நள்ளிரவில் நோயாளி சிகிச்சைக்குச் சென்றபோது, ஹிஜாப் பற்றிய விவாதம் ஏன், நோயாளி இறந்தது எப்படி? (1)
24-05-2023 இரவுமருத்துவமனையில்நடந்தது: நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருபவர் ஜன்னத் (29). இவர், மே 24-ம் தேதி அன்று இரவு பணியில் இருந்தார்[1]. அப்போது, இரவு 11.30 மணியளவில் திருப்பூண்டியைச் சேர்ந்த பாஜக மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் புவனேஸ்வர் ராம், தன் உறவினர் சுப்பிரமணியன் என்பவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்தார்[2]பாக, முதலில் சுப்பிரமணியனுக்கு என்ன பிரச்சினை, நடு இரவில் வந்த நோயாளிக்கு என்ன முதல் உதவி செய்ய வேண்டும், சிகிச்சை என்ன அளிக்கப் பட்டது பற்றி ஊடகங்கள் ஏன் குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை. அப்போது, அங்கு மருத்துவர் ஜன்னத் ஹிஜாப் அணிந்திருந்ததைப் பார்த்த புவனேஸ்வர் ராம், அரசுப் பணியில் இருக்கும்போது எப்படி ஹிஜாப் அணியலாம்,” அரசுப்பணியின்போதுமருத்துவர்ஏன்ஹிஜாப்அணியவேண்டும்… மருத்துவருக்குஎன்றுசீருடைகிடையாதா… உண்மையிலேயேநீங்கள்மருத்துவர்தானா… எனக்குச்சந்தேகமாகஇருக்கிறது?” ”, எனக் கேள்வி எழுப்பியதுடன், மருத்துவர் ஜன்னத்தை செல்போனில் வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. அப்படியென்றால், உறவினரின் உடல்நிலையை விட, இது தான் பெரிய பிரச்சினையாக தெரிகிறதா? அவர் வீடியோ எடுப்பதை மருத்துவர் ஜன்னத்தும் தன் செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்தார்[3]. அந்தப் பெண் மருத்துவர், “பெண்கள்பணியில்இருக்கும்போதுஅசிங்கமாகப்பேசிக்கொண்டிருக்கிறார். ஒருபெண்மருத்துவரைஅவரின்அனுமதியில்லாமல்வீடியோஎடுத்துக் கொண்டிருக்கிறார்,” எனச் சொல்லி அவரும் வீடியோ எடுத்திருக்கிறார்[4]. இந்த 2 காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அப்படியென்றால், ஜன்னத்திற்கும், அதுாான் முக்கியமாகப் பட்டது போலும்..
ஹிஜாபை கழட்டச் சொன்ன பிஜேபி நிர்வாகி[5]: முதலில் சுப்ரமணியனின் உடல்நிலையை மறந்து, இவர் இப்படி, இவ்விசயத்தில் ஈடுபட்டாரா என்பது நோக்கத் தக்கது. மருத்துவமனைக்கு வருபவர், தங்களது உடல்நிலை, சிகிச்சை, எந்த டாக்டரைப் பார்ப்பது, எங்கு செல்வது என்று தான் கவனமாக இருப்பார்களே தவிர மற்றவர்களைக் கவனித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அது மாதிரி பிரச்சினை செய்யத்தான் ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள் என்றால், எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். நோயாளியுடன் தான் வரவேண்டும் என்பதில்லை. நக்கீரன், “பெண்மருத்துவரிடம்ஹிஜாப்பைகழட்டச்சொல்லிவாக்குவாதம்; பாஜகபிரமுகர்கைது” என்றும், தினமணி, “ஹிஜாபைகழற்றச்சொல்லிபெண்மருத்துவரைமிரட்டியபாஜகநிர்வாகி” என்றும் தலைப்பிட்டு செய்திகள் போட்டுள்ளன. இரண்டையும் இடதுசாரி-வலதுசாரி, பார்ப்பன எதிர்ப்பு-ஆதரவு, திமுக-அதிமுக, இந்துவிரோதம்-ஆதரவு என்று எப்படியெல்லாம் வகைப் படுத்தினாலும், ஊடகக்காரர்கள் தாங்கள் இதைத்தான் சொல்லவேண்டும் என்று தீர்மானமாக இருக்கிறார்கள். அதாவது, பிஜேபி மத-அரசியல் மூலம் தமிழகத்தில் காலூன்ற முயல்கிறது, அதற்கான வேலைகளை செய்து வருகின்றது என்பதை எடுத்துக் காட்டப் படுகிறது. பிஜேபிகாரர்களுக்கு அந்த அளவுக்கு நெளிவு-சுளிவு எல்லாம் தெரியாது, வெளிப்படையாக இந்துத்துவம், “பாரத் மாதா கி ஜே” என்று கிளம்பி விடுவார்கள். ஒரு சமய வேகும், இன்னொரு சமயத்தில் வேகாது.
25-05-2023 புவனேஸ்வர் ராம் கைது, ஆர்பாட்டம்முதலியன: மருத்துவர் நோயாளி பற்றியோ, சிகிச்சை பற்றியோ கவலைப் படாமல், கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு சுவாகவாசமாக செல்போன் பார்த்துக் கொண்டிருப்பதும் தெரிகிறது. ஒரு மருத்துவர் போலவே அவர் நடந்து கொள்ளவில்லை. ஸ்டெதாஸ்கோப் கூட காணப்படவில்லை. அவருக்கு தான் ஒரு முஸ்லிம், ஹிஜாப் அணிந்து கொள்வேன் என்ற தோரணையில் பேசி, கத்தி, ஒருமையில் “போ” என்று கத்துவதும் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, புவனேஸ்வர் ராமை கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான மாரிமுத்து தலைமையில் 25-05-2023 அன்று முன்தினம் சாலை மறியல் நடந்தது. இந்நிலையில், மருத்துவர் ஜன்னத் அளித்த புகாரின்பேரில், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மதம் தொடர்பான குற்றம் மற்றும் வீடியோவை இணையதளத்தில் வெளியிடுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் புவனேஸ்வர் ராம் மீது கீழையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்[6]. கம்யூனிஸ்டுகள் அவரை கைது செய்ய வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்தனர்[7]. இந்நிலையில், புவனேஸ்வர் ராம் மீதான வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில் திருப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் 26-05-2023 அன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அதிகாரிக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்[8]. இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது என்று தெரியவில்லை. புவனேஸ்வர் ராம் கைது செய்யப் பட்டார், படவில்லை என்று முரண்பட்ட செய்திகளும் வந்துள்ளன[9]. இந்நிலையில் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புவனேஸ்வர்ராம் உறவினரான சுப்ரமணியன் நேற்று காலை உயிரிழந்தார்[10].
25-05-2023 அன்று மருத்துவமனையில் நோயாளி இறப்பு: நோயாளி சுப்ரமணியன் எப்படி, எவ்வாறு, ஏன் உயிரிழந்தார் என்பது பற்றி யாரும் கவலப் பட்டதாகத் தெரியவில்லை. நடு ராத்திரியில் வந்த போது, உரிய சிகிச்சை அளிக்கப் பட்டதா, இல்லையா, யார் சிகிச்சை அளித்தனர் என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், இருவரும் வீடியோ எடுத்தனர், இணைதளத்தில் போட்டனர், பரவியது எனூதான் செய்திகள் போட்டுள்ளனர். இதனிடையே போலீஸாரால் புவனேஸ்வராம் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியதை தொடர்ந்து, ஊர்வலத்தில் பங்கேற்ற பாஜகவினர் சடலத்தை சாலையில் வைத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்[11]. மேலும் அரசு மருத்துவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும் பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட புவனேஸ்வர்ராமை உடனடியாக விடுவிக்க கோரியும் வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்[12]. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகுமார் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்[13].
[12] சமயம்.காம், நாகப்பட்டினம்திருப்பூண்டிஅரசுஆரம்பசுகாதாரநிலையம்; ஹிஜாப்விவகாரத்தில்பாஜகநிர்வாகிகைது!, Madhumitha M | Samayam Tamil | Updated: 27 May 2023, 11:30 am
கம்யூனிஸ்டு, காங்கிரஸ்உள்ளிட்டகட்சிகள்கடும்கண்டனம்எதிர்ப்பு: இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி, கேரளாவில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அரசியல் கூட்டணி இதிலும் வேலை செய்கிறது போலும். இந்நிலையில், இந்த படம் தமிழக திரையரங்குகளில் கடந்த மே5-ந்தேதி வெளியானது. இயக்குநர் சுதீப்தோ சென் இயக்கத்தில், விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் தி கேரளா ஸ்டோரி என்ற பெயரில் உருவான திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்தது. நடிகைகள் அதா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பலானி உள்ளிட்டோர் முக்கிய வேடமேற்று நடித்து உள்ள இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றிருந்தன என்று ஊடகங்களே கூறுவது முன்னரே தீர்மானிக்கப் பட்ட விசயம் போல தோன்றுகிறது. கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்றும் அதன்பின் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் தங்களை இணைத்து கொண்டனர் என்றும் காட்டப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
05-05-2023 – தமிழகநீதிமன்றத்தில்வழக்கு, தள்ளுபடி, திரைப்படம்வெளியீடு, ஆர்பாட்டம்: தமிழகத்தில் இந்த படம் திரையிட அனுமதிக்க கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது[1]. ஆனால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னையில் அண்ணாநகர், அமைந்தகரை, ராயப்பேட்டை, வேளச்சேரி, வடபழனி ஆகிய இடங்களில் உள்ள வணிக வளாகங்களில் இயங்கும் திரையரங்குகளிலும், மதுரவாயலில் உள்ள ஒரு பிரபல திரையரங்கிலும் என 7 இடங்களில் இந்த படம் வெளியானது[2]. இதில், மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் மட்டும் திரையிடப்பட்டன[3]. ஏற்கனவே இந்த படத்தின் டீசருக்கு இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின[4]. இதனால், இந்த படத்துக்கு தமிழகத்தில் தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று மாநில உளவுத்துறை அரசுக்கு பரிந்துரை வழங்கி இருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடியானதால் இந்த திரைப்படம் திட்டமிட்டப்படி திரைக்கு வந்தது.
06-05-2023 – பாதுகாப்புகாரணங்களுக்காகதென்தமிழகத்தில்இந்தபடம்திரையிடப்படவில்லை. இந்த திரைப்படங்கள் வெளியாகும் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உள்பட முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்றறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்த திரைப்படம் வெளியான திரையரங்குகள் முன்பு போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். ரசிகர்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த திரைப்படத்திற்கு தடை கோரி சென்னையில் பல இடங்களில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று திரையரங்குகள் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
07-05-2023 சென்னையில்சீமான்ஆர்பாட்டம்: சென்னை அமைந்தகரையில் நடைபெறும் போராட்டத்தில் சீமான் பங்கேற்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வரும் என்ற நிலையில், அனுமதி எப்படி கொடுக்கப் பட்டது என்று தெரியவில்லை. சென்னையில் படம் தடை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் 4 திரையரங்குகள் அருகிலும், த.மு.மு.க. சார்பில் 2 திரையரங்குகள் அருகிலும், இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் ஒரு திரையரங்கு அருகேயும் என 7 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படத்துக்கு எதிராக இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள் போராட்ட அறிவிப்பால் சில தியேட்டர்களில் இந்த திரைப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. கோவையின் முக்கிய சாலையில் உள்ள வணிக வளாகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானபோது, இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டரை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர்[5]. அதாவது, முஸ்லிம்களும் சேர்ந்து கொண்டனர் என்பது தெரிகிறது. எனவே, இவர்களின் செக்யூலரிஸ வாதம், வேடம் முதலியவை பெரிய மோசடி என்றாகிறது. இருப்பினும் தமிழக மக்கள் பேச்சுக்களால், வசன-பேச்சுகளால் ஏமாந்து விடுகின்றனர்.
சீமான்எதிர்ப்பு– போலீஸார்கைது: இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசும்போது, மதம் இருந்தால் போதும் என்று பா.ஜ.க. நினைக்கிறது[6]. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான மனநிலையை அவர்கள் உருவாக்குகிறார்கள் என குற்றச்சாட்டாக கூறினார்[7]. தொடர்ந்து அவர், ஒவ்வொரு தேர்தலின்போதும் சர்ச்சைகள் நிறைந்த படங்கள் திரையிடப்படுகின்றன[8]. கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தி கேரளா ஸ்டோரி படம் வெளிவந்து உள்ளது. 2024 மக்களவை தேர்தலுக்காக திப்பு என்ற படம் தயாராகி கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்[9]. அவரது கட்சியினர் திரையரங்கிற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்[10]. அவர்களை போலீசார் பிடித்து சென்றனர். படம் தடை செய்யப்பட வேண்டும் என கோரி, கொடி பிடித்தபடியும், கோஷம் எழுப்பியபடியும் இருந்தனர்[11]. திரையரங்கு உரிமையாளர்களிடமும் படம் வெளியிட வேண்டாம் என கேட்டு கொண்ட சீமான், மக்களையும் படம் பார்க்க செல்ல வேண்டாம் என கேட்டு கொண்டார்[12]. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படம் வெளியிடப்படாமல், அந்தந்த அரசுகள் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோளாக கேட்டு கொண்டார். சீமானை சூழ்ந்து முஸ்லிம் பெண்கள் நின்று கொண்டு தலையாட்டிக் கொண்டிருப்பதை, செய்தி-செனல்களில் பார்க்கலாம்.
தமிழகஅரசுதடை: தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தமிழகம் முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பால், தமிழக திரையரங்குகளில் இன்று முதல் அந்த படம் திரையிடப்படாது என முடிவு செய்யப்பட்டு உள்ளதுலதாவது, இத்தகைய நிலைமையை எதிர்பார்த்துக் கொன்டிருந்தது போலும். சீமான் ஆர்பாட்டம் செய்தவுடன், அந்நிலைமை ஏற்பட்டவுடன், தமிழக அரசு அப்படத்தை தடை செய்ய துணிந்து விட்டது போலும். பிறகு, நீதிமன்ற தீர்ப்பு, போலீஸ் அதிகாரி அறிவுரை, பாதுகாப்பு முதலியவவை ஒரே நாளில் என்னவாகும், என்னவாயிற்று என்று தெரியவில்லை. எனினும், பயங்கரவாத சதி திட்டங்களை பற்றிய விசயங்களை வெளிக்கொண்டு வந்ததற்காக, பிரதமர் மோடி இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்த அதேவேளையில், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இந்த படத்திற்கு மாநிலத்தில் வரி விலக்கும் அளித்து உள்ளார்.
[1] தமிழ்.ஏபிபி.லைவ், The Kerala Story: தொடர்எதிர்ப்புகள்… தமிழ்நாடுமுழுவதும் ‘திகேரளாஸ்டோரி‘ படத்தின்காட்சிகள்ரத்து..!, By: ராகேஷ் தாரா | Updated at : 07 May 2023 04:20 PM (IST); Published at : 07 May 2023 04:20 PM (IST)
கேரளாவில்லவ்ஜிஹாத்தெரிந்தவிசயம்தான்: “லவ் ஜிஹாத்” பற்றி கேரளாவில் அரசாங்கம், போலீஸ் துறை, என்.ஐ.ஏ மற்றும் உளவுத்துறை என்று எல்லோருக்கும் தெரிந்த பிரச்சினை ஆகும். கிருத்துவ பெண்களும் பாதிக்கப் பட்டதால், பாதிரியார்களும் இதை எதிர்த்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். சிலர், ஐசிஸ் கொடுமைகளிலிருந்து தப்பியும் திரும்ப வந்துள்ளனர். ஆகவே, அதை மையமாக வைத்து வெளிவரும் திரைப்படத்தை எதிர்ப்பதில் என்ன பலன் வந்து விடப் போகிறது என்று தெரியவில்லை. இப்பொழுதெல்லாம், படம் நன்றாக ஓடவேண்டும், விளம்பரம் பெற வேண்டும் என்றால் இவ்வாறு எல்லாம் செய்வது வழக்கமாக உள்ளது. ஒருவேளை, இப்படம் ஓடி பலரின் கவனத்தைக் கவர்ந்தால், யாருக்கு லாபம் என்றும் யோசிக்கத்தக்கது. ஏனெனில், இக்காலத்தில் மறைமுகமாக, எதிர்மறை விளம்பரத்தையும் பெற சிலர் முயல்கின்றனர். அல்லது, அதன் மூலம், எங்களை எதிர்த்தால் இந்த நிலை தான் ஏற்படும் என்று எச்சரிக்கும் தொணியிலும் எதிர்த்து, அமைதியாகும் போக்கையும் கவனிக்கலாம்.
டிரைலருக்குப்பிறகுஅமைதியானவர்கள், மறுபதியும்எதிர்ப்பில்ஈடுபட்டது: பலகட்ட எதிர்ப்புகள், சர்ச்சைகளைத் தொடர்ந்து ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மே.05, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நடிகைகள் அதா ஷர்மா, சோனியா பாலானி, யோகிதா பிஹானி, சித்தி இத்னானி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சுதிப்தோ சென் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். விரீஷ் ஸ்ரீவல்சா – பிஷாக் ஜோதி இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர். உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கேரளாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் கட்டாய இஸ்லாமிய மதத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்படுவது போன்ற காட்சிகளுடன் இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி வெளியாகி கடும் விமர்சனங்களைப் பெறத் தொடங்கியது. இந்தப் படத்தை வெளியிட தடை கோரி கடும் எதிர்ப்புகள் வெளியாகின[1]. கேரள அரசு சார்பில் இந்தப் படத்துக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது[2].
மெத்தப் படித்தவர், கடவுளின் தேசத்தில் வாழ்பவர்கள் எதிர்க்கும் படமாக மாறியது: மெத்தப் படித்த கேரளாவில் இவ்வாறு நடப்பது விசித்திரமாக உள்ளது. ஆனால் இந்தப் படத்துக்கு தடை கோரிய வழக்கை விசாரிக்க ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை நாடுமாறும் தெரிவித்திருந்தது[3]. கடந்த 10 ஆண்டுகளில் 30 ஆயிரம் பெண்கள் இதுபோல் மதமாற்றம் செய்யப்பட்டு காணாமல் போனதாக ட்ரெய்லரில் முன்னதாக குறிப்பிடப்பட்டிருந்தது[4]. ஆனால் படத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி சரமாரியாக கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், எண்ணிக்கையை 3 என மாற்றினர்[5]. இருப்பினும் உண்மை எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். மார்க்சிஸம், கம்யூனிஸம், செக்யூலரிஸம் என்றெல்லாம் பேசும் சித்தாந்திகளிடமிருந்து தான், இத்தகைய எதிர்ப்புகள் கிளம்புவதை கவனிக்கலாம். ஒருபக்கம், கேரளாவில் இஅதைப் பற்றிய வழக்குகளே நிலுவையில் இருக்கும் பொழுது, அரசு எதிர்ப்பதன் காரணம் அறியப் பட வேண்டியதாக உள்ளது. அரசு தரப்பில் அத்தகைய நிலை கேரளாவில் இல்லை என்று உறுதியாக சொல்வதற்குப் பதிலாக, படத்தை எதிர்க்கும் போக்கு எதனைக் காட்டுகிறது என்பதனையும் கவனிக்க வேண்டும்.
தமிழகத்தில்எச்சரிக்கை, திரையரங்களுக்குபாதுகாப்பு: மேலும், தமிழ்நாட்டில் இந்தப் படத்தை வெளியிட்டால் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சமூகத்திடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பும் என தமிழக உளவுத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது[6]. தமிழகத்தில் ஏகபட்ட குற்றங்கள் சமூகத்தை பாதித்து வரும் நிலையில், இது எப்படி அந்த அளவுக்குப் பெரிய முக்கியமான பிரச்சினையாகி, தமிழக உளவுத்துறை ஆராய்ச்சி செய்யும் அளவுக்குச் சென்றுள்ளது என்று தெரியவில்லை. போலீஸாரும் அதற்கேற்றபடி செயல்பட தயாராக இருக்க டிஜிபி ஆணையிட்டுள்ளார்[7]. இந்நிலையில், திரைத்துறையினர் தொடங்கி பலரது எதிர்ப்புகள், கண்டனங்கள் தாண்டி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது[8]. சென்னையில் எதிர்பார்த்தப் படி, பிரச்சினை எதுவும் எழவில்லை. திரையரங்களிலும் நிலைமை சாதாரணமாகவே இருந்தது. திரையரங்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க, போலீசார் நியமிக்கப் பட்டுள்ளனர்[9]. தமிழ்நாடு டிஜிபி அனைத்து காவல்துறை ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை.அனுப்பியுள்ளார்[10]. அதில் கேரளா ஸ்டோரி படம் திரையாக உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கவும், பதற்றமான இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்[11]. மேலும் சமூக வலைதளங்களில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டால் அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஆகியவை ஒட்டப்பட்டால் உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டுள்ளார்[12].
திரைப்படத்தைப்பற்றியவிமர்சனங்கள்: தி கேரளா ஸ்டோரி படத்துக்கு ட்விட்டர்வாசிகள் வைக்கும் விமர்சனங்களைக் கீழே பார்க்கலாம். “மன அமைதியைக் கெடுக்கும், வெறுப்புணர்வு மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் படம் இது . நாட்டில் வன்முறையை பரப்பும் நோக்கத்துடன் ஆத்திரமூட்டும் காட்சிகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. ஜீரோ ஸ்டார் தருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். “இந்தப் படம் முழுக்க முழுக்க பொய்களும் சூழ்ச்சியும் நிறைந்தது. படத்தில் சொல்லப்பட்ட எந்த ஒரு விஷயமும் உண்மைக்கு நெருக்கமாக இல்லை. இது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் எடுக்கப்பட்ட ஒரு பிரச்சாரப் படம். ஒவ்வொரு நடிகரும் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்காக வெட்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். ”சூப்பர். இந்தப் படத்தைப் பாருங்கள் இந்தப் படம் உங்கள் வழக்கமான லாலா லேண்ட் படம் அல்ல. இது சொல்லும் உண்மை வெறுப்பு இல்லை, சிலரது மனநிலையை அம்பலப்படுத்துகிறது. படத்துக்காக இயக்குனர் அற்புதமான ஆய்வு செய்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார். முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் திரைப்படம், யதார்த்தை முகத்தில் அறைந்து சங்கடப்படுத்துகிறது. விபுல் அம்ருத்லால் ஷா & சுதிப்டோசென் இந்தப் படத்தைத் தயாரித்ததற்காக பாராட்டுக்குத் தகுதியானவர்கள். அதா ஷர்மா வாழ்நாள் நடிப்பை வழங்கியுள்ளார்[13]. ”நீங்கள் உணர்ச்சிரீதியாக முட்டாளாக இருந்தால், இந்த பிரச்சாரத் திரைப்படம் சில நாட்களுக்கு உங்கள் கவனத்தை உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும்” எனத் தெரிவித்துள்ளார்[14].
[1] தமிழ்.இந்துஸ்தான்.டைம்ஸ், The Kerala Story Review: எப்படிஇருக்கு ‘திகேரளாஸ்டோரி’ திரைப்படம்? ட்விட்டர்விமர்சனம்இதோ!, HT Tamil Desk, 05 May 2023, 12:07 IST.
[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், திகேரளாஸ்டோரிபடத்தைதிரையிட்டவணிகவளாகம்முற்றுகை… போலீஸார் – எஸ்டிபிஐகட்சியினர்இடையேதள்ளுமுள்ளு!!, Narendran S, First Published May 5, 2023, 8:30 PM IST; Last Updated May 5, 2023, 8:31 PM IST..
[13] தமிழ்.ஏபிபி.லைவ், The Kerala Story Twitter Review: வெறுப்புபிரச்சாரமா? உண்மைசம்பவமா? திகேரளாஸ்டோரிபடத்தின்ட்விட்டர்விமர்சனம்இதோ! , By: பீட்டர் பார்க்கர் | Updated at : 05 May 2023 01:17 PM (IST) , Published at : 05 May 2023 01:08 PM (IST)
கேரளாவில் ஓடும்ரயிலுக்குதீவைத்த ஷாருக்செய்பி – கோத்ரா போன்ற சம்பவம் தவிர்ப்பு- தீவிரவாத தொடர்பு உறுதி – தொடரும் விசாரணை!
02-04-2023 – கேரளரயிலுக்குதீவைத்தது: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ரயில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஷாருக் செய்பி மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கடந்த 2ம் தேதி 02-04-2023 கண்ணூருக்கு எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது[1]. அப்போது பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது[2]. எலத்தூர் அருகே சென்ற போது மர்மநபர் ஒருவர் டி 1 / D1 பெட்டியில் இருந்த பயணிகள் மீது திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. தீ பற்றிக் கொண்டதால், பயணியர் அலறி அடித்துக் கொண்டு தப்பிக்க முயன்றனர். இந்த சமயத்தில் உயிருக்கு பயந்து ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்ததில் 2 வயது பெண் குழந்தை உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் ரஹ்மத் (42). அவளது இரண்டு வயது குழந்தை ஜஹ்ரா மற்றும் கே.பி. நௌபிக் (39) என்று தெரிய வந்தது. ஆக மொத்தம், இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். ஒரு குழந்தை மற்றும் பெண் உள்பட 3 பேர் பலியானார்கள். இதற்குள் பிரயாணிகள் அடுத்த பெட்டிகளுக்கு ஓடினர். செயின் இழுக்கப் பட்டு, ரெயிலும் நிறுத்தப் பட்டது. அனால், அதற்குள் தீ வைத்தவன் தப்பித்து ஓடிவிட்டான்.
தீவைத்தவனின்பேக்கிடைத்தது: இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீசாரும் கேரள அதிரடி படையினரும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் தீயில் எரிந்து பலியானவர்கள் பற்றிய விபரம் தெரிந்தது. மேலும் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றிய நபர், ரெயிலில் இருந்து தப்பி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் ரெயில் பெட்டியில் கிடந்த மர்மநபரின் உடமைகளை போலீசார் கைப்பற்றினர். அதில் ஒரு செல்போன், ஒரு டைரி மற்றும் பெட்ரோலுடன் கூடிய பாட்டில் ஆகியவை கிடைத்தது. அந்த டைரியில் கேரளாவின் முக்கிய நகரங்களான திருவனந்தபுரம், கழக்கூட்டம் மற்றும் குமரி மாவட்டத்தின் குளச்சல், கன்னியாகுமரி ஆகிய ஊர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. போலீசார் கைப்பற்றிய செல்போனில் சிம் கார்டு எதுவும் இல்லை. ஒருவேளை உஷாராக அந்த நபர் எடுத்திருக்கக் கூடும். மேலும் அந்த செல்போனின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை வைத்து அதில் இருந்து யார்-யாருடன் பேசப்பட்டது என்ற தகவலை போலீசார் கண்டுபிடித்தனர்.
தனிப்பட்டமுறையில்பெண்மீதுதாக்குதல்நடத்திகொலைமுயற்சியாஇல்லைரயிலில்விபத்துஏற்படுத்தசதிதிட்டமா?: சம்பவ இடத்திற்கு கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர், ADGP கோழிக்கோடு மேயர் உட்பட அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்[3]. தனிப்பட்ட முறையில் பெண் மீது தாக்குதல் நடத்தி கொலை முயற்சியா இல்லை ரயிலில் விபத்து ஏற்படுத்த சதி திட்டமா என பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்[4]. அதாவது, முதலில் அவர்கள் எல்லோரும் முஸ்லிம்கள் என்பதால், இவ்வாறு யூகங்கள் வெளியிடப் பட்டன. தீவிரவாத கோணம் தவிர்க்கப் பட்டது. ஆனால், அவனது பையில் கிடைத்த ஆதாரங்கள் மற்றும் செல்போன் தொடர்புகள் அவ்வகையில் தான் இருந்தன. இது இன்னொரு “கோத்ரா” சம்பவம் போன்று ஆகாமல் தடுக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது. அப்பெட்டியில் முஸ்லிம்கள் இருந்தது ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. ஏனெனில், ரயிலில் கணிசமாக முஸ்லிம்கள் பயணித்து வருவது ஒன்றும் ஆச்சரியமான விசயமும் இல்லை.
உத்தரபிரதேசம்நொய்டாவைசேர்ந்தஷாருக்செய்பிதான்தீவைத்தநபர்: இதில் உத்தரபிரதேசம் நொய்டாவை சேர்ந்த ஷாருக் செய்பி என்ற வாலிபர் பற்றிய தகவல் தெரியவந்தது. கேரள முதலமைச்சர் மத்திய ரெயில்வே அமைச்சரை தொடர்பு கொண்டு பேசினார். அவர் எல்லா உதவிகளையும் கொடுக்க உறுதி அளித்தார். இவரது உருவத்தை ரெயிலில் இருந்த பயணிகள் உதவியுடன் போலீசார் புகைப்படமாக வரைந்தனர். அந்த படம் மூலம் ரெயிலில் 3 பேரை எரித்து கொன்ற நபரை பிடிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இதில் அந்த நபர், கோழிக்கோட்டில் இருந்து உத்தரபிரதேசத்தின் நொய்டாவுக்கு தப்பி சென்றது தெரியவந்தது. உடனே கேரள போலீசார், உத்தரபிரதேச போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் காசியாபாத் அதிரடி படையினரின் உதவியுடன் அந்த நபரை பிடிக்க சென்றனர். அவர் ஒரு தச்சு தொழிலாளி என தெரியவந்தது. அவரது பெயரும் ஷாருக் செய்பி என கூறப்பட்டது. இதையடுத்து காசியாபூர் அதிரடி படையினர் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கடந்த 2 மாதங்களாக ஊரை விட்டு எங்கும் சென்றதில்லை என தெரியவந்தது. மேலும் அவரது தந்தை தனது மகன் ஊரை விட்டு எங்குமே சென்றதில்லை எனவும் கூறினார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை விடுவித்தனர்.
மகாராஷ்டிரமாநிலம்ரத்தினகிரியில்வைத்துடெல்லியைசேர்ந்தஷாருக்செய்பி (27) என்பவர்கைது: இந்த சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரியில் வைத்து டெல்லியை சேர்ந்த ஷாருக் செய்பி (27) என்பவர் கைது செய்யப்பட்டார்[5]. ஷாருக் செய்பி கேரள போலீசின் காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்ற போதிலும், மத்திய ஏஜென்சிகளும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன[6]. இதனிடையே சந்தேகப்படும் நபரை கைது செய்ய உதவிய மகாராஷ்டிரா அரசுக்கும், போலீஸாருக்கும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நன்றி தெரிவித்துள்ளார்[7]. தீ வைப்பு சம்பவத்திற்கு தீவிரவாத இயக்கத்திற்கு தொடர்பு இருக்கலாம்? என்ற சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து தான் மத்திய ஏஜென்சிகள் விசாரணையை தொடங்கின[8]. இதில், சிறையில் அடைக்கப்பட்ட ஷாருக் சைஃபியை போலீஸ் காவலில் எடுத்துள்ள போலீசார், கோவை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும், கேரள ரயிலில் தீ வைத்த சம்பவத்திற்கும் தொடர்புள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்[9]. தொடர்ந்து கேரள ரயில் விபத்து சம்பவத்தின் போது ஷாருக் சைஃபியின் நடவடிக்கைகளை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[10]. இந்தநிலையில் ஷாருக் செய்பி மீது கேரள போலீசார் தீவிரவாத செயல்பாடுகள் தடுப்பு சட்டமான உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கு விரைவில் என்ஐஏவுக்கு மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.
தீவைக்கும்திட்டத்துடன்தான்கேரளாவந்தார்: கேரள சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அஜித்குமார் கூறியதாவது: “செய்பியிடம்விசாரணைநடத்தியதில்பல்வேறுமுக்கியவிவரங்கள்கிடைத்துள்ளன. இதன்அடிப்படையில்தான்அவர்மீதுஉபாசட்டத்தில்வழக்குப்பதிவுசெய்யப்பட்டது. தீவைத்ததுதான்தான்என்றுவாக்குமூலம்கொடுக்கும்பொழுதுஷாருக்செய்பிஒப்புக்கொண்டுள்ளார்[11]. அதற்கானஆதாரங்களும்கிடைத்துள்ளது. பயணியரைதீவைத்துஎரிக்கபயன்படுத்தியபெட்ரோலை, சம்பவத்தன்றுஅதிகாலைஷொர்ணுார்ரயில்நிலையம்அருகேஉள்ளஒருபெட்ரோல்பங்க்கில்இருந்துஷாரூக்சைபிவாங்கிஉள்ளார்[12].இதற்குஅவருக்குயாரோஉதவிசெய்துள்ளனர். அவர்கள்யார்என்றுவிசாரணைநடத்திவருகிறோம்[13].இவர்தீவிரவாதஎண்ணம்கொண்டவர். ஜாகீர்நாயக், இஸ்ராஅகமதுபோன்றோரின்வீடியோக்களைஅடிக்கடிபார்த்துவந்துள்ளார். ரயிலில்தீவைக்கவேண்டும்என்றதிட்டத்துடன்தான்இவர்கேரளவந்துள்ளார். இவருக்குவேறுயாருடையஅல்லதுஅமைப்புகளின்உதவிகிடைத்துள்ளதாஎன்றுவிசாரணைநடந்துவருகிறது. இவர்தற்போதுதான்முதன்முறையாககேரளாவந்துள்ளார்…..,”.இவ்வாறு அவர் கூறினார்.
[3] தமிழ்.நியூஸ்.18, ஓடும்ரயிலில்பயணிகள்மீதுதீவைப்பு.. 3 பேர்பலி – கேரளாவில்பயங்கரம், NEWS18 TAMIL, First published: April 03, 2023, 08:18 IST, LAST UPDATED : APRIL 03, 2023, 08:20 IST.
23-09-2022 அன்று கோவையில் கார் குண்டு வெடித்தது, சென்னையில் விசாரணை தொடர்ந்து நடந்து வருவது, 07-02-2023 அன்று வெடிப்பொருட்கள் செயலிழக்கச் செய்தது!
23-09-2022 அன்று கோவையில் கார் குண்டு வெடித்தது, சென்னையில் விசாரணை தொடர்ந்து நடந்து வருவது: கோவை கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த ஆண்டு அக்டோபா் 23ஆம் தேதி 23-09-2022 அன்று கார் குண்டு வெடித்தது. இதில் அந்த காரை ஓட்டி வந்த ஜமேஷா முபீன் அங்கேயே உயிரிழந்தார். இதுதொடா்பாக என்ஐஏ குழுவினா் நடத்தி வரும் விசாரணையில் இதுவரை 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில் இந்த வழக்கில் கைதாகி உள்ள முகமது அசாருதீன், அஃப்சா்கான், ஃபெரோஸ்கான், முகமது தெளபீக், ஷேக் இதயத்துல்லா, சனோஃபா் அலி, முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 7 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். அதாவது, சென்னையில் தான் இந்த நீதிமன்ற வழக்கு விசாரணைகள் எல்லாம் நடந்து வருகின்றன. ஆனால், ஊடகங்கள் இவற்றைப் பற்ரியெல்லாம் கண்டு கொள்ளாமல், வேறு விவகாரங்களை ஐத்துக் கொண்டு வாத-விவாதங்கள், பட்டி மன்றங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றன.
சட்டப்படிநடந்துவரும்நீதிமன்றவிசாரணைகளில்காலதாமதம்ஏற்படுவது: இவ்வாறு சட்டப் படி வழக்குகளை விசாரிப்பது, கைது செய்யப் பட்டவர்களை விசாரிப்பது, வாக்குமூலம் வாங்குவது, அதை வைத்து, மறுபடியும் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று சோதனை செய்வது, விசாரிப்பது போன்றவை தொடர்ந்து நடந்து வருகின்றன. இவற்றில் இடையே காலதாமதம் ஏற்படுகிறது. செப்டம்பர் 2022ல் நடந்த குண்டுவெடிப்பிற்குப் பிறகு, நிச்சயமாக சம்பந்தப் பட்டவர்கள் உஷாராகியிருப்பர். இருக்கும் ஆதாரங்களை அழித்திருப்பர். ஆகவே, இவற்றையெல்லாம் மீறி, விசாரணை நடத்தி உண்மையை நிலை நாட்ட என்ஐஏ போன்றோர் மிக கடினமாக வேலை செய்ய வேண்டியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் முஸ்லிம்கள் என்ஐஏவையே எதிர்த்து ஆர்பாட்டம் செய்கின்றனர். சோதனைக்கு வந்தால், கலாட்டா செய்கின்றனர். இதனால், தமிழக போலீஸாரும் கூட வர வேண்டியுள்ளது. இதெல்லாம் இப்பொழுது வழக்கமாகி விட்டது. இதையெல்லாம் யாரும் கண்ட்ப்பதும் இல்லை. மிக சாதாரணமாக எடுத்துக் கொ/ல்கின்றனர் அல்லது கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இப்பொழுது கூட, இந்த விவகாரங்களை சில ஊடகங்கள் தான் வெளியிட்டுள்ளன.
பட்டாசுவாங்கியகடையில்என்ஐஏஅதிகாரிகள்செவ்வாய்க்கிழமை 07-02-2023 அன்றுசோதனை: கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடா்புடைய அசாருதீன் பட்டாசு வாங்கிய கடையில் என்ஐஏ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை 07-02-2023 அன்று சோதனை நடத்தினா். மனுவை விசாரித்த நீதிபதி அந்த 7 பேரையும் 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். அதன்படி அவா்கள் 7 பேரையும் கோவைக்கு வியாழக்கிழமை 02-02-2023 அன்று அழைத்து வந்தனா். கோவையில் அவா்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது கார் வெடிப்பு சம்பவம் தொடா்பான திட்டம் குறித்தும், ஜமேஷா முபீன் குறித்தும், இதில் வேறு எவருக்கேனும் தொடா்பு உள்ளதா என்பது குறித்தும் அவா்களிடம் விசாரணை நடத்தியதோடு, அவா்கள் தெரிவித்த தகவல்களை விடியோவாகவும் பதிவு செய்து கொண்டனா்.
23-09-2022 அன்று குண்டு வெடித்தது என்றால், 07-02-2023 அன்று செல்லும் பொழுது நிலை: அவா்கள் 7 பேரில் அசாருதீன் என்பவா் கோவையிலுள்ள ஒரு பட்டாசுக் கடையில் பட்டாசுகளை வாங்கி அவற்றிலிருந்து திரிகளை மட்டும் எடுத்துவிட்டு அந்த பட்டாசு மருந்துடன் வேறு ரசாயனங்களைச் சோ்த்து புதிதாக வெடிபொருள் தயாரித்திருந்தது விசாரணையில் தெரியவந்தது[1]. இதையடுத்து அசாருதீன் பட்டாசு வாங்கிய கடைக்கு அவரை செவ்வாய்க்கிழமை 07-02-2023 அன்று நேரில் அழைத்துச் சென்று என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்[2]. 23-09-2022 அன்று குண்டு வெடித்தது என்றால், 07-02-2023 அன்று செல்லும் பொழுது நிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கலாம். இதையெல்லாம், என்ஐஏவுக்கு கடினமாக இருந்தாலும், மற்றவர்களுக்கு சாதமாக இருக்கும். இத்தகைய அடைமுறை விவகாரங்களை சட்ட ஓட்டைகளாக்கி தப்பித்துக் கொள்ள முயல்வர்.
வெடிகுண்டுதயாரிக்கபயன்படுத்தப்பட்டுள்ளரசாயனங்கள்முதலியனபறிமுதல், சோதனைக்குஉட்படுத்தப்பட்டன: கார் வெடிப்பு நடந்த பின்னர் ஜமேஷா முபின் வீட்டில் நடந்த சோதனையில் 120 கிலோ எடையிலான வெடி பொருட்கள் இருந்தன. 109 வகையான அந்த பொருட்களை தேசிய புலனாய்வு முகமையினர் பறிமுதல் செய்தனர். இதில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் ரசாயன பொருட்களும் அடங்கும்[3]. இந்த ரசாயன மூலப் பொருட்களில் பொட்டாசியம் நைட்ரேட், நைட்ரோ கிளிசரின், ரெட் பாஸ்பரஸ், பிஇடிஎன் பவுடர் (பென்டேரித்ரிட்டால் டெட்ராநைட்ரேட் பவுடர்), அலுமினியம் பவுடர் ஆகியவை இருந்தன. தவிர, வயர்கள், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஆதரவு பொருட்கள் உள்ளிட்டவையும் இருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டது.வெடி பொருட்கள் ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது[4]. அவையெல்லாம் வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப் படும் பொருட்கள், ரசாயனங்கள் என்று நிரூபிக்கப் பட்டன. இருப்பினும், அவையெல்லாம் எப்படி தீவிரவாதிகள் வசம் செல்கின்றன என்பது புதிராக இருக்கிறது. உதாரனத்திற்கு நைரோ செல்லுலோஸ் வெடிகுண்டுகள் மலை, மலைபாறை, குவாரிக்களில் உபயோகிக்க, சாலைப் பணி முதலியவற்றிற்கும் விற்கப் படுகின்றன. ஆனால், அத்தகைய பொருள் முன்னர் சந்திர பாபு நாயுடு செல்லும் போது உபயோகப் படுத்தப் பட்டன.
ரசாயனங்கள்செயலிழக்கப்பட்டன: பறிமுதல் செய்த வெடி பொருட்கள் அவினாசி ரோட்டில் உள்ள என்ஐஏ தற்காலிக முகாம் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது[5]. நேற்று என்ஐஏ எஸ்பி ஸ்ரீஜித், வெடிகுண்டு அழிக்கும் நிபுணர் பாண்டே தலைமையிலான அதிகாரிகள் வெடி பொருட்கள் எடுத்து செல்லும் சிறப்பு வாகனத்தில் பறிமுதலான வெடிபொருட்களை கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவில் உள்ள சுல்தான்பேட்டையை அடுத்த கந்தம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் வெடி மருந்து குடோனிற்கு கொண்டு சென்றனர்[6]. அங்கு வெடி பொருட்கள் அழிக்கப்பட்டன[7]. வெடி பொருட்கள் அழித்தது தொடர்பான ஆதாரங்களை போலீசார் பதிவு செய்தனர். குறிப்பிட்ட சில வகையான வெடி பொருட்கள் தீ வைத்தும், சில பொருட்கள் மண்ணில் மூடியும் அழிக்கப்பட்டதாக தெரிகிறது[8]. வெடி பொருட்கள் அழிக்கப்பட்டபோது அந்த வளாகத்தில் தொழிலாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை[9]. வெளியே தெரியாமல் மிகவும் ரகசியமாக வெடி மருந்துகளை கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த வெடிமருந்து தொழிற்சாலையின் மேலாளர் கூறுகையில், “கோவையில்கைப்பற்றப்பட்டவெடிபொருட்கள்எங்கள்தொழிற்சாலையில்வைத்துசெயல்இழக்கச்செய்யப்பட்டன. காவல்துறையின்முக்கியஅதிகாரிகள்உட்பட 18 பேர்வந்திருந்தனர்,” என்றார்[10]. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி வெடிபொருட்களை செயலிழக்க செய்துள்ளனர்.
[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கோவைவெடிவிபத்தில்கைப்பற்றப்பட்டவெடிமருந்துகள்அழிப்பு; என்ஐஏநடவடிக்கை, Velmurugan s, First Published Feb 7, 2023, 11:41 AM IST, Last Updated Feb 7, 2023, 11:41 AM IST.
கோவைஆர்காஸ்சிலிண்டர்வெடிகுண்டுசோதனை: என்.ஐ.ஏ மற்றும் தமிழக போலீஸார் கோவை குண்டு வெடிப்பு பற்றி ஆய்ந்து வருகின்றனர், விசாரணை நடத்துகின்றனர் மற்றும் வீடுகளில் சோதனைகள் நடக்கின்றன. கைதானவர்களிடமிருந்து வாக்குமூலங்களும் பெறப் படுகின்றன. செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆங்கில ஊடகங்களில் அதிகமாக வரும் பொழுது, தமிழக ஊடகங்கள் அமுக்கி வாசிக்கின்றன. ஜமேஷா முபின் ஏதோ சுயமாக இந்த தீவிரவாதச் செயலில் ஈடுபட்டான் என்றும் தலைப்பிட்டு செய்திகள் வருகின்றன. திராவிடத்துவ வாதிகள், தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போய்விட்டது, என்று பெருமூச்சு விட்டு அமைதியாகின்றனர். ஆனால், அரசியல் செய்பவர்கள், செய்து கொண்டு தான் இருக்கின்றனர். திமுகவினர், “தேசத் துரோகி” என்றெல்லாம் ராணுவ அதிகாரியை டிவி செனலில், கோடிக்கணக்கில் பொது மக்கள் கவனிக்கும் நிலையில் பலமுறை விளிப்பதும் திகைப்பாக இருக்கிறது. அந்த செனல் நிகழ்ச்சி அமைப்பாளர், அத்தகைய பேச்சுகளை “மூட்” கூட செய்யாமல் இருந்ததை கவனிக்க முடிந்தது.
