ஆஜ்மீர் தர்காவின் இரண்டு முஸ்லிம் சாமியார்கள் நேர்த்திக்கடன் செய்ய வந்த ஒரு பெண்ணை எட்டு நாட்களாக கூட்டு கற்பழித்துள்ளனர்!
ஆஜ்மீர், தர்கா, கற்பழிப்புகள்: க்வாஜா மொயுனித்தீன் கிஸ்டி [Khwaja Moinuddin Chiட்shty] என்ற தர்கா முஸ்லிம்களின் பிரசித்தி பெற்ற வழிபாட்டு ஸ்தலமாக இருக்கிறது. பல நாடுகளிலிருந்து முஸ்லிம் பிரமுகர்கள், பிரபலங்கள் முதலியோர் இங்கு வந்து நேர்த்திக் கடன் செய்து விட்டு போகின்றனர். ஆபாச நடிகைகள் கூட வந்து செல்கின்றனர். அயல்நாட்டவரும் சுற்றுலா ரீதியில் வந்து செல்கின்றனர். அதனால் கூட்டம் இருந்து கொண்டேயிருக்கிறது. ஆனால், கற்பழிப்புகள் முதலியவையும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஏப்ரல் 2016ல் கூட தர்காவுக்கு வந்த ஒரு ஸ்பெயின் நாட்டு பெண்ணை ஒரு கும்பல் சேர்ந்து கற்பழிக்க முயன்றுள்ளனர். பிறகு, அவரது நண்பர்களால் மீட்கப்பட்டனர்[1]. பிப்ரவரி 2015லும் தர்காவில் வழிபட வந்த ஒரு இளம்பெண் கற்பழிக்கப்பட்டுள்ளாள்[2]. தில்லியிலிருந்து ஆஜ்மீருக்கு வந்து, ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்கி நேர்த்திக் கடன் செய்து வஎந்த வேலையில், மத்திய பிரதேசத்து நபரால் கற்பழிக்கப்பட்டாள். குற்றவாளியையை கைது செய்து, பெண்னை தில்லிக்கு அனுப்பி வைத்தனர்[3]. ஜூன் 2014லிலும் அத்தகைய கற்பழிப்பு நடந்தது[4]. அதில் சம்பந்தப்பட்டது, மூன்றாம் பாலினத்த பெண் என்பதால் போலீஸ் மெத்தனம் காட்டியதால், சி.ஐ.டி விசாரணைக்கு ஒப்படைக்கப் பட்டது[5]. தர்கா விழாக்களின் போது, இங்கு ஆயிரக்கணக்கான மூன்றாம் பாலினத்தவர் இங்கு வந்து, மகிழ்விப்பது வழக்கமாக இருக்கிறது.
க்வாஜா மொயுனித்தீன் கிஸ்டியின் காதிம்கள் கற்பழிப்பில் இறங்கியது (ஆகஸ்ட் 2016): 26-08-2016 அன்று கொல்கொத்தாவிலிருந்து வந்த ஒரு பக்தையைக் கற்பழித்ததற்காக, இரண்டு முஸ்லிம் சந்நியாசிகள்-காதிம்கள், ஆஸிம் மற்றும் சலீம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்[6]. இவ்விருவரும் சகோதரர்கள் என்றும் தெரிய வந்தது. சகோதரர்கள் இப்படி ஒரு பெண்ணை கூட்டாகக் கற்பழித்தது திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி, இருவரையும் தேடுகின்றனர்[7]. அந்த பெண் எட்டு நாட்களுக்கு முன்னர் என்ற கிரிஸ்டி-சாமிக்கு நேர்த்தி கடன் செய்ய வந்து, விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தாள்[8]. அப்பொழுது தான், இவ்விருவரும் உள்ளே நுழைந்து, கதவை தாழிட்டு தன்னை கற்பழித்ததாக கூறினாள். 225-08-2016 அன்று தப்பித்து வெளியே வந்த அவள் போலீஸாரிடம் புகார் கொடுத்தாள்[9]. அதற்குள் குற்றஞ்சாட்டப் பட்டவர்களின் குடும்பத்தினர், ஆஸிம் அவளை ஏழு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்திருந்தான், பிறகு விவாகரத்து / தலாக் செய்துவிட்டான் என்றனர். மேலும், போலீஸார் கேட்டபோது, சட்டரீதியில் அக்குடும்பத்தினர் எந்த ஆவணத்தையும் கட்டமுடியவில்லை[10]. பிறகு, எதற்கு வக்காலத்து வாங்க வந்தார்கள் என்று தெரியவில்லை.
