யாசின் பட்டகல் முஸ்லிமா, முஜாஹித்தீனா, ஜிஹாதியா, தீவிரவாதியா – யார், அவன் பெயர் அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா அல்லது வேறெது – இப்படி கேள்விகளை எழுப்பும் நோக்கம் என்ன (4)
கர்நாடகத்திலிருந்து தப்பித்தது (2008): மும்பைப் பிரிவு போலீஸார், அவனைப் பிடிக்க பட்கலுக்கு வந்தது. ஆனால், அப்பொழுது உள்ளூர் போலீஸ்காரனால் உசார்படுத்தப் பட்டான். மும்பை குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர், அவன் வீட்டிற்க்கு வந்தபோது, பின் கதவு திறந்து கிடந்தது, அடுப்பில் கெட்டிலில் டீ கொதித்துக் கொண்டிருந்தது. ஆமாம், யாசின் தப்பித்து விட்டான்[1]. பிறகு ஏன் பெற்றோர் அவனிடத்தில் கேட்கவில்லை? போலீஸார் விளாவரியாக சொல்லியிருப்பார்களே?
தில்லியிலிருந்து தப்பித்தது (2008): “2008 ஆம் ஆண்டு தில்லியில் இருந்து தலைமறைவாகி மேற்கு வங்கத்தில் நடமாடிய யாசின் பட்கலை அம்மாநில காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். ஆனால், அவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாததால் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்”, என்று குறித்து மத்திய உளவுத் துறை உயர் அதிகாரி கூறியுள்ளாராம்.
2009ல் தப்பித்தது[2]: அனைத்துலக ரீதியில் நடந்து வரும் கள்ளநோட்டு கும்பலைப் பிடித்தபோது, இவனும் சிக்கிக் கொண்டான். ஆனால், தன்னை தர்பங்காவைச் சேர்ந்த “மொஹம்மது அஸ்ரப்” என்று சொல்லிக் கொண்டு தப்பித்து விட்டான். தான் வங்காளதேசத்திலிருந்து, வெறும் பார்சலைத் தான் கொண்டு வருவதாகவும், உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியாது என்றும் நாடகம் ஆடினான். அதாவது நேபாளத்திலிருந்து, வங்காளதேசம், அங்கிருந்து தில்லி என்று சென்று வந்து கொண்டிருக்கும் போது கூட யாரும் கண்டு கொள்ளவில்லை. ஜெயிலில் ஒரு மாதம் இருக்கும் போது பெயிலில் வெளியே வந்தான். பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்ற அவன் பிப்ரவரி 2010ல் புனேவிற்கு வந்து, ஜெர்மன் பேக்கரியில் குண்டிவெடிப்பு நடத்தினான், என்றும் சொல்கிறார்கள்.
சென்னையில்அப்துல்ரகுமான்வீட்டிலிருந்துயாசின்தப்பியது (2011): இதேபோல, 2011 ஆம் ஆண்டு நவம்பரில் சென்னை சேலையூர் பகுதியில் அப்துல் ரகுமான் என்பவரது வீட்டில் யாசின் பட்கல் பதுங்கியிருப்பதாக மத்திய உளவுத் துறைக்குத் தகவல் கிடைத்தது. அந்த வீட்டுக்கு மத்திய உளவுத் துறை, தில்லி போலீஸ், சென்னை போலீஸ் அதிகாரிகள் செல்வதற்குள் அங்கிருந்து யாசின் பட்கல் தப்பித்து விட்டார்’ என்று உள்துறை உயரதிகாரி கூறினார். அப்படியென்றால், கர்நாடக போலீஸார் மாதிரி, இங்கும் யாரோ எச்சரிக்கைக் கொடுத்து விட்டார்கள் போலும்! சரி, யார் இந்த சேலையூர் அப்துல் ரகுமான், அவர் எப்படி பட்கல்லுக்கு இடம் கொடுத்தார் என்ற விவரங்கள் ஊடகங்கள் தெரிவிக்கவில்லை. மற்ற விசயங்களுக்கு பாய்ந்து க்ஷ்செல்லும் ஊடகங்கள், இதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை, காட்டவில்லை. அதாவது, அந்த அப்துல் ரகுமான் “ஸ்லீப்பர்-செல்” வகையில் வருகிறாரோ என்னமோ?
