Archive for the ‘அமைதி டிவி’ category

ஜாகிர் நாயக்கின் “இஸ்லாமிய ஆராய்ச்சி இயக்கம்” சட்டத்திற்குப் புறம்பாக இயங்கும் இயக்கம் என்று அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது!

நவம்பர் 16, 2016

ஜாகிர் நாயக்கின்இஸ்லாமிய ஆராய்ச்சி இயக்கம்சட்டத்திற்குப் புறம்பாக இயங்கும் இயக்கம் என்று அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது!

How-Indian-Media-Got-Mad-On-Zakir-Naik-And-Hafiz-Saeed-Links-Must-Watchபங்களாதேச தீவிரவாத கொலைகள் மூலம் ஜாகிர் நாயக்கின் ஜிஹாதி தூண்டுதல் பிரச்சாரம் வெளிப்பட்டது: ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் தீவிரவாத தாக்குதலுக்கு வங்காளதேச முஸ்லிம்கள் தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. வங்கதேச தலைநகர் டாக்காவில் கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி 2016 பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவரான ரோஹன் இம்தியாஸ், முகநூலில் வெளியிட்ட பதிவில் ஜாகிர் நாயக்கின் உரை தனக்கு ஊக்கமளித்ததாக தெரிவித்திருந்தார்[1]. இதையடுத்து, நாட்டை விட்டு வெளியேறிய ஜாகிர் நாயக், அதன்பிறகு மீண்டும் திரும்பி வரவில்லை. வெளிநாட்டிலேயே தங்கிவிட்டார்[2]. எனவே ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்தியாவை வங்காளதேச அரசு கேட்டுக் கொண்டது. வங்கதேசத்தில் ஒளிபரப்பாகும் அவருக்குச் சொந்தமான “பீஸ் டிவி’க்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. ஜாகீர் நாயக்கின் மதபோதனைகள் பிரிவினையைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளில் நுழைய அவருக்கு அந்நாட்டு அரசுகள் ஏற்கெனவே தடை விதித்துள்ளன. மலேசிய அரசும் அவரது பிரசாரத்துக்குத் தடை விதித்தது.

Raheel Sheikh, Hafeez Saeed, Zakir Naik - how they are connected though jihadஉள்நாட்டு ஜிஹாதிகளை ஊக்குவித்து தீவிரவாதத்தை வளர்க்கிறது என்பதும் தெரிய வந்தது: மும்பை, ஹைதராபாத், கேரளா, சென்னை / தமிழகம், போன்ற இடங்களில் கைதான முஸ்லிம் இளைஞர்களின் தீவிரவாத – ஐசிஸ் தொடர்புகளும் ஜாகிர் நாயக்கின் தீவிரவாத ஊக்குதல் எடுத்துக் காட்டியது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஆதரிக்கிறேன் என்ற போர்வையில், தீவிரவாத-பயங்கரவாதத்தையே நாயக் தூண்டி விட்டுள்ளது உறுதியானது. இதனால், ஜாகீர் நாயக் “இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன்” (ஐஆர்எப்) [Islamic Research Foundation (IRF)] கல்வி அறக்கட்டளை, ‘பீஸ் டிவி’ [Peace TV] ஆகியவற்றை நிறுவி, தீவிரவாதத்தை தூண்டும் வகையில் மதப் பிரச்சாரம் செய்து வருவதாகவும், பிற மதங்களை இழிவுப் படுத்தி, முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகளாக மாற வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வருவதாக ஜாகீர் நாயக் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகள் எழுந்தது[3].

Rohan Imtiyaz and young jihadis 01-07-2016 insired by Zakir Naik.மாநில மத்திய அரசுகள் நடவடிக்கை எடுத்தது: மஹாராஷ்ட்ரா அரசு முஸ்லிம் இளைஞர்களை மதவாதிகளாக்கி, தீவிரவாதத்தில் ஈடுபடுத்துகிறார் என்று வழக்குகள் பதிவு செய்துள்ளது[4].  மும்பை சிறப்புப் பிரிவு [Special Branch (SB) போலீஸார், Mumbai police]  மற்றும் பொருளாதார குற்றப் பிரிவு [Economic Offences Wing (EOW)] முதலிய அதிகாரிகள், மேற்குறிப்பிடப்பட்ட அலுவலங்களில் சோதனையிட்டு, குற்றஞ்சாட்டப்படக் கூடிய வகையில் உள்ள ஆவணங்களைக் கைப்பற்றினர்[5]. அயல்நாட்டு பணம் வரவு கட்டுப்பாடு சட்டத்தின் பிரிவுகளை [Foreign Contribution (Regulation) Act (FCRA)] மீறி பணம் பெறப்பட்டதும் தெரிந்தது. அதை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியது[6]. விசாரணையில் வெளிநாட்டு அன்பளிப்பு கட்டுப்பாடுகள் சட்டத்தை (எப்சிஆர்ஏ) ஐஆர்எப் கல்வி அறக்கட்டளை மீறி செயல்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது[7]. இந்திய ரிசர்வ் வங்கியின் [RBI] முன்னனுமதி இல்லாமல்  பணம் பெற்றதும் உறுதி செய்யப்பட்டது[8]. அந்த அமைப்புக்கு சட்ட விரோதமாக வெளிநாடுகளில் நிதி வருவது ஆதாரப்பூர்வ தெரியவந்தது. மேலும், பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பரப்புரை செய்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக, உளவுத் துறை அளித்துள்ள பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் ஜாகீர் நாயக் நடத்தும் என்ஜீஓ நிறுவனம் சட்டத்திற்கு புறம்பான நிறுவனம் என அடையாளப்படுத்தப்படுவதாக உறுதியானது.

Zakir says he cannot take responsibilityஎல்லாவற்றையும் ஆராய்ந்து மத்திய அரசு தடை செய்ய தீர்மானித்தது: இந்நிலையில், சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்புக்கு மத்திய அரசு [Unlawful Activities Prevention Act (UAPA)] கீழ் ஐந்து வருடங்கள் தடை விதித்துள்ளது[9]. மேலே கூறப்பட்டுள்ள விவகாரங்களை முறைப்படி ஆய்ந்து, ஆவணங்கள் முதலியவற்றை சர்பார்த்து சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதை உறுதி செய்து, அதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 15-11-2016 அன்று நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது[10]. இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு எதிராக அவரின் பேச்சுக்கள் இருப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

zakir-mumba- A. N. Orchidஜாகிர் நாயக் மேல் முறையீடு செய்யலாம் என்று “தி இந்து” ஆலோசனை செய்தி வெளியிட்டுள்ளது: ஐ.ஆர்.எப்பை தடை செய்ய பாராளுமன்ற அனுமதி தேவைப்படுகிறது, அதற்குப் பிறகு அரசு கெஜட்டில் முறைப்படி “தடை செய்யப்பட்ட இயக்கம்” என்று அறிவிக்கப் படும்[11]. இதை எதிர்த்து டிரிப்யூனல் [Tribunal] மூலம் மேல்முறையீடு செய்யலாம்[12] என்றெல்லாம் “தி இந்து” விவரிக்கிறது. அதாவது, நடந்துள்ள தீவிரவாத, பயங்கரவாத, ஜிஹாதி குண்டுவெடுப்புகள், குரூர கொலைகள் முதலியவற்றைக் கண்டு கொள்ளாமல், உயிரிழந்த அப்பாவி மக்கள், அவர்களின் மனைவி-மக்கள், உறவினர்கள் முதலியோரின் உரிமைகளைப் பற்றிக் கவலைப் படாமல், ஜாகிர் நாயக் சட்டப்படி எப்படி தப்பித்துக் கொள்ளலாம் என்று ஆலோசனை சொல்லும் ரீதியில் செய்திகளை வெளியிடுவது திகைப்பாக இருக்கிறது. அரசுக்கு இதெல்லாம் தெரியாமலா நடவடிக்கை எடுத்துள்ளது? இத்தகைய செய்திகளும் தீவிரவாதத்தை மறைமுகமாக ஆதரிப்பதாக உள்ளது.

Zakir supporting Osama bin ladenஊடகங்கள் தீவிரவாத, பயங்கரவாத, ஜிஹாதி குண்டுவெடுப்புகள், குரூர கொலைகள் தடுக்கப்பட வேண்டும், முஸ்லிம் இளைஞர்கள் நல்லவழியில் செல்ல வேண்டும் என்று ஏல் ஆலோசனை சொல்லக் கூடாது?: அதற்கு பதிலாக, சட்டப்படி, நடவடிக்கை எப்படி எடுக்கப்பட வேண்டும், இத்தகைய தீவிரவாத, பயங்கரவாத, ஜிஹாதி குண்டுவெடுப்புகள், குரூர கொலைகள் தடுக்கப்பட வேண்டும், முஸ்லிம் இளைஞர்கள் நல்லவழியில் செல்ல வேண்டும் என்றெல்லாம் ஆல்லோசனை கூறி, செய்திகளை வெளியிடலாமே? அவ்வாறு வெளியிட நிருபர்களுக்கு தெரியவில்லையா அல்லது “தி இந்து” அவ்வாறெல்லாம், நாட்டுக்கு, இளைஞர்களுக்கு நல்லது செய்யும் விசயங்களை வெளியிட வேண்டாம் என்று ஆணையிட்டுள்ளதா? கனடா, இங்கிலாந்து, மலேசியா போன்ற நாடுகளிலும், மேல்முறையீடு செய்யலாம் என்று ஆலோசனை சொல்லலாமே? அந்த நாடுகளில் உள்ள சட்ட நிபுணர்களையெல்லாம் விட, “தி இந்து” நிருபர்கள் பெரிய சட்ட ஆலோசகர்கள் ஆகி விட்டார்கள் போலும். விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பிரச்சாரம் செய்வதை விடுத்து, இவ்வாறு சித்தாந்த ரீதியில் வேலை செய்வது தான். “தி இந்துவின்” முகமூடியை அவ்வப்போது, திறந்து காட்ட வைக்கிறது.

© வேதபிரகாஷ்

16-11-2016

Bangladesh-bans-televangelist-Zakir-Naik-s-Peace-TV

[1] தினமணி, ஜாகிர் நாயக்கின் அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை: மத்திய அமைச்சரவை முடிவு, By DIN  |   Published on : 16th November 2016 02:44 AM

[2]http://www.dinamani.com/india/2016/nov/16/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-5-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-2599256.html

[3] தமிழ்.ஒன்.இந்தியா, மதபோதகர் ஜாகீர் நாயக்கின் அறக்கட்டளைக்கு 5 ஆண்டுகள் தடை !, By: Karthikeyan, Updated: Wednesday, November 16, 2016, 0:27 [IST]

[4] Deccan Herald, Govt bans Zakir Naik’s organisation, Wednesday 16 November 2016
News updated at 2:37 AM IST.

http://www.deccanherald.com/content/581315/govt-bans-zakir-naiks-organisation.html

[5] The Hindustan Times, IRF ban: Mumbai police await notification, clarity before initiating action, Saurabh M Joshi, Hindustan Times, Mumbai, Updated: Nov 16, 2016 01:10 IST

[6] http://www.hindustantimes.com/mumbai-news/irf-ban-mumbai-police-await-notification-clarity-before-initiating-action/story-iagR2YPHn98Qdxqq8OYIrL.html

[7] http://tamil.oneindia.com/news/india/zakir-naik-ngo-banned-five-years-267327.html

[8] http://www.deccanherald.com/content/581315/govt-bans-zakir-naiks-organisation.html

[9] மாலைமலர், மதபோதகர் ஜாகீர் நாயக்கின் அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை, பதிவு: நவம்பர் 16, 2016 03:55

[10] http://www.maalaimalar.com/News/TopNews/2016/11/16035525/1051018/Government-bans-controversial-preacher-Zakir-Naiks.vpf

[11] The Hindu, Centre bans Zakir Naik’s NGO, calls it ‘unlawful’, New Delih, November 15, 2016

[12] Banning any organisation under the Unlawful Activities Prevention Act (UAPA) requires an approval by the Cabinet, and a Gazette notification will follow soon. A Tribunal will be set up where Dr. Naik could challenge the ban on his NGO.

http://www.thehindu.com/news/national/zakir-naiks-ngo-banned-for-5-years/article9349724.ece

ஜாகிர் நாயக் – கேரளா- ஐசிஸ் விவகாரங்களில் 23-07-2016 வரை மும்பையில் மூன்று பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்!

ஜூலை 24, 2016

ஜாகிர் நாயக் – கேரளா- ஐசிஸ் விவகாரங்களில் 23-07-2016 வரை மும்பையில் மூன்று பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்!

Raheel Sheikh, Hafeez Saeed, Zakir Naik - how they are connected though jihad

ஜாகிர் நாயக்கிற்கு ரஹீல் செயிக்கைத் தெரியும்: ரஹீல் செயிக் தன்னுடய நிறுவனங்களில் நிகழ்ச்சிகளுக்காக வேலைசெய்துள்ளதை ஜாகிர் நாயக் ஒப்புக்கொண்டுள்ளார். “ஆயிரக்ககணக்கில் உள்ள தொண்டர்களில் அவனும் ஒருவன். ஊடகங்களின் மூலம் தான், அவக் சந்தேகிக்கப்படும் தீவிரவாதி என்று எனக்கு தெரிய வந்தது. அதனால், அவன் தோன்றும் காட்சிகளை எங்களுடைய வீடியோக்களிலிருந்து எடுத்துவிட சொன்னேன். ஏனென்றால், அதனை பார்ப்பவர்கள், அவனும் ஐ.ஆர்.எப்புடன் தொடர்புடைவன் என்ற நினைக்கக்கூடும் என்பதால், அவை நீக்கப்பட்டன”, என்று விளக்கினார்[1]. அதாவது, ஜாகிர் நாயக்கே தனக்கு சாதகமாக இல்லை என்றால், எடுத்த வீடியோக்களில் சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன என்று தெரிகிறது. பிறகு, தான் பேசிய பேச்சுகளே “எடிட் / டாக்டர்டு” (மாற்றம் செய்யப்பட்ட) செய்யப்பட்டுள்ளன என்று இப்பொழுது சாக்கு சொல்வதேன்? அதற்கு திக்விஜய் சிங்கும் ஒத்து ஊதியதை கவனிக்கத் தக்கது. இவ்வாறு ஆதாரங்கள் மாற்றப்பட்டிருப்பது, திக்விஜயுக்கு முன்பே தெரியுமோ?

