முன்பிருந்த முஸ்லிம் லீக் இப்பொழுதில்லை: முஸ்லிம் சமுதாயத்தினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் – இப்படி முஸ்லிம்களுக்கு காபிர்கள் அறிவுரை சொல்லவேண்டிய அவசியமா, நாடகமா, கபடமா?
வழக்கம் போல கஞ்சி குடிக்கும் அரசியல்வாதிகளும், நோன்பு திறக்கும் / துறக்கும் நிகழ்சிகளும்: முஸ்லிம்களுக்கு நோன்பு என்றாலே கருணாநிதிக்கு குஷ்ஈய்யாகி விடுகிறது.
- குல்லாப் போட்டு கஞ்சி குடிக்க சந்தர்ப்பம்,
- இந்து பண்டிகைகளை தூஷிக்க சந்தோஷம்[1],
- பிரத்யேகமாக குல்லா வாங்கி வந்து மாட்டிவிடும் வேலை
- தன்னுடைய பெருமைகளை டமாரம் அடித்துக் கொள்ளும் விதம்
- முஸ்லிம்களைவிட நான் எவ்வளவு பெரிய முஸ்லிமாக இருக்கிறேன் என்று தம்பட்டம் அடித்து கொள்ளும் விதம்
- முஸ்லிம்கள் இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டு கைத்தட்டும் காட்சி
இப்படித்தான், வழக்கம் போல கஞ்சி குடிக்கும் அரசியல்வாதிகளும், நோன்பு திறக்கும் / துறக்கும் / தொறக்கும் நிகழ்சிகளும் நடந்து வருகின்றன. திறக்கும் / துறக்கும் / தொறக்கும் நிகழ்சிகள் என்கிறார்கள் இதில் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. பனகல் பார்க் அருகில் ஒரு பேனர், “நோன்பு துறக்க வசதி செய்யப்பட்டுள்ளது” (ஶ்ரீ வேங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்தில்) என்று அறிவிக்கிறது.
முஸ்லிம் சமுதாயத்தினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் (தினமணி): இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் எழும்பூரில் வியாழக்கிழமை 25-07-2013 நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கருணாநிதி பேசியது: “நான் (கருணாநிதி) அதிக நேரம் பேச வேண்டும் என்பதற்காக காதர் மொகிதீன் குறைவான நேரம் பேசினார். அதுபோல எல்லாவற்றிலும் (மக்களவை இடம்) குறைவாக எடுத்துக் கொண்டு, திமுகவுக்கு அதிகமாக ஒதுக்குவார் என்ற நம்பிக்கையோடுதான் இருக்கிறேன். முஸ்லிம் சமுதாயத்தினர் கட்சி ரீதியாக 4 பிரிவுகளாக தமிழகத்தில் இருக்கிறீர்கள். ஆனால் என்ன காரணத்தினாலோ, தமிழகத்திலும், இந்திய அளவிலும் இது போன்ற நிலை இல்லாமல் போய்விட்டது. அந்தக் காலத்தில் நான் பார்த்த முஸ்லிம் லீக் இன்றைக்கு இல்லை. பல கூறுகளாக பிளந்துகிடக்கிறது. முஸ்லிம் சமுதாயத்தினரிடையே தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் ஒற்றுமை இல்லாத காரணத்தினால்தான் பாபர் மசூதி இடிக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டது. அப்படி ஏற்பட்டபோது தமிழகத்தில் இருந்து முதலில் குரல் கொடுத்தது திமுகதான். திராவிடர் இயக்கத்திலும் இதுபோன்ற பிளவுகள் ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. மீலாது நபிக்கு விடுமுறை, உருது பேசும் மக்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது, சிறுபான்மையினர் நல ஆணையம் என திமுக ஆட்சியில் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு பல்வேறு நலப்பணி ஆற்றப்பட்டுள்ளன”, என்றார் அவர். முஸ்லிம் சமுதாயத்தினர் இந்திய அளவில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தினார்[2]. முன்னதாக நோன்பை திறந்து வைத்து, கருணாநிதி கஞ்சி குடித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் பழநிமாணிக்கம் உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கருணாநிதி பேச்சு,“இஸ்லாமிய சமுதாய மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் (தினகரன்): இஸ்லாமிய சமுதாயத்தினரிடையே தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் ஒற்றுமை இல்லை என்பதை கண்டுகொண்டதால்தான் பாபர் மசூதியை இடிக்கும் நிலை ஏற்பட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிட்டார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி எழும்பூரில் நடந்தது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தமிழக தலைவர் காதர் மொய்தீன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் வரவேற்றார். அப்துல் ரஹ்மான் எம்.பி அறிமுக உரையாற்றினார். திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க. ஸ்டாலின் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று நோன்பு கஞ்சி அருந்தினர். கனிமொழி இம்முறை கஞ்சி குடிக்க வரவில்லை[3] போலும்!
