Archive for the ‘அல்-இமாம் அலி அல்-அரிதி’ category

இந்தியன் முஜாஹித்தீன் முகேஷ் அம்பானியை மிரட்டி அனுப்பிய கடிதம்!

பிப்ரவரி 28, 2013

இந்தியன் முஜாஹித்தீன் முகேஷ் அம்பானியை மிரட்டி அனுப்பிய கடிதம்!

தொழிலதிபருக்கு மிரட்டல் கடிதம் ஏன்?: முன்னர், இந்திய முஜாஹித்தீன் இ-மெயில்கள் மூலம் டிவி-செனல்களுக்கு வெடிகுண்டு வைத்து மக்களைக் கொன்றதற்கு பொறுப்பேற்று அனுப்பி வைத்துள்ளது. இம்முறை கடிதம் அனுப்பியது ஆச்சரியமாக உள்ளது. அப்படியென்றால், ரதன் டாடாவிற்கும் மிரட்டல் கடிதம் அனுப்பியிருக்க வேண்டும். இல்லை, மற்ற எல்லா தொழிலதிபர்களுக்கும் மிரட்டல்கள் வந்திருக்க வேண்டும். இப்பொழுதுதான், ஐரோப்பிய குழுமம், மோடி மீதான தடையை நீக்கிக் கொண்டு, வியாபார ரீதியாக பேச்சுகள் தொடங்கியுள்ளன. ஆகவே, இந்திய பொருளாதார முன்னேற்றத்தை அல்லது குஜராத்தின் வளர்ச்சியைத் தடுக்க இம்மாதிரியான மிரட்டல் வந்திருக்க வேண்டும்.

 

இந்தியன் முஜாஹித்தீன் முகேஷ் அம்பானியை மிரட்டி அனுப்பிய கடிதம்: பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் கடிதம் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்[1].  ஒரு அடையாளம் தெரியாத மர்ம நபர் குரியர் மூலம் இந்த கடிதம் மும்பை ரிலையன்ஸ் அலுவலகத்துக்கு வந்தது, அதாவது, செக்யூரிடியிடம் 24-02-2014 அன்று கொடுக்கப்பட்டது[2]. 26-02-2013 அன்று எஸ்.பி. நந்தா, ரிலைன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், துணைத் தலைவர், போலிஸ் கமிஷனர் சத்யபால் சிங்கை சந்தித்து புகார் அளித்துள்ளார்[3]. அதைத் தொடர்ந்து அவருக்கு பாதுகாப்புக் கொடுக்கப்பட்டுள்ளது[4]. கடிதம் கொடுத்து சென்றவரையும் தேடி வருகிறார்கள்.

 

கடிதத்தில் என்ன எழுதியிருந்தது?: வெள்ளைக் காகிதத்தில் எழுதப்பட்ட அதில் –

  1. குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியை ஆதரிப்பது முஸ்லீம்களை அவமதிப்பது போன்றது
  2. குஜராத்தில் முதலீடு செய்வதை நிறுத்தி கொள்ளாவிட்டால் முகேஷ் அம்பானியையும்,
  3. அவரது 27 மாடி ஆன்டில்லா – வீட்டையும் தாக்குவோம் என்றும்,
  4. ஏனெனில் அது வக்ப் சொத்தை அபகரிக்கப் பட்டுக் கட்டப்பது என்பதால் (Accusing him of grabbing the Waqf Board property at Altamount Road to build his house)
  5. தங்களது கூட்டாளியான முஹம்மது டேனிஷ் அன்சாரி (Mohammed Danish Ansari) என்பவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

 

டேனிஷ் என்பவன் யார்?: டேனிஷ் என்பவன் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது ஏனெனில், அதே பெயரில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

  1. டேனிஷ் முஹம்மது அன்சாரி[5] தர்பங்கா, பீகாரைச் சேர்ந்தவன். பகல் பாகிஸ்தானுக்குத் தப்பிச் செல்வதற்கு முன்னர், அவனிடத்தில் தங்கியிருந்தான்[6]. தீவிரவாதி யாஸின் பட்கலுக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஜனவரியில் கைது செய்யப்பட்டான்.
  2. மற்றும் 2008 அகமதாபாத் வெடிகுண்டு[7] குற்றங்களுக்காக இன்னொரு டேனிஸ் கைது செய்யப்பட்டுள்ளான்.
  3. இன்னொருவன் டேனிஷ் ரியாஸ் அல்லது சையது அஃபாக் இக்பால் என்பதாகும்.