2012ல் தில்லியிலிருந்து பீஹாருக்குத் தப்பி சென்றது: 2011 மும்பை குண்டுவெடிப்பிற்கு பிறகு, தில்லிக்குத் தப்பி சென்றான். அங்கு தன்னை லக்னௌவைச் சேர்ந்த இம்ரான் அஹமது [Imran Ahmed] என்று அறிமுகப்படுத்திக் கொண்ண்டு, ஜெய்தா இர்ஸத் கான் [Zahida Irshad Khan] என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டான். நவம்பர் 2012ல் தில்லி போலீஸார் வெடிமருந்து தயாருக்கும் தொழிற்சாலை வைத்ததற்காக ஆறு இந்தியன் முஜாஹித்தீன் ஆட்களை பிடித்தபோது, எச்சரிக்கை செய்ததால், பீஹாருக்குத் தப்பிச் சென்றான்[3]. அந்த ஆறுபேரில் இவனது மாமனார் மொஹமது இர்ஸத் கானும் [Mohammed Irshad Khan] அடக்கம். அங்கிருந்துதான், எல்லையைக் கடந்து சென்றுள்ளான். இவ்விசயத்தில் மும்பை மற்றும் தில்லி போலீஸாருக்கு இடையில் மனஸ்தாபம், கோபம், சண்டை முதலியன உள்ளன[4].
யாசினுக்கு மனைவி இருப்பதே எங்களுக்குத் தெரியாது: யாகூப் சித்திபாபா, யாசினின் மாமா, அவனுக்கு திருமணம் ஆனது, மனைவி இருப்பது என்பதெல்லாம் தெரியாது என்கிறார்[5]. செய்திகளினின்று தான் அவருக்கு தெரியவருகிறதாம்! அதேபோல, ஜெய்தா குடும்பத்தாருக்கு யாசினின் பின்னணி தெரியாதாம். அஞ்சர் ஹுஸைன் என்ற பெயரில் ராஞ்சியிலிருந்து பாஸ்போர்ட் பெற்றிருக்கிறான்[6]. 2008ல் உடுப்பியில் தங்கியிருக்கும் போது, அஹமதாபாத், தில்லி குண்டுவெடிப்புகளுக்கு வெடிப்பொருட்களை அனுப்பியிருக்கிறான். அப்பொழுதுதான், மதானியையும்ம் சந்தித்துள்ளதாகத் தெரிகிறது[7]. இதிலிருந்து ஒட்டு மொத்தமாக அவர்களது குடும்பத்தினர், தங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று, தப்பித்துக் கொள்ள அல்லது யாசினை தப்பிக்கவைக்கப் பார்க்கின்றனர் என்று தெரிகிறது.
யாசின்தில்லியில்உருவாக்கியஆயுதங்கள்தொழிற்சாலை: தில்லியில் நங்லோய் என்ற இடத்தில் பலவித ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை வைத்திருந்ததை நவம்பர் 2012ல் போலீஸார் கண்டுபிடித்தனர். லேசான மிஷன் துப்பாக்கி மற்றும் ராக்கேட்டுகளை ஏவும் கருவிகள் முதலியவற்றை தயாரிக்கும் அளவில் அங்கு இயந்திரங்களை (லேத், டிரில்லிங், போரிங் முதலியன) வைத்திருந்தான்[8]. அவன் 18-வயதாக இருக்கும் போதே, 9/11 தாகுதலுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானில் நேடோ படைகளை எதிர்த்து போராட வேண்டும் என்று தீர்மானித்தானாம்[9]. அதைத்தவிர, ரெயிடுக்குப் போனபோது, ஆயுதங்களின் பகுதிகள், உதிரிகள், பாகங்கள் முதலியஅ கண்டெடுக்கப் பட்டன. அப்பொழுதே பெயில் இல்லாத கைது வாரண்ட் பிறப்பிக்கப் பட்டது. பட்கலில் FIRம் போடப்பட்டது. ஆனால், தப்பிச் சென்றுவிட்டான்[10]. அதாவது ஜிஹாதி போதனைகள் எப்படி அவனை அந்த வயதிலேயே மனத்தை இருக்கி, தீவிரவாதியாக மாற தீர்மானிக்கும் என்ற போக்கை அறிய முடிகிறது. இப்பொழுது கூட, குண்டுவெடிப்புகளைப் பற்றி விசாரித்தபோது, “ஆமாம், குண்டுகள் வெடிக்கப்பட்டன, அதற்கென்ன இப்பொழுது, அவை அப்படித்தான் நடந்தன, அதில் புதியதாக என்ன இருக்கிறது”, என்று கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் பதில் அளித்தானாம்[11].
