இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு (1)

இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு (!)

கிருத்துவம் அல்லது இஸ்லாம் மதமாற்றம் ஏன் நடக்கிறது?: தமிழகத்தில் இந்துக்கள் மதம் மாறுவது நடந்து கொண்டே இருக்கிறது. தீண்டாமை மற்றும் ஜாதி, ஜாதிக் கொடுமைகள் காரணமாக எடுத்துக் காட்டப் பட்டு, கிருத்துவம் அல்லது இஸ்லாம் மதத்திற்கு மாறி விட்டால், அத்தகைய வேறுபாடுகள், வித்தியாசங்கள், பாகுபாடுகள் முதலியன மட்டுமல்லாது, சமுத்தவம், சகோதரத்துவம், சம-அந்தஸ்து எல்லாம் கொடுக்கப் படும் அல்லது கிடைக்கும் என்று அறிவிக்கப் பட்டு அல்லது பிரச்சாரம் செய்யப் பட்டு, அத்தகைய மதமாற்றங்கள் நடந்தன, நடந்து வருகின்றன. இவையெல்லாம், ஆன்மீகம், தத்துவம், மெய்யியல் போன்றவற்றைக் கடந்து திட்டமிட்டு நடந்து வருகின்றன என்பது அரசாங்க, நிறுவனங்கள் ஆராய்ச்சிகள், தரவுகள் முதலியவை மூலம் அறியப் பட்டுள்ளன. மீனாக்ஷிபுரம் மதமாற்றம் அதனால் தான் பெரும் சர்ச்சையை உண்டாக்கி அடங்கி விட்டது. அதனால், எத்தனை மதம் மாறிய இந்துக்கள் பணக்காரர்கள் ஆனார்கள், உயர்ந்த சமுக்கத்தின் பெண்களை கல்யாணம் செய்து கொண்டார்கள், சிறந்த நிலையை அடைந்தார்கள் என்றெல்லாம் தெரியவில்லை.

மதமாற்றத்தால் உயர்ந்த நிலை கிடைத்ததா இல்லையா?: மண்டல் கமிஷன் தீர்ப்பு இஸ்லாமியர் மற்றும் கிருத்துவர் இடையேயும் ஜாதிகள் உண்டு என்றவுடன், சச்சார் கமிஷன், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் முதலியவற்றின் பரிந்துரைகளின் ஆதாரமாக, அவர்கள் இடவொதிக்கீடு கேட்க ஆரம்பித்து விட்டனர். ஆனால், Caste [காஸ்ட்] மற்றும் class [கிளாஸ்] என்றவற்றிற்குள் இருக்கும் உண்மையினை அறிந்து கொள்ளாமல், உணர்ச்சி, அரசியல், சித்தாந்தம் போன்றவற்றால் உந்தப்பட்டு, மற்றவர்களையும் உசுப்பி விட்டு, பிரச்சினைகளை வளர்த்து வருவதும் தெரிகிறது. ஒரு பக்கம் எல்லோரும் சமம், எல்லோருக்கும் சம-உரிமைகள், எல்லோருக்கும் எல்லாம் என்றெல்லாம் பேசிக் கொண்டே, “எல்லாமே எனக்குத்தான்” என்று பல கூட்டங்கள் பெருகி வருவதைக் காணலாம். இங்கு தான், அப்பிரச்சினைகள், பெரிதாகி நீதிமன்றங்கலுக்குச் செல்கின்றன. அங்கு உண்மைகள் ஆராயும், அலசும் மற்றும் முடிவில் தீர்ப்புகளாக வரும் பொழுது, பிடித்தும்-பிடிக்காமலும் போகும் நிலை உண்டாகிறது. இப்பொழுது, இந்த தீர்ப்பும் அவ்வாறே இருக்கிறதா . இல்லையா என்று கவனிப்போம்.

இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு: மதுரைக்கிளை உயர் நீதிமன்றம் ‘இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மாதத்துக்கு மாறியவரை பிசி முஸ்லிம் ஆக கருத வேண்டும்’ என்ற கோரிக்கையை நிராகரித்துள்ளது[1]. இது ஊடகங்களில் செய்தியாக வெளிவந்தாலும், வழக்கம் போல, “பி.டி.ஐ” பாணியில், “தமிழ்.இந்துவில்” வந்ததை மற்ற ஊடகங்கள் அப்படியே / வேறு தலைப்புகள் இட்டு / சிறிது மாற்றி வெளியிட்டுள்ளன. ஊடக வித்தகர்களும், நிருபர்களும், அப்படியே செய்தியை போட்டு, அமைதியாகி விட்டனர். இவ்வழக்கில் பாதிக்கப் பட்டவரிடம் சென்று பேட்டி காணவில்லை, முஸ்லிம் அரசியல் கட்சிகள், இயக்கத்தினர்களிடம், துறை அமைச்சர்களிடம் கமென்ட் / விளக்கம் கேட்கவில்லை, அன்று மாலையிலேயே, டிவிசெனல்களில் வாத-விவாதங்கள் நடத்தவில்லை. சமூகநீதி வித்தகர்கள், சமத்துவ சித்தாந்திகள், சமவுரிமை போராளிகள், சமன்பாட்டு வித்தகர்கள் முதலியோரும் காணப்படவில்லை.

காஜி கொடுத்த முஸ்லிம் சான்றிதழ், கேட்கும் பிசி அந்தஸ்து, மறுத்த TNPSC:  ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த யு.அக்பர் அலி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு[2]. நானும், என் குடும்பத்தினர் இந்து மதத்தில் இருந்து 2008-ல் இஸ்லாம் மதத்துக்கு மாறினோம்[3]. நான் லெப்பை சமூகத்தைச் சேர்ந்தவர் (a group within Muslim community which has been notified as a backward class) என ராமநாதபுரம் மண்டல துணை வட்டாட்சியர் 2015-ல் சாதி சான்றிதழ் வழங்கியுள்ளார்[4]. 2018-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு பிசி முஸ்லிம் பிரிவில் விண்ணப்பித்தேன்[5]. எழுத்துத் தேர்வு மற்றும் மெயின் தேர்வு எழுதினேன்[6]. இறுதி தேர்வுப் பட்டியலில் என் பெயர் இடம்பெறவில்லை[7]. தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது என் பெயரை பிசி முஸ்லிம் பிரிவில் பரிசீலிக்காமல், பொதுப்பிரிவில் பரிசீலித்துள்ளனர்[8]. என்னை பிசி முஸ்லிம் பிரிவில் பரிசீலிக்கக்கோரி அளித்த மனுவை டிஎன்பிஎஸ்சி செயலாளர் 28.7.2021ல் நிராகரித்து உத்தரவிட்டார். [இந்த TNPSC அதிகாரி வருவாய் அதிகாரியை விட பெரியவர்களா அல்லது அவர்கள் கொடுக்கும் சான்றிதழை மறுக்க அதிகாரம் உள்ளதா?]

லெப்பை முஸ்லிமா, பிற்படுத்தப் பட்ட முஸ்லிமா, ஜாதியா?: என்னை பிசி முஸ்லிம் பிரிவில் பரிசீலித்து வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது[9]. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு[10]. “தமிழகத்தில் அனைத்து இஸ்லாமியர்களும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருதப்படுவதில்லை.மனுதாரர் ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜியார் அளித்த சான்றிதழை தாக்கல் செய்துள்ளார்[11]. அதில் சத்திய மூர்த்தி என்பவர் அவராகவே விரும்பி இஸ்லாம் மதத்தில் சேர்ந்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது[12]. அதை தவிர – அவர் ஒரு இஸ்லாமியர் என்பதை தவிர – சான்றிதழில் வேறு ஏதும் இல்லை. மதம் மாறியவர் லெப்பை வகுப்பை சேர்ந்தவர் என அரசு காஜியார் அறிவிக்க முடியாது. அப்படியிருக்கும்போது மதச்சார்பற்ற அரசின் வருவாய் அலுவலர் மதம் மாறிய தனி நபர் குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர் என எப்படி சான்றிதழ் வழங்கினார் என்பது தெரியவில்லை. ஏற்கெனவே இடஒதுக்கீட்டு சலுகையை அனுபவித்து வந்த ஒருவருக்கு மதம் மாறிய பிறகும் இடஒதுக்கீட்டு சலுகை வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது[13]. அது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது இந்த நீதிமன்றத்தால் எந்த முடிவுக்கும் வர முடியாது[14].  [காஜி தனது மத இறையியலின் படி தீர்மானிக்கிறரா அல்லது வேறு ஏதோரு அதிகாரம் அல்லது அதிகார ஆணை மூலம் தீர்மானிக்கிறாரா என்றும் கவனிக்க வேண்டும். எப்படியிருந்தாலும்,ஐஸ்லாமிய இறையியலின் படி முஸ்லிமுக்கு இரண்டு வித சமூக நிலை, அந்தஸ்து. இடவொதிக்கீடு எல்லாம் இருக்கிறதா என்று தெரியவில்லை.]

© வேதபிரகாஷ்

04-12-2022 


[1] தமிழ்.இந்து, இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு, கி.மகாராஜன், Published : 02 Dec 2022 08:22 PM; Last Updated : 02 Dec 2022 08:22 PM

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/909128-hindu-convert-to-islam-cannot-be-considered-a-bc-muslim-high-court-orders.html

[3]காமதேனு, இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பி.சி முஸ்லிமாக கருத முடியாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு, கி.மகாராஜன், Updated on :  2 Dec, 2022, 9:40 pm.

[4]  https://kamadenu.hindutamil.in/national/a-hindu-convert-to-islam-cannot-be-considered-a-bc-muslim-high-court-orders-action

[5] ஜி.7.தமிழ், இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாதுஉயர் நீதிமன்றம் உத்தரவு  | hindu convert to islam cannot be considered a bc muslim high court orders || G7TAMIL, By g7tamil -December 2, 2022.

[6] https://g7tamil.in/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/

[7] தமிழ்.மினட்ஸ், இந்து மதத்தில் இருந்து இஸ்லாமுக்கு மாறியவருக்கு BC வகுப்பா? மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு, by Bala S, December 3, 2022.

[8] https://tamilminutes.com/madurai-high-court-rejected-religion-changed-case/

[9] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், முஸ்லிம் மதம் மாறிய இந்து பிற்படுத்தப்பட்டவர் அல்ல.. மதுரை உயர்நீதிமன்றம், Written by WebDesk, Madurai, December 3, 2022 2:22:42 pm

[10] https://tamil.indianexpress.com/tamilnadu/the-madurai-high-court-has-ordered-that-a-hindu-convert-to-islam-is-not-a-backward-class-552158/

[11] இ.டிவி.பாரத், மதம் மாறியவரை BC முஸ்லிமாக கருத முடியாதுஉயர் நீதிமன்றம் மதுரைக்கிளை, Published on December 03, 2022; Updaed; December 04, 2022.

[12] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/madurai/a-convert-cannot-be-considered-a-bc-muslim-high-court/tamil-nadu20221203130924644644445

[13] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Madurai HC: ‘டிஎன்பிஎஸ்சி செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவு சரியானதுநீதிமன்றம், Karthikeyan S, 03 December 2022, 15:10 IST

[14] https://tamil.hindustantimes.com/tamilnadu/madurai-hc-rejects-backward-quota-claim-of-hindu-man-converted-to-muslim-131670060279181.html

Explore posts in the same categories: அன்சாரி, மதமாற்றம், மதம், மதம் மாற்றம், மரக்காயர், மரைக்காயர், மாப்பிள்ள, மாப்பிள்ளை, முஸ்லிம், முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம் சட்டம், முஸ்லீம் சாதி, முஸ்லீம் ஜாதி, முஸ்லீம் தன்மை, மோப்ளா, லப்பை, லெப்பை, வக்ப், வழக்கு, வாஹாபி, ஷரியத், ஷரீயத், ஷியா-சுன்னி, ஷிர்க், ஷேக்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: