முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலை பள்ளியில் பாலியல் தொல்லை – ஆசிரியர் ஹபீப் கைது!

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலை பள்ளியில் பாலியல் தொல்லை ஆசிரியர் ஹபீப் கைது!

அரசு உதவிபெறும் பள்ளிவாசல் மேல்நிலை பள்ளியில் பாலியல் தொல்லை: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளியான பள்ளிவாசல் மேல்நிலை பள்ளியில் முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதியில் இருந்து 1500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்[1]. இந்த நிலையில் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றும் ஹபீப் என்பவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது[2]. பள்ளியில் படிக்கும் மாணவியின் செல்போன் எண்ணை வாங்கி அவரது வீட்டில் பெற்றோர் இல்லாத சமயத்தில் பேசி புத்தகத்தை எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்கு வருமாறு தெரிவித்துள்ளார்[3]. ஒருவேளை அப்படி வர மறுத்தால், ’உனக்கும் மார்க் குறைவாக போட்டு தேர்ச்சியடைய விடாமல் செய்து விடுவேன்’ என்று மிரட்டல் விடுத்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது[4]. இதுபோல பல மாணவிகள் தனது வீட்டிற்கு புத்தகத்துடன் வந்துள்ளதாகவும் அதுபோல் நீயும் வரவேண்டுமென்று ஒரு மாணவியுடன் ஆசிரியர் ஹபீப் பேசும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது[5].அப்பள்ளியில் பயிலும் மாணவி ஒருவரிடம், அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவர் ஆபாசமாக பேசும் ஒலிப்பதிவு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது[6].

Modus operandi – குற்றம் செயல் படுத்தும் திட்டம்: ஹபீப் விவகாரத்தில், பாலியல் தொல்லை, செக்ஸ் சதாய்ப்பு, காம-வன்முறை என்றெல்லாம் இருக்கும் அதீத நிலைகள் நேரிடையாகவே வேலை செய்துள்ளன. மாணவிகளுக்கு, “புத்தகத்தை எடுத்துக் கொண்டு …… வீட்டிற்கு வா….உனக்கும் மார்க் குறைவாக போட்டு தேர்ச்சியடைய விடாமல் செய்து விடுவேன்…..,” என்றதிலிருந்து, ஏற்கெனவே ஒரு மாணவி, அவ்வாறு பாதிக்கப் பட்டிருப்பது தெரிகிறது. அதை வைத்துத் தான்,  “உனக்கும் மார்க் குறைவாக போட்டு தேர்ச்சியடைய விடாமல் செய்து விடுவேன்,” என்று மிரட்டியிருப்பது தெரிகிறது. செய்ஹியை வைத்து தான், அலச முடியும், ஆனால், அதிகாரிகள், “சிவ சங்கர் பாபா விவகாரம்,” போல, விமானங்களில் பறந்து, தேடி-தேடி விவகாரங்களை, “ஜேம்ஸ் பாண்ட்” கணக்கில் 24 x 7 விதத்தில் வேலைசெய்யலாம், உடனுக்கு உடன் மாலை முரசு, தினகரன் போன்ற நாளிதழ்களில் செய்திகள் வரலாம், “நக்கீரனை” சொல்ல வேண்டாம், இத்தகைய விவகாரங்கள் எல்லாம், அல்வா, பால்கோவா போல. வெளுத்து வாங்கி விடும். விசேஷ பதிப்பு போட்டு, காசை அள்ளும். தமிழக மக்களுக்கு, விவகாரங்களை படங்கள் போட்டு காட்ட வேண்டும்., அவ்வளவு தான்.

பாதிக்கப் பட்ட புகார் கொடுத்ததால் நடவடிக்கை: வாட்ஸ்-அப் பரவல், அடிப்படையில், மாவட்ட எஸ்பி கார்த்திக் விசாரணை நடத்த உத்தரவிட்டார். மாணவியின் தரப்பிலும் முதுகுளத்தூர் போலீஸில் புகார் தரப்பட்டது. இதையடுத்து, கூடுதல் எஸ்பி லயோலா இக்னேஷியஸ் தலைமையில் விசாரணை நடந்தது. இதில், அப்பள்ளியின் அறிவியல் ஆசிரியரான முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஹபீப் முகம்மது (36) என்பவர் 9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தியுள்ளார். அப்போது மாணவிகளின் மொபைல் எண்களை பதிவு செய்து வைத்துக்கொண்டு தொடர்ந்து பேசி வந்துள்ளார். அதில் தனது பள்ளி மாணவி ஒருவரிடம் அவர் ஆபாசமாக பேசி தொல்லை தந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், ஹபீப் முகம்மது மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து நேற்று கைது செய்தனர்[7]. வேறு மாணவிகளிடமும் இவர் தவறாகப் பேசியுள்ளாரா, பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரா என விசாரிக்கின்றனர்[8]. தமிழ் இந்து, வழக்கம் போல, இத்துடன் நிறுத்திக் கொண்டது!

