16 பேரும் சிரியாவுக்கு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது[6]. காசர்கோடில் உள்ள அப்துல் ரஸீத் (29) அப்துல்லா [Abdul Rasheed] என்பவன் அப்துல்லாவின் மகன் [Abdulla] இவர்களை இவ்வழிக்கு இழுத்துள்ளான் என்று தெரிகிறது[7]. இவன் பெங்களுரில் இஞ்சினியரிங் படித்து மும்பைக்கு வியாபாரம் நிமித்தம் சென்று வருகிறான்[8]. ஈஸா மற்றும் யாஹியாவின் தந்தை வின்சென்ட், தன்னுடைய மகள்கள் ஜாகிர் நாயக்கின் பிரச்சாரத்தால் கவரப்பட்டார்கள் என்கிறார்[9].
தமிழகத்தின் மீதான தாக்கம்: கேரளாவில் இருந்து ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்தவர்கள், தமிழக எல்லையில் உள்ள நகரங்களைச் சேர்ந்தவர்கள். இதனால் தமிழகத்தில் இருந்து யாரும் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேராமல் தடுக்க, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இணையதளங்களில் பரிமாறப்படும் தகவல்களை காவல் துறையினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். கேரளாவில் இருந்து ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக கூறப்படுபவர்களில் திருவனந்தபுரம் ஆற்றுகால் பகுதியைச் சேர்ந்த பிடிஎஸ் மாணவி நிமிஷா என்ற பாத்திமாவும் ஒருவர் என்று தெரிய வந்துள்ளது. இவரது தாய் பிந்து. தனது மகளும் ஐஎஸ்சில் சேர்ந்ததாக நேற்று பத்திரிகைகளில் தகவல் வந்த பிறகுதான் அவருக்கு இது தெரியவந்துள்ளது. இதுபோல் கொச்சியை சேர்ந்த ஒரு பெண்ணும் ஐஎஸ் அமைப்பில் இணைந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமாணவிகளை குறிவைத்து காதலித்து திருமணம் செய்வதோடு அவர்களை ஐ.எஸ் அமைப்பில் இணைத்து விடுகின்றனர்.
மத்திய அரசின் விசாரணை: இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மத்திய உளவுத்துறையான ரா அதிகாரிகள் கேரளா வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இவர்கள் காசர்கோட்டிலும் மங்களூரிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மங்களூரில் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்க்கும் அமைப்பு செயல்படுவதாக விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. சிறப்பு புலனாய்வு குழுவினரால் “ஐஎஸ்சில் சேர்ந்தவர்கள்”, அவர்களது உறவினர்கள் முதலியோரது தொலைபேசி-அலைபேசி விவரங்கள் ஆராயப்படுகின்றன[10]. இதன் மூலம், இறுதியாக அவர்கள் எங்கிருந்து யாருடன் தொடர்பு கொண்டார்கள் என்று தெரிய வரும்[11].
© வேதபிரகாஷ்
16-07-2016
[1] http://tamil.oneindia.com/news/india/21-missing-from-kerala-may-be-is-camps-cm-257874.html
[2] Firoz Khan, a 24-year-old from Trikaripur in Kerala’s Kasargod district, was arrested yesterday (10-07-2016) evening by officers of the Intelligence Bureau from Mumbai. He was nabbed from a hotel in Dongri in Mumbai. Firoz had left for Mumbai on June 22 on the pretext of going to Kerala’s Kozhikode city. A phone call Firoz made to inform his family about his whereabouts is what trapped him. During the call, he said some others who went missing from his village have reached IS camps in Syria, says a Manorama report.
[3] தி.இந்து, ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்த விவகாரம்: கேரள மாநிலத்தில் இருந்து 6 பெண்கள் உட்பட 21 பேர் மாயம் – சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தகவல், Published: July 12, 2016 09:49 ISTUpdated: July 12, 2016 10:02 IST.
[4] http://tamil.thehindu.com/india/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-6-%E0%AE%AA%E0%AF%86
[5] தினகரன், ஐஎஸ் தீவிரவாதிகளான கேரள வாலிபர்கள்: தமிழகத்தில் உளவுத்துறை உஷார், Date: 2016-07-10@ 00:16:56
[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=230018
[7] Reports said that a person called Abdul Rasheed Abdulla is suspected to have led the youths on to the terror path.
http://english.manoramaonline.com/in-depth/is-kerala-terrorism/kerala-jihadi-threat-missing-youths-story-in-points.html
[8] http://www.kaumudi.com/innerpage1.php?newsid=80207
[9] Father of Eesa and Yahiya, Vincent, alleged that his sons were influenced by Islamic preacher Zakir Naik
http://english.manoramaonline.com/news/just-in/people-missing-kasaragod-kerala-police-isis-islamic-state.html
[10] english.manoramaonline, ISIS links: Kerala police analyzing phone records, Thursday 14 July 2016 10:58 AM IST, byOur Correspondent
[11] http://english.manoramaonline.com/in-depth/is-kerala-terrorism/isis-links-kerala-missing-youth-police-tracking-phone-records.html
பிரிவுகள்: ஃபத்வா, ஃபிதாயீன், ஃபேஸ்புக், அமைதி, அமைதி டிவி, அல்லா, இணைதள ஜிஹாத், இந்தி ஜிஹாதி, இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், இராக், இரான், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய நாடு, இஸ்லாம், ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசில், ஐசிஸ், ஐஸில், கம்யூனிசம், கம்யூனிஸம், கலவரம், காஃபிர், காதல், காதல் ஜிஹாத், காதல் புனித போர்!, குண்டுவெடிப்பு, கேரள ஜிஹாதி, கேரள ஜிஹாதிகள், கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், கேரள போலீஸார், கேரள முஸ்லீம் சேவை சங்கம், ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, Uncategorized
Tags: ஃபத்வா, இந்துக்கள், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காபிர், குண்டு வெடிப்பு, குரான், சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், பாகிஸ்தான், புனிதப்போர், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஜாஹித்தீன், முஸ்லிம், முஸ்லிம்கள், முஸ்லீம்கள்
Comments: Be the first to comment
ஏப்ரல் 20, 2016
தமிழக முஸ்லிம் கட்சிகள் பிளவுப்பட்ட நிலை – இரட்டை வேடங்களா, நிறைய சீட்டுகளைப் பெற ஆடும் நாடகமா – திராவிட கட்சிகளின் தாஜா செய்யும் போக்கு தொடர்கிறது!
திமுகவினருக்கும், முஸ்லிம்களுக்கும் என்ன பிரச்சினை?: உளுந்துார்பேட்டையை போல வாணியம்பாடி தொகுதியை, அண்ணா அறிவாலயத்தில், ‘சரண்டர்’ செய்து விடு’ என, முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு, தி.மு.க.,வினர் மிரட்டல் விடுத்த தகவல் வெளியாகி உள்ளது[1] என்ற செய்தி வியப்பாக உள்ளது. என்ன மீலாது நபி விழாக்களில் கலந்து கொண்டு, ரம்ஜான் நோன்பு விழாக்களில் நன்றாக சாப்பிட்டு முஸ்லிம்களை புகழ்ந்த திராவிடர்களா, முஸ்லிம்களை எதிர்க்கிறார்கள் என்ற கேள்வி எழுகின்றது. வேலுார் மாவட்டத்தில், மொத்தமுள்ள, 13 தொகுதிகளில், 10ல் தி.மு.க., போட்டியிடுகிறது; மூன்று தொகுதிகளில், கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. சோளிங்கர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், ஆம்பூர் தொகுதியில் மனித நேய மக்கள் கட்சியும், வாணியம்பாடி தொகுதியில் முஸ்லிம் லீக் கட்சியும் போட்டியிடுகிறது[2]. வாணியம்பாடி தொகுதியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில், முகமது பாரூக் போட்டியிடுகிறார்.
உளுந்தூர்பேட்டை தொகுதியை திமுக–விடம் ஒப்படைத்தது ஏன்?: திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.ம.க.வுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப் பட்டது. அதில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியை திமுக-விடம் ஒப்படைத்தது[3]. இந்தத் தொகுதியில் திமுக சார்பில் ஜி.ஆர்.வசந்தவேல் போட்டியிடுவார் என்று திமுக அறிவித்துள்ளது. இதையடுத்து, அந்தத் தொகுதிக்கு வேட்பாளரை திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார்[4]. ம.ம.க.தலைவர் ஜவாஹிருல்லா வெள்ளி மாலை திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய பின்பு உளுந்தூர்பேட்டை தொகுதியை திமுக வசம் அளித்ததாகத் தெரிவித்தார். எனினும் அதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. ஒரு தொகுதியை திமுகவுக்கு விட்டுக் கொடுத்துள்ள நிலையில் ம.ம.க போட்டியிடும் தொகுதிகள் நிலவரம்:
- ராமநாதபுரம்: ஜவாகிருல்லா.
- தொண்டாமுத்தூர்: எம்.ஏ.சையது முகமது.
- நாகப்பட்டிணம்: ஏ.எம்.ஜபருல்லா.
- ஆம்பூர்: வி.எம்.நஜீர் அகமது.
தொகுதி உடன்பாடு பிரச்சனையில் திமுக கூட்டணியிலிருந்து எஸ் .டி.பி.ஐ.கட்சி வெளியேறியமை குறிப்பிடத்தக்கது[5]. ஆகவே, சீட்டு எண்ணிக்கையினால் எஸ்.டி.பி.ஐ.கட்சி விலகியது என்று சொல்வதில் அர்த்தமில்லை.
வாணியம்பாடி திமுகவுக்கே: கடந்த, 37 ஆண்டுகளாக, கூட்டணி கட்சிகளுக்கே, வாணியம்பாடி ஒதுக்கப்பட்டு வந்துள்ளதால், இந்த முறை வாய்ப்பு கிடைக்கும் என, தி.மு.க.,வினர் எதிர்பார்த்திருந்தனர். தொகுதி முழுவதும், சுவர்களில் உதயசூரியன் சின்னத்தை வரைந்து வைத்திருந்தனர். ஆனால், இந்த முறையும் தொகுதி கைமாறியதால், தி.மு.க.,வினர் அதிருப்தி அடைந்தனர்[6]. நேற்று முன்தினம் இரவு, ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய தி.மு.க.,வினர், வேலுார் மேற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தி.மு.க., போட்டியிட வலியுறுத்தி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்[7]. இதற்கிடையில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் மனிதநேய மக்கள் கட்சி, உளுந்துார்பேட்டை தொகுதியை, தி.மு.க.,விடம் சரண்டர் செய்தது[8]. அதேபோல், வாணியம்பாடி தொகுதியையும் சரண்டர் செய்ய வேண்டும் என, முஸ்லிம் லீக் வேட்பாளர் முகமது பாரூக்கை, தி.மு.க.,வினர் மிரட்டியதாக, 16-04-2016 அன்று தகவல் பரவியது[9].
முஸ்லிக் லீக் நிர்வாகி திமுகவினருக்கும், முஸ்லிம்களுக்கும் உள்ள பிரச்சினை பற்ரி கூறுவது: இது குறித்து, முஸ்லிம் லீக் நிர்வாகி ஒருவர் கூறியதாவது: இதன் பின்னணியில், வேலுார் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலர் தேவராஜ் உள்ளார். அவரது மைத்துனர் அசோகன், ஆலங்காயம் ஒன்றிய செயலராக இருக்கிறார். அவரது துாண்டுதலில் தான், தி.மு.க.,வினர் போராட்டம் நடத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். ஆம்பூரிலும் எதிர்ப்பு: ஆம்பூர் தொகுதியை, மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கியதைக் கண்டித்து, தி.மு.க.,வினர் போராட்டத்தில் குதித்தனர். ஆம்பூர் நேதாஜி சாலையில் மறியல் நடத்திய, 100க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர், பின், நகர தி.மு.க., அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, ‘ஆம்பூர் தொகுதியில், தி.மு.க.,வே போட்டியிட வேண்டும்; இல்லையெனில், தேர்தல் பணியில் ஈடுபட மாட்டோம்’ என, கோஷமிட்டனர். தகவலறிந்து வந்த தி.மு.க. நிர்வாகிகள் போராட்டக்காரர்களை சமரசம் செய்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்[10].
தங்களது மக்கட்தொகைக்கு அதிகமாக முஸ்லிம்கள் சீட்டுகள் பெறுவது: தமிழக மக்கட்தொகை சுமார் 7.3 கோடி அல்லது 730 லட்சங்கள், அதில் முஸ்லிம்கள் சுமார் 43 லட்சங்கள் இருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால், அவர்களுக்கு 6% என்ற கணக்கில் ஒன்று அல்லது இரண்டு இடங்கள் தான் கொடுக்கப்பட வேண்டும் ஆனால் 12 முதல் 15 சீட்டுகள் கொடுக்கப்படுகிறன. இது தவிர “தேர்தெடுக்கும் முறையில்” ஒரு எம்.பி பதவியையும் சேர்த்து பேரத்தில் பேசி வருகிறார்கள். தவிர அரசு ஒதுக்கீடு இடங்கள், கடைகள், குத்தகைகள் முதலியவற்றி;உம் முஸ்லிம்கள் கணிசமான இடங்களைப் பெறுகிறார்கள், கோடிகளை அள்ளுகிறார்கள். இதெல்லாம், மற்ற திராவிட அரசியல்வாதிகளை பாதிக்கின்றன. 30-50 ஆண்டுகள் என்று உழைத்து வந்து கொண்டிருக்கின்ற நிலையில், நேற்று வந்தவர்கள் சீட் பெற்று பதவிக்கு வருவதை அவர்கள் விரும்பவில்லை என்றே தெரிகிறது. இது தவிர மற்ற கட்சிகளில் உள்ள முஸ்லிம் வேட்பாளர்கள் முஸ்லிம்களாகத்தான் செயல்பட்டு வருகிறார்களே தவிர இந்துக்களைப் போல நாத்திகர்கள், செக்யூலரிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் என்றெல்லாம் செயல்படுவதில்லை. திராவிடக் கட்சித் தலைவர்கள் அவர்கள் மூலம் ஆதாயம் பெறுகின்றனரே தவிர மற்றவர்களுக்கு, தொண்டர்களுக்கு எந்த லாபமுன் இல்லை.
தமிழகத்தில் முஸ்லிம் அரசியல் நிலை என்ன?: 1948 முதல் 1972 வரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்), திமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டு இரண்டு கட்சிகளும் பரஸ்பர ஆதாரங்கள் பெற்றன. 1970-80களில் வளைகுடாவுக்கு வேலைக்குச் சென்றது, இலங்கை (மலேசியா, சிங்கப்பூர் முதலியவற்றைச் சேர்த்து) வியாபார இணைப்புகள், தங்கம், போதை மருந்து கடத்தல் போன்றவற்றில் கோடிகளை அள்ளினர். இதற்காகத்தான் அவர்களது அரசியல் உறவுகள் உதவின. பணம் அதிகமாக வரவர, மசூதிகள், டிரஸ்டுகள், நிறுவனங்கள் அதிகமாகின. அதற்கேற்றப்படி, முக்கியஸ்தர்கள் அரசியல் ஆதாயம் பெற விரும்பினர். சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு 1987ல் ஷாபானு வழக்கு உதவியது. இதை வைத்துக் கொண்டு, ஐ.யூ.எம்.எல் அடக்கி வாசிக்கிறது, இந்துத்த்வத்திற்கு துணை போகிறது என்று குற்றஞ்சாட்ட ஆரம்பித்தன. 1992ல் ராமஜென்பபூமி விவகாரம் அவர்களுக்கு பெரிதும் உதவியது. இதனால், 1995ல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தனர். 1997ல் கோயம்புத்தூரில் கான்ஸ்டெபில் செல்வராஜ் முஸ்லிம்களால் கொலை செய்யப் படுகிறார். பிப்ரவரி 14, 1998ல் கோயம்புத்தூர் குண்டுவெடிப்புகள் நடக்கின்றன. அதில் 58 பேர் கொல்லப்படுகின்றனர், 200ற்கும் மேலானவர்கள் படுகாயம் அடைகின்றனர். 2009ல் மனிதநேயக் கட்சி தோன்றியது. இப்படியாக முஸ்லிம் கட்சிகள் தீவிரவாத அரசியலில் இறங்கின.

ஆம்பூர் – தினமலர் – 02_07_2015_002_015
முஸ்லிம் கட்சிகளினால் தமிழகத்திற்கு கிடைத்த பலன் என்ன?: ஒவ்வொரு திராவிட கட்சி அமைச்சர், எம்.பி, எம்.எல்.ஏ, தான் பதவியில் இருந்த காலத்தில், தான் மக்களுக்காக இதை செய்தேன் – அதை செய்தேன் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், இந்த முஸ்லிம்கள் பதவிக்கு வந்தால், தமிழக மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்பதை இதுவரை யாரும் கேட்கவில்லை என்றே தோன்றுகிறது. அரசியல் கட்சி வேட்பாளராக நின்று வெற்ற்ப்பெற்றப் பிறகும், அவர்கள் முஸ்லிம்களாக இருந்து, தங்களது நலன்களை பெருக்கிக் கொண்டார்களே தவிர மற்ற மக்களின் நலன்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. ராமேஸ்வரம், நாகப்பட்டினம், கும்பகோணம் போன்ற தொகுதிகளில் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தாலும், அங்குள்ள கோவில்களை, கோவில் சொத்துகளை பாதிக்கும் வகையில் தான் நடந்து கொள்கின்றனர். கோடிக்கணக்கில் வருகின்ற பக்தர்கள் மூலம், வியாபாரங்களில் லாபங்களை அள்ளுகின்றனரே தவிர, பதிலுக்கு அவர்கள் எந்த வசதிகளையும் செய்து தருவதில்லை. பிறகு அரசியல் மற்றும் அரசியல் இல்லாத நிலைகளில் அவர்களினால் தமிழக மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை எனும் போது, விகிதாசாரத்திற்கு அதிகமாக அவர்களாஇத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பதனால் என்ன பலன்?
© வேதபிரகாஷ்
20-04-2016
[1] தினமலர், தொகுதியை சரண்டர் செய்‘: முஸ்லிம் லீக்கிற்கு தி.மு.க., மிரட்டல், ஏப்ரல்,18,,220016.011:22..
[2] மாலைமலர், கூட்டணிக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு: வாணியம்பாடியில் தி.மு.க.வினர் போராட்டம், பதிவு: ஏப்ரல் 17, 2016 16:37, மாற்றம்: ஏப்ரல் 17, 2016 16:40.
[3] இன்னேரம்.காம், மனிதநேய மக்கள் கட்சியின் ஒரு தொகுதி திமுகவிடம் ஒப்படைப்பு!, சனிக்கிழமை, 16 April 2016 00:44.
[4]http://www.dinamani.com/tamilnadu/2016/04/16/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/article3382392.ece
[5] http://www.inneram.com/news/tamilnadu/8641-mmk-one-seat-submitted-to-dmk.html
[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1503913‘
[7] தினமணி, உளுந்தூர்பேட்டையை விட்டுக் கொடுத்தது மமக; திமுக வேட்பாளரும் உடனே அறிவிப்பு, By சென்னை, First Published : 16 April 2016 12:47 AM IST
[8] தமிழ்.ஒன்.இந்தியா, மமக அறிவிப்பை தொடர்ந்து உ.பேட்டையில் திமுக போட்டி..ஜி.ஆர்.வசந்தவேல் வேட்பாளராக அறிவிப்பு, By: Karthikeyan, Updated: Friday, April 15, 2016, 20:32 [IST].
[9] http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-contest-ulundurpet-constituency-251346.html
[10] http://www.maalaimalar.com/News/TopNews/2016/04/17163725/1005449/cni-47.vpf
பிரிவுகள்: அடிப்படைவாதம், அதிமுக, அத்வானி, அரசியல்வாதிகள், அல் - உம்மா, ஆம்பூர், ஆற்காடு, இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இப்தார், இரட்டை இலை, இரட்டை வேடம், இறை தூதர், இறைதூதர், இறைத்தூதர், உதய சூரியன், ஓட்டு, ஓட்டுவங்கி, காங்கிரஸ், காதர் மொகிதீன், காதர் மொய்தின், காதர்மொய்தின், Uncategorized
Tags: ஆம்பூர், ஆற்காடு, இடவொதிக்கீடு, இந்துக்கள், இஸ்லாம், உளுந்தூர்பேட்டை, குண்டு வெடிப்பு, சின்னம், சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜிஹாத், தேர்தல், பலன், புனிதப்போர், மீலாது நபி, முஜாஹித்தீன், முஸ்லீம்கள், ராணிப்பேட்டை, வாணியம்பாடி
Comments: Be the first to comment
ஏப்ரல் 10, 2016
“இறைதூதர் கருணாநிதி” என்ற திராவிட மேடை பேச்சும், அடிப்படைவாதப் பிரச்சினையும், தீவிரவாத பின்னணியும்!

எங்கள் இனத்தைக் காப்பாற்ற வந்த தூதர் என்று எஸ்.டி.பி.ஐ., மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் சேர்ந்து வந்திருருக்கிறார்கள்: மார்ச் 28ம் தேதி 2016 சேலம் கோட்டை மைதாணத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் தீப்பொரி ஆறுமுகம், நாகை நாகராஜன் முதலியோர் பேசினர். தீப்பொரி ஆறுமுகம் 1960களில் பேசும் அலாதியே தனிதான். மெட்ராஸ் பாஷை, கெட்ட வார்த்தை முதலியவை சரளமாக வரும். நாகை நாகராஜன் பேசும் போது, முஸ்லிம் கட்சிகள் எல்லாமே ஒட்டு மொத்தமாக கலைஞரிடம் கூட்டு சேர்ந்துள்ளன, என்று விவரிக்க ஆரம்பித்தார். ராஜ் தொலைக்காட்சி அகடவிகடம் பேச்சரங்க நிகழ்ச்சியின் நடுவர் கலைமாமணி கவிஞர் நாகை நாகராஜன், “இந்தத் தேர்தலில் தான் சிறுபான்மை இனத்திலே மிகப்பெரிய இனமான இஸ்லாமிய இனத்தின் அத்தனை அமைப்புகளும் அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியைப் பார்த்து ‘நீங்கள் தான் நபிகள் நாயகத்திற்குப் பிறகு எங்கள் இனத்தைக் காப்பாற்ற வந்த தூதர் என்று எஸ்.டி.பி.ஐ., மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் சேர்ந்து வந்திருருக்கிறார்கள்,” என்று பேசியுள்ளார்[1]. இந்த வீடியோவிலும் அப்பேச்சைக் கேட்கலாம்[2]. திமுகவிடம் கூட்டு வைத்துக் கொண்டு, கெஞ்சி-கூத்தாடி அதிகமான சீட்டுகளை வாங்கிக் கொண்டுள்ளன முஸ்லிம்களின் பிளவுபட்ட கட்சிகள். ஒருவேளை வெளியில் சண்டைப் போட்டுக் கொள்வது போன்று நாடகம் ஆடி, இவ்வாறு அரசியல் செய்கின்றனரா என்று “செக்யூலரிஸ்டுகளுக்கு” தோன்றுகிறது.
மனித நேயக்கட்சி அறிவித்த கண்டனம்: கடந்த மார்ச் 28ம் தேதி 2016 சேலம் கோட்டை மைதாணத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் திமுக நூல் வெளியீட்டுக் குழு உறுப்பினர் நாகை நாகராஜன் பேசும் போது நபிகள் நாயகத்திற்கு பிறகு முஸ்லிம் இனத்தை பாதுகாக்க வந்த இறைதூதர் தலைவர் கருணாநிதி என்று கூறியதாக பத்திரிக்கையில் செய்தி வந்தது[3]. சமூக வலைதளங்களிலும் இச்செய்தி வேகமாக பரவியது. நபிகள் நாயகத்திற்கு பிறகு இறைதூதர் வரமுடியாது என்பதில் உறுதியான கொள்கை உடையவர்கள் முஸ்லிம்கள் . எனவே நாகை நாகராஜனின் பேச்சை பற்றி செவியுற்ற அனைத்து முஸ்லிம்களுமே வேதனை அடைந்துள்ளனர். எனவே இது தவிர்க்க பட வேண்டும், கண்டிக்க பட வேண்டும். தனது கருத்துக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று உடனடியாக மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேர, ஜவாஹிருல்லாஹ் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் மூலமாக திமுக தலைமைக்கு செய்தியை புகராக கொண்டு சென்றார். மேலும் வாழும் மனிதர்களை புகழ வேண்டும் என்பதற்காக மத உணர்வுகளை புண்படுத்தும் வார்த்தைகளை யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும் அரசியல் ரீதியான அணுகுமுறைகளுக்காக எந்த நிலையிலும் அடிப்படை கொள்கைகளை விட்டுத் தர மாட்டோம் என்பதையும் தெளிவு படுத்தியுள்ளோம். திமுக தலைமையையும் நேரில் சந்தித்து இது பற்றி புகார் அளிக்க உள்ளோம். எனவே யாரும் பதட்டம் அடையவேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். என்று மனித நேயக்கட்சி தலைமையகம் அறிவித்தது[4].
எவரையும் எங்கள் மாநபியோடு ஒப்பிட்டு பேசுவதை ஒருபொழுதும் அனுமதிக்க முடியாது. – ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ்நாடு.![5]: ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில தலைவர் மௌலவி ஆபிருத்தீன் மன்பஈ ஹலரத்அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை “சேலத்தில் நடந்த கூட்டத்தில் திமுக பேச்சாளர் நாகை நாகராஜன் அவர்கள் பேசும் போது முஸ்லிம்களின் கொள்கையோடு மோதக்கூடிய பேச்சை வரம்புமீறி பேசியுள்ளார் இந்த பேச்சு வன்மையாக கண்டிக்க தகுந்தது மிகவும் கண்டனத்திற்குரியது. இத்தகைய வாரத்தை எங்களது கொள்கைக்கு எதிரானது எலும்பில்லாத நாவுதானே எதுவேண்டுமானாலும் சொல்லலாம் மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் அமைதியாக இருந்துவிடுவார்கள் என்று எண்ணினால் அது மாபெரும் தவறு. எவரையும் எங்கள் மாநபியோடு ஒப்பிட்டு பேசுவதை ஒருபொழுதும் அனுமதிக்க முடியாது. திமுக நாகை நாகராஜன் அவர்களை கட்சியின் பொறுப்புகள், மற்றும் அடிமட்ட உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் அவரை நீக்கிவிட வேண்டும். தமிழக அரசு திமுக பேச்சாளர் நாகை நாகராஜன் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்,” இப்படிக்கு மௌலவி செய்யது முஹம்மது உஸ்மானி, மாநில செய்தி தொடர்பாளர், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ்நாடு[6].
போலீஸ் புகார் கொடுக்காமல் மிரட்டும் முஸ்லிம் கட்சிகள்: கட்சியின் பொறுப்புகள், மற்றும் அடிமட்ட உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் அவரை நீக்கிவிட வேண்டும், உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்லியிருப்பது நல்ல தமாஷாகத் தெரிகிறது. ஏனெனில், இப்படியெல்லாம் மிரட்டும் இவர்கள் போலீஸாரிடம் உரிய புகார் கொடுத்ததாகத் தெரியவில்லை. உண்மையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், அவ்வாறு புகார் கொடுத்திருக்கலாம். வழக்குப் பதிவு செய்திருக்கலாம். நீதிமன்றத்தில் இப்பிரச்சினை வரும் போது, விவரங்கள் அலசப்படும் போது, பேசியது உண்மையிலேயே இந்தி சட்டங்களின் பிரிவுகளை மீறியவையா, குற்றமாகுமா, எந்த தண்டனை கொடுக்கலாம் என்று வாத-விவாதங்கள் உண்டாகும். ஆனால், அவற்றைத் தடுக்கவே முஸ்லிம் கட்சிகள் இவ்வாறி மிரட்டி அமுக்கி வாசிக்கின்றன என்று தெரிகிறது. மேலும், இதை பிரச்சினையாக்கினால், முஸ்லிம் கட்சிகளின் ஒதுக்கீடு காலியாகி விடும், ஒரு சீட்டுக் கூட ஜெயிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டு விடும்.
