Archive for the ‘அப்பீல்’ category

வண்ணாரம்பூண்டி களத்தூர் – முஸ்லிம்கள் அங்கு இந்து மக்களின் நம்பிக்கைகளில் தலையிடுவது, தடுப்பது, கலவரத்தில் இறங்குவது ஏன்?

மே 20, 2021

வண்ணாரம்பூண்டி களத்தூர்முஸ்லிம்கள் அங்கு இந்து மக்களின் நம்பிக்கைகளில் தலையிடுவது, தடுப்பது, கலவரத்தில் இறங்குவது ஏன்?

வண்ணாரம்பூண்டி களத்தூர் கிராமத்தில் முஸ்லிம் மக்கட்தொகை அதிகமாகி, அவர்கள் இந்துக்களின் நம்பிக்கைகளுக்கு இடைஞலாக தொந்தரவுகள் செய்து நீதிமன்றத்திற்கு சென்றது: முஸ்லிம்கள் ஒரு பகுதியில், தெருவில், கிராமத்தில் அதிகமாகி விட்டால், எப்படி அவர்கள் தங்களது ஆக்கிரமிப்பு மற்றும் மற்றவர்களின் உரிமைகளை, தங்களது மத நம்பிக்கை, சிறுபான்மை, மிரட்டுதல், சண்டை போடுதல், வன்முறை, கலவரம் என்று முறைகளை, திட்டங்களை படிப்படியாக செயல்படுத்தி, அமைதியைக் குலைக்கிறார்கள் என்பதனை கவனிக்கலாம். அதே போல, வழக்குகளையும் எப்படி பல்லாண்டுகளாக இழுத்தடிக்கலாம், அரசிய ஆதரவு, கட்சி அதிகாரம், மைனாரிடி அந்தஸ்து போன்றவற்றை உபயோகப் படுத்தி இழுத்தடிக்கலாம் என்பதையும் கையாலுவதை கவனிக்கலாம். நீதிமன்றங்களும், நீதிபதிகளும், இத்தகைய வழக்குகளை விசாரிக்காமல், தள்ளி வைப்பது, கிடப்பில் போடுவது போன்றவற்றையும் காணலாம். இவற்றையெல்லாம் கவனிப்போர் யாரும் இல்லை எனலாம். இப்படித்தான் 1951, 2018 என்று நடந்து வரும் வழக்குகள் 2021 வரை இழுத்தடிக்கப் பட்டுள்ளன என்பதை அறியலாம். மத சகிப்புத் தன்மையை இழந்துவிட்டால் அது நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு நல்லதல்ல என உயா்நீதிமன்றம், இப்பொழுது, கருத்து தெரிவித்துள்ளது.

1951 முதல் 2021 வரை 70 ஆண்டுகளாக நடந்து வரு முஸ்லிம்களின் ஜனத்தொகை பெருக்கம் எதிர்ப்பு முதலியன: வண்ணாரம்பூண்டி, களத்தூர் என்பதன் சுருக்கமே வ.களத்தூர் என்பதாகும். இதனுள்ளேயே வண்ணாரம்பூண்டி, மில்லத் நகர் ஆகிவற்றையும் அடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. முதலில், சில முஸ்லிம் குடும்பங்கள் இருந்தன, ஆனால், இப்பொழுது, மக்கள் தொகையில் சம அளவில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் உள்ளனர்.பெரம்பலூா் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ள வி.களத்தூா் கிராமத்தில் கிழக்கு பகுதியில் முஸ்லிம்களும், மேற்கு பகுதியில் இந்துக்களும் வசித்து வருகிறார்கள், அதாவது, முஸ்லிம்கள் ஜனத்தொகை திடீரென்று அதிகமாகி-அதிகமாக்கி தான், அத்தகைய நிலையினை உருவாக்கியுள்ளனர்.  அந்நிலையில் தான், தாங்கள் வசிக்கும் தெருக்களில் ஊர்வலம் போகக் கூடாது, சாமியை எடுத்துச் செல்லக் கூடாது என்றெல்லாம் படிப்படியாக சொல்லி, ஆரம்பித்து, பிறகு கலவரத்தில் கொண்டு முடிப்பதையும் பார்க்கலாம். இந்த கிராமத்தில் லட்சுமி நாராயண பெருமாள் கோயில், செல்லியம்மன் கோயில், ராயப்பா கோயில், மாரியம்மன் கோயில் என நான்கு கோயில்கள் உள்ளன[1]. முன்னர், எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், 1950-1960 என்று ஆரம்பித்து, 1970-1980களில் மசூதி-வீடுகள் என்று பெருக்கி,, 1990-2000களில் ஊர்வலம் கூடாது என்று ஆரம்பித்தனர். இப்பொழுது, 2010-2010களில் நீதிமன்றங்களில் வழக்குகளாக மாறியுள்ளன.

 விழா சம்பிரதாயங்கள் நடத்த, 2018ல் நீதிமன்றத்திற்கு வழக்காகச் சென்ற நிலை: இந்த நிலையில் அந்த கிராமத்தில் உள்ள 96 சென்ட் புறம்போக்கு நிலத்துக்கு இரு தரப்பும் சொந்தம் கொண்டாடி வந்தனா். இந்தப் பிரச்னை 1951-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து நடந்து வருகிறது. இதனால், பல நேரங்களில் இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு இருதரப்பு மீதும் போலீஸில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவ்வழக்குகள் அப்படியே நிலுவையில் உள்ளன. இந்நிலையில், வி.களத்தூா் கிராமத்தில் கோவில் திருவிழா நடத்த அனுமதி கோரி ராமசாமி உடையார் தரப்பும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுன்னத் வல் ஜமாஅத் என்ற அமைப்பின் சார்பிலும் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, பிரதான சாலைகளில் மட்டும் ஊர்வலங்கள் நடத்த வேண்டும், மஞ்சள் நீர் தெளிக்கும் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்பன, உள்ளிட்ட நிபந்தனைகளுடன் திருவிழாவுக்கு அனுமதியளித்து 2018 டிசம்பர் மாதம் உத்தரவிட்டார்[2]. கோவில் விழாக்கள் நடத்த, இவ்வாறு நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏன் என்று ஆராயத்தக்கது.

2018லிருந்து நிலுவையில் இருக்கும் வழக்கு 2021ல் விசாரணைக்கு வந்தது: உத்தரவை எதிர்த்து, இரு தரப்பினரும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகளை இன்று (மே 08, 2021) விசாரித்த நீதிபதி கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, முன்பு வந்தது[3]. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு[4]: “கோவில் விழாக்களை ஒட்டி, கிராமங்களிலும், நகரங்களிலும் அனைத்து சாலைகளிலும், தெருக்களிலும் ஊர்வலங்களை ஒழுங்குபடுத்தலாமே தவிர, தடை விதிக்க முடியாது எனவும், சட்டம்ஒழுங்கு பிரச்சினை ஏதும் ஏற்படாமல் காவல் துறையினர் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் கூறி, பல ஆண்டுகளாக நடத்தப்பட்டதைப் போல ஊர்வலங்களை அனைத்து சாலைகளிலும் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது[5]. மக்கள் மதம் சார்ந்தவா்களாகவும், ஆண்கள் சமுதாயம் சார்ந்தவா்களாகவும் இருக்கலாம். ஆனால் சாலை எப்படி சமுதாயம் சார்ந்ததாக இருக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினர்[6].

2018ல் விதிக்கப் பட்ட கட்டுப்பாடுகள், வரையறைகள்: வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 3 நாள்கள் கோவில் திருவிழா நடத்தலாம்.

  1. முதல் நாள் சாமி ஊா்வலம் பிரதான சாலையில் நடத்தப்பட வேண்டும்.
  2. ஊா்வலம் பெரியகடை வீதி, பள்ளிவாசல் தெரு, அகரம் தெரு வழியாக செல்லலாம்.
  3. அதே வழியில் திரும்ப வந்து மாரியம்மன் கோவிலில் முடிக்க வேண்டும்.
  4. 2-ஆவது நாள் ஊா்வலம் அதேபோல் நடத்தப்பட வேண்டும்[7].
  5. 3-ஆவது நாள் தெருக்களில் மஞ்சள் தண்ணீா் தெளிக்க கூடாது.
  6. உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து இருதரப்பும் மேல் முறையீடு செய்துள்ளனா். இருதரப்பும் தங்களது சடங்குகள் மற்றும் கலாசார விஷயங்களை எடுத்துரைத்துள்ளனா்[8]. மசூதி என்பது, இப்பொழுது வந்தது, ஆனால், கோவில்கள் நூறாண்டுகளாக இருந்து வருகின்றன. அவற்றீற்கு வேண்டிய ஆகம விதிமுறைகளின் படி சடங்குகள், கிரியைகள், தின-பூஜைகள், விழாக்கள், கொண்டாட்டங்கள் என்றும் நடந்து வருகின்றன.

மத சகிப்புத் தன்மையை இழந்துவிட்டால் அது நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு நல்லதல்ல: இப்பொழுது தீர்ப்பில், இவ்வாறு முக்கியமான அம்சங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன:

  • மத சகிப்புத் தன்மையை இழந்துவிட்டால் அது நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு நல்லதல்ல[9].
  • எந்த மதம் சார்ந்த ஊா்வலங்களும் அனைத்து சாலைகள், தெருக்கள் வழியாக எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் நடத்தப்பட வேண்டும்[10].
  • மத ஊா்வலங்களை நடத்த அனைத்து பிரிவினருக்கும் அடிப்படை உரிமை உள்ளது.
  • இந்த வழக்கில் இருதரப்பினா் மீது தொடரப்பட்டுள்ள குற்ற வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெற வேண்டும்.
  • சுன்னத் வல் ஜமாஅத் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

19-05-2021


[1] தமிழ்.இந்து,  மத சகிப்புத் தன்மையின்மையை அனுமதிப்பது நாட்டின் மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல: உயர் நீதிமன்றம் கருத்து,ஆர்.பாலசரவணக்குமார், Published : 08 May 2021 03:15 PM; Last Updated : 08 May 2021 03:15 PM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/668435-highcourt-opinion-on-intolerance.html

[3] தினமணி, மத சகிப்புத் தன்மையை இழந்துவிட்டால் அது நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு நல்லதல்ல, By DIN  |   Published on : 09th May 2021 03:35 AM.

[4]   https://www.dinamani.com/tamilnadu/2021/may/09/losing-religious-tolerance-is-not-good-for-the-religious-harmony-of-the-country-3620082.html

[5] தினத்தந்தி, கோவில், மத ஊர்வலங்களை அனைத்து இடங்களிலும் அனுமதிக்க வேண்டும்சென்னை நீதிமன்றம் உத்தரவு, பதிவு: மே 08,  2021 15:50 PM.

[6] https://www.dailythanthi.com/News/State/2021/05/08155020/Temples-and-religious-processions-should-be-allowed.vpf

[7] தினத்தந்தி, மத சகிப்புத்தன்மையின்மையை அனுமதித்தால் அது நாட்டின் மதச்சார்பின்மைக்கு நல்லதல்லசென்னை உயர்நீதிமன்றம், பதிவு : மே 08, 2021, 05:50 PM

[8] https://www.thanthitv.com/News/TamilNadu/2021/05/08175015/2374891/If-religious-intolerance-is-allowed-it-is-the-countryNot.vpf

[9] இ.டிவி.பாரத், மத சகிப்புத் தன்மையின்மையை அனுமதிப்பது நல்லதல்லஉயர் நீதிமன்றம் கருத்து, Published on: May 8, 2021, 8:24 PM IST.

[10] https://react.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/high-court-opinion-allowing-religious-intolerance-is-not-good-for-the-country-secularism/tamil-nadu20210508202416901

சுன்னத் வல் ஜமாத் – அமைப்பின் அறிக்கை, சுற்றில்………..

செக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக்: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலை – ஷரீயத் உதல் வரை பொது சிவில் சட்ட கோரிக்கை வரை(2)

ஏப்ரல் 11, 2017

செக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக்: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலைஷரீயத் உதல் வரை பொது சிவில் சட்ட கோரிக்கை வரை(2)

Wovs of talaq sufferings

முத்தலாக் வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டது: தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டுக்கும், இஸ்லாமிய தனி நபர் சட்ட வாரியத்திற்கும் கருத்து மோதல்கள் நிகழ்ந்து வந்த நிலையில் மார்ச் 30, 2017 அன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது[1]. அப்போது, இவ்வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. மேலும், வரும் மே மாதம் 11-ம் தேதி 2017 முதல் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர். முன்னதாக, இவ்வழக்கை கோடை விடுமுறைக்கு பின்னர் விசாரிக்க வேண்டும் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வைத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். மூன்று தலாக் சொல்லி திருமண உறவை முறித்துக்கொள்ளும், நடைமுறைக்கு தடை விதிக்க கோரி இஸ்ரத் ஜஹான் என்ற முஸ்லிம் பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், இஸ்லாமியர்கள் கடைபிடித்து வரும் முத்தலா‌க் முறையை அரசியல் சட்டத்திற்கு விரோதமானதாக அறிவிக்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு பதிலளித்துள்ளது[2]. இதுவிசயமாக பல வழக்குகள் பதிவாகியுள்ளதால், அவை அனைத்தும், மொத்தமாக விசாரிக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது.

Wovs of talaq sufferings- women demand justice

ஷரீயத் பிரிவு பெண்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது: இஷ்ரத் ஜகான் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மூன்று முறை தலாக் என கூறி மனைவியை கணவன் விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு, இஸ்லாமிய சட்டம் அனுமதிக்கிறது[3]. முஸ்லிம் தனிநபர் சட்டம்-1937 (ஷரியத்), பிரிவு-2ல் இதற்கு அனுமதியுள்ளது[4]. இந்த அனுமதி பெண்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 14ன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள, உரிமை மீறப்படுகிறது. எனவே தலாக் நடைமுறையை நீக்க வேண்டும் என்று அந்த பெண்மணி கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பான வழக்கில் முத்தலாக் முறை சம உரிமைக்கு எதிராக அமைந்திருப்பதால் அதற்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முத்தலாக் முறையால் இஸ்லாமிய பெண்கள் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. ‌ஆனால், முத்தலாக் முறை இஸ்லாமியர்களுக்கான மத உரிமை என்றும் இதில் அரசு தலையிடக் கூடாது என்றும் அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரிய‌ம் தெரிவித்துள்ளது. அனைத்திந்திய முஸ்லிம் பெண்கள் சட்ட வாரியம், மூன்று தலாக் நடைமுறையை நீக்க விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Talaq-talaq-talaq

பலமுறைகளில் தலாக், தலாக், தலாக் சொல்லி விவாகரத்து செய்வது: முஸ்லிம் கணவர்கள் எப்படி இந்த முத்தலாக்கை செய்து வருகின்றனர் என்று ஏராளமான செய்திகள் வந்துள்ளன. முன்பு, தபால் அட்டைல் தபால், கூரியர் என்றெல்லாம் இருந்து, பிறகு போன், டெலக்ஸ் என்று மாறி, இப்பொழுது, இணைதள அளவில், மெஸேஜ், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் என்ற நிலைக்கு வந்துள்ளது. இதனால், அதிகம் பெண்கள் பதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில், முத்தலாக் முறையானது சம உரிமைக்கு எதிராக இருப்பதாகவும், அதற்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லை எனவும் மத்திய அரசு சார்பாக எழுத்துப் பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது[5]. இம்முறையால் இஸ்லாமியப் பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது[6]. ஆனால், அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியம், முத்தலாக் முறையானது இஸ்லாமியர்களுக்கான மத உரிமை என்றும், இதில் அரசு தலையிடக் கூடாது எனவும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 5-ம் தேதி கான்பூரைச் சேர்ந்த அலியா சித்திக் என்பவர், தனது கணவர் விரைவு தபாலில் முத்தலாக் அனுப்பியுள்ளதாக மோடியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.  உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத்திடமும் அவர் இதுபற்றி புகார் அளித்து இருந்தார். அவர், சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாரும் தனக்கு நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ansari wife- VP

முத்தாலிக், குரானில் இல்லை, மௌலானாக்களால் உருவாக்கப் பட்டதுசல்மா அன்சாரி: நாடு முழுவதும் ‘தலாக்’ விவகாரத்து விவகாரம் பெரும் விவாதங்களை உருவாக்கி வருகிறது. இஸ்லாமிய திருமண முறையில் இருந்து விவகாரத்து பெறுவதற்கு மூன்று முறை ‘தலாக்’ என்று கூறினால் மட்டும் போதுமானது. இந்த முறையை பின்பற்றுவதால் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று தொடர்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.  இதுதொடர்பாக நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக போனில் எஸ்.எம்.எஸ்ஸில் ‘தலாக்’ என்று விவகரத்து பெறுவதும் தபாலில் ‘தலாக்’ என்று அனுப்பி விவாகரத்து பெறுவதும் நடைபெற்ற சம்பவங்கள் செய்திகளாக வெளிவந்தன. இந்த நிகழ்வுகள் தலாக் முறை மீது கடுமையான எதிர்ப்புகளை உருவாக்கியது[7]. இந்த நிலையில் ‘தலாக்’ குறித்து கருத்து தெரிவித்த சல்மா அன்சாரி, மூன்று முறைதலாக்என்று சொல்வதாக மட்டும்தலாக்நடைமுறை இருக்க கூடாது. மவுலானாவில் என்ன கூறியிருந்தாலும் அது உண்மையா ?.குரானை அதன் மூல மொழியான அராபியில் படித்து தெரிந்துகொள்ளுங்கள். அதனுடைய மொழி பெயர்பில் படிக்காதீர்கள். குரானில் இருந்து அறிவை வளர்த்து கொள்ளுங்கள். அதுகுறித்து சிந்தனை செய்யுங்கள். யாரையும் குருட்டுத்தனமாக நம்பாதீர்கள்‘ என்று கூறியுள்ளார்[8].

muslim-act-misused-for-marrying-many-women

ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு 3.5 கோடி முஸ்லிம் பெண்கள் ஆதரவு: ராஜஸ்தானின் ஈத்காஹ் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அந்த வாரியத்தின் பெண்கள் பிரிவின் தலைவரான அஸ்மா ஜோஹ்ரா, முஸ்லிம் சமூகத்தில் விவாகரத்து எண்ணிக்கை அதிகம் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தினை உருவாக்க சிலர் முயற்சி செய்கின்றனர். நாட்டில் ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு ஆதரவாக முஸ்லிம் பெண்களிடம் இருந்து 3.5 கோடி விண்ணப்பங்கள் எங்களுக்கு வந்துள்ளன[9].  இவற்றிற்கு எதிரான பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு என கூறினார். பெண்களின் உரிமைகள் என்ற பெயரில் முஸ்லிம் சமூகம் மீது அவதூறு ஏற்படுத்துவதற்கான சதி மற்றும் முஸ்லிம் சமூக கட்டமைப்பினை தகர்க்கும் முயற்சியிது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்[10]. ஷரியத் மற்றும் இஸ்லாமில் உள்ள தங்களது உரிமைகளை முஸ்லிம் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய நேரமிது.  பெண்களுக்கு அதிகளவில் உரிமைகளை இவை வழங்கியுள்ளன என்பதனை மற்றவர்கள் கூட தெரிந்து கொள்ளட்டும் என அவர் கூறியுள்ளார். அந்த வாரியத்தின் உறுப்பினர் யாஸ்மின் பரூக்கி கூறும்பொழுது, முஸ்லிம் பெண்கள் என்றால் படிக்காதவர்கள் மற்றும் எளிதில் முட்டாளாக்கி விடலாம் என சித்தரிக்கப்பட்டுள்ளது.  ஆனால் உண்மை அதுவல்ல.  முஸ்லிம் பெண்கள் வெளிப்படையாக ஷரியத்திற்கு ஆதரவாக முன்வந்துள்ளனர். குறைந்த அளவிலான பெண்களே அவற்றிற்கு எதிராக உள்ளனர்.  தற்பொழுது வாரியம், வரதட்சணை கொடுமை, குறைந்த செலவில் திருமணங்களை முடித்தல் மற்றும் சொத்தில் மகள்களுக்கும் சம உரிமை போன்ற விவகாரங்களை சரி செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது என கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

11-04-2017

muslim-women-protection-divorce-act-1986

[1] மாலைமலர், முத்தலாக் வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவு, பதிவு: மார்ச் 30, 2017 15:12.

[2] http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/30151231/1077027/SC-bench-refers-TripleTalaq-matter-to-constitution.vpf

[3] தமிழ்.ஒன்.இந்தியா, முத்தலாக்அரசியல் சட்டத்திற்கு விரோதமானது.. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில், By: Karthikeyan; Published: Tuesday, April 11, 2017, 3:31 [IST]

[4] http://tamil.oneindia.com/news/india/triple-talaq-makes-muslim-women-socially-financially-vulner-279416.html

[5] விகடன், முத்தலாக் முறைக்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லைஉச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு!, Posted Date : 02:59 (11/04/2017); Last updated : 02:59 (11/04/2017)

[6] http://www.vikatan.com/news/india/86044-triple-talaq-violate-right-to-equality—centre-tells-sc.html

[7] விகடன், முத்தலாக்முறைக்கு எதிராக குரல் கொடுக்கும் சல்மா அன்சாரி, Posted Date : 21:37 (08/04/2017); Last updated : 21:37 (08/04/2017).

[8] http://www.vikatan.com/news/india/85845-vice-president-ansaris-wife-critized-triple-talaq.html

[9] தினத்தந்தி, ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு 3.5 கோடி முஸ்லிம் பெண்கள் ஆதரவு: முஸ்லிம் சட்ட வாரியம் தகவல், ஏப்ரல் 09, 10:11 PM

[10] http://www.dailythanthi.com/News/India/2017/04/09221142/350-cr-women-support-Shariyat-Triple-Talaq–AIMPLB.vpf

தந்தை மகளைக் கற்பழித்ததை தாய் கண்ணால் பார்த்தது, ஆனால் தந்தை மறுத்தது, 2013ல் நடந்த குற்றத்திற்கு 2017ல் தண்டனை உறுதியானது!

பிப்ரவரி 7, 2017

தந்தை மகளைக் கற்பழித்ததை தாய் கண்ணால் பார்த்தது, ஆனால் தந்தை மறுத்தது,  2013ல் நடந்த குற்றத்திற்கு 2017ல் தண்டனை உறுதியானது!

r-hakkim-rape-coimbatore-representative

தந்தை மகளைக் கற்பழித்ததை தாய் கண்ணால் பார்த்தது: மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தந்தைக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆர். ஹக்கிம் (35). தனது 12 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். நவம்பர் 2013ல், சுந்தரபுரம் அருகில் குருச்சி பிரிவு பகுதியில் வாழ்ந்து வந்த இவர் தன்னுடைய வீட்டில் மகளை பலாதகாரம் செய்தார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அருகிலுள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார்கள். இவன் மீன்களையும் விற்றும், கழிவுப்பொருட்கள் (ஸ்கார்ப்) வியாபாரமும் செய்து வந்தான். நவம்பர் 9, 2013 அன்று ஹகிம் மதியம் சாப்பிட்டு விட்டு தூங்கிக் கொண்டிருந்தான்.ஐரு பெண்களும் தூங்கிக் கொண்டிருந்தனர். இதனால், மனைவி முன்புறம் பூட்டி விட்டு, இரும்பு ஸ்கிராப்பை பிரித்துக் கொண்டிருந்தாள். ஒரு மணி நேரம் கழித்து, அவள் உள்ளே சென்றபோது, ஹகிம் தன் மூத்த பெண்ணைக் கற்பழித்துக் கொண்டிருந்தான்[1]. திடுக்கிட்ட அவள், தன் பெண்ணை கண்டபடி திட்டினாள், அப்பன் அவ்வாறு செயதால் கத்தி சொல்லக்கூடாதா என்று கடிந்து கொண்டாள். அதற்கு அவள் கடந்த நவம்பர் 5, 2013 அன்று கூட தன்னை கற்பழித்ததாக தெர்வித்தாள். இதனால், அதிர்ந்து போன அவள், தன் கணவனை கண்டபடி திட்டினாள். ஆனால், அவனோ இவ்விசயத்தை வெளியே சொன்னால், அவர்களை விட்டு பிரிந்து விடுவேன் என்று மிரட்டினாள். மகளோ மிரண்டு போயிருந்தாள்[2].

hakim-raped-her-daughter-jailed

ஹக்கிம் கைதாகி, சிறையிலடைக்கப் பட்டு, பெயிலில் வெளிவந்தது: ஹக்கிம் மனைவி முதலில், முஸ்லிம்களின் வழக்கம் படி ஜமாத்திடம் முறையிட்டாள். அவர்களின் போக்கு சாதகமாக இல்லாததால், பிறகு பொதனூர் போலீஸ் ஷ்டேசனில் புகார் கொடுத்தாள். இதனால் ஐந்து நாட்கள் தாமதம் ஆகியது. போலீஸார் குழந்தைகளை பாலியல் தாக்குதலிருந்து காப்பாற்றும் சட்டத்தின் / குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் தடுப்பு சட்டத்தின்கீழ் பிரிவுகள் 5 (n) மற்றும் 6ன் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்[3]. பிறகு ராமநாதபுரம் (கிழக்கு) போலீஸ் ஷ்டேசனுக்கு மாற்றப்பட்டது. போலீஸார் ஹகீமை கைது செய்து, கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைத்தனர். அவனும், அவளது பெண்ணும் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப் பட்டனர். ஆனால், இச்சோதனையும் ஐந்து நாட்கள் கழித்து தான் நடந்தது என்று குறிப்பிடத் தக்கது. அதாவது ஐந்து நாட்களில் மருத்துவ சோதனைக்கான ஆதாரங்கள் கிடைக்காமல் செய்திருக்கலாம். நன்றாக துடைத்து சுத்தம் செய்தாலே, ஆதாரங்கள் மறைந்து விடும். இவையெல்லாம் இப்படியிருந்தாகும், சில நாட்களில் ஹக்கிம் பெயிலில் வெளியே வந்து விட்டான்[4].

r-hakkim-rape-coimbatore-indian-expressமகளிர் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டதுமேல் முறையீடு செய்தது: இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது[5].  தாய் தன் கண்ணால் பார்த்ததை வெளிப்படையாக கூறினாள். பாதிக்கப்பட்ட பெண்ணும், தன் தந்தை செய்ததை விளக்கினாள், ஒப்புக் கொண்டாள். ஆனால், குற்றஞ்சாட்டப் பட்ட தந்தை மறுத்தான். அவனது, வழக்கறிஞரும் அவ்வாறே வாதிட்டார். ஒரு பெண் பாலியல் குற்றத்தில் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப் படுகிறாள், கேள்விகளுக்கு உட்படுகிறாள், அவற்றிற்கெல்லாம் மறுபடி-மறுபடி பதில் சொல்ல வேண்டி இருக்கிறது போன்றவற்றைக் கவனிக்கலாம். இதனால், உடலாலும், மனதாலும், எந்த அளவுக்கு பாதிக்கப் படுகிறால் என்பதையும் கவனிக்கலாம். இங்கு கற்பழித்தது தந்தையாக இருப்பதால், அத்தகைய மனவுலைச்சல் அளவுக்கு அதிகமாகிறது. வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் 4ம் தேதி 2016 தீர்ப்பளித்தது[6]. தீர்ப்பில், ஹக்கிமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது[7]. இந்த தண்டனையை எதிர்த்து ஹகிம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு செய்தான்.

r-hakkim-rape-coimbatore-dinamani2013ல் நடந்த குற்றத்திற்கு 2017ல் தண்டனை உறுதியானது: மனு உயர் நீதிமன்றம் முன்பு வந்தபோது, ஹக்கிமின் வக்கீல்லைந்து நாட்கள் கழித்துதான் புகார் கொடுத்தார், சோதனையில், அப்பெண்ணின் உறுப்பில், ஹக்கிமின் விந்து எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என்றெல்லாம் வாதாடினார்[8]. ஆனால், தாய் என்ற முறையில் அவள் தனது குடும்ப மானம் காக்கப்பட வேண்டும், பெண்ணின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்ற நிலையில் காலந்தாழ்த்திருக்கலாம். மேலும், அவள் சிறுமியாக இருந்திருடந்ததால், தந்தை செய்த குற்றத்தைக் கூட அறியாமல் இருந்திருக்கலாம். ஐந்து நாட்கள் சோதனை நடத்தியதால், அவளது பெண்ணுறுப்பு கழுவப்பட்டிருக்கலாம். அதனால், விந்து இல்லாமல் துடைக்கப்பட்டிருக்கலாம். மேலும் பெண் அவற்றையெல்லாம் கூறவில்லை, தன்னுடைய உறுப்பில் அவன் தனது உறுப்பை ஆழப்பதித்தான் என்று தான் சொன்னாள்[9]. ஆகவே, இதனால் குற்றம் புரிந்ததை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. ஹகிம் பாலியல் தொந்தரவு செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது[10].  மருத்துவ ஆவணங்கள் அடிப்படையில்தான் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, மகளிர் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டது. “மனிதனாக காணப்பட்டாலும், தன்னுடைய மகளையே கற்பழித்ததால், தன்னுடைய மிருகக் குணத்தை வெளிப்படுத்தியுள்ளான்[11]. இத்தகைய குடும்பக் குற்றங்களை பொறுத்துக் கொள்ள முடியாது[12]. அதனால் கொடுக்கப்பட்டுள்ள ஆயுள்தண்டனை சரியானதே,” என்று நீதிபதிகள் எஸ்.நாகமுத்து மற்றும் என். ஆதிநாதன் அடங்கிய பெஞ்சு தீர்ப்பளித்தது[13]. அவன் ஜனவரியில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது[14].

