Archive for the ‘அஹ்மதியா’ category

சமத்துவம், சகோதரத்துவம், எல்லோரும் சமம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்த முஸ்லிம்கள் இப்பொழுது சதவீதம் ரீதியில் இட-ஒதுக்கீடு கேட்பதுஏன்?

திசெம்பர் 20, 2022

சமத்துவம், சகோதரத்துவம், எல்லோரும் சமம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்த முஸ்லிம்கள் இப்பொழுது சதவீதம் ரீதியில்  இட-ஒதுக்கீடு கேட்பது ஏன்?

சமத்துவம், சகோதரத்துவம், பேசும் மதங்களில் திடீரென்று எப்படி ஜாதி வந்தது?: சமத்துவம், சகோதரத்துவம், எல்லோரும் சமம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம், இப்பொழுது சதவீதத்தில் இட-ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்க ஆரம்பித்துள்ளன. எங்களிடமும் ஜாதி, ஜாதித்துவம், பிரிவுகள் உள்ள என்று ஒப்புக் கொள்ளும் வரைக்கு வந்து விட்டன. இதுவரையில் ஏன் இன்னும், இந்துமதம் தான் ஜாதிய கட்டமைப்பிற்கு காரணனம் என்று சொல்லிக் கொண்டு வரும் நிலையில், இந்த பிரகடனங்கள் செய்யப் பட்டு வருகின்றன. கிருத்துவ டினாமினேஷன்கள் இனி ஜாதிப் பிரிவுகள் ஆகலாம். சுன்னி, ஷியா, அஹமதியா, போரா, போன்றவை இச்லாமிய ஜாதிகள் ஆகலாம். சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பிற்பட்டுள்ள வகுப்பினர்களுக்கு (Socially and educationally backward classes) இட-ஒதுக்கீடு என்பதை, ஜாதி ரீதியில் திரித்து பேசி, விளக்கம் கொடுக்கப் பட்டு வருகிறது. OBC (Other Backward Classes) என்றதிலும், மதரீதியில் இட-ஒதுக்கீடு செய்யப் பட்டு வருகிறது. அதில், முஸ்லிம்கள் சமத்துவம், சகோதரத்துவம், எல்லோரும் சமம் பெற்று வருகின்றனர்.

50% / 69% கணக்கை சுற்றி வளைக்க உள்-இட-ஒதுக்கீடு கொடுத்தது: அ.தி.மு.க, 2006 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டுக்கு ஆணையம் அமைத்தது[1]. மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு, 2007 செப்டம்பர் 15 அன்று பிற்படுத்தப்பட்டோருக்கான 30% இடஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீடாக 3.5%-ஐ முஸ்லிம்களுக்கும், 3.5%-ஐக் கிறிஸ்தவர்களுக்கும் வழங்கியது[2]. இது இந்திய அரசியல்நிர்ணயச்சட்டப் பிரிவுகளுக்கு எதிரானது என்றாலும், மற்ற மாநிலங்களில் இத்தகைய இட-ஒதுக்கீடு கொடுக்கப் பட்டு, எதிர்க்கப் பட்டு, உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப் பட்ட வழக்கு நிலுவையிலுள்ளது. ஆகையால், கொடுத்து வைப்போம், அவர்களும் இட-ஒதுக்கீடு பெற்று அனுபவிக்கட்டும். பிறகு, கொடுத்து விட்டதால், அவர்கள் அனுபவித்து வருவதால், அதனை திரும்பப் பெறக்கூடாது என்றும் மேல்முறையீடு செய்யலாம், அரசியல் ரீதியில், எதிர்ப்பு மனு இருக்காது. ஆக, அப்படியே அமைதியாக விவகாரத்தை மூடி விடலாம் என்றும் திட்டம் போட்டிருக்கலாம்.

முஸ்லிம்களின் மக்கள் தொகையும், இடஒதுக்கீடும்: முஸ்லிம்களின் மக்கள் தொகை முஸ்லிம்களின் மக்கள் தொகை நாட்டில் முஸ்லிம்களின் மக்கள் தொகை, கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து 2011-ம் ஆண்டு வரை 24 சதவீதம் அதிகரித்துள்ளது[3]. 2022ல் மேலும் உயர்ந்துள்ளது. போதாகுறைக்கு, பன்களாதேசத்திலிருந்து வேறு உள்ளே வந்து கொண்டிருக்கிறார்கள். அஸாமில் இதுவே 5 ஆண்டுகளுக்கும் மேலான பிரச்சினையாகி, இப்பொழுது அமுக்கப் பட்டு விட்டது. இதன் மூலம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்களின் சதவீதம் 13.4-ல் இருந்து 14.2 ஆக உயர்ந்துள்ளது[4]. பிற்படுத்தப்பட்ட இசுலாமிய வகுப்பினர், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய இசுலாமியர்களின் மேம்பாட்டிற்காக, கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் தமிழ்நாடு அரசு அரசாணை எண். 85. பிற்படுத்தப்பட்டவகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நாள் 29.7.2008 இன் படி பிற்படுத்தோர் வகுப்பினர்க்கான 30% இட ஒதுக்கீட்டில் இசுலாமிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு 3.5% உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1992ல் இது தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்பில், மத்திய அரசின் பணியிடங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்தைத் தாண்டிச் செல்லக்கூடாது என உத்தரவிட்டது. இதன் காரணமாக, 1980ல்இருந்து தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுவந்த இட ஒதுக்கீட்டிற்கு சிக்கல் ஏற்பட்டது.

முஸ்லிம்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு;  இது குறித்து ஏப்ரல் 2022ல், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில செயலாளர் பைசல் அகம்மது கூறியதாவது: “இந்தியாவில் 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13.4 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர்[5]. ..எஸ் பணியில் 3 சதவீதம், பட்டப் படிப்பு படித்தவர்கள் 3 சதவீதம், ரயில்வேயில் 4.5 சதவீதம் முஸ்லிம்கள் இருந்து வருகின்றனர்[6]. இந்நிலையில் 2007ம் ஆண்டு நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்தது. இந்திய சமூகங்களுக்கு இடையே ஏற்றத் தாழ்வுகளை நீதிபதி சச்சார் கமிஷன் கண்டறிந்தது. இந்த இரு கமிஷன்களின் அறிக்கைகளும், பரிந்துரைகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் இட ஒதுக்கீடு என்று மத்திய அரசு முஸ்லிம்களை ஏமாற்றி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 2007ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் தனி இட ஒதுக்கீட்டை திமுக அமல்படுத்தியது. தமிழகத்தில் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஏழு சதவீதமாக உயர்த்த வலியுறுத்தி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் வரும் 22ம் தேதி சென்னை, தஞ்சை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய மண்டலங்களில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது”.

17-07-2022 அன்று கோரிக்கை 20-12-2022 அன்றும் வைத்தது: ராமநாதபுரத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு மாவட்ட பொதுக்குழு கூட்டம் 17-07-2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் உமா் பாரூக் தலைமை வகித்தார். மாவட்டப் பேச்சாளா் பரகத் அலி வரவேற்றார். மாநில துணைத்தலைவா் ஆல்பா நசீா், மாநிலச் செயலாளா் முஹமது ஃபரூஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்[7]. முஸ்லிம்களுக்கு தமிழக அரசு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ராமநாதபுரத்தில் நடைபெற்ற தேசிய தவ்ஹீத் ஜமாஅத் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது[8]. இப்பொழுது மறுபடியும், 20-12-2022 அன்று இதே கோரிக்கையை, தவ்ஹீத் ஜமாத் வைத்துள்ளது. 7% எப்படி எங்கிருந்து வந்தது, எப்படி அமூல் படுத்தப் படும் என்று கவனிக்க வேண்டும்.

இஸ்லாம், ஜாதி, ஒதுக்கீடு: இஸ்லாத்தில் ஜாதி இல்லை என்பது குரான்படி அவர்களுடைய நம்பிக்கை. இதற்கு எதிராக எந்த உண்மையான முஸ்லீமும் இஸ்லாத்தில் ஜாதி உண்டு, ஆகையால் அந்த அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடு என்று கேட்கமாட்டார்கள். ஆனால், இந்தியாவில் அத்தகைய ஏமாற்றுவேலையல் முஸ்லீம்கள் செய்து வருகிறார்கள். இப்பொழுது, வெளிப்படையாக கோரிக்கைகளும் வைக்கப் படுகின்றன. அதாவது குரானை மதிக்காமல், முஸ்லீம்கள் மாறாக செயல்பட்டு வருகிறர்கள். இங்கு அவர்களின் அல்லாவின் கோபத்தைப் பற்றிக் கவலைப் படுவது கிடையாது. முஸ்லீகளிடையே உள்ள முரண்பாடுகளை சிலர் எடுத்துக் காட்டியுள்ளனர். இறையியல் வல்லுனர்களும் அமைதியாகத்தான் இருக்கிறார்கள். 50% மற்ரும் 69% என்னாகும் என்று தான் கவனிக்க வேண்டும்.

இஸ்லாத்தில் முஸ்லீம்கள் எல்லோரும் ஒன்றா? இஸ்லாத்தில் சமத்துவம், தோளோடு தோள் தொட்டுக்கொண்டு, ஒட்டிக்கொண்டு, கட்டிக்கொண்டு இருப்போம், தொழுவோம்……………என்றெல்லாம் பேசி, பிர்ச்சாரம் செய்யும் வேலையில், எப்படி, இப்படியொரு கோரிக்கை இடுவர்? இஸ்லாத்தில் முஸ்லீம்கள் எல்லோரும் ஒன்றா, இல்லையா என்று அவர்கள் வெளிப்படையாக தமது சித்தாந்தத்தை சொல்லவேண்டிய நேரம் வந்து விட்டது. அவர்களது இறையியல் வல்லுனர்களே விளக்கம் கொடுக்கலாம். ஏனெனில், இரண்டு விதமாக பேசிவருவது மக்களுக்கு விசித்திரமாக உள்ளது. இருப்பினும் ஏதோ காரணங்களுக்காக இட-ஒதுக்கீடு கோரிக்கையை மட்டும் ஆதரிப்பது போலத் தெரிகிறது.

இந்தியர்களை ஏமாற்றும் வேலை: அம்பேத்காரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை, இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தில் இல்லை, நேருவே ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் மதரீதியில் எங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்றால் என்ன விஷயம் என்று இந்தியர்களுக்கு விளங்கவில்லை. சட்டரீதியாக முடியாது என்பதனை, ஒரு அரசியல் கட்சி முடியும் என்று வாக்குறுதி கொடுப்பது, இப்படி அழுத்தத்தை ஏற்படுத்துவது, மக்களை ஏமாற்றுவது என்ற முறையில் செல்லும் இந்த விவகாரத்தை இந்தியர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். இப்பொழுது தலித் போர்வையில் எஸ்சி முஸ்லிம்களுக்கும் இட-ஒதுக்கீடு வேண்டும் என்றெல்லாம் கேட்கப் பட்டுள்ளது. மத்திய அரசு பரிசீலினையிலும் உள்ளது.

© வேதபிரகாஷ்

20-12-2022


[1] தமிழ்.இந்து, முஸ்லிம் உள் இடஒதுக்கீடு: சட்ட மறுசீரமைப்பு நடக்குமா?, புதுமடம் ஜாபர் அலி, Published : 13 Sep 2022 07:10 AM, Last Updated : 13 Sep 2022 07:10 AM

[2] https://www.hindutamil.in/news/opinion/columns/865866-muslim-internal-reservation-1.html

[3] தமிழ்.இந்து, 2001-2011-ம் ஆண்டுகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரிப்பு, பிடிஐ, Published : 23 Jan 2015 10:35 AM, Last Updated : 23 Jan 2015 10:35 AM.

[4] https://www.hindutamil.in/news/india/27909-2001-2011-24.html

[5] தினமலர், முஸ்லிம்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க பாளை.,யில் 22ம் தேதி பேரணி, ஆர்ப்பாட்டம், Added : ஏப் 19, 2012  01:59

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=450943

[7] தினமணி, முஸ்லிம்களுக்கு 7 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், By DIN  |   Published On : 17th July 2022 11:13 PM  |   Last Updated : 17th July 2022 11:13

[8] https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2022/jul/17/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-7-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3881897.html

ரம்ஜான் கஞ்சியும், செக்யூலரிஸமும், பச்சரிசியும்-ரேசன் அரிசியும், இப்தர் பார்ட்டிகளும்-சமூக விலகலும்- எல்லாமே கொரோனா விளையாட்டு தான்!

ஏப்ரல் 17, 2020

ரம்ஜான் கஞ்சியும், செக்யூலரிஸமும், பச்சரிசியும்-ரேசன் அரிசியும், இப்தர் பார்ட்டிகளும்-சமூக விலகலும்- எல்லாமே கொரோனா விளையாட்டு தான்!

No gruel cooking at mosque, Daily Thanthi, 17-04-2020

2020 ரம்ஜான் மாறுபட்டதாக இருக்கிறது: கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் வரும் மே3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது[1]. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் வாங்க, அங்காடிகள் உள்ளிட்டவை குறிப்பிட்ட கட்டுப்பாட்டுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது[2] என்று நியூஸ்.தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது. ஏனெனில், ரம்ஜானுக்கு இலவசமாகத்தான் அரசு அர்சி டன் டன்னாக கொடுத்து வருகிறது.. இதை தவிர்த்து மற்ற நேரங்களில் வெளியில் சுற்றி திரிபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், ரமலான் நோன்புக்கான அரிசி வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது[3]. இதில் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்[4]. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை செயலாளர் சண்முகம், “5450 மெட்ரிக் டன் பச்சரிசி 2895 பள்ளி வாசல்களுக்கு வழங்கப்படும்,” என்றார். இவை வரும் 19ஆம் தேதிக்குள் [இஸ்லாமிய] தன்னார்வலர்கள் உதவியுடன் வழங்கப்படும் என்றும், இதனை இயலாதவர்களுக்கு பள்ளிவாசல்கள் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்[5]. மேலும் வீட்டிலேயே தொழுகை நடத்துவது, வீட்டிலேயே நோன்பு கஞ்சி செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்[6].

No gruel cooking at mosque, Malai Murasu, 17-04-2020

அரசு தலைமை காஜியை வைத்து விவகாரத்தை முடிக்க ஆலோசனை கூட்டம் நடதியது: இதனிடையே இது போன்ற விவகாரங்கள் முடிவெடுக்கும் போது இஸ்லாமிய கட்சிகள் அமைப்புகளின் தலைவர்களை அழைத்து தான் தலைமைச் செயலாளர் ஆலோசித்து முடிவை அறிவிப்பார்[7]. ஆனால் இன்று தமிழ்நாடு அரசு தலைமை காஜியை அழைத்து அவருடன் மட்டும் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது[8] என்கிறது இன்னொரு ஊடகம். ஏனெனில், துலுக்க இயக்கத்தினர், இதுவரை, “கொரோனா பிரச்சினை” வரும் வரை, அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. உண்மையில் கஞ்சி காய்ச்சுவது மசூதியிலா, விட்டிலா என்பதை எல்லாம் தீர்மானிப்பது, துலுக்கரின் வேலையே தவிர அரசின் வேலை கிடையாது. ஆனால், இம்முறை கரோனா அச்சுருத்தல், அனைவரையும் பீடித்துள்ளது. தப்லிக் விவகாரத்தினால், துலுக்கர் பலர், தொற்றினால் பீடித்துள்ளனர். அதனால், குடும்பங்கள், வீதிகள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளன. அந்நிலையில், யார் கஞ்சி காய்ச்சுவது, யாருக்குக் கொடுப்பது, குடித்தால் என்னாகும் போன்ற கேள்விகள் எழுந்து அச்சுருத்தத் தொடங்கி விட்டன. இது அவரளுக்குள்ளேயே பிரச்சினையாகி உள்ளது.

Mosques get free rice, The Hindu,17-04-2020

ரேசனில் மோசமான அரிசி, ரம்ஜான் கஞ்சிக்கு பச்சரசி: ரமலான் நோன்புக் கஞ்சிக்காக பள்ளிவாசல்களுக்கு ஆண்டுதோறும் வழங்கும் பச்சரிசி இந்த ஆண்டும் வழங்கப்படும்[9]. ரேசனில் மோசமான அரிசி விநியோகித்தது இங்கு ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும். ஆனாலும் பள்ளிவாசல்களில் கஞ்சி காய்ச்சக்கூடாது என தலைமைச் செயலர் சண்முகம் தெரிவித்தார்[10]. இந்த ஆண்டு ரமலான் நோன்பு ஏப்ரல் 25 அன்று தொடங்க உள்ளது[11]. ஆனால், கொரோனா பீதி காரணமாகப் பள்ளிவாசல்களில் ரமலான் தொழுகை நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது[12]. அதாவது, ரம்ஜான் நேரத்தில், துலுக்கர் ஒன்றாக வந்து, கஞ்சி காய்ச்சி உண்ணும் நிலையில், கரோனா விதிமுறைகள் பின்பற்ற முடியாமல் போகும். அதனால், பிரச்சினை ஏற்படும். அதனால், ரமலான் நோன்பு வருவதை ஒட்டி நோன்புக் கஞ்சி காய்ச்ச தமிழக அரசு அரிசியை வழங்குவது, ரமலான் நோன்பை எதிர்கொள்வது, தொழுகை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இஸ்லாமியத் தலைவர்கள், தலைமை காஜி உள்ளிட்டோருடன் தலைமைச் செயலர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.

No gruel cooking at mosque, Namadhu Murasu, 17-04-2020

5,450 டன் பச்சரிசியை 2,895 பள்ளி வாசல்களுக்கு வழங்கி வருகிறோம்: பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: “5,450 டன் பச்சரிசியை 2,895 பள்ளி வாசல்களுக்கு வழங்கி வருகிறோம். இதை இந்த ஆண்டு கரோனா தொற்று, ஊரடங்கு உத்தரவினைக் கருத்தில் கொண்டு அரிசியை எப்படி வழங்குவது பள்ளிவாசல்கள் எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து இஸ்லாமியத் தலைவர்களிடம் ஆலோசனை நடத்தினோம். இன்றும் இஸ்லாமிய சமயத் தலைவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆலோசனைகளைக் கேட்டு ஆலோசனை செய்து அதன்படி சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி நோன்புக் கஞ்சி காய்ச்ச பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் அரிசி 19-ம் தேதிக்குள் நேரடியாக வழங்கப்படும். அதை சிறு, சிறு பைகளாக பிரித்து தன்னார்வலர்கள் மூலம் அந்தக் குடும்பங்கள் இருக்கும் வீடுகளுக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டது.

No gruel cooking at mosque, Manasoli, 17-04-2020

கஞ்சியாக கொடுப்போம் என்று அடம் பிடித்த துலுக்கர்: செயலர் தொடர்ந்தார்,  “இதைக் கஞ்சியாக தயாரித்து வழங்கி விடுகிறோமே என இஸ்லாமியர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கஞ்சி தயாரித்து வழங்குவது என்பது தினந்தோறும் கஞ்சியைத் தயாரித்து அதைத் தன்னார்வலர்கள் வீடு நோக்கிச் சென்று கொடுப்பது. அப்படிச் செய்தால் பாத்திரங்கள் பயன்பாடு காரணமாக சமூக விலகலைக் கடைப்பிடிக்க முடியாது. நோய்த்தொற்று வரக் காரணமாக அமையும். ஆகவே அது கூடாது என முடிவெடுக்கப்பட்டது[13]. ஆகவே 5,450 டன் பச்சரிசி வழக்கம்போல் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். அதை 22-ம் தேதிக்குள் வீடுகளுக்கு தன்னார்வலர்கள் கொண்டு சேர்த்து விடுவார்கள். தனிமைப்படுத்தப்பட்ட, குவாரண்டைன் பகுதிகளில் என்ன வழிவகைகளைப் பின்பற்றி அளிக்கப்படுகிறதோ அதை அப்படியே பின்பற்றி தன்னார்வலர்கள் ஹாட் ஸ்பாட் பகுதிகளில் கொண்டு சேர்ப்பார்கள்[14]. சிறப்புத்தொழுகை பற்றி முடிவெடுக்க வேண்டியது அவர்கள் மதம் சார்ந்த பிரச்சினை. அதை அவர்கள் மதம் சார்ந்த தலைவர்கள் அறிவிப்பார்கள். ஏற்கெனவே வீடுகளில் தொழுகை என முடிவெடுத்து விட்டார்கள். அதனால் பிரச்சினை இல்லை,” இவ்வாறு தலைமைச் செயலர் சண்முகம் பேட்டி அளித்தார்.

No gruel cooking at mosque, Makkal Kural, 17-04-2020

ஈரோட்டில் தனித்தனியாக கஞ்சி: ஈரோடு மாவட்ட, அரசு ஹாஜி முகம்மது கிபாயதுல்லா, தமிழக சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்[15]. அதில் அவர் கூறியிருப்பதாவது: “கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, சமூக இடைவெளியை நடைமுறைப்படுத்தி வருகிறோம். ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக அரசால் வழங்கப்படும் அரிசி, எங்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. எனவே, தமிழக அரசால் வழங்கப்படும் அரிசியை, நாங்களே ஜமாஅத் மூலமாக வீடுகளுக்கு வினியோகம் செய்து விடுகிறோம். அல்லது நாங்களே, நோன்பு கஞ்சி தயாரித்து வீடுகளுக்கு அனுப்பி, மக்கள் மசூதிகளுக்கு வருவதை தவிர்த்து விடுகிறோம். எனவே, ரம்ஜான் நோன்புக்காக வழங்கும் அரிசியை எங்களுக்கு வழங்க வேண்டும்,” இவ்வாறு கடிதத்தில் கோரியுள்ளார்[16]. ஈரோட்டில், கொரோனா பிரச்சினை தீவிரமாக உள்ளது என்பது அறிந்ததே. பெருந்துறை ஆஸ்பத்திரியில், தொற்றுடன் இன்னும் பீடித்துள்ளவர்கள் இருக்கிறார்கள்.

©  வேதபிரகாஷ்

17-04-2020

No gruel cooking at mosque, Tamil Hindu, 17-04-2020

[1] நியூஸ்.தமிழ், நியூஸ்.தமிழ், ரம்ஜான் பண்டிகைக்கு கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு !!, By Searma Samy | Thu, 16 Apr 2020, By Searma Samy | Thu, 16 Apr 2020

[2] https://newstm.in/tamilnadu/tamil-nadu-government-imposes-restrictions-on-ramzan/c77058-w2931-cid538450-s11189.htm

[3] தினத்தந்தி, ரமலான் நோன்புக்கான அரிசி வழங்குவது குறித்து ஆலோசனைஇஸ்லாமிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் அறிவிப்பு, பதிவு : ஏப்ரல் 17, 2020, 08:00 AM

[4] https://www.thanthitv.com/News/TamilNadu/2020/04/17080011/1265214/Discussion-on-Ramzan-festival.vpf

[5] தினகரன், பள்ளிவாசல்களுக்கு வருகின்ற ஏப்ரல் 19ம் தேதிக்குள் நோன்புக் கஞ்சிக்கான அரிசி வழங்கப்படும்: தலைமைச் செயலாளர் சண்முகம் பேட்டி, 2020-04-16@ 18:05:50.

[6] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=579522

[7] தமிழ்.ஒன்.இந்தியா, பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி தயாரிக்க அனுமதி மறுப்புவீடுகளுக்கு பச்சரிசியை விநியோகிக்க முடிவு, By Arsath Kan | Published: Thursday, April 16, 2020, 20:21 [IST]

[8] https://tamil.oneindia.com/news/chennai/denial-of-permission-to-produce-fasting-porridge-in-mosques-382848.html

[9] தமிழ்.இந்து, ரமலான் நோன்புக் கஞ்சிக்கு 5,450 டன் அரிசி; பள்ளிவாசல்களில் கஞ்சி காய்ச்சப்படாது: தலைமைச் செயலர் அறிவிப்பு, Published : 16 Apr 2020 06:37 PM

Last Updated : 16 Apr 2020 10:01 PM.

[10] https://www.hindutamil.in/news/tamilnadu/549886-5450-tonnes-of-rice-for-ramadan-fasting-porridge-porridge-is-not-feverish-in-mosque-notice-of-chief-secretary.html

[11] ஏசியா.நெட்.தமிழ், வீட்டிலேயே தொழுகைபள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி கிடையாதுதமிழக அரசு அதிரடி அறிவிப்பு!, By Asianet Tamil, Chennai, First Published 16, Apr 2020, 9:34 PM…

[12] https://tamil.asianetnews.com/politics/tamil-nadu-government-on-ramzan-festival-in-corona-curfew-period-q8w1zw

[13] புதியதலைமுறை, பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சியை வழங்குவதில்லை என இஸ்லாமிய அமைப்புகள் முடிவு, Web Team, Published :16,Apr 2020 09:48 PM

[14] http://www.puthiyathalaimurai.com/newsview/68618/Chief-Minister-Palanisamy-has-said-that-Islamic-organizations-have-decided-that-Ramadan-does-not-provide-porridge

[15] தினமலர், ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கு அரிசி: மாவட்ட அரசு ஹாஜி கோரிக்கை, Added : ஏப் 15, 2020 09:02; https://www.dinamalar.com/news_detail.asp?id=2521561

[16] https://www.dinamalar.com/news_detail.asp?id=2521561

செக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக்: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலை – ஷரீயத் உதல் வரை பொது சிவில் சட்ட கோரிக்கை வரை(2)

ஏப்ரல் 11, 2017

செக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக்: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலைஷரீயத் உதல் வரை பொது சிவில் சட்ட கோரிக்கை வரை(2)

Wovs of talaq sufferings

முத்தலாக் வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டது: தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டுக்கும், இஸ்லாமிய தனி நபர் சட்ட வாரியத்திற்கும் கருத்து மோதல்கள் நிகழ்ந்து வந்த நிலையில் மார்ச் 30, 2017 அன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது[1]. அப்போது, இவ்வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. மேலும், வரும் மே மாதம் 11-ம் தேதி 2017 முதல் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர். முன்னதாக, இவ்வழக்கை கோடை விடுமுறைக்கு பின்னர் விசாரிக்க வேண்டும் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வைத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். மூன்று தலாக் சொல்லி திருமண உறவை முறித்துக்கொள்ளும், நடைமுறைக்கு தடை விதிக்க கோரி இஸ்ரத் ஜஹான் என்ற முஸ்லிம் பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், இஸ்லாமியர்கள் கடைபிடித்து வரும் முத்தலா‌க் முறையை அரசியல் சட்டத்திற்கு விரோதமானதாக அறிவிக்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு பதிலளித்துள்ளது[2]. இதுவிசயமாக பல வழக்குகள் பதிவாகியுள்ளதால், அவை அனைத்தும், மொத்தமாக விசாரிக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது.

Wovs of talaq sufferings- women demand justice

ஷரீயத் பிரிவு பெண்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது: இஷ்ரத் ஜகான் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மூன்று முறை தலாக் என கூறி மனைவியை கணவன் விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு, இஸ்லாமிய சட்டம் அனுமதிக்கிறது[3]. முஸ்லிம் தனிநபர் சட்டம்-1937 (ஷரியத்), பிரிவு-2ல் இதற்கு அனுமதியுள்ளது[4]. இந்த அனுமதி பெண்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 14ன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள, உரிமை மீறப்படுகிறது. எனவே தலாக் நடைமுறையை நீக்க வேண்டும் என்று அந்த பெண்மணி கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பான வழக்கில் முத்தலாக் முறை சம உரிமைக்கு எதிராக அமைந்திருப்பதால் அதற்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முத்தலாக் முறையால் இஸ்லாமிய பெண்கள் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. ‌ஆனால், முத்தலாக் முறை இஸ்லாமியர்களுக்கான மத உரிமை என்றும் இதில் அரசு தலையிடக் கூடாது என்றும் அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரிய‌ம் தெரிவித்துள்ளது. அனைத்திந்திய முஸ்லிம் பெண்கள் சட்ட வாரியம், மூன்று தலாக் நடைமுறையை நீக்க விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Talaq-talaq-talaq

பலமுறைகளில் தலாக், தலாக், தலாக் சொல்லி விவாகரத்து செய்வது: முஸ்லிம் கணவர்கள் எப்படி இந்த முத்தலாக்கை செய்து வருகின்றனர் என்று ஏராளமான செய்திகள் வந்துள்ளன. முன்பு, தபால் அட்டைல் தபால், கூரியர் என்றெல்லாம் இருந்து, பிறகு போன், டெலக்ஸ் என்று மாறி, இப்பொழுது, இணைதள அளவில், மெஸேஜ், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் என்ற நிலைக்கு வந்துள்ளது. இதனால், அதிகம் பெண்கள் பதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில், முத்தலாக் முறையானது சம உரிமைக்கு எதிராக இருப்பதாகவும், அதற்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லை எனவும் மத்திய அரசு சார்பாக எழுத்துப் பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது[5]. இம்முறையால் இஸ்லாமியப் பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது[6]. ஆனால், அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியம், முத்தலாக் முறையானது இஸ்லாமியர்களுக்கான மத உரிமை என்றும், இதில் அரசு தலையிடக் கூடாது எனவும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 5-ம் தேதி கான்பூரைச் சேர்ந்த அலியா சித்திக் என்பவர், தனது கணவர் விரைவு தபாலில் முத்தலாக் அனுப்பியுள்ளதாக மோடியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.  உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத்திடமும் அவர் இதுபற்றி புகார் அளித்து இருந்தார். அவர், சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாரும் தனக்கு நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ansari wife- VP

முத்தாலிக், குரானில் இல்லை, மௌலானாக்களால் உருவாக்கப் பட்டதுசல்மா அன்சாரி: நாடு முழுவதும் ‘தலாக்’ விவகாரத்து விவகாரம் பெரும் விவாதங்களை உருவாக்கி வருகிறது. இஸ்லாமிய திருமண முறையில் இருந்து விவகாரத்து பெறுவதற்கு மூன்று முறை ‘தலாக்’ என்று கூறினால் மட்டும் போதுமானது. இந்த முறையை பின்பற்றுவதால் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று தொடர்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.  இதுதொடர்பாக நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக போனில் எஸ்.எம்.எஸ்ஸில் ‘தலாக்’ என்று விவகரத்து பெறுவதும் தபாலில் ‘தலாக்’ என்று அனுப்பி விவாகரத்து பெறுவதும் நடைபெற்ற சம்பவங்கள் செய்திகளாக வெளிவந்தன. இந்த நிகழ்வுகள் தலாக் முறை மீது கடுமையான எதிர்ப்புகளை உருவாக்கியது[7]. இந்த நிலையில் ‘தலாக்’ குறித்து கருத்து தெரிவித்த சல்மா அன்சாரி, மூன்று முறைதலாக்என்று சொல்வதாக மட்டும்தலாக்நடைமுறை இருக்க கூடாது. மவுலானாவில் என்ன கூறியிருந்தாலும் அது உண்மையா ?.குரானை அதன் மூல மொழியான அராபியில் படித்து தெரிந்துகொள்ளுங்கள். அதனுடைய மொழி பெயர்பில் படிக்காதீர்கள். குரானில் இருந்து அறிவை வளர்த்து கொள்ளுங்கள். அதுகுறித்து சிந்தனை செய்யுங்கள். யாரையும் குருட்டுத்தனமாக நம்பாதீர்கள்‘ என்று கூறியுள்ளார்[8].

muslim-act-misused-for-marrying-many-women

ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு 3.5 கோடி முஸ்லிம் பெண்கள் ஆதரவு: ராஜஸ்தானின் ஈத்காஹ் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அந்த வாரியத்தின் பெண்கள் பிரிவின் தலைவரான அஸ்மா ஜோஹ்ரா, முஸ்லிம் சமூகத்தில் விவாகரத்து எண்ணிக்கை அதிகம் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தினை உருவாக்க சிலர் முயற்சி செய்கின்றனர். நாட்டில் ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு ஆதரவாக முஸ்லிம் பெண்களிடம் இருந்து 3.5 கோடி விண்ணப்பங்கள் எங்களுக்கு வந்துள்ளன[9].  இவற்றிற்கு எதிரான பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு என கூறினார். பெண்களின் உரிமைகள் என்ற பெயரில் முஸ்லிம் சமூகம் மீது அவதூறு ஏற்படுத்துவதற்கான சதி மற்றும் முஸ்லிம் சமூக கட்டமைப்பினை தகர்க்கும் முயற்சியிது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்[10]. ஷரியத் மற்றும் இஸ்லாமில் உள்ள தங்களது உரிமைகளை முஸ்லிம் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய நேரமிது.  பெண்களுக்கு அதிகளவில் உரிமைகளை இவை வழங்கியுள்ளன என்பதனை மற்றவர்கள் கூட தெரிந்து கொள்ளட்டும் என அவர் கூறியுள்ளார். அந்த வாரியத்தின் உறுப்பினர் யாஸ்மின் பரூக்கி கூறும்பொழுது, முஸ்லிம் பெண்கள் என்றால் படிக்காதவர்கள் மற்றும் எளிதில் முட்டாளாக்கி விடலாம் என சித்தரிக்கப்பட்டுள்ளது.  ஆனால் உண்மை அதுவல்ல.  முஸ்லிம் பெண்கள் வெளிப்படையாக ஷரியத்திற்கு ஆதரவாக முன்வந்துள்ளனர். குறைந்த அளவிலான பெண்களே அவற்றிற்கு எதிராக உள்ளனர்.  தற்பொழுது வாரியம், வரதட்சணை கொடுமை, குறைந்த செலவில் திருமணங்களை முடித்தல் மற்றும் சொத்தில் மகள்களுக்கும் சம உரிமை போன்ற விவகாரங்களை சரி செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது என கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

11-04-2017

muslim-women-protection-divorce-act-1986

[1] மாலைமலர், முத்தலாக் வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவு, பதிவு: மார்ச் 30, 2017 15:12.

[2] http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/30151231/1077027/SC-bench-refers-TripleTalaq-matter-to-constitution.vpf

[3] தமிழ்.ஒன்.இந்தியா, முத்தலாக்அரசியல் சட்டத்திற்கு விரோதமானது.. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில், By: Karthikeyan; Published: Tuesday, April 11, 2017, 3:31 [IST]

[4] http://tamil.oneindia.com/news/india/triple-talaq-makes-muslim-women-socially-financially-vulner-279416.html

[5] விகடன், முத்தலாக் முறைக்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லைஉச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு!, Posted Date : 02:59 (11/04/2017); Last updated : 02:59 (11/04/2017)

[6] http://www.vikatan.com/news/india/86044-triple-talaq-violate-right-to-equality—centre-tells-sc.html

[7] விகடன், முத்தலாக்முறைக்கு எதிராக குரல் கொடுக்கும் சல்மா அன்சாரி, Posted Date : 21:37 (08/04/2017); Last updated : 21:37 (08/04/2017).

[8] http://www.vikatan.com/news/india/85845-vice-president-ansaris-wife-critized-triple-talaq.html

[9] தினத்தந்தி, ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு 3.5 கோடி முஸ்லிம் பெண்கள் ஆதரவு: முஸ்லிம் சட்ட வாரியம் தகவல், ஏப்ரல் 09, 10:11 PM

[10] http://www.dailythanthi.com/News/India/2017/04/09221142/350-cr-women-support-Shariyat-Triple-Talaq–AIMPLB.vpf

விமான விபத்திற்கு கருப்பு ஆடு பலிகொடுத்த பாகிஸ்தானிய விமானத்துறையும், ஒரு பைத்தியம் செய்த 20 நிர்வாணக் கொலையும் (2)

ஏப்ரல் 3, 2017

விமான விபத்திற்கு கருப்பு ஆடு பலிகொடுத்த பாகிஸ்தானிய விமானத்துறையும், ஒரு பைத்தியம் செய்த 20 நிர்வாணக் கொலையும் (2)

Sargohda - dargah - buildin black magic-sufism

ஆண், பெண்களின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி அவர்களை தடிகளால் அடித்து, பேய் விரட்டப்படுகிறது: பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சர்கோதா மாவட்டத்தில் லாஹூர் நலரில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமத்தில் முஹம்மது அலி குஜ்ஜார் தர்கா உள்ளது. அந்த தர்காவின் காப்பாளரான அப்துல் வஹீத் என்பவர் அந்நாட்டு அரசு பணியாளர், தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் வேலைசெய்தார், என்பது தெரியவந்து உள்ளது.  மனநிலை பாதிப்புடன் இங்கு வரும் பக்தர்களுக்கு பேய் ஓட்டுவதாகவும், பாவ மன்னிப்பு அளிப்பதாகவும் மிக கொடூரமான முறையில் சிகிச்சை அளிப்பது வழக்கம். ஆண், பெண்களின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி அவர்களை தடிகளால் அடித்து, பேய் விரட்டப்படுகிறது. இதற்காக வருபவர்கள் தங்குவதற்கு தர்கா வளாகத்தில் காப்பகம் ஒன்றும் உள்ளது. இங்கு சிலநாட்கள் தங்கி ‘சிகிச்சை’ பெற்றால் தங்களது பிரச்சனை நீங்கிவிடும் என்பது இங்கு வருபவர்களின் (மூட) நம்பிக்கையாக உள்ளது.

Sargohda - bodies taken out

தர்காவின் நிர்வாகத்திற்காக போட்டி, சண்டை: இந்நிலையில், இந்த தர்காவின் நிர்வாகத்தை யார் கவனிப்பது? என்பது தொடர்பாக பரம்பரை வாரிசுகளுக்கு இடையில் சமீபகாலமாக போட்டியும் மோதலும் இருந்து வந்துள்ளது[1]. தலைமை பேயோட்டுகிறவன் தான் திறமையான பேயோட்டுகிறவன் என்றால், அவனை வைத்து தான் அந்த தொழில் நடத்தியாக வேண்டும். ஆகவே அவனைக் கொலைசெய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவனையே தீர்த்துக் கட்ட வேண்டும் என்றால், அவனை விட பெரிய எத்தனாக, அவனது மகன் அல்லது வேறொருவன் இருந்திருக்க வேண்டும். இந்த போட்டியின் விளைவாக ஞாயிற்றுக்கிழமை அன்று பின்னிரவு [02-04-2017] நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் மூன்று பெண்கள் உள்பட 20 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்[2]. அந்த தர்காவின் காப்பாளரான அப்துல் வஹீத் என்பவர் சமீபகாலமாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார்[3].  என்று தமிழ் ஊடகங்கள் வர்ணிக்கின்றன.

Sargohda - dargah - victim bodies taken out

தொலைபேசியில் வரச்சொல்லி, மயக்க மருந்து கொடுத்து கொலை செய்த மனநோயாளி: தர்காவிற்கு வருபவர்கள் ஒவ்வொருவருக்காக இரவு தொலை பேசியில் அழைப்பு விடுத்து உள்ளார். முக்கியமான பணி இருப்பதாக கூறி தன்னுடைய அறைக்கு அளைத்து அவர்களுக்கு மயக்க மருந்தை கொடுத்து உள்ளார்[4].  அதாவது,, ஒரு மனநோயாளி / பைத்தியம் இந்த அளவுக்கு வேலை செய்யுமா என்று தெரியவில்லை. இல்லை, அந்த பைத்தியம் அந்த அலவுக்கு விசயம் தெரிந்து வைத்துள்ளது. அவரது ஆலோசனையின் பேரில் உதவியாளர்கள் சிலர் அங்கு வசித்துவந்த எதிர் தரப்பினருக்கு மயக்க மருந்து கலந்த உணவு வகைகளை கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்டவர்கள் மயங்கி சாய்ந்தபோது அவர்களின் ஆடைகளை களைந்து கத்தி மற்றும் வீச்சரிவாள்களால் வெட்டியும், கனத்த தடிகம்புகளால் தாக்கியும் அப்துல் வஹீதின் ஆதரவாளர்கள் துடிதுடிக்க கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் சிகிச்சைக்காக அந்த தர்காவுக்கு வந்திருந்த மூன்று / நான்கு பெண்கள் உள்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்[5]. இந்த கோரச் சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை கைது செய்யுள்ள போலீசார் மேலும் பலரை தேடி வருகின்றனர்[6]. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படுகொலையை தொடர்ந்து, சம்பவம் நடந்த தர்கா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Sargohda - dargah - building

ஷியாக்களுக்கு எதிரான பிரச்சாரமா?: பாகிஸ்தானில், சுன்னிகளைத் தவிர மற்ற முஸ்லிம்கள், முஸ்லிம்களாகக் கருதப் படுவதில்லை. கடந்த 50 ஆண்டுகளில் காதியான் – அஹமதியா முஸ்லிம்கள் வேடையாடப் பட்டு, விரட்டியடிக்கப் பட்டனர். பஹாய் முஸ்லிம்களின் கதியும் அவ்வாறே முடிந்தது. ஷியாக்கள் அதிகமாக இருப்பதால். தலிபான் இயக்கம் வளர்ந்த பிறகு, அவர்களைத் தாக்கி வேட்டையாடி வருகின்றனர். ஐசிஸ் வந்த பிறகு கேட்கவே வேண்டாம், ஜிஹாதி தீவிரவாதம் எல்லைகளக் கடந்தது. தொடர்ந்து ஷியாக்கள் பலவிதங்களில் தாக்கப் பட்டு வருகின்றனர். தர்காக்களை ஒழிக்கிறோம் என்ற போர்வையில், குண்டுவெடிப்புகளுடன் வேலைசெய்து வருகிறார்கள். சுன்னிகள் தவிரவீதர முஸ்லிம்களின் மசூதிகள், மடாலயங்கள், சூபிகானா போன்ற இடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. குண்டுவெடிப்புகளும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.  பாகிஸ்தானை விட்டு, ஓடி வந்த பஹாய் முஸ்லிம்கள், தில்லியில், தாமரை கோவிலைக் கட்டிக் கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. கர்நாடகத்தில், அஹமதியா முஸ்லிம்கள் கனிசமாக உள்ளனர். ஆனால், இவர்கள் எல்லோருமே அடங்கிக் கிடக்கின்றனர். எதைப் பற்றியும் எந்த கருத்தையும் சொல்வதில்லை.

Attacks on shrines since 2005

பிப்ரவரியில் நடந்த குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கானோர் சாவு, காயம் முதலியன: பாகிஸ்தானில் உள்ள தர்கா ஒன்றின் மீது நடைபெற்ற தாக்குதலில் குறைந்தது 80 பேர் பலியானதை தொடர்ந்து நடத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை ஒன்றில் டஜன்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது[7]. சுமார் 18 தீவிரவாதிகள் தெற்கு சிந்து மாகாணத்தில் கொல்லப்பட்டுள்ளனர். அங்குத்தான் அந்த தர்கா அமைந்திருந்தது. மேலும் 13 பேர் வட-மேற்கு பகுதியில் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேவான் நகரில் இருந்த சூஃபி தர்காவில் தற்கொலை குண்டுத்தாரி ஒருவர் வழிப்பட வந்திருந்தோர் மத்தியில் தன்னைத்தானே வெடிக்க வைத்துள்ளார். இஸ்லாமிய அரசு என அழைத்துக்கொள்ளும் அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. ஜிஹாதி குழுக்கள் நடத்திவரும் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களில் இது சமீபத்தியதாகும். தாக்குதலில் பலியானவர்களுக்கு 17-02-2017 அன்று (வெள்ளிக்கிழமை) இறுதிச் சடங்கு நடைபெறுகிறது, என்று பிபிசி வெளியிட்டது[8]. ஆனால், அத்தகைய “குண்டுதாரிகள்” ஏன் ஷியா மசூதிகளில் மட்டும், தங்களை வெடித்துக் கொள்கிறார்கள் என்று சொல்லவில்லை.

Sargohda - dargah - buildin black magic

ஷியாக்களின் பலியைசகிப்புத் தன்மையோடுஅனுசரித்து வரும் செக்யூலரிஸ சித்தாந்திகள்: ராணுவம் மற்றும் போலீஸ் சுன்னிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதனால், ஷியாக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். ஆகவே, சுன்னிகளும் பேயோட்டுதல், மந்திரம் வைத்தல், பில்லி-சூன்யம் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டிருந்தாலும், இதனை சாக்காக வைத்துக் கொண்டு, அவர்களை ஒழிப்பதை நியாயப் படுத்துவது போன்ற, இந்நிகழ்சிகள் தெரிகின்றன. மனித உரிமைகள் எல்லாம் இதில் யாரும் கவலைப்படவில்லை. இங்குள்ள செக்யூலரிஸ்டுகளும் கண்டுகொள்வதில்லை. இங்குள்ள ஷியா முஸ்லிம்கள், ஆச்சரியப் படும் அளவுக்கு ஊமைகளாக இருக்கின்றனர். இங்கு ஒரு பாரூக் நாத்திகன் என்பதனால் கொலை செய்யப்பட்டான் என்றால், அங்கு சுன்னிகள் தவிர மற்ற எல்லோருமே “காபிர்கள்” என்று முத்திரைக்குத்தப்பட்டு தீர்த்துக் கட்டப் படுகிறார்கள். ஆனால், “சகிப்புத் தன்மையோடு” அமைதி காக்கிறார்கள். இப்பொழுதும், பைத்தியம் கொலை செய்தது என்று கதையை முடித்து விடுவார்கள்.

© வேதபிரகாஷ்

03-04-2017

Sargohda - dargah - surviving victim

[1] மாலைமலர், மயக்க மருந்து தந்து 20 பேரை வெட்டிக் கொன்ற மனநோயாளி: பாகிஸ்தான் தர்காவில் கொடூரம், பதிவு: ஏப்ரல் 02, 2017 10:57

[2] http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/02105709/1077548/20-people-killed-by-mentally-ill-custodian-of-dargah.vpf

[3] தினத்தந்தி, பாகிஸ்தானில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு தர்கா நிர்வாகியால் 20 பேர் கொடூரக் கொலை, ஏப்ரல் 02, 12:00 PM

[4] http://www.dailythanthi.com/News/World/2017/04/02120016/20-killed-by-shrine-custodian-in-Sargodha-police.vpf

[5] தினமலர், தர்காவுக்கு சென்ற 20 பேர் நிர்வாணமாக்கி படுகொலை, பதிவு செய்த  நாள். ஏப்ரல்.3, 2017, 00.05.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1743594

[7] பிபிசி, தர்கா மீது நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி: 31 தீவிரவாதிகள் கொலை, பிப்ரவரி 17, 2017.

[8] http://www.bbc.com/tamil/global-39005133

பாகிஸ்தான் தர்காவில் நடந்தது பைத்தியம் செய்த கொலையா, இல்லை நரபலியா? – ஒரு பைத்தியம் எப்படி இருபது பைத்தியங்களைக் கொல்ல முடியும்? (1)

ஏப்ரல் 3, 2017

பாகிஸ்தான் தர்காவில் நடந்தது பைத்தியம் செய்த கொலையா, இல்லை நரபலியா? ஒரு பைத்தியம் எப்படி இருபது பைத்தியங்களைக் கொல்ல முடியும்? (1)

Abdul Waheed before becominh Peer

இவனேமனநோயாளிஎன்றால், அங்கே வரும் பைத்தியங்களுக்கு எப்படி, இந்த பைத்தியம் வைத்தியம் பார்க்கும்?: பாகிஸ்தானில் உள்ள தர்கா காப்பகத்தின் நிர்வாகி ஒருவர், பெண்கள் உள்பட 20 பேருக்கு மயக்க மருந்து தந்து அவர்களை வெட்டியும், தாக்கியும் கொன்ற கோரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழ் ஊடகங்கள் 03-04-2017 அன்று செய்திகளை வெளியிட ஆரம்பித்தாலும், 02-04-2017 மாலையில் முரண்பட்ட விவரங்கள் தான் பாகிஸ்தான் நாளிதழ்கள் மூலம் அறியப்பட்டன[1]. பக்தர்களை காப்பகத்தின் பொறுப்பாளர் தன்னை கொலை செய்யப் பார்க்கிறார்கள் என்று பயந்து, கொன்றதாக செய்திகள் வெளிவந்தன[2]. தனக்கே விஷம் கொடுத்து கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டதால் தான், அவர்களை கொலை செய்ததாக கூறினான்[3]. சொத்து-அதிகாரம் போட்டி என்றால், தர்காவின் காப்பாளரான அப்துல் வஹீத், அவன் மகன் மற்றவர்கள், இவர்களுக்கிடையில் தான் பகை-கொலை செய்யும் வெறி இருந்திருக்க வேண்டும்[4]. தர்காவை பிடிக்க திட்டம் போட்டவர்களுக்கும், சொகிச்சைப் பெற்றவர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? தன்னை கொலை செய்ய வருகிறார்கள் என்பது எப்படி “மனநோயாளிக்கு”த் தெரியும்? இவனே “மனநோயாளி” என்றால், அங்கே வரும் பைத்தியங்களுக்கு எப்படி, இந்த பைத்தியம் வைத்தியம் பார்க்கும்? ஆகவே, எதையோ மறைக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரிகிறது.

Sargohda - dargh inside - photos of peers

பேய் ஓட்டுவதாகவும், பாவ மன்னிப்பு அளிப்பதாகவும் குரூர சிகிச்சை அளித்த தர்கா: இந்திய விவகாரங்களில் உள்ளே புகுந்து, ஆராய்ந்து, விவரங்களை வெளியிடும் செக்யூலரிஸ ஊடகங்கள், பாகிஸ்தான் நாளிதழ்கள் சொன்னதை கூட போடாமல், திரித்து வெளியிட ஆரம்பித்துள்ளன. தினமணியில் தலைப்பே தமாஷாக இருந்தது! “பாகிஸ்தானில் உள்ள தர்காவில் கொடூரம்: மயக்க மருந்து கொடுத்து 20 பேரை வெட்டிக் கொன்ற மனநோயாளி,” என்ற தலைப்பிட்டது[5]. மனநோயாளி எப்படி, அடுத்தவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்தான், கொடுத்த பிறகு, வெட்டிக் கொன்றான் என்று விளக்கவில்லை[6]. கொலைசெய்கிறவன், வந்தவர்களின், ஆடைகளை நீக்கி, நிர்வாணமாக்கி, தடிகளால் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்தான் என்பது புதிராக உள்ளது. அதில் நான்கு பெண்களும் அடக்கம் எனும்போது, அவர்களை நிர்வாணமாக்கியவன், மருந்து கொடுத்து, மயக்கமடையச் செய்தவன், அப்படியே அடித்துக் கொன்றான, குத்திக் கொன்றானா, அல்லது பாலியல் பலாத்காரம் செய்தானா போன்ற விவரங்கள் தெரியவில்லை.

Abdul Waheed killed 20 at sargodha

பேய், பிசாசு பிடித்தவர்களை உயிரோடு எரிக்கும் வழக்கம் இன்றும் பாகிஸ்தானில் உள்ளது: மதநிர்வாக விவகார மந்திரி, ஜெயீம் காதரி, “ரகசிய புலனாய்வுத் துறைமூலம், இத்தகைய மதகாப்பங்கங்கள் பஞ்சாப் மாநிலத்தில் 552 இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால், இது பதிவு செய்யப்படாதது ஒன்றாகும். பேயோட்டுகிறேன் என்று இப்பகுதியில், இத்தகைய கொலைகள் நடப்பது மற்றும் அவர்களை உயிரோடு எரிப்பது, இந்நாட்டில் அவ்வப்போது நடந்து வருகிறது. ஆனால், இதுபோன்ற கூட்டுக் கொலை நடப்பது, இதுதான் முதல் தடவை,” என்றார்[7]. அதாவது, “பேய், பிசாசு பிடித்தவர்களை உயிரோடு எரிக்கும் வழக்கம் இன்றும் பாகிஸ்தானில் உள்ளது” என்பதை ஒப்புக்கொள்கிறார். ஆனால், தமிழ் ஊடகங்கள் இதனை கண்டுகொள்ளவில்லை. யூத-கிருஸ்துவ-முகமதிய மதங்களின் படி, பேய்-பிசாசு பிடித்தவர்களை உயிரோடு எரிப்பது வழக்கமாக இருக்கிறது. ஆனானப் பட்ட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலேயே இப்பழக்கம் 20 நூற்றாண்டு வரை இருந்தது. பிறகு சட்டங்கள் மற்றும் கடுமையான நடவடிக்கைக்கள் மூலம் கட்டுப் படுத்தினர். ஆனால், இஸ்லாமிய நாடுகளில், மதநம்பிக்கை மூலம் நடப்பதால், அரசுகள் கண்டும் காணாதது போல இருந்து விடுகின்றன.

Black goat sacrificed by Pak airlines Dec.7, 2016.

விமான பாதுகாப்பிற்கு கருப்பு ஆடு பலிக் கொடுத்த பாகிஸ்தான் விமானத் துறை[8]: நான்கு மாதங்களுக்கு முன்னர் டிசம்பர் 2016ல், பாகிஸ்தானிய விமானத்துறை பாதுகாப்பு கோரி, ஒரு கருப்பு ஆட்டை அறுத்து பலியிட்டனர்[9]. பாகிஸ்தான் விமானங்கள் அடிக்கடி விபத்தில் மாட்டிக் கொள்கின்றன[10]. டிசம்பர் 7, 2016 அன்று நடந்த விபத்தில், விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் பிரயாணம் செய்தவர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறு அடிக்கடி பலிகள் நடப்பதால், ஏதோ தியசக்திதான் வேலை செய்கிறது, அதனை விரட்ட கருப்பு ஆடு பலியிட வேண்டும் என்று, மாந்தீரிகர்கள் அறிவுருத்தியதால், விமான ஆட்கள் அவ்வாறே செய்தனர்[11]. சமூக ஊடகங்கள், மற்றவர்கள் கிண்டலடித்தாலும், அவர்கள் கவலைப்படவில்லை. அதேபோல, பாலங்கள் கட்டுவது, பெரிய சாலைகள் போடுவது போன்ற வேலைகள் ஆரம்பிக்கும் போதும் பலி கொடுக்கப் படுகின்ற்து. நம்ம வீரமணி போன்றோர் அல்லது ஷிர்க் கூட்டத்தால் கலாட்டா செய்யவில்லை.  பொதுவாக ஈத் அன்று 1,00,00,000க்கும் [ஒரு கோடி] மேலான விலங்குகள் பலியிடப் படுகின்றன. இதில் மதநம்பிக்கையை விட வியாபாரம் தான் பெரிதாக இருக்கிறது[12]. தோல் அதிகம் கிடைக்கும், அதனை ஏற்றுமதி செய்யலாம், ரூ 8 கோடிகள் கிடைக்கும் என்றுதான் கணக்குப் போடுகின்றனர்[13]. தோல் வியாபரக் கழகம் அதில் அதிகமாகவே சிரத்தைக் காட்டுகிறது[14]. மிருகங்களை அறுக்கும் போதே, தோலை யார் பெறுவது என்று சண்டை போட்டுக் கொள்வர் / அதையே விளையாட்டாக கொள்வர். அதிலும் அடிதடி-சண்டை நடைபெறுவதுண்டு.

© வேதபிரகாஷ்

03-04-2017

Black goat sacrificed by Pak airlines Dec.7, 2016.2

[1] Pakistan Observer, Sargodha Shrine custodian kills 20 devotees, April.3, 2017.

[2] http://pakobserver.net/sargodha-shrine-custodian-kills-20-devotees/

[3] Geo.TV.news, Killed people because they had planned to poison me: Sargodha murder accused, Malik Asghar and Naveen Anwar, April.2, 2017.

[4] https://www.geo.tv/latest/136447-Killed-people-because-they-had-planned-to-poison-me-Sargodha-murder-accused

[5] தினமணி, பாகிஸ்தானில் உள்ள தர்காவில் கொடூரம்: மயக்க மருந்து கொடுத்து 20 பேரை வெட்டிக் கொன்ற மனநோயாளி, ஏப்ப்ரல்.3, 2017.

[6] http://www.dinamani.com/latest-news/2017/apr/02/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-20-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-2677320.html

[7] Punjab Minister for Religious Affairs Zaeem Qadri said intelligence agencies along with police and the local government were investigating all aspects of the case. Qadri said that his department managed some 552 shrines in the province, but this one was not a registered with it.
“Investigators will also look into how this shrine was allowed to be set up on private land,” he said. Punjab Chief Minister Shahbaz Sharif has asked for a police report on the investigation within 24 hours, a senior government official said. There have been cases of people dying during exorcism ceremonies at some shrines across the country, but mass killings are rare.

http://pakobserver.net/sargodha-shrine-custodian-kills-20-devotees/

[8] Daily Mail, Pakistan airline responds to safety fears after plane crash kills everyone on board one of its jets by sacrificing a goat , PUBLISHED: 12:01 BST, 19 December 2016 | UPDATED: 23:17 BST, 19 December 2016.

[9] http://www.dailymail.co.uk/news/article-4047924/Pakistan-airline-mocked-goat-sacrifice.html

[10] Daly Mail, PIA plane crash: Pakistan’s national airline sacrifices goat on Tarmac before test flight, Monday 19 December 2016 11:15 GMT

[11] http://www.independent.co.uk/travel/news-and-advice/pia-lane-crash-goat-sacrifice-pakistan-national-airline-tarmac-atr-grounded-benazir-bhutto-a7484081.html

[12] According to Gulzar Feroz, the central chairman at the Tanners’ Association, more than 2.7 million cows/bulls, four million goats, 800,000 lambs, and up to 30,000 camels will be sacrificed this year. He said that the hides of cows/bulls were expected to fetch a price of Rs1,600 in the market, while goat hides would fetch a market price of Rs 250 each. He said that hides of sacrificial animals fetched a total of Rs8 billion last Eid, but due to fall in prices this year, hides of sacrificial animals are expected to fetch around Rs7 billion this year.

https://www.geo.tv/latest/114495-Pakistanis-to-sacrifice-over-10-million-animals-this-Eid

[13] Geo News, Pakistanis to sacrifice over 10 million animals this Eid, September 12, 2016.

https://www.geo.tv/latest/114495-Pakistanis-to-sacrifice-over-10-million-animals-this-Eid

[14] https://www.geo.tv/latest/114495-Pakistanis-to-sacrifice-over-10-million-animals-this-Eid

மறுபடியும் பாகிஸ்தானில் இன்னொரு ஷியா வழிபாட்டு ஸ்தலத்தின் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் – 52 பேர் சாவு, 150 படுகாயம், ஐசிஸ் பொறுப்பேற்றுள்ளது!

நவம்பர் 13, 2016

மறுபடியும் பாகிஸ்தானில் இன்னொரு ஷியா வழிபாட்டு ஸ்தலத்தின் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் – 52 பேர் சாவு, 150 படுகாயம், ஐசிஸ் பொறுப்பேற்றுள்ளது!

explosion-pakistan-718147பல்லாண்டுகளாக ஷியாக்களின் மீது சுன்னிகள் நடத்தி வரும் தாக்குதல்கள்: பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்களின் மீதான தாக்குதல் பல்லாண்டுகளாக நடந்து வருகின்றன. ஷியாக்களின் மக்கட்தொகை 10-25% சதவீதங்களில் உள்ளது என்று பாகிஸ்தான் கூறுக் கொள்கிறது. 2015 மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி சுமார் 40 மில்லியன் / நான்கு கோடி ஷியாக்கள் உள்ளதாக சொல்லிக் கொள்கிறது. ஆனால், அவர்கள் இரண்டாந்தர குடிமக்களைப் போலத்தான் நடத்தப் படுகிறார்கள். சுன்னி முஸ்லிம்கள் அவர்களை காபிர்கள் என்றே பிரகடனப் படுத்தி ஜிஹாத் என்ற “புனித போரை” அவர்கள் மீது தொடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும். ஷியாக்களின் புனித வழிபாட்டு தினங்களில் அவர்களின் வழிபாட்டு ஸ்தலங்களில் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். முதியவர், பெண்கள், குழந்தைகள் என்று கூடியிருந்தாலும், இரக்கமில்லாமல், குண்டுவெடிப்புகள் மூலம் கொன்று வருகின்றனர்.

pakistan-shrine-731590உலகம் முழுவதிலும் ஷியாக்களின் தாக்குதல் அதிகமாகி வருகின்றது: தலிபான்கள், முஜாஹித்தீன்கள், ஐசிஸ் தீவிரவாதிகள் என்று பல குழுக்கள் வளர்ந்து விட்ட நிலையில், அவர்கள் எல்லோருமே சுன்னிகளாக இருக்கும் பட்சத்தில், ஷியாக்களின் மீதான தாக்குதல்கள் மிகவும் கோரமாக, குரூரமாக, மிருகத்தன்மையுடன் நடத்தப் பட்டு வருகின்றன. இஸ்லாத்தில் இந்த சுன்னி-ஷியா பிளவு சண்டைகள் மொஹம்மது காலத்திலேயே ஆரம்பித்து, தொடர்ந்து நடந்து வருகிறது. முந்தைய இரான்–இராக் சண்டையும் அதனால் தான் நடந்தது. இரானுக்கும், சவுதி அரேபியாவுக்கும் மெக்கா-மெதினா நிர்வகிப்பு விவகாரங்களிலும், இப்பிரச்சினை தலைத் தூக்குவதுண்டு. அதனால், சவுதி அரேபியா இரானைக் கட்டுப் படுத்தி வைக்க எல்லா முறைகளையும் கையாண்டு வருகின்றது.

sufi-shrine-bombed-dawn-1

சனிக்கிழமை 12-11-2016 அன்று மாலை நடத்தப் பட்ட குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை என்றாலே மசுதிகளில் அல்லது மற்ற இலக்குகளின் மீது குண்டுவெடிக்கும் தாக்குதல் நடக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. பலோசிஸ்தான் குஜ்தார் மாகாணத்தில் லாஸ்பெல்லாவில் பிரபல தர்கா ஷா நூரனி சூபி வழிபாட்டுத் தலம் உள்ளது[1]. கராச்சியிலிருந்து 150 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு ஷியாக்கள் அதிகமாக வாழ்கின்றனர் என்பது தெரிந்த விசயமே. பிரதி வெள்ளிக்கிழமை தமால் என்ற சூபி சடங்கை பார்ப்பதற்கு இங்கு ஷியாக்கள் அதிகக் கணக்கில் கூடுவதுண்டு[2]. தமால் என்பது சூபி-நடனமாகும். சூபி பக்தர்கள் சுழன்று கொண்டே ஆடிப் பாடுவர். ஏ. ஆர். ரஹ்மான் சூபி மெட்டுகள் பலவற்றை சினிமா பாடல்களில் உபயோகப்படுத்தியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், ஷியாக்கள் தாக்குவதை அவர் கண்டிப்பதாகத் தெரியவில்லை. இங்கு சனிக்கிழமை 12-11-2016 அன்று மாலை சுமார் 500 பேர் தரிசனம் செய்வதற்காக திரண்டிருந்தனர்[3]. அப்போது கோவில் வளாகத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது[4]. இதில், ஏராளமான பக்தர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

sufi-shrine-bombed-dawn-2

இரவின் இருள், மருத்துவமனை அருகில் இல்லாதது இறப்புகள் அதிகமாக காரணமாகின்றன: சம்பவ இடத்திற்கு போலீசாரும், மீட்புக்குழுவினரும் ஆம்புலன்சுகளுடன் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர். பலர் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் உயிருக்குப் போராடினர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்[5]. அருகில் மருத்துவமனைகள் இல்லாத காரணத்தால் காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஷியாக்கள் மாகாணம் என்பதால், பாகிஸ்தான் அரசு பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறதா என்ற சந்தேகமும் எழுகின்றது. இருள் சூழ்ந்த காரணத்தால் மீட்புப் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது[6]. இந்த குண்டு வெடிப்பிற்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது[7]. ஐ.எஸ் உலகம் முழுவது உள்ள ஷியாக்களை ஒழிப்பதற்கு தயாராக உள்ளது[8]. சிரியாவில் ஷியாக்களைக் கொன்று குவித்து வருகின்றது[9].

sufi-shrine-bombed-dawn-6

52 பேர் சாவு, 150ற்கும் மேற்பட்டவர் படுகாயம்: 12-11-2016 சனிக்கிழமை அன்று 14 வயது சிறுவன், மசூதியில் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் குழந்தைகள் உட்பட சுமார் 43 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. நூறுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். நேரமாக-நேரமாக இந்த எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது. தாக்குதல் நடந்தபோது சுமார் 600 பக்தர்கள் அங்கே இருந்தார்களாம். பாகிஸ்தான் பலுசிஸ்தான் பகுதியில் குண்டு வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது[10]. வழக்கம் போல பாக்., அதிபர் நவாஸ் ஷெரிஃப், இம்ரான் கான் போன்றோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்[11].  ஆனால், இதனால், ஷியாக்கள் மீதான தாக்குதல்கள் குறையப் போவதில்லை.

sufi-shrine-bombed-dawn-8

இந்தியாவின் மீது, தமிழகத்தின் மீதான தாக்கம், விளைவு: இந்தியாவில் ஷியாக்கள், சுன்னிகளால் அடக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்றே தெரிகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில், “ஷிர்க்” என்ற போர்வையில், சுன்னிகள், ஷியாக்களை மிரட்டி வைத்துள்ளனர் எனலாம். ஷியாக்கள் என்று தங்களை அடையாளப் படுத்திக் கொண்டு, யாரும் தங்களது உரிமைகளைக் கேட்பதில்லை. ஆஜ்மீர், நாகூர் போன்ற தர்காக்களில் மொட்டைப் போட்டுக் கொண்டு சென்றலும், அவர்களும், இத்தீவிரவாத-ஜிஹாதி வகையறாக்களைக் கண்டிப்பதில்லை. ஏ. ஆர். ரஹ்மான் போன்றோரும், சுப்பித்துவம், சூபி இசை என்றெல்லாம் பேசி, தனது வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டாலும், ஷியாக்கள் தாக்கப்படும் போது, கொல்லப்படும் போது, கண்டு கொள்வதில்லை. கிலாபத் இயக்கத்தை [1919-1922] ஆதரித்ததின் மூலம் காந்தி இந்திய முஸ்லிம்களைப் பிரித்தார். இன்றும் கிலாபத்தை மறுபடியும் நிறுவியதாக கூறிக்கொள்ளும் ஐசிஸ் ஷியாக்களை வேட்டையாடி வருகின்றது. கிலாபத்தை காந்தியும், ஐசிஸும் ஆதரித்தது-ஆதரிப்பது வினோதமே, ஆனால், உண்மை.

 

© வேதபிரகாஷ்

13-11-2016

shia-rights-watch_shia-death-in-july-2015

[1] தினத்தந்தி, பாகிஸ்தானில் பயங்கரம்:பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டு வெடிப்பு 30 பேர் பலி, பதிவு செய்த நாள்: சனி, நவம்பர் 12,2016, 7:57 PM IST; மாற்றம் செய்த நாள்: சனி, நவம்பர் 12,2016, 7:57 PM IST.

[2] The Dawn, Tragic scenes at Shah Noorani shrine after bombing, 13th November 2016 | DAWN.COM

http://www.dawn.com/news/1295998/tragic-scenes-at-shah-noorani-shrine-after-bombing

[3] http://www.dailythanthi.com/News/World/2016/11/12195714/Several-feared-dead-in-a-blast-near-Shah-Nooranis.vpf

[4] மாலைமலர், பாகிஸ்தான் வழிபாட்டு தலத்தில் குண்டுவெடிப்பு: 30 பேர் பலி, பதிவு: நவம்பர் 12, 2016 19:58.

[5] http://www.maalaimalar.com/News/World/2016/11/12195838/1050492/At-least-30-killed-in-huge-blast-in-Lasbellas-Shah.vpf

[6] தினமலர், பலுசிஸ்தானில் குண்டுவெடிப்பு: 43 பேர் பலி; பலர் படுகாயம், பதிவு செய்த நாள்: நவம்பர்.12, 2016. 20.00; மாற்றம் செய்த நாள். நவம்பர்.12, 2016.00.34.

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1647324

[8] Express (UK), ISIS bomb at Muslim shrine kills at least 25 people in huge explosion in Pakistan, By KATIE MANSFIELD, 14:17, Sat, Nov 12, 2016 | UPDATED: 20:12, Sat, Nov 12, 2016

[9] http://www.express.co.uk/news/world/731590/explosion-pakistan-shah-noorani-shrine-death-toll-injured

[10] விகடன், பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு – 43 பேர் பலி, Posted Date : 23:16 (12/11/2016); Last updated : 23:15 (12/11/2016).

[11] http://www.vikatan.com/news/world/72258-huge-bomb-blast-in-dargah-shah-noorani-shrine-at-pakistan—43-feared-dead.art

மொஹம்மது அஸ்கர் (71 வயதான) தான்தான் மொஹம்மது நபி என்று சொல்லிக் கொண்டதால் மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது!

ஜனவரி 25, 2014

மொஹம்மது அஸ்கர் (71 வயதான) தான்தான் மொஹம்மது நபி என்று சொல்லிக் கொண்டதால் மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது!

 

பிரிடிஷ் பிரஜைக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளது: மொஹம்மது அஸ்கர் (71 வயதான) ஒரு பிரிடிஷ் பிரஜை ஆவர். பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட அவர், இங்கிலாந்தில் தங்கி விட்டார், குடிமகனாகவும் இருக்கிறார். அந்நிலையில், சொத்து தகராறு விசயமாக பாகிஸ்தானுக்கு வரவேண்டியிருந்தது. அப்பொழுது, இவர் மீது வழக்கும் போடப் பட்டது. ஏற்கெனவே மனநிலை பாதிக்கப் பட்டவர் மற்றும் வயதானவர் என்பதால், ஒரு நிலையில் உணர்ச்சி வசப்பட்டு, கடவுள் பார்த்துக் கொள்வார் என்று பேசியிருக்கிறார். ஆனால், பிறகு, அதற்கும் ஒருபடி மேலே போய், தான்தான் மொஹம்மது நபி தன் மீது யாரும் குற்றஞ்சாட்ட முடியாது என்றேல்லாம் பேசியதாகவும், எழுதியதாகவும் சொல்லப் பட்டது[1].

 

தான்தான்  மொஹம்மது  நபி  என்று  சொல்லிக்  கொண்டதால்  ஷரீயத் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது: தான்தான் மொஹம்மது நபி என்று சொல்லிக் கொண்டதால் 2010ல் அவன் ராவல்பின்டியில் போலீசரால் மததுவேஷச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான். தான் போலீசாருக்கு எழுதிய கடிதங்களில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது[2]. அதுமட்டுமல்லாமல் நீதிமன்றத்தில் மற்றும் நீதிபதி முன்பாகவும் தான் அவ்வாறே சொல்லிக் கொண்டான் என்று செய்திகள் தெரிவிக்கின்றன[3]. இந்த வழக்கு மூடிய நீதிமன்றத்தில் ரகசியமாக நடத்தப் பட்டது. 23-01-2014 அன்று அவனுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப் பட்டது. அதுமட்டுமல்லாது ரூ. 10,00,000/- அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது[4]. ஆனால், அவனது வழக்கறிஞர் அவன் மனநிலை சரியாகவில்லை, மேலும் முதலில் சொத்து விவகாரத்தில் தான் அவன் மீது வழக்குப் போடப்பட்டது என்று வாதிடினார்[5].  இருப்பினும் 97% சதவீதம் முஸ்லிம் ஜனத்தொகை கொண்ட பாகிஸ்தானில் இத்தகைய வழக்குகளிலிருந்து விடுபடுவது மிகவும் கடினம்[6].

 

இங்கிலாந்து சட்டரீதியில் போராடியும் ஒன்றும் செய்ய முடியவில்லை: மொஹம்மது அஸ்கர் இங்கிலாந்தின் பிரஜை எடின்பர்கில் மனச்சிதைவு மற்றும் குழப்பம் [treated for paranoid schizophrenia in Edinburgh] முதலிய நோய்களுக்காக 2003ல் சிகிச்சைப் பெற்றவர். இதற்கான ஆதாரங்களையும் வக்கீல் தாக்கல் செய்துள்ளார். இருப்பினும், நீதிமன்றத்தில் மற்றும் நீதிபதி முன்பாகவும் தான் அவ்வாறே சொல்லிக் கொண்டான் என்பதால் மரணதண்டனை அளிக்கப்பட்டுள்ளது[7]. இப்பொழுது அவனது மனநிலை மற்றும் பாகிஸ்தானிய சிறையில் அவனது உடல் ஆரோக்யம் முதலியவை கேள்விக்குறியாகியுள்ளது. ஒன்று அவன் அடித்துக் கொல்லப் படலாம் அல்லது தற்கொலையும் செய்து கொள்ளலாம். ஏற்கெனவே தற்கொலை செய்து கொள்ள முயன்றார் என்று சொல்லப் படுகின்றது. பாகிஸ்தானில் பொதுவாக, இஸ்லாம் மதத்திற்கு எதிராக ஷரீயத் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் நிலை மிகவும் அபாயத்தில் உள்ளது. மக்களே அவர்களை அடித்துக் கொல்லக் கூடிய நிலைக் கூடவுள்ளது. இதனால், மனித உரிமைக் குழுக்கள், ஆங்கிலேய சங்கங்கள், பிரிடிஷ் அரசாங்கம் முதலியவை கவலையைத் தெரிவித்துள்ளன. பிரிடிஷ் அரசாங்கம் தூதரகத்தின் மூலம் முடிந்த வரையில் உதவிகளை அளித்து வருகின்றது. ஷரீயத் சட்டத்தின் கீழ் அவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வாதிட முடியாது[8].

 

Allah for muslims only - Vedaprakash.3

Allah for muslims only – Vedaprakash.3

இங்கிலாந்து, பாகிஸ்தான், இந்தியா – நிலைமை: செக்யூலரிஸத்தில் இந்தியா மூழ்கித் திளைத்து வருகின்றது. இங்கிலாந்து பாதிரி, சென்னையிலேயே சிறுவர்-சிறுமிகளைப் புணர்ந்த குற்றங்களுக்காகக் கையும் களவுமாக மாட்டிக் கொண்டபோது, பிரிடிஷ் போலீசார் சென்னைக்கு வந்து, அவனை கைது செய்து கொண்டு போய், தங்களது நாட்டில், தங்களது சட்டங்களின் கீழ் அவனுக்கு தண்டனை விதிக்கப் படும் என்று அறிவித்தது. அதேபோல, கள்ளக் கடத்திலில் ஈடுபட்ட ஒரு பேராசிரியரை (F. A. A. Flynn) ஆஸ்திரேலியா கொண்டு சென்றது. மும்பை குண்டு வழக்கில் சிக்கிய இன்னொரு கிருத்துவப் பாதிரியும், அமெரிக்கப் பிரஜை என்பதால், அவனை கொண்டு சென்றது. ஆனால், பாகிஸ்தானில் இவ்வாறு நடக்கும் போது, எல்லா நாடுகளும் “சட்டப்படி” நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. பிரிடிஷ் காமன்வெல்த் கட்டமைப்பில் இருக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளும் பாகிஸ்தான் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதே ஒரு இந்தியர் சிக்கிக் கொண்டிருந்தால், மனித உரிமைகள், கருத்துரிமை, எழுத்திரிமை என்றேல்லாம் சொல்லிக் கொண்டு, எல்லா கூட்டங்களும் கிளம்பியிருக்கும். அதுவும் அந்த இந்தியன் முஸ்லிம் என்றால், வேறுமாதிரி திசைத் திரும்பியிருக்கும். ஆனால், இங்கிலாந்தே இப்பொழுது அமுக்கி வாசிக்கிறது.

 

வேதபிரகாஷ்

© 25-01-2014

 

 


[2] Mohammad Asghar, a British national of Pakistani origin, was arrested in 2010 in Rawalpindi for writing blasphemous letters, police said.

http://www.thenews.com.pk/Todays-News-13-28159-Briton-sentenced-to-death-for-blasphemy

[3] “Asghar claimed to be a prophet even inside the court. He confessed it in front of the judge,” Javed Gul, a government prosecutor, told AFP news agency.

http://www.bbc.co.uk/news/world-asia-25874580

[8] Maya Foa of Reprieve said: “The evidence is clear that he is unable to defend himself in court. “Worse still, he is currently being held in utterly unsuitable conditions in prison, and we are very concerned about his health.”

http://www.heraldscotland.com/news/home-news/mentally-ill-scots-grandfather-faces-death-penalty-in-pakistan.23265318

 

பாகிஸ்தானில் தேர்தல் – தலிபான், ரத்தம், குண்டுவெடிப்பு, இவற்றிற்கிடையில் வாக்குப் பதிவு நடக்கிறது!

மே 11, 2013

பாகிஸ்தானில் தேர்தல் – தலிபான், ரத்தம், குண்டுவெடிப்பு, இவற்றிற்கிடையில் வாக்குப் பதிவு நடக்கிறது!

who will be next prime minister of pakistan 2013பலத்த பாதுகாப்பில் தேர்தல் நடக்கிறது: பாகிஸ்தானில் தேர்தல் நடப்பது பலருக்கும் ஆச்சரியமாகத்தான் உள்ளது. நடந்த நாட்களில் குண்டுவெடிப்பு[1], வேட்பாளர்கள் கொலை, வன்முறை என்ற கொடுமைகளுக்கு மத்தியில் 11-05-2013 அன்று அங்கு தேர்தல் நடந்தது. தலிபான் அச்சுறுத்தலுக்காக ஆறு லட்சம் பாதுகாப்பு வீரர்கள், தேர்தலின் போது ஓட்டுப்போட நியமிக்கப்பட்டார்கள்[2]. 73,000 ஓட்டு சாவடிகள் இருந்தன, அதாவது ஒரு சாவடிக்கு 5-10 வீரர்கள் என்று காவல் இருந்தார்கள்.

quaid-e-azam-and-liaquat-ali-khan-was-the-prime-minister-smokingபாகிஸ்தானில் எல்லா முஸ்லீம்களும் முஸ்லீம்கள் இல்லை: பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக இருந்தால், எல்லா முஸ்லீம்களும் அங்கு சரிசமமாக நடத்தப் படுவதில்லை, ஏன் முஸ்லீமாகக் கூட கருதப்படுவடில்லை. சுன்னி / சன்னி முஸ்லீம்கள் தாம் உயர்ந்தவகள், அதற்கடுத்து ஷியா முஸ்லீம்கள். ஆனால், அவர்களும் பலமுறைத் தாக்கப் பட்டுள்ளார்கள், அவர்கள் மசூதிகள் தாக்கப்பட்டுள்ளன. பிறகு அஹ்மதியா[3], காதியான், பஹாய் போன்றோர் முஸ்லீம்களே இல்லை என்று விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்[4]. முஸ்லீம்-அல்லாவர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஆக ஓட்டுரிமை அவர்களுக்கு இல்லை[5]. அஹ்மதியர் ஓட்டுரிமைப் பிரச்சினைப் பற்றி அமெரிக்காவே வக்காலத்து வாங்கியுள்ளது[6].

Veero Kolhiபெண்கள் ஓட்டுரிமை, வாக்களிப்பு,  முதலிய பிரச்சினைகள்: வடமேற்கு பிராந்தியத்தில் பெண்கள் ஓட்டு போடமுடியுமா என்ற சந்தேகம் உள்ளது[7]. தலிபான்களின் ஆதிக்கம் இங்கு அதிகமாக இருப்பதால், பெண்கள் தைரியமாக வெளிவந்து ஓட்டுப் போடுவர்களா என்று தெரியவில்லை. போதாகுறைக்கு, பெண்கள் தேர்தலில் பங்கு கொள்வது ஜனநாயக நெறிமுறைக்கு எதிரானது என்ற பிரச்சாரம் நடந்துள்ளது. பிரச்சாரத் துண்டுகளும் சுற்றுக்கு விடப்பட்டுள்ளன[8]. இந்த தடவை 18-29 வயதுள்ள இளைஞர்கள் ஓட்டுப் போடலாம் என்றுள்ளதால், பாகிஸ்தானில் 42% இளைஞர்கள் ஓட்டாளர்களாக இருக்கிறார்கள்[9].

Nawaz vs Imranஅடுத்த பிரதம மந்திரி யார்: அடுத்த பிரதம மந்திரி யார் என கெட்டதற்கு[10], “நான் தான், ஏனெனில் இம்ரன் கானுக்கு அத்தகைய வாய்ப்பு என்றும் இருந்ததில்லை” என்று மௌலானா பசல்-உர்-ரஹ்மான், அமீலர் ஜமைத்-உலேமா-இ-இஸ்லாம் என்ற இயக்கத்தின் தலைவர் கூறியிருக்கிறாராம்[11]. இருப்பினும் நவாஸ் செரிப் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

Bindia Rana - transgender contest PAK-ele-2013முதல் முறையாக  திருநங்கை தேர்தலில் போட்டி: முதல் முறை, அலி / திருநங்கை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது[12]. பிந்தியா ரானா என்ற அந்த நபர் போட்டியிடுகிறார். நான் தோற்றாலும், வென்றாலும் உரிமைகளுக்காகப் போராடுவேன் என்கிறார். இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் அவர்கள் மிகவும் மோசமாக நடத்தப் படுவார்கள். தேர்தல் நேரங்களில் ஓட்டு வேட்டையின் போது ஆடவைப்பர்.

© வேதபிரகாஷ்

11-05-2013


[8] In an increasingly fraught and violent runup to the 11 May vote, leaflets are appearing stating that it is “un-Islamic” for women to participate in democracy.

[10] Amir Jamiat Ulema-e-Islam (JUI-F), Maulana Fazl-ur-Rehman said on 08-05-2013 it was likely that he becomes the next prime minister of Pakistan but the Pakistan Tehreek-e-Insaf Chief Imran Khan neither had any such chance before nor now

பங்களாதேசத்தில் லட்சக்கணக்கான அடிப்படைவாத முஸ்லீம்களின் ஊர்வலம், ஆர்பாட்டம் எதனைக் காட்டுகிறது?

ஏப்ரல் 7, 2013

பங்களாதேசத்தில் லட்சக்கணக்கான அடிப்படைவாத முஸ்லீம்களின் ஊர்வலம், ஆர்பாட்டம் எதனைக் காட்டுகிறது?

இஸ்லாமியநாடாக்கஅடிப்படைவாதிகளின்போராட்டம்: பங்களாதேசத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, அவதூறு சட்டத்தைத் திரித்து அமைத்து, இணைதளங்களில் இடுகையிடுகிறவர்களுக்கு தூக்குத் தண்டனை செல்லுபடியாகின்ற மாதிரி செய்ய வேண்டி ஆர்பாட்டம் நடத்தினர்[1]. இது அவர்கள் பட்டியல் போட்ட 13 கோரிக்கைகளில் ஒன்றாகும். “இஸ்லாமை தூஷிப்பவர்களுக்கும் தூக்கு”, “இஸ்லாமை விமர்சிப்பவனுக்கு தண்டனை” என்று ஆர்பரித்தனர். அவர்களது மற்ற கோரிக்கைகள், பின்வருமாறு[2]:

  1. அரசியல் நிர்ணய சட்டத்தில் அல்லாவின் மீதான முழுநம்பிக்கையை உறுதி செய்யப்படவேண்டும்[3].
  2. அஹ்மதியா போன்றவர்களை முஸ்லீம்கள் அல்ல என்று பிரகடனபடுத்த வேண்டும்.
  3. அந்நிய கலாச்சாரத்தை அறவே தடை செய்ய வேண்டும்[4].
  4. ஆண்கள்-பெண்கள் பொது இடங்கள், மற்ற இடங்களில் சேர்ந்து பேசுவதை, கூடுவதைத் தடுக்க வேண்டும்.
  5. எல்லா நிலைகளிலும் இஸ்லாமிய படிப்பைக் கட்டாயமாக்க வேண்டும்.
  6. பொது இடங்களில் சிற்பங்கள், சிலைகள் முதலியவை வைக்கக் கூடாது.
  7. ஊடகங்களில் இஸ்லாம் பற்றிய விமர்சனங்கள் இருக்கக் கூடாது.

இவர்களை “இஸ்லாமிஸ்டுகள்” என்று சொல்லப்படுகின்றனர். பற்பல இஸ்லாமிய மதப்பள்ளிகள், கல்லூரிகள், மதஸாக்கள் முதலியவற்றிலிருந்து சேர்ந்து ஹஃபேஜாத்-இ-இஸ்லாம் [Hefazat-e-Islam] என்ற அமைப்பின் கீழ் சனிக்கிழமை அன்று ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்தினர்[5]. அவர்கள் டாக்காவை நோக்கி வர ஆரம்பித்தனர். இரண்டு லட்சம் மக்கள் கூடியதாக போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்[6].

அடிப்படைவாதிகளை எதிர்க்கும் மிதவாதிகள்: இதை எதிர்த்து தலைநகர் டாக்காவில் 22-மணி நேர முழு அடைப்பு கோரி அழைப்பு விடுத்திருந்த மாணவர்கள் மற்ற மதசார்பற்றவர்கள், இந்த கூட்டத்தைக் கலைக்க முயன்றனர்[7].  “அடிப்படைவாதம் ஒழிக”, என்று அவர்கள் முழக்கம் இட்டனர். மதவாதம் ஒழிக” அடிப்படைவாத முஸ்லீம்களுக்கும் மற்ற முஸ்லீம்களுக்கும் இடையே கைகலப்பு, அடி-தடி ஏற்பட்டது. இதற்குள் போலீஸார், இஸ்லாமிஸ்டுகளை துரத்தியடித்தனர். அதற்குள் கடந்த 24-மணி நேரத்தில் ஏற்பட்ட கலவரங்களில் ஆளும் அவாமி லீக் கட்சியினர் ஜமாத்-இ-இஸ்லாமி ஆர்பாட்டக் காரர்களுடன் மோதியபோது இருவர் கொல்லப்பட்டனர்.  இதனால், இதுவரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 ஆகிறது[8].

அரசு எடுக்கும் நடவடிக்கைகள்: பங்களாதேச அரசு, நிச்சயமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பிடியில் சிக்குண்டுத் தவிக்கிறது என்று தெரிகிறது. 1971 போர் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை அளித்ததிலிருந்து, மதவாதிகள் இந்துக்களைக் கொல்வது என்பதலிருந்து, மற்ற மிதவாத முஸ்லீம்களை மிரட்டுவது, முதலிய வேலைகளில் இறங்கியுள்ளனர். வெளிநாட்டு உதவிகளால் வாழும் அரசு, தான் “செக்யூலார்ரென்றும் காட்டிக் கொள்ள முயல்கிறது. அரசு ஏற்கெனவே தடை உத்தரவை அமூல் படுத்தி, யாரும் உள்ளே நுழைய முடியாத அளவில் டாக்காவை தனிமைப் படுத்தினர். சபாங் சதுக்கத்தில், போர் குற்றவாளிகளுக்கு தண்டனை என்று ஆதரிப்பவர்கள் கூடி, இஸ்லாமிஸ்டுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போலீஸார் அவர்களையும் அப்புறப்படுத்தினர்.

இஸ்லாமிஸ்டுகள்மற்றும்செக்யூலரிஸ்டுகள்: இஸ்லாமிய, அரபு ஊடகங்கள் ஆர்பாட்டக் காரர்களை “இஸ்லாமிஸ்டுகள்” என்றும், ஐரோப்பிய ஊடகங்கள் எதிர்-ஆர்பாட்டக்காரர்களை “செக்யூலரிஸ்டுகள்” என்றும் குறிப்பிட்டனர். ஆனால், பங்களாதேசத்தில் “செக்யூலரிஸ்டுகள்” என்று யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், முன்பு, இந்துக்கள் குரூரமாக, கோரமாக, கொடுமையாகக் கொல்லப்பட்டதற்கு, தாக்கப்பட்டதகு, எதிர்ப்புத் தெரிவித்ததாக தெரியவில்லை. இந்திய ஊடகங்களுக்குக் கவலையே இல்லை. இப்பொழுதும் ஐ.பி.எல் மோகத்தில் மூழ்கியுள்ளது.

இது சம்பந்தமாக கீழ்கண்ட இடுகைகளையும் பார்க்கவும்:

  • 1971 போலவே இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன[9] – அமைதி கொடுக்கும் இஸ்லாம் இதுதான் போலும்!
  • ·         முஸ்லீம்களின் வெறியாட்டம்பங்களாதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டனர், வீடுகள் சூரையாடப்பட்டன, கோவில்கள் எரியூட்டப்பட்டன[10].
  • “இந்துவாக இந்நாட்டில் நாங்கள் வாழ்வதே பாவமாகிவிட்டது. ஓடிப்போகாமல் இருந்ததே பாவமாகி விட்டது” – இந்துக்களுக்கு எதிராக பங்காளதேசத்தில் தொடரும் குரூரக்கொலைகள், குற்றங்கள்[11].

வேதபிரகாஷ்

07-04-2013


[1] Hefajat-e-Islam, an Islamic group which draws support from tens of thousands of seminaries, organised the rally in support of its 13-point demand including enactment of a blasphemy law to prosecute and hang atheist bloggers.

[2] The demands included declaration of the Ahmadiyya Muslim sect as non-Muslim, a ban on free mixing of men and women, making Islamic education mandatory at all levels and no installation of any sculpture in any public place.

http://edition.cnn.com/2013/04/06/world/asia/bangladesh-blasphemy-protest/

[3] The group listed 13 demands, including reinstating “absolute trust and faith in the Almighty Allah” in the nation’s constitution, which is largely secular, and passing a law providing for capital punishment for maligning Allah, Islam and its Prophet Muhammad.

http://abcnews.go.com/International/wireStory/hardline-muslims-rally-bangladesh-amid-shutdown-18895209#.UWEgOqJTCz4

[4] The group’s other demands include declaring the minority Ahmadiya sect living in the country non-Muslims and banning “all foreign culture, including free mixing of men and women.”