ரம்ஜான்பண்டிகைக்குமனைவிக்குரூ.1 லட்சத்தைபரிசாகஅனுப்பியயாசின்பட்கல்: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்தியாவில் உள்ள தனது மனைவிக்கு ரூ.1 லட்சத்தை பரிசாக அனுப்பியுள்ளார் பயங்கரவாதி யாசின் பட்கல்[12]. எந்த மனைவிக்கு (பட்கல் அல்லது தில்லி) அனுப்பப் பட்டது என்று தெரியவில்லை. இதன் மூலம் அவரது செயல்பாடுகளைக் கண்காணித்து வரை கைது செய்ய போலீஸாருக்கு உளவுத் துறை உதவியது. அவன் தனது மனைவிக்கு வங்கி மூலம் ரூ.1 லட்சம் பணம் அனுப்பியுள்ளார். இதனைக் கண்காணித்த இந்திய உளவுத் துறை, மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபடுவதற்காக பட்கல் இந்தியாவுக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது என்பதை சரியாகக் கணித்தது. இதன்படியே நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த அவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
நேபாள எல்லையில் என்ன நடக்கிறது?: நேபாள எல்லையில் தொடர்ந்து இரண்டாவது தீவிரவாதியைப் பிடித்துள்ளதில், சில கேள்விகள் எழுகின்றன. பொதுவாக நேபாளம் அனைத்துலக தீவிரவாதிகள், தப்பியோடும் குற்றவாளிகள், தேடப்பட்டு வரும் குற்றவாளிகள், முதலியோருக்கு மறைந்து வாழ்வதற்கு சிறந்த இடமாக இருந்து வந்துள்ளது. கம்யூனிஸ்டுகள் ஆட்சி வந்தபிறகு, ஊழல் கட்டுக்கடங்காத நிலையில் உள்ளது. பணம் கொடுத்தால் யாரும் கண்டுகொண்டாத நிலையுள்ளது. இதனை குற்றவாளிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். குறிப்பாக கள்ளநோட்டுகள், போதை மருந்து, விபச்சாரம் முதலியவற்றில் தாராளமாக ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும், நேபாளம் இந்தியாவின் நிலையை மதிக்கிறது என்று சொல்கிறது[13]. ஒரு கோணத்தில் பார்க்கும் போது, உலகத்திலேயே ஒரே “இந்து நாடு” என்று சொல்லப்பட்ட நேபாளம், கம்யூனிஸ்ட் நாடான பிறகு, இந்தியா ஒட்டு மொத்தமாக எதிரளல்லது இந்தியாவிற்கு சாதகமாக இல்லாத நாடுகள் சூழ்ந்துள்ள நிலை ஏற்பட்டுவிட்டது. குட்டி நாடுகள் எல்லாம், இந்தியாவை எதிர்த்து வருகின்றன, இந்தியாவிற்கு பாதகமான செயல்களில் ஈடுபட்டுள்ளன. இங்கும் வெளியுறவு மந்திரிகள் என்பவர்கள் இந்தியாவின் நிலைக்கு சாதகமாக வேலை செய்கிறார்களா என்று பார்த்தால், இல்லை என்றுதான் உள்ளது.
யாசின்பட்கல்புராணம் (தொகுத்தது): 1983ம் ஆண்டு கர்நாடக மாநிலம், வடகனரா மாவட்டம் மங்களூர் அருகே உள்ள சிறிய கடற்கரை நகரமான பட்கலில் பிறந்தவன் யாசின் பட்கல். இவனது இயற்பெயர் முகமது அகமது சரார் சித்திபாபா. இவரது தந்தை தொழிலதிபர் என்பதால் அடிக்கடி வெளியூர் மற்றும் வெளிநாடு சென்றுவிடுவார். இதனால் தனது தாயுடன் வசித்த இவன் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பட்கல் நகரத்திலேயே முடித்தான். பொறியியல் படிப்பை முடித்த இவன் தொழிலில் தந்தைக்கு உதவுவதற்காக சவுதி அரேபியாவிற்கு சென்றான். அங்கு தந்தைக்கு சரிவர உதவாமல் மீண்டும் இந்தியாவிற்கு திரும்பி வந்தான். இதன் பின்னர் பட்கல் பகுதியில் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி போலீசார் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்[14]. ஆனால் அங்கிருந்து தப்பிய அவன் புனே பகுதியில் உள்ள அவனது பால்ய நண்பன் இக்பால் இஸ்மாயில் ஷாபந்த்ரி என்பவனுடன் சேர்ந்து யுனானி மருத்துவ பயிற்சி பெற்று வந்தான்.
பட்கல் சகோதரர்கள் குண்டுகளை தயாரித்து வெடித்தது (தினகரன்): இதனிடையே இக்பால் மதபோதகராக மாறினான். சிறிது காலத்திற்கு பிறகு இக்பாலும் அவரது சகோதரரான ரியாஸ் இஸ்மாயில் என்பவரும் சேர்ந்து ஒரு நடமாடும் முஸ்லிம் இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கினர். நாளடைவில் இந்த அமைப்பை லஷ்கர்-இ-தொய்பாவுடன் இணைத்து தீவிரவாத செயல்களில் ஈடுபட தொடங்கினார்கள். இந்த அமைப்பில் சேர்ந்த யாசின் பட்கல் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட தொடங்கினான். இதன் பின்னர் தான் இந்திய முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பை தொடங்கி கடந்த 2008 முதல் பல்வேறு மாநிலங்களில் வெடிகுண்டுகள் வைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டான். தனது பொறியியல் நுண்ணறிவால் இவனே வெடிகுண்டுகளை தயாரித்து பல்வேறு மாநிலங்களில் வெடிக்கவும் வைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தான் பிறந்த மாநிலமான கர்நாடகாவின் சட்டம் , ஒழுங்கை சீர்குலைக்க 2008 மற்றும் 2010ம் ஆண்டுகளில் மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் மூளையாக செயல்பட்டுள்ளான். மேலும் 2012ம் ஆண்டு புனேயில் உள்ள ஜெர்மன் பேக்கரி வெடிகுண்டு சம்பவத்திலும் தொடர்பு கொண்டிருந்தான்.
இந்தியன்முஜாஹித்தீனின் குண்டுவெடிப்புகள் (தினகரன்): பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் நிதி உதவியுடன் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு. இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிமிக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த புதிய அமைப்பு தொடங்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த யாசின் பட்கல், தனது சகோதரர்களான ரியாஸ் மற்றும் அப்துல் சுபான் குரேஷி ஆகியோருடன் சேர்ந்து இந்த இயக்கத்தை தொடங்கினான். புணேவில் ஜெர்மன் பேக்கரியில் 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் யாசின் பட்கல், ரியாஸ் பட்கல் உள்ளிட்டோர் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது. வெளிநாட்டினர் உள்பட 17 பேர் அந்த சம்பவத்தில் உயிரிழந்தனர். இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக 2010 ஆம் ஆண்டில் இந்தியாவும் 2011 ஆம் ஆண்டில் அமெரிக்காவும் அறிவித்தன. அதைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி மும்பையில் உள்ள மேற்கு தாதர், ஜாவேரி பஜார், காவேரி ஹவுஸ் பகுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் யாசின் பட்கல், அவரது கூட்டாளிகள் தஹசீன் அக்தர் வாசிம் அக்தர் ஷேக் (23), அசதுல்லா அக்தர் (26), வகாஸ் என்கிற அகமது (26) ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த மூவர் குறித்தும் தகவல் தெரிவிப்போருக்கு தலா ரூ. 10 லட்சம் பரிசுத் தொகையை மகாராஷ்டிர மாநில பயங்கரதவாதத் தடுப்புப் படை அறிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி தஹசீன் நீங்கலாக மற்ற மூவரும் மும்பையில் உள்ள முக்கிய சாலையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக வழக்கு நிலுவையில் உள்ளது. தில்லி உயர் நீதிமன்ற வளாக வெடிகுண்டு தாக்குதல் உள்பட மூன்று பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களில் யாசின் பட்கல் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவரது சகோதரர் ரியாஸ் பட்கலும் இக்பால் பட்கலும் தற்போது பாகிஸ்தானின் கராச்சியில் வசித்து வருவதாக மத்திய உளவுத் துறை சந்தேகிக்கிறது.
என்.ஐ.ஏகுற்றப்பத்திரிகை: கடந்த வாரம் தில்லி குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதில் யாசின் பட்கலுக்கு உள்ள பயங்கரவாதத் தொடர்புகளை அந்த அமைப்பு பட்டியலிட்டுள்ளது. தில்லி, பிகாரின் தர்பங்கா, மும்பை, கர்நாடகத்தின் பட்கல், ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் உள்ள கூட்டாளிகள் மூலம் அங்குள்ள இளைஞர்களுக்கு “ஜிஹாத்’ (புனிதப் போர்) பயிற்சி அளிக்க யாசின் பட்கல் மூளையாக செயல்பட்டான்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 100 பேருக்கு தீவிரவாத பயிற்சி அளித்ததாகவும் இதற்காகவே தாம் நேபாளத்தில் 6 மாதம் தங்கியிருந்ததாகவும் அந்த வாக்குமூலத்தில் பட்கல் கூறியிருக்கிறான். அதே நேரத்தில் புத்த கயாவில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் தங்களுக்கு தொடர்பில்லை என்று பட்கல் தெரிவித்திருக்கிறான்[15].
© வேதபிரகாஷ்
01-09-2013
[2] In 2009, the West Bengal police cracked an international fake currency racket operating via West Bengal and had even arrested Bhatkal but he managed to escape from there too. Bhatkal identified himself as Mohammed Ashraf from Darbhangadistrict in Bihar. He told the police that he was a ‘courier’ and was asked to ‘receive’ a consignment of fake currencies from Bangladesh. He was in jail for a month and later released on bail. Bhatkal managed to escape to Pakistan via Dubai only to return in February 2010 to Pune to carry out the blast at German bakery.
http://www.thehindu.com/news/national/he-was-lucky-three-times/article5072470.ece?ref=relatedNews
[10] The official, who has spent a significant time of his career investigating various terror cases across the country, said Bhatkal is “highly motivated” and “very ambitious” as he had set up a weapons manufacturing unit in Nangloi area of Outer Delhi way back in 2011. “He wanted to manufacture rocket launchers and LMGs (Light Machine Guns) in Delhi. This is evidence enough of how ambitious he is,” the official said. The Special Cell of Delhi police had busted an illegal arms factory located in Meer Vihar area of Nangloi in Outer Delhi in November, 2011. “This ordinance unit was first of its kind as it was equipped with machinery and the capacity to manufacture not only conventional arms but the ammunition required for them as well as fabrication of LMG and rocket launchers,” the official said. An FIR was filed against Bhatkal in the case on November 22, 2011 and later a non-bailable warrant was also issued against him for setting up the factory. The unit had elaborate equipment like moulding machine, lathe machine, cutting machine, assembly drilling machine and buffing/grinding machine besides explosives and iron pieces to be parts of pistols, carbines, rocket launchers among others, he said. Read more at: http://indiatoday.intoday.in/story/yasin-bhatkal-indian-mujahideen-9-11-attacks-nato-forces-afghanistan/1/304945.html
அண்மைய பின்னூட்டங்கள்