Archive for the ‘அபு பகர் அல்-பாக்தாதி’ category

ஐ.எஸ்.சில் ஆள்-சேர்ப்பதற்கான சதி-திட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: மைலாப்பூர் மொஹம்மது இக்பால் மூலம் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (3)!

பிப்ரவரி 26, 2017

.எஸ்.சில் ஆள்சேர்ப்பதற்கான சதிதிட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: மைலாப்பூர் மொஹம்மது இக்பால் மூலம் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (3)!

ISIL Chennai terror nexus - The Hindu - a tale of two friends

சென்னையில் ஐஎஸ்.தீவிரவாதிகளின் திட்டங்கள்: சிரியா மற்றும் ஈரானை ஆக்கிரமித்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், உலக நாடுகள் பல வற்றில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், உலக நாடுகளில் உள்ள இளைஞர்களை தங்கள் இயக்கத்தில் சேர்ப்பதற்கான வேலைகளையும் செய்து வருகிறது. இந்தியாவின் சில மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய உளவுத் துறை, மாநில போலீசாருடன் இணைந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2016 ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரபல தங்கம் கடத்தல் மன்னன், ஜமீல் முகமது என்பவரிடம் நடத்திய விசாரணையில், தமிழகத்தைச் சேர்ந்த வாலிபர்களை குறிவைத்து ஐ.எஸ் தீவிர வாத இயக்கும் காய் நகர்த்தி வருவது தெரிய வந்துள்ளது[1]. அதாவது, ஐஎஸ் தீவிரவாதிகள் சென்னையிலேயே இருக்கிறார்கள். ஜெயலலிதா இறப்பு, ஜல்லிக்க்கட்டு, சசிகலா விவகாரங்களில் இவை மறைக்கப்படுகின்றன.

after_iqbal_failed_twice_to_reach_syria_he_was_advised_to_raise_-money

மைலாப்பூரில் வாழ்ந்த ஐஎஸ் தீவிரவாதி: இக்பால் என்ற வாலிபருடன் ஜமீல் கான் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்தது[2]. இக்பால் ஐ.எஸ்.இயக்கத்துக்கு தமிழகத்தில் இருந்து நிதி திரட்டி கொடுக்கும் பணியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[3]. அந்தவகையில் இக்பால், ஜமீல் முகமதுவிடம் ரூ.65 ஆயிரம் பணம் வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது[4]. இதையடுத்து ராஜஸ்தான் போலீசார், தமிழக போலீசாரின் உதவியுடன் இக்பாலை தேடி வந்தனர். இந்தநிலையில் இக்பால், கடந்த சில தினங்களுக்கு முன்னர் 06-02-2017 அன்று தங்க கடத்தலில் சிக்கினார். மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் சென்னையில் இக்பாலை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும், ராஜஸ்தான் போலீசார் சென்னைக்கு விரைந்து வந்தனர். பின்னர் புழல் சிறையில் இருந்த இக்பாலை ராஜஸ்தான் மாநில நீதிமன்றத்தில் கைது உத்தரவு பெற்று முறைப்படி 13-02-2017 அன்று கைது செய்தனர்.

mohammed-iqbal-taken-to-rajastan-for-interrogation-25_02_2017_013_010

mohammed-iqbal-taken-to-rajastan-for-interrogation-25_02_2017_013_010

ஐ.எஸ்.தீவிரவாதியான ஜமீல் முகமதுவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து நிதி உதவி செய்த குற்றச்சாட்டின் பேரில் இக்பால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை ராஜஸ்தானுக்கு அழைத்து சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில், இக்பால் நீண்ட நாட்களாகவே ஐ.எஸ்.இயக்கத்துடன் தொடர்பில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  ஆக சென்னை மக்கள், ஐஎஸ் எரிமலை மீது உட்கார்ந் திருக்கின்றனர், இந்த வெறியர்கள், என்றைக்கு குண்டு வைப்பர்களோ, என்ன நடக்குமோ என்று தெரியவில்லை.

chennai-mannady-isis-sponsor-arrested-mohammed-iqbal

சிரியாவுக்கு செல்ல முடியாது மொஹம்மது இக்பால்: முகமது இக்பாலிடம் 22-02-2017 அன்று விடிய விடிய நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது[5]: “முகமது இக்பால் கடந்த 2015ம் ஆண்டு ஈரான் நாட்டிற்கு செல்ல ஐதராபாத்தில் உள்ள ஈரான் தூதரகத்தில் விசாவுக்கு பதிவு செய்திருந்தார். பின்னர் முகமது இக்பால் தந்தைக்கு காய்ச்சல் இருந்ததால் அவர் தூதரகத்தில் விசா பெறுவதற்கான விசாரணையில் கலந்து கொள்ளவில்லை. இதற்காக ஒரு பன்னாட்டு ஏஜென்சியை அணுகினார். அதன்படி iqb1984@yahoo.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பை ஏற்படுத்தி அதில் கிடைக்கப்பற்ற தகவல்கள் மூலமாக ஒரு குறிப்பிட்ட பன்னாட்டு சுற்றுலா சேவை நிறுவனத்திற்கு மின் அஞ்சல் பணம் பரிமாற்றம் மூலமாக 90 யூரோ அதாவது இந்திய மதிப்பில் 8,098 ரூபாயை  செலுத்தியுள்ளார்[6]. இவ்வளவவுதான், தமிழ் ஊடகங்கள் கூறுகின்றன. ஜல்லிக் கட்டு விவகாரத்தில், முஸ்லிம்கள் கலாட்டா செய்தது, இத்தகைய விவகாரங்களை மறைக்கத்தானா என்று யோசிக்கத் தோன்றுகிறது. ஓருவருடைய தனிப்பட்ட விவரங்களைக் கொடுப்பதை விட, அவனது கூட்டாளிகள் யார், எப்பொழுது கைது செய்யப் பட்டார்கள் போன்ற விவகாரங்களைக் கொடுக்கலாம். என்.ஐ.ஏ கைது செய்யப்பட்டவர்களின் விவகாரங்கள், அவர்கள் செய்த குற்றம் முதலியவற்றை தனது இணைதளத்தில், தினமும் வெளியிட்டு வருகிறது.

© வேதபிரகாஷ்

26-02-2017

chennai-mannady-isis-sponsor-arrested-mohammed-iqbal-dainik-bhaskar-photo

[1] The Hindu, Mylapore resident has IS links, Chennai, February 22, 2017 01:18 IST;  Updated: February 22, 2017 01:18 IST.

[2] A resident of Mylapore, who was arrested by intelligence agencies in Rajasthan last month January 2017, has revealed during interrogation that he had links with the Islamic State. A senior officer of the city police said Mohammed Iqbal (32), a resident of Bazaar Street, was arrested based on a tip-off obtained from the Rajasthan Anti-Terrorist Squad.

http://www.thehindu.com/news/cities/chennai/mylapore-resident-has-is-links/article17343462.ece

[3] சென்னை.ஆன்.லைன், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டிய சென்னை வாலிபர் கைது, February 21, 2017, Chennai.

[4] http://www.chennaionline.com/article/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81

[5] தினகரன், ஐஎஸ் அமைப்புக்கு நிதி திரட்டிய விவகாரம், சிரியா தலைவரிடம் பேசியது என்ன? சென்னை வாலிபரிடம் விசாரணை, 2017-02-23@ 00:04:40

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=282040

நகைச்சுவையும், கேலிசித்திரமும், இஸ்லாமும், ஜிஹாதும், பட்டப்பகல் கொலைகளும்!

ஜனவரி 8, 2015

நகைச்சுவையும், கேலிசித்திரமும், இஸ்லாமும், ஜிஹாதும், பட்டப்பகல் கொலைகளும்!

anti-brahmin cartoon-Telugu

anti-brahmin cartoon-Telugu

இந்தியாவில் கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன இருக்கும் நிலை: இந்தியாவில் கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை என்றெல்லாம் பேசிக்கொண்டு, நாத்திகப் போர்வையில், செக்யூலரிஸப் போர்வையில் பற்பல வகையிலான சித்தாந்திகள் தாங்கள் கிருத்துவர்கள், முஸ்லிம்களாக, கம்யூனிஸ்டுகளாக இருந்து கொண்டும், இந்து மதத்தை காலங்காலமாக விமர்சித்து வருகின்றனர், அவதூறு பேசி வருகின்றனர், தூஷித்து வருகின்றனர், ஆனால், அவர்கள் அதே அளவுகோலோடு, தரா-தரத்தோடு, மற்ற மதங்களை அவ்வாறே சித்தரித்ததும் இல்லை, விமர்சித்ததும் இல்லை. மாறாக, சில இந்துத்தலைவர்கள் ஏதாவது கருத்துகளைச் சொன்னால், ஆஹா, பாருங்கள் எப்படி சொல்லி விட்டார் என்று உலகமே அழிந்து விடுவதைப் போல தலைப்புச் செய்திகளாக வெளியிட்டு, ஆர்பாட்டம் செய்து, கலாட்டா செய்து விடுவர். இப்பொழுதும் அப்படியே நடந்து கொண்டு தான் வருகின்றது. அவ்வேளையில் தான், இஸ்லாத்தை தமாஷாக, கேலிச்சித்திரங்கள் மூலம் விமர்சித்த நாளிதழ் மீது கொலைதாக்குதல் நடந்துள்ளது.

Anti-domestic violence campaign - Durga -  depiction

Anti-domestic violence campaign – Durga – depiction

பாரிஸில் அமைந்துள்ளது சார்லி ஹெப்தோ என்ற வாரஇதழின் தலைமை அலுவலகம் தாக்கப்பட்டது: மத நம்பிக்கைக்கு எதிராக செய்தி, கேலிசித்திரம் வெளியிட்டு வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வார இதழ் [the French satirical weekly Charlie Hebdo ] அலுவலகத்தில் நுழைந்த இரண்டு பேர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் ராக்கெட் லாஞ்சர் மூலம் இரண்டு பேர் நடத்திய கண்மூடித்தனமான தீவிரவாத தாக்குதலில்  வார இதழின் ஆசிரியர் [Stéphane Charbonnier] உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர்[1]. 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ளது சார்லி ஹெப்தோ என்ற வாரஇதழின் தலைமை அலுவலகம். 07-01-2015 அன்று மதியம் அடுத்த இதழ் குறித்த ஆசிரியர் குழு ஆலோசனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு காரில் வந்த கருப்பு முகமுடி அணிந்த இரண்டு பேர், ஏ.கே. 47 துப்பாக்கி மற்றும் ராக்கெட் லாஞ்சர் கொண்டு சரமாரியாக சுட்டனர்[2]. அலுவலகத்துக்குள் நுழைந்தவர்கள் ஒவ்வொருவரையும் அவர்களுடைய பெயர்களைக் கேட்டு தெரிந்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆசிரியர் குழுக் கூட்டம் நடைபெற்ற அறைக்குச் சென்ற இருவரும் சரமாரியாக சுட்டனர். பின்னர் அங்கிருந்து வெளியேறி தப்பிக்க முயன்றனர். அப்போது சாலையில் இருந்த ஒரு போலீஸ்காரர், தன்னை விட்டுவிடும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் அவரையும் சுட்டுக் கொன்ற அந்த 2 பேர் தாங்கள் வந்த காரிலேயே தப்பிச் சென்றனர். தப்பிச் செல்லும்போது தங்களது (இஸ்லாம்) மதத்துக்கு ஆதரவாக, “முகமது நபிக்காக பழி வாங்கப்பட்டது, அல்லாஹூ அக்பர்”, அவர்கள் கோஷமிட்டுள்ளனர்.

Nanga sadhus.5

Nanga sadhus.5

திட்டமிட்டு நடத்திய தாக்குதல் பிரான்ஸ் போலீஸார் அறியாமல் போனது ஆச்சரியமே: முன்னதாக இந்தக் காரை கடத்திக் கொண்டு வந்த இவர்கள், சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஒருவர் மீது மோதி காயப்படுத்தினர். பின்னர் வாரஇதழ் அலுவலகத்தின் வாயிலில் நிறுத்திவிட்டு தாக்குதலைத் தொடர்ந்துள்ளனர். இந்த தாக்குதலில் வாரஇதழின் ஆசிரியர் ஸ்டீபன் சார்போனீர், கேலிசித்திரம் வரையும் கார்ட்டூனிஸ்ட்கள் ஜீன் காபு, பெர்னார்ட் டிக்னஸ் வெரியாக், ஜார்ஜ் வூலின்ஸ்கி உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர்[3]. 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததும் பாரிஸ் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரை நோக்கி சுட்டனர். பதிலுக்கு அவர்களும் துப்பாக்கியால் சுட்டபடியே ஒரு கருப்பு காரில் ஏறி தப்பிச் சென்றனர். உயிரிழந்த 12 பேரில் இரண்டு போலீசாரும் அடங்குவர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ”சார்லி ஹெப்டோ பத்திரிகையில், இஸ்லாமிய தலைவர்கள் குறித்து கேலி சித்திரம் வெளியாகி இருந்தது. இதற்கு பழிவாங்கும் விதத்தில்தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது[4]. ஆக தீவிவாதிகளின் செயல்கள் அவர்கள் மிகவும் திட்டமிட்டே, இக்காரியத்தை நடத்தியிருப்பது தெரிகிறது. பிறகு, போலீஸார் எப்பட் கோட்டை விட்டார்கள் என்று தெரியவில்லை.

செக்யூலரிஸ வித்தைகள் ஏனில்லை

செக்யூலரிஸ வித்தைகள் ஏனில்லை

2006 முதல் 2015 வரையிலான தாக்குதல்கள்: குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு (அதாவது இஸ்லாத்திற்கு) எதிராகவும் தொடர்ந்து பல்வேறு செய்திக் கட்டுரைகள், கேலி சித்திரங்களை வெளியிட்டு வந்தது சார்லி ஹெப்தோ. இதற்காக பலமுறை தாக்குதல்களையும் சந்தித்துள்ளது. கடந்த 2006ல், மற்றொரு பத்திரிகையில் வெளியான கேலி சித்திரத்தை சார்லி ஹெல்தோ வெளியிட்டது[5]. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த 2011ம் ஆண்டு, ஒரு ஷரீயத் சட்டத்தை விமர்சிக்கும் நாடகம் பற்றிய செய்தியால், இதன் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன[6]. இதுபோல் பல்வேறு தாக்குதல்களை இந்த வாரஇதழ் சந்தித்துள்ளது. இப்பொழுது புதன் கிழமை, 2022ல் பிரான்ஸில் இஸ்லாமிய அரசு நிறுவப்படும் என்று தமாஷாக வெளியிட்டது[7]. அபு பகர் அல்-பாக்தாதி [Abu Bakr al-Baghdadi],   IS தலைவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தது[8]. இதன் ஆசிரியர் சார்போனீரை உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டுவந்தால் பரிசு அளிக்கப்படும் என்று அல்காய்தா முன்பு அறிவித்திருந்தது. சிரியா மற்றும் ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவரான அபு பாக்தாதி குறித்து சமீபத்தில் இந்த வாரஇதழில் விமர்சித்து எழுதப்பட்டிருந்தது. அதையடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Nanga sadhus.3

Nanga sadhus.3

நகைச்சுவை கேலிச்சித்திரகளும், அவற்றை அந்நாட்டு மக்கள், மற்றவர்கள் அணுகியமுறை: சார்லி ஹெப்தோ, முஸ்லிம்கள், கிருத்துவர்கள் மற்றும் யூதர்கள் என்று எல்லோரையும் தாக்கி வந்தது. அரசியல்வதிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவர்கள் கோமாளிகளாக, ஏன் ஆபாசமாகக் கூட கார்ட்டூன்களில் சித்தரிக்கப்பட்டுள்ளனர். அவற்றைப் பார்ப்பவர்கள், கோபமாக இருந்தால் கூட, நிச்சயமாக சிரித்துவிடுவர்[9]. சார்லஸ் டி கால் [the death of the former President Charles de Gaulle] போன்ற அந்நாட்டு ஜனாதிபதி இறந்து போன போது கூட தமாஷாக “நகைச்சுவை ரீதியில்” கார்ட்டூன் வெளியிட்டது[10]. பொதுவாக இவற்றை தமாஷாக எடுத்துக் கொண்டால்கும், அடிப்படைவாதிகள் தங்களது மதநம்பிக்கைகளைத் தாக்குவதாக எதிர்த்து வந்துள்ளார்கள். ஆனால், இந்தியாவில் இந்துமதத்தைத் தவிர வேறு எந்த மதம், மதசிந்தனை, கருத்து, கடவுளர், முதலியவற்றை தமாஷாக, நகைச்சுவைக்காகக் கூட சித்தரித்து விட முடியாது. செக்யூலரிஸம் அப்படித்தான் இந்தியாவில் வேலை செய்து கொண்டிருக்கிறது. பேஸ்புக்கில் கூட அப்படிபட்ட நிலைதான் உள்ளது.

© வேதபிரகாஷ்

08-01-2015

[1] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=126307

[2] மாலைமலர், பாரிஸ் பத்திரிகை அலுவலகத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டுக்கு 12 பேர் பலி: ஜனாதிபதி, பிரதமர் கண்டனம், பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஜனவரி 07, 8:36 PM IST

[3] தினகரன், பிரான்ஸ் வார இதழ் அலுவலகத்தில் காரில் வந்த 2 பேர் சுட்டதில் 12 பேர் பலி, ஜனவர்.7, 2015, 01:31:46, சென்னை,

[4] http://news.vikatan.com/article.php?module=news&aid=37101

[5] In 2006, Charlie Hebdo reprinted controversial cartoons of the Prophet Muhammad that originally appeared in a Danish newspaper.

[6]  In 2011, the magazine’s offices were firebombed the day after it published a special issue guest-edited, it said, by Muhammad called “Charia Hebdo” — a play on the word in French for Shariah law.

[7] The cover of Wednesday’s issue poked fun at the French novelist Michel Houellebecq, whose newest book imagines France as an Islamic state in the year 2022.

[8] The Islamic State (IS) has previously warned it intends to attack France and moments before its offices were attacked, the magazine’s Twitter handle published a cartoon wishing a Happy New Year “and particularly good health” to IS leader Abu Bakr al-Baghdadi.

http://www.thehindu.com/news/international/it-was-carnage-absolute-butchery/article6764674.ece?homepage=true

[9] And Charlie Hebdo has been an equal-opportunity offender: Muslims, Jews and Christians — not to mention politicians of all stripes — have been targets of buffoonish, vulgar caricatures and cartoons that push every hot button with glee.

http://www.nytimes.com/2015/01/08/opinion/the-charlie-hebdo-massacre-in-paris.html?_r=0

[10] http://www.thehindu.com/news/international/fighting-intimidation-with-controversy-the-charlie-hebdo-way/article6764673.ece?ref=relatedNews