 

இக்கடிதம் போலியா, உண்மையா?: இக்கடிதம் போலியாக இருக்கும் என்றாலும்[8], மிரட்டல் கடிதம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இக்கடிதம் உண்மையென்றால், தனிப்பட்ட நபருக்கு, அனுப்பிய முதல் கடிதம் இதுவாகத்தான் இருக்க வேண்டும், ஏனனில் இந்தியன் முஜாஹித்தீன் அவ்வாறு முன்னர் யாருக்கும் கடிதம் அனுப்பியது கிடையாது. இருப்பினும், தேசிய புலனாவுக் கழகமும் இதைப் பற்றி விசாரித்து வருகிறது[9]. தீவிரவாத எதிர்ப்புப் படையும் இதனை ஆய்ந்து வருகிறது, ஏனெனில் கடந்த வெடிகுண்டு வெடிப்புகளில் பொறுப்பேற்று ஐந்து முறை டிவி-செனல்களுக்கு இ-மெயில்கள் அனுப்பியுள்ளதை எடுத்துக் காட்டுகிறது[10].

 

© வேதபிரகாஷ்

28-02-2013


[3] On Tuesday, Reliance vice-president SP Nanda filed a police complaint after meeting with police commissioner Satyapal Singh.

[5] The letter also did not mention the full name of the IM operative in custody. Three people of the same name were arrested in various cases, but police believe the demand is for the release of Mohammed Danish Ansari who was arrested in January for giving shelter to the Bhatkal brothers.

[7] The police said the Danish, whose release is demanded in the letter, is Danish Riyaz alias Syed Afaque Iqbal, who was arrested for his role in the 2008 Ahmedabad blasts.

Read more at:http://indiatoday.intoday.in/story/indian-mujahideen-narendra-modi-mukesh-ambani/1/251980.html

[10] Anti-terrorism squad (ATS) sources said the IM has in the past sent at least five emails to news channels claiming responsibility for blasts.

http://timesofindia.indiatimes.com/india/Cops-tighten-Mukesh-Ambanis-security-after-threat/articleshow/18720646.cms

பெண் ஜிஹாதிகள் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த லஷ்கர்-இ-தொய்பா சிறப்பு முகாம்களில் பயிற்சி!

ஜனவரி 4, 2012

பெண் ஜிஹாதிகள் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த லஷ்கர்-இ-தொய்பா சிறப்பு முகாம்களில் பயிற்சி!

 

இந்தியாவில் தாக்குதல் நடத்த பெண்கள் பயங்கரவாதப் படை[1]: இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்காக 21 பெண்களைக் கொண்ட புதிய குழுவை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு உருவாக்கி வருவதாக இந்தியா ராணுவ வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை (03-01-2012) தெரிவித்தன[2]. ஐந்தாண்டுகள் முந்தைய சமாச்சாரம் என்றாலும், மறுபடியும் இப்பொழுது ஏதோ புதிய செய்தி போல இப்பொழுது வருவது வியப்பே!

 

லஷ்கர்-இ-தொய்பா சிறப்பு முகாம்களில் பயிற்சி! இந்தக் குழுவுக்கு துக்தரீன்-இ-தொய்பா (இந்தியாவிற்கு துக்கத்தைத் தரப்போகிறார்கள் போல) எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் காஷ்மீரில், திவாலியா என்ற இடத்தில் (முசபராபாதிற்கு அருகில்) இந்தக் குழு இயங்கி வருவதாகவும் அதனை லஷ்கர் அமைப்பு பயிற்சி கொடுப்பதாகவும் தெரிய வருகிறது[3]. இங்கு பெண்களுக்காக பிரத்யேகமான தீவிரவாத பயிற்சிப் பள்ளி இருக்கிறது[4]. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கிவரும் 42 பயங்கரவாத பயிற்சி முகாம்களில் பெண்கள் பயிற்சி பெற்று வருவதாக ஏற்கெனவே கூறப்பட்டு வந்தது[5].