ஹபீப் கைது: பள்ளி ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதுகுளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ராகவேந்திரர் ரவி விசாரணை நடத்தி வந்தார். போலீசார் விசாரணையை அடுத்து ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார், என்று பிறகு செய்திகள் வந்தன. மாஜிஸ்ட்ர்ரெட்டிடம் கூட்டிச் சென்றனர், அவர் காவலில் வைக்க ஆணையிட்டார், அதன் ப்டி கைது செய்தனர், சிறயில் அடைத்தனர் போன்ற செய்திகள் இல்ல. ஒரே வரிதான், “கைது”! ஹபீப் யார், அவனது பின்னணி என்ன, இது மாதிரி எத்தனை மாணவிகளுக்கு, எவ்வளவு ஆண்டுகளாகபாலியல் தொல்லைக் கொடுத்துள்ளான், ப்புத்தகட்டை எடுத்து வீட்டு வா என்று கூப்பிட்டுள்ளான் போன்ற விவகாரங்களை வெளியிடவில்லை!

ஊடக விவகாரங்களின் வர்ணனைகளில் செக்யூலரிஸம்: தினமணியில் வந்த செய்தியை, மற்ற தளங்கள், வெவ்வேறு தலைப்புகளில், அப்படியே “பி.டி.ஐ-செய்தி”பாணியில் வெளியிட்டுள்ளனர். அவர்கள் கொடுத்த தலைப்பிற்கும் உள்ளே உள்ள செய்திக்கும் ஏற்றபடி எந்த ஆதாரத்தையும் கொடுக்கவில்லை. PSBB, Sushihari Inrernational School போன்று விவரங்கள், வர்ணனைகள், ரன்னிங் கமின்ட்ரிகள் எல்லாம் இல்லை. தலைப்புகளுடன் சரி.படுக்கைக்கு கூப்பிட்ட ஆசிரியர்…. பாடம் புகட்டிய மாணவி…. பரபரப்பு…..!!!!,”- இப்படி ஒரு செய்தி![9] ஆனால், வெளியிட்டுள்ள்சது இவ்வளவு தான்[10], “தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முதுகுளத்தூரில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தனது வீட்டிற்கு வந்து உடல் ரீதியாக ஒத்துழைப்பு தரவில்லை என்றால் மதிப்பெண்ணை குறைத்து தேர்ச்சி பெற விடாமல் செய்துவிடுவேன் என்று ஆசிரியர் போனில் மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மாணவி தந்த புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்”. வழக்கம் போல, தமிழ்.ஒன்.இந்தியா, “வீட்டுக்கு வாஇல்லாட்டி பெயில்தான்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது,” என்றுள்ளது[11]. உள்ளே விவரம் அதே தான்[12].

பள்ளிப் பாலியல் செக்யூலரிஸ கைதுகளா? அல்லது தொடர்ச்சியான நடவடிக்கைகளா?: கிறிஸ்தவ பள்ளியில் ஆரம்பித்து, இந்து பள்ளிகளில் அதிகமாக ஆரார்ச்சி செய்து, செய்திகளை தினம்-தினம் போட்டு, அதிரடிகள் செய்து, இப்பொழுது, செக்யூலரிஸமாக, முஸ்லிம் பள்ளியில் வந்து, இந்த பாலியல் விவகாரம் முடிந்துள்ளாதா, அல்லது தொடருமா என்று பார்க்க வேண்டும். இல்லை, தமிழ்நாடு அரசு பள்ளி என்பதால், மதுரை பள்ளி விவகாரம் போல, அமுக்கி வாசித்து, மறக்கப் படுமா என்றும் பார்க்க வேண்டும். பள்ளிப் பாலியல் செக்யூலரிஸ கைதுகளா? அல்லது தொடர்ச்சியான நடவடிக்கைகளா?, இவை தொடருமா, இல்லை ஒரு நிலையில் கிடப்பில் போடப் படுமா? என்றும் கவனிக்க வேண்டும். சட்டத்தின் முன்பு எல்லோரும் சமம் என்றால், செய்திகள்-ஆர்பாட்டங்களும், டிவி-விவாதங்கள்-அலசல்களும் அவ்வாறே இருக்க வேண்டும். இருக்குமா என்று பார்ப்போம்!

© வேதபிரகாஷ்

23-06-2021


[1] தினமணி, முதுகுளத்தூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது, By DIN  |   Published on : 22nd June 2021 05:40 PM.

[2] https://www.dinamani.com/tamilnadu/2021/jun/22/sexual-harassment-of-school-girls-in-muthukulathur-teacher-arrested-3646531.html

[3] புதியதலைமுறை, வீட்டிற்கு வரவழைத்து பாலியல் தொல்லை: மாணவியுடன் பேசிய ஆடியோ வெளியாகி ஆசிரியர் கைது, Web Team Published :22,Jun 2021 07:11 PM.

[4] http://www.puthiyathalaimurai.com/newsview/107273/Continuous-declining-in-Tamil-Nadu-COVID19-Cases-and-6895-people-have-been-confirmed-for-infection-in-the-last-24-hour.html

[5] NEWS18 TAMIL, புக் எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வா.. இல்லைன்னா மார்க் போட மாட்டேன்’- மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர், LAST UPDATED : JUNE 22, 2021, 18:57 IST.

[6] https://tamil.news18.com/news/tamil-nadu/ramanathapuram-district-school-teacher-misbehaving-with-student-audio-released-by-student-hrp-487251.html

[7] தமிழ்.இந்து, மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் போக்ஸோவில் கைது, செய்திப்பிரிவு, Published : 23 Jun 2021 03:12 AM; Last Updated : 23 Jun 2021 03:12 AM.

[8] https://www.hindutamil.in/news/todays-paper/tnadu/685230-.html

[9] செய்தி.சோலை, படுக்கைக்கு கூப்பிட்ட ஆசிரியர்…. பாடம் புகட்டிய மாணவி…. பரபரப்பு…..!!!!, Nanthini Nandi, June 22, 2021 .

[10]https://www.seithisolai.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9A.php

[11] தமிழ்.ஒன்.இந்தியா, வீட்டுக்கு வாஇல்லாட்டி பெயில்தான்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது, By Jeyalakshmi C | Updated: Tuesday, June 22, 2021, 21:46 [IST].

[12] https://tamil.oneindia.com/news/ramanathapuram/private-school-teacher-held-under-pocso-act-in-ramanathapuram-424724.html

Explore posts in the same categories: இச்சை, காமம், சட்டமீறல், சட்டம், சட்டம் மீறல், செக்ஸ், செக்ஸ் தொல்லை, படுக்க வா, பள்ளி வாசல், பள்ளிகள், பாலியல், பாலியல் அடிமை, பாலியல் குற்றம், பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, முதுகுளத்தூர், முதுகுளத்தூர் பள்ளி, முதுகுளத்தூர் பள்ளிவாசல் பள்ளி, வீட்டுக்கு வா, ஹபீப்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

One Comment மேல் “முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலை பள்ளியில் பாலியல் தொல்லை – ஆசிரியர் ஹபீப் கைது!”

  1. vedaprakash Says:

    பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது குண்டாஸ்… ஆட்சியர் அதிரடி!

    Published on 13/07/2021 (09:20) | Edited on 13/07/2021 (11:15)
    நக்கீரன் செய்திப்பிரிவு

    https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/ramanathapuram-incident-collector-action

    ராமநாதபுரத்தில் பள்ளி மாணவிகளுக்கு செல்ஃபோனில் பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

    ராமநாதபுரம், முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியர் அபீப் முகமது, செல்ஃபோனில் ஆபாசமாக பேசி மாணவிகளுக்குத் தொல்லை தந்ததாக புகார் எழுந்தது. பள்ளி மாணவி ஒருவர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, கடந்த மாதம் அபீப் முகமது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஆசிரியர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் கொடுத்த பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவை அடுத்து பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் அபீப் முகமது மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: