தமிழக அரசு வேலை வாங்கித் தருவதாக, பயிற்சி, அரசு ஆணை சகிதம் கொடுத்து, நூதன மோசடி! தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் உட்பட மூன்று பேர் கைது!

தமிழக அரசு வேலை வாங்கித் தருவதாக, பயிற்சி, அரசு ஆணை சகிதம் கொடுத்து, நூதன மோசடி! தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் உட்பட மூன்று பேர் கைது!

1970 களிலிருந்து நடந்து வரும் வியாபாரம்: தமிழகத்தில், தமிழக அரசியல்வாதிகளின் தொடர்பு, நேரிடையாக அல்லது மறைமுகமாக வைத்திருந்து, அரசுத்துறைகளில் வேலை வாங்கித் தருகிறேன் என்று லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு, வேலை வாங்கிக் கொடுப்பதும், பல நேரங்களில் வேலை வாங்கிக் கொடுப்பதாக ஏமாற்றுவதும் வாடிக்கையான விவகாரமாக 1970களிலிருந்து இருந்து வருகிறது. இதில் திராவிடக் கட்சிகள் எதுவும் சளைத்தவை அல்ல. குறிப்பாக, பாஸ்போர்ட், விசா, ஃபோரக்ஸ், டிராவல்ஸ் என்ற போர்வையில் ஆரம்பித்து, பணி நிரந்தரம் செய்வது, பணி உயர்வு, இடமாற்றம் போன்றவற்றில் ஈடுபட்டு, தொடர்ந்து கோடிகளில் சம்பாதிப்பது, ஒரு வேலையாகவே இருந்து வந்துள்ளது. அதற்காக அலுவலகம் எல்லாம் வைத்து, நடத்தி, ஏமாற்றுவது என்பது கைவந்த கலை. இதில் மாட்டிக் கொள்பவகள் சிலர், ஆனால், மாட்டிக் கொள்ளாமல், பரம்பரையாக செய்து வரும் நபர்களும், கம்பனிகளும் இருக்கின்றன. இதற்கான ஏஜென்டுகள், எடுபிடிகள் அங்கங்கு இருந்து, ஆள் பிடித்துக் கொண்டு வருவதும் சகஜமான விசயமே.


போலியான அரசு ஆணை நகல்களை கொடுத்து அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: சென்னையில் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி பொதுமக்களிடம் பணம் வாங்கி மோசடி செய்யும் கும்பலின் கைவரிசையை போலீசாரால் ஒழித்துக்கட்ட முடியவில்லை. அரசு வேலையில் மோகம் கொண்டு அதற்காக குறுக்கு வழியில் பணம் கொடுப்பவர்களை இந்த கும்பல் தங்கள் வலையில் விழவைத்து விடுகிறது. இதுபோன்ற ஒரு மோசடி கும்பலின் ஆசை வலையில் சிக்கி 85 பேர் பணத்தை வாரி கொட்டி உள்ளனர்[1]. அந்த மோசடி கும்பல் வேலை கிடைத்து விட்டது என்பது போன்ற தோற்றத்தை காட்ட, போலியான அரசு ஆணை நகல்களை கொடுத்து ரூ.4½ கோடி அளவுக்கு பணத்தை சுருட்டியதாக முதலில் புகார் கூறப்பட்டது[2]. ஏமாந்தவர்கள் பட்டியலில் உள்ள ஆனந்தி என்ற பெண் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து முறையிட்டார்[3]. கமிஷனர் சங்கர் ஜிவால் இந்த மோசடி கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்ய உத்தரவிட்டார்[4]. அதன்படி மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி, துணை கமிஷனர் நாகஜோதி ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கலாராணி வழக்குப்பதிவு செய்யப்பட்டது[5]. கடந்த மாதம் ஜூன் 30-ம் தேதி 3 பேரையும் கைது செய்தனர்[6].

அரசியல் தொடர்புமுஸ்லீம் லீக் கட்சித் தலைவர் ஷேக் தாவூத்தின் மகள், மகளிர் அணி தலைவர்: சென்னை, திருவான்மியூரை சேர்ந்தவர் ரேஷ்மா தாவூத்,35 (Reshma Dawood, State secretary of the Tamil Manila Muslim League). இவர், தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் ஷேக் தாவூத்தின் மகள். இவரும், வளசரவாக்கம், காமராஜர் சாலையை சேர்ந்த நந்தினி, 37; இவரது கணவர், அருண் சாய்ஜி, 36 ஆகியோர் (of Epic Lakshmi Condominium, Valasaravakkam.), அரசு வேலை வாங்கித் தருவதாக, 150க்கும் மேற்பட்டோரிடம், 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர்[7]. முன்னதாக நடத்தப்பட்ட விசாரணையில் ரேஷ்மா தாவூத் மீது ஏற்கெனவே 2016, 2017, 2019 ஆம் ஆண்டுகளில் மத்திய குற்றப்பிரிவு, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வேலைவாய்ப்பு மோசடி, குற்றம் கருதி மிரட்டல் ஆகிய வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது[8]. ஆக, இந்த நதினி-சாய்ஜி என்பது, ஒரு முகத் தோற்றமே அன்றி, பின்னணியில், அரசியல் கட்சிக் காரர்கள் வேலை செய்வது / செய்தது புலனகிறது. ஏனெனில், அரசியல் ஆதரவு இல்லாமல், இத்தகைய வேலைகளை செய்ய முடியாது.

