Archive for the ‘அப்துல் ரஷீத்’ category

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்: கேரள ஜிஹாதி-தீவிரவாதம் வளறும் விதம் (2)

நவம்பர் 17, 2017

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்: கேரள ஜிஹாதிதீவிரவாதம் வளறும் விதம் (2)

Popular Front meeting, Chennai 08-11- 2017-2

ஐசிஸ் தொடர்புள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாபுகழ் பாடும் விகடன்: PFI மற்றும் ISIS தொடர்புகள் வெளிவந்து கொண்டிருக்கும் நேரத்தில், விகடன், சென்னையில் நடந்த அவர்களது மாநாட்டைப் பற்றி அதிகமாகவே விளம்பரம் கொடுத்துள்ளது[1].  ஜே. அன்பரசன்,  பா.காளிமுத்து, ப. பிரியங்கா என்ற மூவர் இதனை செய்துள்ளனர்[2]. அவர்களின் செய்தி, “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ என்பது இந்திய அளவில் வளர்ந்து வரும் மிகப்பெரிய முஸ்லிம் அமைப்பு. தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர் காலங்களில் இந்த அமைப்பு செய்துவரும் தன்னார்வ சேவைகள் அனைவரும் அறிந்த ஒன்று. ‘லவ் ஜிகாத் மற்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு  ஆதரவு அளித்தல்’ போன்ற பொய்யானக் காரணங்களைச் சொல்லி மத்திய அரசு, ‘பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பைத் தடை செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளதாக அவ்வமைப்பினர் கூறுகின்றனர். அதனால், பி.ஜே.பி அரசை எதிர்த்தும், இந்த அமைப்பை மேலும் வலுப்படுத்தவும் இந்தியா முழுவதும் ‘உரிமை முழக்க மாநாடு’ நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள் ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பினர். கடந்த 8 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், பல்லாயிரக்கணக்கில் முஸ்லிம் மக்கள் கூட ‘உரிமை முழக்க மாநாடு’ நடைபெற்றது. இதற்கு முதல் நாள் அதாவது கடந்த 7 ஆம் தேதி மதுரையிலும், திருவனந்தபுரத்திலும் மாநாடு நடத்தினார்கள்.

Popular Front meeting, Chennai 08-11- 2017

திருமாவளவன், முதலியோர் கலந்து கொண்டது திகைப்படையச் செய்வதாக உள்ளது: சென்னையில் நடைபெற்ற மாநாட்டில்,

  1. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,
  2. மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி,
  3. தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன்,
  4. ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், மற்றும்
  5. முஸ்லிம் கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் முஹம்மது அலி ஜின்னா, “சமீப காலமாக அவதூறு அறிக்கை கொடுத்ததாகச் சொல்லி, எங்கள் அமைப்பைத் தடை செய்ய தேசிய புலனாய்வு முகமை  (N.I.A) தீவிர பணியினை மேற்கொண்டு வருகிறது. இந்த அவதூறு பிரசாரத்தை முறியடித்து, மக்களைச் சந்தித்து உண்மையைச் சொல்லும் பணியில், ‘பாப்புலர் ஃப்ரண்ட்ஆஃப் இந்தியாஇறங்கியுள்ளது. இதனடிப்படையில், இந்தியா முழுவதும் 14 மாநிலங்களில் மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.”  இவ்வாறு முழுக்க-முழுக்க உண்மைகளை மறைத்து, பிரச்சார ரீதியில் நடத்தப் பட்ட மாநாட்டில், மேலே குறிபிட்டவர்கள், எப்படி, ஏன் கலந்து கொண்டனர் என்பது, திகைப்பாக இருக்கிறது. பொறுப்புள்ள அரசியல்வாதிகள் என்ற ரீதியில், நாட்டு நடப்புகள் இவர்களுக்கு தெரியாமல் இருக்குமா என்ன?