Rohan Imtiyaz and the gang 01-07-2016 shootingதற்கொலை தாக்குதல் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படுகிறதுஜாகிர் நாயக்கின் வாதம்[2]:. பங்காளதேச தற்கொலை தாக்குதல் விசயத்தில், தற்கொலை தாக்குதலை நியாயப்படுத்தியதோடு, இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் எப்படி குண்டு போட்டதோ அது போல என்று விளக்கமும் அளித்தார். ஆனால், ஜப்பானியர்களுக்கு குரானும் இல்லை, ஜிஹாத் போன்றா வெறித்தனங்களும் இல்லை. தற்கொலை தாக்குதல் இஸ்லாத்தில் ஒரு யுத்த யுக்தியாக கையாளப்பட்டு வருவதால், அது அனுமதிக்கப்படுகிறது. ஆனால், அதில் அப்பாவிகள் கொல்லப்பட்டால் அது ஹராம் ஆகும், என்று ஜாகிர் நாயக் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்[3]. அதுமட்டுமல்லாது, செயிக் அப்த்-அ- இபின் பாஜ், என்ற சலாபி இஸ்லாமிய மதத்தலைவர் ஆதரிப்பதாக எடுத்துக் காட்டினார்[4]. இவர் சவுதி அரேபியாவின் தலைமை முப்தி ஆவார். அப்துல்-முஸ்ஹின் அல்-அப்பாத் என்ற இன்னொரு இஸ்லாமிய சலாபி வல்லுனர் பெயரையும் குறிப்பிட்டார்[5]. இப்படி மற்ற சலாபி வல்லுனர்கள் ஆதரித்து, ஒப்புதல் அளித்துள்ள விவரங்களை இங்கு படிக்கலாம்[6].

Rohan Imtiyaz and young jihadis 01-07-2016 insired by Zakir Naik.இஸ்லாம் தற்கொலை தாக்குதலை ஆதரிப்பது ஏன்?: இஸ்லாத்தைப் பொறுத்த வரையில், உலகத்தில் உள்ள குப்ரு (இஸ்லாத்திற்கு விரோதமாக உள்ளவை என்று தீர்மானப்படுத்தப்பட்டுள்ளவை) தன்மை ஒழியும் வரை, ஜிஹாத் என்கின்ற சண்டையை ஒவ்வொரு முஸ்லிமும் செய்து கொண்டே இருக்க வேண்டும். “உலகத்தில் காபிர்கள் இருக்குவரை, அல்லாவின் வழியில் சண்டையிட்டுக் கொண்டே இரு”, என்கிறது குரான். அதாவது, காபிர்கள் முழுவதுமாக நீக்கப்பட்டால் தான், கொலை செய்யப்பட்டால் தான், அந்த ஜிஹாத் நிறுத்தப்படும். உலகத்தில், முஸ்லிம்கள் தவிர மற்றவர்கள் எல்லோருமே அழிய வேண்டும் என்றால், இந்து ஜிஹாதி-தீவிரவாதிகள் காலத்திற்கு ஏற்ப எந்த முறைகளையும் கையாளுவார்கள். கத்தி போய், துப்பாக்கி வந்து, அத்துப்பாக்கியும் ஏ.கெ-47 என்று மாறி, பிறகு ராக்கெட் லாஞ்சர், குண்டுவெடுப்பு கொலை என்று வளர்ந்து வருவதால், இத்தகைய தற்கொலை ஜிஹாதையும் ஆதரிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இதனால் தன் இஸ்லாமிய மதகுருக்கள் அதனை பறிந்துரைக்கின்றனர்[7].

Can Naik blamed for JuD website link argues-but story differsஜாகிர் நாயக் எங்குள்ளார்?: ஜாகிர் நாயக் இந்தியாவுக்கு வராதது வியப்பாக உள்ளது. வீடியோ / ஸ்கைப் மூலம் பதில் சொன்னதால், அவர் சவுதி அரேபியாவில், துபாயில் அல்லது ஏதோ ஒரு ஆப்பிரிக்க நாட்டில் உள்ளார் என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன. மேலும், உள்துறை அமைச்சகம் ஐ.ஆர்.எப்பிற்கு, யார்-யாரிடமிருந்து பணம் வந்துள்ளது என்பதையும் ஆராய ஆரம்பித்து விட்டது. இதனால், அந்த தொடர்புகள் மற்ற விவகாரங்கள் அறியப்படும். அந்நிலையில், ஜாகிர் நாயக்கிடம் வேலை செய்த ஒருவர், அவர் அயல்நாடுகளிலிருந்து வரும் பணத்தை தவறாகப் பயன்ப்டுத்துகிறார் என்று ஜி-டிவிக்கு பேட்டி கொடுத்துள்ளார். ஏழை முஸ்லிம்களுக்கு என்று கொடுக்கும் பணத்தை இவர், தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதற்கு செலவழிக்கிறார். மேலும், “மணி லான்டரிங்” முறையற்ற பண-பரிவர்த்தனையிலும் ஈடுபட்டுள்ளார் என்று குற்றஞ்சாட்டுகிறார்[8]. நாயக் உச்சநீதி மன்றத்தில் பல மாநிலங்களில் பலதரப்பட்ட அரசு துறைகளால், பல வழக்குகளாக விசாரிக்கப்பட்டு இதை, ஒரே புலனாய்வு ஏஜென்சியை அமைத்து விசாரிக்கக் கோரி, ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார், அது நிலுவையில் உள்ளது[9].

zakir-mumba- A. N. Orchid22-07-2016 வியாழக்கிழமை ஜாகிர் நாயக் கம்பெனியின் மானேஜர் கைது செய்யப்பட்டது: எபின் ஜேக்கப் என்பவர் கணவனுடன் மும்பைக்குச் சென்ற தன்னுடைய சகோதரி மெரின் ஜேக்கப்பை, காணவில்லை என்றும், மும்பையில் உள்ள அர்ஸி குரேசி / அர்ஷி குரேஷி என்பவர் வல்லுக்கட்டாயமாக மதம் மாற்றியுள்ளார் என்றும் கொச்சி போலீஸில் புகார் கொடுத்தார்[10]. மெரின் ஜேக்கப், பெஸ்டின் வின்சென்ட் என்பவன் கூட பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டாள். பிறகு, இருவரும் ஶ்ரீலங்கா சென்று அங்கிருந்து, சிரியாவுக்குச் சென்று ஐசிஸில் சேர்ந்து விட்டனர் என்று புகார் கொடுத்தார்[11]. அதனால், கேரள போலீஸார் மற்றும் ஏடிஎஸ் போலீஸார் விசாரிக்க ஆரம்பித்தனர். இங்கு “லவ் ஜிஹாத்” வேறு முறையில் வேலை செய்துள்ளது. அதாவது, இந்து பெண்ணிற்குப் பதிலாக, ஒரு கிறிஸ்தா பெண் இலகாகியுள்ளார். இதனால், கேரளாவில் ஆதிக்கத்தில் உள்ள கிருத்துவர்களும் இதை விடுவதாக இல்லை போலும்! அர்ஸி குரேசி, ஐ.ஆர்.பியின் உறுப்பினர், 21-07-2016 அன்று நவி மும்பையில் கேரளா மற்றும் ஏடிஎஸ் போலீஸாரால் கைது செய்யப்பட்டான்[12].

How-Indian-Media-Got-Mad-On-Zakir-Naik-And-Hafiz-Saeed-Links-Must-Watchஅர்ஷி குரேஷி ஜாகிர் நாயக் கம்பனியின் மானேஜர்: இவன் ஐ.ஆர்.பியில் விருந்தினர் நலன் மேலாளர் [Guest Relations Manager] என்று வேலைசெய்து கொண்டு, ஐ.ஆர்.பிக்கு வரும் நபர்களுடன் உரையாடி வந்துள்ளான். மெரின் ஜேக்கப் என்ற கேரள பெண் மும்பையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, பெஸ்டின் வின்சென்ட் என்ற தனது கணவனோடு வேலை செய்து கொண்டிருந்தாள்.  2009ல் ஜாகிர் நாயக் கூட்டத்தில் இவர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. பிறகு இவர்கள் ஜாகிர் நாயக்கால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் படியான போதனை செய்யப்பட்டது[13]. முதலில் பெஸ்டின் வின்சென்ட் முஸ்லிமாகி யாஹ்யா என்ற பெயரை வைத்துக் கொண்டான். பிறகு தனது மனைவியையும் மதம் மாற னற்புறுத்தினான். ஆனால், அவள் மறுத்ததால், 2015ல்  ஐ.ஆர்.பி நடத்தும் வகுப்புகளில் கலந்து கொள்ள செய்தான். பிறகு அவளும் மதம் மாறினாள். மேலும் இஸ்லாம் பற்றி படிக்க வேண்டும் என்ற போர்வையில், அவர்கள் ஶ்ரீலங்கா மூலம், சிரியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது[14]. ஆனால், நவிமும்பை, செக்டார்.20, சீயுட்ஸ் ஏரியா பகுதியில் உள்ல அடுக்குமாடி வீட்டில் முதல் மாடியில் வசிக்கும் அர்ஸி குரேசியின் மனைவி தனது கணவன் 1000% அப்பாவி என்றும் அவருக்கு ஒன்றுமே தெரியாது என்றும் சாதித்தாள்[15]. இது வழக்கமாக, மாட்டிக் கொள்ளும் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் மற்ற ஜிஹாதிகளின் பெற்றோர், உறவினர், மற்றோர் கூறுவது போலவே இருக்கிறது. குரேசி அங்கிருந்துதான் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டான்[16]. 22-07-2016 அன்று இஸ்வான் கான் என்பவன் மும்பையில் கைது செய்யப்பட்டு, 23-07-2016 அன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டான்[17].

© வேதபிரகாஷ்

24-07-2016

[1]  Naik accepted that Raheel Shaikh, a terror suspect, had worked as a volunteer in some of his programmes. “I did not know him personally and he was not part of our organisation. We have thousands of volunteers and he was one of them. When I came to know from media about him being a terror suspect I enquired my staff about him and when they said he was our volunteer, I asked them to remove his visuals from the videos so that people do not think he is part of IRF (Islamic Research Foundation, his organisation),” he added. Mr Naik, however, said he does not know about Abu Jundal.

http://www.asianage.com/kolkata/zakir-naik-denounces-terror-wrong-366

[2] India.today, Zakir Naik justifies suicide bombing as legal in tactic of war, Mail Today Bureau, Posted by Arpan Rai, New Delhi, July 16, 2016 | UPDATED 09:14 IST

[3] Controversial Islamic preacher Zakir Naik who is under fire for inspiring terrorists, including those who attacked a Dhaka café said on Friday that suicide bombings are permitted in Islam if it used as a tactic in war but if innocents are getting killed it is haram. Justifying suicide bombings as a tactical move in wars, he gave the example of Japan in World War II.

http://indiatoday.intoday.in/story/zakir-naik-suicide-bombing-islamic-preacher/1/716209.html

[4] Who are, then, those many scholars who have permitted the suicide bombing as war tactic? Naik has honestly named a few of them like Shaikh Abd al-Aziz ibn Baz, a Saudi Arabian Islamic scholar and a leading proponent of the Salafi sect. Notably, Ibn Baz has served as Grand Mufti of Saudi Arabia from 1993 until his death in 1999.

firstpost.com, Only Salafists like Zakir Naik view suicide bombing as war tactic; it’s haraam in Islam, Ghulam Rasool Dehlvi,  Jul 17, 2016 17:27 IST

[5] Naik also cited another Salafist Shaikh Abdul-Muhsin al-Abbaad who wrote a complete paper entitled, “With Which Religion and Intellect are Suicide Bombings and Destruction Considered Jihaad?

http://www.salafipublications.com/sps/sp.cfm?subsecID=MNJ14&articleID=MNJ140006&articlePages=1

[6] http://www.firstpost.com/india/suicide-bombing-is-haram-in-islam-only-salafist-ideologues-like-zakir-naik-view-it-as-a-war-tactic-2898840.html

[7] http://www.thenational.ae/thenationalconversation/comment/hatred-violence-and-the-sad-demise-of-yusuf-al-qaradawi

[8] https://www.youtube.com/watch?v=4WQKY11ON9w

[9] Naik had filed a writ petition in the Supreme Court (SC), asking for one agency to be appointed for investigating all the cases spread in different states. The petition is pending before the apex court.

http://indianexpress.com/article/cities/mumbai/man-held-for-radicalising-kerala-woman-my-husband-1000-innocent-claims-arshi-qureshis-wife-2930483/

[10] India.today, Employee of Zakir Naik’s IRF arrested for allegedly brainwashing youths to join ISIS, Mustafa Shaikh | Posted by Ashna Kumar Mumbai, July 22, 2016 | UPDATED 02:50 IST

[11] http://indiatoday.intoday.in/story/zakir-naik-irf-islamic-research-foundation-mumbai-kerala-isis-islam-nia/1/721036.html

[12] According to an eyewitness, the police took Qureshi into custody from his first-floor apartment in Sector 50 of Navi Mumbai’s Seawoods area.

[13] Hindusthantimes, Employee from Zakir Naik’s foundation arrested for influencing youth to join IS, HT Correspondent, Hindustan Times, Mumbai, Updated: Jul 22, 2016 10:30 IST

[14] Jacob alleged that his sister had been influenced to convert to Islam by Yahya and Ashi. Hailing from a Christian family, Mariyam née Merin had met her husband while working in Mumbai in 2015. Though she initially resisted Islam, she was taken to several classes, following which, she had been converted, police sources said. Ebin said that at one point his sister wished to come back to Kerala, where her family is, but was eventually forced into joining the IS. His brother-in-law also tried to convert him, Ebin added.His parents alleged that Yahya and Mariyam were radicalised though Dr Naik, who they had met while in Mumbai. According to police sources, Arshi was the public relation manager responsible when Dr Naik had held a massive public conference in 2009.

http://www.hindustantimes.com/mumbai-news/irf-employee-arrested-in-mumbai-for-influencing-youth-to-join-is/story-M0bty3pRiV8KAnxXrlvhDL.html

[15] Express News Service, Man held for ‘radicalising’ Kerala woman: ‘My husband 1000% innocent’, claims Arshi Qureshi’s wife, Mumbai, Published:July 23, 2016 1:36 am.

[16] http://indianexpress.com/article/cities/mumbai/man-held-for-radicalising-kerala-woman-my-husband-1000-innocent-claims-arshi-qureshis-wife-2930483/

[17] The special team, probing the mass disappearance of Keralite youths and their suspected links with Islamic State, arrested a man named Rizwan Khan from Mumbai on Saturday – 23-07-2016.

http://english.manoramaonline.com/in-depth/is-kerala-terrorism/islamic-state-kerala-youth-mumbai-arrest-story-in-points.html

ஜாகிர் நாயக் உள்ளூர் தீவிரவாதம் வளர்த்த கூட்டத்தில் உள்ளது உண்மைதான் – தீவிரவாதிகள் ஈர்க்கப்பட்டனர் எனும்போது, இல்லை என்றால் மற்ற தொடர்புகள் சம்பந்தப்படுத்துகின்றன!

ஜூலை 24, 2016

ஜாகிர் நாயக் உள்ளூர் தீவிரவாதம் வளர்த்த கூட்டத்தில் உள்ளது உண்மைதான்  – தீவிரவாதிகள் ஈர்க்கப்பட்டனர் எனும்போது, இல்லை என்றால் மற்ற தொடர்புகள் சம்பந்தப்படுத்துகின்றன!

Holey_Attackers-IS released photos

01-07-2016 வெள்ளிக்கிழமை தாக்குதல் – 02-07-2016 சனிக்கிழமை ஐசிஸ் ஒப்புக்கொண்டது: பங்களாதேசத்தில் உள்ள தீவிரவாதிகள் அனைத்துல ரீதியில் செயல்பட்டு வரும் இயக்கங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது ஆராயப்பட்டு வருகின்றது. ஐசிஸ் அமைப்பே ஹோலே ஆர்டிசன் ஹோட்டலில் தாக்கியவர்களை அடையாளங்கண்டது என்று “சைட்” புலனாய்வு குழு [SITE Intelligence Group] உடைகளில் தோன்றும் ஜிஹாதிகளின் புகைப்படங்களை வெளியிட்டது[1]. வளைகுடா நாடுகளின் தீவிரவாத இயக்கங்கள் வெளியிடும் இணைதளங்களிலிருந்து அவை எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டன. ஐசிஸ் அந்த ஐந்து நபர்களை அடையாளம் கண்டது, மற்றும் புகைப்படங்களை வெளியிட்டது என்று கூறுகிறது[2]. இதனால், ஐசிஸ் தொடர்புகள் நிரூபிக்கப்படுகின்றன. உள்ளூர் ஜமாத்-உல்-தாவா எல்லோரையும் ஊக்குவித்து வருகின்றது. இவ்வாறு எல்லா குழுக்களும் சேர்ந்து வேலைசெய்து வருவது பங்களாதேசத்திற்கு பெரிய தலைவலியாக இருக்கிறது. இஸ்லாமிய நாடு என்றாலும், இவ்வாறு தீவிரவாதம் எல்லைகளைக் கடக்கும் போது உண்மைகள் வெளிவருகின்றன. இஸ்லாமிய நாடுகளுக்கே இஸ்லாமிய தீவிரவாதம் இப்படி இருந்தால், செக்யூலரிஸ போர்வை போற்றிக் கொண்டு போலித்தனமான “மதசார்பின்மையை” கடைபிடிக்கும் இந்தியாவின் கதியை அறிந்து கொள்ளலாம்.

Rohan Imtiyaz and the gang 01-07-2016 insired by Zakir Naik

03-07-2016 – அல்ஹுடா, ஜமாத்உல்தாவா மற்றும் இச்லாமிய ரிசெர்ச் பௌன்டேஷன் தொடர்புகள்:  கொலையுண்டவர்கள் மற்றும் பிடிபட்டவர்களின் பின்னணியை ஆராய்ந்த போது, அவர்கள் எப்படி தீவிரவாதிகளாக உருவானார்கள் என்று தெரிய வந்தது. பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டது மட்டுமல்லாது, ஜிஹாதித்துவ ஊக்குவிப்பை ஜாகிர் நாயக் மூலம் பெற்றதை ஒப்புக் கொண்டார்கள்:

  1. மீர் சமேஷ் மோபேஷ்வர்.
  2. ரோஹன் இம்தியாஸ்.
  3. நிப்ரஸ் இஸ்லாம்.
  4. கைரூல் இஸ்லாம்.
  5. ரிபான்.
  6. சைஃபுல் இஸ்லாம்.

இதனால், தான் பங்களாதேசம் ஜாகிர் நாயக்கைப் பற்றி விசாரித்து விவரங்களைக் கேட்டது. அந்நிலையில் அதன் உருது [the Jamaat-ud-Dawa urdu] இணைதளத்தை ஆயும்போது, அது அல்-ஹுடா [the Al-Huda International] இயக்கத்துடன் தொடர்புள்ளதை காட்டுகிறது. இதில் உள்ள சிந்தனைவாதிகள் தாம், ஜாகிர் நாயக்கின் பேச்சுகளால் ஊக்குவிக்கப்பட்டுள்ளார்கள். இதனால், இவை, இஸ்லாமிக் ரிசெர்ச் பௌன்டேஷன் [Dr Zakir Naik’s IRF or Islamic Research Foundation] இணைதளத்தை தமது இணைதளங்களுடன் இணைத்துள்ளன.  பதிலுக்கு, ஜாகிர் நாயக், இணைதளத்தை இணைத்ததால் மட்டும் ஹாவிஸ் சயீதுடன் தொடர்பு உள்ளது என்று சொல்ல முடியுமா என்று கேட்கிறார். சரி, ஆனால், இந்த பங்களாதேச ஜிஹாதிகள் “நீங்கள் தான் காரணம், ஊக்குவிப்பு” என்று காட்டியபோது, மறுக்காமல், அதற்கு நான் பொறுபேற்க முடியாது என்று நழுவினார். மேலும், இந்தியாவுக்கு வந்தால் கைது செய்யப்படலாம் என்று வராமலேயே டிமிக்கி கொடுத்து மறைந்து வாழ்கிறார். 05-07-2016லிருந்து ஜாகிர் நாயக் விவகாரங்களை  NIA விசாரிக்க ஆரம்பித்தது.

How-Indian-Media-Got-Mad-On-Zakir-Naik-And-Hafiz-Saeed-Links-Must-Watch

07-07-2016 – “26/11 மும்பை வெடிகுண்டு தீவிரவாதத்தின் சதிதிட்டம்” – ரஹீல் செயிக்: 2008ல் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களுக்கு “26/11 மும்பை வெடிகுண்டு தீவிரவாதத்தின் சதிதிட்டம்” தீட்டிய ஜமாத்-உல்-தாவா காரணம் என்று அறியப்பட்டுள்ளது. உலகளவில் தேடப்பட்டு வரும் தீவிரவாதிகளில் அவனும் ஒருவன். இந்தியா எத்தனை ஆதாரங்கள் கொடுத்தாலும், பாகிஸ்தான், தான் “தீவிரவாத நாடு” என்று ஒருவேளை அறிவிக்கப்படலாம் என்ற பயத்தில், அவனுக்கும், மும்பை தீவிரவாத குண்டுவெடிப்பிற்கும் சம்பந்தம் இல்லை, கொடுத்துள்ள ஆதாரங்கள் தேவையானதாக இல்லை என்றெல்லாம் சொல்லி காலந்தாழ்த்தி வருகிறது. ஆனால், தொடர்ந்து இவ்வாறு நடந்து வரும் தீவிரவாத செயல்கள் வெளிப்படுத்திக் கொண்டுதான் வருகின்றன. மும்பை குண்டுவெடிப்பில் 167 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட சில நாட்களில் தான் இந்த இணைதளங்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டன. இஸ்லாத்தைப் பற்றி, ஜிஹாதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானால், இந்த இணைதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறது. இதனால் லஸ்கர்-இ-டொய்பா சம்பந்தமும் வெளிப்படுகிறது.

Raheel worked with IRF

ரஹீல் செயிக், ஹாவிஸ் மொஹம்மது சையீது, இஸ்லாமிக் ரிசெர்ச் பௌன்டேஷன் தொடர்புகள்:  2006ல் நடந்த மும்பை தாக்குதலின் சதிதிட்டத் தலைவன் ரஹீல் செயிக், அவன் ஜாகிர் நாயக்கினால் ஈர்க்கப்பட்டு, கவரப்பட்டான் என்று எடுத்துக் காட்டப்படுகிறது[3]. ஆனால், வஹாபி தீவிரவாத பிரச்சாரம் மற்றும் மற்ற தீவிரவாத தாக்குதல்களின் பின்னணியில் உள்ளவர்களின் இணைப்புகள் அதோடு முடிந்து விடவில்லை. இப்பொழுது பங்களாதேசத்தில் நடந்துள்ள தாக்குதலில் ஈடுபட்ட ஹோசன் இம்தியாஸ் மற்றும் ஹைதராபாதின் மாட்யூலின் முக்கியப் புள்ளி மால்வானி முதலியோரும் ஜாகிர் நாயக்கின் வஹாபி தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டனர்[4]. இதனை அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். 2006ல் நடந்த மும்பை தாக்குதலின் சதிதிட்டத் தலைவன் ரஹீல் செயிக், மும்பையில் உள்ள இஸ்லாமிக் ரிசெர்ச் பௌன்டேஷனுக்குச் சென்றுள்ளான்[5]. பலமணி நேரங்களை அங்கு கழித்துள்ள அவன், ஐ.ஆர்.எப் தனது உந்துதல், தூண்டுதல், ஈர்ப்பு என்று சொல்லியிருக்கிறான்[6]. அதாவது தீவிரவாதிகளுக்கே தூண்டுதல் போன்ற பிரச்சரம் அப்படி அங்கு என்னக் கொடுக்கப் படுகின்றது என்று ஆராய்ச்சி செய்து தான் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. ரஹீல் செயிக்கின் சகோதரர்களான பைஸல் மற்றும் முஜம்மில் செயிக்குகளுக்கு சவுதி அரேபியா, துபாய், நேபாளம், பங்களாதேசம் போன்ற நாடுகளுடன் தொடர்புகள் இருந்தன. இவர்களும் 2006 குண்டுவெடிப்புகளில் சிக்கியுள்ளார்கள்[7]. புலனாய்வு குழுக்கள் இதனை செல்போன், வங்கி கணக்குகள் மற்றும் இதர போக்குவரத்துகளிலிருந்து அறிந்துள்ளார்கள். ரஹீல் பணத்தை சேகரித்து லஸ்கர்-இ-டொய்பாவுக்குக் கொடுத்து வந்ததான் மற்றூம் பாகிஸ்தானுக்கு சென்று வந்துள்ளான், அது இந்த திட்டத்தைத் தீட்டியதாகவும் புலனாய்வு அதிகாரிகள் கூறுகிறார்கள்[8].

© வேதபிரகாஷ்

24-07-2016

[1] SITE Intelligence Group released the photos on Saturday night and claims that they’ve collected the photos from online platforms used by the Middle East based terrorist group. According to earlier report by SITE Intelligence Group, Islamic State claimed responsibility for the assault in Holey Artisan Bakery, popularly known as Holey Bread, setting off a bloody standoff with the police in the capital Dhaka’s diplomatic zone. Around 9.30PM on Saturday (02-07-2016), SITE tweeted the photos of five young gunmen with the message ‘ISIS identified the five attackers involved in Bangladesh Attack and published their photos’. The undated photos show the young men holding guns in their hands are standing in-front of IS flag and clad in black dresses with smile on the face.

newsbangladesh.com, IS releases Holey Artisan gunmen photos, claims SITE, Staff Reporter, Inserted: 01:26, Sunday 03 July 2016, Updated: 16:17, Sunday 03 July 2016

[2] http://www.newsbangladesh.com/english/details/15846

[3] Hafiz Muhammed Saeed is the main architect of the 26/11 Mumbai terror attacks of 2008. Months after the worst terror strike in India which killed more than 167 innocent people, the two websites remained linked. “The connection with LeT does not end here. One of the masterminds of the 2006 Mumbai train blasts that killed 187 people – Rahil Sheikh was also influenced by Zakir Naik,” sources added.

India.today, Exposed: Zakir Naik’s link to 26/11 mastermind Hafiz Saeed, Ankit Kumar |  Gaurav C Sawant  | Posted by Sangeeta Ojha, New Delhi, July 7, 2016 | UPDATED 21:31 IST

[4] But the radicalisation link doesn’t end with 2006 train blast accused Rahil Sheikh. “Dr Zakir Naik with his hard line Wahabi Islam preaching is also alleged to have influenced terrorists like Rohan Imtiaz in Dhaka and the Malwani and Hyderabad Islamic State modules,” said an official.

http://indiatoday.intoday.in/story/exposed-zakir-naiks-link-to-26-11-mastermind-hafiz-saeed/1/710006.html

[5] ZeeTV.News, 2006 Mumbai train bombings mastermind Rahil Sheikh spent time at Islamic preacher Zakir Naik’s IRF: Report, Last Updated: Thursday, July 7, 2016 – 22:12

[6] http://zeenews.india.com/news/mumbai/2006-mumbai-train-bombings-mastermind-rahil-sheikh-spent-time-at-islamic-preacher-zakir-naiks-irf-report_1904682.html

[7] ZeeTV.News, Revealed: Zakir Naik’s 26/11 Mumbai terror attacks mastermind Hafiz Saeed connection – Know Explosive details, Last Updated: Thursday, July 7, 2016 – 23:43.

[8] http://zeenews.india.com/news/mumbai/revealed-zakir-naiks-links-with-26/11-mumbai-terror-attacks-mastermind-hafiz-saeed-here-are-explosive-details_1904687.html

முஸ்லிம்கள், இந்தியர்களின் நலன்களுக்கு அல்லது தீவிரவாதிகளின் செயல்களுக்கு ஆதரவு கொடுப்பதை பற்றிய தங்களது நிலையை தெளிவாக்க வேண்டும்!

ஜூலை 17, 2016

முஸ்லிம்கள், இந்தியர்களின் நலன்களுக்கு அல்லது தீவிரவாதிகளின் செயல்களுக்கு ஆதரவு கொடுப்பதை பற்றிய தங்களது நிலையை தெளிவாக்க வேண்டும்!

Pro-zakir ralley in patna raising pro-paki slogans 16-07-2016

ஜாகிர் நாயக் பிரிட்டனுக்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை(ஜூன் 19, 2010): இந்திய பிரபல மதபிரச்சாரகர் ஸாகிர் நாயக்கிற்கு பிரிட்டனுக்குள் நுழைவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்துள்ளதாக பி.பி.சி. இணைய சேவை செய்தி வெளியிட்டுள்ளது. எமது நாட்டின் பொது நலனுக்கு பொருத்தமற்றவர்கள் நாட்டுக்குள் நுழைய தாம் அனுமதிக்க மாட்டோம் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். மேலும், ஏற்க முடியாத நடத்தை என்று தாம் கருதும் நடத்தை உடையவர் ஸாகிர் நாயக். அதன் காரணமாகவே இவருக்கான விசா நிராகரித்துள்ளதாக பிரிட்டிஷ் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஸாகிர் நாயக் லண்டனிலும், வடக்கு இங்கிலாந்திலும் பல உரைகளை நிகழ்த்தவிருந்தார். இதேவேளை, ஸாகிர் நாயக் அண்மையில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இவரது உரையை கேட்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் கூடியமை குறிப்பிடத்தக்கது. ஸாகிர் நாயக் இஸ்லாம் குறித்து ஆளுமை கொண்டவர் என அங்கீகரிக்கப்பட்டவர். எனினும், ஏனைய மதங்களை நிந்திக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிடுபவர் என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

Zakir Naik inspired terrorists 01-07-2016

ஒவ்வொரு முஸ்லீமும் தீவிரவாதியாக வேண்டும் என்று பேசிவரும் ஜாகிர் நாயக்: இப்படியும் ஆங்கிலப் பத்திரிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஒஸோமா பின் லேடனைப் புகழும், தீரவாதக் கொள்கையையுடைய ஜாகிர் நாயக்கை தடைசெய்யப்பட்டார், என்றும் கூறுகிறது. அந்நாட்டு உள்துறை செயலர், “டிவி மதப்பிரச்சாரகர் தூண்டிவிடும் வகையில் பேசுவதாலும் அவருடைய ஏற்றுக்கொள்ளமுடியாத நடத்தையினாலும் தடைசெய்யப்படுவதாகக் குறிப்பிடுகிறார்”. இப்பொழுதும் அந்த கருத்தை மறுக்கவில்லை. ஆனால், திடீரென்று முஸ்லிம்கள் எப்படி நாரக்கிற்கு ஆதரவு தெர்விக்கிறார்கள் என்று பார்த்தால், அது முஸ்லிம் ஆதரவு, ஷியா எதிர்ப்பு, முதலியவற்றை விட, மோடி-எதிர்ப்பு என்ற வகையில் வந்து முடிந்துள்ளது. ஜாகிர் நாயக்கை முடக்கத்தான் பாஜக அரசு முயல்கிறது என்பது போன்ற சித்தரிப்பு மற்றும் பிரச்சாரம் ஆரம்பித்து விட்டது. இது கிட்டத்தட்ட “சகிப்புத் தன்மை” பிரச்சாரம் போல ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திக்விஜய சிங், எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டு விட்டதால், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, ஏகப்பட்ட அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார்.

