Archive for the ‘அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம்’ category

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (3)

ஒக்ரோபர் 29, 2022

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (3)

26-10-2022 (புதன் கிழமை): தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. எல்லைக் கடந்த தீவிரவாத இணைப்புகளால், தமிழக முதல்வர் வழக்கை என்.ஐ.ஏக்கு மாற்ற பரிந்துரைத்தார்.

என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வின்சென்ட் சாலையில் உள்ள அப்சல்கான் வீட்டுக்கு சென்றனர். லாப்டாப்பைக் கைப்பற்றினர்.

 இந்த நிலையில், கார் வெடிப்பு சம்பவத்தில் 6-வது நபராக அப்சர்கான் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கார் வெடித்த போது உயிரிழந்த ஜமேஷா முபினின் உறவினர் அப்சர்கான் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 5 பேரிடமும் 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

27-10-2022 (வியாழன் கிழமை):  தமிழகம் இந்த வழக்கை, என்.ஐ.ஏவிடம் (NIA) ஒப்படைத்தது. வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் விக்னேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்[1]. என்.ஐ.ஏ எப்.ஐ.ஆர் (FIR) போட்டது. என்.ஐ.ஏ பதிவு செய்து விசாரித்து வரும் இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது[2]. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. அதில் அபாயகரமான 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

28-10-2022 (வெள்ளிக் கிழமை):  கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவன் – பெரோஸ் இஸ்மாயில் தான், ஈஸ்டர் குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்டு கைதாகி, கேரளா சிறையில் இருக்கும் மொஹம்மது ஹஸாருத்தீன் மற்றும் ரஷீத் அலி இருவரையும் சந்தித்தாக ஒப்புக் கொண்டான். இவர்களுக்கு ஐசிஸுடனும் [Islamic State of Iraq and Syrai (ISIS),] தொடர்பு உள்ளது[3].

109 பொருட்கள் பறிமுதல்அவற்றின் எடை 60, 70 கிலோவா, 100 கிலோவா?: முதலில் எச்சரிக்கையாக அமுக்கி வாசித்த ஊடகங்கள், பிறகு, பெரிய “துப்பறியும் சாம்பு”  ரேஞ்சில் செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டன[4]. 109 ஐட்டங்களை பட்டியல் போடவில்லை என்றாலும், எடை போட ஆரம்பித்த விட்டன. ஹராசு சரியில்லையா, நிருபர்களுக்கு எடை பார்க்கத் தெரியவில்லையா என்று தெரியவில்லை. 60, 70, 100 என்று குறிப்பிடுகின்றன[5]. பலியான ஜமேஷா முபின் மற்றும் முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 7 பேர் மீதும் 120 பி, 153 ஏ., உபா சட்டப்பிரிவு 16 மற்றும் 17 ஆகிய 4 பிரிவுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது[6]. இதில், வெடி விபத்தை ஏற்படுத்த ஜமேஷா முபின் திட்டமிட்டதாகவும், அவரின் வீட்டில் இருந்து 76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட், பிளாக் பவுடர், ஆக்ஸிஜன் சிலிண்டர், அலுமினியம் பவுடர், சிவப்பு பாஸ்பரஸ், 2 மீட்டர் நீளம் உள்ள திரி, கண்ணாடி துகள்கள், சல்பர் பவுடர், பேட்டரிகள், வயர், பேக்கிங் டேப், கையுறை, நோட்டு புத்தகம், ஜிஹாத் தொடர்பான குறிப்பு அடங்கிய டைரி, கியாஸ் சிலிண்டர் உள்பட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது[7]. மொத்த வெடிப்பொருட்களின் எடையை 65, 75, 100 கிலோ என்று பலவிதமாக ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன[8]. 76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட் என்றால், மீதி 33.5 கிலோ மற்றப் பொருட்கள் இருக்க வேண்டும், ஆக மொத்தம் 100 கிலோ என்று கணக்குப் போட்டிருக்க வேண்டும்[9].

கார்கள் பறிமுதல்: கோவையில் வெடி விபத்து ஏற்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் கடந்த ஒரு வாரமாக நின்றிருந்ததாக கூறப்படும் 12 கார்களை போலீசார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்[10]. வின்சென்ட் சாலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த 7 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  சதி வேலைகளுக்காக காரை பயன்படுத்தியது போல இரு சக்கர வாகனங்களையும் பயன்படுத்தலாம் என்ற கோணத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது[11].  இதில், 7 கார்களின் உரிமையாளர்கள் நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததையடுத்து அந்த கார்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள 5 கார்களின் உரிமையாளர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் கரும்புக்கடை, சுந்தராபுரம் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் புதிதாக 3 காவல் நிலையங்கள் உருவாக்கப்பட முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோவையில் குண்டு வெடிப்பு, கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, திருச்சியில் கேட்பாரற்று சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து 10 கார்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்[12]. விழிப்புணர்வு அதிகமாகவே இருக்கிறது போலும்[13]. எல்லா நகரங்களிலும், எல்லா இடங்களிலும், இவ்வாறு வாகனங்கள் நிறுத்தப் பட்டுள்ளன. ஆனால், கார் வெடித்தால் இவ்வாறான, அதிரடி நடவடிக்கை வேற்கொள்வார்களா என்று தெரியவில்லை. போலீஸார், திடீரென்று, இவ்வளவு எச்சரிக்கையாக இப்பொழுது செயல்படுவது தான் ஆச்சரியமாக இருக்கிறது. இருப்பினும், அவர்களது முயற்சிகளை பாராட்டலாம். நம்மை போன்று அவர்களும் கடமையுடன் செயல்படுகிறார்கள்.

கோவை கார் காஸ் சிலிண்டர் வெடிப்பு முதல் கார் குண்டு வெடிப்பு வரை: “கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விபத்து…….”  என்று ஆரம்பித்து, ஊடகங்கள், “கோவை காரில் காஸ் சிலிண்டர் வெடிப்பு விபத்து..”,  மற்றும், “கோவை காரில் இரண்டு காஸ் சிலிண்டர்களில் ஒன்று  வெடித்து விபத்து………”, .“கோவை மாருதி காரில் காஸ் சிலிண்டர் வெடித்த விபத்து………”, “கோவை மாருதி காரில் காஸ் சிலிண்டர் வெடித்த வழக்கு” என்றெல்லாம் குறிப்பிடப் பட்டு, “கோவை கார் குண்டு வெடிப்பு வழக்காக” மாறியுள்ளது. போலீஸாருக்கு விருது, பாராட்டு………………ஊடகங்களுக்கு, மெத்தப் படித்து, தமிழகத்தில் ஊறிப்போன நிருபர்களுக்கு, இதெல்லாம் தெரியாதது போல தலைப்பிட்டு செய்திகளை போடுவதிலிருந்து, ஒன்று அவர்களும் விசயங்களை மறைக்கிறார்கள் அல்லது யாருக்கோக் கட்டுப் பட்டு, அவ்வாறான செய்திகளை வெளியிடுகிறார்கள் என்றாகிறது. பிறகு, அவர்களது நடுநிலைத் தன்மை, ஊடக தருமம், பத்திரிக்கா தொழில் நியாயம், செக்யூலரிஸ சித்தாந்தம் முதலியவை பற்றி சந்தேகங்கள் எழத்தான் செய்யும்.

© வேதபிரகாஷ்

29-10-2022


[1] மாலைமலர், கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்என்... விசாரணை அதிகாரி நியமனம்,  Byமாலை மலர்28 அக்டோபர் 2022 4:53 PM

[2] https://www.maalaimalar.com/news/state/coimbatore-car-blast-incident-nia-appointment-of-investigating-officer-529573?infinitescroll=1

[3] Police sources, on Friday, October , said that one of the six accused in the Coimbatore blast case, confessed during interrogation that he met two men in a Kerala prison who had links with terror group Islamic State of Iraq and Syrai (ISIS), who were involved in the Easter bombings in Sri Lanka.  Feroz Ismail confessed that he had met Mohammed Azharuddin and Rashid Ali, lodged in a prison in the neighbouring state and further questioning is on to ascertain the motive behind the meeting, they said. Azharuddin and Ali are in jail in connection with a case against them in Kerala.

[4] தமிழ்.இந்து, கோவை | ஜமேஷா முபின் வீட்டில் 60 கிலோ வெடிமருந்து பறிமுதல்? – போலீஸ் கண்காணிப்பால் மிகப்பெரிய நாசவேலை தவிர்ப்பு, செய்திப்பிரிவு, Published : 26 Oct 2022 06:50 AM; Last Updated : 26 Oct 2022 06:50 AM

[5] https://www.hindutamil.in/news/tamilnadu/887653-60-kg-of-ammunition-seized.html

[6] தினத்தந்தி, கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் வீட்டில் இருந்து 109 பொருட்கள் பறிமுதல், அக்டோபர் 29, 4:47 am

[7] https://www.dailythanthi.com/News/State/109-items-seized-from-car-blast-victim-jamesha-mubins-house-824772

[8] மாலை மலர், ஜமேஷா முபின் வீட்டில் இருந்து 100 கிலோ வெடிப்பொருட்கள் பறிமுதல், By மாலை மலர்,27 அக்டோபர் 2022 9:40 AM

[9] https://www.maalaimalar.com/news/state/tamil-news-100-kg-explosives-seized-from-jamesha-mubins-house-528818?infinitescroll=1

[10] இ.டிவி.ப்சாரத்,கார் வெடிப்புச்சம்பவம் எதிரொலி: கேட்பாரற்று நிற்கும் வாகனங்கள் பறிமுதல்,

[11] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/coimbatore/after-car-blast-incident-in-coimbatore-police-seized-unattended-two-wheeler-and-cars-parked-on-the-roads/tamil-nadu20221028160747877877082

[12] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோவை சம்பவம் எதிரொலி: திருச்சியில் அனாதையாக நின்ற10 கார்கள் பறிமுதல், Written by WebDesk, Updated: October 28, 2022 3:10:41 pm

[13] https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-incident-reverberates-10-orphaned-cars-seized-in-trichy-532243/

2011 மற்றும் 2016 தேர்தல்கள் – முஸ்லிம்களின் யுக்திகள், மதவாத முயற்சிகள், மற்றும் ஓட்டு வங்கி அரசியல் வியாபாரங்கள்! (1)

மார்ச் 23, 2016

2011 மற்றும் 2016 தேர்தல்கள்முஸ்லிம்களின் யுக்திகள், மதவாத முயற்சிகள், மற்றும் ஓட்டு வங்கி அரசியல் வியாபாரங்கள்! (1)

முஸ்லிம்ம் லீக் பேட்டி 2016 தேர்தல்

முஸ்லிம் கட்சிகளின் அபாயகரமான அரசியல் சூழ்ச்சிகள்: கடந்த 2011 தேர்தலின் போது முஸ்லிம் கட்சிகள் போட்ட வேடங்களை ஐந்தாண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்துள்ளேன். வெளியில் ஒன்றையொன்று தாக்கிக் கொள்வது போலக் காட்டிக் கொண்டு தங்களுக்கு அதிக அளவில் இடங்களை கைப்பற்ற யுக்திகளை எப்படி கையாளுகின்றன முதலியவை அப்பொழுது வெளிப்பட்டன. வருடாவருடம் கட்சி-கூட்டணி மாறிக் கொண்டேயிருப்பது என்ன சித்தாந்தம், அர்த்தம், தருமம் என்று அவர்களிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். மத ரீதியில் திமுக என்றாலும் அதிமுக என்றாலும் காஃபிர்கள் கட்சிதான். ஆக காஃபிர்களுடன் ஏன் கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள் என்பது ஆண்டவனுக்குத் தான் தெரியும் போலும்! முஸ்லீம்களுக்கு மதம் தான் முக்கியம், அதாவது இஸ்லாத்தை என்றைக்கும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஆனால், இப்படி அரசியலுக்காக, அவர்கள் நிலைமாறி போகும் போக்கு எதனைக் காட்டுகிறது? மதக்கொள்கைகளை நீர்த்து விடுகின்றனரா அல்லது சமரசம் செய்து கொள்கின்றனரா? இஸ்லாத்தில் அதற்கு இடம் உண்டா? இதை பயங்கரமான அரசியல் சூழ்ச்சி என்று தான் சொல்லவேண்டும்.

Fight among the mohammedan parties in Tamilnaduகாபிரை வைத்து, காபிரை வீழ்த்தலாம் என்ற சித்தாந்தம்: காஃபிர்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு காஃபிர்களை ஒழித்துக் கட்டலாம் என்றால், அவ்வாறு கூட்டு வைத்துக் கொள்ளலாம் என்று உள்ளாதா என்ன? “எதிரியின் எதிரி” நண்பன் என்று இந்த விரோதிகள் ஒன்றாக கூடியுள்ளனர். அதாவது, காபிரை வைத்து, காபிரை வீழ்த்தலாம் என்ற சித்தாந்த போலிருக்கிறது. குரானில், ஹதீஸில், ஷரீயத்தில் அத்தகைய கொள்கை உள்ளது என்று எடுத்துக் காட்டியுள்ளனர் போலும். கருணாநிதி போன்றவர்களுக்கு செக்யூலரிஸம் என்று பேசினாலும், பி.ஜே.பியுடன் கூட்டு வைத்துக் கொண்டு நன்றாக சந்தோஷமாகத்தான் இருந்தனர். அரசாட்சி, அதிகாரம் பணம், புகழ் வரவேண்டும் அவ்வளவே தான்! ஆனால், இப்பொழுது, திமுக காங்கிரசுடன் சேர்ந்து விட்டது. அதாவது, ஊழல்- ஊழலோடு ஐக்கியமாகி விட்டது. இதே போல மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் மதவாதக் கட்சிகளுடன் தாராளமாக கூட்டு வைத்துக் கொண்டு நாடகம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

SDPI, MMK, IUML all in DMK 2016கருணாநிதியும் முஸ்லிம் கட்சிகளும் (மார்ச்.21, 2016): “இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உங்களோடு நீண்ட நாட்களாக கூட்டணியிலே உள்ள கட்சி. இப்போது மனிதநேய மக்கள் கட்சி உங்கள் கூட்டணியிலே சேருகிறது. அதனால் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு உள்ள இடம் குறையுமா?,” என்று கருணாநிதியிடம் கேட்டபோது, “குறையாது” என்று பதிலளித்துள்ளார்[1]. “இடவொதிக்கீடு” பாணியில், தனித்தனியாக ஒதுக்கீடு செய்வாரா அல்லது அருந்ததியரை / எஸ்.சிக்களை ஏமாற்றியது போல, உள்-ஒதுக்கீடு செய்து ஏமாற்றுவாரா? அதாவது, முஸ்லிம் கட்சிகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ள சமயோஜிதமாக கூறியுள்ளது தெரிகிறது[2]. நாளைக்கு, திமுகவுக்கு பாதகமான தொகுதிகளை இவர்களுக்கு ஒதுக்கி விட்டு, கணக்குக் காட்டிக் கொள்ளலாம். முஸ்லிம்களால் ஜெயிக்க முடியும் என்ற தொகுதிகளை தாம் அவர்களுக்குக் கொடுப்பது என்பதை யுக்தியாகக் கொண்டுள்ளனர். அதிலும், அதிமுக மற்றும் திமுக கட்சியினர், கூட்டணி முஸ்லிம் கட்சி வேட்பாளருக்குப் பதிலாக, தமது கட்சி முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில், அரசியல் கட்சிகளுக்கு ஆதாயம் என்று நினைத்தாலும், வெற்றி பெற்றப் பிறகு, முஸ்லிம் முஸ்லிமாகதான் நடந்து கொள்ளும் போது, மதவாதத்திற்கு திராவிடக் கட்சிகளும் துணைபோய் கொண்டிருக்கின்றன.

2011 அதிமுக, ம்மக ஒப்பந்தம்அதிமுகவிலிருந்து திமுக கூட்டணியில் தாவியுள்ள மனிதநேய மக்கள் கட்சி (மார்ச்.19, 2016): தமிழகத்தில் வரவிருக்கும் தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்[3]. அதிமுகவிலிருந்து, திமுகவுக்குத் தாவியிருப்பது நோக்கத்தது[4]. முஸ்லிம் கட்சியினர், இவ்வாறு அதிமுக-திமுக கூட்டணிகளில் தாவி-தாவி விளையாடிக் கொண்டிருக்கும் “சர்க்கஸ் கூத்துகளை” மக்கள் கவனிக்க வேண்டும். இதில் முஸ்லிம் கட்சிகளுக்கு கவலையே இல்லை, ஏனெனில், அவர்கள் எப்படியாவது சாதித்துக் கொள்கிறார்கள். ஆனால், திராவிடக் கட்சிகளின் ஜனநாயகமற்ற, கொள்கையற்ற, சித்தாந்தம் மறந்த வேசி அரசியலை கவனிக்க வேண்டும். தமிழக சட்டப்பேரவை தேர்தல் மே 16-ல் நடைபெறவிருக்கிறது. பலமுனைப் போட்டி காணும் இத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ansar, Jawahirullaஸ்டாலினை ஜவாஹிருல்லா சந்தித்து பேசியது: இந்நிலையில், சென்னையில் 19-03-2016 அன்று (சனிக்கிழமை) கூட்டணி குறித்து ஸ்டாலினை அவரது இல்லத்தில் ஜவாஹிருல்லா சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பேச்சுவார்த்தையில் சுமுகமான உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இணைந்து போட்டியிடும்” என்றார்[5]. ஜவாஹிருல்லா தலைமையில் செயல்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கடந்த 2009-ம் ஆண்டு மனிதநேய மக்கள் கட்சியானது. அப்போது நடந்த லோக்சபா தேர்தலில் மமக தனித்து போட்டியிட்டது. 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் மமக இணைந்தது. அக் கட்சிக்கு ராமநாதபுரம், ஆம்பூர், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் ராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லாவும், ஆம்பூரில் அஸ்லம் பாஷாவும் வெற்றி பெற்றனர். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட தமீமுன் அன்சாரி தோல்வி அடைந்தார்[6].

IUML conference, Trichy entrance 24-11-2015 those who selectedதிமுக தலைமையிலானமதசார்பற்ற கூட்டணி” இறைவன் நாடினால் நிச்சயம் வெற்றிபெறும்: திமுக கூட்டணியில் முஸ்லிம்களின் அடிப்படைவாத-தீவிரவாத கட்சியான எஸ்டிபிஐ இணைந்துள்ளது. இது பற்றி அதன் தலைவர் தெஹலான் பாகவி செய்தியாளர்களிடம் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான “மதசார்பற்ற கூட்டணி” இறைவன் நாடினால் நிச்சயம் வெற்றிபெறும். இந்த கூட்டணி யில் மதசார்பற்ற கட்சிகள் இணைந்து வலுவான கூட்டணியாக மாற்ற முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். எஸ்டிபிஐ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி இணைந்துள்ள திமுக கூட்டணி மதசார் பற்றகூட்டணியாம். தமிழர்களை எவ்வளவு வடிகட்டின முட்டாள்களாக நினைத்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது தமாஷாகத்தான் இருக்கிறது. அப்படி தமிழக மக்கள்களை மூடர்களாக மாற்றி வைத்துள்ளது திராவிட போலி நாத்திக கூட்டங்கள். முஸ்லிம்களின் நலனுக்காக மட்டும் வரிந்து கட்டி கொண்டு செயல்படும் இயக்கங்களான தவ்கீத்ஜமாத், எஸ்டிபிஐ, தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் அரசியல் பிரி வான மனித நேயமக்கள் கட்சி ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தமிழகத்தில் மதவாத பிஜேபியை வளரவிட மாட்டோம் என்று சொல்வது, வேடிக்கைதான்.

05-karunanidhi-iuml-head-khadeவிஜயகாந்தை மிரட்டிய எஸ்டிபிஐ திமுக கூட்டணியில் சேர்ந்தது (19-03-2016): சென்ற மாதம் பிப்ரவரி 21ம் தேதி விஜயகாந்த் பாஜகவுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தியது ஞாபகம் கொள்ளலாம்[7]. தெஹலான் பாகவி, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:  “234 தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு எஸ்டிபிஐ கட்சி வளர்ச்சி அடைந்துள்ளது. எஸ்டிபிஐ இடம்பெற்றுள்ள கூட்டணியே வெற்றிபெறும். தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாஜகவுடன் கூட்டணி அமைக்கக் கூடாது,” என்றெல்லாம் பேசியது உள்ளே விவகாரம் உள்ளது என்பதுதான் தெரிகிறது[8]. அப்படி 234 தொகுதிகளிலும் எந்த விதத்தில் வளர்ச்சி அடைந்துள்ளனர் என்பதனை ஆராய வேண்டும். இப்பொழுதோ, 23-03-2016 அன்று விஜயகாந்த், முட்டாள்தனமாக மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்திருப்பது அதை விட வேடிக்கையான விசயமாக இருக்கிறது. இது நிச்சயமாக ஓட்டுகளைப் பிரிக்கும் யுக்திதான். ஒன்று பிஜேபி அடியோடு ஓரங்கட்டப்பட்டு விட்டது. அரசியல் தெரியாத தமிழக பிஜேபிக்காரர்களின் நிலை இதுதான் என்று தெரிந்து விட்டது. இனி அமித் ஷா வந்து என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

23-03-2016

[1] தினத்தந்தி, தி.மு.. கூட்டணிக்கு தே.மு.தி.. வரலாம்: இன்னும் நம்பிக்கையை இழக்கவில்லைகருணாநிதி பேட்டி, பதிவு செய்த நாள்: செவ்வாய், மார்ச் 22,2016, 1:26 AM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், மார்ச் 22,2016, 5:45 AM IST.

[2] http://www.dailythanthi.com/News/India/2016/03/22012602/Didnt-lose-hope-of-DMDK-joining-DMK-alliance-Karunanidhi.vpf

[3] தமிழ்.இந்து, திமுக கூட்டணியில் மமக தேர்தலை எதிர்கொள்ளும்: ஜவாஹிருல்லா,  Published: March 19, 2016 14:39 ISTUpdated: March 19, 2016 14:39 IST

[4] தமிழ்.ஒன்.இந்தியா, திமுக கூட்டணியில் இணைந்தது ..: மு.. ஸ்டாலினுடான பேச்சுவார்த்தைக்குப் பின் ஜவாஹிருல்லா அறிவிப்பு, By: Mathi, Updated: Saturday, March 19, 2016, 17:46 [IST].

[5] http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%95

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/mmk-join-dmk-alliance-jawahirullah-meets-mk-stalin-249330.html

[7] தினமணி, பாஜகவுடன் தேமுதிக கூட்டணி சேரக் கூடாது: எஸ்டிபிஜ கட்சி வலியுறுத்தல், By திண்டுக்கல், First Published : 22 February 2016 08:58 AM IST

[8]http://www.dinamani.com/edition_madurai/dindigul/2016/02/22/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A/article3290737.ece

தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகள் உருவானது, மாறியது, கூட்டணியில் செயல்பட்டது (1960-2013) – பிஜேபியுடன் முஸ்லிம் கட்சி கூட்டு பற்றி ஒரு அலசல் கட்டுரை (1)

திசெம்பர் 15, 2013

தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகள் உருவானது, மாறியது, கூட்டணியில் செயல்பட்டது (1960-2013) – பிஜேபியுடன் முஸ்லிம் கட்சி கூட்டு பற்றி ஒரு அலசல் கட்டுரை (1)

முஸ்லிம் கட்சி - பிஜேபி கூட்டு

தமிழகத்தில்  பிஜேபியின்  கூட்டணி  அல்லது  பிஜேபியின்  கூட்டு: 2014 பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழ்நாட்டில் பா.ஜனதா தலைமையில் பல்வேறு கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆகவே, இதில் திமுக, அதிமுத தங்களுக்கே உள்ள தோரணையில் இருப்பதினால், அவற்றுடன் கூட்டு இல்லை என்று தீர்மானமாகத் தெரிகிறது[1]. தமிழகத்தில், இதர திராவிடக் கட்சிகளை இழுக்கும் முயற்சியில், காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் இதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார். பா.ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க. சேர்வது உறுதியாகி இருக்கிறது. பா.ம.க., தே.மு.தி.க. கட்சிகளும் இதில் சேரும் என்று கூறப்படுகிறது. இது தவிர வேறு கட்சிகளையும் இந்த கூட்டணியில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

முஸ்லிம் கட்சிகள் தமிழகத்தில் கூட்டு

 

http://paraiyoasai.wordpress.com/8-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/

இத்தளத்தில் இருக்கும் படம் எடுத்தாளப்பட்டுள்ளது.

முஸ்லிம்களும், பிஜேபியும்: அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் இந்த நிலையில் பாரதிய ஜனதா கூட்டணியில் சேர்ந்துள்ளது[2] தமிழகத்தில் மட்டுமல்ல தேசிய அளவிலும், முஸ்லிம்களின் அணுகுமுறையில் மாற்றம் இருப்பதைக் காணமுடிகிறது. ஆனால், முஸ்லிம்கள் மற்ற விசயத்தில் ஜாக்கிரதையுடன் தான் பிஜேபியை அணுகுவார்கள் என்பதை அறியலாம். அப்பாஸ் நக்வி போன்ற முஸ்லிம் தலைவர்கள் பிஜேபியில் நெடுங்காலமாக இருந்து வருகின்றனர். ஆனால், திராவிடப் பின்னணியில், ஒரு முஸ்லிம் கட்சி, பிஜேபியுடன் எப்படி செயல்படும் என்று பார்க்கவேண்டும். அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பது, முன்னர் என்.டி.ஏவில் திமுக இருந்தபோது, அதனுடன் இருந்த முஸ்லிம்கட்சிகள் எதிர்க்காமல் தொடர்ந்து திமுகவுடன் ஒட்டிக் கொண்டிருந்ததைப் பார்க்கமுடிந்தது.

அனைத்து  இந்திய  முஸ்லிம்  முன்னேற்ற  கழகம்  பிஜேபிக்கு  ஆதரவு  கொடுப்பது[3]: அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் கட்சியின் தலைவர் சதக்கத்துல்லா, சென்னை பா.ஜனதா அலுவலகமான கமலாலயத்தில் வெள்ளிக்கிழமை (13-12-2013) நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் பொன். ராதாகிருஷ்ணனிடம் தனது கட்சியின் ஆதரவு கடிதத்தை வழங்கினார்[4]. இந்த நிகழ்ச்சியின் போது, காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன், பா.ஜனதா மாநில செயலாளர் வானதி சீனிவாசன், செயற்குழு உறுப்பினர் கே.டி. ராகவன் ஆகியோர் உடன் இருந்தனர். இது குறித்து பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: “பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சதக்கத்துல்லா தலைமையிலான அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் இணைந்துள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடிக்கு ஆதரவாக முஸ்லிம் மக்களிடம் அவர்கள் ஆதரவு திரட்டுவார்கள்.  டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கியவீடுதோறும் மோடி, உள்ளம்தோறும் தாமரைஎன்ற பாத யாத்திரைக்கு தமிழகத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 700-க்கும் அதிகமான கிராம பஞ்சாயத்துக்களில் இந்த யாத்திரை நிறைவு பெற்றுள்ளது. வீடுகள்தோறும் சென்று மக்களை நேரடியாகச் சந்திக்கும்போது மக்களின் பிரச்னைகள், கிராமங்களின் பிரச்னைகளை அறிந்து கொள்ள முடிகிறது. இந்த பாத யாத்திரை வரும் 22-ஆம் தேதி வரை நடைபெறும்”, இவ்வாறு அவர் கூறினார்[5]. தமிழ்நாட்டில் முதல் முறையாக முஸ்லிம் கட்சி ஒன்று பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்திருப்பது, அந்த கட்சியினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது[6]. தமிழ்நாட்டில் முதல் முறையாக முஸ்லிம் கட்சி ஒன்று பாஜகவுக்கு ஆதரவு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது[7].

பிரதமர்  ராஜிநாமா  செய்ய  வேண்டும்பிஜேபி  ராதாகிருஷ்ணன்  கோருவது: உள்ளூர் விசயங்களை, இங்கு பிஜேபி பேசி வருவதைக் காணலாம். “தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றாலும் இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது போன்ற கொடுமைகள் தொடர்கின்றன. இப்போது மீண்டும் 180-க்கும் அதிகமான மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவின் இறையாண்மைக்கு இலங்கை அரசு சவால் விடுத்துள்ளது. இந்திய மீனவர்களை ஏன் காப்பாற்ற முடியவில்லை என்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் வேண்டும். இல்லையெனில் அவர் ராஜிநாமா செய்ய வேண்டும்”, என்றார் பொன். ராதாகிருஷ்ணன். இருப்பினும், இலங்கை அனுதாபிகள், அபிமானிகள் இதைப் பற்றி ஒன்றும் கண்டுகொள்ளாமல் இருப்பது நோக்கத்தக்கது.

மெரீனாவில்   நாளை  ஒற்றுமை   ஓட்டம்[8]: முன்னாள் துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேலுக்கு குஜராத்தில் 182 மீட்டர் உயரத்தில் உலகிலேயே மிக உயரமான இரும்பு சிலை அமைக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் 7 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களில் இருந்து விவசாயிகள் பயன்படுத்திய இரும்புப் பொருள்கள் பெறப்பட்டு அதன் மூலம் இந்த சிலை அமைக்கப்பட உள்ளது. இது குறித்த செய்தியை மக்களிடம் கொண்டு செல்வதற்காக பட்டேலின் நினைவு தினமான ஞாயிற்றுக்கிழமை (டிச. 15) காலை 8 மணிக்கு நாடு முழுவதும் சுமார் 1,500 இடங்களில் ஒற்றுமை ஓட்டம் நடைபெறவுள்ளது. சென்னை மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை நடைபெறும் இந்த ஒற்றுமை ஓட்டத்தில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆர். நடராஜ், பாலச்சந்தர், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பால்கனகராஜ், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, திரைப்படத் தயாரிப்பாளர் எஸ், தாணு, நடிகை ரேணுகா உள்ளிட்டோர் இதில் பங்கேற்க இருப்பதாக பட்டேல் சிலை அமைப்புக் குழுவின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

அரசியலில்  தீண்டத்தகாதக்   கட்சி  எதுவும்  இல்லை: அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பது போல, அரசியலில் தீண்டத்தகாதக் கட்சி எதுவும் இல்லை என்ற தத்துவமும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தேவையான போது, இந்திய அரசியல் கட்சிகள், பின்பற்றி வருகின்றன. செக்யூலரிஸம் எப்படி அவரவர்களுக்கு ஏற்றபடி மாற்றியமைத்துக் கொண்டு, அனுபவித்து வருகின்றனரோ, அதேபோலத்தான் இந்த அரசியல் தீண்டாமை, ஒதுக்குதல் முதலியனவும். காங்கிரஸ், நாட்டைத் துண்டாடிய முஸ்லிம் லீக், கிருத்துவ மதவெறிக்கட்சி கேரளா காங்கிரஸ் முதலியோர்களுடன் கூட்டு வைத்துக் கொள்ளும்போது, எந்த அறிவாளியும், அரசியல் பண்டிதனும் அதனைத் தட்டிக் கேட்டதில்லை. ஆனால், பிஜேபி அகாலிதளத்துடன் கூட்டு வைத்துக் கொண்டால், அதனை மதவாதம் என்று கூக்குரல் இட ஆரம்பித்து விடுகிறார்கள். சிவாஜி சிங் சௌஹான் பதவி ஏற்கும் விழாவில், சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டுள்ளார். ஜெகன் மோகன் ரெட்டியும் “மோடி தீண்டத்தகாதவர் அல்ல”, என்கிறார்[9], தங்களையும், தங்கள் கொள்கைகளையும் ஏற்கும் யாருடனும் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாக ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்[10]. டில்லியில் நிருபர்களிடம் பேசிய அவர், மோடி குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், அரசியலில் யாரும் தீண்டத்தகாதவர்கள் அல்ல என்றும், தங்களையும், தங்கள் கொள்கைகளையும் ஏற்கும் யாருடனும் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்[11].

வேதபிரகாஷ்

© 15-12-2013


[5] தினமணி, பாஜககூட்டணியில்முஸ்லிம்முன்னேற்றக்கழகம், By dn, சென்னை, First Published : 14 December 2013 03:29 AM IST

[6] மாலைமலர், தமிழ்நாட்டில்முதல்முறையாகபா.ஜனதாகூட்டணியில்முஸ்லிம்கட்சி: பொன்.ராதாகிருஷ்ணன்முன்னிலையில்சேர்ந்தது, பதிவு செய்த நாள்: சனிக்கிழமை, டிசம்பர் 14, 10:21 AM IST.

[11] தினமலர், மோடிதீண்டத்தகாதவர்அல்ல: ஜெகன், பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2013,18:31 IST