Archive for the ‘இட ஒதுக்கீடு’ category
மார்ச் 10, 2014
அல்லாவின் புத்திரர்கள் எல்லோருமே சமம் என்றால் காபிர்களிடம் கெஞ்சி இடவொதிக்கீடு கேட்டுப் பெறுவதேன், ஓட்டுகளுக்காக பேரம் பேசுவதேன் (2)?
முஸ்லிம்களுக்காக நாத்திக கரு மற்றும் ஆத்திக ஜெயா காபிகளின் நாடகங்கள்: இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை உடனே நிறைவேற்றாமல், அதை தள்ளிப்போடும்விதமாக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை அனுப்பி உள்ளதாகவும், தமிழக அரசு இந்த விஷயத்தில் இஸ்லாமியர்களை ஏமாற்றுவதாகவும் கருணாநிதி கூறியுள்ளார்[1]. அதாவது நாத்திக கருவான, காபிர் மோமின்களுக்காக இவ்வாறு பரிந்து பேசினாராம். ‘முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது, தி.மு.க., தான்’ என, கருணாநிதி கூறியதற்கு, நாகர்கோவில், பிரசாரத்தில் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, ”கருணாநிதியின் பேச்சை, இன்னமும் கேட்டு ஏமாறுவதற்கு, தமிழக மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல,” என்றும் தெரிவித்தார்[2]. அதாவது ஆத்திக ஜெயா காபிர், மோமின்களுக்காக இவ்வாறு பரிந்து பேசினாராம்.
காபிர்களின் வாதங்களும், மோமின்களின் மௌனமும்: ‘முஸ்லிம்களுக்கு கன்னியாகுமரி அ.தி.மு.க., வேட்பாளர், ஜான் தங்கத்தை ஆதரித்து, நாகர்கோவில், பிரசார பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா, பேசியதாவது: சிறுபான்மையினருக்கு ஏராளமான நன்மைகள் செய்யப்பட்டு வருகின்றன. உலமாக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது மட்டுமன்றி அவர்களின் ஓய்வூதியத்தையும் உயர்த்தி உள்ளோம்[3]. முஸ்லிம்களுக்கு, இட ஒதுக்கீடு அளித்தது, தி.மு.க., தான் என, கருணாநிதி கூறி உள்ளார். 2006ல், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை திருத்தி அமைத்து, அதில் சமூக மற்றும் கல்வியில், பின் தங்கியுள்ளதை அடிப்படையாக வைத்து, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு, இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து, ஆணையம் பரிந்துரை செய்ய வேண்டும் என்ற அம்சத்தை, முதன் முதலாக சேர்த்ததே, அ.தி.மு.க., அரசு தான்[4]. இதுதான் முஸ்லிம்கள் இட ஒதுக்கீட்டிற்கு, அடித்தளமாக, வித்தாக அமைந்தது. கருணாநிதி, தன் கேள்வி-பதில் அறிக்கையில், ‘இட ஒதுக்கீடு சதவீதத்தை, அதிகப்படுத்த வேண்டும் என, முஸ்லிம்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதைப்பற்றி உண்மையிலே அக்கறை இருந்தால், அந்த கோப்பினை, உடனே வரவழைத்து, ஆணை பிறப்பித்திருக்கலாம்’ எனக் கூறியிருக்கிறார். இப்படித்தான், அவர் ஆணை பிறப்பித்தாரா? நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில், திருத்தி அமைக்கப்பட்ட, மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட, ஆய்வு எல்லையில், அ.தி.மு.க., அரசு, 2006ல் தெரிவித்த, இட ஒதுக்கீடு குறித்த ஷரத்தை, கருணாநிதி, ஏன் வார்த்தை மாற்றாமல் சேர்த்தார்? தி.மு.க., 2006ல் ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன், கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டதை போல, உடனே அதற்குரிய சட்டத்தை இயற்ற வேண்டியதுதானே? அதை ஏன் செய்யவில்லை? எதற்காக, மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையை, அவர் கேட்டார்?
எந்த இட ஒதுக்கீடு குறித்தும், எந்த அரசும், தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது: ஏனெனில், சட்டப்படி, அவ்வாறு தான் செய்ய முடியும். மண்டல் கமிஷன் வழக்கில், 1990ல், சுப்ரீம் கோர்ட் வழங்கிய, தீர்ப்பின் அடிப்படையில், எந்த இட ஒதுக்கீடு குறித்தும், எந்த அரசும், தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரை பெற்ற பிறகே, அதை நடைமுறைப்படுத்த முடியும்.அதே அடிப்படையில், தற்போது, இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற, முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கை, மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா பேசினார்[5].
முஸ்லிம்களுக்குள் சண்டை ஏன்?: இதற்குள் “பேஸ்புக்கில்” ஒரு முஸ்லிம், எப்படி முஸ்லிம்கள் அளிக்கப்பட்டுள்ள தொகுதிகளில் வெற்றிப் பெறவேண்டும் என்று விளக்கத்தை பதிவு செய்துள்ளார். அவர் கொடுத்துள்ளதாவது, “நமக்குள் எந்த பகையும் போட்டியும் இல்லாமல் பல இடங்களில் முஸ்லிம் வேட்பாளர்கள் களம் இறங்குகிறார்கள் ..அல்ஹம்துலில்லஹ் …ஆனால் இவர்களை வீழ்த்துவதற்கு பாஜகவை விட வேகமாக செயல்படும் ஒரு ஜமாஅத் இருப்பதை நினைத்து மனது கவலையளிக்கிறது ….முஸ்லிம்களுக்கு ஒதுக்கப் பட்ட தொகுதியில் நம் சமுதாய வேட்பாளர்களை நிறுத்தி ஓட்டுகளை பிரித்து விடக் கூடாது! அவர்களின் வெற்றிக்கு நாம் எந்த வகையிலும் முட்டுக்கட்டைகளாக இருந்து விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்த சோசியல் டொமக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா எங்கே? அமைப்புகள் வேறாக இருந்தாலும் தமிழ்நாட்டில் இருந்து முஸ்லிம் சமுதாயத்தில் சார்பாக ஓர் குரல் இந்திய பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்று தாம் போட்டியிட இருந்த தொகுதியை விட்டுக் கொடுத்த மனிதநேய மக்கள் கட்சி எங்கே? வேலூர் தொகுதியில் முஸ்லிம் லீக் போட்டியிடுவதால்! சோசியல் டொமக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா போட்டியில் இருந்து விலகிக் கொண்டது! இராமநாதபுரம் தொகுதியில் சோசியல் டொமக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா போட்டியிடுவதால் மனித நேய மக்கள் கட்சி விட்டுக் கொடுத்தது குறிப்பிடதக்கது!
இடஒதுக்கீடு கொடுத்தால் மட்டுமே அ.தி.மு.க – விற்க்கு ஓட்டு இல்லையே அ.தி.மு.க–விற்க்கு வேட்டுவைப்போம்: இட ஒதுக்கீடு கொடுத்தால் மட்டுமே அ.தி.மு.க -விற்க்கு ஓட்டு இல்லையே அ.தி.மு.க-விற்க்கு வேட்டு வைப்போம் என்று பகீரங்க அறைக் கூவல் விடுத்த (இடஒதுக்கீடு கொடுக்காத நிலையில் அ.தி.மு.க-விற்க்கு தவ்ஹீத் ஜமாத் ஆதரவு கொடுத்துள்ளது) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எங்கே?? சமுதாய மக்களே உங்கள் கற்ப்பனைக்கே விட்டு விடுகிறேன்! மதிப்பிற்குரிய சகோதரர் பிஜெ அவர்கள் தான் செய்வது விதண்டவாத அரசியல் தான் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்[6]. இந்த சுயநல முடிவால் வரவிருக்கும் தேர்தலின் மூலம் 3-4 முஸ்லிம் MPகளின் பிரதிநிதித்துவம் கூட பாதிக்கப்படும் நிலை தானேவரும் இதையாவது கருத்தில் கொண்டீர்களா? உதாரனத்திற்க்கு மயிலாடுதுறையில் காங்கிரஸ் பிஜேபி எல்லாம் ஒரு நியாயமான அளவில் ஓட்டை பிரிக்கும் அங்கே ஒரு தனி சக்தியா இருக்கும் முஸ்லீம்களின் ஓட்டினாலும் திமுகவின் ஓட்டினாலும் வெற்றி பெற இருக்கும் நம் முஸ்லீம் பிரதிநிதி
முஸ்லிம்கள் ஓட்டு சிதறக் கூடாது: உங்கள் சொல்லை வேதவாக்காக கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தின் சிதறும் ஓட்டால் தோல்வியடைய வேண்டும் என்பது தான் உங்கள் விருப்பமா? இதை நிலை தான் வேலூர், பாண்டிச்சேரி மத்திய சென்னையிலும் (முஸ்லிம் நின்றால்) ஏற்பட வேண்டுமா? மொத்தத்தில் ஒரு முஸ்லிம் கூட வெற்றி பெறாமல் போக தான் இந்த தான்தோன்றி தனமான முடிவு … ஆனால் இன்றைய முடிவு யாருக்கும் உதவாது மாறாக நம்மை நாம் தான் காட்டிகொடுக்கும் வேலையை செய்கிறோம் என்பதை வருத்ததுடன் உங்களின் நலம் விரும்பு ஆயிரக்கனகானவர்களில் ஒருவராக சொல்லி கொள்ள விரும்புகிறோம். மமக எந்த நிலைப்பாடு எடுத்தாலும் ,சமுதாய நன்மையைப்பற்றி சிந்திக்காமல் அதற்கு நேரெதிரான நிலைப்பாடு எடுக்கவேண்டும் என்பதற்காகவே அதிமுகவை ஆதரித்துள்ளார். வரும் செவ்வாய் அன்று அவசர மாநில செயற்குழுவில் த.த.ஜ முடிவில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கிறோம். இன்ஷா அல்லாஹ்[7], என்று முடிக்கப்பட்டுள்ளது. நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சி[8], 1. வடசென்னை தொகுதியில் நிஜாம் முகைதீன், 2. திருநெல்வேலி தொகுதியில் நெல்லை முபாரக், 3. ராமநாதபுரம் தொகுதியில் நூர் ஜியாவுதீன், போட்டியிடுகின்றனர்[9]. இந்துக்களுக்கு, இந்த புத்தி வருமா?
முஸ்லிம்களில் படிப்பறிவு இல்லாமல் இருக்கிறார்கள் என்றால், நிச்சயமாக அப்பிரச்சினை தீர்க்க வேண்டியதாக உள்ளது. இக்காலத்தில், அவ்வாறு குறிப்பிட்ட முஸ்ம்களினால் படிக்க முடியவில்லை என்றால், அது இந்துக்களைப் போன்ற ஏழ்மை என்றாக இருந்தால், பொருளாதார ரீதியில், எல்லோருக்கும் கல்வி கொடுக்கப் படவேண்டும். ஆனால், அதில் பொதுவான கல்விமுறை விடுத்து, மதரீதியில் கல்வி அளிப்போம் என்றால், அங்கு பிரச்சினை வருகிறது. இக்காலத்தில், ஆங்கிலத்தில் படிப்பது அல்லது குறிப்பிட்ட தொழிலுக்காக வேலைவாய்ப்புடன் கூடிய படிப்பைப் படிப்பது என்ற போக்கு உள்ளது. அந்த வகையில் எல்லோரும் படிப்பதை யாரும் தடுக்க முடியாது. பிரச்சினை இவ்வாறாக இருந்தால், அரசு அதனை சரிசெய்தாக வேண்டும்.
வேதபிரகாஷ்
10-03-2014
[1] தினமணி, முஸ்லிம்களுக்கானஇடஒதுக்கீடு: கருணாநிதிபுகாருக்குஜெயலலிதாபதில், By dn, நாகர்கோவில், First Published : 10 March 2014 12:50 AM IST
[2] தினமலர், மக்கள்ஏமாளிகள்அல்ல: கருணாநிதிக்குஜெ., பதில், சென்னை, மார்ச்.10, 2014.
பிரிவுகள்: அத்தாட்சி, அமைதி, அமைதி என்றால் இஸ்லாமா, அஹமதியா, அஹம்மதியா, இட ஒதுக்கீடு, கடவுள், கூட்டணி, சட்டமீறல், சட்டம், சட்டம் மீறல், சண்டை, சரீயத், சரீயத் சட்டம், சியாசத், செக்யூலரிஸ ஜீவி, செக்யூலரிஸ வித்வான்கள், செக்யூலார் அரசாங்கம், தேசியவாதி, புனிதப் போர்
Tags: இட ஒதுக்கீடு, இடவொதிக்கீடு, சதவீதம், சாதி, சுன்னி, ஜாதி, தர்ஜி, போஹ்ரா, லெப்பை, ஷியா
Comments: 9 பின்னூட்டங்கள்
மார்ச் 18, 2013
குல்லா போட்டு கஞ்சி குடித்த காபிர்களை கழட்டி விட்டாலும், காலைப் பிடித்து கெஞ்சும் முல்லா முலாயம்!
முஸ்லீகளுக்காக நான் என்னவேண்டுமானாலும் செய்வேன்: “முதலில் முஸ்லீம்களின் நலன் தான், பிறகு தான் அரசாட்சி, என்னவேண்டுமானாலும் நடக்கட்டும், நான் முஸ்லீம்களை ஏமாற்றமாட்டேன். முஸ்லீம்கள் ஆசைகளுக்காக எங்களுடைய அரசாங்கத்தையே தியாகம் செய்யவும் தயாராக உள்ளோம்[1]………..எனது சபையில் 11 முஸ்லீம் மந்திரிகள் இருக்கிறார்கள். அரசு முதன்மை செயலாளரே முஸ்லீம் தான் (Javed Usmani)”, என்று முல்லா முலாயம் சிங், ஜமைத் உலாமா ஹிந்த் [Ulema-e-Hind] ஏற்பாடு செய்திருந்த நிகழ்சியில் அடுக்கிக் கொண்டே போனார். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு, வழக்குகள் நடைப்பெற்று வரும் நிலையில் சிறைலிருக்கும் கணிசமான முஸ்லீம் கைதிகளையும் சமீபத்தில் விடுவிக்க முஸ்லீம்கள் கேட்டுள்ளனர். அதற்கு எந்த அப்பாவி முஸ்லீமும் சிறையில் இருக்கமாட்டார்கள் என்று வாக்குறுதி அளித்துள்ளார்[2].
முல்லா முலாயம் பேசும் போது கலாட்டா செய்து கத்திய முஸ்லீம்கள்: முல்லா முலாயம் பேச ஆரம்பித்தபோது, வெளிப்படையாக, ராஜா பையாவிற்கு (Raghuraj Pratap Singh alias Raja Bhaiyya) எதிராக கோஷங்களை முஸ்லீம் இட்டனர், “அவனை பொறுப்பிலிருந்து விலக்கினால் மட்டும் போறாது, கைது செய்து சிறைல் போடு”, என்று கத்தினர். அதுமட்டுமல்லாது, முஸ்லீம்களுக்கு எதிரான அரசு ஒழிக என்றும் கோஷமிட்டனர். இவ்வளவும், முலாயம் பேசும் போது, இடை-இடையே நிகழ்ந்ததன. உலேமா-இ-ஹிந்த் ஆட்கள் அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டியதாகி விட்டது[3]. இறுதியில், ஜமைத் உலாமா ஹிந்தின் பெரிய தலைவரே வந்து அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டியதாகி விட்டது! ஆனால், முல்லா முலாயம் அதை லட்சியம் செய்யவில்லை. நிருபர்கள் கேட்டபோதும், விமர்சிக்கவில்லை[4]. அதாவது முஸ்லீம்கள் என்னத் திட்டினாலும், வசவு பாடினாலும், இந்த ஜென்மங்களுக்கு ரோஷம், மானம், சூடு, சொரணை எதுவும் வராது என்று மெய்ப்பித்திருக்கிறார். உபியில் முஸ்லீம்கள் 20% உள்ளனர்[5], அவர்கள் லோக்-சபா தேர்தலில் முக்கியமான ஓட்டுவங்கியாக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் ஆதரவு இல்லாமல் எந்த அரசியல் கட்சியும் வெல்லமுடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
“நாங்கள் எங்கள் சமூகத்திற்காக போரிடுகிறோம்”, என்ற முஸ்லீமும், காலில் விழும் யாதவும்: மௌலானா அர்ஷத் மதானி, ஜமைத் உலாமா ஹிந்த் இயக்கத்தின் தலைவர் பேசுகையில்[6], “முலாயத்திற்கு நாங்கள் நன்றி கூறுகிறாம்திருப்பினும் அவரது வார்த்தைகள் காரியங்களாக மாற பொறுத்திருந்து பார்ப்போம். நாங்கள் அரசியலுடன் எந்த சம்பதத்தையும் வைத்துக் கொள்ளவில்லை. நாங்கள் எங்கள் சமூகத்திற்காக போரிடுகிறோம்”, என்று தமக்கேயுரிய முஸ்லீம் பாணியில் கூறியுள்ளார்.
“முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை, அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது” – சொன்னது பேனி பிரசாத் வர்மா: காங்கிரஸ் அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது, உபி அரசியல் நிலை என்னாகும் என்று பார்க்க வேண்டியிருக்கிறது.
இதற்கிடையில் மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா, “முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை[7], அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது”, என்று பேசியிருக்கிறார்[8]. |
अक्सर अपने बयानों की वजह से चर्चा में बने रहने वाले केंद्रीय इस्पात मंत्री बेनी प्रसाद वर्मा ने एक बार फिर समाजवादी पार्टी प्रमुख मुलायम सिंह यादव को निशाने पर लिया है। इस बार सारी हदें पार करते हुए बेनी प्रसाद वर्मा ने मुलायम सिंह यादव को बहुत कुछ कह दिया। बेनी ने कहा, ‘मुलायम सिंह न सिर्फ गुंडा है, बल्कि उसके रिश्ते आतंकवादियों से हैं।’ |
बेनी प्रसाद वर्मा उत्तर प्रदेश के गोंडा में एक जनसभा को संबोधित कर रहे थे। तभी उन्होंने मुलायम सिंह के बारे में बोलना शुरू कर दिया। एक से एक तीखे शब्द इस्तेमाल करते हुए बेनी ने मुलायम पर जमकर भड़ास निकाली। बेनी ने कहा, ‘जितना मैं तुम्हारे बारे में जानता हूं कोई और नहीं जानता। कमिशन खाओ और अपने परिवार को भी खिलाओ, मगर बेनी प्रसाद वर्मा ऐसा नहीं करेगा। मुलायम सिंह! तुमने हमेशा विरोधियों को अपने दुश्मनों की तरह लिया है।’ इसके बाद बेनी कहा, ‘अपराध और बेईमानी तुम्हारा पेशा है। मुलायम सिंह प्रदेश के लिए शाप है।’ |
“என்னைவிட உன்னை அதிகமாகத் தெரிந்தவர் இருக்க மாட்டார்கள். நிறைய கமிஷன்வாங்கியிருக்கிறாய், உனது குடும்பத்திற்கு நன்றக சாப்பிடக் கொடுத்திருக்கிறாய். நான் அவ்வாறில்லை. பலமுறை விரோதிகளை துரோகிகளாக வைத்திருக்கிறாய். ” |
முலாயம் முஸ்லீம்களுடன் கொஞ்சுக் குலாவுவது, இவரை கோபமடைய செய்துள்ளதா அல்லது முல்லா முந்திவிட்டாரே என்று ஆதங்கம் படுகிறாரா? என்ன இருதாலும், சோனியா இருக்கிறாரே, அவர் பெரிய அளவில் பேரம் பேசி, முஸ்லீம்களை தாஜா செய்து வழிக்கிக் கொண்டு ச்வது விடுவார். “அடுத்த உபி முதலமைச்சர் ஒரு முஸ்லீம்தான்” என்று யாராவது அறிவித்தால் போதும், உபி கதை மட்டுமல்ல, இந்தியாவின் கதையும் 2014ல் மாறிவிடும்.
© வேதபிரகாஷ்
18-03-2013
[3] Mulayam was in the midst of his speech when a group of Jamiat workers started raising slogans asking for former Cabinet Minister Raghuraj Pratap Singh alias Raja Bhaiyya’s arrest in the recent murder of a Deputy SP Zia-ul-Haq. The slain police official’s wife has named Raja as the main accused in the murder case. Senior Jamiat leaders faced a tough time trying to control the agitated workers. They were demanding that Raja Bhaiyya should be arrested immediately, and that dropping him from the ministry was not enough.
பிரிவுகள்: 2014, ஃபத்வா, அடி, அடி உதை, அடிமை, அடையாளம், அரசு நிதி, அல்லா, அழுக்கு, அவதூறு, அவமதிக்கும் இஸ்லாம், ஆஸம் கான், இட ஒதுக்கீடு, இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இமாம், இஸ்லாமிய வங்கி, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உபி, ஓட்டு, ஓட்டுவங்கி, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காங்கிரசுக்கு எச்சரிக்கை, காங்கிரஸ், குண்டா, குல்லா, குஷித் ஆலம் கான், கூட்டணி, கூட்டணி சித்தாந்தம், கூட்டணி தர்மம், சஞ்சய், சட்டசபை, சமரசப்பேச்சு, சிறுபான்மையினர், சிறுபான்மையினர் நலத்துறை, சுன்னி சட்டம், சுன்னி முஸ்லீம் சட்டம், சுன்னி வக்ஃப் போர்ட், சுன்னி வாரியம், சுன்னி-ஷியா, ஜமாத், ஜமாயத்-உல்-உலமா, ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, தலித், தலித் முஸ்லீம், தேர்தல், தொப்பி, தொழுகை, நேரு, மனித நேயம், மறைப்பு, முல்லாயம், மேனகா, யாதவ், ராகுல்
Tags: ஓட்டு, ஓட்டு வங்கி, குண்டா, கூட்டணி, கொலை, கொலை வழக்கு, கொலை வெறியாட்டம், சஞ்சய், சிங், சோனியா, ஜாவித் உஸ்மானி, தியாகம், தில்லி, தில்லி இமாம், தேர்தல், நேரு, புகாரி, பேனி, பேனி பிரசாத், பையா, முல்லா, முல்லாயம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டுவங்கி, மேனகா, மௌலானா அஹமது ஷா புகாரி, யாதவ், ராகுல், ராஜா பையா, ராஜினாமா, ராஹுல்
Comments: 6 பின்னூட்டங்கள்
ஓகஸ்ட் 12, 2012
மும்பை முஸ்லீம் ஆர்பாட்டம், ரகளை, கலவரம், தீவைப்பு – எதற்கு, பின்னணி என்ன?

நேரு நகரிலிருந்து வந்த கும்பல்[1]: ஒரு குறிப்பிட்ட கூட்டம் நேர் நகரிலிருந்து[2] வந்தது. ஆனால் அது மைதானத்திற்குள் செல்ல முடியவில்லை. ஏனெனில், 15,000 பேர் தான் கலந்து கொள்வார்கள் என்று ராஸா அகடெமி சொல்லி அனுமதி வாங்கியிருந்தது. ஆனால், 40,000ற்கும் மேலாக கூட்டம் வந்துள்ளது. அதெப்படி என்று கேட்டால் எங்களுக்கே தெரியாது என்கிறார்கள். ஆகவே, அந்த நேரு நகர் கும்பல் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைய முடிந்தது. அப்போழுது தான் பிரச்சினை ஆரம்பித்துள்ளது என்று குற்றப்பிரிவு போலீஸார் ஆய்வு மேற்கொண்ட பிறகு விவரங்களை வெளியிட்டனர். அந்த நேரு நகர் கும்பல் எப்படி, யாரால் ஏன் அழைத்துவரப் பட்டது?

அமைப்பாளர்கள் கலவரத்தைக் கட்டுப்படுத்தது ஏன்?: ராஸா அகடெமி முஸ்லீம் கலாச்சாரம் முதலிவற்றை ஊக்குவிக்கிறது என்றுள்ளது. அந்நிலையில் ராஸா அகடெமி ( Raza Academy) சார்பில் மயன்மார் (பர்மா) மற்றும் அசாமில் முஸ்லீம்களால் மும்பையில் ஆஜாத் மைதானத்தில் ஆர்பாட்டத்தை ஏன் நடத்த முடிவு செய்தது என்று தெரியவில்லை. இப்படி ரகளை, கலவரம், தீ வைப்பில் முடிந்து இரண்டு பேர் கொல்லப்படுவர்[3] என்றிருந்தால், அமைதியாக நடத்தமுடியாது என்று தெரிந்திருந்தால் தவிர்த்திருக்கலாம் அல்லது அதிகக் கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டாம். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை சன்னி ஜமைதுல் உல்மா மற்றும் ஜமாதே-இ-முஸ்தபா (Sunni Jamaitul Ulma and Jamate Raza-e-Mustafa) போன்ற இஸ்லாமிய அமைப்புகளும் ஆதரித்துள்ளன. அவர்களைச் சேர்ந்தவர்களும் கலவரத்தைக் கட்டுப்படுத்தியிருக்கலாம்.

கலவரத்தைத் தூண்டிய காரணங்கள் என்ன?: மைதானத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கூடினர். அமைப்புகளின் தலைவர்கள் பேச ஆரம்பித்தனர்[4]. முதலில் சாதாரணமாகப் பேச ஆரம்பித்தவர்கள், பிறகு உணர்ச்சிப் போங்க, தூண்டும் விதத்தில் பேச ஆரம்பித்தனர். இந்தியாவில் முஸ்லீம்கள் கொல்லப்படுகின்றனர், அரசு அதார்குத் துணை போகிறது என்று ஆரம்பித்தனர்.
- காங்கிரஸுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் முஸ்லீம்களுக்காக ஒன்றும் செய்யவில்லை.
- குறிப்பாக அசாம் மற்றும் பர்மா முஸ்லீம்களை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- மன்மோஹன் சிங் மற்றும் சோனியா காந்தி முதலியோருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
- பர்மாவிலிருந்து வந்த ஒரு தம்பதியர், தங்களது குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர்.
- அவர்கள் தமது கைகளில் பிடித்திருந்த பதாகைகளில் எங்களைக் கொல்லவேண்டாம் என்ற வாசகங்கள் இருந்தன.
- அதனை காட்டியபோது, கூச்சல் கோஷம் கிளம்பியது.

பிரார்த்தனையை முடித்துக் கொள்ளச் சொன்ன மர்மம் என்ன?: அதுமட்டுமல்லாது, மேடையில் பேச அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டது. சிலரை அனுமதிக்க வேண்டாம் என்றும் கூறப்பட்டது. அப்பொழுது தள்ளுமுள்ளு ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. இந்த பிரச்சினை என்ன, முஸ்லீம்களுக்குள் வெஏர்பாடு என்ன, ஏனிப்படி வெளிப்படையாக மோதிக் கொண்டஸ்ரீகள் என்ற விவரங்கள் தெரியவில்லை. மேடையிலேயே இத்தகைய ரகளை ஏற்பட்டு, கூச்சல்-குழப்பங்களில் நிலவரம் இருந்ததால், மௌலானா பொயின் அஸ்ரப் காதரி ஆரம்பித்த பிரார்த்தனையை முடித்துக் கொள்ள அமைப்பாளர்கள் சொல்லவேண்டியதாயிற்று[5]. உண்மையான முஸ்லீம்கள் இப்படி நடந்து கொள்வார்களா, பிரார்த்தனைக்குக் கூட இடைஞ்சல் செய்வார்களா அல்லது பாதியிலேயே முடித்துக் கொள்ளுங்கள் என்று கூறுவார்களா என்று தெரியவில்லை. ஆனால், ஒருவேளை அவர்களுக்கு கலவரம் நடக்கும் என்று தெரியும் போலிருக்கிறது!

சோனியா மெய்னோ எதிர்ப்பு ஏன்?: இந்தியாவில் சோனியா மெய்னோ அரசு முஸ்லீம்களுக்கு தாராளமாகவே சலுகைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறது[6]. அசாமிலேயே கோடிகளைக் கொட்டியுள்ளது. அந்நிலையில் காங்கிரஸ்காரர்களுக்கு எதிராக ஏன் கோஷம் என்று தெரியவில்லை. ஆனால், அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், திடீரென்று போலீஸார் மற்றும் ஊடகக்காரர்களின் மீது கல்லெறிய ஆரம்பித்தனர். அடிபட்ட-காயமடைந்த 54 பேர்களில் 45 பேர் போலீஸ்காரர்கள் எனும்போது, அவர்கள் குறிப்பாக தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதேபோல ஊடகக்காரர்களும் தாக்கப்பட்டிருக்கிறார்கள். டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையாளர் மற்றும் கேமராமேன் தாக்கப்பட்டு, அவர்களின் கேமரா-வீடியோக்கள் உடைக்கப் பட்டுள்ளன[7]. “தி ஹிந்து” பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படாத ரகசியம் என்னவென்று தெரியவில்லை.

கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா?: ஆஜாத் மைதானத்தில் மட்டும் கூட அனுமதி பெற்ற முஸ்லீம்களில், திடீரென்று தெருக்களில் வந்து ரகளை செய்ய ஆரம்பித்தார்கள். வெளியே நின்று கொண்டிருந்த டிவி-செனல்களின் வண்டிகள், போலீஸ் வேன்கள் முதலியவற்றை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். பிறகு CST ரெயில்வே டெர்மினலுக்குள் (CST Railway terminus) நுழைந்து கண்ணாடி ஜன்னல்களை உடைக்க ஆரம்பித்தனர்[8]. மூன்று மணிக்கு ஆரம்பித்த கூட்டம், 3.30ற்கு கலவரமாக மாறியது. எதிப்பு போராட்டம் என்று ஆரம்பித்த முஸ்லீம்கள் எப்படி திடீரென்று கலவரத்தில் இறங்கினார்கள் என்று தெரியவில்லை. தெருக்களின் வந்து ரகளை செய்து வண்டிகளை அடித்து நொறுக்கியதில் 10 பெஸ்ட் பேரூந்துகள், 6 கார்கள், 20ற்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் முதலியன கொளுத்தப்பட்டு சேதமடைந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், புறவழி ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது[9]. மும்பை நகரத்தில் பிரதானமான ஒரு இடத்தில் இப்படி, திடீரென்று கலவரத்தில் ஈடுபட்டுள்ளது, போலீஸாருக்கே பிரமிப்பாக இருக்கிறது.

போலீஸார் மீது தாக்குதல் ஏன்?: கலவரத்தை அடக்க தாமதமாகத்தான் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதாவது முதலில் அதிகமாக வந்த கூட்டத்தை சமாதனப்படுத்திக் கட்டுப்படுத்த ஆரம்பித்தனர். பிறகு உள்ளே நுழைய முடியாமல் மற்றும் உள்ளேயிருந்து வெளியே வந்து கொண்டிருந்தவர்களை முறைப்படுத்தி அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால், திடீரென்று கற்கள் அவர்கள் மீது வீசப்பட்டன. அதுமட்டுமல்லாது, சிலர் நேரிடையாகவே வந்து போலீஸார் மீது கற்களை சரமாரியாக வீசித் தாக்கினர். அதற்குள் தேவையில்லாமல், ஒரு வேன் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதற்குப் பிறகே ஆகாசத்தில் சுட்டு, பிறகு லத்தி ஜார்ஜ் செய்துள்ளனர்[10]. முதலில் (நேற்று சனிக்கிழமை 11-08-2012) அவர்களின் அடையாளம் தெரியவில்லை என்று சொல்லப்பட்டது. இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகச் சொல்லப் படுகிறது[11]. அவர்கள் முஹம்மது உமர் (பந்த்ரா) மற்றும் அட்லப் சேக் (குர்லா) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். (Two persons, 22-year-old Mohammad Umar and 18-year-old Altaf Sheikh (one from Bandra and the other from Kurla), died ). 16 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் செயின்ட் ஜார்ஜ், ஜி.எச். மற்றும் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு எடுத்துச் செல்லப் பட்டுள்ளனர்[12]. இப்பொழுது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று போலீஸ் அதிகாரிகள் கூறுகிறார்கள். முஹம்மது சயீத் என்ற அகடெமியின் பொது செயலாளர் (Mohammed Saeed, General Secretary of the academy) திடீரென்று தமக்கும் அந்த கலவரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிக்கை விட்டிருக்கிறார்[13]. அதாவது தங்கள் சமூகத்தினரையே கட்டுப்படுத்த முடியவில்லை அல்லது தெரிந்தோ தெரியாமலோ அத்தகைய கலவரம் ஏற்பட துணைபோயிருக்கிறார்கள்.

ஊடகக்காரர்கள் தாக்கப் பட்டதேன்?: பத்திரிக்கை-செய்தியாளர்கள் மற்றும் டிவி-செனல் ஊடகக்காரகள் நின்று கொண்டு செய்திகளை சேகரித்து மற்றும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் போது, சிலர் அவர்களைப் பார்த்து கமெண்ட் அடிக்க ஆரம்பித்துள்ளனர். லண்டனுக்குச் சென்று ஒலிம்பிக்ஸ் செய்திகளை போடத்தெரிகிறது ஆனால் அசாம், பர்மாவிற்கு செல்ல முடியவில்லையாம், அமெரிக்காவிற்கு சென்று சீக்கியர்கள் கொல்லப்பட்டதைப் பற்றி செய்திகளை போடத்தெரிகிறது ஆனால் அசாம், பர்மாவிற்கு செல்ல முடியவில்லையாம், என்று நக்கலாக பேசி, அவர்கள் முஸ்லீம்களுக்கு எதிரி என்று கோஷமிட்டுள்ளனர். பெயர் சொல்ல மறுத்த எதிர்ப்பாளர் “நாங்கள் ஏதாவது (தமாஷா) செய்ய வந்து விட்டால் அதை (தமாஷாக) போடுவீர்கள் போல”, என்று நக்கலடித்தார்[14]. அதுமட்டுமல்லாமல், “அவர்களை வெளியே அனுப்பு” என்றும் கோஷமிட்டுள்ளனர். இதனால், ஊடகக்காரர்கள் வெளியேற ஆரம்பித்தனர்.

“தி ஹிந்து” கரிசனம் மிக்க செய்திகள்: “தி ஹிந்து” இதைப் பற்றி விசேஷமாக செய்திகளைக் கொடுத்துள்ளது[15]. அது ஏற்கெனெவே முஸ்லீம்களை (பங்களாதேச ஊடுவல்) ஆதரித்து பல செய்த்களை வெளியிட்டுள்ளது[16]. “தி ஹிந்து” கட்டுரைகளை உன்னிப்பாகப் படித்துப் பார்த்தால், இந்திய சட்டங்களை திரித்து, வளைத்து, எப்படி “கருத்துவாக்கம்” என்ற பிரச்சார ரீதியில், பொய்களை உண்மையாக்கப் பார்க்கிறது என்பதனைத் தெரிந்து கொள்ளலாம். அதாவது, பங்ளாதேச முஸ்லீம்களால் இந்தியர்கள் எப்படி எல்லாவிதங்களிலும் பாதிக்கப்படுகிறர்கள் என்பதை மறைத்து, அந்நியர்களுக்காக வக்காலத்து வாங்கும் முறையில் அவை இருக்கின்றன. மதவாதத்தை வளர்த்துவிட்டு, இப்பொழுது மனிதத்தன்மையுடன் இப்பிரச்சினையை அணுகவேண்டும் என்று ஒரு கட்டுரை[17]. மனிதத்தன்மையிருந்திருந்தால் முஸ்லீம்கள் அவ்வாறு ஊடுருவி வந்திருப்பார்களா? இந்தியர்களை பாதித்திருப்பார்களா? இந்துக்களைக் கொன்றிருப்பார்களா? அவர்களது நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பார்களா? போடோ இந்தியர்கள் ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டுவிட்டால் போல ஒரு கட்டுரை[18]. போடோ கவுன்சிலை கலைத்துவிட வேண்டும் என்று சூசகமாகத் தெரிவிக்கும் ஒரு கட்டுரை[19]. மதரீதியில் முஸ்லீம்களை ஊடுருவ வைத்து விட்டு, மதரீதியில் பிரிக்க முடியாது என்று அரசே உச்சநீதி மன்றத்தில் தாக்குதல் செய்கிறது[20]. பாகிஸ்தான் ஊடகங்கள் அமுக்கி வாசித்துள்ளன[21]. பிரஷாந்த் சவந்த் என்ற ஊடகக்காரரை மிரட்டியதுடன் அவருடைய கேமராவை உடைத்துள்ளனர். பிரஸ் கிளப் கட்டிடத்திற்குள் சென்று வெளிவந்தபோது, “அவனையும் சேர்ந்து எரிடா” என்று கும்பல் கூச்சலிட்டது[22].

முஸ்லீம்கள் கலவரங்களை ஒரு பேரத்திற்காக உபயோகப்படுத்துகிறார்களா?: முஸ்லீம் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள் என்று பலர், முஸ்லீம்கள் ஏன் கலவரங்களில் ஈடுபடுகின்றனர் என்று ஆராய்ச்சி செய்து நிறையவே எழுதியுள்ளனர். ரபிக் ஜக்காரியா, அஸ்கர் அலி இஞ்சினியர், இம்தியாஸ் அஹமத், அப்த் அல்லா அஹம்த் நயீம்[23], இக்பால் அஹ்மத் என்று பலர் முஸ்லீம் மனங்களை ஆழ்ந்து நோக்கி, எப்படி “இஸ்லாம் ஆபத்தில் உள்ளது”, “முஸ்லீம்கள் ஆபத்தில் உள்ளனர்”, “அல்லாவின் பெயரால்……..” என்றெல்லாம் கூக்குரலிடும் போது, பொது கூட்டங்கள், ஊர்வலங்கள்-போராட்டங்கள் நடத்தும்போது, அமைதியான முஸ்லீம்கள் உந்துதல்களுக்குட்பட்டு, தூண்டப்பட்டு “அல்லாஹு அக்பர்” கோஷமிட்டு, கலவரத்தில் ஈடுபடுகிறார்கள் என்று எடுத்துக் காட்டுகின்றனர். இங்கும் அதேமாதிரியான முறை கையாளப்பட்டுள்ளது. ஒவைஸி அசாமிற்குச் சென்று, முஸ்லீம்களை மட்டும் கவனித்து, நிவாரணப்பணி என்ற போர்வையில் பொருட்களைக் கொடுத்து வருகிறார். பாராளுமன்றத்தில் 08-08-2012 அன்று ஆவேசமாகப் பேசுகிறார்[24].
ஆகஸ்ட் 8, 2012, அன்று பாராளுமன்றத்தில் பேசும்போது[25], “கடைசியாக நான் மத்திய அரசை எச்சரிக்கிறேன், இங்குள்ள மதிப்புக்குரிய அங்கத்தினர்களையும் இதுபற்றி எச்சரிக்கிறேன். சரியான குடியேற்ற முறைமை செய்யாவிட்டால், மூன்றாவது முறையாக தீவிவாதப்படுத்தப் பட்ட முஸ்லீம் இளைஞர்களின் அலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்”, என்று ஆவேசமாக, ஆக்ரோஷமாக கைகளை ஆட்டிக் கொண்டு அபாயகரமான எச்சரிக்கை விடுத்தார்! |
உடனே கூட்டம் கூட்டப்பட்டு, ஏற்பாடு செய்யப்பட்டு, 11-08-2012 கலவரம் நடக்கிறது. காங்கிரஸ் / காங்கிரஸ்காரர்கள் / சோனியா இந்த அளவிற்கு ஒத்துப் போகும்போதே, அவர்களை எதிர்த்து கோஷம் போடுகிறார்கள், கலவரம் நடத்துகிறார்கள் என்றால், இதற்கும் மேலாக, அவர்களுக்கு என்ன வேண்டும்?
[நேற்றையக் கட்டுரையின்[26] தொடர்ச்சி, விரிவாக்கம்]
© வேதபிரகாஷ்
12-08-2012
[2] Nehru Nagar, originally an area cordoned off for leprosy sufferers, is the only slum area in Vile Parle, Mumbai – a suburb near to the airport and train station. Now, eying on property appreciation, the builders have been constructing multi-storeyed flats offering to the slum dwellers. Thus, slum-dwellers becoming flat-owners, but creating new slums – a cycle that is perpetrated by the vested interested people. The builders, promoters and corporators have always been colluding with each other encouraging communal politics.
[4] At the protest meet, there was enough to raise passions. Many speakers spoke of teaching the Congress a lesson for not doing enough to save Muslims in Assam as others slammed prime minister Manmohan Singh and UPA chairperson Sonia Gandhi. A couple of men from Burmacarried small kids on their shoulders who held placards that said ‘Don’t kill us’.
[6] இதை பி.ஜே.பி போன்ற கட்சிகள் மட்டுமல்லாது, உள்ளூர் அசாம் கட்சிகளே எடுத்துக் காட்டியுள்ளன. உண்மையில், நிவாரண கூடாரங்களில் உள்ளவர்களை பாகுபடுத்திப் பார்த்து, உதவி செய்து வருவதே மதரீதியிலான சண்டை வர காரணமாகிறது. முஸ்லீம்கள் தெரிந்தும், போட்டிப் போட்டுக் கொண்டு முஸ்லீம்களுக்கு மட்டும் உதவி வருகிறார்கள். போடோ இனத்த்வர் என்று பேசும்போது, அதில் கூட முஸ்லீம்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பிரிந்து தனிக் கட்சி / இயக்கம் ஆரம்பித்து விட்டார்கள். இவர்கள் சட்டத்திற்கு புறம்பாக ஊடுருவ் வந்துள்ள முஸ்லீம்களுடன் சேர்ந்து கொண்டு, அதேபோல தனி மாகாணத்தைக் கேட்டு வருகிறார்கள். இங்குதான், பிரிவினைப் பிரச்சினை முஸ்லீம் என்ற ரீதியில் வருகிறது. மேலும் இவர்களுக்குத்தான் பாகிஸ்தான் உதவி வருகிறது.
[14] “Only when we do some tamasha [spectacle] do the media land up to cover,” said a protester who refused to give his name.
[22] Prashant Sawant, photographer with the daily Sakaal Times was on the fateful assignment.
“I, along with fellow photographers, started to shoot when the rally started. But we sensed something was wrong when a couple of persons remarked that the press was not supporting them,” Mr. Sawant told The Hindu. “We left the rally and went to the terrace of the Mumbai Marathi Patrakar Sangh adjoining the Maidan. However, some saw us and started throwing stones. We then went to the Press Club and came out again when the arson started. It was then that the mob started to assault me. They showered me with blows. My camera was broken. They were shouting ‘Isko bhi jala dalo’ [Set him on fire too]. I sustained injuries on the head, neck and face. The doctors have told me to do an MRI scan,” he said. “Provocative speeches against the media started from the stage itself,” said Ameya Kherade, another photographer. “The crowd was shouting ‘Media ko bhaga do’ [Chase away the media],” he added.
http://www.thehindu.com/news/national/article3754980.ece
பிரிவுகள்: ஃபத்வா, அசாம், அச்சம், அடி உதை, அடிப்படைவாதம், அடையாளம், அத்வானி, அரசாங்கத்தை மிரட்டல், அரசியல் விபச்சாரம், அரசு நிதி, அலி, அல்லா, அழுக்கு, இட ஒதுக்கீடு, இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியா, இந்தியாவின் வரைப்படம், இந்து-முஸ்லிம் உரையாடல், இந்துக்கள், இமாம், இஸ்லாம், உருது மொழி, உள்ளே நுழைவது, ஒவைஸி, ஓட்டு, ஓட்டுவங்கி, கலவரங்கள், கலவரம், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காங்கிரசுக்கு எச்சரிக்கை, காங்கிரஸ், கிழக்கு பாகிஸ்தான், குரூரம், குல்லா, கூட்டணி, சரீயத், சரீயத் சட்டம், சிட்டகாங், சுன்னி, சுன்னி சட்ட போர்ட், சுன்னி சட்டம், சுன்னி முஸ்லீம் சட்டம், சுன்னி வக்ஃப் போர்ட், சுன்னி வாரியம், சுன்னி-ஷியா, செக்யூலார் அரசாங்கம், ஜமாதே-இ-முஸ்தபா, ஜமாத், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், தடியடி, தடை, துப்பாக்கி, துப்பாக்கிச் சூடு, தூண்டு, தேச கொடி, தேச விரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், தேசிய புலனாய்வு இயக்குனர், பிஜேபி, மதவாதம், முஸ்லீம் சட்டம், முஸ்லீம் லீக், முஸ்லீம்தனம், முஹம்மது, வங்காள தேசம், வங்காள மொழி, ஷியா, SMS
Tags: ஃபத்வா, அசாம், அடிதடி, அவமதிக்கும் இஸ்லாம், ஆஜாத் மைதானம், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஊடகத் தீவிரவாதிகள், கலவரம், காஷ்மீரம், கௌஹாத்தி, சிறுபான்மையினர், சுன்னி, செக்யூலரிஸம், ஜிஹாத், தள்ளுமுள்ளு, பர்மா, பாகிஸ்தான், பிரார்த்தனை, போடோ, மியன்மார், மும்பை, முல்லா, முஸ்லீம்கள், மேடை, மௌலானால், Burma, fanaticism, foreign, fundamentalism, riot, SMs
Comments: 13 பின்னூட்டங்கள்
மார்ச் 15, 2011
முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (2)
திமுக-அதிமுக கட்சிகளுடன் கூட்டணி ஏன்? முஸ்லீம் லீக்குகள் அரசியல் ரீதியில் எத்தனை கட்சிகளாக பிரிந்து இருந்தாலும், பிரிதுள்ளது போல இருந்தாலும், காட்டிக் கொண்டாலும் அவர்களின் அரசியல் நாடகங்கள் வெளிப்படும் என்பதில் சந்தேகம் இல்லை[1]. எனவே அவர்கள் அத்தகைய நாடகங்களை அரங்கேற்றுவதில் வல்லவர்கள் என்பதனை மறுபடியும் நிரூபித்து விட்டார்கள். வருடாவருடம் கட்சி-கூட்டணி மாறிக் கொண்டேயிருப்பது என்ன சித்தாந்தம், அர்த்தம், தருமம் என்று அவர்களிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். மத ரீதியில் திமுக என்றாலும் அதிமுக என்றாலும் காஃபிர்கள் கட்சிதான். ஆக காஃபிர்களுடன் ஏன் கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள் என்பது ஆண்டவனுக்குத் தான் தெரியும் போலும்!
ஒன்று அரசியல் மற்றொன்று மதம்: முஸ்லீம்களுக்கு மதம் தான் முக்கியம், அதாவது இஸ்லாத்தை என்றைக்கும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஆனால், இப்படி அரசியலுக்காக, அவர்கள் நிலைமாறி போகும் போக்கு எதனைக் காட்டுகிறது? மதக்கொள்கைகளை நீர்த்து விடுகின்றனரா அல்லது சமரசம் செய்து கொள்கின்றனரா? இஸ்லாத்தில் அதற்கு இடம் உண்டா? காஃபிர்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு காஃபிர்களை ஒழித்துக் கட்டலாம் என்றால், அவ்வாறு கூட்டு வைத்துக் கொள்ளலாம் என்று உள்ளாதா என்ன? கருணாநிதி போன்றவர்களுக்கு செக்யூலரிஸம் என்று பேசினாலும், பி.ஜே.பியுடன் கூட்டு வைத்துக் கொண்டு நன்றாக சந்தோஷமாகத்தான் இருந்தனர். இதே போல மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் மதவாதக் கட்சிகளுடன் தாராளமாக கூட்டு வைத்துக் கொண்டு நாடகம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
மதக் கொள்கைகளை சமரசம் செய்து கொள்கிறார்களா, சித்தாந்த போலித்தனமா, என்ன? மக்களுக்கு ஒன்றுமே புரியாமல் இருக்கலாம். ஆக இத்தகைய கட்சிமாறி போக்கு, நிலையிலா அரசியல் தாக்கம், சித்தாந்த போலித்தனம் முதலியவை அவர்களின் பச்சோந்தித்தனத்தை மக்களை ஏமாற்றிவரும் போக்கை, ஏன் நாட்டிற்கு துரோகத்தை செய்யும் முறையினையும் வெளிப்படுத்துகிறது. ஏனெனில், நாட்டின் நலன் முக்கியம் என்றால், அதற்கு எதிராக கூட்டணி கட்சிகளின் கோரிக்கைக்களுக்கு ஒப்புக்கொடு அவ்வாறு தேர்தலில் கூட்டு சேரமாட்டார்கள். அரசியல் நிர்ணய சட்டத்தின் சரத்துகளை மீறும் கோரிக்கைகளை மறைமுகமாக செயல்படுத்த மாட்டார்கள். ஆனால், செய்வதை சொல்வோம், சொல்லியதை செய்வோம் என்று வசனம் பேசி, நாட்டை அப்படி சீரழித்து வரும் அரசியல் கட்சிகளை அடையாளங்கொள்ள வேண்டிய காலம் மக்களுக்கு வந்துள்ளது. ஏனெனில் இத்தகைய அரசிய நாடகங்கள், ஊழல் கோடிகளில் நடந்துள்ள நிலையில் நடக்கின்றன. முதலில் தியாகத்தை செய்து விட்டது போல அறிக்கை விட்டார்கள்.
எங்களால்தான் திமுக- காங்கிரஸ் கூட்டணி பிழைத்தது: முஸ்லீம் லீக்[2]: சென்னை, மார்ச்.9, 2011: நாங்கள் ஒரு இடத்தை விட்டுக்கொடுத்ததால்தான் திமுக-காங்கிரஸ் இடையிலான கூட்டணி முறியாமல் காப்பாற்றப்பட்டது என அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தெரிவித்துள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளிடையே கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டபோது, அக்கட்சிகளின் நலன்விரும்பிகளுடன் தங்கள் கட்சி தொடர்புகொண்டதாக முஸ்லீம் லீகின் தேசியத் தலைவர் இ. அகமது தெரிவித்தார். “தமிழகத்தில் உள்ள முஸ்லீம் லீக் சகாக்களுடன் ஆலோசித்து கருத்து வேறுபாடுகளைக் களைய என்னாலான முயற்சிகளைச் செய்தேன். தமிழக சகாக்களின் தாராளம் காரணமாக என்னால் அதைச் செய்ய முடிந்தது. இக்கட்டான நிலைமையும் முடிவுக்கு வந்தது என அகமது தில்லியில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். தேச நலன் கருதி மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கவும், வலுப்படுத்தவும் தனது கட்சி எப்போதும் முயற்சித்து வருவதாக…………..”, அகமது குறிப்பிட்டார். இப்பொழுது வேறு மாதிரி பேசுகிறார்கள்.
திமுக கூட்டணியில் இருந்தாலும் அதிமுகவை ஆதரிப்போம்! இப்படி அறிவித்தால் கருணாநிதி என்ன செய்வார் என்று பார்க்கிறார்களா? அல்லது பயந்து கொண்டு இன்னொரு தொகுதியைக் கொடுத்து விடுவார் என்று எதிர்பார்க்கிறார்களா? 3 தொகுதிகளைக் கொடுத்து பின்னர் அதிலும் ஒன்றை பிடுங்கிக் கொண்டதால் அதிருப்தி அடைந்துள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் ஒருபிரிவினர் காயிதே மில்லத் பேரனான தாவூத் மியா கான் தலைமையில் தனி அணியாகப் பிரிந்துள்ளனர். இவர்கள் அதிமுகவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர்[3]. இந்த நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும், தமிழ் மாநில தேசிய லீக் கட்சியும் கருணாநிதி முன்னிலையில் இணைந்தன[4].
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம் ஆனால் இரட்டை இலையை ஆதரிப்போம் என்றால் என்ன? திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக். இதன் தலைவராக இருப்பவர் காதர் மொஹைதீன். இக்கட்சிக்கு திமுக 3 தொகுதிகளை முதலில் கொடுத்தது. மூன்றிலும் உதயசூரியன் சின்னத்தில் முஸ்லீம் லீக் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முரண்டு காரணமாக பாமக மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளிடமிருந்து தலா ஒருதொகுதியை வாங்கி காங்கிரஸுக்குக் கொடுத்தது திமுக. இது முஸ்லீம் லீக் கட்சியினரிடையே பெரும் மன வருத்தத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. ஏற்கனவே கட்சியின் மகளிர் பிரிவைச் சேர்ந்த பாத்திமா சயத் இதற்கு கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்திருந்தார். மேலும் நெல்லை மாவட்ட முஸ்லீம் லீக், தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது[5].
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நிலை என்ன? இந்த நிலையில் தற்போது கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், மறைந்த காயிதேமில்லத்தின் பேரனுமான தாவூத் மியாகான் கட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இன்று காலை மியாகான் தலைமையில் கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் அதிமுக அணிக்கு ஆதரவு தெரிவிப்பது என்றும், அக்கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. பின்னர் தாவூத் மியாகான் வெளியிட்ட அறிக்கையில், “இஸ்லாமியர்கள் சம உரிமை பெறுவதற்காக காயிதே மில்லத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை தொடங்கினார். இந்த இயக்கம் தோன்றி 63 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் பல்வேறு கட்சியினரிடமும் பலர் இந்த கட்சியை அடகு வைத்து விட்டனர். இதனால் முஸ்லிம்களின் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு விட்டன. தி.மு.க. அரசு கடந்த 2 ஆண்டுகளில் முஸ்லிம்களுக்காக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. குழப்பம் ஏற்பட்டு முஸ்லிம்களுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. 3.5 சதவீத இட ஒதுக்கீட்டால் ஏற்கனவே இருந்ததை விட குறைவான பலன்களே கிடைக்கிறது. எனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அ.தி.மு.க.வை ஆதரிக்க முடிவு செய்துள்ளது”, என்று அவர் கூறியுள்ளார்.
வேதபிரகாஷ்
15-03-2011
பிரிவுகள்: அதிமுக, இட ஒதுக்கீடு, இந்தியத் தன்மை, இந்தியா, இரட்டை இலை, இரட்டை வேடம், இஸ்லாமிய இறையியல், இஸ்லாம், உதய சூரியன், கட்சிமாறி, கூட்டணி சித்தாந்தம், கூட்டணி தர்மம், சுயமரியாதை, ஜின்னா, ஜிஹாத், ஜெயலலிதா, த.மு.மு.க, திமுக, திராவிட நாத்திகர்கள், தேர்தல், பச்சோந்தி
Tags: இரட்டை இலை, உதயசூரியன், காயிதே மில்லத், கூட்டணி அர்த்தம், கூட்டணி சித்தாந்தம், கூட்டணி தருமம், சித்தாந்த போலித்தனம், ஜெயலலிதா, தாவூத் மியான் கான், நிலையிலா அரசியல் தாக்கம், முஸ்லிம்கள், முஸ்லீம் லீக்
Comments: 6 பின்னூட்டங்கள்
மார்ச் 11, 2011
முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்!
தனிப்பட்ட முறையில் முஸ்லீம்களின் மீது எந்த எதிர்மறையான நோக்கம் இல்லையெனெனும், அரசியல் ரீதியாக முஸ்லீம் லீக் இந்தியாவில் செய்து வரும் அரசியலை விமர்சித்து அலசும் கட்டுரை இது. |
திராவிட கட்சிகளும், முஸ்லீம் லிக்கும்: ஜின்னா பெரியாருக்கு என்றுமே அரசியல் ரீதியில் உதவியது கிடையாது. ஆனால், பெரியார் தாம் தேவையில்லாமல், ஜின்னாவிடம் போய் கெஞ்சிக் கொண்டிருந்தார். ஒருமுறை ஜின்னாவே பெரியாருக்கு வெளிப்படையாக கடிதமும் எழுதி விட்டார். தான் முஸ்லீம்களுக்காகத்தான் போராட முடியுமே தவிர முஸ்லீம் அல்லாதவர்களுக்கு முடியாது என்று தெரிவித்தார்[1]. அதுபோல திகவிற்கு பிறகு திமுக முஸ்லீம் லிக்குடன் நெருக்கமாக இருந்தாலும், திமுக தான் முஸ்லீம்களுக்கு நண்பன் என்று காட்டிக் கொள்ள உபயோகப் பட்டதே தவிர, முஸ்லீம் லீக்கினால் திராவிட கட்சிகளுக்கு என்ன ஆதாயம் கிடைத்தது என்றதை அவர்கள் தாம் கூறிக்கொள்ள வேண்டும்.
முஸ்லீம் லீக்குகள் கட்சிகள் பிரிந்திருந்தாலும் சாதிக்கும் நிலை: முஸ்லீம்களுக்குள் இறையியல் ரீதியில், இனம், மொழி, பாரம்பரியம், கலாச்சாரம் என்று பலவித காரணிகளால் பற்பல வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால், இந்தியாவில் பிரச்சினை என்று வரும்போது, ஒன்றாக வேலை செய்து வருகின்றார்கள். இந்தியா இரண்டாவதற்கு காரணம் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தான் என்று காட்டுவது சரித்திரம். என்னத்தான் இந்தியா செக்யூலரிஸத்தில் ஊறினாலும், பாகிஸ்தான் மதவாதத்தில் திளைத்தாலும், பாதிக்கப்பட்டுள்ளது இந்துக்கள்தாம் என்பது அந்தந்த நாட்டு சரித்திரங்கள் எடுத்துக் காட்டுகின்றன[2]. இந்தியாவில் முஸ்லீம்கள் எல்லா உரிமைகளையும் பெற்று இருக்கும் நிலையில், பாகிஸ்தானில் இந்துக்கள் மிருகங்கள் போல் வேட்டையாடப் படுகிறார்கள்[3]. இந்நிலையில், முஸ்லீம் கட்சிகள் பிரிந்துள்ளது போல காட்டிக் கொண்டு, இரண்டு அணியிலும் பங்குகளைக் கேட்டு தமது அரசியல் பலத்தைப் பெருக்கவே வழிகண்டு வருகின்றனர். ஆனால், வெளியில் ஒன்றையொன்று தாக்கிக் கொள்வது போலக் காட்டிக் கொள்கின்றன[4]. மொத்தத்தில் ஆறு இடங்களை முஸ்லீம் கட்சிகள் பெற்றுவிட்டன. வெற்றிபெற்றதும், அவர்கள் ஒன்றாகத்தான் வேலை செய்யப் போகிறார்கள்.
திராவிட கட்சி கூட்டணிகளில் முஸ்லீம் லீக்குகள்-கட்சிகள்: அதிமுக கூட்டணியில் முஸ்லீம் கட்சிகள் உள்ளன. திமுகவிலும் உள்ளன. “அதிமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்‘ என தமுமுக மாநில பொது செயலாளர் ஹைதர்அலி தெரிவித்தார்…………..மேலும் அதிமுக கூட்டணியில் தற்போது தேமுதிக வந்துள்ளது. அவர்களை நாங்கள் வரவேற்கிறோம்[5]. மனிதநேய மக்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் சொந்த சின்னத்தில் போட்டியிட மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது[6]. தமிழகத்தில் அ.தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது என மனிதநேய மக்கள் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லாஹ் கூறினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மனிதநேய மக்கள் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லாஹ் வந்தார். இரவிபுதூர்கடையில் நிருபர்களிடம் கூறியதாவது: “மனிதநேய மக்கள் கட்சி 2009ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கடந்த பார்லி., தேர்தலில் தனித்து போட்டியிட்டோம். 15 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். முதல் முறையாக சட்டசபை தேர்தலை சந்திக்கிறோம். அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்துள்ளோம். தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும் என்று விஜயகாந்த் கூறி வருகிறார். இதனால் அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., வருவதை நாங்கள் வரவேற்கிறோம். மனிதநேய மக்கள் கட்சிக்கு அ.தி.மு.க., கூட்டணியில் மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும். எங்கள் கட்சி தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கள் சொந்த சின்னத்தில் போட்டியிட உள்ளோம். 1991க்கு பிறகு சிறுபான்மை கட்சிக்கு மூன்று இடம் ஒதுக்கப்படுவது இது தான் முதல் முறை ஆகும்”[7]. இருப்பினும், திமுகவில் உள்ள முஸ்லீம் கட்சிகள் வேறுவிதமாக பேசுகின்றன.
எங்களால்தான் திமுக- காங்கிரஸ் கூட்டணி பிழைத்தது: முஸ்லீம் லீக்[8]: சென்னை, மார்ச்.9, 2011: நாங்கள் ஒரு இடத்தை விட்டுக்கொடுத்ததால்தான் திமுக-காங்கிரஸ் இடையிலான கூட்டணி முறியாமல் காப்பாற்றப்பட்டது என அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தெரிவித்துள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளிடையே கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டபோது, அக்கட்சிகளின் நலன்விரும்பிகளுடன் தங்கள் கட்சி தொடர்புகொண்டதாக முஸ்லீம் லீகின் தேசியத் தலைவர் இ. அகமது தெரிவித்தார். “தமிழகத்தில் உள்ள முஸ்லீம் லீக் சகாக்களுடன் ஆலோசித்து கருத்து வேறுபாடுகளைக் களைய என்னாலான முயற்சிகளைச் செய்தேன். தமிழக சகாக்களின் தாராளம் காரணமாக என்னால் அதைச் செய்ய முடிந்தது. இக்கட்டான நிலைமையும் முடிவுக்கு வந்தது என அகமது தில்லியில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். தேச நலன் கருதி மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கவும், வலுப்படுத்தவும் தனது கட்சி எப்போதும் முயற்சித்து வருவதாக…………..”, அகமது குறிப்பிட்டார்.
எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்துல் சமதின் மகள் பாத்திமா முசாபர்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கப்பட்ட 3 சீட்களில் ஒன்றை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுக்கும் கட்சி மேலிட முடிவை எதிர்த்து மூத்த பெண் தலைவர் குரல் கொடுத்துள்ளார்[9]. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பெண்கள் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமா முசாபர். இவர் மறைந்த அப்துல் சமதின் மகளாவார். வரும் சட்டசபை தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திமுக கூட்டணியில் உள்ளது. அக்கட்சிக்கு திமுக 3 சீட் ஒதுக்கியிருந்தது. ஆனால் காங்கிரஸுக்கு 63 சீட் கொடுக்க தீர்மானித்ததால் சீட் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கிய 3 சீட்களில் ஒன்றை திமுக வாங்கி காங்கிரஸுக்குக் கொடுத்துள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தனது பெருமை மற்றும் தன்மானத்தை விட்டுக் கொடுத்துள்ளது: இதற்கு பாத்திமா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஒரு சீட்டை திரும்ப எடு்த்துக் கொள்ள அனுமதித்ததன் மூலம் கட்சி தனது பெருமை மற்றும் தன்மானத்தை விட்டுக் கொடுத்துள்ளது. கட்சி தலைமையின் இந்த முடிவு பாரபட்சமானது, ஒருதலையானது. இதற்கு பொறுப்பேற்று கட்சியின் தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான இ. அகமது, மாநில தலைவர் காதர் முகைதீன் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். நாங்கள் திமுக மற்றும் காங்கிரஸ் மேலிடங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஒரு சீட்டை விட்டுக் கொடுத்துள்ள எங்கள் கட்சி மேலிடத்தின் முடிவு முஸ்லிம் சமுதாயம் மற்றும் கட்சியினர் இடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது”, என்றார். உண்மையிலேயே அவர்கள் ராஜினாமா செய்வார்களா அல்லது எதிர்த்து பிரச்சாரம் செய்வார்களா, ஆறு இடங்களிலும் சசதுர்யமாக வெல்வார்களா என்பது மே மாதத்தில் தெரிந்து விடும்.
முஸ்லிம் லீக் கட்சிகளின் இணைப்பு (10-03-2011): இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புடன், திருப்பூர் அல்டாப் தலைமையிலான தமிழ்நாடு முஸ்லிம் லீக் ஆகிய இரு கட்சிகளின் இணைப்பு, தி.மு.க., தலைவர் கருணாநிதி முன்னிலையில் அறிவாலயத்தில் நேற்று நடை பெற்றது. இது குறித்து காதர் மொய்தீன், அல்டாப் ஆகியோர் கூறியதாவது: “முஸ்லிம் சமுதாயத்தின் நலனுக்காகவும், அரசியல் களத்தில் ஒருங்கிணைந்த சக்தியாக தி.மு.க., கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபடுவோம்”, என்றனர்[10]. 2002ல் நடந்த ஒரு நிகழிச்சி இங்கு நினைவிற்கு வருகின்றது.
அதிமுகவுடன் தங்கள் கட்சி வைத்திருந்த உறவு முறிந்து விட்டதாக இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர்சுலைமான் சேட் கூறினார் (05-05-2002). சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது[11]: வாணியம்பாடி சட்டசபைத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த அப்துல் லத்தீப் மறைவு காரணமாகவே தற்போதுஅத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. எனவே இந்தத் தொகுதியை இந்திய தேசிய லீக்கிற்கே விட்டுக் கொடுக்க வேண்டும் என்று முதல்வர்ஜெயலலிதாவிடம் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தேன். இதுபற்றிப் பரிசீலனை செய்வதாக அப்போது அவர் உறுதியளித்தார். ஆனால் பாரம்பரியமாகவே முஸ்லீம்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இத்தொகுதியில் முஸ்லீம்கள் அல்லாத ஒருவரைஜெயலலிதா தன்னிச்சையாக அறிவித்துள்ளார். எங்களுடைய எந்த ஆலோசனையையும் கேட்காமலேயே அவர் இம்முடிவை எடுத்துள்ளதால், அதிமுகவுடனானஎங்கள் உறவை நாங்கள் துண்டித்து விட்டோம். முன்பு பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்டதாகக் கூறிய ஜெயலலிதா, தற்போது அந்தக் கட்சியுடன் உறவுவைத்துக் கொள்ளத் தயாராகிக் கொண்டிருப்பதும் எங்களுக்குப் பெரும் வேதனையை அளித்துள்ளது. வாணியம்பாடியில் எங்கள் கட்சி போட்டியிடுவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனிடம் கோரிக்கைவிடுத்துள்ளேன் என்றார்.
அரசியல் கட்சிகளிம் போலித்தனங்கள்: திராவிட கட்சிகளைப் போல, முஸ்லீம் லீக்குகள் / கட்சிகளும் உருமாறி விட்டனவா அல்லது அதுபோல நடிக்கின்றனவா? இந்தியாவில் உள்ள ஒரே மதவாதி கட்சி பி.ஜே.பி தான் என்று இந்த முஸ்லீம் லீக்குகள் / கட்சிகளே கூறுவதும் வேடிக்கையான விஷயம் தான். ஆனால், செக்யூலரிஸ கட்சிகள் என்று கூறிக் கொள்ளும் திமுக, அதிமுக மாறி மாறி பி.ஜே.பியுடன் கூட்டு வைத்துள்ளன. இப்பொழுதுகூட, காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டு சேரும் பட்சத்தில் மாறுபட்ட எண்ணங்கள் இருந்தன. காங்கிரஸைப் பற்றி கேட்கவே வேண்டாம். செக்யூலரிஸம் சொல்லிக் கொண்டு பி.ஜே.பியை விட, அதிகமாகவே மதசாட்ர்புள்ள கட்சிகளுடன் – முஸ்லீம் லீக், கிருத்துவ கட்சிகள், சீக்கிய கட்சிகள் – தொடர்ந்து கூட்டு வைத்திருந்து வந்துள்ளன. ஆகவே, இப்படி முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் ஆளும் மற்றும் எதிர் கூட்டணிகளில் இருப்பது, அரசியலை மீறிய நிலையைத்தான் காட்டுகிறது.
வேதபிரகாஷ்
11-03-2011
[2] இந்துக்களை ஒழித்துக் கட்டியதன் மூலம் பாகிஸ்தான் சிறுபான்மையினயை பிரச்சினையை அரவே ஒழித்துவிட்டடு போலும்!
[3] இதைப் பற்றி நான் எழுதியுள்ள கட்டுரைகளில் இணைதளத்தில் பார்க்கலாம்.
பிரிவுகள்: ஃபத்வா, அதிமுக, அப்துல் காதர், அம்பேத்கர், அஹமதியா, ஆர்.எஸ்.எஸ், ஆற்காடு, இ.அகமது, இட ஒதுக்கீடு, இந்திய முஜாஹித்தீன், இந்தியா, இந்துக்கள், ஈ. வே. ரா, கஞ்சி, கருணாநிதி, கூட்டணி, சரீயத், சிறுபான்மையினர், சுன்னி, ஜமாத், ஜின்னா, ஜிஹாத், த.மு.மு.க, திமுக, திராவிட நாத்திகர்கள், தேர்தல், பாகிஸ்தான், முஸ்லீம் லீக்
Tags: ஃபத்வா, அப்துல் சமத், அல்டாப், அஹமது, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், காஷ்மீரம், சிறுபான்மையினர், சுன்னி, செக்யூலரிஸம், ஜவாஹிருல்லாஹ், திராவிட கட்சி, பாத்திமா முசாபர், போரா, மனிதநேய மக்கள் கட்சி, முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லீம்கள், லெப்பை, ஷியா, DK, DMK, EVY, Jinnah, muslim league, muslims, Periyar, secularism
Comments: 6 பின்னூட்டங்கள்
ஜூலை 14, 2010
சங்சராச்சாரியும், கருணாநிதியும், முஸ்லீம்களும்!
சங்கராச்சாரி பிறந்தநாள் விழாவில் மதுரை ஆதீனம் ஏதோ கூறிவிட்டார் என்றதும், ஆதினத்தையே முற்றுகையிடுவோம் என்று ஔரங்கசீப், மாலிக்காஃபூர் மாதிரி மிரட்டினர். தமிழ்நாட்டிலும் இப்படி “நக்கீரன்” வடநாட்டு ஊடகங்களைப்போல “ஸ்டிங் ஆபரெஸன்” செய்திருக்கிறர்கள் போல. பாவம், இந்த சாமியார்களுக்கு இதெல்லாம் என்ன தெரியப்போகிறது?
கஞ்சி குடிக்கவேண்டும் என்றால், கருணாநிதிக்குக் கொள்ளை ஆசை!
அதுவும் குல்லா போட்டு கஞ்சி குடிக்கவேண்டும் என்றால், கருணாநிதிக்கு ஆசையோ ஆசை!!
முன்பெல்லாம் “குல்லா போட்ட கருணாநிதி”யின் போட்டோக்கள் நூற்றுக்கணக்கான இருந்தன. ஆனால், திடீரென்று அவையெல்லாம் மறைந்துவிட்டன!
அப்படி கஞ்சிக் குடித்துக் கொண்டே இந்துக்களை வசைப்பாட, அவதூறு பேச, தூஷிக்க, தூஷணம்…………… செய்யவேண்டும் என்றால் பேராசை!!!
இப்பொழுதுதான், கனிமொழியை, அன்பழகனை அனுப்பி வைக்கிறார் போலும்.
அவர்களும் தங்களது அபிமானத்தைக் காட்டி வருகிறார்கள்.
கனிமொழி, பொட்டில்லாமல், பூவில்லாமல், (நாத்திகர் என்பதால் தாலி இருக்கிறாதா என்று தெரியவில்லை), கருப்பு ஜாக்கெட்-புடவை சகிதம் சென்று கஞ்சி குடித்தூள்ளார். இது ஆத்திகத்தின் அமங்கலமா, நாத்திகத்தின் புரட்சியா என்று பெண்ணினம் தான் சொல்லவேண்டும் [ஆமாம், இத்தகைய பகுத்தரிவு புரட்சியாளர்கள் திருமணத்தின்போது ஏன் கருப்பு உடைகளை அணிவதில்லை என்று பெரியாரிடம்தான் கேட்கவேண்டும்]
அன்பழனுக்கோ சொல்லவே வேண்டாம், சிறப்பான உபச்சாரம், மரியாதை, சலுகைகள் எல்லாம்!
எஸ்ரா சற்குணம் பாதிரியார் கேட்கவே வேண்டாம், “உங்களுக்காகத்தான் சிங்கப்பூரிலிருந்து வாங்கி வந்தேன் “, என்று ஒரு குல்லாவை மாட்டிவிட்டார். அன்பழகன் குல்லாவில் அழகாகவே இருந்தார். ஆனால், பத்திரிக்கைக் காரர்கள் புகைப்படம் எடுக்கும் போது குல்லாவை எடுத்து கஞ்சிக் குடிப்பது போன்று போஸ் கொடுத்தது வேடிக்கையாக இருந்தது!
(தொடரும்).
பிரிவுகள்: அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்?, அமாவாசையும் அப்துல்காருக்கும், இட ஒதுக்கீடு, இமாம், இஸ்லாமிய இறையியல், ஈ. வே. ரா, ஔரங்கசீப், கருணாநிதி, கருத்துச் சுதந்திரம், கற்களை வீசி தாக்குவது, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், குரானா-குறளா, கொடுக்கு வைத்தியம், சங்கராச்சாரி, ஸ்டிங் ஆபரேஸன்
Tags: ஔரங்கசீப், கஞ்சி குடிக்கும் கருணாநிதி, கருணாநிதி, குல்லா, குல்லா போட்ட கருணாநிதி, கொடுக்கு வைத்தியம், சங்கராச்சாரி, நக்கீரன், மாலிக்காஃபூர், முஸ்லீம்கள், ஸ்டிங் ஆபரெஸன், ஸ்டிங் ஆபரேஸன்
Comments: 2 பின்னூட்டங்கள்
ஏப்ரல் 13, 2010
ஜாதிகள் இல்லை என்று சொல்லும் முஸ்லீம்கள் “தலித்” கோட்டா கேட்கிறார்களா?
முஸ்லீம்கள் என்றாலே சமத்துவம் தான்.
அல்லா எந்த பேதமிம் பார்ப்பதில்லை.
ஜாதி என்று இஸ்லாத்தில் இல்லை, சகோரத்துவம் தான்.
இப்படியேல்லாம் தலைசிறந்த பண்புகள் கொண்ட, உயர்ந்த கொள்கைகளுடன் முஸ்லீம்கள் பேசுவர்.
ஆனால், ஜாதிகள் மீதான ஒதுக்கிடு கேட்பது எப்படி என்று தெரியவில்லை.
அதிலும் தலித் போர்வையில் எஸ்.சி போன்ற ஒதுக்கீடு வேண்டும் என்று முஸ்லீம்கள் கேட்க ஆரம்பித்துள்ளனர்.

Muslims-demanding-reservation
மிஸ்ரா கமிஷன் அத்தகைய பரிந்துரை செய்துள்ளதாம். அதன் படி முஸ்லீம்களும் கேட்கிறார்களாம்!
மண்டல் கமிஷன் தீர்ப்பில் இஸ்லாத்தில் உள்ள ஜாதி கட்டமைப்பு, ஜாதியம் முதலியவை எடுத்துக் காட்டப் பட்டுள்ளன.
அரேபியத்துவம், பழங்குடிகள் அமைப்பு, அவற்றின் மூலம் ஏற்பட்டுள்ள சமூக அடுக்கு முறைகள், மதம் மாறிய பின்னரும், நாட்டுக்கு நாடு அவை எவ்வாறு செயல் படுகின்றன என்பனவற்றை, முஸ்லிம் ஆராய்ச்சியாளர்களும் எடுத்துக் காட்டியுள்ளனர்.
இருப்பினும் ஆசார இஸ்லாம் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை என்று முஸ்லிம்கள் உறுதியாக அடித்துச் சொல்கின்றனர். அதாவது, அத்தகைய, ஜாதியம், ஜாதி அமைப்பு, ஜாதிய வேறுபாடுகள் இல்லை என்கிறார்கள்……..

தலித்-முஸ்லீம்கள்
இதையும் ஜிஹாத் என்கிறார்கள்!
பிரிவுகள்: அடிமை, அடிமைத்தனம், அன்சாரி, அன்சார், அரேபிய குடி, அரேபியத்துவம், அரேபியா, இட ஒதுக்கீடு, இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய சாதி, இஸ்லாமிய ஜாதி, இஸ்லாம், உள் ஒதுக்கீடு, எஸ்.சி, எஸ்.ஸி, எஸ்சி, குடிப்பிரிவு, தலித், தலித் முஸ்லீம், தலித் முஸ்லீம்கள், நீக்ரோ, பழங்குடி, முஸ்லீம் சாதி, முஸ்லீம் ஜாதி
Tags: அரேபிய தொல் குடி, அரேபியத்துவம், ஆசார இஸ்லாம், இனம், இனவெறி, இஸ்லாமிய இறையியல், எஸ்.டி, எஸ்.ஸி, கருப்பர், குடி, குடிப்பிரிவு, சமூக கட்டமைப்பு, சாதி, ஜாதி, ஜாதியம், தலித், தலித் முஸ்லீம், தலித் முஸ்லீம்கள், நீக்ரோ, பழங்குடி
Comments: 1 பின்னூட்டம்
அண்மைய பின்னூட்டங்கள்