ஜமேஷாமுபின் – ஜிஹாதியானது, ஐஎஸ்பாணியில் தற்கொலைவெடிகுண்டாகமாறியது, கொலையுண்டது– தெரிய வரும் பின்னணி (3)
சமயஇலக்கியங்கள்அனைத்தும்தமிழில்உள்ளன: விசாரணையின் போது மீட்கப்பட்ட ஆதாரங்களைப் பற்றி அறிந்த ஒரு உயர்மட்ட அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், கோவை, உக்கடத்தில் உள்ள ஜமேஷா முபீனின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் வாசகங்கள் உள்ளிட்ட குறிப்பேடுகளில் ஒரு பகுதி டைரிகள் எனக் கூறினர்[1]. “ஜமேஷாமுபீனின்நாட்குறிப்புபதிவுகள்பெரும்பாலும்மற்றமதங்கள், குறிப்பாகஇந்துமதம்மற்றும்கிறித்துவம்பற்றியஅவரதுபார்வையைவெளிப்படுத்துகின்றன. அவர்அந்தமதங்களின்கடவுள்களின்பெயர்களைமேற்கோள்காட்டியுள்ளார். மேலும், ஒருவரையொருவர்இணைக்கும்அம்புகளுடன்கையால்எழுதப்பட்டசார்ட்விளக்கப்படத்தில்அவற்றைசித்தரித்துள்ளார். சி.ஏ.ஏஹிஜாப்சர்ச்சை, உணவுமீதானகட்டுப்பாடுகள், மாட்டிறைச்சிகாரணமாகநடந்தகொலைகள்போன்றசம்பவங்கள்இந்தியமுஸ்லிம்கள்எதிர்கொள்ளும்பிரச்சனைகளாககுறிப்பிடப்பட்டுள்ளன. முஸ்லிம்கள்இரண்டாம்தரகுடிமக்களாகமாறிவருகின்றனர். இந்தச்பிரச்னைகளைஎப்படிச்சமாளிப்பதுஎன்றும்அவர்திகைத்தார்,” என்று வட்டாரங்கள் தெரிவித்தன[2]. மேலும் சமய இலக்கியங்கள் அனைத்தும் தமிழில் உள்ளன என்று தெரிவித்தனர்.
அனைத்துதரப்புமக்களுடனும்ஒருநல்லிணக்கத்தோடுவாழ்வதையேநாங்கள்விரும்புகிறோம்: மனிதர்களை காபிர், மோமின் எனப் பிரித்து, ஜிஹாதி [புனித போரில்] புரிந்து காபிர்கள் கொல்லப் பட வேண்டும் என்று எழுதியிருப்பது,இப்படி குண்டுவெடிப்புகள் நடத்திக் கொண்டிருந்தால், மனித இனம் என்னாவது என்று யோசிக்காமல், மதவெறியுடன் இருந்தது, முதலியவற்றை கவனிக்கும் பொழுது, எங்கிருந்து மனித நேயம், மனிதத்துவம், அமைதி எல்லாம் வரும் என்பது ஆராய வேண்டியுள்ளது. இந்நிலையில், கோவையில் கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள் சந்தித்து உரையாடினர்[3]. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்[4]. பிறகு, எப்படி, முஸ்லிம் இளைஞர்கள் அவ்வாறு சேர்ந்து திட்டமிடுவார்கள், என்றெல்லாம் தெரியவில்லை. பெற்றோர், உறவினர், மற்றோர் முதலியோர்களுக்குத் தெரியாமல் தான், ஒவ்வொரு தடவையும் இவ்வாறு நடைபெறுகிறது. அதேபோல சொல்லப் படுகிறது. ஆனால், மறுபடியும் ஏதோ ஒன்று வெடிக்கத்தான் செய்கிறது. தவிர இந்த செய்தி வந்த பிறகு தான், பென்டிரைவ், அதில் எஐஎஸ் வீடியோக்கள் போன்ற செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. தமிழ்.இந்துவில் இன்று தான் (04-11-2022) அச்செய்தியே வருகின்றது
ஜமாத்துகளின்சார்பில்வன்மையாககண்டிக்கிறோம்: கோவை உக்கடம் பகுதியில் சம்பவ நிகழ்விடத்தின் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு ஜமாத் நிர்வாகிகள் இன்று சென்று பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது: “3 ஜமாத்களின் சார்பாக கோட்டை சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை சந்தித்து உரையாடினோம். கடந்த வாரம் இந்த பகுதியில் நடந்த சம்பவம் பல்வேறு சமூகங்களுக்கு இடையே ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இஸ்லாமியர்களான நாங்கள் 7 தலைமுறைகளாக இந்த கோட்டைமேட்டில் வாழ்ந்து வருகிறோம். இந்தப் பகுதியில் நாங்கள் ஒற்றுமையுடன், அண்ணன் தம்பிகளாக கடந்த 200 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். இந்த சூழலில் இங்கு நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை கோட்டைமேட்டில் உள்ள ஜமாத்துகளின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இஸ்லாம் ஒருபோதும் வன்முறையைத் தூண்டும் மார்க்கம் அல்ல. நாங்கள் அமைதியை போதிக்கிறோம். அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம். எந்தவிதமான மத பூசல்களுக்கும், அரசியலுக்கும் நாங்கள் ஆட்பட்டு விடக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.
100-க்கும்மேற்பட்டவீடியோக்கள்: முன்னதாக, கோவை மாநகர தனிப்படை போலீசார் கைதான 6 பேர் வீட்டில் சோதனை நடத்தினர். கிடைத்த பொருட்களில், ஒரு பென் டிரைவ் இருந்தது. சோதனை செய்த போது அதிர்ச்சி அடைந்தனர், ஏனெனில், அந்த பென் டிரைவ்வில் 100-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். அமைப்பின் சித்தாந்தங்கள் அடங்கிய வீடியோக்கள் இருந்துள்ளது. இதில், 6 பேரில் ஒருவரது வீட்டில் பென் டிரைவ் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது[5]. அதனை போலீசார் ஆய்வு செய்த போது அதிர்ச்சி ஏற்பட்டது. அதில், ஐஎஸ் தீவிரவாதத்துக்கு ஆதரவான ஏராளமான வீடியோக்கள் இருந்தன[6]. தீவிரவாதிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது போன்ற வீடியோக்கள் மற்றும் கழுத்தை அறுத்து கொலை செய்வது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோக்கள் இருந்தன[7]. இதுதவிர இலங்கை குண்டு வெடிப்பை நிகழ்த்திய நபரின் பேச்சு அடங்கிய வீடியோவும் இருந்துள்ளது[8]. இதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வளவு தெளிவாக இருந்தாலும், இப்பிரச்சினை ஏதோ மழைகாலத்தில் இதுவும் ஒரு செய்தி என்பது போல கருதுவது போலத் தோன்றுகிறது.
‘கோட்டைஈஸ்வரன்கோவிலில்இருந்தகண்காணிப்புகேமராவில்பதிவானகாட்சிகள்வாயிலாக, கார்குண்டுவெடிப்புவழக்கில்துப்புதுலக்கமுக்கியதகவல்கள்கிடைத்தன‘: ‘கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வாயிலாக, கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க முக்கிய தகவல்கள் கிடைத்தன’ என, போலீசார் தெரிவித்தனர்.கோவையில், அக்., 23ல் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் நடந்த கார் குண்டு வெடிப்பில், பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார். இந்த குண்டு வெடிப்பை விசாரித்த போலீசார் சந்தித்த சிரமங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தன்று அதிகாலை, 4:00 மணிக்கு வந்த கார், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் ஒன்றரை நிமிடம் நிற்பதை கண்காணிப்பு கேமரா காட்சிகளில் காண முடிந்தது. அதன் பிறகே கார் வெடித்துள்ளது. கார் காத்திருந்த ஒன்றரை நிமிடத்தில், ஜமேஷா முபின் தான் கொண்டு வந்திருந்த வெடிபொருட்களை வெடிக்கச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். கார் வெடித்தவுடன், அந்த அதிர்ச்சியில், பூட்டப்பட்டிருந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் கதவு தானாக திறந்தது.