Cine secularism acts differently in TN-2017

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் [08-10-2017][3]: இகடன் குழு தொடர்ந்து, இவற்றையும் வெளியிட்டுள்ளது. உரிமை முழக்க மாநாட்டில் முக்கியமான 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை:

  1. பாசிசத்துக்கு எதிரான கூட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு களப்பணி ஆற்றிட வேண்டும்.
  2. தேசிய புலனாய்வு முகமை (N.I.A) கலைக்கப்பட வேண்டும்.
  3. மதுரை, போலி குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும்.
  4. பாபர் மசூதி மீண்டும் அதே இடத்தில் கட்டப்பட வேண்டும்.
  5. பத்தாண்டுகள் சிறையில் கழித்த சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்.
  6. மியான்மரில் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளான ரோஹிங்கியா இன முஸ்லிம்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
  7. நீட் தேர்வை ரத்து செய்து கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.
  8. தீவிரவாத எதிர்ப்பு சட்டமான யு.ஏ.பி.ஏ உள்ளிட்ட சட்டங்கள் மனித உரிமை மீறலுக்கும், நீதி மறுப்பதற்கான ஒரு கருவியாகவுமே இருக்கிறது. எனவே இந்தக் கருப்புச் சட்டங்களை நீக்க வேண்டும்.
  9. கெளரி லங்கேஷின் படுகொலை வன்மையான கண்டனத்துக்குரியது. மேலும் கொலைக் குற்றவாளிகளை உடனடியாகக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
  10. மாநிலங்களுக்கு சுயாட்சியை வழங்க வேண்டும்.
  11. மக்கள் நலப் பணிகளுக்கும், அறப்பணிகளுக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துகளை அர்ப்பணிக்கும் வக்ஃப் வாரியம் சீரமைக்கப்பட வேண்டும்.
  12. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும்.
  13. தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
  14. லவ் ஜிகாத் பொய் பிரசாரத்தை நிறுத்த வேண்டும்.
  15. கல்வி வளாகங்களை சங்பரிவார்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும்.

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன[4].

ISIS plan to kill Hindus - Dinamani- 15-11-2017

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்:  பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI], எஸ்.எப்.ஐ [SFI] தடைக்குப் பிறகு தோன்றிய இயக்கம் ஆகும்.  தடை செய்யப்பட்ட சிமி கூட்டத்தினர் இம்மாதிரியான Social Democratic Party of India (SDPI), Popular Front of India (PFI), National Development Front (NDF), என்று பரவி வருவதாகத் தெரிகிறது[5]. இப்பொழுது, லவ் ஜிஹாத், மதமாற்றம், ஐசிஸ்க்கு ஆள்சேர்ப்பு போன்ற காரியங்களில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்துள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் பலமுறை கொலை[6], வெடிப்பொருட்களைப் பதுக்கி வைத்தல்[7], தேசவிரோத செயல்கள் முதலியவற்றில் ஈடுபடுதல், முதலியவை உறுதிபடுத்தியிருப்பதால், போலீஸ் நடவடிக்கை எடுக்கப் பட்டதுள்ளது[8]. தமிழகத்தைப் பொறுத்த வரையில், தேசவிரோத, கம்யூனிஸ்ட், திராவிட கட்சிகளின் ஆதரவு இருந்து வருகிறது. அவ்வப்போது, ஏதோ சேவை செய்கிறோம் என்பது போலவும் காட்டிக்கொள்வதுண்டு. ஆனால், தீவிரவாத செயல், ஐசிஸ் தொடர்பு, கைது என்றெல்லாம் வரும் போது அமுங்கி விடுவர். ஆனால், பி.எப்.ஐ.யின் அடிப்படைவாத செயல்கள், பயங்கரமாக வெளிப்பட்டுக் கொண்டுக்கின்றன. இப்பொழுது, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் ஐசிஸ்குள்ள தொடர்புகள் வெளியாகி வருகின்றன.

© வேதபிரகாஷ்

17-11-2017

PFI conversion factory- Nov.2017

[1] விகடன், உரிமை முழக்க மாநாடு… ‘பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா‘-வின் புதிய பரிணாமம்!, Posted Date : 21:21 (09/10/2017); Last updated : 21:21 (09/10/2017.

[2] https://www.vikatan.com/news/tamilnadu/104514-popular-front-of-india-conference.html

[3] விகடன், உரிமை முழக்க மாநாடு… ‘பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா‘-வின் புதிய பரிணாமம்!, Posted Date : 21:21 (09/10/2017); Last updated : 21:21 (09/10/2017.

[4] https://www.vikatan.com/news/tamilnadu/104514-popular-front-of-india-conference.html

[5]  According to a government paper, starting largely as a Kerala Muslim outfit and successor to National Development Front (NDF), the PFI now has more than 80,000 members and sympathisers, with a countrywide spread. The paper,that has already been circulated in the PMO,National Security Council Secretariat and the Home Ministry, states that the PFI has a militant core cadre, radical following and a subtly divisive and subversive media organ. While this case was handed over to the NIA last month [January 2014], subsequent police raids at that time on PFI activists had led to the recovery of subversive material. The paper says that raid on 100-odd PFI establishments had led to recovery of crude explosives,lethal weapons,besides a computer disk containing clips of executions by the al-Qaeda. It says Green Valley Foundation in Mallapuram district provided combat training to PFI cadre under the cover of providing vocational training to the indigent and physically challenged.

[6] http://news.outlookindia.com/items.aspx?artid=769976

[7]  http://zeenews.india.com/news/kerala/country-made-bombs-seized-21-pfi-cadres-arrested-in-kerala_844220.html

[8] http://indianexpress.com/article/news-archive/web/concern-in-govt-over-pfis-growing-outfits-spread/0/

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்: கேரள ஜிஹாதி-தீவிரவாதம் வளறும் விதம் (1)

நவம்பர் 17, 2017

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்: கேரள ஜிஹாதிதீவிரவாதம் வளறும் விதம் (1)

Abdul Rashid Abdulla Isis -terror tape

கேரளாவில் தொடரும் ஐசிஸ் ஆதரவு பிரச்சாரம், தீவிரவாத ஊக்குதல் ஆதரவு முதலியன: ஐஎஸ் அமைப்பின் பிராந்திய பிரிவான “தவுலதுல் இஸ்லாம்”, தனது அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு சமீபத்தில் ஒரு குரல் பதிவை (ஆடியோ) வெளியிட்டுள்ளது. “கேரளாவின் ஒளி” என்ற வாட்ஸ்-அப் குழுவில் இது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது[1]. இது அத்தகைய 50வது பதிவேற்றம் என்று சொல்லப்படுகிறது. முன்னர் என்.ஐ.ஏ அப்துல் ரஷீத் என்பவன் அத்தகைய இரண்டு வாட்ஸ்-அப் குழுக்களை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்தது[2]. சுமார் 10 நிமிடங்கள் ஓடும் அதில் ஒருவர் மலையாள மொழியில் பேசுகிறார். “நமது மக்கள் அனைவரும் .எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணையவேண்டும். அப்படி இணைய விருப்பமில்லை என்றால் தீவிரவாத இயக்கத்தினருக்கு அதிக அளவில் நிதி உதவி அளித்திடவேண்டும். ஐஎஸ் முஜாஹிதீன் அமைப்பினர் உலகின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்துகின்றனர். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த இசை திருவிழாவின்போது, நமது அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தாக்குதல் நடத்தினார்[3]. அதில் பலர் உயிரிழந்தனர். இதுபோல, திருச்சூர் (கேரளா) பூரம் அல்லது கும்பமேளா உள்ளிட்ட திருவிழாக்களின்போது உங்கள் புத்திசாலிதனத்தைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துங்கள்[4]. முதலில் இந்த விழா நடக்கும் பகுதிகளுக்கு முன்னதாகவே சென்று உணவில் விஷம் வையுங்கள்[5]. அதை அங்கே வருபவர்களுக்கு சாப்பிட கொடுங்கள்[6].

