Archive for the ‘அப்துல்லா’ category
ஏப்ரல் 15, 2017
கேரளா முதல் காஷ்மீர் வரை: இஸ்லாமிய அடிப்படைவாதம், பயங்கரவாதமாகி, ஜிஹாதாகி, மனித வெடிகுண்டாக மாறியது – இங்கு கல்லடி ஜிஹாதிகளாக செயல்படும் தேசவிரோத பொறிக்கிகள்! (3)

காஷ்மீர் கல்லடி–கலாட்டா பொறுக்கிகள் ராணுவத்தினரை அவமதித்தது: காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினரை, துணை ராணுவத்தினரை அங்குள்ள இளைஞர்கள் கல்வீசி தாக்குவது தொடர் கதை ஆகி வருகிறது. அக்கலவரக்காரர்களை அடக்க முன்னர் “பெட்டட்” துப்பாக்கிகளை உபயோகித்து வந்தனர். ஆனால், இப்ப்பொழுது, உபயோகிப்பதில்லை. தேசதுரோகத்தை வளர்த்து வருவதால், அவர்கள் அத்தகைய நச்சிலேயே ஊறி வளர்ந்துள்ளனர். சமீபத்தில் அங்கு இடைத்தேர்தல் நடந்த ஸ்ரீநகரில் கரல்போரா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவத்தினரை அவர்கள் ஓட, ஓட விரட்டி கற்களை வீசி தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தின. அதுமட்டுமல்லாது, அவர்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, சூழ்ந்து கொண்டு அவர்களை அவமதித்தும், திட்டியும், காலால் கூட உதைத்தனர். ஆனால், கைகளில் ஆயுதம் ஏந்திய அவர்கள் நடந்து சென்றனர். அந்த அளவுக்கும் அவர்கள் பொறுத்துப் போகிறார்கள். இதைப்பற்றி மனித உரிமை போராளிகள் யாரும் பொங்கவில்லை. ஏனெனில், அவர்களுக்கு தீவிரவாதிகள், ஜிஹாதிகள், மனிதவெடிகுண்டுகள் – இவர்களின் உரிமைகள் தான் தெரியும் போல! அருந்ததி ராய் போன்றோர் சூடு-சொரணை-வெட்கம்-மானம் இல்லாமல் காணாமல் போய் விட்டனர்!

கிரிக்கெட் வீரர்கள் பொங்கியது[1]: இந்த வீடியோவைப் பார்த்த பலர் கொதித்து போயினர். கிரிக்கெட்டை பாகிஸ்தான் மற்றும் அதன் பிராக்ஸிகளான இவர்கள் ஒரு போராக கருதுவதால், இது தொடர்பாக, சாதனை படைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக் டுவிட்டரில் வேதனை தெரிவித்துள்ளார் போலும். அதில் அவர், “இது ஏற்றுக்கொள்ள முடியாதது. நமது துணை ராணுவத்தினரை இப்படி செய்யக்கூடாது. இத்தகைய கெட்ட செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் காம்பீர் டுவிட்டரில் ஆக்ரோஷமாக கருத்து தெரிவித்துள்ளார். அவர், “நமது ராணுவ வீரர்கள் மீது விழுகிற ஒவ்வொரு அடிக்கும், 100 பேரின் உயிரை வீழ்த்த வேண்டும். யாருக்கெல்லாம் இங்கே இருக்க இஷ்டம் இல்லையோ அவர்கள் எல்லாரும் நாட்டை விட்டு வெளியேறட்டும். காஷ்மீர் எங்களுக்கே உரித்தானது,” என கூறி உள்ளார்[2]. மேலும், “இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிற இவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள். நமது தேசியக்கொடியில் உள்ள காவி நிறம் நமது கோபத்தீயின் அடையாளம். வெள்ளை என்பது போராளிகளுக்கான சவச்சீலை, பச்சை என்பது பயங்கரவாதத்திற்கு எதிரான வெறுப்புணர்வு” எனவும் கூறி உள்ளார். தாக்குதலுக்கு உள்ளான துணை ராணுவத்தின் (மத்திய ஆயுதப்படை) ஐ.ஜி.ரவிதீப் சிங் சஹி செய்தி நிறுவனம் ஒன்றிடம் நேற்று பேசுகையில், “வீடியோ காட்சி உண்மையானதுதான். சம்பவம் எங்கு நடைபெற்றது, பாதிப்புக்குள்ளான படைப்பிரிவு எது என்பதை கண்டறிந்துள்ளோம். இதுதொடர்பாக தகவல்களை சேகரித்து சதூரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளோம். வழக்கு பதிந்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கூறினார். இதைப்பற்றியும் பரூக் அப்துல்லா பொறுப்பற்ற முறையில் கமென்ட் அடித்துள்ளார்.

ரத்தவெள்ளம் ஏற்படுவதை சமயோஜிதமாக தடுத்ததை விஷமத்தனமாகத் திரித்துக் கூறுவது: மேலே குறிப்பிட்ட விடீயோ பற்றி விவாதம் நடக்கும் வேளையில், இன்னொரு வீடியோ சுற்றில் விடப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை [07-04-2017] இடைத்தேர்தல் நடந்தது. அப்போது பத்காம் மாவட்டத்தின் பீர்வான் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு எதிராக இளைஞர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த படை வீரர்கள் கல்வீச்சில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை பிடித்ததாகவும், தங்கள் மீது கற்களை வீசித் தாக்காமல் தற்காத்துக் கொள்ள அந்த இளைஞரை ஜீப்பின் முன்பகுதியில் கயிற்றால் கட்டி மனித கேடயமாக பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது, என்று தினத்தந்தி விவரிக்கிறது. அப்போது, கல்வீச்சில் ஈடுபடுபவர்களுக்கு இந்த கதிதான் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. உண்மையில் தேர்தலின் போது ஓட்டுப்பதிவு நடக்கும் போது, யாரும் அருகில் இத்தகைய வன்முறை முதலிய கலாட்டாக்கள் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால், வன்முறையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கலாம். இந்த வீடியோ காட்சி 14-04-2017 அன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. ஆனால், ராணுவத்தினர் சொன்னதை வெளியிடவில்லை.

உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்தது: தேர்தலின் போது, வன்முறையில் ஈடுபட்டு, கலவரத்தில் ஈடுபாட்டு ஓட்டு போட வருபவர்களை அச்சுருத்தும் வகையில் செயல் படுபவர் மீது சுடவும் செய்யலாம். ஆனால், அவ்வாறு செய்தால், இருக்கின்ற நிலையில், நிலைமை இன்னும் சீர்கேடாகும். ரத்தக்களறியே ஏற்பட்டிருக்கும். ஆகவே அதைத் தடுக்கவே, ராணுவத்தினர், பாடம் கற்பிக்க அவ்வாறு செய்தனர். இதற்கு காஷ்மீர் முன்னாள் முதல்–மந்திரி உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘‘தங்கள் மீது கற்கள் படக்கூடாது என்பதற்காகத்தான் அந்த இளைஞர் ஜீப்பின் முன்பக்கமாக கயிற்றில் கட்டப்பட்டு கொண்டு செல்லப்பட்டாரா?. இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. படையினரின் இந்த செயல் மூர்க்கத்தனமானது. இது எதிர் விளைவை ஏற்படுத்தாது என்பது என்ன நிச்சயம்? கல்வீச்சில் ஈடுபடுபவர்களின் கதி இதுதான் என்பதை வெளிப்படையாக கூறும் இந்த சம்பவம் பற்றி உடனடியாக விசாரணை நடத்தப்படவேண்டும்,’’ என்று கூறியுள்ளார்[3]. இதுபற்றி ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘இந்த வீடியோ காட்சியின் உண்மை தன்மை பற்றி சரிபார்க்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ராணுவம் விசாரணைக்கும் உத்தரவிட்டு உள்ளது’’ என்றார்[4]. ஆக, அப்பனும், பிள்ளையும் இவ்வாறாக அரசியல் நடத்துகின்றனர்.

தாத்தா, மகன், பேரன் – தேசநலனுக்காக எதிராக செயல்பட்டு வரும் குடும்பம்: ஷேக் அப்துல்லா, பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா என்று மூன்று பரம்பரையாக, காஷ்மீரத்தை ஆண்டு வந்துள்ளனர் இவர்கள். பரூக் அப்துல்லா மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறார். ஷேக் அப்துல்லா தனது காலத்தில் தேசத்துரோகியாக செயல்பட்டு வந்ததும், பரூக் அப்துல்லா நன்றாக அனுபவித்துக் கொண்டு, இங்கிலாந்து பங்களாவில் சொகுசாக வாழ்ந்து கொண்டு, அவ்வப்போது, இந்தியாவுக்கு வந்து செல்வதும், உமர் அப்துல்லா மோடிக்கு எதிராக செயல்பட்டதால், பதவி இழந்ததும் எல்லோருக்கும் தெரிந்த கதை எனலாம். மற்ற இப்பொழுதுள்ள பிரிவினைவாதிகளைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவின் வசதிகளை அனுபவித்துக் கொண்டே, இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர், ஆனால், மத்த்ய அரசு அவர்களை உல்லாசமாக வைத்திருக்கிறது.

இந்தியா காஷ்மீர் மாநிலத்திற்கு கோடிக்கணக்கில் செலவழிப்பது: காஷ்மீருக்காக, கோடிகளை அள்ளிக் கொட்டுகிறது மத்திய அரசு, ஆனால், பதிலுக்கு அங்கிருந்து வரும் வருவாய் மிகக்குறைவே ஆகும். அதாவது, மற்ற மாநிலங்களின் வரிப்பணம் அங்கு செலவாகிறது, விரயமாகிறது. தீவிரவாதத்தால், அங்கிருக்கும் மக்கள் இருக்கும் சுற்றுலா தொழிலையும் கெடுத்துக் கொண்டனர். சூட்டிங்களும் நிறுத்தப்பட்டன. அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் அங்கு செல்ல வேண்டாம் என்று ஆணையிட்டுள்ளது. ஆகவே, தீவிரவாதத்தால், அவர்களுக்கு தீமை தான் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஜனநாய முறைகளை மறுத்து, தீவிரவாதத்தை வளர்க்கும், அவர்களை ஆதரிக்குமரீவர்கள் மீது, நிச்சயமாக தகுந்த நடவடிக்கை எடுக்கலாம். ஆப்கானிஸ்தான் அளவுக்கு வளர்த்து குண்டு தாக்குதல் நடத்த வேண்டும் என்று அவசியம் இல்லை. இப்பொழுது தான், சுரங்கப்பாதை திறந்து வைக்கும் போது, தீவிரவாதமா அல்லது சுற்றுலாவா, இரண்டில் ஒன்றை தேர்ந்தெட்த்துக் கொள்ளுங்கள் என்று மோடி கூறியிருப்பதால், நல்லதை தேர்ந்தெடுப்பது, அவர்களுக்கு நல்லதாகும் எனலாம்.
© வேதபிரகாஷ்
15-04-2017

[1] மாலைமலர், காஷ்மீரில் துணை ராணுவத்தினரை இளைஞர்கள் விரட்டி தாக்குவதா?: ஷேவாக், காம்பீர் வேதனை, பதிவு: ஏப்ரல் 14, 2017 09:21.
[2] http://www.maalaimalar.com/News/Sports/2017/04/14092128/1079897/Gambhir-Sehwag-tweet-in-support-of-attacked-CRPF-Jawans.vpf
[3] தினதத்தந்தி, காஷ்மீரில், ராணுவ ஜீப்பில் இளைஞர், மனித கேடயமாக பயன்படுத்தப்பட்டாரா? ஏப்ரல் 15, 05:00 AM
[4] http://www.dailythanthi.com/News/India/2017/04/15025043/In-Kashmir-the-military-jeep-YouthHuman-shield-use.vpf
பிரிவுகள்: ஃபத்வா, ஃபிதாயீன், ஃபேஸ்புக், அகிம்சை, அடி உதை, அடையாளம், அத்தாட்சி, அப்துல்லா, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல்-உம்மா, அழிப்பு, அழிவு, ஆப்கன், ஆப்கானிஸ்தான், உமர் அப்துல்லா, கம்பீர், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், காந்தாரம், காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, குண்டு வெடிப்பு, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, கேரள ஜிஹாதி, கேரள ஜிஹாதிகள், கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், கொலை வெறி, கொலைகாரர்கள், கொலைவெறி, கௌதம் கம்பீர், ஜிஹாதி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், போராட்டம், போராளி, ஷேக் அப்துல்லா, ஷேவாக், Uncategorized
Tags: ஆப்கானிஸ்தான், இஸ்லாம், என்.ஐ.ஏ, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசில், ஐசிஸ், ஐஸில், கேரளா, சிரியா, ஜிஜாதி தீவிரவாதம், ஜிஹாதி, ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாதி பெண் தீவிரவாதிகள், ஜிஹாதி பெண்கள், ஜிஹாதிகள், ஜிஹாத்
Comments: 1 பின்னூட்டம்
ஏப்ரல் 15, 2017
கேரளா முதல் காஷ்மீர் வரை: இஸ்லாமிய அடிப்படைவாதம், முகமதிய பயங்கரவாதமாகி, முஸ்லிம் ஜிஹாதாகி, துருக்க மனித வெடிகுண்டாக மாறியுள்ள நிலை! ஆனால் ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பில் சாவு (1)

கேரளா கடவுளின் தேசமா, சாத்தானின் தேசமா?: “கடவுளின் சொந்தமான தேசம்” என்றெல்லாம் சொல்லிக் கொண்டு தப்பட்டம் அடித்துக் கொள்ளும் கேரளம், ஆரம்பகாலத்தில் கூலியாட்கள் மற்றும் வேலையாட்களை வளைகுடா நாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தது, அதாவது ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது. பிறகு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கன்னியாஸ்திரிக்களை ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தது. சமீபகாலத்தில் ஜிஹாதிகளை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது. செக்ஸ் விவகாரங்களில் நாறடித்து வரும் நிலையில், இந்த ஜிஹாதி ஏற்றுமதி உலகத்தையே திகைக்க வைத்துள்ளது. கேராளாவில் தான் படித்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்கிறார்கள். பிறகு, எப்படி, அப்படி மெத்தப் படித்தவர்கள் இடையே, இத்தனை குரூரக் குற்றவாளிகள், கற்பழிப்பாளர்கள், கொலையாளிகள், குண்டுவெடிப்பாளர்கள், ஜிஹாதிகள் என்றெல்லாம் உருவாகிக் கொண்டிருப்பார்கள். படித்த படிப்பினால் பிரயோஜனம் இல்லையா? பிறகு அங்கிருக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் எதைத்தான் அவர்கள் போதித்துக் கொண்டிருக்கிறார்கள். கம்யூனிஸம், லெனினிஸம், மார்க்சிஸம் என்றெல்லாம் சொல்லி செக்யூலரிஸத்தை வளர்த்தனர். ஆனால், இஸ்லாமிய / கிருத்துவ அடிப்படைவாதங்கள், ஜிஹாதி தீவிரவாதங்கள் வளர்ந்து பெருகியதையும் அவர்கள் ஊக்குவித்துள்ளார்கள் என்றே தெரிகிறது. ஐசிஸ் சார்பாக இப்பொழுது வளைகுடா நாடுகளில் போரிடுவதோடு மட்டுமல்லாது, இந்தியாவுக்கும் எதிராக போராட ஆரம்பித்து விட்டார்கள்.

குடும்பத்தோடு ஜிஹாதி தீவிரவாதத்தில் சேர்வது எப்படி?: கேரள மாநிலத்தில் சமீப காலத்தில் பெண்கள் உள்பட 21 இளைஞர்கள் மாயமானார்கள். அவர்கள் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்ததாக கூறப்பட்டது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் இருந்து 11 பேர் ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்தனர். இவர்களில் 4 பெண்கள் 3 குழந்தைகள் அடங்குவர். பெண்களில் இருவர் பாலக்காட்டைச் சேர்ந்தவர்கள். அதாவது, இப்படி குடும்பத்தோடு ஜிஹாதி தீவிரவாதத்தில் சேர்கிறார்கள் என்றால், அவர்களது பெற்றோர் எப்படி அவர்களை வளர்த்துள்ளனர். அதையே தொழிலாக ஏற்றுக்கொள்ளும் வகையில், அவர்களது மனப்பாங்கு ஏற்பட எப்படி அவர்கள் ஒத்துழைத்தார்கள். அல்லது, அது நல்லதல்ல என்று நடுவில் கண்டுபிடித்தால், ஏன் தடுக்கவில்லை. இத்தகைய நிதர்சன கேள்விகள் எழுப்பப்படும் போது, பதில்கள் அவர்கள் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும், நிகழ்வுகள் உண்மையினை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது. அவர்கள் ஏற்றுக் கொண்டு ஒத்துழைத்திருக்கிறார்கள். ஜிஹாதி தீவிரவாதத்திற்கு ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

காங்கிரஸுக்குப் பிறகு கம்யூனிஸ ஆட்சி வந்தாலும் நிலைமை மாறவில்லை: மும்பை வெடிகுண்டு விவகாரங்களில் மற்ற தென்னிந்திய வெடிகுண்டுகள் வழக்குகளில் கேரளாவின் தீவிரவாத பங்கு அதிகமாகவே இருந்து வருகிறது. டேவிட் கோல்மேன் ஹெட்லி [ஒரு முஸ்லிம்] மூணாறில் சொகுசு விருந்தினர் பங்களாவில் தங்கி உளவு பார்த்துச் சென்றதும், அதற்கு ஆவணவற்றை செய்து கொடுத்தவர்களும் அங்கு இன்றும் இருக்கிறார்கள். முன்னர் காங்கிரஸ்காரர்கள் உதவி செய்து வந்தார்கள். கிருத்துவ-இஸ்லமிய கும்பல்கள் அவர்களுக்கு எல்லாம் கொடுத்து வந்தன, அனுபவித்துத் திளைத்து நாட்டிற்கு துரோகம் செய்து வந்தனர். இப்பொழுது, கம்யூனிஸ ஆட்சி வந்துள்ளதால், அவை எல்லைகளைக் கடந்து போய் கொண்டிருக்கின்றன. இதுபற்றி தீவிர விசாரணை நடத்தவும் முதல்–மந்திரி பினராயி விஜயன் போலீசாருக்கு உத்தரவிட்டார். கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன் சட்டசபையில் கூறும்போது, ‘‘கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த 17 பேர், பாலக்காட்டை சேர்ந்த 4 பேர் என 21 இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்துவிட்டதாக முதல்கட்ட தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ். முகாம்களுக்கு சென்றுவிட்டதாக பத்திரிகை தகவல்கள் தெரிவிக்கின்றன,’’ என்றார். ஆனால், மெத்தப் படித்த கேரளாகாரர்கள் என்னடா இது, மலையாள மக்கள் இந்த அளவுக்கு தீவிரவாதிகளாகி விட்டார்களா என்று கவலைப்பட்டதாகத் தெரியவில்ல.

பெற்றோர்–உற்றோர்–மற்றோர்களுடன் தீவிரவாதிகளின் தொடர்புகள் இருந்து வருவது: இந்நிலையில் 13-04-2017 அன்று ஐ.எஸ் இயக்கத்தில் செயல்பட்டு வரும் கேரள இளைஞரான முர்ஷித் என்பவர், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதல் கொல்லப்பட்டு விட்டதாக, முர்ஷித்தின் பெற்றோர்களுக்கு டெலகிராம் மூலம் தகவல் வந்துள்ளது. அமெரிக்க வெடிகுண்டு தாக்குதலில் முர்ஷித் கொல்லப்பட்டு விட்டதாக தங்களுக்கு வந்த வாட்ஸ் அப் தகவல் வந்திருப்பதாக முர்ஷித் முகமதுவின் உறவினர்கள் கூறியுள்ளனர்[1]. சில வாரங்களுக்கு முன்னதாக (தி இந்து), / கடந்த இரு மாதங்களுக்கு முன் (தினத்தந்தி) ஐ.எஸ்.-ல் இணைந்த டி.கே.ஹபீசுதீன் (வயது 24) என்ற கேரள இளைஞர் அமெரிக்க தாக்குதலில் பலியானதாக இதேபோல் உறவினர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது[2]. காசர்கோடு மாவட்டம், பட்னே நகர இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் ரஹ்மான், இதுகுறித்து கூறியதாவது: “பட்னேவைச் சேர்ந்த முர்ஷீத் முகமது என்ற இளைஞர் ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் நிகழ்த்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக சமூக வலைதளம் ஒன்றின் மூலம் எனக்கு செய்தி கிடைத்தது[3]. அவர் இறந்த தேதி போன்ற பிற தகவல்கள் தெரியவில்லை”, என்று அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்[4]. ஆனால், இந்த தகவலை போலீஸ் தரப்பில் இன்னும் உறுதிபடுத்தவில்லை[5].

அப்பட்டமாக பொய் சொல்லும் பெற்றோர், உற்றோர், அரசியல்வாதிகள்: இப்படி பெற்றோர், உற்றோர்களுக்கு டெலகிராம் / வாட்ஸ் அப் தகவல் மூலம் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன எனும்போது, அவர்களுக்கு தங்களது மகன் / மகள் / மறுமகன் / மறு மகள் / குடும்பம் முதலியன ஜிஹாதி தீவிரவாதத்தில் ஈடுபட்டிருப்பது தெரிந்தே இருக்கிறது என்பது உண்மையாகிறது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களுக்கும் தெரிந்துள்ளது. பிறகு, அவர்கள் ஏன் உரிய அதிகாரிகளிடம் புகார் கொடுக்கவில்லை, என்.ஐ.ஏ போன்ற விசாரணை குழுக்களுக்கு விவரங்கள் கொடுக்காமல் ஒத்துழைக்கவில்லை போன்ற கேள்விகள் எழுகின்றன. ஆக, தெரிந்தே அவர்கள் அனுமதித்துள்ளனர், ஒப்புக்கொண்டுள்ளனர், ஒத்துழைப்புக் கொடுக்கின்றனர். அதாவது, இதில் சம்பந்தப் பட்டவர்களுக்கு பரஸ்பர லாபங்கள் இருக்கின்றன. ஒருவேளை கோடிக்கணக்கில் உதவிகள், அனுபவிக்கும் சகாயங்கள் முதலியன இவர்களுக்குக் கிடைத்து வருகின்றன போலும். அதனால் தான், மறைத்துள்ளனர், இன்றும் தங்களுக்கு விசயம் தெரிந்தாலும், போலீஸார் சொல்லவில்லை, உறுதிபடுத்தவில்லை என்றெல்லாம் சொல்வது, பொய் சொல்கிறார்கள் என்று நன்றாகவே தெரிகிறது. தங்கள் மகன் / மகள் காணவில்லை என்று புகைப்படங்களுடன், இவர்கள் போலீஸுக்கு புகார் அளிக்காமல் இருக்கும் பட்சத்தில், அவர்கள் எப்படி உறுதி செய்ய முடியும்?
© வேதபிரகாஷ்
15-04-2017

[1] தி.இந்து, ஐ.எஸ்.-ல் இணைந்த கேரள இளைஞர் அமெரிக்க தாக்குதலில் பலி, சி.கவுரிதாசன் நாயர், Published: April 14, 2017 16:49 ISTUpdated: April 14, 2017 16:49 IST.
[2]http://tamil.thehindu.com/india/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/article9640031.ece
[3] தினமணி,ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்த கேரள இளைஞர் ஆப்கனில் சாவு?, By DIN | Published on : 15th April 2017 12:29 AM
[4] http://www.dinamani.com/india/2017/apr/15/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2684471.html
[5] தினத்தந்தி, ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்ததாக கூறப்பட்ட கேரள இளைஞர் ஆப்கானிஸ்தானில் பலி, ஏப்ரல் 14, 12:15 PM
பிரிவுகள்: ஃபத்வா, ஃபேஸ்புக், அடையாளம், அப்துல்லா, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, கேரளா, ஜிஹாதி, ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, வெடி மருந்து, வெடிகுண்டு, வெடிகுண்டுகள்
Tags: ஆப்கானிஸ்தான், இஸ்லாம், ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசில், ஐசிஸ், ஐஸில், காஷ்மீரம், காஷ்மீர், கேரளா, ஜிஜாதி தீவிரவாதம், ஜிஹாதி, ஜிஹாத்
Comments: 4 பின்னூட்டங்கள்
ஒக்ரோபர் 29, 2016
ஏமன் நாட்டு போராளிகள் மெக்காவின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினரா? அமெரிக்க-சவுதி நாடுகள் ஏமன் நாட்டு உள்விவகாரங்களில் தலையிடுவது.

காபாவைக் காப்பவர்கள் யார்?: மெக்காவில் உள்ள காபா, மெதினா முதலியவற்றை இன்று சவுதி அரேபியா தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு நிர்வகித்து வருவதால், இஸ்லாத்தையே தான்தான் காக்கிறது என்பது போல காட்டிக் கொள்கிறது. ஆனால், ஆரம்பத்திலிருந்தே இரானுக்கு இது பிடிக்கவில்லை. ஒவ்வொரு ஹஜ் பயணத்தின் போதும், இந்த வேறுபாடு, ஏதாவது ஒரு வழியில் வெளிப்படும். இரான் முஸ்லிம்கள் பெரும்பாலோர் ஷியா என்பதினால், ஷியா-எதிர்ப்பு மூலம் வெளிப்படும், ஜிஹாதி, இஸ்லாமிய தீவிரவாத கூட்டத்தினர், இயக்கங்கள் முதலியற்றில் அதிகமாக இருப்பது சுன்னிகள் தாம். இதனால் தான், ஐசில் ஜிஹாதிகள் கூட ஷியாக்களைத் தாக்கிக் கொன்று வருகின்றனர். ஒருபக்கம் சுன்னி-ஷியா வித்தியாசம் இருந்தாலும், இவற்றுடன், போராளிகள்-தீவிரவாதிகள் சண்டையும், அமெரிக்க ஆதரவு-எதிர்ப்பு முதலியனவும் பின்னிப் பிணைந்துள்ளன. முன்னர் ஷாவின் ஆட்சியின் போது, அமெரிக்கா இரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. ஷாவின் ஆட்சி தூக்கியெரியப் பட்டப் பிறகு, அமெரிக்க விரோத கொள்கை பின்பற்ரப்பட்டு வருகின்றது.

27-10-2016 வியாழக்கிழமை அன்று ஹௌத் போராளிகள் தாக்கினரா?: ஏவுகணையை வீசி தாக்குதல் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி இனப்போராளிகளை [Houthi rebels] ஒடுக்க சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் கடந்த ஆண்டு 2015 மார்ச் மாதத்தில் இருந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன[1]. இந்நிலையில், சவுதி அரேபியா நாட்டில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவுக்கு தெற்கில் உள்ள அல்-தைப் [al-Taif] குறிவைத்து இன்று ஏமனில் உள்ள ஹவுத்தி இனப் போராளிகள் சாதா மாகாணத்தில் இருந்து 27-10-2016 வியாழக்கிழமை அன்று ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்[2] என்று செய்திகள் வந்துள்ளன. இந்த ஏவுகணைகள் சி-802 என்ற [Chinese C-802] சைனாவின் கப்பல் தடுப்பு ஏவுகணையின் சிறந்த வகையைச் சேர்ந்ததாகும். சைனாவின் ஏவுகணைகள் எப்படி இவர்களுக்குக் கிடைக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

ஹௌத் என்ற போராளிகள் யார்?: ஹௌத் என்ற போராளிகள் “அன்சார் அல்லா”, கடவுளை ஆதரிப்பவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், ஷியைத் பிரிவைச் சேர்ந்த ஜெயித் குலத்தைச் சேர்ந்தவர்கள்[3]. சுன்னி முஸ்லிம்களுக்கும், இவர்களுக்கும் சில இறையியல் வித்தியாசங்கள் உள்ளன. 1960களிலிருந்தே, சவுதி அரேபியா, ஏமனின் உள்விவகாரங்களில் தலையிட்டு வருகின்றது. அமெரிக்க-சவுதி அடக்குமுறைகளினால் சுமார் 10,000 மக்கள் இறக்க நேர்ந்துள்ளது. அதில் 4,100 சாதாரண குடிமக்கள் ஆவர். தவிர, 3.2 மில்லியன் / 32,00,000, 32 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். வியாதி போன்றவற்றாலும் பாதிப்புள்ளது[4]. மனித உரிமைகள் பற்றி பேசும் அமெரிக்க இங்கு நடந்துள்ளவற்றிற்கு பொறுப்பேற்பதானால், அமெரிக்கா முதலில் அவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டும்[5]. சவுதிக்கு ஆதரவு கொடுப்பதையும், ஏமன் நாட்டு விவகாரங்களில் தலையிடுவதையும் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றும் விமர்சகர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்[6].

ஏவுகணைகளை உபயோகிப்பதாக ஹௌதி போராளிகளின் மீது குற்றச்சாற்று: ஜூலை 14, 2006 அன்று C-802 ஏவுகணை மூலம் இஸ்ரேலின் ஏவுகணை கப்பலைத் தாக்கி [Israeli missile ship INS Hanit] சேதத்தை ஏற்படுத்தியது என்பதை நினைவு கூற வேண்டும். முதலில் சைனாவின் ஏவுகணைகள் எப்படி, இப்பகுதிகளில் உள்ள தீவிரவாதிகளிடம் வருகின்றன என்பதனை கவனிக்க வேண்டும். தீவிரவாதிகளுக்கு உபயோகமாக அவை உபயோகப்படுத்தப்படுகின்றன என்றால், அமெரிக்கா அதை எதிர்ப்பதில்லை என்பதும் வியப்பான விசயமே. ஆயுத உற்பத்தியைக் குறைக்க வேண்டும் என்று ஒருபக்கம் பிரச்சாரம் செய்தாலும். சைனா போன்ற நாடுகள் ஆயுதங்களை உற்பத்தி செய்து கொண்டுதான் வருகின்றன, அவை, ஜிஹாதிகளுக்கு சென்று கொண்டுதான் இருக்கின்றன. அமெரிக்க-சைன ஆயுத உற்பத்தி, உலகத்தில் எல்லை சண்டைகள், உள்நாட்டு போர்கள், ஜிஹாதி தாக்குதல்கள், ஐசில் போன்ற குரூர கொலைகள்-ஆக்கிரமிப்புகள் முதலியன இருக்கும் வரை, இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் எல்லோரும் தமது தீவிரவாதத்தை விட்டுவிட்டால், அமெரிக்க-சைன ஆயுத உற்பத்தி தொழிஸ்சாலைகள் எல்லாம் மூடப்படும் நிலை உண்டாகும்!