கண்காணிப்புகேமராகாட்சிகளைகேட்டுச்சென்றபோது, பள்ளிவாசல்ஒன்றின்நிர்வாகிகடும்எதிர்ப்புதெரிவித்து, போலீசாரிடம்வாக்குவாதம்செய்தது: கோவிலுக்குள் வசிக்கும் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், போலீசார் ஓடி வந்துள்ளனர்.குண்டு வெடிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியில், கோவில் கண்காணிப்பு கேமராவில் அடுத்த இரண்டரை நிமிடங்களுக்கு காட்சிகள் எதுவும் இல்லை. அதன் பிறகே காட்சி பதிவாகியுள்ளது.’கோவிலில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகள் தான் வழக்கில் துப்பு துலக்க பேருதவியாக இருந்தன’ என்கின்றனர் போலீசார்.’சம்பவத்தை சற்று தொலைவில் இருந்து பார்த்த போலீஸ் அதிகாரி, கோவில் அருகே இருக்கும் டிரான்ஸ்பார்மர் வெடித்து விட்டதாக கருதி, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தபடி ஓடி வந்துள்ளார். ‘அருகே வந்த பின் தான், கார் வெடித்தது அவருக்கும் தெரியவந்தது’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த கோவிலுக்கும், ஜமேஷா முபின் வசித்த வீட்டுக்கும் வெகு துாரம் இல்லை. அதிகபட்சம், 300 மீட்டர் தான் இருக்கும். ஆனால், இறந்தவர் யார் என்றும், கார் யாருடையது என்றும், அப்பகுதி பொதுமக்கள் யாரும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை.எந்த ஒரு தகவலும் தெரியாமல், கோட்டைமேடில் போலீசார் வீதி வீதியாக அலைந்தும் விபரம் கிடைக்காமல் தடுமாறினர். கார் வந்த வழித்தடம் கண்டறிவதற்காக, கண்காணிப்பு கேமரா காட்சிகளை கேட்டுச் சென்றபோது, பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகி கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததும் நடந்துள்ளது[9]. தற்போது வழக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் இது பற்றி விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்[10].
வேதபிரகாஷ்
05-11-2022
[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோவைகார்சிலிண்டர்வெடிப்பில்பலியானஜமேஷாமுபீன்; இலக்கைநோக்கிபயணித்தசுயமானதீவிரவாதி! , Written by WebDesk, Updated: October 30, 2022 3:34:14 pm
[5] தினகரன், கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டம்? பென்டிரைவில் சிக்கிய வீடியோ ஆதாரம்; பரபரப்பு தகவல்கள், 2022-11-05@ 00:31:23
23-10-2022 அன்றுஐஎஸ்பாணியில்தற்கொலைகுண்டுவெடிப்பில்ஈடுபட்டது: முபின் சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன்பு வீட்டிற்கு சென்று உடல் முழுவதும் முடிகளை மழித்து அகற்றி சேவ் செய்து விட்டு, தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி விட்டு வேறு சட்டை அணிந்து கொண்டு காரில் வெடிபொருட்களுடன் சதி திட்டத்தை நிறைவேற்ற புறப்பட்டதும் தெரியவந்தது[1] என்று தமிழக ஊடகங்கள் விவரிக்க ஆரமித்து விட்டன. பொதுவாக தற்கொலைப்படை தாக்குதல் நடத்துபவர்கள் தான் தங்கள் திட்டத்தை அரங்கேற்றுவதற்கு முன்பு உடல் முழுவதும் உள்ள முடிகளை முழுமையாக மழித்து சேவ் செய்வர்[2]. இந்த காட்சி கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்திலும் வைக்கப் பட்டிருக்கும்[3], என்ற விளக்கத்தையும் சேர்க்கிறது இன்னொரு ஊடகம். தற்போது அதே நடைமுறையை ஜமேஷா முபின் பின்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது[4]. இவையெல்லாம், பாலஸ்தீனம், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் உள்ள ஐசிஸ், அல்-குவைதா, தாலிபான் போன்ற தற்கொலை மனித குண்டாக மாறும் ஜிஹாதிகள், கையாலும் முறைகள் ஆகும். ஷஹீத் / தியாகியாக மாறுவதற்கான செயல்முறைகள் என்று தீவிரவாதிகள் / ஜிஹாதிகள் நம்புகின்றனர்[5]. இந்த விவரங்களும் ஒரு வாரம் கழித்து தான் செய்திகளாக வெளிவருகின்றன.
ஐசிஸ், ஜிஹாத்முதலியவாசகங்கள்கண்டுபிடிப்பு: ஜமேஷா முபின் வீட்டில் சோதனை நடத்தியபோது அவரது வீட்டில் இருந்து ‘சிலேட்’ ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்[6]. அந்த சிலேட் தொடர்பான தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளன[7], தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெலியிட ஆரம்பித்தன. அந்த சிலேட்டில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன[8]. அதில் அரபு மொழியில் சில வாசகங்கள் இருந்தன[9]. மேலும் தமிழ்மொழியில் எழுதப்பட்டிருந்த வாசகத்தில், ‘அல்லாவின் இல்லத்தின் மீது கைவைத்தால் வேரறுப்போம்’ என்று கூறி இருந்தார். மேலும் மனித இனம் முஸ்லீம்கள் மற்றும் காபிர்கள் என பிரிக்கப்பட்டுள்ளது எனவும் எழுதப்பட்டுள்ளது. இது தீவிரமயமாக்களின் சாத்தியத்தை சுட்டிக்காட்டுகிறது என காவல்துறை தெரிவித்துள்ளது.மேலும் முபின் வெள்ளைத்தாளில் எழுதிய வாசகங்களையும் போலீசார் கைப்பற்றினார்கள். அதில் ஒரு தாளில், ‘ஜிகாத்தின் கடமைக்கான அழைப்பு’ என்று எழுதி இருந்தார். மேலும் ‘புனிதப் போரை நடத்துவது இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் கடமை’ என்றும் எழுதி இருந்தார். இந்த வாசகங்கள் ஜமேஷா முபின் தனது கைப்பட எழுதியுள்ளதாக தெரிகிறது. எனவே முபின் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்பது உறுதியாகி உள்ளது, என பிறகு தமிழக ஊடகங்கள் செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டன.
தன்னிச்சையாகநடத்தப்பட்டதீவிரவாதசெயலா, கூட்டுமுயற்சியாபோன்றவாத–விவாதங்கள் – செய்திகள்: பிற மதங்களைச் சேர்ந்த கடவுள்களின் பெயர்கள், குடியுரிமை திருத்தம் சட்டம், கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சை, முஸ்லீம்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவது பற்றிய குறிப்புகள் கொண்ட விளக்கப்படம் – ஆகியவை கடந்த வாரம் கோவை கார் சிலிண்ட வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபினின் வீட்டில் இருந்து தமிழக காவல்துறையினரால் மீட்கப்பட்ட குறைந்தது 4 டைரிகளில் தமிழில் கையால் எழுதப்பட்ட பதிவுகளில் ஒன்றாக உள்ளது. இவையெல்லாம், அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம், முதலியவற்றை மனோதத்துவ ரீதியில் ஊக்குவிப்பதற்கு, அதிகமாக்குவதற்கு என்பதை அறிந்து கொள்ளலாம். இவை தானாக, தன்னிச்சையாக வந்து விடாது. இத்தனை வெடிமருந்து பொருட்கள் சேகரிக்க வேண்டும் என்பதிலிருந்தே நிச்சயமாக, ஒன்றிற்கும் மேற்பட்ட, பலர் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். இதுவரை ஆறுபேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
ஜிஹாதிபுத்தகங்கள், இலக்கியம்முதலியவைகண்டெடுப்பு: இவை ஹதீஸ் (சொற்கள், செயல்கள் மற்றும் முஹம்மது நபியின் மௌன அங்கீகாரம் பற்றிய பதிவு) மற்றும் ஜிஹாத் (இஸ்லாத்தின் எதிரிகளுக்கு எதிரான போராட்டம்) பற்றிய குறிப்புகளைக் கொண்டிருந்தன[10]. மனிதர்கள் முஸ்லீம்கள் மற்றும் முஸ்லீம்கள் அல்லாதவர்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு குறிப்பு கூறுகிறது[11]. அதுமட்டுமின்றி, ஜிஹாத் கடமை யாருக்கு இருக்கிறது, யாருக்கு அந்த கடமை இல்லை என்ற குறிப்பையும் போலீசார் கண்டுபிடித்தனர்[12]. இந்த பொருட்கள் தவிர, ஐஎஸ்ஐஎஸ் கொடியின் சின்னம் வரையப்பட்ட ஸ்லேட்டை போலீசார் மீட்டனர்[13]. ‘அல்லாஹ்வின் வீட்டின் மீது யார் கை வைத்தாலும் அவர்களை அழித்து விடுவோம்’ என்ற மற்றொரு ஸ்லேட்டும் கிடைத்தது[14]. இவை உருது மற்றும் தமிழில் எழுதப் பட்டிருந்தன[15]. ஆக இவையெல்லாம் அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம், முதலியவற்றின் உச்சமாகும். எனவே இவையெல்லாம் திட்டமிட்ட செயல்கள் என்பதைத் தான் காட்டுகின்றன. தமிழகத்தை பொறுத்த வரையில், கோவையில் இது இரண்டாவது முறையாக இத்தகைய செயல் நிறைவேறியிருப்பதால், உன்னிப்பாக கவனிக்கப் பட்டு அலச வேண்டியுள்ளது.
முபீன்ஒருசுயமானதீவிரவாதி, அவனுக்குஅதிநவீனவெடிகுண்டுதயாரிக்கும்திறனும்இல்லை: “அவருடையஉக்கடம்வீட்டில்கண்டெடுக்கப்பட்டபெரும்பாலானபுத்தகங்கள்மற்றும்குறிப்பேடுகள்வெடிகுண்டுதயாரித்தல், ஜிஹாத்மற்றும்பிறமதங்களைப்பற்றியஅவரதுவெளிப்படையாகத்தெரிகிறது. நாங்கள்விசாரித்தகுற்றஞ்சாட்டப்பட்டஇருவரின்கருத்துப்படி, ஜமேஷாமுபீன்இந்தியமுஸ்லிம்கள்மற்றும்அவர்கள்எவ்வாறுஒடுக்கப்படுகிறார்கள்என்பதுகுறித்துதனதுகருத்தைவெளிப்படுத்துவார்,” என்று பாலகிருஷ்ணன் கூறினார். அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டது புரிகிறது. முபீன் ஒரு சுயமான தீவிரவாதி என்று இதுவரை தங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது, என்று தமிழக ஊடகங்கள் முடிவுக்கு வருகின்றன. அவை பெரும்பாலும் புத்தகங்கள் மற்றும் இணையத்தில் இருந்து பெறப்பட்டது. மேலும், அவருக்கு எந்த அதிநவீன வெடிகுண்டு தயாரிக்கும் திறனும் இல்லை.” என்று கூறினார். ஆனால், காஸ் சிலிண்டர் வெடிக்கும் அளவுக்கு, தொழிற்நுட்பம் தெரிந்து கொண்டது, அது வெடித்து, அவனே பலியானது நிதர்சனமாக உள்ளது.
வேதபிரகாஷ்
05-11-2022
[1] தினத்தந்தி, கோவையில்கார்வெடிப்பு: முபின்ஐ.எஸ். பயங்கரவாதி…! அதிர்ச்சிதரும்பின்னணி, நவம்பர் 4, 3:31 pm
[5] ஈரான், ஈராக் போன்ற நாடுகளில், மூளைசலைவை செய்ய, வீடியோக்கள் காண்பிக்கப் படுகின்றன. அவற்றைப் பார்க்கும் இளைஞர்கள் அதுபோலவே தயாராகின்றனர். உயிதியாகம் செய்து, ஷஹீதாக, சொர்க்கம் செல்வதற்கு தயாராகிறார்கள். அவ்வாறே, அவர்களுக்கு போதனையும் செய்யப் படுகிறது.
[6] மாலைமுரசு, ஜமேஷாமுபீன்வீட்டில்கண்டெடுக்கப்பட்டமுக்கியஆவணங்கள்…ஐஎஸ்ஐஎஸ்அமைப்புடன்தொடர்பா?!!, webteam, Nov 4, 2022 – 17:5
[12] Times Now, Coimbatore car blast: Documents talking about jihad, kafirs and Muslims recovered from Jamesha Mubin’s house, Times Now Bureau, Updated Nov 3, 2022 | 02:01 PM IST
[14] Republic TV, In Coimbatore Blast Case, Docs On ‘Jihad’ & Radicalisation Found At Deceased Mubin’s House, Last Updated: 3rd November, 2022 16:31 IST
கோவைஆர்காஸ்சிலிண்டர்வெடிகுண்டுசோதனை: என்.ஐ.ஏ மற்றும் தமிழக போலீஸார் கோவை குண்டு வெடிப்பு பற்றி ஆய்ந்து வருகின்றனர், விசாரணை நடத்துகின்றனர் மற்றும் வீடுகளில் சோதனைகள் நடக்கின்றன. கைதானவர்களிடமிருந்து வாக்குமூலங்களும் பெறப் படுகின்றன. செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆங்கில ஊடகங்களில் அதிகமாக வரும் பொழுது, தமிழக ஊடகங்கள் அமுக்கி வாசிக்கின்றன. ஜமேஷா முபின் ஏதோ சுயமாக இந்த தீவிரவாதச் செயலில் ஈடுபட்டான் என்றும் தலைப்பிட்டு செய்திகள் வருகின்றன. திராவிடத்துவ வாதிகள், தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போய்விட்டது, என்று பெருமூச்சு விட்டு அமைதியாகின்றனர். ஆனால், அரசியல் செய்பவர்கள், செய்து கொண்டு தான் இருக்கின்றனர். திமுகவினர், “தேசத் துரோகி” என்றெல்லாம் ராணுவ அதிகாரியை டிவி செனலில், கோடிக்கணக்கில் பொது மக்கள் கவனிக்கும் நிலையில் பலமுறை விளிப்பதும் திகைப்பாக இருக்கிறது. அந்த செனல் நிகழ்ச்சி அமைப்பாளர், அத்தகைய பேச்சுகளை “மூட்” கூட செய்யாமல் இருந்ததை கவனிக்க முடிந்தது.
ஜமேஷாமுபின்வீட்டில்கைப்பற்றப்பட்ட 109 பொருட்கள்[1]: ஜமேசா முபினின் வீட்டில் நடந்த சோதனையில் 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ஜிகாத் மற்றும் இஸ்லாமிய சித்தாங்கம் தொடர்பான புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி பலவிதமான செய்திகள் கடந்த ஒரு வாரமாக நாளிதழ்கள் வெளியிட்டு வருகின்றன. ஆனால், எந்த எய்தி தாளோ, ஊடகமோ ஐந்தாறு-ஏழெட்டு பொருட்களைத் தவிர, மற்றதை சொல்ல காணோம். ஆகவே, தமிழ், ஆங்கிலம் மற்றும் இதர ஊடகங்களில் உள்ள எல்லாவற்றையும் தொகுத்து ஒரு லிஸ்ட் தயாரிக்கப் படுகிறது. – அதில்
அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பிளேடு [Surgical blades],
கண்ணாடிகள் [Glass pieces],
9 வாட்ஸ் பேக்டரி [9 watts battery],
9 வாட்ஸ் பேட்டரி கிளிப் [9 watts Battery clips],
வயர் [wires],
சுவிட்ச் [switches],
சிலிண்டர் [cylinders],
ரெகுலெட்டர் [regulators],
டேப் [tapes]
இஸ்லாமிய மதம் கொள்கைகள் தொடர்புடைய புத்தகங்கள் [Islamic literature including Jihadi category],–
உள்ளிட்ட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரமாக இச்செய்திகள் வந்துகொண்டிருந்தாலும், முழு விவரங்கள் வெளியிடாமல் இருப்பதும் திகைப்பாக இருக்கிறது.
ஜமேஷ்முபீனின்குடும்பம், பின்னணி: கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்த முபின் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். படித்து முடித்ததும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அப்போது வீட்டில் அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்த போது, ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணையே நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார். அதன்படி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோவை அல் அமீன் காலனியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணான நஸ்ரத்தை (23) முபின் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கோட்டைமேடு பகுதியில் மனைவியுடன் வசித்து வந்த அவர் அங்குள்ள புத்தக கடையில் வேலைக்கு சேர்ந்தார். இவருக்கு 2 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு முபின் தனது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாரிடமும் பேசுவதில்லை. இந்த நிலையில் திடீரென தான் வேலை பார்த்து வந்த புத்தக கடை வேலையை முபின் விட்டு விட்டார். இதுகுறித்து நஸ்ரத் கணவரிடம் கேட்டதற்கு, தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகவும் தன்னால் வேலை பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்து வீட்டில் இருந்தார்.
கோட்டைஈஸ்வரன்கோவில்அருகேவீடுபார்த்துகுடிபெயர்ந்தது: கோட்டைமேடு பகுதியிலிருந்து, திடீரென்று கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் வீடு பார்த்து இடம் பெயர்ந்தார். வேலைக்கு செல்லாமல் இருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக முபின் வீட்டில் இருக்காமல் வெளியில் சென்றதால் ஏதாவது வேலை பார்க்கிறீர்களா என விசாரித்துள்ளார். அப்போது தான் தேன் மற்றும் நறுமண பொருட்கள் விற்பனை செய்வதாகவும், நாட்டு மருந்து கடையில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். கார் வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு முபின் தனது மனைவியிடம் நாம் வேறு வீட்டிற்கு செல்லலாம் என கூறியுள்ளார். அதன்படி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வீடு பார்த்து மனைவி, குழந்தைகளுடன் குடியேறி உள்ளார். அப்போது முபின் வீட்டிற்குள் 4 பெட்டிகளை எடுத்து வந்தார். இதனால் நஸ்ரத்துக்கு சந்தேகம் ஏற்படவே எதற்காக இந்த 4 பெட்டிகள். அதில் என்ன உள்ளது என கேட்டுள்ளார். அதற்கு முபின், இந்த பெட்டிகளில் பழைய துணிகள் தான் உள்ளது என கூறியுள்ளார். ஆனால் கார் வெடிப்பு சம்பவம் நடந்த பிறகே அந்த பெட்டிகளில் வெடி மருந்து இருந்த தகவல் நஸ்ரத்துக்கு தெரிய வந்துள்ளது.
20-10-2022 அன்றுமனைவிகுழந்தைகளுடன்தாய்வீட்டிற்குசென்றுவிடுதல்: கடந்த மாதம் 20-ந்தேதி, முபினின் மனைவி நஸ்ரத்துக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். முபின் எப்போதும் யாரிடமும் பேசாமல் தனியாகவே இருப்பார். மேலும் எந்நேரமும் செல்போனில் ஏதாவது பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால் சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு நஸ்ரத்தின் வீட்டிற்கு சென்ற முபின் வழக்கத்திற்கு மாறாக அனைவரிடமும் சகஜமாக பேசியுள்ளார். மேலும் குடும்பத்தினர் அனைவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டும் உள்ளார். அன்று மாலையே தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியில் சென்று உள்ளார். அப்போது குழந்தைகளுக்கு பிடித்த ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றையும் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் மனைவியை அவரது தாய் வீட்டில் விட்டு, முபின் மட்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவம் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு தண்ணீரை சேமிப்பதற்கு டிரம் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார்.
22-10-2022 அன்றுமனைவியுடன்பேசியது: அப்போது 3 நாட்களுக்கு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். 22-ந் தேதி இரவு நஸ்ரத் கணவருக்கு எப்போது வீட்டிற்கு வருவாய் என மெசேஜ் அனுப்பினார். அதற்கு நாளை வருவதாக கூறியுள்ளார். அப்போது நஸ்ரத் குழந்தைகள் உன்னை தேடுகின்றனர். வீடியோ காலிலாவது பேசு என மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் அதன்பின்னர் முபின் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தும் முபினை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிகிறது. இதுவே முபின் அவரது மனைவியிடம் கடைசியாக பேசியது. ஆனால் தற்போது வரை முபினுக்கு என்ன நடந்தது என்று அவரது குழந்தைகளுக்கு தெரியவில்லை.
வேதபிரகாஷ்
05-11-2022
[1] ஒவ்வொரு நாளிதழும், செய்தியும் விதவிதமாகக் குறிப்பிடுகின்றன (ஐந்து-ஆறு என்று….), அவற்றைத் தொகுத்து, இங்கு பட்டியலிடப் பட்டுள்ளது.
அண்மைய பின்னூட்டங்கள்