மயிலாடுதுறையில் நடப்பது என்ன? போலீஸாரை துப்பாக்கிக் காட்டி மிரட்டும் முஸிம்களுக்கு யார் தைரியம் கொடுத்தது? (1)

மயிலாடுதுறையில் நடப்பது என்ன? போலீஸாரை துப்பாக்கிக் காட்டி மிரட்டும் முஸிம்களுக்கு யார் தைரியம் கொடுத்தது?  (1)

19-04-2022 கவர்னருக்கு கருப்புக் கொடி, கொம்புகள் எறிந்தது: 19-04-2022 அன்று தமிழக கவர்னர் மயிலாடுதுறை வந்தபோது, போலீஸார் முன்பே, திக-வகையறாக்கள் கூடி, ஆர்பாட்டம் செய்து, கொம்புகளை வீசி எறிந்தனர். அத்தகைய வன்மம் ஏன், எப்படி, எதற்காக வெளிப்படுகிறது என்பதனை ஆராய வேண்டும். தினம்-தினம் சட்டசபையிலேயே கவர்னர் தேவையில்லை என்று முதலமைச்சரே பேசுவது, மசோதாக்கள் போடுவது என்றெல்லாம் செய்து வரும் போது, மற்றவர்களுக்கும் மரியாதை இல்லாமல் போகும். ஆனால், இவையெல்லாம் பெரிய சட்டமீறல், தேசவிரோதம் ஆகும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். கவர்னர் பாதுகாப்பு அதிகாரி, தமிழக போலீஸுக்கு நடவடிக்கை எடுக்கும் படி கடிதம் அனுப்பியுள்ளார். அந்நிகழ்ச்சி அமைதியாக மறக்கப் படுகிறது. அதே மயிலாடுதுறையில் போலீஸாரை எதிர்த்து மிரட்டும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் கைது செய்யப் பட்டுள்ளனர். இத்தகைய நிகழ்ச்சிகள் இரண்டு ஆண்டுகளாகத் தொடர்கின்றன. என்.ஐ.ஏ.வும் நடவடிக்கை எடுத்து வருகிறது. விவரங்கள் வெளியே வந்தாலும், தமிழக ஊடகங்கள் இவற்றை அமுக்கப் பார்க்கிறது. முஸ்லிம்கள் என்பதால், திமுக ஆட்சி செய்திகளில் கூட குறைவாகவே வருவது போல கவனித்துக் கொள்கிறது போலும். இத்தகைய, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தமிழகத்தில் வளர்ப்பது என்ன நன்மை பயக்கும்?

மார்ச் 2022 – தமிழக முஸ்லிம் கர்நாடக நீதிபதிகளை மிரட்டுவது: ஹிஜாப் வழக்கில் கடந்த மார்ச் 15ம் தேதி தீர்ப்பு வழங்கிய கர்நாடகா உயர்நீதிமன்றம், அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே என்பதால், ஹிஜாப் அணிவதற்கான தடை உத்தரவு தொடரும் என உத்தரவிட்டது. மேலும்இது தொடர்பான பல்வேறு மனுக்களை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  இந்நிலையில் ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ் தீட்சித் மற்றும் நீதிபதி ஜே எம் காசி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது.  மூன்று நீதிபதிகளுக்கு கொலைமிரட்டல் விடுத்து,  சமூக வலைதளங்களில் பரவிய காணொளி தொடர்பாக, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மீது விதான் சவுதா காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.  இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ரஹமத்துல்லா என்பரை மதுரையில் இருந்து விசாரணைக்கு கர்நாடகா போலீசார் அழைத்து வந்துள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா தெரிவித்துள்ளார்[1]. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை ஒத்துழைப்பு அளித்துள்ளதாகவும், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர்  அவரை எட்டு நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது என்று அவர் கூறினார்[2]. இதனிடையே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளுக்கும் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

21-02-2022 அன்று போலீஸார் ஐந்து முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தது: முஸ்லிம் இளைஞர்கள் சட்டவிரோதமாக செயல்படுவது திகைப்பாக இருக்கிறது.

  1. மயிலாடுதுறை மாவட்டம், நீடூரைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா, 38.
  2. அதே மாவட்டத்தில் உள்ள, இலந்தனகுடியைச் சேர்ந்தவர் ஜஹபர் அலி, 58.
  3. இவர்களது கூட்டாளிகள், கோவை முகமது ஆஷிக், 29;
  4. காரைக்கால் முகமது இர்பான், 22;
  5. சென்னை அயனாவரம் ரஹ்மத், 29.

இவர்கள், தமிழகத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பிப்., 21 காலை 11:00 மணியளவில், மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே, சாதிக் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள் சென்ற, ‘ஸ்கார்பியோ’ கறுப்பு நிற காரை, போலீசார் மடக்கினர்[3].  அப்போது, போலீசாரிடம் துப்பாக்கியை காட்டி, அவர்கள் மிரட்டினர்[4]. துப்பாக்கி நீட்டி மிரட்டும் அளவுக்கு அவர்களுக்கு எப்படி தைரியம் கிடைக்கிறது, தயாரானார்கள் என்ற கேள்வி எழுகின்றது. முதலமைச்சருக்கு இவையெல்லாம் தெரியாதா, எப்படி அமைதியாக இருக்கிறார் என்று தெரியவில்லை. பின், ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு பின்னணியில் பயங்கரவாத அமைப்பு இருப்பது பற்றி, மத்திய புலனாய்வு அமைப்பான, ஐ.பி., சார்பில், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ரகசிய தகவல் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில், தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அப்படியென்றால், அதன் தீவிரத்தை நன்றாக அறிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு வன்மத்தை வளர்த்து விட்டது மாநில அரசும், சித்தாந்தமும், தினம்-தினம் மத்திய அரசுக்கு எதிராக பேசி வரும் பேச்சுகளும் காரணம் என்று புரிந்து கொள்ளலாம்.

துப்பாக்கிக் காட்டி போலீஸாரை மிரட்ட தைரியம் எப்படி வந்தது?: தமிழகம் காஷ்மீர் ஆகும் என்றெல்லாம் பேசுவது, அயல்நாட்டில் முஸ்லிம்கள் பாதிப்பு என்றால் இங்கு ஆர்பாட்டம் செய்வது, அந்நிய தேசவிரோத இயக்கங்களுக்கு ஆதரவாக பேசுவது-எழுதுவது-பிரச்சாரம் செய்வது என்றெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றை தீவிரவாதம், அடிப்படைவாதம், தேசவிரோதம்  என்றெல்லாம் பார்க்காமல், அதெல்லாம் முஸ்லிம்கள் பிரச்சினை, யாரும் தலையிடக் கூடாது, தலையிட்டால், விமர்சித்தால் மிரட்டப் படுவார்கள், தாக்கப் படுவார்கள் போன்ற மனோபாவத்தை உண்டாக்குவது தான், போலீஸாரை துப்பாக்கிக் காட்டி மிரட்டியது.

முகமது ஆசிக் கைது 27-02-2021: மயிலாடுதுறை அருகே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்பில் இருந்த கோவை இளைஞரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்[5].. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 7 இளைஞர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைமை ஏற்றுக்கொண்டு குழுவாக செயல்பட்டு வந்தனர்[6]. இவர்கள் கோவையை சேர்ந்த இந்து மத தலைவர்களை கொலை செய்வதற்காக சதி திட்டம் தீட்டி வந்தனர்[7]. இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கடந்த 2010ஆம் ஆண்டு 7 பேரையும், என்ஐஏ அதிகாரிகள் கைதுசெய்த நிலையில், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்[8]. இந்த வழக்கு, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கில் முதல் குற்றவாளியான முகமது ஆசிக் என்பவர் பிணையில் வெளியானது[9] முதல் தலைமறைவாக இருந்து வந்தார். வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கலான நிலையில் விசாரணைக்கு ஆஜராகும்படி நீதிமன்றம் ஆசிக்கிற்கு சம்மன் அனுப்பி இருந்தது[10]. எனினும் அவர் விசாரணை ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம் நீடுரில் கோழிக்கடையில் பதுங்கியிருந்த ஆசிக்கை 27-02-2021 அன்று நள்ளிரவு என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து, அவர் விசாரணைக்காக சென்னை அழைத்துச் சென்றனர்.

© வேதபிரகாஷ்

11-05-2022


[1] மாலைமலர், ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்தமிழகத்தை சேர்ந்தவர் கைது, பதிவு: மார்ச் 23, 2022 06:07 IST; மாற்றம்: மார்ச் 24, 2022 01:27 IST.

[2] https://www.maalaimalar.com/news/national/2022/03/23060702/3604832/A-man-from-Tamil-Nadu-who-had-allegedly-issued-death.vpf

[3] தினமலர், .எஸ்., ஆதரவாளர்களுக்கு நிதியுதவி: பின்னணியை விசாரிக்கிறது என்..., Updated : மே 11, 2022  09:01 |  Added : மே 11, 2022  09:00

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=3027224

[5] டாப்.தமிழ்.நியூஸ், மயிலாடுதுறை அருகே .எஸ்..எஸ் வழக்கில் தொடர்புடைய இளைஞர் கைதுஎன்.. அதிகாரிகள் நடவடிக்கை!,  By NEWSDESK Fri, 28 May 2021 2:22:36 PM.

[6]https://www.toptamilnews.com/districts/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/youth-arrested-in-connection-with-isis-case-near/cid4926959.htm

தினமணி, .எஸ். அமைப்புடன் தொடா்புஜாமீனில் வெளிவந்து தலைமறைவானஇளைஞா் மயிலாடுதுறை அருகே கைது, By DIN  |   Published On : 28th May 2021 11:13 PM  |   Last Updated : 28th May 2021 11:13 PM

[7] தினமணி, .எஸ். அமைப்புடன் தொடா்புஜாமீனில் வெளிவந்து தலைமறைவானஇளைஞா் மயிலாடுதுறை அருகே கைது, By DIN  |   Published On : 28th May 2021 11:13 PM  |   Last Updated : 28th May 2021 11:13 PM

[8] https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/2021/may/28/the-youth-who-came-out-on-bail-in-connection-with-the-organization-was-arrested-near-mayiladuthurai-3631508.html

[9] இ.டிவி.பாரத், தலைமறைவு குற்றவாளி கைதுதேசிய புலனாய்வு முகமை அதிரடி, Published on: May 28, 2021, 3:31 PM IST

[10] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/nagapattinam/the-culprit-involved-in-the-isis-case-has-been-arrested/tamil-nadu20210528153155208

Explore posts in the same categories: என்ஐஏ, என்ஐஏ அதிகாரி, துப்பாக்கிக் காட்டி மிரட்டுவது, நரேந்திர மோடி, நாட்டுக் குண்டு, நாட்டுப் பற்று, நீடூர், பலிக்கடா, பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், பாப்புலர் பரென்ட் ஆப் இந்தியா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, பாப்புலர் பிரென்ட், பாப்புலர் பிரென்ட் ஆப் இந்தியா, பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா, போலீசாரை மிரட்டுவது, போலீஸாரை மிரட்டுவது, மதவாதம், மதவிமர்சனம், மதவிரோதி, மனநிலை, மனநோய், மனித நீதி பாசறை, மனித நேய மக்கள் கட்சி, மனித நேயம், மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம், மனிதநேய விற்பன்னர்கள், மிரட்டல், முற்றுகை, முஸ்லிம், முஸ்லிம் அடிப்படைவாதம், முஸ்லிம் கழகம், முஸ்லிம் முன்னேற்ற கழகம், முஸ்லிம்கள் ஆர்பாட்டம், முஸ்லிம்கள் முற்றுகை, முஸ்லீம் இளைஞர்கள், முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் ஓட்டுவங்கி, முஸ்லீம் சட்டம், முஸ்லீம் தன்மை, முஸ்லீம்களிடம் ஊடல், முஸ்லீம்களிடம் கொஞ்சல், முஸ்லீம்களின் அடிப்படைவாதம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், முஸ்லீம்களில் சிறுபான்மையினர், முஸ்லீம்களுக்கு விடிவு காலம், முஸ்லீம்களை தாஜா செய்வது, முஸ்லீம்கள், முஸ்லீம்கள் என்றால் தாஜா செய்வது, முஸ்லீம்தனம், மூளை சலவை, மூளை சலவை செய்வது, மூளைசலவை, ரம்ஜான், ரம்ஜான் அரிசி, லவ் ஜிஹாத், லவ்ஜிஹாத், வன்முறை, வன்முறையில் ஈடுபடுவது, வழக்கு

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: