இஸ்லாமிய இயக்கங்களுடன் இணைந்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டி: திருமாவளவன்: ஆனால் மனிதநேய மக்கள் கட்சி தனித்து போட்டி!
திருமாவளவனின் கஞ்சி குடிப்பும், தேர்தல் கூட்டும்: சென்னை புறப்பகுதிகள், மற்ற மாவட்டங்களில், திருமாவின் தோற்றங்கள் டிஜிடல் பானர்களில் விசித்திரமாகச் சித்தரிக்கப் பட்டிருக்கும். சிவாஜி, அதாவது சத்ரபதி சிவாஜி போலக்கூட, சித்திரக்க்கப்பட்டிருப்பார்! முஸ்லீம்கள் கூட்டம் என்றால் கேட்கவே வேண்டாம், குல்லாவோடு காட்சியளிப்பார். போஸ்டர்கள், பேனர்களும் அப்படியே! தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பும் விடுதலைச் சிறுத்தைகளும் கலந்து பேசி நல்லிணக்கத்தோடு, நடைபெறவுள்ளவிழா, உள்ளாட்சித் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்[1].
இஸ்லாமிய இயக்கங்களுடன் இணைந்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டி: திருமாவளவன்: சென்னையில் செய்தியாளர்களிடம் மேலும் பேசிய தொல்.திருமாவளவன், “இந்தக் கூட்டணியில் மொத்தம் உள்ள 9 மாநகராட்சி மேயர் பதவிகளில், சென்னை உள்பட 3 மாநகராட்சிகளில் இஸ்லாம் கூட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 மாநகராட்சிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும். மேயர் தொகுதிகளில் மட்டும்தான் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சி, கவுன்சிலர், வார்டுகளில் யாருக்கு அதிக வாய்ப்பு இருக்கிறதோ அவர்கள் போட்டியிடுவார்கள். அனைத்துக் கட்சிகளுக்கும் கூட்டணி சேர அழைப்பு விடுத்தோம். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் அழைப்புக்கு யாரும் உடன்படவில்லை. பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் கூட்டணி சேர அழைப்பு விடுத்தோம். ஆனால் அவர்கள் யாரும், மாற்று அணிக்கு தலைமை பொறுப்பேற்க முன் வரவில்லை. விருப்பமும் இல்லை என்று நான் நினைக்கிறேன். அதனால்தான், சிறுபான்மை சமூகமும், தலித் அமைப்பும் சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளோம். இதுவரை நடந்த தேர்தல்களில் எல்லாம் திராவிட கட்சிகள் அனைத்தும் தாழ்த்தப்பட்டவர்கள் மீது சவாரி செய்து வந்திருக்கிறது. ஆகவே சிறுபான்மையினரும், தாழ்த்தப்பட்டவர்களும் ஒன்றிணைந்தால்தான் மாற்றம் ஏற்படும். ஒடுக்கப்பட்டோர் மற்றும் ஜனநாயகம் உரிமையை காக்க வேண்டும். மக்கள் தொகையில் சிறுபான்மையினருக்கும், தாழ்த்ப்பட்டோருக்கும் அதிகார பகிர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளாட்சித் தேர்தலில் பிரச்சாரம் முன்னெடுக்கப்படும்”, என்றார்.
உள்ளாட்சி தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி தனித்து போட்டி: உள்ளாட்சித் தேர்தலில், மனிதநேய மக்கள் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இணைந்து போட்டியிட்டது. கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு அ.தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடித்தது.”உள்ளாட்சித் தேர்தலிலும் எங்கள் கூட்டணி நீடிக்க பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும், உறுதியான முடிவை கூறாமல் காலதாமத தந்திரத்தை அ.தி.மு.க., கடைபிடித்தது. இதை கருத்தில் கொண்டும், தொண்டர்களின் உணர்வுகளை கவனத்தில் கொண்டும் மனிதநேய மக்கள் கட்சி, உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது’ என, தெரிவித்துள்ளார்[2].
முஸ்லீம்களின் யுக்தியா? இப்படி நிற்பது, முஸ்லீம்களின் யுக்தியா என்று ஆராய வேண்டியுள்ளது. தனித்து நிற்போம், சேர்ந்து நிற்போம் என்று நின்று, ஓட்டுகளைப் பிரிப்பதால், ஓட்டு வங்கிகளக செயல்படும் முஸ்லிம்கள் வெற்றிப்பெற, திருமா உதவுகிறாரா என்றும் எண்ணத்தோன்றுகிறது. 3/9 அதாவது 33.33% கொடுத்து விட்டேன் என்றும் நாளைக்குச் சொல்லிக் கொள்ளலாம். எப்படியாகிலும் “காபிர்-மோமின்” உறவு தொடர்கிறதா இல்லையா என்று, நம்பிக்கையாளர்கள் பார்த்த்க் கொள்ளலாம்.
[2] தினமலர், உள்ளாட்சிதேர்தலில்மனிதநேயமக்கள்கட்சிதனித்துபோட்டி, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=322162
அண்மைய பின்னூட்டங்கள்