Archive for the ‘அமர்நாத் யாத்திரை’ category
திசெம்பர் 31, 2015
ஆயிஷா அன்ட்ரப் – பசுமாடு அறுத்த வீராங்கனை, காஷ்மீர பெண் ஜிஹாதி, ஆயுத போராளி, ஐசிஸ் ஏஜென்டா? (1)

காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பதுதான் ஒரே வழி: துக்தரன்-இ-மில்லத் [(Dukhtaran-e-Millat (DeM), உம்மாவின் மகள்கள்] என்ற தீவிரவாத இயக்கத்தின் தளபதி-தலைவி ஆஷியா அன்ட்ரபி (Asiya Andrabi, வயது 53) 2010களில் “கல்லடி கலாட்டா” என்ற யுக்தியைக் கையாண்டு, பெண்கள், சிறுமிகள் மற்றும் சிறுவர்களை தெருக்களில் வந்து, பாதுகாப்புப் படை, ராணுவம் மற்றும் போலீஸ் மீது கற்களை எறியும் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தாள். கடந்த ஆகஸ்ட் 14, 2014 அன்று பாகிஸ்தான் கொடியேற்றி, பாகிஸ்தான் விடுதலை தினத்தைக் கொண்டாடினாள். இதே போல மார்ச்.23, 2014 அன்றும் செய்துள்ளாள். செப்டம்பர் 2014ல் கைது செய்யப்பட்டாள்[1]. உடன் பெஹ்மிதா சூபி [Fehmida Soofi] என்ற இன்னொரு பிரிவினைவாதக்குழுத் தலைவியும் இருந்தாள். இதனால், இவள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது[2]. உடனே, தொலைபேசியில், மும்பை குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தேடப்பட்டுவரும், தீவிரவாதியான ஹாவிஸ் சையதுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளாள். சையது ஜிலானியின் மாணவி, பிரிவினைவாதத்தில் ஈர்க்கப்பட்டு, ஜிலானி வழியில் செயல்பட்டும் அடிப்படைவாத போராளி. மனித உரிமைகள் பெயரில், அடிப்படைவாத, பயங்கரவாத, தீவிரவாத ஜிஹாதிகளின் குரூரக் கொலைகள், கற்பழிப்புகள் முதலியவற்றை மறைத்து, அடிப்படைவாத, பயங்கரவாத, தீவிரவாத ஜிஹாதிகளின் உரிமைகள் பற்றி பேசிவரும் திறமைசாலி. இதனால், சிறைக்குள் செல்வது, வெளியே வருவது என்பது வாடிக்கையாகி விட்டது. காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பதுதான் ஒரே வழி என்று போதிக்கும் இவள் பிரிவினைவாதப் போர்வையில், ஜிஹாத் தத்துவத்தை பெண்களுக்கு போதித்து வருகிறாள்.

ஜிஹாதி குடும்பத்தில் பிறந்து, ஜிஹாதியாக செயல்பட்டுவரும் ஜிஹாதி–பெண்: ஆயிஷா அன்ட்ரபி 1962ல் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது[3]. 1990ல் ஆஷிக் ஹுஸைன் என்ற பயங்கரவாதியை நிக்காஹ் செய்து கொண்டாள், அவனும் பயங்கரவாத செயல்களுக்காக கடந்த 23 ஆண்டுகளாக 1992லிருந்து சிறையில் இருக்கிறான். ஹிஜ்புல் முஜாஹித்தீன் என்ற தீவிரவாத இயக்கத்தைத் துவக்கியவர்களுள் ஒருவன். மொஹம்மது பின் காசிம் (23) மற்றும் அஹமது பின் காசிம் (15) என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். இவளுடைய மற்ற உறவினர்கள் பாகிஸ்தான், சௌதி அரேபியா, இங்கிலாந்து, மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்று விட்டனர். 1990ல் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு, கைதாகி, பிறகு 2004-2007 காலத்தில் தலைமறைவாக வாழ்ந்தாள். சர்வகட்சி ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் [All Parties Hurriyat Conference] கிளையாக துக்தரன்-இ-மில்லத் செயல்பட்டு வருகிறது. இவளின் மூன்று மைத்துனர்கள், தீவிரவாத தொடர்புகளுக்காக, பாகிஸ்தானில் செப்டம்பர் 2013ல் கைது செய்யப்பட்டனர். 2010ம் வருடம் மஸ்ரத் ஆலத்துடன் “கல்லடி கலாட்டாவில்” இறங்கியவள். இளைஞர்கள் மற்றவர்களைத் தூண்டிவிட்டு நடத்திய இந்த கல்லடி கலாட்டாக்களில் சுமார் நூறு பேர் இறந்ததாக தெரிகிறது. வெளிப்டையாக ஜிஹாதித்துவத்தை போதித்து இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களை தீவிரவாதிகளாக மாற்றி வருகிறாள் என்று காஷ்மீர மிதவாதிகளே குற்றஞ்சாட்டுகின்றனர்.

கல்லெறி கலாட்டா ஜிஹாதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டது (ஆகஸ்ட்.2011)[4]: காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்கியதுடன், பொது சொத்துக்களுக்கு தீ வைத்தும் கொழுத்தினார்கள். கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு அங்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இது பாலஸ்தினத்தில் பயன்படுத்தப் படும் முறை என்பதனையும் அறியப்பட்டது. கல்வீச்சு மற்றும் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதிலும் ஊடகக்காரர்கள் காயப்பட்டனர். ஆனால், இதைப் பற்றி அவர்கள் ஒன்றும் ஆர்பாட்டம் செய்யவில்லை. இந்நிலையில் காஷ்மீர் அரசு இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. கலவரத்தின் போது தீ வைப்பு போன்ற சட்ட விரோத செயலில் சம்பந்தப்படாமல் கல்வீச்சில் மட்டும் ஈடுபட்டவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டது[5]. இது தொடர்பாக காஷ்மீர் மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா கூறுகையில், வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது[6]. பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைத்தவர்களை தவிர மற்றவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என கூறினார்[7].

பசுமாட்டை அறுத்து எதிர்ப்புத் தெரிவித்த பயங்கரவாதி[8]: ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்ட பசு-மாமிச விற்பனை தடையை எதிர்த்து செப்டம்பர் 2015ல் ஒரு பசுவைக் கொன்று, அந்த கொலைக்காட்சி விடியோவை வெளியிட்ட[9] ஆயிஷா அன்ட்ரபியை என்னென்பது? அவளைக் கொடூரக்காரி எனலாமா அல்லது ஜிஹாதி என்று பாராட்டலாமா? பெண்களுடன் நின்று கொண்டிருக்கிறாள். ஒரு பசுமாட்டை இழுத்து வந்து, அவள் முன்னால் அறுக்கிறார்கள். அந்நேரத்தில் “தாரே தக்பீர், அல்லாவு அக்பர்” என்று கத்துகிறாள். வெறியோடு கத்தும் அவளது குரல் வீடியோவில் தெளிவாகக் கேட்கிறது. இதில் திகிலூட்டுவது என்னவென்றால், குழந்தை ஏந்திய ஒரு பெண் முன்வரிசையில் நின்று கொண்டு அவ்வாறு கத்துகிறாள். இப்படி பயங்கரமான செயல்களை சிறுவயதிலிருந்தே பார்த்து, கடினமாகி, இருகிவிட்ட இம்மனங்களுக்கு ஜீவகாருண்யம் என்பதெல்லாம் எப்படி புரியும்? பெண்கள் மென்மையானவர்கள் என்றெல்லாம் இங்கு செல்லுபடியாகாது. பெண் என்றால், பேயும் இரங்கும் என்றேல்லாம் சொல்லமுடியாது, ஏனெனில், பேயே இவளைக் கண்டால், பயப்படும். மற்ற பெண்களின் துன்பத்தை கண்டுகொள்ளாமல் மரத்துப் போன, வெறிபிடித்த ஜிஹாதி, முஸ்லிம் பெண்களுக்காக பாடுபடுகிறாள் என்று வேறு சொல்லிக் கொள்கிறாள். இந்நிகழ்ச்சி வெளிப்படையாக ஊடகங்களில் வரவில்லை. மறைக்கப்பட்டது எனலாம். “பீப்” விசயத்தில் அத்தனை கலாட்டா, ஆர்பாட்டம் செய்த ஊடகங்களை இதனை ஏன் மறைக்க வேண்டும்? இது சகிப்புத்தன்மையா என்று யாரும் கேட்கவில்லை.

ஆயிஷா அன்ட்ரபி ஐசிஸ்க்கு ஆள்பிடிக்கும் போராளியா?: இப்பொழுது டிசம்பர் 2015ல் ஹைதரபாதிலிருந்து மூன்று இளைஞர்கள் அன்ட்ரபியை சந்தித்து ஐசிஸ்ஸில் சேர செல்வதாக மத்தியாரசு புலனாய்வுத் துறைக்குத் தெரிய வந்தது[10].
- மொஹம்மது அப்துல்லா பசித் [Mohd Abdulla Basith],
- சையது ஒமர் பரூக் ஹுஸைனி [Syed Omer Farooq Hussaini]
- மாஜ் ஹஸன் பரூக் [ Maaz Hasan Farooq]
இவர்கள் எல்லோருமே 20-22 வயதினர், உறவினர்கள் ஆவர். இவர்கள் எல்லோருமே, அன்ட்ரபியை சந்தித்து, பாகிஸ்தான் வழியாக ஐசிஸ் சேர செல்வதாக இருந்தது. கடந்த வாரம் மஹாராஷ்ட்ரா ஏ.டி.ஸ்.பிரிவு போலீஸாரால், நாக்பூர் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் போது அவ்விவரம் தெரியவந்தது. அவர்கள் அன்ட்ரபியை சந்திக்க விரும்பியதாகத் தெரிவித்தனர்[11]. இவர்களது மாமா சையது சலாவுத்தீன், தடை செய்யப்பட்ட சிமியின் தலைவர் ஆவார். இவர்கள் ஐசிஸ், தாலிபான், அல்-குவைதா அல்லது ஹிஜ்புல் முஜாஹித்தீன் போன்ற தீவிரவாத இயக்கத்துடன் சேருவதாக திட்டமிட்டிருந்தனர்[12]. ஆனால், அன்ட்ரபி அவர்கள் தன்னை சந்திக்கவில்லை என்றும், அவர்கள் யார் என்பதும் தனக்குத் தெரியாது என்றும், அவர்கள் வேண்டுமென்றே தன் பெயரை இழுத்து விட்டனர் என்றும் கூறியுள்ளாள்[13]. சட்டத்தை வளைப்பதற்கு இவ்வாறு பேசுவது, பலமுறை சிறைச் சென்று விடுவிக்கப்பட்ட இவளுக்கு கைவந்த கலை என்பதால், ஒன்றும் வியப்பில்லை. விடுவிக்கப்பட்ட பிரிவினைவாதியான மஸரத் ஆலமும் [Masarat Alam] மறுபடியும் கைது செய்யப்பட்டான்.

© வேதபிரகாஷ்
31-12-2015
[1] The youngest child of prominent Srinagar doctor Sayeed Shahabuddin Andrabi, 1962-born Ms. Andrabi had completed a degree in biochemistry, and hoped to study further in Dalhousie. http://www.geo.tv/article-197860-Asiya-Andrabi-arrested-four-Kashmiris-killed-in-Indian-army-firing-
[2] The DeM chief celebrated Pakistan’s Independence Day on August 14 at her residence by singing that country’s national anthem and unfurling the flag of the neighbouring country on the outskirts of the city. Hours after that, Andrabi had stoked another controversy by addressing via phone a rally in Pakistan which was organized by Mumbai attack mastermind Hafiz Saeed-led Jamat-ud Dawa (JuD).
Saeed was sitting on the stage during Andrabi’s address. Andrabi had earlier also celebrated Pakistan’s National Day on March 23 this year and hoisted the flag of the country and sung its national anthem, following which the police registered a case against her under the Unlawful Activities Prevention Act.
http://articles.economictimes.indiatimes.com/2015-09-18/news/66677405_1_dem-chief-pakistani-flag-saeed
[3] http://www.thehindu.com/news/national/inside-kashmirs-new-islamist-movement/article580687.ece?ref=relatedNews
[4] மாலைமலர், கல் எறிந்தவர்களுக்கு பொது மன்னிப்பு: காஷ்மீர் அரசு அறிவிப்பு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 28, 3:04 PM IST.
[5] http://www.maalaimalar.com/2011/08/28150458/Amnesty-for-throwing-stones-Ka.html
[6] தினமலர், கல் எறிந்தவர்களுக்கு மன்னிப்பு வழங்க காஷ்மீர் மாநில அரசு முடிவு, ஆகஸ்ட்.28, 2011, 17:14.
[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=302950
[8] https://www.youtube.com/watch?v=UVwF71dJWMQ
[9] Ms. Andrabi, who slaughtered a cow after a court ordered banning the same, faces a number of FIRs in the Valley. She released a 1:15-minute video on September 10 wherein she slaughtered a cow to defy the beef ban.
http://www.thehindu.com/news/national/separatist-andrabi-arrested-for-antinational-activities/article7664426.ece
[10] The central government has ordered an investigation by a high-level body after three boys, Mohd Abdulla Basith, Syed Omer Farooq Hussaini and Maaz Hasan Farooq (all aged around 20-22) from Hyderabad claimed they were on their way to Srinagar to meet Andrabi.
http://www.hindustantimes.com/punjab/dukhtaran-e-millat-chief-asiya-andrabi-denies-isis-links/story-uSQaI3tGwRuMcn9g6Q00tL.html
[11] Whether Kashmiri separatist leader Asiya Andrabi visited Telangana has yet to be determined, said the local police today amid reports that three young men arrested for wanting to join jihadi groups in Pakistan have confessed that they wanted to meet the 53-year-old.
http://www.ndtv.com/top-stories/isis-controversy-links-3-hyderabadi-cousins-to-separatist-asiya-andrabi-1260743
[12] During the interrogation, the arrested men reportedly confessed that they were trying to join any of the jihadist groups — ISIS, Al Qaeda or Hizbul Mujahideen. The police say their uncle was Sayed Salahuddin, the former chief of the banned Students Islamic Movement of India or SIMI.
http://www.ndtv.com/top-stories/isis-controversy-links-3-hyderabadi-cousins-to-separatist-asiya-andrabi-1260743
[13] “I came to know about the story through the media. Even the ATS (Anti-Terrorism Squad) Hyderabad was quoted saying that they [the boys] wanted to meet me. I think the arrested boys know better why they named me. It seems my name has been deliberately dragged in,” said Ms. Andrabi.
http://www.thehindu.com/news/national/other-states/never-met-hyderabad-youths-andrabi/article8046023.ece
பிரிவுகள்: அப்சல் குரு, அமர்நாத் யாத்திரை, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்- பதர், அல்-முஜாஹித்தீன், அல்-முஹாஜிரோன், அல்லாஹூ அக்பர், ஆயிஷா, இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இஸ்லாம், ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், கற்களை வீசி தாக்குவது, கற்பழிப்பு ஜிஹாத், கலவரங்கள், கலவரம், கல்லடி ஜிஹாத், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், காஃபிர், கிலானி, கொலை வெறி, சரீயத், சரீயத் சட்டம், துக்தரன்-இ-மில்லத், பசு, பசு மாமிசம், பசு வதை, மாட்டிறைச்சி, Uncategorized
Tags: அல்லா, ஆயிசா, ஆயிசா அன்ட்ரப், ஆயிஷா அன்ட்ரப், ஆயிஸா அன்ட்ரப், ஐசில், ஐசிஸ், கத்தி, கல், கல்லெறி கலாட்டா, கல்லேறி ஜிஹாத், சிரியா, ஜிஹாதி கணவன், ஜிஹாதி குடும்பம், ஜிஹாதி மனைவி, ஜிஹாத், துக்தரன்-இ-மில்லத், பசு, பசு மாமிசம், பசுவதை, பெண் ஜிஹாத்
Comments: Be the first to comment
மார்ச் 16, 2013
லிங்கம் பெருமாளின் வீரமரணத்தை ஜவாஹிருல்லா ஒப்புக்கொள்வாரா அல்லது தடை செய்ய போராட்டம் நடத்துவாரா?

13-03-2013 புதன்கிழமைகாலை 11.00 மணி[1]: காஷ்மீரில் பெமினா என்ற இடத்தில் உள்ள பொது பள்ளிக் கூடத்திற்கு அருகில் CRPFயின் 73ம் முகாம் (CRPF’s 73rd battalion) உள்ளது. இந்த வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால், அப்பொழுது, மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். பள்ளி மைதானத்தில் சிகப்பு டி-சர்ட், கருப்பு பேன்ட் மற்றும் வெள்ளை டி-சர்ட், கருப்பு பேன்ட் அணிந்த இருவர் கிரிக்கெட் கிட்டுடன் மைதானத்தில் நுழைந்தனர். அருகில் பாதுகாப்பு வீரர்களும் நின்றிருந்தனர். சிறிது நேரம் விளையாடுபவர்களிடத்தில் பேச்சு கொடுத்தனர்.

13-03-2013 புதன்கிழமைகாலை 11.05 மணி[2]: பேசிக் கொண்டேயிருந்தவர்கள், திடீரென்று, கிரிக்கெட் கிட்டைத் திறந்து, ஏ.கே-47 மற்றும் கையெறிக் கொண்டுகளை எடுத்து, CRPF வீரர்கள் மீது வீசி, சுட ஆரம்பித்தனர். இதில் ஐந்து வீரர்கள் உடனடியாக இறந்தனர். ஐந்து பேர் காயமடைந்தனர். விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் ஓட ஆரம்பித்தனர். சுதாரித்துக் கொண்ட வீரர்கள் தீவிரவாதிகளின் மீது சுட ஆரம்பித்தனர். பதினைந்து நிமிடம் துப்பாக்கி சூடு நடந்தது, இறுதியில் இருவரும் கொல்லப்பட்டனர். அவர்கள் ஃபிதாயீன் என்ற ஜிஹாதித் தற்கொலைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது[3].

கொல்லப்பட்டவீரர்கள்பலமாநிலங்களைச்சேர்ந்தவர்கள்: ஜிஹாதி தீவிரவாதம் காஷ்மீரத்தில் குரூரக்கொலையில் ஈடுபட்டாலும், கொலை செய்யப்பட்ட வீரர்கள் இந்தியாவின் பல மாரநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
- ஏ. பி. சிங் – assistant sub-inspector A.B Singh of Ujjan, Madhya Pradesh,
- ஓம் பிரகாஷ் – constable Om Prakash (Sehore, MP),
- எல். பெருமாள் – constable L. Perumal (Madurai, Tamil Nadu),
- சுபாஷ் – constable Subhash (Ranchi, Jaharkand) and
- சதீஷ் ஷா – constable Satish Shah (Mandya, Karnataka).