அதிரை - எஸ்.டி.பி.ஐ போராட்டம்

வெள்ளிக்கிழமை 15-07-2016 பாட்னாவில் நடந்த ஆர்பாட்டம்: ஜாகிர் நாயக் மற்றும் அசாஸுத்தீன் ஒவைசி இவர்களை ஆதரித்து, பாட்னா விஞ்ஞான கல்லூரியிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் போட்டுக் கொண்டு ஆர்பாட்டம் செய்தவர்களை போலீஸார் கைது செய்தனர்[1]. அது மட்டுமல்லாது, அதன் பின்னணியுள்ளவர்களைப் பற்றி விசாரிக்கவும் உத்தரவு இடப்பட்டுள்ளது[2]. அமெரிக்காவே, காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை என்று சொல்ல பாகிஸ்தான் அமுக்கி வாசித்துக் கொண்டிருக்கிறது. அவ்வாறிருக்கும் போது, இந்தியாவில், பீஹாரில் இருக்கும் முஸ்லிம்கள் இவ்வாறு பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் எப்படி போட முடியும்? அத்தகைய மனோபாங்குதான் என்ன?  ஆக, காஷ்மீர பிரச்சினையையும், இந்த ஜாகிர் நாயக்-ஒவைசி பிரச்சினையுடன் முடிச்சுப் போட பார்க்கிறார்கள் போலிருக்கிறது.

 zakir naik protest chennai 2

தமிழக முஸ்லிம்கள் தீவிரவாதத்தை முதலில் எதிர்க்க வேண்டும்: தமிழக முஸ்லிம்கள் முதலில் இஸ்லாம் தீவிரவாததத்திற்கு உபயோகப்படுத்துவதை எதிர்க்க வேண்டும். ஐசிஸ்-ஐசில் முதலிய இயக்கங்கள் உலகளவில் அப்பாவி மக்களைக் கொன்று வருவதை யாரும் மறுக்க முடியாது. இன்று வரை இந்தியாவில் காஷ்மீ, உத்திரபிரதேசம், கேரளா, ஹைதரபாத் முதலிய இடங்களில் காகிர் நாயக்கை வைத்து நடைபெற்று வரும் விவகாரக்களைக் கவனிக்க வேண்டும். இந்தி முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களுடம் சேர்வதை அவர்கள் தடுக்கவில்லை. கேரள முஸ்லிம் பெற்றோர்களே கலங்கியுள்ள நிலையில், அதைத் தடுக்க என்ன செய்வது என்று விடை கொடுப்பதில்லை. சவுதி அரேபிய இஸ்லாம், இந்திய இஸ்லாத்திடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இஸ்லாமிய தீவிரவாத்த்தைப் பற்றி எளிதாக புரிந்து கொள்ல முடியும். சவுதி வகாபிசத்துவ தீவிரவாதத்தை ஆதரித்ததால் தான், ஜாகிர்நாயக்கின் வகாபிச சேவையைப் பாராட்டி இஸ்லாத்திற்கு சேவை செய்தவராக அறிவித்து 2015 ஆம் ஆண்டுக்கான மன்னர் பைசல் சர்வதேச விருதாக சவுதி வகாபிச அரசு 24 காரட் 200 கிராம் தங்கப் பதக்கத்தோடு இந்திய பண மதிப்பாக ரூபாய் 1,35,00,000/- (2 லட்சம் யுஎஸ் டாலர்கள்) அன்பளிப்புத் தொகையாகவும் வழங்கியது. மார்க்கண்டேய கட்ஜு ஸாகிர்நாயக் பிரச்சாரம் குறித்தும் சமயத்திற்கும் அறிவியலுக்கும் இடையிலான முரண்குறித்தும், வகாபிசம் சூபிகள் பேசிய இஸ்லாமிய அறவியல் கருத்துக்களிலிருந்து மாறுபட்டிருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார்.

 zakir naik protest chennai 3

முஸ்லிம்கள் ஏன் இந்திய குடிமகன்கள் என்பதை மறக்கும் விதமாக நடந்து கொள்கிறார்கள்?: இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள், எதிர்ப்புகள் முதலியவற்றில் முஸ்லிம்கள் கலந்து கொள்வதை கவனிக்க வேண்டும். அவர்களை ஏன் தீவிரவாத இயக்கத்தில் சேராமல் தடுக்காமல் இருக்கிறார்கள் என்பதை மற்றவர்கள் கேட்கத்தான் செய்கிறார்கள். வெறும் வார்த்தைகள் ஒன்றும் செய்து விடமுடியாது. ஆயிரம் அப்பாவி மக்களைக் கொன்று விட்டு, அதனை நான் கண்டிக்கிறேன் என்றால் என்ன பிரயோஜனம்? ஒசாமா பின் லேடனை ஆதரிக்கிறேன் என்ற ஜாகிர் நாயக்கை ஆதரித்து ஆர்பாட்டம் நடத்துவதால் பொது மக்கள் என்ன நினைப்பார்கள்? என்ன இது, தீவிரவாதிகளை எதிர்த்து தானே கூட்டம் போடுகிறார்கள் என்று நினைப்பார்கள். முஸ்லிம்கள் இந்திய குடிமகன்கள் என்பதை மறந்து, அடிக்கடி எல்லைகளைக் கடந்த ஆதரவுகளை தெரிவித்த்துக் கொள்வது, தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் முதலியோருக்கு சாதகமாக பேசுவது, அறிக்கைக்கள் விடுவது, ஆர்பாட்டங்கள் செய்வது முதலியனன, அவர்களை மேலும் இந்திய சமூகத்திலிருந்து பிரிக்கத்தான் செய்யும்.

ZAkir on sex

இசுலாமியத் தீவிரவாதம்  என்றால் என்ன?: இசுலாமியத் தீவிரவாதம் (Islamic Terrorism) என்பது அரசியல் நோக்கங்களை அடைவதற்காக மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்கள் ஆகும். இத்தீவிரவாதச் செயல்களுக்கான கருத்தியல் ஆதாரமாக குரானின் வசனங்களைக் கொள்ளுவதால் இவை இஸ்லாமியத் தீவிரவாதம் என அழைக்கப்படுகிறது. இஸ்லாமியக் குழுக்கள் அவர்கள் நிகழ்த்தும் வன்முறையையும் கொலைகளையும் குரான் வசனங்கள் மற்றும் ஹதீஸ் மூலம் நியாயப்படுத்துகின்றனர். சமீப காலங்களில் உலகெங்கும் தீவிரப் போக்குடைய இஸ்லாமியக் குழுக்கள் பிற இஸ்லாமியப் பிரிவைச் சார்ந்தவர்களையும் இறை நம்பிக்கையற்றவர்களையும் மற்றும் பிற மதத்தவர்களையும் கலீபா ஆட்சிமுறையின் படி தலையை வெட்டிக் கொல்லப் பரிந்துரைப்பது மற்றும் அடிமைப்படுத்துவது ஆகியவற்றைச் செய்கின்றனர். இவ்வாறான செயல்கள் மிதவாத இஸ்லாமியர்களுக்கும் தீவிரவாதப் போக்குடைய இஸ்லாமியர்களுக்கும் கருத்தியல் வேறுபாடுகளை உருவாக்குகின்றன. இத்தீவிரவாதச் செயல்களானது இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா, சோமாலியா, சூடான், ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, சீனா, காக்கேசியா, வட-அமெரிக்கா, மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் பசிபிக் பிராந்திய நாடுகள் உட்பட உலகம் முழுவதும் நடைபெறுகிறது. இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்கள் குண்டுவெடிப்புகள், கடத்தல், தற்கொலைப் படையினர் போன்றவற்றிற்காக பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் இணையம் வழி புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதாகவும் அறியப்படுகிறது. இப்படி விகிபீடியா கூறுவதை[3] முஸ்லிம்கள் மறுக்கவில்லையே?

 

© வேதபிரகாஷ்

17-07-2016

Zakir girls need not study

[1] India Today, Pro-Pakistan slogans raised in Patna, one arrested after police orders probe, Rohit Kumar Singh, Posted by Bijaya Kumar Das, Patna, July 16, 2016 | UPDATED 15:11 IST

[2] http://indiatoday.intoday.in/story/pro-pakistan-slogans-raised-in-patna-one-arrested-after-police-orders-probe/1/716225.html

[3] https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

ஜாகிர் நாயக்கின் விசயத்தில் இந்திய-தமிழக மூஸ்லிம்களின் ஆதரிப்பது-எதிர்ப்பது என்ற முரண்பாடு ஏன்?

ஜூலை 17, 2016

ஜாகிர் நாயக்கின் விசயத்தில் இந்திய-தமிழக மூஸ்லிம்களின் ஆதரிப்பது-எதிர்ப்பது என்ற முரண்பாடு ஏன்?

ஜாகிர் ஆதரவு போராட்டம் - 16-07-2016 - த.த.ஜா. போராட்டம்

தமிழகத்தில் ஜாகிர் நாயக் எதிர்ப்புஆதரவு: ஜாகிர் நாயக்கை பொதுவாக இந்திய முஸ்லிம்கள் எதிர்த்தனர். ஒசமா பின் லேடனை ஆதரித்தது, எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகளாக இருக்க வேண்டும் என்றது போன்ற விவகாரங்களூக்காக நாயக் தனிமைப் படுத்தப் பட்டாலும், உள்ளூர எல்லா முஸ்லிம்களும் ஆதரித்துதான் வந்தனர். இந்தியாவில் நடத்தப் பட்ட கூட்டங்களுக்கு, இஸ்லாமிய அமைப்புகள், வியாபார நிறுவனங்கள் ஆதரவு கொடுத்தன. சென்னையில், கிருஷ்ணா கார்டன்ஸ் (திருமங்கலம்), காமராஜர் அரங்கம், இஸ்லாமிக் இண்டெர்நேஷனல் பள்ளி வளாகம் (ஈஞ்சம்பாக்கம்) என்று கூட்டங்கள் நடத்தப்பட்டன. முஸ்லிம்கள், குறிப்பாக படித்த இந்துக்களுக்கு குறி வைத்து, அவர்களை வேண்டி, நட்புரீதியில் “வற்புறுத்தி” கலந்து கொள்ள செய்தனர். அந்த கூட்டங்கள் முஸ்லிம்களுக்குட்தான் பிரமிப்பாக இருந்தது. தமிழக முஸ்லிம் இயக்கத்தினரின் தலைவர்களுக்கு புளியைக் கரைத்தது. பொறாமையாகக் கூட இருந்தது, நல்ல வேளை, தமிழில் பேசவில்லை என்று ஆஸ்வாசப்படுத்திக் கொண்டனர். இருப்பினும், தமிழில் அவரது ஆதரவாளர்கள் நாயக்கின் புத்தகங்கள் வெளியிட்டனர்.

Bangladesh-bans-televangelist-Zakir-Naik-s-Peace-TV

பீஸ் டிவி வங்கதேசத்தில் தடை செய்யப்பட்டது (09-07-2016): நாயக்கின் பிரசுரங்கள் தீவிரவாதிகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இருப்பதாகவும், கடந்த ஜூலை 1-ம் தேதி டாக்கா உணவக தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள், நாயக்கின் பிரசங்கங்களால் ஈர்க்கப்பட்டவர்கள் என்றும் கூறப்பட்டதை அடுத்து, வங்கதேசத்தில் நாயக்கின் பிரச்சாரங்கள் தடை செய்யப் பட்டன.  வங்காளதேசத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரம் தொடர்பாக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் ’பீஸ் டிவி’ க்கு தடை விதிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது[1]. சர்ச்சைக்குரிய வகையில் பேசிவரும் ஜாகிர் நாயக்கிற்கு இங்கிலாந்து, கனடாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மலேசியாவில் தடை விதிக்கப்பட்ட 16 இஸ்லாமிய அறிஞர்களில் நாயக்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது[2]. நாயக்கின், ‘பீஸ் டிவி’யை தொலைக்காட்சி மற்றும் இணையதளம் மூலமாக ஒளிபரப்பவும் வங்கதேச அரசு தடை விதித்துள்ளது[3]. இதைத்தொடர்ந்து, ‘பீஸ் மொபைல் போன்’களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை!

பீஸ் மொபைல்

பீஸ் டிவியை அடுத்து, பீஸ் மொபைல் போன்களுக்குக்கும் தடை (14-07-2016): முஸ்லிம் மத போதகர் ஜாகிர் நாயக்கின், ‘பீஸ் மொபைல் போன்’களுக்கு வங்கதேச அரசு தடை விதித்திருக்கிறது.  ‘ஜாகிர் நாயக்கின் எந்தவிதமான பிரசுரங்களையும் வெளியிடக் கூடாது என அரசு தெளிவான உத்தரவை பிறப்பித்திருப்பதால், அவரின் பிரசுரங்கள் அடங்கிய ‘பீஸ் மொபைல் போன்’களை இனி அனுமதிக்க முடியாது’ என, வங்கதேச தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஷாஜஹான் மஹமூத் தெரிவித்துள்ளார். ‘முதல் இஸ்லாமிய ஸ்மார்ட்போன்’ என்ற விளம்பரத்துடன் சந்தைக்கு வந்த இந்த கைபேசியில், ‘குரான்’ ஓதுவதற்கான வசதிகள், தொழுகை நேர நினைவூட்டல், இஸ்லாமிய வால்பேப்பர்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் உள்ளன.  ஜாகிர் நாயக்கின் ‘பீஸ் டிவி’ பிரசங்கங்களை, ஆங்கிலம், இந்தி, உருது போன்ற மொழிகளில் கேட்கவும், பார்க்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இந்த கைபேசிகளை, ‘பெக்சிக்கோ’ குழுமம் இறக்குமதி செய்து விற்பனை செய்தது[4]. ஆனால், தமிழகத்தில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை! ஆனால், ஜாகிர் நாயக்கைப் பற்றி விசாரணை ஆரம்பிக்கப்பட்டதும், தமிழகத்தில் ஆர்பாட்டம் ஆரம்பித்து விட்டது. இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் மீது மகாராஷ்டிர அரசும், மத்திய பாஜக அரசும் கடுமையான அவதூறு பரப்பி வருவதாகவும்[5], இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்புகளை ஒன்றிணைத்து நாளை (ஜூலை 16) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் அப்துல் ரஹ்மான் மிஸ்பாகி தெரிவித்துள்ளார்[6].