இந்திய தேசிய லீக் மாநில தலைவர் தடா ரஹீம் அறிவிப்பு: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சென்னை கோபாலபுரம் வீட்டை முற்றுகை இடப்போவதாக இந்திய தேசிய லீக் கட்சி அறிவித்துள்ளது[7]. இது குறித்து இந்திய தேசிய லீக் மாநில தலைவர் தடா ரஹீமை தொடர்பு கொண்டு கேட்டபோது, “சமீபத்தில் தி.மு.க. பேச்சாளர் நாகராஜ் என்பவர், கருணாநிதியை இறைதூதர் என்று குறிப்பிட்டு பேசினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மட்டுமே இசுலாமியர்கள் இறைதூ தராக நினைக்கிறார்கள். ஆகவே நாகராஜை கண்டிக்க வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கருணாநிதிக்கு கோரிக்கை வைத்தோம். அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆகவே கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி, இன்று (08-04-2016) மாலை நான்கு மணி அளவில் அவரது கோபாலபுர இல்லத்தை முற்றுகையிடப்போகிறோம்” என்றார்[8].

முஸ்லிம் மக்கள் ஜவாஹிருல்லா மீது கொதிப்பு[9]: காலைமலர் என்ற இணைதளம், “முஹம்மது நபி அவர்களை திமுக பேச்சாளர் நாகை நாகராஜன் என்பவர் கலைஞருடன், இணைத்து இழிவு படுத்திய போது பொங்காத பேராசிரியர்! தன்னுடை மமக கட்சியை தீவிரவாத இயக்கம் என்று சொன்ன ஹைச்.ராஜாவை நோக்கி பொங்காத பேராசிரியர்! கலைஞரை ஜாதியை சொல்லி இழிவு படுத்திய விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட வைகோவை நோக்கி மட்டும் டிவி சேனலில் பொங்க காரணம் என்ன? நாயவான்களே! நீங்களே சொல்லுங்கே! சீட்டு, பதவிக்காக தன்னையே மறந்து செயல்படும் ஜவாஹிருல்லாஹ்வின் செயல்பாடுகள் அவரின் மோசமான அரசியலை பிரதிபலிக்கின்றது. அரசியலுக்காக கலைஞரை இவர் மட்டும் இறை தூதராக ஏற்றுக் கொண்டாரோ? என்று முஸ்லிம் மக்கள் ஜவாஹிருல்லா மீது கொதிப்படைந்து உள்ளனர்”, என்று சாடியுள்ளது[10]. இது ஜவாஹிருல்லாஹுக்கு எதிராக செயல்படும் முஸ்லிம் கூட்டம் போலிருக்கிறது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது: “சேலத்தில் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய நாகை நாகராஜன் என்பவர், இஸ்லாமிய மதம் குறித்து தவறான கருத்துக்களை பேசியதாக வார இதழ் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமை கழகப் பேச்சாளராக நாகை நாகராஜன் என்றொருவர் இருப்பதாக எனக்கு தெரியவில்லை[11]. இருந்தாலும், கழக மேடைகளில் உரையாற்றுவோர் நமது இயக்கத்திற்குரிய கண்ணியத்தோடும், நாகரீகத்தோடும் பேச வேண்டும். ஆர்வம் மிகுதியால் மத சம்பந்தமாக ஏதாவது தவறாக பேசினால், அதை மிகைப்படுத்திட, மாற்று கட்சியினர் இருக்கிறார்களோ இல்லையோ, ஒரு சிலர் அதற்காகவே இருக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்[12]. ஒன்றை பத்தாக்கி, பத்தை நூறாக்கி கழகத்தின் மீது அவதூறு வீசிட அவர்கள் எப்போது நேரம் கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டே இருப்பார்கள். எனவே கழக கூட்டங்களில் பேசுவோர் “யாகாவாராயினும் நா காக்க” என்று அய்யன் திருவள்ளுவர் வழங்கியிருக்கும் அறிவுரையை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு பேச வேண்டும். நாகை நாகராஜன் தவறாக எதுவும் பேசியிருந்தால், அது கழகத்தின் கருத்தல்ல என்று மறுப்புத் தெரிவிப்பதோடு, அந்த குறிப்பிட்ட பேச்சாளரும் இதனையை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு இனி கழக மேடைகளில் மிகுந்த கவனத்துடன் பேச வேண்டும்”, இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
© வேதபிரகாஷ்
10-04-2016
[1] http://www.seythigal.com/?p=9486; https://youtu.be/Rdj8_gblPD8
[2] https://www.facebook.com/1416474845231879/videos/1695088387370522/
[3] முக்கண்ணாமலைப்பட்டி அறிவிப்பு, இறைதூதர் தலைவர் கருணாநிதி, Muckanamalaipatti, 00:38, ஏப்ரல்.2016.
[4] http://muckanamalaipatti.blogspot.in/2016/04/blog-post_88.html
[5] http://vkalathurone.blogspot.in/2016/04/blog-post_81.html
[6] http://vkalathurone.blogspot.in/2016/04/blog-post_81.html
[7] பத்திரிக்கை.காம், இன்று மாலை கருணாநிதி வீடு முற்றுகை: இந்திய தேசிய லீக் அறிவிப்பு, Posted by : டி.வி.எஸ். சோமு, on Friday, April 8, 2016 @ 11:03 am.
[8] https://www.patrikai.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-
%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F/
[9] காலைமலர்.நெட், கலைஞரை இறைதூதர் என்று சொன்னதை ஜவாஹிருல்லா ஏற்றுக்கொண்டாரா? By Mathiyalagau, Apr 7, 2016.
[10] http://kaalaimalar.net/kalingar-javahi-is-no-comment/
[11] பிபிசி.தமிழ்.நியூஸ், தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய நாகை நாகராஜன் யார் என்று எனக்கு தெரியாது-கருணாநிதி, பதிவு செய்த நாள்: 07 Apr 2016 11:05 am
By : Sam Kumar.
[12] http://www.tamilnewsbbc.com/2016/04/07/532916.html
பிரிவுகள்: அடிப்படைவாதம், அதிமுக, அத்தாட்சி, அரேபியா, அல் - உம்மா, அல்-உம்மா, அவதூறு, இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இறை தூதர், இறைதூதர், ஈ. வே. ரா, எஸ்.டி.பி.ஐ, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐசிஸ், ஓட்டுவங்கி, கருணாநிதி, நபி, நாகராஜன், நாகை நாகராஜன், முகமது நபி, Uncategorized
Tags: இணை, இணை வைத்தல், இறைதூதர், இஸ்லாமிய தீவிரவாதம், ஒப்பீடு, கருணாநிதி, சல், செக்யூலரிஸம், சேலம், ஜிஹாத், தூதர், நபி, நாகராஜன், நாகை நாகராஜன், புனிதப்போர், முகமதியர், முகமது நபி, முஜாஹித்தீன், முஸ்லீம்கள், மேடைப் பேச்சு, மொஹம்மது நபி
Comments: Be the first to comment
மார்ச் 23, 2016
2011 மற்றும் 2016 தேர்தல்கள் – முஸ்லிம் கட்சிகளின் யுக்திகள், மதவாத முயற்சிகள், மற்றும் ஓட்டு வங்கி அரசியல் வியாபாரங்கள்! (3)

தமிழ் மாநில முஸ்லிம் லீக் நிலைப்பாடு: ”அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., சேர்ந்தாலும், கூட்டணியில் தொடர்வோம்,” என, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் கூறினார். முஸ்லிம் லீக் இரண்டாகப் பிரிந்து அதிமுக மற்றும் திமுக கோஷ்டிகளில் இருந்து கொண்டிருக்கின்றன. இப்பொழுது, கூட்டணி குழப்பங்கள் நீடித்து வருவதால், இத்தகைய மதவாதக் கட்சிகளுக்கு வேறு வழியில்லாமல் திகைத்துக் கொண்டிருக்கின்றன. ஊழல் பற்றி பேசும் “சுத்தமான” திராவிடக் கட்சிகள் இப்பொழுது ஒன்றாக சேர்ந்து விட்டன. அதாவது திமுக காங்கிரசூடன் சேர்ந்து விட்டது. இதனால், பிஜேபி, அதிமுக கூட்டணிக்கு வரலாம் என்ற நிலையில் முஸ்லிம் கட்சிகளுக்கு “அரசியல் தீண்டாமை” வந்து தள்ளாட ஆரம்பித்து விட்டன. இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது[1]: வரும் சட்டசபை தேர்தலிலும், அ.தி.மு.க., கூட்டணியில் நாங்கள் தொடர்வோம். அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., சேர்ந்தாலும், தமிழ் மாநில முஸ்லிம் லீக் அந்த கூட்டணியில் தொடரும். சட்டசபை தேர்தலில் போட்டியிட, தமிழக முதல்வரிடம் சீட் கேட்டுள்ளோம். அவர் எங்கள் கட்சிக்கு, பல தொகுதிகள் வழங்குவார் என நம்புகிறோம். எங்கள் கட்சி நிர்வாகிகள் எம்.எல்.ஏ., ஆக வேண்டும் என்பதை விட, நல்ல ஆட்சி தான் முக்கியம். தமிழக அரசு நடத்தும் உருது பள்ளிகளில், உருது ஆசிரியர்கள் நியமிக்க நேர்காணல் நடந்து வருகிறது. விரைவில் காலியாக உள்ள உருது பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு, அவர் கூறினார்[2].
மூன்றாவது அணிக்கு வேலையில்லை: இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாநில தலைவர் காதர் முகைதீன் பேட்டி[3]: தமிழகத்தில் 3–வது அணிக்கு வேலையில்லை. தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க.தான் பெரிய கட்சி என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் முகைதீன் சென்ற மாதம் அக்டோபரில் கூறினார். ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைகள் மத்திய அரசின் கொள்கையாக மாறிவிட்டன. பா.ஜனதா பெயரில் ஆர்.எஸ்.எஸ்.சின் ஆட்சி நடக்கிறது. இந்தியாவில் உள்ள மத சார்பற்ற சக்திகள் ஜனநாயக இயக்கங்கள் ஒன்றுதிரண்டு மதவாத போக்கிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். அரசியல் அரங்குகள், சாகித்ய அகாடமி என அனைத்திலும் மதவாத கொள்கைகள் புகுத்தப்பட்டு வருகிறது. இந்த போக்கு நீடித்தால் ஜனநாயகத்தின் அடித்தளமே தகர்ந்துவிடும். இதற்கு ஆதாரமாக மாட்டுக்கறி பிரச்சினைக்காக 4 அப்பாவி முஸ்லிம்கள் பலியாக்கப்பட்டு உள்ளனர். அரியானா பா.ஜனதா முதல்வர் உள்பட மத்திய மந்திரிகள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு வருகின்றனர். முஸ்லிம்களை மட்டும் தனிமைப்படுத்தி வன்முறை தூண்டப்படுகிறது”.
தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.வை தவிர மூன்றாவது அணிக்கு வேலையில்லை: “இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும். எதிர்க்கட்சிகள் இடையே கூட்டணி அமைப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க., தி.மு.க.வை தவிர 3–வது அணிக்கு வேலையில்லை[4]. வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் இல்லை. தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க.தான் பெரிய கட்சி. அதற்கு இணையான கட்சி தி.மு.க. மட்டுமே. உதிரி கட்சியினர் ஆட்சியை பிடிப்போம் என கூறுவது அவர்களது தனிப்பட்ட ஆசை, விருப்பம். அ.தி.மு.க. ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இருந் தாலும் ஆட்சி, அதிகாரம் அவரது கட்டுப்பாட்டில் இல்லை. எந்த அதிகாரியும் ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இல்லை. நாட்டிலேயே அதிக அளவில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் பலாத்காரம் நடைபெறும் மாநிலமாக தமிழகம் உள்ளது. அரசின் மீது மக்கள் அவநம்பிக்கையில் உள்ளனர். அதனால்தான் மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தின்போது மக்கள் எழுச்சியும், வரவேற்பும் அதிகரித்து உள்ளது. மக்களின் அதிருப்தி வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக திரும்பும். அந்த எதிர்ப்பு வாக்குகள் தி.மு.க.வுக்குதான் செல்லும். எனவே வரும் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்”, இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில பொருளாளர் ஷாஜகான், முன்னாள் எம்.பி. அப்துல் ரகுமான், மாவட்ட செயலாளர் முகம்மதுபைசல், சாதுல்லாகான் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

ஆளும் மத்திய அரசுடன் கூட்டுவைத்துக் கொண்டுஅனுபவித்த திராவிட கட்சிகள்: பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொள்ள ஆவலாகத்தான் திராவிட கட்சிகள் இருக்கின்றன. அவை ஒன்றும் கூட்டு வைத்துக் கொள்ளாமலும் இருந்ததில்லை. செக்யூலரிஸம் என்றெல்லாம் பேசினால் கூட, தில்லியில் அதிகாரத்தை விரும்பத்தஆன் செய்கின்றன. ஒரு எம்.பி பதவுக்கு அலையும் கட்சித்தலைவர்கள் தமிழகத்தில் அதிகமாகவே இருக்கிறார்கள். அதனால் தான், ஓட்டுகள் கிடைக்காது என்றால் கூட அத்தகையக் கட்சித் தலைவர்கள் ஆர்பாட்டம் செய்து வருகிறார்கள். எல்லா விசயங்களிலும் மூக்கை நுழைத்துக் கொண்டு அறிக்கைக்கள் விடுவது, கூட்டங்கள் போடுவது என்று செய்திகளில் வர ஆசைப்பட்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள். எந்த கட்சியாவது கூப்பிடாதா என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்பதால் அதை கூட்டணியில் சேர்க்க தயாராக இல்லை என்ற நிலையில் பாஜகவுடன் கூட்டு வத்துக் கொள்ள திமுக முயல்கிறது என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன[5]. இதனால் தான் முஸ்லிம் லீக் போன்றவை மறைமுகமாக பேரம் பேசுகின்றன போலும். மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மமக ஆகிய 5 கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டு இயக்கத்தை உருவாக்கி, “அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸுடன் கூட்டணியில்லை: ஒத்த கருத்துடைய கட்சிகள் வரலாம்”, என்று அறைகூவல் விடுத்ததும் வேடிக்கையாகவே இருந்தது[6]. காங்கிரஸ் பிளவு பட்டுள்ளதால், பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொள்ளத்தான் திமுக மற்றும் அதிமுக விரும்பும். பாஜகவைப் பொறுத்த வரையில், அதிமுகதான் விருப்பமான கட்சி, ஆனால், ஊழல் என்ற பிரச்சினையும், ஜெயலலிதா வழக்குகளும் தடுக்கின்றன. அதற்கேற்ற முறையிலும் ஜெயலலிதாவின் கோரிக்கைகளும் அளவுக்கு அதிகமாக இருக்கின்றன. அந்நிலையில், பணிவுடன் வரும் திமுகவுடன் கூட்டு வைத்துக் கொள்ளலாம் என்று தான் பாஜகவினர் நினைத்தார்கள். அதே நிலைதான் 2016லும் உள்ளது.

அரசியல் வியாபாரம் செய்து கோடிகளை அள்ளும் முஸ்லிம் கட்சிகள்: உண்மையில் அரசியல் மூலம் கோடிக்கணக்கில் தங்களது தொழில், வியாபாரம், வர்த்தகம், ஏற்றுமதி-இறக்குமதி, கான்ட்ரேக்ட், முதலியவற்றில் தான் அவர்களுக்குக் குறிக்கோள் அதற்கு அவர்கள் வளைகுடா நாடுகளில் உள்ள தொடர்புகளை தாராளமாக உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள். கேரளாவில் பலவிதங்களில் வலுவாக இருப்பதினால், அங்கிருக்கும் பலம், அதிகாரம் முதலியவையும் கிடைக்கின்றன. குற்றங்கள் புரியும் போது, வரியேய்ப்புகளில் ஈடுபடும் போது, இவர்கள் தங்களது அதிகாரங்களை பயன்படுத்திக் கொள்கிறர்கள். அவற்றுடன் கடந்த 30-40 ஆண்டுகளில் தீவிரவாதமும் இணைந்து விட்டது. தடை செய்யப்பட்ட சிமி, அல்-உம்மா போன்ற கூட்டனர் தார் இப்பொழுது வெவ்வேறு பெயர்களில், பேனர்களில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஓட்டு வங்கி உருவாக்கி பேரம் பேசும் முஸ்லிம் கட்சிகள்: மதத்தின் பெயரால் பாரதத்தைத் துண்டாடிய முஸ்லிம் லீக் இன்று வரை தான் செக்யூலரிஸ கட்சியாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறது. மானங்கெட்ட திராவிடக் கட்சிகள் அதனுடம் கூட்டு வைத்துக் கொண்டு தங்களது செக்யூலரிஸத்தை நிரூபித்து வருகின்றன. முஸ்லிம் கட்சிகள் செக்யூலரிஸம் பேசுவது முதலியன முரண்பாடானது மட்டுமல்ல ஜனநாயக கேலிக் கூத்தாகும். தமிழகத்தில் 2006-ஆம் வருட சட்ட பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் எண்ணிக்கை 7-லிருந்து 5-ஆக குறைந்தது பற்றியே முஸ்லிம்கள் கவனமாக இருந்தார்கள். ஆனால், ராமநாதபுரத்தைச் சேர்ந்த எம்.எச் ஜவாஹிருல்லாஹ் (மனித நேய மக்கள் கட்சி) அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றது முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தது என்று பதிவு செய்து கொண்டார்கள். மேலப்பாளையம், அதிராம்பட்டினம், கடையநல்லூர், தென்காசி, கோவை, திருப்பூர், நாகூர், வாணியம்பாடி, ஆம்பூர், திருச்சி, திருவல்லிக்கேணி, துறைமுகம், லால்பேட்டை, பரங்கிப்பேட்டை, பண்டாரவாடை, காயல்பட்டினம், கீழக்கரை முதலிய தொகுதிகளில் முஸ்லிம் ஆதரவுடன் தான் ஜெயிக்க முடியும் என்ற ஓட்டு வங்கி அரசியலை உண்டாக்கி, அதன் மூலம் தான் திராவிட கட்சிகளிடம் பேரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் கட்சிகளின் போலித்தனங்கள்: திராவிட கட்சிகளைப் போல, முஸ்லீம் லீக்குகள் / கட்சிகளும் உருமாறி விட்டனவா அல்லது அதுபோல நடிக்கின்றனவா? இந்தியாவில் உள்ள ஒரே மதவாதி கட்சி பி.ஜே.பி தான் என்று இந்த முஸ்லீம் லீக்குகள் / கட்சிகளே கூறுவதும் வேடிக்கையான விஷயம் தான். ஆனால், செக்யூலரிஸ கட்சிகள் என்று கூறிக் கொள்ளும் திமுக, அதிமுக மாறி மாறி பி.ஜே.பியுடன் கூட்டு வைத்துள்ளன. இப்பொழுதுகூட, காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டு சேரும் பட்சத்தில் மாறுபட்ட எண்ணங்கள் இருந்தன. காங்கிரஸைப் பற்றி கேட்கவே வேண்டாம். செக்யூலரிஸம் சொல்லிக் கொண்டு பி.ஜே.பியை விட, அதிகமாகவே மதசார்புள்ள கட்சிகளுடன் – முஸ்லீம் லீக், கிருத்துவ கட்சிகள், சீக்கிய கட்சிகள் – தொடர்ந்து கூட்டு வைத்திருந்து வந்துள்ளன. ஆகவே, இப்படி முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் ஆளும் மற்றும் எதிர் கூட்டணிகளில் இருப்பது, அரசியலை மீறிய நிலையைத்தான் காட்டுகிறது.
© வேதபிரகாஷ்
23-03-2016
[1] தினமலர், அ.தி.மு.க., கூட்டணியில் தொடர்வோம் முஸ்லிம் லீக் தலைவர் தகவல், பிப்ரவரி.28, 2016. 07:31.
[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1467302
[3] மாலைமலர், 3 –வது அணிக்கு வேலையில்லை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் முகைதீன் பேட்டி, பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, அக்டோபர் 26, 2015: 5:17 PM IST.
[4] http://www.maalaimalar.com/2015/10/26171739/dont-work-to-third-party-india.html
[5] http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-tries-woo-bjp-forging-alliance-238651.html
[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-forms-new-poll-alliance-peoples-welfare-front-2016-239004.html
பிரிவுகள்: ஃபத்வா, அதிமுக, அன்பழகன், அம்பேத்கர், அரசியல் விபச்சாரம், அரசியல்வாதிகள், அல் - உம்மா, இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இரட்டை இலை, இரட்டை வேடம், உருது மொழி, எஸ்டிபிஐ, ஓட்டுவங்கி, கனிமொழி, காதர் மொகிதீன், காதர் மொய்தின், காதர் மொஹ்தீன், காதர்மொய்தின், முஸ்லீம் மாவோயிஸ்ட், முஸ்லீம் முன்னேற்றக் கழகம், முஸ்லீம்களிடம் கொஞ்சல், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், ஷேக் மைதீன், ஹைதர் அலி, Uncategorized
Tags: ஃபத்வா, அவமதிக்கும் இஸ்லாம், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கடத்தல், கூட்டணி, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், தீண்டாமை, பாஜக, பிஜேபி, புனிதப்போர், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், முஸ்லீம்கள், வரியேய்ப்பு
Comments: Be the first to comment
ஜனவரி 25, 2016
மனித மக்கள் நேயக் கட்சி உள்–குற்றச்சாட்டுகள், சண்டை, பிளவு, முதலியன எதைக் காட்டுகிறது?
ஜவாஹிருல்லா தமிமும் அன்சாரியை போலி என்று குற்றஞ்சாட்டினார்: பொதுக்குழு கூட்டம் நடந்த பிறகு, போட்டிக் குழுக்கள் ஜவாஹிருல்லா தமிமும் அன்சாரியையும், தமிமும் அன்சாரி ஜவாஹிருல்லாவையும் வெளியேற்றி தீர்மானங்களை நிறைவேற்றின. ஜவாஹிருல்லா தமிமும் அன்சாரியை போலி என்று குற்றஞ்சாட்டினார்[1]. கடந்த அக்டோபரில் அவர் அடிப்படை உறிப்பினர் நிலையிலிருந்து நீக்கப்பட்டார். அனவரி 2015லேயே அவரது மூன்றாண்டு தலைவர் காலம் முடிவடைந்தது. அவருக்கு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பட்டு, கட்சியிலிருந்து நவம்பர் 13, 2015ல் மதுரையில் அடந்த கூட்டத்தில் வெளியேற்றப்பட்டார். இப்பொழுது, மாநில அவை தம்மை அங்கீகாரத்துள்ளதால், மனித மக்கள் நேயக் கட்சி [Manithaneya Makkal Katchi (MMK)] உடையாத நிலையில் தான் உள்ளது. வட மரைக்காயர் தெருவில் அலுவலகத்தைக் கொண்டு இயங்கி வருகிறது என்று ஜவாஹிருல்லா தெரிவித்தார்[2].
ஜவாஹிருல்லா தமிமும் அன்சாரிக்கு எச்சரிக்கை[3]: மனிதநேய மக்கள் கட்சியின் அவசர பொதுக்குழுக் கூட்டத்தை ஜவாஹிருல்லா சென்னை தாம்பரத்தில் கடந்த அக்டோபர்.6-ம் தேதி நடத்தினார். இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்த தமீமுன் அன்சாரி, பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமீமுன் அன்சாரி, தஞ்சையில் நாளை மமக பொதுக்குழுக் கூட்டம் நடக்கும் என்று அறிவித்தார். இதற்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அறிக்கையினையும் வெளியிட்டார்: மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைப் பொதுக்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் ஜே.எஸ்.ரிபாயி தலைமையில் மேற்கு தாம்பரத்தில் கடந்த 6-ம் தேதி நடந்தது. மமக நிர்வாகக் குழுவை கலைக்க பொதுக்குழுவில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நடந்த தேர்தலில் கட்சித் தலைவராக எம்.எச்.ஜவாஹிருல்லாவும், பொதுச் செயலாளராக ப.அப்துல் சமதுவும், பொருளாளராக ரஹமதுல்லாஹ்வும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில், எனது தலைமையிலான மமகவுக்கு போட்டியாக தஞ்சையில் அக்டோபர் 11-ம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானதாகும். அந்தக் கூட்டத்தில் பங்கேற்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மனிதநேய மக்கள் கட்சி தலைமையின் அனுமதியில்லாமல் கட்சியின் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்துவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்[4].
அதிமுக, திமுக, ஊட்டணிகளில் மனிதநேய மக்கள் கட்சி:[5] மனிதநேய மக்கள் கட்சி தலைவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. இரண்டு இடங்களில் இன்று பொதுக்குழு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் குழப்பம் உருவாகியுள்ளது. தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பினர் அரசியல் நிலைப்பாட்டிற்காக ‘மனிதநேய மக்கள் கட்சி’ என்ற புதிய அரசியல் அமைப்பை கடந்த தேர்தலின் போது துவக்கினர். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 3 இடங்களில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி 2 இடங்களில் வெற்றிபெற்றது. கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா, அஸ்லம் பாஷா ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். கடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ஒரு இடத்தில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி தோல்வியடைந்தது. இதன் பின்னர் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது. மதிமுக,கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் அடங்கிய மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கத்தில் இணைந்து பல போராட்டங்களில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்றது.
மூன்றாவது அணி பிரச்சினையும், மனிதநேய மக்கள் கட்சியும்[6]: மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் தேர்தல் கூட்டணியாக மாறும் என்று வைகோ அறிவித்ததும், மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா இதற்கு மறுப்பு தெரிவித்தார். மூன்றாவது அணிக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்றவர், தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆகிய இரு கட்சி கூட்டணி தான் தமிழகத்தில் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார். இதனால் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மக்கள் கூட்டியக்க போராட்டங்களில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரிக்கும், கட்சி தலைமைக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதனால் கட்சி இரண்டாக உடையும் நிலை உருவாகியது. இதன் ஒரு பகுதியாக இரண்டு இடங்களில் பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டது.
மனித நேய மக்கள் கட்சியில் பிளவு ஏற்படும் சூழல் ஏற்பட்டது: இது தொடர்பாக கட்சியின் மூத்ததலைவர் மமக பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி சென்னை எழும்பூரில் நாளை மமக பொதுக்குழுவை அறிவித்து இருக்கிறார். இந்நிலையில், மமக மாநிலத்தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தாம்பரத்தில் மமக பொதுக்குழுவை அறிவித்துள்ளார்[7]. கூட்டணி குறித்த முரண்பாடு தொடர்பாக இருவரும் தனித்தனியே கூட்டம் நடத்துவதாக தகவல். மமக கூட்டணி உடைகிறதா என்ற கேள்வி எழுந்தது[8].
இப்பிளவின் பின்னால், திமுக அல்லது அதிமுக இல்லை என்று அன்சாரி தெளிவாக கூறினார்: இது குறித்து ஜவஹிருல்லா, 92 சதவீத நிர்வாகிகள் மனிதநேய மக்கள் கட்சியில் தான் உள்ளனர். போட்டி பொதுக்குழு நடத்த திட்டமிட்டுள்ள தமீம் அன்சாரி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நாளைய பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும். கட்சியை உடைக்க சதி நடக்கிறது. 2011- தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த போது நல்ல முறையில் தான் நடத்தினர்’’ என்று தெரிவித்துள்ளார்[9]. இது குறித்து தமீம் அன்சாரி, ’’ஜவாஹிருல்லா நாளை கூட்ட உள்ள பொதுக்குழு சட்டவிரோதமானது. எனது தலைமையில் நாளை நடக்க உள்ள பொதுக்குழு தான் அதிகாரப்பூர்வமானது. கட்சியின் பொதுச்செயலர் என்ற முறையில் எனக்கு தான் பொதுக்குழு கூட்ட அதிகாரம் உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்[10]. இப்பிளவின் பின்னால், திமுக அல்லது அதிமுக இல்லை என்று அன்சாரி தெளிவாக கூறினார்[11]. இப்பிரிவு தங்களது அலுவலகத்தை சூரையாடியது என்று குற்றஞ்சாட்டியது[12].
