Archive for the ‘ஆராய்ச்சி செய்யும் போலீஸார்’ category

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகிய நிலை (1)

ஒக்ரோபர் 29, 2022

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகிய நிலை (1)

22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட் கிழமை) வரை நடந்துள்ளவை என்ன?: 24-10-2022 அன்று தீபாவளி என்பதால், துணிமணி, பட்டாசு, ஸ்வீட் வாங்க வேண்டும், எல்லோருமே ஊருக்குச் செல்ல வேண்டும், வாங்கியதை குடும்பத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டும், சந்தோஷமாக கொண்டாட வேண்டும், என்று லட்சக்கணக்கில் மக்கள் வாகனங்களில், பேருந்துகளில், ரெயில்களில் சென்று கொண்டிருந்தனர். அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்ப, பட்ஜெட்டில் தீபாவளி கொண்டாட திட்டத்துடன் இருப்பர், சென்று கொண்டிருந்தனர். ஆனால், அப்பொழுது, கோயம்புத்தூரில் சிலர் வேறு விதமாக திட்டம் போட்டிருந்தனர் போலும். வெகுஜன மக்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளியை நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, ஊடகங்களில் வழக்கம் போல, தீபாவளி எதிர்ப்பு, பட்டாசு மறுப்பு, நாத்திக-நராகாசுரன் ஆதரவு செய்திகள் வந்து கொண்டிருந்தன[1]. பட்டாசு வெடிக்க வேண்டாம், குறிப்பிட்ட நேரங்களில் தான் வெடிக்க வேண்டும், மீறினால், வழக்கு, புகார், தண்டனை என்றெல்லாம் பெரிய போலீஸ் அதிகாரிகள் மிரட்டியதாக செய்திகள்[2]. அதே நேரத்தில் பட்டாசு விற்பனை பெருக்க வேண்டும் போன்ற பிரச்சாரமும் இருக்கிறது. இன்னொரு பக்கமோ, கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது போன்ற செய்திகள்.

இந்நிலையில் தான் கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்செய்திகள் வர ஆரம்பித்தன: 22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட் கிழமை) வரை நடந்துள்ள நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்தால், இந்த கோவை கார் குண்டு வெடிப்பு திட்டமிட்டு நடந்துள்ள-நடத்தப்பட்ட செயல் என்று அறிந்து கொள்ளலாம். பிறகு, மற்ற செய்திகள் எல்லாம் வெளிவர ஆரமித்துள்ளன. ஊடகங்களின் பாரபட்சமிக்க, செய்தி வெளியீட்டுப் போக்கும், “ஆபத்திலிருந்து” மெதுவாக, “குண்டு வெடிப்பு” என்று முடிந்துள்ளது. இருப்பினும் இந்த தீவிரவாதிகள், பயங்கரவாதிள் எல்லோருமே மரியாதையுடன் தான் குறிப்பிடப் படுகிறார்கள். மத்திய உளவுத்துறை காவல்துறையினர் ஜமிஷா தொடர்பான பல்வேறு தகவல்களுடன் அவரை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசுக்கு 2018ம் ஆண்டு முதன் முதலில் தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது[3]. தமிழக காவல்துறையினர் இதனை பெரிதாக கருதவில்லை என்று கூறப்படுகிறது[4].

22-10-2022 (சனிக்கிழமை இரவு): சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு ஜமேஷா முபின் வீட்டில் இருந்து அவர் உட்பட 5 பேர் மர்மபொருளை தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், முபின் தன்னுடைய வீட்டை காலி செய்ய வேண்டும் என்று கூறியதாகவும், அந்தப் பெட்டியில் ஸ்கிரேப் பொருள்கள் இருந்ததாக முபின் விளக்கம் அளித்ததாக கூறியுள்ளனர். அந்த சிசிடிவி காட்சிகளில் உள்ள மற்ற நபர்கள் 4 பேர் யார் என்பது குறித்து பிறகு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர், என்றெல்லாம் செய்திகள் பிறகு வெளி வந்தன. அப்படியென்றால், இவர்களும் முன்னமே இக்காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். சுற்றியுள்ளவர்கள், இவர்களது நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு, எச்சரித்திருக்கலாம், புகார் கொடுத்திருக்கலாம். ஆனால், முஸ்லிம்கள் எனும் போது, அமைதியாக இருந்து விட்டனர் போலும். ஒரு ஊடகத்தால், அங்கு செய்தி-விவரங்கள் சேர்க்கச் சென்றபோது, ஜன்னல் கதவுகளை அடைத்துக் கொண்டனர், யாரும் பேச முன்வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. 

23-10-2022 (ஞாயிற்றுக் கிழமை):  அதிகாலை சுமார் 4:45 மணி அளவில், கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு பெரும் வெடிச் சத்தம் கேட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் அங்கு வந்து பார்த்துள்ளனர். முதலில், ஏதோ பட்டாசு சத்தம் என்று கூட நினைத்திருக்கலாம். அந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதிகாலை 4 மணி அளவில் சாலையில் கார் செல்வது, கார் நிற்பது பின்பு வெடித்து சிதறும் காட்சிகள் வெளியாகி உள்ளது. விடியற்காலை காரில் உள்ள காஸ் சிலிண்டர் வெடித்து ஒரு ஆள் இறந்தான். செல்போன் உதவியுடன் இறந்தவன் அடையாளம் காணப் பட்டான். வெடித்து சிதறிய காரில் இன்னொரு வெடிக்காத சிலிண்டர் மற்றும் சுற்றிலும் ஆணிகள், பால்ரஸ் போன்றவையும் சிதறிக் கிடந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தடயவியல் துறையினர் காரிலிருந்து  2 முதல் 3 கிலோ 1.5 இன்ச் ஆணிகள் மற்றும் பால்ரஸ் குண்டுகளைக் கண்டறிந்துள்ளனர். ஆணி, பால்ரஸ் வேறு பணிக்காக கொண்டு செல்லப்பட்டதா அல்லது வெடி விபத்தை நிகழ்த்தும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டவையா என்பதை நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஆக, நிச்சயமாக கோவை போலீஸார் சென்னை உயர் அதிகாரிகளுக்கு தெரியப் படுத்தி, விசயம் முதலமைச்சருக்குச் சென்றிருக்கும்.

பிற்பகல் – 23-10-2022 (ஞாயிற்றுக் கிழமை):  தொடக்கத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்தை கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி தாமரைக் கண்ணன் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இந்தச் சம்பவத்தின் நிலைமை அறிந்து சென்னையிலிருந்து டி.ஜி.பி சைலேந்திர பாபு விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கோவைக்கு வந்தார். வெடி விபத்து நிகழ்ந்த பகுதியை ஆய்வு செய்தார். அதாவது, விசயம் சாதாரணமானது அல்ல என்பது தெரிந்து விட்டது. பிரசித்தி பெற்ற உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு மட்டுமின்றி, தீபாவளியையொட்டி, இப்பகுதியில் துணி எடுப்பதற்காக அதிக அளவில் மக்கள் கூடும் நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது கோவை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மசூதிகள் முன்பு போலீஸார் பாதுகாப்புப்பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

கார் குண்டு வெடித்தலில் இறந்தவன் ஜமேசா முபின்: போலீஸார் செல்போன், கார் எண் முதலியவற்றை வைத்துக் கொண்டு விவரங்களை சேகரித்தனர். ஜமேசா முபின் என்பவன் தான் இறந்திருக்கிறான் எனூ முடிவானது. அவன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர். அப்பா இல்லை. அம்மா மட்டும் தான். அவர் மனைவிக்கு செவி மற்றும் பேச்சுத்திறன் இல்லை. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஜமேசாவுக்கும் இதயம், கண் ஆகியவற்றில் சில பிரச்னைகள் உள்ளன. முன்பு பழைய புத்தகக் கடை நடத்தி வந்தவர், பிறகு துணி வியாபாரம் செய்து வந்திருக்கிறார். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர். அதனால்தான் கடந்த 2019ம் ஆண்டு இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு பிறகு ஜமேசா முபினிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்த கார் வெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு போலீஸ் அவர் வீட்டில் நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு கடிதத்தில் சுற்றிப் பார்க்கவுள்ள சுற்றுலா தலங்கள் என எழுதி ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம், ஆணையர் அலுவலகம், ரேஸ்கோர்ஸ், விக்டோரியா ஹால் (மாநகராட்சி அலுவலகம்) ஆகிய பகுதிகளை குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம், இந்தப் பகுதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இப்படி செய்திகள்……

வாட்ஸ்ஆப் பதிவு, இறப்பு உண்மை என்றால், அது தற்கொலை குண்டு வெடிப்பு ஆகிறது: விபத்து நடந்தக் காரை ரூ.10,000க்கு தல்காவிடம் இருந்து வாங்கியுளளார். இப்படி கைது செய்யப்பட்ட  அனைவரும், இந்த சதித் திட்டத்தில் ஒவ்வொரு பணியைச் செய்துள்ளனர். ஜமேசா அவ்வபோது கேரளா சென்று, அங்கு ஏற்கெனவே என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்டுள்ள அசாருதீன் என்பவரைச் சந்தித்து வந்துள்ளார். ஆங்காங்கே சிறுக சிறுக சேகரித்து 75 கிலோ வெடி மருந்துக்கான வேதிப் பொருள்களை வாங்கியுள்ளனர். வெடி பொருள் தயாரிப்பது எப்படி என்பதை யூ-ட்யூபில் தேடிப் பார்த்திருக்கிறார். கைது செய்யப்பட்டவர்கள் இல்லாமல், இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கிறது.” என்றனர். …….’வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில், என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரியும் போது எனது தவறை மன்னித்து விடுங்கள், குற்றங்களை மறந்துவிடுங்கள் எனது இறுதி சடங்கில் பங்கேறுங்கள். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்,” என்று பதிவிட்டு உள்ளார். இதற்கான புகைப்படத்தை அவர் பதிவேற்றி இருக்கிறார். இதை பற்றி விசாரிக்க வேண்டும். இது ஐஎஸ்எஸ் தொடர்புடைய வாசகம். அவர்கள்தான் தற்கொலை தாக்குதல்களுக்கு முன்பாக இப்படி எல்லாம் போஸ்ட் செய்வார்கள்…..இப்படியும் செய்திகள்! வாட்ஸ்-ஆப் பதிவு, இறப்பு உண்மை என்றால், அது தற்கொலை குண்டு வெடிப்பு ஆகிறது, “சூஸைட் பாம்பர்” என்றாகிறது!

© வேதபிரகாஷ்

29-10-2022


[1]  திக-திமுகவினர் தொடர்ந்து தங்களது ஊடகங்களில் இத்தகைய பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், உலகம் முழுவதும் கொண்டாடப் பட்டு, உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

[2]  சுவாசிக்கும் காற்று மாசு படுகிறது என்ற கோணத்தில் உச்சநீதி மன்றமே வரையறை கொடுத்திருப்பதால், அதன் மீது, மாநில அரசுகள் மற்றும் இதர நிறுவனங்கள், இயக்கங்கள் இதை பெரிது படுத்தி, பிரச்சாரம் செய்கின்றன.

[3] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், உளவுத்துறைஅன்றேகொடுத்த சிக்னல்!.. கிடப்பில் போடப்பட்டதா ? கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம், Raghupati R, First Published Oct 28, 2022, 7:56 PM IST; Last Updated Oct 28, 2022, 8:34 PM IST.

[4] https://tamil.asianetnews.com/tamilnadu/coimbatore-car-bomb-blast-tn-police-ignored-central-intelligence-agency-warning-rkgw4i

ஜைப்புன்னிஸா காஜிக்கு தண்டனையென்றால், சஞ்சய் தத்தை எப்படி மன்னித்து விட்டுவிடலாம் – நடிகனுக்கு ஒரு நீதி, மற்றவருக்கு ஒரு நீதியா?

மார்ச் 26, 2013

ஜைப்புன்னிஸா காஜிக்கு தண்டனையென்றால், சஞ்சய் தத்தை எப்படி மன்னித்து விட்டுவிடலாம் – நடிகனுக்கு ஒரு நீதி, மற்றவருக்கு ஒரு நீதியா?

Sanjaya with long beard - a sufi looking

சூபி ஞானிகளை, மெய்ஞானிகளையே வென்றுவிடும் தோற்றம் – கைதாகிய நிலையில்.

மார்க்கண்டேய கட்ஜு யாதாவது ஒரு பெரிய பதவியை எதிர்பார்க்கிறாரா?: ஜைப்புன்னிஸா காஜி அல்லது ஜைப்புன்னிஸா காத்ரி என்ற பெண்ணும் அனீஸ் இப்ராஹிம் மற்றும் அபு சலீம் போன்ற தீவிர-பயங்கரவாதிகளுக்காக ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது[1]. ஆனால், மார்க்கண்டேய கட்ஜு, குறிப்பாக சஞ்சய்தத்திற்காக மட்டும் பரிந்துரைத்து கடிதம் எழுதியுள்ளதாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றனர்[2]. மறைமுகமாக, இதனை கேள்வி கேட்பது போல, ஊடகங்கள், அவனைத் தவிர இன்னுமொரு குற்றவாளியும் அதே குற்றத்திற்காக, ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, அவளுக்காகவும் பரிந்துரைக்க வேண்டியதுதானே என்று கேட்க, ஆஹா, பேஷ், பேஷ், அதற்கென்ன செய்து விடலாமே என்று பாட்டுப் பால ஆரம்பித்து விட்டார்[3].

Sanjaya with long beard sufi look

கைதாகி, வீர நடை போட்டு வரும், மெய்ஞான முனிவர் தோற்றத்தில்.

முஸ்லீம்இந்து வேடங்களை வாழ்க்கையில் சஞ்சய் தத் போடுவது ஏன்?: சஞ்சய்தத் நடிகன் என்பதால், வேடம் போட அவனுக்கு சொல்லித்தர வேண்டிய அவசியம் இல்லை. திடீரென்று இந்து போல பெரிதாக நாமம், காவி துண்டு சகிதம் காட்சியளிப்பதும், பிறகு தாடி, பச்சைநிற துண்டு அல்லது உடை அணிந்து வருவதும், நீதிமன்றத்திலேயே பார்த்திருக்கலாம். நீதிமண்ரத்திற்கு வரும்போதே, ஒருமுறை ஏதோ முஸ்லீம் போல பெரிதாக தாடி வைத்துக் கொண்டு வருவது, மறுமுறை, பெரிய நாமம் போட்டுக் கொண்டு வருவது என்ற வேடங்களை பல புகைப்படங்களில் பார்க்கலாம்.

Sanja with different look prompting Yasar Arafat

யாசர் அராபத்தை நினைவூற்றும் அந்த பாம்புத்தோல் டிஸைன் துண்டோடு.

முஸ்லீம்களான இந்தி நடிகர்கள் இந்துக்களைப் போல ஏன் நிஜ வாழ்க்கையில் நடித்து ஏமாற்ற வேண்டும்?: சுனில் தத், நர்கீஸ் என்ற முஸ்லீம் நடிகையை மணந்து கொண்டதும் முஸ்லஈம் ஆகிவிட்டார். அதாவது, ஒரு முஸ்லீமை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால், ஆணோ-பெண்ணோ முஸ்லீமாக வேண்டும். அப்பொழுது தான், நிக்காவே செய்து வைப்பார்கள். ஆனால், இந்தி நடிகர்கள் பெரும்பாலோனோர் முஸ்லீம்களாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் இந்துக்கள் போல பெயர்களை வைத்துக் கொண்டு, உடைகள் அணிந்து கொண்டு, மீசை-தாடி இல்லாமல் நடித்து வந்தார்கள். சஞ்சய் தத் குடும்பமும் அவ்வாறே செய்து வந்துள்ளது. சஞ்சய் தத்,, அன்று தனது தந்தையிடம் சொன்னது, “எனது நரம்பு-நாளங்களில் முஸ்லீம் ரத்தம் ஓடுகின்றது, அதனால், மும்பையில் நடப்பதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை”, என்றதாகும். அதாவது, மொரிஸியசிலிருந்து திரும்பி வந்து போலீஸ் நிலையத்தில் இவ்வாறு சொல்கிறான்.

Sanjay with beard and all

இது புதுவித தாடி-மீசை தோற்றத்தில்.

பிரச்சினை எனும் போது “நான் முஸ்லீம்” அல்லது “முஸ்லீம் என்றதால் தான் என்னை இப்படி செய்கிறார்கள்” என்று குற்றம் செய்தவர்கள் கூறவேண்டியது ஏன்?: முதன் முதலில் இந்த தந்திரத்தைக் கையாண்டவர், முஹம்மது அஸாரத்தூனனென்ற கிரிக்கெட் ஆட்டக்காரர் தான். பிரச்சினை எனும் போது “நான் முஸ்லீம்” அல்லது “முஸ்லீம் என்றதால் தான் என்னை இப்படி செய்கிறார்கள்” என்று குற்றம் செய்தவர்கள் கூறவேண்டிய ரஅசியத்தின் பிண்ணனி இதுதான். அதாவது, இந்திய சட்டங்கள் என்களுக்குப் பொருந்தாது, ஷரீயத் சட்டம் தான் எங்களுக்கு பொருந்தும் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் போலும்!

Sanja coming to court

அஹா, நெற்றியில் நெடிய நாமம் – ஆமாம் “சாப்ரென் டெரர்” என்று சொல்கிறார்களே, அந்த நிறத்துடன்.

Rakesh Maria told Sanjay to tell his father the truth, and Sanjay conceded that he had been in possession of an assault rifle and some ammunition that he had got from Anees Ibrahim. Sunil Dutt wanted to know the reason why. He was not prepared for the answer[4]: “Because I have Muslim blood in my veins. I could not bear what was happening in the city.” A crestfallen Sunil Dutt left the police headquarters. It was a moment almost worse than the shock of the previous day. ராகேஷ் மரியா என்ற போலீஸ் அதிகாரி, உண்மையைச் சொலும்படி கூற, சஞ்சய் தனது தந்தையிடம் அனீஸ் இப்ராஹிமிடமிருந்து ஆயுதங்களைப் பெற்றதை ஒப்புக்கொண்டான். சுனில் தத் காரணத்தைக் கேட்டபோது, அவனுடைய பதிலைக் கேட்க தயாரக இல்லை. அப்பொழுது சொன்னது தான், “எனது நரம்பு-நாளங்களில் முஸ்லீம் ரத்தம் ஓடுகின்றது, அதனால், மும்பையில் நடப்பதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை”!

Sanjay Dutt worshipping in a Karnataka temple

பக்தகோடிகளை முழிங்கிவிடும் அபாரமான தோற்றம் – பூஜாரி கெட்டார்.

கீழே கொடுக்கப்பட்டுள்ளவை, “தெஹல்கா”விலிருந்து எடுத்தாளபட்டுள்ள விவரங்கள் ஆகும், அதற்கு “தஹல்கா”விற்கு நன்றி:

Sanjay-Dutt with Tilak

ஆளை விடுங்கய்யா, இதெல்லாம் சகஜம்.

Quite in contrast to what he felt in 1993, Sanjay’s forehead was smeared with a long red tilak on judgement day — November 28, 2006. The air inside the TADA courtroom was heavy with tension and fear. An ashen-faced Sanjay sat head down next to his friend and co-accused Yusuf Nullwala, whom he had called from Mauritius and asked to destroy one of the AK-56s in his possession. A few rows behind them was 64-year-old Zaibunissa Kazi, another co-accused[5]. ஜைப்புன்னிஸா காஜி அல்லது ஜைப்புன்னிஸா காத்ரி சஞ்சய்தத்திற்கு பின்னால் உட்கார்த்திருந்தாள். இவனோ நெற்றியில் பெரிய நாமத்தைப் போட்டுக் கொண்டு, தனது நண்பனான யுசூப் நல்வாலாவிற்கு அருகில் உட்கார்ந்திருந்தான்.
ஜைப்புன்னிஸா காஜி அல்லது ஜைப்புன்னிஸா காத்ரி, சஞ்சய் கொடுத்த ஆயுதங்களை தனது வீட்டில் வைத்திருந்தாள். அதனால், அய்யுதங்கள் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டாள். The judge P. D. Kode then called out Zaibunissa Kazi’s name. Two of the three AK-56 rifles, some ammunition and 20 hand grenades returned by Sanjay had been kept at her house for a few days. The judgement was as severe as the previous one. She was held guilty under Section 3(3) of TADA. The sub-section defines a convict as one who “conspires or attempts to commit, or advocates, abets, advises or incites or knowingly facilitates the commission of a terrorist act or any act preparatory to a terrorist act.”
Tension was visible on the face of Satish Maneshinde, one of Sanjay Dutt’s key lawyers. He was later to say this to a Tehelka spycam: “The moment she was convicted, I thought Sanjay too would be convicted under TADA.” (See box on Page 12) He had reasons for admitting this. Unlike his client Sanjay, who had asked for the weapons, stored them, asked for them to be destroyed and even admitted to his association with Anees Ibrahim, Zaibunissa Kazi had only stored them for a few days. Her role was in no way comparable to Sanjay’s and nobody knew it better than Sanjay’s lawyer. மும்பை வெடிகுண்டு கொலைகள் நடந்தேரியப் பிறகு, சஞய் வீட்டில், இந்த ஆயுதங்களில் சில கண்டெடுக்கப்பட்டன, மற்றவை ஜைப்புன்னிஸா வீட்டில் மறைத்து வைக்கப் பட்டன. வேறுவழியில்லாமல், சுனில் தத், போலீஸாருக்க்கு விஷயத்தை தெரிவித்தார். ஏப்ரல் 19, 1993 மொரிஸியஸிலிருந்து வந்த சஞ்சய் போலீஸரிடம் அரண்டர் ஆனான்.
குற்றத்தை மறைப்பதற்காக, மன்சூர் அஹ்மத் சஞ்சய் வீட்டிகுச் சென்று ஆயுதங்கள் அடங்கிய பையை எடுத்துக் கொண்டு ஜைப்புன்னிஸா வீட்டில் மறைத்து வைத்தனர். A day earlier, another co-accused Manzoor Ahmed had similarly been held guilty under Section 3(3) of TADA. Manzoor’s role too was clear in Maneshinde’s head: he had been called by gangster Abu Salem — like Manzoor, also from Azamgarh in UP — and the two had driven to Sanjay’s house to pick up the bag that was then kept at Zaibunissa Kazi’s house. Both she and Manzoor face the prospect of spending a minimum five years in jail, if not a life term.
 As for Zaibunissa Kazi, she had allowed her house to be used as a transit point. The weapons were meant neither for her nor for Manzoor. The evidence on record shows that their offence was minor when compared to that of Sanjay who kept three AK-56s and hand grenades for close to a week and continued to retain one assault rifle for almost a month after serial blasts rocked Bombay. Apprehending his arrest, Sanjay had the weapons destroyed and, quite unlike Manzoor, he made seven calls to Anees. விஷயத்தை அறிந்து கொண்டுதான், சஞ்சய் அந்த ஆயுதங்களை அழிக்க முடிவெடுத்துள்ளான். அதற்கு அனீஸ் இப்ராஹிம் உதவியுள்ளான்.
மூன்று கண்சாட்சிகளும் சஞ்சய் ஆயுதங்களை வைத்திருந்ததை உறுதி செய்துள்ளனர். ஆகையால், தான் பாதுகாப்பிற்காக வைத்திருந்தான் என்ற ஜோடிப்பு வாதம் பொய்யானது. At least three witnesses testified that Sanjay Dutt kept assault rifles and hand grenades. How does this justify his ‘self-protection’ theory. இருப்பினும் அவனுடைய வக்கீல் வாதாடி வந்துள்ளது நோக்கத்தக்கது[6].

Sanjay with saffron shawl

நாமம் தான் காவியில் போட முடியுமா, இதோ துண்டும் போட முடியும்.

போலீஸார் இன்று கூட சொல்வதென்னவென்றால், சஞ்சய் ஆயுதங்களை மட்டு வைத்திருக்கவில்லை, இதற்கு மேலேயும் செய்துள்ளான் என்பதுதான்[7]. விசாரணையில் பல விஷயங்கள் வெளிவந்துள்ளபோதிலும், சுனில் தத், தன்னுடைய அரசியல் செல்வாக்கு வைத்துக் கொண்டு மறைக்க பாடுபட்டுள்ளார். தான் ஒரு முஸ்லீம் என்றும் சொல்லிக் கொண்டு மதரீதியில் பேசியுள்ளார்[8]மானால், மேலே குறிப்பிட்டுள்ளது போல், இவனோ சொன்னதற்கு மாறாக[9], நெற்றியில் பெரிய நாமத்தைப் போட்டுக் கொண்டு, தனது நண்பனான யுசூப் நல்வாலாவிற்கு அருகில் உட்கார்ந்திருந்தான். மன்சூர் அஹமத்இன் மனைவி சொன்னதாவது[10], “சஞ்சய் பெரிய ஆள், நிறைய பேர்களை தெரியும், பணம் இருக்கிறது. நான் என்ன செய்வது, எனக்கும் பணம் இருந்தால் பெரிய வக்கீலை அமர்த்தியிருப்பேன்

Sanjay-Dutt-after-paying-obeisance-at-Golden-Temple-in-Amritsar

அட, நாமம் என்ன, என்னவேண்டுமானாலும் செய்வேன் – அமிர்தசர்சில் இந்த கோலம்!

sanjay-dutt-at Ajmir dargah posing as Muslim

அட போய்யா, நான் முஸ்லீம், இப்படித்தான் இருப்பேன் – ஆஜ்மீரிலோ இச்சுமைதான் – என்னே லட்சியம்!

© வேதபிரகாஷ்

24-03-2013


[1] Zaibunnisa Kadri, who acted as a conduit for the arms without express realisation of the contents of the package, were charged under the more rigorous provision.

Read more at:http://indiatoday.intoday.in/video/zaibunnisa-kadri-sanjay-dutt-1993-mumbai-blasts-anees-ibrahim-abu-salem/1/259373.html

[8] In his first confessional statement, made to his father and Congress MP Sunil Dutt who wanted to know why he had been stashing deadly arms, Sanjay Dutt said: “Because I have Muslim blood in my veins. I could not bear what was happening in the city.”

[10] Sanjay Dutt is a big man. He has sources. What do we have? I don’t even have money to pay the lawyer any more. Sanjay Dutt can hire the best lawyers. If I had money, I could also have hired a good lawyer.

http://archive.tehelka.com/story_main28.asp?filename=Ne240307Sanjay_dutt_CS.asp

தீவிரவாத-பயங்கரவாத தடுப்பு விஷயத்தில் சோனியா அரசு தயங்குவது ஏன்?

பிப்ரவரி 23, 2013

தீவிரவாத-பயங்கரவாத தடுப்பு விஷயத்தில் சோனியா அரசு தயங்குவது ஏன்?

Afzal-Hyderabad-Kasab-nexus

ஷிண்டே ஏன் இப்படி இருக்கிறார்?: உள்துறை அமைச்சகம் கூறுவதிலிருந்து, உள்துறை அமைச்சர் பலமுறை முன்னுக்கு முரணாக பேசுவது, அவர் ஒன்று தமது துறையினைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார் அல்லது அவரை யாரோ சுயமாக இயங்குவதற்கு தடையாக உள்ளனர் அல்லது பொம்மை மாதிரி ஆட்டிவைக்கின்றனர். கற்பழிப்பு சட்ட மசோதா விஷயத்தில் முழுக்க-முழுக்க சிதம்பரமே செயல்பட்டு இவர் ஓரங்கட்டப்பட்டது, அந்த நீதிபதி சொன்னதிலிருந்தும், சோனியவே அவரிடத்தில் மன்னிப்புக் கேட்டதிலிருந்தும் தெள்ளத்தெளிவானது. ஆகவே, தனது அமைச்சகம் இந்திய முஜாஹித்தீனின் கைவேலைத் தெரிகிறது என்றாலும், இவர் ஏதோ பொதுவாகத்தான் பேசி வருகிறார். லோக் சபா மற்றும் ராஜ்ய சபாக்களில் அவர் வாசித்த அறிக்கை ஒரு சடங்கு போன்று இருந்தது. சம்பந்தப்பட்டத் துறைகள், பாதுகாப்பு நிறுவன கள் முதலியவற்றின் பெயர்களைக் கூட சரியாக உச்சரிக்க முடியாமல் தடுமாறினார். வெடி குண்டு வெடித்ததும் ஏன் ஐதராபாத் செல்லவில்லை என்று கேட்டதிற்கு டிக்கெட் கிடைத்தல் செல்வேன், பாதுபகாப்பு விஷயமாக செல்லவில்லை என்றேல்லாம் உளறிக்கொட்டினார்[1]. வெளிப்படையாகத் தெரியும் தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை கண்டிக்க, தடுக்க, அடைலளம் காட்டக் கூட்டத் தயங்குவது நன்றாகவே தெரிகின்றது.

Hyderabad blasts - locations with time

குண்டு வெடித்த இடங்கள், நேரங்கள்

தடயங்கள் குறிப்பாகக் காட்டினாலும் ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர்?: தடயத்துறை வல்லுனர்கள் பரிசோதித்து விட்டு, அம்மோனியம் நைட்ரேட், யூரியா, பெட்ரோல் முதலியவை உபயோகப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்[2]. அதுமட்டுமல்லாது, மூன்று சந்தேகிக்கப்படும் நபர்கள் உத்திரபிரதேசம், பீஹார், ஜார்கெண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்ததும் போலீசார், தேசிய புலனாய்வுத்துறைக்கு உதவ தயாராகினர். ஐதராபாதிலேயே, ஒரு லாட்ஜில் தங்கி திட்டம் வகுத்ததையும் தெரிந்து கொண்டனர்[3].

IED - cycle bombs placed - locations

ஐ.ஈ.டி. விவரங்கள்

கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப் பட்டவன் எப்படி உலா வருகிறான்?: ரியாஸ் பட்டகல் என்பவன் பாகிஸ்தானிலிருந்து ஜிஹாதிகளை இந்தியாவில் இயக்கி வருகிறான் என்று வெளிப்படையாக செய்திகள் வந்துள்ளன. தடை செய்யப்பட்ட இயக்கங்கள் வெவ்வேறு பெயர்களில் இயங்கி வருகின்றன மற்றும் அதே அங்கத்தினர்கள் அவற்றில் உள்ளனர் என்றும் தெரிந்துள்ளனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அவர்களை கண்காணிப்பதும் இல்லை. கள்ளநோட்டு விவகாரத்தில் வங்காளத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப் பட்ட யாஸின் பட்டகல் தான் இப்பொழுது இந்தியாவில் செயல்படுகிறான், அவனது  உறவினன் ரியாஸ் பாகிஸ்தானில் உட்கார்ந்து கொண்டு ஆட்டுவிக்கிறான். கல்காத்தாவில் கைது செய்யப்பட்டு, ஆலிப்பூர் ஜெயிலில் இருந்த இவன் வெளியே வந்து இப்பொழுது குண்டுகள் வைத்துக் கொலை செய்கிறான்[4]. ஆனால், இந்தியா ஒன்றும் செய்வதில்லை. அதாவது இப்பொழுதைய சோனியா ஆட்சியாளர்கள் “சட்டப்படி செய்கிறோம்” என்று பாட்டிப்பாடி காலந்தள்ளி வருகின்றனர்.

CCTV images pointing to the suspects

சைக்கிளில் வந்தவர்கள் – குண்டு வைத்தவர்களா?

கள்ளநோட்டு கும்பலும், ஜிஹாதிகளும், போலீசாரும்: ஜிஹாதி கள்ள நோட்டு கும்பல், இந்தியா முழுவதும் தாராளமாக செயல் பட்டு வருகிறது. பலமுறை இவர்கள் எல்லா மாநிலங்களிலும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இருப்பினும், அவர்களது பின்னணி, அவர்களது விவரங்கள் புகைப்படங்கள் முதலியன இந்தியா முழுவதுமாக காவல்துறை, பாதுபாப்புத் துறை முதலியோருக்குக் கிடைக்கும் வகையில் விநியோகப்படுவதில்லை. இதனால், ஒரு மாநிலத்தில் குற்றம் செய்து விட்டு, மற்ர மாநிலங்க:உக்குச் சென்ரு விடுகின்றனர். அல்லது அண்டை நாடுகளான, நேபாளம், பங்களாதேசம், பாகிஸ்தான் என்று சுற்றி வருகின்றனர். துபாயில் ஜாலியாக அனுபவித்து விட்டு, இந்தியாவில் குரூரக் குற்றங்களை, கொலைகளை செய்து வருகின்றனர். இந்த கோணத்தில் தான் காஷ்மீர் விஷயமும் வருகின்றது. காஷ்மீரத்தை மையமாக வைத்துக் கொண்டு இந்த தீவிரவாத-பயங்கரவாத கும்பல்கள் ஊடுறுவி வருகின்றன. அங்கு அவர்கள் “சுதந்திரப் போராளிகள்” என்று உலா வருகின்றனர்.

IM-email-2010-1

இஃதிய முஜாஹித்தீனின் ஈ-மெயில்

மாலைநேரத்தில், கோவிலுக்குப் பக்கத்தில் குண்டுகள் வெடிப்பது ஏன்?: பெர்ம்பாலான ஜிஹாதி வெடிகுண்டுகள் மாலை நேரத்தில் தான் கூட்டமுள்ல பொது இடங்களில் மற்றும் கோவிலுகுப் பக்கத்தில் வெடித்துள்ளன. குறிப்பாக தீபாவளி நேரத்தில். புமின இடமான வாரணாசி போன்ற இடத்டிலும் வெடித்துள்ளன. ஆகவே, இது இந்துக்களுக்கு எதிரானது என்று வெளிப்படையாகவே தெரிகின்றது. இந்திய முஜாஹித்தீனும் இதனை முன்னர் ஈ-மெயில்களில் வெளிப்படையாகவே பதிவு செய்துள்ளனர். ஹாவிஸ் சையதும் வெளிப்படையாகவே பேசிவருகிறான். பிறகு, ஏன் சோனியா அரசு மெத்தனம் காட்டுகிறது?

Blasts taken place 2006-2013

ஆப்கானிஸ்தான் தாலிபான்கள், பாகிஸ்தான் தீவிரவாதிகள், காஷ்மீர பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டால், இந்தியா என்ன செடய்யும்?: நேட்டோப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தீர்மானித்தாகி விட்டது[5]. இதை இந்தியா எதிர்த்தாலும், அமெரிக்கா கேட்பதாக இல்லை[6]. நேட்டோப் படை வெளியேற-வெளியேற[7] தாலிபான் மற்ற ஜிஹாதிகள் முழுவதுமாக சுதந்திரமாகி விடுவார்கள். அவர்களைத் தட்டிக் கேட்க யாரும் இருக்க மாட்டார்கள்[8]. குறிப்பாக இந்தியாவைத் தாக்குவோம் என்று அலையும் ஜிஹாதிகள் துணிச்சல் பெறுவார்கள். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் முதலியவற்றை ஆட்டிப் படைப்பார்கள். பாகிஸ்தான் எல்லை வழியாக ஊடுருவி இந்தியாவிற்குள் நுழையக் கூடும்[9]. ஆக வரும் ஆண்டுகளில் இத்தகைய குண்டு வெடிப்புகள் இன்னும் அதிகமாகும் என்று ராணுவ வல்லுனர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்[10]. காஷ்மீரத்தில் இன்னும் கிளர்ச்சிகள், போராட்டங்கள் அதிகமாகும். அதனை ஊக்குவித்து, அந்த ஜிஹாதிகள் இந்தியாவிற்குள் வருவார்கள், குண்டுகளை வெடிப்பார்கள் அப்பொழுது அவர்களை எப்படி இந்தியா எதிர்கொள்ளும்? அவர்களை சமாளிக்க என்ன யுக்தியை, பலத்தை வைத்துக் கொண்டுள்ளது என்றெல்லாம் அவர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

Key players in the blasts

இவர்களை பிடிக்க முடியாதா?

வேதபிரகாஷ்

23-02-2013


[1] Explaining why he didn’t reach Hyderabad soon after the blasts took place, Shinde said in the Rajya Sabha that it was for the security reasons that he decided not to leave immediately. “If VIPs go there (blast sites) then police have to concentrate on securing the VIPs which is not right. VIPs should not be visiting the spot of such incidents, police should be given freedom to carry out investigation and gather evidences,” he said.

[2]  Initial forensic samples from blast sites indicate use of ammonium nitrate, urea and petrol. The investigators are probing three specific names as suspected by Hyderabad police. One suspect belongs to Uttar Pradesh, second from Bihar and third from Jharkhand. The police are helping NIA on suspected link to a January 18 raid on a Hyderabad lodge from where a guest staying under a false name escaped hours before the raid. The Hyderabad police are treating this as one of the key leads.

[3] The police are helping NIA on suspected link to a January 18 raid on a Hyderabad lodge from where a guest staying under a false name escaped hours before the raid. The Hyderabad police are treating this as one of the key leads.

[4] Mohammed Ahmed Siddibapa Mohammed Zarrar alias Yasin Bhatkal, who is said to be heading the operations of Indian Mujahideen in India, has dodged the bumbling intelligence agencies on at least three occasions. He was first arrested and jailed in Kolkata’s Alipore jail between December 2009 and February 2010 in a case of fake currency seizure.

Read more: http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2283048/Indian-Mujahideen-head-jailed-2009-got-bail-cops-did-know-terror-links.html#ixzz2LjIERYiR

[5] NATO’s plan is to shift full responsibility to Afghan forces for security across the country by the middle of next year and then withdraw most of the alliance’s 130,000 combat troops by the end of 2014, Rasmussen said.

[6] India is one of the most vocal supporters of continued engagement and has given Afghanistan more than $2 billion since the US-led invasion in 2001 overthrew the Taliban regime, which sheltered virulently anti-Indian militants.

http://www.infowars.com/india-fears-for-afghanistan-after-nato-withdrawal/

[9] The security agencies fear that such forces may resurface and India may become one of their targets. Most of the forces operating from Nepal can go back to Afghanistan and unless the situation is kept under check with proper international and regional cooperation, the problem could become immense for India.

[10] Once NATO forces pull out, several splinter groups will try to take over control of the troubled nation and this could lead to immense instability in the region, which could be fatal to India.

http://www.rediff.com/news/report/natos-afghan-pull-out-may-prove-costly-for-india/20121015.htm

இஸ்லாமியர்கள் குறித்து ரகசிய சர்வே: கேரளாவில் 5 பெண்களிடம் போலீசார் விசாரணை, வழக்கு பதிவு!

நவம்பர் 7, 2010

இஸ்லாமியர்கள் குறித்து ரகசிய சர்வே: கேரளாவில் 5 பெண்களிடம் போலீசார் விசாரணை, வழக்கு பதிவு!

ஒபாமா வருகையைப் பற்றி அமெரிக்கா நடத்திய கருத்துக் கணிப்பு: ஒபாமா இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு, இந்திய முஸ்லீம்கள் அமெரிக்கா, அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை முதலியவற்றைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்றறிய இந்தியாவின் பல நகரங்களில் கருத்தறிய சர்வே ஒன்றை அக்டோபர் மாதம் ஆரம்பத்தில் நடத்தியுள்ளது. ஆனால், கேரளாவில் நடந்தபோது, அது பிரச்சினையாகியுள்ளது. குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய சமூகத்தினரிடம், அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ரகசிய சர்வே நடத்தியதாக எழுந்த புகாரை அடுத்து, ஐந்து பெண்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கேரள முஸ்லீம்களிடம் அமெரிக்காவின் கருத்துக் கணிப்பு: கேரள மாநிலம் திருவனந்தபுரம் கரிமடம் காலனி இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கும் பகுதி. இங்கு அக்டோபர் 2ம் தேதி ஐந்து பெண்கள் சென்று இஸ்லாமிய பெண்களிடம் சர்வே நடத்தினர். அவர்கள் அப்பெண்கள், ஆண்கள் என பலரிடமும் வினாத்தாளில் இருந்த 90க்கும் மேற்பட்ட வினாக்களுக்கு விடை தேடினர். அதில், “ஒசாமா பின்லாடனை நீங்கள் விரும்புகிறீர்களா?’ “நீங்கள் பர்தா (இஸ்லாமிய பெண்கள் அணியும் சம்பிரதாய உடை) அணிவீர்களா?’ போன்ற இஸ்லாமிய சமுதாயம் சம்பந்தமான வினாக்களைக் கேட்டனர். அங்கிருந்த ஏழைப் பெண்களுக்கு அவர்கள் எதற்கு இதுபோன்ற கேள்விகள் கேட்கின்றனர் என தெரியாமல் பதிலளித்துள்ளனர். சர்வேக்காக வந்த பெண்கள் அப்பகுதியில் வசிக்கும் நாசர் என்பவரது வீட்டுக்கும் சென்றனர். அங்கு அப்பெண்களிடம் நாசர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினார். அதற்கு அப்பெண்கள் சரிவர பதில் சொல்லவில்லை. இதனால் அப்பெண்கள் மீது சந்தேகம் கொண்ட அவர் அப்பெண்களை தனது வீட்டில் சிறை வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்[1].

போலீஸார் விசாரித்த பிறகு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது[2]: இதுகுறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசார் அப்பெண்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்பெண்கள் டில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டெய்லர் நெல்சன் சோப்ரஸ் இந்தியா TNS (Taylor Nelson Sofres-India) நிறுவனத்தின் கொச்சி கிளையில் இருந்து அனுப்பப்பட்டவர்கள் என்பதும், அவர்களுக்கு ஒரு சர்வேக்கு 30 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுவதும் தெரிந்தது. அப்பெண்கள் அளித்த விலாசத்தில் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் விசாரித்தனர். TNSஐக்கெட்டபோது, அவர்கள் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் சர்வே ஆராய்ச்சி நிறுவனத்திற்காக (Princeton Survey Research Associates) அந்த சர்வே செய்வதாக கூறினர்[3]. போலீசார் உடனே இரு சமூகத்தினரிக்டையே வெறுப்பையுண்டாக்க முயல்வதாக ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர்[4].

மத்திய விசாரணை ஏஜன்சிகள் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரி, ஏற்கனவே மத்திய அரசுக்கு தெரியப்படுத்திய கேரள அரசு: விசாரணையில், டில்லி நிறுவனம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் இருந்து செயல்படும் பிரின்ஸ்டன் சர்வே ரிசர்ச் அசோசியேட்ஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்திற்காக இந்த சர்வே பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுபோல், டில்லி, ஐதராபாத் நகரங்களிலும் சர்வே நடந்துள்ளதாகவும் தெரிந்தது. விசாரணைக்குப் பின் அப்பெண்கள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் போலீசார் விசாரணை, பொதுமக்கள் எதிர்ப்பு ஆகியவை காரணமாக கேரள மாநிலத்தின் பிற பகுதிகளில் நடத்தப்பட இருந்த இதுபோன்ற சர்வேக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இதுபோன்ற சர்வே நடந்து வருவதால், இதுகுறித்து மத்திய விசாரணை ஏஜன்சிகள் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரி, ஏற்கனவே மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி விட்டதாக, மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர்  கொடியேறி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கொடியேறி பாலகிருஷ்ணன், கொடியை அவமத்தித்த கிலானி, ஆராய்ச்சி செய்யும் போலீஸார்; எல்லாம் விஷயத்தை அறிந்து கொண்டு இப்படியெல்லாம் பேசுவது கொடியேறி பாலகிருஷ்ணனுக்கு கைவந்த கலை, ஏனெனில் அவர்களுக்கு வேண்டியது முஸ்லீம்களின் ஓட்டுதானே தவிர வேறொன்றும் இல்லை, ஒபாமாவைப் பற்றிய கவலையும் இல்லை. ஆனால், டில்லியிலேயோ அருந்ததிராய், கிலானி, ஜிலானி, வராவர ராவ் போன்ற பிரிவினைவாதிகள், அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் தேசவிரோதமாக பேசியதற்கு வழக்குப் பதிவு செய்ய போலீஸார் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

கேட்கப்பட்ட கேள்விகள் (பல பத்திரிக்கைகளினின்று தொகுத்தது): சர்வே 85 பக்கங்களில் 90க்கும் மேற்பட்ட கொண்ட அந்த கருத்துக் கணிப்பு இரண்டு பகுதிகள் கொண்டதாக இருந்தது. முதலாவது அமெரிக்கா, அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை முதலியவற்றைப் பற்றியது, இரண்டாவது பகுதி முஸ்லீம்களுக்கென்றே கேள்விகள் பித்யேகமாகத் தொகுக்கப்பட்டிருந்தது[5].

*         தாங்கள் முதலில் இந்தியர் அல்லது முஸ்லீம் என்று கருதுவீர்களா[6]?

*         இந்தியாவில் முஸ்லீம்கள் எப்படி மதிக்கப் படுகிறார்கள்?

*         மற்ற நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இந்தியாவில் முஸ்லீம்கள் எப்படி நடத்தப் படுகிறார்கள்?

*         இந்திய ராணுவத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

*         இந்திய ராணுவம் முஸ்லீம்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று நினைக்கிறீர்களா?

*         இந்தியாவில் ஷரீயத் சட்டத்தை அமூலாக்க விரும்பகிறீர்களா?

*         அமெரிக்காவை முஸ்லீகளின் எதிரி நாடாகக் கருதுகிறீர்களா?

*         அமெரிக்காவைப் பற்றி தங்களது கருத்து என்ன?

*         இந்திய-அமெரிக்க உறவுமுறைப் பற்றி தங்களது கருத்து என்ன?

*         ஒபாமா இந்தியாவிற்கு வருவதால், இந்தியாவிற்கு என்ன லாபம்?

*         இராக்கின் மீது அமெரிக்கா படையெடுத்ததை ஆதரிக்கிறிர்களா?

*         அமெரிக்காவின் “தீவிரவாதத்திற்கு எதிரான போர்” என்ற நிலைப்பாட்டைப் பற்றி தங்களது கருத்து என்ன?

*          ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தாலிபான்களை ஒடுக்க மேற்கொண்ட செயலை ஆதரிக்கிறீர்களா?

*         இரானைப் பற்றிய தங்களது கருத்து என்ன?

*         இஸ்லாமிய சட்டம் இந்திய குற்றவியல் சட்டத்திற்கு புறம்பாக இருப்பதாகக் கருதுகிறீர்களா[7]?

*         இந்தியா பொதுவாக முஸ்லீகளின் எதிராக உள்ள நாடாகக் கருதுகிறீர்களா?

*         இந்தியாவில் முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன?

*         ஒஸாமா பின் லேடனை விரும்புகிறிர்களா[8]?

*         தாங்கள் பர்கா / பர்தா அணிவதைப் பழக்கமாகக் கொண்டுள்ளீர்களா?

*         ஒபாமா இந்தியாவிற்கு வருவதைப் பற்றி தங்களது கருத்து என்ன[9]?

*         இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைப் பற்றி தங்களது கருத்து என்ன?

*         ஷரீயத்தை விடுத்து இந்திய அரசியல் சட்டத்தின்படி நடக்கவேண்டும் என்றால் இந்தியாவைத் தவிர வேறெந்த நாட்டில் வாழ நினைக்கிறிகள்[10]?

இக்கேள்விகள் ஒன்று பிரமாதகாக இருப்பதாகத் தெரியவில்லை. அன்று அருந்ததி ராய் பேசியதில் பத்து சதவீதம் கூட இருப்பதாக தெரியவில்லை! தற்கு போய் கேரள முஸ்லீம்கள் மற்றும் அரசு இப்படி அலட்டிக் கொள்வதுதான் விசித்திரமாக இருக்கிறது.

ஆராய்ச்சி என்றால் சர்வே, கருத்துக் கணிப்பு முதலியவை மிகச்சாதாரணமான விஷயம் தான்: கேள்விகளின் தொகுப்பை விநியோகம் செய்தல், கேள்விகளுக்கு பதிலை நேரிடையாகவோ, தபாலிலேயோ பெறுவது, அவற்றைத் தொகுப்பது, குறிப்பிட்ட தலைப்புகளுக்கு ஏற்றவகையில் அவற்றைப் பிரிப்பது,  தர வரிசைப் படுத்தி அவற்றை வரிசைப்படுத்துவது……………..முதலியன ஆராய்ச்சியின் ஒரு கட்டம். இதன் பிறகு பல வேலைகள் இருக்கின்றன. இதில் பாரபட்சம் இல்லாமல் இருக்க, கேள்வி கேட்பவர்கள் மற்றும் பதில் சொல்பவர்கள் என இரண்டு பக்கத்திலும் பல விருப்பு-வெறுப்புகள், தாக்கங்கள், முதலியவற்றை அகற்ற, கேள்விகளின் அமைப்பு குறிப்பிட்டவாறு அமைக்கப் பட்டிருக்கும். குறிப்பிட்ட பதில்களை சொல்லுமாறு கிரமப்படுத்தப் பட்டிருக்கும். இதனால் அத்த்தகைய குறைகள் நீக்கப்படும். பெங்களூரில் ஒரு கிருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் முஸ்லீம்களைப் பற்றி இவ்வாறு கருத்துக் கணிப்பு நடத்தி இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் தாக்கம் மற்றும் இஸ்லாமியர்களின் சமூக சீர்திருத்தம் என்ற இரு புத்தகங்களை வெளியிட்டுள்ளது[11]. அதில் இவற்றைவிட இன்னும் பற்பல கேள்விகள் கேட்டு ஆராய்ச்சி நடத்தியுள்ளனர். அப்பொழுதெல்லாம் வராத பிரச்சினை, இப்பொழுது ஏன் வருகிறது என்று தெரியவில்லை.

வேதபிரகாஷ்

© 07-11-2010


[1] தினமலர், இஸ்லாமியர்கள் குறித்து ரகசிய சர்வே : 5 பெண்களிடம் போலீசார் விசாரணை, நவம்பர் 06, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=121228

[3] TNS authorities were called in who said they were doing the survey for the Washington-based Princeton Survey Research Associates.

[4] “Since the survey had many questions with a communal overtone, we have registered a case of promoting enmity between various groups (Sec 153 A of IPC) and we are investigating the matter. We have also sought the help of the Central agencies on this,” said Jacob Punnoose, Director General of Police, Kerala.

[5] ………….the firm planned to survey as many as 6000 citizens, mostly members of the Muslim community, in 55 different regions in the country. The 85-page two-part questionnaire had 93 questions in all. The second part of the questionnaire was meant exclusively for respondents from the Muslim community.

[8] “Do you consider yourself an Indian first or Muslim?”, “What’s your view on imposing Islamic law in India?”, “Do you like Osama bin Laden?” and “Do you wear burqa?” http://www.hindustantimes.com/Row-over-survey-in-Muslim-area-Central-probe-sought/Article1-622550.aspx

[11] K. S. Durrany, The Impact of Islamic Fundamentalism, CISRS and ISPCK, Bangalore,  1993.