© வேதபிரகாஷ்

07-02-2017

r-hakkim-rape-coimbatore

[1] A 36-year-old man was on Saturday sentenced to life imprisonment for raping his 12-year-old daughter twice at his residence at Kurichi Pirivu near Sundarapuram here in November 2013. Pronouncing the judgement, the district Mahila court has also fined him 5,000. The convict, identified as R Hakkim, was into fish selling and scrap business. He resided at a rental house at Kurichi Pirivu along with his wife and two daughters aged 12 and 11 years. His wife used to help him with scrap business, while daughters were students of a private school in the locality.

The Times of India, Man gets life imprisonment for raping daughter, TNN | Jun 5, 2016, 07.06 AM IST.

[2] On November 9, 2013, his two daughters went to sleep after lunch. His wife was outside the house, after locking the front door of the house, segregating iron scrap. Hakkim was sleeping on the floor. When she went inside the house about an hour later, she found her husband raping her elder daughter. The mother chided the girl and rebuked her for not raising any alarm when her father tried to rape her. The girl revealed that her father had raped her on November 5, 2013, when she was alone at the house. Hakkim had threatened to desert her and her mother, if she were to reveal the incident to anyone. “

http://timesofindia.indiatimes.com/city/coimbatore/Man-gets-life-imprisonment-for-raping-daughter/articleshow/52597449.cms

[3] Her mother first approached a Jamath and later lodged a complaint with Podanur police, who registered a case against Hakkim under Section 5 (n) (relative of a child through blood committing penetrative sexual assault) and 6 (punishment for penetrative sexual assault) of the Protection of Children from Sexual Offences (POCSO) Act.

[4] The case was later transferred to Ramanathapuram (east) all-woman police, who arrested Hakkim and lodged him in Coimbatore central prison. Hakkim, however, came out on bail.

[5] தினகரன், மகளுக்கு பாலியல் தொந்தரவு, தந்தைக்கு ஆயுள் உறுதி : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு, 2017-02-05@ 00:38:04.

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=277516

[7] நியூஸ்.பாஸ், மகளுக்கு பாலியல் தொந்தரவு, தந்தைக்கு ஆயுள் உறுதி : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு, 2017-02-05@ 00:38:04.

[8] Though his counsel totally denied the charge, he later confined his argument to contend there was an unexplained delay of five days to lodge the complaint. Hence, the evidence of the mother and the victim should be doubted………………. Counsel then argued that the medical evidence did not corroborate the evidence of the complainants, as there was no presence of sperm in the vagina.

Indian Express, Life imprisonment to Coimbatore man for raping daughter upheld by Madras HC, By Siva Sekaran, Express News Service, Published: 05th February 2017 05:10 AM, Last Updated: 05th February 2017 05:10 AM

[9] Turning this down, the bench pointed out that the victim girl did not say that there was ejaculation of semen. She had only stated there was penetration, the bench noted. Therefore, there would have been no chance for any semen being present in the vaginal smear taken from the girl. Assuming that there was ejaculation, since the victim was examined after about five days,  due to passing of time or washing, the semen would have been washed off, the bench pointed out, refuting the arguments presented by the counsel for defence.

[10] http://newsboss.in/ly/nXPbB1/-

[11] தினமணி, மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை: ஆயுள் தண்டனையை உறுதி செய்து நீதிமன்றம் உத்தரவு, பிப்ரவரி.5, 2017. 02.37.

[12]http://www.dinamani.com/tamilnadu/2017/feb/05/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-2644002.html

[13] The life term awarded by a lower court to a 38-year-old man, who sexually abused his own minor daughter, has been upheld by a division bench of the Madras High Court. “Though he is a man by appearance, by his behaviour towards his own daughter, he has exhibited animal instinct. This kind of domestic violence on his own daughter cannot be tolerated, a bench of Justices S Nagamuthu and N Authinathan said while dismissing a criminal appeal from Hakkim, a resident of Coimbatore district, on January 24, 2017.

Indian Express, Life imprisonment to Coimbatore man for raping daughter upheld by Madras HC, By Siva Sekaran, Express News Service, Published: 05th February 2017 05:10 AM, Last Updated: 05th February 2017 05:10 AM

[14] http://www.newindianexpress.com/cities/chennai/2017/feb/05/life-imprisonment-to-coimbatore-man-for-raping-daughter-upheld-by-madras-hc-1567153.html