ஹௌதி போராளிகள் குறி வைத்தது மெக்காவா இல்லையா?: ஹௌதி போராளிகள் தாங்கள் மெக்காவைத் தாக்க ஏழுகணைகளை உபயோகித்தனர் என்ற செய்தியை மறுத்துள்ளனர்[7]. இரானும் தங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று மறுத்துள்ளது. மெக்காவில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் [40 miles] தூரத்தில் அந்த ஏவுகணையை சவுதி நாட்டின் விமானப்படைகள் தடுத்துநிறுத்தி, தாக்கி அழித்ததாகவும் சவுதி அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது[8]. சவுதி அரேபியா அமெரிக்க பேட்ரியாட் ஏவுகணைகளை [U.S.-made, surface-to-air Patriot missile batteries] உபயோகித்தனர். இந்தத் தாக்குதலை உறுதி செய்துள்ள ஹவுத்தி போராளிகள், புனித நகரமான மெக்கா மீது தாக்குதல் தொடுக்கவில்லை என்றும் பரபரப்பாக இயங்கிவரும் ஜெட்டா விமான நிலையத்தைத்தான் குறித்து தாக்குதல் நடத்தியதாகவும் கூறியுள்ளது[9]. மொஹம்மது அல்-பெகைதி [Mohammed al-Bekheity] என்ற ஹௌதி தலைவர், “நாங்கள் மெக்காவுக்கு குறிவைக்கவில்லை. நாங்கள் மக்கம் மற்றும் புனித இடங்களை தாக்குவதில்லை,” என்றார்[10]. இதைப் பற்றி இப்பொழுது சர்ச்சை எழுந்துள்ளது[11].

ஏமனின் இரானிய எதிர்ப்பு: யாமெனி பிரத மந்திரி அஹமது ஒபெய்த் பின் இத்தகைய தாக்குதலை ஊக்குவிக்க இரானின் மீது குற்றஞ்சாற்றியுள்ளார். “ஏமனில் மார்ச்.26, 2015 அன்று யுத்தம் ஆரம்பித்தது. ஹௌதி போராளிகள் தங்களது அரசியல் போட்டியாளர்கள் மற்றும் அரசிற்கு விரோதமாக போரில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு இரான் அல்லது பெய்ரூட்டிலிருந்து அவர்களுக்கு ஆதரவு கிடைத்து வருகிறது,” என்று பின் தகர் பிரெஞ்சு தூதுவர் ஏமன் கிரிஸ்டியன் திஸ்தியை சந்தித்தபோது கூறினார். இரானின் புரட்சி பாதுகாப்புப் படை [Iranian Revolutionary Guard Corps (IRGC)] மற்றும் ஹிஜ்புல் [Hezbollah] இவ்வாறு செயல்படுவது, அரசியல் திட்டத்தை இவ்வாறு புரட்சியாளர்களின் மூலம் தீர்த்துக் கொள்வதாகத் தெரிகிறது.

இரான் நீர்போக்குவரத்து பாதைகளை பிடித்துக் கொண்டு ஆதிக்கம் செல்லுத்த விரும்புகிறாதா?: இரான் பப் அல்-மன்டப் குடாவை [Bab al Mandab Strait] தன்னுடைய ஆதிக்கத்தில் கொண்டு வரவே இத்தகைய செயல்களை செய்து வருகின்றது. ஏனெனில், அதனை பிடித்து விட்டால், சூயஸ் கால்வாயை ஆதிக்கம் செய்யும் நிலை வந்துவிடும்[12]. ஹோர்மூஸ் கால்வாயையும் [Strait of Hormuz] பிடித்து விட்டால், அரேபிய நாடுகளிலிருந்து செல்லும் கப்பல்களை இரன் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடும்[13]. அமெரிக்கா மற்றும் சௌதி அரேபியா பரஸ்பர உடன்படிக்கை 1945லிருந்து 71 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இத்தகைய நீர்வழி ஆதிக்கத்தின் மூலம், இரான் அந்த ஒப்பந்தத்தை வலுவிழக்கத்தான் திட்டம் தீட்டுகிறது என்று அமெரிக்கா குறை கூறுகிறது[14]. இரான் அமெரிக்காவிற்கு எதிராக தீவிரவாதத்தை உபயோகப்படுத்துகிறது என்று வாஷிங்டன் போஸ்ட் குறைகூறுகிறது.
© வேதபிரகாஷ்
29-10-2016

[1] மாலைமலர், மெக்கா நகரம் மீது ஹவுத்தி போராளிகள் ஏவுகணை தாக்குதல்: சவுதி அரேபியா குற்றச்சாட்டு, பதிவு: அக்டோபர் 28, 2016 11:08
[2] http://www.maalaimalar.com/News/TopNews/2016/10/28110835/1047538/Saudi-Arabia-says-Yemen-rebels-fire-missile-toward.vpf
[3] The Houthis, known as Ansar Allah, or “Supporters of God” (who doesn’t claim to be that in the Middle East?), belong to the Zaydi sect, and are Shia-lite, maintaining some theological similarities with Sunnis.
[4] As a result of Washington’s support for Saudi ruthlessness, Yemen has suffered desperately. Roughly 10,000 people, including some 4100 civilians, have died, 3.2 million people (12 percent of the population) have been displaced, pestilence (in the form of Cholera) has hit the capital, and famine approaches, with more than half the population “food insecure,” according to the UN World Food Program. Eight in ten people need some outside aid.
http://www.cato.org/publications/commentary/america-should-quit-saudi-arabias-war-yemen-senseless-killing-must-stop
[5] CATO Institute, America Should Quit Saudi Arabia’s War in Yemen: the Senseless Killing Must Stop, By Doug Bandow, This article appeared in “Forbes” on October 25, 2016.
[6] http://www.cato.org/publications/commentary/america-should-quit-saudi-arabias-war-yemen-senseless-killing-must-stop
[7] The Washington times, Iran’s proxy missile attacks- The Islamic regime seeks control of Middle East waterways, By James A. Lyons – – Tuesday, October 25, 2016
[8] தமிழ்.ஒன்.இந்தியா, மெக்கா மீது ஏவுகணை ஏவிய ஏமன் தீவிரவாதிகள்– தடுத்து அழித்த செளதி அரேபியா, By: Amudhavalli, Updated: Friday, October 28, 2016, 20:58 [IST]
[9] http://tamil.oneindia.com/news/international/yemeni-rebels-attack-holy-mecca-265932.html
[10] Mohammed al-Bekheity, a Houthi leader, denied that the missile targeted Mecca. “We do not target civilians and, in turn, we would not target holy areas,” he said.
http://www.aljazeera.com/news/2016/10/yemens-houthis-accused-firing-missile-mecca-161028132859767.html
[11] Al-Jazeera, Yemen’s Houthis accused of firing missiles at Mecca, October.28.11.40 pm
[12] http://www.washingtontimes.com/news/2016/oct/25/irans-proxy-missile-attacks/
[13] IBTimes, Yemen Rebels Target Saudi Holy City Of Makkah; Missile Intercepted And Destroyed, by Marcy Kreiter, 10/27/16 AT 8:48 PM.
[14] http://www.ibtimes.com/yemen-rebels-target-saudi-holy-city-makkah-missile-intercepted-destroyed-2438403
பிரிவுகள்: அன்சாரி, அன்சார், அப்துல்லா, அமைதி, அரேபியா, அலி, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்- பதர், அல்லா, இமாம் அலி, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐசில், ஐசிஸ், ஐஸில், காபா, காபிர், குடியேறுதல், குண்டு தயாரிப்பு, குண்டுவெடிப்பு, சலாபிசம், சலாபிஸம், சவுதி, சவுதி அரேபியா, சவூதி அரேபியா, Uncategorized
Tags: அன்சாரி, அன்சார், இராக், இரான், இஸ்லாம், ஏமன், சவுதி, சவுதி அரேபியா, சூடான், ஜிஹாத், ஜோர்டான், துருக்கி, மெக்கா, மெதினா, ஹௌதி
Comments: Be the first to comment
செப்ரெம்பர் 27, 2015
அல்–உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில் “ஹாலிவுட் ஸ்டைலில்” போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம் – என்கவுண்டர் அச்சமும், ஹேபஸ் கார்பஸ் பெட்டிஷனும் முன்பே நடந்த கதை தான்!

முஸ்லிம்கள் கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
புழல் சிறை மோதல் எதற்காக, என்கவுன்டருக்கான ஒத்திகையா…?- பிலால் மாலிக் சகோதரர் சந்தேகம்: பிலால் மாலிக் உள்ளிட்டவர்களை என்கவுன்டர் செய்யவே, புழல் சிறையில் போலீசார் மோதல் நாடகம் நடத்தி இருக்கலாம் என பிலால் மாலிக்கின் சகோதரர் கஜினி முகம்மதுசந்தேகம் எழுப்பியுள்ளார்[1]. “போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், பண்ணா இஸ்மாயில் உள்ளிட்டோர் இவர்கள் உயர் பாதுகாப்பு சிறையில் தனியாக அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் 25-09-2015 அன்று ஜெயிலர் இளவரசனை இவர்கள் தாக்கியதாகவும், அவரை காப்பாற்ற சென்ற வார்டன்கள் முத்துமணி, ரவிமோகன், செல்வின் தேவராஜ் ஆகியோர் அவர்களை திருப்பி தாக்கியதாகவும், பதிலுக்கு வார்டன்களை தீவிரவாதிகள் தாக்கியதாகவும் சிறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் காயம் அடைந்த சிறை அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறைத்துறை ஏடிஜிபி திரிபாதி, இரவு சிறைக்கு சென்று கைதிகளிடம் சமாதானம் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், டி.வியில் காயம்பட்ட சிறை அதிகாரிகளைத்தான் காட்டுகிறார்களே தவிர, போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், இஸ்மாயில் இவர்களை காட்டவில்லை”.

Five arrested in Melappalayam – Musims protest, argue
ஆயுதங்களுடன் இருக்கும் சிறை அதிகாரிகளை தாக்கும் அளவுக்கு நமது காவல்துறை பலவீனமானதா?: இப்படி கேள்வி கேட்டு தொடர்கிறார் கஜினி முகமது, “சிறைக்குள் வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள இவர்கள் எப்படி ஒன்றாக சேர முடியும். அப்படியே சேர்ந்தாலும் ஆயுதங்களுடன் இருக்கும் சிறை அதிகாரிகளை இவர்களால் தாக்க முடியுமா? அவ்வளவு பலவீனமானதா நமது காவல்துறை?’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்[2]. புழல் சிறை அதிகாரி இளவரசன் மிகவும் மோசமாக நடந்து கொள்வதாக குற்றம்சாட்டியுள்ள கஜினி முகம்மது[3], இந்த வழக்கை மெதுவாக நடத்தி வருவதாகவும், இருக்கிற கொலை வழக்கு அனைத்தையும் இவர்கள் மீது போட்டுள்ளதாகவும் போலீசார் மீதும் குற்றம் சாட்டியுள்ளார்[4]. இப்போது சிறையில் நடந்திருப்பதாக சொல்லப்படும் தாக்குதலில் போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், இஸ்மாயில் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கலாம் என கஜினி சந்தேகம் எழுப்பியுள்ளார். மேலும், இவர்களை சிறைக்கு மாற்றுவதாக அறிவித்திருப்பது வழக்கை நடத்த முடியாமல் என்கவுன்டர் செய்ய திட்டமிட்டிருப்பதுபோல் தெரிகிறது. தமிழக அரசு, கைதிகளை ஒரே மாதிரியாக அணுகி அவர்களை காப்பாற்ற வேண்டும்” என்றும் கஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்[5]. மாதம் ஒருமுறை இவர் சென்று வருவதினால், இவருக்கு மேலும் விசயங்கள் தெரியும் போலிருக்கிறது.
என்கவுண்டர் அச்சமும், ஹேபஸ் கார்பஸ் பெட்டிஷனும்: பா.ஜ.க. மூத்த தலைவர் எல். கே. அத்வானி கொலை முயற்சி வழக்கில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள பக்ருதீனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது[6], ஆனால் தள்ளுபடி செய்யப்பட்டது. தீவிரவாதிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு, இத்தகைய பீதியைக் கிளப்பி விடுவது வழக்கமான வேலையாக இருக்கிறது. ஆனால், குண்டு வைத்தது உண்மை, அத்தகைய தீவிரவாத எண்ணம் உள்ளது உண்மை, அமைதியைக் குலைக்க வேண்டும் என்ற திட்டம் தீட்டியது உண்மை; கொலைகள் நடந்திருப்பது உண்மை; குண்டுகள் வெடித்திருப்பது உண்மை; அப்பாவி மக்கள் இறந்திருப்பது உண்மை; எல்லாவற்றையும் மறைத்து ஒன்றுமே இல்லை, நடக்கவில்லை என்று சொல்லித் தப்பித்துக் கொண்டால், நடந்தது நடக்கவில்லை என்றாகுமா?[7]. நீதிமன்றத்திலேயே, இவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் கொடுக்கப்படுகிறது.
நீதிமன்றத்தில் சட்டமீறல்கள்: அத்வானியைக் கொலை செய்ய திட்டமிட்ட ஜிஹாதிகளுள் ஒருவன் ஜாஹிர் ஹுஸைன் என்ற குற்றவாளி நீதிமன்றத்தில் செய்த கலாட்டாவால் பரப்பரப்பு ஏற்பட்டது. மாஜிஸ்ட்ரேட் முன்பு கொண்டுவரப்பட்ட அவன் பிளேடினால் தனது கழுத்தை அறுத்துக் கொள்ள முயன்றான். உடனே, போலீஸார் தடுத்து அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறிய காயத்துடன் அவன் தப்பினான். கடந்த ஏப்ரல் மாதம் கூட இதே மாதிரி தற்கொலை முயற்சியில் அவன் ஈடுபட்டான்[8]. அப்பொழுது தன்னை விடுவிக்குமாறு முறையீடு செய்திருந்தான். ஆனால் நீதிபதி அவனது மனுவை தள்ளுபடி செய்தார்[9]. அதாவது, இவ்வாறு கலாட்டா செய்வதே அவர்களுக்கு வாடிக்கையாக இருக்கிறது என்பதற்காக எடுத்துக் காட்டப்படுகிறது. நீதிமன்றத்தையே மதிக்காதவர்கள் சிறைச்சாலையை, சிறை போலீஸாரை எப்படி மதிப்பர்?

gulshan-kumar-killer-Abdul Rauf Merchant
முகமது அனிபா டிஎஸ்பியைத் தாக்குதல் (08-07-2013): திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள கட்டகாமன்பட்டி எடமலையான் கோவில் அடிவாரத்தில் பதுங்கியிருந்த அத்வானி செல்லும் பாதையில் குண்டு வைத்த வழக்கில் முகமது அனீபாவை, டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் திங்கள்கிழமை 08-07-2013 அன்று மடக்கி பிடித்தனர்[10]. அப்பொழுது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்த முகமது அனீபா, டி.எஸ்.பி. கார்த்திகேயன் மீது வீசினார். இதில் டி.எஸ்.பி. கார்த்திகேயன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்[11]. இதனால் அந்த இடத்தில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவனை மடக்கி பிடித்த போலீசார், அவனிடம் வெடிமருந்து, ஜெலட்டின் குச்சிகள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். வத்தலகுண்டு காவல்நிலையத்தில், தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், வெடிமருந்து மற்றும் ஜெலட்டின் குச்சிகள் வைத்திருந்தாகவும், இந்து முன்னணி தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டு தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சி செய்தது உட்பட 5 வழக்குகள் முகமது அனீபா மீது டி.எஸ்.பி. கார்த்திகேயன் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ளது[12]. அன்று டி.எஸ்.பியை தாக்கியவர்களின் மனப்பாங்குதான், புழல் சிறையில் போலீஸாரைத் தாக்கியவர்களின் மனப்பாங்குடன் இயைந்து போகிறது. குற்றவாளிகள் மேன்மேலும் குற்றங்களை செய்து கொண்டே இருந்தால், ஒன்றும் செய்ய முடியாது என்ற போக்கும் அவர்களிடையே உள்ளது.
© வேதபிரகாஷ்
27-09-2015
[1] ஒன்.இந்தியா, புழல் சிறை மோதல் எதற்காக, என்கவுன்டருக்கான ஒத்திகையா…?- பிலால் மாலிக் சகோதரர் சந்தேகம், Posted by: Jayachitra, Published: Sunday, September 27, 2015, 12:21 [IST].
[2] விகடன்.காம், புழல் சிறை மோதல் என்கவுன்டருக்கான நாடகமா? சந்தேகம் எழுப்பும் பிலால் மாலிக் சகோதரர், Posted Date : 16:05 (26/09/2015)
Last updated : 16:05 (26/09/2015).
[3] புழல் சிறைக்கு இவர்கள் மாற்றப்பட்டதில் இருந்து சிறை அதிகாரி இளவரசன் ரொம்பவும் மோசமாக நடந்து கொள்கிறார். நான் மாதம் ஒரு தடவை பார்க்க செல்வேன். என்னையே கடுமையாக திட்டுவார். http://www.vikatan.com/news/article.php?aid=52934
[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/bilal-malik-s-brother-questions-puzhal-prison-clash-incident-236563.html
[5] http://www.vikatan.com/news/article.php?aid=52934
[6] Claiming himself to be a friend of Fakruddin, M Abdulla of Chennai alleged that he was arrested by CB-CID SIT on November 2 and was being kept in “illegal” custody in violation of Article 21 and 22 of the Constitution.
http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=5580797
[7] https://islamindia.wordpress.com/2011/11/11/plan-to-kill-advani-arrest-haeabus-corpus-petition-legal-warangles/
[8] http://zeenews.india.com/news/tamil-nadu/accused-in-advani-bomb-planting-case-causes-flutter-in-court_861146.html
[9] http://www.business-standard.com/article/pti-stories/accused-in-advani-bomb-planting-case-causes-flutter-in-court-113070901058_1.html
[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=753374
[11] http://www.dnaindia.com/india/1858935/report-one-more-case-filed-for-trying-to-plant-bomb-during-lk-advani-s-yatra-in-tamil-nadu-in-2011
[12] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=103304
பிரிவுகள்: அப்துல்லா, இஸ்மாயில், என்கவுன்டர், கஜினி, கஞ்சா, கலவரம், குற்றச்சாட்டு, கைதி, செல்போன், ஜிஹாதித்தனம், ஜிஹாத், ஜெயிலர், ஜெயில், பண்ணா, புழல், மத-அடிப்படைவாதம், முகமது, முன்னா, வார்டன்
Tags: அல் - உம்மா, அவமதிக்கும் இஸ்லாம், ஆம்பூர், இந்திய முஜாஹித்தீன், இமாம், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஊடகத் தீவிரவாதிகள், கலவரம், குண்டு, குண்டு வெடிப்பு, குரான், கைதி, கைது, கொலை, கொலைவெறி, சிறை, ஜெயிலர், ஜெயில், புழல், வார்டன்
Comments: Be the first to comment
திசெம்பர் 17, 2013
தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகள் உருவானது, மாறியது, கூட்டணியில் செயல்பட்டது (1960-2013) – பிஜேபியுடன் முஸ்லிம் கட்சி கூட்டு பற்றி ஒரு அலசல் கட்டுரை (2)
அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் பிஜேபிக்கு ஆதரவு கொடுப்பது[1]: அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் கட்சியின் தலைவர் சதக்கத்துல்லா, சென்னை பா.ஜனதா அலுவலகமான கமலாலயத்தில் வெள்ளிக்கிழமை (13-12-2013) நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் பொன். ராதாகிருஷ்ணனிடம் தனது கட்சியின் ஆதரவு கடிதத்தை வழங்கினார்[2]. இந்த நிகழ்ச்சியின் போது, காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன், பா.ஜனதா மாநில செயலாளர் வானதி சீனிவாசன், செயற்குழு உறுப்பினர் கே.டி. ராகவன் ஆகியோர் உடன் இருந்தனர். இது குறித்து பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
“பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சதக்கத்துல்லா தலைமயிலான அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் இணைந்துள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடிக்கு ஆதரவாக முஸ்லிம் மக்களிடம் அவர்கள் ஆதரவு திரட்டுவார்கள். டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கிய “வீடுதோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை” என்ற பாத யாத்திரைக்கு தமிழகத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 700-க்கும் அதிகமான கிராம பஞ்சாயத்துக்களில் இந்த யாத்திரை நிறைவு பெற்றுள்ளது. வீடுகள் தோறும் சென்று மக்களை நேரடியாகச் சந்திக்கும் போது மக்களின் பிரச்னைகள், கிராமங்களின் பிரச்னைகளை அறிந்து கொள்ள முடிகிறது. இந்த பாத யாத்திரை வரும் 22-ஆம் தேதி வரை நடைபெறும்”, இவ்வாறு அவர் கூறினார்[3]. |
“அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் இந்த நிலையில் பாரதிய ஜனதா கூட்டணியில் சேர்ந்துள்ளது[4] தமிழகத்தில் மட்டுமல்ல தேசிய அளவிலும், முஸ்லிம்களின் அணுகுமுறையில் மாற்றம் இருப்பதைக் காணமுடிகிறது. ஆனால், முஸ்லிம்கள் மற்ற விசயத்தில் ஜாக்கிரதையுடன் தான் பிஜேபியை அணுகுவார்கள் என்பதை அறியலாம். அப்பாஸ் நக்வி போன்ற முஸ்லிம் தலைவர்கள் பிஜேபியில் நெடுங்காலமாக இருந்து வருகின்றனர். ஆனால், திராவிடப் பின்னணியில், ஒரு முஸ்லிம் கட்சி, பிஜேபியுடன் எப்படி செயல்படும் என்று பார்க்கவேண்டும்”, என்று முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்[5]. பொதுவாகவே, முஸ்லிம்கள் தங்களது வட்டட்த்தில் இருந்து வெளியே வரமாட்டார்கள், வந்தால் இருபக்கத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். |
தமிழ்நாட்டில் முதல் முறையாக முஸ்லிம் கட்சி ஒன்று பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்திருப்பது, அந்த கட்சியினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது[6]. தமிழ்நாட்டில் முதல் முறையாக முஸ்லிம் கட்சி ஒன்று பாஜகவுக்கு ஆதரவு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது[7].
இந்திய யூனியன் முஸ்லிம் லீகிலிருந்து யாரும் பிரிந்து செல்லவில்லை, சதக்கத்துல்லா என்ற நபர் லீகை சார்ந்தவரும் அல்ல: பாரதீய ஜனதா கட்சியை முஸ்லிம் சமூகத்தில் எவரும் ஆதரிப்பார்கள் என்பது பகல் கனவே என குறிப்பிட்டுள்ள முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை இது போன்ற விஷமத்தனமான செயல்களுக்கு பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இருந்து ஒரு நபர் பிரிந்து சென்று புதிய கட்சியை தொடங் கியுள்ளதாகவும், அது நாடாளு மன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி கூட்டணியை ஆதரிக்க போவதாகவும் சில நாளிதழ்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. அச்செய்திகளில் குறிப்பிடப் பட்டுள்ளவாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீகிலிருந்து எவரும் பிரிந்து செல்லவும் இல்லை – சதக்கத்துல்லா என்ற நபர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை சார்ந்தவரும் அல்ல. |
1972ல் முகமது இஸ்மாயில் இறந்தபோது, திமுக இரண்டாக உடைந்தது, அதிமுக உருவானது. அதேபோல, “இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்” இரண்டாகி, “இந்திய தேசிய லீக்” [Indian National League (INL)] உருவானது. இவற்றிற்கு முறையே அப்துல் சமத் மற்றும் அப்துல் லத்தீப் தலைவர்களாக இருந்தனர். அப்துல் லத்தீப் கருணநிதிக்கு வேண்டியவராக இருந்தார். எப்படியாகிலும், இரண்டும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு காலம் தள்ளின. எனவே, லீக் ஒரு தனித்துவம் வாய்ந்த கட்சி அல்லது குழுமம் என்று ஒப்புக்கொள்ள முடியாது. |
இந்த தகவல் அவரை பா.ஜ.க அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ள காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் அவர்களிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலை[8]மையகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது[9].
பாஜகவுக்கு ஆதரவு கடிதம் கொடுத்த “சதாம் என்.கே.எம். சதக்கத்துல்லா” எங்கள் ஆள் இல்லை: “சதாம் என்.கே.எம்.சதக்கத்துல்லா, நிறுவனத் தலைவர், அகில இந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம், 66 மரைக்காயர் லெப்பை தெரு, மண்ணடி சென்னை -1 என முகவரியிட்டு 9677843231 என தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டு லெட்டர் பேட் தயாரித்து பா.ஜ.க.,வுக்கு ஆதரவுக் கடிதம் அளிக்கப் பட்டிருப்பதாக எங்களிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பொறுத்த வரை மாநில மாவட்ட நிர்வாகிகளில் என்.கே. எம்.சதக்கத்துல்லா என்ற பெயரில் ஒருவரும் இல்லை. எங்களின் துணை அமைப்புகளான முஸ்லிம் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை, சுதந்திர தொழிலாளர் யூனியன் போன்றவற்றிலும் இந்த பெயரில் எந்த நிர்வாகியும் இல்லை. |
ஒரு முஸ்லிம் இவ்வாறு செய்யலாமா, கூடாதா என்ற நிலையை உருவாக்க பார்க்கிறார்கள். ஆனால், ஏற்கெனவே தமிழக முஸ்லிம்கள் திராவிடக் கட்சிகளுக்குப் பிரிந்து தான் ஓட்டளிக்கின்றனர், ஆனால் பலன்களை மட்டும் அனுபவித்து வருகின்றனர். |
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை பயன்படுத்தியது உண்மையாக இருக்குமே யானால் அது பாரதீய ஜனதா கட்சி தலைமையை ஏமாற்றுவதற்காக செய்யப்பட்ட திட்ட மிட்ட மோசடி செயலேயாகும்.
இது போன்ற காரியங்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை மோசடியாக பயன் படுத்துவோர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும்: மதசார்பற்ற, சமூக நீதியை நிலைநாட்டும் ஜனநாய சக்திகளே நாட்டை ஆளும் வகையில் நாடாளுமன்ற தேர்தலில் அவர்களை ஒருங்கிணைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளது. ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம் சமுதாயமும் இத்தேர்தலில்
ஒருமுக முடிவெடுக்க வலியுறுத்தும் வகையில் எதிர் வரும் 28 – ம் தேதி திருச்சியில் மாபெரும் மாநாட்டையும், இளம்பிறை எழுச்சி பேரணியையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்துகிறது. அதில் பள்ளிவாசலை மையமாகக் கொண்ட 12 ஆயிரம் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள், உலமா பெருமக்கள் பல்லாயிரக் கணக்கில் கலந்து கொள்கின்றனர். |
ஒட்டு மொத்தமாக முஸ்லிம்கள் இவ்வாறு ஜமாத் போன்ற முறையில் தீர்மானம் செய்யலாம், ஆனால், எப்படி இந்தியக் கட்சிகளில் முஸ்லிம்கள் பிரிந்து கிடக்கின்றனரோ, அதே போல, தமிழக முஸ்லிம்களும் தங்களது விருப்பங்களுக்கு ஏற்ப அரசியல் கட்சியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். திராவிடக்கட்சிகளை ஆதரிக்கும் போது, அவ்வாறுதான் செய்து வருகிறார்கள். |
இந்நிலையில் பா.ஜ.க.,விற்கு முஸ்லிம் சமுதாயம் ஆதரவளிக்கும் என்று வெளிவரும் செய்தி பகல் கனவேயாகும். இதுபோன்ற காரியங்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை மோசடியாக பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் படும்.” இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
சையது இக்பால், இந்திய தவ்ஹித் ஜமாத் பொது செயலாளரின் கடுமையான தாக்கு[10]: ஆள் கிடைக்கமால் அனாதை ஒருவனை பிடித்து மாமா மணியன் செய்த மாமா வேலை தான் இந்த பிஜே பி உடன் சேருந்த முஸ்லிம் கட்சி நாடகம் இந்திய தவ்ஹித் ஜமாத் பொது செயலாளர் இக்பால் சத்தியம் தொலைக்காட்சியில் பரபரப்பு பேச்சு:
சத்தியம்டிவி: இப்படி முஸ்லிம் கட்சி பிஜேபி க்கு ஆதரவை கொடுத்ததை நீங்கள் எப்படி பார்க்கிரிர்கள் ஆனால் உங்கள் முஸ்லிம் அமைப்புகளின் வெப் சைட்டுகள் எல்லாம் தேடி விட்டோம் இப்படி ஒரு இயக்க பெயரை இல்லையே !!! |
சையதுஇக்பால்அவர்கள்: நான் நீண்ட அரசியல் வரலாற்றை நான் படித்தவன் .பயணித்தவன் என்ற முறையில் தமிழ் நாட்டில் இதுவரை இப்படி ஒரு முஸ்லிம் அமைப்பு பெயரைவோ? இப்படி அயோக்கிய நபரையோ? பார்த்தது இல்லை. மாறாக கந்தியாவதி போல் தன்னை காட்டி கொண்டு பிஜேபிக்கு ஆள் பிடிக்கும் புரோக்கராக மாறியுள்ள மணியன்! தமிழ் நாடு முழுவதும் சுற்றி பார்த்தார் யாருமே பிஜேபிக்கு ஆதரவு அளிப்பது போல் இல்லை. அதனால் ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி வேண்டும் என்று அநாதை ஒருவரை பிடித்து வந்து முஸ்லிம் இயக்கம் ஆதரவு என்று இப்படி ஈன வேலையே பார்த்து உள்ளார். |
நரபலி மோடியால் அல்லாஹ்வை உண்மையாக வணங்ககூடிய உண்மையான முஸ்லிம்களை ஆதரவு என்ற வலையில் வீழ்த்த முடியாது: அவரால் இல்லை நரபலி மோடியால் அல்லாஹ்வை உண்மையாக வணங்க கூடிய உண்மையான முஸ்லிம்களை ஆதரவு என்ற வலையில் வீழ்த்த முடியாது. அப்படி ஒரு முஸ்லிமும் ஆதரவு தர மாட்டான். உதாரணதுக்கு ததஜ என்ற அமைப்பில் உள்ள ஒரு நிருவாகி 10 %
இட ஒதிக்கீடு அளித்தால் பிஜேபிக்கு ஆதரவு அளிப்போம் என்று அறிவிப்பு செய்தற்கு முஸ்லிம் சமுதயாத்தில் இருந்து பெரிய கண்டனங்கள் எழுந்தன. அதனால், நாங்கள் பாராளமன்றத்தில் இன்ஷா அல்லாஹ் யாரை அமரவைப்பது என்பதை விட யாரை அமர விடகூடாது என்ற விசயத்தில் தெளிவாக இருக்கிறோம். முஸ்லிம் லீக் தலைவர் எங்கள் அமைப்புக்க களங்கம் விளைவித்து விட்டதாக அந்த அயோக்கியன் சதக்கத்துல்லாவை சொல்லி உள்ளார் நாங்கள் சொல்லுகிறோம். |
ஆக, பேரம் பேசி பாஜகவுடன் கூட்டு சேர முஸ்லிம்கள் தயாராக உள்ளார்கள் என்பது நிதர்சனமாகத்தான் உள்ளது. ஆகவே, யாரை பிரதம மந்திரியாக்க வேண்டும் என்ற சக்தியே எங்களிடம் தான் உள்ளது என்று ஆணவத்துடன் இப்படி பேசுவது, மற்ற இந்தியர்களும் கவனிக்கத்தான் செய்வார்கள். கடவுளின் பெயரால், ஆளுக்கு ஆள் ௐஇளம்பி விட்டால், செக்யூலரிஸ நாட்டில், மற்றவர்கள் ஒன்றும் செய்ய முடியாதே! |
அவன் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் களங்க படுத்தும் வேலையே மணியன் செய்ய தொடங்கி உள்ளார் அதுவும் இல்லாமல், இந்த நாடகம் எப்படி மோடி குல்லாவும் புர்க்காவும் விலைக்கு வாங்கி கூட்டத்தை கூட்டி முஸ்லிம்கள் ஆதரவு நாடகத்தை நடத்தினாரோ அதன் தொடர்ச்சி இது அந்த அயோக்கியனை ஒரு போதும் பிரதமராக முஸ்லிம்கள் வர விட மாட்டோம்”, என்று கடுமையாக பதில் அளித்துள்ளார்[11].
வேதபிரகாஷ்
© 17-12-2013
[3] தினமணி,பாஜககூட்டணியில்முஸ்லிம்முன்னேற்றக்கழகம், By dn, சென்னை, First Published : 14 December 2013 03:29 AM IST
[6] மாலைமலர், தமிழ்நாட்டில்முதல்முறையாகபா.ஜனதாகூட்டணியில்முஸ்லிம்கட்சி: பொன். ராதாகிருஷ்ணன்முன்னிலையில்சேர்ந்தது, பதிவு செய்த நாள்: சனிக்கிழமை, டிசம்பர் 14, 10:21 AM IST.
[9] முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ், முஸ்லிம்லீக்பெயரைக்களங்கப்படுத்துவோர்மீதுசட்டநடவடிக்கை: எச்சரிக்கை!, 16-12-2013, 2:16 PM
பிரிவுகள்: ஃபத்வா, அடையாளம், அப்துல்லா, அல் - உம்மா, இந்தியத் தன்மை, இஸ்லாமிய இறையியல், காஃபிர், காங்கிரஸ், காயிதே மில்லத், சவுதி, சவுதி அரேபியா, சையது இக்பால், ஜிஹாதி, திராவிட நாத்திகர்கள், பள்ளிவாசல், பிரசாரம், பிரச்சாரம், முஸ்லீம் தன்மை
Tags: ஃபத்வா, இந்திய யூனியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், கருணாநிதி, கூட்டணி, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜெயலலிதா, தமிழகம், முஸ்லீம்கள்
Comments: 1 பின்னூட்டம்
திசெம்பர் 30, 2011
முஸ்லீம்கள் மின்சாரத்தை திருடலாமா- அதற்கு ஒரு பத்வா போடலாமா – கேட்பது உமர் அப்துல்லா!
இஸ்லாத்தில் பத்வாக்கள்: இஸ்லாத்தில் பலவிதமான விஷயங்களுக்கு பத்வா போடுவது வழக்கம். “நாயை வைத்துக் கொள்ளலாம, கூடாதா, புகைப்படம் எடுக்கலாமா, கூடாதா, மனைவியை மருத்துவர் தொட்டு சிகிச்சை செய்யலாமா, கூடாதா”, ……….என்று இப்படி பல கேல்விகள் எழும். அதற்குஇ முல்லாக்கள், இமாம்கள் மற்ற குருமார்கள் விளக்கம் கொடுத்து பத்வா போடுவார்கள். பிறகு, முஸ்லீம்கள் அதன்படித்தான் நடக்க வேண்டும். சில நேரங்களில், பத்வா கொடுத்தவரை விட, பெரிய-அதிகாரமுள்ளவரிடம் சென்று வேறு விதமான பத்வாக்களை வாங்கி வருவதும் உண்டு.

மேலே காட்டப் பட்டுள்ள எலக்ட்ரானிக் கருவி ரூ.2,000/-ற்கு விற்கப்படுகிறது. இதனால், மின்சார உபயோகத்தை குறைத்துக் காட்டும்.
மின்சாரம் திருட்டிற்கு பத்வா போடலாமா? மீர்வாயிஸ் உமர் பரூக், இந்திய எதிருத்துவ ஹுரியம் மாநாடு என்ற இயக்கத்தின் தலைவர். தேவையில்லாமல், இந்தியா இவருக்கு அதிக சலுகைகள் கொடுத்து வருகிறது. ஆனால், அந்த ஆளோ அதைப் பற்றி கவலைப் படாமல், தான் ஏதோ ஒரு அந்நிய நாட்டில் இருப்பது போல பேசுவது தான் வழக்கம். அதற்கு அருந்ததி ராய் போன்ற கொள்கையற்ற பேர்வழிகளும் அதிகமாக கொஞ்சிக் குலவி ஆதரித்து வருகின்றனர் (இதற்கு ஆதாரமாக புகைப்படங்களுடன் கூடிய எனது இதர பதிவுகளை பார்க்கவும்). இப்பொழுது, ஜம்மு-காஷ்மீர் முதல் மந்திரி, பஉமர் அப்துல்லா கேட்டுள்ளார்[1], “ஏனய்யா, முஸ்லீம்கள் மின்சாரத்தைத் திருடுகிறார்களே. இப்படி செய்தால் எப்படி நமது மாநிலம் உருப்படும். அடுத்த வெள்ளிக் கிழமை தொழுகைக்குப் பிறகு, மின்சாரம் திருடக் கூடாது என்று ஒரு பத்வாவை போடுவீரா?”, என்று கேட்டுள்ளார்.

இப்படி ஒரு கருவியை, மின்சாரகம்பத்திலியே பொறுத்தி மின்சாரத்தைத் திருடுகிறார்கள். அந்த கருவிக்கு குண்டி என்று பெயர். ஒருவேளை, கொக்கி / கம்பி போட்டுத் திருடுவது என்பது தான், இப்படி நவீனமாக செய்கிறார்கள் போலும்!
மின்சாரத்தை யார், ஏன், எதற்குத் திருடிகிறார்கள்? மாநிலத்தில் மின்சார நிலைமைக் குறித்து உரிய அரசாங்கப் பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த போது, அதிகமளவில் மின்சாரத்தை பிரிவினைவாதிகள் முதலியோர் மற்றும் அரசியல்வாதிகள் திருடுவதாகவும், அதனை கேட்க முடியாத நிலையில் அதிகாரிகள் உள்ளதாகவும் அறிவித்தனர்[2]. கேட்டால் “முஸ்லீம்களின் எதிரிகள்” என்றும் அறிவிப்பார்கள் என்று பயப்படுகின்றனர். “மக்கள் ஒத்துழைக்காவிட்டால், மாநில முன்னேற்றத்திற்கு ஒன்றும் செய்ய முடியாது. ரூ 2,000 கோடி அளவிற்கு மின்சாரம் திருடப் படுகிறது. இதனால், மாநிலத்திற்கு பெருமளவில் இழப்பு ஏற்படுகிறது”, என்று உமர் அப்துல்லா கூறுகிறார்[3]. “குண்டி” என்ற உபகரணத்தை உபயோகித்து வெளிப்படைகயாக மின்சாரத்தைத் திருடுகிறார்களாம்[4]. காஷ்மீரத்தில் இதெல்லாம் சகஜமான விஷயமாம்[5]. மின்சார வாரியம் எத்தனை மீட்டர்கள் வைத்தாலும்[6], அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், குண்டி மூலம் மின்சாரத்தை இழுத்து விடுகிறார்கள். இதனால், புதிய யுக்திகளை கையாள விரும்புகிறது[7]. 2003லிருந்து, எல்லோருடைய இல்லத்திற்கும் மீட்டர் வைக்க ஆரம்பித்தது[8]. அதாவது, அதற்கு முன்னர், இலவசமாகவே இணைப்புக் கொடுத்தார்கள். அதாவது, அவர்களாகவே ஏதாவது கட்டினாகல், வாங்கிக் கொள்வார்கள், இல்லையென்றால், “காந்தி கணக்கில்” எழுதி விடுவார்கள் போலும்.

மீட்டரின் இணைப்பை எடுத்து விடிகிறார்களாம், இல்லை ஏதோ பத்து-பதினைந்து நாட்களுக்கு கொடுத்துக் கொள்கிறார்களாம்!
இந்திய விரோதிகளை ஏன் ஊக்குவிக்கிறார்கள்? ரூ 2,000 கோடி மின்சாரத்திருட்டு என்றால், வெறும் ஒரு கோடி அபராதத்தை[9] வசூலித்துள்ளதாம்! குஞ்சு மைனர் ரூ. 5,000/- அட்வான்ஸ் கொடுத்து ரேப் செய்த விவேக் ஜோக் போல உள்ளது. அப்படி 2,000 கோடி அளவிற்கு மின்சாரம் திருடப்பட்டு, தொழிற்சாலைகளுக்கு உபயோகப் படுத்தப் படுகின்றதா என்றால், அதுவும் இல்லை. அந்த மின்சாரம் இந்திய விரோதிகள் – பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் தாம் தீவிரவாத-பயங்கரவாத செயல்களுக்கு உபயோகப் படுத்துகின்றனர். முஸ்லீம்கள், முஸ்லீம்களிடமிருந்தே திருடலாமா? அல்லது, இதில் கூட வேறு ஏதாவது, விவகாரம் உள்ளாதா? டிஜிட்டல் மீட்டர்களையே, செயலிழக்கச் செய்து, குறைவாகக் காட்ட, உபகரணங்களை தயாரித்து ரூ.2,000/-ரற்கு விற்கும் கூட்டத்தை போலீஸாறர் கைது செய்துள்ளனர்[10]. இவர்களும் முஸ்லீம்கள் தாம். பிறகு என்ன நியாயம், தர்மம் எல்லாம் பேசுகிறர்கள் என்று தெரியவில்லை. அதாவது, மதத்தின் மீது குறை கூறவில்லை, ஆனால், அதே நேரத்தில் மதத்தை வைத்துக் கொண்டு தான், இக்காரியங்களை செய்து வருகிறர்கள் என்று கவனிக்க வேண்டியுள்ளது. இல்லையென்றால், ஒரு முஸ்லீம் முதலமைச்சர், மின்சாரத்திருட்டைத் தடுக்க பத்வா போடவேண்டும் என்று ஏன் சொல்லியிருக்கிறார்?
[3] Till people don’t stop indulging in power thefts government won’t be able to help them,” he said. “State is losing Rs 2000 crores to power theft. If there were no power theft, Government would have generated power worth Rs 1500 crores.”
[10] During investigation a gang of three persons Adil Nazir Wani of Batamaloo, Showkat Ahmad Akhoon and Parvez Ahmad Dar of Hazratbal, who were expert in tampering the digital electricity meters, were nabbed. The trio confessed during questioning that they have tampered many digital electric meters in different parts of City for Rs 2000 by consumers to get low cost electricity bills.
www.risingkashmir.com/news/crime-branch-busts…
பிரிவுகள்: ஃபத்வா, அப்துல் கனில் லோன், அப்துல்லா, அரசியல் விபச்சாரம், அரசு நிதி, அல் ஹதீஸ், அவமதிக்கும் இஸ்லாம், அஹ்மது ஒமர் சையீது செயிக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதி ஜிலானி, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இந்தியாவின் மேப், இந்தியாவின் வரைப்படம், இமாம், கம்பி, கலவரம், கல்லடி ஜிஹாத், கல்வத், கல்வீச்சு, காஃபிர், காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, குண்டி, குரூரம், கொக்கி, ஜிஹாத், திருடு, திருட்டு, மின்சாரம், மீட்டர்
Tags: கம்பி, கம்பி போடுதல், குண்டி, கொக்கி, கொக்கி போடுதல், திடுட்டு, திருடு, பத்வா, மின்சாரம்
Comments: 1 பின்னூட்டம்
நவம்பர் 11, 2011
அத்வானியைக் கொல்ல முயற்சி: கைது, கைது இல்லை, சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு, ஆள்கொணர்வு மனு!
அத்வானி கொலை முயற்சி: அத்வானி கொலை முயற்சி வழக்கில் பைப் வெடிகுண்டு வைத்த மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த அப்துல்ரகுமான் என்ற அப்துல்லா (26), மற்றும் மதுரை சிம்மக்கல்லை சேர்ந்த இஸ்மத் (22), ஆகிய இருவரையும் சிறப்புப்படை போலீசார் கைது செய்தனர்[1]. இவர்களிடம் இருந்து குண்டு வைக்க பயன்படுத்திய ஆட்டோ ரிக்ஷா, டூவீலரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் மேலும் பலரை தேடி வருகின்றனர். மொபைல் போன் மூலம் அம்பலம்: ஆலம்பட்டி பகுதியில் மொபைல் போன் உரையாடல்களை கண்காணித்த போலீசார், இவர்கள் இருவரையும் கைது செய்தனர். மதுரை மேலூரைச் சேர்ந்த இமாம் அலியின் கூட்டாளிகளான இவர்கள், மோட்டார் சைக்கிளில் வந்து, பாலத்தின் அடியில் குண்டு வைத்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் புலன் விசாரணை நடக்கிறது.
Two Islamic fundamentalists — Abdul Rahman alias Abdullah (26) of Nelpettai and Ismath (22) of Simmakkal — said to be sympathisers of extremist Imam Ali, were arrested here on Tuesday in connection with the alleged attempt on BJP leader L K Advani’s life during his visit to the temple town last week. Sources said a third person was detained in rural Thirumangalam late on Tuesday night. A hunt is on for their accomplices[2]. |
இருவர் கைது, மற்றவர் தலைமறைவு: மதுரையில் பழக்கடை வைத்திருக்கும் அப்துல் ரகுமான் (சிக்கந்தர் பாட்சாவின் மகன், நெல்பேட்டை) மற்றும் ஆட்டோ ஓட்டுநர் இஸ்மத் (காஜா ஹுஸைனின் மகன், சிம்மக்கல்) ஆகிய இருவரையும் கைது செய்ததாகத் தெரிவித்த சிறப்புப் புலனாய்வுப் பிரிவு ஏடிஜிபி சேகர்[3], முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட இமாம் அலியின் கூட்டாளிகள் இவர்கள் என்றும், அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இவர்கள் மீது ஏற்கெனவே சிறு சிறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்கில் மேலும் சிலரை தேடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்[4].
கேரளாவிற்கு (பெங்களூருக்கு / ஆந்திராவிற்கு) ஏன் தப்பிச் செல்ல வேண்டும்? இதுகுறித்து ஏ.டி.ஜி.பி.,சேகர் கூறுகையில், “இந்த வழக்கில் முதல்கட்டமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எத்தனை பேர் சம்பந்தப்பட்டுள்ளனர், சதித்திட்டம் குறித்த முழுமையான தகவல்கள் இரண்டொரு நாளில் தெரியவரும்,” என்றார். இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் இருவர் கேரளாவிற்கு தப்பியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீஸார் ஆவணங்களில் ஏற்கெனவே அத்தகையவர்களின் பட்டியல் உள்ளது[5]. அவர்களை கைது செய்ய சிறப்புபடை போலீசார் கேரள போலீஸ் உதவியை நாடியுள்ளனர். ஆனால் எங்களூர் அல்லது ஆந்திரபிரதேசத்தில் பதுங்கியிருக்கலாம் என சில ஊடகங்கள் கூறுகின்றன[6]. ஆகவே அத்தகைய குற்றங்கள் செய்பவர், குற்றஞ்சாட்டப்படுபவர், குற்றஞ்சாட்டப்பட்டுள்ளாவர் என அனைவரும் இவ்வாறு பதுங்குவது என்பது வாடிக்கையாகயுள்ள்து தெரிகிறது. அதாவது அவ்வாறு அவர்கள் சென்றால், உதவக்கூடியவர்கள், மறைந்துகொள்ள இடங்கள், வேண்டிய வசதிகள் முதலிய ஏற்பாடுகள் உள்ளன என்று தெரிகிறது. இதில் உள்ள அபாயத்தைக் கவனித்து முஸ்லீம் நண்பர்கள் இத்தகைய தீவிரவாதம், பயங்கரவாதம் இன்னும் இருப்பதை, வளர்வதை, வளர்ந்து வருவதை ஆதரிக்கக் கூடாது; அச்செயல்களில் ஈடுபடுபர்களுக்கு ஆதரவு / உதவி செய்யக் கூடாது. இடம்-பொருள்-பணம் கொடுத்து ஊக்குவிக்கக் கூடாது. இந்திய நாட்டு சரித்திரத்தில் முஸ்லீம்கள் ஆண்ட காலத்தில் இந்துக்களுக்கு என்ன சித்திரவதைகள், அவமானங்கள், தீங்குகள், கஷ்டங்கள், என்னவேல்லாம் நேர்ந்துள்ளதன என்பதனை நினைவில் கொண்டு, தேசப்பிரிவினை ஏற்பட்டுக் கூட இந்தியாவிலேயே இருப்போம் என்று முடிவு செய்த முஸ்லீம்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து இக்கால முஸ்லிம்களை மாற்றவேண்டும். சேர்ந்து வாழ பழகிக்கொள்ளவேண்டும்.
In a breakthrough in the case of pipe bomb that was planted on the scheduled route of BJP leader L.K. Advani, the special investigation team of the CB-CID arrested two persons on Tuesday. The accused were named as Abdul Rahman, 26, son of Sikkander Basha, of Nelpettai in Madurai and Ismath, 22, son of Khaja Hussain, of Simmakkal in Madurai. An official release[7] said the two were arrested for their “involvement in the perpetration of the crime.” Police said Rahman was related to Muslim fundamentalist Imam Ali who was killed in an encounter in Bangalore in September 2002. |
என்கவுண்டர் அச்சமும், ஹேபஸ் கார்பஸ் பெட்டிஷனும்: பா.ஜ.க. மூத்த தலைவர் எல். கே. அத்வானி கொலை முயற்சி வழக்கில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள பக்ருதீனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது[8].
தேடப்பட்டுவரும் குற்றாஞ்சாட்டப்பட்டவரின் நண்பரின் மனு: சென்னை மண்ணடி மூட்டைக்காரன் தெருவை சேர்ந்த எம்.அப்துல்லா தாக்கல் செய்த ஆள் கொணர்வு மனுவில், “நானும், பக்ருதீனும் நண்பர்கள். ஒரு வழக்கு தொடர்பாக சென்னை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினரால் 2003ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். அதே வழக்கில் பக்ருதீன் என்ற போலீஸ் பக்ருதீனும் (35) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றம் அளித்த ஜாமீன் அடிப்படையில் நான் வெளியே வந்துவிட்டேன். இந்த நிலையில், கடந்த 2ஆம் தேதி சென்னை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரால் பக்ருதீன் கைது செய்யப்பட்டார். தற்போது அவர்களின் அலுவலகத்தில் பக்ருதீன் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுள்ளார். அவரை போலி ‘என்கவுண்ட்டர்’ மூலம் சுட்டுக்கொலை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்[9].
தேசிய லீக் கட்சி (முஸ்லீம் அரசியல் கட்சி) எழுதிய கடிதம்: “இதுபற்றி நானும், எனது நண்பரும் இந்திய தேசிய லீக் கட்சியின் தமிழ்நாடு பொதுச்செயலாளர் ஜெ.அப்துல் ரகீமும், தமிழக அரசு மற்றும் டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பி பக்ருதீனை உடனடியாக விடுதலை செய்யும்படி கோரினோம். ஆனால் அவர் விடுதலை செய்யப்படவும் இல்லை. இதுவரை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை. வாழும் உரிமைக்கு எதிராக போலீசார் செயல்பட்டு பக்ருதீனை அடைத்து வைத்துள்ளனர். அதோடு டி.கே.பாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டி நெறிமுறைகளும் மீறப்பட்டுள்ளன. எனவே பக்ருதீனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை வெளியே அனுமதிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்”, என்று மனுவில் கூறியுள்ளார்[10]. இந்த மனு விசாரணைக்கு வந்தது.
போலீஸார் தரப்பில் சொல்லப்பட்டது: போலீஸார் தரப்பில், “பக்ருத்தீன் என்பவர் கைது செய்யப்படவும் இல்லை அல்லது சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்படவுமில்லை. ஆனால், தலைமறைவாகியுள்ளார்[11]. மனுதாரர் வேண்டுமென்றே இத்தகைய மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் கிஞ்சித்தேனும் எந்த ஆதாரமும் இல்லை[12]. அடிப்படையே இல்லாதது, வெறுமையானது, பொய்யானது[13]. ஆகவே தள்ளுபடி செய்யப்படவேண்டும்”. என்று வாதிடப்பட்டது.
நீதிபதிகள் தள்ளூபடி செய்தது: நீதிபதிகள் குறிப்பிட்ட கேள்விகள் கேட்டபோது மனுதாரர் தரப்பில் சரியான பதில் சொல்லப்படவில்லை. பக்ருதீனை போலீசார் கைது செய்ததை மனுதாரர் நேரில் பார்க்கவில்லை. இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு, மனுதாரர் குறிப்பிடும் பக்ரூதினை போலீசாரை கைது செய்யவில்லை என்றும் போலீசார் அவரை கைது செய்ய தேடி வருகிறார்கள் என்றும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் கூறியதை ஏற்றுக்கொள்கிறோம்[14]. மேலும், பக்ருதீன் கைது செய்யப்பட்டதற்கான ஆதாரம் எதையும் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யவில்லை. அதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் அப்துல்லா தாக்கல் செய்த ஆள் கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்[15]. இப்பட்ரி நீதிமன்றங்களில், உள்ள சட்டங்களின் படி, வழக்குகளைத் தொடுத்து திசைத் திருப்பலாம். ஆனால், குண்டு வைத்தது உண்மை, அத்தகைய தீவிரவாத எண்ணம் உள்ளது உண்மை, அமைதியைக் குலைக்க வேண்டும் என்ற திட்டம் தீட்டியது உண்மை; எல்லாவற்றையும் மறைத்து ஒன்றுமே இல்லை, நடக்கவில்லை என்று சொல்லித் தப்பித்துக் கொண்டால், நடந்தது நடக்கவில்லை என்றாகுமா?
[11] In a counter affidavit in response to a Habeas Corpus plea filed by one M Abdullah, Inspector of CB-CID Madurai unit’s SIT R Krishnarajan said Bakrudeen was neither arrested nor detained illegally by the team as claimed by the petitioner but was absconding.
[12] Abdullah had come up with such “a bald and baseless” allegation only to defame CB-CID, the affidavit claimed.
பிரிவுகள்: அஜிராபானு, அடையாளம், அந்நியசெலாவணி, அப்துல்லா, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்லா, இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹித்தீன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியர்களை ஏமாற்றுதல், இந்தியா, இமாம், உள்துறை சூழ்ச்சிகள், காஃபிர், குரூரம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், டிடோனேடர், டெட்டனேட்டர், டெட்டனேட்டர்கள், டைம், த.மு.மு.க, தமிழ்நாடு தௌஹீத் ஜமாத், பலிக்கடா, மனித நேய மக்கள் கட்சி, மனித வெடிகுண்டு, மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம், மனுதாரர், முஜாஹித்தீன், Uncategorized
Tags: அத்வானி, அத்வானி கொலை, அத்வானி கொலை திட்டம், ஆள்கொணர்வு மனு, இமாம் அலி, இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், குற்றச்சாட்டு, கைது இல்லை, கொலை முயற்சி: கைது, சட்டவிரோதமாக அடைத்து வைப்பு, ஜிஹாத், முஸ்லீம்கள்
Comments: 4 பின்னூட்டங்கள்
ஜூலை 17, 2011
மும்பை குண்டுவெடிப்புகளில் லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி – சந்தேகிக்கப்படும் இயக்கங்கள்
குண்டு தயாரிப்பு விவரம்: உள்ளுக்குள்ளே வெடித்து நாசத்தை உண்டாக்கும் குண்டுகளை (IED = Internally explosive Devices) உருவாக்குதல், தயாரித்தல் (Ammonium Nitrate / RDX),”டைமர்” முதலிய மின்னணு கருவிகளை உபயோகித்தல் முதலிய முறைகளைப் பயன்படுத்தலில், குறிப்பிட்ட இஸ்லாமிய தீவிரவாதிக் குழுக்கள் வல்லுனர்களக இருக்கிறார்கள்[1]. கடந்த குண்டவெடிப்புகளில், இத்தகைய முறை கையாளப்பட்டுள்ளது. இப்பொழுதும் அதே முறை கையாளப்பட்டுள்ளது. மொத்தம் டிபன்-பாக்ஸுகளில் வைக்கப்பட்ட ஏழு குண்டுகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது[2]. வழக்கம் போல அவை துணிபைகளில் வைக்கப்பட்டு வெடிக்கப்பட்டுள்ளன. இந்த குண்டுவெடிப்புகள் பீதியை உண்டாக்கவில்லை, மாறாக அழிவை உண்டாக்கவே செய்துள்ளன[3]. லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி (இந்திய இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பு) முதலியோர்களின் கைவேலை தெரிகிறது என்று வெடிகுண்டு வெடிக்கப்பட்ட இடங்களினின்று பெற்ற ஆதாரங்களை வைத்து எடித்துக்காட்டியுள்ளனர்[4]. அவர்களை கண்காணித்து வருவதாக புலன் விசாரணை செய்யும் குழுக்கள் கூறுகின்றன[5]. மும்பையில் இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகள் நடத்தியுள்ளது ஒன்றும் புதியதல்ல. புனாய்வுத்துறை மும்பை மறுபடியும் தாக்குதலுக்குள்ளாகும் என்று தெளிவாக எச்சரித்து இருந்தது[6]. ஆனல் உள்துறை அமைச்சகம் இதை மறுக்கிறது.
வழக்கம் போல முரண்பட்ட வெளியிடப்படும் அறிக்கைகள்: ஆளும் சோனியா கட்சித் தலைவர்கள் சட்டப்படி திவிரவாதிகளுக்கு உதவும் வகையில் முன்னுக்குமுணாகப் பேசுவது, அறிக்கைகள் விடுவது தொடர்கிறது. அவை முழுவதுமாக பொய் அல்லது நீதிமன்ற அவமதிப்பு அல்லது வழக்கை திசைத்திருப்பும், பாதிக்கும் என்று தெரிந்தே செய்து வருகிறார்கள். மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக மத்திய உளவுத்துறையோ, மாநில உளவுத்துறையோ எச்சரிக்கை எதையும் செய்யவில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். மும்பைக்கு 13-07-2011 நள்ளிரவில் வந்த ப.சிதம்பரம், குண்டுவெடிப்பு நடந்த இடங்களைப் பார்வையிட்டார். காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் அவர் பார்த்து நலம் விசாரித்தார். 14-07-2011 அன்று காலை ப.சிதம்பரமும், மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவானும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ப.சிதம்பரம் கூறுகையில், “இதுவரை 17 பேரின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு துண்டிக்கப்பட்ட தலை மீட்கப்பட்டுள்ளது. அது யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. 131 பேர் காயமடைந்து 13 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 26 பேர் விடுவிக்கப்பட்டு விட்டனர். 82 பேரின் நிலைமை ஸ்திரமாக உள்ளது. 23 பேர் மிகவும் கடுமையான காயங்களைச் சந்தித்துள்ளனர். இவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஒன்றும் தெரியாமல் உள்துறை அமைச்சர் இருப்பதைவிட இல்லாமலேயே இருக்கலாம்: “நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து முன்கூட்டியே உளவுத் துறை எச்சரிக்கை எதுவும் எங்களுக்கு இல்லை. மாநில உளவுத்துறையோ அல்லது மத்திய உளவுத்துறையோ இதுகுறித்து எந்த எச்சரிக்கையையும் விடுக்கவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது. கிட்டத்தட்ட 30 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் நாட்டில் தீவிரவாதம் திரும்பியுள்ளது. மும்பை மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதலை சந்தித்துள்ளது. இதற்காக நான் பெரிதும் வருந்துகிறேன். தாதர், ஓபரா ஹவுஸ், ஜவேரி பஜார் ஆகிய இடங்களில் மூன்று குண்டுகள் வெடித்தன. மூன்று இடங்களையும் நான் நேரில் பார்த்தேன். அதில் இரண்டு இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. தாதரில் நடந்தது சிறிய அளவிலான குண்டுவெடிப்பு. மிகவும் திட்டமிட்டு இந்த தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இரவு முழுவதும் குண்டுவெடிப்பு நடந்த இடங்களை புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக அலசி ஆராய்ந்துள்ளனர். தடவியல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
அம்மோனியம்நைட்ரேட்உபயோகப்படுத்தப்பட்டிருப்பது: “மகாராஷ்டிர தடவியல் ஆய்வகம் பல முக்கிய தொடக்க நிலை ஆதாரங்களை சேகரித்துள்ளது. குண்டுவெடிப்பு நடந்த இடங்கள் அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளன. அங்கு யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ரிமோட் கன்ட்ரோல் மூலம் தாக்குதல் நடத்தப்படவில்லை. அம்மோனியம் நைட்ரேட் உபயோகப்படுத்தப்பட்டிருப்பது பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது. யார் இந்த தாக்குதலுக்குக் காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. யாரையும் குறிப்பிட்டு நாங்கள் சந்தேகிக்கவில்லை. மாறாக, அனைவரையுமே சந்தேகிக்கிறோம். அனைத்து தீவிரவாத குழுக்களின் தொடர்புகள் குறித்தும் நாங்கள் விசாரிக்கிறோம். அனைத்து விதமான தகவல்களையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம். சமீபத்தில் புனேயில் இந்தியன் முஜாஹிதீனைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அதேபோல மும்பையில், சிபிஐ மாவோயிஸ்ட்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து மகாராஷ்டிர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில் இந்த குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். மும்பையை மட்டும் குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதில்லை. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரத்தையும் அவர்கள் குறி வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் மும்பை அதிக அளவில் குறி வைக்கப்படுவது பெரும் வேதனை தருகிறது”, என்றார் ப.சிதம்பரம்[7].
உள்ளூர் அல்லது வெளியூர் தீவிரவாத இயக்கமா? இருப்பினும் மும்பை எதிர்-தீவிரவாத குழு மெத்தனமாகவே இருந்துள்ளது. முந்தைய குண்டுவெடிப்புகளைப் போல, இப்பொழுது இந்திய-முஜாஹித்தீன் போன்ற எந்த தீவிரவாத இயக்கமும் ஈ-மெயில் அனுப்பி பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் இந்திய-முஜாஹித்தீன் 14 இளைஞர்களை இந்த மூன்று குண்டுவெடிப்புகளில் உபயோகப்படுத்தியுள்ளதாக யூகிக்கப்படுகிறது. ராஞ்சியில் தேசிய புலனாய்வு பிரிவினர் சோதனையிட்டபோது, சிமியின் அங்கத்தினர்கள் அத்தகைய வேலைச் செய்ய திட்டமிட்டதாகத் தெரிகிறது. பெங்களூர் மற்றும் ஹைதரபாத் நகரங்களிலுள்ள அவர்களது கூட்டாளிகள் உதவியுள்ளார்கள். பிடிக்கப்பட்டுள்ள சல்மான் என்பவன் முன்னமே அவர்கள் அத்தகைய குண்டுவெடிப்புகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளான்[8]. சிறிய இடங்களை ரகசியமாகக் கண்காணிக்கும் கேமராக்களில் பிடிபட்டுள்ள காட்சிகளினின்று, குறிப்பிட்ட மூன்று நபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவன் முழுவதுமாக அடையாளங்காணபாட்டுள்ளான். அவர்களுடைய படங்கள் வரையப்படபோகின்றன. இருப்பினும், இம்முறை அவர் வெளியிடப்படாது என்று சொல்லப்படுகிறது. முந்தைய 26/11 குண்டுவெடிப்புகள் போல 13/7 அன்றும் உள்ளூர்வாசிகள் உதவியுள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது[9].
சந்தேகிக்கப்படும் மூன்று நபர்கள்: மும்பையில் கடந்த 13ந் தேதி நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது. குண்டுவெடிப்புக்கு முன்பு 3 மர்ம ஆசாமிகள் சந்தேகத்திற்குரிய முறையில் நடமாடியது தொடர்பான வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது[10]. இந்த தகவலை மகாராஷ்டிர முதலமைச்சர் பிரிதிவிராஜ் சவான் தெரிவித்திருக்கிறார். அமைச்சரவை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் இந்த தகவலை தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.தெற்கு மும்பை பகுதியில் தாதர், ஜாவேரி பஜார், ஓபரா ஹவுஸ் உட்பட 3 இடங்களில் கடந்த 13ந் தேதி நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர். 133 பேர் காயமடைந்தனர்.
செல்போனில் பேசிக்கொண்டிருந்த அந்த மூவர்: இது தீவிரவாதிகளின் செயல் என்பது உறுதி செய்யப்பட்டது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிகளில் கடைகள் மற்றும் வீதிகளில் வைக்கப்பட்டிருந்த வீடியோ கேமராக்களில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஒபரா ஹவுஸ் அருகே கவு ஹள்ளி என்ற இடத்தில் வீடியோ கேமராவில் 3 பேர் அந்தப் பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடமாடியதுகண்டுபிடிக்கப் பட்டது. அவர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் செல்போன் மூலமே சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். எனவே இவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியன் மொஜாகிதீன் அமைப்புதான் காரணமாக இருக்கும் என்று புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சந்தேகப்பட்டனர். ஆனால் இந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் போலீசிடம் பிடிபடாமல் இருக்க செல்போனை கடந்த சில மாதங்களாக பயன்படுத்துவதில்லை. எனவே இந்த தாக்குதலை நடத்தியவர்கள் வேறு தீவிரவாத அமைப்பாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மூவரில் ஒருவன் இறந்து விட்டானா? மற்றொரு இடத்தில் கிடைத்த வீடியோ காட்சிகளை போலீசார் பார்த்தனர். அதில் ஒருவர் ஒரு பையை எடுத்துக் கொண்டு வேகமாக வாகன நிறுத்த இடத்தை நோக்கி செல்கிறார். சிறிது நேரத்தில் அவர் சென்ற பகுதியில் குண்டு வெடிக்கிறது. அந்த இடத்தில் மின்சார ஒயர்கள் பின்னப்பட்டு ஒருவர் பிணமாக கிடந்தார். வெடிகுண்டை எடுத்துச் சென்றவராக அது இருக்கலாம் என்று தற்போது போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் கொண்டு சென்ற பையை போன்று அந்தப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டது. எனவே அவர் பையில் வெடிகுண்டை எடுத்துச் சென்றவராக இருக்க வேண்டும் என்று புலனாய்வுத் துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். வெடிகுண்டை வைத்து விட்டு அவர் திரும்புவதற்குள் முன்கூட்டியே வெடித்து விட்டதால் அவரும் பலியாகி இருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
மும்பை குண்டுவெடிப்பு-குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து நடந்த தாக்குதல்? குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து மும்பையில் நேற்று வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது[11]. கடந்த 2006ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி மும்பை புறநகர் ரயில்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதில் 200க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த குண்டு வெடிப்புகள் குஜராத்திகள் அதிகம் வசிக்கும் பகுதிகளான மலட், கான்டிவ்லி, பொரிவிலி ஆகிய பகுதிகளைக் குறி வைத்து நடத்தப்பட்டது. 13-07-2011 மும்பையில் நடந்த குண்டுவெடிப்புகளும் குஜராத் சமுதாயத்தினர், குறிப்பாக வர்த்தகர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நடந்திருக்கிறது. எனவே இந்த முறையும் குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து தாக்குதல் நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கனவே 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி ஜவேரி பஜார், கேட்வே ஆப் இந்தியா ஆகிய பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதேபோல 2003ல் கட்கோபர், 2003 மார்ச்சில் முலுந்த், 2003 ஜனவரியில் விலே பார்லே ஆகிய பகுதிகளிலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. இங்கும் குஜராத்திகள் அதிக அளவில் வசிக்கிறார்கள். 2003 சம்பவத்திற்குப் பின்னர் பேசிய மகாராஷ்டிர முதல்வர் சுஷில் குமார் ஷிண்டே, குஜராத்திகளை குறி வைத்து குண்டுவெடிப்புகள் நடந்திருப்பதாக தெரியவில்லை என்று கூறியிருந்தார்.
தீவிரவாதிகளின் இலக்கு ஏன்? அதேசமயம், குஜராத்திகளை குறி வைத்துத்தான் பெரும்பாலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்படுவதாக கூறுகிறார் மும்பை மாநகர குஜராத்தி சமாஜ் தலைவர் ஹேம்ராஜ் ஷா. இதுகுறித்து அவர் கூறுகையில், ஜவேரி பஜார் பகுதி கமிஷனர் அலுவலகத்திற்கு மிகவும் அருகில் உள்ளது. ஓபரா ஹவுஸ் பகுதியில் உள்ள கவ் காலி, தாதரில் உள்ள கபூதர்கானா ஆகியவை மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளாகும். மாலை நேரங்களில் இங்குமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த பகுதிகளைக் குறி வைத்து தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது என்கிறார் ஷா. சில்லறை வியாபாரிகள் நலச் சங்கத்தின் தலைவர் விரேன் ஷா கூறுகையில், ஓபரா ஹவுஸ், ஜவேரி பஜார் பகுதிகளில் தங்க மற்றும் வைர நகை வியாபாரிகள் பெருமளவில் உள்ளனர். இவர்கள் அனைவருமே குஜராத்திகள்தான். இங்கு குண்டுவெடிப்புகள் நடந்திருப்பதைப் பார்க்கும்போது குஜராத்திகளைக் குறி வைத்தே தாக்குதல் நடந்திருப்பதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது. அதேசமயம், மக்கள் நெருக்கமான பகுதிகளை தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாகவும் கருத முடியும் என்றார்.
மும்பை குண்டுவெடிப்பின்போது தகவல் தொடர்பு செயலிழப்பு: சவாண்[12]: மும்பையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த அடுத்த 15 நிமிடங்களுக்கு உயர் அதிகாரிகள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தகவல் தொட ர்பு சாதனங்கள் அனைத்தும் முழு மையாக செயலிழந்து விட்டன என்று மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய சவாண் மேலும் கூறுகையில், குண்டு வெடிப்பு நடந்த அடுத்த 15 நிமிடங்களுக்கு எந்த ஒரு தகவல் பரிமாற்றமும் மேற்கொள்ள இயலவில்லை. இதனால் காவல் துறை உயர் அதிகாரிகளையோ, நிர்வாக உயர் அதிகாரிகளையோ தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
தீவிரவாதிகளுக்கு துணையாக அவ்வாறு நிறுவனங்கள் செய்துள்ளனவா? வேறு எந்த வகை சாதனங்களையும் தகவல் தெரிவிக்க பயன்படுத்த இயலாத நிலை இருந்ததால், நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. எனவே, இதுபோன்ற நேரங்களில் செயற்கைகோள் துணையுடன் இயங்கும் தொலைத் தொடர்பு சாதனங்களையோ அல்லது எந்த சூழ்நிலையிலும் பாதிக்காத வகையில் அமைந்த சாதனங்களையோ பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த நிலை மீண்டும் ஏற்படக் கூடாது. எனவே, இதுகுறித்து தேசிய பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளேன் என்றார்.
26/11ற்கு பின்னரும் நவீனப்படுத்தப்படவில்லை என்று புலம்பும் மஹாராஷ்ட்ர முதல்வர்: அவர் மேலும் கூறுகையில், காவல்துறையினருக்கான சாதனங்களும் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். ஆனால் இது தொடர்பாக அமைக்கப்பட்ட ராம் பிரதான் குழு பரிந்துரைத்த எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. காவல் துறையை நவீனப்படுத்துவதற்கான குழு பரிந்துரைகள் எதையும் நாம் நினைத்த அளவில் அமல்படுத்த இயலவில்லை என்றார். உளவுப் பிரிவினர் சரியான நேரத்தில் உரிய தகவல் தரவில்லை என்பதை ஏற்க முடியாது என்ற சவாண், அதுபற்றி கூறுகையில், ஆனால் அப்பிரிவின் திறனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கூட இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது என்றார் சவாண்.
[1] இவர்கள் எல்லாமே முஸ்லீம்களாக இருப்பதனால், புலன் விசாரணைக் குழுக்கள், போலீஸ் முதலியோர் அரசியல் நிர்பந்தங்களினால், முரணான செய்திகளை ஊடகங்களுக்கு கொடுத்து, அதன் மூலம் வழக்கில் தீவிரவாதிகளுக்கு சந்தேகத்தின் அடைப்படையில் அல்லது போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை அடைகிறார்கள். பிறகு மற்ற வழக்குகளில் அவர்களை சிறையில் வைத்துள்ளார்கள். அல்லது பைலில் வெளியில் வந்ததும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் (துபாய், கடார்..) சென்று மறைந்து வாழ்கிறார்கள் மற்றும் தொடர்ந்து இத்தகைய தீவிரவாத செயல்களை செய்து வருகிறார்கள்.
பிரிவுகள்: 2008 குண்டு வெடிப்பு, 786, அடையாளம், அபு சலீம், அபு ஜிண்டால், அப்துல் அஜீஸ், அப்துல் கய்யூம் சேய்க், அப்துல் காதர், அப்துல் நாஸர் மதானி, அப்துல் பாசித், அப்துல்லா, அமீனுத்தீன், அமீன், அமெரிக்க ஜிஹாதி, அரேபிய ஷேக்கு, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், அல்ஜமீன், அல்லா, அஸ்ரப் அலி, அஸ்லாம் பாஷா, ஆப்கானிஸ்தான், இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்தியா, இமாம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், உள்துறை அமைச்சகம், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, எல்லை, எஸ்.எம்.எஸ், கராச்சி திட்டம், காஃபிர், காஃபிர்கள், காந்தஹார், காந்தாரம், கீழக்கரை, குஜராத், குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, குவைத், கேரள ஜிஹாதிகள், கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், சாகுல், சாகுல் அமீத், சாதர், சானவாஸ், சிதம்பர ரகசியங்கள், சிமி, சியாசத், சுன்னத், சுன்னி, சுலைமான், ஜமாத், ஜிஹாதி அமெரிக்கர், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள், டைம், த.மு.மு.க, தமிழகத்து ஜிஹாதி, தமிழகத்து தீவிரவாதி, தலிபான், தாலிபான், தாவுத் இப்ராஹிம், தாவூத் இப்ராஹிம், தாவூத் சையது ஜிலானி, தாவூத் ஜிலானி, தாவூத் மியான் கான், தாஹிர் ஷைஜாத், துபாய், துப்பாக்கி, தேசிய புலனாய்வு துறை, பங்களூரு வெடிகுண்டு, பலுச்சிஸ்தானம், பள்ளி வாசல், பழமைவாதம், பாகிஸ்தானின் தாலிபான், பாகிஸ்தான், பாகிஸ்தான் தீவிரவாதம், பாப்புலர் ஃபரென்ட் ஆஃப் இன்டியா, பாப்புலர் பரென்ட் ஆப் இந்தியா, பைப் வெடிகுண்டு, மதானி, மதௌனி, முகமது ஆசிப், முகமது ஜியாஉல்ஹக், முஜாஹித்தீன், மும்பை குண்டு வெடிப்பு, முஸ்லீம், முஹம்மது, மௌதனி, மௌதானி, வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், வெடிக்கச் செய்யும் கருவிகள், வெடிபொருள் வழக்கு
Tags: அம்மோனியம் நைட்ரேட், இந்திய முஜாஹித்தீன், இஸ்லாம், சந்தேகிக்கப்படும் இயக்கங்கள், சிமி, செல்போன், டிபன் பாக்ஸ், தடை செய்யப்பட்டுள்ள சிமி, துணி, முகமது, மும்பை குண்டுவெடிப்பு, முஹமது, லஸ்கர்-இ-தொய்பா, ஸ்கூட்டர்
Comments: 2 பின்னூட்டங்கள்
மே 18, 2011
தாவூத் இப்ராஹிமின் உறவினர்கள் இந்தியாவில் சுகமாக வாழ்வது எப்படி?
மும்பையில் தாவூத்தின் குடும்பத்தினர்: இந்தியாவின் எதிரி, மும்பை வெடிப்புக்கு மற்றும் 26/11 குற்றத்தின் காரணகர்த்தா, தேடப்படும் குற்றாவாளி என்றெல்லாம் சொல்லப்படும் தாவூத் இப்ராஹிமின் குடும்பம் இந்தியாவில் சந்தோஷமாக இருப்பது விசித்திரமான செய்திதான். ஹசீனா பார்கர் (Haseena Parkar) என்ற தாவூத்தின் சகோதரியும் மும்பையில் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வருகிறார். தாவூத் இப்ராஹிமின் இளைய சகோதரர் இங்குதான் வசிக்கிறார். பாகிஸ்தான் எப்படி ஒசாமா பின் லேடனுக்கு இடம் கொடுத்ததோ, அதுபோல, இவர்களுக்கு இடம் கொடுத்துள்ளது. தாவூத் இப்ராஹிம் இவர்களை சந்திக்க இந்தியாவிற்கு வரவில்லை அல்லது அவர்கள் அவனைப் பார்க செல்லவில்லை என்று சொல்லமுடியுமா? மும்பைத் திரைப் பட நட்சத்திரங்கள் தாவூத் இப்ராஹிமுடன் சேர்ந்தே செயல்பட்டு வருகின்றனர். ஏனெனில், அவன் தயவு இல்லாமல், இந்தி படங்கள் வெளிவரமுடியாது என்ற நிலைய்ள்ளது. குல்ஷன்குமார் கொல்லப்பட்டது, ஒவ்வொருவரின் மனத்திலும் எச்சரிக்கை விடுத்துக் கொண்டே இருக்கிறது எனலாம்.

Name: Dawood Sheikh Ibrahim KaskarFather’s name: Late Sheikh Ibrahim Ali KaskarMother’s name: Late Amina
Wife’s name: Mehjabeen, alias Zubina Zareen
Children: Mahrukh, 25 years, married to Pakistan’s former cricket captain Javed Miandad’s son, Junaid[22]; Mehreen, 23 years; Moeen, 20 years; Atif Aslam 25 years; Maria, 14 years.
Siblings: Brothers – Late Noor-ul-Haq alias Noora (allegedly shot dead by gangsters in Karachi);[23] Anees Ibrahim Kaskar;[24] Iqbal Kaskar; a sister known as Aapi (reportedly 11 siblings, names of others not known) |
பெயர் – தாவூத் இப்ராஹிம் கஸ்கர்தந்தை – செயிக் இப்ராஹிம் அலி கஸ்கர்(இறந்துவிட்டார்)தாயார் – அமீனா (இறந்துவிட்டார்)
மனைவி – மெஹ்ஜபீன் / ஜுபினா ஜரீன்
மகன் / மகள்கள் – மகள் மஹ்ருக் (25), பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மியான்டட்டின் மகனை (ஜுனைத்) கல்யாணம் செய்து கொண்டுள்ளாள்; மெஹ்ரீன் (23); மோயீன் (20); அதிஃப் அஸ்லம் (25); மரியா (14).
சகோத-சகோதரிகள் – நூர் உல்-ஹக் / நூரா (இறந்துவிட்டார்); அனீஸ் இப்ராஹிம் கஸ்கர், ஆபி (சகோதரி), மொத்தம் 11 பேர்; மற்றவர்களின் பெயர்கள் தெரியவில்லை |

இக்பால் கஸ்கரின் மீது தாக்குதல்: மும்பையில் பைகுல்லா என்ற இடத்தில் பக்மோடியா தெருவில் (Pakhmodia Street in Byculla) வசிக்கும்[1] இக்பால் கஸ்கர் (55), செவ்வாய்க்கிழமை தெற்கு மும்பை பகுதியில் காரில் சென்றுக் கொண்டிருந்தார். நிழல்உலக தாதா தாவூத் இப்ராஹிமின் இளைய சகோதரர் மீது மும்பையில் அடையாளம் தெரியாத மர்ம கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது[2]. இதில் அதிர்ஷ்டவசமாக தாவூத் சகோதரர் இக்பால் கஸ்கர் காயம் இன்றி தப்பித்தார். ஆனால் அவரது கார் டிரைவர் ஆரிப் சையது (Asif Zaveri) சம்பவ இடத்திலேயே இறந்தார். அன்வர் ஹிப்பி மற்றும் அன்வர் கரதே (Anwar Hippi and Anwar Karate) என்ற இரு பாதுகாவலர்களும் தப்பித்தனர்[3]. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்[4]. மேலும் 2 பேர் தப்பி ஒடினர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்[5]. இக்பால் மீது நிலமோசடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. ரௌடி கும்பல்களுக்கு இடையேயான போட்டியில் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று மும்பை போலீஸார் தெரிவித்தனர்[6].
 |
 |
கார் டிரைவர் சாவு: இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பேந்தி பஜார், போரி மொஹல்லா என்ற இடத்தில்[7] நேற்று இரவு சுமார் 9 மணிக்கு நடந்ததாகக் கூறப்படுகிறது. இரவு உணவை முடித்துக் கொண்டு, இக்பால் தன்னுடைய பாதுகாவலருடன் நடந்து சென்றதாகவும் அப்பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், இக்பால் மீதும், ஆரிப் மீதும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதாகவும், சுதாரித்துக் கொண்ட இக்பால் அருகில் இருந்த காருக்குப் பின்னர் ஒளிந்து தப்பியதாகவும், எனினும் ஆரிப் குண்டு காயம் அடைந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் ஆரிப், இதயப் பகுதியிலும், வயிற்றிலும், நெற்றிப்பொட்டிலும் காயம் அடைந்தாகவும், அவர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் கூறப்படுகிறது[8].

குற்றம் நிரூபிக்கப் படாதலால் முன்னர் விடுவிக்கப்பட்டான்: அரபு நாடு ஒன்றில் வாழ்ந்து வந்த இக்பால், ஒரு கொலைக் குற்றச்சாட்டு தொடர்பாக இந்திய அரசால் தேடப்பட்டு வந்தார். பின்னர் இந்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்க, இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். எனினும், இவர் மீதான குற்றசாட்டு நிரூபிக்கப்படாததால் கோர்ட் இவரை விடுவித்தது. அதன் பிறகு இவர் மும்பையில் வசித்து வந்தார். இக்பால் மீதான தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவித்த போலீசார், இது கோஷ்டிகளுக்கு இடையிலான முன்விரோதம் காரணமாக நடந்து இருக்கலாம் என்றும், இந்த தாக்குதலுக்கு பின்னால் தாவூத் இப்ராஹிமின் எதிரியான சந்தோஷ் ஷெட்டி இருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்தனர்.

சோட்டா ராஜன் சதி? : இதற்கிடையில் தாவூத் சகோதரரை கொலை தங்களை ஏவியது சோட்டா ராஜன் என கைது செய்யப்பட்ட சையத் பிலால் முஸ்தபா அலி, இந்தர்லால் பஹதூர் காத்ரி (Syed Bilal Mustafa Ali and Inderlal Bahadur Khatri) ஆகிய 2 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்[9]. அவர்கள் இருவர் மீதும் இ.பி.கே., 302 மற்றும் 34 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் இன்று மாசகான் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுகின்றனர்[10].

கொலை-கொள்ளைக்காரர்களின் மோதல்கள்-சண்டைகள்: மும்பை வெடிகுண்டு குற்றத்திற்குப் பிறகு, தாவூத் மற்றும் அவனது கூட்டளிகள் சோட்டா ஷகீல் தங்களுடைய வேலைகளை தஹ்ரான், சவுதி அரேபியாவிற்கு மாற்றிக் கொண்டனர்[11]. கஸ்கர் சுடப்பட்ட சில நொடிகளில் இருவரது போன்களும் ஒலித்துக் கொண்டே இருந்ததாக, செய்திகள் வெளிவந்துள்ளன. ரவி பூஜாரி, விஜய் ஷேட்டி முதலியோர்களின் தொடர்புகளும் சந்தேகிக்கப்படுன்றன.
பிரிவுகள்: ஃபத்வா, அனீஸ் இப்ராஹிம், அப்துல் நாஸர் மதானி, அப்துல்லா, அமீன், அமைத்-உல்-அன்ஸார், அரேபிய ஷேக்கு, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல்லா, இந்தியா, இஸ்லாமிய ஜாதி, இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஒசாமா பின் லேடன், ஒசாமா பின்லேடன், கசாப், காஃபிர், குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, சஞ்சய்தத், சவூதி அரேபியா, சிறுபான்மையினர்
Tags: அன்வர் கரதே, அன்வர் ஹிப்பி, அமீனா, இக்பால் கஸ்கர், குல்ஷன்குமார், செயிக் இப்ராஹிம் அலி, ஜுனைத், ஜுபினா ஜரீன், நூர் உல்-ஹக், பக்மோடியா தெரு, பைகுல்லா, மஹ்ருக், மெஹ்ஜபீன், ஹசீனா பார்கர்
Comments: 2 பின்னூட்டங்கள்
ஏப்ரல் 25, 2010
நாத்திகர்களும், முகமதியர்களும் சித்தாந்த ரீதியில் விவாதத்தில் இறங்குவார்களா?
ஈ. வே. ரா வே பல நேரங்களில் முகமதியர்களுடன் தேவையில்லாமல், தனது சுயமரியாதையை இழந்து முகமதியர்களில் அடிபணிந்து சென்றுள்ளார்.
அந்நிலையில், அம்பேத்கர் உயர்ந்து நிற்கின்றார்.
முகமதியர்கள் ஈ.வே.ராவை என்றுமே லட்சயம் செய்ததில்லை. ஜின்னாவே சுடச்சுட கடிதம் அனுப்பியும், வேண்டுமென்றே முகமதியர்கள் கால்களில் விழுந்தது, அவர்களுக்கே வியப்பாக இருந்திருக்கிறது.
இன்று பெரியார்தாசன் அப்துல்லாவாக மாறியதை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்வது போல எழிதி வருகிறர்கள்.
நாத்திகர்கள், திராவிட நாத்திகர்கள் என்றுமே உண்மையான நாத்திகர்களாக இருந்ததில்லை.
எந்த உண்மையான முஸ்லீமும் காஃபிருடன், அதிலும் நாத்திக காஃபிருடன் எந்த விதமான தொடர்பையும் வைத்துக் கொண்டிருக்க முடியாது.
அவ்வாரு இருக்கின்றனர் என்பதிலிருந்தே நாத்திகர்கள் மற்றும் முஸ்லீம்களின் போலித்தனம் தெரிகிறது.
உண்மையில் நாத்திகர்கள், அதிலும் திராவிட நாத்திகர்கள், முகமதியர்கள் போடும் வேடம்தான், அதிகமாகத் தெரிகிறதேத் தவிர, இரண்டும் சித்தாந்த ரீதியில் தைரியமாக விவாதித்ததாகத் தெரியவில்லை.
பிரிவுகள்: அப்துல்லா, அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்?, அமாவாசையும் அப்துல்காருக்கும், அம்பேத்கர், அல்லா, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள், இந்துக்கள், இமாம், இருக்கின்ற நிலை, இருக்கின்றது என்ற நிலை, இல்லாத நிலை, இல்லாதது என்ற நிலை, இஸ்லாமிய ஜாதி, இஸ்லாமும் இந்தியாவும், ஈ. வே. ரா, கம்யூனிஸ-காங்கிரஸின் “செக்யூலரிஸக் கூட்டுத் விளையாடல்கள், கருணாநிதி, காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், சரீயத், சரீயத் சட்டம், சிலை வழிபாடு, சுயமரியாதை, ஜின்னா, தமிழ் நாத்திகன், தமிழ் முஸ்லீம், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி, தமுமுக, தலாக், தலித் முஸ்லீம், தலித் முஸ்லீம்கள், திராவிட நாத்திகர்கள், நாத்திக காஃபிர், நாத்திக முஸ்லீம்!, நாத்திகத் தமிழன், பெரியார்தாசன், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல், மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், மீலாதுநபி, முகமது நபி, வந்தே மாதரம், வந்தே மாதரம் எதிர்ப்பது
Tags: ஃபத்வா, அவமதிக்கும் இஸ்லாம், இந்துக்கள், இமாம், இஸ்லாமிய தீவிரவாதம், உண்மையான நாத்திகர், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கோவில் சிலை உடைப்பு, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், நாத்திக காஃபிர், முஸ்லிம்கள், முஸ்லீம்கள், மோமின்-காஃபிர், மோமின்-காஃபிர் உறவு
Comments: 3 பின்னூட்டங்கள்
அண்மைய பின்னூட்டங்கள்