 

தற்கொலைப் படையில் பெண் ஜிஹாதிகள்: ஐந்தாண்டுகளுக்கு முன்பே, பாதுபாப்பு அதிகாரிகளுடன் போரிட்டு தாக்குதலில் இடுபட்டவர்களின் சடலங்களை பார்த்தபோது, இளம்பெண் இருப்பதைப் பார்த்து இந்த உண்மை தெரிய வந்தது. இங்கு பயங்கரவாதப் பயிற்சி பெறும் பெண்கள் வேறு நாடுகளின் வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவத் திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  குறிப்பாக யூரி என்ற எல்லைப் பகுதிக் சவழியாக இந்தியாவில் நுழைந்து தாக்குதல் நடத்தப் போவதாக தெரிய வந்துள்ளது[6]. பெண்களைக் கொண்ட பயங்கரவாதக் குழுவை உருவாக்க வேண்டும் என்பது லஷ்கர் அமைப்பின் உயர்நிலைத் தலைவர்கள் மற்றும் மும்பை பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய ஷகியூர் ரெஹ்மான லக்வியின் நீண்டகாலத் திட்டமாகும். பல முக்கியத் தளபதிகள் கொல்லப்பட்டுவிட்டதால், காஷ்மீர் பகுதியில் அந்த அமைப்புக்கு இப்போது போதிய வலிமை இல்லை என்றும் கூறப்படுகிறது. காஷ்மீரை இந்தியாவிலிருந்து விடுதலை செய்து பாகிஸ்தானுடன் இணைப்பது இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். இதைத் தவிர புல்வாமா முதலிய பகுதிகளில் உஸ்மான் பாய் அல்லது சோடா ரஹ்மான் என்பவனின் கீழ் இளைஞர்கள் தீவிரவாதத்திற்கு சேர்க்கப்பட்டு வருவதாக தெரிகிறது[7].

 

வேதபிரகாஷ்

04-01-2012


[7]

இஸ்லாத்தில் மசூதிகள் இடிக்கப் படுவதேன்?

செப்ரெம்பர் 4, 2010

இஸ்லாத்தில் மசூதிகள் இடிக்கப் படுவதேன்?

இஸ்லாத்தில் மசூதிகள் இடிக்கப் படுவது சாதாரண நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. அதாவது, வழிபாடு / நமாஸ் செய்வதற்கு ஒரு இடம் இருக்கவேண்டும், அது எந்த இடமாக வேண்டுமானாலும் இருக்கலாம். இருப்பினும் வசதிற்காக மசூதிகள் கட்டப்பட ஆரம்பித்தன. ஆகவே, சம்பிரதாயப்படி கட்டப்படாத மசூதிகள், சட்டத்திற்கு புரம்பாக / விரோதமாகக் கட்டபட்ட மசூதிகள், பிழையாக கட்டபட்ட மசூதிகள், சமாதிகளுக்கு மேல் கட்டபட்ட மசூதிகள், உருவ வழிப்பாட்டை அல்லது தனிநபர் வழிபாட்டை ஊக்குவிக்கும் வகையில் கட்டபட்ட மசூதிகள்,…………….முதலியவற்றை, இஸ்லாம் நாடுகளே இடித்துத் தள்ளுகின்றன. சில நேரங்களில் மதகுருமார்கள் எதிர்ப்புத் க்தெரிவித்தாலும், அத்தகைய இடிப்பு வேலைகள் சட்டமுறைப்படி நந்துகொண்டுதான் இருக்கிறது.

பாகிஸ்தானில் சட்டத்திற்கு விரோதமாகக் கட்டபட்ட மசூதி இடிக்கப்பட்டது[1] (02-08-2010): லாஹூரில், ஒரு ஜிஹாதி கூட்டம் ஒரி இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு, மசூதி கட்ட ஆரம்பித்தது. ஆனால், புகாரின்படி ஆய்ந்தபோது, இம்திஸாம் இலாஹி ஜஸீர் என்பவனால், நீதிமன்றத்திலிருந்து அனுமதி ஆணை வாங்கியதாக காட்டப்பட்ட ஆவணம் பொலியானது / கள்ள ஆவணம் என்றதால், போலீஸார் பாதுகாப்புடன் அங்கு வந்த கட்டப்பட்ட மசூதியை இடித்தது அல்லாமல், அங்கிருந்த ஆட்களையும் கைது செய்தனர்.

இதே மாதிரி 70 மசூதிகள் உடைக்கப்பட்டனவாம்: ஜூன் 2004ல் தீமானித்தது படி, சட்டத்திற்கு விரோதமாக இஸ்லாமாபாதில் கட்டப் பட்டுள்ள 70 மசூதிகளை இடிக்க நகர நிர்வாகம் (ICT administration) அனுமதி கொடுத்தது[2].

பிழையாகக் கட்டப் மசூதி இடிக்கப்பட்டது: வடக்கு மெதினாவில் உள்ள அல்-பர்மவியாஹ் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதி 03-09-2010 அன்று உடைக்கப்பட்டது. இந்த பழைய மசூதி தவறுதலாகக் கட்டப் பட்டிருப்பதனால், இஸ்லாம் மதத்திற்கான விஷயங்களை பார்த்துவரும் முஹம்மது அல்-அமீன் பின் கத்தாரி என்பவரின் ஒப்புதலோடு இடிக்கப்பட்டது[3].

சட்டத்திற்கு விரோதமாகக் கட்டபட்ட மசூதி பாதி இடிக்கப்பட்ட பிறகு நிறுத்தப்பட்டது[4]: அகர்பெய்ஜானில், பகு என்ற இடத்தில் சட்டத்திற்கு விரோதமாகக் கட்டபட்ட மசூதி ஒன்று இடிக்கப்படவேண்டும் என்று மாவட்ட நீதிமன்றம் ஆணையிட்டது, பிறகு அதனை உச்சநீதி மன்றமும் உறுதி செய்தது. அதன்படி அரசு அதனை உடைக்க ஆரம்பித்தது. பாதி உடைந்த நிலையில், இரானின் மதகுருமார்கள் தடுத்ததால், வேலை இப்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது.

சட்டத்திற்கு விரோதமாகக் கட்டபட்ட மசூதி[5] (20-08-2010): தென்னாப்பிரிக்காவில், லெனாசியா என்ற இடத்தில் தொழுகை புரிவதற்காக, ஒரு இடம் குத்தகைக்கு / நெடுங்கால வாடகைக்காகக் (லீஸ்) கொடுக்கப் பட்டது. ஆனால், முஸ்லீம்கள் அனுமதியின்றி, சட்டத்திற்கு புரம்பாக, அங்கு ஒரு மசூதியைக் கட்டியுள்ளனர். அதற்குள் குத்தலைக் காலம் முடிந்து விட்டதால், அரசாங்கள், சட்டத்திற்கு விரோதமாகக் கட்டபட்டுள்ள அந்த மசூதியை அகற்ற ஆணையிடப்பட்டுள்ளது.

ஆண்களும்-பெண்களும் சேர்ந்து சுற்றுவதாக இருப்பதால் மச்சுதி இடிக்கப்படவேண்டும்: மக்காவில் இருக்கும் மசூதியை இடித்துவிட்டு, ஆண்கள்-பெண்கள் கலக்காவண்ணம், ஒரு புதிய மசூதி கட்டப்படவேண்டும் என்று,  செயிக் அப்துக் ரஹ்மான் அல்-பராக் என்ற முஸ்லீம் மதக்கருக்கள் சொல்லியுள்ளார். காபவைச் சுற்றி வரும் போது ஆண்கள்-பெண்கள் சேர்ந்து சுற்றுவதை தவிக்க அவ்வாறு செய்யப்படவேண்டும் என்பது இவரது வாதம்.  அப்படி புதியதாகக் கட்டப்படும் மசூதி 10, 20, அல்லது 30 அடுக்குகள் இருக்கலாம். இப்பொழுதுள்ள மசூதி மூன்று மாடிகளைக் கொண்டதாகவுள்ளது[6]. ஆனால், இதை மறுத்தும் கருத்துகள் வந்துள்ளன[7]. அதாவது அவர் சொல்கின்றபடி, மசூதியை இடிக்கவேண்டிய அவசியம் இல்லை, அப்படி சொல்வதற்கும் அவருக்கு அதிகாரம் இல்லை என்ற மற்ற பண்டிதர்கள் சொல்கின்றனர்.

முஹம்மது நபி 28 வருடங்களாக வாழ்ந்ததாகக் கருதப் பட்ட வீடு செப்டம்பர் 2005ல் இடிக்கப்பட்டது[8].

அதைத் தவிர அல்-இமாம் அலி அல்-அரிதி என்ற அல்-மம் அலி பின் அல்-தாலிப் என்பவருடைய பேரனின் மசூதி, அவரது சமாதியின் மேல் கட்டப்பட்டிருந்ததால், நான்கு வருடங்களுக்கு முன்பு (2006?) இடிக்கப்பட்டது[9].

சவுதி அரேபியாவில் முஹமது நபியின் மசூதி இடிக்கப்பட்டது: கட்டுமான வசதிகள், சாலைப் போக்குவரத்து முதலிய வசதிகளுக்காக, சவுதி அரேபிய அரசு, முஹப்ம்மது நபியின் மசூதியை இடித்துள்ளார்கள். மேலும், இஸ்லாத்தில், சமாதிகளுக்கு மரியாதை செல்லுத்த்துதல், வணங்குதல், வழிபாடு செய்வது போன்ற பழக்கங்களுக்கு இடமில்லை, என்று ஆசாரமான இஸ்லாமிய மதக்குருக்கள் சொல்லியுள்ளார்கள்.

முஹமது நபியின் ஆணையின்படி பர்தே லேன் மசூதி உடைக்கப்பட்டது: டிசம்பர் 5, 2009ல், தெரிக்கி-இ-தாலிபான் பாகிஸ்தான் என்ற தாலிபானின் பிரிவு, தாங்கள்தாம், முஹமது நபியின் ஆணையின்படி பர்தே லேன், ராவல்பிண்டி மசூதியை உடைத்ததாக ஒப்புக்கொண்டனர்[10]. இதே மாதிரி, அவர்களது பணி மேலும் தொடரும் என்று வலியுர் ரெஹ்மான் மெசூத் என்ற அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.


[1] Daily Times, LDA demolishes illegal under-construction ‘mosque’, Monday, August 02, 2010, http://www.dailytimes.com.pk/default.asp?page=201082\story_2-8-2010_pg13_4

[2] http://archive.thepeninsulaqatar.com/component/content/article/347-pakistan-sub-continent/42954.html

[3] Saudi Gazzettee, A mosque with faulty design demolished for reconstruction in Madina , dated 03-09-2010;  http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentID=2010080279837

[4] Radio free Europe / Liberty, Azerbaijan Stops Mosque Demolition After Warning From Iranian Cleric, May 17, 2010 http://www.rferl.org/content/Azerbaijan_Stops_Mosque_Demolition_After_Warning_From_Iranian_Cleric_/2044059.html

[5] News-24, Illegal mosque to be demolished, 2010-08-20, http://www.news24.com/SouthAfrica/News/Illegal-mosque-to-be-demolished-20100820

[6] http://www.alarabiya.net/articles/2010/03/18/103406.html

[7] Abdul Rahman Shaheen, Correspondent, Saudi scholars reject call for demolition of Al Haram Mosque, http://gulfnews.com/news/gulf/saudi-arabia/saudi-scholars-reject-call-for-demolition-of-al-haram-mosque-1.602517

[8] http://www.jafariyanews.com/2k5_news/sep/5prophethome_destruction.htm

[9] Nabil Raza, Muslim hush over Saudi destruction of prophet (p) home shocking,

http://www.jafariyanews.com/2k5_news/sep/5prophethome_destruction.htm

[10] http://www.zopag.com/news/rawalpindi-mosque-demolished-on-prophet-muhammads-orders-pak-taliban/10904.html