Archive for the ‘ஆயிஷா’ category

ஆயிஷா அன்ட்ரப் – பசுமாடு அறுத்த வீராங்கனை, காஷ்மீர பெண் ஜிஹாதி, ஆயுத போராளி, ஐசிஸ் ஏஜென்டா? (1)

திசெம்பர் 31, 2015

ஆயிஷா அன்ட்ரப் பசுமாடு அறுத்த வீராங்கனை, காஷ்மீர பெண் ஜிஹாதி, ஆயுத போராளி, ஐசிஸ் ஏஜென்டா? (1)

ஆயிஸா அன்ட்ரபி கத்திகளுடன்

காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பதுதான் ஒரே வழி: துக்தரன்-இ-மில்லத் [(Dukhtaran-e-Millat (DeM), உம்மாவின் மகள்கள்] என்ற தீவிரவாத இயக்கத்தின் தளபதி-தலைவி ஆஷியா அன்ட்ரபி (Asiya Andrabi, வயது 53) 2010களில் “கல்லடி கலாட்டா” என்ற யுக்தியைக் கையாண்டு, பெண்கள், சிறுமிகள் மற்றும் சிறுவர்களை தெருக்களில் வந்து, பாதுகாப்புப் படை, ராணுவம் மற்றும் போலீஸ் மீது கற்களை எறியும் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தாள். கடந்த ஆகஸ்ட் 14, 2014 அன்று பாகிஸ்தான் கொடியேற்றி, பாகிஸ்தான் விடுதலை தினத்தைக் கொண்டாடினாள். இதே போல மார்ச்.23, 2014 அன்றும் செய்துள்ளாள். செப்டம்பர் 2014ல் கைது செய்யப்பட்டாள்[1]. உடன் பெஹ்மிதா சூபி [Fehmida Soofi] என்ற இன்னொரு பிரிவினைவாதக்குழுத் தலைவியும் இருந்தாள். இதனால், இவள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது[2]. உடனே, தொலைபேசியில், மும்பை குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தேடப்பட்டுவரும், தீவிரவாதியான  ஹாவிஸ் சையதுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளாள். சையது ஜிலானியின் மாணவி, பிரிவினைவாதத்தில் ஈர்க்கப்பட்டு, ஜிலானி வழியில் செயல்பட்டும் அடிப்படைவாத போராளி. மனித உரிமைகள் பெயரில், அடிப்படைவாத, பயங்கரவாத, தீவிரவாத ஜிஹாதிகளின் குரூரக் கொலைகள், கற்பழிப்புகள் முதலியவற்றை மறைத்து, அடிப்படைவாத, பயங்கரவாத, தீவிரவாத ஜிஹாதிகளின் உரிமைகள் பற்றி பேசிவரும் திறமைசாலி. இதனால், சிறைக்குள் செல்வது, வெளியே வருவது என்பது வாடிக்கையாகி விட்டது. காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பதுதான் ஒரே வழி என்று போதிக்கும் இவள் பிரிவினைவாதப் போர்வையில், ஜிஹாத் தத்துவத்தை பெண்களுக்கு போதித்து வருகிறாள்.

காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும்

ஜிஹாதி குடும்பத்தில் பிறந்து, ஜிஹாதியாக செயல்பட்டுவரும் ஜிஹாதிபெண்: ஆயிஷா அன்ட்ரபி 1962ல் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது[3]. 1990ல் ஆஷிக் ஹுஸைன் என்ற பயங்கரவாதியை நிக்காஹ் செய்து கொண்டாள், அவனும் பயங்கரவாத செயல்களுக்காக கடந்த 23 ஆண்டுகளாக 1992லிருந்து சிறையில் இருக்கிறான். ஹிஜ்புல் முஜாஹித்தீன் என்ற தீவிரவாத இயக்கத்தைத் துவக்கியவர்களுள் ஒருவன். மொஹம்மது பின் காசிம் (23) மற்றும் அஹமது பின் காசிம் (15) என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். இவளுடைய மற்ற உறவினர்கள் பாகிஸ்தான், சௌதி அரேபியா, இங்கிலாந்து, மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்று விட்டனர். 1990ல் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு, கைதாகி, பிறகு 2004-2007 காலத்தில் தலைமறைவாக வாழ்ந்தாள். சர்வகட்சி ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் [All Parties Hurriyat Conference] கிளையாக துக்தரன்-இ-மில்லத் செயல்பட்டு வருகிறது. இவளின் மூன்று மைத்துனர்கள், தீவிரவாத தொடர்புகளுக்காக, பாகிஸ்தானில் செப்டம்பர் 2013ல் கைது செய்யப்பட்டனர். 2010ம் வருடம் மஸ்ரத் ஆலத்துடன் “கல்லடி கலாட்டாவில்” இறங்கியவள். இளைஞர்கள் மற்றவர்களைத் தூண்டிவிட்டு நடத்திய இந்த கல்லடி கலாட்டாக்களில் சுமார் நூறு பேர் இறந்ததாக தெரிகிறது. வெளிப்டையாக ஜிஹாதித்துவத்தை போதித்து இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களை தீவிரவாதிகளாக மாற்றி வருகிறாள் என்று காஷ்மீர மிதவாதிகளே குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஆயிஸா அன்ட்ரபி பசுவைக் கொன்று எதிர்ப்பைத் தெரிவித்தாள்.1

கல்லெறி கலாட்டா ஜிஹாதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டது (ஆகஸ்ட்.2011)[4]: காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்கியதுடன், பொது சொத்துக்களுக்கு தீ வைத்தும் கொழுத்தினார்கள். கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு அங்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இது பாலஸ்தினத்தில் பயன்படுத்தப் படும் முறை என்பதனையும் அறியப்பட்டது. கல்வீச்சு மற்றும் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதிலும் ஊடகக்காரர்கள் காயப்பட்டனர். ஆனால், இதைப் பற்றி அவர்கள் ஒன்றும் ஆர்பாட்டம் செய்யவில்லை. இந்நிலையில் காஷ்மீர் அரசு இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. கலவரத்தின் போது தீ வைப்பு போன்ற சட்ட விரோத செயலில் சம்பந்தப்படாமல் கல்வீச்சில் மட்டும் ஈடுபட்டவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டது[5]. இது தொடர்பாக காஷ்மீர் மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா கூறுகையில், வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது[6]. பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைத்தவர்களை தவிர மற்றவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என கூறினார்[7].

ஆயிஸா அன்ட்ரபி பசுவைக் கொன்று எதிர்ப்பைத் தெரிவித்தாள்.2

பசுமாட்டை அறுத்து எதிர்ப்புத் தெரிவித்த பயங்கரவாதி[8]: ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்ட பசு-மாமிச விற்பனை தடையை எதிர்த்து செப்டம்பர் 2015ல் ஒரு பசுவைக் கொன்று, அந்த கொலைக்காட்சி விடியோவை வெளியிட்ட[9] ஆயிஷா அன்ட்ரபியை என்னென்பது? அவளைக் கொடூரக்காரி எனலாமா அல்லது ஜிஹாதி என்று பாராட்டலாமா? பெண்களுடன் நின்று கொண்டிருக்கிறாள். ஒரு பசுமாட்டை இழுத்து வந்து, அவள் முன்னால் அறுக்கிறார்கள். அந்நேரத்தில் “தாரே தக்பீர், அல்லாவு அக்பர்” என்று கத்துகிறாள். வெறியோடு கத்தும் அவளது குரல் வீடியோவில் தெளிவாகக் கேட்கிறது. இதில் திகிலூட்டுவது என்னவென்றால், குழந்தை ஏந்திய ஒரு பெண் முன்வரிசையில் நின்று கொண்டு அவ்வாறு கத்துகிறாள். இப்படி பயங்கரமான செயல்களை சிறுவயதிலிருந்தே பார்த்து, கடினமாகி, இருகிவிட்ட இம்மனங்களுக்கு ஜீவகாருண்யம் என்பதெல்லாம் எப்படி புரியும்? பெண்கள் மென்மையானவர்கள் என்றெல்லாம் இங்கு செல்லுபடியாகாது. பெண் என்றால், பேயும் இரங்கும் என்றேல்லாம் சொல்லமுடியாது, ஏனெனில், பேயே இவளைக் கண்டால், பயப்படும். மற்ற பெண்களின் துன்பத்தை கண்டுகொள்ளாமல் மரத்துப் போன, வெறிபிடித்த ஜிஹாதி, முஸ்லிம் பெண்களுக்காக பாடுபடுகிறாள் என்று வேறு சொல்லிக் கொள்கிறாள். இந்நிகழ்ச்சி வெளிப்படையாக ஊடகங்களில் வரவில்லை. மறைக்கப்பட்டது எனலாம். “பீப்” விசயத்தில் அத்தனை கலாட்டா, ஆர்பாட்டம் செய்த ஊடகங்களை இதனை ஏன் மறைக்க வேண்டும்? இது சகிப்புத்தன்மையா என்று யாரும் கேட்கவில்லை.

ஆயிஸா அன்ட்ரபி பசுவைக் கொன்று எதிர்ப்பைத் தெரிவித்தாள்.3

ஆயிஷா அன்ட்ரபி ஐசிஸ்க்கு ஆள்பிடிக்கும் போராளியா?: இப்பொழுது டிசம்பர் 2015ல் ஹைதரபாதிலிருந்து மூன்று இளைஞர்கள் அன்ட்ரபியை சந்தித்து ஐசிஸ்ஸில் சேர செல்வதாக மத்தியாரசு புலனாய்வுத் துறைக்குத் தெரிய வந்தது[10].

  1. மொஹம்மது அப்துல்லா பசித் [Mohd Abdulla Basith],
  2. சையது ஒமர் பரூக் ஹுஸைனி [Syed Omer Farooq Hussaini]
  3. மாஜ் ஹஸன் பரூக் [ Maaz Hasan Farooq]

இவர்கள் எல்லோருமே 20-22 வயதினர், உறவினர்கள் ஆவர். இவர்கள் எல்லோருமே, அன்ட்ரபியை சந்தித்து, பாகிஸ்தான் வழியாக ஐசிஸ் சேர செல்வதாக இருந்தது. கடந்த வாரம் மஹாராஷ்ட்ரா ஏ.டி.ஸ்.பிரிவு போலீஸாரால், நாக்பூர் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் போது அவ்விவரம் தெரியவந்தது. அவர்கள் அன்ட்ரபியை சந்திக்க விரும்பியதாகத் தெரிவித்தனர்[11]. இவர்களது மாமா சையது சலாவுத்தீன், தடை செய்யப்பட்ட சிமியின் தலைவர் ஆவார். இவர்கள் ஐசிஸ், தாலிபான், அல்-குவைதா அல்லது ஹிஜ்புல் முஜாஹித்தீன் போன்ற தீவிரவாத இயக்கத்துடன் சேருவதாக திட்டமிட்டிருந்தனர்[12]. ஆனால், அன்ட்ரபி அவர்கள் தன்னை சந்திக்கவில்லை என்றும், அவர்கள் யார் என்பதும் தனக்குத் தெரியாது என்றும், அவர்கள் வேண்டுமென்றே தன் பெயரை இழுத்து விட்டனர் என்றும் கூறியுள்ளாள்[13]. சட்டத்தை வளைப்பதற்கு இவ்வாறு பேசுவது, பலமுறை சிறைச் சென்று விடுவிக்கப்பட்ட இவளுக்கு கைவந்த கலை என்பதால், ஒன்றும் வியப்பில்லை. விடுவிக்கப்பட்ட பிரிவினைவாதியான மஸரத் ஆலமும் [Masarat Alam] மறுபடியும் கைது செய்யப்பட்டான்.

ஆயிஸா அன்ட்ரபி பசுவைக் கொன்று எதிர்ப்பைத் தெரிவித்தாள்.4 - கைக்குழந்தயுடன்

© வேதபிரகாஷ்

31-12-2015

[1] The youngest child of prominent Srinagar doctor Sayeed Shahabuddin Andrabi, 1962-born Ms. Andrabi had completed a degree in biochemistry, and hoped to study further in Dalhousie. http://www.geo.tv/article-197860-Asiya-Andrabi-arrested-four-Kashmiris-killed-in-Indian-army-firing-

[2] The DeM chief celebrated Pakistan’s Independence Day on August 14 at her residence by singing that country’s national anthem and unfurling the flag of the neighbouring country on the outskirts of the city. Hours after that, Andrabi had stoked another controversy by addressing via phone a rally in Pakistan which was organized by Mumbai attack mastermind Hafiz Saeed-led Jamat-ud Dawa (JuD).

Saeed was sitting on the stage during Andrabi’s address. Andrabi had earlier also celebrated Pakistan’s National Day on March 23 this year and hoisted the flag of the country and sung its national anthem, following which the police registered a case against her under the Unlawful Activities Prevention Act.

http://articles.economictimes.indiatimes.com/2015-09-18/news/66677405_1_dem-chief-pakistani-flag-saeed

[3] http://www.thehindu.com/news/national/inside-kashmirs-new-islamist-movement/article580687.ece?ref=relatedNews

[4] மாலைமலர், கல் எறிந்தவர்களுக்கு பொது மன்னிப்பு: காஷ்மீர் அரசு அறிவிப்பு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 28, 3:04 PM IST.

[5] http://www.maalaimalar.com/2011/08/28150458/Amnesty-for-throwing-stones-Ka.html

[6] தினமலர், கல் எறிந்தவர்களுக்கு மன்னிப்பு வழங்க காஷ்மீர் மாநில அரசு முடிவு, ஆகஸ்ட்.28, 2011, 17:14.

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=302950

[8] https://www.youtube.com/watch?v=UVwF71dJWMQ

[9] Ms. Andrabi, who slaughtered a cow after a court ordered banning the same, faces a number of FIRs in the Valley. She released a 1:15-minute video on September 10 wherein she slaughtered a cow to defy the beef ban.

http://www.thehindu.com/news/national/separatist-andrabi-arrested-for-antinational-activities/article7664426.ece

[10] The central government has ordered an investigation by a high-level body after three boys, Mohd Abdulla Basith, Syed Omer Farooq Hussaini and Maaz Hasan Farooq (all aged around 20-22) from Hyderabad claimed they were on their way to Srinagar to meet Andrabi.

http://www.hindustantimes.com/punjab/dukhtaran-e-millat-chief-asiya-andrabi-denies-isis-links/story-uSQaI3tGwRuMcn9g6Q00tL.html

[11] Whether Kashmiri separatist leader Asiya Andrabi visited Telangana has yet to be determined, said the local police today amid reports that three young men arrested for wanting to join jihadi groups in Pakistan have confessed that they wanted to meet the 53-year-old.

http://www.ndtv.com/top-stories/isis-controversy-links-3-hyderabadi-cousins-to-separatist-asiya-andrabi-1260743

[12] During the interrogation, the arrested men reportedly confessed that they were trying to join any of the jihadist groups — ISIS, Al Qaeda or Hizbul Mujahideen. The police say their uncle was Sayed Salahuddin, the former chief of the banned Students Islamic Movement of India or SIMI.

http://www.ndtv.com/top-stories/isis-controversy-links-3-hyderabadi-cousins-to-separatist-asiya-andrabi-1260743

[13] “I came to know about the story through the media. Even the ATS (Anti-Terrorism Squad) Hyderabad was quoted saying that they [the boys] wanted to meet me. I think the arrested boys know better why they named me. It seems my name has been deliberately dragged in,” said Ms. Andrabi.

http://www.thehindu.com/news/national/other-states/never-met-hyderabad-youths-andrabi/article8046023.ece

இந்திரா ஆயிஷா பானுவாகி, ஹவாலா ஈடுபட்டது, இது வெறும் ஹவலா மோசடிதான், பாட்னா குண்டுவெடிப்புக்கு சம்பந்தம் இல்லை – இப்படி வக்காலத்து வாங்குவது ஏன்?

நவம்பர் 15, 2013

இந்திரா ஆயிஷா பானுவாகி, ஹவாலா ஈடுபட்டது, இது வெறும் ஹவலா மோசடிதான், பாட்னா குண்டுவெடிப்புக்கு சம்பந்தம் இல்லை – இப்படி வக்காலத்து வாங்குவது ஏன்?

Aysha Banu arrested for handling terror money - Patna blast7

தேசியபுலனாய்வுஏஜென்சிமங்களுரில் ஒரு பெண்னை கைது செய்தது: பாட்னா நரேந்திர மோடி கூட்டத்தில்தொடர்குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களுக்கு உதவிய தம்பதியை மங்களூருவில் போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் 13-11-2013 புதன்கிழமை அன்று ஆஜர்படுத்தினர். ஆங்கில நாளிதழ்கள் தேசிய புலனாய்வு ஏஜென்சி [The National Investigation Agency (NIA)], குறிப்பாக பாட்னா குண்டுவெடிப்பு விசாரணை செய்யும் குழு, கைது செய்தது என்று செய்திகளை வெளியிட்டுள்ளன[1]. கடந்த மாதம் 27ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நரேந்திர மோடி கலந்து கொண்ட மேடைக்கு அருகே கூட்டம் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் குண்டுகள் வெடித்து 7 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியதில் இந்திய முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகளான இப்ராகிம், பப்பு, சேட்டு, மவுலித் சாயப், அன்சாரிகான் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில், இந்த தாக்குதலுக்காக பாகிஸ்தானில் இருந்து 5 கோடி ஹவாலா பணம் மங்களூரில் உள்ள பெண் ஒருவரின் மூலமாக பெறப்பட்டிருப்பது தெரிந்தது.

Aysha Banu arrested for handling terror money - Patna blast5

இந்திரா ஆயிஷா பானுவாகி, ஹவாலா மோசடியில் இறங்கினாராம்: புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தியதில், அந்த பெண் ஆஷா என்கிற ஆயிஷா பானு என தெரியவந்தது[2]. கர்நாடக மாநிலம், மங்களூரு அருகேயுள்ள பஞ்சிமுகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆயிஷா பானு (36). இவரது கணவர் ஜுபேர். குடகு மாவட்டத்தைச் சேர்ந்த பீரய்யாவின் மகளான இந்திரா, 18 ஆண்டுகளுக்கு முன்பு பஜ்பே பகுதியில் இஸ்லாமியர் ஒருவர் வீட்டில் பணிபுரிந்த போது, ஜூபேரை காதலித்து திருமணம் செய்தார். பின்னர், மதம் மாறி ஆயிஷா பானுவாக பெயரை மாற்றினார்[3]. பீடி முகவராக இருந்த ஜுபேர், பின்னர் துபைக்குச் சென்று பணிபுரிந்தாராம். இங்கும் பீடிதொழில் சமந்தம் வருவது நோக்கத்தக்கது. இவன் மூன்று பீடிகடைகளை வைத்துள்ளான்[4]. முதலில் வாடகை வீட்டில் இருந்த இவன்,. திருமணம் ஆனவுடன் சொந்த வீடு வாங்கிக் கொண்டானாம்[5]. அப்போது, இந்தியாவிலிருந்த ஆயிஷா பானுவை ஹவாலா பணம் மாற்றுவதற்கு பயன்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது[6]. அப்படி என்ன பெண்கள் ஒன்றும் தெரியாத அப்பாவிகளகவா இருக்கின்றனர்? இந்துவாக இருந்து முஸ்லிமாக மதம் மற்றியவுடன் விவரமாக சொல்லிக் கொடுத்திருப்பார்களே?

Aysha Banu arrested for handling terror money - Patna blast6

ஒருபெண்ணிடம்இவ்வளவுஇருக்குமா?: பாட்னா குண்டுவெடிப்பு குறித்து வழக்குப் பதிந்த போலீஸார், சிலரைக் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில், மங்களூருவில் ஆயிஷாபானுவை செவ்வாய்க்கிழமை கைது செய்த போலீஸார், புதன்கிழமை மங்களூர் 3-ஆவது விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்பு ஆஜர்படுத்தினர்[7]. விசாரணைக்குப் பிறகு ஆயிஷாபானுவை, பாட்னா போலீஸாரிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஆயிஷா பானு, குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களுக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து நிதி பெற்று, ரூ. 5 கோடி வரை உதவி செய்துள்ளார்[8]. 35 வங்கிக் கணக்குகளில் பணப் பரிமாற்றம் செய்துள்ளார் என தெரியவந்துள்ளது[9]. அவளிடமிருந்து கீழ்கண்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன[10]:

  1. ஏழு வங்கி கணக்குப் புத்தகங்கள் [seven bank passbooks],
  2. ஆறு ஏடிஎம் கார்டுகள் [six ATM cards, 10 mobile phones],
  3. பத்துஇ சிம் கார்டுகள் [10 SIM cards]
  4. 35ற்கும் மேலான சட்ட விரோதமான கார்டுகள் [more than 35 illegal ones]
  5. அதில் சுமார் 50 பாகிஸ்தானைச் சேர்ந்தவை [with around 50 numbers of Pakistan].

விவரமே தெரியாமலா, இவ்வளவையும் அவள் வைத்திருந்தாள்? ஒரு இந்துவாக இருந்தவள், முஸ்லிமாக மாறியப் பிறகு எதற்காக பாகிஸ்தானுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்க வேண்டும்? இந்நிலையில், இவர்களை விசாரணைக்காக தங்களிடம் ஒப்படைக்கும்படி, நீதிமன்றத்தில் பீகார் போலீசார் அனுமதியை கேட்டனர். இதை ஏற்று கொண்ட நீதிபதி, இருவரையும் பீகார் போலீசிடம் ஒப்படைக்கும்படி மங்களூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து பீகார் போலீ சார் இருவரையும் பலத்த பாதுகாப்புடன் பாட்னா அழைத்துச்சென்றனர்.

Aysha Banu arrested for handling terror money - Patna blast

இதுவெறும்ஹவலாமோசடிதான், பாட்னாகுண்டுவெடிப்புக்குசம்பந்தம்இல்லை: வழக்கம் போல, முஸ்லிம் இணைதளங்கள் இதனை மறுக்கின்றன[11]. உள்ளூர் கன்னட நாளிதழும் இதற்கும் பாட்னா குண்டுவெடிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்கிறது[12]. பீஹாரின், லகிசராய் சூப்பிரென்டென்ட், “அவள் சட்டவிரோதமான பணமாற்ரத்திற்காகத்தான் கைது செய்யப் பட்டிருக்கிறாள். தீவிரவாதிகளுக்கு பணம் கொடுத்துதவியதற்கு கைது செய்யப்படவில்லை”, என்றதாக எடுத்துக் காட்டுகின்றன[13]. மங்களூர் இஐஜிபி, பிரதாப் ரெட்டியும், இது தீவிரவாதத்துடன் சம்பந்தப்பட்ட செயலாக இருக்காது என்று நம்புவதாக சேர்த்து எழுதியுள்ளன[14]. ஒரு பெரிய போலீஸ் அதிகாரி என்ன இப்படிப்பட்ட சட்டமீறல்களைப் பற்றி உடனடியாக கருத்து சொல்லி விடுவாரா? “ஏசியன் ஏஜ்” என்றதன் படி, போலீசார் இதைப்பற்றி எதுவும் சொல்ல மறுத்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது[15]. Aysha Banu arrested for handling terror money - Patna blast2அதாவது, இப்பொழுதெல்லாம், இத்தகைய விவரங்கள் அதிகமாக வருகின்றன. ஆனால், குண்டுகள் தயாரிப்பது, அவற்றை வைப்பது, வெடிக்க வைப்பது போன்றவற்றைப் பற்றிய செய்திகளை மட்டும் ஊடகங்கள் வெளியிடுவதில்லை. Aysha Banu arrested for handling terror money - Patna blast3வெடித்தபிறகு செய்திகளை அள்ளிவீசுகிறார்கள். குண்டுவெடிப்பில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள், அவர்களது குடும்பங்கள், அவர்களது எதிர்காலம் முதலியவற்றைப் பற்றியும் கண்டுகொள்வதில்லை.

© வேதபிரகாஷ்

15-11-2013


[3] If reporting this easily discernible concocted story was not enough, the media outlets also went to the extent of digging Ayesha Banu’s past and wrote that ‘Ayesha’ was born ‘Asha’, a Hindu who later converted to Islam, after marrying a Muslim man. And it only looked like they were serving right-wing organisations’ agenda, when they included a press statement by Vishwa Hindu Parishad (VHP) and Bajrang Dal, in their reports, which said that the case of Ayesha’s arrest showed that Muslim men were luring Hindu woman “with love affairs and money and converted to Islam only to carry out dangerous and illegal activities like this. Hindu young women must be guard against Love Jihad which attract them towards colorful life in the beginning, but end up in jails, prostitution hubs, etc.” http://twocircles.net/2013nov13/malicious_reports_mangalore_womans_connection_patna_blast_rubbished_police.html

[9] தினமணி, பாட்னா குண்டு வெடிப்பு: எதிரிகளுக்கு உதவியதாக மங்களூருவில் பெண் கைது, First Published : 14 November 2013 04:06 AM IST

[12] In a twist to the story, another leading Kannada daily from Mangalore has revealed that there is no connection between Aysha’s arrest and Patna bomb blasts.

http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=201119&n_tit=Mangalore%3A%20Aysha%20has%20no%20connection%20to%20Patna%20blasts%3F

[13] Rejecting the malicious reports, Bihar’s Lakhisarai Superintendent of Police, Mr. Rajiv Sharma said that, her arrest was in connection to illegal financial activities and not in connection to terrorism financing.

[14] Mangalore city’s Inspector General of Police (Western Range) Mr. Prathap Reddy said that, he is confident that there is no terror activity taking place in the western range of the region, and proclaimed that “no investigation agency has contacted us in relation to any such activities.”

[15] Local police sources refused to officially confirm the arrest but admitted that the woman who had been detained lived in a house at Panjimogeru, about 9 kms from Mangalore with her three children and that she was arrested by a police team comprising of Bihar police and local police officials. Local corporator elect and CPI(M) leader Dayanand Shetty confirmed the arrest and said that she was brought back to her house along with her husband for further enquiries on Tuesday evening.

http://www.asianage.com/india/was-patna-blast-financed-mangalore-woman-205

ஆயிஷாவின் மூக்கு-காது அறுக்கப்பட்டன: தாலிபானின் அகோரச் செயல்!