முஸ்லிம்கள் கட்சிகள் என்று தமிழகத்தில் பல பிரிவுகள் இருந்தாலும், எப்படியாவது இரண்டு-மூன்று எம்.பி, எம்.எல்.ஏ என்று கிடைக்குமாறு அரசியல் பேரங்கள் நடக்கின்றனட் அவ்வாறே சாதித்தும் வருகின்றானர். ஆனல், இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களால், ஒரு எம்.பி, எம்.எல்.ஏ கூட வருவதில்லை. இந்துக்கள் நலனிற்காக, எந்த கட்சி எம்.பி, எம்.எல்.ஏ பாடுபடுவதில்லை. கடந்த 60 ஆண்டுகள் ஆட்சியில், இந்துக்கள் படாத பாடு பட்டனர். கோவில்கள், கோவில் சொத்துகள் சூரையாடப்பட்டன. இந்துக்கள் – அல்லாதவர்களே அவற்றை அனுபவிப்பதுடன், ஆக்கிரமித்தும், சட்டத்தை வளைத்து வாங்கியும் வருகின்றனர். முதலமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டு திராவிட நாத்திகத் தலைவர்கள் பல அவதூறு பேச்சுகளை பேசியுள்ளானர், செயல்களையும் செய்துள்ளனர்.
[1] The Hindu, Ansari, a rank imposter: Jawahirullah, Chennai, January 25, 2016 , Updated: January 25, 2016 08:00 IST.
[2] http://www.thehindu.com/news/cities/chennai/ansari-a-rank-imposter-jawahirullah/article8149593.ece
[3] ஹமிழ்.இந்து, மமக பெயரில் பொதுக்குழு கூட்டினால் சட்டப்படி நடவடிக்கை: ஜவாஹிருல்லா எச்சரிக்கை, Published: October 10, 2015 20:58 ISTUpdated: October 10, 2015 20:58 IST.
[4] http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article7747518.ece
[5] அதிரை எக்ஸ்பிரஸ், ம க கட்சி இரண்டாக உடைந்தது?, Posted by அதிரை எக்ஸ்பிரஸ் on 10/06/2015 10:50:00 AM in a-adirai, mujeeb.
[6] http://www.adiraixpress.in/2015/10/blog-post_16.html – .VqXWqvl97IU
[7] நக்கீரன், தமீமுன் அன்சாரி – ஜவாஹிருல்லா: ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு, பதிவு செய்த நாள் : 5, அக்டோபர் 2015 (23:41 IST); மாற்றம் செய்த நாள் :5, அக்டோபர் 2015 (23:41 IST).
[8] தினமலர், கட்சியை உடைக்க சதி: ஜாவஹிருல்லா குற்றச்சாட்டு, அக்டோபர்.5,2015.21.17.
[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1357512
[10] http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=152475
[11] Dismissing allegations that the DMK was behind the split, Ansari said, “Neither Kalaignar nor Jayalalithaa are behind this. The rift happened because of Jawahirullah’s jealousy.”. In the same breath, supporters of Jawahirullah confided that though they don’t suspect the hand of DMK behind the episode, Ansari’s recent actions given enough to suspect a DMK role in this.
http://www.deccanchronicle.com/151007/nation-current-affairs/article/ansari-mh-jawahirullah-leave-mmk-divided
[12] http://www.news7india.com/videos/teaser/jawahirullah-damaged-manithaneya-makkal-katchi-office-at-pudhupet-tamim-ansari-supporters-2/
பிரிவுகள்: அன்சாரி, இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், ஜவாஹிருல்லா
Tags: அன்சாரி, இஸ்லாம், சிறுபான்மையினர், ஜவாஹிருல்லா, தமிமும் அன்சாரி, தமீம் அன்சாரி, மனித நேய கட்சி, முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லீம்கள்
Comments: Be the first to comment
நவம்பர் 26, 2015
மூன்றாவது அணிக்கு வேலையில்லை, ஜெயலலிதா சரியில்லை, திமுகவுடன் கூட்டணி உறவு தொடரும்!
தமிழகத்தில் “மூன்றாவது அணி இல்லை” என்றதிலிருந்து அதிமுக-எதிர்ப்பில், ஜெயலலிதா-எதிர்ப்பில் முடிந்துள்ள முஸ்லிம் லீக்கின் போக்கு (3)!

அகில இந்திய முஸ்லிம் லீக் உதயம் 1906 டிசம்பர் 30-31 மற்றும் பிரிவினை[1]: முஸ்லிம் லீக் இணைதளம் கூறுகிறது, “இன்றைய வங்க தேச தலைநகர் டாக்காவில் நவாப் வாக்காருல் முல்க் தலைமையில் அகில இந்திய முஸ்லிம் கல்வி மாநாடு கூட்டப்பட்டது. முஸ்லிம்களின் நலன்களை பாதுகாக்க ஓர் அரசியல் கட்சி வேண்டும் என்ற கோரிக்கையை நவாப் சலீமுல்லா கான் இக்கூட்டத்தில் வலியுறுத்தியது, ஏற்கப்பட்டது. இதற்கான முறைப்படி தீர்மானத்தை டில்லி ஹக்கீம் அஜ்மல் கான் முன் மொழிந்து, நவாப் முஹ்ஸினுல் முல்க் வழிமொழிந்து, அகில இந்திய முஸ்லிம் லீகின் முதல் கூட்டம் நவாப் வக்காருல் முல்க் தலைமையில் நடைபெற்றது. சர் சுல்தான் முஹம்மது ஷாஹ் ஆகாகான் தலைவராகவும், நவாப் முஹ்ஸினுல் முல்க், நவாப் வக்காருல் முல்க் ஆகியோர் பொதுச் செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முஸ்லிம் லீகிற்கு சட்டதிட்டங்கள் அமைக்க மௌலான முஹம்மதலி ஜவஹர் அவர்களை பொறுப்பாளாராக்க கொண்டு குழு அமைப்பட்டது. இளம்பிறையும், ஜந்து முனை கொண்ட நட்சத்திரம் இடதுபுற மூலையில் பதிக்கப்பட்ட பச்சிளம் பிறைக் கொடி முஸ்லிம் லீகின் கொடியாக வடிவமைக்கப்பட்டது. பின் நடந்த லீக் மாநாடுகளில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரப்பட்டது. ’மிண்டோ –மார்லி சீரிதிருத்தம்’ என்ற 1909-ம் ஆண்டு இந்தியன் கவுன்ஸில் சட்டம் மூலம் 1913 அக்டோபர் 10-ல் முஸ்லிம் லீகில் சேர்ந்த ’காயிதெ ஆஜம் முஹம்மதலி ஜின்னாஹ் 1935-ல் தான் அதன் நிரந்தர தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1940 மார்ச் 23-ல் லாகூர் மாநாட்டில்தான் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் வடமேற்கு, வடகிழக்கு மாகானங்கள் தனி ராஜ்யமாக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது”; “நேராக இறங்கி” இந்துக்களைக் கொன்றது முதலியவை சரித்திரமாகியது. இந்திய சுதந்திர போராட்டமும் பிரிவினை கோரிக்கையும் உச்ச கட்டத்தை எட்டின. 1947 மார்ச் 24-ல் மவுண்ட் பேட்டன் பிரபு இந்திய வைஸ்ராயாக பதவி ஏற்றதும் தேசப்பிரிபினைக்கான செயல் வடிவம் தீட்டப்பட்டது. அதாவது, இவ்விதமாகத்தான் இஸ்லாம் பெயரில் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது.
பாகிஸ்தான் உருவான பிறகும் முஸ்லிம் லீக் இந்தியாவில் தொடர்ந்தது[2]: முஸ்லிம் லீக் இணைதளம் கூறுகிறது, “1896 ஜுன் 5ல் திருநெல்வேலி பேட்டையில் பிறந்த காயிதெ மில்லத் எம். முஹம்மது இஸ்மாயில சாகிப் 1937-ல் முஸ்லிம் லீகில் உறுப்பினரானார் 1936-ல் மதராஸ் ஜில்லா முஸ்லிம் லீக் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1945-ல் மதராஸ் மாகான சட்டசபைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்கட்சி தலைவரானார். அதே ஆண்டு மதராஸ் மாகான முஸ்லிம் லீக் தலைவரானார். சுதந்திரத்திற்குப்பின் அகில இந்திய முஸ்லிம் லீக் கவுன்ஸிலின் கடைசிக் கூட்டம் 1947 டிசம்பர் 13,14 தேதிகளில் பாகிஸ்தானின் கராச்சி நகரிலுள்ள பந்தர் ரோடு காலிக்தினா ஹாலில் நடைபெற்றது. ஜின்னா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இந்தியாவிலிருந்து காயிதெ மில்லத், கே.டி.எம். அஹமது இப்ராகீம் எம்.எல்.சி, மலபார் சீதி சாகிப் எம்.எல்.ஏ, என்.எம். அன்வர் சாகிப், ஏ.கே. ஜமாலி சாகிப் எம்.எல்.ஏ ஆகிய ஐவர் கலந்து கொண்டனர். வரும் காலத்தில் முஸ்லிம் லீக் பற்றி இந்தியா, பாகிஸ்தானில் உள்ள கவுன்ஸில் உறுப்பினர்கள் தனித்தனியாக முடிவு செய்து கொள்ள வேண்டுமென முடிவெடுக்கப்பட்டு, தனித்தனி கன்வீனர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான் பாகிஸ்தானுக்கான கன்வீனராகவும், காயிதெ மில்லத் இந்தியாவிற்கான கன்வீனராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்”.
கேரள மாதிரைப் பின்பற்ற ஆசை: கேரளாவில், நம்பூதிரி பாட் இருக்கும் போது, மலப்புரம் மாவட்டம் முஸ்லிம்களுக்கு என்ற ரீதியில் உருவாக்கப்பட்டது. இதனால், முஸ்லிம் ஜனத்தொகைப் பெருகி, இன்று கனிசமான எண்ணிக்கையில் உள்ளனர். அதனால், ஆட்சியிலும் உள்ளனர். அதே முறையை இங்கும் பின்பற்ற வேண்டும் என்கிறாரகள். திமுக-அதிமுக என்று மாறி-மாறி கூட்டு சேர்ந்து கொண்டு எம்.பி, எம்.எல்.ஏ பதவிகளைப் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்துக்கள் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் எந்த கட்சியினாலும், ஒரு எம்.எல்.ஏ, எம்.பியை உருவாக்க முடியவில்லை. இந்துக்களின் நலன்களை தமிழ்நாட்டில் யாரும் கவலைப்படுவதும் இல்லை. மாறாக, மூஸ்லிம் லீக் கட்சிகள் நடத்தும் இபதர் பார்ட்டிகளில் கலந்து கொண்டு, கஞ்சி குடித்துக்கொண்டு இந்துமதத்தை வசைப்பாடிக் கொண்டிருக்கிறார்கள். இதைத்தான் முஸ்லிம் லீக்-திராவிட கட்சிகள் கூட்டணி சாதித்துள்ளன. கோவில்சொத்துகளை ஆக்கிரமித்டுக் கொண்டு, வாடகைத் தராமலும் முஸ்லிம்கள் உள்ளனர். அந்த அளவிற்கு செக்யூலரிஸ கொள்ளைகளை முச்லிம்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
3-வது அணிக்கு வேலையில்லை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் முகைதீன் பேட்டி[3]: தமிழகத்தில் 3–வது அணிக்கு வேலையில்லை. தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க.தான் பெரிய கட்சி என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் முகைதீன் சென்ற மாதம் அக்டோபரில் கூறினார். ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைகள் மத்திய அரசின் கொள்கையாக மாறிவிட்டன. பா.ஜனதா பெயரில் ஆர்.எஸ்.எஸ்.சின் ஆட்சி நடக்கிறது. இந்தியாவில் உள்ள மத சார்பற்ற சக்திகள் ஜனநாயக இயக்கங்கள் ஒன்றுதிரண்டு மதவாத போக்கிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். அரசியல் அரங்குகள், சாகித்ய அகாடமி என அனைத்திலும் மதவாத கொள்கைகள் புகுத்தப்பட்டு வருகிறது. இந்த போக்கு நீடித்தால் ஜனநாயகத்தின் அடித்தளமே தகர்ந்துவிடும். இதற்கு ஆதாரமாக மாட்டுக்கறி பிரச்சினைக்காக 4 அப்பாவி முஸ்லிம்கள் பலியாக்கப்பட்டு உள்ளனர். அரியானா பா.ஜனதா முதல்வர் உள்பட மத்திய மந்திரிகள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு வருகின்றனர். முஸ்லிம்களை மட்டும் தனிமைப்படுத்தி வன்முறை தூண்டப்படுகிறது”.
தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க., தி.மு.க.வை தவிர 3–வது அணிக்கு வேலையில்லை: “இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும். எதிர்க்கட்சிகள் இடையே கூட்டணி அமைப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க., தி.மு.க.வை தவிர 3–வது அணிக்கு வேலையில்லை[4]. வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் இல்லை. தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க.தான் பெரிய கட்சி. அதற்கு இணையான கட்சி தி.மு.க. மட்டுமே. உதிரி கட்சியினர் ஆட்சியை பிடிப்போம் என கூறுவது அவர்களது தனிப்பட்ட ஆசை, விருப்பம். அ.தி.மு.க. ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இருந் தாலும் ஆட்சி, அதிகாரம் அவரது கட்டுப்பாட்டில் இல்லை. எந்த அதிகாரியும் ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இல்லை. நாட்டிலேயே அதிக அளவில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் பலாத்காரம் நடைபெறும் மாநிலமாக தமிழகம் உள்ளது. அரசின் மீது மக்கள் அவநம்பிக்கையில் உள்ளனர். அதனால்தான் மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தின்போது மக்கள் எழுச்சியும், வரவேற்பும் அதிகரித்து உள்ளது. மக்களின் அதிருப்தி வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக திரும்பும். அந்த எதிர்ப்பு வாக்குகள் தி.மு.க.வுக்குதான் செல்லும். எனவே வரும் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்”, இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில பொருளாளர் ஷாஜகான், முன்னாள் எம்.பி. அப்துல் ரகுமான், மாவட்ட செய லாளர் முகம்மதுபைசல், சாதுல்லாகான் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
ஆளும் மத்திய அரசுடன் கூட்டுவைத்துக் கொண்டு அனுபவித்த திராவிட கட்சிகள்: பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொள்ள ஆவலாகத்தான் திராவிட கட்சிகள் இருக்கின்றன. அவை ஒன்றும் கூட்டு வைத்துக் கொள்ளாமலும் இருந்ததில்லை. செக்யூலரிஸம் என்றெல்லாம் பேசினால் கூட, தில்லியில் அதிகாரத்தை விரும்பத்தஆன் செய்கின்றன. ஒரு எம்.பி பதவுக்கு அலையும் கட்சித்தலைவர்கள் தமிழகத்தில் அதிகமாகவே இருக்கிறார்கள். அதனால் தான், ஓட்டுகள் கிடைக்காது என்றால் கூட அத்தகையக் கட்சித் தலைவர்கள் ஆர்பாட்டம் செய்து வருகிறார்கள். எல்லா விசயங்களிலும் மூக்கை நுழைத்துக் கொண்டு அறிக்கைக்கள் விடுவது, கூட்டங்கள் போடுவது என்று செய்திகளில் வர ஆசைப்பட்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள். எந்த கட்சியாவது கூப்பிடாதா என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்பதால் அதை கூட்டணியில் சேர்க்க தயாராக இல்லை என்ற நிலையில் பாஜகவுடன் கூட்டு வத்துக் கொள்ள திமுக முயல்கிறது என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன[5]. இதனால் தான் முஸ்லிம் லீக் போன்றவை மறைமுகமாக பேரம் பேசுகின்றன போலும். மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மமக ஆகிய 5 கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டு இயக்கத்தை உருவாக்கி, “அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸுடன் கூட்டணியில்லை: ஒத்த கருத்துடைய கட்சிகள் வரலாம்”, என்று அறைகூவல் விடுத்துள்ளதும் வேடிக்கையாகவே இருக்கிறது[6]. காங்கிரஸ் பிளவு பட்டுள்ளதால், பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொள்ளத்தான் திமுக மற்றும் அதிமுக விரும்பும். பாஜகவைப் பொறுத்த வரையில், அதிமுகதான் விருப்பமான கட்சி, ஆனால், ஊழல் என்ற பிரச்சினையும், ஜெயலலிதா வழக்குகளும் தடுக்கின்றன. அதற்கேற்ற முறையிலும் ஜெயலலிதாவின் கோரிக்கைகளும் அளவுக்கு அதிகமாக இருக்கின்றன. அந்நிலையில், பணிவுடன் வரும் திமுகவுடன் கூட்டு வைத்துக் கொள்ளலாம் என்று தான் பாஜகவினர் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
© வேதபிரகாஷ்
26-11-2015
[1] http://www.muslimleaguetn.com/history.asp
[2] http://www.muslimleaguetn.com/history.asp
[3] மாலைமலர், 3-வது அணிக்கு வேலையில்லை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் முகைதீன் பேட்டி, பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, அக்டோபர் 26, 2015: 5:17 PM IST.
[4] http://www.maalaimalar.com/2015/10/26171739/dont-work-to-third-party-india.html
[5] http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-tries-woo-bjp-forging-alliance-238651.html
[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-forms-new-poll-alliance-peoples-welfare-front-2016-239004.html
பிரிவுகள்: அதிமுக, அப்துல் காதர், அரசியல்வாதிகள், அரசு நிதி, இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்தியா, கருணாநிதி, காதர் மொகிதீன், காதர் மொய்தின், காதர் மொஹ்தீன், காதர்மொய்தின், Uncategorized
Tags: இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய லீக், இஸ்லாம், கருணாநிதி, காயதே மில்லத், காஷ்மீரம், சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜின்னா, ஜெயலலிதா, பாகிஸ்தான், முகமதியர், முஸ்லிம் லீக் கட்சி, முஸ்லீம்கள்
Comments: 1 பின்னூட்டம்
அண்மைய பின்னூட்டங்கள்