இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர்நீதி மன்றம் உத்தரவு (2)
இஸ்லாம் மதம் மாறிய இந்துவை பிசி முஸ்லிம் ஆக கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு (2)

மதம் மாறியவர் வெறும் முஸ்லிமா, லெப்பை முஸ்லிமா?: நீதிமன்றமும் மற்றொரு கோணத்தில் இந்தப் பிரச்னையை அணுகியது. தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமியர் அல்லது முஸ்லிம் சமூகமும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவிக்கப்படவில்லை[1]. முஸ்லீம் சமூகத்தில் உள்ள 7 குழுக்கள் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக பட்டியலிடப்பட்டுள்ளன, அவர்களில் லெப்பைகளும் அடங்கும். மனுதாரரின் மதமாற்றம் குறித்து காஜி வழங்கிய சான்றிதழில், அவர் முஸ்லிம்களின் லெப்பை குழுவாக மாற்றப்பட்டதாகக் குறிப்பிடப்படவில்லை[2]. மனுதாரர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் என்று தான் கூறுகிறது. அதனால், மதம் மாறிய தன்னை பிசி முஸ்லிமாக கருத வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவு சரியானதுதான். அதில் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்[3]. இனி தீர்ப்பில் உள்ள கடைசி முக்கியமான பத்திகளை கவனிப்போம்.

G.O.Ms.No.85 BC, MBC மற்றும் சிறுபான்மையினர் நல (BCC) துறை, 29.07.2008 தேதியிட்ட அறிக்கை: 12. பிரச்சினையை இன்னொரு கோணத்தில் அணுகலாம். தமிழகத்தில் முஸ்லீம்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
G.O.Ms.No.85 BC, MBC மற்றும் சிறுபான்மையினர் நல (BCC) துறை, 29.07.2008 தேதியிட்ட அறிக்கையின் படி, பின்வருவனவற்றின் பின்தங்கிய வகுப்பினரின் (முஸ்லிம்கள்) பட்டியலை மட்டும் பட்டியல்படுத்துகிறது:
“1. Ansar – அன்சார்,
2. Dekkani Muslims – தெக்கானி முஸ்லிம்கள் [தக்காண முஸ்லிம்கள்],
3. Dudekula – துதேகுல,
4. Labbais including Rowthar and Marakayar (whether their spoken language is Tamil or Urdu)- ரவுத்தர் உட்பட லப்பைகள் மற்றும் மரக்காயர் (அவர்கள் பேசும் மொழி தமிழ் அல்லது உருது),
5. Mappilla – மாப்பிள்ள [குறிப்பாக கேரளாவைச் சேர்ந்தவர்கள்],
6. Sheikh – ஷேக்,
7. Syed – சையத்.”
இவர்களை முஸ்லிம்கள் பிரிவுகள், சமூக அடுக்குகள், கட்டமைப்புகள் அல்லது ஜாதிகள் என்று எப்படி கொள்வார்கள் என்று தெரியவில்லை. ஜாதியில்லை என்றால், இந்த ஏழு குழுக்களும் மாறி, அல்லது மாற்றம் பெற முடியுமா என்றும் தெரியவில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்தின் ஜி.மைக்கேல் தீர்ப்பு [Kailash Sonkar v. Maya Devi (1984) 2 SCC 91 and G.Michael v. S.Venkateswaran [1952 (1) MLJ 239]: எப்பொழுது ஒரு இந்து இஸ்லாத்திற்கு மாறும்போது, அவன் ஒரு முசல்மான் ஆகிறான், அவனுடைய இடம்முஸ்லீம் சமூகம் அவருக்கு முன் எந்த சாதியை சார்ந்தது என்பதை வைத்து தீர்மானிக்கப்படவில்லை, படுவதில்லை. காஜியே அதமாற்றம் அடைந்தவர். மாற்றியவர் ப்படி இருக்க வேண்டும் என்று அறிவிக்காதபோது, மதச்சார்பற்ற அரசாங்கத்தின் வருவாய் அதிகாரி எப்படி, அவரை “லெப்பை” என்று அடையாளம் கண்டு, தீர்மானித்து, இஸ்ல்லாம் என்ற கூண்டுக்குள் அடைக்கிறார் என்று தெரியவில்லை. இது எனக்கும் புரியவில்லை.

எஸ்.ருஹய்யா பேகம் வழக்கு [S.Ruhaiyah Begum vs The Government Of Tamil Nadu (WPNo.2972 of 2013 dated 19.02.2013)]: .எஸ்.ருஹய்யா பேகத்தைப் போல ஒரு இந்து “மற்ற வகையை” சேர்ந்தவர்கள் என்ற பக்குப்பிலிருந்து, இஸ்லாமிற்கு மாற்றப்பட்டு தம்முடைய நிலையை சாமர்த்தியமாக நிர்வகிக்கிறார்கள் அவர் அல்லது அவள் மேற்கூறிய அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவரைச் சேர்ந்தவர் என்பது போன்ற சான்றிதழைப் பெறவும் இத்தகைய புத்திசாலித்தனத்தால் செய்கிறார் என்றால், சமூக நீதியின் நோக்கமே அதனால் தோற்கடிக்கப்படும் உத்திகள். நன்கு கற்றறிந்த மூத்த வழக்குரைஞர், மாற்றுத் திறனாளியாக இருந்தால் மட்டுமே மதமாற்றத்திற்கு முன்பே இடஒதுக்கீட்டின் பலனை அனுபவித்து வருகிறார். பின்னர் தனியாக அவர் பிசி (முஸ்லிம்) என்று கருதலாம். எஸ்.ருஹய்யாவில் நடைபெற்றது என்று வாதித்தால், அந்த முயற்சியை அரசு மட்டுமே மேற்கொள்ள வேண்டும், தீர்மானிக்க வேண்டும்.
உச்சநீதிமன்றத்தின் முன்பு நிலையில் உள்ள வழக்கு: “13. எஸ்.யாஸ்மின் வழக்கில் கவனிக்கப்பட்டபடி, மதமாற்றத்திற்குப் பிறகும் பிறந்த சமூகம் [ஜாதி போன்றவற்றை] ஒரு நபர் தனது சுமந்து செல்ல முடியாது. மதமாற்றத்திற்குப் பிறகும் அப்படிப்பட்ட நிலை இருக்க வேண்டுமா, இடஒதுக்கீட்டின் பலன் கொடுக்கப்பட வேண்டுமா என எழுப்பிய கேள்வி, மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் உன்பு தீர்ப்பு நிலுவையில் உள்ளது. மாண்புமிகு சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை கைப்பற்றியுள்ளபோது, இந்த நீதிமன்றத்தை எந்த கருத்தையும் சொல்ல முடியாது. இந்த காரணத்திற்காக, மனுதாரரின் கோரிக்கை. நான் வற்புறுத்தினாலும் ஏற்ல முடியாது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுட்டிக்காட்டிய முன்மாதிரிகளும் அவ்வாறே, வரும் திர்ப்புக்குக் கட்டுப்பட்டது. ஆகவே, இரண்டாவது பிரதிவாதி ஆணைக்குழுவின் நிலைப்பாடு சரியானது, அதில்எந்த குறுக்கீடும் எய்ய முடியாது, அது தேவையற்றதும் ஆகும்”.
“இடவொதிக்கீட்டில் இடவொதிக்கீடு / உள்–இடவொதிக்கீடு” முதலிய அரசியல்வாதிகளின் சலுகைகள்: மதம் மாறிவர்களுக்கு இடவொதிக்கீடு கொடுக்க அரசியல்வாதிகள் பலமுறைகளை கையாண்டு வருகிறார்கள். அவை தான், சட்டங்கள், தீர்ப்புகள், நீதிகள், வரையறைகள் என்று எல்லாவற்றையும் மீறி செயல்பட முயற்சித்து பிரச்சினைகளை உண்டாக்குகின்றனர். “இடவொதிக்கீட்டில் இடவொதிக்கீடு / உள்-இடவொதிக்கீடு” என்ற போர்வைகளில் மாநில அரசுகள் முஸ்லிம்களைக் குறிப்பாக தாஜா செய்து, “ஓட்டு வங்கி,” மற்றும் எல்லைகள் கடந்த பொருளாதார ஆதாயங்களைப் பெற “ரிசர்வேஷன்” சலுகைகளைக் கொடுத்து வருகிறார்கள். உண்மையில் அம்மதங்கள், அவர்கள் மதங்கள் அத்தகைய பாகுபாடுகள் கொண்டிருக்கவில்லை, 100% சமத்துவம், சகோதரத்துவம், சமவுரிமைகள் என்றெல்லாம் கொண்டிருக்கின்றன என்றால், மண்டல் கமிஷன் தீர்ப்பு, சச்சார் கமிஷன், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் முதலியவற்றின் பரிந்துரைகள் எல்லாம் பொய், தவறு, தங்களது பைபிள் / குரான் –க்ளுக்கு எதிரானவை, ஏற்றுக்கொள்ளமுடியாது என்று மறுத்திருக்க வேண்டும். ஆர்பாட்டம்-போராட்டம் செய்து, மாற்றியிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. ஜாதிகள் உண்டு என்று ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி வருகிறார்கள், புத்தகங்கள் எழுதி வெளியிட்டு வருகிறர்கள்.

முரண்பாட்டுடன் இறையியல் சித்தாந்தம் இருக்க முடியாது: கிருத்துவர்கள் லாப-நஷ்ட கணக்குப் போட்டு வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால், முஸ்லிம்கள் தீர்ப்பு-ஆதரவு, ஆசை-பேராசை போன்றவற்றால் தவிக்கிறார்கள். கிருத்துவர்களைப் போலவே, நீதிமன்றங்களில் சோதனை செய்து பார்க்கிறார்கள். ஆனால், இறையியல் விவகாரங்கள் வெளிவரும் போது, மறைக்கப் பார்க்கிறார்கள். வழக்கம் போல, இந்து மதம், சனாதனம் என்றெல்லாம் பேசி, திசைத் திருப்பப் பார்க்கிறார்கள். முஸ்லிம்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை, பிற மதங்களைச் சேர்ந்த முஸ்லீம்கள் ‘மற்றவர்கள்’ என்ற பிரிவைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுவதால், அவர்கள் இடஒதுக்கீட்டை இழக்கின்றனர்[4]. கிறிஸ்தவ மதத்திற்கு மாறுபவர்கள் ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக’ (மதமாற்றத்திற்கு முன் அவர்கள் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்) கருதப்பட்டாலும், மதம் மாறிய முஸ்லீம்களின் விஷயத்தில், ஒரு நபர் முதலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவை ‘மற்றவை’ என மட்டுமே வகைப்படுத்தப்படுகின்றன, போன்ற கருத்துகள் ஏற்கெனவே வைக்கப் பட்டுள்ளன[5].
சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினர்: இந்திய அரசியலமைப்பில், OBC கள் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினராக (SEBC) விவரிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்திய அரசாங்கம் அவர்களின் சமூக மற்றும் கல்வி வளர்ச்சியை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது – எடுத்துக்காட்டாக, OBC கள் மேல் கல்வி மற்றும் பொதுத்துறை வேலைவாய்ப்பில் 27% இடஒதுக்கீடு அதற்கு கொடுக்கப் படுகிறது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பது கல்வி அல்லது சமூகத்தில் பின்தங்கிய சாதிகளை வகைப்படுத்த இந்திய அரசால் பயன்படுத்தப்படும் ஒரு கூட்டுச் சொல்லாகும். பொது சாதிகள், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (எஸ்சி மற்றும் எஸ்டி) ஆகியவற்றுடன் இந்தியாவின் மக்கள்தொகையின் பல அதிகாரப்பூர்வ வகைப்பாடுகளில் இதுவும் ஒன்றாகும். 1980 ஆம் ஆண்டின் மண்டல் கமிஷன் அறிக்கையின்படி OBC கள் நாட்டின் மக்கள்தொகையில் 52% என்று கண்டறியப்பட்டது, மேலும் 2006 ஆம் ஆண்டில் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு நடைபெற்ற போது 41% ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியாவில் OBC களின் சரியான எண்ணிக்கையில் கணிசமான விவாதம் உள்ளது; இது பொதுவாக கணிசமானதாக மதிப்பிடப்படுகிறது, ஆனால் மண்டல் கமிஷன் அல்லது தேசிய மாதிரி கணக்கெடுப்பு மேற்கோள் காட்டிய புள்ளிவிவரங்களை விட இது அதிகம் என்று பலர் நம்புகிறார்கள்.
பொருளாதார ரீயில் பின்தங்கிய வகுப்பினர்: ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடிமக்கள் மற்றும் பட்டியல் சாதி (SC), பழங்குடியினர் (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) போன்ற பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்ல இந்தியாவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBCs). இப்பொழுது, இந்தியாவில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் (EWS) என்பது குடும்ப ஆண்டு வருமானம் ₹8 லட்சத்துக்கும் (US$10,000) குறைவாக உள்ளவர்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள SC/ST/OBC போன்ற எந்த வகையிலும் சேராதவர்கள் அல்லது தமிழில் MBC அல்லாதவர்களின் துணைப்பிரிவாகும். இப்பொழுது, இப்படியெல்லாம் பிரிக்கப் படும் நிலையில், மதம் போன்ற காரணிகளும் நுழையுமா, நுழைக்கப் படுமா, அல்லது செக்யூலரிஸ கொள்கை பின்பற்ரப் படுமா என்று கவனித்துப் பார்க்க வேண்டும்.
© வேதபிரகாஷ்
02-12-2022
[1] Live Law, One Can’t Carry His Caste After Conversion’: Madras High Court Rejects Backward Quota Claim Of Man Who Converted To Islam From Hinduism, Upasana Sajeev, ‘3 Dec 2022 9:31 AM.
[2] https://www.livelaw.in/news-updates/madras-high-court-a-person-cannot-carry-his-community-of-birth-even-after-conversion-rejects-backward-class-reservation-of-man-215673
[3] Case Title: U Akbar Ali v The State of Tamil Nadu and another Citation: 2022 LiveLaw (Mad) 492 Case No: WP (MD)No.1019 of 2022.
[4] The Hindu,‘Converted Muslims losing out on reservation in TNPSC jobs’- The same rule does not apply to converted Christians, says a former judge, T.K. ROHIT, – CHENNAI, March 27, 2022 10:50 pm | Updated March 28, 2022 07:48 am IST
[5] Muslims who have converted from other religions are losing out on the reservation for the Backward Class Muslims in Tamil Nadu Public Service Commission (TNPSC) jobs as they are treated as belonging to the category of ‘Others’. While those converting to Christianity are treated as belonging to the ‘Backward Classes’ (even if they belonged to the Scheduled Caste before conversion), in the case of converted Muslims, even if a person originally belonged to the Backward Class or Most Backward Class, they are only classified as ‘Others’.
Explore posts in the same categories: அடிமை, அடிமைத்தனம், அடையாளம், அத்தாட்சி, அன்சாரி, அன்சார், அலி அக்பர், ஆணை, இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய சாதி, இஸ்லாமிய ஜாதி, எஸ்.ஸி, எஸ்சி, சாதி, ஜாதி, மதமாற்றம், மதம், மதம் மாற்றம், மரைக்காயர், மீனாட்சிபுரம், முஸ்லிம், முஸ்லிம் அடிப்படைவாதம், முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம் சட்டம், முஸ்லீம் சாதி, முஸ்லீம் ஜாதி, முஸ்லீம் தன்மை, முஸ்லீம்கள், லப்பை, லெப்பை, வழக்குகுறிச்சொற்கள்: அன்சாரி, சாதி, சாதியம், ஜாதி, ஜாதியம், முஸ்லிம், முஸ்லிம் சாதி, முஸ்லிம் ஜாதி, லப்பை, லெப்பை, ஷேக்
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்