Muslim youth become ISIS supporters, warriors

உலகத்தில், இந்தியாவின் மற்ற பகுதிகளில் இஸ்லாமிய பயங்கரவாத, ஜிஹாத் தீவிரவாத செயல்கள் என்ன நடந்தாலும் போராட்டம்ஆர்பாட்டம் இல்லை: 15-07-2016 வெள்ளிக்கிழமை அன்று மொஹம்மது லுஹ்வாஸ் ஃபூலெல் (31) என்ற முஸ்லிம் பாரிசில் லாரியை வெறித்தனமாக மக்கள் கூட்டத்தினுள் ஓட்டிச் சென்று ஒரு முஸ்லிம் குழந்தைக்களையும் சேர்த்து 84 பேரைக் கொன்றுள்ளான். குழந்தைகள் கொல்லப்பட்ட காட்சிகள் பரிதாபமாக இருந்தது. ஐரோப்பாவின் ஒரே இஸ்லாமிய நாடான, துருக்கியில் நடந்துள்ள ராணுவப் புரட்சியில் 100க்கும் மேலானவர்கள் பலியாகியுள்ளனர். இரண்டு தீவிரவாத தாக்குதல்களிலும் காயமடைந்தோர் பலர் மருத்துமனைக்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், தமிழக முஸ்லிம்கள் அமைதியாகத்தான் இருந்தார்கள். கேரளாவில் இளம் வயது முச்லிம் ஆண்கள்-பெண்கள் ஐஎஸ்சில் சேர்ந்து விட்டனர் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. உம், அவர்கள் அசையவில்லை.

நியூஸ் 7 செனல் 17-07-2016

ஜாகிர் நாயக்கை ஆதரித்து நடத்திய போராட்டம் (16-07-2016): இவற்றையெல்லாம் கண்டிக்காமல், சென்னையில், “ஜாகிர் நாயக்கை தீவிரவாதி போன்று சித்திரப்பதை” கண்டித்து 500 பேர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்[7]. இப்பொழுதுள்ள நிலையில், தமிழக அரசு எப்படி அனுமதி கொடுத்தது என்பது கூட ஆச்சரியமாகத்தான் உள்ளது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் [Indian Union Muslim League (IUML)], தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் [the Tamil Nadu Muslim Munnetra Kazhagam (TMMK)] மற்றும் சோஷியல் டெமாக்ரடிக் கட்சி [the Social Democratic Party of India] முதலியன இந்த எதிர்ப்பு-போராட்டத்தில் பக்குக் கொண்டுள்ளன. முஸ்லிம் மதபோதகர் ஜாகீர் நாயக் மீது வீண் பழி சுமத்தி, அவரது பணிகளை முடக்க நினைப்பதாக கூறி மராட்டியம் மற்றும் மத்திய அரசை கண்டித்து, சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது[8].

Zakir supporting Osama bin laden

ஜாகீர் நாயக் வன்முறையையோ, பயங்கரவாதத்தையோ ஆதரித்தது இல்லை: தமிழ்நாடு முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.முகம்மது ஹனீபா தலைமை தாங்கினார். பின்னர் அவர் கூறியதாவது[9]: “உலகம் முழுவதும் முஸ்லிம் மதம் குறித்து பரப்புரை செய்து வருபவர் ஜாகீர் நாயக். இவர் வன்முறையையோ, பயங்கரவாதத்தையோ ஆதரித்தது இல்லை. அவருடைய பேச்சாலும், எழுத்தாலும் பயங்கரவாதத்தையும், பயங்கரவாதப் பழியை முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு சுமத்தும் பாசிச சக்திகளையும் எதிர்த்து வருகிறார். எனவே அவர் மீது மத்திய அரசும், மராட்டிய அரசும் காழ்ப்புணர்வு கொண்டு அவரை ஒடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது கண்டனத்துக்குரியது. மத்திய அரசு தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் போராட்டங்கள் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது”, இவ்வாறு அவர் பேசினார். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஜாகீர் நாயக்குக்கு எதிராக பேசியதாக கூறி, உத்தரபிரதேச மாநில பா.ஜ.க. எம்.பி. சாத்வி பிராட்சியின் உருவபொம்மையை எரித்தனர். இதனால் ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது[10]. ஆனால், போலீஸார் என்ன நடவடிக்கை எடுத்தனர் என்று குறிப்பிடவில்லை.

© வேதபிரகாஷ்

17-07-2016

[1] தினத்தந்தி, ஜாகிர் நாயக்கின் போதனைகளை ஒளிபரப்பும்பீஸ் டிவியை வங்கதேசம் தடை செய்தது, பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 10,2016, 3:55 PM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 10, 2016, 3:55 PM IST.

[2] http://www.dailythanthi.com/News/World/2016/07/10155526/Bangladesh-bans-televangelist-Zakir-Naik-s-Peace-TV.vpf

[3] தி.இந்து, மத போதகர் ஜாகிர் நாயக்கின்பீஸ் மொபைல் போன்களுக்கு தடை விதித்தது வங்கதேச அரசு, Published: July 14, 2016 21:21 ISTUpdated: July 15, 2016 10:22 IST

[4] http://tamil.thehindu.com/world/%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/article8850254.ece

[5] தமிழ்.ஒன்.இந்தியா, ஜாகிர் நாயக் மீது அவதூறுதமிழக இஸ்லாமிய அமைப்புகள் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்வீடியோ, By: Jayachitra, Published: Friday, July 15, 2016, 15:05 [IST].

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/muslim-organisations-protest-258114.html

[7] The News minute, Islamic groups protest in Chennai, demand govt cease portraying Zakir Naik as terrorist, TNM Staff| Saturday, July 16, 2016 – 13:57

[8] தினத்தந்தி, ஜாகீர் நாயக் மீது வீண் பழி: முஸ்லிம் அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம், பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 17,2016, 12:28 AM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 17,2016, 12:28 AM IST

[9] http://www.dailythanthi.com/News/India/2016/07/17002835/Islamic-groups-protest-in-Chennai-demand-govt-cease.vpf

[10] நியூஸ்.7.செனல், மத்திய அரசை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் சென்னையில் ஆர்பாட்டம், July 16, 2016.

கேரள ஐஎஸ் தொடர்புகள், லவ்-ஜிஹாத், வேலைவாய்ப்பு போர்வையில் ஆட்சேர்ப்பு – யுத்தபூமியை நோக்கி பயணம்!

ஜூலை 16, 2016

கேரள ஐஎஸ் தொடர்புகள், லவ்-ஜிஹாத், வேலைவாய்ப்பு போர்வையில் ஆட்சேர்ப்பு – யுத்தபூமியை நோக்கி பயணம்!

Kerala Isis nexus- confirmed

முதலமைச்சர் ஒப்புக் கொண்டார்: சட்டசபையில் பேசிய முதல்வர் பினராயி விஜயன்[1], “காசர்கோடில் இருந்து 17 பேரும், பாலக்காட்டில் இருந்து 4 பேரும் மாயமாகி இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாயமானவர்களில் காசர்கோட்டில் இருந்து 4 பெண்கள், 3 குழந்தைகளும், பாலக்காட்டில் இருந்து 2 பெண்களும் அடங்குவர். பல்வேறு காரணங்களுக்காக இவர்கள் தங்களது வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவித்தார். ஊடகங்களில் வெளியான தகவலின்படி இவர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு சென்றுள்ளனர். மும்பை விமான நிலையத்தில் காத்திருந்த காசர்கோடு பகுதியை சேர்ந்த பிரோஸ் என்பவர் அண்மையில் கைதாகியுள்ளார். 10-07-2016 அன்று மும்பையில் பெரோஸ் கான் என்பவன் கைது செய்யப்பட்டதிலிருந்து, கேரள இளைஞர்கள் சிரியாவுக்குச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது[2].

Kerala Isis nexus- confirmed- youth after conversionஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் சந்தேக கண்ணோடு பார்க்கும் நிலையும் உருவாகி வருகிறது: கேரள இளைஞர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைவது தொடர்பான விவகாரத்தை அரசு மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது[3]. மத்திய அரசின் ஆதரவுடன் இதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எந்தவொரு தீவிரவாத நடவடிக்கையையும் அரசு பொறுத்துக் கொள்ளாது. நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதே சமயம் அரசியல் ஆதாயத்துக்காக இந்த விவகாரத்தை பெரிது படுத்தவும் அனுமதிக்க மாட்டோம். இப்பிரச்சினையால் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான மனோபாவம் வளர்ந்து வருகிறது. ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் சந்தேக கண்ணோடு பார்க்கும் நிலையும் உருவாகி வருகிறது. ஒரு சிலர் வேண்டுமென்றே மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். கேரளாவில் உள்ள பெரும்பான்மையான மக்கள் எந்தவொரு தீவிரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் ஏற்க மாட்டார்கள். வெறும் அரசால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் ஒன்றாக கைகோர்த்தால் மட்டுமே தீய சக்திகளை தனிமைப்படுத்தி களையெடுக்க முடியும்”, என்று சட்டசபையில் பேசியுள்ளார்[4]. கம்யூனிஸ்டுகளைப் பொறுத்த வரையில், இது அவர்களே வளர்த்து விட்ட விவகாரம் ஆகும். அரசியல் மற்றும் இதர சம்பந்தங்களை தாராளமாக வைத்துக் கொண்டு அனுபவித்து வருகின்றனர்.

Kerala jouranalist joins ISISஜிஹாதிகள் பெற்றோர்களையும், ஏன் குடும்பத்தையே தீவிரவாதிகளாக்க முயற்சிப்பது: கேரள மாநிலம் காசர்கோடு மற்றும் பாலக்காட்டை சேர்ந்த 16 பேர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் திடீரென மாயமானார்கள். இவர்களில் 4 பெண்களும் 2 குழந்தைகளும் உண்டு. இவர்கள் இலங்கை மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள புனித தலங்களுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றனர். இதன்பிறகு கடந்த ஒரு மாதமாகியும் இவர்களை பற்றிய எந்த தகவலும் வரவில்லை. இந்நிலையில் காணாமல் போன ஹபீசுதீன் என்பவரின் மனைவி செல்போனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்தது. அந்த செய்தியில், “நாங்கள் சொர்க்க ராஜ்ஜியத்திற்கு வந்து விட்டோம். இனி எங்களை தேட வேண்டாம். நாங்கள் இஸ்லாமிய நாட்டிற்கு வந்து விட்டோம். இங்கு நிரபராதிகளை அமெரிக்கா கொன்று குவிக்கிறது. எனவே அவர்களை பழிவாங்குவதற்காக ஐஎஸ் அமைப்புக்காக நாங்கள் எங்களை அர்ப்பணித்து விட்டோம். இதுகுறித்து பெற்றோரிடம் கூறி புரிய வைக்க வேண்டும். அவர்களையும் ஐஎஸ் அமைப்பிற்கு அழைத்து கொண்டு வரவேண்டும்”, என்று குறிப்பிடப்பட்டிருந்தது[5].  அதாவது, குடும்பத்தையே தீவிரவாதிகளாக்க திட்டம் இருப்பது வெளிப்படுகிறது. மேலும், இது கேரளாவிலிருந்து தீவிரவாதிகளாக்க ஏற்றுமதி நடக்கிறது எனலாம். முன்பு கன்னியாஸ்த்ரிக்கள், நர்ஸுகள் மாதிரி, இப்பொழுது இவர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறார்கள்.

Kerala Isis nexusதீவிரவாதியின் தகவல் படித்து திகைத்துப் போன மனைவி: இதை பார்த்து ஹபீசுதீனின் மனைவி அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து கணவரின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவரது பெற்றோர் காசர்கோடு எம்பி கருணாகரன், எம்எல்ஏ ராஜகோபாலன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராய் விஜயனிடமும் அவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக விசாரணை நடத்த கேரள டிஜிபி லோக்நாத் பெக்ராவுக்கு முதல்வர் உத்தரவிட்டார். உளவுத்துறை போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. காசர்கோடு மாவட்டம் திருக்கரிப்பூரை சேர்ந்த டாக்டர் இஜாஸ் என்பவர் தலைமையில் 16 பேரும் சிரியாவுக்கு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது[6]. காசர்கோடில் உள்ள அப்துல் ரஸீத் (29) அப்துல்லா [Abdul Rasheed]  என்பவன் அப்துல்லாவின் மகன் [Abdulla] இவர்களை இவ்வழிக்கு இழுத்துள்ளான் என்று தெரிகிறது[7]. இவன் பெங்களுரில் இஞ்சினியரிங் படித்து மும்பைக்கு வியாபாரம் நிமித்தம் சென்று வருகிறான்[8]. ஈஸா மற்றும் யாஹியாவின் தந்தை வின்சென்ட், தன்னுடைய மகள்கள் ஜாகிர் நாயக்கின் பிரச்சாரத்தால் கவரப்பட்டார்கள் என்கிறார்[9].

Kerala, Kashmir becoming hub of ISISதமிழகத்தின் மீதான தாக்கம்: கேரளாவில் இருந்து ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்தவர்கள், தமிழக எல்லையில் உள்ள நகரங்களைச் சேர்ந்தவர்கள். இதனால் தமிழகத்தில் இருந்து யாரும் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேராமல் தடுக்க, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இணையதளங்களில் பரிமாறப்படும் தகவல்களை காவல் துறையினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். கேரளாவில் இருந்து ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக கூறப்படுபவர்களில் திருவனந்தபுரம் ஆற்றுகால் பகுதியைச் சேர்ந்த பிடிஎஸ் மாணவி நிமிஷா என்ற பாத்திமாவும் ஒருவர் என்று தெரிய வந்துள்ளது. இவரது தாய் பிந்து. தனது மகளும் ஐஎஸ்சில் சேர்ந்ததாக நேற்று பத்திரிகைகளில் தகவல் வந்த பிறகுதான் அவருக்கு இது தெரியவந்துள்ளது. இதுபோல் கொச்சியை சேர்ந்த ஒரு பெண்ணும் ஐஎஸ் அமைப்பில் இணைந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமாணவிகளை குறிவைத்து காதலித்து திருமணம் செய்வதோடு அவர்களை ஐ.எஸ் அமைப்பில் இணைத்து விடுகின்றனர்.

Missing Keralites links with ISIS confirmed - Kaumudi onlineமத்திய அரசின் விசாரணை: இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மத்திய உளவுத்துறையான ரா அதிகாரிகள் கேரளா வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இவர்கள் காசர்கோட்டிலும் மங்களூரிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மங்களூரில் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்க்கும் அமைப்பு செயல்படுவதாக விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. சிறப்பு புலனாய்வு குழுவினரால் “ஐஎஸ்சில் சேர்ந்தவர்கள்”, அவர்களது உறவினர்கள் முதலியோரது தொலைபேசி-அலைபேசி விவரங்கள் ஆராயப்படுகின்றன[10]. இதன் மூலம், இறுதியாக அவர்கள் எங்கிருந்து யாருடன் தொடர்பு கொண்டார்கள் என்று தெரிய வரும்[11].

© வேதபிரகாஷ்

16-07-2016

[1] http://tamil.oneindia.com/news/india/21-missing-from-kerala-may-be-is-camps-cm-257874.html

[2] Firoz Khan, a 24-year-old from Trikaripur in Kerala’s Kasargod district, was arrested yesterday (10-07-2016) evening by officers of the Intelligence Bureau from Mumbai. He was nabbed from a hotel in Dongri in Mumbai. Firoz had left for Mumbai on June 22 on the pretext of going to Kerala’s Kozhikode city. A phone call Firoz made to inform his family about his whereabouts is what trapped him. During the call, he said some others who went missing from his village have reached IS camps in Syria, says a Manorama report.

[3] தி.இந்து, ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்த விவகாரம்: கேரள மாநிலத்தில் இருந்து 6 பெண்கள் உட்பட 21 பேர் மாயம் – சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தகவல், Published: July 12, 2016 09:49 ISTUpdated: July 12, 2016 10:02 IST.

[4] http://tamil.thehindu.com/india/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-6-%E0%AE%AA%E0%AF%86

[5] தினகரன், ஐஎஸ் தீவிரவாதிகளான கேரள வாலிபர்கள்: தமிழகத்தில் உளவுத்துறை உஷார், Date: 2016-07-10@ 00:16:56

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=230018

[7] Reports said that a person called Abdul Rasheed Abdulla is suspected to have led the youths on to the terror path.

http://english.manoramaonline.com/in-depth/is-kerala-terrorism/kerala-jihadi-threat-missing-youths-story-in-points.html

[8] http://www.kaumudi.com/innerpage1.php?newsid=80207

[9] Father of Eesa and Yahiya, Vincent, alleged that his sons were influenced by Islamic preacher Zakir Naik

http://english.manoramaonline.com/news/just-in/people-missing-kasaragod-kerala-police-isis-islamic-state.html

[10] english.manoramaonline, ISIS links: Kerala police analyzing phone records, Thursday 14 July 2016 10:58 AM IST, byOur Correspondent

[11] http://english.manoramaonline.com/in-depth/is-kerala-terrorism/isis-links-kerala-missing-youth-police-tracking-phone-records.html

அல்லாவின் பெயரால் ஜிஹாத், காபிர்கள் அழிப்பு, ஷஹீத் அடையும் நிலை – எல்லாமே ஹை-டெக் தொழிற்நுட்பத்தில் தான் நடக்கின்றன!

ஜூலை 10, 2016

அல்லாவின் பெயரால் ஜிஹாத், காபிர்கள் அழிப்பு, ஷஹீத் அடையும் நிலை – எல்லாமே ஹை-டெக் தொழிற்நுட்பத்தில் தான் நடக்கின்றன!

Burhan supporting Zakir Naik - twitterஜாகிர் கான் தாக்கம், புர்ஹான் வானி தீவிரவாதியானது, தொடர்புகள்: இங்குதான், ஜாகிர் கான் போன்ற ஜிஹாதி-விற்பன்னர்கள், மாயாஜால மயக்கு பேச்சாளர்கள், பேச்சு-தீவிரவாதிகள் வருகிறார்கள். இஞ்ஜினியரிங், தொழிற்நுட்பம், மருத்துவம் படித்த இளைஞர்கள் இவரது பேச்சுகளுக்கு மயங்கி ஜிஹாதிகளாகின்றனர்[1]. அதனால் தான், “நீ இளம் வயதில், ஏன் இப்படி ஆனாய்?” என்று கேட்டால், “ஜாகிர் நாயக்கின் பேச்சில் ஈர்க்கப் பட்டேன், இஸ்லாத்திற்காக போராட முடிவெடுத்தேன்”, என்று வெளிப்படையாக இவர்கள் சொல்லிகொள்கிறார்கள். அந்நிலையில் தான், ஜாகிர் நாயக்கின் ஊக்குவிப்பு, தூண்டுதல், முதலியவை கண்டறியப்பட்டுள்ளன. புர்ஹான் டுவிட்டரில் ஜாகிர் நாயகிற்கு ஆதரவு தெரிவித்துள்ளான். முன்பெல்லாம் “பாப்ரி மஸ்ஜித்” உடைக்கப்பட்டதால் தான், நாங்கள் பழி வாங்க அவ்வாறு செய்தோம் போன்ற வாதங்கள் இப்பொழுது வருவதில்லை என்பது நோக்கத்தக்கது. ஏனெனில், சுன்னி இஸ்லாம் தவிர மற்ற எந்த இஸ்லாத்தையும் இஸ்லாம் இல்லை என்று போதிக்கப்படுவதால், பெரும்பாலாக ஷியா முஸ்லிம்கள் இந்த ஐசிஸ்-ஐசில்-ஐ.எஸ் ஜிஹாதிகளால் தாக்கப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள், அவர்களது மசூதிகளும் இடிக்கப்படுகின்றன, குரான் புத்தகங்களும் எரிக்கப்படுகின்றன.

Burhan supporting Zakir Naikஅல்லாவை மகிழ்விக்க ஷஹீதுகள் உருவாக்கப்படுகின்றனர்: இக்கால நாகரிக படித்த முஸ்லிம் சாதாரணமாக அடிப்படைவாதியாக இருப்பதில்லை. ஆனால், எங்கோ, ஒரு நிலையில், அவன் அவ்வாறாக இருக்கிறான் என்று கண்டறிந்ததும், முதலில் அவனை அடிப்படைவாதியாக்க முயற்சிகள் நடக்கின்றன. முஸ்லிம் என்றதால், சிக்கிரத்தில் அது அவனது மனதை பிடித்து விடுகிறது. அவ்வாறான இஸ்லாமிய அடிப்படைவாதம் புனிதமானது என்று புரிய வைத்த பிறகு, பார், எப்படி நீ அவ்வாறு புண்ணியவானக இருக்கும் போது, உனக்கு இடையூறுகள் செய்கிறார்கள் என்று அடுத்த கட்ட நடவடிக்கை ஆரம்பிக்கிறது. அந்நிலையில் கூல்லா மாட்டிக் கொள்கிறான், தாடி வைத்துக் கொள்கிறான். “இஸ்லாம் ஆபத்தில் உள்ளது” என்பது வேலை செய்ய ஆரம்பிக்கிறது. பிறகு, தீவிரவாத செயல்கள் எல்லாமே புனிதமாகத் தோன்றுகின்றன. “அல்லா மகிழ்கிறார்” என்று கனவு காண்கிறான், சொர்க்க ததவு திறந்துள்ளது என்று உணரிகிறான், பிரகென்ன, ஜிஹாதியாக மாறி, ஷஹீதாகி சொர்க்கத்திற்கு செல்ல வேண்டியது தான்.

Burhan supporting Zakir Naik - Can Zakir Naik say now, he was not inspired by himமுஸ்லிம்களை முஸ்லிம்களே கொல்லும் தீவிரவாதம், முஸ்லிம்அல்லாதவர்களைக் கொல்லும் தீவிரவாதம்: இத்தகைய மனோநிலைகளில் வேலை செய்து வரும் ஜிஹாதிகள் “அல்லாவின் பெயரால்” என்றால் சொல்வதை கேட்கிறார்கள், சுலபமாக ஆணைகளை ஏற்றுக் கொள்கிறார்கள், நடத்திக் காட்டுகிறார்கள். முஸ்லிம்களை முஸ்லிம்களே கொல்லும் தீவிரவாதம் இருப்பது கண்டு ஆச்சரியப் படவேண்டிய அவசியம் இல்லை. ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை எப்பொழுது வேண்டுமானாலும் “காபிர்” என்று பிரகடனம் செய்து, ஜிஹாதைத் துவக்கி விடலாம். குரானின் மீது ஆணையிட்டு, ஒரு முஸ்லீம் மறு முஸ்லீமை காபிர் என்று அறிவித்து விட்டால், அவன் மீது ஜிஹாதைத் தொடங்கிவிடலாம். அதாவது அந்த மறு முஸ்லீம் என்பவன் ஒரு குறிபிட்டப் பிரிவை / சமூகத்தை / நாட்டை சேராதவனாக இருப்பான். Burhan-targeting friendsபாகிஸ்தானில் ஷியாக்கள் தாக்கப்படுவது, அவர்கள் மசூதிகள் இடிக்கப்படுவது, அவர்களது மசூதிகளில் குண்டுகளை வெடிக்கச் செய்வது எல்லாமே ஜிஹாத் தான், தீவிரவாதம் தான். அது எப்படி வேலை செய்கிறதோ, அதேபோலத்தான் இந்தியாவிலும் வேலை செய்கிறது. மற்ற முஸ்லிம்கள் ஏற்ருக் கொள்வார்கள் அல்லது தனித்தனி குழுக்கள் ஆவார்கள். இந்நிலையில், முஸ்லிம்-அல்லாதவர்களைக் கொல்லும் தீவிரவாதம் பற்றி சொல்லவே வேண்டாம், அது அல்வா தின்பது போல, கரும்பு தின்ன கூலி கொடுப்பது போல! அதிலும் மனத்தை மாற்றும் போதை மருந்து [psychotropic drug] கொடுத்து வேலை வாங்கும் போது, சுலபமாக நடந்து விடுகிறது. இறந்தவனுடன் எல்லாமே மறைந்து விடுகின்றன. அடுத்தவர்கள் அல்லது ஏவி விட்டவர்கள் சொன்னால்தான் உண்மை வெளிவரும். இல்லையென்றால், ஏதோ தீவிரவாதி, ஜிஹாதி செய்தான் என்று செய்திகளில் படித்து மறந்து விடுவார்கள்.

Burhan Wani - supported by omar, jilani etcதில்லி இமாமும், திக் விஜய் சிங்கும்: ஜாகிர் நாயக்கின் விசயத்தில் கலாட்டா செய்து வரும் திக்விஜய் சிங்கின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். 2013ல் திக் விஜய் சிங்கை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளபோதும்[2], முந்தைய தில்லி இமாம் போல கைது செய்யப்படமால் சுற்றி வருகிறார். இருவரும் இந்துக்களுக்கு எதிராக அவதூறு பேசுவது, தூஷிப்பது, முதலிய வேலைகளில் ஈடுபடுவது ஒப்புமையாக உள்ளது. திக் விஜய் சிங் இந்தியாவில் செய்து வருகிறார் என்றால், தில்லி இமாம் பாகிஸ்தானிற்கும் சென்று பேசியுள்ளார். ஜூலை 17, 2011ல் பாரதிய யுவமோர்சாவினர் திக் விஜயசிங்கிற்கு எதிராக கருப்புக் கொடிகள் காட்டியபோது, காங்கிரஸ்காரர்கள் அவர்களை அடித்துள்ளனர். அதனால் வழக்குத் தொடுத்தபோது, உஜ்ஜயினி கோர்ட்டில், பெயிலில் விடமுடியாத கைது வாரண்டைப் பிறப்பித்தது[3]. இருப்பினும் இப்பொழுது – அதாவது பெங்களூரில் குண்டு வெடித்த அதே நாளில் – இந்தூர் கோர்ட்டில் கைது-வாரண்டிற்கு எதிராக பெயிலைப் பெற்றுள்ளார்[4]. அதே பொல இப்பொழுதும் 2016ல் இத்தனை குண்டுவெடிப்புகள், கொலைகள் நடந்தாலும், திக்விஜய் திசைத்திருப்பும் போக்கில் பேசி வருகிறார். ஜாகிர் நாயக்கே, அவற்றை ஆதரிக்கவில்லை என்றாலும், இவர் ஜாகி நாயக்கை ஆதரிப்பதை விடமாட்டார் போலும். அவருடைய “செக்யூலரிஸம்” அப்படி வேலை செய்து கொண்டிருக்கிறது.

J-K - New type of young terrorist-burhan waniபண்டிட்டுகள், பட்டுகள் எல்லாம் ஜிஹாதிகள் ஆகிறார்களே?: இந்த பண்டிட்டுகள், பட்டுகள் இந்துக்கள் மட்டுமல்லாது, பிராமணர்களும் கூட, பிறகு, அவர்கள் எப்படி ஜிஹாதிகள், தீவிரவாதிகள் ஆனார்கள்? அதாவது, சாத்விக குணம் கொண்டவர்கள், அப்பாவிகள், கோழைகள், பயப்படுபவர்கள் …….என்றெல்லாம் இகழப்படும் பார்ப்பனர்கள், அங்கு தீவிரவாதிகளாகி விட்டனர் எனும்போது வியப்பாக இருக்கிறது. இதை இஸ்லாத்தின் மேன்மை என்பதா, அல்லது அவர்கள் வழிதவறி சென்று விட்டனர் என்பதா? ஒருவேளை முஸ்லிம்களாகி, இறைச்சி முதலியவற்றை உண்டு, சிறுவயதிலிருந்தே மாற்றப்பட்டு விட்டாதால், இரண்டு-மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு, அத்தகையவர்களாக உருவாக்கப்படுகிறார்களா என்று நோக்கத்தக்கது. இனிமேல், இதையும் “பார்ப்பனீய தீவிரவாதம்” என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்களா? முஸ்லிம்களாகி, இறைச்சி முதலியவற்றை உண்டு, சிறுவயதிலிருந்தே மாற்றப்பட்டு விட்டாதால், இரண்டு-மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு, அத்தகையவர்களாக உருவாக்கப்படுகிறார்கள் என்பது மனோதத்துவரீதியில் அறிந்து கொள்ளலாம். இங்கு பாரம்பரிய காரணிகளை விட, சுற்றுசூழ்நிலை காரணிகள் அதிகமாகவே தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. சுமார் 200 வருடங்களில் அப்பகுதிகளில் இருந்த இந்துக்களின் எண்ணிக்கை குறைந்ததற்கும், தீவிரவாதம் வளர்ந்ததற்கும் உள்ள சம்பந்தங்ளையும் ஆராயலாம்.

© வேதபிரகாஷ்

10-07-2016

[1] A new breed of militants is rising in Kashmir – young, educated, tech-savvy. HT travelled to the valley to find out what is fuelling these young men to take up arms against the state.

http://www.hindustantimes.com/static/the-young-militants-of-kashmir/

[2] http://articles.timesofindia.indiatimes.com/2013-04-03/indore/38247299_1_digvijay-singh-bjym-jiwajiganj-police-station

[3]  A local court here on Tuesday issued a non-bailable arrest warrant against Congress General Secretary Digvijay Singh and Ujjain’s Congress MP Prem Chand Guddu after they failed to appear before it in connection with a case against them and others for allegedly thrashing Bharatiya Janata Yuva Morcha (BJYM) workers.

http://zeenews.india.com/news/madhya-pradesh/local-court-issues-non-bailable-warrant-against-digvijay-singh_839408.html

[4]  Indore Bench of Madhya Pradesh High Court on Wednesday granted anticipatory bail to senior Congress leader Digvijaya Singh and party MP Prem Chand Guddu in connection with a case filed against them and others for allegedly thrashing BJP youth wing workers in Ujjain in 2011. Justice PK Jaiswal, who on Tuesday heard arguments on separate applications filed by the two and reserved his judgement, granted pre-arrest bail on Wednesday, their lawyer Akash Sharma told PTI.

http://ibnlive.in.com/news/high-court-grants-anticipatory-bail-to-digvijaya-singh-mp/386123-37-64.html

காஷ்மீரத்தில் ஹிஜ்புல் முஜாஹித்தீன்-தளபதி தோன்றிய விதம் – பேற்றோரே உருவாக்கிய ஜிஹாத்-தியாகி!

ஜூலை 10, 2016

காஷ்மீரத்தில் ஹிஜ்புல் முஜாஹித்தீன்-தளபதி தோன்றிய விதம் – பேற்றோரே உருவாக்கிய ஜிஹாத்-தியாகி!

burhan father proud of his son

பெற்றோரே மகனை தீவிரவாதியாக்க ஊக்குவித்தனர்: பள்ளித் தலைமையாசிரியரின் மகனான புர்கான், படிப்பில் கெட்டிக்காரராக இருந்தான். ஒருகட்டத்தில் படிப்பில் நாட்டமில்லாமல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 10 நாட்கள் முன்னதாக காணாமல் போனான். இதுவே முரண்பாடாக இருக்கிறது. பரீட்சைக்கு முன்னால் பையனை காணோ என்றால், பெற்றோரறெப்படி அமைதியாக இருந்தனர்? படிப்பில் கெட்டிக்காரனாக இருப்பவன் எப்படி படிப்பில் நாட்டமில்லாமல் போவான் என்று தெரியவில்லை. பின்னர் ஹிஸ்புல் இயக்கத்தில் சேர்ந்திருப்பது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. வயது 15 லேயே தீவிரவாடியாகி விட்டான் எனும்போது, அபோழுதாவது தவறு என்று சுட்டிக் காட்டி, மகனை மீட்டிருக்க வேண்டும், ஆனால், தந்தை என்ற முறையிலோ, ஒரு பள்ளியின் தலைமையாசிரியர் என்ற வகையிலோ ஒன்றும் செய்யவில்லை என்றே தெரிகிறது. வானியின் தந்தை, அதை “அல்லாவின் சேவையில் ஷஹீதானான்”, என்று தனது மகனை போற்றினார்[1] எனும்போது, எல்லா உண்மைகளையும் அறிந்து, மகனின் தீவிரவாத்தை ஆதரித்தார் என்று தான் தெரிகிறது. ஏற்கெனவே, ஒரு மகனை இழந்ததும் அவருக்கு பொருட்டாகத் தேரியவில்லை போலும். பெற்ற மகன்களை ஜிஹாதிகளாக்கி, ஷஹீதுகள் என்று போற்றி, மேன்மேலும், கொலைகள், குரூர பலிகள், முதலியவற்றைப் பெருக்கவே, அவர்கள் மனங்கள் விரும்புகின்றன போலும்.

J-K - New type of young terrorists- techie, computer savvyவழக்கம் போல பிணத்தை வைத்துக் கொண்டு நடத்திய கலவரங்கள்: 144-ஊரடங்கு உத்தரவை மீறி ஊர்வலத்தை நடத்தியுள்ளனர். தேசவிரோத, ஜிஹாதி கோஷங்களை முழங்கியுள்ளனர். உடலடக்கம் பின்பும், கல்லேறிந்து கலாட்டா செய்துள்ளனர்;  ராணுவம், போலீஸார் இருந்தாலும், அவர்கள் இந்த வெறிபிடித்த கூட்டத்தின் செயல்களுக்கு எல்லாம் பொறுத்தே இருந்தனர். எனினும், பிரிவினைவாதிகளின் திட்டப்படி பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது[2]. போராட்டக்காரர்கள் தெருக்களில் இறங்கி ஆக்ரோஷமாக கற்களைவீசி தாக்குதல் நடத்தியதால் பொதுமக்கள் யாரும் வெளியில் தலைகாட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இந்துக்களின் வீடுகள், அரசு கட்டிடங்கள், வாகனங்கள் என்று குறி வைத்து தாக்கினர். மறைந்திருந்த-அடையாளம் கண்டுபிடிக்க முடியாத தீவிரவாதிகள் சுடவும் செய்தனர். இவ்வாறாக தூண்டிவிடும் போக்கும் அறிந்த விசயமே. இதனால், கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் முயன்றது. அந்நிலையில் குல்காம், அனந்த்நாக் மாவட்டங்களில் நடந்த வன்முறை மோதல்களில் 11 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்[3].

J-K - New type of young terrorists.stone jihadதாக்குதல், பதில்தாக்குதல்கலவரம், துப்பாக்கி சூடு, சாவு, ஊர்வலம், கலவரம் என்று நடப்பது: இந்த செய்தி பரவியதும், ஹால் புல்வாமா என்ற இடத்தில் இருந்த இந்து-பண்டிடுகள் தற்காலிக கேம்ப் / தங்குமிடம் கற்களால் தாக்கப்பட்டது. குல்காம் என்ற இடத்தில் பாஜக அலுவலமும் தாக்கப்பட்டது[4]. இதனை தமிழ் ஊடகங்கள் எடுத்துக் காட்டவில்லை. தெற்கு காஷ்மீரில் 5 காவல் நிலையங்கள் மற்றும் சோதனைச்சாவடிகள் தீக்கிரையாக்கப்பட்டன[5]. “இந்திய நிர்வாகத்துக்கு” உட்பட்ட காஷ்மீரில் கடந்த சில ஆண்டுகளாக திடீரென வன்முறைகள் அதிகரித்துள்ளன என்று “பிபிசி” கூறுகிறது[6]. ஆயுதம் ஏந்திப் போராடும் தீவிரவாதிகளுக்கு பொதுமக்கள் ஆதரவு அதிகரித்து வருவது, பாதுகாப்புப் படையினருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. எழுபது லட்சம் பேர் உள்ள காஷ்மீர் பள்ளத்தக்கில், சுமார் 143 தீவிரவாதிகள் முழுவேகத்துடன் இயங்குவதாக போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. அந்த 143 பேரில், 89 பேர், பெரும்பாலும் தென் காஷ்மீர் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் என போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். காஷ்மீர் முழுவதும் மூன்று நாள் துக்கம் அனுஷ்டிக்குமாறு பிரிவினைவாதத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்[7].

Burhan Wani - praised by PAK media Dwan etcதமிழ் ஊடகங்களின் தேசவிரோத போக்கு செய்திகள்: “இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில்”, என்கிறது பிபிசி. தமிழ் தெரிந்த ஒருவர் இவ்வாறு எழுதியிருந்தாலும், இந்திய உணர்வு அதில் இல்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அதே நேரத்தில் லெட்டினென்ட் ஜெனரல் சைது அடா ஹஸ்னைன் என்பவரின், “ஒரு துரோகியின் இறப்பு: புர்ஹான் வானியின் கொலையும், அதற்கு பிறகு நடந்தவையும்”, என்ற விவரமான கட்டுரை அவசியம் படிக்க வேண்டும்[8]. ஒரு முஸ்லிமாக இருந்தாலும், காஷ்மீரத்தின் இப்பிரச்சினை பற்றி நேற்று வரை நடந்தவற்றை விவரத்துடன் கொடுத்துள்ளார். அவர் வானியை “துரோகி” என்றே ராணுவ பாஷையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்திய நிருபர், அதைவிட மோசமாக செய்தியை வெளியிட்டது கவனிக்கலாம். இவர் அனைத்துலக விவேகானந்த நிறுவனம் மற்றும் தில்லி கருத்துவாக்கம் குழு முதலியவற்றுடன் சம்பந்தப்பட்டுள்ளார். தமிழக ஊடகத்துறையில் உள்ளவர்கள் பெரும்பாலான நேரங்களில் தங்களது சித்தாந்த நோக்கிலேயே செயல்படுகின்றனர் என்று தெரிகிறது.

qasim funeral huge crowd

Srinagar, India-October 29-2015: Kashmiri villagers carry the body of top Lashkar-e-Taiba commander Abu Qasim during his funeral procession in Bugam district Kulgam some 75 km from Srinagar, Kashmir, India. Police on Thursday claimed that the most wanted LeT Commander Abu Qasim was killed during an encounter in Khandaypora area of Kulgam district, south Kashmir. (Photo by Waseem Andrabi/ Hindustan Times) – this is only for illustrative purpose.

இந்தியாவில் மறுபடி இஸ்லாம் ஆட்சி நிறுவப்பட வேண்டும்: ஐசிஸ், தலிபான், அல்-குவைதா, இஜ்புல் முஜாஹித்தீன் போன்ற ஜிஹாதி-தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவைத் தாக்க வேண்டும், பிடிக்க வேண்டும் என்ற திட்டத்தில் செயல்பட்டு வருகின்றன. இருபக்கமும் இஸ்லாமிய நாடுகள் பாகிஸ்தான், பங்களாதேசம், ஊடுருவி செல்ல “கம்யூனிஸ” நேபாளம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் இருப்பதால், அவர்களது போக்குவரத்து இப்பகுதிகளில் சுலபமாக இருக்கின்றன. எல்லை மாநிலங்களான பீஹார், மேற்கு வங்காளம் இவர்களின் போக்குவரத்திற்கு உபயோகமாக இருக்கின்றன. நிதிஷ்குமார் மற்றும் மம்தா ஆட்சிகளில் “முஸ்லிம்களின் ஆதரவு, முஸ்லிம்களை டாஜா செய்தல்” என்று கொள்கை கடைப்பிடிப்பதால், எந்த வழக்கில் முஸ்லிம் சம்பந்தப்பட்டிருந்தாலும், மென்மையாகவே அரசு அதிகாரிகள், போலீஸார் முதலியோர் நடந்து கொள்கின்றனர். மேலும், முஸ்லிம்களே அப்பகுதிகளில் அரசியலில் ஆதிக்கம் செல்லுத்தி வருவதால், எம்.எல்.ஏ, எம்.பி, மந்திரி என்றுள்ளோரும் ஆதரவு-பாதுகாப்பு கொடுக்கின்றனர். இதனால், பரஸ்பர ஆதாயம், பலன்கள் முதலியவற்றால், தீவிரவாதிகள் தாராளாமாகவே செயல்பட்டு வருகின்றனர்.

Support-for-Burhan-Wani-Breathtaking-Literallyஇணைதள ஜிஹாதில் ஆட்களை சேர்த்தல்: இந்நிலையில் தான், இணைதளம் மூலம் படித்த இளைஞர்களை ஐசிஸ்/ஐசில் போன்றவை வேலைக்கு வைத்துக் கொள்ள ஆரம்பித்தன. இஞ்ஜினியரிங், தொழிற்நுட்பம், மருத்துவம் போன்ற படிப்புகள் படித்தவர்களை “தகுந்த வேலை” என்று அமர்த்தி, நன்றாக சம்பளம் கொடுத்து, பிறகு, படிப்படியாக, அவர்களது நாடித்துடிப்பை அறிந்து, மதவெறி ஏற்றி, ஜிஹாதித்துவத்தை போதித்து, இந்தியாவில் உங்களுக்கு வேலை கிடைக்கவில்லை, நீங்கள் இவ்வாறிருக்கிறீர்கள் என்றால், அதற்கு காபிர்களின் ஆட்சி தான் காரணம், அவர்கள் ஆட்சி ஒழிய வேண்டும், 300 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த இஸ்லாமிய அரசை இந்தியாவில் நிறுவ வேண்டும், அப்பொழுது, இந்தியாவிலேயே, உங்களுக்கு இதே போன்ற வேலை கிடைக்கும். அதற்கு தான் நாங்கள் பாடுபட்கிறோம், நீங்கள் ஒத்துழையுங்கள் என்று ஆரம்பித்து, தீவிரவாதிகளாக்குகின்றனர். அவர்களுக்கு எல்லாம் கொடுத்து அடிமையாக்குகின்றனர். தினம்-தினம் செக்ஸுக்கு இளம்பெண்கள், குடி, போதை மருந்து, நல்ல சாப்பாடு…….என்று கொடுத்து வளைத்து போடுகின்றனர். பிறகு, என்ன சொன்னாலும் கேட்பர் என்ற நிலை உண்டாக்கியவுடன், ஜிஹாதியாக, பிதாயுனாக மாற்றுகின்றனர். பிதாயீன் என்று சொல்லிக் கொண்டு யார் வேண்டுமானாலும் இருக்கலாம் போலிருக்கிறது. அட்னன் ரஷீத், முந்தைய பாகிஸ்தானிய விமானப்படையினர் கூட அவ்வாறு உள்ளனர்[9]. இவன் முஸாரப்பை கொல்லும் முயற்சியில் கைது செய்யப்பட்டான். பட்கல் என்பவனும் அவ்வாறேயுள்ளான்[10]. ஜிஹாதிகளும் அவ்வாறே இருக்கிறார்கள். இஸ்லாத்திற்காக உயிரை விடுவதில் இருகூட்டத்தாரும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள், உயிரை விடுகிறார்கள். பெயர்கள், இடங்கள் மாறினாலும், அவர்களது செயல்கள் ஒரே மாதிரியாக இருக்கின்றன. அதனால், ஊக்குவிக்கும் மூலம் ஒன்றுதான் என்று வெளிப்படுகிறது.

© வேதபிரகாஷ்

10-07-2016

[1] At the funeral in Tral Eidgah, eyewitnesses said three to four armed Hizbul Mujahideen militants fired a gun salute. Wani’s father Muzaffar called his son a “martyr in the service of Allah”.

http://timesofindia.indiatimes.com/india/11-killed-200-hurt-as-Valley-erupts-over-Wanis-death/articleshow/53135735.cms

[2] மாலைமலர், ஜம்மு காஷ்மீரில் தொடரும் வன்முறைக்கு 2 பேர் பலி: 50 பேர் காயம், பதிவு: ஜூலை 09, 2016 17:21, மாற்றம்: ஜூலை 09, 2016 17:22

[3] The Times of India, 11 killed, 200 hurt as Valley erupts over Wani’s death, M Saleem Pandit| TNN | Jul 10, 2016, 04.16 AM IST

[4] As news of Wani’s killing spread, mobs pelted stones on Kashmiri Pandit transit camps in Haal Pulwama and attacked a BJP office in Kulgam. Authorities also suspended train services within the Valley.

http://timesofindia.indiatimes.com/india/11-killed-200-hurt-as-Valley-erupts-over-Wanis-death/articleshow/53135735.cms

[5] http://www.maalaimalar.com/News/TopNews/2016/07/09172201/1024590/Violence-erupts-in-Kashmir-two-protesters-killed.vpf

[6] பிபிசி.தமிழ், காஷ்மீரில் வன்முறை வெடித்தது: 8 பேர் சாவு, 09-07-2016: 11.30 pm

[7] http://www.bbc.com/tamil/global/2016/07/160709_kashmir_8_dead

[8] Lt Gen Syed Ata Hasnain, The death of a renegade : Burhan Wani’s killing and its aftermath, Posted on 10/07/2016 by Dailyexcelsior.

(The writer is an ex GOC of the Srinagar based 15 Corps, now associated with the Vivekanand International Foundation and the  Delhi Policy Group), feedbackexcelsior@gmail.com

[9]A special fidayeen unit headed by Adnan Rasheed, a former Pakistan Air Force personnel has been formed by the Pakistani Taliban and the Islamic Movement of Uzbekistan to attack jails and free imprisoned militants. Rasheed was convicted for an attempt to assassinate former President Pervez Musharraf.

 http://www.indiatvnews.com/news/world/former-paf-man-heads-fidayeen-unit-to-free-jailed-militants–10548.html

[10] பிதாயீன் மாதிரி தாக்குதல்களை நடத்த வேண்டும் என்று தான் பட்கல் வெறியுடன் உள்ளான். அதே மாதிரி குண்டுவெடி-கொலைகளையும் செய்துள்ளான்.

http://kashmirmonitor.org/03032013-ND-bhatkal-wanted-to-carry-fidayeen-strike-in-train-with-foreign-passengers-in-2011-43016.aspx

ஜாகிர் நாயக்கின் அடிப்படைவாத இஸ்லாம் பயங்கரவாத-தீவிரவாதம், ஜிஹாதி-பயங்கரவாதங்களை பெருக்கி, முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக்கும் விதம்!

ஜூலை 9, 2016

ஜாகிர் நாயக்கின் அடிப்படைவாத இஸ்லாம் பயங்கரவாத-தீவிரவாதம், ஜிஹாதி-பயங்கரவாதங்களை பெருக்கி, முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக்கும் விதம்!

bangladesh-attack-map-data01-07-2016 கடைசி வெள்ளிக்கிழமை அன்று வந்த ஜிஹாதிதீவிரவாதிகள்: வங்கதேச தலைநகர் டாக்காவில், கடந்த வாரம் ஜூலை.1, 2016 அன்று, “புனித” ரம்ஜான் மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை அன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஹோலே ஆரிசன் பேக்கரி சிக்கியது. தூதரங்கள் இருக்கும் அப்பகுதியை ஜிஹாதிகள் தேர்ந்தெடுத்தனர் என்று தெரிகிறது. இரவு, சுமார் 8.45 மணி அளவில் துப்பாக்கிகளோடு உள்ளே “அல்லாஹு அக்பர்” என்று கத்திக் கொண்டே நுழைந்தவர்கள், எல்லோரையும் பிணைகைதிகளாகக் கொண்டனர்[1]. இந்தியர் ஒருவர் உட்பட  22 பேர் பலியானார்கள் – இவர்களில் பெரும்பாலானவர் வெளிநாட்டவர்கள். அவர்களில் –

இத்தாலியர்  .      – 9

ஜப்பானியர்   ..     – 7

வங்காளதேசத்தவர் .– 2

அமெரிக்கர்    ..    – 1

இந்தியர்     .      – 1

போலீஸ்காரர் ….    – 2

தீவிரவாதிகள் முதலில் குரான் வசனங்களை கூறச்சொன்னார்கள். அதாவது, முஸ்லிம்களா இல்லையா என்று அவ்வாறு தீர்மானித்தார்கள் போலும்! சொன்னவர்களை வெளியே விட்டார்கள். மறுத்தவர்களை ஒருவர்-ஒருவராகக் குத்திக் கொலை செய்ய ஆரம்பித்தனர்[2].

The faces of dhaka-assilantsகொல்லப்பட்ட தீவிரவாதிகள்: துப்பாக்கிகளுடன் வந்த ஏழு தீவிரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டனர்:

  1. மீர் சமேஷ் மோபேஷ்வர்.
  2. ரோஹன் இம்தியாஸ்.
  3. நிப்ரஸ் இஸ்லாம்.
  4. கைரூல் இஸ்லாம்.
  5. ரிபான்.
  6. சைஃபுல் இஸ்லாம்.

இரண்டு பேர்  பிடிபட்டு கைது செய்யப்பட்டனர். ஐசில் / ஐசிஸ் இத்தாக்குதலுக்கு ஒப்புக்கொண்டது. இரவு முழுவதும், அரசு விரைவு நடவடிக்கை வீஎஅர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடந்தது. அடுக்த்த நாள் காலை, சுமார் 7 மணியளவில், உள்ளே நுழைந்து, தீவிரவாத்கள் ஆறுபேரை சுட்டுக் கொன்றது. 13 பேர் விடுவிக்கப்பட்டனர், 20 பிணங்கள் கண்டெடுக்கப்ப்ட்டன. இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் இரண்டு பேர், மும்பையில் மத போதகர் ஜாகிர் நாயக் பேச்சில் தாங்கள் கவரப்பட்டதாக கூறினர். தீவிரவாதிகளில் ஒருவனான ரோகன் இம்தியாஸை, மும்பையை சேர்ந்த, பிரபல இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்கள் தாக்குதலுக்கு தூண்டியதாக செய்தி வெளியாகியது. பேஸ்புக்கில் ரோகன் இம்தியாஸ், ஜாகீர் நாயக் போதனைகளை பரப்பி வவந்தது அம்பலமானது.

One of the victims killed at Holey Artisan Bakery, Dacca06-07-2016 ரம்ஜான் முடியும் நாளன்று மறுபடியும் தாக்குதல்: 06-07-2016 அன்று வங்கதேசத்தில் மீண்டும் தீவிரவாதிகள் என சந்தேகிக்கும் நபர்கள் தொழுகை நடைபெற்ற இடத்தில் தாக்குதல் நடத்திய நிலையில், ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை ஆய்வுசெய்யுமாறு இந்தியாவிற்கு வங்காளதேசம் கோரிக்கை விடுத்து உள்ளது[3]. வங்காளதேச தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஹசானுல் ஹக், கூறுகையில் “ஜாகிர் நாயக், போதனைகள் குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் இல்லை. நாயக்கின் போதனைகள் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது தொடர்பாக விசாரிக்கப்படும். நாங்கள் முழு விவகாரத்தையும் விசாரணை செய்து வருகிறோம்,” என்று கூறியுள்ளார். ஜாகிர் நாயக் பேச்சுக்களை ஆய்வு செய்யுமாறு இந்திய அரசு மற்றும் தகவல்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என்றும் ஹக் கூறியுள்ளார்[4]. இது தொடர்பாக அவரது போதனைகளை ஆய்வு செய்ய இந்தியாவிடம் வங்காளதேசம் கேட்டுக் கொண்டு உள்ளது. மத்திய மற்றும் மராட்டிய அரசு இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய போலீசை கேட்டுக் கொண்டு உள்ளது. அவருடைய பேச்சு வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த 2012-ம் ஆண்டு ஜாகிர் நாயக் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கலந்துக் கொண்டதும், மேடையில் இருவரும் ஒன்றாக தோன்றும் விவகாரமும் பெரும் சர்ச்சைக்குள்ளாகியது.

Zakir inspired terrorist in action in Bangladeshஜாகிர் நாயக்கின் தூண்டுதல், ஊக்குவிப்பு, பிரச்சாரம்: இதனையடுத்து, ஜாகிர் நாயக் குறித்த விவாதம் எழுந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகையில், “ஜாகிர் நாயக் குறித்து அனைத்து விவரங்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. அவரது பேச்சு ஆட்சேபனைக்குரியது என்றார். மேலும், வங்கதேச தாக்குதல் கண்டனத்திற்குரியது. பயங்கரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது. எந்த பகுதியும் கிடையாது. பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து உலக நாடுகளும் ஒன்று சேர வேண்டும்”, என்றார்[5]. இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சூசகமாக தெரிவித்துள்ளார்[6]. இதற்குள், தில்லி டிவி-செனல்கள் ஜாகிர் நாயக்கைப் பற்றிய செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டது.

Zakir Digvijaya embracing, ...etc September 2012 videoதிக்விஜய சிங்கும், ஜாகிர் நாயக்கும் கட்டிப் பிடித்து மகிழும் நிகழ்ச்சி[7]: ஜாகிர் நாயக்குடன் செப்டம்பர் 2012 வருடத்தைய நிகழ்ச்சியில் ஒன்றாக தோன்றி அமைதிக்கான தூதர் என்று பாராட்டை வழங்கி சர்ச்சையில் சிக்கியுள்ளார் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங். ஜாகீரை மிக்க மரியாதையும் “ஹுஜூர்” என்று விளிப்பதும், அவர் தான் அமைதியை கொண்டுவருகிறார் என்று பாராட்டுவதும், முஸ்லிம் போல சலாம் அடிப்பதும், கட்டிப்பிடிப்பதும் காட்சிகள் கொண்ட வீடியோ 07-07-2015 வியாழக்கிழமை இணைதளங்களில் உலாவ ஆரம்பித்தது[8]. முதலில் இதற்கு பதில் சொல்ல தப்பிய திக், பிறகு தன்னைக் காத்துக் கொள்ள வழக்கம் போல உளற ஆரம்பித்தார்.  சாத்வி பிரக்யா தாக்குரை ராஜ்நாத் சிங் சந்தித்தது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.

digvijaya-with-zakir-naik.transfer.transferசமாதான தூதுவர்என்று ஜாகிரை பாராட்டியது: நிகழ்ச்சியில் திக்விஜய் சிங் பேசுகையில் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கை “சமாதான தூதர் என்றும் அவரால் இந்தியா ஒன்றாக சமூகங்கள் கொண்டு உதவ முடியும்,” என்றும் கூறியுள்ளார். பயங்கரவாதிகளை ஊக்குவித்ததாக ஜாகிர் நாயக் மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ளநிலையில் திக்விஜய் சிங் பேச்சு விபரங்கள் பெரும் சர்ச்சையாகி உள்ளது. இதனையடுத்து பயங்கரவாதத்துடன் ஜாகிர் நாயக்கிற்கு தொடர்பு உள்ளது தொடர்பாக ஆவணங்கள் இருப்பின் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறிய திக்விஜய் சிங், விசாரணையை சந்திக்கவும் தயார் என்று கூறினார்[9].  இதனையடுத்து தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகிய மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் விவகாரத்தை இழுத்து உள்ளார்[10]. இதுதொடர்பாக டுவிட்டரில் தகவல் வெளியிட்டு உள்ள திக்விஜய் சிங், “ஜாகிர் நாயக்குடன் மேடையை பகிர்ந்துக் கொண்ட காரணத்திற்காக நான் விமர்சனத்திற்கு உள்ளாகிஉள்ளேன், ஆனால் ராஜ்நாத் சிங் ஜி குண்டு வெடிப்பு குற்றவாளி பிரக்யா தாகுரை சந்தித்து பேசியது பற்றிய கருத்து என்ன? பிரக்யா தாகுர் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர் ஆனால் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக எந்த ஒரு வழக்கும் உள்ளதா? ஜாகிர் நாயக்குடன் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஜி மேடையை பகிர்ந்துக் கொண்டது தொடர்பான கருத்து என்ன?,” என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.

© வேதபிரகாஷ்

09-07-2016

[1] ISIS terrorists shouted ‘Allahu Akbar’ as they hacked to death 20 foreign tourists in restaurant in Bangladesh – but spared those who could recite the Koran – before armoured troops moved in.By MIA DE GRAAF FOR DAILYMAIL.COM  and IMOGEN CALDERWOOD FOR MAILONLINE and AGENCIES

PUBLISHED: 17:01 GMT, 1 July 2016 | UPDATED: 15:40 GMT, 2 July 2016

[2] http://www.dailymail.co.uk/news/article-3670353/Gunmen-attack-restaurant-Dhakas-diplomatic-quarter-police-witness.html

[3] தமிழ்.ஒன்.இந்தியா, தீவிரவாதிகளை உருவாக்குகிறதா ஜாகிர் நாயக் போதனை..? இந்தியாவை ஆய்வு செய்ய சொல்கிறது வங்கதேசம், By: Veera Kumar, Published: Thursday, July 7, 2016, 15:30 [IST].

[4] http://tamil.oneindia.com/news/international/bangladesh-asks-india-examine-zakir-naik-s-sermons-257595.html

[5] தினமலர், ஜாகிர் நாயக் மீது நடவடிக்கை: வெங்கையா சூசகம், பதிவுசெய்த நாள். ஜூலை.7, 2016.18.01

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1559285

[7] Published on Jul 7, 2016, A video has emerged of the Congress veteran, Digvijay Singh sharing the stage with Zakir Naik who inspired terrorists with his vitriolic speeches. In the video from Semptember 2012, Digvijay Singh ; https://www.youtube.com/watch?v=lMLgC0fkZbI

[8] As Naik came under the scanner, Congress leader Digivjaya Singh was in the BJP’s line of fire after a 2012 video, showing him share a dais with the televangelist at an event to promote communal harmony, surfaced on Thursday 07-07-2016.

http://www.thehindu.com/news/national/mumbai-police-to-probe-preacher-zakir-naiks-speeches-devendra-fadnavis/article8819992.ece

[9] தினத்தந்தி, ஜாகிர் நாயக் விவகாரம்: பிரக்யா தாக்குரை ராஜ்நாத் சிங் சந்தித்தது தொடர்பாக திக்விஜய் சிங் கேள்வி,பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016, 2:36 PM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016, 2:36 PM IST

[10] http://www.dailythanthi.com/News/India/2016/07/08143637/Zakir-Naik-row-What-about-Rajnath-Singh-meeting-Pragya.vpf