வக்ஃப் போர்ட், அரசியல், நீதிமன்றத்திற்கு செல்லுதல், மேல்முறையீடு – இறுதியில் என்ன? [2]
வக்ஃப் போர்ட், அரசியல், நீதிமன்றத்திற்கு செல்லுதல், மேல்முறையீடு – இறுதியில் என்ன? [2]

மேல்முறையீடு முதலியவை இருக்கும் போது, குறுக்குவழி பின்பற்றப் படுகிறதா?: தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் தமிழக அரசின் மேல்முறையீடு மனு தொடர்பாக பதிலளிக்க எதிர் மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளது[1]. முன்னதாக தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது சட்டவிரோதம் என்று தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது[2]. தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்ற அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது[3]. இந்நிலையில் மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வில் நேற்று 28-08-2020 வெள்ளிக்கிழமை, விசாரணைக்கு வந்தது[4]. இதையடுத்து நீதிபதிகள், வக்பு வாரியம் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் ஆக.17 அளித்த / பிறப்பித்த முந்தைய உத்தரவை ரத்து செய்வதாகவும்[5], அதேபோல் இதுகுறித்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவிற்கு எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புவதாகவும் உத்தரவிட்டனர்[6]. இதையடுத்து தள்ளி வைக்கப்பட்டிருந்த முத்தவல்லிகள் மூலம் தோ்வு செய்யபட வேண்டிய 2 உறுப்பினா்களுக்கான தோ்தல் விரைவில் நடைபெற உள்ளது[7]. இதற்கான பணிகள் குறித்து அமைச்சா் நிலோபா் கபீல், வக்பு வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனா்[8].

வக்ஃப் கல்லூரி விவகாரம், உறுப்பினர்கள் – தொடர்பு உள்ளதா?: மதுரையை சேர்ந்த சர்தார்பாஷா மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மதுரை வக்பு வாரிய கல்லூரியில் பல்வேறு பணி நியமனங்கள் தொடர்பாக லஞ்சம் பெறப்பட்டதாகவும், அந்த தொகை கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள், வக்பு வாரிய தலைவரும், எம்.பி.யுமான அன்வர் ராஜா, அமைச்சர் நிலோபர் கபில் உள்ளிட்டோருக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்[9]. மேலும் இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார். மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, பணி நியமன முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரித்து 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது[10]. இதை எதிர்த்து வக்பு வாரிய கல்லூரி நிர்வாகி என்.ஜமால் முகைதீன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தயாரித்து, அவற்றை ‘சீல்’ இடப்பட்ட கவரில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.

அன்வர் ராஜா வீட்டில் 21-03-2029 அன்று சிபிஐ சோதனை: அதிமுக-வைச் சேர்ந்த அன்வர் ராஜா ராமநாதபுரம் எம்பி-ஆகவும் வக்ஃபு வாரியா தலைவராகவும் உள்ளார். மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, மதுரை சிபிஐ அதிகாரி கார்த்திகை சாமி, காவல்துறை ஆய்வாளர் வேலாயுதம், மதுசூதனன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் 21-03-2010 அன்று காலை 10 மணிக்கு ராமநாதபுரம் ஓம் சக்தி நகரில் உள்ள அன்வர் ராஜா வீட்டிற்கு சென்றனர்[11]. அங்கு அவரிடம் சுமார் 3 மணிநேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இந்த வழக்கு தொடர்பாக மேலும் சில ஆவணங்களில் கையெழுத்து பெற்றதாக கூறப்படுகிறது. உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி, விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில், சிபிஐ நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யயுள்ளது. தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சி எம்பி அன்வர்ராஜா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் சிட்டிங் எம்பி அன்வர் ராஜாவுக்கு சீட் வழங்கப்படாமல் அதிமுக கூட்டணி கட்சியான பாஜகவுக்கு ராமநாதபுரத்தில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது[12].

