பத்ருதீன் அஜ்மல்: இந்துக்களும் முஸ்லிம்கள் போல லவ்ஜிஹாத் செய்யலாம்,  எங்கள் வீட்டுப் பெண்பிள்ளைகளைத் தூக்கிச் செல்லுங்கள்…. பலம் என்னதான் என்று பார்ப்போமே! (2)

பத்ருதீன் அஜ்மல்: இந்துக்களும் முஸ்லிம்கள் போல லவ் ஜிஹாத் செய்யலாம்எங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளை தூக்கிச் செல்லுங்கள்…. பலம் என்னதான் என்று பார்ப்போமே! (2)

05-12-2022 – தமிழ்.இந்து மறுபடியும் அதே செய்தியை வெளியிட்டது: “பெண்களுக்கு 18 முதல் 20 வயதுக்குள் திருமணம் செய்து வைக்கும் இஸ்லாமிய பார்முலாவுக்கு இந்துக்களும் மாற வேண்டும்[1]. அப்போதுதான் குழந்தைப்பேறு எளிதாக இருக்கும் என்பதுடன் பெற்றோரும் தங்களது இளம் வயதிற்குள்ளாகவே தங்களது பிள்ளைகளுக்கும் வசதியாக திருமணம் நடத்தி வைக்க முடியும்,” என அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (ஏஐயுடிஎஃப்) தலைவர் பத்ருதீன் அஜ்மல் தெரிவித்தார்[2]. இதுகுறித்து அவர் மேலும் கூறியது, “இஸ்லாமிய வழக்கப்படி ஆண்களுக்கு 20-22 வயதில் திருமணம் முடித்து வைக்கப்படுகிறது. அதே போன்று பெண்களுக்கும் அரசு அனுமதித்துள்ள 18 வயதுக்குப் பின்னர் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. மறுபக்கம், அவர்கள் (இந்துக்கள்) திருமணத்துக்கு முன்பாகவே சட்டவிரோதமாக இரண்டு அல்லது மூன்று பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்கின்றனர்[3]. [தமிழில் தமிழ்.இந்து உட்பட முதலில் இப்படி வெளியிட்டு விட்டு, பிறகு, “சட்டவிரோத மனைவிகளை……” என்றதை சேர்த்து வெளியிட்டனர்.] இது தற்செயலாக நிகழ்ந்ததா அல்லது வேண்டுமென்றே அத்தகைய “எடிடிங்” போன்ற முறை கையாளப் பட்டதா என்று தெரியவில்லை.

இந்துக்கள் திருமணத்திற்கு முன்பு ஒன்று, இரண்டு அல்லது மூன்று சட்டவிரோத மனைவிகளை வைத்திருக்கிறார்கள்: [இந்துக்கள் திருமணத்திற்கு முன்பு ஒன்று, இரண்டு அல்லது மூன்று சட்டவிரோத மனைவிகளை வைத்திருக்கிறார்கள்.– தினத்தந்தி] பிள்ளைகள் பெற்றுக்கொள்ளாமல், வாழ்க்கையை அனுபவித்து பணத்தையும் சேர்த்துக் கொள்கின்றனர்[4]. 40 வயதில் என்னபெற்றோரின் நிர்பந்தத்தால் 40 வயதுக்குப்பிறகு அவர்கள் முறைப்படியான திருமணத்தை செய்து கொள்கின்றனர்[5]. 40 வயதிற்குப் பிறகு திருமணம் செய்து அவர்கள் எப்படி குழந்தைகளைப் பெற்று வளர்ப்பார்கள்[6]. நிலத்தில் சரியான நேரத்தில் விதைக்கும் போதுதான் நல்ல வளர்ச்சியையும், விளைச்சலையும் எதிர்பார்க்க முடியும்”. [இந்த கடைசி வரியும் விசமத்தனமானது. இத்தகைய கருத்துகளை இந்துக்கள் சொல்லியிருந்தால், அது பெருத்த சர்ச்சையாகி இருக்கும். எல்லா முஸ்லிம் தலைவர்களும் குதித்திருப்பார்கள்….இந்துக்கள் படித்து, வேலைக்குச் சென்று சம்பாதித்து, பெற்றோர்களை மற்ற குடும்பத்தினரை பொறுப்புடன் காப்பாற்றி வரவேண்டியுள்ளது. சகோதரிகள்-சகோதரர்களுக்கு திருமணம் ஆனப் பிறகு, தம்பி-தங்கைகளுக்கு திருமணம் போன்ற சம்பிரதாயங்களும் அனுசரிக்கப் படுகின்றன. இவற்றையெல்லாம் கொச்சைப் படுத்த முடியாது…..இந்து இளைஞர்கள் அவ்வாறு பினைப்புகளுடன் இருப்பதனால், முஸ்லிம்களை போல பயங்கரவாதம், தீவிஅவாதச் செயல்களில் ஈடுபடாமல் இருக்கிறார்கள் எனலாம்….]

நீங்களும் நான்கைந்து லவ் ஜிகாத் செய்யலாமே. நீங்கள் எங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளை தூக்கிச் செல்லுங்கள்: முன்னதாக, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ், டெல்லியில் ஷ்ரித்தா வாக்கர் என்ற இளம் பெண் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் லவ் ஜிகாத் இருப்பதாகக் கூறியிருந்தார். இந்தியாவுக்கு அப்தாப்புக்கள் வேண்டாம், கடவுள் ராமர் போன்ற நரேந்திர மோடி தான் வேண்டும் என்றும் கூறியிருந்தார். அது குறித்து கூறிய பத்ருதீன், “உங்களை யாரும் தடுக்கவில்லையே. நீங்களும் நான்கைந்து லவ் ஜிகாத் செய்யலாமே. நீங்கள் எங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளை தூக்கிச் செல்லுங்கள். நாங்கள் சண்டைகூட போட மாட்டோம். உங்கள் பலம் என்னதான் என்று பார்ப்போமே,” என்று கூறியுள்ளார். வக்ஃபு வாரியம் நாடு முழுவதும் புதிதாக பெண்களுக்காகவே 10 கல்லூரிகளை கட்டவிருப்பதாக அறிவித்துள்ளது. இதனை சுட்டிக்காட்டிய பத்ருதீன், “அந்தக் கல்லூரிகளில் இந்து பெண்களுக்கும் தாராளமாக இடம் வழங்க வேண்டும்” என்று கோரியுள்ளார். [நிச்சயமாக இதெல்லாம் உள்நோக்கம் கொண்ட கருத்துகள், பேச்சுகள்…எந்த இந்துவும் அம்மாதிரி முஸ்லிம் வீட்டுப் பெண் பிள்ளைகளை தூக்கிச் செல்லமாட்டான்.  “உங்கள் பலம் என்னதான் என்று பார்ப்போமே,” என்பதிலும் வெறுப்புப் பேச்சுதான் வெளிப்படுகிறது….]. இப்பொழுது அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாக செய்தி வந்து கொண்டிருக்கிறது.

முஸ்லிம்களைப் போல, இந்துக்கள் காரியங்களைச் செய்ய முடியாது: கருத்து சொல்வதற்கே முஸ்லிம்கள் பொறுப்பதில்லை. சமீபத்தில் நூபுர் சர்மா கருத்திற்கு தலை வெட்டி கொலை செய்த குரூரங்கள் எல்லாம் நடந்தேறி விட்டன. பிறகு, ஒரு இந்து முஸ்லிம் பெண்ணைத் தூக்கிச் செல்வது என்பதெல்லாம் கலவரங்கள், குண்டுவெடிப்புகளில் தான் முடியும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். “நாங்கள் சண்டைகூட போட மாட்டோம். உங்கள் பலம் என்னதான் என்று பார்ப்போமே,” என்பதில் மிரட்டல் தொணி தான் வெளிப்படுகிறது. ஆமாம், நிச்சயமாக, இந்துக்களுக்கு அத்தகைய, அந்தவிதமான பலம் இல்லை. இருந்தாலும், அவ்வாறு செய்ய மாட்டார்கள். ஆகவே, அவ்வாறு தூண்டிவிடு வகையில் பேச வேண்டிய தேவை, அவசியம், எதிர்பார்ப்பு என்னவென்று தெரியவில்லை. வக்ஃ / முஸ்லிம்கள் கல்லூரிகளில், “அந்தக் கல்லூரிகளில் இந்து பெண்களுக்கும் தாராளமாக இடம் வழங்க வேண்டும்,” என்றால், அவர்களுக்கு பாதுகாப்புக் கிடைக்குமா அல்லது அவர்கள் திரும்பி வரமுடியாத நிலை ஏற்படுமா என்று ஆராய வேண்டியுள்ளது.