ஓகஸ்ட் 7, 2010

ஆயிஷாவின் மூக்கு-காது அறுக்கப்பட்டன: தாலிபானின் அகோரச் செயல்!

பெண்ணின் மூக்கை துண்டித்த தலிபான்கள்: ஆப்கனில் கொடூரம்[1]: கணவரின் வீட்டை விட்டு வெளியேறிய குற்றத்துக்காக, இளம் பெண் ஒருவரின் மூக்கு மற்றும் காது, தலிபான்களால் துண்டிக்கப்பட்ட கொடூரம் ஆப்கனில் நிகழ்ந்துள்ளது.

Afghan-women-nose-cut-Taliban-2010

Afghan-women-nose-cut-Taliban-2010

ஆப்கானிஸ்தான் / காந்தாரத்தின் தற்போதைய நிலை: காந்தாரி கௌரவர்களின் தாயார் என்பது தெரிந்த விஷயமே. காந்தாரக் கலைகளுக்கும், உலர் பழ விளைச்சலுக்கும் ஒருகாலத்தில் புகழ் பெற்ற தேசம் இது. இப்போது நிலைமை தலைகீழாகி விட்டது. குண்டு வெடிப்பும், துப்பாக்கிச் சத்தமும் ஆப்கன் மக்களின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது. திரும்பிய இடமெல்லாம், குண்டு வெடிப்பால் சிதைந்த கட்டடங்கள், இறுக்கமான முகங்களுடன் துப்பாக்கிகளுடன் நடமாடும் ராணுவ வீரர்கள். பீதி அகலாத கண்களுடனும், விரக்தி அடைந்த மனதுடனும் நடமாடும் மக்கள். இதுதான் இன்றைய ஆப்கானிஸ்தானின் அடையாளங்கள். அழகு மிகுந்த அந்த தேசம், தற்போது உருக்குலைந்து போய் கிடக்கிறது.

Aisha-Bibi-nose-ear-cutoff

Aisha-Bibi-nose-ear-cutoff

தாலிபான்களின் கீழ் காந்தாரம்; ஆப்கானிஸ்தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தலிபான் அமைப்பின் கட்டுப்பாட்டில் வந்தது, அதிலிருந்து இஸ்லாமிய சட்டதிட்டங்கள் அமூலுக்கு வந்தன. ஊடகங்களில் பெண்கள் படும் பாட்டை அவ்வவ்வப்போது வெளியிட்டத்திலிருந்து உல்கம் தெரிந்து கொண்டது. அப்போது அவர்கள் வைத்தது தான், அங்கு சட்டம். பெண்கள் பள்ளிக்கு போகக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கொடுமைகள் அங்கு அரங்கேறின. கடந்த 2001ல் அமெரிக்காவின் நியூயார்க் இரட்டை கோபுரத்தின் மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பின், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராணுவம், ஆப்கனில் குவிக்கப்பட்டது. நீண்ட போராட்டத்துக்கு பின், தலிபான்களின் பிடியில் இருந்து ஆப்கன் விடுவிக்கப்பட்டது. இருந்தாலும், தலிபான்களின் ஆதிக்கம் இன்னும் அங்கு கொடிகட்டி பறக்கிறது.

மூக்கு-காது-ஆயிஷா-தாலிபான்

மூக்கு-காது-ஆயிஷா-தாலிபான்

தலிபான்களின் கொடூரத்துக்கு ஆளான ஆப்கன் இளம்பெண் ஒருவரை பற்றிய விஷயம் தான், தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அமெரிக்காவின் “டைம்’ பத்திரிகையைச் சேர்ந்த குழு, ஆப்கனுக்கு சென்று, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேட்டி எடுத்து, அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.

அது குறித்த விவரம்: பீபி ஆயிஷா: அந்த இளம்பெண்ணின் பெயர் பீபி ஆயிஷா. தற்போது அவருக்கு 18 வயதாகிறது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். பத்து வயதாகும்போதே, தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து, ஆயிஷாவை பணத்துக்காக விற்பனை செய்து விட்டார், அவரது தந்தை. அதற்கு பின், இரண்டு ஆண்டுகளுக்கு நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு கொடுமைகளை சந்தித்தார், ஆயிஷா. கணவரின் தந்தை, சகோதரர்கள் உள்ளிட்டோர் ஆயிஷாவை தினமும் கொடுமைப் படுத்தி வந்தனர்.

கொடுமையிலிருந்து தப்பிக்க வீட்டை விட்டு வெளியேறினார்: ஒரு கட்டத்தில், இங்கிருந்து எப்படியாவது வெளியேறி விடவேண்டும் என்று முடிவெடுத்தார். அங்கிருந்து தப்பிச் சென்றார். ஆனால், இந்த நிம்மதி அவருக்கு நீண்ட நாள் நீடிக்கவில்லை. கடந்தாண்டு அவரது கணவர், ஆயிஷாவை கண்டு பிடித்து விட்டார். ஒருஜ்கான் என்ற இடத்தில் செயல்பட்டு வந்த தலிபான் கோர்ட் முன், ஆயிஷா நிறுத்தப்பட்டார். வீட்டை விட்டு ஓடிப்போன குற்றத்துக்காக ஆயிஷாவின் மூக்கையும், காதையும் அறுக்கும்படி தலிபான் கோர்ட், கடுமையான தண்டனை விதித்தது.

தண்டையாக காது-மூக்கு வெட்டப்பட்டது: உயரமான மலைப் பகுதிக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். ஆயிஷாவின் கணவரின் சகோதரரும், மற்றவர்களும் அவரை கீழே படுக்க வைத்து, அசையவிடாமல் பிடித்துக் கொண்டனர். பின், அவரது கணவர் கத்தியுடன் வந் தார். முதலில் ஆயிஷாவின் காதை கத்தியால் வெட்டினார். இதன்பின், அவரது மூக்கையும் துண் டித்தார். வலியால் கதறித் துடித்தார், ஆயிஷா. இறந்து விடுவார் என, நினைத்து அவரை மலைப் பகுதியிலேயே விட்டு, விட்டு போய்விட்டனர்.

தப்பித்த ஆயிஷா, “டைம்” பத்திரிக்கையின் வெளியீடு: இதன்பின், எப்படியோ அங்கிருந்து தப்பிச் சென்றார். காபூலில் பெண்களுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் அகதிகள் முகாமில், ஆயிஷா தஞ்சம் அடைந்தார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் சேதமான உறுப்புகளுடன் தற்போது உயிர் வாழ்கிறார். கடந்த சில மாதங்களாக அங்கு தான் அவர் தங்கியுள்ளார். அகதிகள் முகாமுக்கு ஏராளமான மீடியாக்காரர்கள் வந்து சென்றனர். அவர்களுக்கு, ஆயிஷாவின் பரிதாப நிலை குறித்து தெரியவந்தது. இதற்கு பின், அமெரிக்காவின் “டைம்’ பத்திரிகையில், சிதைந்த முகத்துடன் ஆயிஷா விரக்தியுடன் காட்சி தரும் புகைப்படங்கள் வெளியாயின. இந்த பரிதாப காட்சியை பார்த்த மக்கள், அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். சிலர் இத்தகைய பயங்கரமான படத்தை வெளியிட்டிருக்கவேண்டாம் என்றும் கூறியுள்ளனர்[2].

மறுவாழ்வுக்காக ஆயிஷா தயார், உதவியும் தயார்[3]: இதுகுறித்த தகவல், அமெரிக்காவில் உள்ள பல்வேறு அமைப்புகளுக்கும் தெரியவந்தது. நல்ல உள்ளம் கொண்ட சிலர், ஆயிஷாவின் சிதைந்த மூக்கு மற்றும் காதை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய முன்வந்தனர். இதற்கு ஆயிஷாவும் சம்மதித்தார். இதற்காக அவர் விரைவில் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார். பயங்கரவாதத்துக்கு தன் முகத்தையே விலையாக கொடுத்த ஆயிஷா, “டைம்’ பத்திரிகை குழுவிடம் கூறுகையில், “தலிபான் அமைப்புடன் சில ஒப்பந்தங்களை செய்து கொள்ள முடிவு செய்துள்ளாக அதிபர் கர்சாய் தெரிவித்துள்ளார். ஆனால், மிகக்கொடூரமாக நடந்து கொள்வோரிடம் எப்படி இணக்கமாக வாழ முடியும். என்னை அந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் அவர்கள் தானே’ என, தனது சிதைந்த முகத்தை விரல்களால் தொட்டுக் காட்டி விரக்தியுடன் பேசினார்.


[1] தினமலர், பெண்ணின் மூக்கை துண்டித்த தலிபான்கள்: ஆப்கனில் கொடூரம், ஆகஸ்ட் 06, 2010; http://www.dinamalar.com/News_Detail.asp?Id=56320

[2] http://www.cbsnews.com/8301-500803_162-20012442-500803.html

[3] http://atwar.blogs.nytimes.com/2010/07/31/afghan-women-fearing-a-taliban-future/