முன்னதாக திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது: “நிகழ்ச்சியில் பேசிய காதர் மொய்தீன், தனக்கு நேரம் குறைவாக எடுத்துக் கொண்டு எனக்கு நேரம் அதிகமாக கொடுத்துள்ளார். இப்படி எல்லாவற்றிலும் குறைவாக எடுத்துக் கொண்டு திமுகவுக்கு அதிகம் ஒதுக்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. இஸ்லாமிய சமுதாயம், ஒரே பிரிவாக இருந்து ஒற்றுமை பாராட்டினால் இந்த சமுதாயம் இன்னும் வீறுகொண்டு எழும். இந்த சமுதாயத்தை துச்சமாக கருதும் சில, மதவாத எரிச்சல்காரர்கள், ஒதுங்கும் நிலை உருவாகியிருக்கும். தமிழகத்தில் நான் சிறுவனாக இருந்தபோது இருந்த முஸ்லிம் லீக், இன்று பல பிரிவுகளாக மாறியுள்ளது. திராவிட இயக்கம் பிரியவில்லையா என்று கேட்கலாம். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அது ஏற்பட்டிருந்தாலும் இஸ்லாமிய சமுதாய மக்கள், முஸ்லிம் லீக்கின் வரலாறு, இயக்கத்தை எப்படி வளர்த்தார்கள் என்பதை எண்ணிப்பார்த்து ஒற்றுமையாக இருக்க வேண்டும். அந்த ஒற்றுமை தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் இல்லை என்பதை கண்டுகொண்டதால்தான் பாபர் மசூதியை இடிக்கும் நிலை ஏற்பட்டது. அதை கண்டித்து முதல் முதலில் குரல் கொடுத்தவன் நான். இஸ்லாமிய சமுதாயத்துக்காக என்னென்ன தொண்டு ஆற்ற முடியுமோ, அவற்றை ஆற்றி வருகிறோம். தொடர்ந்து ஆற்றுவோம். திமுக ஆட்சி இப்போது இல்லை.
ஆட்சியில் இருந்தபோதே இந்த சமுதாயத்துக்காக எந்த வகையில் பாடுபட்டோம் என்பதை அறிவீர்கள்.
Ø மிலாது நபி தினத்தன்று விடுமுறை,
Ø உருது பேசும் முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பு,
Ø அரசு மகளிர் கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயர்,
Ø சிறுபான்மையினர் நல ஆணையம்,
Ø விண்ணப்பித்த அனைவரும் ஹஜ் பயணம் செல்ல ஏற்பாடு,
Ø உருது அகாடமி,
Ø காயிதே மில்லத் மணிமண்டபம்,
Ø இஸ்லாமிய மக்களுக்கு 3.5 சதவீத உள் ஒதுக்கீடு,
Ø உமறுபுலவருக்கு மணிமண்டபம்,
Ø திருமண பதிவு சட்டத்தில் திருத்தம் –
என்று எத்தனையோ செய்தோம். திமுக ஆட்சியை மைனாரிட்டி ஆட்சி என்று ஜெயலலிதா கூறுவார். அதற்கு நான் மைனாரிட்டி மக்களுக்காக இருக்கும் ஆட்சி என்று பதில் அளித்தேன். இதற்கெல்லாம் நன்றியை பரிசாக அளித்திருக்கிறேன்”, இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “இஸ்லாமிய சமுதாயத்துக்கும் திமுகவுக்கும் எந்த அளவு தொடர்பு உண்டு என்பதை அறிவீர்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இஸ்லாமிய மக்களுக்காக பாடுபடும் கட்சி திமுக. உங்களுக்காக வாதாடுபவர், போராடுபவர் கருணாநிதி. அந்த கடமையை திமுக தொடர்ந்து செய்யும். குரானில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதைத்தான் பெரியார் தீர்மானமாக முன்மொழிந்தார். 60 ஆண்டுகளுக்கு பிறகு கருணாநிதி அதை நிறைவேற்றினார். தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை நாடி வரும் கட்சி திமுக அல்ல. அதற்கென்று சில கட்சிகள், தலைவர்கள் உள்ளனர். அவர்களை நீங்கள் அறிவீர்கள். என்றும் உங்களை பற்றியே சிந்திக்கும் கருணாநிதிக்கு ஆதரவு தாருங்கள்”, இவ்வாறு அவர் பேசினார்[4].
தி.மு.க., அதிகதொகுதிகளில்போட்டியிடும் : கருணாநிதி சூசக அறிவிப்பு (தினமலர்): “லோக்சபா தேர்தலில், தி.மு.க., அதிக தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி குறைந்த தொகுதிகளிலும் போட்டியிடும்,” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி சூசகமாக தெரிவித்தார்[5]. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், சென்னையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மாநில தலைவர் காதர் மொய்தீன் தலைமை வகித்து பேசுகையில், “2004ல், நாட்டில் மதசார்பற்ற ஆட்சி அமைய கருணாநிதி பாடுபட்டார். அதேபோல் மீண்டும் நல்லாட்சி அமைய அவர் வழி காட்ட வேண்டும்,” என்றார்.
பின்னர் கருணாநிதி பேசியதாவது: “முஸ்லிம் சமுதாயம் பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றன. நான் சிறுவயதில் பார்த்த முஸ்லிம் லீக் இப்போது இல்லை. அனைத்து பிரிவினரும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும். பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, தமிழகத்திலிருந்து, முதல் கண்டன குரல் நான் கொடுத்தேன். நான் அதிகமாக பேச வேண்டும் என்பதற்காக, காதர் மொய்தீன் குறைவாக பேசினார். அதேபோல் எல்லாவற்றிலும் அவர் குறைவாக எடுத்துக் கொண்டு, எனக்கு, அதாவது தி.மு.க.,வுக்கு அதிகமாக ஒதுக்குவதற்கு அவர் ஒத்துழைப்பு தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. தி.மு.க., ஆட்சியில்,
- மிலாது நபிக்கு விடுமுறை;
- உருது பேசும் முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது;
- சென்னையில் உள்ள அரசு மகளிர் கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்பட்டது;
- ஹஜ் பயணிகள் குலுக்கல் மூலமாக தேர்வு செய்யும் முறை ரத்து செய்து,
- விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
இப்படி, சிறுபான்மை மக்களின் நலனுக்காக, தி.மு.க., ஆட்சி நடந்தது”, இவ்வாறு, அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் கட்சியினருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், காங்கிரஸ் சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. இப்படி வருத்தப் படவேண்டிய அவசியம் இல்லை. போட்டிப் போட்டுக் கொண்டு நிகழ்சிகள் நடத்துவதால், கஞ்சிக் குடிக்க அவகாசங்கள் அதிகமாகவே உள்ளன. ஏற்கெனவே கார்த்திக் சிதம்பரம், தனியாக கஞ்சி குடிக்க ஏற்பாடு செய்தது நினைவு படுத்திக் கொள்ளவேண்டும்[6]. திராவிடக் கட்சிகளுக்கு வெட்கமே இல்லை, குல்லா போட்டு போட்டோ, குல்லா போடாமல் போட்டோ என்று தமாஷாக்கள் நடத்தியுள்ளன[7].
ரம்ஜான் நோன்பு போது தான் இப்படி பேசுவார்கள் என்றில்லை. மற்ற நேரங்களிலும், மற்ற கட்சிகளும் சலைத்தவை அல்ல. மார்ச் மாதத்திலேயே இந்த நாடகம் ஆரம்பித்து விட்டது[8]. ஜெயலலிதா தனியாக கஞ்சி குடிக்க ஏற்பாடு செய்வார்[9]. இப்படி வேடிக்கை-வினோதங்கள், இனி நிறைய பார்க்கலாம். இதோ இவற்றையும் படியுங்களேன்:
1.குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சிபோய் கேக் வந்தது அம், அம், அம்: திராவிட கட்சிகளின்கிருஸ்துமஸ் விழாவும், வாக்குறுதிகளும்[10], ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (4)!
2. குல்லா…………..மிரட்டல்களும்[11] (3).
3. குல்லா…………..மிரட்டல்களும்[12] (2).
4. குல்லா…………..மிரட்டல்களும்[13] (1).
[1] வேதபிரகாஷ், ரம்ஜான் கஞ்சியும், இந்து–விரோத திராவிட பேச்சுகளும், http://dravidianatheism.wordpress.com/2009/10/07/ரம்ஜாந்கஞ்சியும்-இந்து/
[2]http://dinamani.com/tamilnadu/2013/07/26/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D/article1702773.ece
[3]http://secularsim.wordpress.com/2010/09/08/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81/
[6]https://islamindia.wordpress.com/2010/09/02/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/
[7]https://islamindia.wordpress.com/2010/08/31/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/
[8] https://islamindia.wordpress.com/2013/03/19/muslim-appeasement-by-congress-started-for-2014-election/
அண்மைய பின்னூட்டங்கள்