போலி அரசு பணி நியமன ஆணைகள், பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல், முத்திரைகள் கைப்பற்ரப் பட்டன: இவர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் [The Central Crime Department (CCB)] கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி, பலரிடம் 5 கோடி ரூபாய் மோசடி செய்த இந்த நபர்கள், அந்த பணத்தில், சொகுசு கார் மற்றும் நிலம் வாங்கி குவித்தது தெரிய வந்துள்ளது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். மூவரையும் காவலில் எடுத்து விசாரித்த போலீசார், இவர்களின் வீடு மற்றும் அலுவலங்களுக்கு அழைத்துச் சென்று சோதனையில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரும், தமிழக அரசின் அச்சு மற்றும் எழுதுபொருள் துறையில் உதவி பொது மேலாளர், தமிழ்நாடு மின் சார வாரியத்தில் உதவி பொறியாளர், மக்கள் தொடர்பு துறையில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி, சத்துணவு அமைப்பாளர் ஆகிய பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்து போலியாக அனைவருக்கும் பயிற்சி அளித்து மோசடி செய்தது தெரியவந்தது[9]. அதாவது, நம்பிக்கை உண்டாக்கும் வகையில் அத்தகைய பயிற்சி வகுப்புகள் நடத்தப் பட்டன என்றாகிறது. அப்போது, போலி பணி நியமன ஆணைகள், பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல், குற்றத்திற்கு பயன்படுத்திய கம்ப்யூட்டர் உள்ளிட்டவைகளை கைப்பற்றினர்[10]. கிடுக்கிப்பிடி விசாரணையில், இவர்கள் மோசடி செய்த ரூபாயில், கார் மற்றும் நிலம் வாங்கி குவித்தது தெரியவந்தது[11]. கார் மற்றும் சொத்து ஆவணங்களையும், போலீசார் 09-07-2021 அன்று பறிமுதல் செய்துள்ளனர்[12].

2016ல் ஏமாற்றியதாக புகார்: தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் வேலூர் மாவட்ட தலைவராக இருப்பவர் தமீம் மரைக்காயர் (36). இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனு: “எங்கள் கட்சியின் தலைமை அலுவலகம் தேனாம்பேட்டையில் உள்ளது. கட்சியின் தலைவராக ஷேக் தாவூத்தும், பொதுச் செயலாளராக ரேஸ்மா தாவூத் (சேக் தாவூத் மகள்), பொருளாளராக ஜலாலூதீன் (ஷேக் தாவூத் மருமகன்) உள்ளனர். கடந்த மார்ச் மாதம் 2016 சென்னை அலுவலகத்தில் வைத்து ஷேக் தாவூத் என்னிடம் அதிமுக கூட்டணியில் நமக்கு 3 சீட்கள் கிடைக்கும். அதில், உனக்கு ஒரு சீட் தருகிறேன். அதற்கு நீ ரூ.10 லட்சம் தர வேண்டும் என்று கூறினார். அதன் அடிப்படையில் கடந்த மார்ச் 22ம் தேதி 2016 ஜலாலூதீன் வங்கி கணக்கிற்கு  ரூ.10 லட்சம் செலுத்தினேன். தற்போது, ஷேக் தாவூத் மட்டும் அதிமுக கூட்டணி சார்பில் கடையநல்லூர் தொகுதியில் நிற்க இடம் வழங்கப்பட்டுள்ளது. எனக்கு சீட் கிடைக்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது, பணத்தை திருப்பி தருவதாக உறுதி அளித்தனர். இந்நிலையில் தற்போது பணத்தை தர முடியாது என்று ஷேக் தாவூத் மிரட்டுகிறார். என்னைப்போல பலரிடம் சீட் வாங்கி தருவதாக ஷேக் தாவூத்தும் அவரது மகள், மருமகனும் ஏமாற்றியுள்ளனர். எனவே, என்னிடம் சீட் வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு நம்பிக்கை மோசடி செய்த ஷேக் தாவூத், ரேஸ்மா தாவூத், ஜலாலூதீன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று கூறப்பட்டுள்ளது[13]. இதுகுறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்[14].

செக்யூலரிஸ பாணியில் செய்தி வெளியிட்டு அமைதியான விவகாரம்: வழக்கம் போல, இச்செய்தியும் சிறியதாக போடப் பட்டு, ஒரே நாளில் அமைதியாக்கப் பட்டது. அரசியல் கட்சி பிரமுகர் சம்மந்தப் பட்டிருப்பது, அதிலும், மைனாரிட்டி-முஸ்லிம் என்றதால், அமுக்கி வாசித்து, முடித்து வைக்கின்றனர் என்று தெரிகிறது. சிர்கான் இன்டெர்நேஷனல்  (Sircon Internatinal LMT), சிர்கான் ஏர்வேஸ், பிரீமியர் டூர்ஸ் டிராவல்ஸ்  (PremierTouries Tavels LMT) போன்ற கம்பெனிகளை வைத்து நடத்துவதாகத் தெரிகிறது[15].முன்னதாக நடத்தப்பட்ட விசாரணையில் ரேஷ்மா தாவூத் மீது ஏற்கெனவே 2016, 2017, 2019 ஆம் ஆண்டுகளில் மத்திய குற்றப்பிரிவு, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வேலைவாய்ப்பு மோசடி, குற்றம் கருதி மிரட்டல் ஆகிய வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது, எனும் போது, அரசியல் தாக்கம், ஆதிக்கம், முதலியனவும் வெளிப்படுகிறது. இவ்விசயத்திலும், நந்தினி-சாய்ஜி என்று பிரதானமாக செய்தியில் காணப்படுகிறது, ரேஷ்மா தாவூத் பெயர் குறிப்பிட்டாலும், அமுக்கப் படுகிறது. இதுவும், செக்யூலரிஸ ஊடக செய்தி வெளியீடு, பத்திரிகா-தர்மம் எனலாம் போலிருக்கிறது.

© வேதபிரகாஷ்

12-07-2021


[1] தினத்தந்தி, சென்னையில், அரசு வேலைக்காக போலி அரசாணை நகலை காட்டி ரூ.4½ கோடி மோசடி – 3 பேர் கைது, பதிவு: ஜூலை 02,  2021 11:44 AM.

[2] https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/07/02114428/in-Chennai-Rs-40-crore-scam–3-arrested-for-showing.vpf

[3] தினத்தந்தி, அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: கைதான கணவன்மனைவி பரபரப்பு வாக்குமூலம் 150 பேரிடம் ரூ.5½ கோடி சுருட்டியதாக தகவல், பதிவு: ஜூலை 10, 2021 05:14 AM.

[4] https://www.dailythanthi.com/News/State/2021/07/10051459/Fraud-that-the-government-buys-jobs-Arrested-husbandwife.vpf

[5] தமிழ்.இந்து, அரசு வேலை வாங்கித் தருவதாக 150-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் ரூ.5 கோடி கைவரிசை கைது செய்யப்பட்ட 3 பேரிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் அம்பலம், Published : 10 Jul 2021 03:14 AM; Last Updated : 10 Jul 2021 06:58 AM.

[6] https://www.hindutamil.in/news/tamilnadu/691427-money-fraud.html

[7] ஈ.டிவி.பாரத், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 5 கோடி ரூபாய் மோசடி!, Published on: Jul 10, 2021, 10:54 AM IST.

[8] https://react.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/5-crore-rupees-scam-claiming-that-the-government-jobs/tamil-nadu20210710105424773

[9] தினகரன், அரசு வேலை வாங்கி தருவதாக 150 பேரிடம் 5 கோடி மோசடி: தம்பதி உட்பட 3 பேர் கைது, 2021-07-10@ 00:05:42.

[10] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=689226

[11] தினமலர், மோசடி பணத்தில் சொத்து குவிப்பு: பறிமுதல் செய்து போலீஸ் அதிரடி, Added : ஜூலை 10, 2021  16:25.

[12]  https://www.dinamalar.com/news_detail.asp?id=2799869

[13] தினகரன், அதிமுக கூட்டணி வேட்பாளர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார், 2016-04-30@ 00:36:14.

[14] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=213505

[15] https://myneta.info/tamilnadu2016/candidate.php?candidate_id=1795

Explore posts in the same categories: அடிப்படைவாதம், அதிமுக, அரசியல்வாதிகள், அரசு முத்திரை, சாய்ஜி, தமிழக அரசு, தமிழக அரசு வேலை, தமிழக அரசு வேலை ஆணை, நந்தினி, பயிற்சி, மோசடி, மோசம், ரேஷ்மா தாவூத், வாக்குறுதி, வியாபாரம், வேலை, வேலை மோசடி, ஷேக், ஷேக் தாவூத்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: