மார்ச் 10, 2013
தர்காவில்-மசூதியில் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் இருக்கலாமா – இஸ்லாம் சொல்வதும், செய்வதும்!

09-03-2013 அன்று பாகிஸ்தான் பிரதமர் வந்ததை புறக்கணித்த இஸ்லாமிய மதத்தலைவர்.
உர்ஸ், சந்தனக்கூடு, மதகுருமார்களின் இறந்த நாள் விழாக்கள்: நாகூர் மற்றும் இதர முஸ்லீம் குருக்களின் சமாதிகளில் உர்ஸ் என்று நடைபெறும் வருடாந்திர விழாக் கொண்டாட்டங்களில், வண்ணவிளக்குகள், அலங்கரிக்கப்பட்ட ரத ஓட்டங்கள், மேளதாளங்கள், பாட்டுகள், நடனங்கள், கடைகள் என்று நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகின்றன. ஆஜ்மீரில் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஸ்டி மற்றும் கரீப் நவாஜ் எனப்படுகின்ற சூபி துறவி உர்ஸ் விழாவில் ஆயிரக்கணக்கான முஸ்லீம் பக்தர்கள் குழுமி விழா கொண்டாடுகிறார்கள். மற்ற சூப்பிக்கள் அல்லது சூப்பிக்களாக மாற்றப்பட்டவர்களின் நினைவாகவும் உர்ஸ் விழா கொண்டாடப்படுகின்றது. இதைக்காண அயல்நாட்டவர்களும் வருகிறார்கள். முஸ்லீம் காலண்டரின் படி, ஏழாவது மாதத்தில் வரும், அந்த சூபியின் இறந்த தினத்தை ஆறு நாட்கள் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். அந்நேரத்தில் நடக்கும் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் முதலியவற்றைப் பலர் புகைப்படம் எடுத்துள்ளனர். அவற்றை இணைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளன.

ஆஜ்மீர் தர்காவில் கவ்வாலி பாடும் முஸ்லீம்கள்.
தர்கா-மசூதி ஏற்படும் விதம் மற்றும் அமையும் தன்மை: இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் ஆண்டவன் இறுதி தீர்ப்பு நாளில் பிறந்த அதே உடலில் உயிர்த்தெழச் செய்வான். அதாவது, தான் செய்த காரியங்களுக்கேற்ப தண்டனை அல்லது பரிசு பெற தயாராக இருப்பான். அதனால் தான் உடல் எரிக்கப்படாமல், புதைக்கப் படுகிறது. புதைத்தாலும், மக்கி விடுமே, என்றாலும், உய்ரித்தெழும் போது, வேறொரு உடலைத் தருவதாக நம்புகிறார்கள். இவ்வகையில் அவுலியாக்கள் மேம்பட்டவர்கள் என்பதனால், அவர்கள் புதைக்கப்பட்டாலும், ஜீவசமாதியில் இருப்பது போல, உயிரோடு இருந்து கொண்டு, மக்களின் குறைகளை தீர்த்து வைப்பதாக முஸ்லீம்கள் நம்புகின்றனர். அதனால்தான், சமாதியிலிருந்து, கை எழுந்து ஆசீர்வாதித்தது, குரல் எழும்பி பதில் சொன்னது, மூச்சு சுவாசம் பட்டு வியாதி மகுணமாகியது, ஒளிவட்டம் தோன்றியது என்றெல்லாம் சொல்லி வருகின்றனர். ஈரந்த பிறகும் மறுபிறப்பு உண்டு என்பது, ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவியிருந்த வேதமதத்தின் நம்பிக்கையாகும். இது எல்லாமத ஞானிகளும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதன்படியே, அவரவர் புனித நூல்களில் அங்கங்கே அத்தகைய விவரங்கள் உள்ளன என்று அறிஞர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.

ஆஜ்மீர் தர்காவில் பக்திப் பரவசத்துடன் ஆடும் முஸ்லீம் பக்தர்கள்.
தர்கா வேறு, மசூதி வேறு: உருவ வழிபாடு கூடாது என்ற நோக்கத்தினால், ஆசாரமான முஸ்லீம்கள், இந்த தர்கா வழிபாட்டை தடுக்க, மாற்ற அறவே ஒழிக்க முனைந்துள்ளார்கள். தர்காவை இணைத்து மசூதிகள், மதரஸாக்கள், மற்றவை கட்டப்பட்டன. பிறகு, தர்கா வேறு, மசூதி வேறு என்று காட்ட, இடையில் சுவர்களும் எழுப்பப்பட்டன. இப்படி ஆசாரமான முஸ்லீம்கள் பலவித முயற்ச்கள் மேற்கொண்டாலும், தர்கா வழிபாட்டை ஒழிக்க முடியவில்லை. இன்னும் அதிகமாகித்தான் வருகின்றது. இந்தியாவில், இடைக்காலத்தில், பிணங்களைப் புதைத்து இடங்களை ஆக்கிரமித்தது தான் முகலாயர்களின் / முகமதியர்களின் வேலையாக இருந்தது. கோவில்கள், மடங்கள், நதிக்கரை புனித இடங்கள் (கட் / காட்டு) முதலியவை அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன. தர்கா வழிபாடே ஹராம் / இஸ்லாமிற்குப் புரம்பானது என்று அத்தகைய ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. பிறகு எப்படி இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன? மற்ற விஷயங்களுக்கு ஆர்பாட்டம் செய்யும் தமிழக முஸ்லீம்கள் மௌனிகளக இருக்கின்றார்கள். உண்மையில் அவர்கள் ஆஜ்மீருக்குச் சென்று போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமே, ஆனால் செய்யவில்லையே?

மேளத்தாளத்துடன் சூபி நடனம் ஆடும் பெண்மணி.
பெண்கள் இப்படி தர்கா – மசூதி முன்னர் ஆடலாமா?: ஆஜ்மீரில் நடந்த விழாவின் போது எடுக்கப்பட்டப் புகைப்படங்களைப் பார்க்கும் போது, பெண்கள் ஆடுவது, மேளதாளங்கள் ஒலிப்பது, அவர்களை சூழ்ந்து கொண்டு முஸ்லீம்கள் இருப்பது முதலிய காட்சிகள் தெரிகின்றன. வெளிப்புறம் என்றில்லாமல், உள்புறத்திலும், கவ்வாலி, நடனம் என்ற நிகழ்சிகள் நடப்பது புகைப்படங்கள் ஊர்ஜிதம் செய்கின்றன. இவற்றை முஸ்லீம்கள் எதிர்ப்பதாகத் தெரியவில்லை. இல்லையென்றால், அமைதியாக அவை காலங்காலமாக நடந்து கொண்டிருக்க முடியாது. மேலும், பாகிஸ்தானிய அரசியல்வாதிகள், பெரிய செல்வந்தர்கள், புள்ளிகள், சினிமாக்காரர்கள், நடிகைகள் என அனைவரும் இங்கு வந்த் போகின்றனர். அதனை, அந்த தர்கா இணைத்தளமே பெருமையாக புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றன.

பரவசத்துடன் ஆடிய இந்து சூபி நடன புகைப்படம் பல நாளிதழ்களில் வெளிவந்தன (மே 2012).
தர்கா வேறு மசூதி வேறு என்றால், தர்காவில் தொழுகை ஏன்?: இறைவனைத் தவிர வேறு ஒருவனையும் வணங்கக் கூடாது என்றால், இஸ்லாத்தில் தர்கா வழிபாடு இருக்கக் கூடாது. எப்படி உருவ வழிபாடு கூடாது என்றாலும், அது நிஜவாழ்க்கையில் முடியாதோ, அதாவது, வெளிப்புறத்தில் உருவத்தினால் தான் எல்லாமே அடையாளம் காணப்படுகிறது. உருவம், சின்னம், அடையாளம், குறியீடு, என எதுவும் இல்லை என்றால், இவ்வுலகத்தில் எதுவுமே நடக்காது. அதனால் தான் குரான் புத்தகம், கத்தி, பிறை, நட்சத்திரம், குதிரை, கை, கையெழுத்து, பச்சை நிறம் முதலியன இஸ்லாத்தில் சின்னங்களாக உபயோகப்படுத்தப் பட்டு வருகின்றன. அதனால்தான், முஸ்லீம் அரசியல்வாதிகள் இந்து கடவுளர்கள் இல்லை என்று வாதிட்டாலும், தேர்தல் மற்ரும் மற்ற நேரங்களில் கோவில்களை, மடாதிபதிகளைச் சுற்றி வருவார்கள்.

திருப்பதி முதல் வாரணாசி வரை உள்ள தெய்வங்களுக்கு மறைமுகமாக காணிக்கைகள் செல்லுத்தி வருவர். இதைப் பயன்படுத்திதான், கடவுளே இல்லை என்று பிதற்றும் திராவிடவாதிகளுக் தர்காக்குகளுக்குச் சென்று, கும்பிட்டு / மரியாதை செய்து விட்டு வருகிறார்கள். தர்கா கூத்துகளை எதிர்க்கும் இஸ்லாம், தமிழகத்தில் திராவிட கூத்துகளை ஒத்துக்கொள்கிறது[1].

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் விழா – ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் தான்!
பாகிஸ்தானிலும், இதே கதைதான்: பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு, அந்நாட்டில் நாகரிகமாக இருக்கும் பெண்கள் இந்தியப் பெண்களைப் போன்றுதான் அலங்கரித்துக் கொண்டு இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாஹூர் போன்ற நகரங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். பண்டிகைகள் என்றால், இந்தியர்களைப் போலத்தான் கொண்டாடி வருகிறார்கள். மந்திரீகம், வசியம், தாயத்து முதலியவற்றில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஜோசியம், நல்லநேரம் பார்க்கிறார்கள். இஸ்லாம் சொல்வதும், செய்வதும் இப்படித்தான் இருக்கும் போலும்!

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் கொண்டாட்டம் – இன்னொரு புகைப்படம்!
இதைத்தவிர மற்ற நடனங்களும் உண்டு.

ஆஜ்மீரில் நடந்த குஷி நடனம்.

ஆஜ்மீர் உர்ஸ் விழாவின் போது தெருக்களிலும் நடக்கும் நடனம்!

வேதபிரகாஷ்
10-03-2013
பிரிவுகள்: 786, ஃபத்வா, அடிப்படைவாதம், அடிமை, அடையாளம், அமர்நாத் யாத்திரை, அலி, அல்லா, அல்லா என்ற வார்த்தை உபயோகம், அல்லா பெயர், அல்லா பெயர் உபயோகம், அழகிய இளம் பெண்கள், அழுகிய நிலையில், அழுக்கு, அவதூறு, அவமதிக்கும் இஸ்லாம், ஆண்டவனின் எச்சரிக்கை, ஆப்கானிஸ்தான், ஆமென், ஆலிஃப்-லம்-மிம், ஆவி, இச்சை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இமாம், இமாம்கள், இருக்கின்ற நிலை, இருக்கும் தெய்வங்கள், இலக்கியம், இல்லாத தெய்வங்கள், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உயித்தெழுதல், உயிர் பலி, உருது மொழி, உருவ வழிபாடு, உலமாக்கள், உல்லாசம், ஏர்வாடி, ஓட்டு, ஓட்டுவங்கி, கத்தி, கர்பலா, கர்பலா உயிர்த் தியாகம், கலவரம், கலிமா, கல்வத், கல்வெட்டு, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காங்கிரஸ், காந்தஹார், காந்தாரம், காபத்துல்லாஹ், காபா, காரைக்கால், குரான், குர்பானி, குஷித் ஆலம் கான், கௌதாரி, சன்னி, சரீயத், சல், சின்னம், சியாசத், சிற்பம், சிலை வழிபாடு, சுத்தம், சுன்னத், சுன்னி, சுன்னி-ஷியா, சூஃபி, சூபி, சூபித்துவம், செக்யூலரிஸ ஜீவி, ஜிஹாதித்துவம், ஜிஹாத், தர்கா, தர்மம், தலிபான், தலிபான் அமைப்பினர் தண்டனைகள், தலைவெட்டி, தொழுகை, நரகம், நாகூர் தர்கா, பள்ளி வாசல், பள்ளிவாசல், புதைத்தல், புத்தகம், புனிதப் போர், பேசுவது, பைபிள், பொய்மை, மக்கா, மங்கள வாத்தியங்கள், மசூதி, மசூதி தொழுகை, மசூதி வளாகத்தில் நினைவிடம், மந்திரத் தொழிலில், முப்தி, முஸ்லீம் சட்டம், மெக்கா, மௌலானா புகாரி, யாத்திரிகர்கள், யாத்திரை, யுனானி, ரத்தத்தினால் ஹோலி, ரத்தம், ரத்தம் குடித்தல், ரப், ரப்பானி, லாஹூர், வாணியம்பாடி, வாரணசி குண்டுவெடிப்பு, ஷியா, ஷியா சட்ட போர்ட், ஷியா சட்டம், ஷியா முஸ்லீம் சட்டம், ஷியா-சுன்னி, ஸல், ஹஜரத் இமாம் அலி, ஹஜ், ஹதீஸ், ஹுஸைன்
Tags: ஃபத்வா, அலி, அவமதிக்கும் இஸ்லாம், அவுலியா, ஆவி, இந்துக்கள், ஒளிவட்டம், கல்லறை, காஷ்மீரம், குரான், குர்பானி, குறை, கோவில் சிலை உடைப்பு, சமாதி, சல், சிறுபான்மையினர், சூஃபி, சூஃபித்துவம், சூபி, சூபித்துவம், ஜீவசமாதி, ஜீவமுக்தி, தாலிபான், தாளம், நடனம், நாட்டியம், நோன்பு, பக்தி, பரவசம், பாகிஸ்தான், பாட்டு, பிசாசு, புனிதப்போர், பேசுவது, பேய், மசூதி, மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மிதிக்கும் இஸ்லாம், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லிம்கள் சிலை உடைப்பு, முஸ்லீம்கள், மூச்சு விடுவது, மேளம், ரப், ரப்பானி, ரவுல், வரம், வேண்டுதல்
Comments: 2 பின்னூட்டங்கள்
ஒக்ரோபர் 16, 2011
ஹஜ் யாத்திரையில் 19 முஸ்லீம்கள் இறப்பு, 31 பேர் காயம், ஒரு குழந்தை பிறப்பு முதலியன
சவுதி அரேபியா ஹஜ் பிரயாணிகளுக்கு பலவித ஏற்பாடுகளை செய்திருந்தது. எந்த விதத்திலும், எந்த பிரச்சினையும் ஏற்படக்கூடாது என்ற திட்டத்துடன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன[1]. பிரயாணத்தைப் பற்றிய விழிப்புணர்வு, மெக்கா-மெதினாவில் என்ன செய்யலாம்-செய்யக் கூட்டாது என்றெல்லாம் அறிவுருத்தப்பட்டன[2]. தங்கும் இடங்கள், ஆரோக்ய-மருத்துவ வசதிகள், போக்குவரத்து என பிரமாண்டமாக இருந்தன. அதே நேரத்தில் வசதிகள் இல்லை என்றும் சில ஊடகங்கள் கூறுகின்றன[3]. 10% தங்குமிடங்கள் கூட, சட்டமுறைகள் படி அமைக்கப்படவில்லை, வசதிகள் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
பல காரணங்களுக்காக 19 இந்தியர்கள் மரணம்: ஹஜ் யாத்திரைக்குச் சென்ற 19 இந்தியர்கள் அங்கு மரணமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது[4] குறித்து ஆழ்ந்த அனுதாபம் தெரிவிக்கப்படுகிறது. நம்பிக்கையாளர்களின் நம்பிக்கை சிறந்தது. பரஸ்பர கடவுள் நம்பிக்கை அதைவிட சாலச்சிறந்தது. நல்லவேளை, இங்காவது “இந்தியர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்கள். இல்லயென்றால், “தமிழர்கள்” என்றெல்லாம் குறிப்பிடுவார்கள். இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்காக இந்தியாவிலிருந்து 61,847 பேர் சென்றுள்ளனர்.
இவர்களில் 27,487 பேர் மதீனாவிலும், 34,345 பேர் மதீனாவிலும் உள்ளனர்[5]. இவர்களில் 19 பேர் பல்வேறு காரணங்களினால் உயிரிழந்துள்ளனர் என இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 223 விமானங்கள் மூலம் இந்திய யாத்ரீகர்கள் ஹஜ் புனிதப் பயணமாக சவூதி வந்துள்ளதாக தெரிவித்துள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இறந்த 19 பேரில் 15 பேர் இந்திய ஹஜ் குழு மூலம் வந்தவர்கள், 4 பேர் தனியார் மூலம்
வந்தவர்கள் எனத் தெரிவித்துள்ளனர்[6].
காரணம் சொல்லப்படவில்லை என்று ஒரு இணைத்தளம் கூறுகிறது: இவர்கள் எப்படி இறந்தார்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. தற்போது டெல்லியில் இருந்து 20, 268 பேரும், லக்னோவில் இருந்து 10,128 பேரும், ஐதராபாத்தில் இருந்து 6,977 பேரும், கோழிக்கோட்டில் இருந்து 8,400 பேரும் ஹஜ் புனித பயணித்துள்ளதாக சவுதி அரேபியா சென்றுள்ளனர்[7].
மரணங்களுக்கிடையில், ஒரு ஜனனம்: இம்முறை, உத்தரப்பிரதேசத்திலிருந்து வந்திருக்கும் ஒருபெண், புனித மதீனா நகரில் அழகியதொரு பெண்குழந்தையை வெள்ளியன்று பிரசவித்ததாகவும், இந்திய ஹஜ் பயணிகளின் வரலாற்றில் புனித நகரொன்றில் ஒரு குழந்தையை ஈன்றெடுப்பது இதுவே முதல்முறை என்றும் சவூதி அரேபிய அரசின் செய்திக் குறிப்பு மேலும் தெரிவித்துள்ளது[8]. ஶ்ரீலங்காவைச் சேர்ந்த தம்பதியர் சாலை விபத்தில்
உயிரிழந்ததாகத் தெரிக்கப்பட்டுள்ளது[9]. முன்னர் சியால்கோட்டைச் சேர்ந்த பிரயாணிகளை பேருந்தில் ஏற்றிச் சென்றதில், மக்கா-மெதினா சாலை விபத்து ஏற்பட்டத்தில் 61 பேர் காயமடைந்தனர்[10]. இப்படி “இந்திய துணைகண்டத்தில்” (இப்படி எந்த ஊடகமும் குறிப்பிடாதது ஏன் என்று தெரியவில்லை) விஷயங்கள் நடந்துள்ளன.
வேதபிரகாஷ்
16-10-2011
[2] Makkah Gov. Prince Khaled Al-Faisal will launch on Saturday the media awareness campaign titled: “Haj … Worship & Civilized Conduct.” The campaign is aimed at enlightening pilgrims and residents to be committed to the rules and regulations concerning the pilgrimage. Al-Khodairi recalled the decision banning entry of vehicles with capacity of less than 25
passengers to Makkah and asked pilgrims to preserve the cleanliness of the holy sites. “The campaign will focus on enlightening people to keep away from all negative behavior that might impede the government’s efforts aimed at ensuring the safety and comfort of the guests of God,” he said.
http://arabnews.com/saudiarabia/article518220.ece
[9] Two Sri Lankan pilgrims died in a road accident when their speeding vehicle overturned on the Makkah–Jeddah highway on Wednesday night, the Sri Lankan Consulate General in Jeddah said on Thursday. Abdul Wahid Abdul Jawad, 47, and wife Abdul Haleem Shamsunissa, 42, died instantly after they flew out of the vehicle four kilometers outside Jeddah.
பிரிவுகள்: அரசு நிதி, அரேபிய ஷேக்கு, அரேபியா, அல்லா, அல்லா என்ற வார்த்தை உபயோகம், அல்லா பெயர், ஆடு, ஆலிஃப்-லம்-மிம், இந்தியா, உயிர் பலி, கலிமா, கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வத், கல்வீச்சு, காஃபிர், காஃபிர்கள், குரான், குலுக்கல், குல்லா, குவைத், கேரள ஜிஹாதிகள், கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், கேரள போலீஸார், சவுதி, சூஃபி, மக்கா, மதினா, மெக்கா, யாத்திரை, ஹஜ்
Tags: அரேபியா, ஏற்பாடு, காபா, குலுக்கல், சவுதி, மக்கா, மதீனா, மெக்கா, மெதிமனா, யாத்திரை, விமானம், ஹஜ்
Comments: Be the first to comment
அண்மைய பின்னூட்டங்கள்