காதிம்கள் கூட்டுக் கற்பழிப்பில் ஈடுபடலாமா?: இங்கு காதிம் [खादिम] என்றால், க்வாஜா மொயுனித்தீன் கிஸ்டியின் சேவகர்கள், வேலையாட்கள், பாதுகாவலர்கள் என்று பொருள். காலபோக்கில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருந்தாலும், காதிம்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை செய்து வருகிறார்கள்[11]. இங்கு கூட்டம் அதிகமானால், இவர்களுக்கு வருமானமும் அதிகமாகிறது. இதனால், முன்னர் திவான் ஜைனுல் ஆபிதின் அலி கான் [ Dewan Zainul Abedin Ali Khan] பாலிவுட் ஆபாசங்கள் எல்லாம் இங்கு வரக்கூடாது, தடை விதிக்க வேண்டும் என்றபோது[12], காதிம்களின் அமைப்பு, அஞ்சுமான் கமிட்டி [Anjuman committee,representative body of khadims ] எதிர்ப்பு தெரிவித்தது[13]. ஏனெனில், தர்காவில் ஜியாரத் [ziyarat in the dargarh] என்ற சடங்கை இவர்கள் தான் செய்வித்து வருகிறாற்கள். ஆனால், இந்த காதிம்கள் கற்பழிப்பில் ஈடுப்பட்டிருக்கிறார்கள். அப்படியென்றால், மனைவி இல்லாத ஒரு பெண்ணை மறுபடியும் கற்பழிக்க முடியுமா? அதிலும் இரண்டு காஜிக்கள், முல்லாக்கள், காதிம்கள் போன்றோர் சேர்ந்து கூட்டாகக் கற்பழிக்கலாமா? சகோதரர்களாக இருக்கும் அவர்கள் அவ்வாறு கற்பழிக்கலாமா? இப்பொழுது தலாக் பற்றி பெரிய சர்ச்சை நடந்து கொண்டிருக்கும் போது, முஸ்லிம் சாமியார்கள் இவ்வாறெல்லாம் செய்யலாமா?
1992ம் ஆண்டு ஆல்மீர் கற்பழிப்பு: ஆஜ்மீர் என்றாலே கற்பழிப்பு என்ற நிலைவு, நிலை மற்றும் நெடிய ஒரு தீய பாரம்பரியம் 1992லிருந்து இருந்து வந்துள்ளது. 1992ல் நூற்றுக்கணக்கான பள்ளிமாணவிகளை அங்கு அழைத்து வந்து, கூட்டாக 18-பேர் கொண்ட ஒரு கும்பல் பண்ணை இல்லங்களுக்கு வகுக்கட்டாயமாகக் கூட்டிச் சென்று கற்பழித்து வந்தது. அதுமட்டுமல்லாது, கற்பழிக்கும் காட்சிகளை புகைப்படம் எடுத்து வைத்து, அவர்களை மிரட்டி அத்தகைய கற்பழிப்புகள் தொடர்ந்தன. பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியில் சொல்லக்கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்[14]. அரசியல்வாதிகள் சம்பந்தங்களினால் ஆறு ஆண்டுகளாக வழக்கு இழுத்தடிக்கப்பட்டது. ஒருவழியாக விசாரணை முடிந்து 1998ல் ஆஜ்மீர் மாவட்ட நீதிமன்றாம் எட்டு பேருக்கு ஆயுள்தண்டனை விதித்தது[15]. ஆனால், அவர்கள் பிடிபடாமல் தப்பித்து வந்தனர்.
1998 முதல் 2012 வரை தப்பித்து வந்த குற்றாவாளிகள்: 1998ல் குற்றஞ்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டாலும், அவர்கள் பிடிபடவில்லை.
- அதில் பரூக் கிரிஸ்டி என்பவன் காங்கிரஸ் இளைஞர் அணியின் தலைவன் ஆவான். அவனுக்கு பைத்தியம் பிடித்தது என்றார்கள்.
- இன்னொருவன் புருசோத்தமன் 1994ல் பிணையில் விடுவித்தபோது, தற்கொலை செய்து கொண்டான் என சொல்லப்பட்டது. ஆனால், அவன், உயிரோடு இருந்தானாம்.
- சோஹைல் ஹனி முதலிய ஆறு பேர் காணாமல் போய் விட்டனர்.
- 2012ல் சையது சலீம் கிருஸ்டி [Saiyed Saleem Chishty, 42] பிடிக்கப்பட்டான்[16]. இவன் பங்களாதேசம் மற்றும் மும்பை போன்ற இடங்களில் மறைந்து வாழ்ந்தான். ஆஜ்மீருக்கு 2012ல் வந்தபோது பிடிபட்டான்[17].
- சலீம் கிரிஸ்டி, காதிம் மொஹல்லாவில் பிடிபட்டான் என்பது குறிப்பிடத் தக்கது[18].
பிறகு என்னவாயிற்று என்று தெரியவில்லை.
2004ல் உச்சநீதிமன்றம் தண்டனை குறைப்பு தீர்ப்பை தள்ளுபடி செய்தது: ராஜஸ்தான் நீதிமன்றம், ஆயுள் தண்டனையை 10 ஆண்டுகளாகக் குறைத்தது. ஆனால், 2004ல் உச்சநீதி மன்றம் அதனை தள்ளுபடி செய்தது. ஆஜ்மீர் மஹிலா சமோஹ் என்ற இயக்கம், கற்பழிக்கப் பட்ட பெண்களின் உரிமைகளுக்காகப் போராடியது. அப்பெண்களில் சிலர் தற்கொலை செய்து கொண்டார்கள். இந்த இயக்கத்திற்கும் மிரட்டல்கள் இருந்ததால், தனது போராட்டங்களை நிறுத்திக் கொண்டு அமைதியானது. இப்பொழுது அவர்களின் நிலை என்ன என்பதெல்லாம் தெரியாமல் கிடக்கின்றன.
© வேதபிரகாஷ்
04-09-2016
[1] Published on Apr 5, 2016 – A group of drunk miscreants allegedly tried to rape a Spanish tourist and beat up her friends in Ajmer in Rajasthan. The tourists were also looted. However, luckily they called up their friend, who rescued them – https://www.youtube.com/watch?v=jEvcPzav8FM
[2] english.pradesh18.com, Ajmer dargah tour turns tragic, minor pilgrim raped by MP man, Posted on: Feb 06, 2015 12:06 AM IST | Updated on: Feb 06, 2015 12:06 AM IST
[3] A minor girl who went to Ajmer Dargah for worship was allegedly raped by a man from Madhya Pradesh. The crime was allegedly committed in a guest house in Dargah Bazar. The pilgrim had come from Delhi to Ajmer on January 19, 2015. A case has been registered under sections of POCSO. The rape survivor moved to Delhi after the incident. Police have arrested the accused.
[4] Indian Express, CID to probe transgender’s rape in Ajmer, Written by Sweta Dutta | Jaipur | Published:June 27, 2014 12:27 am.
[5] http://indianexpress.com/article/india/india-others/cid-to-probe-transgenders-rape-in-ajmer/
[6] Times of India, Two khadims of Ajmer Sharif Dargah face gangrape charge, TNN | Aug 27, 2016, 08.31 AM IST.
[7] http://www.india.com, Ajmer Sharif Dargah: Priest brothers accused of gangraping devotee, By Sandhya Dangwal on August 27, 2016 at 4:40 PM.
[8] http://www.india.com/news/india/ajmer-sharif-dargah-priest-brothers-accused-of-gangraping-devotee-1438898/
[9] http://timesofindia.indiatimes.com/city/ajmer/Two-khadims-of-Ajmer-Sharif-Dargah-face-gangrape-charge/articleshow/53882064.cms
[10] Meanwhile, family members of the accused have stated to police that Azim married the victim seven years ago and later they had a divorce and last week the victim again came to Ajmer but police said that no legal papers of marriage or ivorce have been produce by the family members and therefore police is looking for both the accused.
[11] Although the Khadims have faced a number of revolutions and changes of Government, but under all circumstances and worst political upheavals they kept themselves attached to the Shrine and performed all their traditional duties and services.http://dargahajmer.com/descendent-khadims/
[12] Indian Express, B’wood obscenity: Ajmer Dargah caretakers slam dewan’s star ban demand, Written by Agencies | Jaipur | Published:July 23, 2012 7:36 pm
[13] http://indianexpress.com/article/entertainment/entertainment-others/bwood-obscenity-ajmer-dargah-caretakers-slam-dewans-star-ban-demand/
[14] http://news.outlookindia.com/items.aspx?artid=746397
[15] http://www.thaindian.com/newsportal/uncategorized/accused-in-1992-ajmer-sex-scandal-case-arrested_100588267.html
[16] Mid-day, Accused in 1992 Ajmer sex scandal case arrested, January 04, 2012, Jaipur
[17] http://archive.mid-day.com/news/2012/jan/041211-Accused-in-1992-Ajmer-sex-scandal-case-arrested.htm
[18] http://icarelive.com/news/news.php?cat_id=1&article_id=34444
அண்மைய பின்னூட்டங்கள்