சமத்துவம், சகோதரத்துவம், எல்லோரும் சமம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்த முஸ்லிம்கள் இப்பொழுது சதவீதம் ரீதியில் இட-ஒதுக்கீடு கேட்பது ஏன்?
சமத்துவம், சகோதரத்துவம், பேசும் மதங்களில் திடீரென்று எப்படி ஜாதி வந்தது?: சமத்துவம், சகோதரத்துவம், எல்லோரும் சமம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம், இப்பொழுது சதவீதத்தில் இட-ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்க ஆரம்பித்துள்ளன. எங்களிடமும் ஜாதி, ஜாதித்துவம், பிரிவுகள் உள்ள என்று ஒப்புக் கொள்ளும் வரைக்கு வந்து விட்டன. இதுவரையில் ஏன் இன்னும், இந்துமதம் தான் ஜாதிய கட்டமைப்பிற்கு காரணனம் என்று சொல்லிக் கொண்டு வரும் நிலையில், இந்த பிரகடனங்கள் செய்யப் பட்டு வருகின்றன. கிருத்துவ டினாமினேஷன்கள் இனி ஜாதிப் பிரிவுகள் ஆகலாம். சுன்னி, ஷியா, அஹமதியா, போரா, போன்றவை இச்லாமிய ஜாதிகள் ஆகலாம். சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பிற்பட்டுள்ள வகுப்பினர்களுக்கு (Socially and educationally backward classes) இட-ஒதுக்கீடு என்பதை, ஜாதி ரீதியில் திரித்து பேசி, விளக்கம் கொடுக்கப் பட்டு வருகிறது. OBC (Other Backward Classes) என்றதிலும், மதரீதியில் இட-ஒதுக்கீடு செய்யப் பட்டு வருகிறது. அதில், முஸ்லிம்கள் சமத்துவம், சகோதரத்துவம், எல்லோரும் சமம் பெற்று வருகின்றனர்.
50% / 69% கணக்கை சுற்றி வளைக்க உள்-இட-ஒதுக்கீடு கொடுத்தது: அ.தி.மு.க, 2006 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டுக்கு ஆணையம் அமைத்தது[1]. மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு, 2007 செப்டம்பர் 15 அன்று பிற்படுத்தப்பட்டோருக்கான 30% இடஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீடாக 3.5%-ஐ முஸ்லிம்களுக்கும், 3.5%-ஐக் கிறிஸ்தவர்களுக்கும் வழங்கியது[2]. இது இந்திய அரசியல்நிர்ணயச்சட்டப் பிரிவுகளுக்கு எதிரானது என்றாலும், மற்ற மாநிலங்களில் இத்தகைய இட-ஒதுக்கீடு கொடுக்கப் பட்டு, எதிர்க்கப் பட்டு, உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப் பட்ட வழக்கு நிலுவையிலுள்ளது. ஆகையால், கொடுத்து வைப்போம், அவர்களும் இட-ஒதுக்கீடு பெற்று அனுபவிக்கட்டும். பிறகு, கொடுத்து விட்டதால், அவர்கள் அனுபவித்து வருவதால், அதனை திரும்பப் பெறக்கூடாது என்றும் மேல்முறையீடு செய்யலாம், அரசியல் ரீதியில், எதிர்ப்பு மனு இருக்காது. ஆக, அப்படியே அமைதியாக விவகாரத்தை மூடி விடலாம் என்றும் திட்டம் போட்டிருக்கலாம்.
முஸ்லிம்களின்மக்கள்தொகையும், இட–ஒதுக்கீடும்: முஸ்லிம்களின் மக்கள் தொகை முஸ்லிம்களின் மக்கள் தொகை நாட்டில் முஸ்லிம்களின் மக்கள் தொகை, கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து 2011-ம் ஆண்டு வரை 24 சதவீதம் அதிகரித்துள்ளது[3]. 2022ல் மேலும் உயர்ந்துள்ளது. போதாகுறைக்கு, பன்களாதேசத்திலிருந்து வேறு உள்ளே வந்து கொண்டிருக்கிறார்கள். அஸாமில் இதுவே 5 ஆண்டுகளுக்கும் மேலான பிரச்சினையாகி, இப்பொழுது அமுக்கப் பட்டு விட்டது. இதன் மூலம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்களின் சதவீதம் 13.4-ல் இருந்து 14.2 ஆக உயர்ந்துள்ளது[4]. பிற்படுத்தப்பட்ட இசுலாமிய வகுப்பினர், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய இசுலாமியர்களின் மேம்பாட்டிற்காக, கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் தமிழ்நாடு அரசு அரசாணை எண். 85. பிற்படுத்தப்பட்டவகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நாள் 29.7.2008 இன் படி பிற்படுத்தோர் வகுப்பினர்க்கான 30% இட ஒதுக்கீட்டில் இசுலாமிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு 3.5% உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1992ல் இது தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்பில், மத்திய அரசின் பணியிடங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்தைத் தாண்டிச் செல்லக்கூடாது என உத்தரவிட்டது. இதன் காரணமாக, 1980ல்இருந்து தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுவந்த இட ஒதுக்கீட்டிற்கு சிக்கல் ஏற்பட்டது.
முஸ்லிம்களுக்கு 7 சதவீதஇடஒதுக்கீடு; இது குறித்து ஏப்ரல் 2022ல், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில செயலாளர் பைசல் அகம்மது கூறியதாவது: “இந்தியாவில் 2001ம்ஆண்டுமக்கள்தொகைகணக்கெடுப்பின்படி 13.4 சதவீதம்முஸ்லிம்கள்உள்ளனர்[5]. ஐ.ஏ.எஸ்பணியில் 3 சதவீதம், பட்டப்படிப்புபடித்தவர்கள் 3 சதவீதம், ரயில்வேயில் 4.5 சதவீதம்முஸ்லிம்கள்இருந்துவருகின்றனர்[6].இந்நிலையில் 2007ம்ஆண்டுநீதிபதிரங்கநாத்மிஸ்ராகமிஷன்முஸ்லிம்களுக்கு 10 சதவீதம்தனிஇடஒதுக்கீடுவழங்கவேண்டும்எனபரிந்துரைசெய்தது. இந்தியசமூகங்களுக்குஇடையேஏற்றத்தாழ்வுகளைநீதிபதிசச்சார்கமிஷன்கண்டறிந்தது.இந்தஇருகமிஷன்களின்அறிக்கைகளும், பரிந்துரைகளும்கிடப்பில்போடப்பட்டுள்ளது. தேர்தல்நேரத்தில்மட்டும்இடஒதுக்கீடுஎன்றுமத்தியஅரசுமுஸ்லிம்களைஏமாற்றிவருகிறது.தமிழகத்தைபொறுத்தவரைகடந்த 2007ம்ஆண்டுமுஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம்தனிஇடஒதுக்கீட்டைதிமுகஅமல்படுத்தியது. தமிழகத்தில் 3.5 சதவீதஇடஒதுக்கீட்டைஏழுசதவீதமாகஉயர்த்தவலியுறுத்திபாப்புலர்பிரண்ட்ஆப்இந்தியாசார்பில்வரும் 22ம்தேதிசென்னை, தஞ்சை, கோவை, மதுரை, நெல்லைஆகியமண்டலங்களில்பேரணிமற்றும்ஆர்ப்பாட்டம்நடத்தப்படுகிறது”.
17-07-2022 அன்றுகோரிக்கை 20-12-2022 அன்றும் வைத்தது: ராமநாதபுரத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு மாவட்ட பொதுக்குழு கூட்டம் 17-07-2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் உமா் பாரூக் தலைமை வகித்தார். மாவட்டப் பேச்சாளா் பரகத் அலி வரவேற்றார். மாநில துணைத்தலைவா் ஆல்பா நசீா், மாநிலச் செயலாளா் முஹமது ஃபரூஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்[7]. முஸ்லிம்களுக்கு தமிழக அரசு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ராமநாதபுரத்தில் நடைபெற்ற தேசிய தவ்ஹீத் ஜமாஅத் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது[8]. இப்பொழுது மறுபடியும், 20-12-2022 அன்று இதே கோரிக்கையை, தவ்ஹீத் ஜமாத் வைத்துள்ளது. 7% எப்படி எங்கிருந்து வந்தது, எப்படி அமூல் படுத்தப் படும் என்று கவனிக்க வேண்டும்.
இஸ்லாம், ஜாதி, ஒதுக்கீடு: இஸ்லாத்தில்ஜாதிஇல்லைஎன்பதுகுரான்படிஅவர்களுடையநம்பிக்கை. இதற்கு எதிராக எந்த உண்மையான முஸ்லீமும் இஸ்லாத்தில் ஜாதி உண்டு, ஆகையால் அந்த அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடு என்று கேட்கமாட்டார்கள். ஆனால், இந்தியாவில் அத்தகைய ஏமாற்றுவேலையல் முஸ்லீம்கள் செய்து வருகிறார்கள். இப்பொழுது, வெளிப்படையாக கோரிக்கைகளும் வைக்கப் படுகின்றன. அதாவது குரானை மதிக்காமல், முஸ்லீம்கள் மாறாக செயல்பட்டு வருகிறர்கள். இங்கு அவர்களின் அல்லாவின் கோபத்தைப் பற்றிக் கவலைப் படுவது கிடையாது. முஸ்லீகளிடையே உள்ள முரண்பாடுகளை சிலர் எடுத்துக் காட்டியுள்ளனர். இறையியல் வல்லுனர்களும் அமைதியாகத்தான் இருக்கிறார்கள். 50% மற்ரும் 69% என்னாகும் என்று தான் கவனிக்க வேண்டும்.
இஸ்லாத்தில்முஸ்லீம்கள்எல்லோரும்ஒன்றா? இஸ்லாத்தில் சமத்துவம், தோளோடு தோள் தொட்டுக்கொண்டு, ஒட்டிக்கொண்டு, கட்டிக்கொண்டு இருப்போம், தொழுவோம்……………என்றெல்லாம் பேசி, பிர்ச்சாரம் செய்யும் வேலையில், எப்படி, இப்படியொரு கோரிக்கை இடுவர்? இஸ்லாத்தில் முஸ்லீம்கள் எல்லோரும் ஒன்றா, இல்லையா என்று அவர்கள் வெளிப்படையாக தமது சித்தாந்தத்தை சொல்லவேண்டிய நேரம் வந்து விட்டது. அவர்களது இறையியல் வல்லுனர்களே விளக்கம் கொடுக்கலாம். ஏனெனில், இரண்டு விதமாக பேசிவருவது மக்களுக்கு விசித்திரமாக உள்ளது. இருப்பினும் ஏதோ காரணங்களுக்காக இட-ஒதுக்கீடு கோரிக்கையை மட்டும் ஆதரிப்பது போலத் தெரிகிறது.
இந்தியர்களைஏமாற்றும்வேலை: அம்பேத்காரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை, இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தில் இல்லை, நேருவே ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் மதரீதியில் எங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்றால் என்ன விஷயம் என்று இந்தியர்களுக்கு விளங்கவில்லை. சட்டரீதியாக முடியாது என்பதனை, ஒரு அரசியல் கட்சி முடியும் என்று வாக்குறுதி கொடுப்பது, இப்படி அழுத்தத்தை ஏற்படுத்துவது, மக்களை ஏமாற்றுவது என்ற முறையில் செல்லும் இந்த விவகாரத்தை இந்தியர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். இப்பொழுது தலித் போர்வையில் எஸ்சி முஸ்லிம்களுக்கும் இட-ஒதுக்கீடு வேண்டும் என்றெல்லாம் கேட்கப் பட்டுள்ளது. மத்திய அரசு பரிசீலினையிலும் உள்ளது.
10 நாட்களில் 3-வதுசோதனை 10 நாட்களில் 3-வதுசோதனை – விட்டு–விட்டுநடக்கும்சோதனைகள்: சோதனை 20-11-2022 சனிக்கிழமை அன்று கார் வெடிப்பு வழக்குத் தொடா்பாக சென்னை, திருச்சியில் 6 இடங்களில் போலீஸார் சோதனை செய்து, பென்டிரைவ், மடிக்கணினி, கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்[1]. 10-11-2022 மற்றும் 15-11-2022 என்று சோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன[2]. கோவை உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக். 23-ஆம் தேதி சென்ற ஒரு காரில் இருந்த சிலிண்டா் வெடித்தது. இந்த சம்பவத்தில் அந்த காரை ஓட்டி வந்த அந்தப் பகுதியைச் சோ்ந்த ஜமேஷா முபீன் என்ற இளைஞா் உயிரிழந்தார். இது தொடா்பாக ஜமேஷா முபீன் கூட்டாளிகள் 6 பேரை கோவை போலீஸார் கைது செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக என்ஐஏ தமிழகம்,கேரளம் ஆகிய இரு மாநிலங்களில் 43 இடங்களில் கடந்த 10ஆம் தேதி [10-11-2022] ஒரே நேரத்தில் சோதனை செய்தது. இந்த வழக்கை விசாரித்த என்ஐஏ, ஐஎஸ் பயங்கரவாத உறுதி மொழி ஏற்ற ஜமேஷா முபீன், தற்கொலை தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தது. அதில் பல்வேறு முக்கிய ஆவணங்களும் கைப்பற்றியதாகவும் கூறப்பட்டது. அதேபோல், இந்த சம்பவத்தின்போது உயிரிழந்த முபினின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 75 கிலோ நாட்டு வெடிகுண்டுகள்தயாரிக்க பயன்படும் வேதிப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றை ஆன்லைன் மூலமாக வாங்கியதாக கைதானவர்கள் தரப்பில் முன்பு தெரிவிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்திருந்தனர்[3]. இருப்பினும் அதில் சில பொருட்களை சிவகாசியில் உள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வாங்கியிருக்கலாம் எனஎன்ஐஏ அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது[4]. இந்த வெடிப்பொருட்கள்-ரசாயனங்கள் பற்றி ஏற்கெனவே வாத-விவாதங்கள் காரசாரங்களில் முடிந்துள்ளன.
15-11-2022 அன்றுசோதனையில்ஆவணங்கள்பறிமுதல்: என்ஐஏ வழக்கின் விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையிலும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடா்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையிலும் சென்னை பெருநகர காவல்துறையினா் கடந்த 15ஆம் தேதி 5 இடங்களில் சோதனை செய்து, வெளிநாட்டு பணம்,ஆவணங்களை பறிமுதல் செய்தனா்.
20-11-2022 சனிக்கிழமைஅன்றுசென்னையில்சோதனை: இந்நிலையில் இரண்டாவது கட்டமாக சனிக்கிழமை 4 இடங்களில் போலீஸார் ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்[5].
இச் சோதனை –
சென்னை ஓட்டேரி எஸ்.எஸ்.புரத்தில் வசிக்கும் சாகுல் ஹமீது (31) வீடு[6],
வேப்பேரி ஈவெரா பெரியார் சாலையில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் எஸ்.எம்.புஹாரி (57) வீடு,
ஏழு கிணறு பகுதியில் பிடாரியார் கோவில் தெருவில் உள்ள உமா் முக்தார் (33) வீடு,
வி.வி.எம்.தெருவில் உள்ள முகமது ஈசாக் கெளத் (33) வீடு
ஆகிய இடங்களில் நடைபெற்றது. பல மணி நடைபெற்ற சோதனையில் 4 வீடுகளிலும் இருந்து 12 பென் டிரைவ்கள், 14 கைப்பேசிகள்,ஒரு மடிக்கணினி, 2 கையடக்க கேமராக்கள், ஒரு சிறிய ரக சூட்கேஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இவை அனைத்தும் தடயவியல்துறை ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் அடிப்படையில் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 102-கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது[7]. கடந்த 10 நாட்களில் 3-வது முறையாக சென்னையில் என்ஐஏ சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது[8].
20-11-2022 சனிக்கிழமைஅன்றுதிருச்சியில்சோதனை: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடா்பாக திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த இருவா் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது[9]. இதில், –
ஷாகுல் ஹமீத் (வயது 25)- இனாம்குளத்தூா் நடுத்தெருவில் வசிக்கும் ஆவின் நிறுவன ஒப்பந்த தொழிலாளி,
என இருவா் மீது சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்தனா். இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஐ.எஸ் அமைப்பின் முகநூல் பக்கத்தை லைக் செய்ததாகக் கூறப்படுகிறது[10].
இதையடுத்து, ஜீயபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாரதிதாசன் தலைமையில், இரண்டு காவல் ஆய்வாளா்கள், 13 உதவி ஆய்வாளா்கள், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் மோப்பநாய் உதவியுடன் இனாம்குளத்தூருக்கு சனிக்கிழமை வந்தனா். சந்தேகப்படும் நபா்கள் இருவா் தங்கியிருந்த வீடுகளிலும், அதன் சுற்றுப் பகுதிகளிலும் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இரு இடங்களிலும், சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் இருவரது வீடுகளில் இருந்து எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. இருப்பினும், இருவரது சமூக வலைதள பகிர்வுகள் குறித்தும், தொலைபேசி தொடா்புகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா். “இச்சோதனையில் ஹார்டு டிஸ்க்குகள், 2 செல்போன்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது,” என்று நக்கீரன் குறிப்பிடுகிறது.
17-11-2022 முதல் 19-11-2022 வரைகம்பத்தில்சோதனை–விசாரணை: கம்பத்தில் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சோ்ந்த நிர்வாகிகள் 5 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 18-11-2022, வெள்ளிக்கிழமை அன்று விசாரணை நடத்தினா்[11]. தீவிரவாதிகள் அமைப்புடன் தொடா்பு இருப்பதாக பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் என மாநிலத்தில் 16-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை போலீஸார் கடந்த செப். 22-இல் சோதனை நடத்தினா். இதில் அந்த அமைப்பின் மண்டலச் செயலாளா் பொறுப்பில் இருந்த தேனி மாவட்டம், கம்பம் தாத்தப்பன்குளத்தைச் சோ்ந்த யாசா் அராபத் (32) என்பவரைக் கைது செய்தனா். அதன் பின்னா் கம்பத்தில் செயல்பட்ட மாவட்ட அலுவலகத்துக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2 நாள்களாக கம்பத்தில் அந்த அமைப்பைச் சோ்ந்த 5 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை காவல் ஆய்வாளா் அருண் மகேஷ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், 3-ஆவது நாளாக 19-11-20022 அன்று வெள்ளிக்கிழமையும் அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது: “கம்பத்தில்ஏற்கெனவேகைதுசெய்யப்பட்டவருடன், சிலருக்குத்தொடா்புஇருப்பதுதெரியவந்தது. அதனடிப்படையில், கம்பத்தில் 5 பேரிடம்விசாரணைநடத்திவருகிறோம். முக்கியஆவணங்கள்கிடைத்துள்ளன. தொடா்ந்துவிசாரணைநடைபெறும்,” என்றனா்[12].
[1] தினமணி, கார்வெடிப்புவழக்கு: சென்னை, திருச்சியில்போலீஸார்சோதனை, By DIN | Published On : 19th November 2022 11:15 PM | Last Updated : 20th November 2022 04:51 AM.
[3] தமிழ்.இந்து, கோவைகார்சிலிண்டர்வெடிப்பு: மேலும் 5 பேரிடம்என்ஐஏவிசாரணை, செய்திப்பிரிவு, Published : 19 Nov 2022 06:21 AM; Last Updated : 19 Nov 2022 06:21 AM.
[7] தமிழ்.இந்து, 3-வதுமுறையாகசென்னையில் 4 இடங்களில்என்ஐஏசோதனை: ஐஎஸ்ஐஎஸ்உடன்தொடர்பாஎனவிசாரணை, செய்திப்பிரிவு, Published : 20 Nov 2022 04:20 AM; Last Updated : 20 Nov 2022 04:20 AM
[9] நக்கீரன், என்.ஐ.ஏதிடீர்சோதனை; மூன்றுமணிநேரசோதனைக்குப்பிறகுஹார்டுடிஸ்க்குகள்பறிமுதல், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 19/11/2022 (20:30) | Edited on 19/11/2022 (20:46).
[11] தினமணி, கம்பத்தில்பாப்புலா்ஃப்ரண்ட்ஆஃப்இந்தியாநிா்வாகிகள் 5 பேரிடம்என்ஐஏவிசாரணை, By DIN | Published On : 18th November 2022 11:36 PM | Last Updated : 18th November 2022 11:36 PM.
தமிழக அரசு வேலை வாங்கித் தருவதாக, பயிற்சி, அரசு ஆணை சகிதம் கொடுத்து, நூதன மோசடி! தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் உட்பட மூன்று பேர் கைது!
1970 களிலிருந்துநடந்துவரும்வியாபாரம்: தமிழகத்தில், தமிழக அரசியல்வாதிகளின் தொடர்பு, நேரிடையாக அல்லது மறைமுகமாக வைத்திருந்து, அரசுத்துறைகளில் வேலை வாங்கித் தருகிறேன் என்று லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு, வேலை வாங்கிக் கொடுப்பதும், பல நேரங்களில் வேலை வாங்கிக் கொடுப்பதாக ஏமாற்றுவதும் வாடிக்கையான விவகாரமாக 1970களிலிருந்து இருந்து வருகிறது. இதில் திராவிடக் கட்சிகள் எதுவும் சளைத்தவை அல்ல. குறிப்பாக, பாஸ்போர்ட், விசா, ஃபோரக்ஸ், டிராவல்ஸ் என்ற போர்வையில் ஆரம்பித்து, பணி நிரந்தரம் செய்வது, பணி உயர்வு, இடமாற்றம் போன்றவற்றில் ஈடுபட்டு, தொடர்ந்து கோடிகளில் சம்பாதிப்பது, ஒரு வேலையாகவே இருந்து வந்துள்ளது. அதற்காக அலுவலகம் எல்லாம் வைத்து, நடத்தி, ஏமாற்றுவது என்பது கைவந்த கலை. இதில் மாட்டிக் கொள்பவகள் சிலர், ஆனால், மாட்டிக் கொள்ளாமல், பரம்பரையாக செய்து வரும் நபர்களும், கம்பனிகளும் இருக்கின்றன. இதற்கான ஏஜென்டுகள், எடுபிடிகள் அங்கங்கு இருந்து, ஆள் பிடித்துக் கொண்டு வருவதும் சகஜமான விசயமே.
போலியானஅரசுஆணைநகல்களைகொடுத்துஅரசுவேலைவாங்கிதருவதாகமோசடி: சென்னையில் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி பொதுமக்களிடம் பணம் வாங்கி மோசடி செய்யும் கும்பலின் கைவரிசையை போலீசாரால் ஒழித்துக்கட்ட முடியவில்லை. அரசு வேலையில் மோகம் கொண்டு அதற்காக குறுக்கு வழியில் பணம் கொடுப்பவர்களை இந்த கும்பல் தங்கள் வலையில் விழவைத்து விடுகிறது. இதுபோன்ற ஒரு மோசடி கும்பலின் ஆசை வலையில் சிக்கி 85 பேர் பணத்தை வாரி கொட்டி உள்ளனர்[1]. அந்த மோசடி கும்பல் வேலை கிடைத்து விட்டது என்பது போன்ற தோற்றத்தை காட்ட, போலியான அரசு ஆணை நகல்களை கொடுத்து ரூ.4½ கோடி அளவுக்கு பணத்தை சுருட்டியதாக முதலில் புகார் கூறப்பட்டது[2]. ஏமாந்தவர்கள் பட்டியலில் உள்ள ஆனந்தி என்ற பெண் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து முறையிட்டார்[3]. கமிஷனர் சங்கர் ஜிவால் இந்த மோசடி கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்ய உத்தரவிட்டார்[4]. அதன்படி மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி, துணை கமிஷனர் நாகஜோதி ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கலாராணி வழக்குப்பதிவு செய்யப்பட்டது[5]. கடந்த மாதம் ஜூன் 30-ம் தேதி 3 பேரையும் கைது செய்தனர்[6].
அரசியல்தொடர்பு – முஸ்லீம்லீக்கட்சித்தலைவர்ஷேக்தாவூத்தின்மகள், மகளிர்அணிதலைவர்: சென்னை, திருவான்மியூரை சேர்ந்தவர் ரேஷ்மா தாவூத்,35 (Reshma Dawood, State secretary of the Tamil Manila Muslim League). இவர், தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் ஷேக் தாவூத்தின் மகள். இவரும், வளசரவாக்கம், காமராஜர் சாலையை சேர்ந்த நந்தினி, 37; இவரது கணவர், அருண் சாய்ஜி, 36 ஆகியோர் (of Epic Lakshmi Condominium, Valasaravakkam.), அரசு வேலை வாங்கித் தருவதாக, 150க்கும் மேற்பட்டோரிடம், 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர்[7]. முன்னதாக நடத்தப்பட்ட விசாரணையில் ரேஷ்மா தாவூத் மீது ஏற்கெனவே 2016, 2017, 2019 ஆம் ஆண்டுகளில் மத்திய குற்றப்பிரிவு, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வேலைவாய்ப்பு மோசடி, குற்றம் கருதி மிரட்டல் ஆகிய வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது[8]. ஆக, இந்த நதினி-சாய்ஜி என்பது, ஒரு முகத் தோற்றமே அன்றி, பின்னணியில், அரசியல் கட்சிக் காரர்கள் வேலை செய்வது / செய்தது புலனகிறது. ஏனெனில், அரசியல் ஆதரவு இல்லாமல், இத்தகைய வேலைகளை செய்ய முடியாது.
போலிஅரசுபணிநியமனஆணைகள், பாதிக்கப்பட்டவர்களின்பட்டியல், முத்திரைகள்கைப்பற்ரப்பட்டன: இவர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் [The Central Crime Department (CCB)] கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி, பலரிடம் 5 கோடி ரூபாய் மோசடி செய்த இந்த நபர்கள், அந்த பணத்தில், சொகுசு கார் மற்றும் நிலம் வாங்கி குவித்தது தெரிய வந்துள்ளது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். மூவரையும் காவலில் எடுத்து விசாரித்த போலீசார், இவர்களின் வீடு மற்றும் அலுவலங்களுக்கு அழைத்துச் சென்று சோதனையில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரும், தமிழக அரசின் அச்சு மற்றும் எழுதுபொருள் துறையில் உதவி பொது மேலாளர், தமிழ்நாடு மின் சார வாரியத்தில் உதவி பொறியாளர், மக்கள் தொடர்பு துறையில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி, சத்துணவு அமைப்பாளர் ஆகிய பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்து போலியாக அனைவருக்கும் பயிற்சி அளித்து மோசடி செய்தது தெரியவந்தது[9]. அதாவது, நம்பிக்கை உண்டாக்கும் வகையில் அத்தகைய பயிற்சி வகுப்புகள் நடத்தப் பட்டன என்றாகிறது. அப்போது, போலி பணி நியமன ஆணைகள், பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல், குற்றத்திற்கு பயன்படுத்திய கம்ப்யூட்டர் உள்ளிட்டவைகளை கைப்பற்றினர்[10]. கிடுக்கிப்பிடி விசாரணையில், இவர்கள் மோசடி செய்த ரூபாயில், கார் மற்றும் நிலம் வாங்கி குவித்தது தெரியவந்தது[11]. கார் மற்றும் சொத்து ஆவணங்களையும், போலீசார் 09-07-2021 அன்று பறிமுதல் செய்துள்ளனர்[12].
2016ல்ஏமாற்றியதாகபுகார்: தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் வேலூர் மாவட்ட தலைவராக இருப்பவர் தமீம் மரைக்காயர் (36). இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனு: “எங்கள்கட்சியின்தலைமைஅலுவலகம்தேனாம்பேட்டையில்உள்ளது. கட்சியின்தலைவராகஷேக்தாவூத்தும், பொதுச்செயலாளராகரேஸ்மாதாவூத் (சேக்தாவூத்மகள்), பொருளாளராகஜலாலூதீன் (ஷேக்தாவூத்மருமகன்) உள்ளனர். கடந்தமார்ச்மாதம் 2016 சென்னைஅலுவலகத்தில்வைத்துஷேக்தாவூத்என்னிடம்அதிமுககூட்டணியில்நமக்கு 3 சீட்கள்கிடைக்கும். அதில், உனக்குஒருசீட்தருகிறேன். அதற்குநீரூ.10 லட்சம்தரவேண்டும்என்றுகூறினார். அதன்அடிப்படையில்கடந்தமார்ச் 22ம்தேதி 2016 ஜலாலூதீன்வங்கிகணக்கிற்குரூ.10 லட்சம்செலுத்தினேன். தற்போது, ஷேக்தாவூத்மட்டும்அதிமுககூட்டணிசார்பில்கடையநல்லூர்தொகுதியில்நிற்கஇடம்வழங்கப்பட்டுள்ளது. எனக்குசீட்கிடைக்கவில்லை. இதுகுறித்துகேட்டபோது, பணத்தைதிருப்பிதருவதாகஉறுதிஅளித்தனர். இந்நிலையில்தற்போதுபணத்தைதரமுடியாதுஎன்றுஷேக்தாவூத்மிரட்டுகிறார். என்னைப்போலபலரிடம்சீட்வாங்கிதருவதாகஷேக்தாவூத்தும்அவரதுமகள், மருமகனும்ஏமாற்றியுள்ளனர். எனவே, என்னிடம்சீட்வாங்கிதருவதாககூறிபணம்பெற்றுக்கொண்டுநம்பிக்கைமோசடிசெய்தஷேக்தாவூத், ரேஸ்மாதாவூத், ஜலாலூதீன்ஆகியோர்மீதுநடவடிக்கைஎடுக்கவேண்டும்,” என்று கூறப்பட்டுள்ளது[13]. இதுகுறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்[14].
செக்யூலரிஸ பாணியில் செய்தி வெளியிட்டு அமைதியான விவகாரம்: வழக்கம் போல, இச்செய்தியும் சிறியதாக போடப் பட்டு, ஒரே நாளில் அமைதியாக்கப் பட்டது. அரசியல் கட்சி பிரமுகர் சம்மந்தப் பட்டிருப்பது, அதிலும், மைனாரிட்டி-முஸ்லிம் என்றதால், அமுக்கி வாசித்து, முடித்து வைக்கின்றனர் என்று தெரிகிறது. சிர்கான் இன்டெர்நேஷனல் (Sircon Internatinal LMT), சிர்கான் ஏர்வேஸ், பிரீமியர் டூர்ஸ் டிராவல்ஸ் (PremierTouries Tavels LMT) போன்ற கம்பெனிகளை வைத்து நடத்துவதாகத் தெரிகிறது[15].முன்னதாக நடத்தப்பட்ட விசாரணையில் ரேஷ்மா தாவூத் மீது ஏற்கெனவே 2016, 2017, 2019 ஆம் ஆண்டுகளில் மத்திய குற்றப்பிரிவு, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வேலைவாய்ப்பு மோசடி, குற்றம் கருதி மிரட்டல் ஆகிய வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது, எனும் போது, அரசியல் தாக்கம், ஆதிக்கம், முதலியனவும் வெளிப்படுகிறது. இவ்விசயத்திலும், நந்தினி-சாய்ஜி என்று பிரதானமாக செய்தியில் காணப்படுகிறது, ரேஷ்மா தாவூத் பெயர் குறிப்பிட்டாலும், அமுக்கப் படுகிறது. இதுவும், செக்யூலரிஸ ஊடக செய்தி வெளியீடு, பத்திரிகா-தர்மம் எனலாம் போலிருக்கிறது.
வண்ணாரம்பூண்டிகளத்தூர் – முஸ்லிம்கள் அங்கு இந்து மக்களின் நம்பிக்கைகளில் தலையிடுவது, தடுப்பது, கலவரத்தில் இறங்குவது ஏன்?
வண்ணாரம்பூண்டிகளத்தூர்கிராமத்தில் முஸ்லிம் மக்கட்தொகை அதிகமாகி, அவர்கள் இந்துக்களின் நம்பிக்கைகளுக்கு இடைஞலாக தொந்தரவுகள் செய்து நீதிமன்றத்திற்கு சென்றது: முஸ்லிம்கள் ஒரு பகுதியில், தெருவில், கிராமத்தில் அதிகமாகி விட்டால், எப்படி அவர்கள் தங்களது ஆக்கிரமிப்பு மற்றும் மற்றவர்களின் உரிமைகளை, தங்களது மத நம்பிக்கை, சிறுபான்மை, மிரட்டுதல், சண்டை போடுதல், வன்முறை, கலவரம் என்று முறைகளை, திட்டங்களை படிப்படியாக செயல்படுத்தி, அமைதியைக் குலைக்கிறார்கள் என்பதனை கவனிக்கலாம். அதே போல, வழக்குகளையும் எப்படி பல்லாண்டுகளாக இழுத்தடிக்கலாம், அரசிய ஆதரவு, கட்சி அதிகாரம், மைனாரிடி அந்தஸ்து போன்றவற்றை உபயோகப் படுத்தி இழுத்தடிக்கலாம் என்பதையும் கையாலுவதை கவனிக்கலாம். நீதிமன்றங்களும், நீதிபதிகளும், இத்தகைய வழக்குகளை விசாரிக்காமல், தள்ளி வைப்பது, கிடப்பில் போடுவது போன்றவற்றையும் காணலாம். இவற்றையெல்லாம் கவனிப்போர் யாரும் இல்லை எனலாம். இப்படித்தான் 1951, 2018 என்று நடந்து வரும் வழக்குகள் 2021 வரை இழுத்தடிக்கப் பட்டுள்ளன என்பதை அறியலாம். மத சகிப்புத் தன்மையை இழந்துவிட்டால் அது நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு நல்லதல்ல என உயா்நீதிமன்றம், இப்பொழுது, கருத்து தெரிவித்துள்ளது.
1951 முதல் 2021 வரை 70 ஆண்டுகளாகநடந்துவருமுஸ்லிம்களின்ஜனத்தொகைபெருக்கம்எதிர்ப்புமுதலியன: வண்ணாரம்பூண்டி, களத்தூர் என்பதன் சுருக்கமே வ.களத்தூர் என்பதாகும். இதனுள்ளேயே வண்ணாரம்பூண்டி, மில்லத் நகர் ஆகிவற்றையும் அடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. முதலில், சில முஸ்லிம் குடும்பங்கள் இருந்தன, ஆனால், இப்பொழுது, மக்கள் தொகையில் சம அளவில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் உள்ளனர்.பெரம்பலூா் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ள வி.களத்தூா் கிராமத்தில் கிழக்கு பகுதியில் முஸ்லிம்களும், மேற்கு பகுதியில் இந்துக்களும் வசித்து வருகிறார்கள், அதாவது, முஸ்லிம்கள் ஜனத்தொகை திடீரென்று அதிகமாகி-அதிகமாக்கி தான், அத்தகைய நிலையினை உருவாக்கியுள்ளனர். அந்நிலையில் தான், தாங்கள் வசிக்கும் தெருக்களில் ஊர்வலம் போகக் கூடாது, சாமியை எடுத்துச் செல்லக் கூடாது என்றெல்லாம் படிப்படியாக சொல்லி, ஆரம்பித்து, பிறகு கலவரத்தில் கொண்டு முடிப்பதையும் பார்க்கலாம். இந்த கிராமத்தில் லட்சுமி நாராயண பெருமாள் கோயில், செல்லியம்மன் கோயில், ராயப்பா கோயில், மாரியம்மன் கோயில் என நான்கு கோயில்கள் உள்ளன[1]. முன்னர், எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், 1950-1960 என்று ஆரம்பித்து, 1970-1980களில் மசூதி-வீடுகள் என்று பெருக்கி,, 1990-2000களில் ஊர்வலம் கூடாது என்று ஆரம்பித்தனர். இப்பொழுது, 2010-2010களில் நீதிமன்றங்களில் வழக்குகளாக மாறியுள்ளன.
விழா சம்பிரதாயங்கள் நடத்த, 2018ல் நீதிமன்றத்திற்கு வழக்காகச் சென்ற நிலை: இந்த நிலையில் அந்த கிராமத்தில் உள்ள 96 சென்ட் புறம்போக்கு நிலத்துக்கு இரு தரப்பும் சொந்தம் கொண்டாடி வந்தனா். இந்தப் பிரச்னை 1951-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து நடந்து வருகிறது. இதனால், பல நேரங்களில் இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு இருதரப்பு மீதும் போலீஸில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவ்வழக்குகள் அப்படியே நிலுவையில் உள்ளன. இந்நிலையில், வி.களத்தூா் கிராமத்தில் கோவில் திருவிழா நடத்த அனுமதி கோரி ராமசாமி உடையார் தரப்பும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுன்னத் வல் ஜமாஅத் என்ற அமைப்பின் சார்பிலும் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, பிரதான சாலைகளில் மட்டும் ஊர்வலங்கள் நடத்த வேண்டும், மஞ்சள் நீர் தெளிக்கும் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்பன, உள்ளிட்ட நிபந்தனைகளுடன் திருவிழாவுக்கு அனுமதியளித்து 2018 டிசம்பர் மாதம் உத்தரவிட்டார்[2]. கோவில் விழாக்கள் நடத்த, இவ்வாறு நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏன் என்று ஆராயத்தக்கது.
2018லிருந்து நிலுவையில் இருக்கும் வழக்கு 2021ல் விசாரணைக்கு வந்தது: உத்தரவை எதிர்த்து, இரு தரப்பினரும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகளை இன்று (மே 08, 2021) விசாரித்த நீதிபதி கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, முன்பு வந்தது[3]. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு[4]: “கோவில்விழாக்களைஒட்டி, கிராமங்களிலும், நகரங்களிலும்அனைத்துசாலைகளிலும், தெருக்களிலும்ஊர்வலங்களைஒழுங்குபடுத்தலாமேதவிர, தடைவிதிக்கமுடியாதுஎனவும், சட்டம் – ஒழுங்குபிரச்சினைஏதும்ஏற்படாமல்காவல்துறையினர்நடவடிக்கைகளைஎடுக்கவேண்டும்எனவும்கூறி, பலஆண்டுகளாகநடத்தப்பட்டதைப்போலஊர்வலங்களைஅனைத்துசாலைகளிலும்அனுமதிக்கவேண்டும்எனஉத்தரவிட்டது[5].மக்கள்மதம்சார்ந்தவா்களாகவும், ஆண்கள்சமுதாயம்சார்ந்தவா்களாகவும்இருக்கலாம். ஆனால்சாலைஎப்படிசமுதாயம்சார்ந்ததாகஇருக்கமுடியும்?” என்று கேள்வி எழுப்பினர்[6].
2018ல் விதிக்கப் பட்ட கட்டுப்பாடுகள், வரையறைகள்: வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 3 நாள்கள் கோவில் திருவிழா நடத்தலாம்.
முதல் நாள் சாமி ஊா்வலம் பிரதான சாலையில் நடத்தப்பட வேண்டும்.
ஊா்வலம் பெரியகடை வீதி, பள்ளிவாசல் தெரு, அகரம் தெரு வழியாக செல்லலாம்.
அதே வழியில் திரும்ப வந்து மாரியம்மன் கோவிலில் முடிக்க வேண்டும்.
2-ஆவது நாள் ஊா்வலம் அதேபோல் நடத்தப்பட வேண்டும்[7].
3-ஆவது நாள் தெருக்களில் மஞ்சள் தண்ணீா் தெளிக்க கூடாது.
உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து இருதரப்பும் மேல் முறையீடு செய்துள்ளனா். இருதரப்பும் தங்களது சடங்குகள் மற்றும் கலாசார விஷயங்களை எடுத்துரைத்துள்ளனா்[8]. மசூதி என்பது, இப்பொழுது வந்தது, ஆனால், கோவில்கள் நூறாண்டுகளாக இருந்து வருகின்றன. அவற்றீற்கு வேண்டிய ஆகம விதிமுறைகளின் படி சடங்குகள், கிரியைகள், தின-பூஜைகள், விழாக்கள், கொண்டாட்டங்கள் என்றும் நடந்து வருகின்றன.
மதசகிப்புத்தன்மையைஇழந்துவிட்டால்அதுநாட்டின்மதநல்லிணக்கத்துக்குநல்லதல்ல: இப்பொழுது தீர்ப்பில், இவ்வாறு முக்கியமான அம்சங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன:
மத சகிப்புத் தன்மையை இழந்துவிட்டால் அது நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு நல்லதல்ல[9].
எந்த மதம் சார்ந்த ஊா்வலங்களும் அனைத்து சாலைகள், தெருக்கள் வழியாக எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் நடத்தப்பட வேண்டும்[10].
மத ஊா்வலங்களை நடத்த அனைத்து பிரிவினருக்கும் அடிப்படை உரிமை உள்ளது.
இந்த வழக்கில் இருதரப்பினா் மீது தொடரப்பட்டுள்ள குற்ற வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெற வேண்டும்.
சுன்னத் வல் ஜமாஅத் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
[1] தமிழ்.இந்து, மதசகிப்புத்தன்மையின்மையைஅனுமதிப்பதுநாட்டின்மதச்சார்பின்மைக்குநல்லதல்ல: உயர்நீதிமன்றம்கருத்து,ஆர்.பாலசரவணக்குமார், Published : 08 May 2021 03:15 PM; Last Updated : 08 May 2021 03:15 PM.
தலைமை காஜி வழங்கும் தலாக் (விவாக ரத்து) சான்றிதழ் செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு – முஸ்லிம் லீக்கின் வெளிப்பாடு!
காஜி வழக்கம்போல்பத்வாக்களை (சான்றிதழ்களை) வழங்குவதையாரும்தடுக்கவும்முடியாது[1]: மார்க்க சட்டத்தின்படி உள்ள கருத்தை தலைமை காஜி தெரிவிக்கும் போது அதனை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. தனது கருத்தை ஏன் ஏற்கவில்லை என்று தலைமை காஜியோ, துணை காஜியோ இதுவரை யாரிடமும் கேள்வி எழுப்பியதில்லை. இதுதான் தமிழகத்தில் உள்ள நடைமுறை. சென்னை உயர்நீதிமன்றம் கருத்துப்படி தலைமை காஜி கருத்தை அரசாங்க அதிகாரிகளோ, நீதிமன்றமோ ஏற்பதும், ஏற்காததும் அவரவர்களது விருப்பத்தை பொறுத்தது. இதனால் தலைமை காஜி அவர்களுக்கு அவருடைய பத்வா வழங்கும் உரிமைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. அவர் வழக்கம் போல் பத்வாக்களை (சான்றிதழ்களை) வழங்குவதை யாரும் தடுக்கவும் முடியாது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பானது, தலைமை காஜியின் இந்த உரிமையை பறிக்கவும் இல்லை. இந்த தெளிவை தலைமை காஜியும் மற்றுமுள்ள துணை காஜிகளும் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.
முஸ்லீம் லீக் வலியுறுத்துவது[2]: இத்தகைய குழப்பங்கள் அவ்வப்போது எழும் என்பதால்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கீழ்க்கண்டவற்றை தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கிறோம்.
முதலாவதாக, 1880-ம் ஆண்டின் காஜி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தலைமை காஜி மற்றும் நாயிப் (துணை காஜி)கள் திருமண நிகழ்வுகளை பதிவு செய்யும் பதிவாளர்களாக அங்கீகரிக்கப்பட்டு, அந்த பதிவுகளையே அரசாங்கப் பதிவுகளாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
2008-ம் ஆண்டு நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் அவர்கள் தலைமையில் இந்திய சட்ட ஆணையம் செய்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் காஜிகள், இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்வதுடன், திருமண முறிவுகளையும் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்று காஜிகள் திருமணப் பதிவாளர்களாகவும், திருமண முறிவுகளை பதிவு செய்பவர்களாகவும் அரசாங்கம் அங்கீகரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
இப்படிப்பட்ட தீர்மானங்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநாடுகள் மற்றும் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் அனைத்திலும் நிறைவேற்றப்பட்டு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன. காஜிகளுடைய அந்தஸ்தையும், கண்ணியத்தையும் நிலைபெறச் செய்வதற்கு இத்தகைய அதிகாரங்களை அவர்களுக்கு வழங்கப்படுவதற்கு மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்துவது சமுதாயத்தின் இன்றைய கட்டாயக் கடமையாகும். இதனை விடுத்து வேறு விதமான சிந்தனைகளில் ஈடுபட்டு, சமுதாயத்தில் ஷரீஅத் சட்டப் பிரச்சனையிலும், குளறுபடிகளை செய்து கொண்டிருக்கிற குழப்பவாதிகள் தங்களை திருத்திக் கொண்டு காஜிகளுடைய அதிகார வரம்பை கூட்டுவதற்கும், அதன் மூலம் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தை நிலை நாட்டுவதற்கு எல்லோரும் ஒன்றுபட்டு முன்வர வேண்டும்.
ஷபானு பிரச்சினை போன்று இதைத் திருப்ப முயற்சிக்கும் முஸ்லிம் இயக்கங்கள்: முஸ்லீம் லீக்கின் கருத்துகளை அலசவேண்டியுள்ளது:
‘1880-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள காஜிகள் சட்டத்தில், முஸ்லிம்கள் தங்களின் மார்க்க சம்பந்தமான நிகழ்ச்சிகளில் காஜிகள் கலந்து கொண்டு தங்களது அபிப்பிராயங்களை தெரிவிப்பதற்கான அதிகாரம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது.
அதே காஜிகள் அரசாங்கத்தால் நியமிக்கப்படுகிறார்கள். அதாவது, அரசால் நியமிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவிக்கலாம்.
மார்க்க சட்டத்தின்படி உள்ள கருத்தை தலைமை காஜி தெரிவிக்கும் போது அதனை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.
தனது கருத்தை ஏன் ஏற்கவில்லை என்று தலைமை காஜியோ, துணை காஜியோ இதுவரை யாரிடமும் கேள்வி எழுப்பியதில்லை. இதுதான் தமிழகத்தில் உள்ள நடைமுறை.
அதாவது தீர்ப்புகளை முஸ்லிம்கள் ஏற்கலாம், ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். இங்குதான், அடிப்படைவாத-தீவிரவாதிகளின் கட்டுப்பாடு வருகிறது. அவர்களது கருத்து, காஜிக்களின் கருத்துகளை மிஞ்சும் போது, அவர்களது பத்வா எடுபடுகின்றது.
சென்னை உயர்நீதிமன்றம் கருத்துப்படி தலைமை காஜி கருத்தை அரசாங்க அதிகாரிகளோ, நீதிமன்றமோ ஏற்பதும், ஏற்காததும் அவரவர்களது விருப்பத்தை பொறுத்தது. இதனால் தலைமை காஜி அவர்களுக்கு அவருடைய பத்வா வழங்கும் உரிமைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது.
அவர் வழக்கம் போல் பத்வாக்களை (சான்றிதழ்களை) வழங்குவதை யாரும் தடுக்கவும் முடியாது.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பானது, தலைமை காஜியின் இந்த உரிமையை பறிக்கவும் இல்லை. இந்த தெளிவை தலைமை காஜியும் மற்றுமுள்ள துணை காஜிகளும் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.
1880-ம் ஆண்டின் காஜி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தலைமை காஜி மற்றும் நாயிப் (துணை காஜி)கள் திருமண நிகழ்வுகளை பதிவு செய்யும் பதிவாளர்களாக அங்கீகரிக்கப்பட்டு, அந்த பதிவுகளையே அரசாங்கப் பதிவுகளாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
2008-ம் ஆண்டு நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் அவர்கள் தலைமையில் இந்திய சட்ட ஆணையம் செய்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் காஜிகள், இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்வதுடன், திருமண முறிவுகளையும் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்று காஜிகள் திருமணப் பதிவாளர்களாகவும், திருமண முறிவுகளை பதிவு செய்பவர்களாகவும் அரசாங்கம் அங்கீகரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
ஏற்கெனவே, இவ்வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், முஸ்லிம் பெண்ணிய இயக்கங்கள் வழக்குத் தொடுத்துள்ளதாலும், இப்பிரச்சினையை பெரிதாக்க, முஸ்லிம்கள் விரும்பவில்லை, விளம்பரம் கிடைப்பதையும் விரும்பவில்லை.
தலைமை காஜி வழங்கும் தலாக் (விவாக ரத்து) சான்றிதழ் செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு!
2007 ஆம்ஆண்டுமுதல் 2015 ஆம்ஆண்டுவரைஹாஜிக்கள்வழங்கிய தலாக் சான்றிதழ்கள் முறையற்றவை: அ.தி.மு.கவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பதர் சயீத் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இஸ்லாமிய தனி நபர் சட்டத்தின்படி திருமணமான ஆண் மூன்று முறை தலாக் என்று கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை உள்ளது என்றும், ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரை சான்றிதழ் வழங்கிவிட்டால் அதுவே இறுதி முடிவாக எடுத்து கொள்ளப்படுவதாகவும் அதில் கூறியிருந்தார். இந்த முஸ்லிம் நடைமுறையானது பெண்களுக்கு எதிரானது என்றும், ஹாஜிக்கள் வழங்கும் சான்றிதழ் வெறும் பரிந்துரையே தவிர அது இறுதி முடிவல்ல என்றும் பதர் சயீத் தெரிவித்திருந்தார்[1]. மேலும், 2007 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஹாஜிக்கள் வழங்கிய பரிந்துரை சான்றிதழ்களில் சிலவற்றை நீதிமன்றத்தில் சமர்பித்த பதர் சயீத் தரப்பு, ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரைத்து சான்றிதழ் வழங்கியது, சம்பந்தப்பட்ட பல பெண்களுக்கு தெரியாது என்றும், இந்த நடைமுறையின் போது பெண்கள் ஆஜராகவில்லை என்றாலும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது[2].
பெண்ணிய வீராங்கனைகள், உரிமைப் போராளிகள், முதலியோர் கண்டுகொள்ளாமல் இருப்பது: வழக்கம்போல, பெண்ணிய வீராங்கனைகள், உரிமைப் போராளிகள், முதலியோர் கண்டுகொள்ளாமல் இருப்பது கவனிக்கத்தக்கது. சாதாரணமான விசயங்களுக்கு எல்லாம் போராட்டம் என்றெல்லாம் புறப்படும் வீராங்கனைகள் எங்கோ பதுங்கி விட்டது போலத் தெரிகிறது. ரத்தம் சொரிவோம், ஐயப்பன் கோவிலில் நுழைவோம் என்றெல்லாம் புறப்பட்ட பெண்ணுருமை போராளிகளையும் காணோம். முஸ்லிம்கள் விவகாரம் என்றாலே, அவ்வாறு ஒளிந்து கொள்வார்கள் போலும். ஷாபானு விசயத்தில் உச்சநீதி மன்ற நீதிபதிகளின் கால்களை உடைப்போம் என்ற தில்லி இமாம், சட்டத்தை மாற்றி, புதிய சட்டத்தை எடுத்து வந்த விதம், வயதான ஷாபானு இறந்த பிறகும், கண்டுகொள்ளாமல் இருந்தது முதலியன மறந்து விட்டார்கள் போலும், இல்லை நமக்கேன் வம்பு பயந்து செக்யூலரிஸத் தனமாக ஒதுங்கி விட்டார்களோ என்று தெரியவில்லை. அது அவர்களது உள்-விவகாரம் என்றும் நாஜுக்காக சொல்லி அமைதியாக இருந்து விடலாம்.
சான்றிதழ்சட்டஅந்தஸ்துஇல்லாததுஎன்றசுற்றறிக்கையைஅனுப்பஉயர்நீதிமன்றபதிவாளருக்குஉத்தரவிட்டனர்: தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய காஜிக்கள் தலாக் சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., பதர் சயீது சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், முஸ்லிம் ஆண்கள், தங்கள் மனைவிகளை மூன்று முறை, ‛தலாக்’ கூறி, விவகாரத்து செய்யும் நடைமுறையை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரி இருந்தார்[3]. இந்த மனு இன்று, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள ஹாஜிக்கள் பிப்., 21 2017 வரை, தலாக் சான்றிதழ் வழங்க தடை விதித்தனர்[4]. மேலும், இந்த சான்றிதழ் சட்ட அந்தஸ்து இல்லாதது என்ற சுற்றறிக்கையை அனுப்ப உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டனர்[5]. இந்த வழக்கு விசாரணை பிப்.,21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது[6].
திருமணம் என்னும் நிக்காஹ்.3
முஸ்லிம்தனிநபர்சட்டம் 1880 சட்டப்பிரிவுநான்கின்கீழ், ஹாஜிக்கள்தலாக்வழங்குவதற்கு / தலாக்குறித்துகருத்துமட்டுமேஅவர்கள்கூறமுடியும்: 1980ம் ஆண்டு ஹாஜிகளுக்கான சட்டத்தில் அவர்களுக்கு இருக்கும் உரிமைகள் பற்றி தெளிவாக சொல்லப்பட்டிருப்பதாக நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுந்தரேஷ் தெரிவித்தனர்[7]. அந்த விதிகளின்படி தலாக் கூறி விவாகரத்து வழங்க ஹாஜிகளுக்கு உரிமை இல்லை என அவர்கள் கூறினர்[8]. முஸ்லிம் தனி நபர் சட்டம் 1880 சட்டப் பிரிவு நான்கின் கீழ், ஹாஜிக்கள் தலாக் வழங்குவதற்கு / தலாக் குறித்து கருத்து மட்டுமே அவர்கள் கூறமுடியும் என்றும், உத்தரவிடமுடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்[9]. இதையடுத்து இந்த வழக்கில் அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹாஜிகளுக்காக உரிமைகள் குறித்து புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என தெரிவித்தார்[10].
நீதிபதியின் உத்தரவில் சொல்லப்பட்டிருப்பது[11]: “ஹாஜிகளுக்குஎந்தஅளவுசட்டஉரிமைஇருக்கிறதுஎன்பதுமுஸ்லீம்ஹாஜிசட்டம் 1880 பிரிவு 4 இல்தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குமதச்சடங்குசெய்யும்உரிமைமட்டுமேவழங்கப்பட்டுள்ளது. எனவேஹாஜிகளுக்குஎந்தவிதசட்டரீதியானஉத்தரவும்பிறப்பிக்கஉரிமையில்லை. முஸ்லீம்தனிநபர்சட்டவாரியம்தலாக்சான்றிதழில்மாற்றம்கொண்டுவரப்போவதாகத்தெரிவித்துள்ளது. எனவேஇதுதொடர்பானஅடுத்தஉத்தரவுவரும்வரைஹாஜிக்கள்தலாக்சான்றிதழ்வழங்கஇடைக்காலதடைவிதிக்கிறோம். மேலும், ஹாஜிக்கள்வழங்கும்தலாக்சான்றிதழ்களுக்குஎந்தவிதமானநிர்வாகமற்றும்சட்டரீதியானஉரிமையில்லைஎன்றும், அதுஹாஜிக்களின்தனிப்பட்டகருத்தாகவேகருதப்படும்என்றும்அனைத்துகீழமைநீதிமன்றங்களுக்கும்உயர்நீதிமன்றப்பதிவாளர்சுற்றறிக்கைஅனுப்பவேண்டும்என்றுஉத்தரவிடுகிறோம். வழக்கின்அடுத்தகட்டவிசாரணைபிப்ரவரி 21 ஆம்தேதிநடைபெறும்”, இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது[12]. இதைப்பற்றி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், “மணிச்சுடர்” கூறுவது, கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
காஜிகளும் – தலாக்சான்றிதழும்ஷரீஅத்சட்டத்தின்உன்னதத்தைநிலைநாட்டஅனைவரும்ஒன்றுபடவேண்டும்![13]: சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட பொது நல வழக்கு ஒன்றில், தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகிய இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு கீழ்க்கண்டவாறு அறிவித்திருக்கிறது.
முதலாவதாக, தமிழ்நாடு தலைமை காஜி மற்றும் நாயிப் (துணை காஜிகள்) யாருக்கும் தலாக் பற்றி சான்றிதழ் வழங்குவதற்கு அதிகாரமில்லை.
இரண்டாவதாக, 1997 முதல் 2015 வரை தமிழ்நாடு தலைமை காஜி வழங்கியுள்ள தலாக் சான்றிதழ்களில் தலாக் என்னும் விவாகரத்து ஏற்பட்டதற்குரிய விவரங்கள் குறிப்பிடப்படாமல் வழங்கப்பட்டிருக்கிறது.
மூன்றாவதாக, வரும் பிப்ரவரி 21-ந்தேதி வரை தலைமை காஜி வழங்கியுள்ள தலாக் சான்றிதழ்களை தமிழ்நாட்டிலுள்ள கீழமை நீதிமன்றங்களோ, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளோ சான்றிதழ்களாக அங்கீகரிக்கத் தேவையில்லை என்று உயர்நீதி மன்ற பதிவாளர் அறிக்கை அனுப்ப வேண்டும்.
மேற்கண்ட தீர்ப்பின் வாசகங்களை பார்க்கும் போது தலைமை காஜி மற்றும் துணை காஜிகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளன. உண்மை நிலை அதுவல்ல. ‘1880-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள காஜிகள் சட்டத்தில், முஸ்லிம்கள் தங்களின் மார்க்க சம்பந்தமான நிகழ்ச்சிகளில் காஜிகள் கலந்து கொண்டு தங்களது அபிப்பிராயங்களை தெரிவிப்பதற்கான அதிகாரம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது. அதே சட்டத்தின் அடிப்படையில்தான் இன்றும் காஜிகள் அரசாங்கத்தால் நியமிக்கப்படுகிறார்கள். தலைமை காஜி, தங்களிடம் கொண்டு வரப்படும் ‘தலாக்’ போன்ற மார்க்க விவகாரங்களுக்கு பத்வா என்றும், தனது கருத்தை எழுத்து மூலம் தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
[7] புதியதலைமுறை, தலாக்கூறிவிவாகரத்துவழங்கும்உரிமைஹாஜிகளுக்குஇல்லை..நீதிமன்றம், பதிவு செய்த நாள் : January 11, 2017 – 07:57 PM; மாற்றம் செய்த நாள் : January 11, 2017 – 09:46 PM.
தமிழக முஸ்லிம் கட்சிகள் பிளவுப்பட்ட நிலை – இரட்டை வேடங்களா, நிறைய சீட்டுகளைப் பெற ஆடும் நாடகமா – திராவிட கட்சிகளின் தாஜா செய்யும் போக்கு தொடர்கிறது!
திமுகவினருக்கும், முஸ்லிம்களுக்கும் என்ன பிரச்சினை?: உளுந்துார்பேட்டையை போல வாணியம்பாடி தொகுதியை, அண்ணா அறிவாலயத்தில், ‘சரண்டர்’ செய்து விடு’ என, முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு, தி.மு.க.,வினர் மிரட்டல் விடுத்த தகவல் வெளியாகி உள்ளது[1] என்ற செய்தி வியப்பாக உள்ளது. என்ன மீலாது நபி விழாக்களில் கலந்து கொண்டு, ரம்ஜான் நோன்பு விழாக்களில் நன்றாக சாப்பிட்டு முஸ்லிம்களை புகழ்ந்த திராவிடர்களா, முஸ்லிம்களை எதிர்க்கிறார்கள் என்ற கேள்வி எழுகின்றது. வேலுார் மாவட்டத்தில், மொத்தமுள்ள, 13 தொகுதிகளில், 10ல் தி.மு.க., போட்டியிடுகிறது; மூன்று தொகுதிகளில், கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. சோளிங்கர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், ஆம்பூர் தொகுதியில் மனித நேய மக்கள் கட்சியும், வாணியம்பாடி தொகுதியில் முஸ்லிம் லீக் கட்சியும் போட்டியிடுகிறது[2]. வாணியம்பாடி தொகுதியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில், முகமது பாரூக் போட்டியிடுகிறார்.
உளுந்தூர்பேட்டைதொகுதியைதிமுக–விடம்ஒப்படைத்தது ஏன்?: திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.ம.க.வுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப் பட்டது. அதில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியை திமுக-விடம் ஒப்படைத்தது[3]. இந்தத் தொகுதியில் திமுக சார்பில் ஜி.ஆர்.வசந்தவேல் போட்டியிடுவார் என்று திமுக அறிவித்துள்ளது. இதையடுத்து, அந்தத் தொகுதிக்கு வேட்பாளரை திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார்[4]. ம.ம.க.தலைவர் ஜவாஹிருல்லா வெள்ளி மாலை திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய பின்பு உளுந்தூர்பேட்டை தொகுதியை திமுக வசம் அளித்ததாகத் தெரிவித்தார். எனினும் அதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. ஒரு தொகுதியை திமுகவுக்கு விட்டுக் கொடுத்துள்ள நிலையில் ம.ம.க போட்டியிடும் தொகுதிகள் நிலவரம்:
ராமநாதபுரம்: ஜவாகிருல்லா.
தொண்டாமுத்தூர்: எம்.ஏ.சையது முகமது.
நாகப்பட்டிணம்: ஏ.எம்.ஜபருல்லா.
ஆம்பூர்: வி.எம்.நஜீர் அகமது.
தொகுதி உடன்பாடு பிரச்சனையில் திமுக கூட்டணியிலிருந்து எஸ் .டி.பி.ஐ.கட்சி வெளியேறியமை குறிப்பிடத்தக்கது[5]. ஆகவே, சீட்டு எண்ணிக்கையினால் எஸ்.டி.பி.ஐ.கட்சி விலகியது என்று சொல்வதில் அர்த்தமில்லை.
வாணியம்பாடிதிமுகவுக்கே: கடந்த, 37 ஆண்டுகளாக, கூட்டணி கட்சிகளுக்கே, வாணியம்பாடி ஒதுக்கப்பட்டு வந்துள்ளதால், இந்த முறை வாய்ப்பு கிடைக்கும் என, தி.மு.க.,வினர் எதிர்பார்த்திருந்தனர். தொகுதி முழுவதும், சுவர்களில் உதயசூரியன் சின்னத்தை வரைந்து வைத்திருந்தனர். ஆனால், இந்த முறையும் தொகுதி கைமாறியதால், தி.மு.க.,வினர் அதிருப்தி அடைந்தனர்[6]. நேற்று முன்தினம் இரவு, ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய தி.மு.க.,வினர், வேலுார் மேற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தி.மு.க., போட்டியிட வலியுறுத்தி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்[7]. இதற்கிடையில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் மனிதநேய மக்கள் கட்சி, உளுந்துார்பேட்டை தொகுதியை, தி.மு.க.,விடம் சரண்டர் செய்தது[8]. அதேபோல், வாணியம்பாடி தொகுதியையும் சரண்டர் செய்ய வேண்டும் என, முஸ்லிம் லீக் வேட்பாளர் முகமது பாரூக்கை, தி.மு.க.,வினர் மிரட்டியதாக, 16-04-2016 அன்று தகவல் பரவியது[9].
முஸ்லிக் லீக் நிர்வாகி திமுகவினருக்கும், முஸ்லிம்களுக்கும் உள்ள பிரச்சினை பற்ரி கூறுவது: இது குறித்து, முஸ்லிம் லீக் நிர்வாகி ஒருவர் கூறியதாவது: இதன் பின்னணியில், வேலுார் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலர் தேவராஜ் உள்ளார். அவரது மைத்துனர் அசோகன், ஆலங்காயம் ஒன்றிய செயலராக இருக்கிறார். அவரது துாண்டுதலில் தான், தி.மு.க.,வினர் போராட்டம் நடத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். ஆம்பூரிலும் எதிர்ப்பு: ஆம்பூர் தொகுதியை, மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கியதைக் கண்டித்து, தி.மு.க.,வினர் போராட்டத்தில் குதித்தனர். ஆம்பூர் நேதாஜி சாலையில் மறியல் நடத்திய, 100க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர், பின், நகர தி.மு.க., அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, ‘ஆம்பூர் தொகுதியில், தி.மு.க.,வே போட்டியிட வேண்டும்; இல்லையெனில், தேர்தல் பணியில் ஈடுபட மாட்டோம்’ என, கோஷமிட்டனர். தகவலறிந்து வந்த தி.மு.க. நிர்வாகிகள் போராட்டக்காரர்களை சமரசம் செய்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்[10].
தங்களது மக்கட்தொகைக்கு அதிகமாக முஸ்லிம்கள் சீட்டுகள் பெறுவது: தமிழக மக்கட்தொகை சுமார் 7.3 கோடி அல்லது 730 லட்சங்கள், அதில் முஸ்லிம்கள் சுமார் 43 லட்சங்கள் இருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால், அவர்களுக்கு 6% என்ற கணக்கில் ஒன்று அல்லது இரண்டு இடங்கள் தான் கொடுக்கப்பட வேண்டும் ஆனால் 12 முதல் 15 சீட்டுகள் கொடுக்கப்படுகிறன. இது தவிர “தேர்தெடுக்கும் முறையில்” ஒரு எம்.பி பதவியையும் சேர்த்து பேரத்தில் பேசி வருகிறார்கள். தவிர அரசு ஒதுக்கீடு இடங்கள், கடைகள், குத்தகைகள் முதலியவற்றி;உம் முஸ்லிம்கள் கணிசமான இடங்களைப் பெறுகிறார்கள், கோடிகளை அள்ளுகிறார்கள். இதெல்லாம், மற்ற திராவிட அரசியல்வாதிகளை பாதிக்கின்றன. 30-50 ஆண்டுகள் என்று உழைத்து வந்து கொண்டிருக்கின்ற நிலையில், நேற்று வந்தவர்கள் சீட் பெற்று பதவிக்கு வருவதை அவர்கள் விரும்பவில்லை என்றே தெரிகிறது. இது தவிர மற்ற கட்சிகளில் உள்ள முஸ்லிம் வேட்பாளர்கள் முஸ்லிம்களாகத்தான் செயல்பட்டு வருகிறார்களே தவிர இந்துக்களைப் போல நாத்திகர்கள், செக்யூலரிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் என்றெல்லாம் செயல்படுவதில்லை. திராவிடக் கட்சித் தலைவர்கள் அவர்கள் மூலம் ஆதாயம் பெறுகின்றனரே தவிர மற்றவர்களுக்கு, தொண்டர்களுக்கு எந்த லாபமுன் இல்லை.
தமிழகத்தில்முஸ்லிம்அரசியல்நிலைஎன்ன?: 1948 முதல் 1972 வரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்), திமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டு இரண்டு கட்சிகளும் பரஸ்பர ஆதாரங்கள் பெற்றன. 1970-80களில் வளைகுடாவுக்கு வேலைக்குச் சென்றது, இலங்கை (மலேசியா, சிங்கப்பூர் முதலியவற்றைச் சேர்த்து) வியாபார இணைப்புகள், தங்கம், போதை மருந்து கடத்தல் போன்றவற்றில் கோடிகளை அள்ளினர். இதற்காகத்தான் அவர்களது அரசியல் உறவுகள் உதவின. பணம் அதிகமாக வரவர, மசூதிகள், டிரஸ்டுகள், நிறுவனங்கள் அதிகமாகின. அதற்கேற்றப்படி, முக்கியஸ்தர்கள் அரசியல் ஆதாயம் பெற விரும்பினர். சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு 1987ல் ஷாபானு வழக்கு உதவியது. இதை வைத்துக் கொண்டு, ஐ.யூ.எம்.எல் அடக்கி வாசிக்கிறது, இந்துத்த்வத்திற்கு துணை போகிறது என்று குற்றஞ்சாட்ட ஆரம்பித்தன. 1992ல் ராமஜென்பபூமி விவகாரம் அவர்களுக்கு பெரிதும் உதவியது. இதனால், 1995ல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தனர். 1997ல் கோயம்புத்தூரில் கான்ஸ்டெபில் செல்வராஜ் முஸ்லிம்களால் கொலை செய்யப் படுகிறார். பிப்ரவரி 14, 1998ல் கோயம்புத்தூர் குண்டுவெடிப்புகள் நடக்கின்றன. அதில் 58 பேர் கொல்லப்படுகின்றனர், 200ற்கும் மேலானவர்கள் படுகாயம் அடைகின்றனர். 2009ல் மனிதநேயக் கட்சி தோன்றியது. இப்படியாக முஸ்லிம் கட்சிகள் தீவிரவாத அரசியலில் இறங்கின.
ஆம்பூர் – தினமலர் – 02_07_2015_002_015
முஸ்லிம் கட்சிகளினால் தமிழகத்திற்கு கிடைத்த பலன் என்ன?: ஒவ்வொரு திராவிட கட்சி அமைச்சர், எம்.பி, எம்.எல்.ஏ, தான் பதவியில் இருந்த காலத்தில், தான் மக்களுக்காக இதை செய்தேன் – அதை செய்தேன் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், இந்த முஸ்லிம்கள் பதவிக்கு வந்தால், தமிழக மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்பதை இதுவரை யாரும் கேட்கவில்லை என்றே தோன்றுகிறது. அரசியல் கட்சி வேட்பாளராக நின்று வெற்ற்ப்பெற்றப் பிறகும், அவர்கள் முஸ்லிம்களாக இருந்து, தங்களது நலன்களை பெருக்கிக் கொண்டார்களே தவிர மற்ற மக்களின் நலன்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. ராமேஸ்வரம், நாகப்பட்டினம், கும்பகோணம் போன்ற தொகுதிகளில் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தாலும், அங்குள்ள கோவில்களை, கோவில் சொத்துகளை பாதிக்கும் வகையில் தான் நடந்து கொள்கின்றனர். கோடிக்கணக்கில் வருகின்ற பக்தர்கள் மூலம், வியாபாரங்களில் லாபங்களை அள்ளுகின்றனரே தவிர, பதிலுக்கு அவர்கள் எந்த வசதிகளையும் செய்து தருவதில்லை. பிறகு அரசியல் மற்றும் அரசியல் இல்லாத நிலைகளில் அவர்களினால் தமிழக மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை எனும் போது, விகிதாசாரத்திற்கு அதிகமாக அவர்களாஇத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பதனால் என்ன பலன்?
எங்கள்இனத்தைக்காப்பாற்றவந்ததூதர்என்றுஎஸ்.டி.பி.ஐ., மனிதநேயமக்கள்கட்சி, இந்தியயூனியன்முஸ்லீம்லீக்கும்சேர்ந்துவந்திருருக்கிறார்கள்: மார்ச் 28ம் தேதி 2016 சேலம் கோட்டை மைதாணத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் தீப்பொரி ஆறுமுகம், நாகை நாகராஜன் முதலியோர் பேசினர். தீப்பொரி ஆறுமுகம் 1960களில் பேசும் அலாதியே தனிதான். மெட்ராஸ் பாஷை, கெட்ட வார்த்தை முதலியவை சரளமாக வரும். நாகை நாகராஜன் பேசும் போது, முஸ்லிம் கட்சிகள் எல்லாமே ஒட்டு மொத்தமாக கலைஞரிடம் கூட்டு சேர்ந்துள்ளன, என்று விவரிக்க ஆரம்பித்தார். ராஜ் தொலைக்காட்சி அகடவிகடம் பேச்சரங்க நிகழ்ச்சியின் நடுவர் கலைமாமணி கவிஞர் நாகை நாகராஜன், “இந்தத்தேர்தலில்தான்சிறுபான்மைஇனத்திலேமிகப்பெரியஇனமானஇஸ்லாமியஇனத்தின்அத்தனைஅமைப்புகளும்அண்ணாஅறிவாலயத்தில்கருணாநிதியைப்பார்த்து ‘நீங்கள்தான்நபிகள்நாயகத்திற்குப்பிறகுஎங்கள்இனத்தைக்காப்பாற்றவந்ததூதர்என்றுஎஸ்.டி.பி.ஐ., மனிதநேயமக்கள்கட்சி, இந்தியயூனியன்முஸ்லீம்லீக்கும்சேர்ந்துவந்திருருக்கிறார்கள்,” என்று பேசியுள்ளார்[1]. இந்த வீடியோவிலும் அப்பேச்சைக் கேட்கலாம்[2]. திமுகவிடம் கூட்டு வைத்துக் கொண்டு, கெஞ்சி-கூத்தாடி அதிகமான சீட்டுகளை வாங்கிக் கொண்டுள்ளன முஸ்லிம்களின் பிளவுபட்ட கட்சிகள். ஒருவேளை வெளியில் சண்டைப் போட்டுக் கொள்வது போன்று நாடகம் ஆடி, இவ்வாறு அரசியல் செய்கின்றனரா என்று “செக்யூலரிஸ்டுகளுக்கு” தோன்றுகிறது.
மனிதநேயக்கட்சிஅறிவித்தகண்டனம்: கடந்த மார்ச் 28ம் தேதி 2016 சேலம் கோட்டை மைதாணத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் திமுக நூல் வெளியீட்டுக் குழு உறுப்பினர் நாகை நாகராஜன் பேசும் போது நபிகள் நாயகத்திற்கு பிறகு முஸ்லிம் இனத்தை பாதுகாக்க வந்த இறைதூதர் தலைவர் கருணாநிதி என்று கூறியதாக பத்திரிக்கையில் செய்தி வந்தது[3]. சமூக வலைதளங்களிலும் இச்செய்தி வேகமாக பரவியது. நபிகள் நாயகத்திற்கு பிறகு இறைதூதர் வரமுடியாது என்பதில் உறுதியான கொள்கை உடையவர்கள் முஸ்லிம்கள் . எனவே நாகை நாகராஜனின் பேச்சை பற்றி செவியுற்ற அனைத்து முஸ்லிம்களுமே வேதனை அடைந்துள்ளனர். எனவே இது தவிர்க்க பட வேண்டும், கண்டிக்க பட வேண்டும். தனது கருத்துக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று உடனடியாக மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேர, ஜவாஹிருல்லாஹ் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் மூலமாக திமுக தலைமைக்கு செய்தியை புகராக கொண்டு சென்றார். மேலும் வாழும் மனிதர்களை புகழ வேண்டும் என்பதற்காக மத உணர்வுகளை புண்படுத்தும் வார்த்தைகளை யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும் அரசியல் ரீதியான அணுகுமுறைகளுக்காக எந்த நிலையிலும் அடிப்படை கொள்கைகளை விட்டுத் தர மாட்டோம் என்பதையும் தெளிவு படுத்தியுள்ளோம். திமுக தலைமையையும் நேரில் சந்தித்து இது பற்றி புகார் அளிக்க உள்ளோம். எனவே யாரும் பதட்டம் அடையவேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். என்று மனித நேயக்கட்சி தலைமையகம் அறிவித்தது[4].
எவரையும்எங்கள்மாநபியோடுஒப்பிட்டுபேசுவதைஒருபொழுதும்அனுமதிக்கமுடியாது. – ஆல்இந்தியாஇமாம்ஸ்கவுன்சில்தமிழ்நாடு.![5]: ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில தலைவர் மௌலவி ஆபிருத்தீன் மன்பஈ ஹலரத்அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை “சேலத்தில் நடந்த கூட்டத்தில் திமுக பேச்சாளர் நாகை நாகராஜன் அவர்கள் பேசும் போது முஸ்லிம்களின் கொள்கையோடு மோதக்கூடிய பேச்சை வரம்புமீறி பேசியுள்ளார் இந்த பேச்சு வன்மையாக கண்டிக்க தகுந்தது மிகவும் கண்டனத்திற்குரியது. இத்தகைய வாரத்தை எங்களது கொள்கைக்கு எதிரானது எலும்பில்லாத நாவுதானே எதுவேண்டுமானாலும் சொல்லலாம் மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் அமைதியாக இருந்துவிடுவார்கள் என்று எண்ணினால் அது மாபெரும் தவறு. எவரையும் எங்கள் மாநபியோடு ஒப்பிட்டு பேசுவதை ஒருபொழுதும் அனுமதிக்க முடியாது. திமுக நாகை நாகராஜன் அவர்களை கட்சியின் பொறுப்புகள், மற்றும் அடிமட்ட உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் அவரை நீக்கிவிட வேண்டும். தமிழக அரசு திமுக பேச்சாளர் நாகை நாகராஜன் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்,” இப்படிக்கு மௌலவி செய்யது முஹம்மது உஸ்மானி, மாநில செய்தி தொடர்பாளர், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ்நாடு[6].
போலீஸ்புகார்கொடுக்காமல்மிரட்டும்முஸ்லிம்கட்சிகள்: கட்சியின் பொறுப்புகள், மற்றும் அடிமட்ட உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் அவரை நீக்கிவிட வேண்டும், உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்லியிருப்பது நல்ல தமாஷாகத் தெரிகிறது. ஏனெனில், இப்படியெல்லாம் மிரட்டும் இவர்கள் போலீஸாரிடம் உரிய புகார் கொடுத்ததாகத் தெரியவில்லை. உண்மையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், அவ்வாறு புகார் கொடுத்திருக்கலாம். வழக்குப் பதிவு செய்திருக்கலாம். நீதிமன்றத்தில் இப்பிரச்சினை வரும் போது, விவரங்கள் அலசப்படும் போது, பேசியது உண்மையிலேயே இந்தி சட்டங்களின் பிரிவுகளை மீறியவையா, குற்றமாகுமா, எந்த தண்டனை கொடுக்கலாம் என்று வாத-விவாதங்கள் உண்டாகும். ஆனால், அவற்றைத் தடுக்கவே முஸ்லிம் கட்சிகள் இவ்வாறி மிரட்டி அமுக்கி வாசிக்கின்றன என்று தெரிகிறது. மேலும், இதை பிரச்சினையாக்கினால், முஸ்லிம் கட்சிகளின் ஒதுக்கீடு காலியாகி விடும், ஒரு சீட்டுக் கூட ஜெயிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டு விடும்.
இந்தியதேசியலீக்மாநிலதலைவர்தடாரஹீம்அறிவிப்பு: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சென்னை கோபாலபுரம் வீட்டை முற்றுகை இடப்போவதாக இந்திய தேசிய லீக் கட்சி அறிவித்துள்ளது[7]. இது குறித்து இந்திய தேசிய லீக் மாநில தலைவர் தடா ரஹீமை தொடர்பு கொண்டு கேட்டபோது, “சமீபத்தில் தி.மு.க. பேச்சாளர் நாகராஜ் என்பவர், கருணாநிதியை இறைதூதர் என்று குறிப்பிட்டு பேசினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மட்டுமே இசுலாமியர்கள் இறைதூ தராக நினைக்கிறார்கள். ஆகவே நாகராஜை கண்டிக்க வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கருணாநிதிக்கு கோரிக்கை வைத்தோம். அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆகவே கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி, இன்று (08-04-2016) மாலை நான்கு மணி அளவில் அவரது கோபாலபுர இல்லத்தை முற்றுகையிடப்போகிறோம்” என்றார்[8].
முஸ்லிம்மக்கள்ஜவாஹிருல்லாமீதுகொதிப்பு[9]: காலைமலர் என்ற இணைதளம், “முஹம்மது நபி அவர்களை திமுக பேச்சாளர் நாகை நாகராஜன் என்பவர் கலைஞருடன், இணைத்து இழிவு படுத்திய போது பொங்காத பேராசிரியர்! தன்னுடை மமக கட்சியை தீவிரவாத இயக்கம் என்று சொன்ன ஹைச்.ராஜாவை நோக்கி பொங்காத பேராசிரியர்! கலைஞரை ஜாதியை சொல்லி இழிவு படுத்திய விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட வைகோவை நோக்கி மட்டும் டிவி சேனலில் பொங்க காரணம் என்ன? நாயவான்களே! நீங்களே சொல்லுங்கே! சீட்டு, பதவிக்காக தன்னையே மறந்து செயல்படும் ஜவாஹிருல்லாஹ்வின் செயல்பாடுகள் அவரின் மோசமான அரசியலை பிரதிபலிக்கின்றது. அரசியலுக்காக கலைஞரை இவர் மட்டும் இறை தூதராக ஏற்றுக் கொண்டாரோ? என்று முஸ்லிம் மக்கள் ஜவாஹிருல்லா மீது கொதிப்படைந்து உள்ளனர்”, என்று சாடியுள்ளது[10]. இது ஜவாஹிருல்லாஹுக்கு எதிராக செயல்படும் முஸ்லிம் கூட்டம் போலிருக்கிறது.
தி.மு.க. தலைவர்கருணாநிதிவெளியிட்டுள்ளஅறிவிப்பில்கூறிஇருப்பதாவது: “சேலத்தில் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய நாகை நாகராஜன் என்பவர், இஸ்லாமிய மதம் குறித்து தவறான கருத்துக்களை பேசியதாக வார இதழ் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமை கழகப் பேச்சாளராக நாகை நாகராஜன் என்றொருவர் இருப்பதாக எனக்கு தெரியவில்லை[11]. இருந்தாலும், கழக மேடைகளில் உரையாற்றுவோர் நமது இயக்கத்திற்குரிய கண்ணியத்தோடும், நாகரீகத்தோடும் பேச வேண்டும். ஆர்வம் மிகுதியால் மத சம்பந்தமாக ஏதாவது தவறாக பேசினால், அதை மிகைப்படுத்திட, மாற்று கட்சியினர் இருக்கிறார்களோ இல்லையோ, ஒரு சிலர் அதற்காகவே இருக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்[12]. ஒன்றை பத்தாக்கி, பத்தை நூறாக்கி கழகத்தின் மீது அவதூறு வீசிட அவர்கள் எப்போது நேரம் கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டே இருப்பார்கள். எனவே கழக கூட்டங்களில் பேசுவோர் “யாகாவாராயினும் நா காக்க” என்று அய்யன் திருவள்ளுவர் வழங்கியிருக்கும் அறிவுரையை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு பேச வேண்டும். நாகை நாகராஜன் தவறாக எதுவும் பேசியிருந்தால், அது கழகத்தின் கருத்தல்ல என்று மறுப்புத் தெரிவிப்பதோடு, அந்த குறிப்பிட்ட பேச்சாளரும் இதனையை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு இனி கழக மேடைகளில் மிகுந்த கவனத்துடன் பேச வேண்டும்”, இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
2011 மற்றும் 2016 தேர்தல்கள் – முஸ்லிம் கட்சிகளின் யுக்திகள், மதவாத முயற்சிகள், மற்றும் ஓட்டு வங்கி அரசியல் வியாபாரங்கள்! (3)
தமிழ்மாநிலமுஸ்லிம்லீக்நிலைப்பாடு: ”அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., சேர்ந்தாலும், கூட்டணியில் தொடர்வோம்,” என, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் கூறினார். முஸ்லிம் லீக் இரண்டாகப் பிரிந்து அதிமுக மற்றும் திமுக கோஷ்டிகளில் இருந்து கொண்டிருக்கின்றன. இப்பொழுது, கூட்டணி குழப்பங்கள் நீடித்து வருவதால், இத்தகைய மதவாதக் கட்சிகளுக்கு வேறு வழியில்லாமல் திகைத்துக் கொண்டிருக்கின்றன. ஊழல் பற்றி பேசும் “சுத்தமான” திராவிடக் கட்சிகள் இப்பொழுது ஒன்றாக சேர்ந்து விட்டன. அதாவது திமுக காங்கிரசூடன் சேர்ந்து விட்டது. இதனால், பிஜேபி, அதிமுக கூட்டணிக்கு வரலாம் என்ற நிலையில் முஸ்லிம் கட்சிகளுக்கு “அரசியல் தீண்டாமை” வந்து தள்ளாட ஆரம்பித்து விட்டன. இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது[1]: வரும் சட்டசபை தேர்தலிலும், அ.தி.மு.க., கூட்டணியில் நாங்கள் தொடர்வோம். அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., சேர்ந்தாலும், தமிழ் மாநில முஸ்லிம் லீக் அந்த கூட்டணியில் தொடரும். சட்டசபை தேர்தலில் போட்டியிட, தமிழக முதல்வரிடம் சீட் கேட்டுள்ளோம். அவர் எங்கள் கட்சிக்கு, பல தொகுதிகள் வழங்குவார் என நம்புகிறோம். எங்கள் கட்சி நிர்வாகிகள் எம்.எல்.ஏ., ஆக வேண்டும் என்பதை விட, நல்ல ஆட்சி தான் முக்கியம். தமிழக அரசு நடத்தும் உருது பள்ளிகளில், உருது ஆசிரியர்கள் நியமிக்க நேர்காணல் நடந்து வருகிறது. விரைவில் காலியாக உள்ள உருது பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு, அவர் கூறினார்[2].
மூன்றாவதுஅணிக்குவேலையில்லை:இந்தியயூனியன்முஸ்லிம்லீக்மாநிலதலைவர்காதர்முகைதீன்பேட்டி[3]: தமிழகத்தில் 3–வது அணிக்கு வேலையில்லை. தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க.தான் பெரிய கட்சி என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் முகைதீன் சென்ற மாதம் அக்டோபரில் கூறினார். ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைகள் மத்திய அரசின் கொள்கையாக மாறிவிட்டன. பா.ஜனதா பெயரில் ஆர்.எஸ்.எஸ்.சின் ஆட்சி நடக்கிறது. இந்தியாவில் உள்ள மத சார்பற்ற சக்திகள் ஜனநாயக இயக்கங்கள் ஒன்றுதிரண்டு மதவாத போக்கிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். அரசியல் அரங்குகள், சாகித்ய அகாடமி என அனைத்திலும் மதவாத கொள்கைகள் புகுத்தப்பட்டு வருகிறது. இந்த போக்கு நீடித்தால் ஜனநாயகத்தின் அடித்தளமே தகர்ந்துவிடும். இதற்கு ஆதாரமாக மாட்டுக்கறி பிரச்சினைக்காக 4 அப்பாவி முஸ்லிம்கள் பலியாக்கப்பட்டு உள்ளனர். அரியானா பா.ஜனதா முதல்வர் உள்பட மத்திய மந்திரிகள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு வருகின்றனர். முஸ்லிம்களை மட்டும் தனிமைப்படுத்தி வன்முறை தூண்டப்படுகிறது”.
தமிழகத்தைபொறுத்தவரைஅ.தி.மு.க.,மற்றும்தி.மு.க.வைதவிரமூன்றாவதுஅணிக்குவேலையில்லை: “இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும். எதிர்க்கட்சிகள் இடையே கூட்டணி அமைப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க., தி.மு.க.வை தவிர 3–வது அணிக்கு வேலையில்லை[4]. வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் இல்லை. தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க.தான் பெரிய கட்சி. அதற்கு இணையான கட்சி தி.மு.க. மட்டுமே. உதிரி கட்சியினர் ஆட்சியை பிடிப்போம் என கூறுவது அவர்களது தனிப்பட்ட ஆசை, விருப்பம். அ.தி.மு.க. ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இருந் தாலும் ஆட்சி, அதிகாரம் அவரது கட்டுப்பாட்டில் இல்லை. எந்த அதிகாரியும் ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இல்லை. நாட்டிலேயே அதிக அளவில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் பலாத்காரம் நடைபெறும் மாநிலமாக தமிழகம் உள்ளது. அரசின் மீது மக்கள் அவநம்பிக்கையில் உள்ளனர். அதனால்தான் மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தின்போது மக்கள் எழுச்சியும், வரவேற்பும் அதிகரித்து உள்ளது. மக்களின் அதிருப்தி வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக திரும்பும். அந்த எதிர்ப்பு வாக்குகள் தி.மு.க.வுக்குதான் செல்லும். எனவே வரும் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்”, இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில பொருளாளர் ஷாஜகான், முன்னாள் எம்.பி. அப்துல் ரகுமான், மாவட்ட செயலாளர் முகம்மதுபைசல், சாதுல்லாகான் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
ஆளும்மத்தியஅரசுடன்கூட்டுவைத்துக்கொண்டுஅனுபவித்ததிராவிடகட்சிகள்: பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொள்ள ஆவலாகத்தான் திராவிட கட்சிகள் இருக்கின்றன. அவை ஒன்றும் கூட்டு வைத்துக் கொள்ளாமலும் இருந்ததில்லை. செக்யூலரிஸம் என்றெல்லாம் பேசினால் கூட, தில்லியில் அதிகாரத்தை விரும்பத்தஆன் செய்கின்றன. ஒரு எம்.பி பதவுக்கு அலையும் கட்சித்தலைவர்கள் தமிழகத்தில் அதிகமாகவே இருக்கிறார்கள். அதனால் தான், ஓட்டுகள் கிடைக்காது என்றால் கூட அத்தகையக் கட்சித் தலைவர்கள் ஆர்பாட்டம் செய்து வருகிறார்கள். எல்லா விசயங்களிலும் மூக்கை நுழைத்துக் கொண்டு அறிக்கைக்கள் விடுவது, கூட்டங்கள் போடுவது என்று செய்திகளில் வர ஆசைப்பட்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள். எந்த கட்சியாவது கூப்பிடாதா என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்பதால் அதை கூட்டணியில் சேர்க்க தயாராக இல்லை என்ற நிலையில் பாஜகவுடன் கூட்டு வத்துக் கொள்ள திமுக முயல்கிறது என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன[5]. இதனால் தான் முஸ்லிம் லீக் போன்றவை மறைமுகமாக பேரம் பேசுகின்றன போலும். மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மமக ஆகிய 5 கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டு இயக்கத்தை உருவாக்கி, “அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸுடன் கூட்டணியில்லை: ஒத்த கருத்துடைய கட்சிகள் வரலாம்”, என்று அறைகூவல் விடுத்ததும் வேடிக்கையாகவே இருந்தது[6]. காங்கிரஸ் பிளவு பட்டுள்ளதால், பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொள்ளத்தான் திமுக மற்றும் அதிமுக விரும்பும். பாஜகவைப் பொறுத்த வரையில், அதிமுகதான் விருப்பமான கட்சி, ஆனால், ஊழல் என்ற பிரச்சினையும், ஜெயலலிதா வழக்குகளும் தடுக்கின்றன. அதற்கேற்ற முறையிலும் ஜெயலலிதாவின் கோரிக்கைகளும் அளவுக்கு அதிகமாக இருக்கின்றன. அந்நிலையில், பணிவுடன் வரும் திமுகவுடன் கூட்டு வைத்துக் கொள்ளலாம் என்று தான் பாஜகவினர் நினைத்தார்கள். அதே நிலைதான் 2016லும் உள்ளது.
அரசியல் வியாபாரம் செய்து கோடிகளை அள்ளும் முஸ்லிம் கட்சிகள்: உண்மையில் அரசியல் மூலம் கோடிக்கணக்கில் தங்களது தொழில், வியாபாரம், வர்த்தகம், ஏற்றுமதி-இறக்குமதி, கான்ட்ரேக்ட், முதலியவற்றில் தான் அவர்களுக்குக் குறிக்கோள் அதற்கு அவர்கள் வளைகுடா நாடுகளில் உள்ள தொடர்புகளை தாராளமாக உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள். கேரளாவில் பலவிதங்களில் வலுவாக இருப்பதினால், அங்கிருக்கும் பலம், அதிகாரம் முதலியவையும் கிடைக்கின்றன. குற்றங்கள் புரியும் போது, வரியேய்ப்புகளில் ஈடுபடும் போது, இவர்கள் தங்களது அதிகாரங்களை பயன்படுத்திக் கொள்கிறர்கள். அவற்றுடன் கடந்த 30-40 ஆண்டுகளில் தீவிரவாதமும் இணைந்து விட்டது. தடை செய்யப்பட்ட சிமி, அல்-உம்மா போன்ற கூட்டனர் தார் இப்பொழுது வெவ்வேறு பெயர்களில், பேனர்களில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஓட்டு வங்கி உருவாக்கி பேரம் பேசும் முஸ்லிம் கட்சிகள்: மதத்தின் பெயரால் பாரதத்தைத் துண்டாடிய முஸ்லிம் லீக் இன்று வரை தான் செக்யூலரிஸ கட்சியாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறது. மானங்கெட்ட திராவிடக் கட்சிகள் அதனுடம் கூட்டு வைத்துக் கொண்டு தங்களது செக்யூலரிஸத்தை நிரூபித்து வருகின்றன. முஸ்லிம் கட்சிகள் செக்யூலரிஸம் பேசுவது முதலியன முரண்பாடானது மட்டுமல்ல ஜனநாயக கேலிக் கூத்தாகும். தமிழகத்தில் 2006-ஆம் வருட சட்ட பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் எண்ணிக்கை 7-லிருந்து 5-ஆக குறைந்தது பற்றியே முஸ்லிம்கள் கவனமாக இருந்தார்கள். ஆனால், ராமநாதபுரத்தைச் சேர்ந்த எம்.எச் ஜவாஹிருல்லாஹ் (மனித நேய மக்கள் கட்சி) அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றது முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தது என்று பதிவு செய்து கொண்டார்கள். மேலப்பாளையம், அதிராம்பட்டினம், கடையநல்லூர், தென்காசி, கோவை, திருப்பூர், நாகூர், வாணியம்பாடி, ஆம்பூர், திருச்சி, திருவல்லிக்கேணி, துறைமுகம், லால்பேட்டை, பரங்கிப்பேட்டை, பண்டாரவாடை, காயல்பட்டினம், கீழக்கரை முதலிய தொகுதிகளில் முஸ்லிம் ஆதரவுடன் தான் ஜெயிக்க முடியும் என்ற ஓட்டு வங்கி அரசியலை உண்டாக்கி, அதன் மூலம் தான் திராவிட கட்சிகளிடம் பேரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அரசியல்கட்சிகளின்போலித்தனங்கள்: திராவிட கட்சிகளைப் போல, முஸ்லீம் லீக்குகள் / கட்சிகளும் உருமாறி விட்டனவா அல்லது அதுபோல நடிக்கின்றனவா? இந்தியாவில் உள்ள ஒரே மதவாதி கட்சி பி.ஜே.பி தான் என்று இந்த முஸ்லீம் லீக்குகள் / கட்சிகளே கூறுவதும் வேடிக்கையான விஷயம் தான். ஆனால், செக்யூலரிஸ கட்சிகள் என்று கூறிக் கொள்ளும் திமுக, அதிமுக மாறி மாறி பி.ஜே.பியுடன் கூட்டு வைத்துள்ளன. இப்பொழுதுகூட, காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டு சேரும் பட்சத்தில் மாறுபட்ட எண்ணங்கள் இருந்தன. காங்கிரஸைப் பற்றி கேட்கவே வேண்டாம். செக்யூலரிஸம் சொல்லிக் கொண்டு பி.ஜே.பியை விட, அதிகமாகவே மதசார்புள்ள கட்சிகளுடன் – முஸ்லீம் லீக், கிருத்துவ கட்சிகள், சீக்கிய கட்சிகள் – தொடர்ந்து கூட்டு வைத்திருந்து வந்துள்ளன. ஆகவே, இப்படி முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் ஆளும் மற்றும் எதிர் கூட்டணிகளில் இருப்பது, அரசியலை மீறிய நிலையைத்தான் காட்டுகிறது.
[3] மாலைமலர், 3 –வது அணிக்குவேலையில்லை:இந்திய யூனியன்முஸ்லிம்லீக்மாநிலதலைவர்காதர்முகைதீன் பேட்டி, பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, அக்டோபர் 26, 2015: 5:17 PM IST.
2011 மற்றும் 2016 தேர்தல்கள் – முஸ்லிம்களின் யுக்திகள், மதவாத முயற்சிகள், மற்றும் ஓட்டு வங்கி அரசியல் வியாபாரங்கள்! (1)
முஸ்லிம் கட்சிகளின் அபாயகரமான அரசியல் சூழ்ச்சிகள்: கடந்த 2011 தேர்தலின் போது முஸ்லிம் கட்சிகள் போட்ட வேடங்களை ஐந்தாண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்துள்ளேன். வெளியில் ஒன்றையொன்று தாக்கிக் கொள்வது போலக் காட்டிக் கொண்டு தங்களுக்கு அதிக அளவில் இடங்களை கைப்பற்ற யுக்திகளை எப்படி கையாளுகின்றன முதலியவை அப்பொழுது வெளிப்பட்டன. வருடாவருடம் கட்சி-கூட்டணி மாறிக் கொண்டேயிருப்பது என்ன சித்தாந்தம், அர்த்தம், தருமம் என்று அவர்களிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். மத ரீதியில் திமுக என்றாலும் அதிமுக என்றாலும் காஃபிர்கள் கட்சிதான். ஆக காஃபிர்களுடன் ஏன் கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள் என்பது ஆண்டவனுக்குத் தான் தெரியும் போலும்! முஸ்லீம்களுக்கு மதம் தான் முக்கியம், அதாவது இஸ்லாத்தை என்றைக்கும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஆனால், இப்படி அரசியலுக்காக, அவர்கள் நிலைமாறி போகும் போக்கு எதனைக் காட்டுகிறது? மதக்கொள்கைகளை நீர்த்து விடுகின்றனரா அல்லது சமரசம் செய்து கொள்கின்றனரா? இஸ்லாத்தில் அதற்கு இடம் உண்டா? இதை பயங்கரமான அரசியல் சூழ்ச்சி என்று தான் சொல்லவேண்டும்.
காபிரை வைத்து, காபிரை வீழ்த்தலாம் என்ற சித்தாந்தம்: காஃபிர்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு காஃபிர்களை ஒழித்துக் கட்டலாம் என்றால், அவ்வாறு கூட்டு வைத்துக் கொள்ளலாம் என்று உள்ளாதா என்ன? “எதிரியின் எதிரி” நண்பன் என்று இந்த விரோதிகள் ஒன்றாக கூடியுள்ளனர். அதாவது, காபிரை வைத்து, காபிரை வீழ்த்தலாம் என்ற சித்தாந்த போலிருக்கிறது. குரானில், ஹதீஸில், ஷரீயத்தில் அத்தகைய கொள்கை உள்ளது என்று எடுத்துக் காட்டியுள்ளனர் போலும். கருணாநிதி போன்றவர்களுக்கு செக்யூலரிஸம் என்று பேசினாலும், பி.ஜே.பியுடன் கூட்டு வைத்துக் கொண்டு நன்றாக சந்தோஷமாகத்தான் இருந்தனர். அரசாட்சி, அதிகாரம் பணம், புகழ் வரவேண்டும் அவ்வளவே தான்! ஆனால், இப்பொழுது, திமுக காங்கிரசுடன் சேர்ந்து விட்டது. அதாவது, ஊழல்- ஊழலோடு ஐக்கியமாகி விட்டது. இதே போல மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் மதவாதக் கட்சிகளுடன் தாராளமாக கூட்டு வைத்துக் கொண்டு நாடகம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
கருணாநிதியும்முஸ்லிம்கட்சிகளும் (மார்ச்.21, 2016): “இந்தியயூனியன்முஸ்லிம்லீக்கட்சிஉங்களோடுநீண்டநாட்களாககூட்டணியிலேஉள்ளகட்சி. இப்போதுமனிதநேயமக்கள்கட்சிஉங்கள்கூட்டணியிலேசேருகிறது. அதனால்இந்தியயூனியன்முஸ்லீம்லீக்கட்சிக்குஉள்ளஇடம்குறையுமா?,” என்று கருணாநிதியிடம் கேட்டபோது, “குறையாது” என்று பதிலளித்துள்ளார்[1]. “இடவொதிக்கீடு” பாணியில், தனித்தனியாக ஒதுக்கீடு செய்வாரா அல்லது அருந்ததியரை / எஸ்.சிக்களை ஏமாற்றியது போல, உள்-ஒதுக்கீடு செய்து ஏமாற்றுவாரா? அதாவது, முஸ்லிம் கட்சிகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ள சமயோஜிதமாக கூறியுள்ளது தெரிகிறது[2]. நாளைக்கு, திமுகவுக்கு பாதகமான தொகுதிகளை இவர்களுக்கு ஒதுக்கி விட்டு, கணக்குக் காட்டிக் கொள்ளலாம். முஸ்லிம்களால் ஜெயிக்க முடியும் என்ற தொகுதிகளை தாம் அவர்களுக்குக் கொடுப்பது என்பதை யுக்தியாகக் கொண்டுள்ளனர். அதிலும், அதிமுக மற்றும் திமுக கட்சியினர், கூட்டணி முஸ்லிம் கட்சி வேட்பாளருக்குப் பதிலாக, தமது கட்சி முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில், அரசியல் கட்சிகளுக்கு ஆதாயம் என்று நினைத்தாலும், வெற்றி பெற்றப் பிறகு, முஸ்லிம் முஸ்லிமாகதான் நடந்து கொள்ளும் போது, மதவாதத்திற்கு திராவிடக் கட்சிகளும் துணைபோய் கொண்டிருக்கின்றன.
அதிமுகவிலிருந்துதிமுககூட்டணியில்தாவியுள்ளமனிதநேயமக்கள்கட்சி (மார்ச்.19, 2016): தமிழகத்தில் வரவிருக்கும் தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்[3]. அதிமுகவிலிருந்து, திமுகவுக்குத் தாவியிருப்பது நோக்கத்தது[4]. முஸ்லிம் கட்சியினர், இவ்வாறு அதிமுக-திமுக கூட்டணிகளில் தாவி-தாவி விளையாடிக் கொண்டிருக்கும் “சர்க்கஸ் கூத்துகளை” மக்கள் கவனிக்க வேண்டும். இதில் முஸ்லிம் கட்சிகளுக்கு கவலையே இல்லை, ஏனெனில், அவர்கள் எப்படியாவது சாதித்துக் கொள்கிறார்கள். ஆனால், திராவிடக் கட்சிகளின் ஜனநாயகமற்ற, கொள்கையற்ற, சித்தாந்தம் மறந்த வேசி அரசியலை கவனிக்க வேண்டும். தமிழக சட்டப்பேரவை தேர்தல் மே 16-ல் நடைபெறவிருக்கிறது. பலமுனைப் போட்டி காணும் இத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டாலினை ஜவாஹிருல்லாசந்தித்துபேசியது: இந்நிலையில், சென்னையில் 19-03-2016 அன்று (சனிக்கிழமை) கூட்டணி குறித்து ஸ்டாலினை அவரது இல்லத்தில் ஜவாஹிருல்லா சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பேச்சுவார்த்தையில் சுமுகமான உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இணைந்து போட்டியிடும்” என்றார்[5]. ஜவாஹிருல்லா தலைமையில் செயல்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கடந்த 2009-ம் ஆண்டு மனிதநேய மக்கள் கட்சியானது. அப்போது நடந்த லோக்சபா தேர்தலில் மமக தனித்து போட்டியிட்டது. 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் மமக இணைந்தது. அக் கட்சிக்கு ராமநாதபுரம், ஆம்பூர், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் ராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லாவும், ஆம்பூரில் அஸ்லம் பாஷாவும் வெற்றி பெற்றனர். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட தமீமுன் அன்சாரி தோல்வி அடைந்தார்[6].
திமுகதலைமையிலான “மதசார்பற்றகூட்டணி”இறைவன்நாடினால்நிச்சயம்வெற்றிபெறும்: திமுக கூட்டணியில் முஸ்லிம்களின் அடிப்படைவாத-தீவிரவாத கட்சியான எஸ்டிபிஐ இணைந்துள்ளது. இது பற்றி அதன் தலைவர் தெஹலான் பாகவி செய்தியாளர்களிடம் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான “மதசார்பற்ற கூட்டணி” இறைவன் நாடினால் நிச்சயம் வெற்றிபெறும். இந்த கூட்டணி யில் மதசார்பற்ற கட்சிகள் இணைந்து வலுவான கூட்டணியாக மாற்ற முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். எஸ்டிபிஐ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி இணைந்துள்ள திமுக கூட்டணி மதசார் பற்றகூட்டணியாம். தமிழர்களை எவ்வளவு வடிகட்டின முட்டாள்களாக நினைத்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது தமாஷாகத்தான் இருக்கிறது. அப்படி தமிழக மக்கள்களை மூடர்களாக மாற்றி வைத்துள்ளது திராவிட போலி நாத்திக கூட்டங்கள். முஸ்லிம்களின் நலனுக்காக மட்டும் வரிந்து கட்டி கொண்டு செயல்படும் இயக்கங்களான தவ்கீத்ஜமாத், எஸ்டிபிஐ, தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் அரசியல் பிரி வான மனித நேயமக்கள் கட்சி ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தமிழகத்தில் மதவாத பிஜேபியை வளரவிட மாட்டோம் என்று சொல்வது, வேடிக்கைதான்.
விஜயகாந்தைமிரட்டியஎஸ்டிபிஐதிமுககூட்டணியில்சேர்ந்தது (19-03-2016): சென்ற மாதம் பிப்ரவரி 21ம் தேதி விஜயகாந்த் பாஜகவுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தியது ஞாபகம் கொள்ளலாம்[7]. தெஹலான் பாகவி, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: “234 தொகுதிகளிலும்போட்டியிடும்அளவுக்குஎஸ்டிபிஐகட்சிவளர்ச்சிஅடைந்துள்ளது. எஸ்டிபிஐஇடம்பெற்றுள்ளகூட்டணியேவெற்றிபெறும். தேமுதிகதலைவர்விஜயகாந்த், பாஜகவுடன்கூட்டணிஅமைக்கக்கூடாது,” என்றெல்லாம் பேசியது உள்ளே விவகாரம் உள்ளது என்பதுதான் தெரிகிறது[8]. அப்படி 234 தொகுதிகளிலும் எந்த விதத்தில் வளர்ச்சி அடைந்துள்ளனர் என்பதனை ஆராய வேண்டும். இப்பொழுதோ, 23-03-2016 அன்று விஜயகாந்த், முட்டாள்தனமாக மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்திருப்பது அதை விட வேடிக்கையான விசயமாக இருக்கிறது. இது நிச்சயமாக ஓட்டுகளைப் பிரிக்கும் யுக்திதான். ஒன்று பிஜேபி அடியோடு ஓரங்கட்டப்பட்டு விட்டது. அரசியல் தெரியாத தமிழக பிஜேபிக்காரர்களின் நிலை இதுதான் என்று தெரிந்து விட்டது. இனி அமித் ஷா வந்து என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை.
[1] தினத்தந்தி, ‘தி.மு.க. கூட்டணிக்குதே.மு.தி.க. வரலாம்: இன்னும்நம்பிக்கையைஇழக்கவில்லை’ கருணாநிதிபேட்டி, பதிவு செய்த நாள்: செவ்வாய், மார்ச் 22,2016, 1:26 AM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், மார்ச் 22,2016, 5:45 AM IST.
அண்மைய பின்னூட்டங்கள்