ஜமேஷாமுபின்வீட்டில்கைப்பற்றப்பட்ட 109 பொருட்கள்[1]: ஜமேசா முபினின் வீட்டில் நடந்த சோதனையில் 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ஜிகாத் மற்றும் இஸ்லாமிய சித்தாங்கம் தொடர்பான புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி பலவிதமான செய்திகள் கடந்த ஒரு வாரமாக நாளிதழ்கள் வெளியிட்டு வருகின்றன. ஆனால், எந்த எய்தி தாளோ, ஊடகமோ ஐந்தாறு-ஏழெட்டு பொருட்களைத் தவிர, மற்றதை சொல்ல காணோம். ஆகவே, தமிழ், ஆங்கிலம் மற்றும் இதர ஊடகங்களில் உள்ள எல்லாவற்றையும் தொகுத்து ஒரு லிஸ்ட் தயாரிக்கப் படுகிறது. – அதில்
அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பிளேடு [Surgical blades],
கண்ணாடிகள் [Glass pieces],
9 வாட்ஸ் பேக்டரி [9 watts battery],
9 வாட்ஸ் பேட்டரி கிளிப் [9 watts Battery clips],
வயர் [wires],
சுவிட்ச் [switches],
சிலிண்டர் [cylinders],
ரெகுலெட்டர் [regulators],
டேப் [tapes]
இஸ்லாமிய மதம் கொள்கைகள் தொடர்புடைய புத்தகங்கள் [Islamic literature including Jihadi category],–
உள்ளிட்ட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரமாக இச்செய்திகள் வந்துகொண்டிருந்தாலும், முழு விவரங்கள் வெளியிடாமல் இருப்பதும் திகைப்பாக இருக்கிறது.
ஜமேஷ்முபீனின்குடும்பம், பின்னணி: கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்த முபின் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். படித்து முடித்ததும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அப்போது வீட்டில் அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்த போது, ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணையே நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார். அதன்படி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோவை அல் அமீன் காலனியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணான நஸ்ரத்தை (23) முபின் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கோட்டைமேடு பகுதியில் மனைவியுடன் வசித்து வந்த அவர் அங்குள்ள புத்தக கடையில் வேலைக்கு சேர்ந்தார். இவருக்கு 2 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு முபின் தனது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாரிடமும் பேசுவதில்லை. இந்த நிலையில் திடீரென தான் வேலை பார்த்து வந்த புத்தக கடை வேலையை முபின் விட்டு விட்டார். இதுகுறித்து நஸ்ரத் கணவரிடம் கேட்டதற்கு, தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகவும் தன்னால் வேலை பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்து வீட்டில் இருந்தார்.
கோட்டைஈஸ்வரன்கோவில்அருகேவீடுபார்த்துகுடிபெயர்ந்தது: கோட்டைமேடு பகுதியிலிருந்து, திடீரென்று கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் வீடு பார்த்து இடம் பெயர்ந்தார். வேலைக்கு செல்லாமல் இருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக முபின் வீட்டில் இருக்காமல் வெளியில் சென்றதால் ஏதாவது வேலை பார்க்கிறீர்களா என விசாரித்துள்ளார். அப்போது தான் தேன் மற்றும் நறுமண பொருட்கள் விற்பனை செய்வதாகவும், நாட்டு மருந்து கடையில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். கார் வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு முபின் தனது மனைவியிடம் நாம் வேறு வீட்டிற்கு செல்லலாம் என கூறியுள்ளார். அதன்படி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வீடு பார்த்து மனைவி, குழந்தைகளுடன் குடியேறி உள்ளார். அப்போது முபின் வீட்டிற்குள் 4 பெட்டிகளை எடுத்து வந்தார். இதனால் நஸ்ரத்துக்கு சந்தேகம் ஏற்படவே எதற்காக இந்த 4 பெட்டிகள். அதில் என்ன உள்ளது என கேட்டுள்ளார். அதற்கு முபின், இந்த பெட்டிகளில் பழைய துணிகள் தான் உள்ளது என கூறியுள்ளார். ஆனால் கார் வெடிப்பு சம்பவம் நடந்த பிறகே அந்த பெட்டிகளில் வெடி மருந்து இருந்த தகவல் நஸ்ரத்துக்கு தெரிய வந்துள்ளது.
20-10-2022 அன்றுமனைவிகுழந்தைகளுடன்தாய்வீட்டிற்குசென்றுவிடுதல்: கடந்த மாதம் 20-ந்தேதி, முபினின் மனைவி நஸ்ரத்துக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். முபின் எப்போதும் யாரிடமும் பேசாமல் தனியாகவே இருப்பார். மேலும் எந்நேரமும் செல்போனில் ஏதாவது பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால் சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு நஸ்ரத்தின் வீட்டிற்கு சென்ற முபின் வழக்கத்திற்கு மாறாக அனைவரிடமும் சகஜமாக பேசியுள்ளார். மேலும் குடும்பத்தினர் அனைவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டும் உள்ளார். அன்று மாலையே தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியில் சென்று உள்ளார். அப்போது குழந்தைகளுக்கு பிடித்த ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றையும் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் மனைவியை அவரது தாய் வீட்டில் விட்டு, முபின் மட்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவம் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு தண்ணீரை சேமிப்பதற்கு டிரம் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார்.
22-10-2022 அன்றுமனைவியுடன்பேசியது: அப்போது 3 நாட்களுக்கு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். 22-ந் தேதி இரவு நஸ்ரத் கணவருக்கு எப்போது வீட்டிற்கு வருவாய் என மெசேஜ் அனுப்பினார். அதற்கு நாளை வருவதாக கூறியுள்ளார். அப்போது நஸ்ரத் குழந்தைகள் உன்னை தேடுகின்றனர். வீடியோ காலிலாவது பேசு என மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் அதன்பின்னர் முபின் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தும் முபினை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிகிறது. இதுவே முபின் அவரது மனைவியிடம் கடைசியாக பேசியது. ஆனால் தற்போது வரை முபினுக்கு என்ன நடந்தது என்று அவரது குழந்தைகளுக்கு தெரியவில்லை.
வேதபிரகாஷ்
05-11-2022
[1] ஒவ்வொரு நாளிதழும், செய்தியும் விதவிதமாகக் குறிப்பிடுகின்றன (ஐந்து-ஆறு என்று….), அவற்றைத் தொகுத்து, இங்கு பட்டியலிடப் பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பான அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்தது (2)
இமயமலை முதல் குமரி வரை இந்தியா ஒன்றுதான். அதில் உள்ள அனைவரின் பாதைகளும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும்: சந்திப்பில் மதரஸாவில் பயிலும் குழந்தைகளிடம் பேசிய மோகன் பாகவத், நாட்டின் மீதான அன்பையும் மனித வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். குழந்தைகளுக்கு மதரஸாவில் குரான் கற்பிக்கப்படுவது போல், இந்து மத வேதமான பகவத் கீதையையும் ஏன் கற்பிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், “இமயமலை முதல் குமரி வரை இந்தியா ஒன்றுதான். அதில் உள்ள அனைவரின் பாதைகளும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும்,” என்று பேசினார். தொடர்ந்து மதரஸா நிர்வாகிகளிடம், “மதரஸாக்களில் கல்வி கற்கும் முஸ்லிம் சிறார்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இந்தி தெரியாததால், விமான நிலையம், ரயில் நிலையம் போன்றவற்றில் படிவத்தை அவர்களால் நிரப்ப முடியவில்லை. மதரஸாக்களில் நவீன அறிவைக் கற்பிக்க வேண்டும். ஒருமித்த கருத்து இல்லாத பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக வாழ விரும்புகிறோம் என்பதே அனைவராலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது,” என்று பாகவத் பேசினார்.
மோகன்பகவத்மற்றும்ஐந்துமுஸ்லீம்சமூகதலைவர்களிடையேஅண்மையில்நடைபெற்றசந்திப்பு: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் சந்திப்பு நடைபெற்றது[1]. பசுவதை, இழிவாக பேசுதல் உள்பட இரு சமூக முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது[2]. தொடர்ந்து இது போன்ற சந்திப்புகள் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அரை மணி நேரம் திட்டமிடப்பட்ட சந்திப்பு 75 நிமிடங்கள் நீடித்தது. ஆர்எஸ்எஸ்யின் தற்காலிக டெல்லி அலுவலகமான உதாசீன் ஆசிரமத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பகவத், சங்கத்தின் சா சர்கார்யவா கிருஷ்ண கோபால், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ். ஒய் குரைஷி, முன்னாள் டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் AMU துணைவேந்தர் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஜமீர் உதீன் ஷா, ஆர்எல்டி தலைவர் ஷாகித் சித்திக், தொழிலதிபர் சயீத் ஷெர்வானி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பசுவதைமற்றும்காஃபிர் (முஸ்லீம்அல்லாதவர்களுக்குகுறிக்கபயன்படும்சொல்) போன்றபிரச்சனைகள்குறித்துபேசப்பட்டது: குரைஷி மற்றும் சித்திக் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், “பேச்சுவார்த்தைசுமூகமானசூழலில்நடைபெற்றது. கூட்டத்திற்குப்பிறகு, முஸ்லிம்சமூகத்துடன்தொடர்ந்துதொடர்பில்இருக்கநான்குமூத்ததலைவர்களைபகவத்நியமித்தார். எங்கள்பக்கத்தில், ஆர்எஸ்எஸ்உடனானபேச்சுவார்த்தையைதொடரமுஸ்லீம்மூத்ததலைவர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள்மற்றும்தொழில்வல்லுநர்களைநாங்கள்நியமிக்கஉள்ளோம்.” பசுவதை மற்றும் காஃபிர் (முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குறிக்க பயன்படும் சொல்) போன்ற பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது[3]. பசுவதை மற்றும் காஃபிர் குறித்து மக்கள் மகிழ்ச்சியடையவில்லை என்று பகவத் கூறினார்[4]. அதற்கு பதிலளித்த நாங்கள், “அதன்மீதுஎங்களுக்கும்அக்கறைஉள்ளது. பசுவதையில்ஈடுபட்டால், சட்டத்தின்கீழ்தண்டிக்கப்படவேண்டும்என்றுகூறினோம். காஃபிர்என்பதுஅராபியமொழியில்நம்பிக்கையற்றவர்களைகுறிக்கபயன்படுத்துவது. இதுதீர்க்கப்படமுடியாதபிரச்சினைஅல்லஎன்றுஅவரிடம்கூறினோம். அதேபோல்இந்தியமுஸ்லீம்களைபாகிஸ்தானியர்அல்லதுஜெகாதிஎன்றுகூறும்போதுநாங்கள்வருத்தமடைகிறோம்,” என்று கூறினோம்.
நூபுர் ஷர்மா விவகாரம் மற்றும் தொடர்ந்த வன்முறை: ஆர்எல்டி தேசிய துணைத் தலைவர் சித்திக் கூறுகையில், “நூபுர் ஷர்மா விவகாரம் நடந்தபோது ஆர்எஸ்எஸ் உடன் சந்திப்பை நாடினோம். பல இடங்களில் வன்முறை நடந்தது. முஸ்லீம் சமூகத்துக்குள்ளும் அசாதாரண சூழல் உருவாகியிருந்தது. மோகன் பகவத் சந்திப்பதற்கான தேதியை பெற்ற நேரத்தில், நூபுர் ஷர்மா சம்பவம் நடந்து ஒரு மாதமாகிவிட்டது. அது சற்று ஓய்ந்திருந்தது. எனவே இரு சமூகத்தினருக்கும் இடையிலான வகுப்புவாத நல்லிணக்க விவகாரங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம் என்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார். இத்தகைய சந்திப்புகள், உரையாடல்கள், தொடரவேண்டும், அமைதி நிலவ வேண்டும், மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
நல்லிணக்கத்தைவலுப்படுத்தவும், உள்உறவுகளைமேம்படுத்தவும்முஸ்லீம்மதகுருகளைதலைவர்களைசந்தித்துவருகிறார்: பகவத்தின் திடீர் விசிட் குறித்து ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் பிரமுக் சுனில் அம்பேகர் வெளியிட்ட அறிக்கையில், “சர்சங்கசாலக் அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்கிறார். இது ‘சம்வத்’ செயல்முறையின் ஒரு பகுதியாகும்” என்று கூறினார்[5]. ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் கடந்த சில நாட்களாக மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், உள் உறவுகளை மேம்படுத்தவும் முஸ்லீம் மதகுருகளை தலைவர்களை சந்தித்து வருகிறார்[6].. மாற்று மதம் மற்றும் நம்பிக்கை கொண்டவர்களுடன் தொடர்பு ஏற்படுத்துவது என்ற நோக்கில் இந்த சந்திப்பு நடந்தது[7]. அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது[8]. மேலும் இது தொடர்ச்சியான இயல்பான சம்வத் செயல்முறையின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் தெரிவித்தார்[9]. ஆனால் கடந்த மாதமும் ஐந்து முஸ்லிம் தலைவர்களை பகவத் சந்தித்தார். அப்போது நாட்டில் நல்லிணக்க சூழல் நிலவுவது குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, பகவத் சமீபத்தில் டெல்லியின் முன்னாள் லெப்டினன்ட் கவர்னர் நஜீப் ஜங், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரைஷி, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜமீர் உதின் ஷா, முன்னாள் எம்.பி. ஷாகித் சித்திக் மற்றும் தொழிலதிபர் சயீத் ஆகியோரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது[10].
தீவிரவாததொடர்புகள்நீங்கவேண்டும்: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என கேரளா கோழிக்கோடு, டில்லி, மும்பை, அசாம், தெலுங்கானா, பெங்களூரூ, லக்னோ, சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட 13 மாநிலங்களில் தேசிய புலனாய்வு படையினர் நாடு முழுவதும் அதிரடி சோதனை மேற்கோண்டனர். அதனுடன் தொடர்பு கொண்டுள்ளவர்கள், குறிப்பாக சட்டவிரோதமான தொடர்புகள், நிதியுதவி பெறுபவர்கள், தீவிரவாத சம்பந்தம் உள்ளவர்கள் தண்டிக்கப் பட வேண்டும், மற்றவர்கள் அவர்களிடமிருந்து விலக வேண்டும். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை, சேர்ந்த 106 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கேரளா, தமிழகம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் வன்முறைச் செயல்களும் ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், அமைதி காக்க, இத்தகைய உரையாடல்கள் அந்தந்த மாநிலங்களிலும் ஆரம்பிக்க வேண்டும். மக்களுக்கு ஏற்றமுறையில் நெருங்கி வர உரையாடல்கள் அமைய வேண்டும். அப்பொழுது தான், பதட்டம் நீங்கி, நட்பு, உறவுகள் மேன்படும். இந்திய முஸ்லிம்கள் இந்தியாவின் பொருளாதார, மற்ற முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும்.
[3] தமிழ். இந்தியன்.எக்ஸ்பிரஸ், மோகன்பகவத்– முஸ்லிம்தலைவர்கள்சந்திப்பு: பசுவதைஉட்படமுக்கியபிரச்னைகள்பற்றிபேச்சு, Written by WebDesk, Updated: September 22, 2022 6:53:34 pm.
ஆர்எஸ்எஸ்அமைப்பின்முஸ்லிம்களுடனானஉரையாடல்: முன்னர் ஶ்ரீசுதர்ஷன்ஜி என்பவர் சங்கசாலக் / தலைவராக இருந்த போது, ஆர்எஸ்எஸ் கேரள கிருத்துவர்களுடன் உரையாடல் வைத்துக் கொண்டது[1]. அப்பொழுது கேரளாவில் கிருத்துவர்களுக்கும், ஸ்வயம் சேவகர்களுக்கும் மோதல்கள் இருந்து வந்தன. பிறகு நிலைமை சுமுகமானது. இப்பொழுது, கேரளாவில் கிருத்துவர்களுக்கும், ஸ்வயம் சேவகர்களுக்கும் உறவுகள் இன்னும் மேன்பட்டுள்ளது. மோடியை கிருத்துவ மதத் தலைவர்கள் வரவேற்கிறார்கள். வாரணாசியின் ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம், முஹம்மது நபி பற்றிய நுபுர் ஷர்மாவின் கருத்து, அதன் தொடர்பாக ஒரு இந்து கொலை செய்யப் பட்டது மற்றும் கர்நாடகாவில் ஹிஜாப் பற்றிய சர்ச்சை என இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தில் அமைதியின்மை நிலவிவந்த நிலையில், அனைத்து இந்திய இமாம் அமைப்பின் தலைவரான இமாம் உமர் அகமது இல்யாசியை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் டெல்லியில் உள்ள மசூதி ஒன்றில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சில வாரங்கள் முன்பு தான் “ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தைத் தேடிச் செல்ல வேண்டாம்,” என்று மோகன் பாகவத் பேசியிருந்தார். இதன் தொடர்ச்சியாக சந்திப்பு நடத்தியிருப்பது முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.
உலகின்மிகப்பெரியஇமாம்களுக்கானஅமைப்பாகஅகிலஇந்தியஇமாம்அமைப்புஆர்எஸ்எஸ்தலைவருக்குஅழைப்புவிடுத்துள்ளது: அகில இந்திய இமாம் அமைப்பு, இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுக்கான அமைப்பாக செயல்பட்டு வருகிறது[2]. உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பாக அகில இந்திய இமாம் அமைப்பு கருதப்படுகிறது[3]. இந்த அமைப்பின் தலைவரான உமர் அகமது இலியாசி. இவர், ஒரு மசூதிக்குள் வசிக்கிறார்[4]. அவரது வீடும் மசூதியும் ஒன்றுதான். அதில் ஒரு மதரஸாவையும் நடத்தி வருகிறார்[5]. இதை பார்வையிட, இமாம் இல்யாசி மோகன் பாகவத்தை அழைப்பு விடுத்திருந்தார். பின்னர் இந்தச் சந்திப்பு குறித்து தெரிவித்த உமர் அகமது இலியாசி, “எங்களதுஅழைப்பைஏற்றுஆர்எஸ்எஸ்தலைவர்மோகன்பாகவத், அகிலஇந்தியஇமாம்அமைப்பின்அலுவலகத்திற்குவருகைதந்ததுமிகுந்தமகிழ்ச்சிஅளிக்கிறது. அவர்நமதுநாட்டின்தந்தை. நான்கேட்டுக்கொண்டதற்குஇணங்க, தாஜ்வீதுல்குரான்மதரசாவைஅவர்பார்வையிட்டார். அங்குகல்விபயிலும்மாணவர்களுடன்அவர்கலந்துரையாடினார். அப்போது, நமதுமரபணுஒன்றுதான்என்றும், கடவுளைவழிபடும்முறைதான்வேறானதுஎன்றும்மோகன்பாகவத்கூறினார்,” எனத் தெரிவித்தார். இந்த மகிழ்ச்சியான வெளிப்பாடு, நல்ல சகுனமாக இருக்கிறது எனலாம்.
ஆர்எஸ்எஸ்தலைவர்மோகன்பகவத்மசூதிமற்றும்மதரஸாவுக்குவிஜயம்செய்தது: இருப்பினும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் டெல்லியில் உள்ள மசூதி, மதரசாவுக்கு 22-09-2022 அன்று திடீரென சென்றார்[6], என்று தினகரன் போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மதரசாவில் உள்ள முஸ்லிம் மாணவர்களுடன் கலந்துரையாடினார்[7]. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், டெல்லி கஸ்துாரிபாய் காந்தி மார்க்கில் உள்ள மசூதி மற்றும் ஆசாத்பூரில் உள்ள ஒரு மதரசாவுக்கு நேற்று சென்றார்[8]. மதரசா மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். பகவத் உள்ளே சென்றதும் மாணவர்கள் வந்தே மாதரம், ஜெய் ஹிந்த் என கோஷமிட்டு வரவேற்றனர்[9]. மோகன் பகவத் மதரசா செல்வது இதுவே முதல் தடவை என்று ஆர்எஸ்எஸ் பிரமுகர் தெரிவித்தார். இதெல்லாம்,ஈந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கான சிறந்த முயற்சியாகவே தென்படுகிறது. இன்றைய உலக சூழ்நிலைகளிலும், மக்களிடையே நட்புறவு மிக அத்தியாவசமாக தேவைப் படுகிறது. குறிப்பாக, பொருட்களை பகிர்ந்து நுகரும் நிலையில் உலக மக்கள் உள்ளார்கள். உக்ரைன்–ரஷ்யா போர் அதனை வெளிப்படையாக எடுத்துக் காட்டியுள்ளது. அதில் மதம், மொழி, முதலியவை பார்க்க முடியாது.
சுமுகமானபரஸ்பரபேச்சு: மோகன் பகவத் மாணவர்களிடையே பேசிய பகவத், ‘ஒவ்வொரு மதத்தினரின் வழிபாட்டு முறைகள் வேறு விதமானதாக இருந்தாலும், அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும்,’ என்பதை வலியுறுத்தினார். இது பற்றி அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எம்பி அசாதுதீன் ஒவைசி கூறுகையில், ‘ஆர்எஸ்எஸ்சின் கொள்கைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். முஸ்லிம் உயர் குடிமக்கள் சிலரை அவர் சந்தித்துள்ளார். அடிமட்டத்தில் உள்ளவர்களை பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியாது,’ என்றார்[10]. ஒருவேளை, இவ்வாறு இந்து-முஸ்லிம் தலைவர்கள் நெருங்கி வருவது அவருக்குக் காட்டமாக இருக்கிறது போலும். ஒருவேளை அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு விசயங்கள் புரியாமல், தெரியாமல் இருந்தால், அவர்களையும் உரையாடலுக்கு அழைக்கலாம். ஏனெனில், பெரும்பாலான மக்கள் சாதாரண மக்களே, அவர்கள் தினம்ம்-தினம் தங்களின் வேலை, தொழில், கடமைளை செய்ய வெளியே வந்து கொண்டிருப்பார்கள், சந்திப்பார்கள், பழகுவார்கள். தேசத் தந்தை பகவத்: இந்திய இமாம்கள் அமைப்பின் தலைவர் உமர் அகமது பேசுகையில், ‘மோகன் பகவத் இந்த நாட்டின் தேச தந்தை’ என்று புகழ்ந்தார். ஆனால். உடனே குறுக்கிட்ட மோகன் பகவத், ‘நாட்டுக்கு ஒருவர்தான் தேச தந்தை. நாம் அனைவரும் தேசத்தின் குழந்தைகள்,’ என்றார்[11]. அதாவது, மஹாத்மா காந்தி தான், தேசப் பிதா என்று வற்புருத்தியுள்ளதைக் கவனிக்கலாம்.
மதரஸாவுக்கு வருமாறு அழைத்த இமாம் இல்யாசி: “நீங்கள் மதரஸாவிற்குச் சென்று பாருங்கள். இப்போதெல்லாம் மதரஸாக்கள் பற்றி அதிகம் பேசப்படுகிறது. நீங்களே பாருங்கள் உங்களுக்குப் பிடிக்கும்,” என்று இமாம் இல்யாசி அழைப்பு விடுதத்தன் பேரில், கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பே சந்திப்பு திட்டமிடப்பட்டது என்று ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். பொதுவாக நேரில் சந்தித்து பேசும் பொழுது, பெரும்பாலான சந்தேகங்கள், தவறான புரிதல்கள் மற்றும் கருத்துகள் முதலியவற்றை உண்மை நிலை அறிந்து மாற்றிக் கொள்ளலாம். மேலும், இந்த சந்திப்பு நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையுடன் தொடர்பில்லாதது என்றும் ஆர்எஸ்எஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லி, உத்திரபிரதேசம், ஆந்திரா, தெலிங்கானா, தமிழகம் என்று பல மாநிலங்களில் மதரஸா செயல்பாடுகள், வக்பு சொத்துகள் பற்றிய சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. உபியில் மதரஸாக்களை பார்த்து, அளவிடும் வேலைகள் ஆரம்பித்துள்ளன. பெரும்பாலான, முஸ்லிம் அமைப்புகள், இதற்கு ஒப்புக் கொண்டுள்ளன.
[1] Inter-religious dialogue – மதங்களுக்குள் இடையிலான உரையாடல் என்ற முறையை கிருத்துவர்கள் கடைபிடித்து வருகிறார்கள். முஸ்லிம்கள் அதில் ஈடுபடாமல் இருந்தாலும், சூபித்துவம் போன்ற நிலைகளில் நெருங்கி வந்த / வரும் நிலைகள் உள்ளன.
அக்டோபர் 2021ல்அப்துல்லாமீதுகுற்றப்பத்திரிக்கைத்தாக்கல்: இஸ்லாமிய தேசம் ஒன்றை இந்தியாவில் தனியாக உருவாக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் மதுரையை சேர்ந்த அப்துல்லா (என்ற) சரவணகுமார் (31), என்பவர் ஆதரவு திரட்டியதாகக் கூறப்படுகிறது[1]. இவர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக மதுரை போலீசாரால் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு சிறப்பு போலீசாருக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. இந்த வழக்கு பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சரவணகுமார் மீது என்ஐஏ அதிகாரிகள், 5 வது செஷன்ஸ் நீதிபதி முன்பு நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்[2]. அப்துல்லா, அப்துல்லாவாகத்தான் செயல்படுகிறான், சரவணன் என்பதால், இந்தியாவை ஆதரிக்கவில்லை. மற்ற இந்துபெயர்கள் கொண்டவர்களும், தமிழகத்தில், இந்தியவிரோதிகளாகத் தான், பேசியும், எழுதியும் வருகின்றனர். பிறகு, இவ்விரு கூட்டங்களுக்கு எந்த வித்தியாசமும் இல்லை.
இஸ்லாமியஅடிப்படைவாதம்தூண்டும்துண்டுபிரசுரங்கள்: சாதிக் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததற்கான சில ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாக, என்.ஐ.ஏ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மயிலாடுதுறை, திருச்சி, கோவை என, பல இடங்களில் ரகசிய கூட்டங்கள் நடத்தி, துண்டு பிரசுரங்களை வழங்கி உள்ளனர். இவர்களிடம் எப்போதும் துப்பாக்கி இருக்கும். அதேபோல, ஒரு கைவிலங்கு, அதற்குரிய இரண்டு சாவிகளும் வைத்திருப்பர். காரில் மடிக்கணினி, ‘பவர் பாங்க், வீடியோ பேனா’ உள்ளிட்ட பொருட்களையும் வைத்திருப்பர். இவர்கள், பயங்கரவாத அமைப்புக்கு, சமூக வலைதளம் வாயிலாக, ஆட்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு நிதியுதவி செய்து வந்த நபர்கள் யார், அவர்கள் பின்னணி என்ன, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு நேரடி தொடர்பு உள்ளதா என்பதற்கான ஆதாரங்களை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் திரட்டி வருகின்றனர். இத்தனையும் தமிழக போலீஸாருக்குத் தெரியாமல் நடக்கின்றனவா அல்லது முஸ்லிம்கள் என்றதால், கண்டுகொள்ளாமல் இருக்கப் படுகிறதா?
கிலாபத்இயக்கம்நடத்தும்அடிப்படைவாதமுஸ்லிம்கள்: ஐ.எஸ் இயக்கத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், தஞ்சாவூரில் மூன்று பேரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் 12-02-2022 அன்று சோதனை நடத்தினர்[3]. கிலாபத் இயக்கத்தைச் சேர்ந்த மதுரை அப்துல்காதர் என்பவருக்கு ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும், இந்துக்கள் குறித்து சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளைப் பரப்பியதாகவும் ஓராண்டுக்கு முன்புதேசிய புலனாய்வு அமைப்பினரால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்[4]. இதேபோல, மன்னார்குடியைச் சேர்ந்த பாபா பக்ருதீன் என்பவரும் நான்கு மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கிலாபத் இயக்கத்தில் உள்ள –
தஞ்சாவூர் மகர்நோன்புசாவடி கீழவாசல் தைக்கால் தெருவைச் சேர்ந்த மெக்கானிக் அப்துல்காதர் (49),
அதே பகுதியை சேர்ந்த முகமதுயா சின் (30),
காவேரி நகரைச் சேர்ந்த அகமது (37)
இதனை தொடர்ந்து, தஞ்சை மகர்நோன்புசாவடியில் உள்ள அப்துல்காதர், முகமதுயாசின் மற்றும் காவேரி நகர் முகமது ஆகியோர் வீட்டுக்குள் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவாக பிரிந்து சென்றனர். ஆகியோரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். வீட்டில் இருந்து யாரும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. வீட்டை பூட்டி சோதனை நடத்தினர்.
என்.ஐ.ஏ சோதனை எதிர்த்து ஆர்பாட்டம் செய்த முஸ்லிம்கள்: இந்த சோதனை அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கி காலை 10 மணி வரை நடைபெற்றது. அப்போது, மூன்று பேரின் செல்போன்கள், ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், பிப்.16-ல் சென்னையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் மூன்று பேரையும் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் கொடுத்துவிட்டு, புறப்பட்டுச் சென்றனர். இதற்கிடையே மகர்நோன்புசாவடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்[5]. ஆதாரம் இன்றி சோதனை நடந்து வருவதாகவும், அவர்கள் மூன்று பேருக்கும் தொடர்பு இல்லை என்றும் கோஷமிட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்[6]. அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் சோதனையும், பொதுமக்கள் ஆர்ப்பாட்டமும் நடப்பதால் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் தஞ்சையில் பதட்டமான சூழல் நிலவுகிறது.
போலீஸாரை மிரட்டும் அளவுக்கு முஸ்லிம்களுக்கு தைரியம் கொடுப்பது எது, யார்?: இந்த அளவுக்கு முஸ்லிம்களுக்கு தைரியம் கொடுப்பது யார்? என்,ஐ,ஏ.வையே எதிர்த்து ஆர்பாட்டம் செய்வது, கேள்விகள் கேட்பது எல்லாம் எந்த அளவுக்கு மோசமானது, ஏன் ஆபத்தானது என்பதனை அறிந்து கொள்ளலாம். முஸ்லிம்கள் ஓட்டு கிடைக்கும், மறைமுகமாக வேறு பலன்கள் கிடைக்கும் என்றெல்லாம் அரசியல் கட்சிகள் செயல் படலாம். ஆனால், அவையெல்லாம் தேசவிரோதமாகத்தான் முடியும். இவ்வாறு, முஸ்லிம்களுக்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதே, ஊக்கம் கொடுப்பதற்கு சமம் ஆகும். மேலும் “தொப்புள் கொடி உறவுகள்” என்றெல்லாம் பேசும் போது, எங்களை ஒன்றும் செய முடியாது, அரசே ஆதரவாக உள்ளது என்ற தொரணையும் வரும். அதுதான், மயிலாடுதுறை போலீஸாரைப் பார்த்து அந்த முஸ்லிம்கள் திமிருடன் கேட்டது.
போலீஸார் உதவியுடன் என்.ஐ.ஏ சோதனை: முன்னதாக, அப்துல்காதர் மற்றும் முகமது யாசின் வீடுகளில் என்ஐஏ சோதனை நடத்துவதை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட முஸ்லிம்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. தஞ்சாவூர் ஏடிஎஸ்பி பிருந்தா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சோதனை முடிந்து வெளியில் வந்த என்ஐஏ அதிகாரிகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சூழ்ந்துகொண்டு, முழக்கம் எழுப்பினர். அவர்களை போலீஸார் கலைந்து போகச் செய்தனர். இதேபோல, காரைக்கால் நகராட்சி சந்தைத் திடலுக்கு எதிரே உள்ள ராவணன் நகர் பகுதியில் வசிக்கும் உணவக உரிமையாளரான அப்துல்அமீன் என்பவரின் வீட்டிலும் என்ஐஏஅதிகாரிகள் 12-02-2022 அன்று அதிகாலை 5மணி முதல் பகல் 1 மணி வரை சோதனை நடத்தினர்.
14-03-2022 அன்று, கீழ்கண்டவர்கள்மீதுவழக்குத்தொடரப்பட்டது[7].
பாவா பஹ்ருத்தீன் என்கின்ற மன்னார் பாவா, சம்சுதீன் மகன், வயது 41, மன்னார்குடி, தஞ்சாவூர் ( Bava Bahrudeen @ Mannai Bava s/o Samsudeen,aged 41 yrs, r/o Mannargudi, Tiruvarur District, Tamil Nad) மற்றும்
ஜியாவுத்தீன் ஜாகுபார் மகன், வயது 40, கும்பகோணம், தஞ்சாவூர் ( Ziyavudeen Baqavi, s/o Jagubar, aged 40 yrs, r/o Kumbakonam, Thanjavur Dt),
இசமா சாதிக் எனப்படுகின்ற சாதிக் பாட்சா இத்தகைய தேசவிரோத நடவடிக்கைகளுடன், மனித நீதி பாசறை என்ற அமைப்பின் உறுப்பினருமாகவும் உள்ளார். அது இப்பொழுது போப்புலர் பிரென்ட் ஆப் இன்டியரேன்றழைக்கப் படுகிறது. எப்.ஐ.ஆர்,ன் படி இந்த ஐந்து நபர்களும், இஐசிஸ் சித்தாந்தத்தைப் பரப்பி, தேசவிரோதத்தை வளர்த்து வருகின்றனர். இந்தியாப் பகுதிகளைத் துண்டாடி அவற்றை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும் அல்லது “பிரச்சினை உள்ள பகுதி” என்று அறிவிக்கப் படும் வகையில் தீவிரவாதத்தை உண்டாக்கவேண்டும் என்று, “இந்திய கிலாபா கட்சி (Khilafah Party of India),” “இந்திய கிலாபா முன்னணி (Khilafa Front of India),” “இந்திய அறிவிஜீவி மாணவர் (Intellectual Students of India),” “இந்திய மாணவர் கட்சி (Student Party of India),” என்றெல்லாம் உருவாக்கி, செயல்பட திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
[3] தமிழ்.இந்து, 3 பேருக்குஐ.எஸ்உடன்தொடர்பு? – தஞ்சையில்என்ஐஏசோதனை: முஸ்லிம்கள்போராட்டத்தால்பரபரப்பு, செய்திப்பிரிவு, Published : 13 Feb 2022 11:22 AM; Last Updated : 13 Feb 2022 11:22 AM
பாராமவுன்ட்மார்க்கெட்டிங்கார்ப்பரேஷன்முதல்ஷேக்முகைதீன்வரை (2010-2021)[1]: மதுரை சின்னசொக்கிகுளத்தில் பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி பண மோசடி செய்ததாக, அதன் உரிமையாளர் ஷேக் முகைதீனை (62), மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்[2]. முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவுப்படி, ஷேக் முகைதீனை இரண்டு நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவரை நேற்று போலீசார் மாஜிஸ்திரேட் முத்துக்குமரன் முன் ஆஜர்படுத்தினர். அவரை மீண்டும் ரிமாண்ட் செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலம்: “போலீஸ்துறையில்விரல்ரேகைபிரிவுநிபுணராக 1970ல்சேர்ந்தார். 2005ல்விருப்பஓய்வுபெற்றேன். சென்னையில்பசிபிக்நிறுவனம்தனதுவாடிக்கையாளர்களுக்குசுவர்கடிகாரம்வழங்கியது. அதைப்பார்த்து, தனியாகதொழில்துவங்கவேண்டும்என்றஎண்ணம்ஏற்பட்டது. மதுரையில்பாராமவுன்ட்மார்க்கெட்டிங்கார்ப்பரேஷன்என்றபெயரில்நிறுவனத்தைதுவங்கினேன். இதன்நிர்வாகஇயக்குனர்களாகநானும் (ஷேக்முகைதீன்), எனதுமனைவிமனைவிஜானு, மகன்கள்சர்தார்உசேன், யாகூப்உசேன்மற்றும்சிவக்குமார், முபாரக்அலிஆகியோர்இருந்தோம்”.
ஷேக்முகைதீன்வாக்குமூலத்தில்சொன்னது[3]: “திருக்குறள்புத்தகங்களைவிற்பதில்கிடைக்கும்லாபத்தைவாடிக்கையாளர்களுக்குபிரித்துகொடுப்பதாகஅறிவித்தேன். குறைந்தபட்சம் 100 ரூபாய்முதல்பத்தாயிரம்ரூபாய்வரைஎனபல்வேறுதிட்டங்கள்அறிவிக்கப்பட்டன. திட்டங்களுக்குஏற்பவாடிக்கையாளர்களுக்குலாபம்கிடைக்கும். இதில்ஒருகோடியே 20 லட்சம்பேர்வாடிக்கையாளர்களாகசேர்ந்தனர். அவர்களிடம்இருந்து 210 கோடிரூபாய்வரைவர்த்தகம்நடந்தது. அதில் 200 கோடிரூபாய்க்குவாடிக்கையாளர்களிடம்பணம்திருப்பிவழங்கப்பட்டுள்ளது. பத்துகோடிரூபாய்மட்டுமேவாடிக்கையாளர்களுக்குசெலுத்தவேண்டியுள்ளது. குட்ஷெட்தெருவில்உள்ளஆக்சிஸ், கோட்டக், ஐ.சி.ஐ.சி.ஐ., தல்லாகுளம்கரூர்வைஸ்யாவங்கிகளில்கணக்குதுவங்கினேன். வங்கிகளில் 80 லட்சம்ரூபாய்உள்ளது. குவாலிஷ், இன்னோவா, டெம்போஆகியவாகனங்கள்உள்ளன. அழகர்கோயிலில்இரண்டரைஏக்கர்நிலம்உள்ளது. மத்தியரிசர்வ்வங்கியின்திடீர்உத்தரவால்வாடிக்கையாளர்களுக்குகுறிப்பிட்டநாளில்பணத்தைதிருப்பிவழங்கஇயலவில்லை”, இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
“திருக்குறளும், திருக்குர்ஆனும்”- “திட்டப்பணி” செய்ய, ரூ, 2, 50, 000/- “செம்மொழி” செய்திமடல்-1 (2010): இந்நிலையில், முனைவர் முகம்மது அலி ஜின்னா என்பவர் “திருக்குறளும், திருக்குர்ஆனும்” என்ற தலைப்பில் “திட்டப்பணி” செய்ய, “ஆய்வறிஞர்” என்ற ரீதியில் ரூ, 2, 50, 000/- (இரண்டரை லட்சம் ரூபாய்) கொடுக்கப்பட்டுள்ளதாக “செம்மொழி” செய்தி மடல்- 1 கூறுவது[4] வேடிக்கையாக உள்ளது! இஸ்லாத்தைப் பொறுத்தவரையிலும் அவர்களுடையதை எவர்களுடையதும் கூட இப்போதும், எங்கும், எவ்வாறும் ஒப்பீடு செய்யக்கூடாது, சமன் செய்யக் கூடாது, ………………………என்றெல்லாம் இருக்கும்போது, இந்த ஜின்னா எப்படி பணம் வாங்கினார்? எப்படி ஆராய்ச்சி செய்யப் போகிறார்? அறம், பொருள், இன்பம் என்ற முப்பாலுடன், எவ்வாறு குரானை பொறுத்திப் பார்க்கப் போகிறார்,………………….. முதலியவற்றைப் பற்றியெல்லாம் பொறுத்துதான் பார்க்கவேண்டும்[5] போல இருக்கிறது! இருப்பினும், தன்னது ஆராய்ச்சி விண்ணப்பப் படிவத்தில், அதைப் பற்றி சொல்லியிருப்பார். அதை பார்க்கவேண்டும். ஆக பொய் சொல்லி அரசு பணத்தை ஆராய்ச்சி என்ற பெயரில் அபகரிப்பது என்பது இப்படிகூட இருக்கும் போல இருக்கிறது. மேலும் யார் இந்த முகம்மது அலி ஜின்னா என்பதும் தெரியவில்லை! இது எழுதி மூன்று மாதங்கள் ஆகின்றன. முகம்மது அலி ஜின்னா வந்தாரோ இல்லையோ, ஷேக் மைதீன் என்ற இன்னொரு முஸ்லீம் கிளம்பி 220 கோடிகளை ஏமாற்றிவிட்டாராம்!
திருக்குறளைவிற்றுவியாபாரம்: திருக்குறள் புத்தகம் விற்பனை வாயிலாக, மதுரை தனியார் நிறுவனம், 65.46 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், அதன் சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்து, முதலீட்டாளர்களுக்கு வழங்க, அரசுக்கு மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது[6]. மதுரை, சின்ன சொக்கிகுளம் அஜ்மல்கான் ரோட்டில், ‘பாரமவுண்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன்’ நிறுவனம் செயல்பட்டது[7]. ’10 ஆயிரம் ரூபாய் செலுத்தி, 100 திருக்குறள் புத்தகங்கள் வாங்க வேண்டும்; 37வது மாதத்தில், 46 ஆயிரத்து 900 ரூபாய் முதிர்வு தொகை வழங்கப்படும்’ என அறிவிக்கப்பட்டது[8]. இதை நம்பி, 45 ஆயிரத்து 501 பேர், 65.46 கோடி ரூபாய் முதலீடு செய்தனர்[9]. இதை முதலீட்டாளர்களுக்கு தராமல், நிறுவனத்தைச் சேர்ந்த ஷேக் முகைதீன், கவுஸ் சர்தார் ஹூசைன், ஷானு ஷேக், கவுஸ் யாகூப் ஹூசைன், பானு ஆகியோர் தங்கள் சொந்த வங்கி கணக்கிற்கு மாற்றி, அசையும், அசையா சொத்துக்கள் வாங்கினர். பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் 2010ல் மோசடி வழக்குப் பதிந்தனர். ஷேக் முகைதீன் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர். அவர், 2005ல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.மோசடி வழக்கை விசாரித்த மதுரை முதலீட்டாளர் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்ற – டான்பிட் -நீதிபதி ஹேமானந்தகுமார் உத்தரவு: “முதலீட்டாளர்களைபாதுகாக்கும்வகையில், தமிழகஅரசுசட்டம்இயற்றியுள்ளது. வழக்குவிசாரணையைதாமதப்படுத்தமுயற்சிக்கும்நோக்கில், எதிர்மனுதாரர்கள்மனுக்கள்மேல்மனுதாக்கல்செய்துள்ளனர். முதலீட்டாளர்களின்பணத்தில்எதிர்மனுதாரர்கள்சொத்துக்கள்வாங்கியுள்ளதைஅரசுதரப்புநிரூபித்துள்ளது.சொத்துக்களைஜப்திசெய்ய, தமிழகஅரசுபிறப்பித்தஉத்தரவுஉறுதிசெய்யப்படுகிறது. நிறுவனத்தின்வாகனங்கள், அசையாசொத்துக்களைபொதுஏலத்தில்விற்று, பணத்தைமுதலீட்டாளர்களுக்குவழங்கசம்பந்தப்பட்டஅதிகாரிநடவடிக்கைஎடுக்கவேண்டும்,” இவ்வாறு, அவர் கூறினார்.
குரளை, திருக்குறளைப்பழித்தமுஸ்லீம்கள்: முன்பு, இதே முஸ்லீம்கள், “குரானா, குறளா?” என்ற விவாதம் வந்துபோது, குறள் சிறுநீர் கழித்த பிறகு துடைத்துப் போடக்கூட லாயக்கற்றது……………….என்றெல்லாம் பேசி, எழுதி, பதிப்பது திராவிட தமிழர்கள் மறந்து விட்டார்கள் போலும். மேலும் இதில் நோக்கத்தக்கது திருக்குறளையே “குறள்” என்று கூறுவதுதான். தமிழ் மீது, திருக்குறள் மீது தமிழர்களுக்கு, மதிப்பு, காதல், அன்பு, மரியாதை…………இருந்திருந்தால், இவ்வாறு, திருக்குறளைக் கேவலப்படுத்திய முஸ்லீம்களை எப்படி நம்புகிறார்கள்? கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? ஒருவேளை குரானை அச்சடித்து, புத்தகங்கள் போட்டு, விற்று, அதில் கிடைக்கும் லாபத்தை பகிர்ந்து கொடுப்பதாக கூறியிருந்தாலும் நம்பியிருப்பார்களா?[10] இல்லை நம்பமாட்டார்கள், வியாபாரத்திற்கு குரான் எடுபடாது, திருக்குறள்தான் கவர்ச்சிகரமாக இருக்கும், செம்மொழி மாநாடு வேறு நடக்கிறது, வியாபாரத்தை கருணாநிதியே வந்து துவங்கி வைப்பார், அல்லது, செம்மொழி மாநாட்டில் விநியோகம் நடத்தப் படும் என்றெல்லாம் கூட பிரச்சாரம் நடந்திருக்குமோ என்று தெரியவில்லை[11].
அண்மைய பின்னூட்டங்கள்