Abdul Rashid Abdulla Isis -terror tape-drive car into mela

ஐசிஸ் தீவிரவாதி தொடர்ந்து சொல்வது:இந்த தாக்குதலில் தன்னந்தனியாக ஈடுபடுங்கள். லாரியை பயன்படுத்துங்கள். அதேபோல் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சரக்கு வாகனங்களை ஓட்டிச் சென்று அவர்கள் மீது ஏற்றி பெரும் எண்ணிக்கையில் கொன்று குவியுங்கள்[7]. இத்தகைய தாக்குதல் முறைகளைத்தான் உலகம் முழுவதும் இன்று நமது தீவிரவாத இயக்கத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்[8]. அண்மையில் நமது போராளி ஒருவர் இசை நிகழ்ச்சியின்போது இப்படி தாக்குதல் நடத்தி ஏராளமானோரை கொன்று குவித்தார். உணவில் விஷம் கலந்து விடுங்கள். அல்லது கத்தியைப் பயன்படுத்துங்கள். குறைந்தது ரயிலை தடம்புரளச் செய்யுங்கள். உங்களால் இதெல்லாம் முடியவில்லை என்றால் ரெயில் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபடுங்கள். அதுவும் முடியாவிட்டால் கத்தி முனையில் தாக்குதல் நடத்துங்கள். அவர்கள்(ராணுவத்தினர்) நமது கதையை முடிக்க முயன்றாலும் அது நடக்காது. நமக்கு இதில் உயிர் இழப்புகள் ஏற்படலாம். ஆனால் நமது இயக்கம் எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டேதான் இருக்கும். உயிர் இருக்கும் வரை நாம் போராடுவோம்,” என அவர் பேசி உள்ளார்[9].

ISIS want to kill Hindus in India-tape-3

கேரளாவைச் சேர்ந்த அப்துல் ரசீத் பேசியது: கேரளாவைச் சேர்ந்த 100 பேர் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளதாக கேரள போலீஸார் கூறியிருந்த நிலையில் இந்த ஆடியோவெளியாகி உள்ளது. இந்த கேரள மாநிலம் காசர்கோடு பகுதியிலிருந்து ஆப்கன் சென்று ஐஎஸ் அமைப்பில் சேர்ந்த ரஷித் அப்துல்லாவின் குரலாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது[10]. திருச்சூர் பூரம், கும்பமேளா விழாக்களின்போது உணவில் விஷம் வைத்து பெரும் அளவில் மக்களை கொன்று குவியுங்கள் என்று ஐ.எஸ். தீவிரவாதி விடுத்த ஆடியோ மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கேரள மாநிலத்தில் இருந்து சிரியா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்துள்ளதாக கேரள போலீஸ் கூறுகிறது. இவர்களில் பலர் ஆப்கானிஸ்தான், சிரியா நாடுகளில் ராணுவத்துக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டு மரணத்தையும் தழுவியதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் பல்வேறு வழிகளில் தாக்குதல்களை நடத்தி பெரும் எண்ணிக்கையில் மக்களை கொன்று குவிக்கும்படி ஐ.எஸ். தீவிரவாதி மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக கேரள மாநிலம் காசர்கோடு நகரில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்கத்தில் இணைந்த ஒருவர் 10 நிமிடம் மலையாள மொழியில் பேசும் ஆடியோ உரை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[11]. இதையடுத்து கேரளாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன[12].

ISIS want to kill Hindus in India-tape-1

கேரளாகாரன் என்பதால், கேரளாவில் இக்கட்டான நிலை: இதுகுறித்து கேரள காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானில் இருந்து குரல் பதிவு அனுப்பப்பட்டுள்ளது. அதில் பேசியிருப்பவர், ஐஎஸ் அமைப்பில் அண்மையில் சேர்ந்த கேரளம் மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த ரஷித் அப்துல்லாவாக இருக்கலாம் என்று நம்புகிறோம். ரஷித் அப்துல்லாவுக்கு எதிராக என்ஐஏ அமைப்பும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இன்டர்போல் அமைப்பும் அவருக்கு எதிராக ரெட்கார்னர் நோட்டீஸ் பிரப்பித்துள்ளது’ என்றன. இந்த குரல் பதிவு தொடர்பாக கேரள போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்[13]. இதுதொடர்பாக வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற சமூகவலைதளங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 300 குரல் பதிவுகளை அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து மத்திய அமைச்சரவை செயலகத்தின் முன்னாள் இயக்குநர் வி. பாலசந்திரன் கூறும்போது, இது மிகவும் கவலைதரும் விஷயமாகும். அந்த அமைப்பினர் தங்களது சண்டையை ஐரோப்பா, மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வர நினைக்கின்றனர்’ என்றனர்[14].

© வேதபிரகாஷ்

17-11-2017

Jihadi terror- Asianet- modified- Vedaprakash

[1] he voice in the audio clip, posted on a WhatsApp group called ‘Light of Kerala’, is suspected to be that of Abdul Rashid, an engineering graduate. Abdul Rashid is believed to be the man behind the exodus of 21 Keralites to Afghanistan .This is reportedly the 50th such clip that has emerged on the WhatsApp group ‘Light of Kerala’.

http://www.thenewsminute.com/article/horrifying-audio-clip-kerala-isis-recruiter-urging-war-hindus-democracy-surfaces-71651

[2] In an earlier case investigated by National Investigation Agency, it was revealed that Abdul Rashid created at least two WhatsApp groups, in which he added about 200 people in Kerala, and began transmitting messages, urging them to join the Syria-based terror group.

http://www.deccanchronicle.com/nation/current-affairs/151117/kerala-probe-on-to-trace-islamic-state-audio-clips.html

[3] மாலைமலர், திருச்சூர் பூரம் விழாவில் மக்களுக்கு உணவில் விஷம் வையுங்கள்: .எஸ். பயங்கரவாதியின் மிரட்டல் ஆடியோ, பதிவு: நவம்பர் 16, 2017 07:03

[4] http://www.maalaimalar.com/News/TopNews/2017/11/16070309/1129089/Put-poison-in-the-food-at-the-Thrissur-Pooram-festival.vpf

[5] தினத்தந்தி, திருச்சூர் பூரம் விழாவில் மக்களுக்கு உணவில் விஷம் வையுங்கள் .எஸ். பயங்கரவாதியின் மிரட்டல் ஆடியோ, நவம்பர் 16, 2017, 04:45 AM

[6] http://www.dailythanthi.com/News/TopNews/2017/11/16035820/Thrissur-Pooram-festival-put-poison-in-the-food-of.vpf

[7] பாலிமர்.டிவி, அதிக மக்கள் கூடும் இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும்கேரளாவில் இருந்து ஆப்கானிஸ்தான் சென்ற தீவிரவாதி எச்சரிக்கை, 15-நவ்-2017 13:40

[8]https://www.polimernews.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/

[9] தி.இந்து, திருச்சூர் பூரம் விழாவில் தாக்குதல் நடத்தப்படும்: ஐஎஸ் தீவிரவாத அமைப்பு எச்சரிக்கை, Published :  16 Nov 2017  09:15 IST; Updated :  16 Nov 2017  09:22 IST

[10] http://tamil.thehindu.com/india/article20464351.ece

[11] தமிழ்.ஒன்.இந்தியா, திருச்சூர் பூரம் திருவிழாவில் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் பகீர் சதித் திட்டம்ஷாக் தகவல்கள், Posted By:  Mathi, Published: Wednesday, November 15, 2017, 9:19 [IST]

[12] https://tamil.oneindia.com/news/india/isis-advise-kerala-muslims-poison-food-at-thrissur-pooram-kkumbh-mela-301836.html

[13] தினமணி, கும்ப மேளா, திருச்சூர் பூரம் விழாக்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும்: ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு திடீர் மிரட்டல், Published on : 16th November 2017 12:53 AM.

[14]http://www.dinamani.com/india/2017/nov/16/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF-2808510.html