அரசியலா, உள்-பிரச்சினையா?: திராவிட அரசியலில் முஸ்லிம் லீக்குடன் திமுக-அதிமுக வைத்துள்ள தொடர்புகள் அலாதியானது. ஐ.யூ.எம்.எல், முஸ்லீம் லீக் முதலியவை மூன்று-நான்கு குழுக்களாக இருந்து, திமுக-அதிமுக பேரம் பேசி, எப்பொழுதும் மூன்று-நான்கு எம்.எல்,ஏக்களை தேர்ந்தெடுத்துக் கொள்வது, முகமதிய கட்சிகளின் சாமர்த்தியம். ஒருவேளை, திமுக-அதிமுக கட்சிகள், இதை வைத்து, 2021 தேர்தலுக்கு ஒத்திகை பார்க்கின்றனவோ எனு தோன்றுகிறது. எப்படியும் எம்.எல்,ஏக்களை வரவு வைக்க வேண்டும் என்றால், இதுதான் அரசு-அதிகாரத்துடன் செயல்படலாம். திமுக எம்.பி பலம் வைத்து, கண்க்கு போடலாம். ஆனால், அதற்கெல்லாம், முகமதியர் ஒப்புக் கொள்ள வேண்டும். முகமதிய்ரைப் பொறுத்த வரையில், இதனை, அவர்கள் தங்களது, உள்ளுக்குள் முடித்துக் கொள்ளும் பிரச்சினையாகத்தான் எடுத்துக் கொள்வர்.
வேதபிரகாஷ்
29-08-2020

[1] தினத்தந்தி, தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை – உச்சநீதிமன்ற அதிரடி உத்தரவு, பதிவு: ஆகஸ்ட் 28, 2020 11:57 AM
[2] https://www.dailythanthi.com/News/State/2020/08/28115722/Interim-injunction-against-the-order-of-the-Government.vpf
[3] தினகரன், தமிழ்நாடு வக்பு வாரியம் கலைக்கப்பட்ட விவகாரம்: உயர் நீதிமன்ற ஆணை ரத்து: உச்ச நீதிமன்றம் உத்தரவு, ஆகஸ்ட்.29, 2020.
[4] தினமணி, வக்பு வாரிய விவகாரம்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை, By DIN | Published on : 28th August 2020 11:56 PM |
[5] https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2020/aug/28/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D–%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-3456534.html
[6] தினகரன், தமிழ்நாடு வக்பு வாரியம் கலைக்கப்பட்ட விவகாரம்: உயர் நீதிமன்ற ஆணை ரத்து: உச்ச நீதிமன்றம் உத்தரவு, ஆகஸ்ட்.29, 2020; https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=612999
[7] தினமணி, 2 வக்புவாரிய உறுப்பினா் பதவிக்கு விரைவில் தோ்தல், By DIN | Published on : 29th August 2020 08:34 AM.
[8] https://www.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2020/aug/29/2-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3456631.html
[9] தினத்தந்தி, மதுரை வக்பு வாரிய கல்லூரி நியமன விவகாரம்: சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு, பதிவு: ஏப்ரல் 17, 2019 02:46 AM
[10] https://www.dailythanthi.com/News/India/2019/04/17024643/Madurai-Waqf-Board-College-Appointment-Issue-CBI-Supreme.vpf
[11] நியூஸ்.தமிழ்.18, சென்னை மண்ணடியில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை!, LAST UPDATED: MARCH 22, 2019, 1:32 PM IST
[12] https://tamil.news18.com/news/tamil-nadu/cbi-raid-in-wakf-board-office-in-chennai-mannadi-anwar-raja-va-128925.html

குறிச்சொற்கள்: சிறப்பு அதிகாரி, தமிழ்நாடு வக்பு வாரியம், மூத்தாவலி, வக்ஃப், வக்ஃப் போர்ட், வக்ஃப் வாரியம், வக்பு, வக்பு வாரியம்
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்