எதிர்ப்பு கிளம்பியதும், மன்னிப்பு கேட்டதும்: இதற்கிடையே, பா.ஜ.,வுக்கு ஆதரவாக அஜ்மல் பேசியுள்ளதாக காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. தாவடு, உயர்வு நவிற்சி, கிண்டல், நக்கல், இருமாப்பு முதலியவற்றைக் கண்டுகொள்ளாமல், காங்கிரஸ் வ்வாறு செய்கிறது என்பது உஅனாகிறது. குஜராத் தேர்தல் நடக்கும் நிலையில், திசை திருப்பும் வகையில் பா.ஜ., கூறியபடி அஜ்மல் பேசியுள்ளதாக அக்கட்சிகள் விமர்சித்துள்ளன. மேலும், அஜ்மலிமன் விசமத்தனமான பேச்சுக்கு எதிராக அசாமின் பல போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திரிணமுல் காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நேற்று நடத்தப்பட்டது[7]. இந்நிலையில், பத்ருதீன் அஜ்மலின் கருத்துக்கு பல்வேறு தரப்பில் கண்டனம் எழுந்த நிலையில் அவர் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார்[8]. இது தொடர்பாக அவர் கூறுகையில், “நான் ஹிந்துக்கள் குறித்தும், ஹிந்து பெண்கள் குறித்தும் குறிப்பிடவில்லை; பொதுவாக குறிப்பிட்டேன்[9]. இருப்பினும் இது பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது[10]. என் பேச்சுக்காக அவமானப்படுகிறேன். அவ்வாறு நான் பேசியிருக்கக் கூடாது.என் பேச்சு திரித்து கூறப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக என் மீது வழக்குகள் தொடர்ந்துள்ளனர். எனது வார்த்தைகள் யாருடைய உணர்வையும் புண்படுத்தி இருந்தால் நான் என் வார்த்தைகளை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்[11]. யாருடைய உணர்வையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. அரசு சிறுபான்மையினருக்கு நீதி, கல்வி, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே எனது விருப்பம்,” என்றார்[12].

© வேதபிரகாஷ்

05-12-2022 


[1] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், Badruddin Ajmal: இந்துக்கள் முஸ்லிம்கள் பார்முலாவை பின்பற்ற வேண்டும்: அசாம் ஏஐடியுஎப் தலைவர் சர்ச்சைப் பேச்சு, Pothy Raj, First Published Dec 3, 2022, 5:08 PM IST; Last Updated Dec 3, 2022, 5:10 PM IST.

[2] https://tamil.asianetnews.com/india/hindus-should-adopt-the-muslim-model-says-badruddin-ajmal-of-assam-rmbcbv

[3] தமிழ்.இந்து, முஸ்லிம்களைப் போல இந்துக்களும் 18-22 வயதில் திருமணம் செய்ய வேண்டும்: ஏஐயுடிஎஃப் தலைவர் பத்ருதீன் அஜ்மல் கருத்து, செய்திப்பிரிவு, Published : 05 Dec 2022 10:07 AM; Last Updated : 05 Dec 2022 10:07 AM.

[4] https://www.hindutamil.in/news/india/910345-like-muslims-hindus-should-marry-at-age-18-22-aiudf-president-bhadruddin-ajmal.html

[5] தினத்தந்தி, இந்துக்கள் முஸ்லீம்களைப்போல் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்ய வேண்டும்பத்ருதீன் அஜ்மல், டிசம்பர் 3, 1:57 pm

[6] https://www.dailythanthi.com/News/India/hindus-should-follow-muslim-formula-assams-badruddin-ajmal-on-population-boom-850045

[7] புதியதலைமுறை, இளவயது திருமணம் கருத்து தெரிவித்த அசாம் எம்.பி மீது அரசியல் கட்சிகள் தொடர் வழக்குகள், Justin Durai, Published: 04, December 2022 10:17 PM.

[8] https://www.puthiyathalaimurai.com/newsview/151933/Police-cases-continue-against-Ajmal-over-controversial-remark-Assam-Congress-leader-latest-complainant.html

[9] தினமலர், ஹிந்து பெண்கள் குறித்து கருத்து: மன்னிப்பு கேட்டார் அசாம் எம்.பி., பதிவு செய்த நாள்: டிச 05,2022 04:54

[10] https://m.dinamalar.com/detail-amp.php?id=3186557

[11] தினத்தந்தி, , இந்து மதத்தினர் பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்ய வேண்டும்கருத்துக்கு மன்னிப்பு கோரிய பத்ருதீன் அஜ்மல், டிசம்பர் 4, 2:36 am.

[12] https://www.dailythanthi.com/News/India/ajmal-apologises-for-hurting-sentiments-parties-link-his-comments-to-guj-polls-850580

Explore posts in the same categories: அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம், அசாம், கல்யாணம் செய்தல், குழந்தை பெற்றெடுத்தல், தூக்கிச் செல், பத்ருதீன் அஜ்மல், மன்னிப்பு, முஸ்லிம் பார்முலா, மௌலானா, லவ் ஜிஹாத்

குறிச்சொற்கள்: , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: