29 வயது நாகூர் ஹனீபா 16-17 வயது சிறுமியைக் கூட்டிச் சென்று 15-02-2022 முதல் 02-03-2022 வரை கணவன் – மனைவி போன்று வாழ்ந்தது, எலிமருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது, ஆனால், சிறுமி இறந்தது, ஹனீபா தப்பித்தது! (2)

29 வயது நாகூர் ஹனீபா 16-17 வயது சிறுமியைக் கூட்டிச் சென்று 15-02-2022 முதல் 02-03-2022 வரை கணவன் மனைவி போன்று வாழ்ந்தது, எலிமருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது, ஆனால், சிறுமி இறந்தது, ஹனீபா தப்பித்தது! (2)

05-03-2022 – சிறுமியின் உடலை வாங்க மறுப்பு: இந்த நிலையில் சிறுமியின் உடலை பெற்றோர் வாங்க மறுத்து தும்பைப்பட்டிக்கு சென்று விட்டனர்[1]. சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி சிறுமியின் உறவினர்கள், கிராம மக்கள் தும்பைப்பட்டியில் சிறுமியின் வீட்டு முன்பு திரண்டனர்[2].  அதாவது அதுவரை யாரும் கைது செய்யப் படவில்லை போலிருக்கிறது. அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. இது பற்றி அறிந்ததும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்[3]. அரசு அதிகாரிகளும் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்[4]. இந்த நிலையில் அங்கு வந்த பா.ஜ.க. மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திரன், தென்னிந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் நிறுவனர் திருமாறன், இந்து மகா சபா மாநில துணை தலைவர் செல்லத்துரை உள்ளிட்டவர்கள் சிறுமியின் சாவுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அவர்களுடன் மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பொன்னி பேச்சுவார்த்தை நடத்தினார்[5]. தீவிர விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்[6].

பிரச்சினை மக்கள் போராட்டமானதுசாலை மறியல்போலீஸ் தடியடி: சிறுமியின் சாவில் உள்ள மர்மத்தை போலீசார் மறைப்பதாக கூறி கோஷமிட்ட மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர்வாண்டையார், பா.ஜ.க. நிர்வாகிகள் மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திரன், விவசாய அணி தலைவர் பி.வி.தர்மலிங்கம், மேலூர் நகர் தலைவர் எவரெஸ்ட் தென்னரசு, காந்திநகர் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பலரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். போலீசாரின் இந்த செயலை கண்டித்து தும்பைப்பட்டியில் மதுரை- திருச்சி நான்குவழிச்சாலையில் மாலை 5.30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்[7]. இதனால் அந்த பகுதியில் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்[8]. மற்ற அரசியல்வாதிகள் இதில் கலந்து கொள்வது, பொது பிரச்சினை அரசியலாக்கப் படுகிறாதா என்று யோசித்தாலும், உண்மைகளை மறைக்கும் போக்கு நன்றாகவே தெரிகிறது. மயக்கமாக உள்ள சிறுமியை எவ்வாறு திருப்பரங்குன்றம், ஈரோடு என்று கூட்டிச் சென்று பிறகு, மதுரையில் தனது தாயாரிடம் கொண்டு சேர்த்தான் என்று புரியவில்லை. தூக்கிக் கொண்டு வந்தானா, காரில் வைத்து கொண்டு வந்தானா, அப்பொழுது யாரும் ஒன்றும் கேட்கவில்லையா போன்ற கேள்விகளும் எழும்.

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக என்ற நிலை பிம்பம் ஏன் உருவானது போன்றவை: மதுரை மாவட்டம் மேலூர் வட்டாரத்தை சேர்ந்த சிறுமி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும்[9], அதன் காரணமாக உடல் நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பரவிய தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், 06-03-2022 அன்று காலை அச்சிறுமி மரணமடைந்த சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது[10]. மேலும் மருத்துவர்களின் அறிக்கையில் சிறுமி வேறு எந்த விதமான கூட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகவில்லை என்றும் சிறுமியின் உடலில் காயங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்[11]. 20 நாட்களாக இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியுடன் நாகூர் ஹனிபா பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்சோ வழக்காக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது[12].  ஆனால், போலீஸார் இப்பொழுது, அத்தகையை கருத்தை முன் வைக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளது.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் செய்தியாளர்களை சந்தித்து கூறியது: இருப்பினும், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது[13]: “சிறுமி தனது காதலர் நாகூர் ஹனிபாவுடன் காதலர் தினத்தன்று வீட்டைவிட்டு வெளியேறி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமியை ஈரோட்டுக்கு அழைத்துச்சென்று ஒரு வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்ததாகவும், சிறுமியுடன் கட்டாயப் பாலியல் உறவில் ஈடுபடவில்லை என்றும் நாகூர் ஹனிபா விசாரணையில் கூறியதாக, பாஸ்கரன் தெரிவித்தார். “போலீஸ் தேடுவதை அறிந்து நாகூர்ஹனிபாவும் அந்த சிறுமியும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனால், உடல் நிலை பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது வீட்டில் நாகூர்ஹனிபாவின் தாயார் விட்டுசென்றுள்ளார். மதுரை சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வல்லுறவு செய்ததாக தவறான செய்தி பரப்பப்படுகிறது…….சிறுமியிடம் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கூட்டுப் லியல் வல்லுறவு நடக்கவில்லை, உடலில் எந்தவித காயமும் இல்லை என்பதும் கையில் குளுகோஸ் ஏற்றியதற்கான தடயமே உள்ளது எனவும் மருத்துவ அறிக்கையில் தெரிய வந்துள்ளது. …….சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தவறான தகவல்களை பரப்பக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்….இந்த விவகாரத்தில் போக்சா வழக்கு பதிவாகியுள்ளதால் சிறுமியின் புகைப்படத்தையோ, பெயரையோ பயன்படுத்தக்கூடாது ……,” என்றும் அவர் கூறினார்[14].

எலிமருந்து சாப்பிட்ட காதலன்காதலி, காதலன் மட்டும் தப்ப்பித்துக் கொண்ட மர்மம்: இந்த எலிமருந்து சாப்பிட்ட படலமே பல கேள்விகளை எழுபுகிறது. ஊடகங்கள் சொல்வதாவது:

  1. போலீஸ் தேடுவதை அறிந்து நாகூர்ஹனிபாவும் அந்த சிறுமியும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்….
  2. இந்த நிலையில் எனது தாயார் என்னிடம் தொடர்பு கொண்டு, சிறுமியை நான் அழைத்து சென்றதாக ஊருக்குள் பேசிக்கொள்கின்றனர்.
  3. இது பிரச்சினையாகி விடும் என்று கூறினார். இதைவைத்து அந்த சிறுமியை பயமுறுத்துவது போல் பேசினேன்[15].
  4. பின்னர் இருவரும் தற்கொலை செய்துகொள்ளலாம் எனவும் தெரிவித்தேன்.
  5. இதற்காக எலி மருந்து வாங்கி வந்திருந்தேன். அதை சிறுமியை சாப்பிட வைத்தேன்[16].
  6. ஆனால் நான் அதை சாப்பிடவில்லை[17].
  7. சாப்பிடுவது போன்று சாப்பிட்டு துப்பி விட்டேன்…….
  8. சிறுமியுடன் கட்டாயப் பாலியல் உறவில் ஈடுபடவில்லை என்றும் நாகூர் ஹனிபா விசாரணையில் கூறியதாக, பாஸ்கரன் தெரிவித்தார்.

அப்படியென்றால், 16-17 வயதுடைய சிறுமி உடன்பட்டே விருப்பத்துடன் பாலியல் உறவில் ஈடுபட்டான் என்று தொணிப்பது போலிருக்கிறது. பிறகு ஏன் எலிமருந்து கொடுத்து கொல்ல வேண்டும்?  அதையும், அவளே விருப்பப் பட்டு சாப்பிட்டாள் என்பார்களா? பிறகு உண்மையான காதலன், காதலியுடன் இரண்டு வாரங்கள் ஜாலியாக உடலுறவு கொண்டு, கணவன் – மனைவி போன்று வாழ்ந்து, விசம் கொடுத்து அவள் சாக, இவன் தப்பித்துக் கொள்வானா? இல்லை, சாப்பிட்டுவது போல சாப்பிட்டு துப்பி விட்டான் என்றால், அந்த விசம் சாப்பிட்ட நாடகம் ஏன்? இரண்டு வாரம் “எஞ்சாய்” பண்ணுவேன், பிறகு கொன்று விடுவேன் என்பது என்ன? சரி “உலக பெண்கள் தினம்” என்றுள்ளதே, ஏன் எந்த பெண்ணியங்களும் இதைக் கண்டு கொள்ளவில்லை?

©  வேதபிரகாஷ்

07-03-2022


[1] பாலிமர் செய்தி, மாமமான சிறுமி மரணம், இளைஞன் உட்பட 8 பேர் கைது, மே.07, 2022. 07:11:15 AM.

[2] https://www.polimernews.com/amp/news-article.php?id=170722&cid=1

[3] தினமணி, மதுரை அருகே திருமண ஆசை காட்டி கடத்தப்பட்ட சிறுமி உயிரிழப்பு:இளைஞா், குடும்பத்தினா் உள்பட 8 போ் ‘போக்சோவில் கைது, By DIN  |   Published on : 06th March 2022 11:04 PM  |  Last Updated : 06th March 2022 11:04 PM

[4] https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2022/mar/06/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-8-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3803401.html

[5] புதியதலைமுறை, மதுரை சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்புமேலூரில் உறவினர்கள் சாலைமறியல்,    Veeramani Published :06,Mar 2022 07:37 PM.

[6] https://www.puthiyathalaimurai.com/newsview/131526/Madurai-Melur-girl-dies-after-treatment–8-persons-arrested-in-POCSO

[7] நக்கீரன், மதுரை மேலூர் சிறுமி உயிரிழப்பு சம்பவம்போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் மீது போலீசார் தடியடி!, செய்திப்பிரிவு, Published on 07/03/2022 (09:58) | Edited on 07/03/2022 (10:11).

[8] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/madurai-melur-girl-incident-police-beat-relatives-involved-struggle/

[9] விகடன், மதுரை: மாயமான சிறுமி மரணம்; போக்சோவில் இளைஞர் உட்பட 8 பேர் கைது! –கொதித்த ஊர் மக்கள்.. நடந்தது என்ன?, செ.சல்மான் பாரிஸ், Published: 06-03-2022 at 7 PM; Updated: 06-03-2022  at 7 PM

[10] https://www.vikatan.com/social-affairs/crime/girl-went-on-missing-died-in-hospital-at-madurai-police-arrested-8-members

[11] சமயம், மதுரை சிறுமி பலாத்காரம், நடந்தது என்ன..? படிக்க படிக்க அதிர்ச்சி..!, Divakar M | Samayam TamilUpdated: 6 Mar 2022, 2:16 pm.

[12] https://tamil.samayam.com/latest-news/crime/missing-minor-girl-rescued-in-critical-condition-at-madurai/articleshow/90029814.cms

[13] பிபிசி தமிழ், மேலூர் சிறுமி மரணம், 8 பேர் கைது: பேருந்துகள் மீது கல் வீச்சுநடந்தது என்ன? போலீஸ் விளக்கம், பிரபுராவ் ஆனந்தன், பிபிசி தமிழுக்காக, 7 மார்ச் 2022.

[14] https://www.bbc.com/tamil/india-60644716

[15] அதாவது நடித்தான் என்றாகிறது, பிறகு அவன் ஏன் அந்த சிறுமியை பல இடங்களுக்குக் கூட்டிச் சென்றான், அங்கெல்லாம் இருந்தவர்கள் ஒப்புக் கொண்டு இருவரையும் வைத்துக் கொண்டார்கள், அறிவுரைக் கூறி அனுப்பி வைக்கவில்லை அல்லது சந்தேகம் கொண்டு போலீஸாரிடம் புகார் அளிக்கவில்லை போன்ற கேள்விகளும் எழுகின்றன.

[16] தினகரன், போலீஸ் தேடியதால் எலிபேஸ்ட் சாப்பிட்டார் காதலனால் கடத்தப்பட்ட சிறுமி திடீர் உயிரிழப்பு: காதலன், தாய் உள்பட 8 பேர் கைது, 2022-03-07@ 01:13:12.

[17] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=747689

Explore posts in the same categories: எலி கொல்லி, எலி மருந்து, எலி விசம், நாகூர், நாகூர் அனீபா, நாகூர் ஹனீபா, பாலியல், பாலியல் குற்றம், பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, ஸ்டாலின்

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: