Archive for the ‘ஃபிதாயீன்’ category

என்ஐஏ தொடர்ந்து சென்னை மற்றும் திருச்சி நகரங்களில் சோதனை – கோயம்புத்தூர் கார் வெடிப்பு-விபத்து, தற்கொலை விவகாரம்!

நவம்பர் 21, 2022

என்ஐஏ தொடர்ந்து சென்னை மற்றும் திருச்சி நகரங்களில் சோதனைகோயம்புத்தூர் கார் வெடிப்புவிபத்து, தற்கொலை விவகாரம்!

10 நாட்களில் 3-வது சோதனை 10 நாட்களில் 3-வது சோதனைவிட்டுவிட்டு நடக்கும் சோதனைகள்: சோதனை 20-11-2022 சனிக்கிழமை அன்று கார் வெடிப்பு வழக்குத் தொடா்பாக சென்னை, திருச்சியில் 6 இடங்களில் போலீஸார் சோதனை செய்து, பென்டிரைவ், மடிக்கணினி, கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்[1]. 10-11-2022 மற்றும் 15-11-2022 என்று சோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன[2]. கோவை உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக். 23-ஆம் தேதி சென்ற ஒரு காரில் இருந்த சிலிண்டா் வெடித்தது. இந்த சம்பவத்தில் அந்த காரை ஓட்டி வந்த அந்தப் பகுதியைச் சோ்ந்த ஜமேஷா முபீன் என்ற இளைஞா் உயிரிழந்தார். இது தொடா்பாக ஜமேஷா முபீன் கூட்டாளிகள் 6 பேரை கோவை போலீஸார் கைது செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக என்ஐஏ தமிழகம்,கேரளம் ஆகிய இரு மாநிலங்களில் 43 இடங்களில் கடந்த 10ஆம் தேதி [10-11-2022] ஒரே நேரத்தில் சோதனை செய்தது. இந்த வழக்கை விசாரித்த என்ஐஏ, ஐஎஸ் பயங்கரவாத உறுதி மொழி ஏற்ற ஜமேஷா முபீன், தற்கொலை தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தது. அதில் பல்வேறு முக்கிய ஆவணங்களும் கைப்பற்றியதாகவும் கூறப்பட்டது. அதேபோல், இந்த சம்பவத்தின்போது உயிரிழந்த முபினின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 75 கிலோ நாட்டு வெடிகுண்டுகள்தயாரிக்க பயன்படும் வேதிப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றை ஆன்லைன் மூலமாக வாங்கியதாக கைதானவர்கள் தரப்பில் முன்பு தெரிவிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்திருந்தனர்[3]. இருப்பினும் அதில் சில பொருட்களை சிவகாசியில் உள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வாங்கியிருக்கலாம் எனஎன்ஐஏ அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது[4]. இந்த வெடிப்பொருட்கள்-ரசாயனங்கள் பற்றி ஏற்கெனவே வாத-விவாதங்கள் காரசாரங்களில் முடிந்துள்ளன.

15-11-2022 அன்று சோதனையில் ஆவணங்கள் பறிமுதல்: என்ஐஏ வழக்கின் விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையிலும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடா்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையிலும் சென்னை பெருநகர காவல்துறையினா் கடந்த 15ஆம் தேதி 5 இடங்களில் சோதனை செய்து, வெளிநாட்டு பணம்,ஆவணங்களை பறிமுதல் செய்தனா்.

20-11-2022 சனிக்கிழமை அன்று சென்னையில் சோதனை: இந்நிலையில் இரண்டாவது கட்டமாக சனிக்கிழமை 4 இடங்களில் போலீஸார் ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்[5].

இச் சோதனை –

  1. சென்னை ஓட்டேரி எஸ்.எஸ்.புரத்தில் வசிக்கும் சாகுல் ஹமீது (31) வீடு[6],
  2. வேப்பேரி ஈவெரா பெரியார் சாலையில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் எஸ்.எம்.புஹாரி (57) வீடு,
  3. ஏழு கிணறு பகுதியில் பிடாரியார் கோவில் தெருவில் உள்ள உமா் முக்தார் (33) வீடு,
  4. வி.வி.எம்.தெருவில் உள்ள முகமது ஈசாக் கெளத் (33) வீடு

ஆகிய இடங்களில் நடைபெற்றது. பல மணி நடைபெற்ற சோதனையில் 4 வீடுகளிலும் இருந்து 12 பென் டிரைவ்கள், 14 கைப்பேசிகள்,ஒரு மடிக்கணினி, 2 கையடக்க கேமராக்கள், ஒரு சிறிய ரக சூட்கேஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இவை அனைத்தும் தடயவியல்துறை ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் அடிப்படையில் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 102-கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது[7]. கடந்த 10 நாட்களில் 3-வது முறையாக சென்னையில் என்ஐஏ சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது[8].

20-11-2022 சனிக்கிழமை அன்று திருச்சியில் சோதனை: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடா்பாக திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த இருவா் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது[9]. இதில், –

  1. ஷாகுல் ஹமீத் (வயது 25)- இனாம்குளத்தூா் நடுத்தெருவில் வசிக்கும் ஆவின் நிறுவன ஒப்பந்த தொழிலாளி,
  2. ஷர்புதீன் (வயது 25) – கந்தசாமி தெருவைச் சோ்ந்த ஜெராக்ஸ் கடை நடத்துபவா் –

என இருவா் மீது சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்தனா். இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஐ.எஸ் அமைப்பின் முகநூல் பக்கத்தை லைக் செய்ததாகக் கூறப்படுகிறது[10]

இதையடுத்து, ஜீயபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாரதிதாசன் தலைமையில், இரண்டு காவல் ஆய்வாளா்கள், 13 உதவி ஆய்வாளா்கள், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் மோப்பநாய் உதவியுடன் இனாம்குளத்தூருக்கு சனிக்கிழமை வந்தனா். சந்தேகப்படும் நபா்கள் இருவா் தங்கியிருந்த வீடுகளிலும், அதன் சுற்றுப் பகுதிகளிலும் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இரு இடங்களிலும், சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் இருவரது வீடுகளில் இருந்து எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. இருப்பினும், இருவரது சமூக வலைதள பகிர்வுகள் குறித்தும், தொலைபேசி தொடா்புகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா். “இச்சோதனையில் ஹார்டு டிஸ்க்குகள், 2 செல்போன்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது,” என்று நக்கீரன் குறிப்பிடுகிறது. 

17-11-2022 முதல் 19-11-2022 வரை கம்பத்தில் சோதனைவிசாரணை: கம்பத்தில் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சோ்ந்த நிர்வாகிகள் 5 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 18-11-2022, வெள்ளிக்கிழமை அன்று விசாரணை நடத்தினா்[11]. தீவிரவாதிகள் அமைப்புடன் தொடா்பு இருப்பதாக பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் என மாநிலத்தில் 16-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை போலீஸார் கடந்த செப். 22-இல் சோதனை நடத்தினா். இதில் அந்த அமைப்பின் மண்டலச் செயலாளா் பொறுப்பில் இருந்த தேனி மாவட்டம், கம்பம் தாத்தப்பன்குளத்தைச் சோ்ந்த யாசா் அராபத் (32) என்பவரைக் கைது செய்தனா். அதன் பின்னா் கம்பத்தில் செயல்பட்ட மாவட்ட அலுவலகத்துக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2 நாள்களாக கம்பத்தில் அந்த அமைப்பைச் சோ்ந்த 5 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை காவல் ஆய்வாளா் அருண் மகேஷ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், 3-ஆவது நாளாக 19-11-20022 அன்று வெள்ளிக்கிழமையும் அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது: “கம்பத்தில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டவருடன், சிலருக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது. அதனடிப்படையில், கம்பத்தில் 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. தொடா்ந்து விசாரணை நடைபெறும்,” என்றனா்[12].

© வேதபிரகாஷ்

21-11-2022.


[1] தினமணி, கார் வெடிப்பு வழக்கு: சென்னை, திருச்சியில் போலீஸார் சோதனை, By DIN  |   Published On : 19th November 2022 11:15 PM  |   Last Updated : 20th November 2022 04:51 AM.

[2] https://www.dinamani.com/tamilnadu/2022/nov/19/police-raids-in-trichy-and-chennai-3952494.html

[3] தமிழ்.இந்து,  கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: மேலும் 5 பேரிடம் என்ஐஏ விசாரணை, செய்திப்பிரிவு, Published : 19 Nov 2022 06:21 AM; Last Updated : 19 Nov 2022 06:21 AM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/900225-coimbatore-car-cylinder-blast-1.html

[5] தினத்தந்தி, என்... வழக்கு தொடர்பாக சென்னையில் மீண்டும் 4 பேர் வீடுகளில் போலீசார் சோதனைசெல்போன்கள் பறிமுதல், நவம்பர் 20, 12:20 am

[6] https://www.dailythanthi.com/News/State/nia-in-connection-with-the-case-the-police-raided-the-houses-of-4-people-in-chennai-again-cell-phones-were-seized-840708

[7] தமிழ்.இந்து, 3-வது முறையாக சென்னையில் 4 இடங்களில் என்ஐஏ சோதனை: ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்பா என விசாரணை, செய்திப்பிரிவு, Published : 20 Nov 2022 04:20 AM; Last Updated : 20 Nov 2022 04:20 AM

[8] https://www.hindutamil.in/news/tamilnadu/900669-nia-raids-4-locations-on-chennai-for-the-3rd-time-probe-for-links-with-isis.html

[9]   நக்கீரன், என்.. திடீர் சோதனை; மூன்று மணி நேர சோதனைக்குப் பிறகு ஹார்டு டிஸ்க்குகள் பறிமுதல், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 19/11/2022 (20:30) | Edited on 19/11/2022 (20:46).

[10] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/nia-raid-trichy-confiscation-hard-disks

[11] தினமணி, கம்பத்தில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிா்வாகிகள் 5 பேரிடம் என்ஐஏ விசாரணை, By DIN  |   Published On : 18th November 2022 11:36 PM  |   Last Updated : 18th November 2022 11:36 PM.

[12] https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2022/nov/18/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-3951860.html

கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்ந்து என்.ஐ.ஏ தமிழகத்தில் பல இடங்களில் விசாரணை, சோதனைகள் ஆரம்பம், ஆவணங்கள் பறிமுதல்! (2)

நவம்பர் 17, 2022

கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்ந்து என்.. தமிழகத்தில்  பல இடங்களில் விசாரணை, சோதனைகள் ஆரம்பம், ஆவணங்கள் பறிமுதல்! (2)

10-11-2022 வியாக்கிழமைஆவணங்கள் பறிமுதல்: ஓட்டேரியில் தாசமக்கான் பகுதி அருகே சலாவுதீன் என்பவா் வீட்டில் வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையா் பவன் குமார் ரெட்டி தலைமையில் போலீஸார் சோதனை செய்தனா். எம்கேபி நகரைச் சோ்ந்த ஜகுபா் சாதிக் என்ற ஜாபா் சாதிக் வீட்டிலும் போலீஸார் சோதனை செய்தனா். மேலும், திருவொற்றியூா், மண்ணடி ஆகிய இடங்களிலும் போலீஸார் சோதனை செய்தனா். சோதனை நடைபெற்ற இடங்களில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனா். வியாழக்கிழமை மாலைக்குள் அனைத்து இடங்களிலும் சோதனை நிறைவு பெற்றது. சோதனையில் முடிவில் பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க், மெமரி கார்டு உள்ளிட்ட மின்னணு கருவிகள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக என்ஐஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட .எஸ்..எஸ் இயக்க ஆதரவாளர்கள் லிஸ்ட்: மண்ணடி சைவ முத்தையா தெரு, சேவியர் தெரு, ஏழு கிணறு, கொடுங்கையூர், வடக்கு கடற்கரை, முத்தியால்பேட்டை உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்[1]. கொடுங்கையூர் பகுதியில் புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர்[2]. மண்ணடி பகுதியில் துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் சோதனை நடைபெற்றது. தடைசெய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்க ஆதரவாளர்கள் என சந்தேகம், ஏற்கனவே என்.ஐ.ஏ-வால் விசாரணை செய்யப்பட்டவர்கள் என 109 பெயர்கள் அடங்கிய பட்டியலை மத்திய உளவுத்துறை கொடுத்ததன் அடிப்படையில் தற்போது இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது[3]. இதேபோல் கடந்த வாரமும் பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர்[4]. அதில், ரூ. 56 லட்சம் பணம், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னையில் 15-11-2022 அன்று பல இடங்களில் 20க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சோதனை நடைபெற்றது.

15-11-2022 – நான்கு நபர்களிடம் விசாரணைசோதனை: பட்டியலில் உள்ளவர்களில் பலர், ஏர்கெனவே ஈடுபட்டுள்ள குற்றங்களை வைத்து, தொடர்ந்து விசாரிக்கும்பொழுது, அவர்கள் இன்றும் அத்தகைய லிங்குகளுடன் தொடர்ந்து வேலை செய்து வருவது புலனாகிறது.

  1. முகமது தப்ரஸ் – குறிப்பாக சென்னை கொடுங்கையூர் வள்ளுவர்தெருவில் உள்ள முகமது தப்ரஸ் என்பவர் வீட்டில் சோதனை நடந்தது. இவர் மீது தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு பணபரிவர்த்தனை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.
  2. தவ்பிக் அகமது – அதேபோல் ஏழுகிணறு சேவியர் தெருவை சேர்ந்த தவ்பிக் அகமது என்பவர் சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் உள்ள பயங்கரவாதிகளுக்கு பணபரிவர்த்தனை செய்ததாக ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
  3. ஹாரூன் ரஷித் – மேலும் மண்ணடி சைவ முத்தையா முதலி தெருவை சேர்ந்த ஹாரூன் ரஷித் மீது தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு சிம்கார்டுகள் விற்பனை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஹாரூண் ரஷீத் வீட்டில் இருந்து ரொக்கம் ரூ.4 லட்சத்து 90 ஆயிரம், ரூ.1,600 மதிப்புள்ள சீன கரன்சி, ரூ.4,820 தாய்லாந்து கரன்சி, ரூ.50 ஆயிரம் மியான்மா் கரன்சி, ரூ.7 மதிப்புள்ள சிங்கப்பூா் கரன்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மண்ணடி முத்தையா தெருவில் உள்ள அவரது வா்த்தக நிறுவனத்திலிருந்து மடிக்கணினி, கிரெடிட் அட்டை, டெபிட் அட்டை, மின்னணு கருவிகள், ரூ.10 லட்சத்து 30 ஆயிரத்து 500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
  4. முகமது முஸ்தபா – வடக்கு கடற்கரை அங்கப்பன் நாயக்கர் தெருவை சேர்ந்த முகமது முஸ்தபா மீது தடை செய்யப்பட்ட இயக்கத்தினருக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த வழக்கு உள்ளது.

இந்த அதிரடி சோதனையில் தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்புடைய இந்த 4 நபர்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும், அவர்கள் யார் யாருடன் தொடர்பில் உள்ளனர் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 10-11-2022 அன்று சோதனைக்குப் பிறகு, 15-11-2022 சோதன வருகிறது.

15-11-2022 அன்று ஊடகங்களின் செய்திவிசாரணைக்குப் பிறகு விவரங்கள் வெளியிடப் படவில்லை: தமிழக ஊடகங்கள் ஏதோ ஜாக்கிரதையாக செய்தி வெளியிடுவதைப் போல உள்ளது[5]. “அதேபோல் மண்ணடியில் உள்ள ஒரு வீட்டில் துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது,” கூறப்படுகிறது என்றெல்லாம் தான் செய்திகள் சொல்கின்றன[6]. இதே சிவசங்கர் பாபா என்றெல்லாம், நேரே பார்த்தது போல எழுதுவார்கள். இருப்பினும் சென்னையில் மொத்தம் எத்தனை பேரின் வீடுகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது பற்றிய விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை[7]. சோதனை முடிந்த பிறகு அதுபற்றிய விபரங்களையும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் யாருக்கும் தொடர்பு இருந்தால் அதுபற்றிய விபரங்களையும் போலீசார் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது[8]. கோவை சம்பவம் போன்று வேறு எங்காவது நடந்துவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே இதுபோன்ற சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது[9]. தீவிரவாத செயல்களுக்கு துணை புரிவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை பாயும் எனவும் போலீஸ் தரப்பில் எச்சரிக்கப்படுகிறது[10]. தமிழ்.இந்து[11], “ ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தினருடன் தொடர்பில் இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், சென்னையில் 5 இடங்களில் மாநகர போலீஸாருடன் இணைந்து என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்,…………………. சென்னையில் சிலர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்து மாநில உளவுப் பிரிவு போலீஸாருக்கு மத்திய உளவுத்துறை சமீபத்தில் ஒரு பட்டியல் அனுப்பியது. அதன் அடிப்படையிலேயே தற்போது சோதனை நடத்தப்பட்டுள்ளது..” என்கிறது[12].

15-11-2022 மாலை பீரிட்டு எழுந்து 16-11-2022 காலையும் அடங்கி விட்ட சோதனை செய்திகள்: 15-11-2022 மாலை மற்றும் 16-11-2022 காலை நாளிதழ்களில் செய்திகள் வெளியிட்டதுடன் அடங்கி விட்டன. மற்ற விசயங்களில், விவகாரங்களில் ஆராய்ச்சி செய்வது, “கிரைம்-நடந்தது என்ன?,” என்று வீடியோ போடுவது, புலன் விசாரணை மேற்கொள்வது, செர்லாக்-சாம்பு, நக்கீரன் போன்ற வேலைகளில் எந்த நிபுணத்துவ நிருபரும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. மாலை டிவிக்களில் வாத-விவாதங்களும் இல்லை. ஆக அப்படியே அடங்கி விட்டது ஆச்சரியமாக இருக்கிறது. தமிழகத்து ஊடகங்களைப் பற்றி கூட ஆராய்ச்சி செய்து, பிச்.டி வாங்கலாம் போலிருக்கிறது.

© வேதபிரகாஷ்

16-11-2022.


[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், .எஸ்..எஸ் இயக்கத்துடன் தொடர்பு? – சென்னையில் பல இடங்களில் சோதனை, Written by WebDesk, November 15, 2022 9:18:27 am.

[2] https://tamil.indianexpress.com/tamilnadu/suspect-links-to-isis-police-search-on-several-places-in-chennai-541926/

[3] குமுதம், கோவை கார் வெடிப்பு சம்பவம்: சென்னையில் மீண்டும் 4 இடங்களில் சோதனை, kumudam| TAMILNADU| Updated: Nov 15, 2022.

[4] https://www.kumudam.com/news/tamilnadu/48942

[5]  நக்கீரன், .எஸ். அமைப்புக்கு ஆதரவா? – சென்னையில் பல இடங்களில் போலீசார் சோதனை, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 15/11/2022 (07:50) | Edited on 15/11/2022 (08:10).

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/support-police-raided-many-places-chennai

[7] தமிழ்.ஒன்.இந்தியா, ஐஎஸ் பயங்கரவாதம்: காலையிலேயே பரபரக்கும் தலைநகர்.. சென்னையில் பல இடங்களில் போலீஸ் அதிரடி சோதனை.., By Nantha Kumar R Updated: Tuesday, November 15, 2022, 9:11 [IST].

[8] https://tamil.oneindia.com/news/chennai/chennai-police-raided-of-the-houses-of-suspect-of-isis-supportets/articlecontent-pf805599-485296.html

[9] மாலைமலர், .எஸ்.தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புசென்னையில் 5 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை , By Maalaimalar, 15  நவம்பர் 2022 11:31 AM.

[10] https://www.maalaimalar.com/news/district/tamil-news-coimbatore-car-blast-police-search-5-places-in-chennai-536697

[11] தமிழ்.இந்து, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பா? – சென்னையில் 5 இடங்களில் என்ஐஏ, போலீஸார் தீவிர சோதனை, செய்திப்பிரிவு Published : 16 Nov 2022 04:31 AM; Last Updated : 16 Nov 2022 04:31 AM.

[12] https://www.hindutamil.in/news/tamilnadu/897842-nia-police-intensive-search-at-5-places-in-chennai.html

கோவையில் திடீரென்று  ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு கொண்ட 100 இளைஞர்களை கண்டு பிடித்து விட முடியுமா? தொடர்ந்து ஏன் கண்காணிக்கப் படவில்லை? (2)

நவம்பர் 7, 2022

கோவையில் திடீரென்று  ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு கொண்ட 100 இளைஞர்களை கண்டு பிடித்து விட முடியுமா? தொடர்ந்து ஏன் கண்காணிக்கப் படவில்லை? (2)

ஐஎஸ் ஆதரவு இளைஞர்களுக்கு உளவியல் ஆலோசனை: இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மாநகரில் கார் வெடிப்பு தினத்தில் இருந்து தீவிர பாதுகாப்பு மற்றும் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். உக்கடம் சங்கமேஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் தற்போது வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உயர் அதிகாரிகளின் உத்தரவு படி, உளவுத்துறை போலீசார் தீவிரமாக பலரை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், கோவை மாநகரில் .எஸ். அமைப்பின் மீது ஈடுபாடு கொண்ட 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர்[1]. அவர்களது பட்டியலை தயார் செய்து வைத்துள்ளோம்[2]. அவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க முயற்சி செய்து வருகிறோம். மேலும் மருத்துவ குழு சார்பில், அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கவும் திட்டமிட்டு வருகிறோம். அவர்களை நல்வழிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்………[3] மேலும் உலாமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் அவர்களுக்கு தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது, .எஸ். இயக்கத்தின் மோசனமான செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூறி, நல்ல கருத்துகளை போதித்து அவர்களை நல்ல குடிமகனாக மாற்றும் திட்டம் செயல்படுத்த உள்ளோம். இதற்காக அனுபவம் வாய்ந்த உளவியல் நிபுணர்களை தயாராக உள்ளோம்[4]…………..…………..…,’’ என்றார்.

தீவிரவாதம் வளர்ந்து இந்நிலை அடைந்தது எப்படி?: கீழ்கண்ட நிகழ்வுகளிலிருந்து, அத்தகைய நிலை, நிச்சயமாக ஒரே நாளில் உருவாகி விட முடியாது:

  1. போலீஸார் கோவை மாநகரில் ஐ.எஸ். அமைப்பின் மீது ஈடுபாடு கொண்ட 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர்.
  2. அவர்களது பட்டியலை தயார் செய்து வைத்துள்ளனர்.
  3. அவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க முயற்சி செய்து வருகின்றனர்.
  4. மேலும் மருத்துவ குழு சார்பில், அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கவும் திட்டமிட்டு வருகிறது.
  5. அவர்களை நல்வழிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்………
  6. மேலும் உலாமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் அவர்களுக்கு தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது, ஐ.எஸ். இயக்கத்தின் மோசனமான செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூறி, நல்ல கருத்துகளை போதித்து அவர்களை நல்ல குடிமகனாக மாற்றும் திட்டம் ……….செயல்படுத்த முடிவு.
  7. இதற்காக அனுபவம் வாய்ந்த உளவியல் நிபுணர்களை தயாராக்க உள்ளோம்…..

அதனால், பல நாட்களாக, ஆண்டுகளாக நடந்து வரும் நிகழ்வுகளை எப்படி, ஏன், எவ்வாறு கவனிக்கப் படாமல் இருக்கிறது, என்பதும் நோக்கத்தக்கது.

உளவியல் ஆலோசனை எப்படி, யாரால், எவ்வாறு எங்கே நடக்கும்?: இதுவரை வெளிவந்துள்ள செய்திகளை கூர்மையாகப் படித்து, திரட்டி, அதில் உள்ள அம்சங்களை கீழ் கண்டவாறு கொடுக்கப் படுகிறது:

  1. கவுன்சலிங் கொடுக்க முயற்சி செய்தல்
  2. உலாமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் அவர்களுக்கு தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது
  3. ஐ.எஸ். இயக்கத்தின் மோசனமான செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூறி,
  4.  நல்ல கருத்துகளை போதித்து அவர்களை நல்ல குடிமகனாக மாற்றும் பிரத்யேகமான திட்டம்
  5. அத்திட்டத்தை செயல்படுத்துதல்

பொதுவாக தமிழக ஊடகங்கள், பிரச்சினைகளை அலசுவதில்லை, பல்லாண்டுகளாக இத்தகைய தீவிரமான சிக்கல்கள் மற்றும் தொடரும் கேள்விக்குரிய விஷயங்கள் இருந்தாலும், ஏதோ காரணங்களுக்காக செய்திகளாக வெளியிட்டு அமைதியாகி விடுகின்றனர்.

06-11-2022 அன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை அவரது அலுவலகத்தில் ஜவஹிருல்லா சந்தித்தார். பின்னர், அவர் கூறியபோது[5], “கடந்த, 1998ல் நடந்த குண்டு வெடிப்பால், கோவை மக்கள் பாதிக்கப்பட்டு, மீண்டும் சகஜநிலை திரும்ப பல ஆண்டுகளானது. கார் வெடிப்பு போல், வேறு சம்பவங்கள் நடக்க கூடாது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஒற்றை நபரை இயக்கியது யார், இவ்வளவு பெரிய சம்பவத்தை நடத்துவதன் பின்னணி என்ன, என்பது குறித்து உண்மை வெளிக்கொண்டு வரவேண்டும். .எஸ்..எஸ்., அமைப்பே இஸ்லாமிய சமூகத்தை சீர்குலைக்க கூடிய நோக்கில் செயல்படக்கூடியது[6]. அதன் ஆதரவாளர்களாக இருப்பவர்கள், அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் செயல்படுகின்றனர்[7]. இதுபோன்ற மன நிலையில் உள்ளவர்களுக்கு உளவியல் ரீதியான கவுன்சிலிங் கொடுக்க போலீஸ் தயாராக உள்ளது[8]. போலீசார் சிறப்பாக செயல்படுகின்றனர்[9]. கார் வெடிப்பு சம்பவத்தை என்..., எப்படி விசாரிக்கப் போகிறது என்பது கேள்விக்குறிதான். தமிழக போலீசாரே விசாரிக்க வேண்டும்,” இவ்வாறு அவர் கூறினார்[10].

பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் அழிப்புவாதம் என்றால் என்ன?: பயங்கரவாதம் எனும்பொழுதே சில மனிதர்கள் குறிப்பிட்ட அடிப்படைவாத சித்தாந்தம், கொள்கைகள் மற்றும் ஏற்றுக்கொள்ளப் பட்ட திட்டம், ஆணை மற்றும் உந்துதல், அவற்றின் மூலம் குறிப்பிட்ட மனிதர்கள், மனித குழுமங்கள் மற்றும் நாடுகளைத் தாக்குதல், குண்டுவெடிப்புகள் நடத்துதல், பீதியை உண்டாக்குதல் என்றாகிறது. இவையெல்லாம் ஒரே நாளில் வந்து விடாது. சிறு வயதிலிருந்தே சில அறிவுரைகள், போதனைகள், சித்தாந்தங்கள் முதலியவை படிப்படியாக கற்பிக்கப் படவேண்டும். உலகிலுள்ள மக்களை “ஏற்றுக் கொள்ளப் பட்டவர்கள்” மற்றும் “ஏற்றுக் கொள்ளப் படாதவர்கள்” என்று பிரித்து, அவ்வாறே அந்த பேதம், வித்தியாசம் மற்றும் வேறுபாடுகளை அறிய-புரிய வைத்து வெருப்பை மனங்களில் வளர்ப்பது முதல் பணியாக அமைகிறது. பிறகு, “நாம் உயர்ந்தவர்கள்” ஆனால், அவர்கள் “தாழ்ந்தவர்கள்” எனவே, அவர்கள், “நம்முடன் வாழத் தகுதியற்றவர்கள்” என்று பிரித்து அடையாளம் காண வைப்பது. இல்லை, தங்களை குறிப்பிட்ட சின்னங்களுடன் இணைத்து, பிரித்து அடையாளம் காண வைப்பது என்பதிலும் முடியலாம்.

வேதபிரகாஷ்

07-11-2022


[1] தினகரன், கோவை மாநகரில் .எஸ். தீவிரவாத ஈடுபாடு வாலிபர்கள் கண்டுபிடிப்பு: உளவியல் ஆலோசனை வழங்க திட்டம், 2022-11-05@ 14:48:42.

[2] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=811771

[3] தினத்தந்தி, .எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட 100 பேர் கண்டுபிடிப்பு, நவம்பர் 6, 12:15 am (Updated: நவம்பர் 6, 12:15 am).

[4] https://www.dailythanthi.com/News/State/is-discover-100-people-inspired-by-movement-830407

[5] தினமலர், ஒற்றை நபரை இயக்கியது யார்: கோவையில் ஜவஹிருல்லா கேள்வி, Updated : நவ 07, 2022  07:06 |  Added : நவ 07, 2022  07:04

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=3164210

[7] மின்னம்பலம், இஸ்லாமிய சமூகத்தை சீர்குலைக்கும் .எஸ்..எஸ்: ஜவாஹிருல்லா, நவம்பர் 6, 2022. 21:41 PM IST.

[8] https://minnambalam.com/political-news/isis-will-disrupt-the-islamic-community-jawahirullah/

[9] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், இஸ்லாமிய சமூகத்தை சீர்குலைக்கும் ஐஎஸ்ஐஎஸ்..! ஜமீஷா முபீனை இயக்கியது யார்..? ஜவாஹிருல்லா கேள்வி  , Ajmal Khan, First Published Nov 7, 2022, 8:36 AM IST; Last Updated Nov 7, 2022, 8:36 AM IST

[10] https://tamil.asianetnews.com/politics/jawahirullah-urged-to-find-out-who-is-behind-the-coimbatore-car-blast-rkyjbb

ஜமேஷாமுபின் – ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது– தெரிய வரும் பின்னணி (3)

நவம்பர் 5, 2022

ஜமேஷா முபின்ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது – தெரிய வரும் பின்னணி (3)

சமய இலக்கியங்கள் அனைத்தும் தமிழில் உள்ளன: விசாரணையின் போது மீட்கப்பட்ட ஆதாரங்களைப் பற்றி அறிந்த ஒரு உயர்மட்ட அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், கோவை, உக்கடத்தில் உள்ள ஜமேஷா முபீனின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் வாசகங்கள் உள்ளிட்ட குறிப்பேடுகளில் ஒரு பகுதி டைரிகள் எனக் கூறினர்[1]. “ஜமேஷா முபீனின் நாட்குறிப்பு பதிவுகள் பெரும்பாலும் மற்ற மதங்கள், குறிப்பாக இந்து மதம் மற்றும் கிறித்துவம் பற்றிய அவரது பார்வையை வெளிப்படுத்துகின்றன. அவர் அந்த மதங்களின் கடவுள்களின் பெயர்களை மேற்கோள் காட்டியுள்ளார். மேலும், ஒருவரையொருவர் இணைக்கும் அம்புகளுடன் கையால் எழுதப்பட்ட சார்ட் விளக்கப்படத்தில் அவற்றை சித்தரித்துள்ளார். சி.. ஹிஜாப் சர்ச்சை, உணவு மீதான கட்டுப்பாடுகள், மாட்டிறைச்சி காரணமாக நடந்த கொலைகள் போன்ற சம்பவங்கள் இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் இரண்டாம் தர குடிமக்களாக மாறி வருகின்றனர். இந்தச் பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது என்றும் அவர் திகைத்தார்,” என்று வட்டாரங்கள் தெரிவித்தன[2]. மேலும் சமய இலக்கியங்கள் அனைத்தும் தமிழில் உள்ளன என்று தெரிவித்தனர்.

அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம்: மனிதர்களை காபிர், மோமின் எனப் பிரித்து, ஜிஹாதி [புனித போரில்] புரிந்து காபிர்கள் கொல்லப் பட வேண்டும் என்று எழுதியிருப்பது,இப்படி குண்டுவெடிப்புகள்  நடத்திக் கொண்டிருந்தால், மனித இனம் என்னாவது என்று யோசிக்காமல், மதவெறியுடன் இருந்தது, முதலியவற்றை கவனிக்கும் பொழுது, எங்கிருந்து  மனித நேயம்,  மனிதத்துவம், அமைதி எல்லாம் வரும் என்பது ஆராய வேண்டியுள்ளது. இந்நிலையில், கோவையில் கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள் சந்தித்து உரையாடினர்[3]. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்[4]. பிறகு, எப்படி, முஸ்லிம் இளைஞர்கள் அவ்வாறு சேர்ந்து திட்டமிடுவார்கள், என்றெல்லாம் தெரியவில்லை. பெற்றோர், உறவினர், மற்றோர் முதலியோர்களுக்குத் தெரியாமல் தான், ஒவ்வொரு தடவையும் இவ்வாறு நடைபெறுகிறது. அதேபோல சொல்லப் படுகிறது. ஆனால், மறுபடியும் ஏதோ ஒன்று வெடிக்கத்தான் செய்கிறது.  தவிர இந்த செய்தி வந்த பிறகு தான், பென்டிரைவ், அதில் எஐஎஸ் வீடியோக்கள் போன்ற செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. தமிழ்.இந்துவில் இன்று தான் (04-11-2022) அச்செய்தியே வருகின்றது

ஜமாத்துகளின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்: கோவை உக்கடம் பகுதியில் சம்பவ நிகழ்விடத்தின் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு ஜமாத் நிர்வாகிகள் இன்று சென்று பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது: “3 ஜமாத்களின் சார்பாக கோட்டை சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை சந்தித்து உரையாடினோம். கடந்த வாரம் இந்த பகுதியில் நடந்த சம்பவம் பல்வேறு சமூகங்களுக்கு இடையே ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இஸ்லாமியர்களான நாங்கள் 7 தலைமுறைகளாக இந்த கோட்டைமேட்டில் வாழ்ந்து வருகிறோம். இந்தப் பகுதியில் நாங்கள் ஒற்றுமையுடன், அண்ணன் தம்பிகளாக கடந்த 200 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். இந்த சூழலில் இங்கு நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை கோட்டைமேட்டில் உள்ள ஜமாத்துகளின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இஸ்லாம் ஒருபோதும் வன்முறையைத் தூண்டும் மார்க்கம் அல்ல. நாங்கள் அமைதியை போதிக்கிறோம். அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம். எந்தவிதமான மத பூசல்களுக்கும், அரசியலுக்கும் நாங்கள் ஆட்பட்டு விடக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

100-க்கும் மேற்பட்ட வீடியோக்கள்: முன்னதாக, கோவை மாநகர தனிப்படை போலீசார் கைதான 6 பேர் வீட்டில் சோதனை நடத்தினர்.  கிடைத்த பொருட்களில், ஒரு பென் டிரைவ் இருந்தது. சோதனை செய்த போது அதிர்ச்சி அடைந்தனர், ஏனெனில், அந்த பென் டிரைவ்வில் 100-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். அமைப்பின் சித்தாந்தங்கள் அடங்கிய வீடியோக்கள் இருந்துள்ளது. இதில், 6 பேரில் ஒருவரது வீட்டில் பென் டிரைவ் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது[5]. அதனை போலீசார் ஆய்வு செய்த போது அதிர்ச்சி ஏற்பட்டது. அதில், ஐஎஸ் தீவிரவாதத்துக்கு ஆதரவான ஏராளமான வீடியோக்கள் இருந்தன[6]. தீவிரவாதிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது போன்ற வீடியோக்கள் மற்றும் கழுத்தை அறுத்து கொலை செய்வது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோக்கள் இருந்தன[7]. இதுதவிர இலங்கை குண்டு வெடிப்பை நிகழ்த்திய நபரின் பேச்சு அடங்கிய வீடியோவும் இருந்துள்ளது[8]. இதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வளவு தெளிவாக இருந்தாலும், இப்பிரச்சினை ஏதோ மழைகாலத்தில் இதுவும் ஒரு செய்தி என்பது போல கருதுவது போலத் தோன்றுகிறது.

கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வாயிலாக, கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க முக்கிய தகவல்கள் கிடைத்தன: ‘கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வாயிலாக, கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க முக்கிய தகவல்கள் கிடைத்தன’ என, போலீசார் தெரிவித்தனர்.கோவையில், அக்., 23ல் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் நடந்த கார் குண்டு வெடிப்பில், பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார். இந்த குண்டு வெடிப்பை விசாரித்த போலீசார் சந்தித்த சிரமங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தன்று அதிகாலை, 4:00 மணிக்கு வந்த கார், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் ஒன்றரை நிமிடம் நிற்பதை கண்காணிப்பு கேமரா காட்சிகளில் காண முடிந்தது. அதன் பிறகே கார் வெடித்துள்ளது. கார் காத்திருந்த ஒன்றரை நிமிடத்தில், ஜமேஷா முபின் தான் கொண்டு வந்திருந்த வெடிபொருட்களை வெடிக்கச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். கார் வெடித்தவுடன், அந்த அதிர்ச்சியில், பூட்டப்பட்டிருந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் கதவு தானாக திறந்தது.

கண்காணிப்பு கேமரா காட்சிகளை கேட்டுச் சென்றபோது, பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகி கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்தது: கோவிலுக்குள் வசிக்கும் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், போலீசார் ஓடி வந்துள்ளனர்.குண்டு வெடிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியில், கோவில் கண்காணிப்பு கேமராவில் அடுத்த இரண்டரை நிமிடங்களுக்கு காட்சிகள் எதுவும் இல்லை. அதன் பிறகே காட்சி பதிவாகியுள்ளது.’கோவிலில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகள் தான் வழக்கில் துப்பு துலக்க பேருதவியாக இருந்தன’ என்கின்றனர் போலீசார்.’சம்பவத்தை சற்று தொலைவில் இருந்து பார்த்த போலீஸ் அதிகாரி, கோவில் அருகே இருக்கும் டிரான்ஸ்பார்மர் வெடித்து விட்டதாக கருதி, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தபடி ஓடி வந்துள்ளார். ‘அருகே வந்த பின் தான், கார் வெடித்தது அவருக்கும் தெரியவந்தது’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த கோவிலுக்கும், ஜமேஷா முபின் வசித்த வீட்டுக்கும் வெகு துாரம் இல்லை. அதிகபட்சம், 300 மீட்டர் தான் இருக்கும். ஆனால், இறந்தவர் யார் என்றும், கார் யாருடையது என்றும், அப்பகுதி பொதுமக்கள் யாரும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை.எந்த ஒரு தகவலும் தெரியாமல், கோட்டைமேடில் போலீசார் வீதி வீதியாக அலைந்தும் விபரம் கிடைக்காமல் தடுமாறினர். கார் வந்த வழித்தடம் கண்டறிவதற்காக, கண்காணிப்பு கேமரா காட்சிகளை கேட்டுச் சென்றபோது, பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகி கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததும் நடந்துள்ளது[9]. தற்போது வழக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் இது பற்றி விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்[10].

வேதபிரகாஷ்

05-11-2022


[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் பலியான ஜமேஷா முபீன்; இலக்கை நோக்கி பயணித்த சுயமான தீவிரவாதி! , Written by WebDesk, Updated: October 30, 2022 3:34:14 pm

[2] https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-blast-jamesha-mubeen-killed-he-was-self-radicalised-on-way-to-target-533273/

[3] தமிழ்.இந்து, அனைவருடனும் நல்லிணக்கத்தோடு வாழ விரும்புகிறோம்: கோவையில் ஜமாத் நிர்வாகிகள் பேட்டி, செய்திப்பிரிவு, Last Updated : 03 Nov, 2022 02:51 PM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/891704-we-want-to-live-in-harmony-coimbatore-jamaath-officials.html

[5] தினகரன், கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டம்? பென்டிரைவில் சிக்கிய வீடியோ ஆதாரம்; பரபரப்பு தகவல்கள், 2022-11-05@ 00:31:23

[6] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=811657

[7] தினத்தந்தி, .எஸ். வீடியோக்கள் அடங்கியபென் டிரைவ்பறிமுதல், நவம்பர் 5, 12:15 am (Updated: நவம்பர் 5, 12:15 am)

[8] https://www.dailythanthi.com/News/State/is-pen-drive-containing-videos-seized-829642

[9] தினமலர், கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க உதவியது கோவில் கேமரா,  Updated : நவ 05, 2022  01:32 |  Added : நவ 05, 2022  01:30

[10] https://www.dinamalar.com/news_detail.asp?id=3162429

ஜமேஷாமுபின் – ஜிஹாதியானது, ஒத்திகைப் பார்த்தது, தற்கொலை வெடிகுண்டாக மாறியது (1)

நவம்பர் 5, 2022

ஜமேஷா முபின்ஜிஹாதியானது, ஒத்திகைப் பார்த்தது, தற்கொலை வெடிகுண்டாக மாறியது (1)

கோவை ஆர் காஸ் சிலிண்டர் வெடிகுண்டு சோதனை: என்.ஐ.ஏ மற்றும் தமிழக போலீஸார் கோவை குண்டு வெடிப்பு பற்றி ஆய்ந்து வருகின்றனர், விசாரணை நடத்துகின்றனர் மற்றும் வீடுகளில் சோதனைகள் நடக்கின்றன. கைதானவர்களிடமிருந்து வாக்குமூலங்களும் பெறப் படுகின்றன. செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆங்கில ஊடகங்களில் அதிகமாக வரும் பொழுது, தமிழக ஊடகங்கள் அமுக்கி வாசிக்கின்றன. ஜமேஷா முபின் ஏதோ சுயமாக இந்த தீவிரவாதச் செயலில் ஈடுபட்டான் என்றும் தலைப்பிட்டு செய்திகள் வருகின்றன. திராவிடத்துவ வாதிகள், தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போய்விட்டது, என்று பெருமூச்சு விட்டு அமைதியாகின்றனர்.  ஆனால், அரசியல் செய்பவர்கள், செய்து கொண்டு தான் இருக்கின்றனர். திமுகவினர், “தேசத் துரோகி” என்றெல்லாம் ராணுவ அதிகாரியை டிவி செனலில், கோடிக்கணக்கில் பொது மக்கள் கவனிக்கும் நிலையில் பலமுறை விளிப்பதும் திகைப்பாக இருக்கிறது. அந்த செனல் நிகழ்ச்சி அமைப்பாளர், அத்தகைய பேச்சுகளை “மூட்” கூட செய்யாமல் இருந்ததை கவனிக்க முடிந்தது.

ஜமேஷா முபின் வீட்டில் கைப்பற்றப்பட்ட 109 பொருட்கள்[1]: ஜமேசா முபினின் வீட்டில் நடந்த சோதனையில் 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ஜிகாத் மற்றும் இஸ்லாமிய சித்தாங்கம் தொடர்பான புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி பலவிதமான செய்திகள் கடந்த ஒரு வாரமாக நாளிதழ்கள் வெளியிட்டு வருகின்றன. ஆனால், எந்த  எய்தி தாளோ, ஊடகமோ ஐந்தாறு-ஏழெட்டு பொருட்களைத் தவிர, மற்றதை சொல்ல காணோம். ஆகவே, தமிழ், ஆங்கிலம் மற்றும் இதர ஊடகங்களில் உள்ள எல்லாவற்றையும் தொகுத்து ஒரு லிஸ்ட் தயாரிக்கப் படுகிறது. – அதில்

  1. பொட்டாசியம் நைட்ரேட் [Potassium Nitrate],
  2. நைட்ரோ கிளசரின் [Nitro Glycerin],
  3. சிவப்பு பாஸ்பரஸ் [Red Phosphrous],
  4. அலுமினியம் பவுடர் [Aluminium powder],
  5. பிஇடிஎன் பவுடர் (பென்டா எரித்திரிடால் டிரை நைட்ரேட், Penta Erythrital tri-nitrate), 
  6. சல்பர் பவுடர் [Suplphur powder],
  7. ஆணிகள் [Balrus, nails],
  8. கருப்பு பவுடர் [Black powder],
  9. 2 மீட்டர் நீளமுள்ள திரி [Gelatin wires],
  10. இண்டன் கியாஸ் [Indane gas cylinder]
  11. பொட்டாசியம் நைட்ரேட் சிலிண்டர் [Potassium Nitrate cylinder],
  12. ஆக்சிஜன் சிலிண்டர் [Oxygen cylinder]
  13. கையுறை [hand glouses],
  14. ஓஎக்ஸ்ஒய் 99 [YXY99],
  15. அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பிளேடு [Surgical blades],
  16. கண்ணாடிகள் [Glass pieces],
  17. 9 வாட்ஸ் பேக்டரி [9 watts battery],
  18. 9 வாட்ஸ் பேட்டரி கிளிப் [9 watts Battery clips],
  19. வயர் [wires],
  20. சுவிட்ச் [switches],
  21. சிலிண்டர் [cylinders],
  22. ரெகுலெட்டர் [regulators],
  23. டேப் [tapes]
  24. இஸ்லாமிய மதம் கொள்கைகள் தொடர்புடைய புத்தகங்கள் [Islamic literature including Jihadi category],–

உள்ளிட்ட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரமாக இச்செய்திகள் வந்துகொண்டிருந்தாலும், முழு விவரங்கள் வெளியிடாமல் இருப்பதும் திகைப்பாக இருக்கிறது.

ஜமேஷ் முபீனின் குடும்பம், பின்னணி: கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்த முபின் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். படித்து முடித்ததும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அப்போது வீட்டில் அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்த போது, ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணையே நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார். அதன்படி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோவை அல் அமீன் காலனியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணான நஸ்ரத்தை (23) முபின் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கோட்டைமேடு பகுதியில் மனைவியுடன் வசித்து வந்த அவர் அங்குள்ள புத்தக கடையில் வேலைக்கு சேர்ந்தார். இவருக்கு 2 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு முபின் தனது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாரிடமும் பேசுவதில்லை. இந்த நிலையில் திடீரென தான் வேலை பார்த்து வந்த புத்தக கடை வேலையை முபின் விட்டு விட்டார். இதுகுறித்து நஸ்ரத் கணவரிடம் கேட்டதற்கு, தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகவும் தன்னால் வேலை பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்து வீட்டில் இருந்தார்.

கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வீடு பார்த்து குடி பெயர்ந்தது: கோட்டைமேடு பகுதியிலிருந்து, திடீரென்று கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் வீடு பார்த்து இடம் பெயர்ந்தார். வேலைக்கு செல்லாமல் இருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக முபின் வீட்டில் இருக்காமல் வெளியில் சென்றதால் ஏதாவது வேலை பார்க்கிறீர்களா என விசாரித்துள்ளார். அப்போது தான் தேன் மற்றும் நறுமண பொருட்கள் விற்பனை செய்வதாகவும், நாட்டு மருந்து கடையில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். கார் வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு முபின் தனது மனைவியிடம் நாம் வேறு வீட்டிற்கு செல்லலாம் என கூறியுள்ளார். அதன்படி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வீடு பார்த்து மனைவி, குழந்தைகளுடன் குடியேறி உள்ளார். அப்போது முபின் வீட்டிற்குள் 4 பெட்டிகளை எடுத்து வந்தார். இதனால் நஸ்ரத்துக்கு சந்தேகம் ஏற்படவே எதற்காக இந்த 4 பெட்டிகள். அதில் என்ன உள்ளது என கேட்டுள்ளார். அதற்கு முபின், இந்த பெட்டிகளில் பழைய துணிகள் தான் உள்ளது என கூறியுள்ளார். ஆனால் கார் வெடிப்பு சம்பவம் நடந்த பிறகே அந்த பெட்டிகளில் வெடி மருந்து இருந்த தகவல் நஸ்ரத்துக்கு தெரிய வந்துள்ளது.

20-10-2022 அன்று மனைவி குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விடுதல்: கடந்த மாதம் 20-ந்தேதி, முபினின் மனைவி நஸ்ரத்துக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். முபின் எப்போதும் யாரிடமும் பேசாமல் தனியாகவே இருப்பார். மேலும் எந்நேரமும் செல்போனில் ஏதாவது பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால் சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு நஸ்ரத்தின் வீட்டிற்கு சென்ற முபின் வழக்கத்திற்கு மாறாக அனைவரிடமும் சகஜமாக பேசியுள்ளார். மேலும் குடும்பத்தினர் அனைவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டும் உள்ளார். அன்று மாலையே தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியில் சென்று உள்ளார். அப்போது குழந்தைகளுக்கு பிடித்த ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றையும் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் மனைவியை அவரது தாய் வீட்டில் விட்டு, முபின் மட்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவம் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு தண்ணீரை சேமிப்பதற்கு டிரம் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார்.

22-10-2022 அன்று மனைவியுடன் பேசியது: அப்போது 3 நாட்களுக்கு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். 22-ந் தேதி இரவு நஸ்ரத் கணவருக்கு எப்போது வீட்டிற்கு வருவாய் என மெசேஜ் அனுப்பினார். அதற்கு நாளை வருவதாக கூறியுள்ளார். அப்போது நஸ்ரத் குழந்தைகள் உன்னை தேடுகின்றனர். வீடியோ காலிலாவது பேசு என மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் அதன்பின்னர் முபின் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தும் முபினை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிகிறது. இதுவே முபின் அவரது மனைவியிடம் கடைசியாக பேசியது. ஆனால் தற்போது வரை முபினுக்கு என்ன நடந்தது என்று அவரது குழந்தைகளுக்கு தெரியவில்லை.

வேதபிரகாஷ்

05-11-2022


[1]  ஒவ்வொரு நாளிதழும், செய்தியும் விதவிதமாகக் குறிப்பிடுகின்றன (ஐந்து-ஆறு என்று….), அவற்றைத் தொகுத்து, இங்கு பட்டியலிடப் பட்டுள்ளது.

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (3)

ஒக்ரோபர் 29, 2022

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (3)

26-10-2022 (புதன் கிழமை): தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. எல்லைக் கடந்த தீவிரவாத இணைப்புகளால், தமிழக முதல்வர் வழக்கை என்.ஐ.ஏக்கு மாற்ற பரிந்துரைத்தார்.

என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வின்சென்ட் சாலையில் உள்ள அப்சல்கான் வீட்டுக்கு சென்றனர். லாப்டாப்பைக் கைப்பற்றினர்.

 இந்த நிலையில், கார் வெடிப்பு சம்பவத்தில் 6-வது நபராக அப்சர்கான் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கார் வெடித்த போது உயிரிழந்த ஜமேஷா முபினின் உறவினர் அப்சர்கான் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 5 பேரிடமும் 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

27-10-2022 (வியாழன் கிழமை):  தமிழகம் இந்த வழக்கை, என்.ஐ.ஏவிடம் (NIA) ஒப்படைத்தது. வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் விக்னேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்[1]. என்.ஐ.ஏ எப்.ஐ.ஆர் (FIR) போட்டது. என்.ஐ.ஏ பதிவு செய்து விசாரித்து வரும் இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது[2]. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. அதில் அபாயகரமான 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

28-10-2022 (வெள்ளிக் கிழமை):  கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவன் – பெரோஸ் இஸ்மாயில் தான், ஈஸ்டர் குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்டு கைதாகி, கேரளா சிறையில் இருக்கும் மொஹம்மது ஹஸாருத்தீன் மற்றும் ரஷீத் அலி இருவரையும் சந்தித்தாக ஒப்புக் கொண்டான். இவர்களுக்கு ஐசிஸுடனும் [Islamic State of Iraq and Syrai (ISIS),] தொடர்பு உள்ளது[3].

109 பொருட்கள் பறிமுதல்அவற்றின் எடை 60, 70 கிலோவா, 100 கிலோவா?: முதலில் எச்சரிக்கையாக அமுக்கி வாசித்த ஊடகங்கள், பிறகு, பெரிய “துப்பறியும் சாம்பு”  ரேஞ்சில் செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டன[4]. 109 ஐட்டங்களை பட்டியல் போடவில்லை என்றாலும், எடை போட ஆரம்பித்த விட்டன. ஹராசு சரியில்லையா, நிருபர்களுக்கு எடை பார்க்கத் தெரியவில்லையா என்று தெரியவில்லை. 60, 70, 100 என்று குறிப்பிடுகின்றன[5]. பலியான ஜமேஷா முபின் மற்றும் முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 7 பேர் மீதும் 120 பி, 153 ஏ., உபா சட்டப்பிரிவு 16 மற்றும் 17 ஆகிய 4 பிரிவுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது[6]. இதில், வெடி விபத்தை ஏற்படுத்த ஜமேஷா முபின் திட்டமிட்டதாகவும், அவரின் வீட்டில் இருந்து 76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட், பிளாக் பவுடர், ஆக்ஸிஜன் சிலிண்டர், அலுமினியம் பவுடர், சிவப்பு பாஸ்பரஸ், 2 மீட்டர் நீளம் உள்ள திரி, கண்ணாடி துகள்கள், சல்பர் பவுடர், பேட்டரிகள், வயர், பேக்கிங் டேப், கையுறை, நோட்டு புத்தகம், ஜிஹாத் தொடர்பான குறிப்பு அடங்கிய டைரி, கியாஸ் சிலிண்டர் உள்பட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது[7]. மொத்த வெடிப்பொருட்களின் எடையை 65, 75, 100 கிலோ என்று பலவிதமாக ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன[8]. 76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட் என்றால், மீதி 33.5 கிலோ மற்றப் பொருட்கள் இருக்க வேண்டும், ஆக மொத்தம் 100 கிலோ என்று கணக்குப் போட்டிருக்க வேண்டும்[9].

கார்கள் பறிமுதல்: கோவையில் வெடி விபத்து ஏற்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் கடந்த ஒரு வாரமாக நின்றிருந்ததாக கூறப்படும் 12 கார்களை போலீசார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்[10]. வின்சென்ட் சாலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த 7 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  சதி வேலைகளுக்காக காரை பயன்படுத்தியது போல இரு சக்கர வாகனங்களையும் பயன்படுத்தலாம் என்ற கோணத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது[11].  இதில், 7 கார்களின் உரிமையாளர்கள் நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததையடுத்து அந்த கார்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள 5 கார்களின் உரிமையாளர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் கரும்புக்கடை, சுந்தராபுரம் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் புதிதாக 3 காவல் நிலையங்கள் உருவாக்கப்பட முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோவையில் குண்டு வெடிப்பு, கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, திருச்சியில் கேட்பாரற்று சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து 10 கார்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்[12]. விழிப்புணர்வு அதிகமாகவே இருக்கிறது போலும்[13]. எல்லா நகரங்களிலும், எல்லா இடங்களிலும், இவ்வாறு வாகனங்கள் நிறுத்தப் பட்டுள்ளன. ஆனால், கார் வெடித்தால் இவ்வாறான, அதிரடி நடவடிக்கை வேற்கொள்வார்களா என்று தெரியவில்லை. போலீஸார், திடீரென்று, இவ்வளவு எச்சரிக்கையாக இப்பொழுது செயல்படுவது தான் ஆச்சரியமாக இருக்கிறது. இருப்பினும், அவர்களது முயற்சிகளை பாராட்டலாம். நம்மை போன்று அவர்களும் கடமையுடன் செயல்படுகிறார்கள்.

கோவை கார் காஸ் சிலிண்டர் வெடிப்பு முதல் கார் குண்டு வெடிப்பு வரை: “கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விபத்து…….”  என்று ஆரம்பித்து, ஊடகங்கள், “கோவை காரில் காஸ் சிலிண்டர் வெடிப்பு விபத்து..”,  மற்றும், “கோவை காரில் இரண்டு காஸ் சிலிண்டர்களில் ஒன்று  வெடித்து விபத்து………”, .“கோவை மாருதி காரில் காஸ் சிலிண்டர் வெடித்த விபத்து………”, “கோவை மாருதி காரில் காஸ் சிலிண்டர் வெடித்த வழக்கு” என்றெல்லாம் குறிப்பிடப் பட்டு, “கோவை கார் குண்டு வெடிப்பு வழக்காக” மாறியுள்ளது. போலீஸாருக்கு விருது, பாராட்டு………………ஊடகங்களுக்கு, மெத்தப் படித்து, தமிழகத்தில் ஊறிப்போன நிருபர்களுக்கு, இதெல்லாம் தெரியாதது போல தலைப்பிட்டு செய்திகளை போடுவதிலிருந்து, ஒன்று அவர்களும் விசயங்களை மறைக்கிறார்கள் அல்லது யாருக்கோக் கட்டுப் பட்டு, அவ்வாறான செய்திகளை வெளியிடுகிறார்கள் என்றாகிறது. பிறகு, அவர்களது நடுநிலைத் தன்மை, ஊடக தருமம், பத்திரிக்கா தொழில் நியாயம், செக்யூலரிஸ சித்தாந்தம் முதலியவை பற்றி சந்தேகங்கள் எழத்தான் செய்யும்.

© வேதபிரகாஷ்

29-10-2022


[1] மாலைமலர், கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்என்... விசாரணை அதிகாரி நியமனம்,  Byமாலை மலர்28 அக்டோபர் 2022 4:53 PM

[2] https://www.maalaimalar.com/news/state/coimbatore-car-blast-incident-nia-appointment-of-investigating-officer-529573?infinitescroll=1

[3] Police sources, on Friday, October , said that one of the six accused in the Coimbatore blast case, confessed during interrogation that he met two men in a Kerala prison who had links with terror group Islamic State of Iraq and Syrai (ISIS), who were involved in the Easter bombings in Sri Lanka.  Feroz Ismail confessed that he had met Mohammed Azharuddin and Rashid Ali, lodged in a prison in the neighbouring state and further questioning is on to ascertain the motive behind the meeting, they said. Azharuddin and Ali are in jail in connection with a case against them in Kerala.

[4] தமிழ்.இந்து, கோவை | ஜமேஷா முபின் வீட்டில் 60 கிலோ வெடிமருந்து பறிமுதல்? – போலீஸ் கண்காணிப்பால் மிகப்பெரிய நாசவேலை தவிர்ப்பு, செய்திப்பிரிவு, Published : 26 Oct 2022 06:50 AM; Last Updated : 26 Oct 2022 06:50 AM

[5] https://www.hindutamil.in/news/tamilnadu/887653-60-kg-of-ammunition-seized.html

[6] தினத்தந்தி, கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் வீட்டில் இருந்து 109 பொருட்கள் பறிமுதல், அக்டோபர் 29, 4:47 am

[7] https://www.dailythanthi.com/News/State/109-items-seized-from-car-blast-victim-jamesha-mubins-house-824772

[8] மாலை மலர், ஜமேஷா முபின் வீட்டில் இருந்து 100 கிலோ வெடிப்பொருட்கள் பறிமுதல், By மாலை மலர்,27 அக்டோபர் 2022 9:40 AM

[9] https://www.maalaimalar.com/news/state/tamil-news-100-kg-explosives-seized-from-jamesha-mubins-house-528818?infinitescroll=1

[10] இ.டிவி.ப்சாரத்,கார் வெடிப்புச்சம்பவம் எதிரொலி: கேட்பாரற்று நிற்கும் வாகனங்கள் பறிமுதல்,

[11] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/coimbatore/after-car-blast-incident-in-coimbatore-police-seized-unattended-two-wheeler-and-cars-parked-on-the-roads/tamil-nadu20221028160747877877082

[12] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோவை சம்பவம் எதிரொலி: திருச்சியில் அனாதையாக நின்ற10 கார்கள் பறிமுதல், Written by WebDesk, Updated: October 28, 2022 3:10:41 pm

[13] https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-incident-reverberates-10-orphaned-cars-seized-in-trichy-532243/

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகிய நிலை (1)

ஒக்ரோபர் 29, 2022

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகிய நிலை (1)

22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட் கிழமை) வரை நடந்துள்ளவை என்ன?: 24-10-2022 அன்று தீபாவளி என்பதால், துணிமணி, பட்டாசு, ஸ்வீட் வாங்க வேண்டும், எல்லோருமே ஊருக்குச் செல்ல வேண்டும், வாங்கியதை குடும்பத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டும், சந்தோஷமாக கொண்டாட வேண்டும், என்று லட்சக்கணக்கில் மக்கள் வாகனங்களில், பேருந்துகளில், ரெயில்களில் சென்று கொண்டிருந்தனர். அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்ப, பட்ஜெட்டில் தீபாவளி கொண்டாட திட்டத்துடன் இருப்பர், சென்று கொண்டிருந்தனர். ஆனால், அப்பொழுது, கோயம்புத்தூரில் சிலர் வேறு விதமாக திட்டம் போட்டிருந்தனர் போலும். வெகுஜன மக்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளியை நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, ஊடகங்களில் வழக்கம் போல, தீபாவளி எதிர்ப்பு, பட்டாசு மறுப்பு, நாத்திக-நராகாசுரன் ஆதரவு செய்திகள் வந்து கொண்டிருந்தன[1]. பட்டாசு வெடிக்க வேண்டாம், குறிப்பிட்ட நேரங்களில் தான் வெடிக்க வேண்டும், மீறினால், வழக்கு, புகார், தண்டனை என்றெல்லாம் பெரிய போலீஸ் அதிகாரிகள் மிரட்டியதாக செய்திகள்[2]. அதே நேரத்தில் பட்டாசு விற்பனை பெருக்க வேண்டும் போன்ற பிரச்சாரமும் இருக்கிறது. இன்னொரு பக்கமோ, கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது போன்ற செய்திகள்.

இந்நிலையில் தான் கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்செய்திகள் வர ஆரம்பித்தன: 22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட் கிழமை) வரை நடந்துள்ள நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்தால், இந்த கோவை கார் குண்டு வெடிப்பு திட்டமிட்டு நடந்துள்ள-நடத்தப்பட்ட செயல் என்று அறிந்து கொள்ளலாம். பிறகு, மற்ற செய்திகள் எல்லாம் வெளிவர ஆரமித்துள்ளன. ஊடகங்களின் பாரபட்சமிக்க, செய்தி வெளியீட்டுப் போக்கும், “ஆபத்திலிருந்து” மெதுவாக, “குண்டு வெடிப்பு” என்று முடிந்துள்ளது. இருப்பினும் இந்த தீவிரவாதிகள், பயங்கரவாதிள் எல்லோருமே மரியாதையுடன் தான் குறிப்பிடப் படுகிறார்கள். மத்திய உளவுத்துறை காவல்துறையினர் ஜமிஷா தொடர்பான பல்வேறு தகவல்களுடன் அவரை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசுக்கு 2018ம் ஆண்டு முதன் முதலில் தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது[3]. தமிழக காவல்துறையினர் இதனை பெரிதாக கருதவில்லை என்று கூறப்படுகிறது[4].

22-10-2022 (சனிக்கிழமை இரவு): சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு ஜமேஷா முபின் வீட்டில் இருந்து அவர் உட்பட 5 பேர் மர்மபொருளை தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், முபின் தன்னுடைய வீட்டை காலி செய்ய வேண்டும் என்று கூறியதாகவும், அந்தப் பெட்டியில் ஸ்கிரேப் பொருள்கள் இருந்ததாக முபின் விளக்கம் அளித்ததாக கூறியுள்ளனர். அந்த சிசிடிவி காட்சிகளில் உள்ள மற்ற நபர்கள் 4 பேர் யார் என்பது குறித்து பிறகு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர், என்றெல்லாம் செய்திகள் பிறகு வெளி வந்தன. அப்படியென்றால், இவர்களும் முன்னமே இக்காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். சுற்றியுள்ளவர்கள், இவர்களது நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு, எச்சரித்திருக்கலாம், புகார் கொடுத்திருக்கலாம். ஆனால், முஸ்லிம்கள் எனும் போது, அமைதியாக இருந்து விட்டனர் போலும். ஒரு ஊடகத்தால், அங்கு செய்தி-விவரங்கள் சேர்க்கச் சென்றபோது, ஜன்னல் கதவுகளை அடைத்துக் கொண்டனர், யாரும் பேச முன்வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. 

23-10-2022 (ஞாயிற்றுக் கிழமை):  அதிகாலை சுமார் 4:45 மணி அளவில், கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு பெரும் வெடிச் சத்தம் கேட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் அங்கு வந்து பார்த்துள்ளனர். முதலில், ஏதோ பட்டாசு சத்தம் என்று கூட நினைத்திருக்கலாம். அந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதிகாலை 4 மணி அளவில் சாலையில் கார் செல்வது, கார் நிற்பது பின்பு வெடித்து சிதறும் காட்சிகள் வெளியாகி உள்ளது. விடியற்காலை காரில் உள்ள காஸ் சிலிண்டர் வெடித்து ஒரு ஆள் இறந்தான். செல்போன் உதவியுடன் இறந்தவன் அடையாளம் காணப் பட்டான். வெடித்து சிதறிய காரில் இன்னொரு வெடிக்காத சிலிண்டர் மற்றும் சுற்றிலும் ஆணிகள், பால்ரஸ் போன்றவையும் சிதறிக் கிடந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தடயவியல் துறையினர் காரிலிருந்து  2 முதல் 3 கிலோ 1.5 இன்ச் ஆணிகள் மற்றும் பால்ரஸ் குண்டுகளைக் கண்டறிந்துள்ளனர். ஆணி, பால்ரஸ் வேறு பணிக்காக கொண்டு செல்லப்பட்டதா அல்லது வெடி விபத்தை நிகழ்த்தும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டவையா என்பதை நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஆக, நிச்சயமாக கோவை போலீஸார் சென்னை உயர் அதிகாரிகளுக்கு தெரியப் படுத்தி, விசயம் முதலமைச்சருக்குச் சென்றிருக்கும்.

பிற்பகல் – 23-10-2022 (ஞாயிற்றுக் கிழமை):  தொடக்கத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்தை கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி தாமரைக் கண்ணன் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இந்தச் சம்பவத்தின் நிலைமை அறிந்து சென்னையிலிருந்து டி.ஜி.பி சைலேந்திர பாபு விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கோவைக்கு வந்தார். வெடி விபத்து நிகழ்ந்த பகுதியை ஆய்வு செய்தார். அதாவது, விசயம் சாதாரணமானது அல்ல என்பது தெரிந்து விட்டது. பிரசித்தி பெற்ற உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு மட்டுமின்றி, தீபாவளியையொட்டி, இப்பகுதியில் துணி எடுப்பதற்காக அதிக அளவில் மக்கள் கூடும் நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது கோவை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மசூதிகள் முன்பு போலீஸார் பாதுகாப்புப்பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

கார் குண்டு வெடித்தலில் இறந்தவன் ஜமேசா முபின்: போலீஸார் செல்போன், கார் எண் முதலியவற்றை வைத்துக் கொண்டு விவரங்களை சேகரித்தனர். ஜமேசா முபின் என்பவன் தான் இறந்திருக்கிறான் எனூ முடிவானது. அவன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர். அப்பா இல்லை. அம்மா மட்டும் தான். அவர் மனைவிக்கு செவி மற்றும் பேச்சுத்திறன் இல்லை. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஜமேசாவுக்கும் இதயம், கண் ஆகியவற்றில் சில பிரச்னைகள் உள்ளன. முன்பு பழைய புத்தகக் கடை நடத்தி வந்தவர், பிறகு துணி வியாபாரம் செய்து வந்திருக்கிறார். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர். அதனால்தான் கடந்த 2019ம் ஆண்டு இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு பிறகு ஜமேசா முபினிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்த கார் வெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு போலீஸ் அவர் வீட்டில் நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு கடிதத்தில் சுற்றிப் பார்க்கவுள்ள சுற்றுலா தலங்கள் என எழுதி ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம், ஆணையர் அலுவலகம், ரேஸ்கோர்ஸ், விக்டோரியா ஹால் (மாநகராட்சி அலுவலகம்) ஆகிய பகுதிகளை குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம், இந்தப் பகுதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இப்படி செய்திகள்……

வாட்ஸ்ஆப் பதிவு, இறப்பு உண்மை என்றால், அது தற்கொலை குண்டு வெடிப்பு ஆகிறது: விபத்து நடந்தக் காரை ரூ.10,000க்கு தல்காவிடம் இருந்து வாங்கியுளளார். இப்படி கைது செய்யப்பட்ட  அனைவரும், இந்த சதித் திட்டத்தில் ஒவ்வொரு பணியைச் செய்துள்ளனர். ஜமேசா அவ்வபோது கேரளா சென்று, அங்கு ஏற்கெனவே என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்டுள்ள அசாருதீன் என்பவரைச் சந்தித்து வந்துள்ளார். ஆங்காங்கே சிறுக சிறுக சேகரித்து 75 கிலோ வெடி மருந்துக்கான வேதிப் பொருள்களை வாங்கியுள்ளனர். வெடி பொருள் தயாரிப்பது எப்படி என்பதை யூ-ட்யூபில் தேடிப் பார்த்திருக்கிறார். கைது செய்யப்பட்டவர்கள் இல்லாமல், இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கிறது.” என்றனர். …….’வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில், என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரியும் போது எனது தவறை மன்னித்து விடுங்கள், குற்றங்களை மறந்துவிடுங்கள் எனது இறுதி சடங்கில் பங்கேறுங்கள். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்,” என்று பதிவிட்டு உள்ளார். இதற்கான புகைப்படத்தை அவர் பதிவேற்றி இருக்கிறார். இதை பற்றி விசாரிக்க வேண்டும். இது ஐஎஸ்எஸ் தொடர்புடைய வாசகம். அவர்கள்தான் தற்கொலை தாக்குதல்களுக்கு முன்பாக இப்படி எல்லாம் போஸ்ட் செய்வார்கள்…..இப்படியும் செய்திகள்! வாட்ஸ்-ஆப் பதிவு, இறப்பு உண்மை என்றால், அது தற்கொலை குண்டு வெடிப்பு ஆகிறது, “சூஸைட் பாம்பர்” என்றாகிறது!

© வேதபிரகாஷ்

29-10-2022


[1]  திக-திமுகவினர் தொடர்ந்து தங்களது ஊடகங்களில் இத்தகைய பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், உலகம் முழுவதும் கொண்டாடப் பட்டு, உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

[2]  சுவாசிக்கும் காற்று மாசு படுகிறது என்ற கோணத்தில் உச்சநீதி மன்றமே வரையறை கொடுத்திருப்பதால், அதன் மீது, மாநில அரசுகள் மற்றும் இதர நிறுவனங்கள், இயக்கங்கள் இதை பெரிது படுத்தி, பிரச்சாரம் செய்கின்றன.

[3] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், உளவுத்துறைஅன்றேகொடுத்த சிக்னல்!.. கிடப்பில் போடப்பட்டதா ? கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம், Raghupati R, First Published Oct 28, 2022, 7:56 PM IST; Last Updated Oct 28, 2022, 8:34 PM IST.

[4] https://tamil.asianetnews.com/tamilnadu/coimbatore-car-bomb-blast-tn-police-ignored-central-intelligence-agency-warning-rkgw4i

தினேஷ் முகமது அஸ்லாம் ஆனது, பாரூக் “நான்தான் கடவுள்”…..இறைதுாதர் என, நம்ப வைத்தது, பர்வீனை கற்பழித்து, பிறகு அவள் மகள் மீது குறிவைத்தது – இதெல்லாம் என்ன?

ஜூலை 1, 2020

தினேஷ் முகமது அஸ்லாம் ஆனது, பாரூக் நான்தான் கடவுள்“…..இறைதுாதர் என, நம்ப வைத்தது, பர்வீனை கற்பழித்து, பிறகு அவள் மகள் மீது குறிவைத்ததுஇதெல்லாம் என்ன?

Allowing Friend to rape his wife, 29-06-2020-NewsTM

கொரோனா காலத்தில் பெண்கள் படும் பாடு: கொரோனா காலத்தில், ஆண்களை விட அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளது, தொடர்ந்து பாதிக்கப் படுவது பெண்கள் தாம்.ஆண்கள் வேலைக்குப் போகாமல், வீட்டிலேயே அடைபட்ட நிலையில், சாப்பிட்டு-சாப்பிட்டு, டிவி-பேப்பெர் பார்த்து, மொபைல் இருந்தால் வம்பு பேசிக் கொண்டு, தூங்கி விழிப்பது தான் அவர்கள் வேலை என்றாகி விட்ட நிலையில், பெண்களுக்கு பாரம் இன்னும் அதிகமாகி விட்டது. காஷ்மீர் முதல் குமரி வரை, குஜராத் முதல் மேகாலயா வரை, எல்லா இடங்களிலும் பெண்கள் கஷ்டப் பட்டு உழைத்து வருகிறாற்கள். மற்ற மாநிலங்களிலிருந்து, அத்தகைய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழகத்தில், அதிகமாக, பாலியல் குற்றங்கள், கற்பழிப்புகள், அவற்றைச் சார்ந்த கொலைகள் என்றுதான், அதிகமாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதனை, ஒரு சாதாரணமான நோக்கர் கூட கண்டு கொள்ளலாம். ஆகவே, இப்பிரச்சினை ஆய்வுக்குரியது. அதிலும், மதசார்ந்த விசயங்கள் எனும்போது, ஊடகங்கள், சொதப்பி, குழப்பி, பிறகு அப்படியே அமுக்கி விடுகிறது. இப்பொழுதைய திருச்சி-பாலியல் விவகாரமும் அப்படியே 2005லிருந்து 2020 வரை தொடர்ந்துள்ளது.

Allowing Friend to rape his wife, 29-06-2020.DD

2005ல் தினேஷ் பர்வீனை காதலித்து மணந்தது: திருச்சி கே.கே.நகர், அன்பில் தர்மலிங்கம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் என்ற முகமது அஸ்லாம் (41). இவரும் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த மதபோதகர் முகமது பாரூக் (41) கல்லூரி காலத்தில் இருந்து நீண்டகால நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்[1]. இதில் தினேஷ் கடந்த 2005ம் ஆண்டு பர்வீன் என்ற இஸ்லாமியப் பெண்ணை காதலித்துள்ளார். இதனை அடுத்து தினேஷை அவரது நண்பர் ஃபாரூக் இஸ்லாமியராக மாதம் மாற்றி, அவருக்கு முகமது அஸ்லாம் என பெயர் வைத்துள்ளார்[2]. இந்த நிலையில் பர்வீனை கடந்த 2008ம் ஆண்டு முகமது அஸ்லாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் முகமது அஸ்லாமின் வீட்டில் பணப்பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது தனது நண்பரான ஃபாரூக்கை அழைத்து ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு உன் மனைவியிடம் தான் பிரச்சனை இருக்கிறது, அதனால் அவருக்கு நான் புனித நீர் கொடுக்கிறேன் என தனியாக அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது நீரில் மயக்க மருந்து கொடுத்து பர்வீனை மதபோதகர் ஃபாரூக் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

Allowing Friend to rape his wife, 29-06-2020

நான்தான் கடவுள்“…..இறைதுாதர் என, நம்ப வைத்ததுதினமலர் கொடுக்கும் செய்தி: திருச்சி, கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் பர்வீன், 32. இவர், ஹிந்துவாக இருந்து முஸ்லிமாக மதம் மாறிய அஸ்லாம், 39, என்ற எம்.பி.ஏ., பட்டதாரியை, 12 ஆண்டுகளுக்கு முன், திருமணம் செய்து கொண்டார். அஸ்லாமுக்கு மத போதனைகளை, நத்தர்ஷா பள்ளிவாசலில் மதபோதகராக இருக்கும் பாரூக், 41, என்பவர் கற்றுக் கொடுத்துள்ளார். அப்போது, தன்னை இறைதுாதர் என, நம்ப வைத்துள்ளார்[3]. இதை நம்பிய அஸ்லாம், மனைவியிடமும், பாரூக்கை வணங்கும்படி கூறி வந்தார்[4]. இதை பயன்படுத்தி, புனித நீர் கொடுப்பதாக, மயக்க மருந்து கலந்த தண்ணீரை கொடுத்து, பர்வீனை, பாரூக் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், ‘சிரியா போருக்கு உதவ வேண்டும்; ஜிகாத்துக்கு உதவ வேண்டும்’ எனக் கூறி, பர்வீனிடம் இருந்து, 25 சவரன் நகையையும் பாரூக் வாங்கி, ஏமாற்றி விட்டார். பிறகு இது “லவ் ஜிஹாத்” போலிருக்கிறதே? பெண்களைத் தான் குறிவைத்தார்கள் என்றால், ஆண்களையும் குறிவைப்பது போலத் தெரிகிறது. அதாவது, இப்படி திருமணம் செய்து வைத்து, போதை ஏற்றி, மூளை சலவை செய்து, பிறகு சிரியாவுக்கு அனுப்பி வைப்பார்கள் போலும்!

Allowing Friend to rape his wife, 29-06-2020.DD-police complaint

2008ல் போலீஸாரிடம் புகார் கொடுத்தது, நகைகளைத் திருப்பில் கொடுத்தது: மயக்கம் தெளிந்து தனக்கு நடந்த கொடுமையை தெரிந்துகொண்ட பர்வீன் இதுகுறித்து கணவரிடம் தெரிவித்துள்ளார்[5]. ஆனால் இதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது[6]. உடனே மதபோதகர் ஃபாரூக்கின் மனைவி பாத்திமாவிடமும், கணவரின் தங்கை எவரமிடமும் கூறி கதறி அழுதுள்ளார்[7]. ஆனால் இருவரும் ஃபாரூக் என்ன சொல்கிறாரோ அதன்படி தான் செய்ய வேண்டும் என பர்வீனிடம் கூறியுள்ளனர்[8]. மேலும் தனிமையில் இருந்தபோது மற்றும் நிர்வாணமாகவும் பர்வீனை மதபோதகர் ஃபாரூக் புகைப்படங்களை எடுத்துள்ளார்[9]. இந்த புகைப்படங்களை காட்டி பர்வீனிடம் 25 பவுன் தங்க நகைகளை ஃபாரூக் பறித்ததாக கூறப்படுகிறது[10]. இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 2008ம் ஆண்டு பர்வீன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் நகைகளை திருப்பிக் கொடுக்கும்படி மதபோதகர் ஃபாரூக்கை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ஃபாரூக் நகைகளை திருப்பி கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

Allowing Friend to rape his wife, 29-06-2020.DD-police complaint-2

படங்களைக் காட்டி 9 ஆண்டுகளாக நண்பனின் மனைவியை ஃபாரூக் பாலியல் வன்கொடுமை செய்தது: இதனை அடுத்து அந்த புகைப்படங்களை காட்டி 9 ஆண்டுகளாக நண்பனின் மனைவியை மதபோதகர் ஃபாரூக் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்[11]. இந்த நிலையில் கடந்த வாரம் நண்பன் முகமது அஸ்லாமின் மூத்த மகளிடம் மதபோதகர் ஃபாரூக் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது[12]. இதனால் ஆத்திரமடைந்த பர்வீன், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகர் ஃபாரூக், பர்வீனின் கணவர் முகமது அஸ்லாம் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள முகமது அஸ்லாமின் சகோதரி எரம், மற்றும் ஃபாரூக்கின் மனைவி பாத்திமாவை போலீசார் தேடி வருகின்றனர். நண்பனின் மனைவியை 9 ஆண்டுகளாக மதபோதகர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Allowing Friend to rape his wife, 29-06-2020,where they located

இஸ்லாமில் ஒருவன், தன்னை இறைதுாதர், கடவுள் என்று சொல்லிக் கொண்டது: செய்திகள் இப்படி இருக்கின்றன:

  1. அஸ்லாமுக்கு (தினேஷுக்கு) மத போதனைகளை, நத்தர்ஷா பள்ளிவாசலில் மதபோதகராக இருக்கும் பாரூக், 41, என்பவர் கற்றுக் கொடுத்துள்ளார். அப்போது, தன்னை இறைதுாதர் என, நம்ப வைத்துள்ளார்.
  2. பர்வீனிடம் சென்று, “நான் தான் கடவுள்” என்று சொல்லி ஒரு தீர்த்தத்தை தந்தாராம்.. உடனே அதை வாங்கி குடித்து பர்வீன் மயக்கமடைந்து விழுந்ததும், அவரை நண்பர் பாலியல் கொடுமை செய்ததுடன், வீட்டில் இருந்த 25 பவுன், மற்றும் ரொக்கத்தை திருடி கொண்டு போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.

Allowing Friend to rape his wife, 30-06-2020-News DM

இங்கு தான் ஏதோ பிரச்சினை, விவகாரம் மற்றும் மர்மம் உள்ளது. தினேஷை மதம் மாற்றி கல்யாணம் செய்து வைத்தான் எனும் போது, பாரூக் மசூதி, ஜமாத் முதலியவற்றுடன் நெருக்கமாக இருக்கிறான் என்று தெரிகிறது. அதனால், தான் 2008ல் புகார் கொடுத்தபோது, போலீஸார் கண்டுகொள்ளாமல், சமரசம் செய்து அனுப்பி விட்டது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு, மறுபடியும், அதே பாணியில் நகைபரிப்பு என்று ஈடுபடுவது, நம்புகின்றதாக இல்லை. மேலும், பர்வீன் தனது மூத்த மகளையும் பாரூக் கற்பழிக்க முயல்கிறான் என்பது, விவகாரம் வேறு மாதிரி போகிறது. இஸ்லாத்தில், அவர்களுக்கு சாதகமாக, நிறைய விலக்குகள் இருக்கலாம். ஆனால், இந்திய சமூகத்தில், எல்லோரும் அவ்வாறு நடந்துகொள்ள முடியாது. திராவிடத்துவத்தால், ஏற்கெனவே சமூகம் சீரழிந்துள்ளது. அது சினிமாவுடன் சேர்ந்து அதிகமாகியுள்ளது, இஸ்லாமும் சேரும் போது, பயமாக, பயங்கரமாக இருக்கிறது. மாற-மாற்ற-மாற்றப்படவேண்டும்.

© வேதபிரகாஷ்

30-06-2020

Allowing Friend to rape his wife, 29-06-2020,where they lived

[1] தமிழ்.பிஹைன்ட்.த.வுட்ஸ், ‘புனித நீரில் மயக்கமருந்து’.. 9 வருடம் கணவரின் உயிர் நண்பரால்பாலியல் வன்கொடுமை’.. திருச்சியை அதிரவைத்த சம்பவம்..!, By Selvakumar | Jun 30, 2020 11:19 AM

[2] https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/trichy-woman-sexually-abused-by-husbands-friend-9-years-arrested.html

[3] தினமலர், இளம்பெண் பலாத்காரம் மதபோதகர் கைது, Added : ஜூன் 29, 2020 22:49.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2567171

[5] தமிழ்.ஒன்.இந்தியா, நான்தான் கடவுள்“.. நண்பரின் மனைவிக்கு தீர்த்தம் தந்து.. திருச்சியை அதிர வைத்த பலாத்காரம்! By Hemavandhana | Published: Tuesday, June 30, 2020, 9:59 [IST].

[6] https://tamil.oneindia.com/news/trichirappalli/woman-raped-and-two-arrested-near-trichy-389856.html

[7] தினத்தந்தி, கட்டிய மனைவியை நண்பனுக்கு விருந்தாக்கிய கணவர்மதுவுக்கு அடிமையானதால் விபரீதம், பதிவு : ஜூன் 29, 2020, 09:11 PM

[8] https://www.thanthitv.com/News/TamilNadu/2020/06/29211115/1471683/Trichy-Husband-Wife-Issue.vpf

[9] நியூஸ்.டி.எம்.தமிழ், நண்பனின் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து பல நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகர்…, By Newstm Desk | Tue, 30 Jun 2020.

[10] https://newstm.in/tamilnadu/a-clergyman-who-sexually-abused-a-friends-wife-for-several/c77058-w2931-cid747710-s11189.htm

[11] விகடன், `புனித நீர் கொடுத்தா எல்லாம் சரியாயிடும்!’ மதபோதகரால் நண்பரின் மனைவிக்கு நேர்ந்த கொடுமை, எம்.திலீபன், தே.தீட்ஷித், Published:Yesterday at 8 PM; Updated:Yesterday at 8 PM.

[12] https://www.vikatan.com/news/crime/trichy-police-arrested-man-in-sexual-harassment-case

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா மற்றும் ஐசிஸ் தொடர்புகள் – ஆள்சேர்ப்பு,  மதமாற்றம், ஜிஹாதி போரில் கொல்லப்படுதல், ஷஹீது ஆதல் (1)!

நவம்பர் 5, 2017

பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா மற்றும் ஐசிஸ் தொடர்புகள்ஆள்சேர்ப்புமதமாற்றம், ஜிஹாதி போரில் கொல்லப்படுதல், ஷஹீது ஆதல் (1)!

PFI-ISIS link visibly naked- Vedaprakash

எஸ்.எப்..யின் தடைக்குப் பிறகு உருவாகிய பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா: பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI], எஸ்.எப்.ஐ [SFI] தடைக்குப் பிறகு தோன்றிய இயக்கம் ஆகும்.  ஜூலை 2010ல் டி. ஜோசப் என்ற ஒரு விரிவுரையாளரின் கையை  இந்த PFI  இயக்கத்தைச் சேர்ந்த ஆள் வெட்டியபோது[1] இவ்வியக்கத்தின் பெயர் இந்தியா முழுவதும் அறியப்பட்டது எனலாம். எர்ணாகுளத்தில், நியூமேன் கல்கூரியின் விரிவுரையாளர், பரீட்சை கேள்விதாளில், மொஹம்மதுவைப் பற்றிய ஒரு வினாகுறித்து, அவரின் கை வெட்டப்பட்டது. ஒரு முஸ்லிம், கிருத்துவனின் கையை வெட்டினான் என்ற நிலையில், அது செக்யூலரிஸ போதையில் அமுக்கி வாசிக்கப் பட்டு, அக்குரூர செயல் மறந்து விட்டது எனலாம். தடை செய்யப்பட்ட சிமி கூட்டத்தினர் இம்மாதிரியான Social Democratic Party of India (SDPI), Popular Front of India (PFI), National Development Front (NDF), என்று பரவி வருவதாகத் தெரிகிறது[2]. தடை செய்யப்படும் போது, வங்கிக் கணக்குகளும் முடக்கப்படுவதால், இவ்வாறு வேறு பெயர்களில் இயக்கங்களை ஆரம்பித்து, பதிவு செய்து கொண்டு, வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து வேலைகளை ஆரம்பித்து விடுகின்றனர். இவ்வியக்கத்தினரின் இடங்களை சோதனையிடும் போது, தலிபான் போன்ற இயக்கத்தினரின் தீவிரவாத இயக்கத்தினரின் நூல்கள், செயல்முறை கையேடுகள், பயிற்சிப் புத்தகங்கள், முதலியவை சிக்குவதும் பல சந்தேகங்களை எழுப்புகின்றன[3]. அதற்கேற்றபடி, அவர்களின் வன்முறை காரியங்களும் இருந்து வருகின்றன. இப்பொழுது, லவ் ஜிஹாத், மதமாற்றம், ஐசிஸ்க்கு ஆள்சேர்ப்பு போன்ற காரியங்களில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்துள்ளது.

PFI disowns stung conversions kingpins- India today

தீவிரவாத செயல், ஐசிஸ் தொடர்பு, கைது என்றெல்லாம் வரும் போது அமுங்கி விடும் பி.எப்.காரர்கள்: ஆளும் கூட்டணி ஆட்சியிலும் பங்கு பெற்றுவருவதால், அரசியல் ஆதரவும் அதிகமாகவே இருந்து வருகிறது. கேரளாவில் முஸ்லிம் மக்கட்தொகை அதிகமாக உள்ளதாலும், அவர்கள் பல அரசு துறைகளில் அதிகாரத்தில் உள்ளதாலும், நேரிடையாகவும், மறைமுகமாகவும் வன்முறையாளர்களுக்கு ஆதரவு கிடைத்து வருகிறது. அத்தகைய பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் செயல்பாடுதான், தமிழகத்திலும் காணப்படுகிறது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் பலமுறை கொலை[4], வெடிப்பொருட்களைப் பதுக்கி வைத்தல்[5], தேசவிரோத செயல்கள் முதலியவற்றில் ஈடுபடுதல், முதலியவை உறுதிபடுத்தியிருப்பதால், போலீஸ் நடவடிக்கை எடுக்கப் பட்டதுள்ளது[6]. தமிழகத்தைப் பொறுத்த வரையில், தேசவிரோத, கம்யூனிஸ்ட், திராவிட கட்சிகளின் ஆதரவு இருந்து வருகிறது. அவ்வப்போது, ஏதோ சேவை செய்கிறோம் என்பது போலவும் காட்டிக்கொள்வதுண்டு. ஆனால், தீவிரவாத செயல், ஐசிஸ் தொடர்பு, கைது என்றெல்லாம் வரும் போது அமுங்கி விடுவர். ஆனால், பி.எப்.ஐ.யின் அடிப்படைவாத செயல்கள், பயங்கரமாக வெளிப்பட்டுக் கொண்டுக்கின்றன.

Mithilaj KC, Abdul Razak KV and Rasheed MV - PFI members,from Kannur on 25-10-2017

பி.எப்.. உறுப்பினர்கள், ஆறு பேர் கைது: கேரளாவில், லவ் ஜிஹாத் பிரச்சினையே, முஸ்லிம்கள், கிருத்துவ பெண்களை வலைவீசி மதம் மாற்றி, ஐசிஸ் வேலை நிமித்தமாக சிரியாவிற்கு கடத்தி சென்றபோது தான், முற்றியது. இன்று, நீதிமன்றத்திலேயே, விசாரிக்கப் பட்டு வரும் வழக்காகி விட்டது. கேரளாவிலிருந்து, தொடர்ந்து ஐசிஸ்க்கு ஆள் சேர்க்கப் படுவது, சிரியாவிற்குச் சென்று போராடுவது, இறந்தபோது, வாட்ஸ்-அப்பில் செய்தி வருவது என்பது வழக்காமாகி விட்டது. அந்நிலையில் தான், இப்பொழுதைய கைது செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. ஐசிஸ் தொடர்புள்ளாதாக, மிதிலாஷ் முன்டேரி, ரஸாக் மற்றும் ரஷீத் முன்டேரி என்ற மூவரும் பல வாரங்களாகக் [மூன்று மாதங்களாக] கண்காணிக்கப் பட்டு, புதன் கிழமை, 25-10-2017 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்[7]. சிரியா எல்லைக்குள் நுழைய முற்பட்டபோது, துருக்கி போலீஸாரல் பிடிபட்டு, இந்தியாவிற்கு நாடு கடத்தப் பட்டனர்[8]. கண்ணூர் டி.எஸ்.பி, பி.பி.சதானந்தம் இதனை உறுதி செய்துள்ளார். இருப்பினும், வழக்கம் போல, கண்ணூர் பி.எப்.ஐ தலைவர், நௌபா அவர்கள் தங்களது இயக்கத்தில் இல்லை என்று மறுத்தார். தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளதாகவும் தெரிவித்துக் கொண்டார். ஆனால், அவர்கள் மூன்று மாதங்கள், இஸ்தான்புல்லில் பயிற்சி பெற்றுள்ளதை எடுத்துக் காட்டுகின்றனர். கோழிக்கோட்டைச் சேர்ந்த ஸஜீர் மங்கலசேரி அப்துல்லா ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவனும் பி.எப்.ஐ ஆள் தான். தவிர பி.எப்.ஐ. உறுப்பினர்களான ஸஜில், ரிஸால் மற்றும் ஷமீர் சிரியாவில் கொல்லப்பட்டுள்ளனர். மன்ஸித் மற்றும் சஃபான், கண்ணூரில் ஒளிந்திருந்த போது, என்.ஐ.ஏவால் கடந்த ஆண்டில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவல் மற்றும் ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் துருக்கி முதலிய அரசு விவரங்கள் மூலம், இவை உறுதி செய்யப்படுகின்றன. மேலும், இறந்தவுடன், வாட்ஸ்-அப்பில், பெற்றோர்களுக்கு தங்கள் மகன் கொல்லப் பட்ட செய்தி வருகிறது என்பதும் அறிந்த விசயமாகி விட்டது.

PFI members arrested for ISIS link

ஐசிஸிக்கு ஆள் சேர்க்கும் தலிபான் ஹம்ஸா: ஹம்ஸா / யு.கே.ஹம்ஸா / தலிபான் ஹம்ஸா [UK Hamsa or ‘Taliban’ Hamsa, 52] மற்றும் மனஃப் ரஹ்மான் [Manaf Rahman] என்ற இருவர் வியாழக்கிழமை, 26-10-2017 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்[9]. உள்ளூரில் அத்தகைய பெயர்களில் பிரபலமாகியுள்ளான். உள்ளூர் முகமதியர்களுக்கு அவன், ஐசிஸிக்கு ஆள்-சேர்ப்பு செய்து கொண்டிருக்கிறான் என்பது தெரிந்து தான் இருக்கிறது. அல் அன்ஸார் என்ற இடத்தில், பஹ்ரைனில் வேலை பார்த்த இவனுக்கு வளைகுடா நாடுகளில் தொடர்புகள் இருக்கின்றன. அல் அன்ஸார் தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுக்கும் இடமாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த அல் அன்ஸார் வழியையும் கேரள ஜிஹாதிகள் ஐசிஸில் சேர உபயோகப் படுத்தி வந்துள்ளனர். மகன்கள் இறக்கிறார்கள் என்று தெரிந்தும், பெற்றோர் ஒப்புக்கொள்கிறார்கள் அல்லது அவ்வாறு வற்புருத்தப் படுகிறார்கள் அல்லது அத்தகைய நிர்பந்தம் எப்படி, எவ்வாறு, ஏன், எவர்களால் ஏற்படுகிறது என்று ஆராய வேண்டியுள்ளது.

PFI disowns stung conversions kingpins- India today-KM Sheriff

மேலும் கைதுகள், பி.எப்.ஐயின் தொடர்புகள் ஊர்ஜிதம் ஆதல்: பி.எப்.ஐயின் தலைவரும், “கல்ப் தேஜாஸ்” [Gulf Tejas] என்ற நாளிதழின் ஆசிரியருமான, அஹமது ஷரீப் “இந்தியா டுடே டிவி” நிருபரால் பேட்டி கண்டபோது, எப்படி தங்கள் இயக்கம், வளைகுடா நாடுகளிலிருந்து பணம் பெறுகிறது, ஹவாலா மூலம் பணம் வருகிறது, ஹவாலா இரு வழிகளிலும் செயல்பட்டு வருகின்றது, தங்களது நோக்கம் இந்தியாவில், ஒரு “இஸ்லாமிய நாட்டை” [Islamic State] உருவாக்குவது தான்….போன்றவற்றை ஒப்புக் கொண்டது தெரியவந்தது. ஐசிஸ் உருவாக்கிய இஸ்லாமிய ஆட்சியை, ராஜ்ஜியத்தை முகமதியர் அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிரியா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை அழித்து மண்ணோடு மண்ணாக்கிய நிலையைத் தான் உண்டாக்கியிருக்கிறார்கள். பெரிய-பெரிய கட்டிடங்கள்:, குடியிருப்புகள் அனைத்தையும், உடைத்து நாசமாக்கி தூள்-தூளாக்கியுள்ளார்கள். இனி அந்நகரங்களை, ஊர்களை உயிர்ப்பிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று தெரியவில்லை. இதனை, அவர்கள் சாதனை என்றா சொல்லிக் கொள்ள முடியும்?

© வேதபிரகாஷ்

04-11-2017

PFI Maharastra conference 27-10-2017 - invitation

[1] The PFI had come on the national radar after its activists chopped off the palm of a lecturer in Ernakulum district’s Newman College on July 4,2010, for alleged blasphemy in preparation of examination papers.

https://islamindia.wordpress.com/2014/02/19/popular-front-of-india-cadre-clash-with-police-leading-to-riot-like-condition/

[2]  According to a government paper, starting largely as a Kerala Muslim outfit and successor to National Development Front (NDF), the PFI now has more than 80,000 members and sympathisers, with a countrywide spread. The paper,that has already been circulated in the PMO,National Security Council Secretariat and the Home Ministry, states that the PFI has a militant core cadre, radical following and a subtly divisive and subversive media organ. While this case was handed over to the NIA last month [January 2014], subsequent police raids at that time on PFI activists had led to the recovery of subversive material. The paper says that raid on 100-odd PFI establishments had led to recovery of crude explosives,lethal weapons,besides a computer disk containing clips of executions by the al-Qaeda. It says Green Valley Foundation in Mallapuram district provided combat training to PFI cadre under the cover of providing vocational training to the indigent and physically challenged.

[3] போலீசார், நேற்று முன்தினம் (11-07-2010), இடுக்கி மாவட்டம் அடிமாலி கிராமத்திலும்,  தமிழக – கேரள எல்லையை ஒட்டி குமிளி பகுதியில் சிலரது வீடுகளிலும், “ரெய்டு’ நடத்தினர்.அதில், பல முக்கிய ஆவணங்களும், தகவல்களும் கிடைத்துள்ளதாக பத்தனம்திட்டாவில், மாநில போலீஸ் டி.ஜி.பி., ஜேக்கப் புன்னூஸ் தெரிவித்தார்.   முக்கியமாக ராணுவத்தினரின் செயல்பாடுகள் மற்றும் அவர்களது  நடவடிக்கைகளை தடுப்பது குறித்தான, “சிடி’க்கள், குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுபவர்களது வீடுகளில், “ரெய்டின்’ போது சிக்கியது.”இக்குறிப்பிட்ட, “சிடி’க்கள் குறித்து ராணுவ புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும்’ என, போலீஸ் டி.ஜி.பி., கோரினார். இதையடுத்து நேற்று, கொச்சி வந்த ராணுவ புலனாய்வுத் துறை அதிகாரிகள், கொச்சி நகர போலீஸ் கமிஷனர் மனோஜ் ஆபரகாமை சந்தித்தனர்.மாநில போலீசார் நடத்திய, “ரெய்டு’ மற்றும்  கைப்பற்றிய சில குறிப்பிட்ட, “சிடி’க்கள் குறித்தும் விசாரித்தனர். அதில், குறிப்பாக ராணுவத்தினர் குறித்தும், தலிபான் அமைப்பினர் வழங்கும் தண்டனைகள் மற்றும் தேச விரோத நடவடிக்கைகள் ஆகியவை அடங்கிய, “சிடி’க்களை ஆய்வு செய்து விசாரித்து அறிந்தனர். http://www.dinamalar.com/News_Detail.asp?Id=38159

[4] http://news.outlookindia.com/items.aspx?artid=769976

[5]  http://zeenews.india.com/news/kerala/country-made-bombs-seized-21-pfi-cadres-arrested-in-kerala_844220.html

[6] http://indianexpress.com/article/news-archive/web/concern-in-govt-over-pfis-growing-outfits-spread/0/

[7] TheNewsMinute, 3 PFI members booked for alleged ISIS links: Govt case against group grows stronger, Thursday, October, 2017. 12:54.IST

[8] http://www.thenewsminute.com/article/3-pfi-members-booked-alleged-isis-links-govt-case-against-group-grows-stronger-70586

[9] The police revelation also comes days after the arrest of five suspected ISIS recruiters from Kannur. The ringleader of the recruitment is said to be a 52-year old man identified as UK Hamsa or ‘Taliban’ Hamsa. It was not immediately clear whether the youths were recruited by the group linked to Hamsa. According to the National Investigation Agency, nearly a 100 Indians, many of them from Kerala have left India to join ISIS.

https://www.indiatimes.com/news/india/isis-fever-grows-stronger-in-kerala-as-six-more-men-from-the-state-join-isis-in-syria-332902.html

இந்திய வரிப்பணத்தை உண்டு கொழுத்து, இந்தியாவிற்கு எதிராக அப்பாவி மக்களைக் கொன்று வரும், ஹுரியத் போன்ற ஜிஹாதி வெறியாளர்கள் (1)

ஜூலை 30, 2017

இந்திய வரிப்பணத்தை உண்டு கொழுத்து, இந்தியாவிற்கு எதிராக அப்பாவி மக்களைக் கொன்று வரும், ஹுரியத் போன்ற ஜிஹாதி வெறியாளர்கள் (1)

Shabir sha meeting Abdul Basit - August .2014

பணபறிமாற்றத்தில் பாகிஸ்தான் தூதரகம் சம்பந்தப்பட்டது (மே. 2017): 28-07-2017 அன்று பாகிஸ்தானின் பிரதமர் ஊழல் விசயமாக பதவி விலகிய போது, பாகிஸ்தானின்  இந்திய தூதர் அப்துல் பசித் பதவியும் பறிபோனது. ஆனால், இந்த ஆள் தான், பிரிவினைவாதிகள், தீவிரவாதிகளை, தில்லியில் உள்ள தூதரகத்திற்கு வரவழைத்து, சதிதிட்டங்களைத் தீட்டி, காஷ்மீரத்தில் எப்பொழுதும் அமைதி குலைக்க அவர்களுக்கு பணம் கொடுத்தது மே 2017ல் தெரிய வந்தது என்பதை நினைவு கொள்ள வேண்டும். ரூ.70 லட்சம் பாகிஸ்தான் உளவு துறை ஐ.எஸ்.ஐ மூலம், ஹுரியத் தலைவர் ஷபிர் ஷா [Hurriyat leader Shabir Shah] வழியாக, கல்லெறி ஜிஹாதிகளுக்கு கொடுக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது[1]. சமீபத்தில் கைதான இரண்டு ஐ.எஸ்.ஐ உளவாளிகள், இதை ஒப்புக்கொண்டு விவரங்களைக் கொடுத்துள்ளனர்[2]. பாகிஸ்தானின்  இந்திய தூதர் அப்துல் பசித் [Abdul Basit, Pakistan’s envoy to India] மூலம் பணம் பரிமாறப்பட்டுள்ளது[3]. அதாவது தூதரகம் மூலமாகவே இத்தகைய தீவிரவாதிகளுக்கு பணவிநியோகம் நடந்துள்ளது[4].  “ஹைகமிஷனராக” இருந்து கொண்டு செய்திருக்கிறாரா என்று கேள்வி கேட்டுள்ளன ஊடகங்கள்[5].

SYurriat meeting Abdul Basit - August .2014

இந்தியா பாகிஸ்தான் விசயத்தில் மெத்தனமாக இருக்கிறதா?: ஒரு புறம் யாதவை உளவாளி என்று அறிவித்து, பாகிஸ்தான் அவனுக்கு தூக்கு தண்டனை கொடுத்து, அனைத்துலக ரீதியில், எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் இவ்வளவு உள்ளூர் விசயங்களில் தலையீடு செய்து, கலவரங்களை உண்டாக்கி வந்தாலும், அதுபோன்று நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஊடகங்கள் இவற்றை எடுத்துக் காட்டினாலும், அரசு முறையாக இதைப்பற்றி ஒன்றும் கருத்துத் தெரிவிக்கவில்லை. அப்துல் பசித்தை கூப்பிட்டு விளக்கம் கேட்கவில்லை. சென்ற ஆண்டு-2016, இவர் காஷ்மீரில் இருக்கும் ஊடகக்காரர்களை வரவழைத்து, இந்தியாவிற்கு எதிரான விசயங்களை அதிகப்படுத்தி, செய்திகளாக போடவும், அதன் மூலம், அங்குள்ள மக்களைத் தூண்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தெரிந்ததும், இங்கு குறிப்பிடத் தக்கது[6]. தூதுவர், தூதரகம், இருநாட்டு உறவுகள் போன்ற விசயங்களில் இந்தியா மென்மையாக, மெதுவாக, சோம்பேறித்தனமாக செயல்படுவதும் வியப்பாக இருக்கிறது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் ஆட்கள் அதிகமாக இருப்பதும் தெரிய வருகின்றன.

Kashmir separatist leaders aiding and abeting terror

காஷ்மீர தீவிரவாத-பயங்கரவாத-பிரிவினைவாதிகளின் இரட்டை வேடங்கள், துரோகங்கள், தேசவிரோதச் செயல்கள்: சையது அலி ஷா கிலானி, மீர்வ்யிஸ் பரூக், முதலியோர் அரசின் செலவில் பாதுகாப்புப் பெற்றுள்ளார்கள். ஆனால், இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். ஶ்ரீநகர் போன்ற முக்கிய இடங்களில் வர்த்தக வளாகங்களின் சொந்தக்காரர்களாக இருந்து கொண்டு கோடிகளில் வாடகை, குத்தகை போன்றவற்றில் வருமானம் பெற்று வருகிறார்கள், சொகுசாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களது பையன்கள், பேரன்கள் தில்லி மற்றும் மற்ற இந்திய மற்றும் அயல்நாடுகளில் உள்ள சிறந்த பள்ளிகள்-கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். ஆனால், காஷ்மீரில் உள்ள பள்ளிகள்-கல்லூரிகள் நடத்த விடாமல் கலாட்டா செய்து வருகிறார்கள். மாணவ-மாணவியர் பள்ளிகள்-கல்லூரிகளுக்குச் சென்று படிக்காமல், பணம் கொடுத்து, திசைத் திருப்பி, கல்லடி-ஜிஹாதிகளாக செயம்பட வைக்கின்றனர். ஷபிர் ஷா தொடர்புகள் நயீன் கான் மூலம் தெரிய வந்ததால், அவனை சையது அலி ஷா கிலானி கட்சியிலிருந்து விலக்கி வைத்தார். ஆனால்

NIA press release 19-05-2017

19-05-2017 அன்று ஆரம்ப விசாரணை நடவடிக்கை பதிவு செய்தது[7]: “இந்தியா டிவி” தொலைக்காட்சியில் வெளியான, நிருபர் மற்றும் ஹுரியத் கான்பரன்ஸ் தலைவர்களின் உரையாடகளில் தீவிரவாத பணபரிவர்த்தனைப் பற்றிய விசயங்களை கண்டு கொண்டது.

  1. பொதுசொத்துக்களுக்கு நாசம் விளைவித்தது,
  2. பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறிந்து கலவரம் புரிந்தது,
  3. பள்ளிகளை எரித்தது,
  4. அரசாங்க அலுலகங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு நாசம் விளைவித்தது

போன்ற சட்டவிரோத காரியங்களை மேற்கொள்ள கீழ் கண்ட ஹுரியத் தலைவர்களுக்கு, பாகிஸ்தானிய தீவிரவாதியான, ஹாவிஸ் மொஹம்மது சையது மற்றும் தீவிரவாத இயக்கங்கள் மூலம் பணம் பெற்ற விவகாரங்களில் ஆதாரம் இருப்பதால், அவர்களிடம் விசாரிக்க, ஆரம்ப விசாரணை துவங்கப்பட்டது:

  1. சையது அலி ஷா கிலானி [Syed Ali Shah Geelani],
  2. நயீம் கான் [Naeem Khan],
  3. பரூக் அஹமது தார் [Farooq Ahmed Dar],
  4. காஜி ஜேவத் பாபா [Gazi Javed Baba],
  5. மற்றும் பலர் [and others]

இதில் விசயம் என்னவென்றால், இவர்கள் எல்லோருமே, இந்தியாவில், இந்திய குடிமகன்களாக இருந்து கொண்டு, சொத்துகள் வைத்துக் கொண்டு அவற்றிலிருந்து லட்சக்கணக்கில் வருவாய் பெற்றுக் கொண்டு, இவ்வாறு செய்து வருகின்றனர். தங்களது மகன், மகள், பேரன், பேத்தியர் முதலியவர்களை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நல்ல படிப்பு படிக்க வைத்து, உள்ளூர் மக்கள் படிக்கவிடாத படி, பள்ளிகளை எரித்து வருகின்றனர்.

Curfew in rajouri

Curfew in rajouri

காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்குகல்லெறிஜிஹாதிகளுக்கு நிதியுதவி: ஜம்மு – காஷ்மீரில், பிரிவினைவாத தலைவன், சையது அலி ஷா கிலானியின் மருமகன், அல்டாப் அகமது ஷா உட்பட, ஏழு பேரை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு [The National Investigation Agency (NIA)], பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் கைது செய்துள்ளது[8]. ஜம்மு – காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், பி.டி.பி., – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், சமீபத்தில், ரம்ஜான் பண்டிகை முடிந்ததும், பிரிவினைவாத தலைவன் சையது அலி ஷா கிலானியின் மருமகன், அல்டாப் அகமது ஷாவை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் கைது செய்து காவலில் வைத்தனர்[9]. இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரில் நடந்து வரும் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்தும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டப்படுவது குறித்தும், என்.ஐ.ஏ., தீவிர விசாரணை நடத்தி வருகிறது.  குறிப்பாக கல்லெறி-ஜிஹாதிகளுக்கு மாத சம்பளம் கொடுத்து, தொடர்ந்து கலவரத்தில் ஈடுபடுத்தப் படுவதும் கண்டுபிடிக்கப் பட்டது. இதில், சுமார் 100 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

© வேதபிரகாஷ்

30-07-2017

Burhan Wani - praised by Urudu PAK media

[1] Times of India, How ISI funds stone-pelters via Hurriyat in Kashmir: Times Now, TIMESOFINDIA.COM | Updated: May 6, 2017, 06.30 PM IST

[2] http://timesofindia.indiatimes.com/india/how-isi-funds-stone-pelters-via-hurriyat-in-kashmir-times-now/articleshow/58546402.cms

[3]  Zeenews, Pak embassy helps distribute ISI funds to stone-pelters in Kashmir: Report, By Zee Media Bureau | Last Updated: Sunday, May 7, 2017 – 00:36.

[4] http://zeenews.india.com/india/pak-embassy-helps-distribute-isi-funds-to-stone-pelters-in-kashmir-report-2002780.html

[5] Times.now, Is Pak high commissioner Abdul Basit paying separatists to create unrest in Kashmir? , May 06, 2017, 13.33 IST.

[6] Sources say that last year the Pakistan high commission had invited Kashmiri journalists to a meeting where they were asked to file reports project Indian security forces in bad light so they can generate hatred towards India and create a mass movement.

http://www.timesnow.tv/india/video/is-pak-high-commissioner-abdul-basit-paying-separatists-to-create-unrest-in-kashmir/60563

[7] NIA has also taken cognizance of the news item related to the recording of conversations between the reporter and leaders of the separatist groups operating in Kashmir valley, by India Today TV, on 16.05.2017 in this regard. National Investigation Agency has registered a PE (Preliminary Enquiry) into the funding of Hurriyat leaders namely Syed Ali Shah Geelani, Naeem Khan, Farooq Ahmed Dar, Gazi Javed Baba and others in J&K by Hafiz Muhammed Saeed and other Pakistan based terrorists and agencies to carry out subversive activities in Kashmir and for damaging public property, stone pelting on the security forces, burning of schools and other Government establishments.

http://www.nia.gov.in/writereaddata/Portal/PressReleaseNew/413_1_PressRelease19052017.pdf

[8] தினமலர், கிலானியின் மருமகன் கைது : காஷ்மீரில் என்..., அதிரடி, பதிவு செய்த நாள்.ஜூலை 24.2017, 22:01.

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1818923