கேரளாவில் ஓடும்ரயிலுக்குதீவைத்த ஷாருக்செய்பி – கோத்ரா போன்ற சம்பவம் தவிர்ப்பு- தீவிரவாத தொடர்பு உறுதி – தொடரும் விசாரணை!
02-04-2023 – கேரளரயிலுக்குதீவைத்தது: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ரயில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஷாருக் செய்பி மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கடந்த 2ம் தேதி 02-04-2023 கண்ணூருக்கு எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது[1]. அப்போது பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது[2]. எலத்தூர் அருகே சென்ற போது மர்மநபர் ஒருவர் டி 1 / D1 பெட்டியில் இருந்த பயணிகள் மீது திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. தீ பற்றிக் கொண்டதால், பயணியர் அலறி அடித்துக் கொண்டு தப்பிக்க முயன்றனர். இந்த சமயத்தில் உயிருக்கு பயந்து ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்ததில் 2 வயது பெண் குழந்தை உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் ரஹ்மத் (42). அவளது இரண்டு வயது குழந்தை ஜஹ்ரா மற்றும் கே.பி. நௌபிக் (39) என்று தெரிய வந்தது. ஆக மொத்தம், இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். ஒரு குழந்தை மற்றும் பெண் உள்பட 3 பேர் பலியானார்கள். இதற்குள் பிரயாணிகள் அடுத்த பெட்டிகளுக்கு ஓடினர். செயின் இழுக்கப் பட்டு, ரெயிலும் நிறுத்தப் பட்டது. அனால், அதற்குள் தீ வைத்தவன் தப்பித்து ஓடிவிட்டான்.
தீவைத்தவனின்பேக்கிடைத்தது: இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீசாரும் கேரள அதிரடி படையினரும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் தீயில் எரிந்து பலியானவர்கள் பற்றிய விபரம் தெரிந்தது. மேலும் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றிய நபர், ரெயிலில் இருந்து தப்பி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் ரெயில் பெட்டியில் கிடந்த மர்மநபரின் உடமைகளை போலீசார் கைப்பற்றினர். அதில் ஒரு செல்போன், ஒரு டைரி மற்றும் பெட்ரோலுடன் கூடிய பாட்டில் ஆகியவை கிடைத்தது. அந்த டைரியில் கேரளாவின் முக்கிய நகரங்களான திருவனந்தபுரம், கழக்கூட்டம் மற்றும் குமரி மாவட்டத்தின் குளச்சல், கன்னியாகுமரி ஆகிய ஊர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. போலீசார் கைப்பற்றிய செல்போனில் சிம் கார்டு எதுவும் இல்லை. ஒருவேளை உஷாராக அந்த நபர் எடுத்திருக்கக் கூடும். மேலும் அந்த செல்போனின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை வைத்து அதில் இருந்து யார்-யாருடன் பேசப்பட்டது என்ற தகவலை போலீசார் கண்டுபிடித்தனர்.
தனிப்பட்டமுறையில்பெண்மீதுதாக்குதல்நடத்திகொலைமுயற்சியாஇல்லைரயிலில்விபத்துஏற்படுத்தசதிதிட்டமா?: சம்பவ இடத்திற்கு கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர், ADGP கோழிக்கோடு மேயர் உட்பட அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்[3]. தனிப்பட்ட முறையில் பெண் மீது தாக்குதல் நடத்தி கொலை முயற்சியா இல்லை ரயிலில் விபத்து ஏற்படுத்த சதி திட்டமா என பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்[4]. அதாவது, முதலில் அவர்கள் எல்லோரும் முஸ்லிம்கள் என்பதால், இவ்வாறு யூகங்கள் வெளியிடப் பட்டன. தீவிரவாத கோணம் தவிர்க்கப் பட்டது. ஆனால், அவனது பையில் கிடைத்த ஆதாரங்கள் மற்றும் செல்போன் தொடர்புகள் அவ்வகையில் தான் இருந்தன. இது இன்னொரு “கோத்ரா” சம்பவம் போன்று ஆகாமல் தடுக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது. அப்பெட்டியில் முஸ்லிம்கள் இருந்தது ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. ஏனெனில், ரயிலில் கணிசமாக முஸ்லிம்கள் பயணித்து வருவது ஒன்றும் ஆச்சரியமான விசயமும் இல்லை.
உத்தரபிரதேசம்நொய்டாவைசேர்ந்தஷாருக்செய்பிதான்தீவைத்தநபர்: இதில் உத்தரபிரதேசம் நொய்டாவை சேர்ந்த ஷாருக் செய்பி என்ற வாலிபர் பற்றிய தகவல் தெரியவந்தது. கேரள முதலமைச்சர் மத்திய ரெயில்வே அமைச்சரை தொடர்பு கொண்டு பேசினார். அவர் எல்லா உதவிகளையும் கொடுக்க உறுதி அளித்தார். இவரது உருவத்தை ரெயிலில் இருந்த பயணிகள் உதவியுடன் போலீசார் புகைப்படமாக வரைந்தனர். அந்த படம் மூலம் ரெயிலில் 3 பேரை எரித்து கொன்ற நபரை பிடிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இதில் அந்த நபர், கோழிக்கோட்டில் இருந்து உத்தரபிரதேசத்தின் நொய்டாவுக்கு தப்பி சென்றது தெரியவந்தது. உடனே கேரள போலீசார், உத்தரபிரதேச போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் காசியாபாத் அதிரடி படையினரின் உதவியுடன் அந்த நபரை பிடிக்க சென்றனர். அவர் ஒரு தச்சு தொழிலாளி என தெரியவந்தது. அவரது பெயரும் ஷாருக் செய்பி என கூறப்பட்டது. இதையடுத்து காசியாபூர் அதிரடி படையினர் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கடந்த 2 மாதங்களாக ஊரை விட்டு எங்கும் சென்றதில்லை என தெரியவந்தது. மேலும் அவரது தந்தை தனது மகன் ஊரை விட்டு எங்குமே சென்றதில்லை எனவும் கூறினார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை விடுவித்தனர்.
மகாராஷ்டிரமாநிலம்ரத்தினகிரியில்வைத்துடெல்லியைசேர்ந்தஷாருக்செய்பி (27) என்பவர்கைது: இந்த சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரியில் வைத்து டெல்லியை சேர்ந்த ஷாருக் செய்பி (27) என்பவர் கைது செய்யப்பட்டார்[5]. ஷாருக் செய்பி கேரள போலீசின் காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்ற போதிலும், மத்திய ஏஜென்சிகளும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன[6]. இதனிடையே சந்தேகப்படும் நபரை கைது செய்ய உதவிய மகாராஷ்டிரா அரசுக்கும், போலீஸாருக்கும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நன்றி தெரிவித்துள்ளார்[7]. தீ வைப்பு சம்பவத்திற்கு தீவிரவாத இயக்கத்திற்கு தொடர்பு இருக்கலாம்? என்ற சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து தான் மத்திய ஏஜென்சிகள் விசாரணையை தொடங்கின[8]. இதில், சிறையில் அடைக்கப்பட்ட ஷாருக் சைஃபியை போலீஸ் காவலில் எடுத்துள்ள போலீசார், கோவை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும், கேரள ரயிலில் தீ வைத்த சம்பவத்திற்கும் தொடர்புள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்[9]. தொடர்ந்து கேரள ரயில் விபத்து சம்பவத்தின் போது ஷாருக் சைஃபியின் நடவடிக்கைகளை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[10]. இந்தநிலையில் ஷாருக் செய்பி மீது கேரள போலீசார் தீவிரவாத செயல்பாடுகள் தடுப்பு சட்டமான உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கு விரைவில் என்ஐஏவுக்கு மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.
தீவைக்கும்திட்டத்துடன்தான்கேரளாவந்தார்: கேரள சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அஜித்குமார் கூறியதாவது: “செய்பியிடம்விசாரணைநடத்தியதில்பல்வேறுமுக்கியவிவரங்கள்கிடைத்துள்ளன. இதன்அடிப்படையில்தான்அவர்மீதுஉபாசட்டத்தில்வழக்குப்பதிவுசெய்யப்பட்டது. தீவைத்ததுதான்தான்என்றுவாக்குமூலம்கொடுக்கும்பொழுதுஷாருக்செய்பிஒப்புக்கொண்டுள்ளார்[11]. அதற்கானஆதாரங்களும்கிடைத்துள்ளது. பயணியரைதீவைத்துஎரிக்கபயன்படுத்தியபெட்ரோலை, சம்பவத்தன்றுஅதிகாலைஷொர்ணுார்ரயில்நிலையம்அருகேஉள்ளஒருபெட்ரோல்பங்க்கில்இருந்துஷாரூக்சைபிவாங்கிஉள்ளார்[12].இதற்குஅவருக்குயாரோஉதவிசெய்துள்ளனர். அவர்கள்யார்என்றுவிசாரணைநடத்திவருகிறோம்[13].இவர்தீவிரவாதஎண்ணம்கொண்டவர். ஜாகீர்நாயக், இஸ்ராஅகமதுபோன்றோரின்வீடியோக்களைஅடிக்கடிபார்த்துவந்துள்ளார். ரயிலில்தீவைக்கவேண்டும்என்றதிட்டத்துடன்தான்இவர்கேரளவந்துள்ளார். இவருக்குவேறுயாருடையஅல்லதுஅமைப்புகளின்உதவிகிடைத்துள்ளதாஎன்றுவிசாரணைநடந்துவருகிறது. இவர்தற்போதுதான்முதன்முறையாககேரளாவந்துள்ளார்…..,”.இவ்வாறு அவர் கூறினார்.
[3] தமிழ்.நியூஸ்.18, ஓடும்ரயிலில்பயணிகள்மீதுதீவைப்பு.. 3 பேர்பலி – கேரளாவில்பயங்கரம், NEWS18 TAMIL, First published: April 03, 2023, 08:18 IST, LAST UPDATED : APRIL 03, 2023, 08:20 IST.
10 நாட்களில் 3-வதுசோதனை 10 நாட்களில் 3-வதுசோதனை – விட்டு–விட்டுநடக்கும்சோதனைகள்: சோதனை 20-11-2022 சனிக்கிழமை அன்று கார் வெடிப்பு வழக்குத் தொடா்பாக சென்னை, திருச்சியில் 6 இடங்களில் போலீஸார் சோதனை செய்து, பென்டிரைவ், மடிக்கணினி, கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்[1]. 10-11-2022 மற்றும் 15-11-2022 என்று சோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன[2]. கோவை உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக். 23-ஆம் தேதி சென்ற ஒரு காரில் இருந்த சிலிண்டா் வெடித்தது. இந்த சம்பவத்தில் அந்த காரை ஓட்டி வந்த அந்தப் பகுதியைச் சோ்ந்த ஜமேஷா முபீன் என்ற இளைஞா் உயிரிழந்தார். இது தொடா்பாக ஜமேஷா முபீன் கூட்டாளிகள் 6 பேரை கோவை போலீஸார் கைது செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக என்ஐஏ தமிழகம்,கேரளம் ஆகிய இரு மாநிலங்களில் 43 இடங்களில் கடந்த 10ஆம் தேதி [10-11-2022] ஒரே நேரத்தில் சோதனை செய்தது. இந்த வழக்கை விசாரித்த என்ஐஏ, ஐஎஸ் பயங்கரவாத உறுதி மொழி ஏற்ற ஜமேஷா முபீன், தற்கொலை தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தது. அதில் பல்வேறு முக்கிய ஆவணங்களும் கைப்பற்றியதாகவும் கூறப்பட்டது. அதேபோல், இந்த சம்பவத்தின்போது உயிரிழந்த முபினின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 75 கிலோ நாட்டு வெடிகுண்டுகள்தயாரிக்க பயன்படும் வேதிப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றை ஆன்லைன் மூலமாக வாங்கியதாக கைதானவர்கள் தரப்பில் முன்பு தெரிவிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்திருந்தனர்[3]. இருப்பினும் அதில் சில பொருட்களை சிவகாசியில் உள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வாங்கியிருக்கலாம் எனஎன்ஐஏ அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது[4]. இந்த வெடிப்பொருட்கள்-ரசாயனங்கள் பற்றி ஏற்கெனவே வாத-விவாதங்கள் காரசாரங்களில் முடிந்துள்ளன.
15-11-2022 அன்றுசோதனையில்ஆவணங்கள்பறிமுதல்: என்ஐஏ வழக்கின் விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையிலும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடா்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையிலும் சென்னை பெருநகர காவல்துறையினா் கடந்த 15ஆம் தேதி 5 இடங்களில் சோதனை செய்து, வெளிநாட்டு பணம்,ஆவணங்களை பறிமுதல் செய்தனா்.
20-11-2022 சனிக்கிழமைஅன்றுசென்னையில்சோதனை: இந்நிலையில் இரண்டாவது கட்டமாக சனிக்கிழமை 4 இடங்களில் போலீஸார் ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்[5].
இச் சோதனை –
சென்னை ஓட்டேரி எஸ்.எஸ்.புரத்தில் வசிக்கும் சாகுல் ஹமீது (31) வீடு[6],
வேப்பேரி ஈவெரா பெரியார் சாலையில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் எஸ்.எம்.புஹாரி (57) வீடு,
ஏழு கிணறு பகுதியில் பிடாரியார் கோவில் தெருவில் உள்ள உமா் முக்தார் (33) வீடு,
வி.வி.எம்.தெருவில் உள்ள முகமது ஈசாக் கெளத் (33) வீடு
ஆகிய இடங்களில் நடைபெற்றது. பல மணி நடைபெற்ற சோதனையில் 4 வீடுகளிலும் இருந்து 12 பென் டிரைவ்கள், 14 கைப்பேசிகள்,ஒரு மடிக்கணினி, 2 கையடக்க கேமராக்கள், ஒரு சிறிய ரக சூட்கேஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இவை அனைத்தும் தடயவியல்துறை ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் அடிப்படையில் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 102-கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது[7]. கடந்த 10 நாட்களில் 3-வது முறையாக சென்னையில் என்ஐஏ சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது[8].
20-11-2022 சனிக்கிழமைஅன்றுதிருச்சியில்சோதனை: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடா்பாக திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த இருவா் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது[9]. இதில், –
ஷாகுல் ஹமீத் (வயது 25)- இனாம்குளத்தூா் நடுத்தெருவில் வசிக்கும் ஆவின் நிறுவன ஒப்பந்த தொழிலாளி,
என இருவா் மீது சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்தனா். இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஐ.எஸ் அமைப்பின் முகநூல் பக்கத்தை லைக் செய்ததாகக் கூறப்படுகிறது[10].
இதையடுத்து, ஜீயபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாரதிதாசன் தலைமையில், இரண்டு காவல் ஆய்வாளா்கள், 13 உதவி ஆய்வாளா்கள், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் மோப்பநாய் உதவியுடன் இனாம்குளத்தூருக்கு சனிக்கிழமை வந்தனா். சந்தேகப்படும் நபா்கள் இருவா் தங்கியிருந்த வீடுகளிலும், அதன் சுற்றுப் பகுதிகளிலும் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இரு இடங்களிலும், சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் இருவரது வீடுகளில் இருந்து எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. இருப்பினும், இருவரது சமூக வலைதள பகிர்வுகள் குறித்தும், தொலைபேசி தொடா்புகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா். “இச்சோதனையில் ஹார்டு டிஸ்க்குகள், 2 செல்போன்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது,” என்று நக்கீரன் குறிப்பிடுகிறது.
17-11-2022 முதல் 19-11-2022 வரைகம்பத்தில்சோதனை–விசாரணை: கம்பத்தில் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சோ்ந்த நிர்வாகிகள் 5 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 18-11-2022, வெள்ளிக்கிழமை அன்று விசாரணை நடத்தினா்[11]. தீவிரவாதிகள் அமைப்புடன் தொடா்பு இருப்பதாக பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் என மாநிலத்தில் 16-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை போலீஸார் கடந்த செப். 22-இல் சோதனை நடத்தினா். இதில் அந்த அமைப்பின் மண்டலச் செயலாளா் பொறுப்பில் இருந்த தேனி மாவட்டம், கம்பம் தாத்தப்பன்குளத்தைச் சோ்ந்த யாசா் அராபத் (32) என்பவரைக் கைது செய்தனா். அதன் பின்னா் கம்பத்தில் செயல்பட்ட மாவட்ட அலுவலகத்துக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2 நாள்களாக கம்பத்தில் அந்த அமைப்பைச் சோ்ந்த 5 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை காவல் ஆய்வாளா் அருண் மகேஷ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், 3-ஆவது நாளாக 19-11-20022 அன்று வெள்ளிக்கிழமையும் அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது: “கம்பத்தில்ஏற்கெனவேகைதுசெய்யப்பட்டவருடன், சிலருக்குத்தொடா்புஇருப்பதுதெரியவந்தது. அதனடிப்படையில், கம்பத்தில் 5 பேரிடம்விசாரணைநடத்திவருகிறோம். முக்கியஆவணங்கள்கிடைத்துள்ளன. தொடா்ந்துவிசாரணைநடைபெறும்,” என்றனா்[12].
[1] தினமணி, கார்வெடிப்புவழக்கு: சென்னை, திருச்சியில்போலீஸார்சோதனை, By DIN | Published On : 19th November 2022 11:15 PM | Last Updated : 20th November 2022 04:51 AM.
[3] தமிழ்.இந்து, கோவைகார்சிலிண்டர்வெடிப்பு: மேலும் 5 பேரிடம்என்ஐஏவிசாரணை, செய்திப்பிரிவு, Published : 19 Nov 2022 06:21 AM; Last Updated : 19 Nov 2022 06:21 AM.
[7] தமிழ்.இந்து, 3-வதுமுறையாகசென்னையில் 4 இடங்களில்என்ஐஏசோதனை: ஐஎஸ்ஐஎஸ்உடன்தொடர்பாஎனவிசாரணை, செய்திப்பிரிவு, Published : 20 Nov 2022 04:20 AM; Last Updated : 20 Nov 2022 04:20 AM
[9] நக்கீரன், என்.ஐ.ஏதிடீர்சோதனை; மூன்றுமணிநேரசோதனைக்குப்பிறகுஹார்டுடிஸ்க்குகள்பறிமுதல், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 19/11/2022 (20:30) | Edited on 19/11/2022 (20:46).
[11] தினமணி, கம்பத்தில்பாப்புலா்ஃப்ரண்ட்ஆஃப்இந்தியாநிா்வாகிகள் 5 பேரிடம்என்ஐஏவிசாரணை, By DIN | Published On : 18th November 2022 11:36 PM | Last Updated : 18th November 2022 11:36 PM.
கோவைஆர்காஸ்சிலிண்டர்வெடிகுண்டுசோதனை: என்.ஐ.ஏ மற்றும் தமிழக போலீஸார் கோவை குண்டு வெடிப்பு பற்றி ஆய்ந்து வருகின்றனர், விசாரணை நடத்துகின்றனர் மற்றும் வீடுகளில் சோதனைகள் நடக்கின்றன. கைதானவர்களிடமிருந்து வாக்குமூலங்களும் பெறப் படுகின்றன. செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆங்கில ஊடகங்களில் அதிகமாக வரும் பொழுது, தமிழக ஊடகங்கள் அமுக்கி வாசிக்கின்றன. ஜமேஷா முபின் ஏதோ சுயமாக இந்த தீவிரவாதச் செயலில் ஈடுபட்டான் என்றும் தலைப்பிட்டு செய்திகள் வருகின்றன. திராவிடத்துவ வாதிகள், தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போய்விட்டது, என்று பெருமூச்சு விட்டு அமைதியாகின்றனர். ஆனால், அரசியல் செய்பவர்கள், செய்து கொண்டு தான் இருக்கின்றனர். திமுகவினர், “தேசத் துரோகி” என்றெல்லாம் ராணுவ அதிகாரியை டிவி செனலில், கோடிக்கணக்கில் பொது மக்கள் கவனிக்கும் நிலையில் பலமுறை விளிப்பதும் திகைப்பாக இருக்கிறது. அந்த செனல் நிகழ்ச்சி அமைப்பாளர், அத்தகைய பேச்சுகளை “மூட்” கூட செய்யாமல் இருந்ததை கவனிக்க முடிந்தது.
ஜமேஷாமுபின்வீட்டில்கைப்பற்றப்பட்ட 109 பொருட்கள்[1]: ஜமேசா முபினின் வீட்டில் நடந்த சோதனையில் 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ஜிகாத் மற்றும் இஸ்லாமிய சித்தாங்கம் தொடர்பான புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி பலவிதமான செய்திகள் கடந்த ஒரு வாரமாக நாளிதழ்கள் வெளியிட்டு வருகின்றன. ஆனால், எந்த எய்தி தாளோ, ஊடகமோ ஐந்தாறு-ஏழெட்டு பொருட்களைத் தவிர, மற்றதை சொல்ல காணோம். ஆகவே, தமிழ், ஆங்கிலம் மற்றும் இதர ஊடகங்களில் உள்ள எல்லாவற்றையும் தொகுத்து ஒரு லிஸ்ட் தயாரிக்கப் படுகிறது. – அதில்
அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பிளேடு [Surgical blades],
கண்ணாடிகள் [Glass pieces],
9 வாட்ஸ் பேக்டரி [9 watts battery],
9 வாட்ஸ் பேட்டரி கிளிப் [9 watts Battery clips],
வயர் [wires],
சுவிட்ச் [switches],
சிலிண்டர் [cylinders],
ரெகுலெட்டர் [regulators],
டேப் [tapes]
இஸ்லாமிய மதம் கொள்கைகள் தொடர்புடைய புத்தகங்கள் [Islamic literature including Jihadi category],–
உள்ளிட்ட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரமாக இச்செய்திகள் வந்துகொண்டிருந்தாலும், முழு விவரங்கள் வெளியிடாமல் இருப்பதும் திகைப்பாக இருக்கிறது.
ஜமேஷ்முபீனின்குடும்பம், பின்னணி: கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்த முபின் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். படித்து முடித்ததும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அப்போது வீட்டில் அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்த போது, ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணையே நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார். அதன்படி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோவை அல் அமீன் காலனியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணான நஸ்ரத்தை (23) முபின் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கோட்டைமேடு பகுதியில் மனைவியுடன் வசித்து வந்த அவர் அங்குள்ள புத்தக கடையில் வேலைக்கு சேர்ந்தார். இவருக்கு 2 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு முபின் தனது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாரிடமும் பேசுவதில்லை. இந்த நிலையில் திடீரென தான் வேலை பார்த்து வந்த புத்தக கடை வேலையை முபின் விட்டு விட்டார். இதுகுறித்து நஸ்ரத் கணவரிடம் கேட்டதற்கு, தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகவும் தன்னால் வேலை பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்து வீட்டில் இருந்தார்.
கோட்டைஈஸ்வரன்கோவில்அருகேவீடுபார்த்துகுடிபெயர்ந்தது: கோட்டைமேடு பகுதியிலிருந்து, திடீரென்று கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் வீடு பார்த்து இடம் பெயர்ந்தார். வேலைக்கு செல்லாமல் இருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக முபின் வீட்டில் இருக்காமல் வெளியில் சென்றதால் ஏதாவது வேலை பார்க்கிறீர்களா என விசாரித்துள்ளார். அப்போது தான் தேன் மற்றும் நறுமண பொருட்கள் விற்பனை செய்வதாகவும், நாட்டு மருந்து கடையில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். கார் வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு முபின் தனது மனைவியிடம் நாம் வேறு வீட்டிற்கு செல்லலாம் என கூறியுள்ளார். அதன்படி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வீடு பார்த்து மனைவி, குழந்தைகளுடன் குடியேறி உள்ளார். அப்போது முபின் வீட்டிற்குள் 4 பெட்டிகளை எடுத்து வந்தார். இதனால் நஸ்ரத்துக்கு சந்தேகம் ஏற்படவே எதற்காக இந்த 4 பெட்டிகள். அதில் என்ன உள்ளது என கேட்டுள்ளார். அதற்கு முபின், இந்த பெட்டிகளில் பழைய துணிகள் தான் உள்ளது என கூறியுள்ளார். ஆனால் கார் வெடிப்பு சம்பவம் நடந்த பிறகே அந்த பெட்டிகளில் வெடி மருந்து இருந்த தகவல் நஸ்ரத்துக்கு தெரிய வந்துள்ளது.
20-10-2022 அன்றுமனைவிகுழந்தைகளுடன்தாய்வீட்டிற்குசென்றுவிடுதல்: கடந்த மாதம் 20-ந்தேதி, முபினின் மனைவி நஸ்ரத்துக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். முபின் எப்போதும் யாரிடமும் பேசாமல் தனியாகவே இருப்பார். மேலும் எந்நேரமும் செல்போனில் ஏதாவது பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால் சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு நஸ்ரத்தின் வீட்டிற்கு சென்ற முபின் வழக்கத்திற்கு மாறாக அனைவரிடமும் சகஜமாக பேசியுள்ளார். மேலும் குடும்பத்தினர் அனைவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டும் உள்ளார். அன்று மாலையே தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியில் சென்று உள்ளார். அப்போது குழந்தைகளுக்கு பிடித்த ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றையும் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் மனைவியை அவரது தாய் வீட்டில் விட்டு, முபின் மட்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவம் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு தண்ணீரை சேமிப்பதற்கு டிரம் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார்.
22-10-2022 அன்றுமனைவியுடன்பேசியது: அப்போது 3 நாட்களுக்கு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். 22-ந் தேதி இரவு நஸ்ரத் கணவருக்கு எப்போது வீட்டிற்கு வருவாய் என மெசேஜ் அனுப்பினார். அதற்கு நாளை வருவதாக கூறியுள்ளார். அப்போது நஸ்ரத் குழந்தைகள் உன்னை தேடுகின்றனர். வீடியோ காலிலாவது பேசு என மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் அதன்பின்னர் முபின் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தும் முபினை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிகிறது. இதுவே முபின் அவரது மனைவியிடம் கடைசியாக பேசியது. ஆனால் தற்போது வரை முபினுக்கு என்ன நடந்தது என்று அவரது குழந்தைகளுக்கு தெரியவில்லை.
வேதபிரகாஷ்
05-11-2022
[1] ஒவ்வொரு நாளிதழும், செய்தியும் விதவிதமாகக் குறிப்பிடுகின்றன (ஐந்து-ஆறு என்று….), அவற்றைத் தொகுத்து, இங்கு பட்டியலிடப் பட்டுள்ளது.
2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகிய நிலை (1)
22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட்கிழமை) வரைநடந்துள்ளவைஎன்ன?: 24-10-2022 அன்று தீபாவளி என்பதால், துணிமணி, பட்டாசு, ஸ்வீட் வாங்க வேண்டும், எல்லோருமே ஊருக்குச் செல்ல வேண்டும், வாங்கியதை குடும்பத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டும், சந்தோஷமாக கொண்டாட வேண்டும், என்று லட்சக்கணக்கில் மக்கள் வாகனங்களில், பேருந்துகளில், ரெயில்களில் சென்று கொண்டிருந்தனர். அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்ப, பட்ஜெட்டில் தீபாவளி கொண்டாட திட்டத்துடன் இருப்பர், சென்று கொண்டிருந்தனர். ஆனால், அப்பொழுது, கோயம்புத்தூரில் சிலர் வேறு விதமாக திட்டம் போட்டிருந்தனர் போலும். வெகுஜன மக்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளியை நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, ஊடகங்களில் வழக்கம் போல, தீபாவளி எதிர்ப்பு, பட்டாசு மறுப்பு, நாத்திக-நராகாசுரன் ஆதரவு செய்திகள் வந்து கொண்டிருந்தன[1]. பட்டாசு வெடிக்க வேண்டாம், குறிப்பிட்ட நேரங்களில் தான் வெடிக்க வேண்டும், மீறினால், வழக்கு, புகார், தண்டனை என்றெல்லாம் பெரிய போலீஸ் அதிகாரிகள் மிரட்டியதாக செய்திகள்[2]. அதே நேரத்தில் பட்டாசு விற்பனை பெருக்க வேண்டும் போன்ற பிரச்சாரமும் இருக்கிறது. இன்னொரு பக்கமோ, கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது போன்ற செய்திகள்.
இந்நிலையில்தான்கோவைகார்குண்டுவெடிப்புசம்பவம்–செய்திகள்வரஆரம்பித்தன: 22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட் கிழமை) வரை நடந்துள்ள நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்தால், இந்த கோவை கார் குண்டு வெடிப்பு திட்டமிட்டு நடந்துள்ள-நடத்தப்பட்ட செயல் என்று அறிந்து கொள்ளலாம். பிறகு, மற்ற செய்திகள் எல்லாம் வெளிவர ஆரமித்துள்ளன. ஊடகங்களின் பாரபட்சமிக்க, செய்தி வெளியீட்டுப் போக்கும், “ஆபத்திலிருந்து” மெதுவாக, “குண்டு வெடிப்பு” என்று முடிந்துள்ளது. இருப்பினும் இந்த தீவிரவாதிகள், பயங்கரவாதிள் எல்லோருமே மரியாதையுடன் தான் குறிப்பிடப் படுகிறார்கள். மத்திய உளவுத்துறை காவல்துறையினர் ஜமிஷா தொடர்பான பல்வேறு தகவல்களுடன் அவரை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசுக்கு 2018ம் ஆண்டு முதன் முதலில் தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது[3]. தமிழக காவல்துறையினர் இதனை பெரிதாக கருதவில்லை என்று கூறப்படுகிறது[4].
22-10-2022 (சனிக்கிழமைஇரவு): சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு ஜமேஷா முபின் வீட்டில் இருந்து அவர் உட்பட 5 பேர் மர்மபொருளை தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், முபின் தன்னுடைய வீட்டை காலி செய்ய வேண்டும் என்று கூறியதாகவும், அந்தப் பெட்டியில் ஸ்கிரேப் பொருள்கள் இருந்ததாக முபின் விளக்கம் அளித்ததாக கூறியுள்ளனர். அந்த சிசிடிவி காட்சிகளில் உள்ள மற்ற நபர்கள் 4 பேர் யார் என்பது குறித்து பிறகு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர், என்றெல்லாம் செய்திகள் பிறகு வெளி வந்தன. அப்படியென்றால், இவர்களும் முன்னமே இக்காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். சுற்றியுள்ளவர்கள், இவர்களது நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு, எச்சரித்திருக்கலாம், புகார் கொடுத்திருக்கலாம். ஆனால், முஸ்லிம்கள் எனும் போது, அமைதியாக இருந்து விட்டனர் போலும். ஒரு ஊடகத்தால், அங்கு செய்தி-விவரங்கள் சேர்க்கச் சென்றபோது, ஜன்னல் கதவுகளை அடைத்துக் கொண்டனர், யாரும் பேச முன்வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
23-10-2022 (ஞாயிற்றுக்கிழமை): அதிகாலை சுமார் 4:45 மணி அளவில், கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு பெரும் வெடிச் சத்தம் கேட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் அங்கு வந்து பார்த்துள்ளனர். முதலில், ஏதோ பட்டாசு சத்தம் என்று கூட நினைத்திருக்கலாம். அந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதிகாலை 4 மணி அளவில் சாலையில் கார் செல்வது, கார் நிற்பது பின்பு வெடித்து சிதறும் காட்சிகள் வெளியாகி உள்ளது. விடியற்காலை காரில் உள்ள காஸ் சிலிண்டர் வெடித்து ஒரு ஆள் இறந்தான். செல்போன் உதவியுடன் இறந்தவன் அடையாளம் காணப் பட்டான். வெடித்து சிதறிய காரில் இன்னொரு வெடிக்காத சிலிண்டர் மற்றும் சுற்றிலும் ஆணிகள், பால்ரஸ் போன்றவையும் சிதறிக் கிடந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தடயவியல் துறையினர் காரிலிருந்து 2 முதல் 3 கிலோ 1.5 இன்ச் ஆணிகள் மற்றும் பால்ரஸ் குண்டுகளைக் கண்டறிந்துள்ளனர். ஆணி, பால்ரஸ் வேறு பணிக்காக கொண்டு செல்லப்பட்டதா அல்லது வெடி விபத்தை நிகழ்த்தும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டவையா என்பதை நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஆக, நிச்சயமாக கோவை போலீஸார் சென்னை உயர் அதிகாரிகளுக்கு தெரியப் படுத்தி, விசயம் முதலமைச்சருக்குச் சென்றிருக்கும்.
பிற்பகல் – 23-10-2022 (ஞாயிற்றுக்கிழமை): தொடக்கத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்தை கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி தாமரைக் கண்ணன் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இந்தச் சம்பவத்தின் நிலைமை அறிந்து சென்னையிலிருந்து டி.ஜி.பி சைலேந்திர பாபு விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கோவைக்கு வந்தார். வெடி விபத்து நிகழ்ந்த பகுதியை ஆய்வு செய்தார். அதாவது, விசயம் சாதாரணமானது அல்ல என்பது தெரிந்து விட்டது. பிரசித்தி பெற்ற உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு மட்டுமின்றி, தீபாவளியையொட்டி, இப்பகுதியில் துணி எடுப்பதற்காக அதிக அளவில் மக்கள் கூடும் நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது கோவை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மசூதிகள் முன்பு போலீஸார் பாதுகாப்புப்பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
கார்குண்டுவெடித்தலில்இறந்தவன்ஜமேசாமுபின்: போலீஸார் செல்போன், கார் எண் முதலியவற்றை வைத்துக் கொண்டு விவரங்களை சேகரித்தனர். ஜமேசா முபின் என்பவன் தான் இறந்திருக்கிறான் எனூ முடிவானது. அவன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர். அப்பா இல்லை. அம்மா மட்டும் தான். அவர் மனைவிக்கு செவி மற்றும் பேச்சுத்திறன் இல்லை. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஜமேசாவுக்கும் இதயம், கண் ஆகியவற்றில் சில பிரச்னைகள் உள்ளன. முன்பு பழைய புத்தகக் கடை நடத்தி வந்தவர், பிறகு துணி வியாபாரம் செய்து வந்திருக்கிறார். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர். அதனால்தான் கடந்த 2019ம் ஆண்டு இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு பிறகு ஜமேசா முபினிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்த கார் வெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு போலீஸ் அவர் வீட்டில் நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு கடிதத்தில் சுற்றிப் பார்க்கவுள்ள சுற்றுலா தலங்கள் என எழுதி ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம், ஆணையர் அலுவலகம், ரேஸ்கோர்ஸ், விக்டோரியா ஹால் (மாநகராட்சி அலுவலகம்) ஆகிய பகுதிகளை குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம், இந்தப் பகுதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இப்படி செய்திகள்……
வாட்ஸ்–ஆப்பதிவு, இறப்புஉண்மைஎன்றால், அதுதற்கொலைகுண்டுவெடிப்புஆகிறது: விபத்து நடந்தக் காரை ரூ.10,000க்கு தல்காவிடம் இருந்து வாங்கியுளளார். இப்படி கைது செய்யப்பட்ட அனைவரும், இந்த சதித் திட்டத்தில் ஒவ்வொரு பணியைச் செய்துள்ளனர். ஜமேசா அவ்வபோது கேரளா சென்று, அங்கு ஏற்கெனவே என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்டுள்ள அசாருதீன் என்பவரைச் சந்தித்து வந்துள்ளார். ஆங்காங்கே சிறுக சிறுக சேகரித்து 75 கிலோ வெடி மருந்துக்கான வேதிப் பொருள்களை வாங்கியுள்ளனர். வெடி பொருள் தயாரிப்பது எப்படி என்பதை யூ-ட்யூபில் தேடிப் பார்த்திருக்கிறார். கைது செய்யப்பட்டவர்கள் இல்லாமல், இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கிறது.” என்றனர். …….’வாட்ஸ்ஆப்ஸ்டேட்டஸில், என்னுடையஇறப்புசெய்திஉங்களுக்குதெரியும்போதுஎனதுதவறைமன்னித்துவிடுங்கள், குற்றங்களைமறந்துவிடுங்கள்எனதுஇறுதிசடங்கில்பங்கேறுங்கள். எனக்காகபிரார்த்தனைசெய்யுங்கள்,” என்று பதிவிட்டு உள்ளார். இதற்கான புகைப்படத்தை அவர் பதிவேற்றி இருக்கிறார். இதை பற்றி விசாரிக்க வேண்டும். இது ஐஎஸ்எஸ் தொடர்புடைய வாசகம். அவர்கள்தான் தற்கொலை தாக்குதல்களுக்கு முன்பாக இப்படி எல்லாம் போஸ்ட் செய்வார்கள்…..இப்படியும் செய்திகள்! வாட்ஸ்-ஆப் பதிவு, இறப்பு உண்மை என்றால், அது தற்கொலை குண்டு வெடிப்பு ஆகிறது, “சூஸைட் பாம்பர்” என்றாகிறது!
[1] திக-திமுகவினர் தொடர்ந்து தங்களது ஊடகங்களில் இத்தகைய பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், உலகம் முழுவதும் கொண்டாடப் பட்டு, உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.
[2] சுவாசிக்கும் காற்று மாசு படுகிறது என்ற கோணத்தில் உச்சநீதி மன்றமே வரையறை கொடுத்திருப்பதால், அதன் மீது, மாநில அரசுகள் மற்றும் இதர நிறுவனங்கள், இயக்கங்கள் இதை பெரிது படுத்தி, பிரச்சாரம் செய்கின்றன.
[3] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், உளவுத்துறை ‘அன்றே’ கொடுத்தசிக்னல்!.. கிடப்பில்போடப்பட்டதா ? கோவைகார்குண்டுவெடிப்புசம்பவம், Raghupati R, First Published Oct 28, 2022, 7:56 PM IST; Last Updated Oct 28, 2022, 8:34 PM IST.
தீவிரவாதத்தை ஊக்குவிக்கும், ஆதரிக்கும் மற்றும் வளர்க்கும் ஜாகிர் நாயக்கின் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் விதம்.
இஸ்லாமியஆராய்ச்சிபவுண்டேசனின்நடவடிக்கைகள்: மும்பையில் இஸ்லாமிக் ஆராய்ச்சி அறக்கட்டளை (ஐஆர்எப்) [Islamic Research Foundation (IRF)] நடத்தி வந்தவர் மதபோதகர் ஜாகிர் நாயக். இவர் தனது அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த நிதிகளை எல்லாம் ‘பீஸ் டிவி’ என்ற சேனலுக்கு வழங்கி தனது பேச்சுக்களை ஒளிபரப்பச் செய்தார்[1]. இவரது பேச்சுக்கள் தீவிரவாதத்தை தூண்டும் வகையில் இருந்ததால், அதை ஒளிபரப்ப இங்கிலாந்து, கனடா, மலேசியா ஆகிய நாடுகளில் தடை விதிக்கப்பட்டது[2]. இப்போது இந்தியாவிற்கு வெளியில் இருக்கும் ஷாகிர் நாயக், ஒவ்வொரு முஸ்லிமும் தீவிரவாதியாக இருக்க வேண்டும் என்றும், அதாவது அமெரிக்காவை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும் முன்பு பல பிரசாரங்களில் கூறியிருக்கிறார்[3]. அனைத்து விசாரணைகளுக்கும் ஷாகிர் நாயக் ஒத்துழைப்பார் என்று அவருடைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்[4]. இருப்பினும் வெளிநாடு சென்ற நாயக் இந்தியாவுக்கு திரும்பி வரவில்லை[5]. சென்ற வாரம் தனது தந்தை இறந்த போது கூட, வந்தால், கைது செய்யப் படுவோம் என்று அஞ்சி வராமல் தவிர்த்தார் என்று சொல்லப்பட்டது. இதையெல்லாம் கவனிக்கும் போது, வெளிநாட்டில் இருக்கும் நாயக்கிற்கு, விசயங்கள் சென்று சேர்ந்து வருகின்றன என்று தெரிகிறது.
மாநிலமத்தியஅரசுகள்நடவடிக்கைஎடுத்தது: மஹாராஷ்ட்ரா அரசு முஸ்லிம் இளைஞர்களை மதவாதிகளாக்கி, தீவிரவாதத்தில் ஈடுபடுத்துகிறார் என்று வழக்குகள் பதிவு செய்துள்ளது[6]. மும்பை சிறப்புப் பிரிவு [Special Branch (SB) போலீஸார், Mumbai police] மற்றும் பொருளாதார குற்றப் பிரிவு [Economic Offences Wing (EOW)] முதலிய அதிகாரிகள், மேற்குறிப்பிடப்பட்ட அலுவலங்களில் சோதனையிட்டு, குற்றஞ்சாட்டப்படக் கூடிய வகையில் உள்ள ஆவணங்களைக் கைப்பற்றினர்[7]. அயல்நாட்டு பணம் வரவு கட்டுப்பாடு சட்டத்தின் பிரிவுகளை மீறி பணம் பெறப்பட்டதும் தெரிந்தது. அதை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியது[8]. விசாரணையில் வெளிநாட்டு அன்பளிப்பு கட்டுப்பாடுகள் சட்டத்தை (எப்சிஆர்ஏ) ஐஆர்எப் கல்வி அறக்கட்டளை மீறி செயல்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது[9]. இந்திய ரிசர்வ் வங்கியின் [RBI] முன்னனுமதி இல்லாமல் பணம் பெற்றதும் உறுதி செய்யப்பட்டது[10]. அந்த அமைப்புக்கு சட்ட விரோதமாக வெளிநாடுகளில் நிதி வருவது ஆதாரப்பூரமாக தெரியவந்தது. மேலும், பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பரப்புரை செய்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக, உளவுத் துறை அளித்துள்ள பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் ஜாகீர் நாயக் நடத்தும் என்ஜீஓ நிறுவனம் சட்டத்திற்கு புறம்பான நிறுவனம் என அடையாளப் படுத்தப்படுவதாக உறுதியானது.
19-11-2016 அன்றுநடந்தசோதனைகள்: மத போதகர் ஜாகிர் நாயக் மீது வழக்கு பதிவு செய்த தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் [National Investigation Agency], அவரது தொண்டு நிறுவனங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். மும்பையை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் மதபோதகர் ஜாகிர் நாயக், தனது வெறுப்பு பேச்சுக்கள் மூலம் இளைஞர்களை பயங்கரவாதிகளாக மாற்றுவதாக புகார் எழுந்தது. அந்தவகையில் மும்பை புறநகர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலரை ஜாகிர் நாயக் ஐ.எஸ். அமைப்பில் இணைய வைத்ததாக கூறப்பட்டது. வங்காளதேசத்தில் கடந்த ஜூலை மாதம் 2016 நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஒருவர், ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களால் தான் கவரப்பட்டதாக தெரிவித்து இருந்தார். பங்களாதேசமே இதை அறிவித்து, தடை செய்யுமாறுஈந்தியாவைக் கேட்டுக் கொண்டது. இதனால் அவரது உரைகளை இங்கிலாந்து, கனடா மற்றும் மலேசியா நாடுகள் தடை செய்துள்ளன. இதைத்தொடர்ந்து ஜாகிர் நாயக் நடத்தி வரும் தொண்டு நிறுவனம் மற்றும் அவரது கல்வி அறக்கட்டளைகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய மராட்டிய போலீசார் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பினர்.
முறைப்படிமேற்கொள்ளப்படும்சட்டநடவடிக்கைகள்: ஊடகங்கள் தினமும், அரசு நடவடிக்கைகளை பலவிதமாக வர்ணித்து செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. முக்கிய பிரச்சினைகளை விடுத்து, ஜாகிர் நாயக்கின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் படும், கைது செய்யப் பட்டால் என்ன செய்வார், ய்ஜடை செய்யப் பட்டால் மேல்முறையீடு செய்வாரா, என்றெல்லாம் விவாதம் என்ற பெயரில் நாயக்கிற்கு சாதகமாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. தீவிரவாத செயல்களை உலகளவில் கட்டுப் படுத்த எல்லா நாடுகளும் இறங்கியுள்ளன. இந்தியாவில் ஜி.எஸ்.டி அமூல் படுத்தியவுடன், அந்நிய நாடுகளின் முதலீடு அதிகமாகி, தொழிற்சாலைகள் நிறுப்பப்படும். அந்நிலையில், தீவிரவாதிகள் ஒன்றும் செய்யக் கூடாது. அத்தகைய, சுமூகமான நிலையை இந்தியா ஏற்ப்டுத்த வேண்டியுள்ளது. ஆகவே, ஜாகிர் நாயக்கின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க அரசு தீர்மானித்தது.
முறைப்படி விசாரணை, ஆதாரங்கள் முதலியவற்றுடன் வழக்கு பதிவு செய்த விதம்: சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதனால், ஜாகிர் நாயக்கின் ஐ.ஆர்.எப். நிறுவனத்தில் வேலை செய்பவஎகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நாயக்கின் பேச்சுகள் அடங்கிய வீடியோக்கள், புத்தகங்கள் முதலியவை கொண்டு வரப்பட்ட முழுமையாக அலசிப் பார்க்கப்பட்டது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை போதிக்கிறேன் என்ற போர்வையில், எவ்வாறு முஸ்லிம்-அல்லாதர்களின் மீது ஜிஹாத் என்ற போரை நடத்துவது, போன்ற தீவிரவாதத்தை போதிக்கும் போக்கு அறியப்பட்டது. இவரால் ஈர்க்கப் பட்டு, ஐசிஸ்.சில் சேர்ந்து, ஓடி வந்தவர்களிடம் விசாரித்து திட்டத்தையும் அறியப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த தொண்டு நிறுவனத்தை சட்ட விரோத அமைப்பு என மத்திய அரசு கடந்த 15–ந்தேதி [செவ்வாகிழமை 15-11-2016] அறிவித்தது[11]. மேலும் இந்த அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது. இதில் அடுத்த நடவடிக்கையாக ஜாகிர் நாயக் மீது இந்திய தண்டனை சட்டம் 153 ஏ (மத அடிப்படையில் பகை வளர்த்தல் மற்றும் நல்லிணக்கத்துக்கு கேடு விளைவித்தல்) மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் [ Unlawful Activities (Prevention) Act and the Indian Penal Code] பல்வேறு பிரிவுகளின் கீழ் வெள்ளிக்கிழமை 18-11-2016 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது[12]. தேசிய புலனாய்வுத்துறையின் மும்பை பிரிவு அதிகாரிகள் இந்த வழக்கை பதிவு செய்தனர்.
[11] தினத்தந்தி, தொண்டுநிறுவனங்களில்சோதனை: மதபோதகர்ஜாகிர்நாயக்மீதுவழக்குபதிவுதேசியபுலனாய்வுத்துறைஅதிகாரிகள்அதிரடி, பதிவு செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 20,2016, 2:26 AM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 20,2016, 3:45 AM IST
மறுபடியும் பாகிஸ்தானில் இன்னொரு ஷியா வழிபாட்டு ஸ்தலத்தின் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் – 52 பேர் சாவு, 150 படுகாயம், ஐசிஸ்பொறுப்பேற்றுள்ளது!
பல்லாண்டுகளாகஷியாக்களின்மீதுசுன்னிகள்நடத்திவரும்தாக்குதல்கள்: பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்களின் மீதான தாக்குதல் பல்லாண்டுகளாக நடந்து வருகின்றன. ஷியாக்களின் மக்கட்தொகை 10-25% சதவீதங்களில் உள்ளது என்று பாகிஸ்தான் கூறுக் கொள்கிறது. 2015 மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி சுமார் 40 மில்லியன் / நான்கு கோடி ஷியாக்கள் உள்ளதாக சொல்லிக் கொள்கிறது. ஆனால், அவர்கள் இரண்டாந்தர குடிமக்களைப் போலத்தான் நடத்தப் படுகிறார்கள். சுன்னி முஸ்லிம்கள் அவர்களை காபிர்கள் என்றே பிரகடனப் படுத்தி ஜிஹாத் என்ற “புனித போரை” அவர்கள் மீது தொடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும். ஷியாக்களின் புனித வழிபாட்டு தினங்களில் அவர்களின் வழிபாட்டு ஸ்தலங்களில் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். முதியவர், பெண்கள், குழந்தைகள் என்று கூடியிருந்தாலும், இரக்கமில்லாமல், குண்டுவெடிப்புகள் மூலம் கொன்று வருகின்றனர்.
உலகம் முழுவதிலும் ஷியாக்களின் தாக்குதல் அதிகமாகி வருகின்றது: தலிபான்கள், முஜாஹித்தீன்கள், ஐசிஸ் தீவிரவாதிகள் என்று பல குழுக்கள் வளர்ந்து விட்ட நிலையில், அவர்கள் எல்லோருமே சுன்னிகளாக இருக்கும் பட்சத்தில், ஷியாக்களின் மீதான தாக்குதல்கள் மிகவும் கோரமாக, குரூரமாக, மிருகத்தன்மையுடன் நடத்தப் பட்டு வருகின்றன. இஸ்லாத்தில் இந்த சுன்னி-ஷியா பிளவு சண்டைகள் மொஹம்மது காலத்திலேயே ஆரம்பித்து, தொடர்ந்து நடந்து வருகிறது. முந்தைய இரான்–இராக் சண்டையும் அதனால் தான் நடந்தது. இரானுக்கும், சவுதி அரேபியாவுக்கும் மெக்கா-மெதினா நிர்வகிப்பு விவகாரங்களிலும், இப்பிரச்சினை தலைத் தூக்குவதுண்டு. அதனால், சவுதி அரேபியா இரானைக் கட்டுப் படுத்தி வைக்க எல்லா முறைகளையும் கையாண்டு வருகின்றது.
சனிக்கிழமை 12-11-2016 அன்றுமாலைநடத்தப்பட்டகுண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை என்றாலே மசுதிகளில் அல்லது மற்ற இலக்குகளின் மீது குண்டுவெடிக்கும் தாக்குதல் நடக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. பலோசிஸ்தான் குஜ்தார் மாகாணத்தில் லாஸ்பெல்லாவில் பிரபல தர்கா ஷா நூரனி சூபி வழிபாட்டுத் தலம் உள்ளது[1]. கராச்சியிலிருந்து 150 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு ஷியாக்கள் அதிகமாக வாழ்கின்றனர் என்பது தெரிந்த விசயமே. பிரதி வெள்ளிக்கிழமை தமால் என்ற சூபி சடங்கை பார்ப்பதற்கு இங்கு ஷியாக்கள் அதிகக் கணக்கில் கூடுவதுண்டு[2]. தமால் என்பது சூபி-நடனமாகும். சூபி பக்தர்கள் சுழன்று கொண்டே ஆடிப் பாடுவர். ஏ. ஆர். ரஹ்மான் சூபி மெட்டுகள் பலவற்றை சினிமா பாடல்களில் உபயோகப்படுத்தியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், ஷியாக்கள் தாக்குவதை அவர் கண்டிப்பதாகத் தெரியவில்லை. இங்கு சனிக்கிழமை 12-11-2016 அன்று மாலை சுமார் 500 பேர் தரிசனம் செய்வதற்காக திரண்டிருந்தனர்[3]. அப்போது கோவில் வளாகத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது[4]. இதில், ஏராளமான பக்தர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
இரவின்இருள், மருத்துவமனைஅருகில்இல்லாததுஇறப்புகள்அதிகமாககாரணமாகின்றன: சம்பவ இடத்திற்கு போலீசாரும், மீட்புக்குழுவினரும் ஆம்புலன்சுகளுடன் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர். பலர் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் உயிருக்குப் போராடினர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்[5]. அருகில் மருத்துவமனைகள் இல்லாத காரணத்தால் காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஷியாக்கள் மாகாணம் என்பதால், பாகிஸ்தான் அரசு பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறதா என்ற சந்தேகமும் எழுகின்றது. இருள் சூழ்ந்த காரணத்தால் மீட்புப் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது[6]. இந்த குண்டு வெடிப்பிற்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது[7]. ஐ.எஸ் உலகம் முழுவது உள்ள ஷியாக்களை ஒழிப்பதற்கு தயாராக உள்ளது[8]. சிரியாவில் ஷியாக்களைக் கொன்று குவித்து வருகின்றது[9].
52 பேர்சாவு, 150ற்கும்மேற்பட்டவர்படுகாயம்: 12-11-2016 சனிக்கிழமை அன்று 14 வயது சிறுவன், மசூதியில் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் குழந்தைகள் உட்பட சுமார் 43 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. நூறுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். நேரமாக-நேரமாக இந்த எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது. தாக்குதல் நடந்தபோது சுமார் 600 பக்தர்கள் அங்கே இருந்தார்களாம். பாகிஸ்தான் பலுசிஸ்தான் பகுதியில் குண்டு வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது[10]. வழக்கம் போல பாக்., அதிபர் நவாஸ் ஷெரிஃப், இம்ரான் கான் போன்றோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்[11]. ஆனால், இதனால், ஷியாக்கள் மீதான தாக்குதல்கள் குறையப் போவதில்லை.
இந்தியாவின்மீது, தமிழகத்தின்மீதானதாக்கம், விளைவு: இந்தியாவில் ஷியாக்கள், சுன்னிகளால் அடக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்றே தெரிகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில், “ஷிர்க்” என்ற போர்வையில், சுன்னிகள், ஷியாக்களை மிரட்டி வைத்துள்ளனர் எனலாம். ஷியாக்கள் என்று தங்களை அடையாளப் படுத்திக் கொண்டு, யாரும் தங்களது உரிமைகளைக் கேட்பதில்லை. ஆஜ்மீர், நாகூர் போன்ற தர்காக்களில் மொட்டைப் போட்டுக் கொண்டு சென்றலும், அவர்களும், இத்தீவிரவாத-ஜிஹாதி வகையறாக்களைக் கண்டிப்பதில்லை. ஏ. ஆர். ரஹ்மான் போன்றோரும், சுப்பித்துவம், சூபி இசை என்றெல்லாம் பேசி, தனது வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டாலும், ஷியாக்கள் தாக்கப்படும் போது, கொல்லப்படும் போது, கண்டு கொள்வதில்லை. கிலாபத் இயக்கத்தை [1919-1922] ஆதரித்ததின் மூலம் காந்தி இந்திய முஸ்லிம்களைப் பிரித்தார். இன்றும் கிலாபத்தை மறுபடியும் நிறுவியதாக கூறிக்கொள்ளும் ஐசிஸ் ஷியாக்களை வேட்டையாடி வருகின்றது. கிலாபத்தை காந்தியும், ஐசிஸும் ஆதரித்தது-ஆதரிப்பது வினோதமே, ஆனால், உண்மை.
[1] தினத்தந்தி, பாகிஸ்தானில்பயங்கரம்:பலுசிஸ்தான்மாகாணத்தில்குண்டுவெடிப்பு 30 பேர்பலி, பதிவு செய்த நாள்: சனி, நவம்பர் 12,2016, 7:57 PM IST; மாற்றம் செய்த நாள்: சனி, நவம்பர் 12,2016, 7:57 PM IST.
[6] தினமலர், பலுசிஸ்தானில்குண்டுவெடிப்பு: 43 பேர்பலி; பலர்படுகாயம், பதிவு செய்த நாள்: நவம்பர்.12, 2016. 20.00; மாற்றம் செய்த நாள். நவம்பர்.12, 2016.00.34.
[8] Express (UK), ISIS bomb at Muslim shrine kills at least 25 people in huge explosion in Pakistan, By KATIE MANSFIELD, 14:17, Sat, Nov 12, 2016 | UPDATED: 20:12, Sat, Nov 12, 2016
ஜாகிர் நாயக் உள்ளூர் தீவிரவாதம் வளர்த்த கூட்டத்தில் உள்ளது உண்மைதான் – தீவிரவாதிகள் ஈர்க்கப்பட்டனர் எனும்போது, இல்லை என்றால் மற்ற தொடர்புகள் சம்பந்தப்படுத்துகின்றன!
01-07-2016 வெள்ளிக்கிழமைதாக்குதல் – 02-07-2016 சனிக்கிழமைஐசிஸ்ஒப்புக்கொண்டது: பங்களாதேசத்தில் உள்ள தீவிரவாதிகள் அனைத்துல ரீதியில் செயல்பட்டு வரும் இயக்கங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது ஆராயப்பட்டு வருகின்றது. ஐசிஸ் அமைப்பே ஹோலே ஆர்டிசன் ஹோட்டலில் தாக்கியவர்களை அடையாளங்கண்டது என்று “சைட்” புலனாய்வு குழு [SITE Intelligence Group] உடைகளில் தோன்றும் ஜிஹாதிகளின் புகைப்படங்களை வெளியிட்டது[1]. வளைகுடா நாடுகளின் தீவிரவாத இயக்கங்கள் வெளியிடும் இணைதளங்களிலிருந்து அவை எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டன. ஐசிஸ் அந்த ஐந்து நபர்களை அடையாளம் கண்டது, மற்றும் புகைப்படங்களை வெளியிட்டது என்று கூறுகிறது[2]. இதனால், ஐசிஸ் தொடர்புகள் நிரூபிக்கப்படுகின்றன. உள்ளூர் ஜமாத்-உல்-தாவா எல்லோரையும் ஊக்குவித்து வருகின்றது. இவ்வாறு எல்லா குழுக்களும் சேர்ந்து வேலைசெய்து வருவது பங்களாதேசத்திற்கு பெரிய தலைவலியாக இருக்கிறது. இஸ்லாமிய நாடு என்றாலும், இவ்வாறு தீவிரவாதம் எல்லைகளைக் கடக்கும் போது உண்மைகள் வெளிவருகின்றன. இஸ்லாமிய நாடுகளுக்கே இஸ்லாமிய தீவிரவாதம் இப்படி இருந்தால், செக்யூலரிஸ போர்வை போற்றிக் கொண்டு போலித்தனமான “மதசார்பின்மையை” கடைபிடிக்கும் இந்தியாவின் கதியை அறிந்து கொள்ளலாம்.
03-07-2016 – அல்–ஹுடா, ஜமாத்–உல்–தாவாமற்றும்இச்லாமியரிசெர்ச்பௌன்டேஷன்தொடர்புகள்: கொலையுண்டவர்கள் மற்றும் பிடிபட்டவர்களின் பின்னணியை ஆராய்ந்த போது, அவர்கள் எப்படி தீவிரவாதிகளாக உருவானார்கள் என்று தெரிய வந்தது. பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டது மட்டுமல்லாது, ஜிஹாதித்துவ ஊக்குவிப்பை ஜாகிர் நாயக் மூலம் பெற்றதை ஒப்புக் கொண்டார்கள்:
மீர் சமேஷ் மோபேஷ்வர்.
ரோஹன் இம்தியாஸ்.
நிப்ரஸ் இஸ்லாம்.
கைரூல் இஸ்லாம்.
ரிபான்.
சைஃபுல் இஸ்லாம்.
இதனால், தான் பங்களாதேசம் ஜாகிர் நாயக்கைப் பற்றி விசாரித்து விவரங்களைக் கேட்டது. அந்நிலையில் அதன் உருது [the Jamaat-ud-Dawa urdu] இணைதளத்தை ஆயும்போது, அது அல்-ஹுடா [the Al-Huda International] இயக்கத்துடன் தொடர்புள்ளதை காட்டுகிறது. இதில் உள்ள சிந்தனைவாதிகள் தாம், ஜாகிர் நாயக்கின் பேச்சுகளால் ஊக்குவிக்கப்பட்டுள்ளார்கள். இதனால், இவை, இஸ்லாமிக் ரிசெர்ச் பௌன்டேஷன் [Dr Zakir Naik’s IRF or Islamic Research Foundation] இணைதளத்தை தமது இணைதளங்களுடன் இணைத்துள்ளன. பதிலுக்கு, ஜாகிர் நாயக், இணைதளத்தை இணைத்ததால் மட்டும் ஹாவிஸ் சயீதுடன் தொடர்பு உள்ளது என்று சொல்ல முடியுமா என்று கேட்கிறார். சரி, ஆனால், இந்த பங்களாதேச ஜிஹாதிகள் “நீங்கள் தான் காரணம், ஊக்குவிப்பு” என்று காட்டியபோது, மறுக்காமல், அதற்கு நான் பொறுபேற்க முடியாது என்று நழுவினார். மேலும், இந்தியாவுக்கு வந்தால் கைது செய்யப்படலாம் என்று வராமலேயே டிமிக்கி கொடுத்து மறைந்து வாழ்கிறார். 05-07-2016லிருந்து ஜாகிர் நாயக் விவகாரங்களை NIA விசாரிக்க ஆரம்பித்தது.
07-07-2016 – “26/11 மும்பைவெடிகுண்டுதீவிரவாதத்தின்சதிதிட்டம்” – ரஹீல்செயிக்: 2008ல் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களுக்கு “26/11 மும்பை வெடிகுண்டு தீவிரவாதத்தின் சதிதிட்டம்” தீட்டிய ஜமாத்-உல்-தாவா காரணம் என்று அறியப்பட்டுள்ளது. உலகளவில் தேடப்பட்டு வரும் தீவிரவாதிகளில் அவனும் ஒருவன். இந்தியா எத்தனை ஆதாரங்கள் கொடுத்தாலும், பாகிஸ்தான், தான் “தீவிரவாத நாடு” என்று ஒருவேளை அறிவிக்கப்படலாம் என்ற பயத்தில், அவனுக்கும், மும்பை தீவிரவாத குண்டுவெடிப்பிற்கும் சம்பந்தம் இல்லை, கொடுத்துள்ள ஆதாரங்கள் தேவையானதாக இல்லை என்றெல்லாம் சொல்லி காலந்தாழ்த்தி வருகிறது. ஆனால், தொடர்ந்து இவ்வாறு நடந்து வரும் தீவிரவாத செயல்கள் வெளிப்படுத்திக் கொண்டுதான் வருகின்றன. மும்பை குண்டுவெடிப்பில் 167 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட சில நாட்களில் தான் இந்த இணைதளங்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டன. இஸ்லாத்தைப் பற்றி, ஜிஹாதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானால், இந்த இணைதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறது. இதனால் லஸ்கர்-இ-டொய்பா சம்பந்தமும் வெளிப்படுகிறது.
ரஹீல்செயிக், ஹாவிஸ்மொஹம்மதுசையீது, இஸ்லாமிக்ரிசெர்ச்பௌன்டேஷன்தொடர்புகள்: 2006ல் நடந்த மும்பை தாக்குதலின் சதிதிட்டத் தலைவன் ரஹீல் செயிக், அவன் ஜாகிர் நாயக்கினால் ஈர்க்கப்பட்டு, கவரப்பட்டான் என்று எடுத்துக் காட்டப்படுகிறது[3]. ஆனால், வஹாபி தீவிரவாத பிரச்சாரம் மற்றும் மற்ற தீவிரவாத தாக்குதல்களின் பின்னணியில் உள்ளவர்களின் இணைப்புகள் அதோடு முடிந்து விடவில்லை. இப்பொழுது பங்களாதேசத்தில் நடந்துள்ள தாக்குதலில் ஈடுபட்ட ஹோசன் இம்தியாஸ் மற்றும் ஹைதராபாதின் மாட்யூலின் முக்கியப் புள்ளி மால்வானி முதலியோரும் ஜாகிர் நாயக்கின் வஹாபி தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டனர்[4]. இதனை அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். 2006ல் நடந்த மும்பை தாக்குதலின் சதிதிட்டத் தலைவன் ரஹீல் செயிக், மும்பையில் உள்ள இஸ்லாமிக் ரிசெர்ச் பௌன்டேஷனுக்குச் சென்றுள்ளான்[5]. பலமணி நேரங்களை அங்கு கழித்துள்ள அவன், ஐ.ஆர்.எப் தனது உந்துதல், தூண்டுதல், ஈர்ப்பு என்று சொல்லியிருக்கிறான்[6]. அதாவது தீவிரவாதிகளுக்கே தூண்டுதல் போன்ற பிரச்சரம் அப்படி அங்கு என்னக் கொடுக்கப் படுகின்றது என்று ஆராய்ச்சி செய்து தான் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. ரஹீல் செயிக்கின் சகோதரர்களான பைஸல் மற்றும் முஜம்மில் செயிக்குகளுக்கு சவுதி அரேபியா, துபாய், நேபாளம், பங்களாதேசம் போன்ற நாடுகளுடன் தொடர்புகள் இருந்தன. இவர்களும் 2006 குண்டுவெடிப்புகளில் சிக்கியுள்ளார்கள்[7]. புலனாய்வு குழுக்கள் இதனை செல்போன், வங்கி கணக்குகள் மற்றும் இதர போக்குவரத்துகளிலிருந்து அறிந்துள்ளார்கள். ரஹீல் பணத்தை சேகரித்து லஸ்கர்-இ-டொய்பாவுக்குக் கொடுத்து வந்ததான் மற்றூம் பாகிஸ்தானுக்கு சென்று வந்துள்ளான், அது இந்த திட்டத்தைத் தீட்டியதாகவும் புலனாய்வு அதிகாரிகள் கூறுகிறார்கள்[8].
[1] SITE Intelligence Group released the photos on Saturday night and claims that they’ve collected the photos from online platforms used by the Middle East based terrorist group. According to earlier report by SITE Intelligence Group, Islamic State claimed responsibility for the assault in Holey Artisan Bakery, popularly known as Holey Bread, setting off a bloody standoff with the police in the capital Dhaka’s diplomatic zone. Around 9.30PM on Saturday (02-07-2016), SITE tweeted the photos of five young gunmen with the message ‘ISIS identified the five attackers involved in Bangladesh Attack and published their photos’. The undated photos show the young men holding guns in their hands are standing in-front of IS flag and clad in black dresses with smile on the face.
newsbangladesh.com, IS releases Holey Artisan gunmen photos, claims SITE, Staff Reporter, Inserted: 01:26, Sunday 03 July 2016, Updated: 16:17, Sunday 03 July 2016
[3] Hafiz Muhammed Saeed is the main architect of the 26/11 Mumbai terror attacks of 2008. Months after the worst terror strike in India which killed more than 167 innocent people, the two websites remained linked. “The connection with LeT does not end here. One of the masterminds of the 2006 Mumbai train blasts that killed 187 people – Rahil Sheikh was also influenced by Zakir Naik,” sources added.
India.today, Exposed: Zakir Naik’s link to 26/11 mastermind Hafiz Saeed, Ankit Kumar | Gaurav C Sawant | Posted by Sangeeta Ojha, New Delhi, July 7, 2016 | UPDATED 21:31 IST
[4] But the radicalisation link doesn’t end with 2006 train blast accused Rahil Sheikh. “Dr Zakir Naik with his hard line Wahabi Islam preaching is also alleged to have influenced terrorists like Rohan Imtiaz in Dhaka and the Malwani and Hyderabad Islamic State modules,” said an official.
“திருமணம் என்னும் நிக்காஹ்” படம், ஷியா முஸ்லிம்கள் எதிர்ப்பு, முஸ்லிம் பண்டிகைகள் சினிமாவில் காட்டுவதில் என்ன பிரச்சினை?
திருமணம் என்னும் நிக்காஹ்.2
இந்து பையன், முஸ்லிம் பெண் காதல் முதலியன: “திருமணம் என்னும் நிக்காஹ்” என்ற தலைப்பும், அது எதைப் பற்றிய கதை என்ற தகவலும் வெளியானதிலிருந்தே, அந்தப் படத்துக்கு ஏதாவது ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆட்சேபணை தெரிவிக்கும் என எதிர்ப்பார்க்கப் பட்டது[1] என்று “தமிள்.ஒன்.இந்தியா” போட்டு வைத்தது. சென்ற வருடமே வெளிவந்திருக்க வேண்டிய படம் வெளிவரவில்லை, காரணமும் சொல்லப் படவில்லை[2]. மே 15 வெளிவருகிறது என்று அறிவித்தார்கள், ஆனால், தேதி தள்ளிவைக்கப்பட்டது என்றார்கள்[3]. “தி இந்துவில்” வந்த விமர்சனம் இப்படத்தின் கதையை அலசியுள்ளது. ஒரு இந்து பிராமண பையன், முஸ்லிம் பெண்ணைக் காதலிக்கிறான். இரு குடும்பங்களை மையமாக வைத்துக் கொண்டு விவரணங்கள் செல்கின்றன. இத்தகைய படங்களை எடுப்பதில் அபாயம் இருக்கிறாதா என்ற கேள்வியை எழுப்பி, படத்தில் சரிசமமாக எல்லாவற்றையும் வைத்துக் கொள்ள வேண்டும். இப்படத்தில் மொஹ்ஹரம், ரம்ஜான் மற்றும் நிக்காஹ் விழாக்கள் விவரமாகக் காட்டப்படுகின்றன. அதேபோல, ஆவணிஆவட்டம், நவராத்திரி, கொலு போன்ற விழாக்களும் சித்தரிக்க ப்பட்டுள்ளன. இது தவிர முர்ஸீத் என்ற இஸ்லாமிய கொலு போன்ற விழா பற்றியும் விளப்படுகிறது[4].
Indian Express photo
ஷியா முஸ்லிம்கள் இயக்கம் எதிர்ப்பு, நீதிமன்றத்தில் மனு: இம்மாதம் 14ம் தேதி வெளியிடுவதாக இருந்தது, வெளிவரவில்லை[5]. ஆனால், கதை தொடர்ந்தது. நஸ்ரியாவுக்கு இது திருப்புமுனை என்றெல்லாம் அளந்தார்கள். அந்நிலையில் தான், ஷியா முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். நடிகர் ஜெய், நடிகை நஸ்ரியா நடித்துள்ள திருமணம் என்னும் நிக்காஹ் படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார், அனீஸ் இயக்கியுள்ளார். “திருமணம் எனும் நிக்காஹ்’ திரைப்படத்துக்கு தடைவிதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு சென்னை போலீஸ் ஆணையர், திரைப்பட மத்திய தணிக்கைக் குழு மற்றும் ஆஸ்கார் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது[6]. இது தொடர்பாக தமிழ்நாடு ஷியா முஸ்லிம் ஜமாத்தின் துணைத்தலைவர் டேப்லெஸ் / டப்ளஸ் அலிகான் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: “திருமணம் எனும் நிக்காஹ்’ திரைப்படத்தை ஆஸ்கார் பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளது. அதன் உரிமையாளர் வி. ரவிசந்திரன். அதை மே மாதம் 30-ஆம் தேதி திரையிடவும் முடிவு செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. அந்தத் திரைப்படத்தில் முஸ்லிம்கள் தரக்குறைவாக சித்திரிக்கப் பட்டுள்ளனர். அதிலும், ஷியா பிரிவு முஸ்லிம்களை மிகவும் இழிவு படுத்தி சித்திரித்துள்ளனர். இதனால் மதக்கலவரம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. எற்கெனவே, இந்த படத்தின் தயாரிப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் கடந்த 20–ந்தேதி புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை[7].எனவே, இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்”, என மனுவில் கோரப் பட்டுள்ளது.
Muharram festival
விடுமுறை நீதிமன்ற இடைக்கால நடவடிக்கை: இந்த மனு விடுமுறைக் கால நீதிபதி எஸ். வைத்தியநாதன் முன்பு வியாழக்கிழமை (மே 29) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ஜூன் 3- ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சென்னை போலீஸ் ஆணையர், திரைப்பட மத்திய தணிக்கைக் குழு மற்றும் ஆஸ்கார் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்[8]. மனுவுக்கு ஜூன் 4– ந் தேதிக்குள் பதிலளிக்கும்படி போலீஸ் கமிஷனருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்[9]. போற போக்கைப் பார்த்தால் எல்லா தமிழ்ச் சினிமாவையும் இனிமேல் கோர்ட்டு தான் ரிலீஸ் செய்யும் போலிருக்கு.. திருமணம் என்னும் நிக்காஹ் படத்துக்கு தடைகேட்டு இன்றைக்கு கோர்ட் படியேறியிருக்கிறது, ஒருகூட்டம்[10] என்று காட்டமாகக் கூட ஒரு இணைதளம் கமென்ட் அடித்துள்ளது.
M2U00474
சினிமா தயாரிப்பாளர் விளக்கம்[11]: பட சர்ச்சை குறித்து ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் கூறுகையில், ‘‘படத்துக்கு தணிக்கைக் குழு ‘யு’ சான்றிதழ் தந்துள்ளது. குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தி படம் எடுத்திருந்தால் தணிக்கைக் குழு அனுமதிக்குமா? இது இஸ்லாம் மதத்துக்கு பெருமை சேர்க்கும் படம். படத்தை இயக்கியவர், இசையமைத்தவர், குறிப்பிட்ட நடிகர்கள் எல்லோரும் இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்கள். படம் வெளிவரும் முன்பே அவதூறாக கூறியாரும் விளம்பரம் தேடக்கூடாது. திட்டமிட்டபடி படம் வெளிவரும். எப்போது ரிலீஸ் என்பதை சனிக்கிழமை அறிவிப்போம்’’ என்றார்.
Muharram Hyderabad 2009
முஸ்லிம் பண்டிகைகள் சினிமாவில் காட்டுவதில் என்ன பிரச்சினை?: ஷியா முஸ்லிம்கள் இப்படத்தை எதிர்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மொஹரம், ரம்ஜான் மற்றும் நிக்காஹ் முதலியவை சினிமாவில் காட்டுவதில் என்ன எதிர்ப்பு இருக்கிறது என்று தெரியவில்லை! முதலில் இவற்றிற்கெல்லாம் விடுமுறை கூட இல்லை, ஆனால், செக்யூலரிஸ ஆட்சியாளர்கள் விடுமுறை அளித்து, பிறகு அவற்றை தேசிய விடுமுறைகளாக்கினர். முஸ்லிம் நாடுகளிலேயே அவ்வாறு விடுமுறை அளிப்பது கிடையாது. இப்படத்தில் மொஹ்ஹரம், ரம்ஜான் மற்றும் நிக்காஹ் விழாக்கள் விவரமாகக் காட்டப் படுகின்றன. அதேபோல, ஆவணி ஆவட்டம், நவராத்திரி, கொலு போன்ற விழாக்களும் சித்தரிக்கப் பட்டுள்ளன. இது தவிர முர்ஸீத் என்ற இஸ்லாமிய கொலு போன்ற விழா பற்றியும் விளப்படுகிறது[12]. ஆக அந்த “முர்ஸித் / கொலு” தான் பிரச்சினை போலும்! ஒருவேளை, சுன்னி முஸ்லிம்கள் தூண்டி விட்டு, ஷியாக்கள் எதிர்த்திருக்கலாம். “மாரடி விழா” முதலிய ராயப்பேட்டையிலேயே மக்கள் பார்த்திருக்கிறார்கள். ஹைதரபாதில் விமரிசையாகக் கொண்டாடுவார்கள். மற்ற வட இந்திய நகரங்களில் அமர்க்களமாகக் கொண்டாடுவார்கள். ஆகவே, இவற்றைக் காண்பிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆகவே, வேறு பிரச்சினையை மதப்பிரச்சினையாக்கி, இவ்வாறு செய்கிறார்களா என்று தெரியவில்லை.
[4] Are there any risks in making such a film? “The key is to ensure there is balance. While the film features the Muharram, Ramzan and Nikkah festivities in great detail, it also features Avani Avattam and Navarathiri Golu celebrations. In fact, I have even showcased a lesser known festival, the Murshid, which I believe is the Islamic equivalent of the Golu and celebrated privately in homes.” In fact, this is one of the reasons the film has been delayed so much. “I had to wait for these festivals,” he says.
[5]Rumours were rife that Anis’s Thirumanam Ennum Nikkah, starring Jai and Nazriya, was postponed from May 15, the date slated for release, due to certain issues. However, when DC quizzed the director on it, he said, “There were plans of postponing it owing to trivial reasons. However, going by the present scenario, it is highly likely that the movie might release on the fixed date itself.” Thirumanam Ennum Nikkah, produced by Aascar Ravichandran, bagged a ‘U’ certificate recently. The songs scored by Ghibran has already topped the charts.
[6]தினமலர், “திருமணம்எனும்நிக்காஹ்‘ திரைப்படத்துக்குதடைகோரிவழக்கு, By dn, சென்னை, First Published : 30 May 2014 03:09 AM IST
[7]தினத்தந்தி,திருமணம்என்னும்நிக்ஹாபடத்துக்குதடைவிதிக்கவேண்டும்; சென்னைஐகோர்ட்டில்வழக்கு, பதிவுசெய்தநாள் : May 30 | 12:20 am
[12] Are there any risks in making such a film? “The key is to ensure there is balance. While the film features the Muharram, Ramzan and Nikkah festivities in great detail, it also features Avani Avattam and Navarathiri Golu celebrations. In fact, I have even showcased a lesser known festival, the Murshid, which I believe is the Islamic equivalent of the Golu and celebrated privately in homes.” In fact, this is one of the reasons the film has been delayed so much. “I had to wait for these festivals,” he says.
அத்வானி வெடிகுண்டு கொலை முயற்சி – ஒருபக்கம் கைது, மறுபக்கம் ஜாமின், டிஎஸ்பி தாக்கப்படுதல் முதலின….
நீதிமன்றத்தில் சட்டமீறல்கள்: அத்வானியைக் கொலை செய்ய திட்டமிட்ட ஜிஹாதிகளுள் ஒருவன் ஜாஹிர் ஹுஸைன் என்ற குற்றவாளி நீதிமன்றத்தில் செய்த கலாட்டாவால் பரப்பரப்பு ஏற்பட்டது. மாஜிஸ்ட்ரேட் முன்பு கொண்டுவரப்பட்ட அவன் பிளேடினால் தனது கழுத்தை அறுத்துக் கொள்ள முயன்றான். உடனே, போலீஸார் தடுத்து அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறிய காயத்துடன் அவன் தப்பினான். கடந்த ஏப்ரல் மாதம் கூட இதே மாதிரி தற்கொலை முயற்சியில் அவன் ஈடுபட்டான்[1]. அப்பொழுது தன்னை விடுவிக்குமாறு முறையீடு செய்திருந்தான். ஆனால் நீதிபதி அவனது மனுவை தள்ளுபடி செய்தார்[2].
முகமது அனிபா டிஎஸ்பியைத் தாக்குதல் (08-07-2013): திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள கட்டகாமன்பட்டி எடமலையான் கோவில் அடிவாரத்தில் பதுங்கியிருந்த அத்வானி செல்லும் பாதையில் குண்டு வைத்த வழக்கில் முகமது அனீபாவை, டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் திங்கள்கிழமை 08-07-2013 அன்று மடக்கி பிடித்தனர்[3]. அப்பொழுது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்த முகமது அனீபா, டி.எஸ்.பி. கார்த்திகேயன் மீது வீசினார். இதில் டி.எஸ்.பி. கார்த்திகேயன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்[4]. இதனால் அந்த இடத்தில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவனை மடக்கி பிடித்த போலீசார், அவனிடம் வெடிமருந்து, ஜெலட்டின் குச்சிகள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். வத்தலகுண்டு காவல்நிலையத்தில், தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், வெடிமருந்து மற்றும் ஜெலட்டின் குச்சிகள் வைத்திருந்தாகவும், இந்து முன்னணி தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டு தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சி செய்தது உட்பட 5 வழக்குகள் முகமது அனீபா மீது டி.எஸ்.பி. கார்த்திகேயன் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ளது[5].
ஒரு பக்கம் கைது, மறுபக்கம் 3 பேருக்கு ஜாமின்: மதுரை அலும்பட்டி பாலத்தில் 2011ஆம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி அத்வானி யாத்திரை மேற்கொண்ட போது அவரை கொல்லும் திட்டத்துடன் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குண்டு வைக்க உதவியதாக, 2011 நவம்வர் 1ல், மதுரை நெல்பேட்டை அப்துல்லா, சிம்மக்கல் தைக்கால் தெரு ஆட்டோ டிரைவர் இஸ்மத் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொடுத்த தகவல்படி, இமாம்அலி கூட்டாளிகள் “போலீஸ்’ பக்ருதீன், பிலால்மாலிக் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது[6]. இவர்கள் தலைமறைவாக உள்ள நிலையில், கடந்தாண்டு மார்ச்சில், கூட்டாளி ஹக்கீம் கைது செய்யப்பட்டார். இந்தாண்டு மார்ச் 27ல், “போலீஸ்’ பக்ருதீன் சகோதரர் நெல்பேட்டை தர்வீஸ் மைதீன், மதுரை வில்லாபுரம் சையது, குப்புப்பிள்ளை தோப்பு முஸ்தபா கைது செய்யப்பட்டனர். மார்ச் 29ல், குண்டு வைக்க, பைப் வாங்கிக் கொடுத்ததாக, திருநகர் ஜாகீர் உசேன்கைது செய்யப்பட்டார்[7]. தென்காசியில் வடக்கு மவுண்ட் ரோட்டில் வசித்து வந்த முகமது அனீபா மீது இந்து முன்னணி நகர தலைவர் குமார்பாண்டியன் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட மோதலில் அவரது சகோதரர்கள் 3 பேரும் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்குகளிலும் முகமது அனிபா முக்கிய குற்றவாளியாவார்[8].
குற்றவாளிகள் விஷயத்தில் அரசியல் விளையாட்டு கூடாது: அத்வானியைக் கொண்டு வைத்து கொலைச்செய்ய முயன்றான் என்று காங்கிரஸார் அல்லது நாத்திகக் கட்சியினர் திமுக முதலியன சந்தோஷமாக இருந்து விடமுடியாது. குண்டுவெடிப்பில் தன் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டிருக்கிறார். அது திராவிட, தமிழ்சித்தாந்தங்களிடம் ஊறியிருந்ததால் இன்றளவும் காங்கிரஸாரால் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. திராவிட சித்தாந்திகளுக்கும், காங்கிரஸ்காரர்கள்ளுக்கும் மோதல்கள் இருந்து கொண்டுதான் உள்ளது. அதேபோல இந்திராகாந்தி கொலை செய்யப்பட்ட போது, சீக்கிய தீவிரவாதம் தலைத்தூக்கியது. சீக்கிய படுகொலைகளுக்குப் பின்னர் சீக்கியர் காங்கிரஸின் நிரந்தர எதிரிக்கள் ஆனார்கள். இப்பொழுது, ராகுல் காந்தி சரப்ஜித் சிங்கின் அந்திமக் கிரியைகளில் பங்கு கொண்டதால் மட்டும் ஒட்டு மொத்த சீக்கிய சமூகம் அவர்களுக்கு இழைத்த அநீதிகளை மறந்துவிடப் போவதில்லை. இதற்காக பிஜேபிகாரர்களுகும் சந்தோஷப்பட்ட முடியாது.
தொடர்ந்து குற்றவாளிகள் குற்றங்களை செய்வது ஏன்?: குற்றத்தைப் பழக்கமாகக் கொண்டுள்ளவர்களின் (habitual offenders / regular charge-sheeters / involved in multiple offences) இத்தகைய செயல்களை சட்டங்களை நிறைவேற்றுபவர்கள் மட்டுமல்லாது மற்றவர்களும் கூர்ந்து கவனிக்க வேண்டும். தொடர்ந்து கொலைகள் செய்து வருபவன் சாவதற்கு தயாராக இருக்கிறான் என்பது தெரிகிறது. அதிலும் முஸ்லிம் என்பதால் ஜிஹாதித்துவத்தில் ஊறியப்பிறகு, தியாகி விட்டதால் இனி அதே மனநிலையில் அழிவுகளில் தான் அவன் ஈடுபடுவான். அத்தகைய போக்கு இவர்களில் காணப்படுகிறது. இதனால், மேன்மேலும் போலீஸார் வழக்குகள் போட்டுக் கொண்டிருந்தால் என்ன பயனும் இல்லை. மேலும் கொலைக் குற்றங்களில் ஈடுபட்டுள்னர் என்றறிந்தும் மற்ற முஸ்லிம்கள் கண்டிக்காமல் இருப்பது நோக்கத்தக்கது. அதாவது மற்றவர்களுக்குக் குற்றவாளிகளாக, கிரிமினல்களாக இருந்தாலும் அவர்களைப் பொறுத்த வரைக்கும் “ஜியாதி” மற்றும் “ஷஹீத்” என்ற நிலையில் வைத்து விட்டதால் அமைதியாக இருக்கிறார்கள். இது இந்திராகாந்தி-ராஜிவ்காந்தி கொலையாளிகளை வீரர்களாகக் கருதி வழிபடுவதைப் போன்றதே ஆகும். மாறாக, நீதிமன்ற மறுப்பு, போலீஸ் தடைகளை மீறி அத்தகைய கிரிமினல் குற்றவாளிகளை பத்தாண்டு சிறைவாசம் முடிந்தால் விடுவிக்கவேண்டும் என்று வெளிப்படையான கோரிக்கை வைத்து ஆர்பாட்டம் நடத்துவதையும் காணலாம். இவையெல்லாம் பத்து-பதினைந்து நாட்களில் நடக்கின்றன.
நடக்கும் நிகழ்சிகள் காட்டுவது என்ன?: பொதுமக்கள், தொடர்ந்து கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்ற செய்திகளைப் படித்து மரத்து போயிருக்கிறார்கள். குண்டுவெடிப்புகள், குரூரக் கொலைகளைக் கூட அடிக்கடிக்காட்டி, பிரபலப்படுத்தி, உணர்ச்சியற்றத் தன்மையினை உருவாக்கி விட்டனர்.
01-07-2013 (திங்கட்கிழமை): வெள்ளையன், இந்து முன்னணி கொலை[9]
04-07-2013 (வியாழக்கிழமை): அத்வானி கொலை முயற்சி வழக்கில் சையது சகாபுதீன், தர்வீஸ் முகைதீன், முஸ்தபா ஆகியோருக்கு ஜாமின் வழங்கப்பட்டது[10].
07-07-2013 (ஞாயிற்றுக்கிழமை): தமுமுக நீதிமன்ற மறுப்பு, தடைகளை மீறி ஊர்வலம், ஆர்பாட்டம்.
08-07-2013 (திங்கட்கிழமை): சிறப்பு புலனாய்வுபிரிவு போலீசார் தென்காசி முகமது அனீபாவை திருமங்கலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அவரை வருகிற 22–ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி பன்னீர் செல்வம் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து முகமது அனீபா சிறையில் அடைக்கப்பட்டார்[11].
கேரளாவில் கம்யூனிஸ்டுகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்திகளுக்கும் அடிதடி, மோதல்கள், கொலைகள் கூட இருந்து வந்தன. அதே போன்ற நிலை இன்று இந்து முன்னணி, பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் முஸ்லிம்கள் இடையே கொலைகள் ஏற்பட்டு வருகின்றன. அதாவது, நேரிடையான மோதல்கள் இல்லாமல், திட்டமிட்ட கொலைகளாக நடந்து வருகின்றன.
குற்றவாளிகளின் மனோதத்துவ அலசல்: சுருக்கமாக, கீழ்கண்ட நிலைகளை இக்குற்றவாளிகளின் போக்கில் காணலாம்:
குற்றம் செய்ய மனநிலையை ஏற்படுத்திக் கொள்வது – தூண்டுதல்
தொடர்ந்து அதே குற்றத்தை செய்வது – குற்றஞ்செய்ய மனநிலை ஸ்திரமான நிலை
சட்டங்களை செயல்படுத்துவர்களைத் தாக்குதல்
நீதிமன்றத்திலேயே, நீதிபதிக்கு முன்பாக சட்டமீறல் காரியங்களை செய்வது.
தற்கொலை செய்துகொள்ள முயல்வது அல்லது அம்மாதிரி நடிப்பது.
“காவலில் இறப்பு” என்ற நிலை உருவாக அழுத்தத்தை ஏற்படுத்துவது.
இந்த குற்றவாளிகளுக்கு தொடர்ந்து சட்டரீதியில் ஆதரவு, பாதுகாப்புக் கொடுப்பது.
ஆகவே, இவையெல்லாம் ஒரே நாளில், ஒரே மாதத்தில், ஒரே ஆண்டில் தீர்மானித்து செயல்படுத்தும் காரியமல்ல. அவ்வாறு இவ்வுலகத்தில் எந்த மனிதனையும் தயார் படுத்து விடமுடியாது. ஏனெனில், எந்த மனிதனும் இறப்பதற்கு தயாராக இல்லை என்பதுதான் உண்மை. அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் தாம் எவனுக்கும் இருக்கும் ஆனால், மாறாக இறக்கத் தயாராகிரான், தயாராகி விட்டான் என்றால் அது இப்பொழுது காணப்படுகின்ற ஜிஹாதித்துவத்தைத் தான் எடுத்துக் காட்டுகிறது.
வேலூரில் ஹிந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் வெள்ளையன் கொலை செய்யப்பட்ட இடத்தில் 5 வெடிகுண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அவை அனைத்தும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வேலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு பின்புறம், நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஹிந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் வெள்ளையன் படுகொலை செய்யப்பட்டார். தகவலறிந்த காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.வெள்ளையன் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, வேலூரில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனிடையே, வேலூரில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலை அறநிலையத்துறை கையகப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்த ஹிந்து முன்னணி அழைப்பு அழைப்பு விடுத்திருந்தது. திட்டமிட்டபடி அந்தப் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
[10] இவ்வழக்கில் சையது சகாபுதீன், தர்வீஸ் முகைதீன், முஸ்தபா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.இவ்வழக்கில் தலைமறைவாக இருப்பவர்களுக்கும் எங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இதை விசாரித்த நீதிபதி ஆர். மாலா, மனுதாரர்கள் மூவரும் மறு உத்தரவு வரும் வரை திருச்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் (எண் 1) தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
அண்மைய பின்னூட்டங்கள்