கைப்பற்றப்பட்டஆயுதங்கள்: கிரிக்கெட் கிட் என்று எடுத்து வந்ததில், உள்ளேயிருந்த ஆயுதங்கள்:
- இரண்டு ஏ.கே-47 துப்பாக்கிகள் – Two Ak-47 rifles,
- அதற்கான வெடிப்பொருட்கள் – five Ak magazines,
- ஆறுமுறை உபயோகிக்கக்கூடிய குண்டுகள் – six AK rounds,
- இரண்டு சீன கைத்துப்பாக்கிகள் – two Chinese pistols,
- இரண்டு முறை சுட குண்டுகள் – two pistol rounds,
- கைக்குண்டு தூக்கியெறியும் கருவி – one UBGL – Under Barrel Grenade Launcher,
- அதற்கான மூன்று குண்டுகள் – three UBGL grenades and
- நான்கு கையெறி குண்டுகள் – four hand grenades

கடந்த ஜனவரி 6-7, 2010 தேதிகளில் இதே மாதிரி, இந்த தீவிரவாதிகள், லால் சௌக்கில் ஒரு பஞ்சாப் ஓட்டலில் மறைந்து கொண்டு பாதுகாப்பு வீரர்களுடன் சண்டை போட்டனர். அப்பொழுது தங்களை லஸ்கர்-இ-தொய்பா என்று சொல்லிக் கொண்டனர். அதாவது “பிதாயீன்” என்பது பொதுப்பெயர், ஜிஹாதி போல!
தாக்குதலைநடத்தியவர்கள்யார்?: ஜிஹாதி தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், அடிப்படைவாதிகள் என்று எல்லாவிதமான இஸ்லாமிய கொலைவெறிக் கும்பல்களுடன் மக்களில் பெரும்பாலோர் தொடர்பு வைத்திருப்பதனால், தாக்குதல் நடத்தியவர்களைப் பற்றி, பலவிதமான செய்திகள் வெளிவந்த வண்னம் இருந்தன[4]. ஹிஜ்புல் முஜாஹித்தீன் தான் தாக்கினர் என்று தொலைபேசி மூலம் யாரோ அறிவித்தாக மகூறி, பிறகு அவர்கள் மறுத்துள்ளதாக அறிவித்தனர். பிறகு லஸ்கர்-இ-தொய்பா தாக்குதல் மாதிரி இருக்கிறது என்று அபதுல் முஜாதபா என்ற போலீஸ் அதிகாரி கூறியதாக கூறினர். ஆனால் மாட்டிக் கொண்ட[5] “அபு தல்ஹா” என்ற ஜிஹாதியிடமிருந்து, இது “பிதாயீன்” வேலைதான் என்று தெரியவந்துள்ளது[6]. “பிதாயீன்” என்ற ஜிஹாதிகள் தம் உயிரையும் கொடுத்து காபிர்களைக் கொல்லும் ஜிஹாதிகள். குரான் மீது சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டு, இத்தகைய வேலைகளை செய்கிறார்கள். ஏனெனில் அல்லா அவர்களுக்கு சொர்க்க வாசலைத் திறந்து வைத்துள்ளதாக நம்புகிறார்கள். முன்னர் ஷிண்டே ராஜ்ய சபாவில் பாகிஸ்தானிய தொடர்பு உள்ளதாக கூறியிருக்கிறார்[7]. பிறகு அந்த தலைவெட்டியானிடமே குர்ஷித்தை விட்டுக் கேட்டிருக்கலாமே?

ஜிஹாதி தாக்குதலில் தமிழக வீரர் இறப்பு: பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலில் பலியான மதுரை வீரர் எல். பெருமாள் உடல் அரசு மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. செல்லூர் ராஜா – தமிழக அமைச்சர், அன்சுல் மிஸ்ரா – மாவட்ட கலெக்டர், ஓம் பிரகாஷ் -CRPF கமாண்டெர், பாலகிருஷ்ணன் – மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்[8]. அமைச்சர் ரூ. ஐந்து லட்சம் தொகைக்கான செக்கை குடும்பத்தாருக்கு அளித்தார். சேடபட்டி முத்தையா –திமுக, இல. கணேசன் – பிஜேபி, ஹிந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் முதலிய இயக்கத்தோடும் கலந்து கொண்டு இறுதி மரியாதை செல்லுத்தினர்[9].

ஜிஹாதி முஸ்லீம்கள் தாக்கிக் கொன்றுள்ளதால் பகுத்தறிவு தமிழர்கள் கண்டனம் செல்லுத்தவில்லையா?: ஜம்மு காஷ்மீரில் கடந்த (13 ம் தேதி) புதன்கிழமை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் இந்திய சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்த பெருமாள் என்பவரும் ஒருவர். இவரது உடல் நேற்று இரவு சென்னைக்கு வந்தது. இடையப்பாடியில் இருக்கும் இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு முகாமிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, சுமார் 11 மணி அளவில் தும்மநாயக்கன்பட்டி கிராமத்திற்கு வந்தது. தெருக்கள் எல்லாம் கருப்புக் கொடிகளினால் துக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. தமிழக அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் நிருபர்களிடம் கூறுகையில்: “இது போன்ற பயங்கரவாத சம்பவத்தை தடுத்த மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை”, என்றார். ஏன் மற்றவர்கள் எதுவும் சொல்லக்கூடாதா?
11 முறை தோற்று வெண்ர பெருமாள், 17-முறை தாக்கிய கஜினி முஹம்மது ஜிஹாதிக்கு பலியாகி விட்டாரா?: பலியானவர் பெருமாள் (வயது 29) மதுரை மாவட்டம் பேரையூர் தும்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர். இவரது தந்தை லிங்கம் ஆட்டோ டிரைவர் ஆவார். மொத்தம் 5 குழந்தைகள் பெற்ற இவருக்கு பெருமாள் என்பவர் மிக பாசமாக இருப்பாராம். பெருமாள் 10 ம் வகுப்பு வரை படித்து எப்படியாவது ராணுவ படையில் சேர வேண்டும் என்று பெரும் ஆவலோடும், லட்சிய கனவோடும் இருந்து வந்தாராம். இந்த படையில் சேருவதற்கான தேர்வில் பல முறை தோற்று போனாராம். குறிப்பாக 10 முறை இவர் தேர்வாகவில்லை இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்து 11 வது முறை படைக்கு பிட் ஆனாராம். தேர்வு செய்யப்பட்ட தகவலை அவர் தனது கிராமம் முழுவதும், உற்றார் உறவினர்களிடம் பெரும் செய்தியாக தெரிவித்து மகிழ்ந்தாராம் பெருமாள்.

திருமணத்திற்கு ஜிஹாதிகள் பிணத்தை அனுப்பியுள்ளார்களே?: கடந்த 2010 ல் பணியில் சேர்ந்த பெருமாள் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இங்கு பணியாற்றிய 3 ஆண்டில் தனது இன்னுயிரை இழந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் முறை விடுப்புக்கு வந்த பெருமாள் திருமணம் செய்வது தொடர்பாக தனது உறவுக்கார பெண்ணை பார்த்து உறவினர்களிடம் பேசி முடித்துள்ளார். வரும் ஜூன் மாதம் ஊருக்கு வருவேன் அப்போது திருமணம் செய்து கொள்வோம் என்று வாக்கு கொடுத்து சென்றவர் இன்று பிணமாக திரும்பியதை கண்டு அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியிருக்கிறது. இவரது உடல் இன்று சொந்த கிராமத்திற்குகொண்டு வரப்பட்டது.அமைச்சர் , மாவட்ட கலெக்டர், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. தமிழக போலீசார் சார்பில் 21 குண்டுகளும், சி.ஆர்.பி.எப்., போலீசார் சார்பில் 21 குண்டுகளும் வானத்தை நோக்கி சுடப்பட்டன. வருவதையொட்டி சுமார் 2 ஆயிரத்திற்கும் மேலான பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் காத்து நிற்கின்றனர். மதுரையில் மாவட்ட உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவ்வளவுதான், மக்கள் மறந்து விடுவார்கள். ஆனால், ஏன் இப்படி இந்தியா வீரர்களை ஜிஹாதிகளுக்கு பலியாக்க வேண்டும்?

Karunanidhi-with-kulla
என்ன நடந்தாலும், குல்லா போட்டுக் கொண்டு கஞ்சி குடிக்கும் பட்டாளம் நஎப்பொழுதும் இருக்கத்தான் செய்கிறது. சில நேரங்களில் குர்ஷித் போன்ற பேனாக்களில் ரத்தத்தை நிரப்பும் முஸ்லீம்கள், ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும், எதிரிகளுடன் உணவருந்துவார்கள்!
வேதபிரகாஷ்
16-03-2013
[4] Police say two pocket diaries; a SIM card of an Indian telecommunication company issued in Uri, an ointment tube made in Pakistan; an under-surveillance guerilla activity controlled by a Kashmiri militant for several weeks at Palhalan village of Baramulla; the Hizbul Mujahideen’s first-ever claim of owning up a suicide attack; the Lashkar-e-Taiba spokesman’s “meaningful quiet”; no local claim on the two bodies (of the militants); besides some telephonic intercepts and call detail records pieced together by the investigators make the fidayeen attack “a clear case of foreign terror.” “We have noticed the signature of the Lashkar-e-Taiba in this operation,” a senior official associated with the investigation told The Hindu. He refused to disclose details but was confident that a breakthrough was not far away. “An operation jointly planned and executed by the Kashmiri and Pakistani cadres of the LeT in coordination with the United Jihad Council,” he said when pressed to identify the actors.
பிரிவுகள்: ஃபிதாயீன், அடி, அடித்து சித்ரவதை, அடிப்படைவாதம், அடையாளம், அப்சல், அப்சல் குரு, அப்ஸல், அமர்நாத் யாத்திரை, அலி, அல்லா, அல்லா சொன்னதால் சுட்டேன், அல்லா பெயர், அல்லா பெயர் உபயோகம், அழுக்கு, அவதூறு, அவமதிக்கும் இஸ்லாம், ஆப்கானிஸ்தான், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் வரைப்படம், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, இரட்டை வேடம், இஸ்லாமிய இறையியல், ஈட்டிக்காரன், உதை, உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, ஓட்டு, ஓட்டுவங்கி, கசாப், கசாப்புக்காரத்தனம், கலவரங்கள், கலவரம், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காந்தஹார், குண்டு தயாரிப்பு, குண்டு நேயம், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, குதாமுல் இஸ்லாம், கைது, கையெறி குண்டுகள், கொல், சித்திரவதை, சொர்க்கம், ஜவாஹிருல்லா, ஜிஹாதி நேயம், தாலிபான், திறப்பு, தும்மநாயக்கன்பட்டி, துருக்கர், துலுக்கன், நரகம், பத்தான், பாகிஸ்தான், பாகிஸ்தான் தீவிரவாதம், பிதாயீன், பிள்ளை, புனிதப் போர், பெருமாள், மதரஸாக்கள், மனித நேய மக்கள் கட்சி, மனித நேயம், மனித வெடிகுண்டு, மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், முஸ்லீமின் மனப்பாங்கு, முஸ்லீம், முஸ்லீம் இளைஞர்கள், முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம் முன்னேற்றக் கழகம், முஸ்லீம் லீக், முஸ்லீம்களிடம் ஊடல், முஸ்லீம்களிடம் கொஞ்சல், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், முஸ்லீம்கள், லிங்கம், வன்முறை, வாசல், வெடிகுண்டு பொருட்கள், வெடிபொருள் வழக்கு
Tags: ஃபத்வா, அவமதிக்கும் இஸ்லாம், அஹ்மதியா, இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம் கொலை, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காஷ்மீரம், குண்டு வெடிப்பு, கொலைவெறி, கோவில் சிலை உடைப்பு, சியா, சிறுபான்மையினர், சுன்னி, செக்யூலரிஸம், ஜவாஹிருல்லா, தும்மநாயக்கன்பட்டி, பரவும் தீவிரவாதம், பாகிஸ்தான், பெமினா, பெருமாள், போரா, மதுரை, முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஜாஹித்தீன், முஸ்லீம் கொலை, முஸ்லீம்கள், லப்பை, லிங்கம், ஹிஹாதி கொலை
Comments: 3 பின்னூட்டங்கள்
மார்ச் 10, 2013
தர்காவில்-மசூதியில் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் இருக்கலாமா – இஸ்லாம் சொல்வதும், செய்வதும்!

09-03-2013 அன்று பாகிஸ்தான் பிரதமர் வந்ததை புறக்கணித்த இஸ்லாமிய மதத்தலைவர்.
உர்ஸ், சந்தனக்கூடு, மதகுருமார்களின் இறந்த நாள் விழாக்கள்: நாகூர் மற்றும் இதர முஸ்லீம் குருக்களின் சமாதிகளில் உர்ஸ் என்று நடைபெறும் வருடாந்திர விழாக் கொண்டாட்டங்களில், வண்ணவிளக்குகள், அலங்கரிக்கப்பட்ட ரத ஓட்டங்கள், மேளதாளங்கள், பாட்டுகள், நடனங்கள், கடைகள் என்று நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகின்றன. ஆஜ்மீரில் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஸ்டி மற்றும் கரீப் நவாஜ் எனப்படுகின்ற சூபி துறவி உர்ஸ் விழாவில் ஆயிரக்கணக்கான முஸ்லீம் பக்தர்கள் குழுமி விழா கொண்டாடுகிறார்கள். மற்ற சூப்பிக்கள் அல்லது சூப்பிக்களாக மாற்றப்பட்டவர்களின் நினைவாகவும் உர்ஸ் விழா கொண்டாடப்படுகின்றது. இதைக்காண அயல்நாட்டவர்களும் வருகிறார்கள். முஸ்லீம் காலண்டரின் படி, ஏழாவது மாதத்தில் வரும், அந்த சூபியின் இறந்த தினத்தை ஆறு நாட்கள் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். அந்நேரத்தில் நடக்கும் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் முதலியவற்றைப் பலர் புகைப்படம் எடுத்துள்ளனர். அவற்றை இணைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளன.

ஆஜ்மீர் தர்காவில் கவ்வாலி பாடும் முஸ்லீம்கள்.
தர்கா-மசூதி ஏற்படும் விதம் மற்றும் அமையும் தன்மை: இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் ஆண்டவன் இறுதி தீர்ப்பு நாளில் பிறந்த அதே உடலில் உயிர்த்தெழச் செய்வான். அதாவது, தான் செய்த காரியங்களுக்கேற்ப தண்டனை அல்லது பரிசு பெற தயாராக இருப்பான். அதனால் தான் உடல் எரிக்கப்படாமல், புதைக்கப் படுகிறது. புதைத்தாலும், மக்கி விடுமே, என்றாலும், உய்ரித்தெழும் போது, வேறொரு உடலைத் தருவதாக நம்புகிறார்கள். இவ்வகையில் அவுலியாக்கள் மேம்பட்டவர்கள் என்பதனால், அவர்கள் புதைக்கப்பட்டாலும், ஜீவசமாதியில் இருப்பது போல, உயிரோடு இருந்து கொண்டு, மக்களின் குறைகளை தீர்த்து வைப்பதாக முஸ்லீம்கள் நம்புகின்றனர். அதனால்தான், சமாதியிலிருந்து, கை எழுந்து ஆசீர்வாதித்தது, குரல் எழும்பி பதில் சொன்னது, மூச்சு சுவாசம் பட்டு வியாதி மகுணமாகியது, ஒளிவட்டம் தோன்றியது என்றெல்லாம் சொல்லி வருகின்றனர். ஈரந்த பிறகும் மறுபிறப்பு உண்டு என்பது, ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவியிருந்த வேதமதத்தின் நம்பிக்கையாகும். இது எல்லாமத ஞானிகளும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதன்படியே, அவரவர் புனித நூல்களில் அங்கங்கே அத்தகைய விவரங்கள் உள்ளன என்று அறிஞர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.

ஆஜ்மீர் தர்காவில் பக்திப் பரவசத்துடன் ஆடும் முஸ்லீம் பக்தர்கள்.
தர்கா வேறு, மசூதி வேறு: உருவ வழிபாடு கூடாது என்ற நோக்கத்தினால், ஆசாரமான முஸ்லீம்கள், இந்த தர்கா வழிபாட்டை தடுக்க, மாற்ற அறவே ஒழிக்க முனைந்துள்ளார்கள். தர்காவை இணைத்து மசூதிகள், மதரஸாக்கள், மற்றவை கட்டப்பட்டன. பிறகு, தர்கா வேறு, மசூதி வேறு என்று காட்ட, இடையில் சுவர்களும் எழுப்பப்பட்டன. இப்படி ஆசாரமான முஸ்லீம்கள் பலவித முயற்ச்கள் மேற்கொண்டாலும், தர்கா வழிபாட்டை ஒழிக்க முடியவில்லை. இன்னும் அதிகமாகித்தான் வருகின்றது. இந்தியாவில், இடைக்காலத்தில், பிணங்களைப் புதைத்து இடங்களை ஆக்கிரமித்தது தான் முகலாயர்களின் / முகமதியர்களின் வேலையாக இருந்தது. கோவில்கள், மடங்கள், நதிக்கரை புனித இடங்கள் (கட் / காட்டு) முதலியவை அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன. தர்கா வழிபாடே ஹராம் / இஸ்லாமிற்குப் புரம்பானது என்று அத்தகைய ஆசாரமான முஸ்லீம்கள் வாதிடுவது உண்டு. பிறகு எப்படி இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றன? மற்ற விஷயங்களுக்கு ஆர்பாட்டம் செய்யும் தமிழக முஸ்லீம்கள் மௌனிகளக இருக்கின்றார்கள். உண்மையில் அவர்கள் ஆஜ்மீருக்குச் சென்று போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமே, ஆனால் செய்யவில்லையே?

மேளத்தாளத்துடன் சூபி நடனம் ஆடும் பெண்மணி.
பெண்கள் இப்படி தர்கா – மசூதி முன்னர் ஆடலாமா?: ஆஜ்மீரில் நடந்த விழாவின் போது எடுக்கப்பட்டப் புகைப்படங்களைப் பார்க்கும் போது, பெண்கள் ஆடுவது, மேளதாளங்கள் ஒலிப்பது, அவர்களை சூழ்ந்து கொண்டு முஸ்லீம்கள் இருப்பது முதலிய காட்சிகள் தெரிகின்றன. வெளிப்புறம் என்றில்லாமல், உள்புறத்திலும், கவ்வாலி, நடனம் என்ற நிகழ்சிகள் நடப்பது புகைப்படங்கள் ஊர்ஜிதம் செய்கின்றன. இவற்றை முஸ்லீம்கள் எதிர்ப்பதாகத் தெரியவில்லை. இல்லையென்றால், அமைதியாக அவை காலங்காலமாக நடந்து கொண்டிருக்க முடியாது. மேலும், பாகிஸ்தானிய அரசியல்வாதிகள், பெரிய செல்வந்தர்கள், புள்ளிகள், சினிமாக்காரர்கள், நடிகைகள் என அனைவரும் இங்கு வந்த் போகின்றனர். அதனை, அந்த தர்கா இணைத்தளமே பெருமையாக புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றன.

பரவசத்துடன் ஆடிய இந்து சூபி நடன புகைப்படம் பல நாளிதழ்களில் வெளிவந்தன (மே 2012).
தர்கா வேறு மசூதி வேறு என்றால், தர்காவில் தொழுகை ஏன்?: இறைவனைத் தவிர வேறு ஒருவனையும் வணங்கக் கூடாது என்றால், இஸ்லாத்தில் தர்கா வழிபாடு இருக்கக் கூடாது. எப்படி உருவ வழிபாடு கூடாது என்றாலும், அது நிஜவாழ்க்கையில் முடியாதோ, அதாவது, வெளிப்புறத்தில் உருவத்தினால் தான் எல்லாமே அடையாளம் காணப்படுகிறது. உருவம், சின்னம், அடையாளம், குறியீடு, என எதுவும் இல்லை என்றால், இவ்வுலகத்தில் எதுவுமே நடக்காது. அதனால் தான் குரான் புத்தகம், கத்தி, பிறை, நட்சத்திரம், குதிரை, கை, கையெழுத்து, பச்சை நிறம் முதலியன இஸ்லாத்தில் சின்னங்களாக உபயோகப்படுத்தப் பட்டு வருகின்றன. அதனால்தான், முஸ்லீம் அரசியல்வாதிகள் இந்து கடவுளர்கள் இல்லை என்று வாதிட்டாலும், தேர்தல் மற்ரும் மற்ற நேரங்களில் கோவில்களை, மடாதிபதிகளைச் சுற்றி வருவார்கள்.

திருப்பதி முதல் வாரணாசி வரை உள்ள தெய்வங்களுக்கு மறைமுகமாக காணிக்கைகள் செல்லுத்தி வருவர். இதைப் பயன்படுத்திதான், கடவுளே இல்லை என்று பிதற்றும் திராவிடவாதிகளுக் தர்காக்குகளுக்குச் சென்று, கும்பிட்டு / மரியாதை செய்து விட்டு வருகிறார்கள். தர்கா கூத்துகளை எதிர்க்கும் இஸ்லாம், தமிழகத்தில் திராவிட கூத்துகளை ஒத்துக்கொள்கிறது[1].

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் விழா – ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் தான்!
பாகிஸ்தானிலும், இதே கதைதான்: பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு, அந்நாட்டில் நாகரிகமாக இருக்கும் பெண்கள் இந்தியப் பெண்களைப் போன்றுதான் அலங்கரித்துக் கொண்டு இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாஹூர் போன்ற நகரங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். பண்டிகைகள் என்றால், இந்தியர்களைப் போலத்தான் கொண்டாடி வருகிறார்கள். மந்திரீகம், வசியம், தாயத்து முதலியவற்றில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஜோசியம், நல்லநேரம் பார்க்கிறார்கள். இஸ்லாம் சொல்வதும், செய்வதும் இப்படித்தான் இருக்கும் போலும்!

பாகிஸ்தானில் நடக்கும் உர்ஸ் கொண்டாட்டம் – இன்னொரு புகைப்படம்!
இதைத்தவிர மற்ற நடனங்களும் உண்டு.

ஆஜ்மீரில் நடந்த குஷி நடனம்.

ஆஜ்மீர் உர்ஸ் விழாவின் போது தெருக்களிலும் நடக்கும் நடனம்!

வேதபிரகாஷ்
10-03-2013
பிரிவுகள்: 786, ஃபத்வா, அடிப்படைவாதம், அடிமை, அடையாளம், அமர்நாத் யாத்திரை, அலி, அல்லா, அல்லா என்ற வார்த்தை உபயோகம், அல்லா பெயர், அல்லா பெயர் உபயோகம், அழகிய இளம் பெண்கள், அழுகிய நிலையில், அழுக்கு, அவதூறு, அவமதிக்கும் இஸ்லாம், ஆண்டவனின் எச்சரிக்கை, ஆப்கானிஸ்தான், ஆமென், ஆலிஃப்-லம்-மிம், ஆவி, இச்சை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்களின் உரிமைகள், இமாம், இமாம்கள், இருக்கின்ற நிலை, இருக்கும் தெய்வங்கள், இலக்கியம், இல்லாத தெய்வங்கள், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், உயித்தெழுதல், உயிர் பலி, உருது மொழி, உருவ வழிபாடு, உலமாக்கள், உல்லாசம், ஏர்வாடி, ஓட்டு, ஓட்டுவங்கி, கத்தி, கர்பலா, கர்பலா உயிர்த் தியாகம், கலவரம், கலிமா, கல்வத், கல்வெட்டு, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்-மோமின் கூட்டணி, காஃபிர்கள், காங்கிரஸ், காந்தஹார், காந்தாரம், காபத்துல்லாஹ், காபா, காரைக்கால், குரான், குர்பானி, குஷித் ஆலம் கான், கௌதாரி, சன்னி, சரீயத், சல், சின்னம், சியாசத், சிற்பம், சிலை வழிபாடு, சுத்தம், சுன்னத், சுன்னி, சுன்னி-ஷியா, சூஃபி, சூபி, சூபித்துவம், செக்யூலரிஸ ஜீவி, ஜிஹாதித்துவம், ஜிஹாத், தர்கா, தர்மம், தலிபான், தலிபான் அமைப்பினர் தண்டனைகள், தலைவெட்டி, தொழுகை, நரகம், நாகூர் தர்கா, பள்ளி வாசல், பள்ளிவாசல், புதைத்தல், புத்தகம், புனிதப் போர், பேசுவது, பைபிள், பொய்மை, மக்கா, மங்கள வாத்தியங்கள், மசூதி, மசூதி தொழுகை, மசூதி வளாகத்தில் நினைவிடம், மந்திரத் தொழிலில், முப்தி, முஸ்லீம் சட்டம், மெக்கா, மௌலானா புகாரி, யாத்திரிகர்கள், யாத்திரை, யுனானி, ரத்தத்தினால் ஹோலி, ரத்தம், ரத்தம் குடித்தல், ரப், ரப்பானி, லாஹூர், வாணியம்பாடி, வாரணசி குண்டுவெடிப்பு, ஷியா, ஷியா சட்ட போர்ட், ஷியா சட்டம், ஷியா முஸ்லீம் சட்டம், ஷியா-சுன்னி, ஸல், ஹஜரத் இமாம் அலி, ஹஜ், ஹதீஸ், ஹுஸைன்
Tags: ஃபத்வா, அலி, அவமதிக்கும் இஸ்லாம், அவுலியா, ஆவி, இந்துக்கள், ஒளிவட்டம், கல்லறை, காஷ்மீரம், குரான், குர்பானி, குறை, கோவில் சிலை உடைப்பு, சமாதி, சல், சிறுபான்மையினர், சூஃபி, சூஃபித்துவம், சூபி, சூபித்துவம், ஜீவசமாதி, ஜீவமுக்தி, தாலிபான், தாளம், நடனம், நாட்டியம், நோன்பு, பக்தி, பரவசம், பாகிஸ்தான், பாட்டு, பிசாசு, புனிதப்போர், பேசுவது, பேய், மசூதி, மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மிதிக்கும் இஸ்லாம், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லிம்கள் சிலை உடைப்பு, முஸ்லீம்கள், மூச்சு விடுவது, மேளம், ரப், ரப்பானி, ரவுல், வரம், வேண்டுதல்
Comments: 2 பின்னூட்டங்கள்
மார்ச் 1, 2013
காஷ்மீர மாநில சட்டமன்றத்தில் ரகளை- கலாட்டா – மைக் வீசப்பட்டது!

உடைந்த மைக்கின் கீழ் பகுதியை தூக்கி வரும் எம்.எல்.ஏ!
காஷ்மீர சட்டசபையில் கலாட்டா-ரகளை: காஷ்மீர சட்டபையில் தீவிரவாதி மொஹம்மது அப்சல் குரு தூக்கிலிட்டதை எதிர்த்து கோஷம் எழுப்பினர், பின்னர் உடல் கேட்டு பயங்கர ரகளையில் ஈடுபட்டனர்[1]. பேப்பர்களை வீசியும், மைக்கைப் பிடுங்கியும் கலாட்டா செய்தனர்[2]. மொஹம்மது அப்சல் குரு போன்று உடையணிந்த ஒருவர் ஆவேசமாக கத்திக் கொண்டிருந்ததை டிவி-செனல்கள் காண்பித்தன. சட்டபைக்கு வெளியிலும் ஆர்பாட்டத்தை நடத்தினர்[3]. கலாட்டா செய்த லங்கேட் அப்துல் ரஷீத் இஞ்சினியர் (MLA Langate Abdul Rashid Engineer ) என்ற எம்.எல்.ஏ வெளியேற்றப்பட்டார்[4]. சட்டசபையில் இப்படி கலாட்டா செய்வது அவர்களுக்கு வழக்கமான-வாடிக்கையான விஷயம் தான்[5]. பெண்ணான மெஹ்பூபா முப்தியே கலட்டா செய்துள்ளார்[6].

புதைத்த உடலைக் கேட்டு சண்டை: இதில் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி இரண்டும் போட்டிப் போடுக் கொண்டு தீவிரவாதத்துரடன் துணைபோகுக் போக்கில் உடலைக் கேட்டு சண்டை போட ஆரம்பித்தனர். அப்சல் குரு ரகசியமாக தூக்கிலிடப்பட்டது குறித்தும், அவரது உடலை திரும்ப பெற வலியுறுத்தியும் காஷ்மீர் சட்டமன்றத்தில் இரண்டு ஒத்திவைப்பு தீர்மானங்களை முக்கிய எதிர்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி கொண்டு வந்தது. நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு கடந்த மாதம் திகார் சிறையில் ரகசியமாக தூக்கிலிடப்பட்ட பிறகு, அமைதியாக இருந்தவர்கள், திடீரென்று. அவனது உடல் கேட்டு ஆர்பாட்டத்தை ஆரம்பித்தனர். திகார் சிறை வளாகத்திலேயே அவ்வுடல் அடக்கம் செய்யப்பட்டது தெரிந்த விஷயமே. அதற்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது மேலும் வியப்பிற்குரிய விசயமாக உள்ளது.

மார்ச் 2012ல் உமர் அப்துல்லாவை நோக்கி காலை உயர்த்தி வரும் எம்.எல்.ஏ!
முப்தி முஹம்மது சையது மற்றும் அவரது மகள் போடும் நாடகங்கள்: அப்சலின் உடலை அவரது குடும்பத்தாரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என மாநில முதல்வர் உமர் அப்துல்லாவும் கோரிக்கை வைத்துள்ளது, போட்டாட்ப்போட்டி அரசியலைத்தான் எடுத்துக் காட்டுகிறது. இந்நிலையில் அப்சல்குரு ரகசியமாக தூக்கிலிடப்பட்டதன் மூலம் காஷ்மீர் குடிமக்களின் சட்ட உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டதாக முக்கிய எதிர்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி குற்றம் சாட்டியுள்ளது, முன்னர் முப்தி முஹம்மது சையது, தமது மகளை எப்படி தீவிரவாதிகள் கடத்திக் கொண்டது போல நாடகம் ஆடி, பிரியாணி கொடுத்து அனுப்பி, பிறகு 180 தீவிவாதிகளை விடுவித்தார் என்பதனை நினைவு கூரவேண்டும்[7]. ஆனால், அதே முப்தியின்பின்னொரு மகள் கலாட்டா செய்கிறார்[8].

மார்ச் 2011 – சட்டசபையில் கட்டிப்பிடி கலாட்டா-ரகளை!
விளம்பர கலாட்டா-ஆர்பாட்டம்-ரகளை: தூக்கு தண்டனை கைதிகள் வரிசையில் 28ம் இடத்தில் இருந்த அப்சல் குருவை மட்டும் தேர்ந்தெடுத்து தூக்கில் போட்டது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளது, அண்டை நாடான இஸ்லாமிய பங்களாதேசத்தில் எப்படி, பல ஜிஹாதி பயங்கரவாதிகள் தூக்கிலிடப்பட்டனர் என்பதனையும் மறந்து விடுகின்றனர். ராஜீவ்காந்தி கொலையாளிகளின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது போல அப்சல் குருவுக்கு வாய்ப்பு அளிக்காதது ஏன் என்ற கேள்வியை பிடிபி முன்வைத்துள்ளது இந்த உண்மைகளை மறைக்கவே என்று தெரிகிறது. அப்சல்குரு ரகசியமாக தூக்கிலிடப்பட்டது தொடர்பாகவும், அவரது உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைப்பதில் ஏற்பட்டு வரும் தாமதம் குறித்து சட்டமன்றத்தில் விவாதிப்பற்காக இரண்டு ஒத்திவைப்பு தீர்மானங்களை மக்கள் ஜனநாயக கட்சி சபாநாயகரிடம் தாக்கல் செய்தது. இந்த தீர்மானங்கள் மீது விவாதம் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு, இந்த தகவலை மக்கள் ஜனநாயக கட்சி செய்தி தொடர்பாளர் நயீம் அக்தர் செய்தியாளர்களிடம் தெரிவித்த பிறகும், சட்டசபையில் ரகளை செய்துள்ளது, வெறும் விளம்பரத்திற்காகவே என்று தெரிகிறது. இதில் காஷ்மீர இஸ்லாம் எப்படி செயல்படுகிறது என்பதனையும் அறிந்து கொள்ளலாம்[9].

கலாட்டா செய்யும் எம்.எல்.ஏவை தடுக்கும் போலீஸ் / மார்ஷெல்!
கடையடைப்பு-பந்த்-போராட்டம்: பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட அப்சல் குருவின் உடலை, அவரது உறவினரிடம் ஒப்படைக்க வலியுறுத்தி காஷ்மீரில் முழுக்கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. அரசு அலுவலகங்களும் பெருமளவில் இயங்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து காஷ்மீர் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன சோதனை நடத்தப்பட்டன. மாநிலத்தின் பல பகுதிகளில் துணை ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இத்தகைய போராட்டங்கள் நடக்கும் என்று அந்நிய நாளிதழ்கள் சந்தோஷமாக செய்திகளை முன்னரே வெளியிட்டுள்ளது கவனிக்கத் தக்கது[10].

ஆறு ஜிஹாதிகள் தூக்கிலிடப்பட்ட செய்தி!
புதைத்த உடலை, மறுபடியும் தோண்டியடுத்துப் புதைக்கலாமா?: புதைத்தப் பிணத்தைத் தோண்டி எடுக்கலாமா, மறுபடியும் புதைக்கலாமா, புதைத்த பிணம் இவ்வளவு நாள் முழுமையாக இருக்குமா, முதலிய கேள்விகளுக்கு அவர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்று தெரியவில்லை. இஸ்லாம் பொறுத்த வரைக்கும், தீர்ப்பு நாளில் புதைத்த உடல் உயிர் பெற்று எழும். அல்லா அவர்களின் செயல்களைப் பொறுத்து சுவர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ அனுப்பி வைப்பார் என்று நம்பிக்கையாளர்கள் சொல்கின்றனர். அந்நிலையில் புதைத்த உடலை, மறுபடியும் தோண்டியடுத்துப் புதைக்கலாமா, அதனை அல்லா ஏற்றுக் கொள்வாரா என்று தெரியவில்லை.
© வேதபிரகாஷ்
01-03-2013
பிரிவுகள்: அடையாளம், அப்சல், அப்சல் குரு, அப்துல் கனில் லோன், அப்ஸல், அமர்நாத் யாத்திரை, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்- பதர், அழுகிய நிலையில், அவமதிக்கும் இஸ்லாம், அஹமதியா, இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, உமர் ஃபரூக், உயித்தெழுதல், உயிர் பலி, உள்துறை அமைச்சகம், கற்களை வீசி தாக்குவது, கலவரங்கள், கலவரம், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, காஷ்மீர் சட்டசபை கலாட்டா, குரு, சட்டசபை, ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, தன்னாட்சி, பாராளுமன்றம், முப்தி, மெஹ்பூபா, மெஹ்பூபா முஃதி, மெஹ்பூபா முஃப்தி, ருபையா, ருபையா சையது
Tags: ஃபத்வா, அப்சல் குரு, அப்துல்லா, அப்ஸல், ஆப்சல், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உமர், உயிர், உயிர்த்தெழுதல், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கலாட்டா, காஷ்மீரம், காஷ்மீர், குடல், குரு, சமாதி, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், சையது, ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், தாக்குதல், பாராளுமன்றம், புதைத்த உடல், புனிதப்போர், முகமதியர், முஜாஹித்தீன், முப்தி, முஸ்லீம்கள், முஹம்மது அப்சல், மெஹ்பூபா, மைக், ரகளை, ருபையா
Comments: 1 பின்னூட்டம்
ஓகஸ்ட் 30, 2010
பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை!
“பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை! “பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை! கரைக்காலில் நடந்த கொடுமை”, என்ற தலைப்பில் ஒரு முஸ்லீம் எழுதியுள்ளது இவ்வாறு உள்ளது[1]:
“ஒரு சகோதரர் காரைக்காலில் பள்ளிவாசல் கட்டுவதற்காக பூஜை நடத்தப்பட்டதை புகைப்பட ஆதாரத்துடன் அனுப்பி வைத்துள்ளார். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது குறித்து காரைக்கால் மக்களுக்கு மிகப்பெரும் கடமை உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.
காரைக்காலில் ஹில்ரு பள்ளிவாசல் கட்டுவதற்கான துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தாடியும் தொப்பியும் வைத்துக் கொண்டு இந்து மதத்தைப் பின்பற்றி பூஜை செய்துள்ளனர். அல்லாஹ்வின் பள்ளிவாசல் சிறப்பாகக்கட்ட பூமிக்கு பூஜை செய்தால் நல்லபடியாக முடியும் என்று நம்பும் இவர்களுக்கு பள்ளிவாசல் எதற்கு? பேசாமல் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய வேண்டியது தான ? இஸ்லாத்தின் பெயரை ஏன் கெடுக்க வேண்டும்.
காரைக்கால் மக்களுக்கு இஸ்லாத்தில் நம்பிக்கை இருந்தால் இது போன்ற முர்தத்களை பள்ளிவாசல் நிர்வாகத்தில் இருந்து நீக்க வேண்டும். இது அவர்கள் மீதுள்ள மார்க்கக் கடமையாகும்.
………………………………குரானைக் குறிப்பிட்டு……………..
மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் இவர்கள் பள்ளியை நிர்வாகம் செய்ய தகுதியற்றவர்களாகி விட்டனர். இவர்களைத் தூக்கி எறிவது காரைக்காலைச் சேர்ந்த ஒவ்வொரு முஸ்லிமின் மார்க்கக் கடமையாகும்.
முடியாவிட்டால் இதைப் பள்ளிவாசலாக அங்கீகரித்து உதவிகள் செய்வதை உடனே நிறுத்த வேண்டும். ஏனெனில் இது போல் இணை வைப்பின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்டவை பள்ளிவாசலே அல்ல என்று அல்லாஹ் மேற்கண்ட வசனத்தின் மூலம் தெளிவுபடுத்துகிறான்.
இதை காரைக்கால் சகோதரர்கள் பிரசுரமாக வெளியிட்டு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். |
உடனே மற்ற முஸ்லீம்கள், இதனைப் பரப்ப ஆரம்பித்து விட்டனர்[2]. முஸ்லிம்களுக்குள் இஸ்லாத்தைப் பின்பற்றுவதில் ஒரு சீரான அமைப்பு, பின்பற்றுதல்கள், பழக்க-வழக்கங்கள் இல்லையென்றால், அது அவர்கள் பிரச்சினை, ஆனால், அத்தகைய அவர்களது உள்-விவகாரங்களை, முரண்பாடுகளை சாக்காக வைத்துக் கொண்டு, இந்து மதத்தினை இழிவு படுத்த அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.
பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை! தமிழகத்தில், இந்தியாவில் இருந்து கொண்டு, இந்திய மூதாதையருக்குப் பிறந்து, இப்படி பேசுவது, எழுதுவது மிகவும் துன்மார்க்கச் செயலாகும். இந்திய தெய்வங்கள் அல்லது இந்து தெய்வங்கள் “போலி தெய்வங்கள்” என்று சொல்ல, இந்த முஸ்லீம்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. அது மட்டுமல்ல, பதிலுக்கு ஒரு இந்துவும், நம்பிக்கையாளனாக, இதே மாதிரி முஸ்லீம் தெய்வங்கள் அல்லது மற்ற தெய்வங்கள் “போலி தெய்வங்கள்” என்று தாராளமாகச் சொல்லலாம், சொல்லுவான். இந்திய முஸ்லீம்கள் பெரும்பாலும் இந்துக்கள்தாம், அவர்கள் மதம் மாறியிருக்கலாம், ஆனால், பெற்றோரை, தாத்தா-பாட்டிகளை, மூதாதையரை மாற்றமுடியாது. அதே மாதிரி கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் முதலியவற்றையும் மாற முடியாது. ஆக, அவ்வாறு அவர்கள் விரும்பினால், தாராளமாக அவ்வாறு எங்கு கடைப் பிடிக்கிறர்களோ, அங்கு சென்று சந்தோஷமாக இருக்கலாம். இங்கு இந்தியாவில் இருந்து கொண்டு, மற்ற முஸ்லீம்களின் மனங்களில் நஞ்சையூற்றி துவேஷத்தை வளர்க்கவேண்டாம். இப்பொழுதைக்கு, இதனை விளக்காமல் இப்படியே விட்டுவிடுகிறேன்.
காரைக்காலில் உள்ள மசூதிகள் இந்து கலாச்சாரத்தைத்தான் வெளிப்படுதுகின்றன: முக்கியமான காரைக்காலின் மசூதிகளின் உள்ளமைப்பு, இந்து வழிபாட்டு ஸ்தல அமைப்பாகத்தான் இருக்கின்றன. உண்மையைச் சொல்லப் போனால், கோவில்களை இடித்து மற்றும் கோவிகளின் வெளிப்புறங்களை இடித்து மாற்றிக் கட்டிவிட்டு, உள்ளமைப்பை அப்படியே வைத்துக் கொண்டுள்ளதால் தான், அவ்வாறான, “இஸ்லாம் அல்லாத அமைப்பு” இருக்கிறது. சிற்பங்களை உடைத்து விட்டு, தூண்களை வைத்துக் கொண்டால் தெரியாதா? முன்பிருந்த செம்பு, பஞ்சலோக பூஜை பாத்திரங்கள் முதலியவற்றை வைத்துக் கொண்டிருப்பது தெரியாதா? அப்படியானால், அந்த மசூதிகளையெல்லாம் விட்டுவிட்டு போய்விட வேண்டியதுதானே? இந்தியாவிலேயே, பெரும்பாலான மசூதிகள் அவ்வாறுத்தான் கட்டப் பட்டுள்ளன, அமைந்துள்ளன, இன்றும் தொடர்ந்து வருகின்றன. அப்படியென்றால், அவையெல்லாம் மசுதிகள் இல்லையா?
இந்த முஸ்லீம்கள் முஸ்லீம்களா, அல்லது அந்த முஸ்லீம்கள் முஸ்லீம்களா? முஸ்லீம்களுக்குள் எந்த விஷயத்திலாவது, பிரச்சினையிலாவது, உள்-விவகாரங்களில் முரண்பாடுகள், வேறுபாடுகள் முதலிவை இருந்தால், அவற்றை சரி செய்து கொள்ளவேண்டியது அவர்களுடைய வேலையே அன்றி, அடுத்தவர்களை வம்பிற்குள் இழுக்கக் கூடாது. இந்த முஸ்லீம்கள் முஸ்லீம்களா, அல்லது அந்த முஸ்லீம்கள் முஸ்லீம்களா என்ற ஆராய்ச்சிகளை அவர்கள் தாம் வைத்துக் கொள்ளவேண்டும். “இஸ்லாம் கடவுள்கள்” உண்மையானவை, சொக்கத்தங்கம் போன்றவை, “ஒரிஜினல்”, “டூப்ளிகேட்டேயில்லை” என்றெல்லாம் சொல்லிக் கொள்வதானால், அது அவர்களுடைய விருப்பம், ஆனால், அதற்காக, மற்றவற்றை “போலி தெய்வங்கள்” என்று கூற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அவ்வாறு செய்துள்ளதால், அது கண்டிக்கப்படுகிறது. மற்ற உண்மையான முஸ்லீம்களும், இதை அறிந்து அத்தகைய நஞ்சூட்டும் முஸ்லீம்களை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும், இல்லையென்றால், தேவையில்லாமல் பிரச்சினைதான் வளரும்! ஏனெனில், பிறகு உரசிப்பார்க்க வேண்டியிருக்கும், சோதனை செய்ய வேண்டியிருக்கும்.
மற்ற முஸ்லீம்களின் மனங்களில் நஞ்சையூற்றி துவேஷத்தை வளர்க்கவேண்டாம்: தமிழகத்தில், இந்தியாவில் பொதுவாக இந்துக்கள், முஸ்லீம்கள் அமைதியாக, நட்புடன் தான் வாழ்ந்து வருகிறார்கள். அத்தகைய அமைதியை, நட்பை சீர்குலைக்க, இப்படிப்பட்ட சில முஸ்லீம்கள் வேலை செய்யவேண்டாம். முகமது நபியே சொல்லியபடியே, “உங்கள் கடவுள், உங்களுக்கு, எங்கள் கடவுள் எங்களுக்கு”, என்று மரியாதையாக இருக்கவேண்டுமே தவிர, அடுத்த கடவுளைப் பற்றி குறைவாக பேசுவது, தூஷிப்பது என்ற நீசசெயல்களுக்கு உட்பட்டால், அதற்கான விளைவுகளுக்கு தயாராக இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
[1] http://onlinepj.com/vimarsanangal/ithara_vimarasanagal/karaikalil_nadantha_kodumai/
[2] http://markaspost.wordpress.com/2010/08/30/காரைக்காலில்-நடந்த-கொடும/
பிரிவுகள்: அமர்நாத் யாத்திரை, அவமதிக்கும் இஸ்லாம், ஆப்கானிஸ்தான், இந்து காதலனும் முகமதிய காதலியும், இருக்கும் தெய்வங்கள், இல்லாத தெய்வங்கள், காரைக்கால், நிஜ தெய்வங்கள், பள்ளி வாசல், பள்ளிவாசல், பூமி பூஜை
Tags: அவமதிக்கும் இஸ்லாம், இருக்கும் தெய்வங்கள், இல்லாத தெய்வங்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காரைக்கால், ஜிஹாதி தீவிரவாதம், நிஜ தெய்வங்கள், பள்ளிவாசல், புனிதப்போர், பூமி பூஜை, போலி தெய்வங்கள், மசூதி, மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், முஸ்லிம்கள் சிலை உடைப்பு, முஸ்லீம்கள்
Comments: 9 பின்னூட்டங்கள்
ஜூலை 12, 2010
மெஹ்பூபா முஃதி என்ற பெண்ணும், காஷ்மீர் கலவரமும், தீவிரவாதமும், பயங்கரவாதமும்!
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=37577
புதுடில்லி ஜூலை,12, 2010: காஷ்மீரில் நடந்து வரும் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நடத்தப்படும் அமைதி கூட்டத்தில் பங்கேற்கும்படி, பிரதமர் மன்மோகன் சிங் விடுத்த கோரிக்கையை, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி ஏற்க மறுத்து விட்டார். இதனால், கலவரத்துக்கு தீர்வு காணும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காஷ்மீரில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பெரும் கலவரம் நடந்து வருகிறது. மத்திய ரிசர்வ் போலீஸ் மற்றும் காஷ்மீர் மாநில போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பலியாயினர். இதனால், கலவரம் பெரிய அளவில் வெடித்தது. போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, அங்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் அமைதி கூட்டம்: இந்நிலையில், அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் அமைதி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டம் இன்று நடக்கவுள்ளது.
கலாட்டா செய்ய்ம் பெண் மெகபூபா மறுப்பு: முக்கிய எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி, இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாது என அறிவித்தது. உடனடியாக அந்த கட்சித் தலைவர் மெகபூபா முப்தியை தொடர்பு கொண்ட பிரதமர் மன்மோகன் சிங்,”காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப ஒத்துழைக்க வேண்டும்.அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும்’என, வேண்டுகோள் விடுத்தார். இருந்தாலும், கூட்டத்தில் பங்கேற்க போவது இல்லை என்ற தனது முடிவில் மெகபூபா உறுதியாக உள்ளார். இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“அமைதி கூட்டத்தில் பங்கேற்கும்படி பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோர் என்னை தொடர்பு கொண்டு பேசினர். இதற்காக அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், கூட்டத்தில் பங்கேற்பதற்கு சாதகமான சூழ்நிலை இங்கு ஏற்படவில்லை என்பதை அவர்களிடம் தெரிவித்து விட்டேன். இப்படி கூறுவதற்காக பிரதமரிடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டேன். காஷ்மீர் பிரச்னையில் தலையிட்டு, உடனடியாக தீர்வு காணும்படி பிரதமரிடம் வலியுறுத்தினேன். குறிப்பாக, கலவரத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து அவரிடம் விளக்கினேன்.அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் அளவுக்கு காஷ்மீர் மாநில அரசு இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஒமர் அப்துல்லா தலைமையிலான அரசு, மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. காஷ்மீரில் இருந்து ராணுவத்தை திரும்ப பெற வேண்டும். அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட வேண்டும்.இவ்வாறு மெகபூபா முப்தி கூறினார். மெகபூபாவின் இந்த அதிரடியான அரசியலால், காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சிக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஹூரியத்தால் தொடரும் பதட்டம்: இதற்கிடையே, அனந்தநாக், ஸ்ரீநகர் உள்ளிட்ட பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு இருந்தது. இருந்தாலும், ஹூரியத் மாநாட்டு அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற இயக்கம் சார்பில், ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். போராட்டம் காரணமாக ஸ்ரீநகரில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும், சாலைகள், வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, கல்வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்தன. இதனால், அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து, சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டது.
பதட்டம் நிறைந்த பகுதிகளில் ராணுவத்தினர் ரோந்து சுற்றி வருகின்றனர்.இந்நிலையில், சில தனியார் செய்தி சேனல்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என, இந்திய எடிட்டர்ஸ் கில்டு அமைப்பு சார்பில் காஷ்மீர் மாநில அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரிவுகள்: அசிங்கப்படுத்திய முகமதியர், அமர்நாத் யாத்திரை, அமைதி என்றால் இஸ்லாமா, அழகிய இளம் பெண்கள், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், இஸ்லாம், கம்யூனிஸ-காங்கிரஸின் “செக்யூலரிஸக் கூட்டுத் விளையாடல்கள், கல்லெறி வெறிக்கூட்டம், காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, காஷ்மீர் சட்டசபை கலாட்டா, கேவலப்படுத்திய முஸ்லீம்கள், கையெறி குண்டுகள், சிவன் கோவில் தாக்கப்பட்டது, செக்யூலார் அரசாங்கம், ஜமாத்-உத்-தாவா, ஜமைத்-உக்-ஃபர்கன், ஜஹல்லியா, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாத், தண்ணீர் குடித்தால் அடி, தண்ணீர் குடித்தால் உதை, தேசிய ஜிஹாதி தீவிரவாதம், நம்பிக்கையில்லாதோர் மீதான போர், பாகிஸ்தான், பாகிஸ்தான் தீவிரவாதம், மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், முஜாஹித்தீன், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், மெகபூபா முப்தி, மெஹ்பூபா முஃதி, மெஹ்பூபா முஃப்தி, லஷ்கர்-இ-தொய்பா
Tags: அழகிய இளம் பெண்கள், அவமதிக்கும் இஸ்லாம், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காஷ்மீரம், காஷ்மீர், சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், பாகிஸ்தான், புனிதப்போர், மன்மோகன் சிங், மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முஜாஹித்தீன், முஸ்லிம்கள், மெகபூபா முப்தி, மெஹ்பூபா முஃதி
Comments: 1 பின்னூட்டம்
ஜூலை 10, 2010
அமர்நாத் யாத்திரிக்கைக்கு ஜிஹாதிகளின் அச்சுருத்தல்!
அமர்நாத் யாத்திரைத் தொடங்கியது: ஸ்ரீநகர், ஜூலை.1, 2010: இந்த ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரை ஜம்மு-காஷ்மீரில் இன்று தொடங்கியது. 7000த்துக்கும் மேற்பட்டோர் பல்தால் பகுதியிலிருந்து தங்களின் யாத்திரையைத் தொடங்கியதாகவும், 1,100 பேர் பல்தால் செல்வதற்காக மணிகாம் முகாமிலிருந்து புறப்பட்டிருப்பதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அனைத்து யாத்ரீகர்களும் பத்திரமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பல்தால், மணிகாம் மற்றும் யாத்திரைப் பாதையில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
உரடங்கு மற்றும் தெரு கலாட்டா-கலவரம் சாக்கு வைத்துக் கொண்டு தாக்க திட்டம்: ஜூலை 10, 2010: தீவிரவாதிகள் அமர்நாத் யாத்திரிகர்களைத் தாக்க திட்டமிட்டிருப்பதாக, அவர்களின் ரகசிய உரையாடல்களினின்று அறியப்படுகிறது[1]. காஷ்மீரத்தில் மற்ற இடங்களில் கலாட்டா செய்து, திசைத் திருப்பி, அமர்நாத் யாத்திரிகர்களைத் தாக்கவிருப்பதாக, அதே மாதிரியான, தீவிரவாதிகளின் பேச்சுகளை இடைமறித்து, ரகசியமாகக் கேட்டபோது தெரியவந்துள்ளது[2]. இதனால், யாத்திரிகர்களுக்கு பாதுபாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது[3].
தீவிரவாதிகள் தாக்குவது, பக்தர்களைக் கொல்வது என்பது அவர்களைப் பொறுத்த வரைக்கும் வாடிக்கையான விஷயம்: ஜிஹாதி, இஸ்லாமிய, பயங்கரவாத, தீவிரவாத கும்பல்களுக்கு இந்துக்களைக் கொல்வது என்பது புண்ணிய காரியமாகக் கருதுகின்றனர். ஏனெனில், அவஎகளைப் பொறுத்த வரைக்கும் காஃபிர்களைக் கொல்வது, குரானின் படி அவ்வாறு கருதப்படுகிறது என்பர். உதாரணத்திற்கு, 2002ல் நடந்த நிகழ்சி கீழே கொடுக்கப் படுகிறது.

kashmir-siva-temple-2010
ஒரு சிவன் கோவில் தாக்கப்பட்டது: ஒரு சிவன் கோவில் தாக்கப்பட்டது என்ற செய்தி வந்ததும், பக்தர்கள் கவலைப்பட்டனர். அமர்நாத் சங்கர்ஸ சமிதி பந்திற்காக 03-07-2010 அன்று அழைப்பு விடுத்தது[4]. பிரச்சினை வேண்டாம் என்று போலீஸார் அந்த பக்தர்கள் மற்றும் பிஜேபி.காரர்களை கைது செய்தது. முழுவிவரங்கள் வெளியிடாமல், சென்ஸார்ஷிப் அமூலில் உள்ளதை இந்து இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்[5]. காஷ்மீரத்தில் கோவில்கள் தாக்கப் படுவது, இடிக்கப்படுவது, இஸ்லாமிய தீவிரவாதிகள்-ஜிஹாதிகளுக்கு வழக்கமாக இருந்து வந்துள்ளது[6].

Siva-temple-NO-ADMISSION-2010
கோவிலின் மீது “அனுமதி இல்லை” என்று எழுதி மிரட்டுவது தான் காஷ்மீர் முஸ்லிம்கள், இந்துக்களின் உரிமைகளைக் காக்கும் லட்சணம்! மற்ற மாநிலங்களில் உள்ள முஸ்லீம்கள், தங்களது அருமை-பெருமைகளை மட்டும் இணைதளங்களில் போட்டு, பாராட்டிக் கொள்கிறார்களே, இத்தகைய கொடுமைகளுக்கு ஏன் பதில் சொல்லாமல் இருக்கிறார்கள்? குறிப்பாக தமிழ்-முஸ்லீம்கள் கூட கண்டு கொள்ளாமல் இருப்பது, அவர்களது ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கைத்தான் காட்டுகிறது
இதே போக்குதான், அமர்நாத் யாத்திரை விஷயத்திலும் உள்ளது. அமர்நாத் யாத்திரையினால், கோடிகளில் பலனடைவது முஸ்லீம்கள்தான். கடைகள் வைத்திருப்பது, யாத்திரிகர்களை குதிரை மீது ஏற்றி அழைத்துச் செல்வது, தங்க இடம் கொடுப்பது………………….என்று எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக குத்தகை எடுத்துக் கொண்டு கொள்ளையடிக்கின்றனர்.
[1] http://www.hindustantimes.com/Terror-attack-feared-during-Amarnath-Yatra/Article1-563611.aspx
[2] http://www.indiablooms.com/NewsDetailsPage/newsDetails100710k.php
[3] The Hindu, Government sounds alert for Amarnath Yatra, dated 10-07-2010, http://www.thehindu.com/news/national/article509523.ece
[4] http://www.telegraphindia.com/1100704/jsp/nation/story_12644189.jsp
[5] http://www.groundreport.com/Business/Hindu-organisations-condemned-the-action-of-the-go_2/2925456
[6] http://www.kashmir-information.com/Atrocities/Temples/temples3.html
பிரிவுகள்: அமர்நாத் யாத்திரை, இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், சிவன் கோவில் தாக்கப்பட்டது, ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, யாத்திரைக்குப் பாதுகாப்பு
Tags: அமர்நாத் யாத்திரை, இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், சிவன் கோவில் தாக்கப்பட்டது, ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, யாத்திரிகர்களைத் தாக்க திட்டம், யாத்திரைக்குப் பாதுகாப்பு
Comments: 4 பின்னூட்டங்கள்
அண்மைய பின்னூட்டங்கள்