தெலிங்கானாவில் தயாரிக்கப் பட்ட வெடிகுண்டுகள் கேரளாவில் பிடிபட்டது எப்படி? கர்நாடகாவில் குவாரி என்றால் கேரள வீட்டில் பதுக்கி வைப்பானேன்?
30-06-2023 செவ்வாய்கிழமைசாராயபோதைதடுப்புபோலீசார்சோதனை: சமீப காலங்களில் குற்றங்கள் எல்லைகளைக் கடந்து தான் நடந்து கொண்டிருக்கின்றன. மாநிலத்திற்கு மாநிலம் அந்த மாடல், இந்த மாடல் என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும், குற்றவாளிகள் தொடர்ந்து தங்களது மாடலில் தான் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது[1]. என்ன நடந்தாலும், ஒன்றுமே நடக்கவில்லை என்பது போல, இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது இங்கு, காசர்கோடு மாவட்டத்தில் உள்ள அதுார் கிராமத்தில், மூலியூர் கிராம பஞ்சாயத்து, கள்ள சாராயம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக கலால் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது[2]. காசர்கோடு என்றாலே சமீபகாலத்தில் அடிக்கடி குற்றங்கள் நடக்கும் இடம் என்பது போல, செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. போதைப் பொருட்கள், மருந்து, சாராயம் போன்றவற்றிற்கும் பிரபலமாக இருக்கிறது. ஆகையால், இங்கு போலீசார் சோதன் தொடர்ந்து இருந்து வருகிறது. இதை தொடர்ந்து, அங்கு கலால் துறையினர் வீடு வீடாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். செவ்வாய்கிழமை, 30-06-2023 நேற்று அதிகாலை, முகமது முஸ்தபா, 42, என்பவரது வீட்டுக்கு அதிகாரிகள் சென்ற போது, வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சொகுசு காரின் பின்புறம், ஏராளமான அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை பார்த்தனர்[3].
30-06-2023 செவ்வாய்கிழமைவெடிகுண்டுகள்கண்டுபிடிப்பு: வழக்கம் போல, அதில், கள்ள சாராய பாக்கெட்டுகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது[4]. ஆனால், சாராயப் பாக்கெட்டுகளுக்கு பதிலாக வெடிப்பொருட்கள் இருந்ததால், போலீஸார் திடுக்கிட்டனர். மே 31, 2023 கேரளாவின் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த முகமது முஸ்தபா என்பவரது வீட்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையின் போது, 2,800 ‘ஜெலட்டின்’ குச்சிகள், 7,000 ‘டெட்டனேட்டர்’கள், ஒரு ‘டைனமைட்’ உட்பட குவியல் குவியலாக பயங்கர வெடி பொருட்களுடன், ‘ஒயர் பண்டல்’களும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்[5]. இதை தொடர்ந்து, வீட்டுக்குள் நுழைந்து கலால் துறையினர் சோதனையிட்ட போது, குவியல் குவியலாக பயங்கர வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்[6]. இதனால், சாராய போதை தடுப்பு போலீசார் உடனடியாக அதுார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது[7].
போலீசார்சோதனையிட்டு, காரில்வீட்டில்வெடிகுண்டுகள், பொருட்கள்கண்டுபிடித்தனர்: இன்ஸ்பெக்டர் அனில் குமார் தலைமையில் போலீசார் வந்து சோதனையிட்டதில், முகமது முஸ்தபாவின் வீடு மற்றும் காரில், 13 பெட்டிகளில் 2,800 ஜெலட்டின் குச்சிகள், 7,000 டெட்டனேட்டர்கள், ஒரு டைனமைட் மற்றும் ஐந்து பண்டல் ஒயர்கள் கைப்பற்றப்பட்டன[8]. அவரிடம் இது பற்றி கேட்டபோது, கர்நாடகாவில், ‘கிரானைட்’ குவாரிகள் நடத்தி வருவதாகவும், அங்கு வெடி வைத்து தகர்க்க, வெடி பொருட்கள் சப்ளை செய்து வருவதாகவும் முகமது முஸ்தபா தெரிவித்தார்[9]. இவன் அடிக்கடி கர்நாடக பகுதிக்குச் சென்று வருவது தெரிந்தது. ஆனால், இதற்கான ‘லைசென்ஸ்’ எதுவும் தன்னிடம் இல்லை என, அவர் தெரிவித்தார்[10]. குவாரிகளுக்கு என்று சொல்லி இவ்வாறு வெடிப்பொருட்கள் வாங்குவதும், அவை, பிறகு வெடிகுண்டுகள் தயாரிக்க, வெடிகுண்டுகளாகவே உபயோகிக்கப் படுவது, தீவிரவாதிகளின் செயல்களிலிருந்து தெரிய வருகிறது.
குவாரிபயோகத்திற்குஎன்றுஇத்தகையவெடிகுண்டுகளைவாங்குவது: இது சுமார் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. பெரும்பாலான வெடிகுண்டு வழக்குகளில் அவ்வாறு தான் ஆதாரங்களும் வெளிப்பட்டுள்ளன. அட்டைப் பெட்டிகளின் மீது காணப்படும் விவரங்களிலிருந்து அவை மின்சாரம் மூலம் உடனடியாக வெடிக்கப் படும் வெடிகுண்டு [SAED (Electric Instantaneous Detonator)] என்று தெரிகிறது. ரெக்ஸ் REX என்பது, செல்லுலோஸ் நைட்ரேட் வகையறா போல் தோன்றுகிறது. இவை தெலிங்கானாவில் உள்ள தொழிற்சாலை [Salvo Explosives and Chemicals Pvt Ltd, Ankireddypalli (Vill), Keesara Mandal, Medchal-Malkajgiri Dist.,- 501301, Telangana] மூலம் தயாரிக்கப் பட்டது என்பதும் தெரிகிறது. ஆக, தெலிங்கானாவில் தயாரிக்கப் பட்ட வெடிப்பொருட்கள், கேரளாவுக்கு வந்துள்ளன, ஆனால், குவாரி கர்நாடகத்தில் உள்ளதாம்.
தற்கொலைக்குமுயற்சி: அவரது வீட்டை போலீசார் சல்லடை போட்டு சோதனையிட்ட போது, பதற்றத்துடன் இருந்த முஸ்தபா, திடீரென தன் கை மணிக்கட்டை, ‘பிளேடால்’ அறுத்து தற்கொலைக்கு முயன்றார்[11]. இதுவும் அத்தகைய தீவிரவாதிகள் கடைபிடிக்கும் உக்திதான். அவரை போலீசார் உடனடியாக காசர்கோடில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்[12]. உடனே, அவனுக்கு மறைமுகமாக உதவி கிடைக்கும். அவன் ஒத்துழைக்க மாட்டான். இல்லை, இச்செய்தி அப்படியே அமுக்கப் படும். இப்பொழுதே, இது பிடி.ஐ செய்தியாக இருப்பதால், எல்லா ஊடகங்களும் அப்படியே போட்டுள்ளன. இல்லையென்றால், இது ஏதோ சாதாரண உள்ளூர் செய்தியாகி அமுக்கப் பட்டிருக்கும். இந்நிலையில், அவருக்கு வெடி பொருட்கள் எங்கிருந்து கிடைத்தன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்[13]. இது போன்ற வெடி பொருட்களை சேகரித்து வைக்க பல விதிகள் உள்ளன. அவற்றை வீடுகளிலும், கார்களிலும் சேகரித்து வைப்பது சட்டப்படி குற்றம்[14]. இவையெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான் இருப்பினும், சொகுசு காரில் ஏற்று எடுத்துச் செல்லப் படுகிறது. வீடுகளில் சேகரிக்கப் படுகிறது. எனவே, சட்டவிரோதமாக வெடி பொருள் தயாரித்தல், பதுக்கி வைத்தல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் முஸ்தபா மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இவருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா, கேரளாவில் ஏதேனும் நாச வேலையில் ஈடுபட அவர் திட்டமிட்டுள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை தொடர்கிறது. இவ்வாறாக செய்திகள் முடிகின்றன. இவற்றை யார் வாங்கினர் போன்ற விவரங்கள் எல்லாம் இனிமேல் தான் கண்டுபிடிப்பார்கள் போலிருக்கிறது.
[3] Onmanorama, 2,800 gelatin sticks, 7,000 detonators seized in Kasaragod; accused says he supplies explosives to quarries, Onmanorama Staff, Published: May 30, 2023 09:29 AM IST Updated: May 30, 2023 01:55 PM IST.
[4] Excise officers found around 2,800 gelatin sticks in 13 boxes, one dynamite, nearly 7,000 detonators, and five rounds of wires, said the officer. Some of them were recovered from his house, too.
[7] The Hindu, Huge quantity of explosives seized from a house in Kasaragod, May 30, 2023 06:12 pm | Updated 06:12 pm IST – KASARAGOD, THE HINDU BUREAU
[11] Janam TV, Explosives seized in Kasaragod: 2,800 gelatin sticks and 7000 detonators recovered, accused tries to commit suicide, Janam Web Desk, May 30, 2023, 03:16 pm IST
[13] AsiaNetNews, Explosive haul: 2800 gelatin sticks, 6000 detonators in Kerala’s Kasaragod, Aishwarya Nair, First Published May 30, 2023, 12:35 PM IST; Last Updated May 30, 2023, 2:08 PM IST.
‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு-தடை: விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘தி கேரளா ஸ்டோரி’. கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது[1]. இந்த எண்ணிக்கை உயர்வு படுத்தி காட்டப் பட்டுள்ளது என்று எதிர்த்ததால், மாற்றப் பட்டது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி திரையுலகில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியது[2], என்கிறது ஊடகங்கள். உண்மையில், முஸ்லிம் அமைப்பினர் எதிர்த்து போராட்டம் நடத்தினர். இப்படம் குறித்து வாதம் விவாதங்கள் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் நடந்து வந்தன. அதில் எவ்வாறு இந்திய பெண்கள் ஏமாற்றப் பட்டு, மதம் மாற்றப் பட்டு, ஐசிஸ் தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதனை காட்டுவதால், முஸ்லிம் அமைப்பினர் கடுமையாக எதிர்த்தனர்.
மேற்குவங்காளம்தடை – உச்சநீதிமன்றத்தில்வழக்கு: முஸ்லிம் ஓட்டுகளை நம்பி அரசியல் செய்யும் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு இருந்தது. பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கருத்தை தெரியப்படுத்தி வந்தனர். இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் வன்முறை ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரையிடலை உடனடியாக நிறுத்த முதல்வா் மம்தா பானா்ஜி கடந்த மே 8-ஆம் தேதி உத்தரவிட்டார். இதனால், தமக்கு பாதிப்பு ஏற்படும் என்று உணர்ந்த, இத்திரைப்பட தயாரிப்பாளா்கள் வழக்குத் தொடர்ந்தனர். மேற்கு வங்கத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரையிடலுக்கு அரசு தடை விதித்த நிலையில், தமிழகத்தில் அதிகாரபூா்வமற்ற தடை உள்ளதாக குற்றம்சாட்டி, இத்திரைப்பட தயாரிப்பாளா்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றம் இரு மாநில அரசும் விளக்கம் அளிக்குமாறு கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியது.
பத்துநாட்களில் 100 கோடிகளைத்தாண்டியவசூல்: எதிர்ப்புகள் எதுவும் படத்தின் வசூலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் படம் வெளியான நாளிலிருந்து இன்று வரை வசூல் ஏறுமுகமாக தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த பத்து நாட்களில் கேரளா ஸ்டோரி வசூலித்த மொத்த கலெக்சன் பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அதாவது 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது வரை 112 கோடிகளை வசூலித்திருக்கிறது. அப்படி பார்த்தால் இது பட்ஜெட்டை தாண்டிய பல மடங்கு வசூல் தான். மேலும் பாலிவுட் திரையுலகில் இந்த வருடம் அதிகபட்சமாக வசூல் பெற்ற படங்களில் இப்படமும் இணைந்து இருக்கிறது. அதாவது 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது வரை 112 கோடிகளை வசூலித்திருக்கிறது. அப்படி பார்த்தால் இது பட்ஜெட்டை தாண்டிய பல மடங்கு வசூல் தான். மேலும் பாலிவுட் திரையுலகில் இந்த வருடம் அதிகபட்சமாக வசூல் பெற்ற படங்களில் இப்படமும் இணைந்து இருக்கிறது[3].
குறைந்த பட்ஜெட்டில் எதிர்த்தாலும் அதிக வசூல் செய்துள்ல படமாக இருக்கிறது: மேலும் அடுத்தடுத்து பல திரைப்படங்களின் தோல்வி ஹிந்தி திரையுலகை கொஞ்சம் அசைத்து தான் பார்த்தது. அதை தூக்கி நிறுத்தும் படியாக இருந்தது ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த பதான் திரைப்படம். அந்த வகையில் தி கேரளா ஸ்டோரி நெகட்டிவ் விமர்சனங்களை அடித்து நொறுக்கி வசூலில் மாஸ் காட்டி இருக்கிறது[4]. வெளியான 9 நாட்களில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது[5]. 13-05-2023 அன்று ஒரே நாளில் மட்டும் இப்படம் ரூ.19 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது[6]. வடமாநிலங்களில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு 37க்கும் மேற்பட்ட நாடுகளில் மே 12ஆம் தேதி இப்படம் வெளியானது. இந்த வசூலுக்கு முதல் காரணமே படத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்புத்தான் என்கிறார்கள்[7]. படத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்க ஆர்வம் ஏற்பட்டு பலரும் பார்த்ததே வசூலுக்கு வழி வகுத்தது[8]. இல்லாவிட்டால் படம் வந்ததே தெரியாமல் போயிருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இப்படியும் சில ஊடகங்களின் வெளிப்பாடு இருக்கிறது.
தமிழகத்தின் பதில்: தமிழ்நாட்டிலும் முதல் நாள் 05-05-2023 வெளியிட்டு மறுநாள் தியேட்டகளில் படம் ஓடவில்லை. ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள நேரடி, மறைமுக தடையை எதிர்த்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, தடை விதித்தது குறித்து மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டார். இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது[9]. அதில், இந்த படத்திற்கு தடை விதிக்கவில்லை என்றும் திரையரங்கிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது[10]. படத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது சென்னை மற்றும் கோவையில் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது[11]. ஆனால், திரைப்படம் எதிர்கொண்ட விமர்சனம் அறிமுகமில்லாதவர்களின் நடிப்பு போதுமான வரவேற்பின்மை ஆகியவற்றால் திரையரங்க உரிமையாளர்களே கடந்த மே 7-ஆம் தேதி முதல் திரையிடுவதை நிறுத்திக் கொண்டதாக தோன்றுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது[12]. பார்வையாளர்கள் குறைவாக இருந்ததால் படத்தை திரையிடுவதை திரையரங்க உரிமையாளர்களே நிறுத்திவிட்டனர்[13]. பிறகு, மற்ற இடங்களில் ஓடி எப்படி ரூ.100 கோடி வசூல் கிடைத்தது என்பது கவனிக்கத் தக்கது. திரையரங்குகளுக்கு பாதுகாப்பு மட்டுமே தர முடியுமே தவிர, பார்வையாளர்களை அதிகரிக்க அரசால் எதுவும் செய்ய முடியாது[14]. அதாவது பார்வையாளர்களைக் கூட்டி வரமுடியாது என்றெல்லாம் விளக்கம் கொடுத்துள்ளதும் விசித்திரமாக உள்ளது. கலாட்டா செய்வார்கள், அடிப்பார்கள், கலவரங்கள் நடக்கும், குண்டுகள் கூட வெடிக்கும் போன்ற அச்சம் தாம் பொது மக்களை தியேட்டர்களுக்குச் செல்ல விடமால் தடுத்தது எனலாம்.
19 திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு 25 டிஎஸ்பிக்கள் தலைமையில் 965 காவலர்கள் பாதுகாப்பு: 19 திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு 25 டிஎஸ்பிக்கள் தலைமையில் 965 காவலர்கள் பாதுகாப்பு அளித்துள்ளனர்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது[15]. அந்த அளவுக்கு பெரிய போலீஸ் அதிகாரிகள் கொடுக்கும் அளவுக்கு முஸ்லிம்கள் மிரட்டிக் கொண்டிருந்தனர் போலும். மேலும், விளம்பரம் தேடும் நோக்கில் மனுதாரர் மனுதாக்கல் செய்துள்ளதால் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது[16]. அப்படியென்றால், இத்தகைய விளம்பரத்திற்கு கூட்டம் வர வேண்டியிருக்குமே, ஆனால், வரவில்லை. இதிலிருந்து, தியேட்டர் முதலாளிகள், தங்களது தியேட்டர்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று நிறுத்தியுள்ளனர் என்று தெரிகிறது. அத்தகைய போலீஸ் பாதுகாப்பு, விளம்பரம், ரூ 100 கோடி வசூல் என்றால், மறுபடியும் தாராளமாக திரையிட ஆரம்பிக்கலாமே?
[9] தமிழ்.வெப்.துனியா, நாங்கதடைபண்ணல.. படத்தையாரும்பாக்கவேஇல்ல! – The Kerala Story வழக்கில்தமிழகஅரசுபதில்!, Written By Prasanth Karthick, Last Modified, செவ்வாய், 16 மே 2023 (12:15 IST).
[15] தினமணி, திகேரளாஸ்டோரிதிரையிடல்நிறுத்தப்பட்டதுஏன்? தமிழகஅரசுபதில், By DIN | Published On : 16th May 2023 02:50 PM | Last Updated : 16th May 2023 02:50 PM
கம்யூனிஸ்டு, காங்கிரஸ்உள்ளிட்டகட்சிகள்கடும்கண்டனம்எதிர்ப்பு: இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி, கேரளாவில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அரசியல் கூட்டணி இதிலும் வேலை செய்கிறது போலும். இந்நிலையில், இந்த படம் தமிழக திரையரங்குகளில் கடந்த மே5-ந்தேதி வெளியானது. இயக்குநர் சுதீப்தோ சென் இயக்கத்தில், விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் தி கேரளா ஸ்டோரி என்ற பெயரில் உருவான திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்தது. நடிகைகள் அதா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பலானி உள்ளிட்டோர் முக்கிய வேடமேற்று நடித்து உள்ள இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றிருந்தன என்று ஊடகங்களே கூறுவது முன்னரே தீர்மானிக்கப் பட்ட விசயம் போல தோன்றுகிறது. கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்றும் அதன்பின் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் தங்களை இணைத்து கொண்டனர் என்றும் காட்டப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
05-05-2023 – தமிழகநீதிமன்றத்தில்வழக்கு, தள்ளுபடி, திரைப்படம்வெளியீடு, ஆர்பாட்டம்: தமிழகத்தில் இந்த படம் திரையிட அனுமதிக்க கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது[1]. ஆனால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னையில் அண்ணாநகர், அமைந்தகரை, ராயப்பேட்டை, வேளச்சேரி, வடபழனி ஆகிய இடங்களில் உள்ள வணிக வளாகங்களில் இயங்கும் திரையரங்குகளிலும், மதுரவாயலில் உள்ள ஒரு பிரபல திரையரங்கிலும் என 7 இடங்களில் இந்த படம் வெளியானது[2]. இதில், மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் மட்டும் திரையிடப்பட்டன[3]. ஏற்கனவே இந்த படத்தின் டீசருக்கு இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின[4]. இதனால், இந்த படத்துக்கு தமிழகத்தில் தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று மாநில உளவுத்துறை அரசுக்கு பரிந்துரை வழங்கி இருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடியானதால் இந்த திரைப்படம் திட்டமிட்டப்படி திரைக்கு வந்தது.
06-05-2023 – பாதுகாப்புகாரணங்களுக்காகதென்தமிழகத்தில்இந்தபடம்திரையிடப்படவில்லை. இந்த திரைப்படங்கள் வெளியாகும் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உள்பட முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்றறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்த திரைப்படம் வெளியான திரையரங்குகள் முன்பு போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். ரசிகர்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த திரைப்படத்திற்கு தடை கோரி சென்னையில் பல இடங்களில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று திரையரங்குகள் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
07-05-2023 சென்னையில்சீமான்ஆர்பாட்டம்: சென்னை அமைந்தகரையில் நடைபெறும் போராட்டத்தில் சீமான் பங்கேற்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வரும் என்ற நிலையில், அனுமதி எப்படி கொடுக்கப் பட்டது என்று தெரியவில்லை. சென்னையில் படம் தடை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் 4 திரையரங்குகள் அருகிலும், த.மு.மு.க. சார்பில் 2 திரையரங்குகள் அருகிலும், இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் ஒரு திரையரங்கு அருகேயும் என 7 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படத்துக்கு எதிராக இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள் போராட்ட அறிவிப்பால் சில தியேட்டர்களில் இந்த திரைப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. கோவையின் முக்கிய சாலையில் உள்ள வணிக வளாகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானபோது, இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டரை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர்[5]. அதாவது, முஸ்லிம்களும் சேர்ந்து கொண்டனர் என்பது தெரிகிறது. எனவே, இவர்களின் செக்யூலரிஸ வாதம், வேடம் முதலியவை பெரிய மோசடி என்றாகிறது. இருப்பினும் தமிழக மக்கள் பேச்சுக்களால், வசன-பேச்சுகளால் ஏமாந்து விடுகின்றனர்.
சீமான்எதிர்ப்பு– போலீஸார்கைது: இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசும்போது, மதம் இருந்தால் போதும் என்று பா.ஜ.க. நினைக்கிறது[6]. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான மனநிலையை அவர்கள் உருவாக்குகிறார்கள் என குற்றச்சாட்டாக கூறினார்[7]. தொடர்ந்து அவர், ஒவ்வொரு தேர்தலின்போதும் சர்ச்சைகள் நிறைந்த படங்கள் திரையிடப்படுகின்றன[8]. கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தி கேரளா ஸ்டோரி படம் வெளிவந்து உள்ளது. 2024 மக்களவை தேர்தலுக்காக திப்பு என்ற படம் தயாராகி கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்[9]. அவரது கட்சியினர் திரையரங்கிற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்[10]. அவர்களை போலீசார் பிடித்து சென்றனர். படம் தடை செய்யப்பட வேண்டும் என கோரி, கொடி பிடித்தபடியும், கோஷம் எழுப்பியபடியும் இருந்தனர்[11]. திரையரங்கு உரிமையாளர்களிடமும் படம் வெளியிட வேண்டாம் என கேட்டு கொண்ட சீமான், மக்களையும் படம் பார்க்க செல்ல வேண்டாம் என கேட்டு கொண்டார்[12]. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படம் வெளியிடப்படாமல், அந்தந்த அரசுகள் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோளாக கேட்டு கொண்டார். சீமானை சூழ்ந்து முஸ்லிம் பெண்கள் நின்று கொண்டு தலையாட்டிக் கொண்டிருப்பதை, செய்தி-செனல்களில் பார்க்கலாம்.
தமிழகஅரசுதடை: தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தமிழகம் முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பால், தமிழக திரையரங்குகளில் இன்று முதல் அந்த படம் திரையிடப்படாது என முடிவு செய்யப்பட்டு உள்ளதுலதாவது, இத்தகைய நிலைமையை எதிர்பார்த்துக் கொன்டிருந்தது போலும். சீமான் ஆர்பாட்டம் செய்தவுடன், அந்நிலைமை ஏற்பட்டவுடன், தமிழக அரசு அப்படத்தை தடை செய்ய துணிந்து விட்டது போலும். பிறகு, நீதிமன்ற தீர்ப்பு, போலீஸ் அதிகாரி அறிவுரை, பாதுகாப்பு முதலியவவை ஒரே நாளில் என்னவாகும், என்னவாயிற்று என்று தெரியவில்லை. எனினும், பயங்கரவாத சதி திட்டங்களை பற்றிய விசயங்களை வெளிக்கொண்டு வந்ததற்காக, பிரதமர் மோடி இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்த அதேவேளையில், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இந்த படத்திற்கு மாநிலத்தில் வரி விலக்கும் அளித்து உள்ளார்.
[1] தமிழ்.ஏபிபி.லைவ், The Kerala Story: தொடர்எதிர்ப்புகள்… தமிழ்நாடுமுழுவதும் ‘திகேரளாஸ்டோரி‘ படத்தின்காட்சிகள்ரத்து..!, By: ராகேஷ் தாரா | Updated at : 07 May 2023 04:20 PM (IST); Published at : 07 May 2023 04:20 PM (IST)
கேரளாவில்லவ்ஜிஹாத்தெரிந்தவிசயம்தான்: “லவ் ஜிஹாத்” பற்றி கேரளாவில் அரசாங்கம், போலீஸ் துறை, என்.ஐ.ஏ மற்றும் உளவுத்துறை என்று எல்லோருக்கும் தெரிந்த பிரச்சினை ஆகும். கிருத்துவ பெண்களும் பாதிக்கப் பட்டதால், பாதிரியார்களும் இதை எதிர்த்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். சிலர், ஐசிஸ் கொடுமைகளிலிருந்து தப்பியும் திரும்ப வந்துள்ளனர். ஆகவே, அதை மையமாக வைத்து வெளிவரும் திரைப்படத்தை எதிர்ப்பதில் என்ன பலன் வந்து விடப் போகிறது என்று தெரியவில்லை. இப்பொழுதெல்லாம், படம் நன்றாக ஓடவேண்டும், விளம்பரம் பெற வேண்டும் என்றால் இவ்வாறு எல்லாம் செய்வது வழக்கமாக உள்ளது. ஒருவேளை, இப்படம் ஓடி பலரின் கவனத்தைக் கவர்ந்தால், யாருக்கு லாபம் என்றும் யோசிக்கத்தக்கது. ஏனெனில், இக்காலத்தில் மறைமுகமாக, எதிர்மறை விளம்பரத்தையும் பெற சிலர் முயல்கின்றனர். அல்லது, அதன் மூலம், எங்களை எதிர்த்தால் இந்த நிலை தான் ஏற்படும் என்று எச்சரிக்கும் தொணியிலும் எதிர்த்து, அமைதியாகும் போக்கையும் கவனிக்கலாம்.
டிரைலருக்குப்பிறகுஅமைதியானவர்கள், மறுபதியும்எதிர்ப்பில்ஈடுபட்டது: பலகட்ட எதிர்ப்புகள், சர்ச்சைகளைத் தொடர்ந்து ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மே.05, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நடிகைகள் அதா ஷர்மா, சோனியா பாலானி, யோகிதா பிஹானி, சித்தி இத்னானி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சுதிப்தோ சென் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். விரீஷ் ஸ்ரீவல்சா – பிஷாக் ஜோதி இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர். உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கேரளாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் கட்டாய இஸ்லாமிய மதத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்படுவது போன்ற காட்சிகளுடன் இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி வெளியாகி கடும் விமர்சனங்களைப் பெறத் தொடங்கியது. இந்தப் படத்தை வெளியிட தடை கோரி கடும் எதிர்ப்புகள் வெளியாகின[1]. கேரள அரசு சார்பில் இந்தப் படத்துக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது[2].
மெத்தப் படித்தவர், கடவுளின் தேசத்தில் வாழ்பவர்கள் எதிர்க்கும் படமாக மாறியது: மெத்தப் படித்த கேரளாவில் இவ்வாறு நடப்பது விசித்திரமாக உள்ளது. ஆனால் இந்தப் படத்துக்கு தடை கோரிய வழக்கை விசாரிக்க ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை நாடுமாறும் தெரிவித்திருந்தது[3]. கடந்த 10 ஆண்டுகளில் 30 ஆயிரம் பெண்கள் இதுபோல் மதமாற்றம் செய்யப்பட்டு காணாமல் போனதாக ட்ரெய்லரில் முன்னதாக குறிப்பிடப்பட்டிருந்தது[4]. ஆனால் படத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி சரமாரியாக கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், எண்ணிக்கையை 3 என மாற்றினர்[5]. இருப்பினும் உண்மை எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். மார்க்சிஸம், கம்யூனிஸம், செக்யூலரிஸம் என்றெல்லாம் பேசும் சித்தாந்திகளிடமிருந்து தான், இத்தகைய எதிர்ப்புகள் கிளம்புவதை கவனிக்கலாம். ஒருபக்கம், கேரளாவில் இஅதைப் பற்றிய வழக்குகளே நிலுவையில் இருக்கும் பொழுது, அரசு எதிர்ப்பதன் காரணம் அறியப் பட வேண்டியதாக உள்ளது. அரசு தரப்பில் அத்தகைய நிலை கேரளாவில் இல்லை என்று உறுதியாக சொல்வதற்குப் பதிலாக, படத்தை எதிர்க்கும் போக்கு எதனைக் காட்டுகிறது என்பதனையும் கவனிக்க வேண்டும்.
தமிழகத்தில்எச்சரிக்கை, திரையரங்களுக்குபாதுகாப்பு: மேலும், தமிழ்நாட்டில் இந்தப் படத்தை வெளியிட்டால் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சமூகத்திடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பும் என தமிழக உளவுத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது[6]. தமிழகத்தில் ஏகபட்ட குற்றங்கள் சமூகத்தை பாதித்து வரும் நிலையில், இது எப்படி அந்த அளவுக்குப் பெரிய முக்கியமான பிரச்சினையாகி, தமிழக உளவுத்துறை ஆராய்ச்சி செய்யும் அளவுக்குச் சென்றுள்ளது என்று தெரியவில்லை. போலீஸாரும் அதற்கேற்றபடி செயல்பட தயாராக இருக்க டிஜிபி ஆணையிட்டுள்ளார்[7]. இந்நிலையில், திரைத்துறையினர் தொடங்கி பலரது எதிர்ப்புகள், கண்டனங்கள் தாண்டி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது[8]. சென்னையில் எதிர்பார்த்தப் படி, பிரச்சினை எதுவும் எழவில்லை. திரையரங்களிலும் நிலைமை சாதாரணமாகவே இருந்தது. திரையரங்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க, போலீசார் நியமிக்கப் பட்டுள்ளனர்[9]. தமிழ்நாடு டிஜிபி அனைத்து காவல்துறை ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை.அனுப்பியுள்ளார்[10]. அதில் கேரளா ஸ்டோரி படம் திரையாக உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கவும், பதற்றமான இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்[11]. மேலும் சமூக வலைதளங்களில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டால் அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஆகியவை ஒட்டப்பட்டால் உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டுள்ளார்[12].
திரைப்படத்தைப்பற்றியவிமர்சனங்கள்: தி கேரளா ஸ்டோரி படத்துக்கு ட்விட்டர்வாசிகள் வைக்கும் விமர்சனங்களைக் கீழே பார்க்கலாம். “மன அமைதியைக் கெடுக்கும், வெறுப்புணர்வு மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் படம் இது . நாட்டில் வன்முறையை பரப்பும் நோக்கத்துடன் ஆத்திரமூட்டும் காட்சிகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. ஜீரோ ஸ்டார் தருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். “இந்தப் படம் முழுக்க முழுக்க பொய்களும் சூழ்ச்சியும் நிறைந்தது. படத்தில் சொல்லப்பட்ட எந்த ஒரு விஷயமும் உண்மைக்கு நெருக்கமாக இல்லை. இது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் எடுக்கப்பட்ட ஒரு பிரச்சாரப் படம். ஒவ்வொரு நடிகரும் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்காக வெட்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். ”சூப்பர். இந்தப் படத்தைப் பாருங்கள் இந்தப் படம் உங்கள் வழக்கமான லாலா லேண்ட் படம் அல்ல. இது சொல்லும் உண்மை வெறுப்பு இல்லை, சிலரது மனநிலையை அம்பலப்படுத்துகிறது. படத்துக்காக இயக்குனர் அற்புதமான ஆய்வு செய்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார். முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் திரைப்படம், யதார்த்தை முகத்தில் அறைந்து சங்கடப்படுத்துகிறது. விபுல் அம்ருத்லால் ஷா & சுதிப்டோசென் இந்தப் படத்தைத் தயாரித்ததற்காக பாராட்டுக்குத் தகுதியானவர்கள். அதா ஷர்மா வாழ்நாள் நடிப்பை வழங்கியுள்ளார்[13]. ”நீங்கள் உணர்ச்சிரீதியாக முட்டாளாக இருந்தால், இந்த பிரச்சாரத் திரைப்படம் சில நாட்களுக்கு உங்கள் கவனத்தை உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும்” எனத் தெரிவித்துள்ளார்[14].
[1] தமிழ்.இந்துஸ்தான்.டைம்ஸ், The Kerala Story Review: எப்படிஇருக்கு ‘திகேரளாஸ்டோரி’ திரைப்படம்? ட்விட்டர்விமர்சனம்இதோ!, HT Tamil Desk, 05 May 2023, 12:07 IST.
[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், திகேரளாஸ்டோரிபடத்தைதிரையிட்டவணிகவளாகம்முற்றுகை… போலீஸார் – எஸ்டிபிஐகட்சியினர்இடையேதள்ளுமுள்ளு!!, Narendran S, First Published May 5, 2023, 8:30 PM IST; Last Updated May 5, 2023, 8:31 PM IST..
[13] தமிழ்.ஏபிபி.லைவ், The Kerala Story Twitter Review: வெறுப்புபிரச்சாரமா? உண்மைசம்பவமா? திகேரளாஸ்டோரிபடத்தின்ட்விட்டர்விமர்சனம்இதோ! , By: பீட்டர் பார்க்கர் | Updated at : 05 May 2023 01:17 PM (IST) , Published at : 05 May 2023 01:08 PM (IST)
கேரளாவில் ஓடும்ரயிலுக்குதீவைத்த ஷாருக்செய்பி – கோத்ரா போன்ற சம்பவம் தவிர்ப்பு- தீவிரவாத தொடர்பு உறுதி – தொடரும் விசாரணை!
02-04-2023 – கேரளரயிலுக்குதீவைத்தது: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ரயில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஷாருக் செய்பி மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கடந்த 2ம் தேதி 02-04-2023 கண்ணூருக்கு எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது[1]. அப்போது பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது[2]. எலத்தூர் அருகே சென்ற போது மர்மநபர் ஒருவர் டி 1 / D1 பெட்டியில் இருந்த பயணிகள் மீது திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. தீ பற்றிக் கொண்டதால், பயணியர் அலறி அடித்துக் கொண்டு தப்பிக்க முயன்றனர். இந்த சமயத்தில் உயிருக்கு பயந்து ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்ததில் 2 வயது பெண் குழந்தை உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் ரஹ்மத் (42). அவளது இரண்டு வயது குழந்தை ஜஹ்ரா மற்றும் கே.பி. நௌபிக் (39) என்று தெரிய வந்தது. ஆக மொத்தம், இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். ஒரு குழந்தை மற்றும் பெண் உள்பட 3 பேர் பலியானார்கள். இதற்குள் பிரயாணிகள் அடுத்த பெட்டிகளுக்கு ஓடினர். செயின் இழுக்கப் பட்டு, ரெயிலும் நிறுத்தப் பட்டது. அனால், அதற்குள் தீ வைத்தவன் தப்பித்து ஓடிவிட்டான்.
தீவைத்தவனின்பேக்கிடைத்தது: இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீசாரும் கேரள அதிரடி படையினரும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் தீயில் எரிந்து பலியானவர்கள் பற்றிய விபரம் தெரிந்தது. மேலும் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றிய நபர், ரெயிலில் இருந்து தப்பி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் ரெயில் பெட்டியில் கிடந்த மர்மநபரின் உடமைகளை போலீசார் கைப்பற்றினர். அதில் ஒரு செல்போன், ஒரு டைரி மற்றும் பெட்ரோலுடன் கூடிய பாட்டில் ஆகியவை கிடைத்தது. அந்த டைரியில் கேரளாவின் முக்கிய நகரங்களான திருவனந்தபுரம், கழக்கூட்டம் மற்றும் குமரி மாவட்டத்தின் குளச்சல், கன்னியாகுமரி ஆகிய ஊர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. போலீசார் கைப்பற்றிய செல்போனில் சிம் கார்டு எதுவும் இல்லை. ஒருவேளை உஷாராக அந்த நபர் எடுத்திருக்கக் கூடும். மேலும் அந்த செல்போனின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை வைத்து அதில் இருந்து யார்-யாருடன் பேசப்பட்டது என்ற தகவலை போலீசார் கண்டுபிடித்தனர்.
தனிப்பட்டமுறையில்பெண்மீதுதாக்குதல்நடத்திகொலைமுயற்சியாஇல்லைரயிலில்விபத்துஏற்படுத்தசதிதிட்டமா?: சம்பவ இடத்திற்கு கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர், ADGP கோழிக்கோடு மேயர் உட்பட அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்[3]. தனிப்பட்ட முறையில் பெண் மீது தாக்குதல் நடத்தி கொலை முயற்சியா இல்லை ரயிலில் விபத்து ஏற்படுத்த சதி திட்டமா என பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்[4]. அதாவது, முதலில் அவர்கள் எல்லோரும் முஸ்லிம்கள் என்பதால், இவ்வாறு யூகங்கள் வெளியிடப் பட்டன. தீவிரவாத கோணம் தவிர்க்கப் பட்டது. ஆனால், அவனது பையில் கிடைத்த ஆதாரங்கள் மற்றும் செல்போன் தொடர்புகள் அவ்வகையில் தான் இருந்தன. இது இன்னொரு “கோத்ரா” சம்பவம் போன்று ஆகாமல் தடுக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது. அப்பெட்டியில் முஸ்லிம்கள் இருந்தது ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. ஏனெனில், ரயிலில் கணிசமாக முஸ்லிம்கள் பயணித்து வருவது ஒன்றும் ஆச்சரியமான விசயமும் இல்லை.
உத்தரபிரதேசம்நொய்டாவைசேர்ந்தஷாருக்செய்பிதான்தீவைத்தநபர்: இதில் உத்தரபிரதேசம் நொய்டாவை சேர்ந்த ஷாருக் செய்பி என்ற வாலிபர் பற்றிய தகவல் தெரியவந்தது. கேரள முதலமைச்சர் மத்திய ரெயில்வே அமைச்சரை தொடர்பு கொண்டு பேசினார். அவர் எல்லா உதவிகளையும் கொடுக்க உறுதி அளித்தார். இவரது உருவத்தை ரெயிலில் இருந்த பயணிகள் உதவியுடன் போலீசார் புகைப்படமாக வரைந்தனர். அந்த படம் மூலம் ரெயிலில் 3 பேரை எரித்து கொன்ற நபரை பிடிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இதில் அந்த நபர், கோழிக்கோட்டில் இருந்து உத்தரபிரதேசத்தின் நொய்டாவுக்கு தப்பி சென்றது தெரியவந்தது. உடனே கேரள போலீசார், உத்தரபிரதேச போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் காசியாபாத் அதிரடி படையினரின் உதவியுடன் அந்த நபரை பிடிக்க சென்றனர். அவர் ஒரு தச்சு தொழிலாளி என தெரியவந்தது. அவரது பெயரும் ஷாருக் செய்பி என கூறப்பட்டது. இதையடுத்து காசியாபூர் அதிரடி படையினர் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கடந்த 2 மாதங்களாக ஊரை விட்டு எங்கும் சென்றதில்லை என தெரியவந்தது. மேலும் அவரது தந்தை தனது மகன் ஊரை விட்டு எங்குமே சென்றதில்லை எனவும் கூறினார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை விடுவித்தனர்.
மகாராஷ்டிரமாநிலம்ரத்தினகிரியில்வைத்துடெல்லியைசேர்ந்தஷாருக்செய்பி (27) என்பவர்கைது: இந்த சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரியில் வைத்து டெல்லியை சேர்ந்த ஷாருக் செய்பி (27) என்பவர் கைது செய்யப்பட்டார்[5]. ஷாருக் செய்பி கேரள போலீசின் காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்ற போதிலும், மத்திய ஏஜென்சிகளும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன[6]. இதனிடையே சந்தேகப்படும் நபரை கைது செய்ய உதவிய மகாராஷ்டிரா அரசுக்கும், போலீஸாருக்கும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நன்றி தெரிவித்துள்ளார்[7]. தீ வைப்பு சம்பவத்திற்கு தீவிரவாத இயக்கத்திற்கு தொடர்பு இருக்கலாம்? என்ற சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து தான் மத்திய ஏஜென்சிகள் விசாரணையை தொடங்கின[8]. இதில், சிறையில் அடைக்கப்பட்ட ஷாருக் சைஃபியை போலீஸ் காவலில் எடுத்துள்ள போலீசார், கோவை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும், கேரள ரயிலில் தீ வைத்த சம்பவத்திற்கும் தொடர்புள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்[9]. தொடர்ந்து கேரள ரயில் விபத்து சம்பவத்தின் போது ஷாருக் சைஃபியின் நடவடிக்கைகளை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[10]. இந்தநிலையில் ஷாருக் செய்பி மீது கேரள போலீசார் தீவிரவாத செயல்பாடுகள் தடுப்பு சட்டமான உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கு விரைவில் என்ஐஏவுக்கு மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.
தீவைக்கும்திட்டத்துடன்தான்கேரளாவந்தார்: கேரள சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அஜித்குமார் கூறியதாவது: “செய்பியிடம்விசாரணைநடத்தியதில்பல்வேறுமுக்கியவிவரங்கள்கிடைத்துள்ளன. இதன்அடிப்படையில்தான்அவர்மீதுஉபாசட்டத்தில்வழக்குப்பதிவுசெய்யப்பட்டது. தீவைத்ததுதான்தான்என்றுவாக்குமூலம்கொடுக்கும்பொழுதுஷாருக்செய்பிஒப்புக்கொண்டுள்ளார்[11]. அதற்கானஆதாரங்களும்கிடைத்துள்ளது. பயணியரைதீவைத்துஎரிக்கபயன்படுத்தியபெட்ரோலை, சம்பவத்தன்றுஅதிகாலைஷொர்ணுார்ரயில்நிலையம்அருகேஉள்ளஒருபெட்ரோல்பங்க்கில்இருந்துஷாரூக்சைபிவாங்கிஉள்ளார்[12].இதற்குஅவருக்குயாரோஉதவிசெய்துள்ளனர். அவர்கள்யார்என்றுவிசாரணைநடத்திவருகிறோம்[13].இவர்தீவிரவாதஎண்ணம்கொண்டவர். ஜாகீர்நாயக், இஸ்ராஅகமதுபோன்றோரின்வீடியோக்களைஅடிக்கடிபார்த்துவந்துள்ளார். ரயிலில்தீவைக்கவேண்டும்என்றதிட்டத்துடன்தான்இவர்கேரளவந்துள்ளார். இவருக்குவேறுயாருடையஅல்லதுஅமைப்புகளின்உதவிகிடைத்துள்ளதாஎன்றுவிசாரணைநடந்துவருகிறது. இவர்தற்போதுதான்முதன்முறையாககேரளாவந்துள்ளார்…..,”.இவ்வாறு அவர் கூறினார்.
[3] தமிழ்.நியூஸ்.18, ஓடும்ரயிலில்பயணிகள்மீதுதீவைப்பு.. 3 பேர்பலி – கேரளாவில்பயங்கரம், NEWS18 TAMIL, First published: April 03, 2023, 08:18 IST, LAST UPDATED : APRIL 03, 2023, 08:20 IST.
பங்களாதேசத்தவர் / வங்கதேசத்தவர் தொடர்ந்து தமிழகத்திற்குள் லட்சக்கணக்கில் வருவது வேலை செய்வது, தங்கி விடுவது எப்படி? (1)
பங்களாதேசத்தவர் / வங்கதேசத்தவர்தொடர்ந்துதமிழகத்திற்குலட்சக்கணக்கில்வருவது; தமிழகத்தில் கட்டிடத் தொழில் பெருகப் பெருக “வட மாநிலத்தவர்” என்ற போர்வையில் லட்சக்கணக்கில் வேலையாட்கள் வந்து குவிகின்றனர். சென்னையைச் சுற்றி ஆயிரக்கணக்கில் அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டுவது, கோடிக்கணக்கில் வியாபாரம் செய்வது என்பது பலநிலைகளில் நடந்து வருகிறது. அதில் அரசியல் அதிகமாகவே செயல் பட்டு வருகின்றது. இருப்பினும், தொடர்ந்து, “வட மாநிலத்தவர்” போர்வையில் பங்களாதேசத்தவர் / வங்கதேசத்தவர் தொடர்ந்து தமிழகத்திற்கு லட்சக்கணக்கில் வருவது வேலை செய்வது, தங்கி விடுவது, நிச்சயமாக எல்லாவிதங்களிலும் பிரச்சினை, சட்டமீறல் மற்றும் பெருங்குற்றமாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் இவர்கள் முஸ்லிம்கள் என்பதாலேயே அடக்கி வாசிக்கிறார்கள். ஊடகங்களும் அதனை அமுக்கி விடுகின்றனர் எனலாம். பாலியல் பிரச்சினையில் காட்டும் அளவு கடந்த பாரபட்சம் இதில், இன்னும் பலமடங்குக் காட்டப் படுகிறது. ஆனால், எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், குற்றங்கள் அதிகரித்து, கைதாவது அதிகமாகி, அரசாங்க ரீதியில் பதிவாகி வருகின்ற நிலையில் உண்மைகளை மறைக்க முடியாத நிலைக்கும் வந்தாகி விட்டது. ஒரு நிலையில் அவர்கள் இல்லை என்றால் வேலைகளே ஸ்தபித்து விடும் என்ற நிதர்சனத்தையும் முதலாளிகள் உணர்ந்து, அந்த உண்மையினை வெளிப்படையாகச் சொல்லவும் செய்து விட்டனர்.
தமிழகத்தவர் ஏன் வேலை செய்வதில்லை?: இருப்பினும், தமிழகத்தில் உள்ளோர் அந்த வேலைகளை ஏன் செய்வதில்லை, செய்ய விரும்பவில்லையா, அத்தகைய மனப்பாங்கு ஏன் உள்ளது போன்ற கேள்விகளும் எழுகின்றன. குறைந்து கூலிக்கு நிறைய வேலை செய்கின்றனர் என்பதை விட அவர்கள் அவ்வாறு செய்யும் பொழுது, இங்குள்ளவர் ஏன் செய்ய முடியாது என்பது தான் முக்கியமான கேள்வியாகிறது. பள்ளி-கல்லூரிகளில் ஒழுங்காக படிக்காமல் இருப்பது, சினிமா-பொழுது போக்கு போன்றவற்றில் அதிகமாக ஈடுபடுவது, பொழுது போக்குவது, பெற்றோர், பெரியவர், ஆசிரியர்கள் முதலியவர்களை மதிக்காமல் இருப்பது போன்றவை தான் தினம்-தினம் நிகழ்ச்சிகளாகி, அவை ஊடகங்களிலும் தாராளமாகவே, விவரமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. பிறகு, இளைஞர்கள் அவற்றிற்கு வ்ருத்தப் பட வேண்டாமோ, தங்களை மாற்றிக் கொள்ள உடனடியாக திருந்தும் வழிகளை நாட வேண்டாமோ? ஆனால், அத்தகைய குற்றங்கள் அதிகமாகி வருகின்றன. போதை மருந்து, குடி, செக்ஸ், சினிமா, பொழுதுபோக்கு என்றவற்றில் தான் அவர்கள் உழன்று, தங்களை சீரழித்து, மற்றவர்களை கெடுத்து வருகின்றனர்.
டிசம்பர் 2006ல்எண்ணூரில்வங்கதேசத்தவர்கைது: சென்னை அருகே உள்ள எண்ணூர் படகில் வந்தவர் மீது சந்தேகம் எழ, அவர்களை நிறுத்தினர். அந்தப் படகுகளை வளைத்துப் பிடித்த பாதுகாப்புப் படையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்[1]. அப்போது அவர்கள் அனைவரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது[2]. இவர்கள் பிடிபட்டது குறித்து போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாரும், மத்தியபுலனாய்வுப் படையினரும் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 16 பேரும் மாலத் தீவுக்குச் சென்றதாகவும், அங்கு கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு படகுகள் திசைமாறி இங்கு வந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இருப்பினும் இவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாமோ என்றசந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது. இதையடுத்து 16 பேரிடமும் போலீஸாரும், மத்திய புலனாய்வுப் படையினரும் துருவித் துருவி விசாரணைநடத்தி வருகின்றனர். இவர்களிடம் இருந்த பாஸ்போர்ட்டுகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
பிப்ரவரி 2020ல் 40 வங்கதேசத்தவர்திருப்பிவைக்கப்பட்டனர்: முறையான ஆவணங்கள் இன்றி தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்ததாக வங்கதேசத்தைச் சேர்ந்த சுமார் 40 பேர் அவர்களது நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்[3]. இதுதவிர போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயன்ற 2 வங்க தேசத்தினர் பிடிபட்டுள்ளனர்[4]. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி, வேலை, மருத்துவம் உட்பட பல்வேறு தேவைகளுக்காக தமிழகம் வருகின்றனர். சிலர் இங்கேயே தங்கி விடுகின்றனர். இதேபோல் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களில் சிலரும் முறையான ஆவணங்கள் இன்றி தமிழகத்தில் சட்ட விரோதமாக தங்கிவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இங்கோ பங்களாதேசத்தவர் பலமுறைகளைக் கையாள்கின்றனர் என்று தெரிகிறது. பொதுவாக, பங்களாதேசத்திலிருந்து, மேற்கு வங்காளத்தில் நுழைவது, அங்கிருந்து, அஸ்ஸாம் மூலம் பல மாநிலங்களுக்குப் பரவி செல்வது போன்ற திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். இதற்கு ஏஜென்டுகளும் இருக்கிறார்கள்.
வங்கதேசத்தவர்தமிழகத்தில்சட்டவிரோதமாகதங்கிபணிசெய்தது – தொடர்விசாரணை: இதுகுறித்து மத்திய உளவு பிரிவு, தமிழக கியூ பிரிவு உள்ளிட்ட புலனாய்வு பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், வங்க தேசத்தைச் சேர்ந்த சுமார் 40 பேர் தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கி பணி செய்து வந்தது தெரியவந்ததாகவும் அவர்கள் அடையாளம் காணப்பட்டு மீண்டும் அவர்களது நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் மேலும் கூறும்போது, கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் வங்கதேசத்தில் இருந்துகொல்கத்தாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்தவர்கள் அங்குள்ளவர்கள் போல போலி ஆவணம் தயார் செய்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்குள் நுழைந்ததாகவும் அவர்களை சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பும் பணி நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும்போலிபாஸ்போர்ட்டுடன்இருவர்பிடிபடுதல்: இதற்கிடையே சென்னை விமான நிலையத்தில் இருந்து கொழும்புவுக்கு நேற்று முன்தினம் விமானம் ஒன்று புறப்பட்டது. முன்னதாக அதில் செல்ல வந்த பயணிகளை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப் போது புத்தமத துறவிகள் உடை யில் இந்திய பாஸ்போர்ட்டில் டூடுல், மின்டொ ஆகிய 2 பேர் இலங்கை செல்வதற்காக வந்திருந்தனர். அவர்களிடம் இருந்த பாஸ்போர்ட்டை சோதனை செய்தபோது அவை போலி எனத் தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து அவர்களின் விமான பயணத்தை ரத்துசெய்த அதிகாரிகள், மேல் விசாரணைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
செயல்படும் விதம், திட்டம் மற்றும் முடிவுகள்: பங்களாதேசத்திலிருந்து “வொர்க் மர்மிட்” வாங்கிக் கொண்டு மேற்கு வங்காளத்திற்குள் வேலைக்கு வருகின்றனர்.
காலை வேலைக்கு வந்து மாலையில் திரும்பி சென்று விடவேண்டும்.
ஆனால், தினம்-தினம் ஆயிரம் பேர் வந்தால் 100-200 பேர் தங்கி விடுகின்றனர், மறைந்து விடுகின்றனர்>…..
மேற்கு வங்காளத்திற்குள் தங்கியவர்கள் முதலில் ஆதார், ரேஷன், பேன் என்று கார்டுகளை வாங்கி, ஓட்டர் ஐடியையும் வாங்கி விடுகின்றனர்
மேற்கு வங்காளத்திலிருந்து பிறகு மற்ற மாநிலங்களுக்குச் செல்கின்றனர்.
இவர்களிடம் இரண்டு நாடுகள் அடையாள அட்டைகளும் இருக்கின்றன. இதனால், சகஜமாக செயல்பட்டு வருகிறனர்.
இவர்களில் உண்மையில் பிழைப்பிற்கு வேலை செய்பவர் யார், கடத்தல்கார்ர்கள் யார், தீவிரவாதிகள் யார் என்றெல்லாம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சென்று / செயல்பட்டு வருகின்றனர்.
2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகிய நிலை (1)
22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட்கிழமை) வரைநடந்துள்ளவைஎன்ன?: 24-10-2022 அன்று தீபாவளி என்பதால், துணிமணி, பட்டாசு, ஸ்வீட் வாங்க வேண்டும், எல்லோருமே ஊருக்குச் செல்ல வேண்டும், வாங்கியதை குடும்பத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டும், சந்தோஷமாக கொண்டாட வேண்டும், என்று லட்சக்கணக்கில் மக்கள் வாகனங்களில், பேருந்துகளில், ரெயில்களில் சென்று கொண்டிருந்தனர். அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்ப, பட்ஜெட்டில் தீபாவளி கொண்டாட திட்டத்துடன் இருப்பர், சென்று கொண்டிருந்தனர். ஆனால், அப்பொழுது, கோயம்புத்தூரில் சிலர் வேறு விதமாக திட்டம் போட்டிருந்தனர் போலும். வெகுஜன மக்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளியை நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, ஊடகங்களில் வழக்கம் போல, தீபாவளி எதிர்ப்பு, பட்டாசு மறுப்பு, நாத்திக-நராகாசுரன் ஆதரவு செய்திகள் வந்து கொண்டிருந்தன[1]. பட்டாசு வெடிக்க வேண்டாம், குறிப்பிட்ட நேரங்களில் தான் வெடிக்க வேண்டும், மீறினால், வழக்கு, புகார், தண்டனை என்றெல்லாம் பெரிய போலீஸ் அதிகாரிகள் மிரட்டியதாக செய்திகள்[2]. அதே நேரத்தில் பட்டாசு விற்பனை பெருக்க வேண்டும் போன்ற பிரச்சாரமும் இருக்கிறது. இன்னொரு பக்கமோ, கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது போன்ற செய்திகள்.
இந்நிலையில்தான்கோவைகார்குண்டுவெடிப்புசம்பவம்–செய்திகள்வரஆரம்பித்தன: 22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட் கிழமை) வரை நடந்துள்ள நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்தால், இந்த கோவை கார் குண்டு வெடிப்பு திட்டமிட்டு நடந்துள்ள-நடத்தப்பட்ட செயல் என்று அறிந்து கொள்ளலாம். பிறகு, மற்ற செய்திகள் எல்லாம் வெளிவர ஆரமித்துள்ளன. ஊடகங்களின் பாரபட்சமிக்க, செய்தி வெளியீட்டுப் போக்கும், “ஆபத்திலிருந்து” மெதுவாக, “குண்டு வெடிப்பு” என்று முடிந்துள்ளது. இருப்பினும் இந்த தீவிரவாதிகள், பயங்கரவாதிள் எல்லோருமே மரியாதையுடன் தான் குறிப்பிடப் படுகிறார்கள். மத்திய உளவுத்துறை காவல்துறையினர் ஜமிஷா தொடர்பான பல்வேறு தகவல்களுடன் அவரை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசுக்கு 2018ம் ஆண்டு முதன் முதலில் தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது[3]. தமிழக காவல்துறையினர் இதனை பெரிதாக கருதவில்லை என்று கூறப்படுகிறது[4].
22-10-2022 (சனிக்கிழமைஇரவு): சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு ஜமேஷா முபின் வீட்டில் இருந்து அவர் உட்பட 5 பேர் மர்மபொருளை தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், முபின் தன்னுடைய வீட்டை காலி செய்ய வேண்டும் என்று கூறியதாகவும், அந்தப் பெட்டியில் ஸ்கிரேப் பொருள்கள் இருந்ததாக முபின் விளக்கம் அளித்ததாக கூறியுள்ளனர். அந்த சிசிடிவி காட்சிகளில் உள்ள மற்ற நபர்கள் 4 பேர் யார் என்பது குறித்து பிறகு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர், என்றெல்லாம் செய்திகள் பிறகு வெளி வந்தன. அப்படியென்றால், இவர்களும் முன்னமே இக்காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். சுற்றியுள்ளவர்கள், இவர்களது நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு, எச்சரித்திருக்கலாம், புகார் கொடுத்திருக்கலாம். ஆனால், முஸ்லிம்கள் எனும் போது, அமைதியாக இருந்து விட்டனர் போலும். ஒரு ஊடகத்தால், அங்கு செய்தி-விவரங்கள் சேர்க்கச் சென்றபோது, ஜன்னல் கதவுகளை அடைத்துக் கொண்டனர், யாரும் பேச முன்வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
23-10-2022 (ஞாயிற்றுக்கிழமை): அதிகாலை சுமார் 4:45 மணி அளவில், கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு பெரும் வெடிச் சத்தம் கேட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் அங்கு வந்து பார்த்துள்ளனர். முதலில், ஏதோ பட்டாசு சத்தம் என்று கூட நினைத்திருக்கலாம். அந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதிகாலை 4 மணி அளவில் சாலையில் கார் செல்வது, கார் நிற்பது பின்பு வெடித்து சிதறும் காட்சிகள் வெளியாகி உள்ளது. விடியற்காலை காரில் உள்ள காஸ் சிலிண்டர் வெடித்து ஒரு ஆள் இறந்தான். செல்போன் உதவியுடன் இறந்தவன் அடையாளம் காணப் பட்டான். வெடித்து சிதறிய காரில் இன்னொரு வெடிக்காத சிலிண்டர் மற்றும் சுற்றிலும் ஆணிகள், பால்ரஸ் போன்றவையும் சிதறிக் கிடந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தடயவியல் துறையினர் காரிலிருந்து 2 முதல் 3 கிலோ 1.5 இன்ச் ஆணிகள் மற்றும் பால்ரஸ் குண்டுகளைக் கண்டறிந்துள்ளனர். ஆணி, பால்ரஸ் வேறு பணிக்காக கொண்டு செல்லப்பட்டதா அல்லது வெடி விபத்தை நிகழ்த்தும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டவையா என்பதை நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஆக, நிச்சயமாக கோவை போலீஸார் சென்னை உயர் அதிகாரிகளுக்கு தெரியப் படுத்தி, விசயம் முதலமைச்சருக்குச் சென்றிருக்கும்.
பிற்பகல் – 23-10-2022 (ஞாயிற்றுக்கிழமை): தொடக்கத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்தை கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி தாமரைக் கண்ணன் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இந்தச் சம்பவத்தின் நிலைமை அறிந்து சென்னையிலிருந்து டி.ஜி.பி சைலேந்திர பாபு விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கோவைக்கு வந்தார். வெடி விபத்து நிகழ்ந்த பகுதியை ஆய்வு செய்தார். அதாவது, விசயம் சாதாரணமானது அல்ல என்பது தெரிந்து விட்டது. பிரசித்தி பெற்ற உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு மட்டுமின்றி, தீபாவளியையொட்டி, இப்பகுதியில் துணி எடுப்பதற்காக அதிக அளவில் மக்கள் கூடும் நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது கோவை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மசூதிகள் முன்பு போலீஸார் பாதுகாப்புப்பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
கார்குண்டுவெடித்தலில்இறந்தவன்ஜமேசாமுபின்: போலீஸார் செல்போன், கார் எண் முதலியவற்றை வைத்துக் கொண்டு விவரங்களை சேகரித்தனர். ஜமேசா முபின் என்பவன் தான் இறந்திருக்கிறான் எனூ முடிவானது. அவன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர். அப்பா இல்லை. அம்மா மட்டும் தான். அவர் மனைவிக்கு செவி மற்றும் பேச்சுத்திறன் இல்லை. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஜமேசாவுக்கும் இதயம், கண் ஆகியவற்றில் சில பிரச்னைகள் உள்ளன. முன்பு பழைய புத்தகக் கடை நடத்தி வந்தவர், பிறகு துணி வியாபாரம் செய்து வந்திருக்கிறார். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர். அதனால்தான் கடந்த 2019ம் ஆண்டு இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு பிறகு ஜமேசா முபினிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்த கார் வெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு போலீஸ் அவர் வீட்டில் நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு கடிதத்தில் சுற்றிப் பார்க்கவுள்ள சுற்றுலா தலங்கள் என எழுதி ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம், ஆணையர் அலுவலகம், ரேஸ்கோர்ஸ், விக்டோரியா ஹால் (மாநகராட்சி அலுவலகம்) ஆகிய பகுதிகளை குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம், இந்தப் பகுதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இப்படி செய்திகள்……
வாட்ஸ்–ஆப்பதிவு, இறப்புஉண்மைஎன்றால், அதுதற்கொலைகுண்டுவெடிப்புஆகிறது: விபத்து நடந்தக் காரை ரூ.10,000க்கு தல்காவிடம் இருந்து வாங்கியுளளார். இப்படி கைது செய்யப்பட்ட அனைவரும், இந்த சதித் திட்டத்தில் ஒவ்வொரு பணியைச் செய்துள்ளனர். ஜமேசா அவ்வபோது கேரளா சென்று, அங்கு ஏற்கெனவே என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்டுள்ள அசாருதீன் என்பவரைச் சந்தித்து வந்துள்ளார். ஆங்காங்கே சிறுக சிறுக சேகரித்து 75 கிலோ வெடி மருந்துக்கான வேதிப் பொருள்களை வாங்கியுள்ளனர். வெடி பொருள் தயாரிப்பது எப்படி என்பதை யூ-ட்யூபில் தேடிப் பார்த்திருக்கிறார். கைது செய்யப்பட்டவர்கள் இல்லாமல், இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கிறது.” என்றனர். …….’வாட்ஸ்ஆப்ஸ்டேட்டஸில், என்னுடையஇறப்புசெய்திஉங்களுக்குதெரியும்போதுஎனதுதவறைமன்னித்துவிடுங்கள், குற்றங்களைமறந்துவிடுங்கள்எனதுஇறுதிசடங்கில்பங்கேறுங்கள். எனக்காகபிரார்த்தனைசெய்யுங்கள்,” என்று பதிவிட்டு உள்ளார். இதற்கான புகைப்படத்தை அவர் பதிவேற்றி இருக்கிறார். இதை பற்றி விசாரிக்க வேண்டும். இது ஐஎஸ்எஸ் தொடர்புடைய வாசகம். அவர்கள்தான் தற்கொலை தாக்குதல்களுக்கு முன்பாக இப்படி எல்லாம் போஸ்ட் செய்வார்கள்…..இப்படியும் செய்திகள்! வாட்ஸ்-ஆப் பதிவு, இறப்பு உண்மை என்றால், அது தற்கொலை குண்டு வெடிப்பு ஆகிறது, “சூஸைட் பாம்பர்” என்றாகிறது!
[1] திக-திமுகவினர் தொடர்ந்து தங்களது ஊடகங்களில் இத்தகைய பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், உலகம் முழுவதும் கொண்டாடப் பட்டு, உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.
[2] சுவாசிக்கும் காற்று மாசு படுகிறது என்ற கோணத்தில் உச்சநீதி மன்றமே வரையறை கொடுத்திருப்பதால், அதன் மீது, மாநில அரசுகள் மற்றும் இதர நிறுவனங்கள், இயக்கங்கள் இதை பெரிது படுத்தி, பிரச்சாரம் செய்கின்றன.
[3] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், உளவுத்துறை ‘அன்றே’ கொடுத்தசிக்னல்!.. கிடப்பில்போடப்பட்டதா ? கோவைகார்குண்டுவெடிப்புசம்பவம், Raghupati R, First Published Oct 28, 2022, 7:56 PM IST; Last Updated Oct 28, 2022, 8:34 PM IST.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பான அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்தது (2)
இமயமலை முதல் குமரி வரை இந்தியா ஒன்றுதான். அதில் உள்ள அனைவரின் பாதைகளும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும்: சந்திப்பில் மதரஸாவில் பயிலும் குழந்தைகளிடம் பேசிய மோகன் பாகவத், நாட்டின் மீதான அன்பையும் மனித வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். குழந்தைகளுக்கு மதரஸாவில் குரான் கற்பிக்கப்படுவது போல், இந்து மத வேதமான பகவத் கீதையையும் ஏன் கற்பிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், “இமயமலை முதல் குமரி வரை இந்தியா ஒன்றுதான். அதில் உள்ள அனைவரின் பாதைகளும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும்,” என்று பேசினார். தொடர்ந்து மதரஸா நிர்வாகிகளிடம், “மதரஸாக்களில் கல்வி கற்கும் முஸ்லிம் சிறார்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இந்தி தெரியாததால், விமான நிலையம், ரயில் நிலையம் போன்றவற்றில் படிவத்தை அவர்களால் நிரப்ப முடியவில்லை. மதரஸாக்களில் நவீன அறிவைக் கற்பிக்க வேண்டும். ஒருமித்த கருத்து இல்லாத பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக வாழ விரும்புகிறோம் என்பதே அனைவராலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது,” என்று பாகவத் பேசினார்.
மோகன்பகவத்மற்றும்ஐந்துமுஸ்லீம்சமூகதலைவர்களிடையேஅண்மையில்நடைபெற்றசந்திப்பு: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் சந்திப்பு நடைபெற்றது[1]. பசுவதை, இழிவாக பேசுதல் உள்பட இரு சமூக முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது[2]. தொடர்ந்து இது போன்ற சந்திப்புகள் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அரை மணி நேரம் திட்டமிடப்பட்ட சந்திப்பு 75 நிமிடங்கள் நீடித்தது. ஆர்எஸ்எஸ்யின் தற்காலிக டெல்லி அலுவலகமான உதாசீன் ஆசிரமத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பகவத், சங்கத்தின் சா சர்கார்யவா கிருஷ்ண கோபால், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ். ஒய் குரைஷி, முன்னாள் டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் AMU துணைவேந்தர் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஜமீர் உதீன் ஷா, ஆர்எல்டி தலைவர் ஷாகித் சித்திக், தொழிலதிபர் சயீத் ஷெர்வானி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பசுவதைமற்றும்காஃபிர் (முஸ்லீம்அல்லாதவர்களுக்குகுறிக்கபயன்படும்சொல்) போன்றபிரச்சனைகள்குறித்துபேசப்பட்டது: குரைஷி மற்றும் சித்திக் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், “பேச்சுவார்த்தைசுமூகமானசூழலில்நடைபெற்றது. கூட்டத்திற்குப்பிறகு, முஸ்லிம்சமூகத்துடன்தொடர்ந்துதொடர்பில்இருக்கநான்குமூத்ததலைவர்களைபகவத்நியமித்தார். எங்கள்பக்கத்தில், ஆர்எஸ்எஸ்உடனானபேச்சுவார்த்தையைதொடரமுஸ்லீம்மூத்ததலைவர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள்மற்றும்தொழில்வல்லுநர்களைநாங்கள்நியமிக்கஉள்ளோம்.” பசுவதை மற்றும் காஃபிர் (முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குறிக்க பயன்படும் சொல்) போன்ற பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது[3]. பசுவதை மற்றும் காஃபிர் குறித்து மக்கள் மகிழ்ச்சியடையவில்லை என்று பகவத் கூறினார்[4]. அதற்கு பதிலளித்த நாங்கள், “அதன்மீதுஎங்களுக்கும்அக்கறைஉள்ளது. பசுவதையில்ஈடுபட்டால், சட்டத்தின்கீழ்தண்டிக்கப்படவேண்டும்என்றுகூறினோம். காஃபிர்என்பதுஅராபியமொழியில்நம்பிக்கையற்றவர்களைகுறிக்கபயன்படுத்துவது. இதுதீர்க்கப்படமுடியாதபிரச்சினைஅல்லஎன்றுஅவரிடம்கூறினோம். அதேபோல்இந்தியமுஸ்லீம்களைபாகிஸ்தானியர்அல்லதுஜெகாதிஎன்றுகூறும்போதுநாங்கள்வருத்தமடைகிறோம்,” என்று கூறினோம்.
நூபுர் ஷர்மா விவகாரம் மற்றும் தொடர்ந்த வன்முறை: ஆர்எல்டி தேசிய துணைத் தலைவர் சித்திக் கூறுகையில், “நூபுர் ஷர்மா விவகாரம் நடந்தபோது ஆர்எஸ்எஸ் உடன் சந்திப்பை நாடினோம். பல இடங்களில் வன்முறை நடந்தது. முஸ்லீம் சமூகத்துக்குள்ளும் அசாதாரண சூழல் உருவாகியிருந்தது. மோகன் பகவத் சந்திப்பதற்கான தேதியை பெற்ற நேரத்தில், நூபுர் ஷர்மா சம்பவம் நடந்து ஒரு மாதமாகிவிட்டது. அது சற்று ஓய்ந்திருந்தது. எனவே இரு சமூகத்தினருக்கும் இடையிலான வகுப்புவாத நல்லிணக்க விவகாரங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம் என்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார். இத்தகைய சந்திப்புகள், உரையாடல்கள், தொடரவேண்டும், அமைதி நிலவ வேண்டும், மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
நல்லிணக்கத்தைவலுப்படுத்தவும், உள்உறவுகளைமேம்படுத்தவும்முஸ்லீம்மதகுருகளைதலைவர்களைசந்தித்துவருகிறார்: பகவத்தின் திடீர் விசிட் குறித்து ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் பிரமுக் சுனில் அம்பேகர் வெளியிட்ட அறிக்கையில், “சர்சங்கசாலக் அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்கிறார். இது ‘சம்வத்’ செயல்முறையின் ஒரு பகுதியாகும்” என்று கூறினார்[5]. ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் கடந்த சில நாட்களாக மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், உள் உறவுகளை மேம்படுத்தவும் முஸ்லீம் மதகுருகளை தலைவர்களை சந்தித்து வருகிறார்[6].. மாற்று மதம் மற்றும் நம்பிக்கை கொண்டவர்களுடன் தொடர்பு ஏற்படுத்துவது என்ற நோக்கில் இந்த சந்திப்பு நடந்தது[7]. அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது[8]. மேலும் இது தொடர்ச்சியான இயல்பான சம்வத் செயல்முறையின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் தெரிவித்தார்[9]. ஆனால் கடந்த மாதமும் ஐந்து முஸ்லிம் தலைவர்களை பகவத் சந்தித்தார். அப்போது நாட்டில் நல்லிணக்க சூழல் நிலவுவது குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, பகவத் சமீபத்தில் டெல்லியின் முன்னாள் லெப்டினன்ட் கவர்னர் நஜீப் ஜங், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரைஷி, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜமீர் உதின் ஷா, முன்னாள் எம்.பி. ஷாகித் சித்திக் மற்றும் தொழிலதிபர் சயீத் ஆகியோரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது[10].
தீவிரவாததொடர்புகள்நீங்கவேண்டும்: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என கேரளா கோழிக்கோடு, டில்லி, மும்பை, அசாம், தெலுங்கானா, பெங்களூரூ, லக்னோ, சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட 13 மாநிலங்களில் தேசிய புலனாய்வு படையினர் நாடு முழுவதும் அதிரடி சோதனை மேற்கோண்டனர். அதனுடன் தொடர்பு கொண்டுள்ளவர்கள், குறிப்பாக சட்டவிரோதமான தொடர்புகள், நிதியுதவி பெறுபவர்கள், தீவிரவாத சம்பந்தம் உள்ளவர்கள் தண்டிக்கப் பட வேண்டும், மற்றவர்கள் அவர்களிடமிருந்து விலக வேண்டும். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை, சேர்ந்த 106 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கேரளா, தமிழகம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் வன்முறைச் செயல்களும் ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், அமைதி காக்க, இத்தகைய உரையாடல்கள் அந்தந்த மாநிலங்களிலும் ஆரம்பிக்க வேண்டும். மக்களுக்கு ஏற்றமுறையில் நெருங்கி வர உரையாடல்கள் அமைய வேண்டும். அப்பொழுது தான், பதட்டம் நீங்கி, நட்பு, உறவுகள் மேன்படும். இந்திய முஸ்லிம்கள் இந்தியாவின் பொருளாதார, மற்ற முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும்.
[3] தமிழ். இந்தியன்.எக்ஸ்பிரஸ், மோகன்பகவத்– முஸ்லிம்தலைவர்கள்சந்திப்பு: பசுவதைஉட்படமுக்கியபிரச்னைகள்பற்றிபேச்சு, Written by WebDesk, Updated: September 22, 2022 6:53:34 pm.
முகமது இஸ்மாயில் இறந்த போது, உடலைப் பார்த்து, ஈவேரா கையறு நிலையில், நானும் சாகிறேன் என்று பிதற்றினாரா? [1]
பெரியாரின் மறுபக்கம், முன்பக்கம், பின்பக்கம் முதலியன: ஆனைமுத்து, விடுதலை ராஜேந்திரன், எஸ்.வி.ராஜதுரை, முதலியோர்களின் தொகுப்புகள் மற்ற பெரியார் சுயமரியாதைப் பிரச்சாரக் கழகத்தின் வெளியீடுகள் முதலியவற்றை வைத்துக் கொண்டு[1], தமக்கு வேண்டியவற்றைத் தொகுத்து, பெரியாரின் மறுபக்கம், முன்பக்கம், பின்பக்கம் என்றெல்லாம் எழுதுகிறார்கள், ஆனால், அவற்றை சரிபார்த்து, உண்மையறிந்து, மெய்யாகவே மறுபக்கம் அலசி, ஆராய்ந்து அவர்கள் எழுதுவது இல்லை[2]. அரசியல், பரிந்துரை, ஆதாயம், அதிகாரம் என்றெல்லாம் உள்ளதால், பரஸ்பர ரீதியில் அத்தகைய வெளியீடுகள், ஆதரவாளர்களிடம் பிரபலமாகி சுற்றில் இருக்கின்றன. ஆனால், 1940-80களில் திராவிடத் தலைவர்களின் பேச்சுகளை நேரில் கேட்டவர்களுக்கு, அவர்கள் பேசியதற்கும், இப்பொழுது தொகுப்பு புத்தகங்களில் இருப்பவற்றிற்கும் உள்ள பெரிய வேறுபாடுகளை காணலாம். எந்த அளவுக்கு ஒட்ட்யும், வெட்டியும், மாற்றியமைத்து, அவை வெளியிடப் பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம். ஆகவே, இங்கும்-அங்கும் உள்ளவற்றை எடுத்தாண்டு, தொகுத்து எழுதியே காலந்தள்ளிக் கொண்டிருக்கும் போக்கிலிருந்து ஆராய்ச்சிக்கு வர வேண்டும். பெரியார் என்கின்ற ஈவேராவின் கதை அப்படியென்றால், காயிதே மில்லத் என்கின்ற முகமது இஸ்மாயில் கதை (5.6.1896 – 5.4.1972) இப்படியுள்ளது.
மணிச்சுரரில்வெளியானபெரியாரின்கையறு–கதறியநிலை: 06-0-2021 தேதியிட்ட “மணிச்சுடர்” என்கின்ற முஸ்லிம் நாளிதழ், ஈவேரா மற்றும் முகமது இஸ்மாவிலைப் பற்றி, இவ்வாறு, வெளியிட்டுள்ளது[3]: “கண்ணியத்திற்குரியகாயிதேமில்லத்மீதுஇந்தியஅரசியல்தலைவர்கள்அனைவரும்பெரும்மரியாதையும்மாறாதபேரன்பும்கொண்டிருந்தனர்.குறிப்பாககாயிதேமில்லத்அவர்களைதந்தைபெரியார்அவர்களும் , மூதறிஞர்ராஜாஜிஅவர்களும்தம்பிஎன்றும், பெருந்தலைவர்காமராஜர்அண்ணன்என்றும், அன்பொழுகஉறவுமுறைகூறிஅழைக்கும்அளவுக்குநெருக்கமானநல்லுறவுஅவர்களிடையேநிலவியது.
“திராவிடஇயக்கங்களுக்கும், இந்தியயூனியன்முஸ்லிம்லீக்கிற்கும்இடையேநிலவிவந்தபிரிக்கமுடியாதநல்லுறவைதந்தைபெரியார்நன்குஉணர்ந்தவர்.காயிதேமில்லத்தையும், இஸ்லாமியசமுதாயத்தையும்தன்நெஞ்சத்தில்ஏந்திநேசித்தவர்தந்தைபெரியார். திராவிடஇஸ்லாமியஇயக்கங்களுக்கிடையேயானஇந்தபேரன்பும்நல்லுறவும்இன்றளவும்இம்மியளவுகூடகுன்றாமல்குறையாமல்வாழையடிவாழையாகத்தொடர்கிறது”. காயிதே மில்லத் புராணம், அவ்வப்போது, ஊடகங்களில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன[4]. இதில் எந்த விதிவிலக்கோ, ஆராய்ச்சியோ இல்லை, அப்படியே, இருப்பவற்றை, திரும்ப-திரும்ப வெளியிடுவது வழக்கமாக உள்ளது[5].
அரசுப்பெண்கள்கல்லூரியாகமாற்றமுயன்றதைமுகமதுஇஸ்மாயில்எதிர்த்தது[6]: இதே போல, முகமது இஸ்மாயில் பற்றி, முகமதியர் எழுதுவது தான் உள்ளது. அவை எவ்வாறு 100% ஆராய்ச்சிக்கு ஏற்றது என்று தெரியவில்லை. உதாரணத்திற்கு – புதுமடம் ஜாபர் அலி என்பவர் காயிதே மில்லத் பற்றி, போற்றி எழுதியதிலிருந்து தெரியும் விசயங்கள் கொடுக்கப்படுகின்றன[7]. “……..‘காயிதேமில்லத்’ என்றேஅழைக்கப்பட்டார். உருதுமொழியில், ‘வழிகாட்டும்தலைவர்’ என்றுஇதற்குப்பொருள். 1946 முதல் 1952 வரைசென்னைமாகாணசட்டப்பேரவையில்எதிர்க்கட்சித்தலைவராகஅவர்இருந்தார். அப்போது, சென்னைஅண்ணாசாலையில்கன்னிமராஹோட்டல்எதிரேஇருந்தமுஸ்லிம்அறக்கட்டளைக்குச்சொந்தமானமுகமதியன்கல்லூரியைக்கையகப்படுத்தியஅரசு, அதைஅரசுப்பெண்கள்கல்லூரியாகமாற்றமுடிவுசெய்தது. இதைகாயிதேமில்லத்கடுமையாகஎதிர்த்தார். முஸ்லிம்அறக்கட்டளைக்குச்சொந்தமாகஇருக்கும்ஒரேஒருகல்லூரியையும்அரசுகையகப்படுத்துவதால்முஸ்லிம்களுக்குப்பாதிப்புஏற்படும்என்றுகருதினார்.அப்போதையஉள்துறைஅமைச்சர்டாக்டர்சுப்பராயனைச்சந்தித்துஇதுதொடர்பாகவலியுறுத்தினார், காயிதேமில்லத். அப்போதுஅமைச்சர்சுப்பராயன், ‘ஒருகல்லூரிக்காகப்போராடுவதில்காட்டும்உழைப்பை, முஸ்லிம்சமூகத்துக்காகஉங்கள்சமூகத்தில்உள்ளசெல்வந்தர்களிடம்பேசிதமிழ்நாடுமுழுவதும்பரவலாகக்கல்லூரிகளைத்தொடங்குவதில்நீங்கள்ஆர்வம்காட்டினால்அதிகபலன்கிடைக்குமே’ என்றுயோசனைதெரிவித்தார்.
முகமதியகல்லூரிகள்தமிழகத்தில்உருவானது[8]: புதுமடம் ஜாபர் அலி தொடர்ந்து, “இந்தயோசனையில்இருக்கும்நன்மையைப்புரிந்துகொண்டகாயிதேமில்லத், உடனடியாகத்தமிழகம்முழுதும்சுற்றுப்பயணம்மேற்கொண்டார். முஸ்லிம்சமூகத்தில்இருக்கும்மிகப்பெரும்செல்வந்தர்களைச்சந்தித்து, ‘முஸ்லிம்சமூகத்துக்கென்றுகல்லூரிகள்தொடங்கவேண்டியதன்அவசியத்தைஎடுத்துரைத்தார். அவரதுவேண்டுகோளைப்பலசெல்வந்தர்கள்ஏற்றுக்கொண்டனர். தமிழகப்பல்கலைக்கழகங்களின்துணைவேந்தர்லட்சுமணசாமிமுதலியாரைச்சந்தித்து, தனதுஇந்தத்திட்டம்பற்றிவிளக்கிஅனுமதிபெற்றார். இதைத்தொடர்ந்தே, சென்னையில்புதுக்கல்லூரி, திருச்சியில்ஜமால்முகமதுகல்லூரி, அதிராம்பட்டினத்தில்காதர்மொய்தீன்கல்லூரிஉள்ளிட்டஏராளமானமுஸ்லிம்கல்லூரிகள்தொடங்கப்பட்டன. தமிழகத்திலிருந்துசென்றுசிங்கப்பூர், மலேசியா, பர்மாபோன்றவெளிநாடுகளில்தொழில்செய்துவந்தமுஸ்லிம்தனவந்தர்களிடம், கல்லூரிகளின்கட்டிடவசதிக்காகநிதிகோரினார். அவரதுவேண்டுகோளைஉத்தரவாகமதித்துஅவர்கள்தாராளமாகநிதிவழங்கினர். ஒட்டுமொத்தநிதியையும்வெளிப்படையானநிர்வாகத்தின்மூலம்கல்லூரிகளின்கட்டிடங்களுக்காகசெலவிட்டார். இன்றும்புதுக்கல்லூரி, ஜமால்முகமதுகல்லூரிகளில்பர்மா– மலாய்வாழ்முஸ்லிம்பெயர்கள்கட்டிடங்களுக்குச்சூட்டப்பட்டிருப்பதேஇதற்குசாட்சி,” என்று எழுதியது.
1972ல்எம்ஜிஆர்மூன்றுகிமீநடந்து, இறுதிஊர்வலத்தில்கலந்துகொண்டது: புதுமடம் ஜாபர் அலி தொடர்ந்து, “தந்தைபெரியார்முதல்அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதிவரைஎல்லாத்தலைவர்களும்காயிதேமில்லத்மீதுமிகுந்தமதிப்புகொண்டவர்கள். 1967 தேர்தலில்திமுகவின்வெற்றிக்குத்துணைநின்றார். தேர்தலின்போதுஅவரதுஇல்லத்துக்குச்சென்றுஆலோசனைநடத்தினார்அண்ணா. எந்தமுகமதியன்கல்லூரியைஅரசுமகளிர்கல்லூரியாகமாற்றகாயிதேமில்லத்கடுமையாகஎதிர்ப்புதெரிவித்தாரோ, அதேகல்லூரிக்குகாயிதேமில்லத்தின்பெயரையேசூட்டினார், அப்போதுமுதல்வராகஇருந்தகருணாநிதி. எம்ஜிஆர்முதல்வராகஇருந்தபோது 1983-ல்காயிதேமில்லத்தின்வாழ்க்கைபற்றிஐந்தாம்வகுப்புபாடப்புத்தகத்தில்இடம்பெறச்செய்தார். காயிதேமில்லத்மறைந்தபோது, அவரால்உருவாக்கப்பட்டபுதுக்கல்லூரியிலேயேஅவரதுஉடல்வைக்கப்பட்டது. அப்போதுஎம்ஜிஆர்முதல்வராகஇருந்தார். அவருக்குஅஞ்சலிசெலுத்தியஎம்ஜிஆர்அங்கிருந்துமூன்றுகிலோமீட்டர்தொலைவுவரைஅவரதுஇறுதிஊர்வலத்தில்பங்கேற்றுநடந்தேவந்தார்,” என்று எழுதியது.
வண்ணாரப்பேட்டைமுஸ்லிம்ஆர்பாட்டம், அரங்கேற்றப் பட்ட நாடகமா, ஆதரவு, செயல்படும் சக்தி மற்றும் பின்னணி எது-யார்? [1]
வண்ணாரப்பேட்டைமுஸ்லிம்பிரச்சினையா, அரசியலா?: சென்னை வண்ணாரப்பேட்டை பிரச்சினை ஆழமாக அலசிப் பார்த்தால், அது வண்ணாரப்பேட்டை, சென்னை, தமிழ்நாடு அல்லது இந்தியாவிற்கான பிரச்சினை அல்ல என்று தெரிகிறது. எல்லை மாநிலங்கள் போலான ஊடுருவல்கள், அயலாட்டவர் இங்கு இருக்கிறார்கள் என்ற பட்சத்தில் அவர்களது நிலைப்பாடு உள்ளது என்றால், அது திகைப்படையச் செய்கிறது. ஏற்கெனவே ஐசிஸ் தொடர்புள்ள தீவீரவாதிகள், அவர்களுக்கு உதவியவர்கள் இப்பகுதிகள் மற்றும் சென்னையின் மற்ற பகுதிகளிலிருந்து கைது செய்யப் பட்டுள்ளனர். அப்படியென்றால், இவர்களுக்கு ஏதோ விசயம் தெரியும் போலிருக்கிறது. அமைதியாக “போராட்டம்” நடத்துகிறோம் என்றால், இத்தகைய சூழ்நிலை உருவாகி இருக்காது. குறிப்பிட்ட தெருக்களில் உள்ளவர்கள் நிச்சயமாக “ஹவுஸ் அரெஸ்ட்” நிலையில் இருந்திருக்கிறார்கள். அல்லது அவர்கள் தயாராக இருந்தார்கள் என்றாக வேண்டும். ஆனால், இஸ்லாமியர் திட்டமிட்டு, அதனை உருவாக்கியுள்ளனர் என்றும் தெரிகிறது. எனவே, இது எப்படியாவது ஏதோ ஒரு விதத்தில், அமைதியைக் குலைக்க வேண்டும் அல்லது ஊடக கவனம் பெற வேண்டும் போன்ற யுக்தியுடன் ஆரம்பித்ததாக தெரிந்தது. உடனடியாக அரசியல் நுழைந்தது, வேறுவிதமாக உள்ளது.
போலீஸாரைஒருதலைப்பட்சம்மாககுறைகூறும்ஊடகங்கள்: சொல்லி வைத்தால் போல, எதிர்கட்சிகள் எல்லாமே, ஒரே மாதிரி போலீஸார் நடவடிக்கையை எதிர்த்து அறிக்கை விடுப்பது, ஆளும் அரசை குறை சொல்வது போன்ற விதங்களில் அதிரடி பிரச்சார வேலைகளை முடுக்கியுள்ளார்கள். மின் மற்றும் அச்சு ஊடகங்கள் அவர்கள் மற்றும் அத்தகைய சித்தாந்தக்காரர்களிடம் இருப்பதால், ஆங்கில ஊடகங்களும் பாரபட்சமாகத்தான் இருக்கின்றன. தி இந்து மற்றும்பிரென்ட் லைன் படித்தால் விளங்கும். போலீஸார் பெண்களை, சிறுவர்களை அடித்தார்கள் என்று, பெண்கள் சொன்னதாக, நிருபர்கள் செய்தியை, அப்பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன[1]. பிறகு, போலீஸார் சொல்வதையும் வெளியிட வேண்டுமே, ஆனால், அதை செய்யவில்லை. பிரென்ட்லை விடும் கதை கொஞ்சம் ஓவராகவே உள்ளது, ஏனெனில், அதற்கு ஆதாரம் இல்லை. ஜீப்பில் வைத்து அடித்தார்கள் என்றால் யார் பார்த்தார்கள் என்று சொல்லவில்லை. ஆனால், இவற்றையெல்லாம் செய்தி என்று பக்கம்-பக்கமாக போட்டிருக்கிறது[2].
தினத்தந்திடிவிதொலைக்காட்சியில், எஸ்டிபிஐஉறுப்பினர்போலீஸாருக்குஎதிராகபயங்கரமானபுகார்சொன்னது: 15-02-2020 அன்று தினத்தந்தி டிவி தொலைக் காட்சியில், எஸ்டிபிஐ சார்பாக பேசியவர், போலீஸார், பெண்களின் மர்ம உறுப்புகளில் லத்தியை நுழைத்து….. என்றெல்லாம் பேசியது திகைப்பாக இருந்தது. இதை தந்தி-ஒருங்கிணைப்பாளர் தடுக்கவில்லை. ஒரு பத்திரிக்கையாளர் எடுத்துக் காட்டிய பிறகும், அவர் பிடிவாதமாக, மனித உரிமை ஆணையத்திற்கு புகார் கொடுப்போம் என்றெல்லாம் வாதித்தார். போலீஸாரை எதிர்த்து அப்படி பேசுகிறார்களே என்ற உணர்வே அவர்களுக்கு இல்லை என்ற போக்கு தான் காணப் பட்டது. பார்ப்பவர்களுக்கே, அது எரிச்சலை ஊட்டுவதாக இருந்தது. அனுமதி எல்லாமல், பொது மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில் சாலைகளை மறித்து, ஆக்கிரமித்து, சட்டங்களை மீறி, “அமைதியான போராட்டம்” என்று பெண்கள்-சிறார்களை முன்னே வைத்து கலாட்டாவில் ஈடுபட்டதே, முஸ்லிம்களின் விசமத் தனத்தைக் காட்டுகிறது. ஒருதலைப் பட்சமாக இப்படி ஊடகங்கள் போலீஸாரை குறைகூறுவதும் விசமத் தனமாக உள்ளது. “டெக்கான் குரோனில்” ஒரு பெண் ஜாயின்ட் கமிஷனர், இரண்டு பெண் போலீஸார் மற்றும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் போராட்டக் காரர்கள் கற்களை வீசியதில் காயமடைந்தனர் என்று போலீஸார் சொன்னதாக, செய்தி வெளியிட்டுள்ளது[3]. மற்ற படி, பிடிஐ என்று செய்தியை அப்படியே வெளியிட்டுள்ளது[4]. ஏன் நிருபர்கள் ஆஸ்பத்திரிக்குச் சென்று உண்மை அறிந்து செய்தி போடவில்லை என்று தெரியவில்லை.
திருமாவளவன்உளறுவது [14-02-2020]: அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தி ஒரு உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்[5]. சிஏஏவுக்கு எதிராக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்தி ஒரு உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்[6]. அந்த அறிக்கையில், “குடியுரிமைத்திருத்தச்சட்டம், தேசியமக்கள்தொகைப்பதிவேடு, தேசியகுடியுரிமைப்பதிவேடுஆகியவற்றைத்தமிழ்நாட்டில்நடைமுறைப்படுத்தக்கூடாதுஎனவலியுறுத்தியும், குடியுரிமைத்திருத்தச்சட்டத்துக்குஎதிராகசட்டப்பேரவையில்தீர்மானம்நிறைவேற்றக்கோரியும்சென்னைபழையவண்ணாரப்பேட்டைபகுதியில்மக்கள்அறவழியில்கூடிபோராட்டம்நடத்தியுள்ளனர்.பெண்களின்போராட்டம்வெற்றிகரமாகநடப்பதைசகித்துக்கொள்ளமுடியாமல்அவர்கள்மீதுகாவல்துறைவன்முறையைஏவிஇருக்கிறது. அங்குஇருந்தபெண்கள்மீதுதாக்குதல்நடத்தியதைபார்த்தஆண்கள்அவர்களுக்குபாதுகாப்பாகஅங்கேவந்துள்ளனர். அவர்களைத்கடுமையாககாவல்துறையினர்தாக்கியுள்ளனர். அந்தநெரிசலில்சிக்கிமுதியவர்ஒருவர்உயிரிழந்துள்ளார். நூற்றுக்கும்மேற்ப்பட்டவர்களைக்காவல்துறைகைதுசெய்துள்ளது. இந்தச்செய்தியைஅறிந்ததும்நேற்றிரவுதமிழ்நாடுமுழுவதும்பல்வேறுஇடங்களில்பொதுமக்கள்சாலைமறியலில்ஈடுபட்டனர். அதன்பிறகுசென்னைபோலீஸ்கமிஷனர்பேச்சுவார்த்தைநடத்தி, கைதுசெய்தவர்களைவிடுவித்துள்ளார். இதனால்சாலைமறியல்போராட்டங்கள்விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன….” இந்த அளவுக்கு முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கியுள்ளது திகைப்பாக உள்ளது.
உண்மை மறைத்து விமர்சிக்கு போக்கு: திருமா வளவன் அறிக்கைக் கூறுவது, “பெற்றோரின்பிறந்ததேதி, பிறந்தஇடம்ஆகியவிவரங்களைச்சேகரிக்கச்சொல்லும்தேசியமக்கள்தொகைப்பதிவேடுநடவடிக்கையைமேற்கொள்ளமுடியாதுஎன்றுபாஜகவின்கூட்டணிக்கட்சிகளானஐக்கியஜனதாதளம்மற்றும்பிஜுஜனதாதளம்ஆகியவைதெரிவித்துள்ளநிலையில்அதனால்எந்தபாதிப்பும்இல்லை, அதைநாங்கள்நடைமுறைப்படுத்துவோம்என்றுஇங்கேஉள்ளஅதிமுகஅரசுகூறிவருகிறது. குடியுரிமைமசோதாவுக்குஆதரவாகவாக்களித்துஅதைசட்டமாகநிறைவேற்றிஇன்றுஇந்தியாமுழுவதும்அமைதியற்றசூழல்நிலவுவதற்குவழிவகுத்தஅதிமுக, தமிழ்நாட்டைஉத்தரப்பிரதேசத்தைப்போலவன்முறைபூமியாகமாற்றுவதற்குதிட்டமிட்டுசெயல்பட்டுவருகிறது. அமைதியானஅறவழிப்போராட்டங்களைக்காவல்துறையைவைத்துஒடுக்குவதற்குமுயல்கிறது. அதன்ஒருவெளிப்பாடுதான்நேற்றுநடந்தசம்பவம். இதைஜனநாயகத்தின்மீதுநம்பிக்கைகொண்டவர்கள்அனுமதிக்கமுடியாது”.
[1] The protesters claimed that the police entered the area in large numbers and started beating the youths who had been organising protests against the CAA in the city. In the melee women and children were beaten. Jannathul Pradesh, one of the women injured in the police violence said: “I told them [the police] not to beat us and the children. We were very peaceful and disciplined. But they were inhuman and resorted to indiscriminate beatings. Many women suffered injuries. We got treated in local hospitals here.”
[2] A number of women Frontline spoke to on Saturday said that men outnumbered women in the police force that arrived there. “It was to terrorise the people, especially women, to discourage them from joining such protests in future. We were manhandled and beaten. The State wants to serve a warning to us—not to come out of our houses to defend our rights,” said Jannathul. Many women alleged that they were beaten inside the police vans by policemen and wanted the government to take action against the erring police personnel who unleashed violence against them.
[3] Police claimed that four of their personnel—a woman joint commissioner, two women constables and a sub-inspector—were injured in stonepelting by the protesters.
[4] Deccan Chronicle, Washermanpet violence triggers protests in Tamil Nadu, DECCAN CHRONICLE / PTI, Published: Feb 15, 2020, 6:21 pm IST; UpdatedFeb 15, 2020, 6:33 pm IST
[5] ஏசியா.நெட்.நியூஸ், இஸ்லாமியரைசாகடித்தவர்கள்மீதுகொலைவழக்குப்போடுங்க… கொந்தளிக்கும்திருமாவளவன்..!, By Thiraviaraj RM, Tamil Nadu, First Published 15, Feb 2020, 3:35 PM IST; Last Updated 3:35 PM IST.
அண்மைய பின்னூட்டங்கள்